Saturday, May 30, 2009

மரணத்தில் கூடவா பாகுபாடுகள், இந்து நாட்டின் நீதி இது தான் போலும்

பழிக்கு பழி, விழிக்கு விழி எனற பழி வாங்கும் கொள்கைகள் எல்லாம் முடிவில்லா துன்பத்தின் துவக்கம் என்றும். அப்படி பழி வாங்கும் எண்ணம் எல்லாம் விலங்கின் குணம் என்றும் உலகுக்கும் மனித குலத்திற்கும் அமெரிக்கா முதல் அனைத்து முன்னேறிய நாடுகளுக்கு விமானம் ஏறி சென்று விளக்கம் கொடுத்த நாடு தான் இந்த இந்தியா என்ற இந்து நாடு.

இன்றைக்கும் காவி உடைகளையும் கட்டுரை கட்டுகளையும் அள்ளிக்கொண்டும் விமான நிலையம் முதல் பல்கலைகழங்களில் இந்திய கண்மணிகள் விளக்கங்கள் கொடுக்கும் அழகையும் பண்பையும் பார்க்கும் போது, இந்தியாவின் பால் உலகமக்களுக்கு பிறக்கும் கரிசனத்தை அளவிட்டு சொலமுடியாதது தான்.

காந்திய சிந்தனைகள், விவேகாணதரின் சிந்தனைகள், அரவிந்தரின் சிந்தனைகள், கீதையின் சிந்தனை, கண்ணனின் சிந்தனைகள், இராமனின் சிந்தனைகள் என்று பலரின் சிந்தனை வழிகளை வளர்ப்பதற்காக பல ஊர்களில் பல மொழிகளில் இயக்கங்கள் இருப்பதை பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.

இந்த இயக்கங்களின் அறிமுகக்கூட்டங்களில் கலந்துகொண்டோர்களுக்கு நன்றாக தெரியும், இந்த இயக்கங்கள் எப்படி எப்படி எல்லாம் தலைப்பின் சொன்ன சகோதரத்துவம் பாராட்டப்படவேண்டும் என்று வழிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி சொல்கிறார்கள் என்று.

கோப வார்த்தைகளில் சொல்வது என்றால் நெய்யொழுக தேனொழுக சொன்னார்கள் என்றும் சொல்லலாம். இந்த பொருப்புமிக்க வாக்கியங்களை பரப்பிய நாடுதான் இன்றைக்கு இரு தனிமனிதனின் இழப்பிற்காக ஒரு இலட்ச்சம் மக்களை கொன்றதோடு நில்லாமல் அதன் கூட்டுக்களவானியான இலங்கையை சீனத் துணை கொண்டு உலக நாடுகளிட இருந்து காப்பாற்றியதோடு மட்டும் நில்லாது. இன்னமும் எத்தணை கொலைகளை செய்தாலும் உங்களை ஒன்றும் ஆகாமல் காப்பதுமட்டும் இல்லை, இன்னமும் எத்தணை பொறுக்கிதனங்கள் முடியுமோ அதை அனைத்தையும் செய்யுங்கள் என்று தைரியம் கொடுத்து நிற்கிறது.

பொதுவாக சொல்வதுபோல் ஊருக்கு தான் உபதேசம் எல்லாம், தனக்கு என்று வரும் போது தனது வயிற்றுக்கும் வாயிக்கும் தான் முக்கியத்துவம் மற்றவைகள் எல்லாம் தூசி தான் என்று இந்து மதம் கூறும் கடை மனிதாகத்தான் இந்த இந்து நாடு நடந்து காட்டி இருக்கிறது.

இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அந்த அமைப்புகள் எல்லாம் மற்ற நாடுகளுக்கு அறிவுரைகளை வழங்க போகின்றது. அப்படி அவர்கள் சொல்லும் அத்தணை வார்த்தைகளுக்கு வார்த்தை உலக தமிழர்கள் அந்த கூட்டங்களில் கேள்விகளை கேட்க்கப்போகிறார்கள் என்ன பதில்களை வைத்துக்கொண்டு இருக்கப்போகிறார்கள் இந்த இந்து நாட்டார்கள்............

எல்லா கேள்விகளுக்கும் அந்த கட்சிதான் செய்தது இந்தியா இல்லை என்று சொன்னால், நீங்கள் எல்லாம் கூட அதே நாட்டில் தானே இருந்தீர்கள் ஏன் அவர்களது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை என்ற கேள்விக்கு இந்த இந்து மதத்தார்கள் என்ன பதிலை கூற போகிறார்கள்..............

இன்றைக்கு பதிவுலகிலும் சரி, தமிழக இதழ்களும் சரி, அவர்கள் சொல்லும் முதல் வாசகம் ஈழத்து பிரச்சனைகள் இந்திய தேர்தலில் பிரதிபலிக்கவில்லை என்ற வாசகம்.

அப்படி எழுதும் போது உங்களுக்கு கூசவில்லை, மனது வலிக்கவில்லை. யாரை ஏமாற்றுவதான எண்ணம் உங்களுக்கு. நாளைக்கு உங்களது பிள்ளைகளையும் பெண்களையும் இந்த மாதிரியான நிலைக்கு ஆளாக்கினால் இதே போல் தான் எழுதுவீர்களோ....

இரண்டே இரண்டு மாதம் தான் நேரம் இருந்தது, அந்த கால கட்டத்திலேயே 40ல் 12 இடங்கள் மட்டும் காலி இல்லை. கலைஞரின் மேல் இருந்த ஒரு அனுதாபம் மக்களின் மனதில் இருந்து காலியானதையும் பார்க்கவும் அவர்களே வேதனையாகவும் கூறுவதை கேட்கவும் முடிகின்றது.

நேற்றையவரை தமிழர்கள் என்றால் பிடிக்காது, அதுவும் ஏழைகள் என்றால் அறவே ஆகாது என்று இறுமாப்புடன் இருந்த செயலலிதா திடீர் என்று ஈழம் என்றும் நாட்டின் தலைமை அமைச்சர் சொல்லவல்ல இராணுவத்தை அனுப்புவேன் என்ற வாசகங்களை மக்கள் நம்பவும் இல்லை. அவரது நேய் ஒழுகும் பேச்சின் பால் ஒரு ஈர்ப்பும் பிறக்கவில்லை என்றது தான் உண்மை.

இவ்வளவு இருந்தும், தங்களது கோபத்தை காட்டும் விதமாக அந்த கூட்டணிக்கு 12 இடங்களை வழங்கியுள்ளதையும், 78% ஓட்டுகளை குவித்து ப.சிதம்பரத்தை படாத பாடு படுத்தியதையும் பார்த்த பிறகும் இப்படி எழுத உங்களுக்கு அலாதியான தைரியம் வேண்டும் தான்.

ஈழத்து கொள்கை மாற்றத்திற்காக மட்டுமே கூடி புலிகளின் தீவிர ஆதரவாளர்களான சீனாம் போன்றோர்கள் ஆதரித்து போசியதையும் கவனத்தில் கொண்டு பார்க்கவில்லையா நீங்கள். நீங்கள் எல்லாம் தமிழர்களாக கூட ஈழத்திற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம் குறைந்தது மனிதனாகவாது அவர்கள் சாவின் விளிம்பில் அவர்களை எதிர்காமல் இருந்திருக்கலாம்.

அதை விடுத்து இப்படி உங்களின் முகத்தில் இப்படி வண்டி வண்டியாக இப்படி கரியை அள்ளிகொட்டி கரித்துண்டமாகவே ஆகியும் இப்படி எழுத உங்களுக்கு எல்லாம் எப்படி இன்னமும் கைகள் வருகின்றது. அந்த இரகசியங்களை எங்களுக்கும் சொல்லி கொடுங்கள். அந்த மாபாதகத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ள அல்ல, அந்த பக்கம் ஏதும் தவறியும் வந்துவிடாமல் இருக்க கேட்கின்றோம் இந்து நாடே, இந்து மக்களே தெரியபடுத்துங்கள்.

Wednesday, May 27, 2009

செயல்படாத ஐ நா மன்றம் எதற்கு, தமிழர்கள் எதற்கு தங்கள் பணத்தை அதற்கு அள்ளி கொட்டுக்கனும்.

ஈழத்தை பொருத்த வரையில் 30 ஆண்டு காலமாக மௌனியாக இருந்த ஐ நா மன்றம். 100,000 மக்களை கொன்று குவித்து, மிச்சம் மீதி இருப்பவர்களை தடுப்பு காவலில் வைத்து கொல்லுவதற்கு காரணமும் நேரமும் பார்த்துகொண்டு இருக்கிறது சிங்களம்.

போராட்டத்தில் எவ்வளவு கேட்டும் போரை நிறுத்தவும் தடுக்கவும் வராத ஐ நா மன்றம். புலிகளை பலியெடுத்த பிறகு அந்த தடுப்பு முகாம்களை பார்வையிடவும், அடித்து நொறுக்கப்பட்ட வீடுகளையும் வாழ்விடங்களையும் பார்வையிட்டு வந்த ஐ நா நாயகம், சிரித்த முகத்துடன் அழிந்து கொண்டு இருக்கும் மக்களுக்கு மத்தியில் இருந்து படத்திற்கு தன் முகத்தை காட்டுகிறாரே என்ன தைரியம் இருக்கவேண்டும் அந்த மனிதனுக்கு.

அந்த நிலையில் இருக்கும் நமது உறவுகளை படங்களில் பார்க்கவே நெஞ்சு பதறுகிறது. அந்த கொடுமையின் மத்தியில் உட்கார்ந்து கொண்டு சிரித்துக்கொண்டு படத்திற்கு முகத்தை காட்ட அசாத்திய தைரியம் வேண்டும் மனதில். இந்த நிலைமையிலும் சிரிக்க கூட முடிகின்ற மனிதன், கனரக ஆயுத பயன் பாட்டிற்கான அடையாளங்களை காணொம் என்று சொல்வதில் வியப்பு ஒன்றும் இல்லை.

இங்கே நம் முன்னே எழுகின்ற கேள்வி ஒன்று தான், ஏன் இரண்டு என்று கூட வைத்துக்கொள்ளலாம். 1) கனரக ஆயுதங்களால் இவைகள் அழிக்கப்படவில்லை என்றால் எந்த வகை ஆயுதங்களால் இந்த அழிவுகள் மேற்கொள்ளப்பட்டது என்று ஐ நா நாயகம் விளக்க வேண்டும். 2) இவர் மட்டும் தான் வந்ததாக செய்திகள் வெளியாகின, அப்படி இருக்கயில், ஐ நா நாயகம் என்ன போரியல் வல்லுனராக இதற்கு முன் பணியாற்றினாரா. அவருக்கு இருக்கும் எந்த தகுதியின் அடிப்படையில் இப்படி ஒரு வாசகத்தை வெளியிட்டார்?

சிங்களத்தின் விருந்துக்கு செல்லும் முன் அனைவரும் வீர வசனம் பேசுவதை செய்தியாக பார்கின்றோம். அப்படி என்ன தான் விருந்து வைத்தார்களோ சிங்களம். ஐ நா உட்பட அனிவரும் சிங்களத்தின் கால்களை .................. மாற்றம் பெற்றுவிட்டதே என்ன கொடுமை.................

Saturday, May 23, 2009

இயூதர்களுக்காக அழுத அழுகின்ற உலகம் மற்றவர்களுக்கா மறுப்பதேன்

இசுரேல் நாடு அமைந்த பிறகும் அல்லது இயூதர்கள் மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த பிறகு அவர்கள் செய்த முதல் காரியம் இது தான். தாங்கள் எல்லாம் எப்படி எல்லாம் கொடுமைபடுத்தப்பட்டோம் என்று அனேகமாக எல்லா இயூதர்களையும் கொண்டு எண்ணிகை இல்லா கதைகளும் வந்துவிட்டது. அப்படி அதிக ஆழமாகவும் அழகாகவும் அமைந்த கதைகளை படமாகவும் எடுத்து வெளியிட்டும் வருகிறார்கள் இந்த ஆண்டுகள் வரை.

இப்படிபட்ட எல்லா கதைகளுக்கும் இருக்கும் ஒரு சேர்ந்த அமைப்பு, இயூதர்கள் எல்லோரும் அவர்கள் இருந்த நாட்டில் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருந்தது மட்டும் அல்லாது. நாட்டு பற்றும் இனப்பற்றும் கொண்டவர்களாக இருந்தார்கள்.

இப்படி இருந்த இயூதர்கள், அவர்கள் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக படுகொலையும் சித்திரவதையும் செய்யப்பட்டார்கள் என்ற சேதிதான். இந்த செய்கையை இந்த நாள் வரையிலும் கூட இவர்கள் நிறுத்தவில்லை. இந்த முறை ஆசுகர் விருது பெற்ற தி ரீடர் படமும் இந்த இரகம் தான்.

இந்த மாதிரியான படங்களை அவர்கள் வெளியிடவும், எழுதவும் காரணம். அவர்கள் அந்த ஆபத்துகளில் இருந்து தப்பித்துவிட்டாலும், இன்னமும் அந்த தாக்குதலின் பாதிப்புகள் அவர்களை எப்படி வாட்டி எடுக்கிறது என்றதும், எந்த அளவிற்கு அந்த தாக்குதல்கள் இருந்தன என்று அவர்கள் நமக்கு சொல்லும் செய்தி.

சின்டுலர்சு லிச்சுடு படத்தில் ஒரு மிக பெரிய கூட்டத்தையே சின்டுலர் பணம் கொடுத்து காப்பாற்றுவார், படத்தின் கடைசியில் சொல்வார் இன்னமும் அதிகமாக பணமும் நேரமும் இருந்திருந்தால் இன்னமும் அதிகம் மக்களை காப்பாற்றி இருக்கலாமே என்று சின்டுலர்ரு கடைசிக்காட்சியில் புலம்புவதை பார்க்கும் போது பார்க்கும் மக்களின் மனதை கலங்க செய்யும் காட்சி அது.

அது போல தி சன்சைன் என்ற படத்தில் செர்மனி தான் தனது நாடு, அதைவிட்டு நான் ஏன் வெளியேற வேண்டும் என்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் வீராப்பு பிடிக்க கடையில் நொந்துவெளியேறி கதை சொல்வதாக அமையும் அந்த கதை. இந்த கதையில் நாயகன் இராணுவத்தினால் படும் பாட்டை பார்த்தால் நமக்கு வரும் எரிச்சல்லில் அவர்களை கொன்றால் என்ன என்றே வரும் அளவிற்கு அழகாக எடுத்து இருப்பார்கள்.

இது போல் ஆயிரம் கதைகளும் நூற்றுக்கணக்கில் படங்களும் அவர்கள் எடுத்துவிட்டதின் பாதிப்பில். இன்றைக்கும் செர்மனி என்றதும், இயூதர்கள் என்றதும் நம்மையும் அறியாமல் மனதில் ஒரு வலிவருவதை உணரமுடியும்.

உலகமக்கள் அனைவரது மனமும் இப்படி தான் இளகியக மனமாக மாற்றம் பெற்று தான் நிற்கிறது. இந்த வகையான கதையாக இருந்தால் பொருமையாக பார்ப்பதும் அந்த படத்தை பார்த்தேன் என்று சொல்வதும் கூட அவர்களுக்கு பெருமையாக இருக்கும் போலும். அப்படி இல்லை என்றால் ஆண்டுக்கு ஒரு படமாவது ஆசுகருக்கு வருவது இயலுமா என்ன.

இப்படி இளகியமனங்கள் ஈழத்தமிழருக்காக உருகாமல் போனது ஏனோ என்று தான் விளங்கவே இல்லை. பிரித்தானியா பாராளுமன்றம் கொண்டுவந்த தீர்மாணங்கள் இலங்கையின் மீது தினிப்பத்தற்குள் இந்த கரளோபகரங்கள் நிகழ்ந்துள்ளது. பத்மனாபா மட்டும் ஊடகங்களுக்கு தெரியபடுத்தவில்லை எனில் இப்படி ஒரு அழிவு நடந்தது என்றும் கூட வெளியில் தெரியாமல் போயிருக்கும் போல.

உலகில் நடக்கும் விடுதலை போராட்டங்களில் மடியும் அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் அனைத்து மக்களும் ஈழத்து மக்களை காக்க ஏன் வரவில்லை.

இதில் இன்னமும் வேடிக்கை என்ன என்றால், நமது வரிப்பணத்தில், தனக்கு என்று ஒரு தனி இராணுவ பிரிவு வரை கொண்டுள்ள ஐ நா வாய் கை மூடி மௌனியாக இருந்தது தான். இன்றைக்கு போர் முடிந்தது என்று சிங்களம் அறிவித்ததும் வரும் ஐ நா நாயகம் ஏன் இதற்கு முன் அப்பாவி மக்களை காக்கும் முயற்சியில் கவனம் செலுத்தவில்லை என்ற கேள்வி இன்னமும் விடையில்லா கேள்விகளாகவே விளங்குகிறது............

ஒரு வேளை இயூதர் கொடுமைகளில் உலகம் இரசித்தது அவர்கள் சொல்லும் கதையையும் அந்த கதைகளில் வரும் அந்த கொடூரமான சித்திரவதைகளும் தானோ, மற்றபடி இந்த உலக்குக்கு எல்லாம் மனிதம் மனித நேயம் என்ற எல்லாம் ஒன்றும் இல்லை போலும்.

அது தான் இலட்ச கணக்கில் அப்பாவி மக்கள் மடியும் போது, அந்த காட்சிகளை இரத்தம் படிந்த காட்சிகளை திரும்ப திரும்ப போட்டு பார்த்து சிங்களம் போல இரசிகிறது போலும்.

இந்த வேடிக்கை உலகுக்கு பயந்து தான் நாம் அனைவரும் உலகம் என்ன சொல்லும் என்று பயந்து, உலகுக்கு மாறாக நடக்கவேண்டாம் என்று வாழ்ந்து வந்தோமோ...................என்ன கொடுமை இது.........

Thursday, May 21, 2009

மன நோயாளியாக மாறிய இலங்கை, தமிழ் பிள்ளைகளை அழிக்கும் பணியை துவங்கியுள்ளது.

இது வரையில் கொன்று குவித்தது போதாது என்று, தற்பொழுது மிச்சம் மீதி இருக்கும் ஆண் பிள்ளைகளை அழிக்கும் பணியில் இறங்கியுள்ளது இலங்கை இராணுவம்.


http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml

மனித இதயம் படைத்தவர்களே இந்த அழிவுக்கு ஒரு முடிவுகட்டுங்கள்.

Wednesday, May 20, 2009

இந்த நூற்றாண்டின் ஈடு இணை இல்லா பெரும் தமிழ் தலைவன் இவர் தான்


இது வரையில் செய்தது எல்லாம் இவரை விரட்டுகிறது போலும், இலங்கையைல் மற்ற புலிகளுக்கு நிகழ்ந்த நிலையை கண்டும் கேட்டும் வந்த இந்த சூரப்புலி அடுத்தது தாம் தான் என்று தெரியவந்ததும் இந்தியாவிடம் தஞ்சம் புகவேண்டி உண்மையை சொல்கிறேன் புனிதமாகிறேன் என்று தினமலருக்கும் இந்து இதழுக்கும் சொன்னார் போலும்.

தமிழர்களும், துரோகிகழும் ஒன்றாகவே இருப்பார்கள் போலும்.

அன்றைய கட்டபொம்முவை கொல்ல ஒரு எட்டப்பன் இருந்தான், இன்று ஒட்டுமொத்த தமிழர்களையும் காட்டிக்கொடுத்துவிட்டு தன்னை அப்பாவியாகவும் நல்லவனாகவும் காட்டிக்கொள்ள நினைக்கும் கருணாவை அப்படியே இந்தியாவில் வந்து பசகவில் சேர்ந்துக்கொள்ள சொல்லுங்கள். அடுத்து அவர்கள் நடத்த இருக்கும் இன சுத்திகரிப்புக்கு எப்படி எல்லாம் மக்களை கொல்லலாம்.

என்ன மாதிரி குண்டுகளை எந்த எந்த இடங்களிலும் காலத்திலும் பயன்படுத்தலாம். அனைத்துலக சமூகத்தை எப்படி ஏமாற்றலாம் என்று கற்றுத்தருவார்.

இதற்கு எல்லாம் சிகரமாக கொலைகளை நிகழ்த்திவிட்டு அடுத்த நாட்டிற்கு சென்று எப்படி அடைக்கலம் பெறலாம் என்ற பயிற்சியும் கொடுப்பார்...........

இது எல்லாம் ஒரு பிழைப்பா.........

காந்திய வழி என் வழி என்று சொன்னவர்களே எங்கே போனீர்கள் நீங்கள் எல்லாம். புத்த வழி என் வழி என்று கொன்று ஆனந்த கூத்தாடுகிறார்களே அவர்களோடு முகமூடிகளை அணிந்துகொண்டு யாருக்கும் தெரியாம ஆனந்த கூத்தாடுகிறீர்களோ.

புலிகளின் பெயர்களால் கொல்லப்பட்ட இந்த 70,000 உயிகளுக்கு உங்களது பதில் என்ன. அதுவும் பாதுகாப்பு வளையம் என்று நம்பவைத்து கழுத்தருத்தார்களே அந்த ஈன செயலுக்கு உங்களின் பதில் என்ன.

இது வரையில் புலிகளை பலவீன படுத்த உங்களை ஊதுகுழலாக கொண்டு அந்த கொலைகாரர்கள் இனி உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் எப்படி அனுபவித்து கொல்கிறார்கள் என்று பாருங்கள்.
புலிகளின் காலங்களில் நீங்கள் எல்லாம் அவர்களுக்கு எதிரிகளாக இருந்தாலும். மேலே கைவைத்தால் உதைவிழும் என்று அஞ்சி நடுங்கி ஒதுங்கி இருந்தவர்களின் கைகளி இனிமேல் என்ன எல்லாம் செய்யப்போகிறது என்று பாருங்கள்.

புலித்தமிழர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த இருக்கின்ற பூனை தமிழர்களே, நாளை இந்தியாவில் உங்களின் மேல் பசக நடத்தபோகும் இன சுத்திகரிப்பில் உங்களுக்கு என்று ஒதுங்க ஒரு இடம் இல்லாமல் போனதே பாவம். இதை தவிர உங்களுக்கு என்ன சொல்ல.

மரணம் ஒரு முறை தான் அதுவே தவணையில் வந்தால் எப்படி இருக்கும் என்று பார்காதவர்களுக்கு இப்போது வாய்ப்பு வரப்போகிறது. நன்றாக இரசித்து அனுபவியுங்கள். உங்களின் அந்த இக்கட்டான தருனத்தில் தான் இவர்களின் துடிப்பு தெரியும். அந்த வேளையில் நீங்கள் கதறுவது உங்களுக்கே கூட கேட்குமா சந்தேகம் தான்..............காலம் பதில் சொல்லும்................