Sunday, October 30, 2011

ஸ்ரீவித்யா ஐந்தாம் ஆண்டு நினைவு


அமைதிப்பயணம் தொடர்கிறது 5ஆம் ஆண்டாக

Saturday, September 10, 2011

நரேந்திர மோடியை தூக்கில் போட வேண்டும் என்று சுப்பிரமண்ணிய சாமி சொல்கிறார்

இராசீவு கொலை வழக்கில் விசாரணை முடியாமல் கருப்பு சட்டத்தினால் பிண்ணப்பட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரும் அந்த மூவரையும் தூக்கில் தான் தொங்கவிட வேண்டும் என்று கோரும் சாமி, 4 நாட்களில் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி ஆயிரகணக்கில் கொன்ற நரேந்திர மோடியை தூக்கில் ஏற்ற வேண்டும் என்று ஏன் சொல்லவில்லை.

கொலை சதியில் ஈடுபட்ட செயலுக்கு அவன் வாங்கிய மின்கலமும் அதைவிற்ற கடைக்காரரும் சாட்சி என்றால். மோடி இந்த கொலைகளுக்கு திட்டம் தீட்டியதில் இருந்து, அழகாக கச்சிதமாக எப்படி படிப்படியாக நடத்தினார் என்று அவரது பரிவாரங்கள் என்டி தொலைக்காட்சிக்கு அளித்த சாட்சியங்களில் வெட்ட வெளிச்சமாகியது.

மின்கலன் வாங்கி கொடுத்ததுக்கு தூக்கு தண்டனை என்றால், முன் நின்று திட்டங்கள் தீட்டி, அதிகாரத்தையும் அரசாங்கத்தையும் பயன்படுத்தி தனக்கு கொள்கை அளவில் பிடிக்காது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அயிரம் ஆயிரம் மக்களை சாட்சியோடு கொன்ற நரேந்திர மோடியை என்ன செய்வது என்று சொல்வாரா.

அல்லது கொள்கையில் நானும் மோடியுடன் இணைந்து நிற்கிறேன் அதனால் என்னையும் மோடியுடன் சேர்த்து தூக்கில் போட்டு கொல்லுங்கள் என்று சட்டம் சொல்வாரா என்று பார்ப்போம். "நீங்கள் சொல்வது எல்லாம் நடக்காது, நாங்கள் சொல்வது மட்டும் தான் நடக்கும் என்று என்ன ஆனவமாக சொல்கிறார்". அது சரி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் சொல்வது தானே நடக்கிறாது.

Thursday, September 1, 2011

இந்தியர்கள் அல்லாத தமிழர்கள் வெளியேற வேண்டும் சுப்பிரமணிய சாமி: அதை தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சொல்லட்டும் சாமி

சாமிக்கு தமிழ் எழுதபடிக்க கூட தெரியாது, வீட்டிலும் மற்றும் எங்கிலும் ஆங்கிலம் தான் அவருக்கு தாய் மொழி. இன்றைகும் பல முன்ண்ணி இதழ்களில் இருந்து வலை பூக்கள் வரை இவரை அமெரிக்காவின் கை கூலி, சைனாவின் கை கூலி, மற்றும் உளவாளி என்றும் அல்லவா சொல்கிறது. அதனால் அவசர அவசரமாக தன்னை இந்தியன் என்று அவரே அவருக்கு சான்றிதழ் வழங்கும் வேலையாக சொல்லிக்கொள்ளட்டும்.

உங்களை போன்ற இந்தியரும் அல்லாத தமிழரும் அல்லாதோர் சொல்ல தேவை இல்லை. ஒரு பல்கலைகழக வாத்தியார் இவ்வளவு செழிப்பாக வேறு எந்த வருமானமும் இல்லாமல் கட்சி நடத்தமுடியும் என்றால் இன்றைக்கு தமிழகத்தில் 80,000 கட்சிக்கள் இருந்துக்கொண்டு இருக்கும். போய் உங்கள் உளவாளி வேலையை பார்த்து காசுபார்கிற வேலையை பாருங்கள். ஆடு நனையுதேன்னு ஓநாய் உட்கார்ந்துக்கொண்டு அழுததாம் அந்த கதையா இல்ல இருக்கு உங்க பேச்சு.

Wednesday, August 24, 2011

இன்னமும் இது போல் எத்தனை துக்ளக் வேலைகளை செயலலிதா செய்வாரோ

1) சமச்சீர் கல்வியை உடைப்பது, அப்படி சமச்சீர் கல்வி என்று வந்துவிட்டால் பின்னர் எதை சொல்லி கோடிக்கணக்கில் ஒன்றாம் இரண்டாம் வகுப்பில் சேர்க்க பணம் கேட்க்கமுடியும் இந்த கல்வி வணிகர்களால். முதலாளிகளின் எலும்புத்துண்டுக்கு ஓடுவது தானே செயலலிதாவின் தலையாய கடன்.

2) கருணாநிதி ஆட்சியில் கட்டினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக புதிய சட்ட சபையை நாளுக்கு ஒன்றாக அறிவிப்பது என்றைக்கு நிற்குமோ. 5 கோடி மதிப்பில் பழைய திட்டத்தில் புதிய புத்தகங்கள் பெங்களூரு பதிப்பகத்தில் தயாராகிவிட்டது அதற்காகவாது சமச்சீர் கல்வியை தடை செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மன்றாடிய அதிமுக அரசு, 1500 கோடி செலவில் உருவான கட்டிடத்தை அடுத்த வள்ளுவர் கோட்டமாக மாற்ற முயற்சிப்பதை எந்த வகையில் சரி என்று சொல்வாரா. ஒரே காரணம் அந்த கட்டிடத்தில் அரசு நடத்தினால் சீக்கிரம் உயிர் போகும் என்று சொன்ன சோதிடத்தின் மகிமை அல்லவா அது.

3) நீயுடன் புவியீர்ப்பு விசையை கண்டு பிடித்ததை போல, அதிமுக அரசும் அதன் அறிவியலர்களும் சேர்ந்து ஒரு அரிய கண்டுபிடிப்பினை கண்டுபிடித்தது தான் இந்த மூன்றாமது, தமிழ் புத்தாண்டு. 1972ல் உலகறிய சொன்ன விலக்கத்தை எல்லாம் கடலில் வீசி விட்டு, பாம்பு நிலாவை விழுங்குவது தான் சந்திர கிரகணம் என்றும் அதே பாம்பு சூரியனை விழுங்கினால் சூரிய கிரகணம் என்றும் மறுபடியும் சொல்லிக்கொடுக்க ஏற்பாடுகளை செய்த்துகொண்டுள்ளார் போலும்.

இன்னமும் 4 ஆண்டுகாலம் இந்த மாதிரியான துக்ளக் தனங்களை செயலலிதாவும் அவரது வழிகாட்டி சோவும் சேர்ந்து நடத்துவதை பார்த்து இரசிக்கலாம்.


Friday, May 6, 2011

பின்லாடனைக் கொன்ற முறை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது - பதிவுகளுக்கு பதில்

இப்படி ஒரு வாதம் தேவை தானா, இத்த வாதமே அபத்தமாக இல்லை.

எந்த அடிப்படையில் இந்த மனிதனின் மறைவிற்கும், இறந்த பிறகு நடக்கும் கருமகாரியங்களும் நடக்கவில்லை என்று வாதாடுகிறார்கள்.

அகிம்சையே போதித்து அகிம்சையாகவே வாந்த காந்திக்கு உலகம் கொடுத்த பரிசு மரணம். அப்படி கொன்றவர்கள் எல்லாம் இந்தியாவின் இப்போதைய அரசியல் தலைவர்கள் இந்தியாவை 6 ஆண்டுகள் ஆண்டார்கள் இப்போது சில மாநிலங்களில் ஆளுகிறார்கள்.

காந்தியை விட உயர்ந்த கொள்கைகளை கொண்டவர் தான் இந்த ஒசாமாவா

அல்லது உலக நீதிக்காகவும் நலத்திற்காகவும் தன்னை வருத்திக்கொண்டவரா இந்த ஒசாமா.

சென்னை மாநகரில் சுற்றித்திரியும் பொறுக்கிகளுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம். அவர்களிடம் பணம் இல்லை ஒசாமாவிடம் நிறைய பணம் இருக்கிறது அவ்வளவு தான்.

நாளை பின்ன இந்த சென்னை பொறுக்கிகளை கொன்றால் இப்படி தான் வரிந்துகட்டிக்கொண்டு பதிவர்கள் எழுதுவார்களா என்று பார்ப்போம்.

இவர்கள் பார்வை தான் என்ன என்று அன்றைக்கு வெளுக்கும்........இதில் மத அடையாளங்கள் வேறு. என்ன கொடுமை சரவணா..........

அமெரிக்காவை போல் இலங்கையும் வல்லரசு மற்றும் நல்லரசு ஆனது - பின் லேடன் வேட்டையும் இலங்கை தன்நிலை விளக்கமும்.

அமெரிக்கா ஒசாமாவை வேட்டையாடியதும், இலங்கை அமெரிக்கா இலங்கையை விமர்சிக்கும் தகுதியை இழந்துவிட்டது என்று சான்றிதழ்கள் வழங்கியுள்ளது.

விபு தலைவரை பிடிப்பதாக சொல்லி தனது சொந்த மண்ணில், 140000 மக்களை ஓரிரு நாட்களில் கொன்று குவித்த இலங்கை அமெரிக்காவை விமர்சனம் செய்கிறது.

அடுத்த நாட்டு மண்ணில் தங்கி அமெரிக்காவுக்கு எதிராகவும் அமெரிக்க மக்களை குறிவத்தும் தொடர்ந்து தாக்குதல்களை திட்டமிட்டும் தனது ஏவல் ஆட்களை வைத்து அவ்வப்போது அசம்பாவிதங்களையும் கட்டவிழ்த்தும் வந்த ஒசாமாவை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்க செய்த செலவுகளுக்கு அளவு இருக்காது.

இந்த செயலுக்குகாக ஈனப்பயல்கள் மட்டுமே அரசாளும் பாக்கிட்த்தானத்திற்கு எல்லாம் கொட்டிக்கொட்டு கொடுத்து உதவிய நாடி நின்றது.

உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வதும் முதுகில் குத்துவதும் தான் பாக்கிட்த்தானத்திற்கு என்றைக்கும் வழக்கம். வழக்கம் போல் அள்ளிவீசிய காசுகளை பொறுக்கிக்கொண்டு அலட்சியமாகவே பதிலை சொல்லி வந்தது.

ஒரே இரவில் 3 இலட்சம் ஆப்கான் தீவிரவாதிகள் காணாமல் போனது நமக்கு நினைவில் இருக்கலாம். அந்த மக்களை பாக்கிட்த்தானின் ஆக்கிரமிப்பு காசுமீரத்திற்கு சாமார்த்தியமாக இடம் மாற்றிவிட்டு அமெரிக்காவிடம் அவர்களை எல்லாம் அழித்துவிட்டதாக சொல்லி அமோகமாக பொருளையும் உதவிகளையும் அள்ளினார்கள் அன்று.

அந்த பொருளை எல்லாம் சுருட்டிக்கொண்டு முசாரப்பு இன்று இலண்டனில் தங்கிக்கொண்டு அவர் மட்டும்மே உருப்பினராக இருக்கும் ஒரு அரசியல் கட்சியை துவங்க்கி ஆட்சியை பிடிக்கப்போவதாக சபதம்விட்டுக்கொண்டும் இருக்கிறார்.

அவருக்கு அடுத்து அவரது பாதையில் அடுத்தவர் அதே போல் ஒரு பெரும் பொருளை திரட்டிகொள்ள வேண்டு காத்திருக்கும் வேளையில் அமெரிக்காவின் ஆட்சி பீடத்தில் மாற்றம் நிகழ்ந்தது.

மாற்றத்தின் முதல் பதிலே பிடித்து கொடு இல்லை அடிவிழும் என்ற எச்சரிக்கை. முடியாது என்று அடம்பிடிக்கும் வேளையில் எத்தனுக்கு எல்லாம் நான் எத்தன் எனக்கேவா என்று என்ன என்ன எல்லாம் செய்யலாமோ அதை எல்லாம் செய்து. மிகவும் இரகசியமாக பொதுமக்களோ அடுத்த வீட்டில் வசிப்பவருக்கு கூட எந்த பாதிப்பும் இல்லாம் கச்சிதமாக கொல்லப்பட்டான் ஒசாமா.

அடுத்தவர் நாடு தானே எவன் செத்தால் எனக்கு என்ன என்று விடாமல் மிகவும் பொறுப்புடனும், மனிதாபி மானத்துடனும் நடந்து கொண்ட இந்த செயலும், சொந்த மண்ணில் தனது சொந்த மக்கள் 140000 மக்களை கொன்ற செயலும் ஒன்று என்று சொல்கிறது இலங்கை.

முன்னர் இலங்கையின் இராணுவ தளபதி மட்டும் தான் இப்படி மண்டையில் அடிப்பட்ட பைத்தியகாரர் போல் அவ்வப்போது பிதற்றி உளரி கொட்டுவார். இப்போது ஒட்டு மொத்த இலங்கையும் இப்படி உளரி கொட்டுகிறது.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது போலும்

இப்படி எல்லம் பேசினால் இலங்கை புனித பூமியாக மாற்றிவிடும் என்று எந்த அடிமுட்டாளோ இலங்கைக்கு அறிவுரை வழங்கிருப்பார் போலும்.

இன்று பாக்கிட்த்தானத்தின் தோல் வெளுத்துள்ளது, கூடிய விரைவில் உங்களது நிறமும் இதோ போல் வெளுக்கும் அன்றைக்கு இப்போது எப்படி சீனாவின் காலை பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறதோ அதே போல் நீங்கள் பிடித்து கெஞ்ச ஆளே இல்லாமல் தவிக்கும் காலம் வரும், அன்றைகு என்ன உளருகிறீர்கள் என்று பார்ப்போம்.

ஆமாம் இந்தியா கூட ஏதோ வல்லரசு நல்லரசு என்று தன்னை சொல்லிக்கொண்டு இருகிறது. அமெரிக்கா போல் இல்லை என்றாலும், இறாவின் நடவடிக்கையாகவாது இப்படி தாவுதை தண்டிக்கிறதா என்று பார்ப்போம்............ செய்யுமா வல்லரசு நல்லரசு இந்தியா...............

Monday, April 11, 2011

தமிழகம் மறுபடியும் கசப்பு மருந்து சாப்பிட தயாராகிக்கொண்டு இருக்கிறது

அதிமுக தான் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் போலும். யாரை கேட்டாலும் பிறகு அந்த குடும்ப அரசியலில் இருந்து தமிழகம் விடுபட வேண்டாமா என்று கேட்கிறார்கள்.

சரி குடும்ப அரசியல் இல்லாமல் போனால் மன்னார்குடி அரசியல். என்ன பெரிதாக மக்களுக்கு மாற்றம் வந்துவிட போகிறது. இன்றைகு குடி ஒரு பெரிய பிரச்சனை என்றும் அதன் பொருட்டாவது குடும்ப அரசியலை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றது அவர்களது விருப்பம்.

டாசுமார்க்கை இவ்வளவு பெரிய நிறுவனமாக மன்னார்குடி குடும்பம் அல்லவா ஆக்கியது.

அன்றைக்கு மன்னார்குடி குடும்பம் தொடங்கிய சாராய தொழில் இன்றைக்கும் ஆட்சியில் இல்லை என்றாலும் அமோகமாக அல்லவா நடக்கிறது. அந்த அளவிற்கு கட்சி பேதம் இல்லாமல் தொழில் செய்யும் கசப்பு மருந்து கட்சி தான் திமுகவின் குடும்ப அரசியலுக்கு மாற்றாக அமைய போகிறதா....

மன்னார்குடி குடும்பகும் பெரியகுளம் குடும்பமும் சென்றமுறை அடித்த கொட்டம் இருக்கிறதே அப்பா என்ன கொடுமை. உதாரணத்திற்கு நினைவுக்கு கொண்டு வருவதற்காக ஒன்றை சொல்வோம்.

படித்த பட்டதாரிகளும் மற்ற அனைத்து படிப்பு நிலைகளிலும் என்றைக்காவது அரசு பணி கிடைக்காதா என்று அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலைக்காக காத்துக்கொண்டு இருக்கும் பட்டதாரிகளை அதுவும் பெண் பிள்ளைகளை டாசுமார்க்கு ஊத்திக்கொடுக்கும் வேலைக்கு அனுப்ப அரசு ஆணை அனுப்பினார்களே அதை மக்கள் மறந்துவிட்டார்கள் போலும்............

இந்த செய்கையின் மூலம் அதிமுக என்ன சொல்கிறது, நீங்கள் எல்லாம் படித்து என்ன செய்ய போகிறீர்கள் டாசுமார்க்கில் ஊத்திக்கொடுக்கத்தான் இந்த படிப்பு எல்லாம் உதவும் என்று நடுத்தர வர்கத்தையே அல்லவா கேலி செய்த்தார்கள். என்ன ஒரு அகங்காரமான செயல் அந்த செயல். இந்த மன்னார்குடி குடும்பம் தான் குடும்ப அரசியலில் இருந்து விடிவு கொடுக்கப்போகிறதாம்.

மன்னார்குடி குடும்பம் இந்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்ள தொழில்களை வாங்கிப்போடுவதில் மும்முரமாக இருந்தது. தங்கும் விடுதிகள் முதல் அந்த அந்த இடங்களில் என்ன என்ன தொழில் நல்ல நிலைக்கு நிலைத்து இருக்குமோ அந்த மாதிரியான தொழில்களை வாங்கிப்போட்டுள்ளது. இத்த செயலுக்காக நடராசனுக்கு அமெரிக்காவில் ஒரு பெரிய அணியே வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறது.

அதுவும் எப்படி தமிழகத்தில் மக்களின் வரிப்பணத்தை ஏய்த்து அந்த பணத்தை அமெரிக்காவில் கொண்டு கொட்டும் இந்த மன்னார்குடி குடும்பம் தான் குடும்ப அரசியலுக்கு மாற்றாக அமைய போகின்றதாமாம்.

திமுக குடும்பம் தான் குடும்பமாம் மன்னார்குடி குடும்பம் பெரியகுளம் குடும்பம் எல்லாம் குடும்பம் இல்லையாம் செயலலிதா சொல்கிறார், மன்னார்குடி குடும்பம், குடும்பம் குடும்பமாக அந்த கூட்டத்தில் உட்கார்ந்துக்கொண்டு அதையும் கைகொட்டி இரசித்து கை தட்டுகிறது. என்ன நகைச்சுவை உணர்வு அவர்களுக்கு.

சென்றமுறை அதிமுக வந்ததும் திமுக கசானாவை காலி செய்துவிட்டு தான் சென்றது. ஆகவே எல்லோரும் கசப்பு மருந்து சாப்பிடுங்கள் என்று நடுத்தர மக்களின் பணிக்கொடையிலே கைவத்து அதிலே எலிகாப்டர் ஏறி கை அசைத்து நன்றி என்று சொல்லி ஐதிராபாத்திற்கும் கொடா நாட்டிற்கும் மாறி மாறி ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார் இந்த கும்பகர்ணியம்மா.

இந்த முறை இமாலய இலவசங்களை கொடுத்து கசானா மட்டும் இல்லை உலக வங்கிக்கு தமிழகத்தையே விற்று விட்டார்கள் அதனால் வெறும் கசப்பு மருந்து மட்டும் போதாது, இனி தமிழகத்தில் அதுவும் நடுத்தர வர்கத்தினர் ஒரு வரும் சாப்பாடு கூட சாப்பிடாமல் 365 நாளும் விரதம் இருக்கவேண்டும் என்று கட்டளை இடுவார். பிறகு மிச்சமாகும் அந்த காசுகளை கொண்டு மன்னார்குடி குடும்பம் டாசுமார்க்கை தொடர்ந்து தமிழகம் எங்கும் நிர்வாண நடன அரங்குகளை தொடங்கி அதற்கு அரசு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்களை பணியமர்த்தும். கேட்டால் ஏன் அது எல்லாம் வேலை இல்லையா என்று நக்கலாக வேறு கேட்ப்பார்கள் மன்னார்குடி குடும்பமும் பெரியகுளம் குடும்பமும்.

ஆட்சி என்றால் என்ன என்றே தெரியாவர் எல்லாம் அதிமுகவின் பொது செயலர், அவர்களின் அரசில் திட்டங்களை எல்லாம் தீட்ட தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்கள் சி.பொன்னையனை போல. இந்த கூட்டம் வந்து அங்கே அமர்ந்ததும் இந்திர குமாரி வகையராக்களும், கராத்தே தியாகராசன்களும் தான் தினமும் களமாடுவார்கள்.

செயலலிதா ஒரு மூலையில் முடங்கிப்போய் கிடப்பார், மன்னார்குடியும் பெரியகுளமும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் தமிழகத்தை ஏற்றுமதி செய்துக்கொண்டு இருக்கும். தமிழகத்தில் இப்போது மனை நிலங்கள் எல்லாம் நல்லவிலைக்கு ஏற்றம் கொண்டுள்ளது. அதனால் அந்த மனைகளை மக்களிடம் இருந்து அடித்து பிடுக்கும் வேலையை முதல் முதலே மன்னார்குடி குடும்பம் இறங்கும். கொடு இல்லை என்றால் வீட்டிற்கு வண்டி வரும் என்று மிரட்டி வெறும் 1000 ரூபாய்களுக்கு விற்றதாக சொல்லி எழுதிவாங்குவார்கள்.

ஏன் என்று கேட்டால் வக்கீல் விசயனை 10 போர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலே விரட்டி விரட்டி வெட்டினார்களே அதுபோல வெட்டுவார்கள் இந்த மன்னார்குடி குடும்பத்தார்கள்.

தப்பி தவறி மத்திய அரசுக்கு சொல்வோம் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என்று சொல்லிக்கொண்டு வந்தால் மணிசங்கர் ஐயரை வண்டியிலே ஓட ஓட விரட்டி வெட்டினார்களே அது போல அழகாக போட்டு தள்ளுவார்கள் இந்த மன்னார்குடி குடும்பத்தார்கள்.

இது எல்லாம் சரியாக வராது என்று ஆளுனரிடம் செல்லலாம் என்று சென்றால், அங்கே என்னை மான பங்கபடுத்தினார்கள் என்று மன்னார்குடி குடும்பம் ஒரு பெரிய கூட்டத்தை அழைத்துவந்து வழக்கு போட்டு அந்த ஆளுனரை வீட்டிற்கு அனுப்பிவிட்டி பாத்திமா பீவிவை மறுபடியும் கொண்டு வந்து வையுங்கள் என்று மத்திய அரசுக்கு ஆணை அனுப்புவார்கள்.

அதிமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் தண்ணீர் பஞ்சம் வரும், அப்படி இந்த முறையும் வந்தால் எடியூரப்பா ஒரு ஏமாற்றுகாரன் அச்சுதன் ஒரு அசட்டு பேர்வழி என்று ஏகவசனம் பேசி இன்னமும் பஞ்சம் தலைவிரித்தாட வழி வகுப்பார்.

சென்ற முறை பனிக்கர் வெறும் யானைக்கு மட்டும் தான் புணர்வு யாகம் நடத்தவேண்டும் என்று சொன்னார். இந்த முறை ஆடு கோழியில் இருந்து டைனோசரசு வரை எல்லாம் முது மலை காட்டுக்குள் அசுவமேத யாகமே நடக்கும்.

சந்திரலேகா முதத்தில் அமிலத்தை ஊற்றி சிபிக்கு நிறுவனத்தை அமுக்க நினைத்ததை போல் இந்த முறை யார் யாருக்கு எல்லாம் அமில மழையோ கடவுளுக்கோ வெளிச்சம். ச்டெர்லைட் நிறுவனம் ஏற்கனவே வைக்கோவுக்கு அமிலம் ஊற்ற தயாராகிக்கொண்டு இருக்கிறது. இன்னமுன் எந்தனையை தமிழகம் பார்க்க போகின்றதோ.......

இதை எல்லாம் தப்பு என்று யாராவது சொல்லி ஊர்வலம் அது இது என்று நடத்தினால் சென்னையில் திமுக பேரணியில் பத்திரிக்கை நண்பர்கள் கதறிய கதறல் நினைவில் இல்லையா உங்களுக்கு எல்லாம். இந்த மன்னார்குடி குடும்ப அரசியல் தான் திமுக குடும்ப அரசியலுக்கு மாற்றாம் மக்கள் நினைகிறார்களாம். பாவம் இவர்களுக்கு எல்லாம் இவைகள் யாவும் மறந்து விட்டது போலும்.

என்ன கேட்டால் அந்த அந்த ஊரில் நிற்கு சுயேச்சை மக்களை வெற்றி பெற செய்ய வேண்டும். எந்த கட்சியும் எங்களுக்கு வேண்டாம் என்று தெளிவாக சொல்ல வேண்டும். அப்படி பெருவாரியாக சுயேட்சைகளே வெற்றிபெறும் கால் இந்த அறிவுகெட்ட அரசியல் வாதிகள் கொஞ்சமாவது மக்களை பார்த்து பயம் கொள்வார்கள். இல்லையேல் கசப்பு மருந்த நமக்கு கொடுத்துவிட்டு நன்றாக பட்டை நாமத்தை சாத்திவிட்டு மன்னார்குடி அமெரிக்காவிலும் குடும்ப அரசியல் சிங்கப்பூரிலும் சென்று மறைவார்கள்..............

Tuesday, April 5, 2011

நாடு என்றால் இப்படி இருக்கனும் - சப்பான்

தனக்கு பழிவாங்க வேண்டும் என்று ஓர் இரவில் 140000 மக்களை கொல்வது எல்லாம் சாதணை ஆகாது, இப்படி நாட்டின் அத்தியா அவசிய காலத்தில் போர்கால நடவடிக்கையாக நடந்து காட்ட வேண்டும். நல்ல வேளை அங்க கல்மாடி இல்லை, இருந்து இருந்தால் ஆவ்...........

சென்னை மற்றும் நகர்புரங்களில் திமுக அதிமுக அதிக வாக்குகளை பெற என்ன செய்ய வேண்டும்.

எத்தனையோ இலவசங்களை போட்டி போட்டுக்கொண்டு திமுகவும் அதிமுகவும் அறிவிக்கின்றது. இவைகள் எல்லாம் கீழ் தட்டு மக்களை மட்டுமே கவரும் விதமாக இருக்கிறது. ஆனால், தேர்தலில் வெற்றி வாய்ப்பை நிர்னயிக்கும் சக்தியாக அமையும் நடுத்தர வர்கத்தை கவரும் விதத்தில் எந்த ஒரு இலவசமும் இல்லை.

45% முதல் 55% விகிதம் வரை கட்சிக்காரர்களின் ஓட்டு தான் விழிமே, வெற்றிகு வித்திடும் அந்த 10 முத 15% வரை உள்ள வாக்குகளை பெற்றால் தான் வெற்றி. அந்த வாக்குகளை கொடுப்பவர்களாக இருக்கும் நடுதர வர்கத்தினரை கவரும் விதமாக இவர்கள் எதுவும் அறிவிக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இன்றைய நடுதர குடும்பத்தின் தேவை என்ன, எங்க செல்ல வேண்டும் என்றாலும் உடனே ஆட்டோ பிடித்து தான் செல்ல வேண்டும். அப்படி சொல்லும் ஆட்டோக்கு அழும் காசு இவ்வளவு அவ்வளவு என்று இல்லை. சொல்ல முடியாத அளவில் கொட்டுகிறார்கள் அவர்கள். அந்த ஆட்டோ இனிமேல் இலவசம் என்று எந்த கட்சி சொல்கிறதோ அந்த கட்சிக்கு நடுத்தர வர்கத்தின் 15 முதல் அதிகபட்சமாக 25% வரை இதற்கு ஓட்டளிக்ககூடும். ஆலோசிப்பார்களா இருவரும்.................

Friday, April 1, 2011

இலங்கை இப்படி உலக கிண்ணத்தை வெல்ல நினைக்காமல் இருந்தால் சரி தான்

இராசபட்ச்சே மனமோகனை கூப்பிட்டு, இந்தா பாருங்க உங்க பசங்க சரியா விளையாடாம என்ன செய்வாங்கலோ ஏது செய்வாங்களோ அது எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா இலங்கை தான் கிண்ணத்தை வெல்லனும். அப்படி மட்டும் நடக்குல, சீனாவையும் பாக்கிட்த்தானத்தையும் கொண்டு வந்து உங்க நாட்டு கால் அடியில வச்சு கல்பாக்கம் அணுமின் உலையை சப்பான்ல உடஞ்சது போல உடைக்க வச்சுடுவேன்னு மிரட்ட. மனமோகனும், இக்கி இக்கி அப்படி எல்லாம் ஒன்னும் செஞ்சு புடாதீங்க, என்ன உங்க பசங்க வெல்லனும் அம்புட்டு தானே என்று சொல்லி இந்திய வீரர்களை நாட்டு பற்றை காட்டி மிரட்டி உருட்டி வைக்காமல் இருக்கனுமே.

இந்தியாவுக்கு தான் சீனா, பாக்கிட்த்தானம் கொல்லையில வரும்ன்னு சொன்னா என்ன வேண்டுமுனாலும் செய்வாங்களே.......

இந்தியா பாக்கிட்த்தான் அரைஇறுதி கிரிகெட்போட்டி - குட்டி பகை தாய் உறவாம்

இந்த போட்டி நடக்கப்போகிறது என்று முடிவானது முதல் போட்டியின் கடைசி பந்துவரை பரபரப்புக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை.

போட்டி நடந்த மைத்தானத்திற்கு போட்டி நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்னமே வந்துவிடவேண்டும் என்ற கட்டாயத்தில் அனைவரும் வரவழைத்ததும்.

போட்டியை கானவந்த பிரபலங்கள் முதல் அடி மட்ட இரசிகன் வரை அனைவரும் விரல் நகம் இழந்த படியாக போட்டியை இரசித்ததை பார்க்க முடிந்தது.

மைதானத்தை சுற்றி விமான எதிர்ப்பு பீரங்க படை பாதுகாப்பில் போட்டி நடந்தது என்று எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. 8+3 மணி நேரமும் என்னவாது நடந்து விடுமோ என்ற தவிப்பில் இந்திய பாதுகாப்பு துறை அலரியப்படி இயங்கியது தான் யாருக்கும் தெரியுமா.

வீட்டில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் ஒரு கதவு போட்டி மூடி மறைத்துவிட்டு சிரித்துக்கொண்டே வாங்க என்று சொல்வது போல் அல்லவா இந்த போட்டியை இந்தியா நடத்திகொடுத்துள்ளது.

இந்த போட்டியை கான கிலானி எதற்கு வரவேண்டும். இத்தனை கெடுபிடிகளுக்கு இடையே அவரை வர சொல்லி இவ்வளவு செலவுகளை இந்தியா செய்யத்தான் வேண்டுமா என்ன.

இதற்கு பேச்சு நடக்கும் போதே முடியாது என்று சொன்னால் என்ன.

அப்படி என்ன பாக்கிட்த்தானம் என்ன நமது நண்பனா, நம்மை அசந்த சந்தர்ப்பத்தில் கழுத்தை நெரித்துகொல்ல நேரம் பார்த்துக்கொண்டு இருக்கும் ஓநாய் அல்லவா அவர்கள். அவர்களுக்கு ஏன் இவ்வளவு மரியாதையும் பாதுக்காப்பும்.

இதே சோனியா, மன்மோகன் சிங்கை அவர்கள் அரசியல் நடத்தும் நாடாளுமன்றத்திலேயே முடித்துவிடும் படி நாடாளுமன்றம் வரை ஆளை ஏவிய பாக்கிட்த்தானத்தின் அதிபருக்கா இந்த மரியாதையும் பாதுகாப்பும்.

ஆடுகளத்திலே இந்திய வீரர்கள் காட்டிய வீராப்பில் 100ல் ஒரு பங்குகூட இந்த அரசியல்வாதிகளுக்கு இல்லையே. உலகக்கிண்ணம் கூட வேண்டாம் இந்த ஆட்டத்தில் நாங்கள் வென்றால் போதும் என்று வீரர்கள் மட்டும் அல்ல, முழு இந்தியாவும் உணர்வதும் சொல்வதும் உங்களுக்கு மட்டும் உறைக்காமல் போனது ஏன். உண்மையிலே அரசியல்வாதிகள் என்றால் மானம் வெட்கம் ஈவு இரக்கம் எல்லாம் அற்று போனவர்கள் என்று சொல்வது சரிதான் போலும்.

கடைசியாக மும்பையில் நுழைந்து பொதுமக்களை கொன்று குவித்து அட்டகாசம் செய்த செயல்கள் வரை தீர்க்கப்படாமல் இருக்கிறது. அப்படி இருந்தும் எப்படி உங்களால் இப்படி நயந்து நடந்துகொள்ளமுடிகிறது. வெட்கம், வேதனை, பரிதாபம்.

2003ல் சச்சினும் சேவாக்கும் விளாசிய விளாசல் இந்த போட்டில் கானும். இல்லை என்றால் 7 முறை வாய்ப்பு கொடுத்து சச்சின் வெளியேறுவாரா......

அன்றைகு சச்சினுக்கு பிறகு இந்தியாவின் வெற்றிக்கு திராவிட்டு பொறுப்பாக அழைத்து சென்றார், ஆனால் இந்த போட்டியில் அணியை கடைசிவரை கொண்டு செல்ல வேண்டிய தலைவனே எனக்கு என்ன என்று ஆடினார் போல் தான் இருந்தது.

சேவாக்கிற்கு என்றைக்குமே கவனம் இருந்தது இல்லை. அப்படி அவர் அடிக்கும் ஓட்டங்கள் தான் அணிக்கு ஊக்கம் அளிக்கும், என்ன இன்னமும் இரு 30 அல்லது 40 ஓட்டங்கள் எடுத்து இருந்தால் இன்னமும் ஒரு வலுவான நிலையில் நமது போராட்டம் இருந்து இருக்கும்.....

முன்னாப் பட்டேலை ஒருவரும் மனிதனாகக்கூட மதித்தது இல்லை இது வரை நடந்த ஆட்டங்களில். ஆனால் இந்த போட்டியில் அவரிடம் அதிகம் திணரியதை பார்க்க முடிந்தது. மனிதன் ஆருதலடைந்திருப்பார்.....

எங்கள் அணியில் ஓரம் என்ற ஒருவர் இருக்கிறார் அவர் பந்துகளை மிகவும் நேராக வீசுவார் என்று பகிடி செய்யப்பட்ட நேரா அனைவரது பாரட்டையும் பெற்றது நல்ல மாற்றம். மனிதன் தனது வீச்சில் இன்னமும் அதிகமான வித்தியாசங்களை காட்டி குழப்ப பழகவேண்டும்......

சிக்கலான நேரங்களில் நிதானமாகவும் பொறுப்பாக விளையாடும் யுவராச்சு ஏமாந்தது நம்மையும் ஏமாற்றியதும் கோபமே.....

2003ல் பெற்ற வெற்றியை போல் இது இமாலய வெற்றி இல்லை என்றாலும் நல்ல வெற்றி என்ன கடைசி பந்து வரையில் விட்டிருக்க வேண்டாம்..........

இது எல்லாம் பரவாயில்லை, இறுதி போட்டிக்கு இலங்கை அதிபர் வந்து பார்க்கப்போகிறாராமே. கருணாநிதியையும் உடன் சென்று பார்க்க சொல்லுவோம் சரியாக இருக்கும்.

Monday, March 21, 2011

மானம் கெட்ட இந்தியா, லிபியா பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது, நீலி கண்ணீர் வடிக்கிறாயோ......

வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருக்கும் செய்தியை பாருங்கள்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=393754&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

"லிபியாவில் தற்போதைய வன்முறை நிகழ்வுகள், விமானத் தாக்குதல்கள் ஆகியவற்றை மிகவும் கவலையுடன் கவனித்து வருகிறோம். வன்முறைகளையும் வேறுபாடுகளை களைய படைகளை பயன்படுத்துவதையும் கைவிட வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொள்கிறது. ஆயுத மோதலை நிறுத்தவேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை." என்று எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.

ஏன் இலங்கையில் இப்படி தானே நடந்தது, அப்போது எல்லாம் என்ன செய்தீர்கள் நீங்கள். இப்போது கடாபீ மக்களை படுகொலை செய்வதை போல் தானே அன்று ஒரு இலட்சம் மக்களை ஒரிரு நினங்களில் கொன்றார்கள். அப்போது எல்லாம் இந்தியா தன் பங்குக்கு ஆளையும், ஆயுதங்களையும், காட்டிக்கொடுக்கும் செயலையும் எந்த வெட்கமும் இல்லாமல் செய்துவிட்டு. இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடித்துக்காட்டுகிறீர்களோ.

ஏன் இவர்கள் தான் மனிதர்களா, அங்கே இலங்கையில் இறந்தவர்கள் எல்லாம் என்ன எள்ளும் புல்லும்மா.........மனம் கெட்டவர்களே, நீங்கள் எல்லாம் எந்த கதிக்கு ஆளாவீர்களோ...அந்த கடவுளுக்கே வெளிச்சம்.........

Sunday, March 20, 2011

ஏழைகளை நம்பவைத்து ஏமாற்றபோகும் கலைஞர்

பிறந்ததில் இருந்து பார்வை தெரியாத ஒருவனுக்கு பார்வையை கொடுத்து உலகின் அழகை நன்றாக இரசிக்க வைத்துவிட்டு, அவன் இழந்ததை பெற்றுவிட்ட மகிழ்ச்சி கலைவதற்குள் அவனது பார்வையை பிடுங்கினால் என்ன அவதிகுள்ளாவானோ அப்படி அல்லவா அமையபோகிறது இந்த தேர்தல் ஏழை மக்களுக்கு.

உலகில் அனேக நாடுகளின் பொருளாதாரம் வேறு இந்தியாவின் பொருளாதாரம் வேறு.

உதாரணத்திற்கு அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம். அமெரிக்காவில் கிடைக்கும் சராசரி சம்பளத்தில் அனேக அமெரிக்கர்கள் உண்ணும் உணவு எளிதில் வாங்கி உண்ண முடியும். பொரும் பணக்காரர்களும் நடுத்தர மற்றும் அடிதட்டு மக்களும் உண்ணும் உணவுக்கு அதிக வித்தியாசம் கிடையாது.

எளிய வார்த்தைகளில் சொன்னால் கையேந்து பவனில் இருந்து விலை உயர்ந்த உணவகங்களுக்கும் உணவு தரத்தில் அதிக வித்தியாசம் இல்லை.

அனேக உலக நாடுகளும் இப்படி தான். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் வித்தியாசம். கையேந்தி பவனில் சாப்பிட்டால் பழக்கம் இல்லாத மக்களுக்கு வாந்தியும் பேதியும் வருவது நிச்சயம். உணவுகளின் விலையை கீழ் இருந்து மேலே பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கும்.

உணவகத்தில் தான் இப்படி தான் என்று இல்லை. மக்கள் வாங்கும் அரிசியில் எத்தனை விதம், விலையிலும் தரத்திலும். அடி தட்டு மக்களும், சத்துணவு கூடத்தில் கொடுக்கும் உணவையும் எந்தனை மக்கள் சுவைத்து இருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் அந்த கூடத்தின் பக்கத்தில் செல்லும் போது அடிக்கும் வீச்சம் அனேகமனோருக்கு பரீட்சயம் இருக்கும் என்று நம்பிகிறேன்.

இப்படி ஒரு மோசமான நிலையில் இருந்த நிலையில், மலிவு விலையில் தரமான அரிசி என்று கொடுத்தார் கலைஞர். தனது தேவைக்கு போக மிச்சம் என்று மக்கள் வெளியில் விற்கும் அளவிற்கு மக்களுக்கு இன்று கிடைத்துக்கொண்டு இருக்கிறது.

இன்னமுன் எத்தனை காலத்திற்கு கிடைக்கும், ஆட்சி கலையும் வரை தான். ஆட்சி மாறியதும் செயா செய்யபோகும் முதல் வேலை, இந்த ஏழைமக்களுக்கு உள்ள அனைத்து சலுகைகளையும் தூக்குவது தான்.

அதிமுகவிற்கு தான் ஏழை என்றாலே பிடிக்காதே, அவ்வளவு வெறுப்பு அவர்களுக்கு இந்த மக்களை பார்த்தால்.

இப்படி ஒரு உணவு சொகுசை கலைஞர் மக்களுக்கு காட்டி பழக்கி இருக்கவேண்டாம், பிறகு இந்த உணவுக்காக மக்கள் ஏங்கவிடவும் வேண்டாம்.

இந்தியாவில் உணவு விலைகள் இன்று அமெரிக்காவில் விற்கும் இடாலர் விலைக்கு சமாக விற்கிறார்கள் இட்டிலியும் தோசையும் கூட. வெளி நாட்டு உணவுகளுக்கு அந்த உணவகம் தான் விலை தீர்மானிக்கும், அது அமெரிக்காவுக்கு சரி ஆனால் இந்தியாவிலும் அதே விலைக்கு என்றால் எப்படி, தலை சுற்றுகிறது......

உதாரணத்திற்கு கேஎப்சி கோழி 8 துண்டுகள் ரூ1350, அமெரிக்காவில் அதே நிறுவனம் 10 துண்டுகளை 10 இடாலர்களுக்கு கூவிக்கூவி விற்பது இந்தியாவில் எத்தனை மக்களுக்கு தெரியும்.

ஆட்சி மாற்றம் வந்தால் ஏழை மக்கள் சாப்பாடுக்கு காவடி எடுக்கப்போவது நிச்சயம்.

Friday, March 11, 2011

இலங்கையில் பின்லேடன் தலைமையில் அல்குவைதா தீவிரவாத பயிற்சி முகாம் - அமெரிக்க உளவு நிறுவனம் தகவல்

இலங்கையில் பின்லேடன் நேரடி தலைமையில் அல்குவைத்தா தீவிரவாத முகாம்கள் இரகசியமாக நடந்து வருவது அமெரிக்க உளவு நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது.

பின்லேடன் ஆப்கானிலும், பிறகு பாக்கிட்த்தணத்திலும் இருப்பதாக சந்தேகித்து தாக்குதல்களை தொடுத்த அமெரிக்க இரணுவம் இது வரை பின்லேடனை பிடிக்கவோ கொல்லவோ முடியாத நிலையில் இந்த செய்தி கசிந்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் இலங்கை அரசை விசாரித்த அமெரிக்காவை சரி கட்ட எண்ணிய இலங்கை அரசு, சமாதானத்திற்கான போரில் அழிக்கப்பட்ட புலிகள் தான் பீனிக்சு பறவையாக உயிர்த்தெழுந்து அமெரிக்கா, ஆப்ரிக்கா, அண்டார்டிக்கா என்று உள்ள தனது சாக்களுடன் இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தின் சென்னை செயின்டு சார்சி கேட்டையின் பின்புறம் இந்திய இராணுவத்தின் நேரடி பார்வையில் மீண்டும் பயிற்சியில் ஈடு படுக்கிறார்கள் என்று சொல்லி சமாளித்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.

அதுமட்டும் அல்லாது அப்படி பயிற்சி அளிப்பதை இலங்கையின் உளவு நிறுவனமும், பாக்கிட்த்தாணத்து ஐஎசுஐ நிறுவனமும், சீனாவின் உதவியோடு, சீன உளவு செயற்கை கோள் உதவியுடன் படம்பிடித்த படங்களையும் அமெரிக்காவிடம் அளித்துள்ளதாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றது.

இப்படி இலங்கை அரசு தெரிவிக்கும் செய்தியை ஒரு வேளை இந்திய அரசு மறுக்குமாயின், சீனாவிற்கு திரிகோணமலையை மொத்தமாக எழுதிக்கொடுக்கும் என்ற இரகசிய மிரட்டலையும் மனமோகன்சிங் அலுவலகத்திற்கு ஒரு தபால் அட்டை மூலம் அனுப்பியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.

இந்தியாவின் காலின் கீழ் சீனா மூக்கை நுழைப்பதையோ அல்லது பாக்கிட்த்தாணத்திற்கு இலங்கையில் தளம் அமைத்துக்கொடுப்பதையோ விரும்பாத இந்தியா, சென்னை காவலர் தலைவர் ஒருவரை மட்டுமே கொண்டு அந்த செய்தியை மென்மையாக கண்டித்து, கண்டும் கானாமலும் விட்டுவிட்டது என்றும் தெரிவிக்கின்றது.

நமக்கு என்ன, நாம் நமது வேலையை கவனிப்போம். இப்போது அதிக விவாதம் நடக்கும் செய்தி கிரிகெட்டும், திமுகவின் தேர்தல் உடன்படிக்கையும். மாய்ந்து மாய்த்து எழுதுவோம். வாழ்க இந்தியா, வளர்க அதனது குடியாட்சி.

அடடா அமெரிக்காவையும் எதெதோ சொல்லி ஏமாற்றிவிட்டார்களே இந்த இலங்கை எத்தர்கள்.................shame shame puppy shame........

நடுநிசி நாய்கள் - சைகோ ( Psycho 1998) படத்தின் உருவல்

கௌதமும் சரி, அவரது இரசிகர்களும் சரி, சிகப்பு ரோசாக்களை சொல்லி சொல்லி, நாய்கள் படம் அந்த படத்தை போல் அழகாக வந்துள்ளது என்று சொல்லி சிலிர்த்துக்கொண்டார்கள். இவ்வளவு ஏன் பாரதிராசாவையே அழைத்து மக்கள் முன்னிலையில் கருத்துக்கள் கேட்க்கும் அளவிற்கு சென்றார்கள் என்றால் பாருங்கள்.

1998க்கு முன்னால் அல்பிரடு இரிச்சுகாக்கு இந்த படத்தை எடுத்து இருந்தார். இந்த மனிதரை பற்றி தனியா ஒன்றும் நான் சொல்லி தெரிந்து கொள்வதற்கு இல்லை. திகிலும் மர்மமும் நிறைந்த திரை ஓவியங்களை வழங்கி திரைபடங்களின் போக்கில் ஒரு புதிய ஓட்டத்தை அளித்த மேதை இவர். இவரது படங்களை பார்த்தவர்களுக்கு எனது கருத்து புரியும் என்று நம்புகின்றேன்.

பிறகு 1998ல் மறுபடியும் வண்ண ஓவியமாக இந்த படம் எடுக்கப்பட்டது. அதே கதையும் திரைக்கதையும், நவீன அரங்கு தவிர.

இந்த படத்தின் தாக்கத்திலே பாலுமகேந்திரா, இந்திய அதுவும் தமிழ் கலாச்சார கலவைகளை கலக்கி மூடுபனி என்று எடுத்து இருந்தார்.

இப்படி பலவாரியாக நமக்கு நல்ல அறிமுகமான படத்தை எப்படி ஒரு புது கற்பனை என்று சொல்லிக்கொண்டு எடுத்தார் என்று தெரியவில்லை.

அதுவும், பாரதிராசாவை கூப்பிட்டு சப்பைகட்டு கட்டும் அளவிற்கு. பாக்கியராசின் திரைக்கதையில் இருந்த அந்த விறுவிறுப்பு நாய்கள் படத்தில் இல்லை, இல்லவே இல்லை. எப்போது படம் முடியும் என்று தான் இருந்தது வேறு செய்தி.

என்ன ஒரே ஒரு வித்தியாசம், தன்னை வளர்த்தவளையே... என்ற செய்தி தவிர.

பெற்றால் என்ன வளர்த்தால் என்ன அன்னை அன்னையே. அது எந்த பிறவியிலும் அந்த உறவில் எந்த மாற்றமும் கிடையாது. இது அனேகமாக அனைத்து மதமும் மனித நேயமும் ஒருங்கே சொல்லும் செய்தி. உலகின் எந்த பகுதியிலும் இந்த கருத்துக்கு மாற்று கருத்துக்கள் கிடையாது.

இடெக்கான் கெரால்டுவில் இந்த மாதிரியான செய்திகளை சோபாடே பெங்களூருவில் வரும் ஞாயிற்று கிழமை இதழில் ஆராய்ச்சி செய்ததுண்டு, 1998களில் படித்தாக நினைவு. அந்த செய்திகளை பற்றி அதிகம் அலட்டிக்கொண்டது இல்லை. ஏன் என்றால் அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் 5 உரூபாய்களுக்கு கிடைக்கும் இந்து நாள் இதழ் அங்கே அன்றைக்கு 1 உரூபாய்கு அந்த நாளில் விற்ற நாட்கள் அவை. போட்டியின் பெயரில் நடக்கிறது என்று தான் நினைத்து அலட்டிக்கொண்டது இல்லை.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு வடக்கில் வாழும் தமிழர்கள் எல்லாம், மிருகங்களாக வாழ்வதாகவும். தமிழகம் தவிர்த்த மற்ற தமிழர்கள் எல்லாம் பேய்கள் என்ற அளவிற்கு சொல்ல வந்துள்ளார் கௌதம்.

ஏன் நீங்கள் ஒரு மளையாளி அதுவும் கேரளம் விட்டு விட்டு தமிழகத்தில் திருச்சியில் பொரியியல் படித்து இப்போது படமெடுத்துக்கொண்டு இருப்பவர். ஊர் விட்டு ஊர் வந்த மளையாளிகள் எல்லாம் இப்படி பட்ட வாழ்கை தான் வாழ்கிறார்கள் என்று ஒரு சப்பை கட்டு கட்டி இன்னும் ஒரு ஆங்கில படத்தை பிரதி எடுத்து முன்னால் தலையாக வைத்து இரு வேறு படம். அந்த ஆங்கில படத்தில் இது எல்லாம் இல்லை என்று சொல்ல வேண்டியது தானே.

பாம்பின் கால் பாம்பறியும் என்றது போல் அல்லவா இருக்கிறது உங்களது பாத்திர படைப்பு. இதிலே கலைஞர் தொலைகாட்சியில் கௌதமோடு நேரடியாக கேள்வி கேட்கலாம் பாருங்கள்..........

அகில உலக ஒழுக்க காவலர்கள் காவி கரசேவகர்கள் யாரும் கௌதமையோ அல்லது அவரது படத்தில் வேலை செய்தவர்களையோ தலை முடியினை பிடித்து நடுத்தெருவில் போட்டு அடித்து துவைத்தோ(பெங்களூருவில் நடந்து போல்) அல்லது பூனாவில் பிப்ரவரி 14ல் சிற்றுண்டி கடையில் குண்டு வைத்ததை போல் ஏன் பாதுகாக்க வரவில்லை. குறைந்தது ஊடகங்களிலாவது கண்டித்து இருக்கலாம். ஒரு வேளை கௌதம் மேனன் எடுக்காமல் கௌதம் சிகாமணியாக இருந்திருந்தால் ஊர் ஊருக்கு நாயுக்கும் கழுதைக்கும் திருமணம் செய்த்து விருந்து வைத்து, கண்டித்திருப்பார்கள் போலும். என்ன ஒழுக்க காவலர்களோ, என்ன கொள்கையோ, கோட்பாடோ.........

சரி படத்திற்கு வருவோம், ஆங்கில படத்தில் வரும் கதை இது தான். கொடூர கணவனால் கொடுமை படுத்தப்பட்ட தாய் தனது மகனுக்கு மனதில் தனக்கு பாதிப்பு வந்தது போல் இனி ஒருவருக்கும் கொடுமை நடக்கக்கூடாது என்று சொல்லும் போதனையில் பாதை தவறியவனாக அனைத்து பெண்களும் மோசம் அவர்களால் தான் சமுதாயமே இப்படி ஆனது என்று நம்பி. ஒவ்வொருவராக பொரி வைத்து பிடித்து இரசித்து இரசித்து கொல்லும் கொடூரனின் கதை. இந்த கதையின் முழு முடிச்சும், அப்பாவி பையன் ஆனால் அவர்களை தீர்த்துகட்டுவதோ அவனது தாயார் என்று கதை நகரும். இறுதியில் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகும்.

தமிழில் பார்க்கும் அழகு பெண்கள் எல்லாம் எனக்கு வேண்டும் என்று நினைக்கும் தன்னிலையற்ற கதா பாத்திரம். அப்படி பல பெண்கள் வீட்டில் இருந்தும் இன்னமும் அதிக பெண்கள் வேண்டும் என்று வெளியில் அலைவது எந்த அடிப்படையில் என்று கௌதம் தான் விளக்க வேண்டும்.

ஆங்கில கதையிலும் சரி மூடுபனியிலும் சரி, கொலை உணர்வுக்கும் அப்பால் ஒரு நல்ல பெண்ணோடு வாழவேண்டும் என்ற ஒரு ஆசை அவனுள் இருப்பதாக கதையில் காட்டி இருப்பார்கள். ஆனால் நாய்கள் படத்தில் அவனுக்கு தாய்க்கு பிறகு ஒரு பெண் தேவை படுவதெல்லாம் காமத்திற்கு மட்டுமே என்று காட்டி இருப்பது திருமணத்தை விபச்சாரத்தோ ஒப்பிட்டு மகிழும் அரைவேக்காட்டுகளின் கருத்தை போல் அல்லவா இருக்கிறது.

ஈசன், நாய்கள், யுத்தம் செய் போன்ற படங்கள் தமிழகத்திற்கு சொல்லும் ஒரே ஒரு நல்ல செய்தி இது தான். மாறியுள்ள இந்த பணம் புழங்கும் சமுதாயத்தில் வரம்புக்கு மீரிய வன்செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகள் படித்துவிட்டு ஆயிர கணக்கில் பணம் சம்பாதிக்கும் அதே வேளையில் இந்த சமுதாயத்தில், அதுவும் குறிப்பாக பெண்கள் எந்தவிதமான பாதுகாப்பின்மையில் இருக்கிறார்கள் என்ற ஒரு எச்சரிக்கையாக வேண்டும் என்றால் வைத்துக்கொள்லலாம். அப்படி இருப்பினும், இப்படி ஒரு கெட்ட செய்தியை சொல்லித்தான் பயமுறுத்த வேண்டும் என்று இல்லை, இத்து மதத்தில் நரகத்தில் பிறகு எண்ணை சட்டியில் போட்டு உயிரோடு துடிக்க துடிக்க வறுத்து எடுப்பார்கள் என்று சொல்வதை போல். மாற்றாக திருக்குறளில் சொல்வதை போல் ' நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்று' என்று மகேந்திரன் பாணியில் மென்மையாக எடுக்க கற்றுக்கொள்ளுங்கள், நீங்களும் ஆசுகர் விருது பெறலாம் நாளை.

Tuesday, March 8, 2011

தமிழகம் என்ன தனி நாடா, அல்லது இந்தியாவின் ஒரு மாநிலம் தானா......

எந்த மாநிலத்திற்கும் இல்லாத ஒரு தனி மரியாதை தமிழகத்திற்கு.

இந்தியாவில் வெளிவரும் தமிழக ஊடகங்கள் தவிர மற்ற அனைத்து ஊடகங்களுக்கு தமிழக பெயர்களை உச்சரிக்க நாக்கு தடுமாறும் அது எப்படி சீன அதிபரின் பெயரை கூட அவ்வளவு இலகுவாக சொல்லும் அந்த நாக்களுக்கு தமிழகத்து பெயர்களை சொல்வதில் அப்படி ஒரு பொருப்பின்மை. உதாரணமாக தமில் மனிலா காங்கிரசு என்று அன்றைகு மூச்சுக்கு 300 தடவை சொன்னவர்கள் இல்லையா அவர்கள்.

உபியில் 5 நாடாளுமன்ற உருப்பினர்கள் கொண்ட கட்சி எல்லாம் அமைச்சுபதவி, ஆனால் 30 உருப்பினர்கள் இருந்தால் கூட வெளியில் இருந்து ஆதரவு கொடு என்ற ஆனை தமிழகத்திற்கு.

மும்பையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்தியாவின் 9/11 இது என்று மூச்சுக்கு 300 தடவை அலரியது அனைத்து ஊடகங்களும். எல்லா மத கோயில்களிலும் பூசை எல்லாம் செய்து செய்தியாக்கினார்கள் அவர்கள் எல்லாம் பிழைக்க வேண்டும் என்று.

ஆகா என்ன மனித தன்மை என்று தமிழகத்து ஊடகங்கள் கூட பெருமை பேசின. ஆனால் கிட்டதட்ட 1 1/2 இலட்சம் மக்கள் கொல்லப்படும் போது இதே ஊடகங்கள் இந்தியாவிம் நடந்த கிரிகெட்டு போட்டியினை காட்டியதும். அப்படி ஒரு நிகழ்வே நிகழவில்லை என்றது போல் கானாமல் இருந்தது தான் என்ன நீதி என்று புரியவில்லை.

ஏன் இலங்கையில் மடிந்த அந்த மக்கள் எல்லாம் மக்கள் இல்லை, அவர்களது உயிர்கள் எல்லாம் உயிர்கள் இல்லை. அவர்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா........

இங்கு இருந்து வடக்கு பயணம் சென்றால், ஆங்கிலத்தில் எந்த கேள்வியும் கேட்கமுடியாது. முதலில் வரும் பதில் ஆங்கிலம் தெரியாது. இரண்டாவதாக இந்தி தெரியாதா என்ற கேள்வி. அதுவே அவர்கள் தமிழகம் வந்தால் அவர்களுக்கு பெயர் பலகையில் இருந்து பதில் சொல்வது வரை இந்தியில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் சொல்வார்கள் தமிழகம் சென்றால் நம்மால் வண்டி பார்த்து கூட போகமுடியாது என்று.

வண்டியின் தடம் எண் முதல் தேசம் முழுவதும் ஒளிபரப்பாகும் கிரிகெட்டு விளையாட்டு போட்டிகள் வரை எல்லாமே இந்தியில் தான் இருக்கும் ஏன் அந்த கிரிகெட்டு ஓட்டங்களையும் அது போல எண்களில் காட்ட வேண்டியது தானே அதைவிடுத்து தமிழர்களுக்கும் புரியும் படி எதற்கு காட்டவேண்டும்............

வடக்கத்திய நிறுவனங்களின் தமிழக கிளைகளிலும் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் வேலைக்கு மட்டும் தமிழகத்து மக்கள் ஆனால் மேளாலர் மற்றும் மற்ற பதவிகளுக்கு எல்லாம் வடக்கத்தியர்கள். ஏன் அந்த வேலை எல்லாம் இந்த மக்கள் செய்யமாட்டார்களா. அல்லது அதிகாரம் எல்லாம் இவர்கள் செய்யக்கூடாது என்ற உயர்ந்த சிந்தனையா......

இவைகள் எல்லாம் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்,தேச பிதா காந்தியின் கொலைக்கு அந்த கட்சி 6 ஆண்டுகள் நாட்டை ஆளலாம், அன்னை இந்திராவின் கொலையை செய்தவர்களும் கூட நாட்டை ஆளலாம் ஆனால்........................அந்த ஒரு தனிமனிதனின் மேல் தமிழக காங்கிரசுகாரர்களுக்கு இவர்கள் இருவரையும் மிஞ்சின பாசம் ஏனோ தெரியவில்லை.

இந்த இலட்சணத்தில் காங்கிரசும் மற்ற வெளி மாநில கட்சிகள் எல்லாம் வரும் தேர்தலில் தனித்து நின்று தமிழகத்தை முன்னேற துடிக்கப்போகிறது. வாக்காள பெருமக்களே அந்த இந்தி கட்சிகளுக்கு உங்களின் பொன்னான வாக்குகளை அளித்து அவர்களை தமிழகத்திலே உட்கார்ந்துக்கொண்டு நம்மை எல்லாம் தமிழகத்தில் இருந்து விரட்ட ஏற்பாடு செய்யுங்கள்.

Wednesday, February 23, 2011

தினமலர் தான் ஒரு மதவாத பத்திரிக்கை என்று மறுபடியும் நிறுப்பித்துள்ளது - கோத்ரா தீர்ப்பு

தினமணி "கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு" என்ற தலைபில் செய்தி வெளியிடுகிறது.

தினமலரோ "
கோத்ரா ரயில் எரிப்பு தீர்ப்பு: 31 பேர் குற்றவாளி"
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=193444

என்று வெளியிட்டுள்ளது.
அது மட்டும் அல்ல, இது திட்டமிட்ட சதி என்று தீர்ப்பில் சொன்னதாக எங்கும் எழுதவில்லை. அடேங்கப்பா என்ன தான் மத வெறி இருந்தாலும் இப்படி செய்தி இருட்டடிப்பு அடிக்கும் வரை செல்லும் இந்த செய்தித்தாளை எல்லாம் எப்படி தான் நம்புகிறார்களோ....

Monday, February 14, 2011

சீக்கியர்களையும், பஞ்சாப்பையும் இந்தியா அழித்து ஒழிக்க வேண்டும் என்று உண்மை தமிழர்கள் விரும்புகிறார்கள் போலும்.

முள்ளிவாய்காலுக்கு பிறகு ஈழம் சம்பந்தமாக எதுவும் எழுதுவது இல்லை. காரணம் எழுத ஒன்றும் இல்லை என்று இல்லை. இந்த அளவிற்கு மனிதத்தன்மை இல்லாமல் இந்தியாவாலும் இருக்கமுடியும் என்று காட்டியது மட்டும் அல்ல. உலகுக்கே மக்களாட்சி என்றால் என்ன என்று எடுத்து சொல்லியும், உலக மக்களாட்சியின் காவலன் என்று தன்னை அடையாள படுத்திக்கொண்டு அலையும் அமெரிக்காவும் மௌனமாக இருந்ததும் தான் என்னை மௌனிக்க செய்தது.

ஈழமக்களை தானே கொன்றார்கள் நம்மை இல்லையே என்று இன்றைக்கு வேண்டும் என்றால் நிம்மதியாக இருந்துவிடலாம். ஆனால் நாளைக்கு நமக்கும் நமது சந்ததிகளுக்கும் இது தான் நடக்கும். அன்றைக்கும் இப்படியே தான் ஏதாவது ஒரு அரசியல் காரணங்களை சொல்லி அனைவரும் மண்ணை அள்ளி அவர்கள் பங்குவிற்கு வீசுவார்கள்.

அன்றைக்கு மாகாத்துமா காந்தி அகிம்சாவாதி, எந்த ஒரு உயிருக்கும் எந்த தீங்கும் விளைவிக்க கூடாது என்ற சொன்ன அவர். ஒரு நாட்டை காக்க ஒரு ஊரை பலிக்கொடுத்தால் முடியும் என்றால் அதில் தவரில்லை என்று சொன்னார்.

அந்த நீதியை தான் இன்றைக்கு பலரும் முள்ளிவாய்க்காலை இந்தியா அதன் ஆளுமையை காப்பாற்றிக்கொள்ள பலியிட்டது சரி என்று வாதிடுகிறார்கள்.

அடுத்தவர் வீட்டு பிள்ளைகள் என்றால் அனேகம் பேருக்கு எப்பவும் கிள்ளு கீரைதான். அதுவே தனது என்று வரும் போது என்ன ஆனாலும் என்று எல்லாம் வருவார்கள்.

இந்தியாவிம் மற்ற மாநிலங்களில் நிகழும் வன்முறைகளுக்கு எல்லாம் மாய்ந்து மாய்ந்து எழுதும் மக்கள் எல்லாம் கூட ஈழத்து சர்ச்சைகளில் தனக்கு என விலகி இருப்பது எதை காட்டுகிறது. அவர்களுக்கு மனித நேயம் இல்லை என்றா, இல்லை இந்தியா என்ற எல்லைக்கு அப்பால் யார் செத்தாலும் எனக்கு கவலை இல்லை என்றா. அல்லது இந்தியர்கள் அனைவரும் தான் எனது சகோதர சகோதரிகள் என்று நாங்கள் உறுதிமொழி கொண்டேமே தவிர, உலகில் உள்ள அனைவரும் இல்லை என்றா..........

நேருவின் ஆட்சியின் போது ஏற்படி பஞ்சத்தில் இருந்து இந்தியர்களை காக்க அமெரிக்கா, கப்பல் கப்பலாக பால் பொடியும், மற்ற உணவு பொருட்களை கொண்டு வந்து 4 துறைமுகங்களிலும் குவித்தபோது அவர்களின் அன்பையும் மனித நேயத்தையும் பாராட்டினோம், வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கைகள் வாசித்தோம்.

இரச்சியாவின் நண்பனாக இருக்கும் ஒரு நாட்டுக்கு அமெரிக்கா அன்று தனது உதவிகரங்களை தயக்கமோ அரசியலோ பார்க்காமல் நீட்டி மக்களை காட்ட முயன்றது. அந்த உதவிகள் எல்லாம் வேண்டாம் என்று சொல்லும் நிலையிலும் நாம் இல்லை. நேருவும் வரட்டு பிடிவாதம் பிடிக்காமல் உதவிகளை மக்களுக்காக ஏற்றுக்கொண்டார்.

அங்கே அவர்காட்டியது அவரது மனித நேயமும் அரசியல் முதிர்ச்சியும். தான் எவ்வளவு வலிமையானவர் என்றோ அல்லது போலி கௌரவமோ அவர் பார்த்து இருந்தால் இந்தியா இன்றைக்கு மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திற்கு எல்லாம் வந்திருக்காது.

அப்படி இருந்த இந்தியாவின் மக்கள் அதுவும் தமிழர்கள் தனது வீட்டு வாசலில் நடக்கும் கொலைகளை பற்றி எல்லாம் எனக்கு என்ன என்று தான் இருப்பேன் என்று சொல்வது தான் பொருத்துக்கொள்ள முடியவில்லை.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகுக்கு சொல்லிக்கொடுத்த தமிழர்கள் இன்று இந்திய எல்லையை தாண்டி எனது மனமோ, செயலோ இல்லை என்று குறுகிப்போனது ஏன்.

என்னக்கும் தான் புரியாமல் அவர்களைப்போல் நானும் கேட்கிறேன், இலங்கையில் நடந்தது அவர்கள் நாட்டு உள்விவகாரமாகவே இருந்தாலும், அந்த மக்கள் சாகட்டும் என்று முடிவெடுக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது. உதவி செய்யாமல் இருப்போம் என்று இருப்பதே தவறு, அதுவும் இல்லாமல் நானும் சேர்ந்து கொல்கிறேன் என்று களத்தில் நின்று பிஞ்சு குழந்தைகளையும் விட்டுவைக்கமல் கொன்றதோடு நில்லாமல்.

தடுப்பு முகாம்களில் அடைத்துவைத்து புதிய நாசிக்கொள்கைகளை நடைமுறைபடுத்துவதை வேடிக்கைபார்த்துக்கொண்டும். ஐநாவின் நாயகம் வந்து இத்த மாதிரியான நவீன தடுப்புமுகாம்களை உலகில் வேறு எங்கும் பார்க்கமுடியாது என்று சொல்ல வைத்ததும்.

இந்து இராம் இந்து பத்திரிக்கை சார்பில் இலங்கையினை பார்வையிட்டு இப்போது தான் எனக்கு மகிழ்சியாக இருக்கிறது என்றும் எழுதவைத்தது அல்லவா இந்தியா.

நடக்கும் படுகொலையை தடுக்க வக்கில்லாத இத்தியாவிற்கு போருக்கு பிறகு நாடு அமைதியாக இருக்கிறது என்று சொல்ல வெட்கமாக இல்லை. அரசுக்கு தான் வெட்கம் இல்லை, மக்களுக்கும் கூடவா வெட்கம் இல்லாமல் போனது.

ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம் தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிற்கு இரண்டு இளைஞர்களை தமிழர்கள் தரவேண்டும் அதுவும் ஒரு ஆண் ஒரு பெண், ஆணை நாட்டின் ஆளுமையை காப்பாற்ற பலிகொடுக்க வேண்டும், பெண்களை அந்த வேலையை செய்யப்போவோருக்கு போக பொருளாக கொடுக்க வேண்டும் என்று கேட்டல் இந்த உண்மை தமிழர்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு அரசுக்கு தனது பிள்ளைகளை கொடுப்பார்கள். அதுவும் இரண்டு மட்டும் போதுமா என்னிடம் இன்னமும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றா சொல்வார்கள்.

அடுத்த மதத்து மக்கள் படுகொலை செய்யப்படும் போதும், அடுத்த மாநிலத்து மக்கள் மடியும் போதும் சரி, இப்படி ஒரு மனட்பான்மையோடு மக்கள் பேசுவதும் எழுதுவதும் எந்தவிதத்தில் நீதி என்று தெரியவில்லை.

இந்தியாவின் எதிரி பாக்கிட்தானம், அங்கே பூகம்பம் வந்து மக்கள் மடிந்த போது இந்திய இராணுவத்தை அனுப்பி மக்களுக்கு உதவ சொன்னது இந்தியா. அதுவும் இந்தியாவின் பாராளுமன்றம் வரை வந்து வன்மம் காட்டிய இந்தியாவின் எதிரி நாட்டில் வாழும் அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக. பாராட்ட வேண்டிய செய்கை. அதுவும் இந்தியாவின் மீசி 3 முறை இராணுவ தாக்குதல்களை தொடுத்த எதிரி நாட்டின் மக்களின் மேல் இந்தியா அக்கரை காட்டுவது உண்மையில் பாராட்ட வேண்டிய ஒன்று தான்.

இப்படி எந்தவித முகாந்தமும் இல்லாத அப்பாவி மக்கள் ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று குவித்தது எந்தவிதத்தில் சரி என்று வாதாடுகிறார்கள் என்று எனக்கு கொஞ்சம் கூட விளங்க இல்லை.

ஈராக்கில் சதாமின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளின் விளைவாக பொருளாதார தடைவிதிக்கப்பட்டு இருந்த நேரத்தில் உணவுக்காகவும் மருந்துக்காவும் எண்ணை என்ற கொள்கைக்கு ஆதரவு அளிக்க இந்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டார்கள். அந்த ஈவும் இரக்கமும் தமிழர்களின் பால் வாராமல் போனது ஏன் என்று விளக்குவார்களா இந்த உண்மை தமிழர்கள்.

சொமாலியா கடற்கொள்ளையர்கள் வேறு எதோ ஒரு நாட்டின் கப்பலை கடத்திய போது வீரு கொண்டு எழுந்த இந்திய கப்பற்படை அந்த கொள்ளையர்களை சிறைபிடித்து கப்பலை காப்பாற்றியது. அதே கடற்படை அன்றாடம் கொல்லப்படும் தமிழக மீனவர்களை, அவர்கள் தான் கொல்கிறார்களே ஏன் போகிறீர்கள் என்று உபதேசம் செய்கிறார்கள். உண்மை தமிழர்களுக்கு இந்த செய்திகள் கண்களில் படுவது இல்லையா. அல்லது சில மீனவர்களை பலிகொடுத்தால் இந்திய ஆளுமைக்கு தானே நல்லது என்று மௌனித்து இருக்கிறார்களா.

ஆசுதிரேலியாவில் சீக்கியர்களை தலை முடியினை சரித்து அவமானபடுத்திய மாணவர்களை காப்பாற்றிய பிறகு தான் எனக்கு தூக்கமே வந்தது என்று சொல்கிறார் இந்திய பிரதமர். அந்த மனிதனுக்கு தனது மக்கள் பால் உள்ள உணர்வுகள் தமிழர்களுக்குள் இல்லாமல் போனது எப்படி. அடி இலங்கை மக்களை விடுங்கள் அவர்கள் தான் எல்லைக்கு அப்பால் உள்ளார்கள், நமது மீனவர்களுக்காகவாது குரல் கொடுத்தார்களா. இல்லை ஏன் என்றால் அவர்கள் எல்லாம் உண்மை தமிழர்கள், அதையும் தாண்டி உண்மை இந்தியர்கள் ஆயிற்றே.

முடிந்தால் குரல் கொடுங்கள் அது மனித நேயத்திற்கு நீங்கள் செய்யும் தொண்டு, அது கூட எதற்கு செய்யவேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் இந்த பக்கம் செய்திகளை விட்டு விடுங்கள். அதைவிடுத்து இந்திய ஆளுமை, அவர்கள் இதை செய்ததால் அவர்களை கொன்றது எல்லாம் சரி என்று எல்லாம் ஆராய்ச்சிக்கட்டுரைகள் எல்லாம் வேண்டாம்.

இந்திய சட்டப்படி தன்னை தானே கொல்ல முற்படுவது கூட சட்டபடி குற்றமாகும், அப்படி இருக்க ஒன்றறை இலட்சம் மக்களை கொன்றது சரியே என்று வாதாட முற்படுவது, அந்த கொலைகளை செய்தவர்களைவிட மிகவும் மோசமான குற்றம்.

இல்லை நாங்கள் சொல்வது தான் சரி என்று நீங்கள் சொன்னால், தலைப்பில் சொன்னது போல் சீக்கியர்களையும் பஞ்சாப்பையையும் அழித்து ஒழித்து விடவேண்டும் என்று மறைமுகமாக கூட அல்ல பகிரங்கமாகவே நீங்கள் அனைவரும் கோரிக்கைவிடுவது என ஆகும்.

Tuesday, January 25, 2011

மந்திர புன்னகை -- ஒரே காதல் மலையாள படமும்.


இந்த படத்தை பார்த்த மக்கள் அனைவருக்கும் மனதிற்குள் ஒரு இருக்கம். இப்படியும் நடக்குமா அதனால் இப்படி மனது பாதிக்குமா. என்ன அருமையான ஒரு கதை பின்னணி என்று திகைத்து தான் போவார்கள். எனக்கும் அப்படி தான் இருந்தது. பிறகு கதையின் மத்தியில் வந்த பிறகு இது ஏதோ ஒரு படத்தை நினைவுக்கு கொண்டு வருவது உணர்ந்தேன்.

ஒரே காதல் படத்தில் மம்முட்டியும், மீராவும் நடித்த படத்தின் பிரதி என்று தெரிந்தது.

ஒரே காதல் படத்தின் கதை இது தான், ஒரே தொகுப்பு வீட்டில் குடியிருக்கும் இரண்டு குடித்தனம். அதில் மீரா வாழவே வழியின்றி வாழும் ஒரு நடுத்தர வர்கம். அதிலே அதிமேதாவியான பொருளாதார மேதையான மம்முட்டி. எந்த அளவிற்கு மேதாவி என்றால் உயிர் போகும் தருவாயில் இருக்கும் பாட்டி தன்னை பார்த்தால் இன்னமும் போகாமலே இருக்கும் அந்த உயிர் தன்னை பார்க்கவில்லை என்றால் சீக்கிரம் போய்விடும் என்று இருக்கும் ஒரு மேதாவிதனம் வாய்ந்த ஒரு பாத்திரம்.

காய்ச்சலில் தவிக்கும் தனது மகனின் வைதியத்திற்கு பணம் இல்லை என்று தவிக்கும் தாயின் தவிப்பை அனாயசமாக சரி செய்வதோடு வேலை இல்லை அதலால் தான் இந்த நிலை என்று நிற்கும் பாத்திரமாக மீரா.

அவளுக்கு காலம் அறிந்து பணவுதவியும், வேலையும் அனாயசமாக வாங்கித்தரும் பாத்திரமாக மம்முட்டி.

இந்த பரிவத்தனையில் ஒரு காலகட்டத்தில் தன்னையே இழக்க நேருகிறது மீராவிற்கு.

இதற்கு ஆயிரத்து எட்டு காரணங்கள் சொன்னாலும், சராசரி மனிதனால் ஒத்துகொள்ள முடியாத காரியமாக நிகழ்ந்தாலும். கனவனின் கவனத்திற்கு செல்லாமல் மற்றும் ஒரு குழந்தைக்கு தாயாகுகிறாள் மீரா.

அந்த நிகழ்வில் இந்த குழந்தையை தந்தையாக மம்முட்டி போற்ற வேண்டும் என்று மீரா நினைக்க, அது எல்லாம் ஒரு கால நிகழ்வு தான் மற்றபடி சொந்த பந்தம் எல்லாம் இல்லை என்று மம்முட்டி வாதாட அதுவும் நித்தமும் குடியுடன் இருக்கும் அந்த பாத்திரத்தின் சிந்தாந்தம் மீராவின் மனதை சிதைக்கிறது. முடிவு மீரா பைத்தியமாகிறாள்.

கனவனின் இடையராத கவணிப்பும் அரவனைப்பும் அவளை மீட்டு வருகிறது. அந்த கால கட்டத்திற்குள் அன்பு பாசம் நேசம் எல்லாம் என்ன விலை என்று கேட்டு வந்த மம்முட்டியின் வாழ்க்கையில் மறுபடியும் மீராவின் நேசம் வேண்டும் என்று தவிக்கின்றது.

நித்த குடியாக உள்ள அந்த மம்முட்டி மீராவை தேடி செலிகிறான். ஆனால் கிடைத்தபாடில்லை. ஒருவரும் எதிர்பார்க்கா வண்ணம் மீராவின் கணவனை பார்கிறான் மம்முட்டி.

எப்பவோ செய்த உதவியின் பால் அவன் நன்றியோடு அழைக்க அவனும் தனது தேடுதலுக்கு மீராவை சந்திக்க, பிறகு இராசாபாசமாகிறது மறுபடியும்.

அதுவரையில் காளியினை பூசித்து வரும் மீரா தன்னை எந்த காலத்திலும் காப்பாறும் என்று நினைபவளை கைவிட்ட நிகழ்வில் காளி படத்தின் உடைந்த கண்ணாடியுடன் மம்முட்டியை கொன்றுவிடும் முடிவோடு தேடி செல்கிறாள் மீரா.

என்ன தான் அறிவு சொன்னாலும், தன்னையும் தனது குழந்தையும் ஏற்றுக்கொண்டு வாழ நினைக்கும் மம்முட்டியை கொல்லாமல் இனிமேல் கணவனுடன் போய் வாழ முடியாது என்று தனது நாவலை முடிக்கிறார் அந்த ஒரே காதல் கதையில்.

இந்த கதையில் வரும் காதலன் ஒரு தனி பாத்திரம், மீரா அம்மா பாத்திரம், பைத்தியம் பையன் என்று தனியாக பிரித்துக்கொண்டு கதையை மாற்றி அமைத்துக்கொண்டார் கருப்பையா.

மற்றபடி ஒரே காதலின் திரைக்கதைக்கும் மந்திர புன்னகைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 2007ல் மலையாளத்தில் வந்த இந்த படத்தின் தழுவலே இந்த மந்திர புன்னகை.

ஒரே காதலில் வரும் இரம்யா கிருட்னனின் பாத்திரம் கருப்பையாவின் அப்பா பாத்திரம், அவள் கூறும் அத்தனை வசனும் அடிக்கு அடி பிசக்காமல் இவர் கூறுவார்.

மற்றபடி மொழியாக்கத்தில் வரும் அத்தனை அம்சங்களையும் கொண்டு அருமையாக கயாண்டுள்ளார் கருப்பையா.

மம்முட்டி ஒரு பொருளாதார அதிமேதாவி என்றால் கருப்பையா ஒரு கட்டிட வடிவமைப்பு வல்லுனன் அவ்வளவு தான். ஆக்குசு போர்டு பல்கலையில் சொற்பொழிவு நிகழ்த்தும் அந்த பாத்திரம் கருப்பையாவாக கட்டிடங்களை அனாயசமாக வடிவமைத்து கொடுக்கிறது அவ்வளவு தான்.

இத்த காளி மற்றும் அனைத்து சாமிகளையும் நம்பினேன் எதுவும் கைகொடுக்கவில்லை என்று மீரா கூறும் வசனங்களை அந்த கண்ணாடியை உடைக்கும் தனது வெளிபாடில் காட்டியிள்ளார் கருப்பையா.

படைப்பாளிகளின் படைப்பை குற்றம் சொன்னால் அவர்களுக்கு வரும் கோபம் நீதியானே, ஆனால் அதே சமயத்தில். அடுத்தவரின் படைப்பை அப்படியே களவாடி இது என்னுடைய படைப்பு என்று சுட்டிக்காடும் போது எமது மேல் வரும் கோபமும் சரி என்று ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை. முடிந்தால் இல்லை என்று வாதிடலாம்..............

Sunday, January 9, 2011

ஆட்ட நாயகன் - இன்னமும் எத்தனை முறை தான் இந்த படத்தையே திருப்பி திருப்பி எடுப்பார்கள்.


Legends of the Fall ன்னு ஒரு ஆங்கிலப்படம், இந்த படத்தின் இன்னும் ஒரு பிரதி தான் இந்த படமும். மூலப்படத்தில் இருக்கும் கதையில் சின்ன சின்ன மாற்றங்களை மட்டும் செய்துவிட்டு அதன் திரைக்கதையே அப்படியே அப்படமாக தமிழில் எடுத்து இருக்கும் படம் இந்த படம்.

அழ தெரியாத ஒரு நடிகனை கொண்டு இடைவேளை வரையில் அழ வைக்காமலே படத்தை எடுத்துவிட்டு. அதற்கு பிறகு ஆதி அழும் இடம் எல்லாம் என்ன கொடுமை சரவண என்று தான் இருக்கிறது.

ஏழுமலை, ஆகா, இப்படி பல பெயர்களில் ஏற்கனவே இந்த படம் வந்துள்ளது. இதோ இன்னும் ஒரு படம். எப்போது தான் புதிதாக தானாக சிந்தித்து எடுப்பார்களோ.

Saturday, January 8, 2011

அலைகற்றை ஊழல் ராசாக்குவே இவ்வளவு என்றால் - இவரால் பயன் பெற்ற நிறுவனங்களுக்கு எவ்வளவு கிடைத்து இருக்கும்....................

ராசா 10 கோடியுடன்

பதிவர் சீமாச்சு அவர்களின் இந்த பதிவில் http://seemachu.blogspot.com/2011/01/109.html அழகாக ஒரு காட்சி பொருளில் ஊழல் எவ்வளவு என்று எடுத்து காட்டியுள்ளார் அருமையாக. அந்த கடைசி படம் பார்க்கும் போது அடக்கடவுளே சும்மாகாட்டியும் வச்சுகோன்னு கொடுத்ததே இவ்வளவு என்றால். மக்கள் சேவை, ஏழை மக்களில் மழையில் மாட்டிக்கொண்டால் வீட்டிற்கு எப்படி சொல்வார்கள் என்று யோசித்தேன் இந்த அலை பேசி நிறுவனத்தை துவங்கினேன் என்று நீலி கண்ணீர் வடித்தவர்களின் கோரமுகம் இப்படி தான் இருக்கும் போலும்.

(அதே ராசா 1760 ஆயிரம் கோடியுடன்
அப்போ அந்த முதளாலிகளின் அளவு தமிழ் நாடு அளவில் இருக்குமா...........
படங்கள் பதிவர் சீமாச்சு பதிவில் இருந்து.)

மக்களை எப்போதுமே லஞ்சம் வாங்கும் அரசியல் வாதிகளை மட்டுமே காட்டிக்கொடுக்கும் ஊடகங்கள், இத்த முதளாலிகளின் அசுர கொள்ளைகளை சொல்ல மறுப்பது ஏன்.

ஏன் என்றால், தன்னிடம் பிடுங்கி திண்ணும் இந்த அரசியல்வாதிகளின் கொட்டத்தை அடக்க இந்த முதளாலிகளின் தூண்டுதலில் பேரில் அல்லவா இந்த ஊடகங்கள் என்னமோ மக்கள் தொண்டு புரிந்துவிட்டதாக ஆர்பரித்துகொள்கிறது.

இப்படி எழுதிய ஊடகத்துக்கு அரசியல் என்ன மரியாதை செய்யும் என்று சொல்லித்தெரிய வேண்டியது இல்ல. அவை எல்லாவற்றிலும் இருந்து இந்த ஊடகங்களை தங்களுடைய சொந்த நலனுக்காக இந்த முதளாலிகள் பாதுகாக்கிறார்கள்.

நாம் மக்கள் தான் பாவம் இந்த சதிகள் எல்லாம் தெரியாமல் மாட்டிக்கொண்ட ராசாவையும் இன்னமும் இது சம்மந்த பட்டவகளை கரித்துக்கொண்டும் சபித்துக்கொண்டும் இருப்போம் என்று முதளாலிகள் போட்ட கணக்கு தவறாமல் நடக்கிறது.

வாழ்க மக்களாட்சியும் அதை வளர்க்கும் தொழில் அதிபர்களும். 3ஆம் தர நாடான இந்தியாவிலே இப்படி என்றால் வல்லரசு நாடுகளின் முதளாலிகள் எப்படி பணம் வைத்து இருப்பார்கள். அடேங்கப்பா............