Wednesday, May 31, 2017

இது Hollywoodஇன் திமிர் உங்களால் முடியுமா - Beauty and the beast

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ஆலிவுட் திரைப்படம் Beauty and the beast.

இந்த படத்தில் வரும் அழகை மிக கொஞ்சமாக அல்லது அரிதாரமே இல்லாமல் மிகவும் அழகாக காட்டி இருக்கிறார்கள் படத்தில். பல இடங்களில் இந்த நாயகியின் கை என்ன அழகாக கவிதை போல் மிகவும் அழகாக காட்டப்பட்டு இருக்கின்றது.

கிட்டதட்ட எலிசபத்து சுவை ஞாபகபடுத்தும் முகமும் பாவனைகளும், அப்படியே அவரது இளமை காலத்து தோற்றம் போல் தெரிந்தாலும். இயற்கையில் எந்த பூச்சுகளும் இல்லாமல் இப்படி ஒரு அழகு தோற்றமா என்று சொல்ல வைக்கும் அளவிற்கு படமாக்கிய இயக்குனருக்கும் ஒளிபதிவாளருக்கும் வாழ்த்துகள்.

அதுவும் ஊரில் நடக்கும் நிகழ்வுகளை கோர்வையாக காட்டும் காட்சிகளில் மேக்கப்புடன் இருக்கும் அழகிகளையும் இவளையும் அருகருகில் காட்டி இருப்பது கில்லாடி தனம். இது அவர்களுக்கே உள்ள திமிர். இது போல் நம்ம ஊரிலும் இயற்கை அழகை ஒருவர் காட்டிக்கொண்டு இருந்தார் அவர் இப்போது உயிருடன் இல்லை.....

Tuesday, May 30, 2017

உங்கள் மாடுகளுக்கு பான் கார்டும் ஆதார் கார்டும் வாங்கியாச்சா -- இல்லை என்றால் உடனே வாங்கவும்

டிசிட்டல் இந்தியாவில் எந்த எந்த மாடுகள் எந்த எந்த இடங்களில் எப்படி எல்லாம் பராமரிக்கப்படுகின்றது என்ற கணக்கை அம்பாணி மற்றும் அதாணி வாங்கி இருக்கும் அல்லது வாடகைக்கு எடுத்து இருக்கும் மென் பொருளில் ஒரு சின்ன மாற்றத்துடன் கண்காணித்து ஏ2 மாடுகளையோ அல்லது உள் நாட்டு மாடுகளையோ மக்கள் உண்பதை தடுத்து தாங்கள் விற்கப்போகும் பாக்கிட்தானத்து மாட்டிறைச்சியை தவிர மற்ற எதையும் மக்கள் உண்டுவிடக்கூடாது என்று கட்டளையிட உள்ளார்கள்.

இந்த காரணத்தை சொன்னால் நீதிமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் உதை கிடைக்கும் என்ற காரணத்தால், மாடுகளை பாதுகாக்க அவைகளுக்கு நேரடியாக மானியம் வழங்க உள்ளோம். ஆதலாம் மாடுகளுக்கு பான் மற்றும் ஆதார் அட்டைகளை புகைபடத்துட்ன் கூடிய அட்டைகள் இல்லாமல் மாடுகளை வைத்திருப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டதின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டு கொல்லவும் படுவீர்.

யார் யார் எல்லாம் புரட்சி செய்கிறீர்களோ போராட்டம் செய்கிறீகளோ உங்களுடைய பான் மற்றும் ஆதார் அட்டைகளை முடக்கி உணவு விடுதியில் கூட சாப்பிட முடியாமல் செய்துவிடுவார்கள்.

இந்த செய்திகள் எல்லாம் வெளியாகி ஒன்றுக்கு 10ஆக பணம் கேட்பதற்குள், நாமாக சென்று மாடு, ஆடு, கோழி, கோழி முட்டைகளுக்கு பான் மற்றும் ஆதார் அட்டைகளை புகைப்படத்துடன் பெற்றுக்கொள்வோம். விண்ணப்பிக்க டிசிட்டல் இந்தியா, கேர் ஆப் பாசக, RSS, இந்தியா(Hindia) என்ற முகவரியை அனுகவும். உங்களுக்கு யாரையாவது பிடிக்க வில்லை என்றால், அவன் அட்டை இல்லாமல் மாடும் கோழியும் வைத்துள்ளான் என்று சொல்லுங்கள் சங்க பரிவாரத்திடம் மிச்சத்தை அவர்கள் பார்த்துகொள்வார்கள்.

பி கு : இந்த டிசிட்டல் இந்தியா நடவடிக்கை தேவை இல்லாதது என்று யாராவது உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும் கொமாரசாமிகளையே சந்திக்க நேரும் சாக்கிரதை

பீட்டாவும் காகித புலியும் மாட்டின் மீது பாய்கின்றது -- 3 ஆண்டு சாதனைகள் பற்றி கேட்ட மோடி பற்றி மக்கள் கழுவி கழுவி ஊற்றி இருப்பார்கள்

சென்ற வாரம் டிசிட்டல் இந்தியாவில் பாசக சாதித்ததும் இன்னும் சாதிக்க வேண்டியவைகளையும் பற்றியும் தெரிவிக்கும்மாறு நாள்ளிதழ்களில் செய்தியை அனைவரும் கண்டு இருப்போம்.

ஒரு வாரம் ஆகியும் மக்கள் என்ன சொன்னார்கள் என்ற விபரம் வெளிவர மறுக்கிறது என்றால் பணமதிப்பு இழப்பில் கள்ள மௌனம் சாதித்த பாசகவின் நோக்கமும் விளவும் என்ன என்றது வெளிப்படையாக மக்களுக்கு தெரிந்தது தான்.

வந்த நாள் முதல் இந்த நாள் வரை வெறும் காகித அறிக்கையிலும் முதலாளிகளின் ஏவல்களை ஏற்று நடத்தும் ஏவல் நாயக அவர்கள் தூக்கி எறியும் குச்சியை ஓடிச்சென்று பொறுக்கி கொண்டுவரும் பணியை மட்டுமே செவ்வன செய்து வரும் பாசக அரசு. 3 ஆண்டு சாதனைகளை பற்றி கட்டுரை வரைக என்று கேட்டதற்கு மக்கள் அனேகமாக கழுவி கழுவி ஊற்றி இருப்பார்கள்.

வெளியில் சொன்னால் வெட்க கேடு ஆகையால் ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியிடுவதற்கு பதில் இந்தியர்கள் யாரும் இனி இந்தியாவில் தயாராகும் பாலை குடிக்க கூடாது என்று ஆணையிட்டால் ஓரிரு வாரங்கள் சிற்சில போராட்டங்களையும், சமூக வலை தளங்களிலும் எழுதிவிட்டு போவார்கள். 3 ஆண்டு சாதனைகளை பற்றி அரவே மறந்து போவார்கள் என்று இம்சை அரசனுக்கு ஆலோசனை வழங்கி இருப்பார்கள் போலும்.

பாசகவின் காகித அரசு புலி தெற்கே மாட்டின் மீதும் வடக்கே மற்ற விலங்குகள் மீதும் பாய்ந்து இருக்கிறது. இந்த அழகில் உணவுக்கு தடை விதிக்கவில்லை ஆனால் தொழிழை மட்டும் தான் முடக்கியுள்ளோம் என்று பெருமை பட விவாதங்களில் சொல்கிறார்கள் இந்த இழி மக்கள்.

இனி அதாணி மற்றும் அம்பாணிகளின் கடைகளிலும் பாபா இராம்தேவனின் கடைகளிலும் மாட்டு சிறு நீருக்கு அருகிலேயே சுத்தமான, தரமான, உலகதரம் வாய்ந்த அக்மார்க் மாட்டிறைச்சி என்று ஏ1 வகை மாட்டு இறைச்சியை சாப்பிட வைத்து வகை தொகை இல்லாமல் நாட்டில் சர்க்கரை நோயை பரப்பி விடுவதாக திட்டம்.

முதலில் தமிழ் நாட்டில் எப்படி எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், அதற்கு ஒன்றும் சொல்லாமல் விட்டால் எவ்வளவு மக்கள் திரளுகிறார்கள், பிறகு ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அடித்தால் பிறகு என்ன என்ன செய்கிறார்கள். உதவிக்கு வரும் மக்களை தீயிட்டு கொளுத்தினால் என்ன என்ன எதிர்ப்புகள் எல்லாம் வருகின்றது. இதில் என்ன என்ன கட்சிகள் எல்லாம் என்ன என்ன நடவடிக்கையில் ஈடுபடுகின்றது என்று கணக்குகளை போட்ட காகித அரசு தற்பொழுது இப்படி ஒரு சர்க்கரை நோய் தாக்குதலை தொடுத்து இருக்கின்றது. பிறகு ஏழை மக்களின் சர்கரை நோய் துக் யோசனா என்று ஒரு திட்டம் தீட்டி அந்த பணமும் நேரடியாக அம்பாணிக்கும் அதாணிக்கும் கொண்டு கொடுக்க வழி வகுப்பார்கள் இந்த ஏவல் அரசு.

மக்கள் நீதிமன்றம் சென்று காகித அரசு இப்படி ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. இவர்களின் டிசிட்டல் இந்தியாவில் எது எங்கே போகின்றது என்று அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம் ஆகையால் ஒன்று அவர்களை ஆனையை திரும்ப பெற சொல்லுங்கள் இல்லையேல் எங்களது மாட்டை என்ன விலைக்கு விற்போமோ அந்த விலைக்கு எங்களிடம் அரசே வாங்க ஏற்பாடு செய்ய சொல்லுங்கள். மேலும் நாட்டில் இருக்கும் மாடுகளை இறைச்சிகாக பயன்படுத்த கூடாது என்றால் பிறகு உணவின் தேவையை எப்படி எல்லாம் பூர்த்தி செய்ய காகித அரசு தயாராக இருக்கிறது என்று விளக்க சொல்லுங்கள் என்றும் வழக்கு தொடுக்க வேண்டும்.

ஒரு முறை 2000 நோட்டுகளை கையில் ஏந்தி சில்லரை இல்லாமல் அலைந்தது போதும் மறுமுறையும் இந்த டிசிட்டல் இந்தியாவிற்காகவும் பீட்டாவிற்காகவும் அலைய முடியாது என்று மக்கள் இந்தியா முழுவதும் எதிர்ப்பது மட்டும் இல்லாது, பீட்டாவையும் அதன் இந்திய கிளைகளையும் நேராக பாக்கிட்தானுக்கு எடுத்து போக சொல்ல வேண்டும்.

உங்களை யாருயா 3 ஆண்டு சாதனைகளை எல்லாம் கேட்டக சொன்னார்கள் பிறகு இப்படி வாங்கி கட்டிக்க சொன்னார்கள். தமிழகத்திலும் தான் காகித அரசு இருக்கின்றது என்றைக்காவது 100 சாதனை, 110 நாள் சாதனை என்று எப்போவாத தம்பட்டம் அடித்து பார்த்து இருக்கிறீர்கள். அவர்களை போல் கொள்ளை அடித்தீர்களா மூட்டை கட்டினீர்களா என்று இருப்பதை விடுத்து ஏன் இந்த தேவை இல்லாத பந்தா எல்லாம்.

அதாணியும் அம்பாணியும் தூக்கி எறிந்த கூச்சிகளை எல்லாம் இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா என்று சென்று கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர்கள் எறியும் எலும்பு துண்டை எடுத்துக்கொண்டு 35 இலட்சத்தில் உள்ளாடையும் 1 கோடியில் செருப்பும் என்று பந்தா காட்டி திரிவதை விட்டு விட்டு ஏன் இப்படி வாங்கிக்கட்டி கொள்ள வேண்டும் பிறகு வெளியில் சிரித்துக்கொண்டே இப்படி வயிர் எரியனும்.

Monday, May 29, 2017

செல்லூர் ராசுவை மிஞ்சிய விஞ்னானி தமிழிசை - பெண்களை இதைவிட இழிவு படுத்தமுடியுமா

கருத்தம்மா படத்தில் ஏன்யா பெண் சிசுவை கொலை செய்கிறீர்கள் என்று கேட்டால், சமூக சூழல் பொருளாதார பிரச்சனை என்று எல்லாம் சொல்வார்கள். இதிலே பெண்களை படிக்க வேற வைக்கனுமா என்ற கேள்விகளை எல்லாம் அடுக்குவார்கள்.

இப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களின் மூலமே பதில் சொல்லுவது போல் அமைத்து எடுத்த படம் கருத்தம்மா, அதனால் தான் அந்த படத்திற்கு சிறந்த இயக்குனர் என்று விருது கொடுத்தார்கள்.

பெரியார் பூமியில், 21ஆம் நூற்றாண்டில் பெண்களால் சுற்று சூழலுக்கு பாதிப்பு என்று சொல்ல தமிழிசை சௌந்தர்ராசனுக்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும்.

ஆண்களால் விளையாத தீமை பெண்களால் மட்டும் எப்படி விளையுமோ தமிழசை தான் சொல்லனும். அதும் தன்னை மருத்துவர் என்று சொல்லிக்கொள்ளும் இவர் உண்மையில் பள்ளிப்படிப்பாது படித்தாரா என்று தெரியவில்லை.

செல்லூரின் தயவில் இந்தியாவின் மானம் கப்பல் ஏறியது, இப்போ தமிழிசையின் இந்த பெண்கள் பற்றிய கருத்தால் தமிழர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று பெயரை வாங்கி கொடுத்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பார் போலும்.

பெண்களால் மட்டும் எப்படி சுற்று சூழல் கெட்டுவிடும் தமிழிசை விளக்குவீர்களா...........போதையில் பேசியதாக சொல்லி தப்பித்துகொள்ள நினைக்க வேண்டாம்.......

Saturday, May 27, 2017

மலடாக போகும் வடகத்திய ஆண்கள் பாசக நிகழ்த்த போகும் உத்தர் மலடு யோசனா

பாசகவின் ஆயோக்கியர்கள் எல்லம் ஒன்றாக சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுள்ளனர், அதன் பெயர் உத்தர் மலடு யோசனா, தமிழில் சொல்லவேண்டும் என்றால் வடக்கதிய மக்களை மலடாக்கும் திட்டம். இதற்கு என அமைக்கப்பட்ட மலடு இந்திய ஆயோக்கின் ஆயோக்கியர்கள் இப்படி எல்லாம் செய்தால் இந்தியர்கள் எல்லாம் மலடாவார்கள் என்று நன்றாக ஆய்ந்து அறிகையை அனுப்பி செயல்படவும் செய்துள்ளது.

பாசகவின் ஆயோக்கியர்கள் எல்லம் ஒன்றாக சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுள்ளனர், அதன் பெயர் உத்தர் மலடு யோசனா, தமிழில் சொல்லவேண்டும் என்றால் வடக்கதிய மக்களை மலடாக்கும் திட்டம். இதற்கு என அமைக்கப்பட்ட மலடு இந்திய ஆயோக்கின் ஆயோக்கியர்கள் இப்படி எல்லாம் செய்தால் இந்தியர்கள் எல்லாம் மலடாவார்கள் என்று நன்றாக ஆய்ந்து அறிகையை அனுப்பி செயல்படவும் செய்துள்ளது.

ஆதாணியும் அம்பாணியும் அமெரிக்காவின் மலட்டு விதைகளை விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உங்கள் விதைகளை இந்தியாவில் விற்று கொடுக்கின்றோம் எங்களுக்கு தான் அந்த  விதைகளை விற்கும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசி அவர்களது நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மைய அரசின் ஆயோக்கியர்களாக வேலை பார்ப்பது மக்கள் அறிந்ததே.

தமிழகத்தில் கடுகை தாளிக்க மட்டும் தான் பயன் படுத்துவோம் ஆனால் வடக்கிலோ சமையலுக்கு பயன்படுத்தபடும் எண்ணையில் இருந்து இன்னும் வித விதமாக கடுகை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் நிலையை நினைக்கையில் தான் மிகவும் பாவமாக இருக்கின்றது. தெற்கில் தாக்குதலின் பலன் தெரியும் போது வடக்கில் அனைவரும் முற்றுமாக மலடாகாகி இருப்பார்கள்.

தமிழகத்தில் பீட்டா பால் வேண்டாம் என்று சொன்னதை போல பீட்டா கடுகும் வேண்டாம்  வடக்கு மக்களுக்கு கொடுங்கள் என்று பெருந்தன்மையாக  சொல்வோம். அதாணியும் அம்பானியும் பணம் சம்பாதிக்க வடக்கதிய மக்கள் மலடாக போகிறார்கள்.

வாழ்க பாசகவின் உத்தர் மலடு யோசனா வளர்க அதன்  ஆயோக்கியர்கள்.

Friday, May 26, 2017

யார் படத்திற்கு யார் சொந்தம் கொண்டாடுவது மகதீரா, ராப்தா படமும் The Myth படமும்

The Myth படமும்

மகரீதா படம் சாக்கி சானின் தி மித்து படத்தின் ஈ அடிச்சான் காப்பி.

திரைக்கதையில் சாக்கி சானுக்கு பழைய நினைவுகள் வருவதும் அவளை மறுபடியும் பார்ப்பதையும் உணரும் அத்தனையும் அந்த படத்தில் உள்ளது.

சிரஞ்சீவியின் மகனின் முதல் படம் என்ற பரபரப்புடனும் அதிக சாகசங்களுடன் வந்த படம் என்ற பாணியிலும் வியபாரத்தில் அபார வெற்றி பெற்ற படம் அவ்வளவு தான் வித்தியாசம்.

மற்றபடி தி மித்து படத்திற்கும் மகரீதா படத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தி மித்து படத்தின் தயாரிப்பாளரிடம் பட உரிமையை வாங்கித்தான் மகரீதா எடுத்தார்கள் என்றால் தெலுகில் வந்த கதையை ராப்தாவில் காப்பி அடிக்கிறார்கள் என்று சொல்லலாம்.

 நீதிமன்றத்தில் என்ன வாதம் வைகிறார்கள் மகரீதா குழுவினர்கள் என்று பார்ப்போம். அப்படி அவர்கள் தி மித்து படகுழுவினரிடம் உரிமையை வாங்கவில்லை என்றால் அந்த கதைக்கும் திரைபடத்திற்கும் மகரீதா குழுவினர்கள் உரிமை கோரமுடியாது.

இந்த உண்மை இந்தி திரைதுறையினருக்கு தெரியும், இந்தியில் பல ஆங்கில திரைபடங்களை அப்படியே தயாரித்து இருக்கிறார்கள். தி மித்து பட நிறுவனத்திடம் உரிமை வாங்குவது ஒன்றும் அவர்களுக்கு பெரிய மூட்டை கிடையாது. என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்.

Saturday, May 20, 2017

சுப்பிரமணி சாமியும் மோடியும் இவ்வளவு தானா - எல்லையில் இராணுவன வீரரை கேளுங்க

தமிழக மீனவர்களை தூக்கில் போட போகிறார்கள் என்ற உடன் சுப்பிரமணி சாமி சும்மனாச்சுக்கும் இலங்கை அதிபருக்கு பொழுதே போகாம, போனா போகுதுன்னு, இப்ப அந்த மீனவர்கள விட போரியா இல்லையா என்று சுப்பிரமணி சாமி மிரட்டினதும் துண்டைகானும் துணியை கானோம் என்று எல்லா அரச மரியாதையுடன் மோடியின் வீட்டுக்கு அனுப்பி வச்சதாக ஊர் பூரா தன்டோரா போட்டார் சுப்பிரமணி சாமி.

ஆனா இப்போ எல்லை இருக்கிற ஒரு இராணுவ வீரரை, மோடி கல்யாணம் காதுகுத்து என்று போய் வரும் பாக்கிட்தானத்தில் தான் பிடித்து வைத்து இருக்கிறார்கள்.

மிரட்ட கூட வேண்டாம் சம்பந்தி வீடு தனெ வீட்டுக்கு அனுப்புங்க என்று மோடி சொன்ன வ்ட்டு விட போகிறார்கள். இல்லை சுப்பிரமணி சாமி அலை பேசியில மிரட்டினால் அமெரிக்க அதிபரே வாசல்ல வந்து நிப்பாங்கன்னு சொன்னார்.

ஏன் சுப்பிரமணி சாமி அலை பேசியில் காசு இல்லையா இல்லா பாக்கிட்தானத்து பிரதமர் தொடர்பு எண் இல்லாம போச்சா....

Wednesday, May 17, 2017

தமிழகத்தில் பாக்கிட்தானுக்கு என்ன வேலை

நடுக்கடலில் கப்பலை செலுத்த தெரியாமல் காற்று இழுத்து செல்லும் வழிக்கு எல்லாம் பயணமாகும் கப்பலாக அதிமுக மாறியுள்ள அற்புதத்தை பார்த்து வருகின்றோம்.

மாநிலத்தின் வருமானம் பெருக்க என்ன செய்யலாம் என்றும் கூட தெரியாத ஒரு அணி தமிழகத்தை ஆளுகின்றது.

சம்பாதிக்க துப்பு இல்லாத பிள்ளை குடும்பத்தை நடத்துகின்றேன் என்று வந்து நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அதிமுகவின் அரசு நடவடிக்கைகள்.

இப்படி ஒரு குடும்பத்தில் மாட்டிய அப்பாவி பிள்ளைகளாக தமிழக மக்கள் மாட்டி தவிப்பது அப்பட்டமாக தெரிகின்றது.

தமிழகத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழகத்தில் இருக்கும் மருத்துவ பல்கலைகழகம் தான் பட்டம் வழங்க போகின்றது, பொறியியல் கல்லூரிகளை போல.

தமிழகத்து மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மற்றும் நடத்தபடுகின்ற இந்த கல்லூரிகளுக்கு யார் யார் எல்லாம் சேர்ந்து படிக்க வேண்டும் என்றது தமிழக மக்களும் அவர்களது பிரதினிதிகளும் தான் உரிமையே தவிர பாக்கிட்தானம் இல்லை.

தகப்பன் இல்லாத வீட்டில் பக்கத்து நாட்டுகாரர்கள் எல்லாம் நாட்டாமை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டதே மக்களே மக்களின் மக்களே...

இனிமே தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் நிறுவனங்களுக்கு தமிழகம் தான் தேர்வுகளை நடத்தி ஆட்களே சேர்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.....

Friday, May 12, 2017

இலங்கையில் மோடி இந்தியில் பேசினாரா - அதாணிக்கு எவ்வளவு கிடைக்கும்

இனி மேல் இந்தியர்கள் அனைவரும் இந்தியில் தான் பேசவும் எழுதவும் வேண்டும் என்ற சட்டம் கையெழுத்து ஆன பிறகு வெளி நாட்டுக்கு சென்று இருக்கும் பாசக பிரதமர் மோடி. இலங்கையில் இந்தியில் பேசிய வாசகங்கள் குழப்பங்களையும் அதை தொடர்ந்து ஒரு நாட்டில் உள்ள 2 மானிலங்களுக்கு இடையிலான குழப்பங்களை "வெறுப்பிலும் வன்முறையிலும் ஊறிய மன நிலையே காரணம்" என்று பேசவில்லை என்று விளக்கியுள்ளார்.

வெறுப்பிலும் வன்முறையிலும் ஊறிய மன நிலை என்றால் என்ன. தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் முன்னிலைப்படுத்த அடுத்தவனை குற்றம் சொல்லி அதை நிறுவ சொல்லும் பொய்களும் அதனால் விளையும் வன்முறையும் என்று அல்லவா பொருள் பெறுகிறது.

குசராத்தில் 3 நாட்களில் கொல்லப்பட்ட 1,30,000 இசுலாமிய மக்களையும் இலங்கையில் கொல்லப்பட்ட 1,60,000 மக்களையும் மனதில் வைத்து தான் பாசக பிரதமர் மோடி அப்படி இந்தியில் பேசினார் போலும். இரண்டுமே ஆளும் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தை தான் தன்னையும் அறியாமல் வாக்கு மூலமாக கொடுத்துள்ளார் பாசக பிரதமர் மோடி.

பாசகவோ அல்லது இந்த அரசாங்கமோ மோடி எதற்காக இலங்கை சென்றார், தனது தனிப்பட்ட விருப்பமாக ஓய்விற்கு சென்றாரா அல்லத தனக்கு 35 இலட்ச ரூபாய்க்கு சட்டை முதல் தேர்தல் உபயங்களை வழங்கிய முதலாளியின் ஏவளாலியாக அரசு பணத்தில் இலங்கை சென்றாரா என்று தெரிவிப்பார்களா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

எனக்கு தெரிந்த வரையில் வெறுப்பு அரசியலை எப்படி ஒரே நாட்டில் வாழும் மக்களிடையே தூவி ஒரே மொழி ஒரே மதம் ஒரே நாடு என்று எப்படி எல்லாம் சாதித்தீர்கள் என்று வியந்து வரவும் மேலும் அந்த வழிமுறை திட்டங்களை தனது சகாக்களுக்கு கற்றுக்கொடுக்கும் பயிற்சி பட்டறையாகவும் அமைத்துகொள்ள சென்று இருப்பார் பாசக மோடி. ஆமாம் இலங்கையில் இந்தியில் பேச மாட்டார்களே என்ன செய்வார் பாசக பிரதமர் மோடி. கற்பனையில் நினைகவே மிகவும் பரிதாபமாக இருக்கின்றது.......

Tuesday, May 9, 2017

தமிழகத்தில் இவ்வளவு இளிச்ச வாய்த்தனமாகவா NEET தேர்வு நடந்தது


Image result for bihar exam cheatingImage result for bihar exam cheatingImage result for bihar exam cheatingImage result for bihar exam cheatingImage result for bihar exam cheating 


Image result for bihar exam cheating
Image result for bihar exam cheating


Image result for bihar exam cheatingஇப்படி எல்லாமா ஏமாத்தி நுழைவு தேர்வு எழுதுவாங்க தமிழகத்துல, பிறகு இந்திய அளவில் நடக்கும் இந்த தேர்வில் மிகவும் திறமையானவர்களாக தேர்ந்து எடுத்து எப்படி மருத்துவர்களாக ஆக்குவதாம். சொல்லுங்க மக்கா நீங்களே சொல்லுங்கா
Image result for bihar exam cheating

இப்படியே எடக்கு முடக்கு செஞ்சா பிறகு இப்படி தான் தேர்வெழுதனும் பாத்துகுங்க மக்கா பாத்துகுங்க
Image result for bihar exam cheatingImage result for bihar exam cheating

Friday, May 5, 2017

நடிகை சபிதா ராய் நிறுத்து இதோடு நிறுத்து நடிகை சபிதா ராயின் தன்னிலை விளக்கத்தை அனேகமாக பார்த்து இருப்பீர்கள்.

அதுவும் நடிகையாச்சே பார்க்காமலா விட்டிருப்பீர்கள்....

பார்த்த கையோடு தற்குறிப்பேற்றி தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பியும் இருப்பீர்கள். இந்த வன்மம் எல்லாம் தெரியாத மக்கள் அவர்கள் போக்கிற்கு யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பகிருவீர்கள்.

எங்கு எல்லாம் வீரத்தை எதிர்கொள்ளவும் வெல்லவும் முடியவில்லையோ அங்கே எல்லாம் சூழ்ச்சியும் துரோகமும் தான் வெல்லும்.

அந்த மாதிரியான வெற்றியில் வீழ்தியவர்களை விட அதிக பங்காற்றியவர்கள் சமூகம் தான் என்றது கசப்பான உண்மை.

எந்த ஒரு தனி நபரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்கும் உரிமை ஒருவருக்கும் இல்லை. சட்டங்களும் சட்டக்காப்பாளர்களுக்கு அந்த பணியை நாட்டிலும் இராணுவத்திற்கு எல்லையிலும் கொடுத்துள்ளார்கள். அவர்கள்: அவர்களது பணிகளை செய்யட்டும் விட்டு விடுங்கள்.

தனக்கு தெரியாத செய்திகளை அருகில் இருந்து பார்த்தவர் போல் சொல்லும் கதைவாகள் உலகில் அதிகம் அதுவும் வக்கிரம் படிந்த கதையாக இருந்தால் ஏன் என்ன என்று கேட்பவர்கள் கேள்வி கேட்பது இல்லை.

ஏன் என்றால் கேட்ப்பவனுக்கு அடுத்து என்ன நடந்தது என்றதில் தான் கவனம். அட முகம் தெரியாதவரை பற்றி இப்படி எல்லாம் பேசுகிறார்களே அதட்டுவோம் என்ற எண்ணமோ துணிவோ அவர்களுக்கு இருக்காது.

காரணம் அவளை ஆதரிக்க போய் என்னையும் நீ அப்படியா என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்ற பயம் கேட்பவர்களுக்கு.

பாதிக்கப்பட்டவரை நமக்கு தெரியாது என்னையும் அவருக்கு தெரியாது ஆனால் அவருக்கு ஆதரவாக பேசி வாங்கிக்கட்டிக்கொள்ளும் நபர் நமக்கு நன்றாக தெரியும். அது மட்டும் இல்லாது நம்மை பற்றி வீட்டு விலாசம் முதல் அலை பேசி எண் வரை கொடுத்து இல்ல வதந்திய பரப்புவார் என்ற பயம்.

அடுத்தவர் வீட்டு பிள்ளைகள் என்றால் நமக்கு எல்லாம் கிள்ளுக்கீரை என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம் எழுதலாம் சித்தரிக்கலாம்.

இன்னும் கொஞ்ச நாளில் சபிதா எங்கே ஆதாரம் காட்டு என்று சொன்னவைகளை காட்டி நான் தான் சாட்சி என்று ஒரு 3 நபர்கள் வந்து இதே போல் ஒரு தன்னிலை விளக்கம் கூட வெளியிடலாம்.

இதுவே உங்களுடன் படித்த தோழியாக இருந்தால் என்ன செய்வீர்கள் அல்லது அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பெண்ணாக இருந்தால் என்ன செய்வீர்கள். இல்லை உங்கள் வீட்டு பெண்ணாக இருந்து இருந்தால் என்ன செய்வீர்கள்.

முதல்ல உள்ளே போ என்று சொல்வீர்கள் பிறகு தகறறு செய்பவனை விரட்டி அடிப்பீர்கள் ஆனால் அடுத்தவர் வீட்டு பெண்ணாக இருந்தால் விளம்பர படுத்துவீர்கள்.

என்ன ஆண்மை மிக்க சமுதாயம் இந்த தமிழகம், அடே வீரர்களா பேசாமல் நீங்கள் எல்லாம் இனி மாடு மேய்க்க போகலாம் உங்களுக்கு எல்லாம் படிப்பு எதற்கு. என்ன படிச்சீங்க இது வரையில் நீ கற்றுக்கொண்ட கல்வி இதை தான் போதித்தா.......

சபிதா ராய் இதோடு நிறுத்த வேண்டும், அவமானமாக நினைத்து அழுவதும். அவரை தவறாக நினைப்பவர்களுக்காக தன்னிலை விளக்கம் கொடுப்பதையும் நிறுத்தனும்.

நீ இப்படி கலங்க வேண்டும் என்று தான் அவர்கள் விரும்பினார்கள் அவர்கள் எதிர்பார்ப்பதை நடத்தி அவர்களை மகிழ்விப்பதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தன்னை நம்பாத நட்பு கூட பின்னாளில் வெறும் சுமை தான் சகோ விட்டு தள்ளுங்கள், கொஞ்சம் அமைதி கொள்ளுங்கள் பிறகு உங்களுக்கே புரியும் இந்த தன்னிலை விளக்கங்கள் எல்லாம் தேவையே இல்லை என்று.

அதிமுக நிலை பாகுபலி 2ஆ இல்லை Gladiatorஆ நீங்களே சொல்லுங்கள்

கிலாடியேட்டர் படத்தில் எனக்கு அடுத்து உனக்கு பட்டம் இல்லை, ஆட்சியை மக்களிடமே திரும்ப ஒப்படைப்பாதாக இருக்கிறேன் என்றும் அதன் பொருப்பை மிகவும் நம்பிக்கைக்கு உரிய தளபதியிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்தவுடன். மாமன்னரை கட்டியணைத்து ஆருதல் சொல்லுவது போல் நய வஞ்சகமாக கொன்று. பழியை தூக்கி தளபதியின் மேல் போட்டு கொன்று விட்டால் இப்படி ஒரு திட்டம் இருந்தாக கூட யாருக்கும் தெரியாது என்றதும், பிறகு என்ன ஆனது என்றதும் தான் கதை.

செயலலிதா தானாக தான் இறந்தாரா என்ற கேள்வி தொக்கி நிற்க கிளாடியேட்டர் படம் தான் பொருத்தமாக இருக்கும். மேலும் மாமன்னர் எண்ணத்தை நிறுவ போராடும் போராளியாக அல்லவா பன்னீர் திகழ்கிறார்.

அவரை கிளாடியேட்டரில் பகிடி செய்யும் செயல்களை எல்லாம் செய்து, கடைசியில் தேர்தலிலும் நிற்க வைத்துவிட்டு, முதுகில் கைக்கு கீழே கத்தியால் ஆழ குத்தி விட்டு பிறகு மக்களின் முன்னில் ஒரே கத்தி வீச்சால் வீசி கொல்ல அழைப்பது போல். ஆர்கே நகர் தேர்தலில் எல்லா குறுக்கு வழிகளையும் கடைபிடித்து விட்டு தோற்றே போனார்கள் என்று அல்லவா பல்லவி பாட தயாரானார்கள் சதி தரப்பு, இல்லை இல்லை சசி தரப்பு.

ஏதோ 800 ADயில் நடந்த கதையாக சொன்னாலும் இந்தனை ஆண்டுகள் கழித்தும் மீண்டும் ஆட்சி கவிழ்பு என்றால் அதே தாத்தா காலத்து நுட்பம் தான் போலும்........

தமிழக மைல் கல்லில் உருது மொழியில் எழுத வேண்டும் - பாக்கிட்தான் ஓட்டுனர் என்ன பாவம் செய்தார்

தமிழகத்தில் இருக்கும் எல்லா மைல் கல்லிலும் இந்தியில் எழுதினால் தான் வடக்கு இருந்து வரும் ஓட்டுனர்கள் பார்த்து வண்டி ஓட்டி வருவார்களாம்.

வடக்க இருக்கும் ஓட்டுனர்களுக்கு இந்தி படிக்கவாது தெரியுமா என்று எல்லாம் யாரும் கேட்க்ககூடாது அப்படி கேட்டால் தேச துரோக பழி சுமத்தி இரவில் விசாரணை நடத்தி அதிகாலையில் உங்கள் வீட்டின் விட்டதிலேயே தொங்கவிடப்பட்டு இராணுவ வீரனை கேளுங்கள் என்று எச்சி ராசா சொல்வார் பரவாயில்லையா பார்த்துக்கொண்டு பிறகு கேள்வி கேளுங்கள்.

வடக்க இருந்து வரும் ஓட்டுனர்கள் என்று சொன்னால் வடக்கில் இருந்து இந்தி பேசும் மக்கள் மட்டுமா வருகிறார்கள். பாக்கிட்தானத்தில் இருந்து தமிழகம் வரும் ஓட்டுனர்கள் எல்லாம் எப்படி படிப்பார்கள். அதனால் இனிமேல் முதலில் உருது மொழியில் எழுத வேண்டும் பிறகு தமிழில் எழுத வேண்டும் பிறகு ஆங்கிலத்தில் எழுத வேண்டும் அதற்கு பிறகு இருக்கும் மிச்ச இடத்தில் இந்தியில் எழுதினால் போதும்.

எப்படியும் இந்திய அரசு தமிழகத்துக்கு என்று எதுவும் செய்வதாக இல்லை ஆகவே இனி எல்லா தேவைகளுக்கும் பாக்கிட்தானை நம்பி தான் தமிழகம் வாழப்போகின்றது. அப்படி இருக்கையில் அந்த பாக்கிட்தானின் ஓட்டுனர்கள் தமிழகம் வரும் போது படிக்க வசதியாக மைல் கல்கள் இருக்க வேண்டாமா. எவ்வளவு மை ஆகிவிடப்போகின்றது இந்திக்கு ஆகும் அளவில் இன்னும் ஒரு வீச்சு அவ்வளவு தானே.