Wednesday, October 18, 2017

பாசகவின் அடுத்த மதவா முன்னெடுப்புகள் இப்படி தான் இருக்கும் - Silence (2016) திரைவிமர்சனம்

படத்தின் செய்திகளுக்கு

மாற்று சிந்தனை, மதம், நம்பிக்கை என்று இருப்பவர்களை எப்படி எல்லாம் எதேச்சதிகாரம் கொண்டவர்கள் எப்படி படுத்துவார்கள் என்றதிற்கு இந்த படம் ஒரு விளக்க உரை.

சப்பானை பொறுத்த அளவில் அவர்கள் மேல் அந்த அணுகுண்டை வீசியது தவறு என்று வாதாடக்கூட மக்கள் தயங்குவார்கள். அந்த அளவிற்கு அவர்களின் அரசர்கள் மிகவும் மோசமாகவும் கீழ்த்தரமான சிந்தனையும் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள்.

கடைசியாக அந்த அணுகுண்டை வீசும் வரை உலகின் எல்லா திக்குகளிலும் சர்வதிகாரிகளுடன் சேர்ந்துக்கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டே தான் இருந்தார்கள்.

இந்த ஆட்டத்தின் ஒரு பகுதியாக கிருத்துவத்தை பரப்ப வந்தவர்களை என்ன என்ன பாடு படுத்தினார்கள் என்று இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள்.

எந்த ஒரு நாடும் தன் நாட்டின் இறைமையை காக்க வேண்டிய கட்டாயத்திலும் கடமையும் கொண்டு இருக்கிறது. அந்த அந்த நாட்டின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை இல்லை தான்.

ஆனால் அப்படி பட்ட நாடுகளில் கழித்து கட்டிய மக்கள் என்று ஒரு பிரிவினர்கள் எப்போதும் உண்டு. இப்போது மியான்மரில் இருந்து விரட்டியடிக்க பட்ட மக்களை போல், ஈழத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்களை போல், சோர்டான் மக்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

அப்படி வாழவே தகுதி இல்லாதவர்கள் என்று முடிவுகட்டி ஊரை விட்டு வெளியே வாழும் மக்களுக்கு ஒன்றும் இல்லை என்றாலும் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர கடவுள் நமக்கு வழிக்காட்டுவார் என்ற ஒற்றை நம்பிக்கையில் மட்டும் வாழும் அன்றாடம் காட்சி மக்களை சந்தித்து கிருத்துவை நம்புங்கள் உங்கள் வாழ்கையில் ஒளி கிடைக்கும் என்று நம்பிக்கையை கொடுத்து இருக்கும் மிச்ச மீதி நாட்களை வெறும் கையில் வெற்று நம்பிக்கையுடன் கடக்க உதவிய கிருத்துவ மத போதகர்கள் எந்த கதிக்கு ஆளாக்கினார்கள் என்ற விளக்கப்படம்.

இந்தியாவை பஞ்சம் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டிய காலத்தில் உலகத்து நாடுகள் கப்பல் துறைமுகங்களில் பால் பொடிகளையும் உணவு தானியங்களையும் கொண்டு வந்து அடுக்கிவிட்டு சென்று விட்டது. பஞ்சமும் நேயும் பிடித்து ஆட்டிய அந்த நாட்களில் கையில் உணவுடனும் மருந்துகளுடனும் இந்தியாவிற்கு வந்த கிருத்துவ திருசபையை சேர்ந்தவர்கள், அந்த நோய் தாக்கி தான் இறந்தாலும் அதுவும் இறைபணி என்று இந்தியாவின் ஏழை மக்கள் வாழும் பகுதிக்குள் சென்று தொன்டாற்றியதை போல் இந்த படத்திலும் செல்கிறார்கள்.

அந்த பாதிரிகளின் கண்ணில் காட்டப்படும் மக்கள் மிகவும் நலிவுற்று இரப்புக்கும் நிகழ்வுக்கும் அதிக தூரமோ வித்தியாசமோ இல்லை என்று வாழும் ஏழை விவசாய பண்ணையடிமை கூலிகள்.

தொலைந்து போன பாதரியை தேடியலையும் அந்த இருவரும் நிமிடத்திற்கு நிமிடம் எப்போது மாட்டுவோம் எப்போது கொல்லப்படுவோம் என்று மறைந்து வாழ்வதும். இரவின் இருட்டில் மட்டும் மக்களை சந்திப்பதும் என்று ஒரு திருட்டு வாழ்க்கையை போல் கழிக்கிறார்கள்.

கிருத்துவை நம்பும் மக்களை அந்த கிருத்துவின் உருவம் பொருத்திய தகட்டில் காலால் மிதிக்க சொல்வதும் அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை கடற்கரையில் கட்டிவைத்து அலையில் அலைகழித்து சாக்கடிப்பதும் உயிருடன் தீயில் இட்டு கொளுத்துவதும் என்று கொடூரமாக கதை நகர்கிறது.

ஒரு கட்டத்தில் பாதிரியை தேடி வந்த இருவரில் ஒருவனுக்கு நல்ல உடைகளை அணிவித்து தூரத்தில் மற்ற ஒருவனை நிப்பாட்டி அங்கே பார் அவன் கிருத்துவை தூக்கி எரிந்துவிட்டான் எப்படி சொகுசாக வாழ்கிறான் பார் ஆனால் நீயோ சாகப்போகிறாய் என்று ஏய்கும் கேவலமான செயல்களை எல்லாம் செய்து கொடுமைபடுத்துகிறார்கள்.

அந்த இளம் பாதிரிக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அவன் கண்முன்னே தோன்றும் அந்த கிருத்துவின் முகமும் அவர் இவன் கொண்டு இருக்கும் அதிதீர நம்பிக்கையும் மட்டும் தான்.

அந்த இளம் பாதிரியின் கண் முன்னே ஒவ்வொரு இரவும் உடன் இருந்த கிருத்துவை நம்பும் மக்களையும் பலியிடுகிறார்கள், கழுத்தில் ஒரு சிறு கீறல் கீறி சொட்டு சொட்டாக இரத்தம் வழியும் படி தலை கீழே தொங்கவிடவும் செய்கிறார்கள். பார்க்க பொறுக்காக அந்த இளம் பாதிரி கடைசியாக தானும் கிருத்துவின் படத்தை காலால் மிதித்து அவமதித்து சப்பான் இனமாக மாறுகிறான்.

பின்னர் அந்த இளம் பாதிரியும் அவன் தேடி வந்த பாதிரியும் இருவரும் சேர்ந்து சப்பானுக்குள் வரும் கிருத்துவம் சார்ந்த பொருட்களை அடையாளம் காட்டி முற்று முழுதாகவும் அழிக்கவும் உறு துணையாக இருக்கிறார்கள்.

அப்படி வாழ்ந்த அந்த இளம் பாதிரிக்கு மகனுடன் இருக்கும் ஒரு குடும்பத்தையும் அந்த குடும்ப பெயரையும் கொடுத்து சப்பானிலே சப்பானியராக வாழ வைப்பதோடு கிருத்துவை இகழ்ந்தும் பரிகாசித்தும் நூல் எழுத வைக்கிறார்கள்.

அத்தனை இன்னல்களுடன் வாழ்ந்த அவனிடம் மிஞ்சி இருந்த ஒரு சின்ன சிலுவை மட்டுமே என்று கதையை முடிக்கின்றார்கள்.

மோடி இந்த சனவரியில் ஒரு புதிய அறிவிப்பை அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார், அனேகமாக இப்படி ஒரு அறிவிப்பாத்தான் இருக்கும்.

நல்ல ஆட்சி நல்ல தேசம் என்று சொன்ன இவர்களால் வெறும் இன்னல்களையும் கசப்பு மருந்துகளையும் தான் நல்லா இருந்த மக்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்த தேர்தலுக்கு நாட்டையே இன்னும் ஒரு கோத்ராவாக ஆக்கினால் மட்டுமே இவர்களால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். ஆக நாட்டை பிளவுபடுத்த கிருட்ணசாமியை வைத்து அனிதாவுக்கு எதிராக பேச வைத்தது போல் நிகழ்வுகள் வன்முறையுடன் நிறைவேற்றுவார்கள் போலும். கற்பனையில் யோசிக்கவே மிகவும் பயங்கரமாக இருக்கிறது.

Tuesday, October 3, 2017

என்ன சாதித்துவிட்டா காந்தி என்று இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்

சங்கபரிவாரம் தனது ஆளைவிட்டு காந்தியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற போது இந்தியா தூய்மை அடைந்துவிட்டது என்று பரைசாற்றும் விதமாக தூய்மை இந்திய தினமாக காந்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம் மாற்றப்பட்டு இருக்கின்றது இந்த சங்கபரிவார அரசால்.

அப்படி என்ன சாதித்துவிட்டார் இந்த காந்தி இவ்வளவு கொண்டாட....

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிய போராட்டம் இந்தியாவில் தொடர சுதந்தர வேட்கையில் தவித்த மக்கள் கட்டுக்கு மீறி தனது பேச்சையும் கேட்க்காமல் வன்முறையில் இறங்க அதோடு தனது போராட்டங்களை நிறுத்துவதாக காந்தி அறிவித்தார்.

அதாவது நிலைமை கையை மீறி சென்றதும் இனி இப்படியே விட்டால் போராட்டம் அமைதியாகவும் அகிம்சையாகவும் இல்லாமல் போராகவும் உள் நாட்டு கலவரமாகவும் மாறிவிடும் என்று நிறுத்தினார்.

என்ன மனிதர் இந்த காந்தி அதுதான் சமயம் என்று தனக்கு பிடிக்காத தனது சிந்தாந்தங்களை ஏற்காத மக்களை அந்த கலவரம் கொண்டு கொன்று குவித்துவிட்டு, நாட்டு மக்களின் முன்னிலையில் கலவரத்தில் நடந்ததுக்கு நான் எப்படி பொருப்பாக முடியும் என்று நீலிக்கண்ணீர் வடிக்க தெரியாத மனிதர் இவருக்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம்.

ஒரு முறை அல்ல இரு முறை அல்ல 4 முறை இந்திய சுதந்திர போராட்டத்தை இதே போல் கைவிட்டு விட்டு பிறகு மக்கள் எல்லாம் திரண்டு நாங்கள் இனி ஒரு போதும் வன்முறையில் ஈடுபடமாட்டோம் என்று உறுதி கொடுத்த பின்பு கடைசியாக நடந்த போராட்டத்தில் தான் சுதந்திரம் கிடைத்தது.

இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமான காந்தி நாட்டின் மிக உயர்ந்த பதவியான பிரதமர் பதவியில் உட்கார்ந்துக்கொண்டு உலகம் பூராவும் சுற்றி வந்து தான் எப்படி இந்தியாவின் விடுதலைக்காக போராடினேன் என்றும் நான் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடாமல் போய்யிருந்தால் இன்னேரன் இந்தியா பாவ பூமியாக இருந்து இருக்கும் என்று நாடு நாடாக சென்று பேசி இருக்க வேண்டாமா. அதுவும் பாரீசுடர் பட்டம் பெற்றவர் என்ற பெருமை வேறு இந்தியில் இல்லை ஆங்கிலத்திலேயே அழகாகவும் சாமார்த்தியமாகவும் பேசி இருக்கலாம். செய்தாரா இந்த மனிதர்...... ஒரு 35 இலட்சம் பெருமானம் கொண்ட ஆடையை அணிவதற்கு பதில் பரதேசி கோலமாக இலண்டனுக்கு சென்ற துப்பு கெட்ட மனிதருக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்.

வங்காலத்தில் இந்து இசுலாமியர் மோதல்கள் வெடித்த போது அந்த நிகழ்வை காரணமாக காட்டி அங்கே இருக்கும் அத்தனை இசுலாமியர்களையும் அழித்து இருக்க வேண்டாமா அதை விடுத்து அவர்கள் கலவரத்தை விடும் வரை செத்தாலும் சரி என்று உண்ணா விரதம் இருந்து நிறுத்தியது எந்த வகையில் ஞாயமாகும். இந்த மனிதருக்கா இத்தனை கொண்டாட்டம்....

இப்படி பல நூறு காரணங்களை அடுக்கலாம் காந்தியின் பெயரையும் புகழையும் படத்தையும் அழிக்க சொல்லி மாளாதே என்று இதோடு நிறுத்திக்கொள்கின்றேன்.

போய் எல்லோரும் மாகாத்துமாவை அழித்து தூய்மை படுத்தபட்ட இந்தியாவின் தினமாக தூய்மை பாரதம் என்று கொண்டாடுங்கள் இல்லை என்றால் நீங்கள் எல்லாம் தேசதுரோகிகள். வந்தே மாதரம்.....

பிகு: இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் எல்லையில் இருக்கும் இராணுவ வீரரிடம் கேட்கவும்.

Friday, September 29, 2017

தமிழக சின்ன பாசக அன்புமணி இராமதாசு

தமிழகத்தில் சாதிவாரியாக மக்களை பிளவுபடுத்தி அவர்களுக்குள் சண்டையை மூட்டி அடித்துகொள்ள வைத்து குளிர் காய்வது சங்கபரிவாரம். அந்த சங்கபரிவாரம் இதை ஆட்சியிலேயே உட்கார்ந்துக்கொண்டு செய்ய முடியாது என ஆட்சியில் அமர்பவர் பெயர் பாசக, ஆனால் அவர் நாங்கள் என்ன செய்கின்றோமோ அதையே தான் செய்வார் ஆனால் அவர் சங்கபரிவாரம் இல்லை, எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது என்று மூச்சுக்கு 300 தடவை சொல்வார்கள்.

முதலில் சாதி சங்கம் என்றும் பின்னர் அதை பாசக என்ற பெயரில் அரசியல் கட்சி என்ற போர்வையில் வந்த அதே பாணியில் தான் பாமகவும் பயணிக்கின்றது. ஊருக்கு ஊர் சங்கமும் அந்த சங்கத்தின் பெயரால் இன தூய்மையை செய்வோம் என்று கடந்த சில ஆண்டுகளில் கௌரவ கொலைகளிலும் ஈடு பட்டது இந்த பாமக என்றது நினைவில் இருக்கலாம்.

திராவிட கட்சிகளும் அதன் வழித்தோன்றல்களினால் எந்த பலனும் தமிழகத்துக்கு விளையவில்லை என்றும் தன்னை முதல்வராக தேர்ந்து எடுத்தால் நல்ல ஆட்சியினை வழங்க முடியும் என்றும் சென்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது இந்த பாமக.

இன சுத்திகரிப்பு வேலைகளை சங்கபரிவார கும்பல்கள் செய்வதை விட கேவலமா எங்களாலும் செய்யமுடியும் என்று காட்டிவிட்டு வாக்குகளை கேட்டது இந்த பாமக.

சங்கபரிவாரம் ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன தீமைகளை செய்து சமூகத்தை அழித்தொழிக்க முடியுமோ அத்தனையும் செய்யும் இந்த சாதிவெறி பாமக.

இதே அன்புமணியும் சரி இராமதாசும் சரி சங்கபரிவாரங்கள் செய்யும் எந்த ஒரு அட்டூழியங்களையும் தட்டிக்கேட்டதும் இல்லை கேட்க்கப்போவதும் இல்லை.

ஒரு வேளை தமிழக பாசகவிற்கு நிர்மலா சீத்தாராமன் முதல்வராக வருவது பிடிக்கவில்லை என்றால் குறைந்தது அன்புமணி இரமதாசு வரவேண்டும் என்று எதிர்காலத்தில் சொன்னாலும் சொல்லும் அளவிற்கு நடந்துகொள்கிறார்கள் தமிழக பாசகவினர்கள்.

பாசகவும் பாமகவும் ஒருவரை ஒருவர் இது வரையில் தாக்கி பேசிக்கொண்டது இல்லை என்றது மக்கள் ஓர்ந்து பார்க்கலாம்.

ஆக தமிழக்த்தில் பாமக இருக்கும் வரையில் இன்னும் ஒரு பாசக தேவை இருக்காது........

Tuesday, September 26, 2017

கார்த்திக் சிதம்பரம் - சங்கபரிவார அரசே திரைபடங்களில் பார்ப்பது போல் குடும்பத்தாரை மிரட்டும் செயல்

அனேகமாக அனைத்து திரைபடங்களிலும் வில்லன் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்வான் என்ற நிலை வந்ததும், சாட்சிகளும் விசாரணை அதிகாரிகளின் வீட்டு பெண்களையும் பிளைகளையும் துப்பாகி முனையில் பிடித்து வைத்துக்கொண்டு "நீ மட்டும் நான் சொன்னபடி நீதிமன்றத்தில் வந்து சொல்லல உன் பிள்ளை அவ்வளவு தான், இல்ல உன் மனைவி அவ்வளவு தான், உனக்கு வயசு வந்த பெண் இருக்குது அவ்வளவு தான்" என்று மிரட்டும் காட்சிகள் இடம் பெற்று இருக்கும்.

அந்த காட்சிகளில் வரும் வில்லனாக நடிப்பவர் கருப்பாக இருப்பார், இல்லையேம் ஆம்பர் என்று பெயர் வைத்து இருப்பார் இல்லை இசுலாமிய பெயரை கொண்டவராக இருப்பார்.

இப்போது அதே காட்சியில் சங்கபர்வார சாமியார்கள் நிற்கிறார்கள். அலைக்கற்றை ஊழல் வழக்கில் தீர்ப்பு 3 மாதங்களுக்கு முன்னே வந்து இருக்க வேண்டும் ஆனால் மாதாமாதம் அடுத்த மாதம் என்று வழக்கு தள்ளி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை தள்ளுதளுக்கு பின்னால், சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் என்று யாரேனும் ஒருவரை இந்த வழக்கில் சாட்சியாக ஆக்கி அந்த சாட்சியின் பால் பாதக தீர்ப்பை பெற்று எடுத்து ஒரு புதிய இந்தியாவை பெற்று எடுக்க சங்கபரிவாரம் ஆசைப்படுகின்றது.

அதனால் திரைபட வில்லன் மிரட்டுவது போல் மிரட்டி அதன் கோரப்பிடிகளில் வைத்துக்கொண்டு சொல் இல்லையே கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகின்றது.

மைய அரசின் பொருளாதாரம் பற்றியோ அல்லது நிர்மலா சீதாராமன் மொத்த இந்தியாவின் இராணுவ தேவைகளையும் அமெரிக்க இராணுவ தளவாட நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறார் என்று சொன்னாலோ உங்களது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் தொழிலும் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்று மிரட்டி பார்க்கிறார்கள்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் முறட்டு உலகமடா என்று அன்றைக்கு பாடிய பாடல் எவ்வளவு உண்மை என்று இந்த சங்கபரிவார அரசு வந்ததும் தான் தெரிகின்றது.

இந்த தீர்ப்பைதான் தமிழிசை மேடைகள் தோறும் தீர்ப்பு வரும் இல்ல என்று அதிர்ந்தும் வியந்தும் குறிப்பிடுகின்றார். பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று........

Monday, September 25, 2017

கீரைகாரி மற்றும் தயிர்காரி இவர்களிடம் இருந்து சுருட்டிய 50,000 கோடியை அம்பாணிக்கும் அதாணியும் கொடுக்கின்றது பாசக அரசு

கீரைகாரி, தயிர்காரி, இட்லி சுட்டுவிற்கும் ஆயா, வடை சுட்டு விற்கும் ஆயாக்களை மிரட்டி பணத்தை வங்கியில் போடவில்லை என்றால் அவ்வளவும் சொல்லாத பணமாகவும் கள்ளப்பணமாகவும் அறிவிக்கப்படும் என்று மிரட்டோ மிரட்டு என்று மிரட்டி பிடிங்கிய பணத்தை அதாணிக்கும் அம்பாணிக்கு கொடுக்கப்போவதாக பாசக அரசு அறிவித்து இருக்கிறது.

மோடியின் பொருளாதார கொள்கையும் அவரது 15 ஆண்டுகால முதல்வர் பணியின் அனுபவங்களையும் உலக பொருளாதார பல்கலைகழகங்கள் கற்றுக்கொள்ள சிறந்த பாடம் என்றும். உலகில் மோடியை போன்றதொரு அறிவாளியோ மற்றும் புன்னியம் செய்தவர்களோ உலகில் வேறு யாரும் இல்லை என்றதும் பாசகவின் அதன் பின்னால் இருந்து ஆட்டி வைக்கும் சங்க பரிவாரங்களின் கருத்துமாக தொடர்ந்து வைக்கப்படுகின்றது.

இப்படி ஈடு இணையில்லா தலைவரின் பொருளாதார சீர் திருத்தங்களின் விளைவாக சரிந்து கிடக்கும் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த 50,000 கோடியை செலவு செய்யும் என்று அருண் செட்லி அறிவித்துள்ளார்.

பொதுவாக இந்திய அரசு இலங்கையின் உதவிக்காக கப்பல் துறைமுக அமைப்பதில் உதவ 50,000 கோடி ரூபாய்கள் உதவிகள் வழங்குகின்றது என்ற ஒரு அறிவிப்பு வந்தால், அந்த துறைமுகம் அமைக்கும் பொறுப்பை அதாணிக்கோ அல்லது அம்பாணிக்கோ இலங்கை அரசு ஒப்பந்தம் வழங்கும்.

அதாவது இலங்கையின் உதவிக்காக இந்தியா அறிவித்த 50,000 கோடி ரூபாய் நேராக அவர்களின் பைக்கு செல்லும். செய்த வேலைக்கு தானே பணம் கொடுக்கிறார்கள் அதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்க கூடும்.

இலங்கைக்கோ மியான்மர்கோ நேபாளத்திற்கோ ஆப்ரிக்க நாடுகளோ இந்தியா எங்களுக்கு இவ்வளவு பண உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்பது கிடையாது. அப்படி கேட்காத இடங்களில் இவர்களே ஏன் பணத்தை அள்ளிக்கொண்டு போய் கொட்டுகிறார்கள் என்றது அவர்களுக்கே வெளிச்சம். இந்த கேள்வியை எச்சி ராசாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு தான் ஆண்டி இந்தியன் என்று அவர் விளிக்க துவங்கினார்.

அந்த வகையில் இந்த முறை 50,000 கோடியை அள்ளி வீசி சரிந்துகிடக்கும் பொருளாதாரத்தை உயர்த்தி பிடிப்போம் என்று அருண் செட்லி அறிவித்து இருக்கிறார்.

இது பாசகாவின் கொள்கை முடிவு அதில் தலையிட நீதிமன்றங்களுக்கோ அல்லது எவருக்கும் உரிமை இல்லை என்று தான் சங்க பரிவாரங்கள் நம்புகின்றது, நாங்களும் அதை ஒப்புக்கொள்கின்றோம் வேறு வழியில்லாமல்.

ஆனால் இந்த 50,000 கோடி எங்கு இருந்து எடுத்து செலவுக்கு வீசப்போகின்றது சங்க பரிவாரங்கள். அவர்களின் சொந்த பணமாக இருந்தால் ஒருவரும் கேள்வி கேட்க தேவை இல்லை தான், அமெரிக்காவில் 3.79 லிட்டர் பெட்ரோல் ரூ 146.25 விற்கிறது. மிஞ்சிப்போனால் 3.79 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 16 சந்தையின் விலையை பொருத்து மாறுகின்றது. ஆனால் இந்தியாவில் இதே 3.79 லிட்டர் பெட்ரோல் ரூ 265.30க்கு விற்கின்றது. ஏன் அமெரிக்க விலையைவிட இந்தியாவின் பெற்றோல்லுக்கு இவ்வளவு விலை என்று கேட்டதற்கு சங்க பரிவார அரசு நிறைய கழிப்பறைகளை கட்டியது இன்னும் அதிகம் கட்ட வேண்டி இருக்கிறது அந்த திட்டத்திற்கு பணம் சேர்க்கவே இந்த அதி அதிக பெட்ரோல் விலை என்று வியாக்கியானம் சொல்கின்றது.

ஒன்றும் இல்லாத கழிப்பறைகளை கட்டவே மக்கள் இவ்வளவு பணம் செலவு செய்ய வைக்கப்படுகின்றார்கள் என்றால் இந்த 50,000 கோடி ரூபாயை எங்கே இருந்து பெறப்பட போகின்றது என்றால். கீரைகாரி, தயிர்காரி, இட்லி விற்கும் ஆயா, வடை சுட்டு விற்கும் ஆயாவை மிரட்டி வங்கியில் வலுக்கட்டாயமாக வைப்பு வைக்கப்பட்ட பணத்தையும் அளவுக்கு அதிகமாக விற்கப்படும் விலைவாசிகளிலும் பெறப்பட்ட பணத்தை திட்டங்களின் பெயரில் சங்கபரிவார அரசு கொட்டி வீணடிக்கப்படுகின்றது சுவாக.

Friday, September 22, 2017

இந்தியாவின் புல்லட் இரயில் விளங்காமத்தான் போகும் இது பாசகவின் மொழி

இந்த இரயில் திட்டத்தை அமைத்து தரப்போவது சப்பான், பசுக்கறி உண்ணும் பாவமக்களால் உருவாக்கப்போகும் இந்த புல்லட் இரயில் என்ன நல்லாவா இருக்கப்போகின்றது என்று பாசகவின் மன ஒலி உங்களுக்கு எல்லாம் கேட்கவில்லை போலும். அதனால் தான் ஒரு சொன்ன குண்டூசியை எடுத்து வச்சாலே பாகுபாலி அளவுக்கு புகழ்கின்ற மோடிக்கூட்டம் இந்த புல்லட் இரயில் பற்றியோ அதன் 20 ஆண்டு வளர்ச்சி பாதையை பற்றியோ, உலகிலேயே முதன் முதலில் புல்லட் இரயில் விட்டது மோடியால் மட்டும் தான் என்று எழுத மாட்டேன் என்கிறார்கள் கவனியுங்கள்.

Thursday, September 21, 2017

கேப்டன் விசயகாந்தும் பிரமர் மோடியும் நல்ல நடிகர்கள் மட்டுமே தலைவர்கள் அல்ல

விசயகாந்து நடிகராக திரையில் தோன்றும் போது நீதிமன்றங்களில் அவருடைய பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது, சாட்சியாக வந்தாக்கூட நீதிபதியையே கிண்டலாக பேசுவார். 20, 30 ஆட்கள் அவரை தாக்க வரும்போதும் ஒரே கையால் அந்த 20, 30 பேரையும் காற்றில் பறக்கவிட்டு முழங்காலிட்டு தலையை மெல்ல தூக்கி ஒரு சல்யூட் வைப்பார். பெண்களை கிண்டல் செய்யும் அல்லது துன்புறுத்தும் கூட்டங்களைக்கண்டால் விரட்டி விரட்டி அடித்தே கொல்வார். ஏழைகளை கண்டால் கையில் இருக்கும் பொருளோ பணமோ கொடுத்துவிட்டு அவர்கள் வீட்டு கூழ் கஞ்சியினை வாங்கி ருசிப்பார்.

நாடுன்னா என்னான்னு தெரியுமா என்று துவங்கி மருத்துவமனையில் நடக்கும் ஊழலில் தொடங்கி ஏசிஎப் என்ற ஒரு அணியை உருவாக்கி ஊழையும் அதன் சார்ந்தவர்களையும் வேறோடு அழிப்பார். இப்படி விசயகாந்தை பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

ஆனால் விசயகாந்தை திரையில் இல்லாமல் நேரில் சந்தித்த மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். ஒரு 4 வரிகளை தொடர்ந்து பேச அவரால் முடியவில்லை. 5 செய்திகளை கோர்வையாக பேச தெரியவில்லை. அது மட்டும் அல்லாது அவருக்கு பேச தெரியவில்லை என்றது அந்த இடத்தை அவரது வீட்டம்மா பயன்படுத்திக்கொண்டு எவ்வளவு மோசமாக பேச முடியுமோ அவ்வளது மோசமாக பொது மேடைகளில் அசிங்கபடுத்தினார்.

இந்த எல்லாம் மக்களை முகம்சுழிக்க வைத்ததே அன்றி எந்த விதத்திலும் பாராட்ட வைக்கவில்லை. சென்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விசயகாந்தை பொது இடங்களிலோ பொது மேடைகளிலோ ஏன் தொகாவிலோ கூட காணமுடியவில்லை.

திரையிலே இயக்குனர்களால் கட்டி எழுப்பப்பட்ட அந்த பிம்பம் நேரில் செயலில் வரும் போது அந்த பிம்பத்தின் 1000 ஒரு பகுதி கூட உண்மை இல்லை என்று தெளிவுபடுத்தியது.

விசயகாந்து செய்த குற்றம் என்ன, தன்னுடையக கதைக்கு ஏற்றவாறு அவரை மிகப்பொருத்தமாக நடிக்க வைத்து அழகு பார்த்தார்கள் இயக்குனர்கள். அந்த பிம்பத்தை உண்மை என்று ஒரு கூட்டம் நம்பியது இது அவர்களின் அறிவின்மையே அன்றி எப்படி விசயகாந்தின் குற்றமாகும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த பிம்பம் உண்மை என்று விசயகாந்தே நம்பியதின் விளைவு தான் இவ்வளவு அவமானங்களை அவர் பொது வெளியில் சந்திக்கின்றார்.

இந்த விசயகாந்தை போன்று தான் பிரதமர் மோடியும், பின்னால் இருந்து இயக்கும் கூட்டம் கொடுக்கும் வசனங்களை மேடைகளிலிலே அழகாக அரிதாரம் பூசி கை கால்களை ஆட்டி கிட்ட தட்ட நடனமாடி வசனம் பேசுவார்.

வானத்தை வில்லாக வலைப்பேன் என்பார், மணலை கயிறாக திரிப்பேன் என்பார், வலது பக்கம் திரும்பினால் ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் வீடு தேடி வரும் ஒரே ஒரு ஓட்டு மட்டும் போடு என்பார். இடது பக்கம் திரும்பினால் இந்தியாவை குறி வைக்கும் எதிரி நாடுகள் தொடை கை கால் நடுங்கி தன் நாட்டை நரகாசுரன் பூமியை பாய் போல சுறுட்டி கடலுக்கடியில் ஒளித்து வைத்தது போல் தங்களது நாட்டை பாயாக சுறுட்டி கொண்டு இந்தியாவை விட்டு வெகு தொலைவில் கண்காணாத இடத்திற்கு கொண்டு மறைவாக வாழ்வார்கள்.

இந்தியாவின் ஏழை மக்கள் எல்லாம் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பார்கள், ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடோ அல்லது மத சாதி பாகுபாடோ இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள் என்றும். பொருளாதாரம் அமெரிக்காவையே மிஞ்சி அமெரிக்கர்களே இனி இந்திய ரூபாயில் தான் வர்த்தகம் செய்யவேண்டும் என்று சொல்வார்கள் என்றும். இந்தியாவையே இல்லை இல்லை உலகையே காக்க அவதரித்த கடவுள் என்றும் அந்த கூட்டம் கதை திரைக்கதை வசனம் பாடல் இசை ஒளிப்பதிவு பின்னணி குரல் என்று அனைத்து தரப்பிலும் வேலையில் இறங்கி கட்டமைத்தது இன்னும் அதை மீண்டு நிறுவ பார்க்கிறது.

ஆனால் உண்மையில் நாட்டில் நடப்பது என்ன, கருப்பு பணத்தை ஒழிக்கின்றேன் 50 நாட்கள் மட்டுமே பொறுத்து கொள்ளுங்கள் நான் செய்வது தவறாக இருந்தால் என்னை தீயிட்டு கொளுத்துங்கள் என்றார் இன்றைக்கு மக்களுக்கு கொளுத்தனும் என்ற ஆவல் இருந்தாலும் அந்த அளவிற்கு விலை கொடுத்து பெற்றோல் வாங்க வசதியில்லாமல் மக்கள் தயங்குகிறார்கள். இல்லை என்றால் ஊர்க்கு ஊர் தொட்டிகளை நிறப்பி அந்த செயல் எங்கள் ஊரில் நடக்கட்டும் என்று திருவிழாவே எடுப்பார்கள் போலும்.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க பசு மாட்டையும் அதன் கழிவுகளில் எப்படி தங்கம் உட்பட பல தயாரிப்புகளை செய்யலாம் என்ற ஆராய்ச்சிகளுக்கு கோடான கோடி மக்கள் வரிப்பணத்தை இறைத்து அது அமெரிக்க பல்கலைகள் வரை பல் இளித்துக்கொண்டு நிற்கின்றது.

பசுவின் பெயரில் சட்டம் இயற்றுவதும் அதன் பாதுகாப்பின் பெயரில் சாதாரண மக்கள் பொது இடங்களில் அடித்து கொல்வதும் அது பசுக்கறி தானா என்ற அறிய ஒரு அறிவியல் அறிஞர் சாதணம் வடிவத்தவரை வந்து நிற்கின்றது.

இப்படி வரி விதித்தால் மக்கள் பலனடைவார்கள் என்று சொல்லி சாதாரண மக்கள் 100 ரூபாய் கொடுத்த இடங்களில் 130 ரூபாய் கொடுக்க வைத்து ஏழைகள் எல்லாம் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்றும் அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் கள்ளப்பணம் வைத்து இருப்பவர்கள் என்று புரட்டு பேசியும் மகிழ்ந்ததை மக்கள் இரசிக்கவில்லை.

கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வருகின்றேன் என்ற பெயரில் நாட்டில் இயங்கிக்கொண்டு இருந்த கல்வி அமைப்பை மடை மாற்றி விடுவதையும் மக்கள் இரசிக்கவில்லை.

ஏன் ஐயா இப்படி எல்லாம் சொத்தப்பல் திட்டங்கள் தவிர உங்களிடம் வேறு எந்த திட்டமும் இல்லையா என்றால் அந்த சொதப்பல் திட்டங்கள் எல்லாம் காங்கிரசு அரசால் கொண்டுவரப்படு நிலுவையில் உள்ளவைகளே, நாங்கள் செயல்படுத்தினோம் நீங்கள் காங்கிரசை தான் திட்டவேண்டுமே தவிர எங்களை இல்லை என்று சொல்கிறார்கள். தெரியாமல் தான் கேட்கின்றோம் பசுவும் பசு சார்ந்த திட்டங்கள் தவிர உங்களுக்கு வேறு எந்த திட்டங்களும் வகுக்க தெரியாதா இல்லை தெரியாது போல் நடிக்கிறீர்களா.... அது சரி சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு.

அப்போ திரையில் அடுத்தவர் எழுதி இயக்கிய கதா நாயகனும் அடுத்தவர் எழுதிக்கொடுத்ததை மேடைகள் தோறு அடவு கட்டி ஆடிய உங்களுக்கும் என்ன வித்தியாசம். இந்த பொம்மை நாயகனை இன்னமும் இணையத்தில் பிரதமரின் செய்கையை நீதிமன்றம் கூட கேள்வி கேட்க துணியவில்லை என்று எழுதி மகிழ்கின்றது.

தினமும் தொகாவில் வரும் விசயகந்து போதையில் தள்ளாடும் நிகழ்வுகளும் சரி மோடியும் அவரது கூட்டமும் உளரி கொட்டுவதும் ஒன்றாகத்தான் மக்களுக்கு தெரிகின்றது.

நீங்கள் இருவரும் திரையிலும் மேடையிலும் நன்றாக நடிக்க மட்டுமே தெரிந்தவர்கள் என்றும் தலைவர்கள் இல்லை என்றும் மக்கள் நன்றாக புரிந்துக்கொண்டுள்ளார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்தால் உலகில் புன்னியம் பெருகி பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்ன மோடியின் அடிபொடிகளில் ஒருவரான ராம் செத்மலானியின் வாக்கு மூலம் இணையத்தில் பரவுகின்றது அதை படித்து பாருங்கள் நாங்கள் சொல்வது எவ்வளவு உண்மை என்று உங்களுக்கே தெரியும்.

Wednesday, September 20, 2017

திருமுருகன் விடுவிப்பு புயலுக்கு முன் அமைதியா

நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்திருக்கும் திருமுருகனுக்கும் அவரது தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

சாதாரணமாக இப்படி வழக்கில் எல்லாம் விடுவிப்பது அபூர்வம், என்ன என்ன காரணங்களை எல்லாம் சொல்ல முடியுமோ அவைகளை எல்லாம் பூடகமாக வாய்வழி வாதமாக வைத்துவிட்டு அவைகளை எழுத்துபூர்வமாக கொடுக்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஆண்டுகளை எளிதாக கடத்த முடியும்.

அதுவும் மைய அரசும் மா நில அரசும் சேர்ந்து நடத்திய நாடகம் என்றதால் என்ன என்ன தில்லு முல்லுகளை செய்யலாமோ அவ்வளவும் செய்ய அவர்களுக்கு முழு பலமும் ஆசிர்வாதமும் உண்டு.

இருப்பினும் எப்படி இவ்வளவு விரைவில் வெளியே விட சம்மதித்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை இப்போதைக்கு விடுங்கள் நாளை எங்காவது ஊருக்கு போகும் போது அங்கே பொது சொத்துக்கு தீயை வைத்துவிட்டு திருமுருகன் தான் வைத்தார் என்று அள்ளிக்கொண்டு வருவோம் என்ற திட்டத்தில் வெளியில் விட்டார்களா என்று தெரியவில்லை.

பொங்கல் சென்று தீபாவளி நெருங்கிக்கொண்டு இருக்கிறது இன்னமும் அந்த சல்லிகட்டு போராட்டத்தில் தீ வைத்த நல்லவர்கள் யார் என்றும் அவர்களுக்கு என்ன தண்டனை என்றும் இது வரையில் தெரியவில்லை. ஆனால் அதற்குள்ளாக போராட்ட குழுவை 6 மாதம் சிறையில் வைத்தாகிவிட்டது.

திருமுருகன் உள்ளே இருந்த நாட்களில் நீட்டும் அது சார்ந்தும் நிறைய நடந்துவிட்டது. நீட் சம்பந்தமாக என்ன என்ன செய்ய போகிறார் என்று பார்ப்போம்.

Tuesday, September 19, 2017

இளையராசாவையும் மே 17ஐயும் ஞாபகப்படுத்திய டன்கிரிக்கு(Dunkirk) படம்

பொதுவாக ஒரு நல்ல படம் பார்த்தால் அந்த படத்தின் பாதிப்பு மனதை விட்டு அவ்வளவு எளிதில் நீங்காது. அதுவும் மனதில் ஏற்கனவே பார்த்த பல விடயங்களை கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தவும் செய்யும்.

இந்த டன்கிரிக்கு படமும் அப்படி ஒருபடம்.

போர் சம்மந்தமான படம் என்றால் நிறைய காட்டி மக்களை கட்டி போட்டு வைக்க முடியாது. முதலில் காட்சியின் விரிவுக்கு என்று ஒரு பிரமாண்டத்தை காட்டுவார்கள், பிறகு கதைக்கு சம்பந்தமான சிலரையும் அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்று காட்டுவதும் தான் இயல்பு. அந்த வகையில் இந்த படமும் வரலாறில் யார் யார் எல்லாம் பதிவு பெற்றார்களோ அவர்களை மட்டும் ஆங்காங்கே காட்டி திரைகதையில் பதிக்கிறார் இயக்குனர்.

படத்தின் நாயகன் இசை தான், முதன் முதலில் ஆள் அரவம் இல்லாமல் இருக்கும் மையான அமைதியான ஊரில் அந்த வீரர்கள் நடக்கும் இடத்தில் மெல்லிதாக ஒலிக்கும் அமானுசிய ஒலி மெல்ல மெல்ல திகில் இசையாக் சீற்றம் கொள்கிறது.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று கடற்கரைக்கு வரும் காட்சியில் இன்னும் வீரியம் கொள்கின்றது. விரக்தியுன் உச்சத்தில் இருக்கும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தும் ஏதும் பேசிக்கொள்ளவோ என்ன ஆச்சு என்று விசாரித்துத்துகொள்ள முடியாத அளவிற்கு ஒரு விரக்தி. எப்போது தாக்குதல் நடக்கும் அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று ஊகிக்க முடியாத மர்மமாய் அடுத்தடுத்து நகர்கின்றது.

கொஞ்சம் கொஞ்சமாக இசை அங்கே தீவிரமாக அதே சமயத்தில் மெல்லிதாகவும் ஒலிக்கின்றது.

பிறகு அங்கே நடக்கும் தாக்குதலுக்கு பிறகு ருத்ர தாண்டவம் ஆடுகின்றது இசை. சிறப்பு சத்தமும் பின்னணி இசையும் அற்புதமாக நடனமாடுகின்றது படம் இறுதி வரை.

படம் முடிந்த பிறகு இந்த மாதிரி ஒரு ருத்ரதாண்டவ இசையை இதற்கு முன் எங்கேயோ கேட்டோமே என்று நினைக்கையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நினைவுக்கு வந்தது.

முதல் காட்சியில் துவங்கும் இசை பின்பு மெல்ல மெல்ல உக்கிரமாகி பிறகு கரைபுரண்டு ஓடும். கிட்டதட்ட ஒரு போர் படத்தின் இசையின் அத்தனை பாகங்களையும் கொண்டு இருந்தது அந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இசை.

இன்னும் கொஞ்ச நாளில் அந்த ஓ நாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் இசையுடன் இணைத்து இரசிகர்கள் காட்சிகளை வெளியிடப்போவது உறுதி.

மே 17ல் கொத்து கொத்தாய் எங்கே மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்டு எப்படி குண்டு வீசி கொன்றார்கள் என்று ஆவனங்கள் கூட நமக்கு காட்டவில்லை. ஆனால் இப்படி தான் கொன்றார்கள் என்று அழகாக இந்த படம் காட்டியுள்ளது.

போர் நடவடிக்கைகளில் செஞ்சிலுவை வாகனங்களை தாக்க கூடாது என்ற விதி அனைவரும் கடைபிடித்தே ஆகவேண்டிய ஒன்று ஆனால் டன்கிரிக்கில் முதலில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது அந்த செஞ்சிலுவை கப்பல் தான் என்று பார்க்கும் போது எப்படி பட்ட போர் அது என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

இந்த படதிற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம் இந்த இரண்டு பிரிவிலும் விருது கிடைக்க வாய்போ இல்லை. காரணம் எந்த ஒரு இடத்திலும் இராணுவம் பயன்படுத்தும் ரேடியோவை காட்டவில்லை. அது மட்டும் இல்லாது ஒரு குண்டு தாக்கிய 20 வினாடியில் கப்பல்கள் மூழ்குவதாகவும் காட்டியுள்ளார்கள். நல்ல ஆவணப்படம் என்றும் கூட சொல்ல முடியாது காரணம், படத்தில் தொழி நுட்ப முறையில் சேத்துள்ள கடலும் வானமும் சேர்ந்த காட்சிகளில் நிறைய சித்தரிக்கப்பட்டது போல் இருகின்றது.

வலுக்கட்டாயமாக காட்சிகளை திணித்தது போல் கையாண்டு இருக்கிறார்கள்.

2017ஆம் ஆண்டிற்கான ஆசுகர் விருதில் இசைக்கு மட்டுமாவாது போட்டியில் எடுப்பார்கள் மற்ற வகையில் சந்தேகம் தான்.


Monday, September 18, 2017

இராசீவ்காந்தியும் தூர்தர்சனும் மோடியும் நவோதயாவும்

முன்னொரு காலத்தில் இப்படி ஒரு சிரிப்பு தமிழ் நாளிதழில் வந்தது. மன நல மருத்துவரிடம் கணவனை மனைவி அழைத்து வந்து சொல்வார், "டிவி பாக்கும் போது கரண்டு போனா உடனே இராசீவ் காந்தி படத்தையே பார்த்துகிட்டு இருக்கார்ன்னு" சொல்வதாக இருக்கும் அந்த நகைப்பு.

அந்த கால கட்டத்தில் தூர்தர்சனை விட்ட வேற நாதியில்ல ஆகையால் என்னை நீங்க பார்த்து தான் தொலையனும் என்று எப்போது பார்த்தாலும் இராசீவின் படத்தையே காட்டியதன் விளைவு இந்த நகைப்பில் வந்து நின்றது.

பிறகு இந்தி நிகழ்சிகளை தேசிய நிகழ்ச்சிகள் என்ற பெயரில் திணித்தார்கள். வயலும் வாழ்வும் செய்தியும் முடிந்த பிறகு தேசிய நிகழ்ச்சிகள் என்று இரவு 9:00 வரை காக்க வைத்துவிட்டு பிறகு பாருங்கள் என்று சொல்வார்கள்.

ஞாயிறு இரவில் ஒரு படம் காட்டுவார்கள், அந்த படமோ மிகவும் பாடாவதியான படமாக இருந்தாலும் முடிவு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள இரவு 9:00 வரையில் காத்துகிடக்கனும்.

எங்க ஆட்சி எங்கள் முடியு நீங்கள் எல்லாம் என்ன செஞ்சாலும் இப்படியாது இந்திய கற்றுக்கொள் என்று அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்சனில் இவர்கள் படுத்திய பாடு கொஞ்சமா நஞ்சமா. விளம்பரம் கூட இந்தியில் தான் வரும். என்னே கொடுமை என்று தமிழக மக்களுக்கும் இருந்து விட்டு போனார்கள்.

ஆனால் இன்றைக்கு அந்த தூர்தர்சனும் அகில இந்திய வானொலியின் செய்திகளைக்கூட மக்கள் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை. 2 நிமிடத்திற்கு ஒரு முறை அமிதாப் வடக்கின் ஒரு குக்கிராமத்தில் இயற்கை உபாதைக்காக போகின்றவனை விசில் அடித்து இங்கே வா என்று கூப்பிடும் சொத்த பாரத்து விளம்பரம் மட்டும் தான் ஒளிபரப்பாகின்றது. அவ்வப்போது 30 ஆணுகளுக்கு முன்னால் ஒளிபரப்பிய படங்கள் மறைந்த இயக்குனர்களின் அந்தகால பேட்டி என்று காலாவதியான நிகழ்ச்சிகளாகவே வழங்குகின்றது.

ஒரு வேளை நவோதயா பள்ளியில் இந்தியில் பயின்றால் தான் மருத்துவம் என்று மோடி திணிக்கும் கால் தமிழகத்தில் இன்னும் 20 ஆண்டுகளில் சொத்த பாரத்துக்கு விளம்பரம் போட்ட நவோதயா ஆசிரியர்கள் தயாராக்குகின்றது என்றது மட்டுமே பொருள்.

தமிழகத்தில் மோடியைவிட அதிக அதிகார சம்பத்தை எல்லாம் செயலலிதாவின் ஆட்டத்தில் கண்டவர்கள் நாம், கிட்டதட்ட 25 ஆண்டுகளி அவர் கொடுத்த கசப்பு மருந்தை விழுங்கியவர்கள் நாம். நீங்கள் செய்யும் பந்தாக்களை விட 1000 மடங்கு பந்தாக்களை எல்லாம் தனது முதலாவது ஆட்சிகாலத்தில் நிகழ்த்தி மக்களின் சாபத்தை வாங்கிக்கட்டி கொண்ட செயலலிதாவின் காட்டாட்சி போல் இருக்கிறது உங்களி பேயாட்சி.

நாமும் மிரட்டினோம் அவர்களும் மிரண்டுவிட்டார்கள் என்று எண்ணாதீர்கள்.

இன்னும் 20 ஆண்டுகளில் நவோதயா பள்ளிகளில் பசுமாடுகளை கட்டி பராமரிக்கும் பகுதி நேர மைய அரசு ஆசிரியர்கள் ஏக் காவும் மே ஏக் கிசான் ரகுதாத்தா என்று சொல்வதை கற்பனையில் பார்க்கவே வேடிக்கையாக இருக்கின்றது...........

Saturday, September 16, 2017

எங்களுக்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம் கிருத்துவ மற்றும் முசுலீம் கல்வி அறக்கட்டளைகள் போதும்

இந்தியா போன்ற ஏழை நாடுகளின் உணவு பஞ்சத்தின் போது தங்களால் ஆன உதவிகளை கிருத்துவ மற்றும் முசுலீம் அறக்கட்டளைகள் வழங்கி வந்துள்ளது வரலாறு. அப்படி வந்தவர்கள் அதோடு நிற்காமல் கல்வியில் பஞ்சம் கண்டு நிற்கும் பின் தங்கிய இடங்களில் தங்களது கல்வி அறக்கட்டளைகளை நிறுவி கல்வியையும் வழங்கி வருகின்றது.

எந்த ஒரு படிப்புக்கும் வேண்டிய தயாரிப்புகளை பெறுவதிலும் செயலாற்றுவதிலும் தியாக உள்ளம் கொண்ட சேவர்களை கொண்ட அமைப்புகள் அவை. எந்த ஒரு இலாப நோக்கும் இல்லாமல் கடவுளுக்கு செய்யும் சேவையாக செய்யும் அவர்களின் சேவை தமிழகத்து ஏழை மக்களுக்கு மிகவும் அவசிமாக இருக்கிற நாட்கள் இப்போது.

மதவாத மைய அரசு உருட்டலும் மிரடட்டலுமாக எங்களுக்கு கும்பிடு போடு இல்லையேல் உனக்கு படிப்போ வேலையோ வாழ்வோ கிடையாது. மீறி எதிர்த்து எதுவும் பேசினால் என்ன நடக்கும் என்று கர்னாடகாவில் கொல்லப்பட்ட எழுத்தாளர்களே சாட்சி என்றும் மிரட்டுகிறது.

குறைந்தது இன்னும் ஒரு 4 வருடங்களுக்கு தமிழகம் தகப்பனை இழந்த குடும்பம் தவிக்கும் குடும்பமாக எடுப்பார் கைப்பிள்ளையாக ஆக்கப்பட்டுவிடும். எந்த தயாரிப்பும் இல்லாமல் மேலும் பல அனிதாக்களை பலிகொடுக்கம் வலிமையோ, புரண்டு வரும் வெள்ளமாக புரட்சி நடத்தவோ இந்த ஏழை மக்களுக்கு நாதி இல்லை.

ஒரு காலத்தில் சங்கதம் பேசினால் அல்ல காதில் கேட்டால் கூட காதில் ஈயத்தை காச்சி ஊற்றப்படும் என்று சொல்லி சொல்லி சங்கதத்தை அழித்துவிட்டு. இன்றைக்கு அதன் அனாதை பிள்ளையான இந்தியை படிக்கவில்லை என்றால் மருத்துவம் படிக்க முடியாது என்று பயமுறுத்தி தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவி இந்தியும் இந்துத்வமும் திணிக்க முற்பட்டு நிறிகிறார்கள். தலைக்கு 15 இலட்ச ரூபாய் கொடுப்போம் என்று சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு வாக்களித்தவர்கள் இன்றைக்கு செய்வதற்கறியாமல் கையை பிசைந்துக்கொண்டு நிற்கிறார்கள்.

இந்த அறிவு பஞ்சத்தை போக்க கிருத்துவ மற்றும் முசுலீம் அறக்கட்டளைகளை உதவும்படி வேண்டுதல்களை வைக்கின்றோம்.

யேசு நாதர் யார் என்றே தெரியாமல் இருந்த ஊரில் கிருத்துவம் சொல்லிக்கொடுத்து அதனுடன் கல்வியையும் வழங்கிய உங்களின் சேவையும் நிகரற்றது. உங்களின் பாதையில் கல்வி அறக்கட்டளைகளை நிறுவி கல்வி சேவையாற்றும் முசுலீம் அறக்கட்டளைகளும் உங்களுடன் எங்களுக்காக நிற்கின்றது. வாருங்கள் வந்து இந்த ஏழை இந்தியாவின் உண்மையான ஏழை மக்களின் கல்விக்கும் ஏதிர்காலத்திற்கும் உதவுங்கள்.

Wednesday, September 13, 2017

செயலலிதா மரணத்தின் மர்மம் வெளியிட்டார் போலி மருத்துவர் தமிழிசை

செயலலிதாவிற்கு மருத்துவம் வழங்கிய மருத்துவர்கள் யாவரும் போலி மருத்துவர்கள் என்றும் நீட் பரீட்சையில் தேர்வு பெறாத மருத்துவர்களால் எப்படி தரமான மருத்துவம் கொடுக்க முடியும். ஆகையால் போலி மருத்துவர்களை கொண்டு கொடுக்கப்பட்ட சிகிச்சை தோல்வியுறுவதில் ஒன்றும் அதிசயம் இல்லை என்று போலி மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராசன் தெரிவித்துள்ளார்.

Thursday, September 7, 2017

பரமாத்த குருவும் அவரது சீடர்களும் - பாசகவும்

அந்த காலத்தில் பரமாத்த குரு என்று ஒரு கதையை சொல்வார்கள். அதில் அடி முட்டாளாக ஒரு குருவும் அதைவிட மகா மட்டமாக முட்டாளாக அவரது சீடர்களும் என்று ஒரு கதை சொல்வார்கள்.

சின்ன சின்ன செய்கைகளில் கூட எவ்வளவு முட்டாள் தனமாக நடந்துகொள்ள முடியுமோ அவ்வளவு முட்டாள் தனமாக நடந்து காட்டுவது இந்த குருவின் இயல்பாக இருக்கும். அதற்கு ஆமாம் சாமி போடும் சீடர்கள் என்று கதை நகரும். படிக்க நகைப்பாக இருந்தாலும் மிகவும் வேதனையான கதைகள் அவைகள், இப்படி கூடவா ஒரு அடி முட்டாள் இருப்பான் என்று நினைக்க வைக்கும் கதை பாத்திரங்கள் அவைகள்.

ஆனால் ஆச்சர்யம் அந்த கதைகளில் வருவது போல் இருக்கிறது மோடியும் அவரது அமைச்சரவையும். பணமதிப்பிழப்பு இந்த செய்கைகளில் ஒரு சிறந்த உதாரணம்.

இது வரையில் 2.8 இலட்சம் கோடி பணத்தை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்து இருப்பதாக மோடியின் சீடர் அருண் செட்லி தெரிவித்துள்ளார்.

இந்த 2.8 இலட்சம கோடியில் வருமான வரி துறையின் தனிக்கையையும் தாண்டி முக்கால் வாசி பணமும் வெளியே வந்துவிடும் என்றதில் ஐயம் இல்லை. இருந்தாலும் பரமாத்த குரு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

வெறும் மாடும் மத வெறியும் பழைய காங்கிரசு வகுத்த திட்டம் தவிர பாசகவிற்கு ஒன்றும் தெரியவில்லை. எதைக்கேட்டாலும் இது 2010ல் காங்கிரசு கொண்டுவந்த திட்டம் அதை ஆதரித்தது திமுக என்று மட்டுமே சொல்கிறார்கள். அப்படி என்றால் இது வரையில் பாசகவால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எல்லாம் என்ன என்றால் இந்த பரமாத்த குரு திட்டங்களை சொல்லி சல்லியடிப்பார்கள் சிங்கிகள்.

Tuesday, September 5, 2017

பாசக - நீட் தேர்வால் ஏழை மக்கள் எல்லாம் எவ்வளவு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்

நீட் தேர்வு வந்ததால் தகுதியான அறிவாய்ந்த மக்கள் மட்டுமே தான் இனி மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்றும் இது தமிழக்த்தின் ஏழை மாணவர்களையும் ஏழை சமூகத்தையும் மனதில் வைத்து தான் இந்த முடிவை பாசக அரசு எடுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு கள்ளப்பணம் வைத்து இருப்பவரை குறிவைத்து எடுக்கப்பட்ட முடிவு, இதனால் பலன் பெறப்போவது என்னவோ தமிழகத்தின் ஏழை எளிய மக்கள் தான்.

இந்த நீட் தேர்வு திணிப்பு முடிவை எடுப்பதற்கு முன் பாசகவின் தலைமை எத்தனை நாள் தூக்கம் இல்லாமல் தவித்து இருக்கிறது தெரியுமா. இந்த நீட் தேர்வின் பலன் இன்னும் 50 நாட்களில் தெரிய ஆரம்பித்துவிடும்.

 நீங்களும் படிக்கிறீர்கள் கள்ளப்பணம் வைத்து இருப்பவனும் படிக்கிறான் ஆனால் பாருங்கள் கடைசியில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ படிப்பை அவன் அந்த கள்ளப்பணம் வைத்து வாங்கிக்கொண்டுவிட்டு ஏழை எளியவர்களை மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் செய்து வந்தார்கள். இப்போது இந்த நீட் தேர்வு வந்ததால் இனி ஏழை எளிய மாணவர்கள் எல்லாம் இந்த ஆண்டு முதல் உலகத்திலே வேறு எங்குமே காணமுடியாத அதிசயமாக அதிக அளவில் மருத்துவம் படிக்க இருக்கிறார்கள்.

இந்த தமிழக ஏழை எளிய மக்கள் மருத்துவம் படிக்க வாப்பு கிடைத்தது என்ற பொறாமையில் கள்ளப்பணம் வைத்து இருப்பவர்கள் தான் போராட்டம் அது இது என்று ஆடுகிறார்கள். மற்றப்படி ஏழை எளிய மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் நண்பர்களும் உறவினர்களும் எவ்வளவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறார்கள் என்று தமிழகம் சென்று பார்க்கும் படி இந்தியாவின் மற்ற மாநில மக்களை பாசக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வை திணித்ததில் திக்கு முக்காடி போய் தமிழகத்தின் ஏழை எளிய மக்கள் வீதிகளில் வந்து கண்ணில் கண்ட மக்களுக்கு எல்லாம் இலட்டு கொடுத்து கொண்டாடும் காட்சிகளை வீதி எங்கும் திருவிழாப்போல் தமிழகத்தில் பார்க்க முடிவதாக தமிழக பாசக தலைவர்கள் தொகாவிலும் செய்தி ஊடகங்களிலும் தெரிவித்து மகிழ்கிறார்கள்.

தமிழகத்தில் பாசக ஆட்சி இல்லாத போதே இவ்வளவு நல்லகாரியங்களை செய்யும் பாசக மட்டும் தமிழகத்தை ஆளும் மா நிலமாக வந்தால் நிலைமை எவ்வளவு மேம்படும் என்று குறிப்பிட்டு அகமகிழ்ந்தார்கள் என்று தினசரிகளை படித்தாலே தெரியும் என்றும், தமிழகத்தில் தாரமரை மலர்ந்தே தீரும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Wednesday, August 30, 2017

நல்லவேளை பாசக நித்தி ஆணையம் குடும்பங்களை பற்றி எதுவும் ஆராயவில்லை

இந்த நித்தி ஆயோக்கின் ஆயோக்கியர்கள் அவ்வப்போது கிறுக்கு தனமாக பிதற்றுவார்கள் அப்படி பிதற்றியதின் உச்சம், அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்ற ஆலோசனை.

ஏன் அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுக்க வேண்டும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையில் வீழ்ச்சி அடைந்து நலிவடைத்துள்ளது அதனால் தனியாரிடம் தரவேண்டும் என்று ஆலோசனையை வழங்கியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏமாளி இந்தியர்கள் இருக்கும் வரையில் பிடுங்கி திண்பது என்று இருக்கிறார்கள் போலும் இந்த தனியார் நிறுவனத்தினர்கள்.

வருமானம் கூடிப்போச்சு அதனால் உங்களுக்கு பொதுவினியோகத்தில் பொருட்கள், சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவு செய் என்று சொல்லாமல் சொல்கிறாகள். மேலும் நாடெங்கிலும் உள்ள அரசு பள்ளியில் இலவச கல்வியை அடிப்படை உரிமையாக பெற்று வந்தார்கள். இப்போது பொருட்களுக்கு செலவழித்தது போக மீதம் இருக்கும் பணத்தை அடிப்படை கல்வியில் இருந்து செலவு செய் என்று சொல்கிறார்கள்.

இந்த நித்தி ஆயோக்கியர்களை குடும்ப நலம்பற்றி சொல்ல சொல்லி இருந்தால் எந்த மனைவிமார்களும் வசதியான ஒரு வாழ்க்கையை வாழவில்லை ஆகையால் இனி மேல் இவர்களுக்கு கணவன் தேவை இல்லை பதிலாக தனியார் வழங்கும் கணவன் சேயைதான் வாங்க வேண்டும் என்று உத்தரவிடுவார்கள் போலும்.

தலை இருந்தா தானே தலைவலி என்று சொல்வதை போல், நல்ல அரசு. இந்த அரசு தான் வேண்டும் என்று தவமிறுந்த இந்தியர்களே உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.......

Tuesday, August 29, 2017

அன்புமணி மருத்துவ மாணவ சேர்க்கை ஊழல் இருக்கட்டும் உங்களின் அரசு மருந்து ஆலை மூடலுக்கு தண்டனை எப்போது

மருத்துவ மாணவர் சேர்க்கையில் போலி சான்றிதழ்ல்களை கொடுத்து ஊழல் செய்தோரை தண்டிக்க வேண்டும் என்ற உங்களின் ஞாயமான கோரிக்கை புரிகின்றது. அதே போல் நீங்க சுகாதார அமைச்சராக இருந்த போது இந்தியாவில் இயங்கி வந்த அரசு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளை எல்லாம் மூடி அயலக மருந்தாலைகளில் தயாரிக்கும் மருந்துகளை தான் இனி அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைவரும் வாங்க வேண்டும் என்று நடந்துக்கொண்டீர்.

அதை அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் அடுத்த முதல்வர் நான் தான் என்று கையில் ஒரு எழுது கோலுடன் கையெழுத்து தான் போடுவேன் என்று விளம்பரப்படுத்துனீர்கள். அதுகாரும் தந்தி தொகாவில் பாண்டே கேட்ட இதே கேள்விக்கு அந்த மூடப்பட்ட மருந்தாலைகளுக்கு(தமிழக்த்தில் உதகமண்டலத்தில் ஒரு அரசு மருந்தாலை) பதில் உலக தரமான அளவில் புதிய ஆலைகளை திறக்க உத்தரவிட்டதும் அது விரைவில் சென்னையில் திறக்கபடும் என்றும் சொன்னீர்கள்.

ஆனால் இது வரையில் அந்த ஆலையும் திறக்கபடவில்லை, சாதாரண எளிய மக்களும் அவர்களுக்காக இயங்கி வந்த அரசு மற்றும் அரசு சார்பு மருத்துவமனைகளும் தனியாரிடம் தான் இப்பொழுதும் மருந்துகளை வாங்குகின்றனர்.

இந்த கொள்ளைக்கு துணை போன உங்களுக்கு எப்போது தண்டனை என்ன தண்டனை என்று நீங்களே சொல்லிவிடுங்கள் அன்புமணி.

வெறும் 1 ரூபாய்க்கும் 2 ரூபாய்க்கும்  கிடைத்துக்கொண்டு இருந்த பேராசிட்டமால் இன்றைக்கு எவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கின்றது தெரியுமா. உயிர்காக்கும் மற்றும் மிகவும் அவசியமான மருந்துகளை தயாரித்து வழங்கிய அந்த 4 அரசு மருந்தாலைகளை மூட சொல்லி சொன்ன அந்த தனியார் மருத்தாலைகள் யார் யார், என்ன என்ன காரணங்களுக்காக அந்த ஆலைகளை நீங்கள் மூடினீர்கள் என்று தனியாக ஒரு விளக்கம் அளிக்க தேவை இல்லை. இன்றைக்கு பாசக எப்படி புது புது காரணங்களை சொல்லி பொது வினியாகங்களை மூடி தனியார் நிறுவனங்களிடம் பொருட்களை வாங்கிகொள்ளுங்கள் என்று சொல்கின்றனவோ அதை அன்றே செய்து முடித்த முன்னோடியல்லவா பதில் சொல்லுங்கள்.

Monday, August 28, 2017

மோடியின் தனிப்பட்ட கருத்து -- மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது

பொதுவாக பாசகவின் யார் யார் எது எது பேசினாலும் அது அவரது தனிப்பட்ட கருத்து என்று தான் தமிழக பாசகவினர்கள் சொல்வார்கள். அந்த வகையில் பார்த்தால் மோடி சொல்லி இருக்கும் இந்த மதத்தின் பெயரால் வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது என்ற கருத்தும் மோடியின் தனிப்பட்ட கருத்து தான் போல.

இந்த மாதிரியான கருத்துக்களை மோடி கடைசியாக அமெரிக்க பயணம் சென்று வந்ததில் இருந்து அடிக்கடி சொல்கிறார். யாருடைய வற்புறுத்தல் என்று தெரியவில்லை.

மதத்தின் பெயரால் 3 நாட்களில் 1,60,000 மக்களை கொன்று குவித்தவர் இந்த மோடி, அவர் சொல்கிறார் மத்தின் பெயரால் வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது என்று.

Monday, August 21, 2017

ஒரு டீக்கடைகாரரும் அவரது பிட் நோடீசு அடிக்கும் நண்பரும்

ஒரு ஊரில் ஒரு டீக்கடைகாரர் இரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தார். அந்த கடைக்கு தேவையான காகிதங்களை பெற எண்ணி நகர் முழுதும் அலைந்தார். கடைசியில் அவருக்கு கட்டும் விலையில் வினியோகிக்க முடியாமலும், நன்றாக எழுத்துக்களும் அச்சும் வரவில்லை என்று மக்களால் நிராகரிக்கப்பட்ட பிட் நேடீசுகள் இந்த டீக்கடைக்காரின் விலையடக்கத்தில் கிடைக்க அங்கேயே வாங்கி அந்த பிட் நோடீசுகளில் அன்றாடம் டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பொட்டலம் மடித்து கொடுத்துவந்தார்.

நாளடைவில் அந்த பிட் நோடீசு அடிப்பவரும் டீக்கடைக்காரரும் நெருக்கமான் வியாபாரிகளானர்கள். பிட் நோட்டீசு அடிப்பவருக்கு டீக்கடைக்கு கொடுக்கும் மட்ட காதிகங்களில் தான் அதிக இலாபம் வந்தது. ஆகவே கொஞ்சம் கொஞமாக அச்சடிக்கும் நுட்பங்களையே மறக்க துவங்கினார்.

டீக்கடைக்காரரும் பிட் நோட்டீசு அடிப்பவரும் அன்றாடம் மாலையில் சந்தித்துக்கொண்டு தங்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கலந்தாலோசிக்க துவங்கினர். அங்கனம் பேசும் போது எல்லாம் பிட் நோடீசுகாரருக்கு கோடி கோடியில் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் அதற்கு தகுந்தார் போல் அச்சடிக்கும் திறனோ முயற்சியோ இல்லாமல் இருந்தார்.

இப்படி காலம் உருண்டோடியதில் டீக்கடைக்காரர் ஒரு நாள் அந்த நாட்டின் பிரதமர் ஆனார். டீக்கடைக்காரருக்கு அவரது நண்பர்கள் யாவரும் சேர்ந்து ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் அந்த பிட் நோட்டீசு நண்பரும் கலந்துக்கொண்டு இருந்தார்.

 நீண்ட நாளைக்கு பிறகு சந்தித்துக்கொள்ளும் இந்த நண்பர்கள் தங்களது பழைய நட்பையும் அது தொடர்பான பேச்சுக்களையும் அசைப்போட்டர்கள். அப்போது தான் டீக்கடைக்காரர் பிட் நோட்டீசுகாரருக்கு எதிர்காலத்தில் தான் உதவுவேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வரவும், மேலும் பிட் நோடீசுகாரர் மிகவும் ஏழ்மையான நிலையில் சாப்பாட்டிற்கே அலையும் நிலையி அன்றாடம் காட்சியாக வாழ்வதும் பார்த்து சகிக்காமல் மனமுடைந்து போகிறார் அந்த டீக்கடைக்காரர்.

அன்றைய இரவு முழுதும் மனவலியில் துடித்த அந்த டீக்கடைக்காரர் காலையில் ஒரு யோசனை பிறக்கிறது. அன்று தனது அமைச்சரவை சக்காக்களை அழைத்து இன்று இரவு ஒரு முக்கிய முடிவை அறிவிக்க போகின்றேன் என்று மட்டும் சொல்லிவிட்டு பாராளுமன்றத்திலே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.

இரவு அந்த நாட்டில் இருக்கும் 1000 மற்றும் 500 மதிப்பு கொண்ட பணம் இனி செல்லாது என்று அறிவிக்கின்றார்.

 நாட்டுமக்களும் அமைச்சர்களும் குழம்பிப்போய் நிற்கும் போது, அந்த பிட் நோட்டீசுகாரர் மட்டும் நாட்டில் இருக்கும் பழைய அச்சடிக்கும் இயந்திரங்கள் எங்கே சல்லீசாக கிடைக்கும் என்று தேடி அலைகிறார். அங்கே இங்கே என்று அலைந்து கடைசியில் அந்த நாட்டில் வெகு வருடங்களுக்கு முன் இருந்த லாட்டரி சீட்டை அச்சடிக்கும் இயந்திரம் தான் இவரின் விலைக்கு படிந்த விலையில் கிடைக்கிறது. அந்த இயந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த டீக்கடைக்காரரை தொடர்புகொண்டு தான் வாங்கிய இயந்திரம் பற்றி செய்தியை தெரிவிக்கிறார்.

டீக்கடைக்காரருக்கோ மகிழ்ச்சி தாங்க முடியவில்லை, தனது பழைய நண்பருக்கு தான் நினைக்கும் திட்டங்கள் அவருக்கு புரிகின்றதே என்று அகமகிழ்ந்து பழைய 1000 மற்றும் 500 பணதிற்கு பதில் புதிய பணத்தை இரவோடு இரவாக அடிக்கும்படி பணிக்கிறார் டீக்கடைக்காரர்.

பிட் நோட்டீசு அடிப்பவரும் தன்னால் முடிந்தவரை அந்த லாட்டரி இயந்திரத்தில் பணத்தை இரவு முழுவதும் காலால் மிதித்தே பிட் நோட்டீசு அடிப்பது போல் அடித்து முடிக்கிறார். காலையில் அச்சடித்த புதிய லாட்டரி டிக்கட்டுகள் போல் இருக்கும் அந்த பணத்தை கொண்டு சென்று தனது நண்பனிடம் காட்டுகிறார். அதை பார்த்த டீக்கடைக்காரர், எவ்வளவு பணம் அச்சடித்து இருக்கிறீர்கள் என்று வினவுகிறார். இரவு முழுவதும் அச்சடித்ததில் 500ல் ஒரு 500ரும் 1000த்தில் ஒரு 500ரும் அச்சடித்தாக சொல்கிறார்.

அந்த டீக்கடைகாரர் ஒரு காகிதத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு என்றால் எத்தனை நாளில் பூர பணமும் அச்சடிக்க முடியும் என்று கணக்கிட்டு பார்த்து, இனிமேல் நீங்கள் 1000 பணம் அச்சடிக்க வேண்டாம் அதற்கு பதில் 2000 பணமாக அச்சடிங்கள். 2000 பணத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று சொல்கிறார்.

இப்படியே ஒரு 50 நாட்கள் செல்கின்றது, 50 நாட்களுக்கு பிறகு அந்த நாட்டில் அது வரையில் 2000 பணத்தை பார்க்காத மக்கள் 2000 பண தாளை கண்டதில் ஆனத்த கூத்தாடி பார்ப்பவர்கள் எல்லோருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள்.

பிறகு மெதுவாக 500 பணத்தாளும் அச்சடித்து கொடுத்தார். இப்படியே 10 மாதத்தில் அந்த பிட் நோட்டீசு அடிப்பவரின் அச்சு வேலை தொடர்கின்றது. 10 மாதத்திற்கு பிறகு 200 பணத்தாளும் 50 பணத்தாளையும் மிச்சம் மீதி இருக்கும் மையை வைத்து அடித்து கொடுக்கிறார் அந்த பிட் நோட்டீசுகாரர்.

அப்போது அந்த டீக்கடைக்காரர் தனது நண்பரை பார்த்து கேட்கிறார் கோடி கோடியாக அச்சடித்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றீரே இப்போது திருப்தியா என்றார். அதற்கு அந்த பிட் நோட்டீசுகார் மிக்க நன்றி, இது போல் இன்னும் மிச்சம் இருக்கும் பணங்களையும் அச்சடிக்கும் வேலையையும் எனக்கே கொடுங்கள், சம்பாதித்த செல்வத்தில் பக்கத்து நாட்டின் லாட்டரி அடிக்கும் இயந்திரம் ஒன்றை வாங்கி இருப்பதாக சொன்னார் அந்த பிட் நோட்டீசுகாரர்.

தனது பிட் நோட்டீசுகாரரின் நட்பை மற்றவர்களு தெரியாமல் பார்த்துகொள்ள அந்த டீக்கடைக்காரர் தந்திரமாக நாட்டின் முன்னேற்றத்தின் பால் பற்றுக்கொண்டு புதிய பணத்தை தயாரிக்க உத்தரவிட்டதாகவும். அனைவரும் ஒத்துழைத்தால் தான் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று தெரிவித்தார். உடனே மக்கள் அனைவரும் இன்னும் ஒருமுறை இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்.

இன்றைக்கும் அந்த பிட் நோட்டீசுகாரர் மும்முரமாக தனது பழைய இயந்திரத்தில் மிச்சம் மீதி இருக்கும் மையை எல்லாம் ஊற்றி அச்சடித்துக்கொண்டு அயராது உழைக்கிறார் தனது உற்ற நண்பனுக்கு உதவும் பொருட்டு........

Thursday, August 17, 2017

நீட் அவசர சட்டம் - தமிழகத்தின் அடுத்த இரும்பு பெண்மணி நிர்மலா சீத்தாராம் தான் போல

 நீட் அவசர சட்டம் கொண்டு வாருங்கள் மைய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று 3 நாட்களுக்கு முன் சொன்னார் நிர்மலா, அடுத்த நாள் தமிழகத்தின் சட்ட பேரவையில் அவசர சட்டம் நிறைவேற்றப்படுகின்றது. அடுத்த நாள் மைய சட்ட அமைச்சகத்தில் ஒப்புதல் வழங்கப்படுகின்றது, இன்று 3வது நாளில் மனிதவள மற்றும் கல்வி துறையிலும் அங்கிகரிக்கப்பட்டு செயலுக்கு வந்துவிட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் மக்கள் அறியப்படுவது, பாசக நினைத்தால் 3 நாளில் சல்லிக்கட்டு மீளக்கொண்டு வந்து இருக்கனும். ஆனால் 10 இலட்சம் மக்கள் மெரினாவில் கூடி தமிழக அரசை கழுவி ஊற்றியபிறகும், பீட்டாவின் தமிழக தலைவர் தமிழ் பெண்களை எல்லாம் பாலியல் சுகத்திற்கு அலைபவர்கள் என்று வக்கிரமாக பேட்டிக்கொடுத்த பிறகும், மெரினாவை சுற்றியுள்ள குப்பங்களை எல்லாம் காவலர்களே தீயிட்டு கொளுத்திய பின்பு தான் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் இல்லை.

இப்படி ஒரு விவகாரத்தை தீர்க்க வேண்டும் என்றால் கத்தி இன்றி இரத்தம் இன்றி 3 நாளிலே எல்லா விதமான ஒப்புதல்களை எல்லாம் பெறப்பெற்று முடிக்க முடியும் என்று காட்டியுள்ளார்.

மேலும் குட்டி குட்டி தலைவர்களான தலைவர்களான பொன்ரா தமிழிசை எச்சி இராசா எல்லாம் பேட்டி கொடுப்பதற்காக வேலை கொடுக்கப்பட்ட தலைவர்கள் மட்டும் தான் முடிவுகள் எடுப்பதும் செயல்படுத்துவது இந்த இரும்பு பெண்மணி நிர்மலா என்று தான் காட்டியுள்ளார்கள்.

முடவனுக்கு கொம்பு தேன் மேல் ஏன் ஆசை என்று இனி அந்த குட்டி குட்டி தலைவர்கள் மற்றும் விவாத தலைவர்களும் தங்களின் இரும்பு பெண்மணியின் பின் அணிவகுத்து செயல்படுவது தான் அவர்களுக்கு நல்லது என்றும் மைய பாசக தெளிவிபடுத்தி உள்ளதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

Wednesday, August 16, 2017

இந்தியாவை நாம் ஏன் வெறுக்கனும்

இந்தியா எனது தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள், சமூகத்தின் பால் வரும் வேறுபாடுகளை அரசியல் அமைப்பின் பாலும் சட்டத்தின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன் என்று உறுதி கூறிய நாட்கள் நினைவுக்கு வந்து போகின்றது.

அந்த மூவர்ணக்கொடியை பார்த்ததும் மனதுக்குள் வரும் அந்த சிலிப்பும் பெருமிதமும் கனவாகவும் அந்த கால நினைவுகளாகவும் மட்டுமே ஆகிவிட்டுமோ என்ற அச்சமே வருகின்றது.

நாளை நள்ளிரவில் இந்த மூவர்ணக்கொடு செல்லாது நாளையில் இருந்து இனி எல்லோரும் பச்சை நிறக்கொடியை தான் இந்தியாவின் கொடியாக வணங்கவேண்டும் என்று சொல்லிவிடுவார்களே என்று கிலியாகவும் இருக்கிறது.

வீட்டு நலனையும் உனது சொந்த நலனையும் விட நாட்டின் நலம் தான் முக்கியம் என்றும் அதற்காக நீ அனைத்தையும் விட்டுக்கொடுத்தால் தவறில்லை என்று வா உ சி யை உதாரணமாய் காட்டி பேசுவார்கள். வெள்ளையர்களை எதிர்த்து சுதேசி கப்பல் விட்டவரை அந்த கப்பலை கடைசியில் வெள்ளையரிடமே விற்ற கொடுமை இந்தியாவில் மட்டுமே நடக்கும். அதை விடக்கொடுமை எல்லாம் இப்போது நடந்துக்கொண்டு இருக்கிறது.

உணவு பாதுகப்பு திட்டமாம், அந்த திட்டத்தால் மக்கள் எல்லாம் அதிகவிலை கொடுத்து தான் உணவை வாங்க வேண்டும், திட்டத்திற்கு பெயர் உணவு பாதுகப்புத்திட்டம். என்னே கொடுமையடா

கதிராமங்கலத்தில் குடி நீர் நன்றாகத்தான் இருக்கின்றதாக ஒரு சாதிக்கட்சி தலைவர் சொல்கிறார், ஆனால் அவர் கோவையில் நல்ல குடி நீரைக்குடித்துக்கொண்டு கதிராமங்கலத்து மக்களின் நீருக்கு சான்றிதழ் வழங்குகிறார்.

மைய அரசில் அங்கம் வகிக்காத மாநிலங்களை எல்லாம் சுடுகாடாக மாற்றும் திட்டத்துடன் இயங்கும் அரசியல் நகர்வுகளை தமிழகத்தில் நடத்தி எங்கே எல்லாம் விவசாயம் நடந்ததோ அங்கே எல்லாம் தரிசு நிலங்களாக கானும் கொடுமை அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

நீதிமன்றங்கள் செல்லரித்து உளுத்துக்கொட்டும் நிலையில் இருக்கின்றது, கணக்கு பாடம் படிக்கும் மாணவர்கள் எல்லாம் 2 + 2 = 5 என்று எள்ளி நகையாடுகிறார்கள், 1000 கோடி ரூபாய் கொடுத்தால் 2 + 2 = 1 என்றும் கூட தீர்புகிடைக்கும் என்று நகைக்கிறார்கள்.....

கொலை செய்வது பாவம் என்றும் மரண தண்டனைக்கு உரிய குற்றம் என்று தான் இது வரையில் கேள்விப்பட்டு இருக்கின்றோம் ஆனால் மாகாத்துமா என்று உலகமே கொண்டாடியவரை கொன்றது ஒன்றும் குற்றமே இல்லை என்று பகவத் கீதையை சாட்சியாக கூறும் கொடுமைகளை எல்லாம் பார்க்கிறோமே என்று மனம் பதறுகின்றது.

எந்த மொழி பேச வேண்டும் என்றதில் இருந்து என்ன உண்ண வேண்டும் உடுத்தவேண்டும் தெய்வமாக வேண்டும் என்று கட்டளையிடும் அரசை இந்தியா என்றுமே கண்டது இல்லை ஆனால் இன்று இவைகள் தான் நாள்ளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நடந்துக்கொண்டு இருக்கிறது.

 நாடு முன்னேறுகிறது என்று தான் அடிக்கடி சொல்கிறார்கள் ஆனால் சாமானியனை இனிமேல் தனது அத்தியா அவசிய பொருட்களை கூட அதிகப்படியாக பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் என்ற நிலை முன்னேற்றம் இல்லை என்றது பொருளாதாரம் தெரியாதவர்களுக்கு கூட தெளிவாக தெரியும், ஆனால் மைய அரசை சேர்ந்த தமிழக அரசியல்வாதிகள் தமிழகத்திலும் இந்தியாவிலும் பாலாறும் தேனாறும் ஓடுவதாக சொல்கிறார்கள்.

நாளைக்கு நாள் வேலை வாய்ப்புகள் குறந்துக்கொண்டே வருகின்றது, விலைவாசியே வின்கல வேகத்தில் பறக்கின்றது.

4 வருட பட்டம் பயின்றால் தான் அமெரிக்கவில் வேலை கிடைக்கும் என்று ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு என்று ஆங்கில வழி கல்வி பள்ளிகளும் கல்லூரிகளும் கல்லா கட்டியது, இந்த வருடம் இயந்திர பொறியியல் படிப்பு படிக்க ஆளே இல்லை, பொறியிலே வேண்டாம் என்று மக்கள் ஒதுக்க ஆரம்பித்து வருடங்கள் ஆகுகின்றது ஆனால் நாடு நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கிறது என்று மாதம் ஒரு முறை வானொலியிலும் தொகாவிலும் பேட்டிகள் பறக்கின்றது.

நாட்டில் அனைத்து மக்களும் ஒரே பாடத்திட்ட தேர்வு முறை தான் எழுதவேண்டும் என்கிறார்கள் அப்படியானால் ஏழைகள் படிக்க அரசுபள்ளி பாடத்திட்டமும், கொஞ்சம் பணம் உள்ளவர்களுக்கு மக்காலே பாடதிட்டமும், பெரும் செல்வந்தர்களுக்கு என்று சொகுசு படசாலைகளும் நாட்டில் எதற்கு. அப்படி எந்த கல்வி சிறந்ததோ அதை அரசு கல்வியாக வழங்க வேண்டியது தானே ஆனால் அந்த மட்டமான படிப்பை தான் அரசு வழங்குமாம் ஆனால் மேற்படிப்பு சொகுசு படிப்புபடித்தவர்களுக்கு மட்டும் தானாம்.

இதை எல்லாம் பார்க்கும் போது இது என்ன நாடு என்று வெறுப்பே வருகின்றது. ஆனால் இது என்னுடைய நாடாச்சே, இந்த வெறுப்பு அரசு நடத்தும் அந்த அரசியல்வாதிகள் மேலும் ஆட்சியின் மேலும் அல்லவா வெறுப்பு வரவேண்டும் அதை விட்டு நாட்டின் மீது ஏன் கோபம் வருகின்றது.

அது சரி சொந்த நாட்டிலே அகதியாய் வாழ யாருக்கு தான் பிடிக்கும், என்ன உண்ண வேண்டும், உடுத்த வேண்டும், படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று வாழும் வீட்டிலேயே வாழ முடியாதவர்களை அப்படி ஒரு நாட்டில் வசிக்க சொன்னால் எப்படி அதுவும் எப்படி சொல் பேச்சு கேட்கவில்லை என்றால் எப்படி கொல்லப்படுவீர்கள் என்று மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்து அடித்தே கொன்று அல்லவா உதாரணம் காட்டுகிறார்கள்.... என்னே ஒரு கொடுமை.

Monday, August 14, 2017

நிர்மலா சீதாராம் தான் பாசகவின் தமிழக முதல்வர் வேட்பாளரா

தமிழகத்தில் எந்த அவசர சட்டமாக இருந்தாலும் சரி அல்லது முக்கிய பிரச்சனைகளாக இருந்தாலும் சரி நிர்மலா சீதாராம் தான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.

காளை மாடு மட்டும் காட்டு விலங்காக அறியப்பட்ட சதியின் பின்னணி, பின்னர் காளை மாட்டை காட்டு விலங்கு இல்லை வீட்டு விலங்கு தான் என்று வரலாற்று சான்றாக அறிவித்தால், அதன் அவசர சட்டம், தமிழகத்திற்கு நீட்டு தேர்வு அவசியாமா இல்லையா என்ற முடிவை அரசு சார்பாக அறிவித்தல், ரேசன் பொருட்கள் தமிழகத்திற்கு தேவையா இல்லையா என்று வரையறுப்பது, கூடங்குளத்தில் அணு மின்னிலையம் அமைப்பது தமிழகத்திற்கு நல்லதா தீயதா என்று ஆராய்சி முடிவுகளை வெளியிடுவதும் அதை பொருத்து அறிவிப்பதும், நெடுமங்கலம், கதிராமங்கலம் என்று தமிழகத்தை சீரழப்பதற்காக துடிக்கும் திட்டங்கள் தமிழகத்திற்கு வந்தே தீரும் என்று சொல்வதும் அறிவிப்பதும், அதிமுக அணி சேரவேண்டுமா இல்லையா, தமிழகத்து சட்டபேரவை சரியாக நடக்கின்றதா இல்லையா என்று அனைத்து விதமான அறிவிப்புக்கும் அதிகார பூர்வமாக நிர்மலா சீத்தாராம் தான் அறிவிக்கின்றார், பேசுகின்றார்.

பாசகவின் மற்ற குட்டி குட்டி தலைவர்கள் தமிழைசை, பொன்னார், எச்சி ராசா போன்றோர்கள் போல் விவாதத்தில் கலந்து கொள்வது, விமான நிலையமுதல் தொகா விவாதங்களுக்கு பேட்டி அளிப்பது போன்ற வெட்டி வேலைகள் எல்லாம் இவருக்கு இல்லை.

வெங்கையா நாயிடுவும் இவரை போல் வெட்டிப்பேச்சுகள் எல்லாம் பேசுவது இல்லை ஆனால் ஊடகங்கள் எல்லாம் தமிழகத்தின் உண்மையான முதல்வர் வெங்கையாவா என்று எழுதி தீர்த்தார்கள், ஆனால் அவரை துணை குடியர்சு தலைவராக அறிவித்தது பாசக, இந்த நிலையில் தமிழகத்தின் பாசக முதல்வராக வரப்போகின்றவர் நிர்மலா சீத்தாராம் தான் என்று தெளிவாககின்றது.

சொல்ல முடியாது நாளையே இவரை அதிமுகவின் தலைவராக பாசக ஆக்கினாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை தான். அடுத்த அதிமுகவின் முதல்வராகக் கூட வர வாய்ப்பு இருக்கின்றது.

பாசகவின் மற்ற குட்டி குட்டி தலைவர்களான பொன்னார், தமிழிசை, எச்சி ராசா எல்லாம் பப்பர முட்டாயை வாங்கிக்கொண்டு மற்ற தமிழர்கள் போல் வந்தே மாதரம் என்று கொடியை குத்திக்கொண்டு அன்னாந்து வானத்தை பார்க்கவேண்டியது தான் போலும்.........

Friday, August 11, 2017

மோடி அமெரிக்காவிற்கு சென்று வந்தது சீனாவோடு சண்டைக்கு போகத்தானா

சூன் மாதம் அமெரிக்காவுக்கு சென்று வந்தன் இரகசியம் இது தானா. வட கொரியா கட்டுக்கு அடங்காம ஆடுது. அதை ஆதரிக்கவும் மேன் மேலும் தூண்டவுன் சீனா மும்முரமாக இருக்கிறது. உலக நாடுகளில் எதுவாலும் வட கொரியாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

சீனாவை இந்திய முனையில் இராணுவ தாக்குதலுக்கு உள்ளாக்கினால் இந்திய பெருங்கடலிலும் ஆசிய நிலப்பரப்பிலும் நிலை கொண்டு இருக்கும் சீனப்படை இந்தியா நோக்கி நகரும். மேலும் இந்த பலவீனத்தில் வட கொரியா அடக்கி வாசிக்கும் என்றது அமெரிக்க கணக்கு.

சரி அப்போ இந்தியாவின் நிலை என்னவாகும், அதான் அருண் சேட்லி சொல்கிறாரே, 1962ல் இருந்த நிலை வேறு இப்போது நாங்கள் அமெரிக்காவின் கை கூலிகளாக இருக்கும் நிலை வேறு என்று சொல்லாமல் சொல்கிறார்.

சீனாவும் வட கொரியாவும் இனி என்ன செய்கின்றது என்று பார்த்து அமெரிக்க இந்தியாவிம் மூலம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடும்.

அது வரையில் ஏற்படும் பொருளாதார நட்டம் முதல் இராணுவ நட்டம் வரை இந்தியர்களுக்கு பப்பர மிட்டாய் கொடுத்து ஏமாற்றவும் அமெரிக்கா திட்டத்துடன் உள்ளது.

இந்திய சீன போர் வெடிக்கும் கால், காசுமீரத்தை பாக்கிட்தானத்துடன் இழந்தது போல் வட கிழக்கு மா நிலங்களை சீனாவிடம் இழக்க நேரிடும்.

நாமும் பழைய இந்திய படத்தை வைத்துக்கொண்டு தலை இல்லாத இந்தியாவையோ அல்லது இடக்கை இல்லாத இந்தியாவையோ நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று வசனம் பேச வேண்டியது தான்.....

Wednesday, August 9, 2017

நடு இரவில் அந்த பெண்ணுக்கு அங்க என்ன வேலை -- சுடலைமாடன் வருகையில்

அந்த பெண் வர்னிகா ஏன் நடு இரவில் வெளியில் செல்ல வேண்டும். வடக்கில் இரவில் தனியாக இருக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டும் எப்படி இந்த பெண்ணுக்கு நடு இரவில் தனியாக பயணிக்கும் தைரியம் வந்தது.

ஆண்மகன் விகாசு பாரால அதுவும் உலகை ஆளும் பாசகவின் கட்சியை சேர்ந்த பெரும் புள்ளியின் மகன் இரவிலும் பகலிலும் உல்லாசமாகவும் சல்லாபமாகவும் வாழ சர்வ தகுதிகளையும் பெற்றவன் இரவில் நாடு நன்றாக உள்ளதா என நகர்வலம் வரும் வேளையிலா இந்த பெண் வர்னிகா தனியாக வெளியில் செல்வாள்.

நாடும் உலகும் இருக்கும் நிலையில் படித்து பெரிய பதவியில் இருக்கும் ஒரு ஆட்சியர் இப்படியா கொஞ்சம் கூட பொருப்பில்லாமல் வயசு பெண்ணை இரவில் ஊர் சுற்ற அனுப்புவது. என்ன ஒரு ஒழுக்கம் கெட்ட குடும்பம் இவர்களது குடும்பம்.

பெண் என்றால் வீட்டில் அந்த 4 சுவர்களுக்குள் முடங்கி கிடந்து வீட்டு ஆண்கள் வீட்டிற்கு வருவதற்குள் சமைத்து, துவைத்து கணவனின் வருகைக்காக காத்து இருக்காமல் இது என்ன திமிர்தனமா வண்டியை ஓட்டிக்கொண்டு அலைவது.

நிர்பயா ஒரு கற்பனையான பெயர் தான் ஆனால் அந்த பெண்ணிற்கு நடந்த கொடுமைகள் எல்லாம் உண்மை அந்த தகவல்கள் எல்லாம் தெரிந்தும் இப்படி இரவில் வர்னிகாவை வெளியில் வண்டியை எடுத்துக்கொண்டு அலைய வைத்த பெரும் தேவை தான் என்ன....

சுடலைமாடன் வருகையில் குறுக்கே வரும் மக்களின் உயிரை எல்லாம் குடித்துவிடும் என்று தெரியாதா தெரிந்தும் தன் பெண்ணை அனுப்பி நாடகம் ஆடி எங்களது கட்சிக்கும் குடும்பத்திற்கும் கெட்ட பெயரை உண்டாக்கிறார் என்று வர்னிகாவின் மீதும் அவரது பெற்றோர்களின் மீதும் வழக்கு தொடரவும் தண்டனையளிக்கவும் வேண்டும்.

எப்போது தான் இந்த புத்தி கெட்ட நிர்பயா பெண்கள் திருந்துவார்களோ ஆண்களை இப்படி பாடாய்படுத்துவதை நிறுத்துவார்களோ.......

Tuesday, August 8, 2017

மோடி இந்தி பேசும் மக்கள் ஏன் ஆங்கிலம் பேச மறுக்கிறார்கள்


இந்தி பேசும் மக்கள் ஏன் ஆங்கிலம் பேச மறுக்கிறார்கள் மேலும் அவருடம் ஆங்கிலத்தில் பேசுவதை ஏன் வெறுக்கிறார்கள் என்று இந்த படத்தை பார்த்தால் தெளிவாகத்தெரியும்.video


மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நகைச்சுவையாக தெரியும் ஆனால் அந்த உச்சரிப்பை கவனியுங்கள் எவ்வளவு ஊன்றி போய் இலயித்து இந்த ஆங்கில வார்த்தைகளை பொருத்தி மகிழ்கிறார்கள் என்று தெரியும்.

இந்தியாவில் எந்த மா நிலம் சென்றாலும் இந்த இந்திகாரர்களுக்கு இந்தியில் பேசுவார்கள் எழுதி வைப்பார்கள். ஆனால் தமிழகத்தில் முக்கிய நகரங்கள் தவிர பாசக உறுப்பினர்கள் வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் தான் பேசுவார்கள். இந்த முறையில் ஆங்கிலம் படித்தவர்களால் எப்படி நாம் பேசும் ஆங்கிலம் புரியும் அது தான் எரிச்சல்படுகிறான் கத்துகிறான் சட்டம் ஏற்றுகிறான்.

இந்திய பிரதமர் மோடியின் ஆங்கிலமும் இப்படி தான் இருக்கும் கவனியுங்கள்.

Monday, August 7, 2017

சீன பொருட்கள் இருக்கட்டும் நமக்கு வடக்கத்திய பொருட்கள் தேவை தானா - தேசதுரோகிகள்

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைக்க சீனா முயல்வதாகவும், அதை சமன் செய்யும் விதமாக சீனாவின் தயாரிப்புகளை வாங்குவதை எல்லோரும் தவிர்க்க வேண்டும் அப்படி செய்யாதவர்கள் எல்லாம் தேச துரோகிகள் என்றும் சங்கிகள் பரப்புரை செய்வதை பார்க்கின்றோன்.

சங்கிகளின் வாதத்தின் படி பார்த்தால் நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் அண்டை நாட்டின் தயாரிப்புகளை தவிர்ப்பதால் அவர்களின் அரசியல் சதியில் இருந்து தாய் நாட்டை காக்க வேண்டிய கடமை நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது.

இப்படி செய்வதனால் சீனா தனது வர்த்தகம் பாத்திப்பில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியாவின் பொருளாதாரார சீர் குலைவுகள் ஏற்படாத வண்ணன் இணக்கமாக நடந்துகொள்ளும் என்றும் நமக்கு பாடம் எடுத்து சொல்லிக்கொடுக்கிறார்கள்.

சரி தானே என்று தோன்றுமே, அதானே என்று சபாசு போட்டு சப்பைக்கட்டுகள் அதிகமாகவும் வரும்.

இந்த கூற்றுபடி பார்த்தால் இன்றைய தமிழக நிலைக்கு வடக்கத்திய அரசியல்வாதிகளும் அவர்களை கைப்பாவையாக அரசு நடத்த அனுப்பிய வடக்கத்திய பணக்காரர்களும் தான் காரணம்.

இந்த கூற்றை நிறூபிக்கும் விதமாக எச்சி ராசா பாசக மேடையில் இன்று முழங்கியும் இருக்கிறார்.

ஆகவே இன்று முதல் வடக்கத்திய பொருட்களை தமிழர்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும். அரிசி பருப்பை கூட வடமாநிலத்தவர்கள் விற்கும் பொட்டளப்பைகளில் தான் வாங்க வேண்டுமா என்ன.

பெட்ரோல் முதல் அரிசி பருப்பு வரை தமிழகத்து தொழில் முனைவோரை தான் ஊக்குவிக்க வேண்டும். இன்றைக்கு துணிமணிகள் முதல் செல்பேசி சேவை முதல் வடக்கதியர்கள் விற்கிறார்கள். ஏன் தமிழர்களுக்க்கு அந்த சேவைகள் எல்லாம் வழங்கும் தொழில் நுட்பமும் வசதியும் இல்லையா.

தமிழகத்தில் ஐபியல் அணியை விலைக்கு வாங்கி நடத்தமுடியுது செல்பேசி சேவை நிறுவனம் தொடங்கமுடியாதா.

பணம் இல்லை என்று சொல்ல வேண்டாம் மனம் இல்லை என்று சொல்லவும். பணமும் செல்வமும் இல்லாமல் தான் நாம் இலட்சகணக்கில் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு அன்றாடம் தினக்கூலி 700 ரூபாய்க்கு வேலை கொடுக்கின்றோமா.

வட மாநிலங்களுக்கு ஆபத்து என்றால் சீன எல்லையை விட்டுக்கொடுக்க இந்திய அரசு தயாராக இருக்கின்றது. தமிழக பாசகவிற்கு தலைவராக வடக்கதியர் வடக்கதிய உடையில் வந்து வட மாநில மொழியில் தான் பேசுவார்.

இந்த வடக்கதியர்களால் தான் தமிழகம் நிவகிக்கபட வேண்டுமா ஏன் தமிழகத்தில் ஒருவருமா இல்லை.

மூச்சுக்கு 300 தடவை ஊழல் என்று சொல்லும் பாசகவின் அமித்து சாவின் சொத்துக்கள் 3 ஆண்டுகளிம் 300% உயர்ந்ததின் அடிப்படை என்ன என்று விளக்க தயாராக இல்லை. அது மட்டும் இல்லாது இது வரை மோடி வெளி நாடுகளுக்கு சென்று இந்தியாவிற்காக கொண்டு வந்தது என்ன எவ்வளவு என்ற தகவலையும் தெரிவிக்க மறுகின்றது.

வடக்கில் இருக்கும் மக்கள் தமிழகத்தின் மாடுகள் என்ன செய்ய வேண்டும் கூடாது என்று தீர்மானிக்கிறார்கள். தமிழர்கள் என்ன கொண்டாட வேண்டும் என்ன உடுத்த வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். அதைவிட கேவலம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.

இன்று முதன் வடக்கதிய பொருட்களையும் சேவைகளையும் தவிர்ப்போம். தமிழக பொருட்களை வாங்கி தமிழர்களை ஊக்கப்படுத்துவோம். அப்போது தான் தமிழர்களின் நிலை முன்னேறும். இதை செய்யவோ பரப்பவோ மறுப்பவர்கள் மாநில துரோகிளாவார்கள்.

Thursday, August 3, 2017

கலாமும் திருவள்ளுவரும் -- திக காரங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் போல

அரசியல் மேடை பேச்சுக்களை கேட்க சுவையாக திகழ்வது தி கவும் பொதுவுடமையாளர்களுடையதும் தான். காரணம் இவர்களிடம் தான் அதிகமான பொருளடக்கம் இருக்கும் எடுத்துக்கொண்ட தலைப்பில் மணிக்கணக்கில் உதாரணங்களுடன் கொட்டுவார்கள்.

தி கவினர் பேசும் போது அதிகம் ஆளும் சொல்லாடல்களில் முக்கியமானது இந்து மதம் எப்படி எல்லா மதத்தையும் விழுங்கி ஏப்பம்விட்டது என்றதாகும். அந்த வகையில் அவர்கள் காட்டும் மேற்க்காட்டுதல் திருவள்ளுவரை.

ஒரு காலத்தில் திருவள்ளுவர் சிலை என்றால் ஒரு முனிவனின் சிலையாக இருக்கும், தலையில் முடிந்த கொண்டையும் கையில் ஓலை சுவடி என்றும் மட்டும் தான் இருந்தது. பிறகு அதுவே நெற்றியுல் திருநீர் அணிந்து வர துவங்கியது. பிறகு மெல்ல அந்த சிலையி பூணூலுடன் வரத்துவங்கி இன்றைக்கு திருவள்ளுவர் சிலையில் பூணூல் இல்லை என்றால் பொருட்குற்றமாக பார்க்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

இதை விளக்கும் போது திகாவினர் சொல்லும் வியாக்யாஞானம் இது தான், எது எல்லாம் அறிவில் சிறந்து விளங்குகின்றதோ அல்லது சிறப்பாக இருக்கின்றதோ அவைகள் எல்லாம் எங்களுடையவைகள் மட்டும் தான் அல்லது எங்களால் மட்டும் தான் சிறந்தவைகளை கொடுக்க முடியும் என்று பறைச்சாற்றுவது அவர்களது இயல்பு.

அந்த அளவில் உலகப்பொதுமறையாக திருக்குறளுகு ஒரு அங்கிகாரம் கிடத்ததும் திருவள்ளுவருக்கு பூணூல் சூட்டும் சடங்கும் நடந்தேறியது என்று கூறி இன்னும் கொஞ்ச நாள் பொருங்கள் ஐயா பெரியாருக்கும் பூணூல் போட்டு இவர்களே பேசுவார்கள் பாருங்கள் என்று நகைப்பாக சொல்வார்கள்.

அந்த வரிசையில் இந்து மதம் கலாமுக்கு பூணூல் அணிவிக்காமல் இருந்தால் சரி தான்.

கலாம் ஐ நா சபை கூட்டதில் பேசும் போது கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றதை அழகாக குறிப்பிட்டு பேசினார் அது போல் மேற்கோள் காட்டும் இடங்களில் எல்லாம் தமிழ் நூட்களையே தான் மேற்கோள் காட்டினாரே அன்று கீதையில் தான் எல்லாம் இருக்கிறது என்று, காலை மாலை மதியம் இரவு உணவுக்கு முன் இரவுக்கு பின் என்று கீதை படித்தாகவோ அல்லது கீதையை என்னுடனே எப்பொழுதும் வைத்து இருப்பதாகவோ அல்லது தனக்கு பிடித்த புனித நூல் கீதை என்றோ என்றைக்கும் கலாம் குறிப்பிட்டது கிடையாது.

அதே சமயத்தில் கீதையை அவர் விமர்சிக்கவும் இல்லை, நல்ல பகுதிகளை எடுத்துக்கொண்டும் கெட்டபகுதிகளை உதாசிக்கவும் தயங்கவில்லை.

தி க காரர்கள் சொல்வதை போல் எது சிறந்ததோ அவைகள் எங்களிடையவைகள் மட்டுமாகத்தான் இருக்க முடியும் என்று மேலும் பறைசாற்றி இருக்கிறது இந்து மதம். நாளையே பூணூலுடன் கலாமைக்கண்டால் ஆச்சர்யப்படாதீர்கள்.....

Thursday, July 27, 2017

இந்தியா சீனா போர் வருமா வராதா

சமீப காலமாக செய்திகளில் இடம்பிடிக்கும் செய்தி இது. அதுவும் எப்படி 10 நாளைக்கு மேல் வெடி பொருட்கள் இருக்காது. சும்மா சீண்டிப்பார்க்காதே என்று சீனா அறிவித்து இருக்கிறது. சீன எல்லையில் பதற்றம். சீன அதிபரும் மோடியும் சீ20 மாநாட்டில் சந்தித்து பேசினார்கள், இல்லை பேசவில்லை......

ஆக மொத்தத்தில் சீனாவுடம் போருக்கு இந்தியா தயாராவது போல் ஒரு கண்ணோட்டம் செய்திகளில் உலா வருவரை கவனிக்கலாம்.

எந்த ஒரு சுதந்திர நாட்டின் செய்தி ஊடகங்களுக்கு தனது கணிப்பை செய்தியாக வெளியிட உரிமை உண்டு என்று வைத்துகொண்டாலும். தேச நலனுக்கு எதிராக எழுதும் பரப்பும் பரப்புகளை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. ஆனால அரசாங்க எதிர்ப்பு எதுவுமே எழாமலும் மறுப்புகள் எதுவும் எழாத வண்ணமாக நாளொருமேணியும் பொழுதொரு வண்ணமாக செய்திகள் வருவது மட்டும் நிறபாடில்லை.

ஆக இது திட்டம் இட்டு அரசால் பரப்ப படும் ஒரு போர் பற்றிய தகவல் என்று சந்தேகம இல்லாமல் தெளிவு பெறுகின்றது.

சரி அப்படி ஒரு போர் வர சாத்தியமா என்றும் அந்த செய்திகளை படித்து அப்பாவி மக்கள் பதற்றம் அடைவார்களா என்றால் அதுவும் இல்லை. பிறகு எதற்காக இந்த செய்தி பரப்ப படுகின்றது.

ஊழலை முழுவதும் ஒழித்துவிட்ட இந்தியா, தூய்மையான இந்தியா, கருப்பு பணம் என்ற பேச்சுக்கே இடமில்லாத இந்தியா, மேக் இன் இந்தியா, என்று ஏகப்பட்ட இந்தியாக்களை இந்தியர்களின் முன் மோடியும் அவரது கூட்டமும் அலையவிட்டு இருக்கிறது. அந்த இந்தியாக்களை இந்தியர்கள் இப்போது எங்கே என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தினம் மனம் போன போக்கில் ஒரு அறிவிப்பை புதிய இந்தியாவின் பிறப்பாக வெளியிடுவதும் அடுத்த நொடியே அந்த இந்தியா அநாதையாக தெருவில் திரிவதையும் மக்கள் பார்த்துகொண்டு தானே இருக்கிறார்கள்.

இது வரையில் மதத்தின் பெயராலும் சாதிகளின் பெயராலும் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதிலும், சமூக அவலங்களை கட்டவிழ்த்துவிடுவதுமாக தான் இந்த அரசு பயணிக்கின்றதே தவிர உருப்படியாக எதுவும் செய்துவிடவில்லை.

முன் எப்பவும் இல்லாத அளவிற்கு எல்லா வியாபாரங்களிலும் தனியார் பெருமுதலாளிகள் கொடிக்கட்டி பறக்கும் இந்த நாளிலா போர் வரப்போகின்றது. அப்படி போர் மூண்டால் இந்த முதலாளிகளின் முதலும் வியாபாரமும் போய் தெருவுக்கு வந்துவிடுவார்கள் என்று அந்த ஆட்களுக்கு தெரியாதா என்ன.

நாட்டின் எல்லைகள் போனாலும் தனது பணம் போய்விடக்கூடது என்று காப்பவர்கள் அல்லவா அந்த முதலாளிகள். அப்படி இருக்க சீனாவுடனான போர் இல்லை ஒரு எறும்பு கூட கூட போர் வர வாய்பு இல்லை.

பிறகு எதற்கு போர்பற்றி செய்திகள் பரப்ப வேண்டும், மிகவும் எளிதான கணிப்பு. ஒன்று மக்களை திசை திருப்ப மற்றும் இந்த போரை காரணம் காட்டி அமெரிக்கா முதல் இலங்கை வரை இந்த வல்லரசு இந்தியா ஆயுதம் வாங்கி குவிக்க தான். ஆயுதம் என்றால் நாட்டின் பாதுகாப்புக்கான ஆயுதங்கள் இல்லை மக்களே, அரசில் இருக்கும் மக்களின் தனிப்பட்ட தேவைக்கு தேவைப்படும் ஆயுதங்கள் வாங்கத்தான்.

மறுபடியும் மோடி இலங்கை முதல் அமெரிக்கா வரை சென்று முதன் முதலாக இலங்கையிடம் ஆயுதம் வாங்கிய இந்திய முதல் பிரதமர் நான் தான் என்றும், இதற்கு முன்னால் இருந்த காங்கிரசு அரசுக்கு இலங்கையிடம் எப்படி ஆயுதம் வாங்க வேண்டும் என்று தெரிய கூட இல்லை என்றும் சொல்லி செலிபி எடுப்பார் அந்த செல்பிமகான் மோடி. ஆகா ஓகோ என்று சங்களி சிங்கி அடைப்பார்கள் பார்க்கனுமே......

மோடியின் அடுத்த நள்ளிரவு தாக்குதல் - இட ஒதுகீடு செல்லாது

இராம்நாத்து கோவிந்தை முன்னிறுத்தியதில் இருந்து தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டியது இந்த துல்லிய தாக்குதான் அடுத்தது என்று.

இந்த முறை மோடிக்கு பதில் இராம் நாத்து கோவிந்து மக்களின் முன் தொகாவில் நள்ளிரவில் தோன்றி நாளை முதல் இட ஒதுகீட்டு செல்லாது என்று அறிவிப்பதோடு சமூகத்தில் இருந்த ஏற்ற தாழ்வுகளை களைந்து இன்று முதல் ஒரு புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று ஒரு சங்கை ஒலிப்பார்.

மோடி, அமித்து சா, அருண் செட்லி எல்லாம் இலட்டு கொடுத்து கொண்டாடுவார்கள்.

கலாம் குடியரசு தலைவராக தேவைப்பட்டது முசுலீம்களை கொன்று குவிக்கும் போது, இப்போது இடஒதுகீட்டை அழிக்க இராம்நாத்து கோவிந்து தேவைபடுகிறார்.

சங்கிகளுக்கு கொண்டாட்டமே ஆனால் பாதிக்கப்படும் மக்கள் என்ன செய்வார்கள், நெடுவாசலிலும், நீட் தேர்விலும் என்ன நடந்ததோ அதே தான் இங்கேயும் நடக்கும்.

இணைய புலிகள் கொஞ்சம் பாய்வார்கள், வளர்மதி திருமுருகனை போல் இன்னும் இருக்கும் களப்போராளிகளை கைது செய்தது போல் கைது நடந்தால் அடங்கிப்போவார்கள்.

பிறகு இடஒதுகீட்டை ஒழித்ததின் மூலம் ஒரே இந்தியாவை பெற்றோம் இனி யாரும் நம்மை சமூக ரீதியில் பாகுபடுத்தி பேச மாட்டார்கள் என்று மேடைக்கு மேடை மோடியும் அவரது சங்கிகளும் அடவுகட்டி ஆடுவார்கள்.

எதிர்த்து கேள்வி கேட்போர் எல்லாம் தேசதுரோகியாக அறியப்பட்டு உங்களது வீட்டு வாசலிலே தூக்கிலிட்டு கொல்லப்படுவீர்கள்.

பழையபடி பாசக சாதி இருக்கும் ஆனால் சமூக பாகுபாடு இருக்காது என்று உளருவார்கள்.

பிறகு என்ன மெல்ல இட்லர் மற்றும் இலங்கை வழியில் மக்களை சட்டங்களின் பெயரில் பிரிப்பார்கள், நேரே கொண்டு சென்று தனிமைபடுத்துவார்கள், பிறகு பட்டி பட்டியாக கொன்று குவிப்பார்கள். கேட்டால் ஒரு நாட்டிற்காக ஒரு மாநிலத்தையே இழக்கலாம் என்று உங்கள் மகாத்துமா காந்தியே சொல்லி இருக்கிறார். ஆகவே இது காங்கிரசு செய்ய இருந்தது தான் ஆகையால் யாரும் கூவ வேண்டாம் என்று வியாக்கியானம் பேசுவார்கள்.

Saturday, July 22, 2017

ஒழுகுகின்ற வீடு அடுத்து மெழுகுவர்த்தி வெளிச்சதில படிச்சதா - இராம்நாத் கோவிந்து

கலாம் ஐயா எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் அதும் மட்டும் அல்லாது படிப்பும் ஆற்றலும் இருந்தால் நல்ல வேலை மட்டும் இல்லை நாட்டின் குடியரசு தலைவராக கூட ஆகலாம் என்று உதாரணமாக திகழ்பவர். இவருக்கு முன் அந்த பதவியில் அமர்ந்த ஆசிரியர் போல் இவரும் சொலித்தார்.

எளிமையான குடும்பம் என்றால் அவர்காலத்தில் மின் வசதி இருக்காது, பகட்டான ஆடை இருக்காது, மைல் கணக்கில் நடந்து தான் வருவார்கள் என்ற ஒரு நெடிய வரலாறு உண்டு.

இந்த நிலை எல்லாம் அவரின் இளமை காலத்தில் அவரது பெற்றோர்கள் இவரை பராமரித்து வாழ்ந்த காலத்தில். ஆனால் ஐயா கலாமை நாடு கண்டு வியந்தது அவரது எளிமையான பள்ளி காலத்தில் இல்லை. நாட்டின் குடியரசு தலைவரான பிறகும் அவர் கொண்ட எளிமையான வாழ்க்கைக்கு தான்.

குடியரசு தலைவராக ஆனாலும் தான் வகித்த அறிவியல் துறையில் நாடு இன்னும் எவ்வளவு தொலைவு பயணிக்க வேண்டி இருக்கிறது என்று திட்டமிட வழிவகுத்தவரும் இன்னும் என்ன என்ன பாதையில் இந்திய அறிவியல் துறையில் பயணிக்க வேண்டியுள்ளது என்றது மட்டும் இல்லாது இன்னும் நிறைய துறைகளில் அவரி அனுபவம் பயன்படுத்தப்பட்டது.

கலாம் ஐயா போற்றப்படுவது அவர் வாழ்ந்த அந்த அர்பணிப்பு வாழ்க்கைக்கு தான் என்று இராம்நாத் கோவிந்துக்கும் அவரை சார்ந்து இருக்கும் விளம்பர பிரியர்களுக்கும் இது புரியுமா என்று பார்ப்போம்.

மழையில் ஒழுகுகின்ற வீடு என்று இன்றைக்கு ஆரம்பித்து இருக்கும் இவர்கள் படிப்படியாக மெழுகுவர்த்தி வெளிச்சம், காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்தார், 2 சட்டை துணிமணிகள் தான் அவரிடம் உள்ளது(ஆனால் கோடிக்கணக்கில் விற்கும் கார் 20 உள்ளது), பல்கலைகழக விடுதியில் பகுதி நேர வேலைப்பார்த்து தான் சங்கபரிவாரங்களுக்கு சோறு வாங்கி கொடுத்தார் என்று எல்லாம் இனி எழுதும் முன் நினைத்து பாருங்கள்.

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல் ஆக்காதீர்கள் சங்கிகளே.......

இவர் என்ன தான் செய்தாலும் அப்துல் கலாம் ஐயா போல் போற்றவோ பாராட்டவோ பட போவதில்லை காரணம் இவர் வளர்ந்ததும் இருப்பதும் பாசக என்னும் நச்சு கூட்டத்தில். அந்த நஞ்சை உண்டு வளர்ந்தவரிட்டத்தில் அமிர்தமா விளையும்

Thursday, July 20, 2017

இன்றைகு புதிதாக பிறந்த ரௌடி இந்தியா - ஐயோ பாவம் இந்தியர்கள்

பாசகவின் வெற்றிகளை மோடி இப்படி தான் சொல்வார், ஒரு வரியை திருத்தி அமைத்தாலே இந்தியா இன்று புதிதாக பிறந்தது என்று சொல்லும் இவர்களால் மொத்த அதிகாரமும் கைக்கு வந்ததை எப்படி புதிய இந்தியா பிறந்தாக சொல்லாமல் இருக்க முடியும்.

ஏற்கனவே இருக்கும் அசுரபலத்தை வைத்துக்கொண்டு இந்தியாவை ஆட்டி வைத்தார்கள் இந்த பிரிவினைவாத பாசகவினர், இனி என்ன என்ன எல்லாம் செய்யப்போகிறார்களோ.

பாசகவின் குடியரசு தலைவர் இனி வரிசையாக செய்யவிருக்கும் காரியங்கள் இவைகளாக இருக்கும்.

1) ஒத்து வராத மாநிலங்களை வருத்து எடுப்பது மற்றும் ஆட்சியை கலைப்பது

2) மதவாதமும் பிரிவினைவாதமும் பரப்பும் கலவரங்களும் கலவரகாரர்களும் இனி சட்டத்தின் துணையுடன் அதிக பாச்சலில் செயல்படுவார்கள்.

3) சிறுபான்மையினர்கள் வசிக்கும் இடங்களில் இனி அதிகமாக குண்டுகள் வெடிக்கும், சிறுபான்மையினர்கள் அதிக அளவில் கொல்லப்படுவார்கள்.

4) சமூக நீதிக்காக போராடுவோர்கள் மீது கருப்பு சட்டங்கள் பாய்ந்து 20 ஆண்டுகள் சிறையும், சரிவராத மக்களை கொத்து கொத்தாக கொல்ல துப்பாக்கி சூடுகள் நடத்தப்படும்.

5) ஒரு ஆணையில் இந்தியாவின் பணம் செல்லாது என்று சொன்னது போல் எந்த ஒரு விவாதமும் இல்லாமல் இட ஒதுக்கீடு கலைப்படும்.

6) வாய் மொழி உத்தரவாக எல்லா மைய மற்றும் மாநில அரசு அலுவலகங்களிலும் சமூக பாகுபாடுகள் போற்றி வளர்க்கப்படும்.

7) அனைவரும் வழிபடும் கோவில்களில் இன்ன இன்ன நேரங்களில் இன்ன இன்ன மக்கள் தரிசிக்கலாம் என்று ஆரம்பித்து இன்ன இன்னவர்கள் இங்கே இருந்து தான் தரிசிக்க வேண்டும் என்ற வரைவரும், அதுவும் காசு கொடுத்தால் மட்டுமே என்றும் வரும்.

8) இராமர் பிறந்த இடம், வளர்ந்த இடம், சீதையை கொளுத்திய இடம் என்று ஊர் ஊராக நினைவிடங்கள் அமைத்து வழிபட தொடங்கப்படும்.

9) இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்படுவார்கள்.

10) மீதம் இருக்கும் 2 ஆண்டுகளும் இனி இந்தியா கலவர பூமியாக திகழும், இலங்கையில் நடந்தது போல் அதை எதிர்த்து அரவழியில் போராட வீதிக்கு செல்லுவோர் வீடு திரும்ப மாட்டார்கள்.

11) என்ன என்ன காரங்கள் சொல்லி எளியவர்களின் பணம் எல்லாம் பறிக்க முடியுமோ அவை அனைத்தையும் பறிக்கப்படும்.

12) தொகா விவாதங்களில் பேசும் வாதங்களுக்கு வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

13) பேச்சு உரிமை எழுத்து உரிமைகளை ஒரே இரவில் பொடா போன்ற சட்டங்களை கொண்டு மக்களின் குரல் நெறிக்கப்படும்.

14) கோயில்கள் மட்டும் இல்லை இனி எங்கேயும் இந்தியாவில் எளிய மக்கள் விரும்பும் உணவோ உடையோ அணிய முடியாது. யார் யார் என்ன என்ன உண்ண வேண்டும் உடுத்த வேண்டும் என்ற அட்டவணைகள் வெளியிடப்படும் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும்.

15) வடக்கு கோவில்களுக்கு செல்லும் இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பது போல் திருப்பதி வரை இந்த தீவிரவாதம் நடக்கும்.

16) ஒரே இரவில் இந்த இந்த ஆதார் ஏண்கள் எல்லாம் இது இது எல்லாம் செய்யமுடியாது என்று படிப்படியாக உரிமைகள் பிடுங்கப்படும்.

17) மோடி எந்த நாட்டிற்கு எல்லாம் முதல் முதலில் சென்று நான் நான் என்று பேசினாரோ அந்த நாடுகளுக்கு குடியரசு அதிபர் சென்று அதே அறிக்கையை நான் நான் என்று முழங்குவார் அது மட்டும் இல்லாது காங்கிரசு அரசை அந்த அந்த வெளி நாடுகளில் வைத்து மோடிப்போல் இவரும் விமர்சனம் செய்வார்.

18) அதாணியும் அம்பாணியும் குடியரசு தலைவரும் கோல்பு விலையாட்டு விளையாடுவதாக அன்றாட செய்தகள் வரும்.

19) திருப்பதி முதல் கேதார்நாத்வரை தினமும் ஒரு கோவிலுக்கு இந்த குடியரசு தலைவர் செல்வார் எலிக்காப்டர்லில் சென்று தரிசித்துவிட்டு தான் தனது பணியை தொடருவார்.

20) பாசக அரசு அல்லாத மாநிலங்களில் அடிக்கடி இந்த குடியரசு தலைவர் வந்து போவார், கூட்டம் நடத்துவார்.

இப்படி ஒரு கட்டப்பஞ்சாயத்தும் தண்டல்காரனான இந்தியா இன்று பிறந்துவிடதே என்று வருந்துவோம். அதோடு மட்டும் இல்லை இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த ரௌடி இந்தியாவில் நடக்க இருக்கும் வன்முறைகளை கடவுளிடம் கூட சென்று முறையிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டீர்களே மக்கா அனுபவிங்க மக்கா நல்லா அனுபவிங்க. வெறு 15 இலட்சம் பணம் தருவதாக சொன்ன பொய்யை நம்பி ஓட்டு போட்டவர்களே பாருங்கள் உங்களின் பரிதாப நிலையை.......

Thursday, July 13, 2017

பாசக அமைச்சர் மகேசு சர்மாவுக்கு கண் பரிசோதணை செய்யவும் - மோடி காந்தியாம்

இந்த மனிதன் மகேசு சர்மாவுக்கு கண் தெரியவில்லை என்றதை எவ்வளவு கவிதையாக சொல்லியுள்ளார் பாருங்கள். மோடியை பார்த்தால் வழுக்கை தலை பொக்கை வாய்யாய் கூன் விழுத்த கிழவனாய் தெரியுதாம்.

எனக்கு தெரிந்து 56 இஞ்சு மார்பனை இவ்வளவு கீழ்தரமாய் இப்படி யாரும் விமர்சித்து இல்லை.....

அசத்துகிறார்ரப்பா இந்த பாசக அமைச்சர்

அமர்நாத் படுகொலை இன்னும் ஒரு கோத்ராவா

சமீபத்தில் தான் இப்படி ஒரு பதிவை வெளியிட்டோம், நான் மட்டும் அல்ல நிறைய பதிவர்களும் இப்படி ஒரு கவலையை தெரிவித்து இருந்தார்கள்.

கொஞ்ச நாளில் இந்து பக்தர்களை முசுலீம் மக்கள் கொன்றதாக செய்தி வருகின்றது. ஆமதாபாத் அலகாபாத்து அல்லது கங்கை என்றால் கோத்ரா சூதிரமாக இருக்கும் என்று மக்கள் எளிதாக கணக்கிட்டு விடுவார்கள் என்று காசுமீரத்தில் நடத்தி இருக்கிறார்கள் பாசகவினர்(RSS).

இது வெறும் யூகம் இல்லை

1) தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பிடிபடவில்லை
2) பார்த்தவர்களும் சாட்சி சொல்பவர்களும் இந்து பக்தர்கள்
3) தாக்குதல் நடந்து கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் உச்சகட்ட பாதுகாப்பும் ஒரு குறிப்பிட்ட இயக்கம் தான் நடத்தியதாக தீர்ப்பே வந்துவிட்டது
4) ஒன்றே ஒன்று தான் பாக்கி இந்த தாக்குதலின் பெயரால் இன்னும் நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையினர்களையும் கொளுத்தும் வேலை மட்டும் தான் பாக்கி

மறுபடியும் சொல்கின்றோம் வெளிப்படையான எந்த ஒரு விசாரணையும் இருக்காது, மெல்ல மெல்ல இந்த சம்பவத்தின் பெயரால் கலவரம் வெடிக்கும் மக்கள் பலியாகபடுவார்கள்.

என்ன பாசக வந்தால் தான் மோட்சம் கிடைக்கும் என்று ஓட்டு போட்ட வடக்கத்தியர்கள் தான் மறுபடியும் இரயில் பெட்டியில் வைத்து வறுத்து எடுக்கபடுவார்கள்......

மக்களே கூட்டமாக இருக்கும் இடங்களை தவிர்த்துகொள்ளுங்கள். சர்ச்சைக்குறிய செய்திகளை பொது இடங்களில் விவாதிக்காதீர்கள்.

பொன்னார் இந்துக்களின் மீது திணிக்கப்படும் வன்முறைக்கு பதிலடி கொடுப்போம் என்று கொக்கறித்திருப்பதை கவனிக்கவும்......

Tuesday, July 11, 2017

இப்படி எல்லாம் செஞ்சா இந்தியா எப்படி வல்லரசாகும் அதுவும் விரைவில்

மோடி அமெரிக்க சென்றார் இராணுவ தளவாடங்களை இத்தனை இலட்சம் கோடி டாலருக்கு வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

மோடி இரசியா நாட்டிற்கு சென்றார் அங்கே இத்தனை கோடி செலவில் இராணுவ தளவாடங்களை வாங்கினார்.

மோடி செர்மனி சென்றார் அங்கே இத்தனை கோடிக்கு இராணுவ தளவாடங்கள்.

இப்படி இது வரை இந்த 3 ஆண்டுகளில் சென்ற 64 நாடுகளிலும் இராணுவ தளவாடங்களை வாங்குகின்றார்.

இன்னும் இலங்கை நேபாளம் வங்களா தேசம் பாக்கிட்தானம் தவிர மற்ற எல்லா நாடுகளிடமும் ஒன்று இராணுவ தளவாடங்களை வாங்குவது அல்லது ஏற்கனவே வாங்கிய தளவாடங்களுக்கு மாற்று பாகங்களை வாங்க வேண்டியது என்று தான் அவரது பயணம் செல்கின்றது.

10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னே அணு ஆயுதத்தை பயன்படுத்தியது புராணங்களில் உள்ளது என்று சொல்லிக்கொள்ளும் நாடு இப்படி உலகில் ஆயுதம் விற்கும் அனைத்து நாடுகளிடமும் இந்தியாவிற்கு ஒரு விமானம் பார்சல் என்று வாங்கும் அளவிற்கு இருக்கிறது இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சி.

இதிலே 130 செயற்கை கோளை விடுறாங்கலாம் எதுக்குபா அத்தனையும் இப்படி ஊர் ஊரா சென்று ஐயா ஆயுதம் கொடுங்க என்று கையேந்தவா, உள் நாட்டு தயாரிப்புகளான ஆகாசு, பிரம்மோசு, ஆயோக்கு எல்லாம் அவ்வளவு தானா.

பாசகவின் ஆட்சியில் இந்தியில் இந்தியன் இரயில்வே என்றும் ஏர் இந்தியா என்றும் எழுதுவதோடு போதும் என்று நினைகின்றார்கள் போலும்.

அதான் படிக்கும் இடங்களில் எல்லாம் பசுவை பற்றிமட்டும் போதித்தாலும் செயல்பட்டாலும் மட்டும் போதும் என்கின்றதே பாசக பிறகு எப்படி முன்னேறுவதாம்...........

மிச்சம் இருக்கும் நாட்களில் நாடு நாடுகளாக சென்று சட்டைக்கு தைக்க பொத்தான் வாங்கவும் மோடி சென்றால் கூட ஆச்சர்யம் இல்லை தான்.....

ஆயுதங்கள் வாங்கும் போது அவைகளை இயக்கவும் ஆட்களை வாங்கிவரவும், துல்லிய தாக்குதலை துல்லியமாக தாக்கலாம் மோடி.

Monday, July 10, 2017

GST பாசக நசகைச்சுவை நக்கலுக்கு அளவே இல்லையா

நேற்றைய செய்திகளில் சென்னையில் நடந்த GST கருத்தரங்கில் மத்திய அமைச்சர் வெளியிட்டு இருக்கும் கேணத்தனமான அறிக்கை. இப்படி அறிவு கொண்டவர் எல்லாம் நம்மை ஆட்சி செய்யும் அவலம்.

"சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: 

எந்த ஒரு மாற்றம் வந்தாலும் அதில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். முறையாக வரி கட்டுபவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஜிஎஸ்டி-யால் பாதிப்பு இருக்காது. முறை யாக வரி கட்டாதவர்கள்தான் பாதிக்கப் படுவார்கள். 

ஜிஎஸ்டி-யால் வருவாய் அதிகரிப்ப தோடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (ஜிடிபி) அதிகரிக்கும். ஜிஎஸ்டி-யால் வணிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் மக்களிடம் வரியை வசூலித்து அரசிடம் அளிக்க உள்ளனர்.

ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து கட்சித் தலைவர் களிடமும் ஆலோசனை நடத்தினோம். அதேபோன்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் நான் ஆலோசனை நடத்தியபோது, “தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி-யால் தொடக்கத்தில் பயன் இருக்காது. தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு தொடக்கத்தில் வருவாய் இழப்பு இருக்கும். எனவே, தமிழகத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டை அளிக்கும்” என்று தெரிவித்தேன். அதற்கு அவர், ‘ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதிமுக குறுக்கே நிற்காது’ என்று தெரிவித்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். "

இதில் கேணத்தனம் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள், இதோ அந்த கேணத்தனம்

 "ஏனெனில் அவர்கள் மக்களிடம் வரியை வசூலித்து அரசிடம் அளிக்க உள்ளனர்"

இதில் தவறு என்ன இருக்கிறது என்று தானே நினைக்கிறீர்கள் அடுத்த வாசகத்தையும் கவனியுங்கள்

"எனவே, தமிழகத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டை அளிக்கும்” என்று தெரிவித்தேன்"

எப்படி இவர்கள் கொண்டுவந்த கோமாளி தனமான வரிவசூலிப்பு முறையால் ஒன்று 10ஆக வரிகட்டி ஏமாந்தவர்கள் தமிழக மக்கள், ஆனால் இழப்பீடை தமிழக அரசுக்கு மைய அரசு கொடுக்கும்மாம்.....

கேட்பவர்கள் கேனையாக இருந்தால் எலி எரோப்பிளேன் ஓட்டுதுன்னு சொல்லுவானுக என்று ஒரு சொல்லாடல் உண்டு அது இது தான் போலும்.

இல்லை தமிழக மக்களுக்கு கொடுப்பதாகத்தான் சொன்னேன் என்று கேணத்தனமாக இன்னும் ஒரு அறிக்கை வராமல் இருந்தால் சரி. அப்படியே தமிழக மக்களுக்கு இந்த புதியவரி வசூலால் அடைந்த நட்டத்தை ஈடு செய்வதாக இருந்தால் எப்படி செய்வார்கள் மைய அரசு...

50 நாளில் தங்கள் வங்கி கணக்குகள் உள்ள வங்கியில் இந்த சூலை 1 முதல் செய்த செலவுகளின் இசேவைகளில் செய்த செலவுகளை கணக்கெடுத்து அவைகளை டக் அன்ட் லூயி முறைபடி நட்டஈடு கொடுக்க சொல்வார்கள் இந்த ஈன அரசு. உழைத்து கொண்டு வந்த பணத்தை பார்த்து கொக்கரித்த அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.....
 

GSTயால் உருவான இணை பொருளாதாரத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள்

கள்ளப்பணம், கருப்புபணம், கணக்கில் வரா பணம், பதுக்கல் பணம் என்று எல்லாம் கூறி இந்தியாவின் பெருமளவு பணத்தை பணமதிப்பிழப்பாக அறிவித்தது பிரிவினைவாத பாசக அரசு.

இந்த நடவடிக்கையின் தேவை என்ன என்று ஏழை எளிய மக்கள் கேட்டதற்கு இந்தியாவில் 1000 ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டால் 250 நோட்டுகள் மட்டும் தான் திரும்பி வருகின்றது மிச்சம் எல்லாம் பதுக்கல் ஆகுகின்றது, பிறகு இந்த பதுக்கல் பணமே இணை பொருளாதாரமாற உருவெடுத்து நாட்டின் வளர்ச்சியையே கொல்கின்றது என்று ஒரு வாதம் இணையத்தில் பரப்ப படுகின்றது.

நானும் தான் அலசி பார்க்கின்றேன் நாட்டின் மொத்த பணத்தில் 75% பணத்தை இப்படி அமுக்கி வைத்தால் இருக்கின்ற 25% பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி மற்ற காரியங்கள் எல்லாம் நடக்கின்றது என்று. எப்படி கணக்கிட்டாலும் 75% சதவிகிதம் என்றது மிகவும் மிகைப்படுத்தபட்ட அளவே.

தவிர இப்படி பதுக்குபவர்கள் எல்லாம் தொழிலில் சம்பாதித்த பணம் என்ற கொசுரு தகவல் வேறு தறுகிறார்கள்.

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும், ஒன்றுமே தெரியாத மக்கள் தான் கிடைத்த பணத்தை பதுக்கிவைத்து இருப்பார்கள், ஆனால் தொழில்புரிவோர் அப்படி வைக்க சாத்தியம் இல்லை, இல்லவே இல்லை.

அவனிடம் இருக்கும் உபரி பணத்தை அமுக்கி வைத்து இருக்க எந்த அளவில் தொழில் செய்யும் முதலாளியும் முட்டாள்கள் இல்லை. பிறகு எப்படி இந்தியாவில் அச்சடித்து வெளியிடும் இந்திய ரூபாயில் 75% சதவிகிதம் பதுக்குகின்றார்கள் என்று பரப்புகிறார்கள், அதுவும் துக்ளக் போன்ற செய்தி ஊடகங்களில்....

இணை பொருளாதாரம் நடத்தும் தொழில்கள் எல்லாம் யார் யார் என்று கேட்டால் குருமூர்த்தி சொல்லும் பட்டியல்கள் இவைகள் தாம்.

தண்டல்காரன், வட்டிக்கு விடுபவர்கள், வார சந்தைகளில் வியாபாரம் நடத்துபவர்கள், அண்ணாச்சி கடை நடத்துபவர்கள், தெருவில் கீரை, தயிர், பால் விற்பவர்கள் என்று மனசாட்சியே இல்லாமல் பட்டியலை அடுக்குகிறார்.

குருமூர்த்திகளின் கருத்துப்படி இவர்கள் தான் இந்தியாவின் 75% சதவிகித பணத்தை கையாளும் தொழில் முதலாளிகளா???

இந்தியாவின் ஆய்வறிகைகளின் படி வருமான வரிக்கட்டுவோர் வெறும் 15% மட்டுமே. இது சம்பளம் வாங்கி அந்த பணத்தில் வருமான வரிக்கட்டுபவர்களும் தொழில் நடத்தும் மக்களும் அடக்கம்.

அப்படி என்றால் மீதம் இருக்கும் 85% விகிதமக்கள் எல்லாம் இவர்களின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களா???? கணக்கு இடிக்கின்றதே.......

தற்பொழுது அறிவித்து இருக்கும் GST வரியால் அனேகமாக அனைத்து வியாபாரிகளும் தனது எண்ணத்திற்கு தகுந்தாற்போல் அல்லவா வசூலிக்கிறார்கள். கேட்டால் இன்றையில் இருந்து இவ்வளவு என்று நள்ளிரவு கூத்தில் அறிவித்தது உங்களுக்கு தெரியாதா என்று நக்கலாக கேட்கிறார்கள்.

இந்த புதிய GST வரியால் விலை எல்லாம் குறையும் என்று தான் சொல்கிறது அரசு, இந்த 10 நாட்களில் எந்த பொருளின் விளையும் குறையவே இல்லை, மாறாக தாறுமாறாக ஏகிறித்தான் இருக்கின்றது.

500, 1000 நோட்டுகள் செல்லாது என்று சொன்னபோது கைக்கட்டி வேடிக்கை பார்த்தது போல் தான் இப்போதும் மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் அது மட்டும் இல்லாது எப்படி எல்லாம் இந்த புதிய GST வரியின் பாதிப்பில் இருந்து தப்பிப்பது என்று செலவுகளை குறைத்துகொள்ள மட்டுமே செய்திகளை பரப்புகிறார்கள்.

இதில் மிகப்பெரிய வியப்பு என்றால் இந்த வரிவிதிப்பினால் ஏறிய விலைவாசிகளை கட்டுப்படுத்தாமல் விட்டதையும், அது சீர் செய்யும் வரை இந்த புதிய வரிவிதிப்பை நிறுத்திவைக்க சொல்லி இது வரையில் ஒருவர் கூட நீதிமன்றத்தை நாடாமல் இருப்பது மிகவும் வியப்பாகவும் வேதணையாகவும் விந்தையாகவும் இருக்கிறது.

மக்களும் விழித்துகொள்ளப்போவதும் இல்லை, கொள்ளையர்களும் நிறுத்தப்போவதும் இல்லை, அரசும் புதிய அறிவிப்பு செய்ததோடு சரி வேறு எதுவும் செய்யப்போவதும் இல்லை.

இப்படி கொள்ளை அடித்து வளர்ப்பது தான் இணை பொருளாதாரம் மற்றப்படி குருமூர்த்திகள் சொல்வது போல் வளர்வது இல்லை இணை பொருளாதாரம்.

நல்லா நடத்துராங்கையா அரசு, முதலில் இந்த வரிவிதிப்புகளை கையாளும் முறைகளை முறைமை படுத்திவிட்டு தானே இந்த வரிவிதிப்பை கொண்டு வந்து இருக்க வேண்டும் அதைவிடுத்து, விலை குறையும் குறையும் என்று கூவினால் மட்டும் போதுமா........என்ன என்ன விலைகள் இது வரையில் குறைந்து இருக்கிறது என்று மக்களில் ஒருவராவது சொல்லட்டுமே பார்க்கலாம்.

இந்த இண்டேன் கேசு போடுவேன் என்று சொல்லும் எச்சி ராசா, தமிழிசை, வானதி, பொன்னாரு, குருமூர்த்தி, நாராயணன் இன்னும் சல்லியடிக்கு சங்கிகள் இது வரையில் பதுங்கி இருப்பதும் ஏனோ தெரியவில்லை. எங்கே தைரியம் இருந்தால் வந்து விளக்குங்களேன் பார்ப்போம். நீங்களும் உங்க இணை பொருளாதார விளக்கங்களும்......ஊழலை ஒழிக்க வந்த அவதாரங்களே விளக்குங்கள்...

இதிலே அமெரிக்காவில் 95% மக்கள் வரிக்கட்டுகிறார்கள் என்ற பொய் தகவல் வேறு, அமெரிக்காவில் 95% மக்கள் வருமான வரி கணக்கை தான் கொடுக்கிறார்களே அன்றி வரி எல்லாம் கட்டுவது இல்லை. வருமானம் இவ்வளவு செலவீனம் இவ்வளவு ஆகையால் வரிக்கட்ட தேவையில்லை என்று கணக்கு காட்டுவார்கள். இதிலே பெயருக்கு ஒரு உப்புமா நிறுவனங்களை தொடங்கி அதன் பெயரில் நடக்கு வரி ஏய்புகள் ஏராளம். கடந்த பொருளாதார மந்த காலங்களில் கலிபோர்னியா மாகனம் முழுதும் போன்டியான கதை எத்தனை இந்தியர்களுக்கு தெரியும் எந்த தைரியம் தான் இந்த குருமூர்த்திகளை இப்படி பேச வைக்கின்றது.

Saturday, July 8, 2017

இந்திய பணத்தை இந்தியர்களே அவமானபடுத்தும் அவலம்

ஒவ்வொரு முறை கப்ப வசூல் ராசாக்கள் சளிக்காமல் மிச்சப்பணத்தில் ஒரே ஒரு 10 ரூபாய் நாயணயத்தையாவது வைத்துக்கொடுத்தாலும் வரும் அத்தனை மக்களும் உங்க நாணயம் வேணாம் தாளே கொடு என்று வாங்கி போகின்றார்கள்.

வங்கிகளிலோ 500ரூபாய் கட்டுகளை வாங்கிக்கொள்கிறீர்களா என்று கேட்டுவிட்டு கொடுக்கிறார்கள். 2000 தாளை வங்கியில் கொடுத்தாலும் சில்லரையாக கொடுங்கள் என்று வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள்.

எங்கே எந்த கடையில் எது வாங்கினாலும் பணமா கார்டா என்று கேட்கிறார்கள்.

GST வந்ததில் இருந்து விலை குறையும் என்று தான் சொன்னார்கள் ஆனால் உணவு விடுதியில் இருந்து திரைபடம் வரை ஏற்கனவே கொடுத்த விலைக்கு மேல் தான் கேட்கிறார்களே அன்றி குறைவாக இல்லை. இதிலே நொடிக்கு நூறு விளம்பரம் ஒரே நாடு ஒரே வரி என்று.....

யாரை யார் ஏமாற்றுகிறார்கள், கள்ளபணத்தை ஒழிப்பதாக சொல்லி இப்போது ஒரு பெரிய கள்ள சந்தையை உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். விரைவில் மித்ரோன் என்று நள்ளிரவு மசாலாவுக்கு தயாராகுங்கள் மக்கா.....

Wednesday, July 5, 2017

டீயும் பொறையும் தான் இனி இந்திய தேசிய உணவு என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை

மோடி சிறு வயதில் டீ வித்த கடையை கோயிலாக மாற்றி தினமும் டீயும் பொறையும் பிரசாதமாக கொடுக்க ஆரம்பகட்டமாக 100 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டு இருப்பதாக மைய அரசு தெரிவித்துள்ளது.

படிப்படியாக அடுத்து அமித்துசா ஓடி விளையாடிய வீடு, அத்வாணி பிறந்த மாநிலம் என்று பட்டியல்கள் நீண்டுக்கொண்டே போகின்றது.

நல்லவேளை பாசகவோ இல்லை அவர்களது சித்தாந்த இயகங்களான ஆர் எசு எசு இயக்கமோ இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கோ அல்லது ஆதரிக்கவோ இல்லை. மாறாக எதிர்த்தது.

ஒரு வேளை போராடி இருந்திருந்தால் இந்தெ 3 ஆண்டுகளுக்குள் ஆர் எசு எசு உருப்பிணர்கள் வீடும் ஊரும் மாநிலங்களமும் கோயிலாக மாற்றி அனைவருக்கும் டீயும் பொறையும் கொடுக்க ஏற்பாடாகி இருக்கும்.

பிறகு நொடிக்கு நூறு முறை சொச்ச பாரத்து என்று வடக்கத்தியர் ஆய் போவதை காட்டுவது போல் டீயும் பொறையும் காட்டுவார்கள்.

டீயும் பொறையும் தான் இனி இந்திய தேசிய உணவு என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை....

இன்னும் ஒரு கோத்ரா இரயிலை கொளுத்த பாசக தயாராகிவிட்டது - சங்கிகளின் சிங்கிகள் ஆர்ப்பரிக்கிறது

சென்னையை சேர்ந்தவர் வசூலித்த மற்றும் அவரது பங்காக என்று மொத்தம் 5.65 இலட்ச ரூபாயை ஐஎசு இயக்கத்திற்கு இராணுவ தளபாடங்களையும் அதி நவீன ஆயுதங்களையும் செயற்கை கோள்களையும் வாங்கி குவிக்க பணம் கொடுத்து உதவினார் என்ற செய்தியும் அதற்காக கைது செய்யப்பட்டதாகவும் இன்றைய செய்தி.

கூடவே இந்த 5.65 இலட்ச ரூபாயில் 65 ஆயிரம் ரூபாயில் பல பேர் சேர்ந்து திரட்டியதாகவும், அந்த நபர்களை எல்லாம் கண்டறிந்து தக்க தண்டனையையும், இன்னமும் எவ்வளவு சில்லரை காசுகளை அவர்கள் நன்கொடையாக வசூலித்தார்கள் என்றும் விசாரிப்பதாகவும் செய்தி.

என்னே ஒரு கொடுமை, சென்னை தேர்தலில் 90 கோடி ரூபாய் புதிய 2000 நோட்டுகளில் கொடுத்தாக சொல்லி தேர்தலையே நிறுத்தி வைத்தார்கள் 4 மாதங்கள் இருக்கும், அந்த 90 கோடி கொடுத்தவரையோ அல்லது அந்த பணம் எப்படி பெறப்பட்டது என்றடையோ கண்டுபிடிக்கவோ அல்லது கண்டுபிடிக்க வேண்டும் என்று கூட இது வரையில் ஒரு அறிக்கை பேருக்காவது வந்ததா என்றால் இல்லை.

இது வரையில் காசுமீரத்தல் மட்டுமே மிதந்து வந்த இந்த இசுலாமிய தீவிரவாதம் இப்போது தமிழகத்தின் சில்லரை காசு வசூலித்தாக கைதில் வந்து நிற்கிறது.

மோடி அமெரிக்கா செல்கிறார் திரும்பியவுடன் காசுமீர போராளிகள் தாக்குதல் நடத்துவோம் என்ற கொக்கரிப்பு அதை தொடர்ந்து சில்லரை காசு வசூலித்தாக கைத்து, இந்த அழகில் நேற்று இசுரேலுக்கு 56 இன்சு மார்பன் பயணம் வேறு. 70 ஆண்டுகளாக காத்துக்கிடந்தாக இசுரேல் பிரதமர் சொன்னதாக தகவல் செய்தி தாள்களில்.

வரப்பின் மேல் வாயை வைத்து தேய்கிறார்கள் பாசகவினர், 3 ஆண்டுகளில் காசுமீரம் தவிர மற்ற இடங்களில் இது வரையில் ஒரு பட்டாசு கூட வெடித்தது இல்லை, அந்த ஆற்றாமைக்காக பாசக அரசு வரப்பின் மேல் வாய் வைத்து தேய்த்து பார்க்கிறது.

ஒரு வெங்காயமும் நடக்கப்போவது இல்லை, எவ்வளவு தான் வம்பிழுத்தாலும் ஆவப்போவது ஒன்றும் இல்லை. மறுபடியும் வயதான முதியவர்களை பாசகவே சபர்மதி இரயில் வண்டியில் வைத்து கொளுத்தியது போல் கொளுத்தினால் தான் உண்டு.

Tuesday, July 4, 2017

ஆதார் தான் ஆதாரம் - இன்னும் 30 ஆண்டுகளுக்கு பாசக ஆட்சி தான், அனைத்து மாநிலங்களிலும் பாசக தான்

ஆதாரை வாங்கு இல்லைனா குடிக்க தண்ணீர் கூட வாங்க முடியாத நிலைமையைத் தள்ளப்படுவாய் என்று சொல்கிறது பாசக அரசு. மக்களும் மிகவும் குழம்பிப்போய் தான் நிற்கிறார்கள்.

ரேசன் அட்டை இல்லாமல் எதுவும் கிடையாது என்றார்கள், பிறகு யாரோ ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவினருக்கோ வாக்காளர் அட்டை அடித்து தரும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. உடனே வாக்காளர் அட்டை இல்லாமல் எதுவுமே கிடைக்காது வாங்கு வாங்கு என்று கூவினார்கள். அந்த ஒப்பந்தகாரர்கள் கேட்போருக்கு கிலோ கணக்கில் விற்றது தான் மிச்சமாக வந்தது.

அதன் பிறகு இந்த ஓட்டுனர் உரிமம் அச்சடிக்க புதிய இயந்திரங்களை மா நில அரசுகள் வாங்கியது. அந்த இந்திரங்களை வாங்கியும் பழய உரிமம் இருந்தவர்கள் காலம் வரும் போது புதுபித்து கொள்ளலாம் என்று இருந்தவர்களை புகைபடத்துடன் கூடிய ஓட்டுனர் உரிமம் இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும் இல்லை என்றால் ஒன்றும் கிடையாது என்று அரசு அறிவித்தது.

பிறகு மைய அரசு 25,000 ரூபாய்க்கு மோல் பணபரிவர்த்தனைக்கு பான் கார்டுகளை பயன்படுத்த வேண்டும் என்று ஒரு விதியை கொண்டு வந்தது. இந்த சட்டம் வரும் போது 25,000 ஒரு பெரிய தொகை, அனால் இன்றோ கையேந்தி பவனில் இரவு உணவு சாப்பிட்டாலே 300 ரூபாவை தாண்டுகிறது என்ன கணக்கோ நிதியமைச்சரை கேட்டால் தான் தெரியும்.

பிறகு இப்போ ஆதார் அட்டையை அடிச்சு கொடுக்கிற ஒப்பந்தத்தை யாருக்கு கொடுத்தானுவலோ லோ லோன்னு எல்லாத்துக்கும் ஆதார் அட்டை இல்லைனா திருப்பதி லட்டு கூட கிடைக்காதுன்னு நிலைமை.

இப்படி ஆதார் ஆதார்ன்னு அலைய ஒப்பந்தகாரர்கள் மட்டும் காரணம் இல்லை, மாறாக படிப்படியாக மக்களை ஆதார் இல்லை என்றால் குறிப்பிட்ட பொருளோ அல்லது செயலோ செய்வதற்கு இல்லை என்று மெதுவாக பழக்கப்படுத்தி வருகிறார்கள் பாசகவினர்.

 நாளை தேர்தல் நடக்க இருக்கும் நாட்களுக்கு முன் ஆதார் அட்டை இல்லாதவர்கள் ஓட்டு போட முடியாது என்று அறிவிப்பார்கள் இவர்கள். மைய அரசின் கொள்கை முடிவில் மக்கள் உரிமை மீறப்படுகின்றது என்று எந்த எந்த நீதிபதிகள் எல்லாம் கூறினார்களோ அவர்களை எல்லாம் மாற்றிவிட்டு ஆமாம் சாமி போடும் நீதிபதிகளாக களம் இறக்கியுள்ளார்கள் பாசகவினர்.

 நாளையே நீதிமன்றம் சென்று ஆதார் அட்டையை தேர்தலுக்கு கட்டாயம் ஆக்க கூடாது என்று கேட்டால், 5 வருடமாக ஆதார் அட்டையை பெற முடியவில்லை என்றால் அவர்களுக்கு தேர்தலில் விருப்பம் இல்லை என்று தான் சொல்வார்களே அன்றி திணிப்பது தவறு என்று சொல்ல மாட்டார்கள்.

திருப்பதியில் இலட்டு வாங்க ஆதார் அட்டை எதற்கு ஒரு ஞாயமான காரணத்தை சொல்லுங்கள் பார்ப்போம். கள்ள வழியில் இலட்டு விற்பதை தடுக்க என்று மட்டும் சொல்வார்கள் பிறகு சட்டம் ஒழுங்கு வருமான வரித்துறை என்று எல்லாம் எதற்கு ஐயா சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆள் வைத்து இருக்கிறீர்கள் என்று கேளுங்கள், ஒரு ஆதார் அட்டைய வாங்க உங்களுக்கு இவ்வளவு கடினமா என்று நம்மையே திருப்பி கேட்பார்கள்.

ஆதார் அட்டையை கட்டாயாமாக்கிவிட்டால் ஒரு ஊரில் மொத்தம் 300 ஓட்டு என்றால் 299 ஓட்டுகள் வரை பதிவானது என்று எல்லாம் இனிமேல் வர வாய்ப்பு இல்லை என்று சந்தோசப்படலாம்.

ஆனால் எந்தனை மக்களின் ஆதார் அட்டைகள் தேர்தல் நாளன்று வேலை செய்யாமல் போகும் என்றது உங்களுக்கு தெரியுமா, இப்பவே வயதானவர்களின் கை ரேகைகளை எடுக்கமுடியாமல் அலை பேசிக்கு இணைப்புக்கூட கொடுக்க முடியாமல் விழி பிதுங்குகிறது ஆதார் அட்டையை கொண்டு இணைப்பு கொடுப்பவர்களால். பிறகு தேர்தல் நேரத்தில் மட்டும் எப்படி இந்த ஆதார் அட்டைகள் வேலை பார்க்கும்.

ஆக அந்த ஊரின் 300 ஓட்டுகளில் கிட்டதட்ட 150 ஓட்டுகள் தான் தேறும். அப்படியே தேறிய ஓட்டில் பாசக அல்லாத ஓட்டுக்களை பெயர் முகவரி படங்கள் வைத்து ஊருக்கு ஊர் அடையாளம் காண்பது எளிது.

அப்படி அடையாளம் காணப்பட்ட வாக்காளர்களின் ஆதார் அட்டைகள் தேர்தல் நாளன்று வேலை செய்யவிடாமல் தடுப்பதற்கு ஒன்றும் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய தேவை இல்லை. ஒரே ஒரு டேட்டா பேசு அப்டேட்டு மூலமாக ஊர் ஊராக அழகாக கவித்து விட முடியும்.

தேர்தல் முடிந்து முடிவுகள் செல்லாது என்று அறிவிக்க நீதிமன்றம் சென்றால் அன்றைக்கு மோடி புதிதாக ஒரு இந்தியாவை பெற்று எடுத்திருப்பார், அந்த புதிய இந்தியாவில் ஆதார் இல்லாதவர்கள் எல்லாம் ஏற்கனவே பாக்கிட்தானத்திற்கு போக மோடியின் சம்பந்தி நவாசு சரீப்பிடம் சொல்லி பாசுபோர்டு விசா எல்லாம் வாங்கியாச்சு என்று ஒரு நடு இரவு மசாலாவில் மோடி அடவு கட்டி ஆடுவார்.

பிறகு என்ன மறுபடியும் ஒரு 5 ஆண்டுகள் உருண்டோடும், 5 ஆண்டுகள் நடக்கப்போகும் அந்த வழக்கில் இனி வரும் தேர்தல்களில் இந்த இந்த விதி முறைகளை எல்லாம் கடைபிடிக்க நீதிமன்றம் நிபந்தனைகள் விதிக்கும், பாசக அவைகளை எல்லாம் அப்படியே எடுத்துகொள்ளத் தேவை இல்லை என்று அழகாக சொல்லும். பிறகு பரோட்டா சோக்கு மாதிரி மறுபடியும் முதல்ல இருந்து. இப்படியே சளிக்க சளிக்க அட்சி செஞ்சு அவர்களுக்குள் ஒரு துரோகி கிளம்பி வெளியில் வந்தால் தான் எல்லாம் முடியும். அந்த துரோகிக்காக இந்தியா இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்துகிடக்க வேண்டி இருக்குமோ......

பயணிகளை காட்டி உணவு விடுதியில் பிச்சை எடுக்கும் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்

வெறும் 70 கிலோ மீட்டர் பயணம், அதுவும் சென்றடையும் ஊருக்கு 15 கிலோமீட்டர் தொலைவில் வண்டியை 35 நிமிடம் போட்டு வைத்து ஓசியில் டீயும் பொறையும் வாங்கி திங்கிதுங்க இந்த பிச்சைகார ஓட்டுனரும் நடத்துனரும். ஏன் என்று கேட்டதுக்கு அந்த ஓட்டுனர் நேற்றைய இரவு 3 மணிக்கு வண்டிய எடுத்தானாம் இப்போ மணி இரவு 2 ஆச்சாம் அதானாம்.

என்னவோ நேற்றைய இரவு 3:00 வண்டி எடுத்த இத்தனை மணி நேரத்திற்கு பிறகு இவ்வளவு நேர ஓய்வு என்று அழகாக நேரம் ஒதுக்கி தான் இவர்களுக்கு அட்டவணை எல்லாம் கொடுக்கிறார்கள். இருந்தாலும் இந்த பிச்சைகார பயலுக ஓய்வெடுக்க குடுகிற நேரத்தை வீணாக்கிவிட்டு நம்மள காட்டி இல்ல பிச்சை எடுக்குதுங்க.........உங்களுக்கு எல்லாம் வெட்கம் மானம் சூடு சொறனை எல்லாம் எதுமே இல்லை போல......வீடு வாசல் எல்லா இல்ல......

எல்லோரும் தான் வேலைக்கு போறாங்க உங்களை மாதிரியா நடுரோட்டுல வண்டிய போட்டுட்டு திங்குராங்க. அவனவன் வீட்டுல பொண்டட்டி சமையல் செஞ்சு குடுத்துவிடல. அதை அழகா சாப்பிடுகிற நேரத்தில் அவனவன் சாபிடல. உங்களுக்கு மட்டும் ஏன்யா இந்த ஈன புத்தி, அந்த 50 ரூவா காசுல பங்களாவ கட்டபோரீங்க பிச்சைகார பயல்வுலா.........

காசுமீரில் இருக்கும் தீவிரவாத அமைப்பை என்ன செய்யனும்னு டிரம்பு சொல்லனுமாக்கும்

தனம் தினம் ஒரு புதிய இந்தியாவை பெத்து போட்டுட்டு மோடி ஊர் சுத்த போயிடுவாரு உதவாக்கரை அப்பன் மாதிரி, அந்த புதிய இந்தியாவில் அதுவும் வடக்கில் நாளுக்கு நாள் கொலைகளை நடப்பதை என்னவோ கத்திரிக்காய் விலை ஏறியது போல் மோடியும் பிரணாப்பு முகர்சியும் கண்டிகிறார்கள். ஏம்பா இனிமே கத்திரிக்கா விலை எல்லாம் ஏத்தாதீங்கப்பான்னு சொல்வதை போல் இந்த கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாதாம். எவனெவன் கண்டுபிடிச்சு தூக்குல ஏத்துரத விட்டுப்புட்டு ஒப்புக்க முடியாது, மாட்டே அப்படி இப்படின்னு பசப்பு வார்த்தைகள்....

இதிலே அமெரிக்காவுல 1000 கார் படை சூழ ஊர்வலமா மோடி சென்றார்ன்னு சங்கிகளின் சிங்கி வேற. அப்பா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா யாராவது வந்து கொஞ்சம் கொசுவிரட்டி மருந்து அடிங்கப்பா.....

அமெரிக்காவின் காயலாங்கடையில் போட்டு வைத்து இருக்கும் பழைய மற்றும் எதுக்கும் உதவாத இராணுவ தளவாடங்களை அதி நவீன ஆயுதமாக இந்தியாவுக்கு சொல்லி ஒரு விலை போட்டு எடுத்துட்டு போ என்றதும். இதோ வருது பிரம்மாசு, அதோ வருது விசுனுசு, இங்கே பார் பசு, அங்கே பார் பசு சாணி என்று பழையபாடல்களை எல்லாம் பாடி வாங்கி வந்த கையோட காசுமீர போராளிகளிடம் இருந்து இப்படி ஒரு செய்தியை தலைப்பு செய்தியக......இன்றைய நாளிதழ்களில்.......

சென்ற முறை கார்கில் இதே பிரிவினைவாத பாசக ஆட்சியில் இந்த முறை எங்கேயோ, எப்படியோ போரின் பெயரை சொல்லி சிங்கி அடிப்பது, மா நிலங்கள் தோரும் வசூலிப்பது. பிறகு பிரம்மாசு விட்டோம் விசுனூசு விட்டோம்னு கதைவிடுரது துல்லிய தாக்குதல் மாதிரி. இது வரையில் பாக்கிட்தானத்தின் எந்த எல்லையில் எவ்வளவு தூரம் உள்ளே சென்று அடித்தார்கள் என்று தெளிவுபடுத்தவில்லை.

மோடியின் சம்பந்தி நாவாசு சரீப்பு கூட அப்படி எதுவும் நடந்தா விளையாட்டுக்கு கூட சொல்லவில்லை.

ஒன்றை நன்றாக புரிந்து கொள்வோம், ஒரு நாட்டின் இராணுவ எல்லைக்குள் இன்னொறு நாட்டின் இராணுவம் நுழையுமானால் போர் வெடிக்கும். என்னவோ இவனுங்க போனாங்களாம், அவனுங்க எல்லாம் பீடா சாப்பிட்டுகிட்டு தம்மடிச்சுகிட்டு இருந்தானுவனாம், இவனுங்க அடி அடி என்று அடித்தானுங்களாம் அவனுங்க வலிக்குது அப்புரம் அழுதுடுவேன்னு சொன்னாங்களாம் அதை உலகம் அங்கரிச்சுடிச்சுன்னு மோடி அவருக்கு அவரே நற்சான்றிதழ் கொடுத்துகிறார்.

முதல்ல அப்படி ஏதாவது நடந்தால் தானே கண்டிக்க அப்படி எதுவுமே நடக்காத போது கண்டிக்க மற்றவர்கள் எல்லாம் என்ன பாசகவை சேர்ந்தவர்களா என்ன.........

திருவாளர் மோடி போய் அடுத்த புதிய இந்தியாவை பெத்துக்க என்ன திட்டம் என்று அந்த ஆயோக்கியர்களை போய் கேளும் அதை விடுத்து சும்ம சிரிப்பு காட்டிக்கிட்டு......

Saturday, July 1, 2017

எத்தனை முறை அடி வாங்கினாலும் திருந்தாத ப சிதம்பரம்

சென்ற முறை நடத்திய நல்லிரவு மசாலாவை பற்றி விமர்சித்த சிதம்பரத்தையும் அவரது மகனையும் படாதபாடு படுத்தியது இந்த பிரிவினைவாத பாசக அரசு. இவ்வளவு வாங்கியும் ஒரு வரி அமலுக்கு வந்த முதல் நாளே விமர்சிக்கின்றார்.

தமிழக அரசை பாருங்கள் கை வாய் பொத்தி இன்னமும் குனிந்தே இருக்கிறார்கள் அவர்களை பார்த்தாவது கற்றுக்கொள்ள கூடாதா.

வீட்டில் இருக்கும் சின்ன குழந்தை ஒரு சிறு பொம்மையை எடுத்து அடுத்த இடத்தில் வைக்கும், உடனே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த குழந்தையை பார்த்து அட இங்க பாரேன் எவ்வளவு பெரிய பொருளை எடுத்து அங்க வச்சிடான் என்று புகழுவார்கள், அவரை தொடர்ந்து வீட்டில் இருக்கும் அனைவரும் அந்த குழந்தையை தூக்கு அந்த அற்ப காரியத்திற்கு முத்தம் கொடுப்பது முதல் இன்னும் என்ன என்ன எல்லாம் கொடுக்க முடியுமோ அத்தனையும் செய்வார்கள்.

அது போல இருக்கிறது இந்த பிரிவினைவாத பாசக அரசு செயல், ஒரு அற்ப அறிவிப்பு அதை தெரிவித்துவிட்டு போகவேண்டியது தானே, அதை என்னவோ சிறுபிள்ளையின் பொம்மை விளையாட்டை பெரியவர்கள் புகழ்வது போல் இவர்களே தம்பட்டம் அடிக்கிறார்கள். மேலும் உலகிலேயே முதன் முறையாக என்ற வசனம் வேறு அப்பப்பா இந்த பிரிவினைவாத சிறுகுழந்தை எப்போது தான் பெரிதாக வளருமோ. நாட்டு மக்களின் வரிப்பணம் என்றைக்கு தான் சரியான செலவுக்கு பயன்படுத்த படுமோ எப்போதுமே வெறும் தம்பட்டத்திற்கு மட்டும் எவ்வளவு தான் செலவு செய்வார்கள் இந்த தற்பெருமை ஆயோக்கியர்கள்.......

இவர்களின் அடிவருடி தனமலரில் 12வது பக்கத்தில் வந்து இருக்கிறது இந்த ஒரு வரி செய்தி. அவ்வளவு தான் மதிப்பு இந்த செய்திக்கு. இதற்கு ஏன் இவ்வளவு வெட்டி செலவு யோகம் தினம் அன்று ஒரு நாள் மட்டும் யோகம் செய்ய கோடி கோடியா கொட்டி அழித்தை போல்.........

Thursday, June 29, 2017

வனமகன் - George of the Jungle (1997) -- சரக்கு தீர்ந்த இசையின் கடைசி சொட்டில் வந்த படம்

படம் ஒரு வழி தவறிய காட்டுவாசியையும் சொந்தங்களை தொலைத்த ஒரு நகரவாசியையும் பற்றிய படமாம்.

நல்ல வேளை காட்டுவாசி என்றால் தேன் எடுப்பது, மீன் பிடிப்பது, இரவில் கூட்டமாக தீ மூட்டி ஆட்டம் ஆடுவது என்று மட்டும் நிறுத்திவிட்டார்கள். தேனும் தினைமாவும் தின்பது, ஒரு பெரிய பாத்திரத்தில் அந்த வழியாக வரும் மனிதர்களை எல்லாம் போட்டு உயிருடன் கொதிக்க வைத்து கை கால்களை பிய்த்து திங்கும்படி காட்டவில்லை.

தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை ஆங்கிலப்படம் அவதாரிலும் இதையேத்தான் காட்டினார்கள். இந்த காட்டுவாசிகள் உண்மையில் வாழ்க்கையில் என்ன தான் செய்வார்கள் யாராவது ஒருவராவது உண்மையை பதிவு செய்யுங்கப்பா....

கமலின் மகள் இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னால் இருப்பது போல் ஒரு பெண் தான் அந்த நகரவாசி. பெரும் பணக்காரர், எப்படி பட்ட பணக்காரர் தெரியுமா தனது பிறந்த நாளை போரா போரா தீவிலும், காலை விருந்தை சப்பான் நாட்டு உணவில் தொடங்கி இரவு உணவு அமெரிக்க உணவு வரை சாப்பிட்டு பழகிய பணக்காரியாம்.

வசந்த மாளிகைன்னு ஒரு படம் அதிலே ஒரு சமத்தானத்து சமையல் அறையையும் அனைவரும் அமர்ந்து சாப்பிடும் காட்சியையும் காட்டுவார்கள். எல்லாம் மிகையாக இருப்பதாக காட்டுவார்களே அன்றி இப்படி ஒரு பக்கித்தனமாக ஒரு காட்சியை பணக்கார வீடாக காட்டவில்லை. அதே சமயம் இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் கமல் Hotdogகை சாப்பிடக்கேட்பார் அதுவும் ஒரு ஓட்டலில் கேட்பார். அதுக்காக அந்தந்த உணவை எல்லாம் வீட்டில் சமைக்க சொல்லி யாரும் கேட்டது இல்லை சமைப்பதும் இல்லை.

இது எந்த ஊரோ இப்படி ஒரு நகரவாசி, அனேகமாக இயக்குனர் பணக்காரர்களை பார்த்து கூட இருக்கமாட்டார் போலும்.....

காட்டுவாசி கடைசிவரை ஒரு ஊமையை போல் காட்டியுள்ளார்கள்.....ஏன் இந்த குழப்பம்.....George of the Jungle (1997)கில் எழுதாக வசனங்களை எப்படி இரவி பேசுவார் அது தான் கடைசி வரை தொண்டை விக்கிகிச்சு

அந்த ஆங்கிலப்படத்தில் குரங்கு கிளி என்று ஏகப்பட்ட விலங்குகளின் மனக்குரல் கேட்க்கும் அதையே காட்டினால் அந்த படம் என்று கண்டுபிடித்துவிடுவீர்கள் என்று கதை களத்தை ஒரு பேராசை பிடித்த மனிதனின் கண்காணிப்புல் வளரும் அனாதை என்று காட்டிவிட்டார்கள்.

படத்தின் பாடல்கள் கார்கியாம் அவரை கூப்பிட்டு வந்து தான் என்னப்பா அது டம் டம் டம் என்று பாடுகிறார்களே மகிழ்மதி பாதிப்பா என்று கேட்க வேண்டும்......

முதல் பாடல் அமெரிக்காவில் தற்பொழுது வானொலிகளில் சக்கை போடு போடும் பாட்டை அது இது என்று தமிழ் வார்த்தைகளை நிறப்பியபாடல், இரண்டாவது வசீகராவின் இன்னும் ஒரு வர்சன், மூன்றாவது பாடல் முதல் பாடலை இருட்டில் எடுத்த பாடல் இசையும் காட்சியும் விளக்கனைத்த பாடல். நான்காவது பாடல் நானே வருவேன் அங்கும் இங்கும் மெட்டில் மறு உருவாக்கம். இந்த பாடலின் நானே வருவேன் சரணம் அனைத்து இடங்களிலும் வந்து வந்து போகின்றது, ஏன் வசீகராவை போட வேண்டியது தானே.....

படம் முடிந்து வரும் போது எந்தப்பாட்டு வரிகளிலும் ஒன்று கூட நினைவில் இல்லாத அளவிற்கு ஒரு வரட்சி இந்த படத்தில். இனியும் மக்கள் ஆரிசு செயராசை சென்று இசையை கேட்கிறார் என்றால்........என்ன சொல்வது.....அதுவும் இந்த படதிற்கு பின்னணி இசையை பற்றி எழுதியே ஆகவேண்டும். என்ன ஒரு மேதாவி தனம், நகரம் வீடு என்றால் புரூ காப்பி, லியோ காப்பி விளம்பரத்தில் வரும் இசையை அப்படியே சப்பிடும் இடம் சமையலரை எல்லாம் வரும் காட்சியில் ஒலிக்கவிடுகிறார். காட்டு வாசி நகரவாசி வீட்டில் வரும் காட்சிக்கு எல்லாம் ஒரு அற்பமான மட்டமான ஒரு இசை அதை நன்றாக இருப்பதாக யாரோ சொன்னார்கள் போலும் அதனால் எல்லா இடங்களிலும் அதே இசையை மறுபடியும் மறுபடியும் போட்டுள்ளார் சகிக்கவில்லை.

செயம் இரவிக்கும் அந்த புது பொண்ணுக்கும் இந்த George of the Jungle (1997) ஆங்கிலப்படத்திற்கு தான் குத்தாட்டம் போடப்போகின்றோம் என்று தெரியாது போலும். அப்படி இருந்திருந்தா கொஞ்சம் அடக்கியே வாசித்து இருப்பார்கள். இன்னும் இது போல் நிறைய ஆங்கிலப்படம் இருக்கிறது எடுத்து அந்தமான் போராளி இலங்கை போராளி என்று எல்லாம் புருடா விடுங்கள் எவன் கேட்க்கப் போகிறார்கள்.....