Wednesday, December 27, 2017

துல்லிய தாக்குதல் மோடி சொல்லி நடத்தப்படவில்லை போலும் - பாசக

மோடி ஒரே ஒரு முறை இலங்கைக்கு தொலை பேசியில் கூப்பிட்டார் உடனே இலங்கை தூக்கில் போட இருந்த மீனவர்களை தாயகம் திருப்பி அனுப்பினார் அன்று சுசாமி அளந்துவிட்டது.

இன்று அதிமுக மக்களின் வீடுகளை குறி வைத்து மட்டும் வருமான வரி சோதனைகள் வந்த போது, சட்டம் அதன் கடமையை செய்கின்றது. அது எப்படி தேர்தலில் போட்டியிடாமல் செய்வது போல் காரியங்கங்கள் நடக்கின்றது என்றதிற்கு - மைய அரசுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லாம் செய்வோம் - இன்றைக்கு தமிழக பாசக மக்கள் சொல்வது.

இப்படி மோடியை கடவுளுக்கு சமமாகவும் ஒரு அவதார புருசனாக சித்தரிப்பதில் பாசகவின் அடி பொடிகளுக்கு அப்படி ஒரு அலாதி இன்பம்.

சரி இப்படி எல்லாம் அவதாரம் எடுத்த மோடியும் அவரது அரசும் இந்த அலைகற்றை வழக்கில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்று தீப்பு சொல்கின்றதே என்ற கேள்விகளுக்கு

சட்டத்தின் அதிகாரங்களில் பாசக அரசு தலையிடுவது இல்லை என்று சொல்லி சிரிக்கிறார்கள்

அது எப்படி ஒரு சில காரியங்களில் மட்டும் மோடி அதிகார வரம்பையும் மீறி மூக்கை நுழைக்க முடிகின்றது, அதாவது அவருக்கு வேண்டிய காரியங்களில் மட்டும்.

மற்ற இடங்களில் அவருடைய அதிகாரம் திடீர் என கானாமல் போகின்றது.

அப்போ துல்லிய தாக்குதல் இராணுவம் வழக்கமாக மேற்கொள்ளும் ஒரு செயல் அதை ஈரேழு 13 லோக அளவிற்கு ஊதி அது இந்த அவதார புருசனால் மட்டுமே முடிந்த காரியம் என்றும் அவர் இல்லை என்றால் இது எல்லாம் சாத்தியமே இல்லை என்றும் அழக்கா புருடாவிட்டு புளங்காகிதம் அடைந்திருக்கிறது.

பொய்யையும் தற்பெருமை தம்பட்டம் தவிர வேறு எதையும் அறியாத பாசகவும் அதன் மோடியும் இன்னும் பிறவும்.

0 comments: