Friday, March 30, 2012

ஒரு வேளை நரேந்திர மோடி இலங்கை அதிபராக இருந்திருந்தால்.........

ஒரு வேளை நரேந்திர மோடி இலங்கை அதிபராக இருந்திருந்தால், ஐ நாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி அது இராமர் பிறந்த மண். அதை உலகிற்கே உலக சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ நாவிற்கு காவடி எடுத்து இருக்கும்.

இதே பாணியில் தமிழகம் இத்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி கிடையாது, எல்லை பாதுகாப்புக்காக அந்த பகுதியை நாங்கள் சேர்த்துக்கொண்டோம். வேண்டும் என்றால் இலங்கையுடன் தமிழக அரசியல் தலைவர்களையும் கூட தூக்கில் போடுங்கள் என்று இந்தியா சொன்னாலும் சொல்லும் போலும்.

இப்படி ஒரு காலம் வரும் போது தமிழர்கள் அன்டைய மாநிலங்களில் அகதிகளாக தங்கிக்கொண்டு, இந்திய அரசங்கத்திடம் நாங்கள் வெளி நாட்டில் இருந்து பிழைக்க வரவில்லை, இந்த மண்ணின் பூர்வாங்க குடி என்று ஊர்வலம் நடத்துவார்கள். பிரதமருக்கு தந்தி அனுப்புவார்கள்.

தமிழக அகதிகளை ஒன்றாக இருக்க விட்டுவிட்டால் இப்படி புறா விடு தூது அனுப்பி தொல்லை கொடுப்பார்கள் என்று ஒரு பகுதியரை இராம பக்தர்களாகவும் மற்றபகுதியில் ஒரு தமிழர் இன தலைவரை வளர்த்து, வாய் சொல்லில் வீரராக மாற்றி வேடிக்கை பார்க்கும்.

ஆமாம் தமிழர்களை கர்னாடகா மக்களுக்கு பிடிக்காது, இப்போது கேரளமும் அவர்களோடு சேர்ந்துக்கொண்டது. ஆந்திராவிலோ அங்கே இருப்பவர்களுக்கு அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக்கொள்ள நேரம் இல்லை. இதிலே தமிழர்களை என்ன செய்ய போகிறார்கள். அதனால் ஆந்திரத்தில் தான் தஞ்சம் புகுவார்கள்.

அங்கே உள்ள திராட்சை தோட்டம் எல்லாம் நல்ல விலைக்கு போகும்.

இந்த மா நிலங்கள் தாண்டி தமிழர்கள் எங்கும் போய் தங்க முடியாது. அப்படியே சென்று தங்கினால், வட நாட்டில் பழங்குடிகளுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைகளை தமிழர்கள் மேல் ஏவி இராம பக்தர்கள் மகிழ்வார்கள். ஏன்டா அடிக்கிறீங்க என்று கேட்டால், கடவுள் இல்லை என்று சொன்ன கூட்டம் அல்லவா இது என்று போட்டு மிதிப்பார்கள்.

இப்படியே பார்த்தால் தமிழர்களுக்கு சீனாவின் எல்லையில் இருக்கும் சிக்கிம், மிசோராம், அசாம் போன்ற மாநிலம் தான் தங்க தகுந்த இடமாக இருக்கும்.

தமிழர்களும் இந்திய அரசை அது செய் இது செய் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் சீனர்களாகிவிடுவோம் என்று மிரட்டலாம்........

அப்போது தமிழகமாக இருந்த இடத்தில் யார் இருப்பார்கள்................

நல்லவேளை நரேந்திர மோடி இலங்கையின் அதிபராக இல்லாமல் போனார்..................

Saturday, March 10, 2012

என்ன ஆனது இந்திய திரைதுறை விருதுகள் தனிக்கை குழுவிற்கு


எந்த ஒரு நாட்டிலும் தேசிய அளவில் கொடுக்கப்படும் விருதுகளுக்கு படைப்புகளை தேர்ந்து எடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

யாரோ மண்டபத்தில் எழுதிகொடுத்ததை எடுத்துக்கொண்டு வந்து என்னுடையது தான் என்னுடையது தான் ஐயா பரிசு கொடுங்கள் என்று கேட்டால், எந்த கேள்வியும் கேட்க்காமல் கொடுத்துவிடுகிறது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக.

ஆடுகளம் தமிழகத்தின் சேவல் சண்டையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பு என்றும், அந்த பகுதி மக்களின் பழக்கவழக்கங்கள் மட்டும் இல்லாது கலாச்சாரத்தின் பதிப்பு என்றதாலும் விருதுக்கு உரித்தானது என்று சொன்னார்கள்.

ஆனால் ஆங்கிலத்தில் seabiscuit என்று வந்த படத்தினை குதிரைக்கு பதில் சேவலை கொண்டு ஆங்கிலத்தில் பேசிய வசனங்களை தமிழில் பேசியதாக சொன்னால் அது இவரது சொந்த படப்பாக ஆகிவிடுமா???????????

இதிலே ஈ அடிச்சான் காப்பி என்று ஊரில் சொல்வார்களே அந்த மாதிரி ஒல்லிபிச்சானாக ஒரு கதா நாயகன் வேண்டும் என்றால் தனுசை போடுங்கள் என்று படமாக்கி இருக்கிறார்கள்.

ஆங்கில கதையில் மகனை இழந்து தவிக்கும் அந்த தகப்பனின் மனதை அந்த குதிரையும் அதன் ஓட்டியும் எப்படி மயிலிறகால் வருடி ஆற்றுகிறார்கள் என்ற அந்த புனித்மான உணர்வுகளை தமிழில் அந்த வயதானவரின் மனைவியின் மேல் சந்தேகம் படும்படியும் பொறாமை குணம் கொண்டவனாகவும் வக்கிரபடுத்தியது மட்டுமே மாற்றங்கள்.

அவைகள் தவிர, நன்றாக படித்து பெரிய ஆளாக ஆகவேண்டும் என்று நினைத்தும் படித்தும் வருபவனை குடும்ப நிலையை காரணமாக காட்டி நாயகனை பிரியும் குடும்பத்தின் மேல்வரும் கோபத்தை குத்து சண்டையில் காட்டி அடிப்படும் அந்த அற்புதமான காட்சிகளை தனுசு தெருசண்டையில் இறங்குவதாக காட்டுவது அபத்தத்தின் உச்சம்.

போட்டியாளன் தனது குதிரைக்கு நிகர் எதுவும் இல்லை என்று சொல்லும் காட்சிகளை, பாவம் அந்த காவலர் தனது ஆத்தாவை அசிங்கமாக பேசுவதும். தேற்றமுகத்தோடு சாவக்கிடக்கும் கிளவி மூஞ்சில் எப்படி முழிப்பேன் என்று சொல்வதும் நல்ல நகைச்சுவைகள்.

அட படம் பார்க்கும் நமக்கு தான் இது ஆங்கில படத்தின் ஈ அடிச்சான் காப்பி என்று தெரியாது. இதையே தொழிலாக கொண்டு இயங்கும் பத்திரிக்கைகளுக்கும், விருது தனிக்கை குழுவிற்கும் தெரியவில்லை என்று சொன்னால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

சரி சென்ற ஆண்டுதான் ஒன்று தெரியாதவர்கள் விருது தனிக்கை குழுவில் எனக்கு நா.உவை தெரியும், ச.உவை தெரியும் என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள் என்று பார்த்தால் இந்த ஆண்டும் அதே கதை.

வாகை சூடவா, இது ஆங்கிலத்தில் என்ற படத்தின் உருவல்.
என்ன ஒரு மிகத் திறமையான ஆசிரியர் என்றதை விட்டுவிட்டு வேலைதேடும் ஆசாமி ஆசிரியனாக வருகிறார் என்ற ஒரு சின்ன திருத்தம் அவ்வளவு தான். பின் அதோடு ஒரு வில்லனையும் சேர்த்துவிடுவது தமிழ் படத்தில் இல்லை இந்திய படங்களின் இயல்பு என்று சொல்லலாமா......

ஆங்கில படத்தில் படிக்கும் குழந்தைகள் அந்த சின்னவயதில் அனுபவிக்கும் கொடுமைகளையும், அதனால் விரக்த்தி அடையும் மன நிலையில் எப்படி ஆசிரியர் எதிர்கொள்ள நினைகிறார் என்ற பதிப்பினையும் அழகாகவும் ஆழமாகவும் கொடுத்து இருப்பார்கள்.

இதில் வேடிக்கை என்ன என்றால் பாக்கியராச்சு தனது காணொளிகளில் ஒன்றில் இந்த ஆங்கிலப்படம் பற்றி தெரிவித்து இருந்தார். அவர் கூட இந்தபடம் ஆங்கிலத்தின் தழுவல் என்றும் கூட சொல்லாம மௌனித்தது கொடுமை தான்.

இப்படியே போனால் Finding Forrester இந்த படத்தையும் சிவாச்சி கணேசனை கொண்டு தயாரித்து தந்தையர் பாசம், இல்லை இல்லை ஆசிரியர் பாசம், இல்லை இல்லை தமிழக ஆசிரியகளின் கடமையுணர்ச்சி என்று எல்லாம் எட்டுகட்டி விருதகள் வாங்கி குவித்து இருப்பார்கள் நல்லவேளை அந்த மனிதன் உயிருடன் இல்லை, நாம் எல்லாம் தப்பித்தோம்.

Saturday, March 3, 2012

ஒரு நடிகையின் வாக்குமூலமும் - டர்ட்டி பிக்ச்சர்ரும்

டர்ட்டி பிக்ச்சர்

இந்த படம் தயாராகிறது என்றதும், நடிகையாக இருந்தாலும் அதுவும் அந்த மாதிரியான படங்களாக நடித்தாலும் அவளும் ஒரு பெண் என்ற கோனத்தில் தான் படம் தயாரித்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் படத்திலோ அவள் ஒரு பெண்ணாக தோற்றுப்போகும் இடங்களில் எல்லாம் அவள் எப்படி தன்னை சமாதான படுத்துக்கொண்டாள் என்று தான் காட்டினார்களே அன்றி அந்த பெண்ணின் மனது படும் பாட்டை அவர்கள் பதிவு செய்ய மறந்துவிட்டார்களா அல்லது மறுத்துவிட்டார்களா புரிய இல்லை.

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின்னர் அவன் நல்லவன் ஆவதும் கெட்டவன்னாவதும் அன்னை வளர்ப்பதிலே என்ற வார்த்தைகளின் அடைப்படையை சொல்லாமல் தோற்று போன படம் இந்தியின் வண்ணத்தில்.

ஒரு நடிகையின் வாக்குமூலத்தில் அம்மாவின் கவனம் பணத்தின் மேலும் வசதியின் மேலும் ஆளாய் பறக்கும் போது தனக்கு என்று ஒரு வாழ்க்கை அமைந்து விடாதா என்று ஏங்கும் அந்த மனித உள்ளத்தின் ஓசை அனைவரின் மனதிலும் பிரதிபலிக்கும் விதமாக அமைத்துள்ள்மைக்கு பாராட்டுவோம்.

வித்தியா பாலன் பார்த்து சங்கடப்பட்டு இருப்பார் ஏமாந்து போனோமே என்று.

காதலனாக நினைக்கும் இயக்குனர் திரைமறைவில் இவளை விலை பேசும் செயல்கள் சகிக்கவில்லை. என்ன தான் கற்பனை என்று இருந்தாலும் காண சகிக்கவில்லை.

பதிவர் அகிலா "மயக்கம் என்ன" படத்தை அண்ணன் தம்பி இருவரும் சேர்த்து சோனியாவை சாட படத்தை பயன் படுத்தியுள்ளார்கள் என்று எழுதி இருந்தார்கள். இந்த படத்தை பார்த்துவிட்டு சோனியா எதிர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்று சொல்வாரா.

வெகு நாட்களாக மனதில் தொக்கி நிற்கும் கேள்வி இது. தனக்கு பெண் வேண்டும் என்று இந்த பணமும் பலமும் படைத்தவர்கள் நினைத்தால் அதற்கு என்று இருக்கும் மக்கள் கிடைப்பார்கள். அதைவிடுத்து சிறுவர் சிறுமியர்களை வன்கொடுமை செய்வது போல் விருப்பம் இல்லா இந்த மாதிரியான பெண்களை அழிப்பதில் இவர்கள் இன்பம் காண்பதாக தெரியவில்லை, மாற்றாக அவர்களின் மனதின் வக்கிரபுத்திக்கு தீணிபோடுவது தான் விளங்குகிறது. மனித வடிவில் உலவும் விலங்குகள்.

படத்தில் எடுத்து வெட்டியது தான் அதிகம் போலும், இன்னமும் திரையில் சொல்லாமல் விட்ட செய்திகள் தெரியாமலே போகட்டும்.................