Monday, August 21, 2017

ஒரு டீக்கடைகாரரும் அவரது பிட் நோடீசு அடிக்கும் நண்பரும்

ஒரு ஊரில் ஒரு டீக்கடைகாரர் இரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தார். அந்த கடைக்கு தேவையான காகிதங்களை பெற எண்ணி நகர் முழுதும் அலைந்தார். கடைசியில் அவருக்கு கட்டும் விலையில் வினியோகிக்க முடியாமலும், நன்றாக எழுத்துக்களும் அச்சும் வரவில்லை என்று மக்களால் நிராகரிக்கப்பட்ட பிட் நேடீசுகள் இந்த டீக்கடைக்காரின் விலையடக்கத்தில் கிடைக்க அங்கேயே வாங்கி அந்த பிட் நோடீசுகளில் அன்றாடம் டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பொட்டலம் மடித்து கொடுத்துவந்தார்.

நாளடைவில் அந்த பிட் நோடீசு அடிப்பவரும் டீக்கடைக்காரரும் நெருக்கமான் வியாபாரிகளானர்கள். பிட் நோட்டீசு அடிப்பவருக்கு டீக்கடைக்கு கொடுக்கும் மட்ட காதிகங்களில் தான் அதிக இலாபம் வந்தது. ஆகவே கொஞ்சம் கொஞமாக அச்சடிக்கும் நுட்பங்களையே மறக்க துவங்கினார்.

டீக்கடைக்காரரும் பிட் நோட்டீசு அடிப்பவரும் அன்றாடம் மாலையில் சந்தித்துக்கொண்டு தங்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கலந்தாலோசிக்க துவங்கினர். அங்கனம் பேசும் போது எல்லாம் பிட் நோடீசுகாரருக்கு கோடி கோடியில் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் அதற்கு தகுந்தார் போல் அச்சடிக்கும் திறனோ முயற்சியோ இல்லாமல் இருந்தார்.

இப்படி காலம் உருண்டோடியதில் டீக்கடைக்காரர் ஒரு நாள் அந்த நாட்டின் பிரதமர் ஆனார். டீக்கடைக்காரருக்கு அவரது நண்பர்கள் யாவரும் சேர்ந்து ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் அந்த பிட் நோட்டீசு நண்பரும் கலந்துக்கொண்டு இருந்தார்.

 நீண்ட நாளைக்கு பிறகு சந்தித்துக்கொள்ளும் இந்த நண்பர்கள் தங்களது பழைய நட்பையும் அது தொடர்பான பேச்சுக்களையும் அசைப்போட்டர்கள். அப்போது தான் டீக்கடைக்காரர் பிட் நோட்டீசுகாரருக்கு எதிர்காலத்தில் தான் உதவுவேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வரவும், மேலும் பிட் நோடீசுகாரர் மிகவும் ஏழ்மையான நிலையில் சாப்பாட்டிற்கே அலையும் நிலையி அன்றாடம் காட்சியாக வாழ்வதும் பார்த்து சகிக்காமல் மனமுடைந்து போகிறார் அந்த டீக்கடைக்காரர்.

அன்றைய இரவு முழுதும் மனவலியில் துடித்த அந்த டீக்கடைக்காரர் காலையில் ஒரு யோசனை பிறக்கிறது. அன்று தனது அமைச்சரவை சக்காக்களை அழைத்து இன்று இரவு ஒரு முக்கிய முடிவை அறிவிக்க போகின்றேன் என்று மட்டும் சொல்லிவிட்டு பாராளுமன்றத்திலே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.

இரவு அந்த நாட்டில் இருக்கும் 1000 மற்றும் 500 மதிப்பு கொண்ட பணம் இனி செல்லாது என்று அறிவிக்கின்றார்.

 நாட்டுமக்களும் அமைச்சர்களும் குழம்பிப்போய் நிற்கும் போது, அந்த பிட் நோட்டீசுகாரர் மட்டும் நாட்டில் இருக்கும் பழைய அச்சடிக்கும் இயந்திரங்கள் எங்கே சல்லீசாக கிடைக்கும் என்று தேடி அலைகிறார். அங்கே இங்கே என்று அலைந்து கடைசியில் அந்த நாட்டில் வெகு வருடங்களுக்கு முன் இருந்த லாட்டரி சீட்டை அச்சடிக்கும் இயந்திரம் தான் இவரின் விலைக்கு படிந்த விலையில் கிடைக்கிறது. அந்த இயந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த டீக்கடைக்காரரை தொடர்புகொண்டு தான் வாங்கிய இயந்திரம் பற்றி செய்தியை தெரிவிக்கிறார்.

டீக்கடைக்காரருக்கோ மகிழ்ச்சி தாங்க முடியவில்லை, தனது பழைய நண்பருக்கு தான் நினைக்கும் திட்டங்கள் அவருக்கு புரிகின்றதே என்று அகமகிழ்ந்து பழைய 1000 மற்றும் 500 பணதிற்கு பதில் புதிய பணத்தை இரவோடு இரவாக அடிக்கும்படி பணிக்கிறார் டீக்கடைக்காரர்.

பிட் நோட்டீசு அடிப்பவரும் தன்னால் முடிந்தவரை அந்த லாட்டரி இயந்திரத்தில் பணத்தை இரவு முழுவதும் காலால் மிதித்தே பிட் நோட்டீசு அடிப்பது போல் அடித்து முடிக்கிறார். காலையில் அச்சடித்த புதிய லாட்டரி டிக்கட்டுகள் போல் இருக்கும் அந்த பணத்தை கொண்டு சென்று தனது நண்பனிடம் காட்டுகிறார். அதை பார்த்த டீக்கடைக்காரர், எவ்வளவு பணம் அச்சடித்து இருக்கிறீர்கள் என்று வினவுகிறார். இரவு முழுவதும் அச்சடித்ததில் 500ல் ஒரு 500ரும் 1000த்தில் ஒரு 500ரும் அச்சடித்தாக சொல்கிறார்.

அந்த டீக்கடைகாரர் ஒரு காகிதத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு என்றால் எத்தனை நாளில் பூர பணமும் அச்சடிக்க முடியும் என்று கணக்கிட்டு பார்த்து, இனிமேல் நீங்கள் 1000 பணம் அச்சடிக்க வேண்டாம் அதற்கு பதில் 2000 பணமாக அச்சடிங்கள். 2000 பணத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று சொல்கிறார்.

இப்படியே ஒரு 50 நாட்கள் செல்கின்றது, 50 நாட்களுக்கு பிறகு அந்த நாட்டில் அது வரையில் 2000 பணத்தை பார்க்காத மக்கள் 2000 பண தாளை கண்டதில் ஆனத்த கூத்தாடி பார்ப்பவர்கள் எல்லோருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள்.

பிறகு மெதுவாக 500 பணத்தாளும் அச்சடித்து கொடுத்தார். இப்படியே 10 மாதத்தில் அந்த பிட் நோட்டீசு அடிப்பவரின் அச்சு வேலை தொடர்கின்றது. 10 மாதத்திற்கு பிறகு 200 பணத்தாளும் 50 பணத்தாளையும் மிச்சம் மீதி இருக்கும் மையை வைத்து அடித்து கொடுக்கிறார் அந்த பிட் நோட்டீசுகாரர்.

அப்போது அந்த டீக்கடைக்காரர் தனது நண்பரை பார்த்து கேட்கிறார் கோடி கோடியாக அச்சடித்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றீரே இப்போது திருப்தியா என்றார். அதற்கு அந்த பிட் நோட்டீசுகார் மிக்க நன்றி, இது போல் இன்னும் மிச்சம் இருக்கும் பணங்களையும் அச்சடிக்கும் வேலையையும் எனக்கே கொடுங்கள், சம்பாதித்த செல்வத்தில் பக்கத்து நாட்டின் லாட்டரி அடிக்கும் இயந்திரம் ஒன்றை வாங்கி இருப்பதாக சொன்னார் அந்த பிட் நோட்டீசுகாரர்.

தனது பிட் நோட்டீசுகாரரின் நட்பை மற்றவர்களு தெரியாமல் பார்த்துகொள்ள அந்த டீக்கடைக்காரர் தந்திரமாக நாட்டின் முன்னேற்றத்தின் பால் பற்றுக்கொண்டு புதிய பணத்தை தயாரிக்க உத்தரவிட்டதாகவும். அனைவரும் ஒத்துழைத்தால் தான் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று தெரிவித்தார். உடனே மக்கள் அனைவரும் இன்னும் ஒருமுறை இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்.

இன்றைக்கும் அந்த பிட் நோட்டீசுகாரர் மும்முரமாக தனது பழைய இயந்திரத்தில் மிச்சம் மீதி இருக்கும் மையை எல்லாம் ஊற்றி அச்சடித்துக்கொண்டு அயராது உழைக்கிறார் தனது உற்ற நண்பனுக்கு உதவும் பொருட்டு........

0 comments: