Saturday, August 28, 2010

வரும் சட்டசபையில் வெல்லப்போவது யார்.............

விசயகாந்து முதல் முன்னனி கட்சிகள் யாவும் வரும் சட்டசபையை பிடிக்க உத்திகளை வகுத்துக்கொண்டு வருகிறது. அதிமுக இந்தனை ஆண்டுகால கும்பகர்ண தூக்கத்திற்கு பிறகு மக்களையும் மக்களது நலங்களையும் காப்பதாகவும். அந்த நலங்களை என்னமோ திமுக மட்டுமே அழித்ததாகவும் அழித்துக்கொண்டு இருப்பதாகவும் கதைகளை கட்டி பாணா காத்தடியை பறக்கவிட்டு பல்டி அடித்துக்காட்டிக்கொண்டு இருக்கிறது.

இராமதாசும் வைகோவும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் தெரிவிக்கவும்.

இந்த தமிழக அரசியல் கட்சிக்கள் எல்லோரும் ஒரு மாம்பெரும் பொய்யை வேண்டும் என்றே சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவைகளில் ஒன்று, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் வழங்குவதும் நாங்கள் தான் என்றது.

இந்தியாவில் அயலக சேவை வேலைகளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் கொண்டுவந்து கொட்டுவதை என்னமோ இவர்கள் தான் உருவாக்கியதாக சொல்வது அப்பட்டமான பொய்.

இப்போது அந்த பொய்யை விசயகாந்து முதல் அதிமுக வரை யாருக்கும் வேலையே இல்லை என்று புலம்புவதும் பார்ப்பதற்கும் கேட்பத்தற்குன் நகைப்பாக இருக்கிறது.

நகர்புரமாக இருந்த இந்த வேலை பெருக்கத்தையும் தாண்டி அயலக நிறுவணங்கள் உழவிலும் கால் பதிக்க தொடங்கியுள்ள இந்த வேளையில் அப்படி ஆகும் நிலைமைகளை தடுப்பதை விட்டு விட்டு அந்த வேலை வாய்ப்புகளையும் வழங்கியது நாங்கள் தான் என்று போட்ட போட்டிக்கொண்டு இவர்கள் விளிப்பதை என்ன என்று சொல்வது......

கொக்கோ கோல நிறுவணங்கள் முதல் பட்டி தொட்டியில் இருக்கும் சின்னஞ்சிறு நிறுவணங்கள் வரை நிலத்தடி நீரை உரிஞ்சி பாலித்தீன் பைகளில் அடைத்து விற்கிறார்கள். காற்றை தவிர மனிதனுக்கு இயற்கையில் கிடைக்கும் அனைத்திற்கும் ஒரு விலையை சொல்லி விற்கு நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டு நாங்கள் தான் சிறந்தவர்கள் என்றும் சொல்லும் இந்த அரசியல் வாதிகளை என்ன என்று சொல்ல.

அயலக வேலைகளுக்காக அருவி போல் கொட்டும் பணத்தை எப்படி நல்ல வழிகளை ஏற்படுத்த பயன் படுத்த வேண்டும் என்றோ, அல்லது பயன் படுத்தாமல் இருப்பதை பற்றியோ மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி எந்த பேச்சும் இல்லை.

எவனோ வருகிறான் என்னமோ செய்கிறான், நமக்கு பணம் வந்தால் சரி தான் என்று இருக்கும் இந்த தூங்கு மூச்சி கட்சிகள் தான் தமிழகத்தை காப்பாற்ற போகிறதா.....

அதிமுகவில் தொடங்கிய கோவில்களில் திண்ணை சோரு திட்டத்தில் இருந்து, (குடி)மக்களுக்கு முட்டையும் தண்ணீரும் இலவசம் என்று நாளுக்கு நாள் இலவசமாக அறிவிப்புகள் வந்துக்கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் கல்வி நிறுவணங்களில் அனைத்தும் தனியாருக்கு சொந்தம், போக்குவரத்தில் இரயில்வே நிறுவணம் தவிர மற்ற அனைத்தும் தனியாருக்கு கொடுத்தாகிவிட்டது.

நாட்டில் வரும் அத்துனை வகையான புதுவகை நுட்பங்களை அனைத்து அரசு நிறுவணமாக துவங்கி எல்லா வகையான சோதனைகளை தாண்டி பணம் கொழிக்கும் போது அதை அப்படியே தனியாருக்கு கொடுக்கும் போக்கு இன்னமும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

அகில இந்திய வானொலி முதல் அலை பேசி வரை அப்படியே தனியாருக்கு விற்றாகி விட்டது. இன்னமும் கொஞ்சம் நஞ்சம் இருந்த மனித வளத்தையும் அயலக பணி நாட்டிற்கு விற்றாகி விட்டது. மொட்டை அடிக்க இனி ஒன்றும் இல்லை இந்த நிலையில் நடக்க இருக்கும் இந்த தேர்தலில் நாங்கள் வந்தால் என்று இவர்கள் சொல்லும் வசனங்களில் எந்த உயிரும் இல்லை இருந்தாலும், நான் அப்படி செய்வேன் இப்படி செய்வேன் என்று இவர்கள் கதை கட்டுவதை பதிவர்கள் கூட கண்டிக்காமல் இருப்பது தான் வியப்பாக இருக்கிறது.............

வாழ்க மக்களாட்சி, வளர்க பாரதம்.....................

Thursday, August 12, 2010

இராவணன் - எப்படி இருந்த மணிரத்தினம் இப்படி ஆனார் பாவம்

இந்த படம் வந்ததும் ஆகா ஓகோ என்ற விமர்சனங்களுக்கு இடையே இந்த படத்தில் இப்படி சொல்லி இருக்கலாம் அப்படி சொல்லி இருக்கலாம் என்ற அறிவுரைகளுக்கு இடையேயும் நல்ல படம் அருமையாக வந்து இருக்கிறது என்ற விமர்சனங்களும் வர மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபடம் இந்த படம்.

மணிரத்தினம் இப்போது எந்த படம் எடுத்தாலும் இந்தி தெலுகு மற்றும் தமிழில் வெளியாகும் விதமாகத்தான் எடுக்கிறார், ஆகவே அனைத்து தரப்பு இரசிகர்களையும் கவரும் விதமாக அந்த அந்த ஊரின் கலாச்சாரங்களையும் கொண்டவிதாமாக படம் அமைய வேண்டி இப்படி அப்படி என்ற சில சமரங்களை செய்துகொள்ளவும் செய்கிறார் என்றாலும் ஒரு அருமையான படைப்பாளியாத்தான் இந்தியா இவரை பார்த்தும் வருகிறது.

அப்படி பட்ட மணிரத்தினம் தான் பிரஞ்சு கதையான "Les Misérables (1998)" படத்தை தமிழில் இராவணன் என்று எடுத்தது மட்டும் இல்லாது இது இராவணனின் கதை இது அது என்று தனது தரப்பில் கதையை கட்டியுள்ளார்.

http://en.wikipedia.org/wiki/Les_Mis%C3%A9rables_(1998_film)

இது 1862கலில் வெளிவந்த Les Misérables நாவலின் கதை, ஆங்கிலத்தில் மட்டும் இந்த படம் குறைந்தது 5 அல்லது 6 முறை படமாக்கப்பட்ட படம். இந்த படத்தின் கருவை ஏற்கனவே ஞானஒளி என்ற படமாக தமிழில் தந்தும் இருக்கிறார்கள்.

மணிரத்தினம் அவர்களுக்கு காலத்தை வென்ற படங்களின் கதைகளை தமிழில் எடுக்கவேண்டும் என்ற தனியாத ஆசை இருக்கவேண்டும். அப்படி இருப்பதனால் தான் இதற்கு முன்னே தளபதி என்று ஒரு படம் எடுத்தார் அது வேறு ஒன்றும் இல்லை எல்லோரும் நன்றாக தெரிந்த ஆலிவர் டுவிசுடு(Oliver Twist) படம் தான்.

http://en.wikipedia.org/wiki/Oliver_Twist

கருப்பு வெள்ளையில் வந்த படத்தின் கதையையும் திரைகதையையும் அப்படியே அப்பட்டமாக தளபதி என்று படமாக எடுத்து இருப்பார். இரண்டு படத்திற்கு ஒரே ஒரு வித்தியாசம் தான், அது இளையராசாவின் அருமையான இசை தளபதியில் இருக்கும் ஆங்கிலத்தில் அந்த கால பாரம்பரிய இசை இருக்கும். மற்றபடி காட்சிக்கு காட்சி அப்படியே இருக்கும் அந்த படம்.

தளபதியில் நாயகனின் அம்மா உயிரோடு இருப்பதாக காட்டி இருப்பார், ஆனால் ஆங்கிலத்தில் அவள் பிரசவத்திலேயே அந்த அம்மா இறந்துவிடுவார். மற்றபடி கதையில் என்ற மாற்றமும் இருக்காது.

இத்த இரகசியம் வெளியே தெரியாமல் இருக்க மகாபாரத கதையை தான் தளபதி என்று எடுத்தோம் என்று துவக்கம் முதல் இதுவரையில் நமது கவனம் சிதராமல் பார்த்தும் கொண்டார் மணிரத்தினம்.

ஏதோ எப்போதோ ஒரு முறை என்று பார்த்தால் இப்போது அப்படியே Les Misérables படத்தை அப்படியே என்று அடிக்காமல் சில மாற்றங்கள் மட்டும் செய்து அதை இராவணின் கதையை தான் படமாக்கினோம் என்று சொல்லிக்கொண்டதோடு மட்டும் நில்லாத மூலக்கதையில் வரும் காவலர் தலைவன் பாத்திரத்தை கார்த்திக்கு கொடுத்து மரத்துக்கு மரம் தாவவைத்து அனுமன் என்று ஏமாற்றும் அளவிற்கு சென்று உள்ளார்.

இனி எப்படி எங்கே கதையை எடுத்து எப்படி மாற்றம் செய்துள்ளார் என்று பார்ப்போம்.

கதையின் நாயகன் ஒரு குற்றவாளி அவனை ஒரு பாதரியார் மன்னித்து அதன் மூலம் இனி பொய்க்கூட சொல்வதில்லை என்று மாற்றம் கொண்டு ஊரின் மேயராக உயருகிறார்.

தமிழில் அதை அவன் ஒரு ஏழை பங்காளன், ஏழைகளை அடித்தால் அவர்களை காக்கும் தெய்வமாக சொல்கிறார்கள், இது அந்த பாத்திரத்தின் ஒரு படி மேல் சென்று சொல்வது. இந்த பண்பிற்கும் இராவணின் பண்பிற்கும் ஒற்றுமைகள் கிடையாது.

நாயகன் இருக்கும் ஊருக்கு அந்த காவல் தலைவன் மாற்றமாகி வருகிறார், இங்கே தமிழிலும் திருநல்வேலிக்கு மாற்றமாகி வருகிறார். வந்து ஆங்கிலத்தில் காவலர் தலைவன் நாயகனிடம் சொல்லும் வசனங்களை அப்படியே காவலர் அணிவகுப்பில் சொல்வதாக தமிழில் வரும் வசனங்கள்.

ஆங்கிலத்தில் இரண்டு பெண் பாத்திரங்கள் ஒன்று தாயாக இன்னும் ஒன்று மகளாக. தமிழில் ஐசுவர்யா மற்றும் பிரியாமணி. அங்கே தாய் மகள் என்றால் இங்கே தங்கை மற்றும் அடுத்தவர் மனைவி என்று.

அங்கே காவலர் தலைவன் தாயின் கடிதத்தை காட்டி காடி நாயகன் செல்லும் திசைகளை தெரிந்து விரட்டுவான் இங்கே தமிழில் ஐசுவர்யாவின் படத்தை காட்டி நாயகன் செல்லும் திசைகளை தெரிந்து கொள்வார் கவலர் தலைவன்.

அங்கே தனது வேலைகளை முடிக்கும் மும்முரத்தத்தில் தாயை வேலையை விட்டு நீக்கு முடிவிற்கு கொஞ்சமும் சிந்திக்காமல் சம்மதிப்பான் நாயகன். இங்கே தமிழில் அந்த இடத்தில் தனது வேலைகளை முடிக்க ஐசுவர்யாவை கடத்துவான் நாயகன். இந்த இரண்டு கதைகளிலுமே அந்த செயலுக்காக நாயன் பின்னர் வருந்துவார்கள்.

அங்கே ஒரு பேராசைகாரனிடம் இருந்து தாயின் மகளை காப்பாற்றுவான் நாயகன். தமிழிலோ அதை தங்கையின் காதலனாக காட்டி அவனை கையை வெட்டி தண்டிப்பதாக காட்டி இருப்பார்கள்.

அவசரத்தில் எடுத்த முடிவுக்குகாக அந்த தாயின் குழந்தையை பொருப்பேற்பான் நாயகன் இங்கே இரண்டாம் தாரத்து மகளுக்கு திருமணம் செய்வதாக மாற்றம் செய்த்து இருப்பார்.

அந்த குழந்தையை காப்பாற்றும் போது ஒரு பெரிய மதில் சுவற்றில் ஏறி தப்பிப்பதாக ஆங்கிலத்தில் காட்டிய இடம் போல் ஒரு இடத்தில் பிரியாமணியின் திருமணம் நடக்கும் இடத்தை காட்டி படமாக்கி இருப்பார்கள்.

ஆங்கிலத்தில் பிரஞ்சு புரட்சி காலத்து கலக பின்னணியில் வரும் கதையில், ஒரு அமரர் ஊர்வலத்தில் தான் அரச படைக்கும் புரட்சி காரார்களுக்கும் நேரடி மோதல் வெடிக்கும். அது போல் தமிழில் வீராவின் தம்பியின் சாவுக்கு பிறகு தான் இவர்களும் நேரடியாக காவலர்களுடன் சண்டைக்கு செல்வார்கள்.

ஆங்கிலத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு உலகில் உல்லாசமான வாழ்க்கையை வாழ நினைக்கும் தனது வளர்ப்பு மகளின் காதலை தனது பாதுகாப்பு கருதி வேண்டாம் என தடுக்கும் நாயகனிடம் மிகவும் கடினமான வார்த்தைகளால் தொலைத்து எடுக்கும் மகளிடம் உண்மையை கூறும் தந்தையை புரிந்து கொண்டு காதல் இல்லை என்றாலும் தந்தைக்காக இனி தந்தையிடம் வாழ வேண்டும் என்று முடிவு எடுப்பாள் அந்த மகள். அதை தான் தமிழில் ஐசுவர்யா கடவுளிடம் பிரியாமணிக்கு நடந்த கொடுமைகளை கேட்டவுடன் அவர்களிடம் எனக்கு இரக்கம் வரமாமல் இருக்க தைரியம் கொடு என்று கேட்க்கும் வசனக்கள்.

வீரா ஐசுவர்யாவிடம் இங்கேயே இருப்பீங்களா என்று ஆபாசமாக கேட்க்கும் வசனங்கள் ஆங்கிலத்தில் தாய் நோய்வாய்பட்டு மறையும் தருணங்களில் நாயகன் கருணையாக பேசும் வசனங்கள் இங்கே சுகாசனி ஆபாசமாக மாற்றிக்கொடுத்துள்ளார். வரிக்கு வரி அந்த வசனங்கள் வருவதை கவனிக்கலாம்.

உச்சகட்ட காட்சியில் காவலர் தலைவன் ஐசுவர்யாவை பார்த்து அவளையும் அவளது நடத்தையை பற்றி சொல்லும் வசனங்கள் ஆங்கிலத்தில் மகளிடம் அவளது தாய் ஒரு விபச்சாரி என்று சொல்லும் வசனங்கள். அவைகளை ஐசுவர்யா வீராவிடம் கேட்க்கும் போது அவன் தரும் பதில்கள் மறனபடுக்கையில் தாயிடம் நாயகன் பேசும் கருணைமிக்க வசனங்கள். நெஞ்சை அள்ளும் விதமாக் அவைகள் ஆங்கிலத்தில் வந்திருப்பது போல் தமிழிலும் வந்து இருக்கும் ஒரே இடம் இது மட்டும் தான்.

பிரியாமணியை காவலர்கல் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதும் அதிலே வரும் வசனங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தாய் தனது வேலை பறிக்கப்பட்ட பிறகு தனது பழைய தொழிலான விபச்சாரத்திற்கு திரும்பிய போது தலைமை காவலனால் விபச்சாரிகள் எல்லாம் மனிதர்களே இல்லை என்று அவளை நடத்தும் நடவடிக்கைகளில் வரும் வசங்கள். அந்த நிகழ்விற்கு பிறகு தாய் இறந்து போவாள் பிரியாமணியும் அதற்கு பிறகு தற்கொலை செய்த்துகொள்வாள்.

ஆங்கிலத்தில் இவ்வளவு கொடுமைகளையும் செய்த்த காவலனை கொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தும் அவனை தப்பிக்க விடுவான் நாயகன், அதை தான் தூத்துகுடி என்று ஒரு காவலனை சிறைபிடித்து அம்மணமாக அனுப்பும் காட்சியாக தமிழில் தந்துள்ளார்கள்.

இவைகள் போக silence of the Lamb என்ற படத்தில் வருவது போல் ஒரு கிணற்றில் ஐசுவரியாவை சிறையில் வைப்பதும், எங்கே அங்கேயும் ஒரு நாய்குட்டியை ஐசுவர்யா கொன்று கதையி திருப்பம் வருமோ என்று நினைக்கையில் நாங்கள் இன்னமும் அந்த அளவிற்கு எல்லாம் கீழே இறங்கவில்லை என்று சொல்கிறார்கள் தமிழில்.

உச்ச கட்டத்தில் குங்கு பூ பான்டாவில் (kung fu ponda) வரும் அந்த பாலம் சண்டை காட்சியினை அப்படியே அசைவுக்கு அசைவு படமாக்கி இருக்கிறார்கள் தமிழில். இந்த காட்சிகள் அனைத்தும் கணினியின் துணையுடன் அரங்கில் உருவாக்கப்பட்ட காட்சிகள். என்ன தான் வண்ணம் பூசினாலும் அந்த கலவைகளின் நடுவில் அந்த பச்சை வண்ணம் நன்றாக தெரிகின்றது.

ஐசுவர்யா அருவிபில் குதிக்கும் காட்சிகள், மற்றும் அருவியில் அருகில் மலைகளில் ஏறிவரும் காட்கள் மற்றும் வீராவின் தம்பி அருவியில் விழும் காட்சிகளும் இது நுட்பத்தில் கணினியில் படத்துடம் பூசப்பட்ட சோடிப்பு காட்சிகள்.

அருவியில் ஐசுவர்யா விழும் காட்சிகளில் அவரது உடைகளோ அல்லது தலைமுடியோ மெல்ல தென்றலில் ஆடும் விதமாக் இருக்கும். அவ்வளவு ஆழத்தில் விழுவோரின் முடி எப்படி காற்றில் ஆடும் என்று கூடவா தமிழ் மக்களுக்கு தெரியாது என்று காதில் காளி பூவை பக்கத்திற்கு ஒன்றாக சுற்றியிள்ளார் மணியும் அவரது புகைபட நிபுணர்களும்.

உமா துருமேனின் சோகங்களை காட்டவும் அவரது ஆடை அமைப்பை அப்படியே காட்டவேண்டும் என்ற நோக்கில் ஐசுவர்யாவிற்கு தலைவிரி கோலமாக படம் முழுவதும், அகண்ட மார்புகளை காட்டும் விதமாக உடைகளையும் தேவையே இல்லாமம் கொடுத்து இரசித்து இருகிறார் மணி. இடையில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைவாரிக்கட்டி சரியான அளவிற்கு ஐசுவர்யாவிற்கு ஆடைகளை கொடுத்து இருப்பர் மணி.

ஆங்கிலப்படைப்புகளை தமிழி தருவது ஒரு நல்ல நடவடிக்கை தான். அதற்காக அதை இராமாயணம் மகா பாரதம் என்று எல்லாம் பூசி மொழுகி கொடுக்க வேண்டிய அவசியம் எல்லாம் ஒன்றும் இல்லை. இந்த கதையை தமிழில் தமிழுக்கு தகுந்தார் போல் எடுக்கின்றோம் என்று கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்று கொடுததை போல் தந்து விட்டு போவது தானே அதை விடுத்து இந்த திருட்டாடம் எல்லாம் தேவை தானா என்றதே கேள்விகள்.

11 ஆண்டுகளுக்கு முன்பு மணி உயிரே என்று ஒரு படம் எடுத்தார் அதிலே மனிசாவை அவளது வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வந்ததும் அவளது சகோதரர்கள் சாருக்கானை அடித்து துவைத்து எடுப்பார்கள். முகம் எல்லாம் இரத்தம் வடியும் அந்த நிலையில் சாருக்கான் அது தானே பார்த்தேன் எங்கே மணமான பெண்ணை பார்த்தா எனக்கு காதல் வந்தது என்று சொன்னே என்று சிரித்துக்கொண்டே அந்த அடிகளை வாங்க்கிக்கொள்வதாக கதையும் வசனமும் எழுதிய இந்தே மணிரத்தினம் தாம் இன்றைக்கு தனது கதை திரைகதை திருட்டை மறைக்க இப்படி ஒரு பண்பாட்டு சிதைவு வசங்களை எழுதும் நிலைக்கு தன்னை ஆளாக்கி கொண்டார் பாவம்.

எப்படி இருந்த மணிரத்தினம் இப்படி ஆனார் பாவம்................இது எல்லாம் உங்களுக்கு தேவையா அப்படி என்ன சாத்தீர்கள் இந்த செயலினால். பிரபு எதற்கு அந்த கதையில் வருகிறார் என்று இன்றைக்கும் மக்கள் குழம்பிக்கொண்டு தான் கேட்கிறார்கள், பிரஞ்சு புரட்சியில் அந்த இளம் நாயகனுக்கு துணையாக ஒரு அனுபவம் மிக்க கருப்பர் உடன் இருப்பார். அவர் அந்த இளம் நாயகனுக்கு வழங்கும் அறிவுரைகளை சொல்லும் பாத்திரம் தான் இது என்று அவர்களுக்கு சொல்லுங்கள் மணிரத்தினம், பாவம் மக்கள்........

இவ்வளவு இடர்களுக்கும் இடையில் தான் இருப்பதே தெரியாத அளவிற்கு இசையில் அப்படி ஒரு ஆளுமை இரகுமானிம் வழக்கம் போல் இல்லாமல் மிகவும் இயல்பான இசையில் அசத்தி இருக்கிறார் வாழ்த்துக்கள் இரகுமான்.

Friday, August 6, 2010

கொடுமையான முதலாளிகளின் உலகம் - இவ்வளவு மோசமாக

உலகில் எந்த நாடாக இருந்தாலும் அதில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று உழைப்பை உருவாக்கும் பிரிவு மற்றொன்று உழைப்பை கொடுக்கும் பிரிவு. இந்த இரண்டும் சேர்ந்தது தான் நாடாக இருக்கும்.

இந்த வகையில் தடையில்லாத வேலைகளை உருவாக்கிக்கொண்டே இருப்பது முதலாளிகளாகவும், தடையில்லா உழைப்பினை வழங்குவது உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.

உழைப்பிற்கு ஏற்ற ஊழியம் உழைப்பாளியின் மகிழ்ச்சி, முதலுக்கு ஏற்ற இலாபம் முதலாளியின் மகிழ்ச்சி. இதில் எந்த இடத்தில் குறைவு வந்தாலும் மன உளைச்சளில் தான் முடியும்.

இலாபம் குறையும் போதெல்லாம் உழைப்பளிகளின் மேல் எரிந்து விழுவதை முதலாளிகளும், இலாபம் வந்தும் இலாப பங்கோ அல்லது சம்பள உயர்வோ தரமால் இருக்கும் நிலை வந்தால் உழைப்பாளிகள் முதலாளிகளின் மேல் வம்புக்கு பாய்வதும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

இத்தனை ஆண்டு காலம் இப்படி தான் இருந்து வந்த இந்த உலகம் மெல்ல மெல்ல வென்னிசு நகர வியாபார தளமாக மாற்றம் கொண்டு வருகிறது சமீபமாக.

முதலாளிகள் இப்போது ஒரு கோட்பாடை கடைபிடிக்க வேண்டும் என்று அறியுறுத்த பட்டதாகவும். அப்படி இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவணங்களிலும் கடைபிடித்ததில் அதிக இலாபகரமாக தொழில்கள் நடப்பதாகவும் இப்போது அமெரிக்க முதலாளிகள் கதைகட்ட துவங்கியிள்ளார்கள்.

இடொயோடோ(TOYOTA) நிறுவணம் அனைவருக்கும் தெரிந்த சப்பானிய நிறுவணம். அவர்கள் தான் முதலில் இந்த சிக்கன கோட்பாடை கடைபிடிக்க துவங்கி உலகில் தன்னிறில்லா இலாபம் ஈட்டியதாக சொன்னார்கள் சென்ற ஆண்டு வரை.

அப்படி என்ன கோட்பாடுகளை அவர்கள் கடைபிடிக்கிறார்கள் என்று பார்ப்போம். அந்த கோட்பாடின் பெயர் இலீன்(LEAN).

அந்த கோட்பாட்டின் படி வேலைபார்க்கும் வேலையாட்கள் கொஞ்சம் நேரம் கூட வேலையில்லாமல் வேறு எதுவும் பார்க்கவிடாமல் வேலையில் மூழ்க வைக்கு ஒரு திட்டம்.

கிட்ட தட்ட மார்டன் இடைம்சு(Morden Times) என்று சார்லி சாப்லின் எடுத்த படத்தில் அவர் வேலை செய்யும் தொழிழகத்தில் அவர் படும் பாட்டை காட்டுவார்களே அது மாதிரி.

மேலோட்டமாக பார்த்தால் சும்மா இருக்கிற சமயத்தில் வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சனை இல்லாமல் உழைப்பதில் அப்படி என்ன சிரமம் என்று தான் கேட்டக தோன்றும்.

இங்கே தான் முதலாளிகளின் புத்திசாலித்தனம் ஒளிந்துக்கொண்டு இருக்கிறது.

முதலில் தகவல் தொடர்பு(IT) நிறுவணங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு விளக்கினால் நன்றாக புரியும் என்று நினைக்கின்றேன்.

ஒரு சேவையாற்றும் நிறுவணம் தான் பிரதினித்துவம் வகிக்கும் நிறுவணத்தின் வேலைகளை எல்லாம் முடிப்பதற்கு எத்தனை வேலையாட்கள் தேவைபடும் என்று கணக்கிட்டு அத்துனை ஆட்களுக்கு உண்டான பணத்தை இத்தனை தவனையில் தருவதாக ஒப்பந்தம் எழுதுவார்கள்.

அந்த திட்டத்தில் சொன்னது போல் அந்த அளவிற்கு ஆட்களை வேலையில் அமர்த்தி மின்னஞ்சல் முதல் அலைபேசிவரையில் கணக்கில் எழுதப்படும். இந்த அத்தனை இத்தியாதிக்கும் பணம் பற்றாகுறைக்கு அரசாங்கத்திற்கு கட்டவேண்டிய வரியிலும் செலவுக்கான கணக்காக காட்டவும்படும்.

இந்த சேவை நிறுவணங்கள் ஒப்புக்கொண்டதை போல் அமெரிக்க நிறுவணங்கள் 2 வருடங்கள் ஆகக்கூடிய வேலைகளை 6 மாத காலங்களிலே அருமையாக செய்துகொடுப்பதாக கதைகளை சொல்லி ஒப்பந்தகளை பெறுவார்கள்.

இதே வேளையில் மற்றும் ஒரு 5 அல்லது 6 நிறுவணங்களிடமும் இதே கால கட்டத்தில் அவர்களும் சேவைகளை செய்வதாக சொல்லி இதே போல் பணத்திற்கான ஒப்பந்தங்களை எழுதி வாங்கிக்கொள்வார்கள்.

இப்போது ஒரு முதலில் வந்த பணத்தைவிட அவர்களுக்கு 5 அல்லது 6 மடங்கு பணம் வருவதற்கான வழிகளை அவர்கள் செயல்படுத்தியாகிவிட்டது.

ஆனால் அந்த 5 அல்லது 6 மடங்கு வேலைகளை செய்ய ஆட்களை இவர்கள் நியமிப்பது இல்லை. பதிலாக வேலையாட்களின் வேலைகளுக்கு இடையே இருக்கும் சிறு சிறு நேரங்களை கூட வீண் ஆக்காமல் மற்ற நிறுவணங்களை வேலைகளை செய்யுமாறு வற்புறுத்துவார்கள்.

இதற்கு எப்படி இவ்வளவு வேலைகளை செய்ய முடியும் என்று கேட்டால், அந்த வேலைகளில் உள்ள இடைவெளியில் சும்மாத்தானே இருக்கிறாய் என்று சொல்ல எல்லா வகையான அறிக்கைகளை தயாரிக்கவும் வெளியிடவும் இந்த ஆலோசனை நிறுவணங்கள் கருவிகளையும் யுக்திகளையும் வழங்கிவருகிறது.

இந்த கணக்கு எப்படி என்றால், ஒரு கட்டு நாத்து நடுவதற்கு 10 நிமிடங்கள் என்றால், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை என்றால் 48 கட்டுக்கள் நட்டு இருக்க வேண்டுமே எப்படி 30 கட்டுக்கள் என்று கேட்க்கும் கேள்வியை போன்று.

இதை சொல்லும் ஆலோசனை நிறுவணங்களுக்கு நாத்து நடுவதில் அனுபவமோ அல்லது திறமையோ இல்லாமல் இருந்தாலும், (8*60)/10 என்ற கணக்கு மட்டுமே போட தெரிந்தால் போதும் என்று நினைப்பவர்களால் எழுதும் தீர்மானங்களில் என்ன ஞாயத்தை எதிர்பார்க்க முடியும்.

இன்னமும் அப்பட்டமாக சொல்வதென்றால், எதிராளி படையில் இருப்பவர் 1000 பேர் என்றால் நம்மிடம் இருக்கும் ஆயுதங்கள் ஒரு அடியில் 100 பேரை தாக்கும் வல்லமை உண்டு என்றால் 1000 பேருக்கு எதிராக 10 பேர் போதுமே என்று சொல்லும் கணக்குகள் இவை.

இந்த 10 பேரில் ஒரு வரை கொன்றால் கூட 100 பேர் முன்னேறி மற்ற 9 பேரை கொல்வது மிக மிக எளிமை என்று படிக்காதவருக்கு கூட தெரியும் உண்மை. இந்த படித்த முதலாளிகளுக்கு புரியாமல் போனதன் மர்மம் என்ன.

740 மில்லியன் இடாலர்கள் இலாபம் சம்பாதித்த நிறுவணங்கள் தங்களின் இலாபம் 740*6 ஆக உயர வேண்டும் என்ற வேகம் இல்லை வெறி பிடித்து அலைகிறது.

இந்த வெறி என்னமோ ஒரு சில நிறுவணங்கள் என்று இல்லை அமெரிக்காவில் இருக்கும் அத்தனை சேவை நிறுவணங்களும் வந்துள்ளது தான் கொடுமை.

இந்த வெறிக்கு துணை போகக்கூடாது என்று உழைக்கும் கூட்டம் நினைத்தாலும் தேசிமக்களது ஆசிர்வதத்துடம் அப்பட்டமாக இன்றைக்கு அமோகமாக நிறைவேறிக்கொண்டு வருகிறது.

தொழிலாளர் சங்கங்கள் எப்போது எல்லாம் பலவீனம் அடைகிறதோ அப்போது எல்லாம் இப்படி பட்ட பகல் கொள்ளைகள் நடப்பது சாத்தியம்.

வேலையே இல்லை என்று இருக்கும் இந்த சூழலில் என்ன வேலை கிடத்தாலும் பரவாயில்லை சம்பளம் கிடைத்தால் போது என்று இருக்கும் மக்களின் உழைப்பை வேட்டையாக கிளம்பிவிட்டது இந்த முதளாலிகளின் உலகம்.

இந்த கொடுமைகள் இந்தியாவில் அரகேறிய பிறகே அமெரிக்காவில் அரங்கேறுகிறது என்றது தான் கொடுமையிலும் கொடுமை.......