Thursday, June 29, 2017

வனமகன் - George of the Jungle (1997) -- சரக்கு தீர்ந்த இசையின் கடைசி சொட்டில் வந்த படம்

படம் ஒரு வழி தவறிய காட்டுவாசியையும் சொந்தங்களை தொலைத்த ஒரு நகரவாசியையும் பற்றிய படமாம்.

நல்ல வேளை காட்டுவாசி என்றால் தேன் எடுப்பது, மீன் பிடிப்பது, இரவில் கூட்டமாக தீ மூட்டி ஆட்டம் ஆடுவது என்று மட்டும் நிறுத்திவிட்டார்கள். தேனும் தினைமாவும் தின்பது, ஒரு பெரிய பாத்திரத்தில் அந்த வழியாக வரும் மனிதர்களை எல்லாம் போட்டு உயிருடன் கொதிக்க வைத்து கை கால்களை பிய்த்து திங்கும்படி காட்டவில்லை.

தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை ஆங்கிலப்படம் அவதாரிலும் இதையேத்தான் காட்டினார்கள். இந்த காட்டுவாசிகள் உண்மையில் வாழ்க்கையில் என்ன தான் செய்வார்கள் யாராவது ஒருவராவது உண்மையை பதிவு செய்யுங்கப்பா....

கமலின் மகள் இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னால் இருப்பது போல் ஒரு பெண் தான் அந்த நகரவாசி. பெரும் பணக்காரர், எப்படி பட்ட பணக்காரர் தெரியுமா தனது பிறந்த நாளை போரா போரா தீவிலும், காலை விருந்தை சப்பான் நாட்டு உணவில் தொடங்கி இரவு உணவு அமெரிக்க உணவு வரை சாப்பிட்டு பழகிய பணக்காரியாம்.

வசந்த மாளிகைன்னு ஒரு படம் அதிலே ஒரு சமத்தானத்து சமையல் அறையையும் அனைவரும் அமர்ந்து சாப்பிடும் காட்சியையும் காட்டுவார்கள். எல்லாம் மிகையாக இருப்பதாக காட்டுவார்களே அன்றி இப்படி ஒரு பக்கித்தனமாக ஒரு காட்சியை பணக்கார வீடாக காட்டவில்லை. அதே சமயம் இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் கமல் Hotdogகை சாப்பிடக்கேட்பார் அதுவும் ஒரு ஓட்டலில் கேட்பார். அதுக்காக அந்தந்த உணவை எல்லாம் வீட்டில் சமைக்க சொல்லி யாரும் கேட்டது இல்லை சமைப்பதும் இல்லை.

இது எந்த ஊரோ இப்படி ஒரு நகரவாசி, அனேகமாக இயக்குனர் பணக்காரர்களை பார்த்து கூட இருக்கமாட்டார் போலும்.....

காட்டுவாசி கடைசிவரை ஒரு ஊமையை போல் காட்டியுள்ளார்கள்.....ஏன் இந்த குழப்பம்.....George of the Jungle (1997)கில் எழுதாக வசனங்களை எப்படி இரவி பேசுவார் அது தான் கடைசி வரை தொண்டை விக்கிகிச்சு

அந்த ஆங்கிலப்படத்தில் குரங்கு கிளி என்று ஏகப்பட்ட விலங்குகளின் மனக்குரல் கேட்க்கும் அதையே காட்டினால் அந்த படம் என்று கண்டுபிடித்துவிடுவீர்கள் என்று கதை களத்தை ஒரு பேராசை பிடித்த மனிதனின் கண்காணிப்புல் வளரும் அனாதை என்று காட்டிவிட்டார்கள்.

படத்தின் பாடல்கள் கார்கியாம் அவரை கூப்பிட்டு வந்து தான் என்னப்பா அது டம் டம் டம் என்று பாடுகிறார்களே மகிழ்மதி பாதிப்பா என்று கேட்க வேண்டும்......

முதல் பாடல் அமெரிக்காவில் தற்பொழுது வானொலிகளில் சக்கை போடு போடும் பாட்டை அது இது என்று தமிழ் வார்த்தைகளை நிறப்பியபாடல், இரண்டாவது வசீகராவின் இன்னும் ஒரு வர்சன், மூன்றாவது பாடல் முதல் பாடலை இருட்டில் எடுத்த பாடல் இசையும் காட்சியும் விளக்கனைத்த பாடல். நான்காவது பாடல் நானே வருவேன் அங்கும் இங்கும் மெட்டில் மறு உருவாக்கம். இந்த பாடலின் நானே வருவேன் சரணம் அனைத்து இடங்களிலும் வந்து வந்து போகின்றது, ஏன் வசீகராவை போட வேண்டியது தானே.....

படம் முடிந்து வரும் போது எந்தப்பாட்டு வரிகளிலும் ஒன்று கூட நினைவில் இல்லாத அளவிற்கு ஒரு வரட்சி இந்த படத்தில். இனியும் மக்கள் ஆரிசு செயராசை சென்று இசையை கேட்கிறார் என்றால்........என்ன சொல்வது.....அதுவும் இந்த படதிற்கு பின்னணி இசையை பற்றி எழுதியே ஆகவேண்டும். என்ன ஒரு மேதாவி தனம், நகரம் வீடு என்றால் புரூ காப்பி, லியோ காப்பி விளம்பரத்தில் வரும் இசையை அப்படியே சப்பிடும் இடம் சமையலரை எல்லாம் வரும் காட்சியில் ஒலிக்கவிடுகிறார். காட்டு வாசி நகரவாசி வீட்டில் வரும் காட்சிக்கு எல்லாம் ஒரு அற்பமான மட்டமான ஒரு இசை அதை நன்றாக இருப்பதாக யாரோ சொன்னார்கள் போலும் அதனால் எல்லா இடங்களிலும் அதே இசையை மறுபடியும் மறுபடியும் போட்டுள்ளார் சகிக்கவில்லை.

செயம் இரவிக்கும் அந்த புது பொண்ணுக்கும் இந்த George of the Jungle (1997) ஆங்கிலப்படத்திற்கு தான் குத்தாட்டம் போடப்போகின்றோம் என்று தெரியாது போலும். அப்படி இருந்திருந்தா கொஞ்சம் அடக்கியே வாசித்து இருப்பார்கள். இன்னும் இது போல் நிறைய ஆங்கிலப்படம் இருக்கிறது எடுத்து அந்தமான் போராளி இலங்கை போராளி என்று எல்லாம் புருடா விடுங்கள் எவன் கேட்க்கப் போகிறார்கள்.....

Wednesday, June 28, 2017

மோடி இனி அவ்வளவு தானா உடல் மொழியை பாருங்கள் உங்களுக்கே தெரியும்

56 இஞ்சு மார்பன் வீராதி வீரர் சூராதி சூரர், உடல் மொழியை பாருங்கள் வேண்டா வெறுப்பாய் டிரம்பும் வலுக்கட்டாயமாக மோடியும் என்ன ஒரு அடிமை செயல்......


வாழ்க்கையின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது போல் ஒரு பதற்றம் முகத்தில், அதுவும் சர்வதேச யோகா தினம் என்று தேடினால் முதல் ஆண்டில் வெளியிடப்பட்ட படங்களை தவிர ஒரு 10 படங்கள் மட்டும் வருகின்றது. இந்த நாளுக்கு இவ்வளவு பில்டப்பு.....


இதோ இன்னோர் கோணம் அந்த சோகம் முகத்தில் அப்பட்டமாக தெரிகின்றது. ஒரு வேளை சுசுமா சுவராசு வந்தது போல் ஏதும் உயிர் கொல்லி நோய் தொற்றி இருக்குமோ இவருக்கு அது தான் இப்படி ஒரு சோகமா இல்லை நன்றாக எங்கேயாவது மாட்டிக்கொண்டு விட்டாரா இந்த கவலை அவர் முகத்தில்.

விவேகம் படமும் ஆங்கிலபடம் shooterம் ஒன்றா

ஆங்கிலத்தில் shooter  என்ற படம் வந்தது அந்த படம் ஒரு நண்பனை பறிகொடுத்த இராணுவ வீரனை பற்றியபடம். நாட்டில் உள்ள அரசியல்வாதி தேச பற்றின் பெயரால் அடுத்த நாட்டு மக்களை கொத்து கொத்தாக கொல்வதும். நாட்டின் பிரதமர்/அதிபரை கொலை செய்ய அயல் நாட்டினர் திட்டமிட்டுள்ளதாகவும். எப்படி எல்லாம் தாக்க வாய்ப்பு இருக்கிறது என்று யூகித்து சொன்னால் காப்பாற்ற வசதியாக இருக்கும் என்று சொல்லி அந்த வாய்ப்பான இடத்தில் வைத்து அதிபரை/பிரதமரை கொலை முயற்சி செய்து பழியை உதவிய அந்த இராணுவ வீரனின் மேல போடுவதாக கதை.

அந்த இராணுவ வீரன் தப்பித்தானா, சதியாளர்கள் மாட்டினார்களா என்று எல்லாம் திரைகதை பறக்கும். இதிலே பனிபடர்ந்த மலையில் ஒரு காட்சி, மிகவும் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் அமைந்த காட்சி அது. எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்று பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க மோடி அமெரிக்கா வரை சென்று புகார் அளிக்க தேவை இல்லை

அமெரிக்காவில் பயங்கர வாதத்திற்கு எதிராக போராட இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக செயலாற்ற வேண்டுமாம்.

இந்த 3 ஆண்டுகளில் பயங்கரவாதம் என்றால் அது பசுவின் பெயரால் நடத்தப்பட்ட கோர தாண்டவம், அகண்ட இந்து பாரதம் என்ற பெயரில் காலாச்சார காவலர்களை ஏவிவிட்டு பெண்களை கொடூரமாக கொலை செய்த செயல்கள் மற்றும் பெரு நிறுவன அடிமைகளாய் அவர்கள் ஆட்டுவிக்கும் அட்டதிற்கு எல்லாம் காவல் துறை மற்றும் இராணுவத்தை கொண்டு குடிமக்களை கொல்வதுமாகத்தான் நடந்து வருகின்றதே அன்றி வேறு எதுவும் தீவிரவாதம் இதியாவில் இந்த 3 ஆண்டுகளில் நடை பெறவில்லை.

அப்படி இருக்க வேறு எந்த தீவிரவாதிகளிடம் போரிட மோடி அமெரிக்கா வரை சென்று புகார் கூறவேண்டிய அவசியம் என்ன....

எல்லாம் இந்த பாழாய் போன தமிழ் தீவிரவாதிகள் தான், டாசுமார்க்கு, நெடுவாசல், சல்லிக்கட்டு, பீட்டா, வீராணம் என்று ஏதாவது ஒரு தீவிரவாதத்தை மக்கள் பரப்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள். எச்சி ராசாவும் எவ்வளவு முறை தான் ஆண்டி இன்டியன் என்று கூவுவார் பாவம் அது தாம் அமெரிக்காவை கூட்டுக்கு சேர்த்து தமிழகத்தை கூட்டு பொரியல் என்று வைக்க போகிறாராக்கும்........

Tuesday, June 27, 2017

கூடங்குளத்தின் உண்மை நிலை என்ன ஆள்ளாளுக்கு குழப்புராங்களே

நன்கு தெரிந்த ஒரு நண்பரின் மூலம் கூடங்குளத்தில் நடக்கும் நடப்புகளை அழகாகவும் அறிவியல் பூர்வமாகவும் அழக்காக விளக்கினார்.

அதுவும் அதிகம் புரளி பேசப்பட்ட குளிரூட்ட எடுத்து மீண்டும் கடலுக்குள் விடும் நீரை பற்றிதான் அதிகம் பொங்கி எழுந்தார்கள். இவர் சொல்வது போல் உள்ளே இழுக்கப்படும் தண்ணீர்ன் அளவும் திரும்ப வெளியில் விடப்படும் நீரின் வெப்பமும் நேரெதிராக இருக்கும் என்றும், வெப்பம் 5 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் இருக்கும் வண்ணம் அதிக அளவு நீர் புழக்கத்தில் வைத்துள்ளார்கள் என்றும் விளக்கினார்.

அதுவும் 3 சுழற்சி முறையில் தண்ணீர் தனித்தனியாக பயன்படுத்தபடுவதையும் விளக்கினார். அணு கொதிப்புக்கு இருக்கும் கன நீர், அதை கொண்டு சூடேற்றப்பட்ட அடுத்த பயன்பாட்டு நீர் மற்றும் இந்த இரண்டு நீரையும் குளிரூட்ட நீர் என்ற 3 வகையையும் விளக்கினார்.

பயன்படுத்திய கதிரியக்க பொருட்களை அந்த கூடத்தின் மற்ற ஒரு சேமிப்பு பகுதியில் சேர்த்து வைத்து கதிரியக்கம் குறையும் வரையும் அப்படியே தோரிய செறிவூட்டலும் நடக்கின்றதும் என்று விளக்கினார்.

ஒரு வேளை அணு உலை வெடித்தால் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்படி நடப்பின் அணு உலையின் உள் நீர்புகும் உள்ளிருந்து எதுவும் வெளியேறா வண்ணம் அமைப்புகள் வடிவமைக்கப்பட்ட அணு உலை இது என்று விளக்கினார்.

 நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபாய்க்கு மின்சாரம் தயாரிக்கிறது இந்த அணு உலை என்றும். அடுத்த 39 வருடங்களுக்கு இது பயன்பாட்டில் இருக்கும் என்று விளக்கினார்.

பின்னர் ஏன் இவ்வளவு போராட்டம் என்ற கேள்விக்கு சுருக்கமாக நாம் ருஷ்யாவிடம் இருந்து அணு பொருட்களையோ நுட்பத்தையோ வாங்குவது மேற்கு நாடுகளுக்கு பிடிக்கவில்லை ஆகவே அவர்களது அரசு சாரா அமைப்புகளை பயன்படுத்தி மக்களுக்கு தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும் விளக்கினார்.......

யாரை நம்புவது.........

Friday, June 23, 2017

GSTயால் மக்களுக்கு நன்மையா தீமையா -- விட்டில் பூச்சுகளாய்

இந்த வரிவிதிப்புக்கு எவ்வளவு அழகாக திட்டம் தீட்டி உங்கள் ஊரில் இருக்கும் அண்ணாச்சி கடைக்காரர் உங்களை விட அதிகம் சம்பாதிக்கிறார். கருப்பு பணமாக சம்பாதித்து அவர் அனுபவிக்கும் வசதிகளை பாரீர் என்று வீர வசனங்கள் பேசியது போல் இப்போது இந்த வரிவிதிப்பை அழகாக பேசி ஏமாற்றி இருக்கிறார்கள்.


பாசக அரசின் திட்டங்கள் அனைத்தும் முதளாலிகளின் கொள்ளை இலாபத்திற்கு தானே அன்று மக்களின் வசதிக்கு என்றும் கிடையாது.


இதை பக்கம் பக்கமாக எழுதி நிருபிக்க வேண்டியது இல்லை இங்கே சுருக்கமாக பார்ப்போம்........


இந்தியா சுதந்திரம் அடந்ததில் இருந்து சென்ற முறை ஆட்சியை பாசக அரசு பிடிக்கும் வரையில் பெட்ரோல் மீதான வரியை ஒரு கணக்கில் சேர்த்து வைத்து அந்த கணக்கில் வரும் வட்டியை வைத்துக்கொண்டு, டீசல் மற்றும் மண்ணெணை விலையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்துதார்கள் அன்றைய அரசு.


எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் விலைவாசி ஒரு சின்ன ஏற்றத்திற்கு மேல் ஏற மறுக்கிறதே என்று அன்றைய பாசகவின் ஆயோக்கியர்கள் அமர்ந்து யோசித்ததில் அவர்கள் கண்டுபிடித்தது. இந்த டீசல் மானியம் எல்லா அதார பொருளின் விலையையும் கட்டுக்கோபில் வைத்துள்ளது. அப்படி டீசல் விலையை உடைக்க வேண்டும் என்றால், இந்த மானியத்தை உடைக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று பார்த்து ஒரு சதி திட்டத்தை தீட்டினார்கள்......


அது தான் இந்த நாற்கர சாலை, இந்த சாலையை அமைப்பதின் மூலம் இன்றைக்கு நீங்கள் பலனை எதிர்பார்க்க முடியாது. 10 ஆண்டுகளுக்கு பிறகு பாருங்கள் இந்திய பொருளாதாரம் எப்படி பறக்கிறது என்று பாருங்கள் என்று அன்றைய பாசக அரசு மார் தட்டி சோதிடம் கூறியது.


இந்த டீசல் மானியத்திற்காக வைத்து இருந்த பணத்தை காலி செய்து நாற்கர சாலையும் வந்தாகிவிட்டது. 10 ஆண்டுகளும் கடந்துவிடாச்சு, ஆனால் நிலைமை என்ன, அந்த நாற்கர சாலையை பராமரிக்க என்று உங்களிடமும் என்னிடமும் ஒவ்வொரு முறை கடக்கும் போதும் கப்பம் வசூலிக்கிறார்கள்.


 நீங்களும் நானும் அன்றைக்கு செலவு செஞ்சதை விட பன்மடங்கு இப்போது செலவு செய்கின்றோம், இந்த நாற்கர சாலையினால் நமக்கு செலவு தான் அதிகமானதே அன்றி எந்த பலனும் விளையவில்லை. அப்படி இருக்க இந்த சாலை எதற்கு ஏன் என்ற கேள்விக்கு பதில், அன்றைக்கு இலட்சங்களில் வியாபாரம் செய்த முலளாலிகள் இன்றைக்கு கோடிகளில் வியாபாரம் செய்கிறர். கோடிகளில் இலாபம் பார்த்தவர்கள் இன்றைக்கு இலட்சம் கோடிகளில் இலாபம் பார்க்கிறார்கள்.


அப்படியே நட்டம் வந்தாலும் அதை வராக்கடனில் வைத்து சரி செய்யத்தான் நமது பணத்தை கட்டாயம் வங்கிகளில் வைத்துள்ளார்களே.........


எப்படி அந்த நாற்கர சாலைகளால் சாமானியனுக்கு எந்த பலனும் இல்லாமல் சுமை ஏறியதோ அதே போல் இந்த வரிவிதிப்பால் சுமை தான் அதிகமாகுமே தவிர எந்த இலாபமும் இல்லை. அப்போ யாருக்கு தான் பலன் என்றால் இந்த வியாபாரம் செய்தால் இவ்வளவு வரி என்று இருக்கிறது முதளலிகளுக்கு அதை இனி அவர்கள் அவ்வளவும் கட்டமாட்டார்கள் மேலும் குறைவான வரியை கட்டினால் மட்டும் போதும்.


அப்போ மீதி இருக்கும் வரியை எல்லாம் யார் கட்டுவார்கள்....அது தான் நீங்கள் இருக்கிறீர்களே........


உங்களுக்காக மானிய விலையில் டீசலும் மண்ணெணையும் கிடைக்க வைத்து இருந்த பணத்தை எடுத்து வீனாக்கி அதனால் ஏற்படும் சுமையை சாதாரண மக்களின் மீது சுமத்தி முதளாலிகள் இன்னும் இலகுவாக வியாபாரம் செய்ய ஏற்பாடுகள் செய்ததை போல் இன்றைகு இந்த GST வரிவிதிப்பு.


என்ன பாதிப்புன்னுனே தெரியாம இந்த மக்கள் எல்லாம் இனிப்பு கொடுத்து எல்லையில் இராணுவ வீரன் வரிகட்டுறான் ஒனக்கு என்ன என்று ஏக வசனம் பேசுது.......


சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும், உள்ளே இருப்பது எல்லாம் பிரிவினைவாதமும் வக்கிரமும் அது தான் வித விதமான பெயர்களில் சர்க்கரை தடவிய நச்சாக வெளிவருகின்றது. விட்டில் பூச்சுக்களாய் மக்கள் ஐயோ பாவம் என்று இருந்துவிட முடியவில்லை, இந்த விட்டில் பூச்சிக்களால் நாமும் தானே அவதியுறுகின்றோம்...........

இன்னுமா இந்த சுப்பிரமணி சாமியும் மோடியும் போன் பண்ணாம இருக்காவுக

இலங்கையில் தூக்குவுக்கு போக இருந்த தமிழர்களை விடுவிக்க சொல்லி ஒரே ஒரு போன் கால் தான் சென்ஞ்சாராம் இந்த சுப்பிரமணி சாமி இலங்கை அதிபருக்கு. மோடி அந்த 5 பேரையும் விடுதலை செய்ய சொல்லி சொன்னாருன்னு சுப்பிரமணி சாமி சொன்னதும் இலங்கை அதிபர் 5 தமிழக மீனவர்கள் மோடிக்கு பார்சல் என்று சொல்லு உடனே எடுத்துகொண்டு வந்து கொடுத்தார் என்று சங்கி மங்கிகளின் சல்லியும் இந்த உளவாலி சுப்பிரமணி சாமியும் மோடியும் பொது மேடைகளில் அடவு கட்டி கூத்தாடினார்கள் அன்று.

பாவம் இந்த மனிதர் குபுசன் சாதவ் மாதக்கணக்கில் பாக்கிட்தானத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு இந்த சங்கி மங்கிகள் எப்படியாவது நம்மை காப்பாற்றிவிடுவார்கள் என்று நம்புகின்றார்.

பாக்கிட்தானம் ஒன்றும் இலங்கையல்ல சுப்பிரமணி சாமியோ அல்லது மோடியோ ஒன்றும் தேவ தூதர்கள் அல்ல வெறும் சாதாரண மனிதர்கள் தான் என்று திரும்ப திரும்ப பரைசாற்றுகிறது இந்த நிகழ்வு.

என்ன உளவாலி சுப்பிரமணி சாமி அலைபேசியில்ல காசில்லையா இல்லை பாக்கிட்தானத்தின் தொடற்பு எண் என்ன என்று தெரியாதா...........

Thursday, June 22, 2017

பல் இளித்த பிரிவினைவாத பாசகவின் யோகா தின கொண்டாட்டங்கள்

அதோ பார் பசு மாடு, இதோ பார் பசு மாட்டுமறி, அங்கே பார் பசு மாட்டு சானி, இல்லை மூதிரம் என்று படம் காட்டும் பிரிவினைவாத பாசகவின் பகல் காட்சி படம் இந்த யோகா.

சென்ற ஆண்டு கிட்ட தட்ட அனைத்து மா நிலங்களிலும் உள்ள கிராமங்கள் தவிர்த்து நகர் முதல் மெட்ரோ சிட்டிகள் வரை வகை வகையாக யோக செய்யும் விரிப்புகளை வாங்கி குவித்து. வெள்ளை ஆடைகளை அணிந்து மக்கள் உருண்டும் பிரண்டும் அழகு காண்பித்தார்கள்.

ஆனால் இந்த ஆண்டோ யோக யோக என்ற்கு கூவு கூவு என்று கூட்டிய கூட்டங்களில் கோவில்களில் சுண்டல் வாங்கும் அளவிற்குக்கூட கூட்டம் வரவில்லை.

தொகாவிலும் கூட திரும்ப திரும்ப மோடி விழுந்து எந்திரிக்கும் காட்சியை மட்டும் வெட்டி ஒட்டி நிமிடத்திற்கு 100 முறை ஓட்டிக்காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

ஒரு பக்கம் மாற்றம் முன்னேற்றம் என்று சொல்ல வேண்டியது மறுபக்கம் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி கொலை செய்ய வேண்டியது இது பிரிவினைவாத பாசகவின் வாடிக்கையாக ஆகிப்போனது. கேட்டால் மறுபடியும் சானி மூத்திரம் என்று ஆரம்பிக்க வேண்டியது.

இந்த பிரிவினைவாத அரசியலை கண்டு மக்கள் கொதிப்படைந்துள்ளார்கள் அதன் விளைவு இந்த ஆண்டு யோக தினத்தில் வெறும் பிரிவினைவாத பாசகவின் உறுப்பினர்கள் மட்டும் பங்கெடுத்தார்கள். ஆங்காங்கே பள்ளி மாணவர்கள் மிரட்டப்பட்டதும், இராணுவம், காவல் துறை என்று மிரட்டலுக்கு உட்பட்ட இடங்கள் தவிர்த்து பொது மக்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்சிகளை எந்த தொகாவும் ஒளிபரப்பவில்லை.

இந்தியாவிலே இப்படி பல் இளிக்குதே இது வெளி நாடுகளில் எப்படி இருக்கும், அன்னையர் தின முக்கியத்துவம் கூட கொடுக்கப்படவில்லை என்றது தான் உண்மை. அங்கே யோகா செய்பவன் இந்த மோடி வருவதற்கு முன்பிருந்தே செய்துக்கொண்டு இருப்பவன். அவனை வைத்து மோடி விமானம் ஏறி விற்று வந்த பிறகு தான் உலகிற்கே யோகா என்றால் என்ன என்று தெரியும் என்ற ஏகவசனம் எல்லாம் எங்களிடம் வேண்டாம் அப்பன்களா......எப்படி இருந்த யோகா தினம் சென்ற ஆண்டு இந்த ஆண்டு அந்த விசயகாந்து கூட நோம்பு கஞ்சு குடிச்சதத்தான் காட்டினார்களே தவிர படுத்து உருண்டதாகக்கூட காட்டவில்லை......

Wednesday, June 21, 2017

விவசாயக் கடன் தள்ளுபடியும் தேசிய நெடுஞ்சாலை கட்டண வசூலும்

தேசிய நெடுஞ்சாலையில் செல்ல  உகயோகிப்பாளர் கட்டணம் கட்டனுமாம், இல்லை என்றால் அந்த சாலைகளில் நீங்கள் செல்லமுடியாதாம்.

அந்த தேசிய நெடுஞ்சாலை உங்கள் ஊரில் கட்டும் போது உங்கள் வீடு, வயல், வீட்டு மனை என்று எது அந்த பக்கம் வந்தாலும் அதை தேசிய நில ஏடுத்துக்கொள்ளும் சட்டத்தின் மூலம் அரசு பெற்றுக்கொள்ளுமாம் என்று எடுத்துகொண்டு அமைக்கப்பட்ட சாலையில் இன்றைக்கு நீ செல்ல எந்த வண்டியில் செல்கிறாய் என்று பார்த்து அதற்கு தகுந்தாற் போல் கட்டணம் கட்டவேண்டுமாம்.

எல்லா தேசத்திலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது அரசின் கடமை. அதற்கு தான் வரி வசூலிக்கிறார்கள். அதாவது தேசிய தரமான நெடுஞ்சாலைகளை அமைத்துக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை. மேலும் இந்த கட்டணம் வசூலிக்கும் சாலைகளை அமைக்க நீங்களும் நானும் ஏற்கனவே வரியை செலுத்திவிட்டோம். அப்படி வரி செலுத்திய பிறகும் ஒவ்வொறு முறை செல்லும் போதும் எதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும்.

கேட்டால் வெளிநாடுகளில் அப்படி தான் அதே போல் நீயும் கட்டு என்று இந்த பிரிவினைவாத அரசு சொல்லும்.

வெளிநாடுகளில் மக்களின் தேவைக்காக என்று தரமான சாலைகள் இருக்கும், அதே வேளையில் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த கட்டண வழி சாலைகளை அறிமுகப்படுத்தினார்கள். அமெரிக்கா முழுவதும் எந்த ஒரு சாலைக்கட்டணமும் இல்லாமல் சுற்றி வரமுடியும். அதற்காக குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம் என்ற சாலைகள் அல்ல. கட்டணம் கட்டி செல்லும் அதே தரத்தில் அமைந்த உங்களுக்காக அரசு உங்கள் வரிப்பணத்தில் கட்டிய சாலை.

என்ன ஆச்சர்யம் என்றால் எதிர்கட்சிகள் கூட இந்த விசயத்தில் வாய்திறக்காமல் இருப்பது தான்.

உங்கள் ஊரில் உங்களின் மண்ணில் அமைக்கப்பட்ட சாலைக்கு எதற்கு நீங்கள் மைய அரசுக்கு நேரடியாக பணம் கொடுக்க வேண்டும். அந்த பணம் மாநில அரசிடம் எவ்வளவு பங்கிடப்படுகின்றது.

நீங்கள் எல்லாம் எனது சாலை எங்கே என்று ஓங்கி கேட்கும் வரை வடிவேலின் கிணறு கானாம போச்சே பாணியில் தான் வசூலிப்பார்கள் இந்த பிரிவினைவாத பாசக அரசு.

தமிழகத்தில் இருந்து மைய அரசுக்கு செல்லும் ஒவ்வொரு காசிலும் விவசாய வரியை தமிழக அரசு வசூலிக்க வேண்டும். எந்தெந்த பணிகளால் தமிழகத்தின் விவசாயம் பாதிக்கபடுகின்றதோ அந்தந்த தொழில்களில் வசூலாகும் மைய அரசு வரியில் 99% விவசாய வரியாக தமிழகம் பிடிக்க வேண்டும். மேலும் அந்த பணியினால் பெறப்படும் இலாபங்களில் 90% விவசாய வரியாக்கி. அந்த பணத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாமே நிவாரணம் தரலாம் அருண் செட்லி சொல்வது போல்.

 நெய்வேலி சுரங்கத்தினால் தென்னாற்காடு மாவட்ட விவசாயம் சுடுகாடாய் போனது. தென்னாற்காடின் நிலத்தடி நீரை சுரங்கம் என்ற பெயரில் நொடிக்கு ஆயிரம் ஆயிரம் கனாடி நீரை வீனாக கடலுக்கு அனுப்புகிறது அந்த நிறுவனம். விருதாசலத்தில் தொடங்கும் அந்த மண்குவியல் கடலூர் குள்ளஞ்சாவடி வரையில் நீளுகின்றது. கிட்டத்தட்ட 40, 50 கிலோ மீட்டர் அளவுக்கு பள்ளம் தோண்டி எடுத்துள்ளார்கள். அப்போ இது வரையில் எவ்வளவு நீர் வெளியேற்றப்பட்டு இருக்கும்.

அப்போது எல்லாம் தென்னாற்காடு மாவட்டத்திலும் தஞ்சை மாவட்டத்திலும் ஏன் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் பேருந்துகள் வளைந்து நெளிந்து அந்த பச்சை பசேர் நிலங்களின் ஊடே சென்ற காட்சிகள் எல்லாம் இன்றைக்கு கனவில் பார்த்தது போல் இருக்கின்றது.

தேசிய வளர்சி என்ற பெயரால் மாநிலங்களின் வளங்களை கொள்ளையடிப்பதை நிறுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அதே வேளையில் இப்படி விவசாய வரி விதிப்பதனால் மைய அரசு இந்த சுரண்டல் வணிபங்களை விட்டுவிட்டு வேறு உருப்படியான வேலைகளை செய்யும்.

கர்னாடகா மாநில மின்சார தேவைக்கு நெய்வேலியும் தென்னாற்காடும் ஏன் பாலைவனமாக வேண்டும். அவர்களுக்கு நெய்வேலியும் தென்னாற்காடும் வேண்டும் என்றால் இங்கு வந்து வாழ சொல்லுங்கள். உங்களின் வாழ்வாதாரங்களை உங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத ஆள் எதற்கு அவர்களது சொகுசு வாழ்கை வாழ கொள்ளையடிக்க நீங்கள் சம்மதிக்க/கட்டாயப்படுத்தபட வேண்டும்.

விவசாய வளங்களை அழிக்கும் திட்டங்களை நிறுத்தி, இனிமேலும் அது போல் எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. நீங்கள் கேள்வி கேட்கும் வரை அருண் செட்லி உங்களது வரிப்பணத்தை அவர்களது பினாமி நாடுகளான மொரீசியசு, ஊகாண்டா, ஆப்ரிகா என்று அள்ளி கொடுத்துவிட்டு உங்களின் ஊரில் உங்களின் வரிப்பணத்தில் கட்டிய நெடுஞ்சாயில் செல்ல உங்களிடமே கட்டணம் கேட்ப்பான்.

வெளிநாடுகளுக்கு கொடுக்கும் நிதியுதவிகளை இந்தியாவின் விவசாயிகளுக்கு கொடுங்கள், உங்களால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு போக மீதி இருக்கும் வரிப்பணத்தை எடுத்து நெடுஞ்சாலைகளை பராமரிக்கவும் சீரமைக்கவும் கொடுங்கள். பிறகு மிஞ்சி இருந்தால் அம்பாணிக்கும் அதாணிக்கும் வெளிநாடுகளுக்கு உதவி என்ற பெயரில் கொடுக்கலாம்.

Tuesday, June 20, 2017

மோடிக்கும் குருமூர்த்திக்கும் கிரிக்கெட்டு சூதாட்டத்தின் பொருளாதாரம் தெரியாமல் போனது ஏனோ

மூச்சுக்கு மூச்சு கள்ளப்பணம், கள்ள சந்தை, கள்ளத்தனமாக பசு சானி விற்கிறார்கள் என்று பேசும் பிரிவினைவாத பாசக அரசின் பிரிவினைவாதிகளான மோடியும் சரி அவரின் தமிழக அடிவருடி குருமூர்த்தியும் சரி, பண மதிபிழப்பு பற்றி பேசிய உடனேயே கள்ளப்பணம், கள்ள சந்தை, கள்ளத்தனமாக பசு சானி விற்கிறார்கள் என்று வாய்கிழிய பேசினார்கள்.

சென்ற வாரம் நடந்த கிரிகெட்டு ஆட்டத்தில் பொதுவாக பாக்கிட்தானத்து வீரர்களின் மீது உள்ள அபரிவிதமான நம்பிக்கையில் பாக்கிட்தானத்து அணியின் சார்பில் பணம்கட்டி தோற்பார்கள். ஆனால் இந்த மாட்டுகறி பிரிவினைவாத அரசு பதவி ஏற்றததில் இருந்து இந்திய கிரிகெட்டு அணியை ஆதரிக்காவிட்டால் தேசதுரோகி என்று ஆரம்பித்து. கடைசியில் கிரிகெட்டு சூதாட்டத்தில் இந்திய அணியின் சார்ப்பில் சூதாடாவிட்டால் தேச துரோகியாக ஆகிவிடுவோம் என்ற பதற்றமும். எப்படியும் கெளித்துவிடுவார்கள் ஒன்றுக்கு 10 என்று பணம் வரும் என்று இரகசியமாக இந்த லலித்து மோடி வகையராக்கள் பரப்பிய வதந்தியின் சூழ்ச்சியில் விட்டில் பூச்சிக்களாய் மாட்டி பணத்தை இழந்தவர்களை பார்த்து பாவபடுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்.

தனது ஊரில் கடை வைத்து இருக்கும் அண்ணாச்சியை பார்த்து பொறாமை கொள்ள பழக்கியவர்கள் தானே இந்த பிரிவினைவாத அரசு. அவர்களின் மோடிவித்தையிலே மயங்கி அதோபார் மாட்டுகறி, பசு கன்று, இதோ பார் பசு மூத்திரம்........என்று இன்றைக்கு இதோ பார் தலித் தலைவர் என்று அம்மா சின்னஞ்சிறு குழந்தையை ஏமாற்றும் அதே தாத்தா காலத்து நுட்பத்தை பயன்படுத்தி மிட்டாளாக்குகின்றது.

இந்த பிரிவினைவாத அரசு பதவி ஏற்று 3 ஆண்டுகளில் எப்போதானும் மோடியும் சரி, குருமூர்த்தியும் சரி கிரிகெட்டு சூதாட்டதை பற்றி பேசியோ எழுதியோ பார்த்து கேட்டு இருக்கிறீர்களா.

சாதாரண கூலி தொழிளாலியின் வருமானம் என்ன அதை ஆசைகாட்டி வங்கில் போட வைத்துவிட்டு பிறகு எடுக்க முடியாது என்று ஏமாற்ற பட்டம் வாங்கிய இந்த பிரிவினைவாத அரசுக்கு, இந்த கிரிக்கெட்டு சூதாட்டமும் அதில் கொழிக்கும் பணமும் அதை முடக்கும் எண்ணம் கூட இல்லாமல் போனதன் மர்மம் என்ன என்று பார்த்தால் தான் ஏன் என்று விளங்கும்.

லலித் மோடி என்ற ஒரு கிரிக்கெட்டு சூதாட்டகாரர் நாட்டைவிட்டு ஓடிப்போய் இங்கிலாந்து மொரீசியசு என்று தேடப்படும் குற்றவாளிகள் பொதுவாக தஞ்சம் புகும் நாடுகளில் பதுங்கி மிகவும் சிரமப்பட்டு ஏதோ அவறால் முடிந்த ஒரு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். அந்த கிரிக்கெட்டு சூதாட்டகாரரின் சூதாட்ட பணம் பற்றிய பேச்சே இல்லை, சிதம்பரமும் கார்த்திக் சிதம்பரம் என்று குருமூர்த்தி முதல் உளவாளி சுப்பிரமணி சாமி வரை வாய்கிழிய பேசுகின்றதுகள்.

ஏன் இந்த கிரிக்கெட்டு சூதாட்டம் இந்திய பொருளாதாரத்தையும் உலக பொருளாதாரத்தையும் போற்றி வளர்க்கின்றதா. இல்லை நாட்டின் பாதுகாப்பிற்கும் நாட்டின் முன்னேற்றதிற்கு இந்த பொருளாதாரம் பயன்படுத்தபடுகின்றதா.......

வாரக்கடைசியானம் கேளிக்கை விடுதிகளில் குடித்துவிட்டு அந்த வெட்டாட்ட இசைக்கு குத்தாட்டம் போடுவது தான் பண்பு இயல்பு என்று பரப்புரைத்து, குறைந்தது டாசுமார்க் கடையிலாவது குடித்துவிட்டு சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் என்று கூத்தடிக்க கற்றுக்கொடுத்து பணத்தை பிடுங்கியதை போல இப்போது கிரிக்கெட்டு சூதாட்டம். இதிலே ஐபில் என்று ஒரு 90 ஆட்டம் விதவிதமாக அலைபேசி கட்டணங்கள் திட்டங்களை போல் அழகு அழகு பெயர்களில் சொலிக்கின்றது.

இதோ இப்போது சனிக்கிழமை வரையில் வந்த செய்தி 2000 கோடி சூதாட்டம் கட்டியாகிவிட்டது என்று. மேலும் ஆட்டம் ஆரம்பித்ததும் ஒவ்வொறு பந்து என்று எவ்வளவோ விதமாக சூதாட்டங்கள் அரங்கேறி இருக்கிறது பல்லாயிரம் கோடியில். எங்கே அதை எல்லாம் கேட்டுவிடுவார்களோ என்று அவசர அவசரமாக அசையா சொத்துகளுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் சொத்துகளை பரிமுதல் செய்து பாசகவின் ஏழைகளுக்கு கொடுத்துவிடுவோம் என்றும். ஆதார் எண்கள் இல்லாத சொத்துகள் பினாமி சொத்துகள் என்று அறிவிக்கப்பட்டு பரிமுதல் செய்து பாசகவின் ஏழைகளான அம்பாணி அதாணியின் பினாமிகளுக்கு எழுதி வைக்கப்படும் உங்கள் செலவில் என்று எகத்தாளம் போட்டுள்ளார்கள் பிரிவினைவாத பாசக அரசு.

இந்த சூன் 30க்கும் ஆதார் எண்ணுடன் இணைக்காத வங்கிகணக்கில் இருக்கும் பணத்தை எல்லாம் அம்பாணியின் 45,000 கோடி கடனை கட்டுவதற்கு என்று அம்பாணியின் நிதி ஆயோக்கின் ஆயோக்கியர்கள் வசூலிக்க ஆரம்பித்துவிட்ட சூழலில் ஆதார் எண்ணை காரணம் காட்டி சாதாரண மக்களின் சொத்துக்களை சூறையாடி அழித்து அம்பாணியின் கடனை அடைக்க சாதார்ண் சென் துக் யோசனாவை பாசகவின் ஆயோக்கியர்கள் கிளப்பியுள்ளார்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

Monday, June 19, 2017

மாட்டுக்கறி தன் வேலையை காட்டிவிட்டது - மொக்கா மொக்கா பாடல் ஒலிக்குமே

மாட்டுக்கறியை அவ்வளவு இவ்வளது தான் பாடுபடுத்துவோம் என்று இல்லாமல் எடுத்ததுக்கு எல்லாம் மாட்டுகறி மாட்டுக்கறி என்று இவர்கள் படுத்தியபாடு தான் இப்படி மொக்கா மொக்கா பாடலில் வந்து நிற்கிறது.

இனி நல்லா மாட்டுகறியை இப்படியே பாடாய் படுத்த சொல்லுங்கள் இன்னும் நிறைய மொக்கா மொக்கா பாடல்களை கேட்பீர்கள். யாரோ சிலருடைய ஆசை எத்தனை பேருடைய நாளை வீனாக்கியது பாவம்.

எத்தனை மக்களுடைய வயிற்றெரிச்சலை கொட்டி இருப்பீர்கள் மாட்டுகறியின் பெயரால்.

இதிலே இந்த முறை கட்டாயம் இந்திய அணி வெல்லும் என்று எந்த முறையும் இல்லாத அளவிற்கு இந்த முறை கள்ளப்பணம் விளையாண்டு இருக்கிறது.

நல்ல பணம் வைத்து இருப்பவர்களை கள்ளப்பணம் நொள்ளபணம் என்று எவ்வளவு வயிற்று எரிச்சலை எல்லாம் சம்பாத்த்தீர்கள். இதிலே அடுத்த வீட்டு மக்கள் பரி தவிப்பதை பார்த்து எத்தனை மக்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினீர்கள்.

அப்படி அடுத்தவர் பாவங்களை கொட்டி சம்பாதித்த பணத்தை எல்லாம் இன்று இந்திய அணி வெல்லும் என்று கட்டி திருடனுக்கு தேள் கொட்டியதாக சொல்லி புலம்பக்கூட முடியாத அளவிற்கு கொண்டு சென்றுவிட்டது. எத்தனை லலித் மோடிகள் உங்கள் பணத்தை சுருட்டினார்களோ......

அவ்வையார் சொன்ன கெடுவான் கேடு நினைப்பான் மறுமுறையும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இனியாவது மாட்டுகறிக்கு சல்லியடிப்பதை விட்டுவிட்டு நல்லவர்களாக நடந்துக்கொள்ளுங்கள். இல்லையேல் இந்த ஆண்டிப்பண்டாரங்களின் பேச்சை கேட்டு இன்னும் இழக்க நேரிடும்......

Saturday, June 17, 2017

இந்த சூன் 30/2017க்குள் உங்கள் வங்கியில் உள்ள பணத்தை எல்லாம் எடுத்து விடுங்கள்

2 நாட்களுக்கு முன் தான் இந்தியாவின் ஏழை அம்பாணிக்கு 45,000 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும். அந்த கடனால் தொழில் நடத்தமுடியாமல் அந்த ஏழை  மிகவும் சிரம்மப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. இன்றைக்கு அந்த ஏழைக்கு உதவ மைய அரசு ஒரு திட்டத்தை தீட்டி செயல்படுத்தவும் செய்துள்ளது.

மைய அரசின் நிதி ஆயோக்கின் ஆயோக்கியர்கள் எல்லாம் முன்னாளில் அம்பாணியின் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள். இப்போதும் மைய அரசின் நிதி ஆயோக்கில் அம்பாணிக்கா ஆயோக்கியர்களாக பணிபுரிகின்றார்கள்.

ஆந்த ஆயோக்கியர்களின் திட்டத்தின்படி ஆதார் எண் இல்லாத வங்கி கணக்கை எல்லாம் முடக்கி அந்த கணக்கில் இருக்கும் பணம் எல்லாவற்றையும் ஒரு 10 அல்லது 30 மாதங்களுக்கு முடக்கி கேட்டால் நாங்கள் 20 நாட்களுக்கு முன்னே சொன்னோம். ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு சேவை மையங்கள் அமைத்தோம். தமிழ் நாட்டில் நொடிக்கு 100 முறை தமிழ் வானொலியில் இந்தியில் கூவினோம் நீங்கள் யாரும் கவனிக்கவில்லை. ஆகவே 30 மாதங்களுக்கு உங்கள் பணம் எல்லாம் எடுக்கமுடியாடு மித்ரோன் என்று சொல்வர்கள்.

பிறகு பழைய 500, 1000 நோட்டுகளை நீங்கள் மாற்றினால் தறமாட்டோம் ஆனால் அதையே பெருமாள் கோவில் சார்பில் கொண்டு வந்துக்கொடுத்தால் மாற்றி தருவோம் என்று செல்கிறார்கள் இல்லை அது போல். ஆதார் எண் இல்லாத கணக்கில் இருக்கும் பணம் எல்லாம் கள்ளப்பணம் என்று சொல்லு அபகரித்து அந்த ஏழை அம்பாணியின் 45,000 கோடி பணத்தை கொடுத்து அந்த ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டேன் என்று குரங்கு குளியலில் அடவு கட்டி கூத்தாடுவார் மோடி.

குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்கள் ஆன தமிழ்நாட்டை தான் முதலில் குறிவைத்து இருக்கிறார்கள் என்ற தகவல் வேறு வருகின்றது.

ஆகவே உங்கள் பணத்தை காத்துக்கொள்ளுங்கள் போன பின் புலம்பாதீர்கள் சொல்லிப்புட்டோம் அவ்வளவுதான் இனி நீங்களாச்சு உங்கள் ஏழை அம்பாணியாச்சு. நாங்கள் எல்லாம் எங்கள் பணத்தை அம்பாணிக்கு கொடுப்பதாக இல்லை.

Thursday, June 15, 2017

அம்மாவும் சின்ன குழந்தையும், மோடியும் பின்னே நாமும்

அம்மா தனது சின்ன குழந்தைக்கு சோறூட்டும் போது வாயை பிளக்கும் வண்ணம் கதைகள் சொல்வாள். பெரும்பாலும் அந்த கதைகளில் சம்பவங்கள் இருக்கிறதோ இல்லையோ பாவனைகள் அதிகம் இருக்கும்.

அவன் அங்க வந்தானா ம்ம்ம்ம்ம் வாய திற, அப்புரம் அந்த இடத்தில கத்திய பார்த்தானா ம்ம்ம்ம்ம் இந்த பெரிய உருண்டைய வாங்கிக்கோ அப்புரம் தான் அடுத்து என்னன்னு சொல்வேன் அதிகாரமா.

ஒரே உப்பு சப்பு இல்லாத கதையை வித விதமா நிறைய முக பாவங்களுடன் தினம் தினம் அந்த குழந்தைக்கு சொல்லி உண்டதே தெரியாமல் அந்த குழந்தைய சாப்பிடவைக்கும் வலிமை அவளுக்கு மட்டுமே உண்டு. அதுவும் அந்த சின்ன குழந்தைக்கு சில குறிப்பிட்ட சொல்லாடல் இல்லை என்றால் சில குறிப்பிட்ட பெயர்கள் மட்டும் மிகவும் பிடித்து போகும். மீண்டும் மீண்டும் அந்த பெயர்களை கொண்ட கதைகளை தான் விரும்பி விரும்பி கேட்க்கும் குழந்தை.

அம்மாவும் அடவு கட்டாத குறையாக அந்த சாப்பாட்டு கிண்ணத்துடன் அந்த குழந்தை ஓடும் இடத்திற்கு எல்லான் இராசா, தங்கம் இல்லை எங்க அப்பா இல்லா, எங்க அம்மா இல்ல என்று சொல்லும் அந்த செல்ல வார்த்தைக்கு எல்லாம் மந்திரமாக கட்டுப்பட்டு அவளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் குழந்தை.

வளர்ந்த பிறகு அந்த கதை எல்லாம் காலத்திற்கு ஏற்றார் போல் சரித்திர கதைகளாகவும், விஞ்ஞான மற்றும் கற்றுக்கொள்ள வேண்டிய கதைகளாகவும் மாற்றி மறுபடியும் ஒரு கதைக்காக காத்து இருக்க வைப்பாள் அம்மா. பிற்காலத்தில் நன்றாக வளர்ந்த பின்பு கேட்க்க நினைக்கும் சொந்தகாரர்களது கதைகளாகவும் அது மாறும்.

இதே நுட்பம் தான் மோடி கடைப்பிடிப்பதும் ...ம்ம்ம்ம்ம்ம்ம் அதோ பார் ஊழல் ஓட்டு போடு......ம்ம்ம்ம் அதோ பார் பசு மாடு.....ம்ம்ம்ம்ம்ம் 15 இலட்ச ரூபாய் உனக்கு கொடுப்பேன் இன்னும் நிறைய ஓட்டு போடு......ம்ம்ம்ம் மேக்கின் இந்தியா ஆனா வல்லபாய் சிலையை சீனா செஞ்சு கொடுக்கனும்......ம்ம்ம்ம்ம்ம்ம் மாட்டுகறி.......இன்னும் நிறைய ஓட்டு போடு......ம்ம்ம்ம்ம்ம் உன்னை விட உனது ஊரின் அண்ணாச்சி கடைகாறர் அதிகம் சம்பாதிக்கிறார் அதனால் உன்னுடைய பணத்தை எல்லாம் வங்கிகளில் போட்டு அவர்களுக்கு சேவைக்கட்டணம் கட்டு....ம்ம்ம்ம்ம்ம் இன்னும் நிறைய ஓட்டு போடு.......ம்ம்ம்ம்ம்ம்ம் இதோ பார் அமெரிக்கா போரேன் ம்ம்ம்ம்ம் நிறை ஓட்டு போடு

ம்ம்ம்ம்ம் இதோ பார் மொரீசியசுக்கு 3000 கோடி கொடுக்கின்றேன் அவங்க பாவம் இல்லையா ம்ம்ம்ம்ம்ம்ம் இன்னும் பெரிசா ஓட்டு போடு.......வேண்டாம் எனக்கு இந்த கதை பிடிக்கல வேண்டாம்.....ம்ம்ம்ம்ம்ம் அதோ பார் பசு மாடு, மாட்டுகறி.....அதோ பாரு முசுலீம் மக்கள்.......எல்லையில இராணுவ வீரன கேளு.......ம்ம்ம்ம்ம்.... இல்ல அந்த இராணுவீரனுக்கு சாப்பாடே போடலயாமே......ம்ம்ம்ம்ம்ம் அப்படினா கதை எல்லாம் சொல்ல மாட்டேன் ....... இல்ல இல்ல கதை சொல்லு.....ம்ம்ம்ம்ம் அதோ பாரு பசு மாடு.....ம்ம்ம்ம்ம் அதோ பாரு பசு கன்னுக்குட்டி....ம்ம்ம்ம்ம் அதோ பாரு பசு சானம் ம்ம்ம்ம்ம்ம் அதோ பாரு கோமியம் .......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

போடு போடு ஓட்டு இல்லன்னா பசு கதைய சொல்ல மாட்டேன் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

போ மோடி ஓட்டு எல்லாம் போட மாட்டேன் பாரு அங்க அந்த அம்மா எல்லாம் எவ்வளவு அழகா வாசனையா சமைச்சு வித விதமா தறாங்க நீங்க எப்பவுமே ஒன்னுமே இல்லாத கையை மட்டுமே நீட்டுறீங்களே.....ம்ம்ம்ம்ம்ம் அதோ பார் இருட்டில் எல்லையில் இருந்து எதிரி ஊடுருவுரான் அதுக்காக என்னக்கு ஓட்டுபோடு.......ம்ம்ம்ம்ம்ம்.... அப்படி வந்தா காத்துகொள்ள தான் இராணுவம் இருக்கே.......ம்ம்ம்ம்ம்ம் அதுவும் நான் ஆட்சிக்கு வந்த பிறகு தான் நடக்குது. இல்லன்னா நீங்கள் எல்லாம் என்ன கதி ஆளாயி இருப்பீங்க.......ம்ம்ம்ம்ம்ம் அப்ப அந்த 15 இலட்சம் ம்ம்ம்ம்ம்ம் அதோ பாரு பசு மாடு.... பசு கன்னுகுட்டி ம்ம்ம்ம்ம்ம்ம் அதோ பாரு ஊழல் ம்ம்ம்ம்ம் அமெரிக்கா ஆப்ரிக்கா அண்டார்டிக்கா........

இப்படி வெறும் கையில் முழம் போடுவதற்கும் வெறும் வாயை மெல்ல வைத்து அதற்கு வரி கொடு என்று வாங்க நம்மை மாதிரியான மக்கள் இருக்கும் வரையில் இன்னும் எத்தனை மோடிக்கள் வந்தாலும் ஏமாற்ற முடியும்.....ம்ம்ம்ம்ம்ம் அதோ பாரு பாவம் செஞ்சவன் வருகிறான் போய் அவனை அடித்து கொல் என்றும் இது பரிணாமித்து நிற்கிறது..........

Wednesday, June 14, 2017

பார்த்திபனின் புதிய பாதையை - Beauty and the Beastஆக Disney தயாரித்து வெளியிட்டுள்ளது

1989ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய புதிய பாதை படத்தை அப்படியே அப்பட்டமாக காப்பி அடித்து ஆங்கிலத்தில் Beauty and the Beast படமாக எடுத்துள்ளார்கள்.

தமிழில் வந்த கதையை எப்படி அழகாக ஆங்கிலத்தில் மாற்றி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தமிழில் பார்த்திபன் ஒரு குட்டி சுவரான ஒரு வீட்டில் குடி இருப்பதாக காட்டுவார்கள், ஆங்கிலத்தில் அதுவே பாழடைந்த ஒரு பழைய காலத்து அரண்மனையாக காட்டிவிட்டார்கள்.

படத்தின் நாயகனின் அம்மா இல்லாமல் ஒரு வஞ்சிக்கப்பட்ட அப்பாவால் மிகவும் தற்பெருமையும், பண கர்வமும் கொண்ட ஆணாக வளர்ந்தவனாக ஆங்கிலத்தில் காட்டியுள்ளார்கள்.

அதாவது பெற்றுவிட்டு குப்பை தொட்டியில் எறியப்பட்ட பார்த்திபனின் வாழ்க்கையை ஒரு அரச குடும்ப கதையாக மாற்றிவிட்டார்கள்.

பார்த்திபனுடன் எப்பவும் ஒரு சின்ன பையன் அதிக பிரசங்கி தனமாக பேசிக்கொண்டு சம்பந்தமே இல்லாமல் வருவான். அவனது உருவில் மெழுகுதிரி தாங்கியாக ஒரு பாத்திரத்தை படைத்துவிட்டார்கள் ஆங்கிலத்தில்.

பார்த்திபனின் வீட்டிற்கு அருகில் இருக்கும் மனோரமாவை போல் ஒரு டீ குடுவை பாத்திரமாக ஆங்கிலத்தில் படைத்துள்ளார்கள்.

சீதாவின் அப்பா ஒரு பெண்பித்தர், தனது மகளின் பிறந்த நாளுக்கு ஒரு சித்தியை பரிசாக தருவதாக காட்டி இருப்பார்கள்.

இதையே ஆங்கிலத்தில் நாயகியின் அம்மா ஒரு தியாகியாகவும் அவளின் அப்பாவிற்காக ஒரு அரக்கனை கூட திருமணம் செய்ய தயாராக இருக்கும் ஒரு பாத்திரமாக மாற்றியுள்ளார்கள்.

சீதாவின் மேல் நாசருக்கு ஒரு கண் அவளை கொண்டுவந்து நாசரிடம் விடு என்று சொல்வதில் தகறாறு துவங்கும்.

ஆங்கிலத்திலோ ஒரு தற்பெருமை மற்றும் கிறுக்கு பிடித்த இராணுவ வீரனுக்கு நாயகியின் மேல் ஒரு கண், அவள் இல்லாமல் தன்னால் உயிர் வாழமுடியாது என்றது போல் நடிப்பவனாக காட்டியுள்ளார்கள். அவர்கள் கூடி குடி கூத்தடிக்கும் இடத்தில் தனது மகளை காப்பாற்றும் படி நாயகியின் தந்தை விளிப்பதில் துவன்ப்க்கும் தகறாறு.

ஆங்கிலத்தில் அரக்கனாக இருக்கும் அவன் அவளை தன் தந்தையை காப்பாற்ற போக வேண்டும் என்று செல்லும் போது அவளை போகவிடும் மனிதனாக நடந்து கொள்கின்றான் தமிழில் பேட்டை ரௌடியாக இருக்கும் பார்த்திபன் சீதாவை வீட்டில் வைத்துக்கொண்டு அவளுக்காக உணவு வாங்குவதும் வீடு கட்டுவதாகவும் காட்டியுள்ளார்கள்.

அரக்கனின் அரண்மனையில் இருந்து தப்பித்த நாயகியை ஓநாய் கூட்டம் தாக்கும் போது குறுக்கே நின்று காப்பாற்றும் காட்சிகளை பார்த்திபன் சீதாவிற்காக உணவு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் கத்தியால் குத்தும் காட்சியை மாற்றி எடுத்து இருக்கிறார்கள்.

 நாசரின் கூட்டம் பார்த்திபனை தாக்கி கொல்ல நினைக்கும் இடத்தில் வரும் சண்டைகாட்சிகளை ஊர்மக்களை திரட்டி அந்த அரண்மனையை அழிக்க மக்களை கொண்டு அழிக்க நினைக்கும் காட்சிகளாக அழகாக மாற்றி எடுத்துள்ளார்கள்.

என்ன டிசுனி படம் எப்போதும் முடிக்கும் போது சுபமாக மட்டுமே முடிப்பார்கள் ஆகவே தமிழில் சீதா சாவதை போல் காட்டாமல் எல்லாம் சுபமாக முடிந்தது என்று காட்டிவிட்டார்கள்.

மகதீரா படத்தை பார்த்து இந்தியில் அனுமதியில்லாமல் படம் எடுத்தார்கள் என்று வழக்கு தொடுத்ததை போல் பார்த்திபனும் எனது படத்தை ஆங்கிலத்தில் என்னிடம் அனுமதி இல்லாமல் உருட்டிவிட்டார்கள் என்று வழக்கு தொடுக்கிறாரா என்று பார்ப்போம்.

ஆங்கிலத்தில் கதை திரைக்கதை வசனம் என்று போடாமல் திரைக்கதை அதுவும் அந்த கால கதையில் இருந்து எடுத்தாளப்பட்டது என்று மிகவும் கவனமாக போட்டு இருப்பதால் பார்த்திபனினால் வழக்கு தொடுக்கமுடியும் என்று தோன்றவில்லை.

Tuesday, June 13, 2017

அன்புமணி கேட்டிருக்கும் ஞாயமான கேள்வி முடிந்தால் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்

அதிமுக இத்தனை கோடி திமுக இத்தனை கோடி என்று ஆதாரங்களுடன் கேள்வி கேட்டுள்ளார் அன்புமணி. எவ்வளவு அற்புதமான கேள்விகள் அவைகள். இத்தனை கோடிகளை இறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு கொள்ளை அடித்து இருப்பார்கள் பாவிகள் அவர்கள்.

மாறி மாறி அட்சியிலும் மறைமுகமான ஒப்பந்தகளினாலும் எவ்வளவு கொள்ளை இந்த 50 ஆண்டுகாலத்தில் திராவிட கட்சிகளால் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கும் என்றும் கேட்டுள்ளார். எவ்வளவு ஞாயமான கேள்விகள் இவைகள் முடிந்தால் திமுகவும் அதிமுகவும் பதில் சொல்ல கடமைபட்டவர்கள்.

சரி நாம் அன்புமணியை கேட்போம், 50 ஆண்டுகள் பாமக ஆட்சியில் இல்லை வெறும் 4 ஆண்டுகாலம் ஒரே ஒரு அமைச்சர் பதவி. அந்த பதவியிலேயே எவ்வளவு பணம் அடித்து இருந்தால் சென்ற தேர்தலில் பாமக இவ்வளவு பணத்தை அள்ளி இறைத்து இருக்கும்.

நாட்டில் ஏழைகளின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய 4 அரசு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை தரம் சரியாக இல்லை என்று சொன்னதோடு நில்லாமல் அவைகளை மூடி வெளி நாட்டு நிறுவனங்களிடம் ஒன்றுக்கு 10ஆக காசு கொடுத்து ஏழை மக்கள் மட்டும் அல்ல. அவர்களுக்காக அரசும் அந்த வெளி நாட்டு நிறுவனங்களிடம் மட்டுமே மருந்து வாங்க வைத்த இந்த சிகாமணி ஊழழை பற்றி சங்கூதுகிறார்.

சென்றமுறை தந்தி தொகாவிற்கு அளித்த பேட்டியில் சென்னையில் புதிதாக மருந்தாலை வர வழி செய்தோம் என்றார் ஆனால் இன்று வரை எங்கே வருகின்றது என்றும் கூட இது வரை ஒருவரும் சொல்லவில்லை.

இந்த சிகாமணியின் பேச்சை நம்பி இவரை முதல்வராக அல்ல உலக தலைவராக நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுத்தால் தான் இவர் கொள்ளை அடித்து அதில் சொகுசாக இவர் மேடை ஏறி மாற்றம் முன்னேற்றம் என்று மக்களிடம் முழங்குவார்.

மல்லையா, அதாணி, அம்பாணி வாராகடனுக்கு மைய அரசு எந்த நிதியில் இருந்து பணம் வழங்கியது

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற கணக்காக விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யும் நிதியை மா நில அரசே திரட்டவேண்டுமாம் பிரிவினைவாத அரசு அருண் செட்லி நக்கலாக சொல்லி சிரிக்கின்றார்.

முன்னமே தெரிவித்தபடி மைய அரசு விதிக்கப்போகும் GST வரியில் 90% முதல் 100% வரை மா நிலங்கள் விவசாய வரியை அறிவிக்க வேண்டும்.

எந்த எந்த சேவைகளினால் உழவும் உழவு சார்ந்த தொழில்களும் பாதிக்கபடுகின்றதோ அந்த தொழில்களுக்கு எல்லாம் GST வரியில் மட்டும் அல்ல அந்த தொழில் கிடைக்கும் இலாபத்திலும் 50% வரியாக மாநிலங்கள் பெற சட்ட வழிகளை கொண்டு வரவேண்டும்.

 நாட்டின் வளர்ச்சி என்று ஒருபுரம் மா நிலங்களின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க மைய அரசு ஆட்களை பணிப்பதும். அந்த ஆட்கள் உழவும் உழவு சார்ந்த தொழில்களை அழிக்கும் விதமாக மண்ணையும் நீராதாரங்களையும் அழித்துவிட்டு பணத்தை சுருட்டிக்கொண்டு வெளி நாட்டிற்கு ஓடிச்சென்று சொகுசு வாழ்க்கையை தொடரவும் வாய்பை அள்ளி வழங்கிவிட்டு. உழைக்கு மக்களின் தலைகளில் கைகளை வைக்கின்றது இந்த பிரிவினைவாத அரசு.

நாட்டில் ஏழைகளின் உணவில் கைவைக்கும் விதமாக இந்த பிரிவினைவாத அரசு திட்டங்கள் தீட்டி அழகாக நடத்தியும் வருகின்றது.

ஏற்கனவே மாநில அரசுக்கள் அமைத்த சாலைகளை புறவழிகளில் இணைக்கும் வழிகளை மட்டும் அமைத்துவிட்டு 170 கிலோமீட்டருக்கு 200 ரூபாய் வரை உபயோக வரி என்று கொள்ளை அடிக்கின்றது மைய அரசு. ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் பயன்பாட்டுக்கு என்று அரசு செய்யப்போகும் காரியங்களுக்காக என்று தான் மக்கள் வரி கட்டுகிறார்கள்.

 நான் இதுவரையில் கட்டிய வரியில் எனக்கு அமைத்துகொடுத்த சாலைகள் எங்கே, எனது பணத்தில் எனக்காக கட்டிய சாலையில் எனக்கே பயன்பாட்டு வரியா. அங்கே கேள்வி கேட்க்க கோட்டைவிட்டோம் இப்போது நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேர்க்கவும் அதை எடுக்கவும் வரி என்ற அளவிற்கு வளர்ந்து நீற்கிறார்கள் இந்த பிரிவினைவாத அரசு.

 நரிக்கு நாட்டாமை கெடைச்சா கெடைக்கு இரண்டு ஆடு கேட்க்குமாம் அது போல் இருக்கிறது இந்த பிரிவினைவாத அரசு செயல்பாடுகள்.

Monday, June 12, 2017

பிளாசுடிக் அரிசி மட்டும் ஏன், பிளாசுடிக் பிட்சா, பிளாசுடிக் பர்கர்கள் ஏன் வருவது இல்லை

அது ஏன் எப்பவும் ஏழைகள் சாப்பிடும் உணவில் மட்டும் கலப்படம் அவ்வளவு எளிதாகவும் எல்லைகளை எல்லாம் தாண்டும் பரப்பளவிற்கு வருகின்றது.

பணக்காரர்கள் பயன்படுத்தும் பீட்சா, பர்கர், பாசுதா, வடகத்டியர்கள் பெரிதும் பயன்படுத்தும் கோதுமை என்று எல்லாம் இல்லாமல் தென்னகத்து எளிய மக்களின் அதிக பயன்பாட்டில் இருக்கும் அரிசியில் வந்து இறங்கி இருக்கிறது கலப்படம்.

2, 3 வாரங்களுக்கு முன்பு வாட்சப்பில் தமிழகத்து இட்லிக்கு சிறந்த சிற்றுண்டி என்று உலக அங்கிகாரம் கிடத்துள்ளது என்ற செய்தி பரவிய சுவடு கூட இன்னும் மறையவில்லை அதுக்குள்ளாகவே கலப்படம் வந்திறங்கியாச்சு.

இந்த கலப்பட அரிசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா இல்லை சீனாவில் இருந்து இறக்குமதியானதா என்று ஆராய்ந்து சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆட்சியர்கள்.

 நன்றாக கவனித்தால் அரியை உட்கொள்ளும் சீனா, சப்பான், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசிய, பிலிபைன்சு, வியட்னாம் வரை எந்த கலப்படமும் இருப்பதாக செய்தி வரவில்லை. மாறாக உலகிலேயே மிக சிறந்து விளங்கும் வல்லரசு இந்தியா அதுவும் பிரிவினைவாத பாசக அரசு ஆட்சி செய்யும் இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்களில் உண்ணும் உணவில் மட்டும் கலப்படம் வந்தது எப்படி. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத போது இந்தியாவில் மட்டும் நுழைந்து எப்படி என்று இந்த பிரிவினைவாத அரசு தான் விளக்க வேண்டும். விளக்குமா இல்லை இது ஏழைகளின் பிரச்சனை நாம் மல்லையாக்களை கவனிக்க போவோம் என்று செல்கிறார்களா என்று பார்ப்போம்.

செர்மனியில் இருந்து படிப்பறிவே இல்லாத இந்திகாரர் எதற்கு சென்னைக்கு வருகிறார்கள்

முன்பெல்லாம் சரியாக சொல்லவேண்டும் என்றால் இந்த பிரிவினைவாத கட்சி பாசக ஆட்சிக்கு வரும் முன் செர்மனியில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் அறிவிப்புகள் செர்மன் ஆங்கிலம் மற்றும் அழகு தமிழில் அறிவிப்புகள் சொல்வார்கள்.

ஆனால் இந்த பிரிவினைவாத அரசு வந்ததும் வராததுமாக வெளி நாட்டுவாழ் தமிழர்களின் தலையில் கைவைப்பதில் இருந்து தான் துவங்கி இருக்கிறார்கள்.

வெளி நாடுகளில் இருக்கும் இந்திய தூதரங்களில் வருபவர்களிடம் அடாவடியாக இந்தியில் தான் பேசுவார்கள் இந்த பிரிவினைவாத அரசு நியமித்த தூதரக மக்கள். இந்தில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தமிழில் சரியான பதிலை சொல்ல அதை புரிந்துக்கொண்டு பிறகு ஆங்கிலத்திற்கு மாறிய அந்த வெறியர்கள் துவக்கதிலேயே ஆங்கிலத்தில் பேசி இருக்கலாம் ஆனால் அவமானபட்டான்டா தூதரகன் என்றாகிப்போனது.

இதோ இப்போ செர்மனியில் இருந்து இந்தியா வரும் விமானத்தில் எழுத்தறிவும் படிப்பறிவும் இல்லாத இந்தி பேசும் மக்கள் அமெரிக்கா ஐரோப் யூனியன்  கண்டங்களை சுற்றி பார்த்துவிட்டும் அல்லது அங்கேயே தங்கி இந்தியில் பேசியும் எழுதியும் வேலை பார்த்துவிட்டு சென்னைக்கு திரும்பும் போது அந்த களைப்பில் அறிவிக்கும் ஆங்கிலம் கேட்ட காதில் ஈயத்தை காய்ச்சு ஊற்றியதை போல் இருப்பதால் இனி இந்தியில் சொல்ல சொல்லி சொல்லுங்கள் என்று வெளியுரவு அமைச்சகத்திடம் விளித்தாகவும் அதன் பால் இனி தமிழில் அறிவிக்க வேண்டாம் இந்தியில் மட்டுமே சொல்லுங்கள் என்று பிரிவினைவாத அரசு கேட்டுக் கொண்டதாகவும் அறிகின்றோம்.

வெளி நாட்டுவாழ் இந்தியர்கள் இந்திய பணம் வைத்து இருந்தால் சட்டவிரோதம் கோவிலில் போடச்சொல்லும் மடையர்களே அவர்களுக்கு அவர்கள் செய்யும் செலவிற்கு அந்த நாடுகள் செய்யும் சலுகைகளில் ஓசியில் வந்து வாங்கி திங்க வெட்கமாய் இல்லை.

தமிழர்களிடம் இந்த பிரிவினைவாத அரசு இன்னும் எவ்வளவு தான் பிச்சை எடுக்கும் என்று தெரியவில்லை. இந்த வெளி நாட்டுவாழ் தமிழர்களும் இளிச்சவாயர்களாய் இன்னும் எவ்வளவு தான் அவர்களுக்கு பிச்சை இடுவார்கள் என்றும் தெரியவில்லை.

இந்த எழுதபடிக்க தெரியாத இந்திக்காரர்கள் அப்படி வெளி நாட்டில் என்ன தான் வேலை இருந்து இருக்கும் கற்பனை செய்து பாருங்களேன். இந்தியாவாக இருந்திருந்தால் கன்னியாகுமாரிக்கு சாமி கும்பிட போனேன் ராமர் கட்டிய தொங்கு பாலத்தை பார்க்க வந்தேன் சொல்லுவா. அமெரிக்காவிலும் ஆப்பிர்க்காவிலும் ஐரோப் யூனியனிலும் என்ன செய்துக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று தான் புரியவில்லை.

ஒரு வேளை இது காங்கிரசு ஆட்சியின் சதி என்று பிரிவினைவாத தலைவர்களான எச்சி ராசாவும் தமிழிசை சௌந்தர்ராசனும் சொல்லுவார்கள். ஆங்கிலமும் தமிழும் தெரியாத இந்தி ஓட்டுனர்கள் தமிழகம் வந்தால் படிக வசதியாக தமிழக மைல்கற்களில் ஆங்கிலத்தை அழித்து இந்தியில் எழுதி பெருமைபட்டவர்கள் இல்லையா இந்த பிரிவினைவாத தலைவர்கள். இந்த முறை இந்தி மட்டுமே எழுதபடிக்க தெரிந்த வெளி நாட்டுவாழ் இந்தியர்கள் சென்னைக்கு வரும் போது சென்னை விமான நிலையத்தில் தவறுதலாக இறங்காமல் திரும்பவும் வந்த நாட்டுக்கே சென்றுவிட்டால் என்ன ஆகும் என்ற பெருந்தன்மையால் இந்தியில் அறிவிக்க சொல்லி இந்த பிரிவினைவாத அரசை சொல்ல சொன்னோம் என்று பெருமையாக சொல்வதை காட்சி ஊடகங்களில் பார்க்கனுமே......

Sunday, June 11, 2017

இலட்ச இலட்ச்சமாய் புன்னியம் சேர்க்கப்போகும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்

இந்திய பணம் 5000 ரூபாய்களுக்கு மேல் வெளி நாட்டிற்கு பணமாக கொண்டு சென்றால் அது சட்டவிரோதம் ஆகையால் வெளி நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 ஆயிரம் 10 ஆயிரம் முதல் 3, 4 இலட்சங்கள் வரை எல்லாம் சட்ட விரோதமாக கொண்டு சொல்லப்பட்ட பணம். ஆகையால் அந்த பணத்தை இந்தியாவிற்குள் எடுத்துவருவதோ அல்லது பழைய செல்லாத நோட்டுக்களுக்கு புது  நோட்டுகளை மாற்ற நினைப்பதே தேச துரோகமாக கருதி தூக்கில் ஏற்றப்படுவீர்.

ஆகவே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் அறிவுறையின்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி அவர்களிடம் இருக்கும் இந்திய பணத்தை கோவில்களில் தான் போட வேண்டும்.

அந்த பணத்தை கோவில்கள் கொண்டு சென்று நல்ல பணமாக பெற்று தங்களது காரியங்களுக்கு பயன்படுத்தலாம். ஆகையால் இனியும் உங்களிடம் இருக்கும் இந்திய பணத்தை வைத்துக்கொண்டு இலவு காப்பதைவிட கோவில் உண்டியல்களில் போட்டு புன்னியம் பெறலாம்.

கோவில்கள் என்றால் முருகன் முனீசுவரன் என்று எல்லாம் நினைக்காதீர்கள், திருப்பதிக்கு உண்டு என்று மட்டும் சொல்கிறார்கள். இந்து கோவில்கள் தவிர மற்ற மத கோவில்களுக்கு எல்லாம் இந்த சலுகைகள் இல்லை என்று தான் சொல்லி இருப்பார்கள்.

Tuesday, June 6, 2017

3 ஆண்டுகளில் இந்தியாவை கற்காலத்திற்கு தள்ளிய கட்சி இன்னும் 50 ஆண்டுகள் பற்றி பேசுகின்றது

இந்த 3 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு படிபடியா சரிந்து இனிமேல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள் வர போவதில்லை என்று பொறியியல் துறைக்கு வரும் விண்ணப்பங்கள் 3ல் ஒன்றாகு வீழ்ச்சி அடைந்துள்ளது இந்த ஆண்டில்.

தமிழகத்தையும் தெற்கு மாநிலங்களையும் விடுங்கள், வடக்கில் மக்கள் வீதியில் சென்று காய்கறி வாங்கி வரக்கூட பயப்படுகிறார்கள். இருப்பது சுதந்திர இந்தியாவிலா இல்லை அடுத்த நாட்டு படையெடுப்பில் சிக்கி தவிக்கும் நாட்டிலா என்ற அச்சம் வடக்கில் உலவுகின்றது.

நவநாகரீகமாக உடையணிந்தாலோ, அல்லது புரட்சி செய்கின்றேன் போராட்டம் செய்கின்றேன் என்று வடக்கில் பெண்கள் வீதிக்கு வந்தால், அவளை வன் புணர்ந்து, சாகும் வரையில் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு பாகமாக அறுத்து எடுத்து துடி துடிக்க வைத்து கொல்வார்கள், வடக்கத்திய வெறியர்கள்.

வடக்கத்தியர்கள் இந்துவாக இல்லை என்றால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வீட்டில் புகுந்து குளிர் சாதணபெட்டியில் பொங்கல் வைத்து இருந்தார்கள் என்றும் கொல்லப்படுகின்றார்கள். அதுவும் எப்படி நாட்டு மக்கள் அனைவரும் இந்தியா பாக்கிட்தான் அணிகள் விளையாடும் கிரிகெட்டு போட்டியை நேரில் அலைப்பரப்புவதை போல் ஊடகங்களை அழைத்து நேரலையில் கொன்று குவிக்கின்றார்கள்.

ஒரு ஒப்பீடுக்கு சொல்ல வேண்டும் என்றால் அன்று இட்லர் ஆட்சியில் அவருக்கு பிடிக்காத யூத இன மக்களை தினமும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி கொல்வதை போல் இந்தியாவில் கொல்கின்றார்கள் வடக்கில்.

சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் வங்கியில் போடாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று எல்லோரையும் மிரட்டி பணத்தை வங்கிகளில் சேர்த்தபின் பணம் எடுக்க தடை என்று அறிவித்த கொடுங்கோல் ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

இந்த இழி கட்சியின் சமீபத்திய கண்டுபிடிப்பு இந்தியாவில் விளையும் மாடுகளை வங்காளத்தில் கடத்திக்கொண்டு போய் விற்கிறார்களாம்.

மாடு என்ன சின்ன குழந்தைகளா கடத்திக்கொண்டு போக, வளர்த்தவன் விற்கின்றான் வாங்குபவன் வங்காளத்திலும் விற்பான் முடிந்தால் பாசகவினர் போல் அமெரிக்காவிற்கும் விற்பான்.

தானும் தன்னை சார்ந்தவர்கள் தவிர வேறு யாரும் எந்த ஏற்றுமதியும் செய்துவிடக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் இந்த இழி செயலை செய்துள்ளார்கள். அது மட்டும் இல்லை, இந்தியாவில் இருக்கும் ஏ2 மாடுகளை அரவே ஒழித்துவிட்டு சர்க்கரை நோய் மாடுகளை கொண்டு வந்து நிறுவிட்டா வீட்டில் இருக்கும் ஒவ்வொறுவருக்கும் சர்க்கரை நோய் மருந்து மற்றும் இருதய நோய் மறுந்துகளை ஒரு நபருக்கு குறந்தது 20 ஆண்டு விற்கலாம் என்ற பேராசையிலும் செய்கின்றார்கள் இந்த இழி கட்சியினர்.

இந்த பிரிவினை வாத இழி கட்சி தொகா விவாதங்களில் தங்களை சமூக பாதுகாவலர்கள் என்று இந்தியாவின் பன்முகத்தையும் காப்பாற்ற வந்து இறங்கி இருக்கும் அவதாரங்கள் என்றும் தங்களை தாங்களே சொல்லிகொள்கிறார்கள் இந்த இழி கட்சியினர்கள்.

இனி இவாக்களுக்கு நெய்யும் பாலும் விற்கும் போது இது யாகத்திற்கு வாங்கவில்லை என்று 10 ஊரில் சென்று சான்றிதழ்கள் வாங்கி வா உணவு தண்ணீர் தருகின்றோம் என்று மக்கள் சொல்ல முன்வரவேண்டும். இல்லையேல் இப்படி தான் அட்டம் போடுவார்கள் இந்த இழி கட்சியினர்கள்.

செய்வீர்களா மக்களே சிந்தியுங்கள், நாளை தலையில் குல்லா அணிய தடை, வண்ணத்தில் வேட்டி லுங்கி அணிய தடை, இந்திய பாரம்பரிய உடையை தவிர வேறு துணிமணிகளை வணிகர்கள் விற்க தடை ஆனால் வாங்க தடை இல்லை, தெருவில் காலில் செருப்பு அணிய தடை, மேலே சட்டை அணிய தடை, பெண்கள் மேலாடை அணிய தடை. பேருந்தில் சொகுசு வண்டிகளில் பயணம் செய்ய தடை, முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுபில் பயணம் செய்ய தடை என்று இனி வரிசையாக தடை வர இருக்கின்றது. பாவம் வடக்கதியர்கள், இந்த இழி கட்சியின் பொய் மொழிகளை(இந்தியும் சங்கதமும்) கேட்டு நம்பி பரதேசம் போகப்போகின்றார்கள்.

Monday, June 5, 2017

உண்மையில் மாடு விற்பனை தடை இதனால் தான் விதிக்கப்பட்டது

திரும்ப திரும்ப பாசக மக்கள் அனைவரும் சொல்வது கறியை வாங்குவதையோ விற்பதையோ இல்லை சாப்பிடுவதையோ தடை செய்யவில்லை. மாறாக மாட்டை விற்பதற்கு மட்டும் தான் தடைவிதித்துள்ளோம்.மாட்டை வாங்க கூட தடையில்லை ஆனால் விற்க மட்டும் கூடாது என்றும் மட்டும் தான் இருக்கின்றது என்று அழகாக சொல்வார்கள்.

இதில் அவர்கள் சொல்லும் உண்மை மாட்டை இந்தியாவில் ஒருவரும் விற்கக்கூடாது. ஆனால் வாங்கலாம் திங்கலாம் தடை எல்லாம் ஒன்றும் இல்லை.

இல்லாத மாட்டை எப்படி வாங்குவார்கள் அல்லது உண்பார்கள் என்ற கேள்வியுடன் நீங்கள் தயாராகுவது தெரிகின்றது.

அந்த பதிலை சொல்லும் முன் கடந்த 8, 10 ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள் முதல் அரசன் வரை என்று மருத்துவ காப்பீட்டை விற்று வருகின்றது வெளிநாட்டு நிறுவனங்கள்.

நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எட்டாத மருத்துவ காப்பீட்டை எப்படி வாங்குவார்கள் என்று கேட்டபோது தகுதியுள்ளவர்களுக்கு அரசை காப்பீடு வழங்குங்கள் என்று அதே காப்பீட்டு நிறுவனகளால் வழங்கப்பட்டது.

அப்படி பட்டி தொட்டி எல்லாம் மருத்து காப்பீட்டுகளை அள்ளி வழங்கி மக்களை காத்துவிட்டதாக அரசுகளும் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவங்களும் வீர வசனம் பேசியது.

சரி இனி நாடுமுழுவதும் வரும் நடுத்தர மற்று கிராமத்து ஏழை மக்களுக்கு மாரடைப்பு சர்க்கரை வியாதி என்று மாதா மாதம் மருந்துகளை விற்று கல்லாகட்டுவோம் என்று பாமகவின் அன்புமணியின் துணையில் இந்தியாவில் இருக்கும் அரசு மருந்து கம்பெனிகளை எல்லாம் மூடிவிட்டு அவர்களது ஆலைகளை திறந்து புட்டி மருந்துகளை பெட்டி பெட்டியாக அடுக்கி வைத்துக்கொண்டு காத்து கிடந்தது.

அரசு மாத தவணைகள் தவிர காசு கல்லாவை எட்டி பார்க்கவில்லை. என்னடா இது நமது காப்பீட்டு மற்றும் மருந்து கம்பெனிகளுக்கு வந்த சோதனை என்று பாசகவின் ஆயோக்கியர்களுடன் ஆலோசனை நடத்தியது.

அட மடையன்களா நடுத்தர மற்றும் ஏழைமக்கள் எல்லாம் உழைக்கும் மக்கள் அவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவது அரிது என்றும் மேலும் அவர்கள் உண்ணும் உண்வுகளிலும் குறிப்பாக மாட்டிறைச்சியும் ஏ2 இரகத்தை சேர்ந்தது என்றதால் இருதயம் மற்றும் அதை சார்ந்த உயர் இரத்த அழுத்தமும் அதிக கேலரி உணவினால் வரும் சர்க்கரை வியாதியும் வருவது இல்லை என்று பாசகவின் ஆயோக்கியர்கள் கண்டு அறிந்தனர்.

அப்படி என்றால் சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயை உண்டு செய்யும் ஏ1 மாட்டு பாலும் மாட்டு இறைச்சியையும் மக்கள் இனிமேல் உட்கொள்ள வழி செய்ய வேண்டும் என்று பாசகவின் ஆயோகியர்கள் பணிக்கப்பட்டார்கள் காப்பீடு மற்றும் மருந்து கம்பெனிகளால்.

ஆதலால் இந்திய ஏ2 மாடுகளை அழித்தால் இது நடக்கும், முதலில் காளை மாடுகளை அழி பிறகு பசு மாடுகளை அழி என்று உத்தரவு.

களமிறங்கிய பீட்டா காளைகளை வளர்க்கவும், சந்தை படுத்துதலையும் தடுத்தது. இப்போது பசுக்களை மக்களுக்கு சுமையாக்கி மாடு வைத்து இருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளை அழித்தால் அவர்களும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் வீட்டுக்கு 5 பேருக்கு சர்க்கரை மற்றும் இருதய சிகிச்சை மருந்துகளை அவர்கள் ஆயூட் காலம் வரை விற்க ஆயத்தம் ஆகி வருகின்றது.

அது மட்டும் இல்லாது இந்திய உணவை விற்கப்போகும் உணவகங்கள்  GST காரணம் காட்டி மூடப்போவதாக அறிவித்து இருக்கின்றது. மூடும் இடங்களில் அதிக கொழுப்பு உணவுகளான பீசாவும் பர்கர்களையும் பெப்சி கோலாவுன் கொடுப்பார்கள்.

மீண்டும் ஒரு சுதேசி இயக்கத்துக்கு இந்தியா தன்னை தயார்படுத்திக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளதை மக்கள் எப்போது தான் உணர்வார்களோ......

Saturday, June 3, 2017

இளையராசா - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்