Wednesday, March 30, 2016

நல்லவேளை வைகோ இன்னும் அதிக காலம் திமுகவில் இல்லாமல் போனார்

பொதுவாக எதிரியிடம் பெறும் தோல்வியைவிட மிகவும் கொடூரமான கொடுமை துரோகத்தினால் வரும் தோல்வி.

எதிரியின் கையால் கழுத்தருப்பு படும்போது கூட இந்த வேதணை இருக்காது, ஆனால் இப்படி துரோகம் நமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை எல்லாம் அழகாக கணித்து எதிரிக்கு சொல்லி அதனால் வரும் வலி பட்டவருக்கு தான் தெரியும் அந்த வேதணை.

தமிழகம் மட்டும் என்று இல்லை உலகெங்கிலும் இயக்கதின் சிந்தாந்தம் பிடிக்காமல் பிரிந்து சென்ற தலைவர்கள் உண்டு, புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா வெளியேறியது போல்.

அது அவர்களது தனி சுதந்திரம, ஆனால் அப்படி வெளியேறும் தனி  மனிதன் பிறகு என்ன செய்கிறார் என்று கவனித்தால் புரியும் ஏன் அவர்கள் வெளியேறினதின் உண்மை காரணம்.

புலிகளின் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்திற்கு வரவேண்டும் என்றது புலிகளின் இயக்கத்தில் சேரும் அனைவருக்கும் வரும் இயல்பான அவா. அது தன்னை தலைவனது அளவிற்கு அர்பணிக்கவும் செயலில் இறங்கவும் தூண்டும்.

ஆனால் கொஞ்ச பேருக்கு இப்படி தோன்ற ஆரம்பித்துவிடுகின்றது.

என்னையா இந்த தலைவரை பெரிய ஆளுன்னு நினைத்தால் காலையில் அதிகாரிகளை அழைத்து நிலைமை என்ன என்று கேட்கிறார், செய்தி தாள்களை படிக்கிறார், பிறகு நண்பர்களிடம் உரையாடுகிறார். பிறகு மாலையில் அடுத்த நாள் வேலைகளுக்கான உத்தரவுகளை வழங்கிறார். அந்த உத்தரவுகள் காலையில் கொடுக்கப்பட்ட தகவல்களை பார்த்து, இயக்கத்திற்கு என்ன தேவையோ அவைகளையும் இணைத்து ஒரு ஆனையை வழங்குகிறார்.

என்ன இவைகளை எல்லாம் என்னால் செய்யமுடியாத அல்லது அடுத்தவரால் செய்யமுடியாதா என்றும் யோசிப்பார்கள் வைகோ கருணாவை போன்றவர்கள்.

இதை தான் இயக்க தலைமை தலைமைமேல் அவர்களுக்கு ஒரு கண் என்று நக்கலாகவும் செல்லமாகவும் சொல்வார்கள் அது குறும்பு செயலாக இருக்கும் வரையில்.

ஆனால் அதையே செயலாக செய்ய துவங்கிய பிறகும் பார்த்துக்கொண்டு இருந்தால் அந்த தலைமை இருக்கபோவதும் இல்லை அது தலைமைக்கும் அழகும் இல்லை. ஆகவே அந்த நபரை இயக்கத்தை விட்டு வெளியே அனுப்புவது இயல்பு.

இயக்கத்தின் வலிமைகளை தெரிந்தவரை வெளிய அனுப்பினால் என்ன நடக்கும் என்று மற்றும் ஒருமுறை வரலாறு நிருபித்து காட்டியது உலகிற்கு புலிகளின் இயக்கம் அழிக்கப்படது கருணாவின் தகவல்களும் தரவுகளையும் கொண்டு தானே அன்றி சிங்களத்திற்கு புதிதாக வந்த வீரத்தினாலோ அறிவினாலோ அல்ல.

தான் எதிர்பார்த்தது தனக்கு நடக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக எந்த நோக்கத்திற்காக இயக்கம் துவங்கப்பட்டு ஆயிரகணக்கான உயிர் துரந்தார்களோ அவைகளுக்கு எந்த வித பலனும் இல்லாமலும் போராட்டத்தையே அழிக்கும் அளவிற்கு சென்றது கருணாவின் துரோகம்.

இதே வேலையை தான் இப்போது வைகோ செய்துக்கொண்டு இருக்கிறார்.

தனக்கு கட்சியின் தலைமையும் மாநில முதல்வர் என்ற பட்டமும் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக திராவிட இயக்கங்களே இருக்க கூடாது என்று அரும்பணியை செய்துக்கொண்டு இருக்கிறார்.

 நாளைக்கு இந்த செயலினால் தலைமையும் பதவியும் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார். ஆனால் பாவம் அவருக்கு சாணக்கியன் முதல் கருணா வரை என்ன நடந்தது என்று மறந்து போய்விட்டது போலும். ஆசை யாரைவிட்டது.

இந்த வைகோ நாளைக்கு வேறு ஏதாவது கிடைக்கும் என்ற பட்சத்தில் நாட்டையும் காட்டிக்கொடுக்க தயங்க மாட்டார் என்றதுக்கு என்ன உத்திரவாதம். செய்வார் அதையும் செய்வார் அதற்கு மேலும் செய்வார்.

எனக்கு வைகோவையும் பிடிக்காது திமுகவையும் பிடிக்காது ஆனால் திராவிட இயக்கத்தின் மேல் ஒரு மரியாதை உண்டு. அழிந்துக்கொண்டு இருந்த தமிழையும் தமிழகத்தையும் வடக்கத்தியர்கள் இத்தனை பேர் வந்து பேரம் பேசும் அளவிற்கு கொண்டு வர காரணமாக இருந்த இயக்கம் என்றதால் மட்டுமே.

இந்த வைகோவை நம்பி அந்த தள்ளாடும் தலைவரை முதல்வராக மட்டும் இல்லை இந்தியாவிற்கே பிரதமராகக்கூட ஆக்க நினைக்கும் மக்கள் சிந்திப்பார்களா.

ஒரு புரம் கொள்கைக்கு மாற்றம் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டு பாசக சத்தம் இல்லாமல் அரங்கேற்றும் பாசிசத்தை தமிழகத்தில் அரங்கேற்ற துடிக்கிறது பாமக. அந்த கொடுமை போதாது என்று இந்த துரோக கொடுமை வேறு. நன்றாக நம்பி ஏமாறுங்கள் மக்களே மக்களின் மக்களே.................

Friday, March 18, 2016

உடுமலை சம்பவம் பார்த்தபோது ஏனோ இது நினைவுக்கு வந்தது

நாங்கள் எல்லாம் பள்ளியில் படிக்கும் போது எங்களுக்கு எல்லாம் இப்படி தான் சொல்லிக்கொடுத்தார்கள்.

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

இது மட்டும் இல்லாது தினம் தோரும் காலையில் இப்படி ஒரு உறுதிமொழியும் எடுத்துக்கொள்வோம்.

இந்தியா எனது நாடு !  இந்தியர் அனைவரும் என்  உடன் பிறந்தவர்கள்!
நாட்டின் உரிமை வாழ்வையும் , ஒருமைப் பாட்டையும்  பேணிக் காத்து  வலுப்படுத்த செயற்படுவேன் என்று உளமார  நான்   உறுதி  கூறுகிறேன்.  ஒரு போதும் வன்முறையை நாடேன் என்றும் , சமயம் மொழி வட்டாரம் முதலியவை காரணமாக எழும் வேறுபாடுகளுக்கும் பூசல்களுக்கும் ஏனைய அரசியல் பொருளாதார குறைபாடுகளுக்கும் அமைதி நெறியிலும் அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன் என்றும் நான் மேலும் உறுதி அளிக்கிறேன்.

இப்போது எல்லாம் இப்படி சொல்லிக்கொடுப்பது இல்லை போலும், காலம் மாறியதால் கல்வியும் மாறியது போலும்.

தொகாவில் இராமதாசும் காடுவெட்டி குரு பேசுவது போல் தான் இப்போது பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கிறார்கள் போலும், இதை தான் அன்புமணி இளைஞர்கள் பெரிதும் விரும்புவது பாமக என்று மேடைதோரும் பேசுகிறார் போலும்.

Thursday, March 10, 2016

இப்படி தான் சொல்ல சொல்ல கேட்காம பாசக ஓட்டு போட்டீங்க, இப்போவாது விழித்துகொள் தமிழனே

மாற்றம் முன்னேற்றம் என்று வார்த்தைக்கு வார்த்தை வாக்கியத்திற்கு வாக்கியம் என்று அழகாக பேசி ஓட்டுகளை வாங்கி அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்தார்கள் பாசக.

ஆட்சிக்கு வந்து இது வரையில் பாசக செஞ்ச ஒரே காரியம் தேர்தலுக்கு செலவுக்கு பணம் கொடுத்த அதாணிக்கு வியாபாரம் வேண்டி நாடு நாடா திரு ஓடுடன் கையேந்திய பிரதமர் அனேகமா மோடி மட்டும் தான் இருக்கும்.

என்னமா இப்படி பண்ணூரீங்களேமா சொன்னா உடனே மாட்டு கறி, சல்லிகட்டு, கல்பொர்க்கி அப்படி இப்படின்னு கடைசியில கன்னையா குமார்வரைக்கும் நீளுது அவர்களின் பட்டியல்.

அதே திட்டத்தில் தமிழகத்தில் ஒருவர் பெயர் அன்புமணி, இவரது தந்தை சாதி சான்றிதழை மாற்றிக்கொடுத்து மருத்துவர் படிப்பு படித்து பிறகு நிரூபனம் ஆனதும் அவரது பட்டத்தை பிடுங்கியது அரசு. இன்றைக்கு இல்லை என்றைக்குமே இராமதாசால் அரசில் எந்த பதவிக்கும் வரமுடியாத நிலையில்.

அதே மாற்றம் முன்னேற்றம் என்று தமிழகத்தில் பாசகவின் கள்ள ஆட்டத்தை பாமக எடுத்து இருக்கிறது.

அழகாக பேசுவார் அவ்வளவு தான் மற்றபடி செயலில் பாசக எப்படி அடிப்படை வாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விடுகின்றதோ அதற்கு நிகராக கூட இல்லை அதையும் தாண்டி புனிதமானது என்று செய்துகாட்டுவார்கள்.

உள்ளூரில் இருக்கும் மக்களுடன் ஒற்றுமையாக வாழ தெரியாத இவர்கள் நாளை தேதிய துரோகம் என்று இல்லை மாநில துரோகம் என்றும் கூட ஒரு பதத்தை கண்டு பிடித்து அட்டகசம் செய்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.

மறுபடியும் சொல்கின்றோம் பாசகவு ஓட்டு போட்டு செஞ்ச அதே தப்ப பாமகக்கு ஓட்டு போட்டு செய்யாதீங்க மக்களே. மத்தியில் இருந்த ஒரே ஒரு அமைச்சர் பதவியிலே தமிழகத்தை குலுங்க வைக்கும் அளவிற்கு செலவில் மாநாடு நடத்த முடியுதுனா, ஒருவேளை ஆட்சிக்கு வந்த நாம் எல்லாம் அப்புரம் சென்னை செல்வதற்கு கடவுசிட்டு விசான்னு அலைய வேண்டு வந்துடும் சொல்லிபுட்டேன் பாத்துகுங்க.......

Thursday, March 3, 2016

பாசக உண்மையில் நேர்மையான கட்சியாக இருந்தால் இவர்கள் மீது தேச துரோக வழக்கை பதிந்து தண்டனை பெற்று தரவேண்டும், செய்யுமா....

நேரு பல்கலை வளாகத்தில் நடந்த கூட்டதில் எழுப்ப பட்ட வாசங்கள் தேச துரோகமாக கருதி மாணவர்களை சிறையில் அடைத்து தவறு செய்யவில்லை என்று நீயே நிருபிக்கனும் என்றும் சொல்லியது.

என்ன தேச துரோகம் செய்தார்கள் என்றால், அவர்கள் என்ன கோசமிடுகிறார்கள் என்று பாருங்கள் என்று தொகா காட்சிகளை அலைபரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தியது.

சமாதானம் செய்யவந்தவனை பிடித்து சிறையில் அடைத்து தனிமைபடுத்தி இவர்கள் சோடித்த இந்த வழக்கை ஒத்துக்கொள்ளுமாரு கொடுமைபடுத்தி இருப்பார்கள்.

அதற்குள் புத்திசாளியின் குட்டு வெளிபட்டு விட்டது.

இப்போ இவ்வளவு காராசாரமாக தேச துரோக வழக்கு பதிந்த இந்த பாசக அரசு புனைவு காட்சிகளை தயாரித்து அலைபரப்பிய நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்து அதன் நேர்மையை நேர்மையாக நிரூபிக்குமா இல்லை வழக்கம் போல் போதிய ஆதாரம் இல்லாதால் கன்னையா குமார் உட்பட அனைவரும் விடுதலை என்று மட்டும் கள்ள ஆட்டம் ஆடுமா என்று பார்ப்போம்.

ஒரு கால் பாசக கள்ள ஆட்டம் ஆடும் பட்சத்தில் மற்ற கட்சியினரும் ஊடகங்களும்  சேர்ந்தாவது இந்த தேச துரோகத்தை தோலுரித்து காட்டவேண்டும். இல்லை என்றால் இந்த விபரீத விளையாட்டு நாளை யார் மீது வேண்டும் என்றாலும் பாயும். செய்வார்களா ...........