Saturday, March 28, 2015

இந்திய அணி தோல்விக்கு இது தான் காரணம்

2003ல் நடந்த உகோ ஆட்டமும் 2015ல் நடந்த ஆட்டமும் நமக்கு ஒரே வடுவைத்தான் விதைத்து சென்றுள்ளது.

2003ல் இந்திய அணி விளையாடிய ஆட்டங்களில் 2ல் மட்டும் தான் தோல்வியை தழுவிதது அது முதல் ஆட்டமும் கடைசி ஆட்டமும்.

இரண்டுமே ஆசியிடம் அந்த அடி இந்த அடி இல்ல கேகேகேவலமான தோல்விகள்.

இப்பவும் அதேபோல அதே ஆசியுடன் அதே வடு..................... இனிமே ஆசியுடன் நாம விளையாட போகும் அனைத்து ஆட்டங்களுக்கும் அன்டை நாட்டாரின் மொக்க மொக்க படம் போட்டு நம்மை எல்லாம் தாளிக்க போவது உறுதி.

30 ஓவர்கள் வரை சரியாகவும் சீராகவும் சென்ற ஆட்டம் திடீர் என தடம் மாறிய இரகசியம் என்ன. இந்த ஆட்டம் தவிர மற்ற எல்லா ஆட்டங்களிலும் இதே சமியும் யாதவும் ஒழுங்கா தானே வீசினாங்க இங்க மட்டும் என்ன வந்து தாம். அதுவும் 30 ஓவர்களுக்கு பிறகு அப்படி என்ன தான் ஆனதாம்......

காரணம் இதுவாக தான் இருக்கனும், கொஞ்சம் நஞ்சம் பாவமா நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. வரிசையா எத்தனை எத்தனை பாவங்கள். அதுவும் இந்த ஆட்சியில் நடக்கும் பாவங்கள் அனைத்தும் தாக்கினதின் உச்சம் தான் இந்த தோல்வி....................

இந்த தோல்வி ஒரு உதாரணம் தான், பொய்களை அடிப்படையாக கொண்டு கட்டிய நயவஞ்சக கோட்டை இதற்கும் ஒரு அவசர சட்டம் கொண்டு வந்து நாங்கள் கெலித்துவிட்டோம் என்று கடையில் ஒரு கிண்ணத்தை வாங்கி படம் எடுத்து நாங்கள்  நல்லவர்கள் வல்லவர்கள் எங்களது ஆட்சியினால் தான் இது எல்லாம் கிடைத்து என்று பெருமையாக சொல்லிக்க வேண்டியது தான்..............

இன்னமும் இவர்கள் செய்யும் பாவத்தால் இன்னமும் என்ன என்ன இழப்புகள் இப்படி வர போகுதோ.......... இவர்கள் தான் வேண்டும் என்று வேண்டி விரும்பி வாங்கின வரம் இல்ல நல்ல அனுபவிங்க மக்கா நல்ல அனுபவிங்க..........

Tuesday, March 24, 2015

இவனுக்கு தண்ணியில கண்டமும் இவன் ரொம்ப நல்லவண்டா படமும்

பாவம் யாரோ ஒரு கதையாசிரியர் இருவருக்கும் ஒரே கதையை விற்று கல்லா கட்டி இருக்கிறார்.

கதை திரைக்கதை வசனம் என எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க படத்தின் பேரையும் சிற்சில சங்கதிகளை மட்டும் மாற்றி ஒரே நேரத்தில் இரண்டும் வெளியாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

காலக்கொடுமை அனுபவிங்க............

Tuesday, March 10, 2015

JK எனும் நண்பனின் வாழ்க்கை - திரை விமர்சனம்

தமிழில் இப்படி ஒரு படம் வந்து நீண்ட நாட்கள் சென்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குனர்கள் என்றும் இளமை என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறது இந்த படம். பார்த்திபனை தொடர்ந்து சேரன் இப்போது வந்து இருக்கும் புதிய நுட்பத்தினையும் லகுவாக கையாளுவோம் என்ற ஆளுமை படத்தின் முதல் காட்சிமுதலே தெரிகின்றது.

கதை நமது நண்பனின் கதையை போல் அப்படி ஒரு நெருக்கம். படத்தின் முடிவு அவ்வளவு தெளிவாக நண்பனை நினைவு கூறுதல் என்று பின்னி இருக்கிறார் சேரன்.

அனேகமாக இப்படி ஒரு படமாகத்தான் மாயக்கண்ணாடியை மனதில் நினைத்து எடுத்து இருந்து இருப்பார் என்று இப்போது தோன்றுகிறது.

தோல்விகளை கண்டு துவளாதே என்று சும்மா சொன்னால் போதாது துவளாமல் இருக்க முடியுமா என்று அழகாக காட்டியும் இருக்கிறார்.

நாயகன் மௌனித்து நிற்கும் இடங்கள் எல்லாம் கவிதை, கிராமத்திற்கு சென்று அந்த அம்மாவை பார்த்ததும் ஒரு மௌனம். பிறகு அவரது கணவரை வயல்வெளியில் பார்க்கும் போது அதே மௌனம்.

பின்னர் திரும்பி வரும்போதும் செஞ்சது சரிதானே என்று கேட்கும் போது செஞ்சது சரிதான் அனால் ஏன் என்று கேட்கும் தோழியிடம் ஒரு மௌனம் ஆனால் நமக்கு மட்டும் முடிச்சியை அவிழ்கிறார் அழகு.

நித்தியாவிற்கு வேலை கொடுக்கும் செயல்கள் அழகு, வள்ளுவனின் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பலுக்கு காட்சி விளக்கம்.

பொதுவாக வணிகருக்கு பார்ப்பது எல்லாம் வாணிபம் என்று சொல்வாகள் அதை மிகவும் அழகாக காட்டி இருப்பது அழகு.

கதை பறக்கும் வேகமும் அதனுடன் பறக்கும் திரைகதையும் பார்த்து வெகு நாட்கள் கடந்துவிட்டது போலும், படம் அப்படி ஒரு வேகம்.

வசனங்கள் எளிமையாகவும் பொருத்தமாகவும், குறிப்பாக உங்களையே நம்பி இருக்கிற அம்மா அப்பாவை ஏமாத்திடாதிங்க என்ற இடம் மிகவும் அருமை.

ஆங்கிலத்தில் 7 பௌன்டு என்று ஒரு படம் வந்தது, அந்த படத்தை பார்க்கும் போது இதுவே தமிழில் எடுத்து இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்ததுண்டு. இரண்டு படங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு படங்கள், இது தான் சேரனின் திறமை.

 நல்ல நாவலை படித்தால் அது நீண்ட நாட்களில் மனதி நிற்கும் என்று சொல்வார்கள் அது போல இந்த படம் நிலைத்து நிற்கும்.

நித்தியாவிடம் உண்மையை சொல்லும் நிமிடத்திற்கு முன்னால் இருவரும் இரண்டு தனித்தனி தளத்தில் சிந்திப்பதை அழகா காட்டியுள்ளார்.

அவன் கண்ணில் வரும் கண்ணீர் பார்ப்பவர்களின் கண்ணில் பனிக்க வைக்கிறது. அதற்கு பிறகு காட்டபடும் அவனது இறுகிய முகம் இன்னமும் காட்சியில் தீவிரம் கூட்டுகிறது.

இவ்வளவு நாள் எங்கேயா ஒளிந்து கொண்டு இருந்தீர் சேரன் என்று சத்தமாக கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது.

விட்டுக்கொடுப்பது தான் வீரம் என்று சொல்வார்கள் ஆனால் விட்டுக்கொடுப்பதிலும் லாபம் வேண்டும் என்று நினைத்து பெறுவது கதையில் அழகு, இங்கு கதைக்குள் என்டமூரே வீரேந்திரனாத்து எட்டிபார்கிறார்.

இருவரும் ஒரே நிறத்தில் உடை என்ற கிண்டலுக்கு பிறகு வரும் காட்சி கவிதை அழகு, அதை தொடர்ந்து வரும் காட்சிகள் எல்லாம் அழகு..........

என்ன செயக்குமாரின் வீட்டிலும் நித்தியாவின் வீட்டிலும் இன்னமும் கொஞ்சம் காட்சிகள் அமைத்து இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும், ஒன்றும் மோசம் இல்லை, கடைசியில் வரும் பிரியாவிடை அவைகளை எல்லாம் பூர்த்தி செய்கிறது.

22 பிமேல் கோட்டயத்தில் பார்த்த நித்தியாதான இவர் என்று ஆச்சர்யபடவைக்கும் நடிப்பு. எங்கேயும் எப்போதும் போலவே ஒரு பாத்திரம் தான் இருந்தாலும் அழகாக நடித்து இருக்கிறார் செயக்குமாராக.

வாழ்த்துகள் சேரன், மேலும் பல வெற்றிக்களை குவிக்க இந்த வெற்றி நிச்சயம் ஊக்கமாக இருக்கும்.