Saturday, June 21, 2008

இராமதாசு இனிமேல் என்ன செய்வார்இது வரையில் ஆதரவாகவும் ஒரு பெரிய இலக்கை நோக்கி அரவணைபோடு பயணித்து வந்த பாமக இப்போது ஆட்டம் கண்டு தான் இருக்கிறது. இல்லை என்றால் இந்த ஒரு நிகழ்வுக்காக தினமும் அறிக்கை விடுவார் ஏன், அதுவும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று ஏன் இத்தனை அறிக்கைகள் விட வேண்டும்.


தினமணியில் சொல்வதை போல் அதிர்ச்சி கொடுத்தே பழக்கப்பட்டவருக்கு இப்போது இந்த அதிர்ச்சி வைதியம் கொஞ்சம் குழம்பிப்போய் தான் இருப்பார். இருந்தாலும், என்னவோ விடையை கண்டு பிடித்துவிட்டது போல் ஒரு மணிக்கு ஒரு அறிக்கையாக விடுகிறார் பாவம்.


அதுவும் காடுவெட்டி குரு சொன்னது ஒன்றும் தவறில்லை என்று சொல்லும் போதே தெரிகிறதே இராமதாசுக்கு கட்சிக்குள் என்ன மதிப்பு என்று. என்ன ஆனாலும் தனது மகனது பதவிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்று எவ்வளவோ கவனமாக இருந்தும், இவரது பேச்சை காவெ குரு கேட்டகவில்லை போலும். சரி என்ன செய்வது என்று நடப்பதை பார்த்து வியந்து போய் நிற்கிறார் போலும்.


2011ல் பாமக ஆட்சி, அதுவும் ஊழலோ குழப்பமோ இல்லாத ஆட்சி என்றும். மக்களின் சேவைக்காக மட்டுமே இருக்கும் அந்த ஆட்சி என்றும். எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளிவீசி, மனதிலும் அந்த எண்ணம் எப்படியும் நிறைவேறும் என்ற ஆசையிலும் திளைத்து இருந்த நேரத்தில் கூட்டணி இல்லை என்று சொன்னால் அவர் கொஞ்சம் ஆடித்தான் போய் இருப்பார்.


மக்கள் குடிப்பார்கள், குடிப்பது அவர்களது உரிமை. ஆனால் அவர்கள் குடிக்க யாரும் சாராயம் விற்கக்கூடாது, அதிலும் அரசாங்கமாக இருந்தால் கூடவே கூடாது என்ற சொன்னார். இதில் உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இப்படி ஒரு வாதம் அது தான் அவரது அரசியல் பாங்கு, இப்படி தான் அரசின் எல்லா செயல்களையும் தமிழன் எக்சுபிரசு அளவிற்கு உளரி கொட்டினார். அப்படி கொட்டும் போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு இப்போது திடீர் என்று வெளியே போகச்சொன்னால் பிறகு ஒரு மணிக்கு ஒரு அறிக்கை வராது.


இதே அணியில் பொதுவுடமையினர் இருக்கிறார்கள், அவர்களது விமர்சனம் எவ்வளவோ பரவாயில்லை. பொருப்புடனும் கருத்துக்களை எடுத்து வைப்பதிலும், விமர்சங்களை எதிர்கொள்வதையும் அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது இவருக்கு.


இனிமேல் என்ன தான் செய்வார் அவர், வேறு என்ன எந்த கூட்டணியில் அழைகிறார்களோ அவர்களது கூட்டணிக்கு செல்வது. அங்கே சென்ற கையோடு அதிகாரத்தில் இருப்பவர்களை பார்த்து 35, 45 இல்லை சுழி என்று மதிபெண் இட்டு தேர்ச்சி அறிக்கை சான்றிதழ்களை வழங்குவார். அதிலும் நேரிலே அவர்களிடம் சொன்னால் தனக்கு விளம்பரம் கிடைக்காது என்று ஒரு நிருபர் கூட்டத்தை கூட்டி அவர்களிடம் நையான்டி பேசுவார்.


அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர் கூட அவரை பார்த்து இவர்களுக்கு இவ்வளவு மதிப்பெண் என்று கொடுக்கிறீர்களே, இத்தணை ஆண்டுகள் அரசியலில் இருந்து வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்று கோட்டைகளாக அறிவித்துக்கொண்டு இருக்கிறீர்களே, இருந்தும் வெறும் 18 இடங்களை மட்டும் தான் உங்களால் பெற முடிந்ததா. எங்கே அந்த கோட்டைகள் எல்லாம் எங்கே ஐயா என்று ஒருவரும் கேட்க்க மாட்டார்களே. அப்படி கேட்டால், குருவின் பார்வையில் இருந்து தான் தப்பித்து வீடு செல்வார்களா.


இராமதாசு ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அப்படியே அமெரிக்க புச்சு மற்றும் இதர அரசியல் தலைவர்களுக்கும் மதிப்பெண் கொடுத்து விட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும். செய்வீர்களா......


Saturday, June 14, 2008

வியாபாரம் ஒரு முறைபடுத்தபட்ட கொள்ளையோ (கொள்ளையர்களே வெளியேறு இயக்கம் தேவையோ)இன்றைக்கு அலைபேசியில் இருந்து அன்றாட உணவு வரை அடக்கமுடியாத விலையில் வந்து நிற்கிறது. ஒருகாலத்தில் 2 இலட்சங்கள் இருந்தால் இடம் வாங்கி அழகாக ஒரு வீட்டையே கட்டிவிடலாம் என்று இருந்த நிலை போக, இப்போது இலட்சங்கள் கூட அன்றாடங் காட்சிகளாக மாற்றம் பெறுவதை கவனிக்காமல் இருக்க முடியவில்லை.


முன்பெல்லாம் என்றைக்கு நடுத்தர வர்கத்தினருக்கு சம்பள உயர்வு வருகின்றதோ அனையில்ருந்து அரிசி பருப்பு என்ன எல்லா வகைகளும் விலையில் பறக்க துவங்கிவிடும். மறுபடியும் அவனது வாழ்வில் சேமிப்புக்கு மிஞ்சுவது அதே சொற்பமான பொருளே.


விளைபொருளை விளைவிக்கும் விவசாயிக்கு கிடைப்பதும் அதே பழைய கொழுமுதல் விலையே தவிர இந்த விலையேற்றத்தால் பலனடைவது விளைவிப்பவனு கிடையாது. அதை வாங்கி உண்பவனும் கிடையாது. மாறாக, கையில் கொஞ்சம் நிலுவை தொகையாக பொருளை கொண்டுள்ளவர்கள் அடி மாட்டு விலைக்கு பொருள்களை விவசாயிகளிடம் வாங்கி. சந்தையில் அதிக தேவை வரும் வரையில் பதுக்கி வைத்துவிட்டு. பிறகு 100க்கு வாங்கிய பொருளை 400க்கோ 800க்கோ சந்தையின் நிலைக்கு தகுந்தார்போல் விற்றான்.


நடுத்தர வர்க்கம் இதையும் வாங்க முடியாமல் விழி பிதுங்க நிலையை சமாளிக்க என்ன செய்வது என்று எல்லா வகையான மாற்று திட்டங்களையும் சிந்தித்து அலைவான். கடைசியில் புலம்பிக்கொண்டே அந்த பொருளை கொள்ளைவிலைக்கு சந்தையில் வாங்குவான். இது அரசாங்கம் அங்கிகரிக்கும் நல்ல சந்தையின் கதி இது. இதிலே கள்ள சந்தையின் கதி என்னவாக இருக்கும் பாருங்கள்.


முன்பு பல பதிவுகளில் சொன்னது போல் ஏழைக்கோ இது எட்டாக கனி, அதனால் அவனுக்கு இது பற்றி கவலை இல்லை. அதே போல் பொருள் படைத்தவருக்கோ இது ஒரு செலவும் அல்ல. ஆனால் இதற்கு இடைபட்டோரது நிலைதான் கொடுமையிலும் கொடுமை


மாதம் முழுக்க கடின உழைப்பில் இவன் கொண்ட பொருளை சந்தையின் நிலையை காட்டி அந்த பொருள் படைத்த வியாபாரி பிடுங்கிக்கொண்டு செல்வான். இதிலே இந்த தண்டல் தொகையை ஊரெங்கும் ஒரே நிலையில் வைக்க இவர்களுக்கு சங்கம் வேறு.


உண்மையில் இந்த வியாபாரிகளின் இந்த கொள்ளையின் முதலீடு என்ன. மக்களின் அறியாமையா என்றால் இல்லை, பிறகு சோம்பேரித்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.


இன்றைக்கும் கிராமபுரங்களில் வார சந்தை மாத சந்தை என்று இருக்கத்தான் செய்கிறது. அங்கே விலைக்கு விற்கும் கறிகாய்களின் விலைமட்டும் எப்படி குறைவாக இருக்கிறது. இந்த கொள்ளையர்களின் பங்கு அங்கே இல்லை என்றது வெளிபடை, இருந்தாலும் உள்ளே பொதிந்து இருக்கும் உண்மை விளைவித்தவனும், வாங்குபவனும் நேரடி வணிகம் புரிகிறார்கள் அங்கே.


விளைவித்தவன் சொவது தான் விலை, வாங்குபவன் வாங்குவது தான் விலை என்று இருக்கும். மாலையில் பொழுது போக விலைகள் படிந்துகொண்டே வரும் பொருள்களின் தரமும் குறைந்த வண்ணமாக இருக்கும். அன்றைக்கு சந்தையின் முடிவில் விவசாயின் கையிலே பொருள், வாடிக்கையாளரின் பையிலே விளைந்த பொருள் என்று இருக்கும்.


ஆனால் சிறு நகரம் முதல் பட்டணம் வரை இப்படி தேடிச்சென்று பொருளை வாங்க நமக்கு பொருமையும் இல்லை நேரமும் இல்லை. ஒரு அரை நாள் செலவழித்தால் வருடத்திற்கு தரமான நெல்லை வாங்கலாம் என்றால், யார் பிறகு அரைப்பது, இட்லி அரிசிக்கு யார் வேகவைப்பது என்ற கேள்விகள் எழாமல் இல்லை. இதை எல்லாவற்றையும் விட, தொலைபேசியில் கூப்பிட்டு இவ்வளவு அரிசியும் பருப்பும் கொண்டு வந்து கொடு என்றால். வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விலையையும் வாங்கி செல்வான் அதை விடுத்து நெல்லாம், அரைப்பாம் என்று சொல்வார்கள்.


இப்படி மிச்சம் பிடிக்கும் நேரங்களில் நாம் அப்படி என்ன தான் செய்கின்றோம். படம் பார்ப்பது, நண்பர்களோடு கொட்டம் அடிப்பது. இல்லை என்றால் தெரு முனையில் கடையில் நண்பர்களுடன் வம்பு பேசி அலைவது என்று தான் இருக்கிறோமே தவிர, ஒன்றும் விஞ்ஞான வேலைகளில் ஈடு படுவது எல்லாம் இல்லை.


இப்படி விளை பொருள்களில் தொடங்கிய விலை பெருக்கம் இன்று வீட்டு மனைகளை கோடியில் கொண்டுவந்து நிற்கிறது.


அந்த கொள்ளையர்களை விட, அவர்களை இப்படி கொள்ளையடிக்க விட்டு வைத்திருக்கும் நாம் தான் மிக பெரிய குற்றவாளிகள்.

ஈழத்தில் என்ன தான் நடந்து கொண்டு இருக்கிறது.அனேகமாக ஈழத்தை கவனித்துவரும் அனைவரது மனதிலும் ஓடும் எண்ணம் இதுவாகத்தான் இருக்கும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான தகவல்களாக வந்துக்கொண்டிருகிறது.

இருப்பது போதாது என்று இப்போது புதிதாக ஒன்று இதனுடன் சேர்ந்துகொண்டுள்ளது. இன்னமும் 27 கிலோ மீட்டர் நீளம் தான் மீதம். அந்த தூரமும் சுற்றி வளைக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கிறது, விரைவில் பிரபாகரன் பிடிபடுவார். அவரை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதே நோக்கம் என்று சிங்கள தளபதி நேர்காணல் விடுத்துள்ளார்.

ஈழ இதழ்களை படித்தால் அவர்களும் இதை மறுக்கவில்லை, வரட்டும் வந்து வளைத்து பார்க்கட்டும் என்று தான் நாங்களும் காத்துக்கொண்டு இருக்கிறோம் என்றும். அப்படி வரும் கால் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்று சொல்கிறார்கள்.

குமுதம் இதழோ ஒரு படி மேலே போய், நடந்த வான் தாக்குதலில் பல முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் அதோடு புலிகளின் ஆயுதசாலை ஒன்று ஒரு பெருத்த சேதத்தை சந்தித்தாகவும் அறிவிக்கின்றது. இந்த தகவல் இதுவரையில் குமுதம் தவிற வேறு எந்த ஒரு இதழிலும் வரவில்லை என்றது ஒரு விசேட சேதி.

உலக அளவில் தனக்கு ஏற்பட்டுவந்த நல்லெண்ண நட்டத்தை சிங்களம் ஒரு தேர்தலை நடத்தி சரிசெய்ய நினைத்தது. ஆனாலும் ஐ நாவில் விழுந்த அடி மேலும் ஒரு நெருக்குதலை கொடுக்க அவசர அவசரமாக நடந்த இராணுவ முன்னேற்ற முடிவுகள் மண்ணை கவ்வி பின்னோக்கி ஓடியது தான் மிச்சம்.

இந்த அழகில் தினமணியின் வார இதழான தமிழன் எக்சுபிரசில் ஒருவர் கட்டுரை வரைகிறார் பிள்ளையானின் அரசியலின் வளர்ச்சியை பற்றி. பதவி ஏற்று இன்னமும் முழுதாக ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் அவர் அரசியலில் வளர்ச்சி பெற்றதாகவும். அவரைத்தான் தமிழ் மக்கள் இனி மேல் நம்பவேண்டும் என்றும், இனிமேல் இலங்கையில் ஒரு பக்கம் பாலாறும் மறுபக்கம் தேனறும் ஓடும் என்றும். தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் இப்போதே களையபட்டுவிடும் என்றும் அந்த கட்டுரையில் அவர் ஆரூடம் கூற தயங்கவில்லை.

இவைகள் எல்லாம் பரவாயில்லை, இதற்கு ஒரு படி மேலே போய், புலிகளும் இது போல் நம்பிக்கைக்கு உகந்தார் போல் நடந்துகொண்டு சிங்களத்துடன் சமரசம் செய்துகொண்டு கிடைக்கும் பதவியை பெற்றுக்கொண்டு அரசுக்கு சாதகமாக அவர்களது அராசக நடவடிக்கைகளுக்கு துணை போகவேண்டும் என்றும் என்று சொல்கிறார்பாருங்கள்.????

அடே அப்பா ஈழத்தமிழர்களை பற்றி என்ன ஒரு கனிவு, பரிவு, பாசம். அடே வெட்க்கம் அற்றவனே, இதை போல் காலை வருடும் நாயாக இருக்கவேண்டும் என்று தமிழர்கள் முடிவு செய்திருந்தார்கள் என்றால் இப்படி ஒரு போராட்டமே அங்கு தோன்றியே இருக்காதே. ஒன்று பிரச்சனைகளை புரிந்துகொண்டு எழுதவேண்டும் இல்லை என்றால் பேசாமல் இருக்கவேண்டும். அதை விடுத்து இப்படி பிதற்ற கூடாது.

துவக்கம் முதல் சிங்களம் பிரச்சனையை தீர்க்க எண்ணவில்லை மாறாக மறைக்கமட்டுமே பார்க்கிறது. இன்றைக்கு இவ்வளவு தொலைவில் இந்த இனப்பிரச்சனை பேசப்படுவதும், பல நாடுகள் சேர்ந்து தீர்க்க நினைகவும் காரணமாக இருப்பது அந்த நிற்காக போராட்டமே. அந்த போராட்டத்தின் ஆணிவேராய் விளங்கும் தலைவர்களை அழித்துவிட்டால் காலை வருடும் நாய்களாக மக்களை எளிதில் மாற்றிவிடலாம் என்று 30 ஆண்டுகளாக கண்டு வந்த கனவுக்கு இறுதி வடிவம் கொடுக்க நினைகிறார் போலும் இந்த சிங்கள தளபதி.

தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களை இப்படி ஒரு போராட்டத்திற்கு தள்ளிய சிங்களம், அதை தாங்களாகவே சென்று ஒரு முடிவுக்கு கொண்டு வருவதே சரி. அதை விடுத்து ஒரு தனி அரசாங்கமாக எங்களோடு பேசும் எண்ணம் எல்லாம் வேண்டாம் என்று சிறுபிள்ளை தனமாக அடம்பிடிப்பது சரி இல்லை.

எங்களுக்கு 20 வெள்ளிகாசுக்காக ஏசுவை காட்டிக்கொடுத்தவர்களையும் தெரியும், தன்னலனுக்காக கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தவனையும் தெரியும். இந்த மாதிரியான துரோகிகளை உருவாக்குவதும் தோற்றுவிப்பதும் எளிது. ஆனால் என்ன ஆனாலும் சரி, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று கடைசிவரை உள்ள உறுதியோடும், கட்டுப்பாட்டோடும், அர்பணிப்போடும் போராடும் போராளிகளை உருவாக்குவது தான் கடினம். அப்படி உருவாகி இருக்கும் புலிபடைகளையே ஒன்றும் செய்யமுடியாத சிங்களம், பிரபாகரனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிற்க செய்வதாக சொல்வது, கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வழக்கிற்கு ஒத்த ஒன்று.

வாழ்க தமிழீழம், வளர்க அந்த தேசத்தின் மக்கள், வெல்லட்டும் அவர்களது விடுதலை போராட்டம்.

Friday, June 13, 2008

அமெரிக்க மக்குடொனால்டு இரசிகர்களே கவனம்.

கீழே கொடுத்துள்ள தொடுப்பை பார்க்கவும். இந்த தக்காளிகள் மனிதனை சாவின் விளிம்பு வரை கொண்டு செல்கிறது என்று நிறுத்தியுள்ளார்கள். மற்ற இடங்களில் எப்படி என்று தெரியவில்லை கவனம்.

http://money.cnn.com/2008/06/09/news/companies/mcdonalds_tomatoes.ap/index.htm?section=money_latest

குங்கு பூ பான்டா - திரைவிமர்சனம்புதிதாக வெளியாக ஒடிக்கொண்டிருக்கும் திரைபடம். சிறார்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட படம். சீனாவின் தயாரிப்பாகவோ அல்லது ஆங்காங்கின் தயாரிப்பாகவோ இருந்தாலோ உலக சந்தைக்கு வரும் போது பெரும்பாலும் குங்கு பூ படங்களாகவே அமைவது இயல்பு.

இது நாள்வரை குங்கு பூ படங்களில் மனிதர்கள் காட்டி வந்த சாகசங்களை அசைபடங்களாகவும் கொண்டுவர முடியும் என்று காண்பித்த தொழில் நுட்ப்பகலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். லார்டு ஆப்த்தி ரிங்கு படத்தில் பதித்த முதல் மைல்கல் மேலும் மெருகேறுகிறது.

கனவில் தொடங்கும் படம் மிகவும் நகைச்சுவையாக நகர்கிறது. படுக்கையில் இருந்து மல்லாக்க விழுந்து எழக்கூட முடியாத பான்டா தான் பிறகு உலகலாவிய காவலனாக தகுதி பெறுவதுதான் கதை.
கிழட்டு ஆமையும், பூனைமாக சேர்ந்து நடத்திவரும் குங்கு பூ பள்ளியில் பாம்பு, புலி, குரங்கு, கொக்கு மற்றும் விட்டில் பூச்சி அனைத்தும் தேர்ந்த மாணவர்கள்.
இந்த மாணவர்களில் ஒருவரை உலகலாவிய காவலனாக தகுதி பெறும் எண்ணதில் பூனையார் பயிற்சிகளை கொடுத்து பழக்கிவருகிறார்.

ஒரு நாள் வயதான ஆமையார் அங்கே பள்ளிக்கு பூனையாரை பார்க்க வருகிறார். அப்படி வருகையில், மற்றும் ஒரு உலக காவலனை தேர்ந்தெடுக்கும் நேரம் பிறந்துவிட்டது எனவும். அவனை தேர்ந்தெடுக்கும் பணியையும் உடனே துவக்கி அறிவிக்க செய்கிறது.
இதை வேடிக்கை பார்க்க வரும் மக்களுக்கு நூடுல்சு விற்க செல்கிறது பான்டா. வண்டியை இழுத்து கொண்டு செல்ல இயலாத பான்டா சென்றடைவதற்குள் கதவையே மூடிவிட்டு சாகசங்கள் துவங்குவதும். எப்படியும் உள்ளே சென்றுவிடுவது என்று பான்டா அடிக்கும் கூத்துகளில் சிறார்களுடன் பெரியவர்களும் வாய்விட்டு சிரிப்பதை பார்க்க முடிகிறது. அப்படி ஒருவழியாக வந்து சேரும் பான்டா தான் அந்த உலக காவலன் என்று அறிவிக்க படுவதை கேட்டு அந்த சிறப்பு மாணவர்கள் சோர்ந்து விடுவதாக காட்டும் காட்சிகளில் அசைபடம் என்ற எண்ணம் போய் அந்த பாத்திரத்தின் உணர்வுகள் விஞ்சி நிற்பதற்கு மீண்டும் ஒரு முறை தொழில் நுட்ப்பகலைஞர்களையும் இயக்குனரையும் பாராட்டவேண்டும்.

பிறகு ஆபத்தை அறிவிக்க சென்ற பறவையின் மூலமே அந்த சிறுத்தை தப்பிப்பதும் பிறகு அதை தாக்கி வீழ்த்துவதில் சென்று முடிகின்றது படம். இந்த முயற்சிகளில் பள்ளி மாணவர்களின் பங்கும், மற்றும் இறுதி சண்டையில் தத்துவம் விடுத்து அதன் பின் நடக்கும் உத்திகளும் அருமையோ அருமை.

தனக்கு மட்டும் தான் எல்லா கலைகளையும் பூனையார் கொடுத்து இருப்பார் மற்றவர்களுக்கு எப்படியும் சொல்லி கொடுத்து இருக்க மாட்டார் என்ற சிறுத்தையின் கூற்று சரியே என்று தெரிந்த பிறகு தாக்குதலில் தீவிரம் அதிகரிப்பதிலும். அந்த உத்திகள் எல்லாம் பான்டாவிடம் ஏன் பலிக்கவில்லை என்றும் மேலும் பூனையாரின் வித்தைகளை எப்படி சொல்லிக்கொடுக்காமலே பான்டா கற்றது என்றும் படத்தில் விளக்கம் இல்லாமல் இருப்பது ஏமாற்றமே.

மற்ற படி படம் அருமையாக வந்து இருக்கிறது. இது வரையில் ஏராளமான பொருள் செலவிலும் இன்னமும் என்ன விதங்களில் செலவுகளை கூட்டினால் பணக்காரதனமாக தெரியும் என்று பார்த்து பார்த்து செலவு செய்யும் இயக்குனர்களின் மத்தியில் அழகாக அசைபடமாக குறைந்த பொருள் செலவில் அதுவும் அது அசை படம் இல்லை என்று வரும்படியாக கதையும் நுட்பங்களையும் கொண்டு படம் கொடுத்த அந்த தொழில் நுட்ப்ப குழுவிற்கு பாராட்டுகள்.

இறுதியாக, படம் பார்த்த பிறகு பிவர்லிகில் நின்சா நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை. காரணம் அந்த குண்டு பான்டாவா அல்லது அது கொள்ளும் முட்டாள் தனமான முயற்சிகாளா தெரியவில்லை........

Tuesday, June 3, 2008

இனி கர்னாடகத்தில் என்ன நடக்கும். ( உண்மை இந்தியர்கள் சொல்கிறார்கள் )
முதலில் தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா அவர்களுக்கும் அவரது கட்சிக்கும் நமது பாராட்டுகளை தெரிவித்து கொள்வோம்.

பொதுவாக ஒரு புதிய கட்சி ஆட்சியேரும் போது இன்ன இன்ன நடக்கும் என்று அந்த கட்சியின் சார்பிலும், இன்ன இன்ன நடக்கும் என்று மற்றவர்களும் அவர்களை பற்றி செல்வது வழமை. அப்படி இன்ன இன்ன நடக்கும் என்று எடியூரப்பாவின் கட்சியும் மற்ற கட்சிகளும் இன்னமும் கருத்துகள் சொல்லாமல் இருப்பது ஒரு மர்மகவே இருக்கும் சூழலில். தமிழக பதிவர்கள் சிலர் இனிமேல் தமிழகத்திலே பாலாரும் தேனாரும் ஓடும் என்றும். தென்னகத்துகே இனிமேல் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமை பாட்டையும் கற்பிக்கும் விதமாக அவர்களது ஆட்சி அமையும் என்றும் கூட அவர்கள் சொல்ல தவறவில்லை.

இவர்களது நம்பிக்கை சரிதானதா, இல்லை இப்படி ஒன்று நடக்கவேண்டும் என்று தான் அவர்கள ஆசை படுகிறார்களா என்றாலும் இல்லை என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டி இருக்கும். காரணம் இந்த கட்சி எப்போதும் எங்கும் தேர்தலில் குதிக்கும் முன்பும் சரி, தனது இடத்தை தக்கவைத்து கொள்ளவும் தனது பக்கம் இருக்கும் ஆதரவு எண்ணம் விலகி போகாமல் இருக்கவேண்டி இவர்கள் நிகழ்தும் செயல்களை கொஞ்சம் திரும்பி பார்த்தால் தெரியும்.

பாசகா துவங்கிய நாள் தொட்டு அவர்களது நடவடிக்கை இப்படி தான் இருக்கிறது. முதலில் ஒரு தீயை கொளுத்துவது பிறகு அந்த வெப்பத்தில் ஆதரவு திரட்டுவது அவர்களது வழமை. முதலில் கட்சி துவங்கிய நாட்களில், நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் எண்ணத்தில் தேரோட்டம் ஒன்றை இந்தியா முழுவது நடத்தினார்கள். அந்த தேரோட்டத்தில் முழங்கிய முழக்கங்களை கவனிக்க வேண்டும். இந்தியாவில் மறுபடியும் இராம ஆட்சியை குடிகொள்ள செய்வோம் என்று துவங்கிய பயணம் பின்னர் பாபரின் மசூதியை தூசியாக்கியதில் சென்று முடிந்தது.
அப்படி இடிக்கப்பட்ட செயலுக்கு இது வரையில் ஒரு நீதியைதான் கற்பித்தார்களே தவிர அது தவறு என்று இதுவரையில் ஒருவரும் அந்த கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது அவர்களது அபிமானிகளோ சொன்னதாக தெரியவில்லை. மாறாக, நந்தி கிராமம் கலவரத்தில் பாதிக்கபட்டமக்களுக்காக கண்ணீர் விட்டு அழும் அந்த தமிழக பெண்மணியை குமுதம் இணைய தளத்தில் பார்க்க நேர்ந்தது. பிருந்தா கரத்து அவர்களின் கேள்விகள் ஒன்றுக்கு கூட பதில அளிக்க இல்லை, மாறாக அவரிடம் வாதாடி கண்ணீர் விட்டார். அப்போது கடைசி விவாதமாக கேட்டார் ஆயிரகணக்கில் மக்களை கொன்று குவித்துவிட்டு இப்படி 20 பேருக்காக இப்படி ஒரு நீலி கண்ணீர் வடிக்கலாமா என்ற கேள்விக்கு, இந்த 20 பேரை மட்டும் பேசுங்கள் என்று பேசிச்சென்றார் அந்த பாசகா கட்சி நிர்வாகி பெண்.
இப்படி அவர்களின் பாசிச கொள்கைகளையும் கொலைகளையும், தந்திர , பிரித்தாளும் உத்திகளையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எண்ணிலா உதாரணங்களும் சம்பவங்களும் தான் மிஞ்சுமே தவிர அவர்களை பற்றி ஒரு நல்ல செய்தியும் கிடைக்கப்போவதில்லை.
இப்படி எல்லாம் அவர்கள் நடந்துகொள்ள காரணம் என்ன, அவர்களது நோக்கம் தான் என்ன. அவர்களது அபிமானிகள் எழுதுவது போல் அவர்கள் நாட்டுப்பற்றும் நாட்டின் முன்னேற்றதிலும் அக்கறை கொண்டவர்களா என்றால் இல்லவே இல்லை. இதை 100% நிரூபிக்கமுடியும். இதற்காக கடவுளையோ அல்லது அடுத்த உலக மனிதனையோ நாடவேண்டியதில்லை. அவர்களது சித்தாந்தகளை பார்த்தாலே தெளிவாக தெரியும்.

ஒரு நாட்டை ஒரு குடும்பத்துடன் ஒப்பிட்டு பார்க்கலாம். அப்படி பார்க்கையில் குடும்ப்பத்தில் வளர்ந்தவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையை விட வயதில் குறைந்தவருக்கும். இன்னமும் கவனிப்பு தேவை படும் என்று இருப்பருக்கும் முன்னுரிமை அளித்து பெற்றோர் கவனிப்பதையும். பெற்றோர் அளவுக்கு வளர்ந்துவிட்ட பிள்ளைகளும் அவர்களுக்கு நிகராக் இவர்களை கவனிப்பதையும் எல்லோர் குடும்பத்திலும் பார்க்க முடியும். அனைத்து குடும்பங்களிலும் இப்படி தான் நடக்கின்றது எந்த நாடாக இருந்தாலும் இப்படி தான் குடும்பங்கள் வாழ்கின்றது. இதற்கு மனித குலத்தில் விதி விலக்கு இல்லை, காட்டவும் முடியாது.

குடும்பத்தில் இளையவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையால், வளர்ந்விட்ட பெரியவர்களுக்கு அதுவும் திருமணம் ஆன பெரியவர்களுக்கு என்ன பாதிப்பு வந்துவிட போகிறது. இங்கே இளைவர்களுக்கு பாகம் பிரித்து கொடுப்படவில்லை. மாறாக அவர்களுக்கு என்று முன்னுரிமை கொடுத்து அன்றாட வாழ்க்கையில் தேவைபடும் உணவு, உடை, கல்விக்கு தேவைபடுவன என்று அவர்களது தேவைகளை நேரத்திற்கு தகுந்தார் போல் பெற்றோர் கொடுப்பது வழமை. அப்படி ஒரு நெருக்கடி கால கட்டங்கள் வரும் போதெல்லாம் வளர்ந்துவிட்டவர்கள், தனது தேவைகளை தானே முன்வந்து விட்டுக்கொடுப்பதை பெருமையாகவும், அது அவர்களது கடமையாகவும் கருதுவார்கள். எல்லோர் வீட்டிலும் இப்படி தான், அது ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் பொருளாராக இருந்தாலும் சரி.

இப்படி தான் காலம் காலமாக குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது. கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் விட்டுக்கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை. பிறகு குழந்தை என்று ஆன பிறகு பெற்றோர்களது அனைத்தும் பிள்ளைகளுக்கு என்று விட்டுக்கொடுத்து வாழ்வை எடுத்து சொல்ல தனியாக வார்த்தைகள் தேவை இல்லை.

இப்படி வளர்ந்த பிள்ளை ஒன்று வீட்டின் தேவைகளை பற்றி எல்லாம் எனக்கு கவலைகளும் இல்லை அக்கறையும் இல்லை. எனது சொகுசும் வாழ்க்கையும் தான் முக்கியம். இதனால் பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ பாதிப்புக்குள்ளானாலும் சரி அழிந்தாலும் சரி என்று அக்கிரமம் செய்கின்றான் என்று சொன்னால் அவனை பற்றி பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள். ஆகா அவனது தேவையை நிறவேற்றி கொண்டான் என்றா பாராட்டுவோம், இல்லை அட பாவி பெற்றவர்கள் என்று பாராமல் உடன் பிறந்தவர்கள் என்றும் பாராமல் இப்படி கொடூரம் விளைவிக்கிறானே இவனெல்லாம் மனித பிறவிதானா என்றல்லவா சொல்வோம்.

அல்லது இளையவர்களுக்கு கொடுக்கும் இந்த முன்னுரிமைகளில் ஒருவன் பொறாமை குணம் கொண்டு இளையவர்களுக்கு அந்த முன்னுரிமைகளை கிடைக்காமல் செய்ய மறைமுகமாக என்ன என்ன சதி வேலைகளை செய்யமுடியுமோ அத்தனை சதிவேலைகளையும் திரைமறைவில் என்ன செய்யமுடியுமோ அவ்வளவை செய்துமுடித்து. பெற்றோரிடமும் உடன் பிறந்தோரிடமும் ஒன்றும் அறியாதது போல் நாடகமாடுபவனை என்ன என்று சொல்வோம் நயவஞ்சகம் புரிகிறானே என்று தான் சொல்வோமே தவிர அவனை இந்த செயலுக்காக அறிவாளி என்று யாரும் சொல்லப்போவது இல்லை.

இந்த குடும்பத்தை நாடாகவும், இளையவர்கள் ,வறியவர், வசதியற்றோர் மற்றும் சிறுபான்மையினர். வளர்ந்தவர்கள் இவர்களை தவிர மற்றவர்கள். இந்தியாவின் எந்த பகுதி எடுத்தாலும் இந்த சதவிகிதம் ஒரே அமைபில் இருப்பதை காணமுடியும்.

சிறுபான்மையினர்கள் தங்களுக்கு என்று ஒரு அமைபினை அமைத்து தங்களது தேவைகளை பெற்றுக்கொள்ள நினைப்பது சரி. ஏன் என்றால் இங்கு குடும்பம் என்ற நாட்டில் தாயும் தந்தையும் இல்லை, சிறியவர்களின் தேவைகளை பார்த்து எடுத்துகொடுக்க. அதனால் அவர்களுக்கு ஒரு அமைப்பு தேவைபடுகின்றது சரி.

ஆனால் இதே இந்த வளர்த பெரியவர்கள் தங்களுக்கு என்று இருப்பது போக, எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் கொடுத்துகொண்டு இருப்பதை பிடுங்கி எங்களுக்கே கொடுங்கள் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி அது நாட்டையும், நாட்டின் ஒருமைபாட்டையும் கட்டிக்காக்க வந்த ஒரு அமைப்பு என்று சொன்னால் எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது இந்த பாசகாவின் சித்தாந்தம். இதிலே அந்த மாநிலத்தில் மட்டும் இல்லை அண்டை மாநிலங்களிலும் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்னால் எப்படி இருக்கும்.

ஒரு தாய் வயிற்று பிள்ளைகளுக்குள் பிரிவினை விளைவிப்பவன் நல்லவனாக இருக்க முடியாது. அதேபோல் ஒரு நாட்டின் மக்களுக்குள் பிரிவினை உண்டாக்குவோன் மட்டும் எப்படி நல்லவனாக இருக்கமுடியும். அப்படி உருவாக்கும் கட்சிமட்டும் எப்படி நல்ல கட்சியாக இருக்கமுடியும். இப்படி ஒற்றுமை என்ற வார்த்தைக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத ஒரு கட்சியின் தலைவர்கள் எப்படி நாட்டின் ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியும். இதை இவர்கள் தேன் தடவிய வார்த்தைகளில் சென்னாலும் பின்னால் இருக்கும் உண்மைகள் தெரியாமல் இல்லை. இதிலே தேனாறும் பாலாறும் எங்கே வரும். வேண்டுமென்றால் பிரிவினை ஆறு வேண்டுமானால் ஓட வாய்பு இருக்கிறது. சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும்.

பாசகாவின் தோற்றத்தையும் அதன் இயல்பையையும் பார்த்தோம், இபோது கர்னாடகாவின் வருங்காலத்தை பார்ப்போம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைபடுத்த மறுப்பது. கன்னடத்தில் இருந்துதான் தமிழ் பிறந்தது என்று கதை திரிப்பது. தமிழகத்தில் மனிதன் குடிக்ககூட தண்ணீர் இல்லை என்று சொன்னால் குடகு மலையில் பல அரிய மிருகங்கள் குடிக்க தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் கொடுக்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்திடமே சொல்வது. என்று கடந்த 15 ஆண்டு காலமாக ஒரு பிரிவினைவாத மா நிலமாக திகழ்ந்து வருவது அனைவரும் அறிவதே.

இப்படி சமீபத்தில் ஒக்கேனக்கல் நீரை குடி நீராக பயன் பெற வேண்டி திட்டங்களை தீட்டி அமல் படுத்தும் வேளையில் இதே எடியூரப்பா தலைமையில் ஒரு பிரிவினை கூட்டம் அரக்த்தணம் புரிந்ததை நாடே அறியும் அதில் எந்த கேள்வியும் இல்லை. ஆனால் இன்றைக்கு பெருன்பான்மை பெற்ற கட்சியாக வந்ததினால் இவர் இனி தமிழகத்துக்கு தேனாறும் பாலாறும் ஓடவிடப்போகிறார் என்று பரப்புரை வேறு. பொய் சொன்னால் மக்கள் கேட்ப்பார்கள் என்பதற்காக இப்படியா பொய் சொல்வது. எப்படி ஒரு அரக்க்க கூட்டத்தை கூட்டிவந்து ஒக்கேணக்கலில் புரிந்த காளித்தனத்தை இந்தியம் என்று சொல்கிறார்களா, அல்லது தமிழ் படமும், தமிழர்களும் வாழும் இடங்களுக்கு மிரட்டல் விட்ட காளித்தனத்தை இந்தியம் என்று சொல்கிறார்களா, அல்லது காவிரியில் இவ்வளவு தண்ணீர் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும் முடியாது, முடிந்ததை பார் என்ற சொன்ன காளித்தனத்தை சொல்வதா.

இனி என்ன மேலும் நடக்கும் அங்கே, எப்போது சமயம் கிடைக்கும் இங்கே இருக்கும் தமிழர்களை அழித்தொழிக்கலாம் என்று இருந்க்கிற கூட்டதிற்கு எடியூரப்பபா ஒரு கூட்டம் கூட்டுவார். பிறகு ஒரு இரயிலையோ அல்லது ஒரு பேருந்தையோ கொளுத்துவார். பிறகு தமிழர்கள் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் கொய்சாலா படையுடன் ஆட்கள் குவிக்கப்படுவர். பின் வயிற்றில் இருக்கும் குழந்தை முதல் வயதான திருப்பி அடிக்க வலுவில்லாத தமிழர்களை கொளுத்திவிட்டு அவர்களது உடமைகளை சூரையாடிவிட்டு. ஆங்காங்கே இருக்கும் ரொட்டி சுடும் காளவாயில் மனிதர்களை சுட்டெடுத்து உச்ச நீதிமன்றம் வரை சென்று காவலர்களை அழைத்து சென்று சாட்சி சொல்ல வைப்பார்.

இந்த சம்பவத்திற்கு விபத்து என்று பெயர் சூட்டுவார், குடியரசு தலைவரும், பிரதமரும் அழைத்தால் அவரது அலைபேசி வேலை செய்யாதிருந்ததாகவும். கலவரத்தில் தொலை பேசியை தமிழர்கள் தாக்கி அழித்துவிட்டதாகவும் காரணம் சொல்வார். அத்துடன் நிற்பாரா, இவர்களின் அடி உதைக்கு பயந்து கோசூர் வரை தப்பியோடியர்வர்களை எல்லையில் தடுத்து நிறுத்தி வண்டியுடன் கொளுத்தி வன்முறை என்று ஒரு மாதகாலம் கலவரம் பாதிக்கும். அந்த ஒரு மாதகாலத்தில் மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களை எல்லாம் கொளுத்திவிட்டு. இனி எரிக்க யாரும் இல்லை என்று ஆன பிறகு, கலவரம் கட்டுகுள் அடங்க ஒரு மாதகாலம் ஆகிவிட்டது என்று எழுத்துமூலம் உச்ச நீதிமன்றத்திற்கு தெரியபடுத்துவார்.

வழக்கு நடத்தும் வழக்குரைஞர் 3 நாட்க்கள் ஆனது என்று சொல்லும் போது நம்பிய நீங்க 30 நாள் ஆனது என்று சொன்னாலும் நம்பித்தான் ஆக வேண்டும் அப்படி இல்லை என்றால் உங்களை தேச துரோகி என்று தான் நாங்கள் சொல்ல வேண்டி வரும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு கருத்தாக்கத்தை மா நில தாளிக்கையிலும் இன்னமும் என்ன என்ன பரப்பு சாதனங்கள் இருக்கின்றதோ அத்தனையும் செய்வார். தனது மா நிலத்துக்கு என்று ஒரு தனிகொடி கொண்டுள்ளதை போல் ஒரு தனி இராணுவத்தையும் தோற்றுவிப்பார்

இப்படி நடந்ததை மக்களிடன் சென்று, உங்களின் சொத்துக்களை இத்தனை காலம் சம்பளம் என்ற பெயரில் கொண்டு சென்ற தமிழர்களை தண்டித்தது தவறா?? இத்தனை காலம் உங்கள் திரையருங்குகளில் கன்னட படம் பார்க்க மாட்டோம் என்று அவர்களது படங்களை பார்த்து நமது மொழியை மதிக்காத தமிழர்களை கொளுத்தியது தவறா?? இப்படி மக்களின் முன் இன்னமும் ஒரு 5 ஆண்டு காலம் கழித்து போட்டியிட்டு வெற்றியும் பெறுவார். அப்போது வேறு யாரும் ஒரு முதியவரை பிரதம வேட்பாளராக அறிவித்து கட்சியின் தெற்கு சோதனை மையம் கர்னாடகம் என்றும். சோதனை வித்தகர் எடியூரப்பா என்று துக்களக் தாளிக்கை இன்னமும் வந்து கொண்டிருப்பதை கொண்டாட தமிழகம் அழைக்க பெறுவார். அப்போது அவர் வந்து பேசி செல்ல இந்த அனைத்து இந்தியர்களும் சென்று கேட்டு வந்து பதிவிடுவார்கள்.

பாலாறும் தேனாறும் தான் ஓடும் பாருங்கள், இன்றைக்கு சிறுபான்மையினரை பிடிக்கவில்லை கொளுத்துகிறார்கள். நாளை கொளுத்த ஆள் இல்லை என்றால் பிறகு உங்களையும் கொளுத்துவார்கள் அந்த தீவெட்டி கட்சியினர் பார்த்து கவனமாக இருங்கள் தேனாறும் பாலாறும் நண்பரே.