Monday, September 25, 2017

கீரைகாரி மற்றும் தயிர்காரி இவர்களிடம் இருந்து சுருட்டிய 50,000 கோடியை அம்பாணிக்கும் அதாணியும் கொடுக்கின்றது பாசக அரசு

கீரைகாரி, தயிர்காரி, இட்லி சுட்டுவிற்கும் ஆயா, வடை சுட்டு விற்கும் ஆயாக்களை மிரட்டி பணத்தை வங்கியில் போடவில்லை என்றால் அவ்வளவும் சொல்லாத பணமாகவும் கள்ளப்பணமாகவும் அறிவிக்கப்படும் என்று மிரட்டோ மிரட்டு என்று மிரட்டி பிடிங்கிய பணத்தை அதாணிக்கும் அம்பாணிக்கு கொடுக்கப்போவதாக பாசக அரசு அறிவித்து இருக்கிறது.

மோடியின் பொருளாதார கொள்கையும் அவரது 15 ஆண்டுகால முதல்வர் பணியின் அனுபவங்களையும் உலக பொருளாதார பல்கலைகழகங்கள் கற்றுக்கொள்ள சிறந்த பாடம் என்றும். உலகில் மோடியை போன்றதொரு அறிவாளியோ மற்றும் புன்னியம் செய்தவர்களோ உலகில் வேறு யாரும் இல்லை என்றதும் பாசகவின் அதன் பின்னால் இருந்து ஆட்டி வைக்கும் சங்க பரிவாரங்களின் கருத்துமாக தொடர்ந்து வைக்கப்படுகின்றது.

இப்படி ஈடு இணையில்லா தலைவரின் பொருளாதார சீர் திருத்தங்களின் விளைவாக சரிந்து கிடக்கும் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த 50,000 கோடியை செலவு செய்யும் என்று அருண் செட்லி அறிவித்துள்ளார்.

பொதுவாக இந்திய அரசு இலங்கையின் உதவிக்காக கப்பல் துறைமுக அமைப்பதில் உதவ 50,000 கோடி ரூபாய்கள் உதவிகள் வழங்குகின்றது என்ற ஒரு அறிவிப்பு வந்தால், அந்த துறைமுகம் அமைக்கும் பொறுப்பை அதாணிக்கோ அல்லது அம்பாணிக்கோ இலங்கை அரசு ஒப்பந்தம் வழங்கும்.

அதாவது இலங்கையின் உதவிக்காக இந்தியா அறிவித்த 50,000 கோடி ரூபாய் நேராக அவர்களின் பைக்கு செல்லும். செய்த வேலைக்கு தானே பணம் கொடுக்கிறார்கள் அதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்க கூடும்.

இலங்கைக்கோ மியான்மர்கோ நேபாளத்திற்கோ ஆப்ரிக்க நாடுகளோ இந்தியா எங்களுக்கு இவ்வளவு பண உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்பது கிடையாது. அப்படி கேட்காத இடங்களில் இவர்களே ஏன் பணத்தை அள்ளிக்கொண்டு போய் கொட்டுகிறார்கள் என்றது அவர்களுக்கே வெளிச்சம். இந்த கேள்வியை எச்சி ராசாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு தான் ஆண்டி இந்தியன் என்று அவர் விளிக்க துவங்கினார்.

அந்த வகையில் இந்த முறை 50,000 கோடியை அள்ளி வீசி சரிந்துகிடக்கும் பொருளாதாரத்தை உயர்த்தி பிடிப்போம் என்று அருண் செட்லி அறிவித்து இருக்கிறார்.

இது பாசகாவின் கொள்கை முடிவு அதில் தலையிட நீதிமன்றங்களுக்கோ அல்லது எவருக்கும் உரிமை இல்லை என்று தான் சங்க பரிவாரங்கள் நம்புகின்றது, நாங்களும் அதை ஒப்புக்கொள்கின்றோம் வேறு வழியில்லாமல்.

ஆனால் இந்த 50,000 கோடி எங்கு இருந்து எடுத்து செலவுக்கு வீசப்போகின்றது சங்க பரிவாரங்கள். அவர்களின் சொந்த பணமாக இருந்தால் ஒருவரும் கேள்வி கேட்க தேவை இல்லை தான், அமெரிக்காவில் 3.79 லிட்டர் பெட்ரோல் ரூ 146.25 விற்கிறது. மிஞ்சிப்போனால் 3.79 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 16 சந்தையின் விலையை பொருத்து மாறுகின்றது. ஆனால் இந்தியாவில் இதே 3.79 லிட்டர் பெட்ரோல் ரூ 265.30க்கு விற்கின்றது. ஏன் அமெரிக்க விலையைவிட இந்தியாவின் பெற்றோல்லுக்கு இவ்வளவு விலை என்று கேட்டதற்கு சங்க பரிவார அரசு நிறைய கழிப்பறைகளை கட்டியது இன்னும் அதிகம் கட்ட வேண்டி இருக்கிறது அந்த திட்டத்திற்கு பணம் சேர்க்கவே இந்த அதி அதிக பெட்ரோல் விலை என்று வியாக்கியானம் சொல்கின்றது.

ஒன்றும் இல்லாத கழிப்பறைகளை கட்டவே மக்கள் இவ்வளவு பணம் செலவு செய்ய வைக்கப்படுகின்றார்கள் என்றால் இந்த 50,000 கோடி ரூபாயை எங்கே இருந்து பெறப்பட போகின்றது என்றால். கீரைகாரி, தயிர்காரி, இட்லி விற்கும் ஆயா, வடை சுட்டு விற்கும் ஆயாவை மிரட்டி வங்கியில் வலுக்கட்டாயமாக வைப்பு வைக்கப்பட்ட பணத்தையும் அளவுக்கு அதிகமாக விற்கப்படும் விலைவாசிகளிலும் பெறப்பட்ட பணத்தை திட்டங்களின் பெயரில் சங்கபரிவார அரசு கொட்டி வீணடிக்கப்படுகின்றது சுவாக.