Thursday, May 31, 2018

யார் அந்த சமூக விரோதிகள் - தலைவரும் தமிழிசையும் யாரை சொல்கிறார்கள்

முதன் முதலில் தமிழக போராட்டங்களில் சமூக விரோதிகளும் பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் கலந்துவிட்டார்கள் என்று மைய அமைச்சர்கள் சல்லிக்கட்டு போராட்டத்தின் போது திருவாய் மலர்ந்தார்கள். அதன் தொடர்ச்சியாக தூத்துகுடியிலும் அப்படி நடந்ததாக சொல்கிறார்கள் தமிழிசையும் அவர் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தலைவரும்.

பாசகவின் பொம்மலாட்ட அரசியல் முதல்வர் பொம்மைகள் ஏற்கனவே சமூகவிரோதிகள் என்று சிரித்துக்கொண்டே மக்கள் இறந்ததை சொல்லும் அந்த வெட்கம் கெட்டவார்களின் செயல்களை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

சென்ற போராட்டத்தில் காலிகாவலர்களை கொண்டு வன்முறையை துவங்கியதை மக்கள் படம் பிடித்து வெளியிட்ட அனுபவத்தை கணக்கில் கொண்டு இந்த முறை யாரும் படம் எடுக்க முடியாதபடி மக்களை விரட்டியடித்ததும். இணையத்தை முடக்கியபிறகு அரசு மட்டும் வெளியிடும் படங்கள் வெளியாகி இருப்பது சந்தேகத்தை இன்னமும் உறுதி செய்கின்றது.

குசராத்தில் துவங்கிய அரச பயங்கரவாதத்தை பாசக மெல்ல தமிழகத்தில் அரங்கேற்றி வருகின்றது. இனி யாராவது போராட்டத்தை நடத்தினால் வாயிலேயே சுட்டுக்கொள்வோம் என்று நிறுவியுள்ளார்கள்.

வேதாந்தா வீசிய ரோட்டி துண்டுக்கு பாசக பொதுமக்களை கொன்று குவித்துள்ளது தனது பொம்மலாட்ட அரசை கொண்டு.......

Wednesday, May 30, 2018

பாசக கலந்து கொள்ளாத போராட்டத்தில் எப்படி பயங்கரவாதிகள் - தமிழிசை

தமிழிசை சொல்கிறார் சமூக விரோதிகளும் தீவிரவாதிகளும் தூத்துகுடி போராட்டத்தில் புகுந்துவிட்டார்களாம். அது தான் பாசக இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லையே பிறகு எப்படி சமூக விரோதிகளும் பயங்கரவாதிகளும் இந்த போராட்டத்தில் வந்திருக்க முடியும். தமிழிசை உறுதியாக சொல்வதை பார்த்தால் திட்டமிட்டு வெளியில் தெரியாமல் பாசக மற்றும் சங்க பரிவாரங்களை ஊடுருவ செய்து வன்முறையை தூண்டிவிட்டு போராளிகளின் மேல் பழியை போடுகிறார்கள் போலும்........

Friday, May 25, 2018

இந்திய சுதந்திர போராட்டத்தை ஞாபகபடுத்தும் போராட்டங்கள்

இந்திய சுதந்திர போராட்டங்களை வரலாறு பாடத்திலும், படங்களிலும் கதைகளிலும் மட்டும் தான் அறிய இருந்தோம் இது வரை.

மக்களின் நலனுக்கு எதிராக அல்லது மக்களை கணக்கிலே எடுத்துக்கொள்ளாத நடவடிக்கைகளை எதிர்க்கவோ அல்லது போராடவோ உரிமையில்லாத நிலையை தான் அடிமை நிலைமை என்று அறிஞர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்கள் இது வரை.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு என்ன செய்தாலும் கேள்வி கேட்கவோ அல்லது எதிர்த்து பேசவோ என்ந்த உரிமையும் இல்லை என்று சொல்ல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன உரிமை இருக்க முடியும்.

யார் யாருக்கு என்ன என்ன உரிமைகள் இருக்கிறது என்று விளிக்கும் விதமாக அல்லவா இருக்கிறது அரசின் நடவடிக்கைகள்.

என் வீட்டு பெணகளையும் உன் வீட்டு பெண்களையும் நீதிபதிகளின் வீட்டு பெண்களையும் பொதுவாக அசிங்கப்படுத்திவிட்டு என்னை முன் பிணையில் விடுவிக்க வேண்டும் என்று சேகர் உச்ச நீதிமன்றம் வரை செல்ல முடிக்கின்றது. ஆனால் உயிருக்கு ஆபத்து, இது வரை நடந்தது என்ன இனிமேல் அதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று கோறும் மக்களின் பிரதினிதிகளை குறி பார்த்து கொல்லும் அரசின் செயலை கேள்வி கூட கேட்க முடியவில்லையே.....

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இம் என்றால் சிறை ஏன் என்றால் வனவாசம் என்று தான் இருந்தாக படித்து இருக்கிறோம் ஆனோல் இன்றைக்கு நேரில் பார்க்கும் கொடுமை.... அதற்கு மேல் உயிரையே எடுக்கும் நிலை....

காலவர்களே பொது சொத்துகளை கொளுத்துவதும் அதை போராட்டகாரர்கள் தான் கொளுதினார்கள் என்று  நீதிமன்றதில் சொல்வதும் அதை உண்மை என்று நீதிமன்றம் அங்கிகரிப்பதும் யாரை கேலி செய்யும் செயல்கள் என்று தான் புரியவில்லை.....

என்ன தான் அழுது புலம்பினாலும் மாண்டார் வரப்போவதில்லை, அந்த 13 உயிர்களின் பலிக்கு என்ன பதிலை வைத்துள்ளோம்..... அவர்களை பிர்ந்து தவிக்கும் குடும்பங்களை சுமக்க போவது யார்......

மலர்ந்தும் மலாராத மலர்களாக பிரிந்தவர்களும், மரமாகி நிழாக நின்றவர்களும் இன்று நம்மோடு இல்லை.......அவர்களை தங்களின் எதிர் காலமாக நினைத்து வாழ்ந்த மக்களுக்கு என்ன சொல்ல போகின்றோம் நாம்..........

இப்படி விடையே தெரியாத கேள்விகளாத்தான் இருந்தது இந்திய சுதந்திர போராட்டம்..........

அதன் நவீன வடிவமாக் ஈழ மக்கள் அழிக்கப்பட்டதை மிக அருகாமையில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் நாம்.......

தனக்கு சட்டம் வழங்கி இருக்கும் உரிமையில் போராட சென்ற ஆண்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள் முதலில்......

என்ன ஆனாலும் போராடுவோம் என்று சென்றவர்களின் குடும்பமும் உடமைகளும் தீக்கிரையாக ஆக்கப்பட்டது பிறகு. போராடம் சென்று விட்டு வீடு திரும்பினால் வீடோ சொந்தமோ இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள் ஈழத்தவர்கள்.....

அரசு நினைத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யும் என்று சூளுரைத்தார்கள் ஆட்சியாளர்கள்....கிட்டத்தட்ட அவர் பல்கலையின் வேந்தர் அவருக்கு தான் உரிமை இருக்கிறது அவர் யாரை வேண்டும் என்றாலும் பதவில் அமர்த்துவார் நீங்கள் வேடிக்கை மட்டும் பருங்கள் என்று தமிழிசை சௌந்தராசன் சொல்வது போல் சொன்னார்கள்.

பிறகு தமிழர்கள் என்று தெருவில் கானும் அனைவரும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள்..........

அரசை நம்புவதா இல்லை உரிமைக்காக போராடும் போராளிகளை நம்புவதா என்று குழம்பிய குழப்பத்தில் தப்பித்து பிழைத்த மிச்ச சொச்ச மக்கள் இந்த 11 ஆண்டுகளாக வதை முகாம்களுக்குள் முள்வேளிகளுக்குள் காட்சி பொருளாகவும் அகில உலக கண்காணிப்பாளர்களுக்கு சாட்சியாகவும் வாழவும் முடியாமலும் சாகவும் முடியாமலும் தவிக்கும் அந்த ஈழ மக்களின் நிலையும் வரலாறையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்துகின்றது..........

ஒற்றுமையாக இருந்த 4 மாடுகளை பசு, மாடு, சானி, பசு மூத்திரம் என்று பிரித்து தனித்தனியாக ஆக்கிய பின்பு அவர்களின் மீது பாய்ந்த புலியின் கதையாக அல்லவா ஆகி இருக்கிறது தூத்துக்குடி நிகழ்வுகள்........

இப்படியே இணையத்தில் எழுதிக்கொண்டும் பரிகாசம் செய்துக்கொண்டும் பொழுதை கழிப்போம்.... நமக்கான உனக்கான ஒரு தலைவன் வருவான் என்று கனவு காண்போம்..................

Thursday, May 24, 2018

இனி யாராவது போராட்டம் செய்வீங்க

எதுக்கு எடுத்தாலும் போராட்டம் எப்பவும் போராட்டம் என்றால் எப்படி. நடக்கிறது நடக்கட்டும் என்று இருந்துவிட்டு போகவேண்டியது தானே....

யாரோ சொன்னாங்கன்னு கொடிய தூக்கிகிட்டு வெற்றி வேல் வீர வேல்லுன்னு போய் கடைசியில 13 போர் பலி. யாரோ பெற்ற அந்த பிள்ளைகளை எதற்காக பலி கொடுக்க வேண்டும்....

தமிழ் நாட்டின் வளங்களை எல்லாம் கொள்ளை அடித்து வடநாட்டு முதலாளிகளுக்கும் வெளிநாட்டு மக்களுக்கும் இந்திய அரசு விற்றால் உங்களுக்கு என்ன என்று இருக்க வேண்டியது தானே.

தமிழகத்தில் இருக்கும் கனிம வளங்கள் மட்டும் இல்லை கல்வி வளங்களை கூட எடுத்து விற்றுவிட்டு தான் போகட்டுமே உனக்கு ஏன் இத்தனை கோபம்.

விட்டு விடுங்கள் போராட்டங்களை, விட்டு கொடுங்கள் தமிழகத்தை. பாரத மாதாகி சே, வாழ்க பாரதம்.

Thursday, May 17, 2018

நேர்மை என்றால் அது பாசக தான் - அவர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்

என்ன நேர்மை, என்ன அரசியல் தூய்மை என்ன ஒரு அறிவு, என்ன ஒரு ஆழ்ந்த புலமை. ஒரு ஆளும் கட்சி என்றால் இப்படி அல்லவா இருக்கனும். முதலில் ஆளுனர்கள் நியமனம் அடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம். பிறகு என்ன அவர்கள் செய்வது தான் செயல், சொல்வது தான் ஞாயம் எல்லாம்.

மற்ற கட்சிகள் எல்லாம் வீன், அவ்வளவும் வீனே.

Tuesday, May 1, 2018

சின்னஞ்சிறு குழந்தைகளாக பேசும் பாசகவின் முதல்வர்கள் - கார்டூகள் படுத்தும் பாடு

சின்னஞ்சிறு வயதில் சூப்பர்மேன்(superman) பைடர்மேன்(spyderman) கீமேன்(Heman) தொடங்கி இராமாயணம் மகாபாரத கதைகளை கார்டூனாக பார்த்து இருப்போம்.

அந்த வயதில் அந்த பூனை எலியை விரட்டி பிடிக்கப்போய் அடி வாங்கும் காட்சிகளை பார்க்கும் போதும், தூங்கிக்கொண்டு இருக்கும் அந்த பெரிய நாய் வந்து அந்த பூனையை வெளுக்கும் போதும் மனதில் மகிழ்ச்சி மட்டும் அல்ல, நாய்கள் ஞாயமாக நடந்துக்கொள்பன, பூனைகள் முட்டாளானவை, எலி மிகவும் புத்திசாலி என்றும் மேலோட்டமாக மனது நம்பும். அடுத்த முறை அந்த விலங்குகளை பார்த்தால் அதே அபிப்பிராயத்தில் தான் பார்க்க தோன்றும்.

இது ஒரு புரம் இருந்தால் மற்றொருபுரம் சூப்பரமேன் துவங்கி இன்னும் என்ன என்ன மேன்கள் இருக்கிறார்களோ அத்தனை மேன்களும் நாட்டில் எங்கேனும் அநீதி நடந்தால் மாயமாக தோன்றி உதவுவார்கள் என்று நம்பிக்கையையும் தூவும் கதைகளாக தான் வலம் வந்தது.

இல்லை அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்கும் தன்மை மனிதர்களுக்குள் உதிக்க உதவியாகத்தான் இந்த கார்டூன் தொடர்கள் என்று அவர்கள் சொன்னாலும். எந்த வம்பு தும்புக்கும் போகாதீர்கள் என்று சொல்லித்தான் குழந்தைகளை வீட்டில் வளர்ப்பார்கள்.

எது உண்மை எது மிகைபடுத்தப்பட்டவை என்று அறியாபருவத்தில் பார்க்கும் கதைகளும் அதன் பொருட்டு மனதுக்குள் வரும் நல்ல எண்ணங்களை விதைத்தாலும் அந்த நிகழ்வுகள் எல்லாம் உண்மை அல்ல. மிகைபடுத்தப்பட்டவைகள் என்று வளர்ந்த அனைவரும் அறிவார்கள். இதன் தொடர்ச்சியாக வரும் திரைப்படங்களும் நாடகங்களும் கதைகளும் அந்த வகைகளே.

ஒரு மாநிலத்தின் முதல்வர், அந்த மாநிலத்தின் மக்களால், தங்களின் நலனுக்காக செயலாற்ற தேர்வு செய்யப்பட்டவர்கள். எவ்வளவு அறிவும் செயல் திறனும் கொண்டவர்களாக இருக்க வேண்டியவர்கள். அவர்கள் பேசும் பேச்சுகளை பாருங்கள், கார்டூன் குழந்தைகளாக அவர்கள் பிதற்றுவது நாள் தோறும் செய்திகளில் வருகின்றது.

இந்த அறிய பிள்ளைகளை தான் தனது கட்சியின் பிரதினிதிகளாக பெருமையாக சொல்லிக்கொள்ளும் பாசக எத்தனை பெரிய அறிவார்ந்த கட்சியாக இருக்கும்........

போய் பக்கோட சுட்டு விற்கும் வேலைக்கு செல்லுங்கள் பாசக மக்களே.......