Friday, April 10, 2009

உலகால் கைவிடப்பட்டது ஈழத்தமிழர்கள் மட்டுமா (தூயா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க)

மனிதனுக்கு மனிதன் உதவுதான் தமிழ் உலகுக்கு உரைத்த உரை, அந்த தமிழர்களுக்கோ இன்று உலகம் சொல்வது என்ன நீ வேண்டுமானால் அப்படி இரு ஆனால் எங்களுக்கு எல்லாம் நாங்களும் எங்கள் வளங்களும் தான் முக்கியம் அடுத்தவர்களை பற்றி எல்லாம் எங்களுக்கு எள்ளவு இல்லை அணு அவளிற்கும் அக்கறை இல்லை என்று.

இப்படி ஈழத்தமிழர்களை கைவிட்டதில் முதலிடத்தில் இருக்கும் பெருமை தமிழக தமிழர்களுக்கு. என்ன சாதனை, எத்தனை பெரிய சாதனை. எப்படி இருந்த தமிழ் சமுதாயம் நாம், இப்படி ஒரு இழி நிலைக்கு ஆளானோமே. ஏன் இந்த சுய நலம் நமக்கு. யார் கற்றுக்கொடுத்தது இந்த கொடுமையை தமிழர்களுக்கு.

சம்பந்தமே இல்லாத நாடு நார்வே, அந்த நாடு எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு, ஐ நாவையும், அமெரிக்காவையும் பகைத்துக்கொண்டு ஈழத்து சமாதானத்துக்காக இராசதந்திர முயற்சிகளில் ஈடுபடும் போது. நாம் எல்லாம் கைகட்டி வாய் பொத்தி நிற்பது நீதியா.

ஒரு வேளை தமிழக தமிழர்களுக்கு நாளை இப்படி ஒரு நிலை வரும்போது, ஈழத்தவர்கள் இப்படி இருந்தால் நாமும் இப்படிதானே வேதனையுறுவோம். அவர்களை பார்த்து இப்படி தானே கேள்விகளை கேட்ப்போம்.

ஈழத்தில் இழவு விழுகிறது, நாள்தோறும் அல்ல, நொடிதோறும். ஆனால் நாம் எல்லாம் எந்த ஒரு அதிர்வும் இல்லாமல் தேர்தல் திருவிழா என்று கொண்டாடங்கள், கொடி என்று ஆளாய் பறக்கிறோம்.

அதற்காக நாம் எல்லாம் என்ன செய்துவிடமுடியும் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. நம்மால் எதுவுமே முடியாது என்ற நிலையில் நாம் இல்லை.

நாம் நினைத்தால் இந்திய அரசாங்கத்திற்கும் தமிழக அரசாங்கத்திற்கும் ஒரு நல்ல பாடம் கற்பிக்க முடியும். அனைத்து தொகுதியிலும் ஒவ்வொருவரை நிறுத்துவோம் தமிழர்களது சார்பாக. அவருக்கு தான் நமது வாக்கு என்று வாக்கு சேகரிப்போம். வெல்லவும் செய்வோம்.

தேர்தல் முடிந்ததும், நமது காரணங்களை எடுத்துரைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்வோம். முடியாது என்றும் சொல்லும் பட்சத்தில் அனைவரையும் பதவி விலக செய்வோம்.

இப்படி அவர்கள் தமிழர்களின் பேச்சு கேட்க்கும் வரை போராடுவோம். இறுதி வரை போராடுவோம், இந்திய அரசு அடிபணியும் வரை போராடுவோம். இல்லை நாங்கள் இப்படிதான் இருப்போம் என்றால் அப்படி இருக்கும் வரைக்கும் இந்திய அரசாங்கத்தில் தமிழக பிரதினிதிகள் இருக்கபோவதில்லை என்று விலகி நிற்போம்.

மற்ற மாநிலங்களுக்கும் அவர்களது நிலையும் மெல்ல புரியவருங்கால் நமக்கு கட்டாயம் ஆதரவு தெரிவிப்பார்கள்.

கட்சிகளை நம்பி நாம் மோசம் போனதெல்லாம் போதும், இனிமேலும் இலவு காத்த கிளியாக இல்லாமல் செயல்படுவோம் இளைஞர்களே வாருங்கள்.

தூயா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிக்கபட்ட பதிவு இது. நாங்கள் எப்போதும் உங்களோடு தான் இருக்கிறோம், இன்னமும் கொஞ்சம் உழைத்தால் முழுமையாக உங்களுக்காக செயலாற்றமுடியும். செயலாற்றுவோம்.

Thursday, April 9, 2009

Book Release – Invitation “Akkaraipachai” (H1-B Life in USA)

Dear Friends,

I am Dr. Singara Vadivel, Ph.D. second batch (1985-89 - EEE) from Mepco. Living in US for 16 year after brief three year from Singapore, Indonesia and Canada. Last year January I have published my first social novel “Thooram” about village life and Joint family issue. “Thooram” is nominated for Shaitiya Academy.

I present my rich experiences in my second Book “AKKARAI PACHCHAI” (The grass is always greener on the other side) in Tamil.

This Novel is about the H1-B software engineer’s life in the Land of Opportunity (USA). Every walks of life feels the pain of global economic slowdown. Software professionals and future engineers are worried about their future. What could be a better time than now to access the much wanted information?

Feel the real challenges and rewards in the life of most of the H1-B settlers in US - their struggles, their day to day life in America.

There are lots of misrepresentations, misconception, misunderstanding and biased / confused opinions about the opportunities in the land of opportunity. I have attempted to express and expose the reality of life in US for software engineers. I have revealed the forgotten or forbidden stories of H1-B immigrants.

Yes… , America is a land of opportunity, But it will not be given ; it has to be earned. Coming to US is not the beginning of an end; it is the end of a beginning.

I am sure that this book will be very useful for IT professionals, students (for higher studies) and parents (seeking American bride or grooms) to know more about the real life in US. This book provides an insight with lots of useful information for the people who are longing for (eyeing) America as their dream land.

“Akkarai pachchai” is not for encouraging or discouraging IT professionals to come to America, but describing the lifestyle of H1-B immigrants.

You can avoid or minimize disappointments and failures in your life journey in America with right preparations and expectations. I strongly believe that, no book has been written in depth to talk about the life in America. Everyone would actually live a life in U.S for a short while, reading this Novel.

You are most welcome to

Book release function in Chennai on : April 16 2009 (6 PM: GRT – Hotel)
Introduction in Madurai on : April 20 2009 (6:00 PM Chamber of Commerce)
Introduction in Nagercoil on : April 22 2009 (6 PM)

and get all your doubts cleared

I am sure this will not only give surprises, shocks and answers, but also will clear the confused opinions that one may have.

Your feedback will be more valuable for my future projects.

Thank You..
With Love.

Dr. S. Singara Vadivel, D.C.E, B.E(Hons)EE, M.E, Ph.D. (USA)
Austin – Texas
USA

Books available at:

Vijaya Publishers, Raja Street, Coimbatore. Tamilnadu. India
All leading Book Stores.

To know more about the book and its reviews, please visit: http://www.aathmaa.org/

Note: Money generated by this project will be used for charities.

பனிமலருக்காக Dr. சிங்கார வடிவேல் அவர்கள்.

Wednesday, April 8, 2009

உலகம் மூன்றாம் உலக போருக்கு தயாராகுகிறதா

இரண்டாம் உலக போருக்கு பின் பல நாடுகள் காலணி ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. அடிமைகளாக பல ஆண்டுகள் ஏன் தலைமுறைகளைக்கூட கடந்த நாடுகளும் உண்டும். இந்தியாவும் அடிமை இந்தியாவும் அப்படி தலைமுறைகளை தாண்டிய நாடாக இருந்தது.


படித்துமுடித்த கையுடன் தென் ஆப்ரிக்காவிற்கு பயணம் சென்ற காந்தி ஆங்கிலேயர்களால் பற்கள் உடைக்கப்பட்டார். அன்றைக்கு அவரது பற்கள் பறிக்கப்பட்டதில் பட்ட அவமானம் அவரை இந்திய சுதந்திர போராட்டம் வரை கொண்டு வந்தது.


அனேகமாக இந்தே கால கட்டங்களில் அனேகமான காலணி ஆதிக்கதில் இருந்த நாடுகளும் சுதந்திரம் வேண்டி போராட்டங்களை நடத்திக்கொண்டு இருந்தன.


உலக போர் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் இந்த துக்கடா காரியங்களில் எல்லாம் கவனமோ அல்லது எதிர்போ செலுத்த நேரம் இல்லாத அந்த வல்லரசான இங்கிலாந்து அதன் காலணியாதிக்கத்துக்கு விடைகொடுத்து விடைபெற்றது.


உலகப்போர் மட்டும் அப்போது இல்லாமல் இருந்திருந்தால், ஐரோப்பாவிலே நடைபெற்ற மதவாத பயங்கரவாதம் எல்லாம் இன்னமும் சீற்றமுடன், மனிதனால் சகிக்கவே முடியாத வகையில் நடந்து இருக்கும். அதுவும் அந்த கால கட்டங்களில் போராடும் மனிதர்களை விட அவர்களை பார்த்து மற்றவர்களும் அவர்கள் போல் இறங்கிவிடக்கூடாது என்றதில் ஆட்சியாளர்களும் மதகுருமார்களும் மிகவும் கவனமாக் இருந்தார்கள்.


போராட்டம் நடத்துபவர்களை பிடித்துவந்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்து அவர்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்யமுடியுமோ அப்படி எல்லாம் செய்து அணு அணுவாக கொல்வதை பொதுமக்கள் அனைவரும் கண்கொண்டு பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளுவார்கள் ஆட்சியாளர்கள்.


புரட்சியாளனின் தந்தை என்றோ, மகன் என்றோ, இல்லை நண்பன் என்றோ ஒருவரும் பெருமைபட்டுக்கொள்ள முடியாத கால கட்டங்கள் அவை.


அப்படி யாரேனும் இருந்தால் அவர்களை மக்களின் முன் நிறுத்தி பெண்ணாக இருந்தால் பாலியல் அவமானம், ஆணாக இருந்தால் அணு அணுவாக அவனை சிதைத்து அவன் மறனத்திற்கு கெஞ்சும் நிலையிலும் அவனை சுய நினைவோடு வைத்து படுத்தும் பாடுகளை பார்த்த மக்களில் ஒருவர் கூட இந்த வம்பு நமக்கு ஏன் என்று ஒதுங்கும் விதமாக இருக்கும்.


மொத்ததில் நடப்பது ஒன்றே ஒன்று தான், தான் பலசாளி என்று காட்டிக்கொள்ளும் அதே வேளையில் தன்னை எதிர்க்க நினைக்கும் அனைவரது மன உறுதியையும் குலைக்கும் விதமாக பயங்கரவாதத்தை பயன் படுத்துவது தான் ஆட்சியாளர்களது தந்திரம்.


தந்திரம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், மக்களின் எண்ணிக்கையோடு நோக்கினால், இந்த ஆட்சியர்களது எண்ணிகை மிகவும் சொற்பம். இருப்பினும், இந்த ஆட்சியர்களது விருப்படிதான் அந்த எண்ணிக்கையில் மிக்க மனிதர்கள் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று ஆட்டிவைபதால்.


ஆக அரசு மக்களை பணியவைப்பதும் ஒரு பயங்கரவாதத்தினால் தான், இந்த உண்மையை இறையாண்மை, ஆட்சி, மாட்சி, அமைச்சு என்று என்ன பெயர் இட்டு ஒளித்தாலும், குன்றின் மேல் இட்ட விளக்காக அது சொலிக்க தவறியதில்லை.


இந்த அரச பயங்கரவாதத்திற்கு மதங்களும் உறுதுணையாக இருக்கும். காரணம், மதங்களையும் ஒரு ஆயுதமாகத்தான் ஆட்சியர் பயன்படுத்தியுள்ளார்கள் என்றது படிக்காத பாமரனுக்கும் நன்றாகவே தெரியும்.


ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கும் அப்பால் இன்று உலகில் மக்களாட்சி பெரும்பாலும் உள்ள நாடுகளில் கூட மக்கள் எதற்கு எதிராக போராடி வெள்ளையர்களை விரட்டினார்களோ அந்த காரணங்கள் இன்னமும் அப்படியே இருப்பது எவரும் மறுக்கமுடியாத உண்மை.


இந்தியாவை பொருத்த அளவில் காந்தி சொன்ன அந்த கனவு நாள் இன்னமும் எந்த ஊரிலும் இல்லை என்றதே சோகமான உண்மை.


இப்படி மக்களாட்சியிலும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற நிலையில், எங்களுக்கு நீங்கள் செய்த உதவிகள் எல்லாம் போதும். நீங்கள் எங்களை ஆளவும் வேண்டாம், நாங்களி உங்களிடம் அடிமைபட்டு இருக்கவும் வேண்டாம் என்று மக்கள் கூட்டம் கூற துவங்கியுள்ளதுடன் நில்லாது. போராட்டங்களையும் நடத்தி வருகிறது.


இரண்டாம் உலக போர் காலத்தில் மன்னர்களையும் முடியாட்சியின் இழி நிலை மற்றும் வக்கிரங்களை மேடையேற்றி இத்தணை தாக்குதலுக்கும் இடையிலும் சுதந்திர போராட்டத்தை விதைத்து வளர்த்து வழி நடத்தி. மன்னர்களி முடியாட்சிகளை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சி மலர்ந்ததே நமக்கு எல்லாம் சொர்கம் கிடைப்பபோகின்றது என்றார்கள் சுதந்திர போராளிகள்.


ஐம்பது ஆண்டுகாலம் கூட ஆகவில்லை, அதற்குள் மக்களாட்சியின் மேல் படிந்துள்ள முடியாட்சியின் கோரகரங்களது கீரல்கள் மக்களாட்சியின் மக்களின் நெஞ்சங்களில் கீரி கொஞ்சம் கொஞ்சமாக இரத்தம் சொட்டவைத்து தவணை முறையில் உயிர் நீக்கும் வேலையை வெகுவாக வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதை போல் செய்துகொண்டிருக்கிறது.


இன்றைக்கு மக்களாட்சி பல் இளிக்கும் இடங்களில் எல்லாம், மக்கள் வீதிக்கு வந்து போரட்டங்களை வைத்துள்ளது. அப்படியும் நசுபபடும் நாடுகளில் ஆயுத போராட்டம் வரை கொண்டு வந்து இருக்கிறது.


இப்படி நீதிக்கு புறம்பாக நடக்கும் ஆட்சியாளர்களின் நெறிமுறையில் மாறுபாடு கண்ட மக்கள் விலகி நிற்கும் பட்சத்தில். போராளிகளோடு சேர்த்து அவர்களுக்கும் கொல்லப்படுவதை மீண்டும் ஒரு முறை ஆட்சியாளர்கள் நிகழ்த்தி காட்டியுள்ளார்கள்.


உலகமும் தனது பங்கிற்கு பயங்காரவாதத்தை ஒழித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு போராளிகளை அழிக்க முயலுவதையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.


போராளிகளை அழிக்கத்துடிக்கும் அவர்களது செய்கையில், போரட்டத்தின் அடிப்படை காரணம் ஆராயப்படுமானால் போராட்டமே வெடித்திருக்காதே. ஆனால் ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள், இப்போதைக்கு போராட்டத்தை அடக்குவோம். அதற்கு பிறகு போராட்டம் நடத்தும் எண்ணம் கூட மக்களின் மனதில் தோன்றா வண்ணம் முடியாட்சியில் கையாண்ட அனைத்து அழிவு வழிகளையும் அறிவியல் வழிகொண்டு இன்னமும் கோரமாக நடத்திமுடிப்போம் என்று செல்கிறது.


அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்தார்கள் போராளிகள். வெறும் இரண்டே கோபுரங்கள், ஆனால் அதன் விளைவு இன்றைக்கு உலகமே திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. என்ன தான் தேனொழுக பேசினாலும் அமெரிக்காவினால் இன்னமும் எழுந்து நிற்கமுடியவில்லை, இதுவே உண்மை. என்ன தான் மூடி மறைத்தாலும் விழுந்தது குதிரை என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அமெரிக்காவின் நிலையே மலையின் உச்சில் இருந்து விழுந்த இடைனோசரசு நிலைக்கு ஆளாகி நிற்கிறது.


அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்தார்கள் போராளிகள். வெறும் இரண்டே கோபுரங்கள், ஆனால் அதன் விளைவு இன்றைக்கு உலகமே திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. என்ன தான் தேனொழுக பேசினாலும் அமெரிக்காவினால் இன்னமும் எழுந்து நிற்கமுடியவில்லை, இதுவே உண்மை. என்ன தான் மூடி மறைத்தாலும் விழுந்தது குதிரை என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அமெரிக்காவின் நிலையே மலையின் உச்சில் இருந்து விழுந்த இடைனோசரசு நிலைக்கு ஆளாகி நிற்கிறது.


இந்த அழகில் இந்தியாவின் மிக அருகில் இருக்கும் இலங்கையில் நடக்கும் அரச பயங்கரவாதத்தின் எல்லை மீறிய தாக்குதல்கள் அந்த மண்ணின் போராளிகளை அழித்துவிட்டதாக அறிவிக்கின்றது. அதுவும் 30 வருடம் கழித்து எல்லை இல்லா அளவிற்கு பொருட் செலவுகளை செய்து இந்த செயலை செய்து முடித்ததாக சொல்கிறது. மேலும் வாங்கிய கடன் பத்தவிலை, மேலும் கடன்களை குவித்து அழித்த இடங்களில் புனர்வாழ்வுக்கு வழிகோளுவோம் என்று சொல்கிறது.


அந்த மண்ணின் போராளிகளது போராட்டம் வரலாறா அல்லது போராட்டம் தொடர்கிறதா என்று விவாதிக்கவில்லை. ஆனால், அந்த போராட்டத்தை அழிக்கும் முயற்சியில் இலங்கையும், இன்னமும் பிற நாடுகளும் காட்டிய ஆர்வத்தில் ஒரே ஒரு சதவிகிதமாவது போராட்டத்தின் காரணத்தை பரிசீலிக்க செலவிட்டுருந்தால் போராட்டம் நல்லவழியில் பயணித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.


ஆனால் அரசோ என்ன செய்தது, முடியாட்சியில் மன்னர்கள் நடந்துகொள்வதை போல் போராளிகளையும். அந்த போராட்டத்தை ஆரரிக்கும் மக்களையும் ஒருங்கே கொன்று குவித்தது. போராட்ட பூமியில் இன்று ஒரு புல் பூண்டு கூட இல்லாமல் அழித்துவிட்டோம் என்று அரசு கருதுகிறது. ஆனால் போராட்டத்திற்கான காரணம் இன்னமும் அப்படியே இருக்கிறதே. அது இருக்கும் வரையில் போராட்டம் ஓயப்போவதில்லை. அந்த காரணம் தான் போராளிகளை உருவாக்கியதே தவிர போராளிகள் போராட்டத்தை உருவாக்கவில்லை.


ஒரு வேளை அன்று இந்தியா சுதந்திர போராட்டம் நடத்தும் போது ஒரு உலக போர் நடந்தது போல், இன்றைக்கும் உலகலாவிய ஒரு போர நடந்து கொண்டிருந்தால், ஒரு வேளை ஈழமும் சுலபமாக மலர்ந்து இருக்குமோ என்னவோ.


அல்லது மக்களாட்சி தோற்றுப்போன நாடுகளில் எல்லாம் வெடிக்கும் போராட்டம் பின்னாளில் ஒரு உலக போருக்கு வழிவகுக்குமா என்றும் தோன்றுகிறது. நாடு பிடிக்கும் ஆசையில் அன்று சப்பான் மற்றும் இட்லரின் படைகள் நாளாபுறமும் படை எடுக்க. அதை தடுக்கும் விதமாக மற்ற அனைத்து நாடுகளும் போராடும் வேளையில். குட்டி நாடாக இருந்த இந்தியா போன்றோர்கள் பலன்களை அனுபவித்தார்கள். அதுபோல் இன்றைக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்துகொண்டு சந்தை பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் போரில் ஈடுப்பட்டுவருவதில் எதிர்தாக்குதலும் அதன் விளைவாக உலக போர வந்தாலும் ஆச்சரியபடுவத்ற்கு இல்லை தான்.


ஒபாமாவின் ஆட்சியில் பொருளாதாரத்தை நிலைகொள்ள செய்வது நடக்காத ஒன்றாக தோன்றுகிறது. அமெரிக்கா மூழ்குவதுடன், அது உலகையும் அதனுடன் இழுத்து செல்லும் வேலையையும் அழகாக செய்கிறது. மற்ற நாடுகள் இவர்களை கைகழுவி நிற்கையில், வேறு வழியில்லாமல் அமெரிக்காவே உலக போரை துவக்கினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

Saturday, April 4, 2009

பாசகவின் "இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்" தேர்தல் வாக்குறுதியின் நோக்கம் என்னவாக இருக்கும்.

பாசக வெளியிட்டிருக்கும் அதன் மக்களவைக்கான தேர்தல் வாக்குறுதிக்கள் மொத்தத்தில் நடுத்தர மற்றும் கீழ் நடுதட்டு மக்களின் மனதை கவரும் திமுகவின் அறிவிப்புகளான 2 உரூபாய்கு அரிசி, வரிவிலக்கு என்றும் அறிவித்துள்ளது.

இவைகளை தவிர்த்து மற்றவைகள் அனைத்தும் வியாபார நோக்கில் உருவாக்கிய திட்டமாக இருக்கிறது.

1) ஓய்வூதியத்தின் மீதான வரி நீக்கபடும்

3 இலட்சம் வரை வருமான வரிவிலக்கு அறிவிக்கும் போதே, ஓய்வூதியதிற்கு வரிவிலக்கு நடுத்தர மக்களை பொருத்த வரை ஒரு ஏமாற்று வேலை.

பிறகு யாருக்கு தான் உதவியாக இருக்கும், பின் யாருக்கு ஓய்வூதியமே வருடதிற்கு 3 இலட்சத்திற்கு அதிதீதமாக இருப்போருக்கு. அதுவும் இங்கே ஓய்வூதியம் என்று வந்துவிட்டால் போது மற்றபடி எவ்வளவு என்ற வரம்பை எல்லாம் அவர்கள் சொல்லவில்லை. இதை பார்த்தால் அனேகமாக அம்பாணி சகோதரர்கள் அனேகமாக பாசக ஆட்சி வந்தால் ஓய்வு பெறுவதாக அறிப்பார்கள் போலும்....

2) பாதுகாப்பு படையினருக்கு வருமான வரியிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும்.

பாவம் பாதுகாப்பு படையினர்கள் வருத்திற்கு 6 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை வருமான வரி கட்டுகிறார்கள். இவர்கள் அதில் விலக்கு கொடுத்து அவர்களது வாழ்க்கையில் கோடி கோடியாக மிச்சம் செய்ய வழி செய்து கொடுத்துள்ளார்கள். இதை விட பாதுகாப்பு படையினர்களை கேவலபடுத்த முடியுமா. நாட்டு பற்றுடன் இருக்கும் வீரர்களுக்கு நாடி பிச்சை போடுகிறதான் இவர்கள் சொல்கிறார்கள்.

3) சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதி மறுக்கப்படும்

கவனிக்க அன்னியர்கள் சில்லரை வியாபாரத்தில் நுழைவதை தடுப்பதாகவோ, அல்லது அவர்களது முதலீட்டில் இந்துதான் இலீவர் என்றோ, சுசுகி பரமேசுவரன் என்றோ சுரண்டுவதையோ அல்லது இந்தியர்கள் வெற்றிகரமாக நடத்திவரும் சிறு தொழில்களை அழிப்பதையோ தடுப்பதாக இவர்கள் சொல்லவில்லை.

மாறாக அம்பானி சகோதர்கள் துவங்கி இருக்கும் சில்லரை வியாபாரத்திற்கு போட்டியாக வரும் அன்னிய முதலீட்டார்களை தான் இவர்கள் தடுப்பார்களாம். அதுவும் டைடு வெளுப்பான் நிறுவனம் போல் நடு தர மக்களுக்கு தரமான வெளுப்பான்களை பேட்டியாக இறக்கிய பயத்தில் இருக்கும் மிச்ச மீதி பணக்காரர்களுக்கு போட்டியாக வரும் அனைவரையும் தடுப்பதே இவர்களது நோக்கம். அதும் நடுத்தர மற்றும் அவர்களுக்கு கீழும் உள்ள மக்களுக்கு தரமான தாக எதுவும் கிட்டிவிட கூடாது போலும். அப்போது தானே அழகு அத்தை தொலைகாட்சியில் வந்து "கறை நல்லது" என்று கண்களை அழகாக திறந்து சொல்லமுடியும்.

4) பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டுவரப்படும்.

எப்படி மிக சமீபத்தில் கலாச்சார காவலில் இறங்கிய தாலிபான்களை உலகமே சபித்த ஓசை அடங்கும் முன் அவர்கள் எல்லாம் என்ன துக்கடா பசங்க என்று இராம படை ஒன்றை ஏவி பெண்களை நடுத்தெருவில் பாஞ்சாலி ஆக்கி காட்டினார்களே அவர்களது கழக கண்மணிகள். அது போல் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள் போதும், இந்த 33, 44, 55 எல்லாம். இந்து மதம் இருக்கும் வரையில் நடைமுறையில் வரப்போவது இல்லை. அப்படியே வந்தாலும் சாதி கொடுமைகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது என்று வரலாறு எழுதுகிறோமே அப்படி எழுதிக்க வேண்டியது தான்.

5) வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.


இது வரையில் மீட்டு வந்தாக எந்த ஒரு உதாரணமும் இல்லை, இது சும்மாச்சுக்கும் சொல்லி இருக்கும் ஒரு வாக்கு. எதற்கு என்றால் எதிர்கட்சிகளை மிரட்ட மட்டுமே பயன் படும் ஒரு சட்டமாக இருக்கும் இது. பொடா சட்டத்தை போல.

6) பயங்கரவாதத்தை தடுக்க பொடா போன்ற கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும்.

இந்து வெறியர்களை மனதில் வைத்துகொண்டு சொல்வது, பாசகவை பொருத்த வரையில் இது வெறும் வார்த்தைகள் மட்டுமே. ஆனால் அவர்களால் மூளை சலவை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு இந்த செய்தி ஒரு உச்சாகத்தை கொடுக்கும்.

7) மூத்த குடிமக்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்த வாக்குறுதிக்கும், ஓய்வூதியத்தின் மீதான வரி நீக்கபடும் மற்றும் 3 இலட்சம் வருட வருமானத்திற்கு வரிவிலக்கு என்ன வித்தியாசம் யாராவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் தயவுசெய்து. தாங்க முடியலப்பா இந்த பாசகவின் நகைச்சுவை.

8) இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்

மேலே சொன்ன எல்லா வாக்குறுதிகளுக்கும் சிகரம் வைதாற் போல் சொன்னது தான், கட்டுரையின் தலைப்பு. எல்லா இந்தியர்களுக்கும் அடையாள அட்டை கொடுப்போம் என்று.

இதற்கு பேசாமல் இட்டுலர் யூதர்களுக்கு கையிலே பட்டையை கட்டிவிட்டு தடுப்பு முகாம்களை துவங்கி அங்கே அடைத்து வைப்பது போல் காட்டிக்கொண்டு இரகசியமாக கொன்று குவித்தார்களே அதை தான் செய்ய போகின்றோம் என்று சொல்ல வேண்டியது தானே.

ஒரே ஒரு வாக்குறுதியாவது, நாட்டை முன்னேற்றும் விதமாக கொடுக்க முடிந்ததா உங்களால். இதிலே அத்துவாணி தான் தலைமை அமைச்சர் என்ற முன்னறிவிப்பு வேறு.

நீங்க வந்துடாலும் நாடு அப்படியே முன்னேறி அமெரிக்காக காப்பாத்திடும் போங்க. போய் செயலலிதாவுக்கு சேவகம் செய்யும் வேலையை பாருங்கள், நாலு காசாவது தேறும்.........

Friday, April 3, 2009

You Don't Mess with the Zohan (குடும்பத்துடனோ அல்லது குழந்தைகளுடனோ பார்க்கும் படம் அல்ல இது)

இந்த படத்தை அனைவரும் பார்த்து இருப்பார்கள் என்று நம்புகின்றேன். வயது வந்தவர்களுக்கு மட்டுமே இந்த படம். அப்படி பார்க்காதவர்களுக்கு இங்கே சில சுவையான தகவல்கள்.

படம் எடுக்கப்பட்ட கதைகளம் இசுரேலியரும் பாலத்தீனத்து சச்சரவை மையாக கொண்ட அரசியல் சூழலில் வளர்ந்து வரும் இளைய சமூகத்தின் பாதிப்புகளை எடுத்து வைக்கும் மிகவும் தீவிரமான படம்.


இந்த தீவிர கருத்தை அழகாக அருமையாக நகைப்பாக சொன்னால் எப்படி இருக்கும் என்று யோசித்து யோசித்து அழகாக திரைக்கதை அமைத்து வசனங்களும் காட்சிகளும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


நகைப்பு படத்தை மேலும் நகைப்பாக்கும் பொருட்டு ஆடம் சாண்டுலரை கதையின் நாயகனாக கொண்டுள்ளார்கள்.

படத்தின் கதை இது தான், இசுரேலின் பயங்கரவாத அழிப்பு அதிரடிப்படையின் அதிரடி வீரன் சொசோவான். நமது விசயகாந்தை போலவே வெடிகுண்டுகளை கையாலே பிடித்து எறிந்தவன் மேலே வீசுவது உட்பட நிலாவை ஒத்தை காலில் உதைத்து பூமியை காப்பாற்றும் நாகனைப்போல் சித்தரித்து இருப்பார்கள்.


அதே நாட்டின் பாலத்தீனத்தின் பகுதியில் ஒரு தீவிரவாதி அவனும் சொசோவானை போல மிகவும் பலம் பொருந்திய மனிதன். அவனை அழிக்கும் தருணத்தில் சொசோவானும் அந்த தீவிரவாதியும் இறப்பதாக இசுரேலின் படையணை கதைக்கும். அதை பயன்படுத்தி சொசோவான் அமெரிக்காவிற்கு தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள செல்கிறான்.


சொசோவானின் வாழ்க்கை இலட்சியம் பெண்களின் தலைமுடி திருத்தகத்தில் மின்சார கனவு படத்தில் பிரபு தேவாவை போல ஒரு பெரிய திருத்துவானாகவேண்டும் என்று.


அமெரிக்காவின் மிகப்பெரிய முடி திருத்தகத்தில் சென்று வேலை கேட்கிறான், அதை இதை சொல்லி வேலை தராமல் தவிர்த்துவிடவே, ஒரு பாலத்தீன பெண் நடத்தும் திருத்தகத்தில் குப்பை பெருக்குபவனாக வேலையாற்றுகிறான்.

பின்னொரு நாளில் இவனுக்கு கிடைக்கும் வாய்பினை வைத்து அந்த கடையின் போக்கையே மாற்றி ஈ கூட நுழைய இடம் இல்லா கடையாக அந்த திருத்தகத்தை மாற்றி அமைகின்றான்.


கதையின் போக்கில் கடையின் முதளாலி பெண்ணிடம் மையல் கொள்ள அவளும் இவன் யார் என்று மறுக்க முடிவு என்ன என்று மிகவும் சுவாரசியமாக முடித்து இருப்பார் இயக்குனர்.

படத்தின் முக்கிய அம்சங்கள்.


1) நாயகனும் நாயகியும் பேசும் இசுரேலிய மற்றும் பாலத்தீனத்து ஆங்கிலம், அச்சு அசலாக இசுரேலியின் ஆங்கிலமும் பாலத்தீன ஆங்கிலமும் அப்படியே வந்து அந்த நாட்டவரை கண்முன்னே கொண்டு வருகிறது.

2) வெள்ளாட்டை இழந்த பாலத்தீனன் அமெரிக்காவில் வெடிகுண்டு தயாரித்து சொசோவானை அழிக்க முனையும் காரியங்களில் சிரித்து மாளவில்லை. குறிப்பாக மருந்து கடையில் வெடிகுண்டு பொருட்களை வாங்கும் போதும், பாலத்தீனத்து தீவிரவாத முகாமுக்கு தொலைபேசியில் அழைக்கும் போதும்.

3) நாயகி காதலை மறுக்கும் போது கூறும் காரணங்கள், உலக மக்கள் அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டிய செய்திகள்.

4) இசுரேலுகாரர்கள் வாய்ப்பாளிகள்(opportunist) என்று அழகாக காட்டி இருப்பது.

5) பாலத்தீனர்களும் வேண்டா வெறுப்பாகத்தான் சண்டைக்கு நிற்கிறார்கள் என்றும் காட்டி இருப்பது உச்சம்.

6) முக்கியமாக கூமூசை எதுக்கெல்லாம் இசுரேலான் பயன் கொள்வான் என்று நகைப்பாக காட்டுவதும் உச்சம்.

7) பணக்காரனின் பலனுக்காக இசுரேலுகாரர்கள் போல் வேடம் தரித்து பாலத்தீனத்து மக்களின் கடைகளை உடைப்பதும், பாலத்தீனத்து வேடமனிந்து இசுரேளாலின் கடைகளை உடைப்பதாக காட்டி இருப்பது படத்தின் மொத்த செய்தியையும் ஒரு காட்சியில் காட்டிவிட்ட பெருமை அந்த இயக்குனருக்கு.

8) கடைசியில் இசுரேலியனும் பாலத்தீனனும் இணைந்து அந்த பணக்கார தீயனை அழிப்பது படத்தின் மகுடம்.

இப்படி எண்ணிகை இல்லா செய்திகளை அழகாக நகைப்பு கலந்து அருமையாக கொடுத்துள்ளார். படம் பார்த்தை உடன் ஒரு இசுரேலியரை கேட்டேன் படம் எப்படி என்று அவர் சொன்னார் அது ஒரு முட்டாள் தனமான படம் என்று.

ஏன் இருக்காது, இவன் செய்யும் கோமாளிதனங்களை சொன்னால், சொல்பவனை முட்டாள் என்று தானே சொல்வான்.........


மறுபடியும் சொல்கிறேன் குடும்பத்துடனோ அல்லது குழந்தைகளுடனோ பார்க்கும் படம் அல்ல இது. இருந்தாலும் நல்ல கருத்துள்ள படம்.

Wednesday, April 1, 2009

நான் கடவுள் - திரைவிமர்சனம் பாலா என்னை மன்னிப்பாராக

அனேகமானோர் இந்த படத்தை பார்த்துமுடித்து இருப்பார்கள் என்று நம்புகின்றேன். அதனால் எனது விரிவான விமர்சனம் யாருடைய சுவாரிசியத்தையும் கெடுத்துவிடாது என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

படத்தை பார்க்கும் முன்பே எக்கச்சக்கமான விமர்சனங்களை படித்துவிட்டமையால், படம் பார்க்கும் போது அந்தந்த பகுதிகளில் அவர்களது பார்வை நமக்கும் வருவது தவிர்க்க முடியவில்லை தான். இருந்தாலும் படம் துவங்கிய சிறிது நேரத்திற்கு எல்லாம் நாம் நமது பார்வையில் மூழ்கிப்போகிறோம், இதுவே உண்மை.

பாலாவின் பலமே இது தான், தனது பொருத்தி காட்சிகளை (Establishment shot) அமைக்கும் போதே அதனுள் அழுத்தங்களை பொருத்தி அந்த காட்சிக்குள் நம்மை அப்படியே அழுத்திவிடுவது அவரது உத்திகளில் ஒன்று.

சிறிது நேரத்திற்கு எல்லாம் அந்த பிணம் எரியும் வாடை உண்ர்வது போல் இருக்கிறது படம் பார்க்கும் போது. போதா குறைக்கு இளையராசா வேறு, கொஞ்சம் நஞ்சம் இருக்கும் நினைவுகளையும் தனது இசையால் அடித்து தும்சம் செய்து ஆளையே காலி செய்துவிடுகிறார்கள்.

கேராம்(Hey Ram) என்று கமலகாசனின் படம் அதிலே இசையில் தொடங்குதமா மோக நாடகமே என்ற ஒரு மயக்க பாடலை அமைத்திருப்பார் இளையராசா. அந்த பாடல் சாதாரணமாக தெரிந்தாலும் பாடலை கேட்ட பிறகு அந்த தாளம் மனதிலேயே அதிக நேரம் சுற்றி சுற்றி வரும்.

அதை போல இந்த படத்தில் ஒரு பாடல், நாயகனை முதலில் காட்டும் போது வரும் பாடலின் துவக்கம். நினைவைவிட்டு அகல நாட்கள் பிடித்தது.

இளையராசாவும், பாலாவும், ஆர்தர் வில்சனும் சேர்ந்து பார்ப்பவரது மண்டைகுள் சென்று ஒரு குடை குடைத்து எடுத்து இருப்பார்கள்.

செட்டப்ப மாத்தி, கெட்டப்ப மாத்தி அப்பன் வைச்ச பேரை மாற்றி பாடலுக்கு படக்காட்சி எப்படி எல்லாம் அரங்கத்துகுள் மேலும் கீழும் என சாத்தியமே இல்லாத கோணங்களில் எல்லாம் பறந்து பறந்து காண்பித்ததோ அப்படி வெளிபுற படபிடிப்பிலும் ஆர்தர் வில்சன் அசத்த தவறவில்லை. அதில் தலையை சுற்ற வைக்கும் உடுக்கையும் இன்னமும் பல நாதங்கள்.

பின் சம்பந்தமே இல்லாமல் பிச்சைகாரர்களின் வாழ்க்கைக்குள் செல்கிறது கதை.

அவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் பசியை தவிர மற்ற எல்லா உணர்வுகளும் உண்டு என்று புதிதாக சொல்வதாக பாலாவும் சரி செயமோகனும் வரிந்துகட்டிக்கொண்டு காணிளிகளை கொடுத்து வருகிறார்கள்.

1992 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் ஒரு படம் வந்தது படம் City of Joy. இந்த படம் இந்தியாவின் கல்கத்தாவில் ஒரு சேரியில் படமாக்கபட்டு இருக்கும். அதுவும் எப்படி பட்ட சேரி தெரியுமா, தொழு நோயாளிகளை கொண்ட சேரி அது. அவர்கள் மட்டுமே வாழும் சேரி அது. அந்த மக்கள் அனேக மக்களின் அருவருப்புக்குட்பட்டவர்களாக படத்தில் காட்டுவார்கள்.

Ben-Hur படத்திற்கு பிறகு ஆலிஉட்டு அதிகம் தொழு நோயாளிகளை படத்தில் கொண்டு இருப்பது இந்த படத்தில் தான் என்று நினைக்கிறேன்.

படத்தின் நாயகன் ஒரு அமெரிக்கன், அவன் சேவை புரியும் மனதுடன் இந்தியா வருவான். அங்கு வரும் வேற்று நாட்டார்களை எப்படி எல்லாம் குடிக்க வைத்து விபச்சாரிகள் கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள் என்று துவங்கி தொழு நோயாளிகளிடம் கூட வாங்கி திண்று தான் ஒரு பொறுக்கி கும்பல் வாழ்வை நகர்த்தி வருகிறது என்று தெள்ளத்தெளிவாக காண்பித்து இருப்பார்கள்.

பிச்சை போடும் மனிதர்கள் கூட இரண்டு அடி தூரே நின்று காசைவிட்டெரியும் நிலையில் இருக்கும் அந்த தொழு நோயாளிகளின் சேரியில் ஆணும் பெண்ணும்மாக காதல் கொள்வதும் பிறகு பிரசவத்தில் அந்த பெண் தவிப்பதும். அந்த பிரசவத்திற்கு அம்ரிசு பூரியும், அவரது மனைவியாக சாப்னா ஆசுமீயும், இங்கிலாந்து பெண் மருத்துவரும் அமெரிக்க மருத்துவரும் என்று தொட்டு சேவை செய்வதாக மிகவும் மன தாக்கத்தை உண்டாக்கும் விதத்தில் படமாக்கி இருப்பார்கள்.

அந்த காட்சிகளின் தாக்கம் இந்த படத்தில் அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது. சரி போனால் போகட்டும் என்று பார்த்தால், இவர்கள் இருவரும் பாலாவும், செயமோகனும் கொடுக்கும் நேர்காணலில் இவர்கள் அடிக்கும் தம்பட்டங்களை பார்த்தால் இதை எழுதாமல் தவிர்கமுடியவில்லை. பாலாவும், அவரது இரசிகர்களும் என்னை மன்னிப்பாராக.

தவிர, அந்த அகோரியின் வாழ்க்கை கதையை பார்த்தால் பிபிசி நிறுவனம் தயாரித்த விவரணப்படம்

http://www.youtube.com/watch?v=W0bGrvKVxac

http://www.youtube.com/watch?v=fAIv7R8yk5c&feature=related

http://www.youtube.com/watch?v=u_rJu_20Aps&feature=related

http://www.youtube.com/watch?v=n8lDTLlmvwk&feature=related

http://www.youtube.com/watch?v=fc-TsGzhsN8&feature=related

http://www.youtube.com/watch?v=soKFraGA-oU&feature=related

இந்த படத்தை பார்க்கவும், இந்த படத்தில் வரும் சம்பவங்களுக்கும் நான் கடவுளில் வரும் சம்பவங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம். இங்கே அந்த அகோரி, தனது இல்லத்து மக்களையும் ஏற்றுக்கொண்ட சித்தனாக இருக்கிறான். அங்கே அனாதையாக்க பட்ட கோபத்தில் பெற்றோரை எற்க மறுக்கும் சித்தனாக நாயகன் இருக்கிறான். மற்றபடி இந்த விவரணத்திலும் இடையில் வந்து செல்லும் பிச்சைகார கூட்டத்தனையும் நீங்கள் பார்ப்பீர்கள்.

இந்த விவரணம் மிகவும் தெளிவாக அகோரியின் வாழ்க்கையை காட்டி இருக்கிறது பாலாவைவிட. பாலாவும் இப்படி ஒரு முயற்சிக்கு தான் பாடுபட்டிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால், எப்படி தீபா மேத்தாவை அலையவிட்டார்களோ அதே போல் பாலாவைவும் அலையவிட்டிருக்கவேண்டும் இந்த இந்துமதவாதம்.

எவ்வளவோ முயன்றும் கடைசியில் இலங்கையில் சென்று தண்ணீர் (water) படத்தை பிடித்தாரோ அதே போல் அகோரியின் கதையை வெட்டவில்லை என்றால் படமே வெளியே வராது என்று மிரட்டி, அந்த பிச்சைகாரர்களது வாழ்க்கையை பிரதான கதையாக பாலா கையாண்டுள்ளது போல் தெரிகின்றது.

படத்தின் ஒரே ஆருதல் படத்தின் இசை மட்டுமே மிஞ்சு நிற்கிறது. அதுவும் பாடல்கள் எல்லாம் பழைய பாடல்கள் என்ற ஒரு விமர்சனங்களோடு. என்னை பொருத்தவரை, காட்சிக்கு தகுந்தார்போல் மனதை கவரும் பழைய பாடல்களை கையாண்டு இருப்பது பாலாவின் மற்றும் இளையராசாவும் எப்படி கதையில் மூழ்கி போய்யுள்ளார்கள் என்று காட்டுகிறது. அதுவும் அந்த தொடர்வண்டியில் (Train) அவள் பாடும் பாடல் அருமையிலும் அருமை.

மொத்தத்தில் நான் கடவுள் ஒரு தடம்மாற்றபட்ட ஒரு விவரணம்.