Tuesday, December 30, 2008

அதிமுக வேட்பாளருக்கு முழுப்பாதுகாப்பு அளிக்கவேண்டும்: செயலலிதா ( ஏன்னா நீங்கள் எல்லாம் நல்லவர்கள்)

இப்படி ஒரு தலைப்பு இட்டு ஒரு அறிக்கையை செயலலிதா வெளியிட்டு இருக்குகிறார் இன்று. அந்த அறிக்கையிலே அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள், இதை பொறுத்துகொள்ள முடியாத திமுக தேர்தல் பணியில் ஈடு பட்டிருக்கும் அதிமுக மற்றும் தோழமை கட்சிகளின் முன்னணித் தலைவர்களையும் தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு தடியடி, பணம் கொடுப்பது போன்ற தில்லுமுல்லுகளில் இறங்கியுள்ளார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

அய்யோ பாவம் ஒன்றுமே தெரியாதவர்கள் இந்த அதிமுக தலைவர்களும் தொண்டர்களும். எல்லோரும் காந்தியின் வீட்டிற்கு பக்கத்து வீட்டுகாரர்கள். அதிர்ந்து கூட பேச தெரியாதவர்கள் இவர்கள். தவறியும் அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்ககூட தெரியாதவர்கள். அவர்களது ஆட்சியின் போது நடந்த சென்னை மேயர் தேர்தலில் அதிமுக கையை இறுக்கமாக கட்டிக்கொண்டு மட்டும் தான் இருந்தது.

திமுக தொண்டர்களும் கட்சி தலைவர்களும் தங்களது தலையை தாங்களாகவே சென்று நின்று கொண்டு இருந்த அதிமுக கட்சி குண்டர்களின் மீது, இல்லை இல்லை தொண்டர்களின் மீது மோதி குண்டர்களின் கைகளை உடைத்தது மட்டும் இல்லாது. தனது தலையையும் தாங்களே உடைத்துக்கொண்டு பிறகு கட்டு போட்டுக்கொண்டு அழுது கொண்டு நேர்க்காணல் வழங்கினார்கள்.

அப்படி முடிந்த அந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது இந்த குண்டர்களை கொண்டு திமுகவினர் யாரும் எண்ணிக்கையில் நடக்கும் காந்தி கணக்குகளை பார்க்காத வண்ணமாக பார்த்துகொண்டு மட்டுமே நின்றார்கள். அந்த எண்ணிக்கை எல்லாம் தானாகவே அதிமுகவிற்கு மாறினது போலும்.

நீதி, நேர்மை என்றெல்லாம் யார் எல்லாம் பேசி நாம் கேட்க்க வேண்டி இருக்கிறது பாருங்கள். 10 வருடங்களாக ஆட்சியில் உட்க்கார்ந்து கொண்டு ஒரு கீரையை கூட கிள்ளி போடாத செயலலிதா, எல்லோரையும் கசப்பு மருந்து சப்பிடுங்கள், சப்பிடுங்கள் என்று 10 வருடங்களாக கசப்பு மருந்தாகவே காலம் கழித்து இப்போது திருமங்கலம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு டன் கணக்கில் கசப்பு மருந்துகளை வைத்துகொண்டு எப்படியாவது அந்த மக்களுக்கு கொடுத்து விடவேண்டும் என்று துடிக்கும் இந்த செயலலிதா சொல்கிறார் அறிக்கையில் தில்லுமுல்லுகளை பற்றி.

போங்க போங்க அப்படியே கொண்டு வந்த கசப்பு மருந்தை எல்லாம் வீட்டிற்கு 2 டன் என்று கொடுத்துவிட்டு ஊரை பார்த்து போய் நீங்களும் கொஞ்சம் கசப்பு மருந்து சாப்பிடுங்கள். சாப்பிட்டு விட்டு அப்படியே அன்பு, நீதி, நேர்மை, அப்படி என்றால் என்ன என்று பாடம் நடத்துங்கள் வந்து பார்த்து தெரிந்துகொள்கிறோம்.

Sunday, December 28, 2008

மக்களாட்சி தத்துவங்கள் அழிந்துகொண்டு வருகிறதா??????


இன்றைக்கும் பசுமையாக நினைவில் இருக்கிறது அந்த காட்சிகள். நண்பர்களின் பெற்றோர்களை விமானம் கூட்டிச்செல்லும் படிக்கட்டுகளின் வரையில் சென்று வழியனுப்பி வைத்தவைகள். அங்கே அப்போது காவலர்கள் இருந்தது இல்லை, பதிலாக விமான நிறுவன ஊழியர்கள் இருப்பார்கள். என்ன நீங்களும் செல்லவேண்டும் என்று இருக்குமே என்று அவர் பகுடி செய்ய வேதணை சிரிப்போடு வீடு வருவோம்.ஆனால் இன்றைக்கு நடப்பது என்ன, பயண சீட்டு இல்லாமல் விமானதளம் அருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தல் கூட பிடித்து விசாரிக்கும் நிலையில் உலகம் இருக்கிறது. மக்கள் கூடும் பொது இடங்களில் ஓயாமல் ஒலிக்கும் ஓசை இது, சந்தேகிக்கும் படி பொருளோ நபரோ இருந்தால் எங்களுக்கு தகவல் கொடுக்கவும் என்று 2 நிமிடங்களுக்கு ஒரு முறை அனைத்து நாடுகளிலும் சொல்லப்படுவதை தவறாமல் காணமுடிகிறது.யாரோ சிலர் செய்யும் செயல்களுக்கு இப்படி எவ்வளவு மக்கள் அவதியுறுவது. ஒரு 17, 20 மனிதர்கள் விமானதளத்தில் குற்றம் செய்தார்கள் என்றதற்காக எத்தணை கோடி மக்கள் 3 மணி நேரம் 4 மணி நேரம் வரிசையில் நின்று தனது உடமைகளை பரிசோதணைக்குள்ளக்க வேண்டும்.அதிலும் தப்பி தவறி இசுரேலு எதுவும் போய்விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான், அவர்கள் படுத்தும் பாடுக்கு இனி அந்த நாடு பக்கம் தலைவைத்து படுப்பது கூட இல்லை என்று முடிவுகட்டி விடுவீர்கள். அந்த அளவுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அங்கே.மக்களாட்சியில் அனைவருக்கும் சம உரிமை கொடுக்கப்படவேண்டும் என்றதில் ஒருவருகும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே வேளையில் ஒரு சிலர் குற்றம் செய்தார்கள் என்றதற்காக அனைவரையும் குற்றவாளிகள் போல் நடத்துவதையும் ஒருவரும் ஒத்துக்கொள்ள முடியாது.எங்களை ஏன் குற்றவாளிகைகளை போல் நீங்கள் நடத்த வேண்டும். நாட்டில் இருக்கும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு ஒழிக்க எத்தணையோ நிறுவணங்கள் மக்களது வரிப்பணத்தில் இயங்கிக்கொண்டு இருக்கிறது உலகின் அத்தணை நாடுகளிலும்.வெடிகளை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் ஒன்றும் காற்றில் இருந்து பெறப்படுவது இல்லை. அவைகளை கொணர்ந்து கொடுப்பதற்கு என்ற முகவர்களும் மற்றும் நிறுவணங்களும் உண்டு. அவர்களை தணிக்கை செய்தாலே பாதி வேலைகள் முடிந்தார்போல். அது மட்டும் அல்லாது கடத்தலில் வரும் பொருட்களை கண்டு பிடிக்கவேண்டியது கடலோர காவல்படையின் (காவலர்கள், சுங்கதுறை, கப்பற்படை) கடமை. எங்களுக்கு தெரியாமல் என்று எத்தணை நாட்கள் காரணம் சொல்லிக்கொண்டு இருக்க போகிறீர்கள்.தன்னையும் மாய்த்து ஆயிரம் ஆயிரம் உயிர்களையும் பழிவாங்கும் மனிதனின் தனிமனித இலாபம் என்ன என்று உலகுக்கு தெரியாதா. அப்படி கிடைக்கப்பெறும் ஆதாயம் அவர்களுக்கு கிடைக்காமல் செய்ய முடியாதா என்ன ஒரு நாட்டால். அப்படி அந்த பொருள் பேசிய வண்ணம் அவர்களது குடும்பத்திற்கு கிடைக்கவில்லை என்று தெரிந்தால் அடுத்தவன் அதே போல் தன்னை பலியிட்டு குடும்பத்தை காப்பாற்ற நினைப்பானா........இது எல்லாம் அரசாலும் மக்களாட்சியாலும் முடியாத செயல் என்று ஒருவராலும் ஒப்புக்கொள்ள முடியாது.ஒரு குறிப்பிட்ட மதம், இனம், குழு, தீவிரவாதத்திலும், பயங்கரவாதத்திலும் ஈடு படுகிறது என்று சொன்னால். முதலில் அந்த இனத்தையே ஒதுக்கிவைபோம், தணிக்கை செய்யவோம். அந்த இன மத குழிவில் யார் யார் எல்லாம் இப்படி செய்கிறார்கள் என்று தெரியும் வரையில் ஒதுக்கிவைப்போம். அதைவிடுத்து அந்த இன,மத,குழுவையும் நம்மோடு சேர்த்துக்கொள்வோம் என்று சொல்லிக்கொண்டு, சம்பந்தமே இல்லாத மக்களை எல்லாம் குற்றவாளிகள் போல் ஏன் நடத்தவேண்டும்.நல்லபடியாக நடக்கும் வரையில் தான் உரிமைகள் எல்லாம், என்றைக்கு பாதை மாறுகிறதோ அன்றோடு இந்த வாழ்க்கை எல்லாம் இல்லை என்று அந்த இன,மத,குழுவில் உள்ள அனைவருக்கும் புரியும் பொழுது. நாம் சென்று அந்த குற்றவாளிகளை பிடிக்கவேண்டாம் அவர்களே காட்டிக்கொடுப்பர்கள், ஒதுக்கியும் வைப்பார்கள், விரட்டியும் விடுவார்கள்.


மக்களாட்சி தன்னை சீர்தூக்கி பார்க்கும் நிலைக்கு வந்து வெகு நாட்கள் கடந்துவிட்டது. சிந்திப்பர்களா, நமது சட்ட வல்லுனர்களும், அரசியலர்களும். சுதந்திரம் சுதந்திரத்தின் கையையே கட்டிப்போட்டு விடக்கூடாது.

(படம் நன்றி குமுதம் இணையதளம்)

Saturday, December 27, 2008

கலைஞரை பாராட்டிய இந்து மத நாளிதழ்இந்த செய்திக்கு விளக்கம் தேவை இல்லை தான், இருந்தாலும். இந்த செய்திக்கு கலைஞரின் படத்தை பாருங்கள். அகமகிழ்ந்தும் ஆணவமாக இந்த நிகழ்வுக்காக விட்டால் வெடி வெடித்து கொண்டாடினார் என்றும் கூட எழுதுவார்கள் போலும்.


ஒரு பக்கம் கலைஞர் தீவிரவாதிகளிடம் மென்மையாக நடந்துகொள்கிறார், அவர்களுக்கு துணை போகிறார் என்றும் எப்பொழுதும் எழுதி தீர்க்கும் இதழ் தான் இந்த தினமலர். அவர்களது இதழில் இவரை பற்றி ஒரு நல்ல செய்தியா என்று பார்த்தால், படத்தை பார்த்ததுமே அந்த செய்தியின் நோக்கம் தெரிந்துவிட்டது. உள்ளே உள்ள செய்தியை படித்து பாருங்கள் இன்னமும் கேவலமாக இருக்கிறது.
காசு இல்லா ஏழைகள் என்றால் அவர்களை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் போலும். ஏழைகள் அழிந்தால் அவர்களுக்கு குரல் கொடுப்பது கூட குற்றமாக சொல்லும் இவர்களும், பணக்கார கூட்டமும் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஊதும் ஊதலை பாருங்கள். அங்கே இறந்தவர்கள் தாம் மனிதர்களாம், இந்தி மொழி பேசும் மக்கள் பாதிப்பு அடைந்தால் தான் பாதிப்பாம். தமிழ் பேசும் மக்களின் பாதிப்பு பற்றி பேசினால் திராவிடம் பேசிய தலைவரை வைத்தே இல்லை எல்லாம் அறிக்கையும் சட்டமும் கொண்டுவர வைத்து நமக்கு எல்லாம் பூச்சி காட்டுவார்கள் போலும்.

ஏழைகள் என்றால் ஏன் இந்த காழ்ப்பு இவர்களுக்கு, உங்களில் யாருக்காவது தெரியுமா. தெரிந்தால் சொல்லுங்கள்.

Friday, December 26, 2008

அய்யோ பாவம் பாக்கிட்த்தானின் தலைவர்கள் புலம்பலே தாங்கவில்லை இதில் இவர்கள் புலம்பல்.........

இந்த உலகம் எந்த உலகம் பாக்கிட்த்தான் ஐயா, ஒருவேளை உங்களின் கற்பனை உலகமாக இருக்குமோ. அமெரிக்கா, இங்கிலாந்து இன்னமும் இப்படி பல நாடுகள் கண்டித்தும் உங்களது நாளிதழ் இப்படி கேளி சித்திரம் வெளியிட்டால் நீங்கள் எல்லாம் புணிதர்கள் ஆகிவிடுவீர்களோ. ஒரு வேளை சிங்களர்கள் போல் கொல்லமையை கடைப்பிடிக்கும் நாடு போலும் உங்களது நாடு...........

உங்களது தலைவர்கள் புலம்புவதையாவது நிறுத்த சொல்லுங்கள் தாங்க முடியவில்லை. முன்னுக்கு பின் முரணாக எப்படி பேசுவது என்று பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள்...........

Wednesday, December 24, 2008

ஐநா மன்ற அதிகாரிகள் பாக்கிட்தானின் ஒத்துழைப்பை பாராட்டுகிறார்கள் (UN official praises Pakistan’s cooperation)

"WASHINGTON, Dec 23: A senior UN official has said that Pakistan has extended full cooperation in implementing UN sanctions against Jamaatud Dawa and Lashkar-e-Taiba.

Richard Barrett, the Coordinator of Security Council’s Al Qaeda and Taliban Sanctions Monitoring Committee, told CNN-IBN in New York that the United Nations had received “across-the-board” cooperation from all Pakistani civil and military agencies.

The committee is responsible for monitoring sanctions imposed by the Security Council on individuals and organisations declared terrorist.

Mr Barrett said he found “very good atmosphere of cooperation” in all his dealings with officials in Pakistan, “whether it’s the government, elected officials, ministries, the intelligence services or the army”.

He also acknowledged that it’s “very difficult to implement the sanctions completely but the Pakistani government is working to ensure fruitful compliance”.

Mr Barrett is expected to visit Islamabad soon to make an assessment of Pakistan’s actions so far and what more needed to be done.

Mr Barrett had earlier said the Security Council had the power to take action against nations if they were found to be not taking action against individuals and organisations branded as terrorists.

Acting after the United Nations declared the Jamaatud Dawa a terrorist group and a front for Lashkar-e-Taiba Pakistan has sealed all of its offices, arrested scores of activists and put its entire leadership under house arrest."

இப்படி ஒரு பரப்புரையை பாக்கிட்தானின் முன்னனி நாள்ழிதல் வெளியிட்டு இருக்கிறது. இந்த செய்தியில் வரிக்கு வரி ஐ நா பாதுகாப்பு சபை ஒருங்கினைப்பாளர் ரிச்சர்டு பாரட்டு இப்படி சொன்னார் அப்படி சொன்னார் என்று எழுதி இருக்கிறது அந்த இதழ்.

இந்த செய்தியின் நோக்கம் பாக்கிட்த்தானின் சாதாரண மனிதனும், அதாவது அரசியல் அறிவும் உலகறிவும் வேண்டாம் ஆனால் மத அறிவு மட்டும் போதும் என்று நினைக்கும் சாதாரண குடியானவனின் குற்ற உணர்ச்சிகளை உள் நாட்டிலும், மற்றும் பாக்கிட்த்தானின் மேல் மத கருணையோடு பார்க்கும் நடு நிலை நாடுகளுக்கு மறைமுகமாக பாக்கிட்த்தான் சொல்லும் செய்தி இது.

இந்தியாவில் நடந்த தீவிரவாத பயங்கரவாத செயலுக்கு துணை போனோரை கண்டு பிடிக்க நாங்கள் உதவிக்கொண்டு தான் இருக்கிறோம். இருந்தாலும் இந்தியா எந்த வித ஒத்துழைப்பும் இல்லை என்று எங்களை அடிப்பேன் என்று மிரட்டுகிறது என்ற செய்திதான் அது.

இவ்வளவு மிரண்டு போய் இருக்கும் இந்த நாட்டின் பேச்சு என்னவோ "வந்து பார் என்று தொனிக்கிறதே ஏன்". ஆப்பசைத்த குரங்காக இன்னமும் இந்த நாடு படப்போகும் வேதணைகளை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

ஆமாம் ரிச்சர்டு பாரட்டு "பாக்கிட்த்தானில் 65 தீவிரவாத இயக்கங்கள் இருக்கிறதே அவைகள் எல்லாம் எதற்கு என்று கேட்க்க தோன்றவில்லையா உங்களுக்கு". அத்தணை இயக்கங்களுக்கு என்ன தேவை என்று பாக்கிட்த்தானியரை கேளுங்கள் அதற்கு என்ன சொல்கிறார்கள் என்று உலக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்................

ஓநாய் என்ற ஒரு விலங்கு இருக்கிறது, அது இரத்த வாடையை கண்டு விட்டால் அது தனது பிள்ளை என்றும் கூட பார்க்காது கடித்து குதறி தின்று தீர்த்துவிடும். அந்த ஓநாயின் குணத்தில் மனித குலத்தையே அழிக்கும் நோக்கில் கையில் அணுகுண்டுடன் திரியும் இந்த ஓ நாய்க்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் உங்களது நாட்டில் இப்படி சாவுகளை சந்தியுங்கள். பிறகு இந்த மாதிரியான அறிக்கைகளை வெளியிடுங்கள் பார்ப்போம்.

பட்டே அறியும் முட்டாட்கள் என்று எங்களது ஔவை உங்களை போன்றோரை பார்த்துதான் சொன்னார்களோ மூடர்களே. எவ்வளவு பெரிய பதவியில் இருந்துக்கொண்டு என்ன ஒரு பொருப்பில்லா அறிக்கை. உங்களை எல்லாம் அந்த பதவியில் வைத்து இருக்கிறார்களே அந்த ஐநா மன்றத்தை சொல்லனும்.

இப்படி தான் வரிக்கு வரி இந்த ஓநாய் கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கியது அமெரிக்கா, இன்றைக்கு ஒவ்வொரு நாடாக சென்று வேட்டையை நடத்திக்கொண்டு இருக்கிறது. அந்த நாடுகளிடம் எல்லாம் அணுகுண்டுகள் இல்லை. இந்த ஓநாய்யிடம் அது 10,000 கணக்கில் இருக்கிறது. இந்த ஓநாயை ஒன்றும் அறியா அகிம்சாவாதி என்று சொல்லும் உங்களது அறிவை என்ன என்று சொல்வது.

பார்த்தீர்களா, உங்களது சில வரி அறிக்கையை எப்படி பயன்படுத்தி பரப்புரைகளை நிகழ்த்துகிறது என்று.......விழித்துக்கொள்ளும். இன்றைக்கு எங்களு நடப்பது தான் உங்களுக்கு நளைக்கு, இந்த புற்று நோயை இப்போதே கிள்ளி எறிந்து காப்பாற்றவேண்டும் என்றதே இந்தியாவின் நோக்கம். புரிந்தால் சரி............

Tuesday, December 23, 2008

இராச்சீவ் காந்தியும், தமிழக பேராய கட்சியினரும்.


முன்னாள் இந்திய முதன்மை அமைச்சர், நவீன இந்தியாவின் சிற்பி. ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளிலேயே உலககுக்கே ஒரு உதாரணமாக தன்னை காட்டி வளர்ந்து வந்த நாடு. தன்னிறைவு பெற்ற வளர்ச்சி. இளைய சமுதாயம் நாட்டின் முன்னேற்றத்தை மனதில் வைத்து தொழில்களை நாட்டின் பல்வேறு திசைகளில் பெருக்கி தானும் முன்னேறி நாட்டையும் முன்னேற்றிய காலம் இவரது கால இந்தியா.

ஐந்து வயது சிறுமிக்கு இவர் அனுப்பிய பதில் கடிதத்தை பற்றி எங்களது வகுப்புகளில் ஆசிரியர்கள் புகழ்ந்த விதம் இன்னமும் மனதில் பசுமையாகவே இருக்கிறது. வி பி சிங்கும், கலைஞரும் இவரையும் இவரது பஞ்சாயத்து இராசியத்தை பற்றி அடித்த கிண்டல்களும் கேலிகளும் இன்னமும் மனதை விட்டு மறையவே இல்லை.

கிராமத்தில் தான் சந்தித்த உழவனிடம் பச்சை மிளகாய் விலை அதிகமா, சிகப்பு மிளகாய் விலை அதிகா என்று கேட்டு தெரிந்து கொண்டு, பிறகு சிகப்பு மிளகாயே பயிரிட வேண்டியது தானே ஏன் பச்சை மிளகாய் பயிரிடுகிறீர்கள் என்று கேட்டதை அப்பாவி தனமாக பார்த்த உழவனும், அதையே குறும்பாக அதை ரொட்டி இல்லை என்றால் கேக்கு சாப்பிடுங்கள் என்று சொன்ன பிரஞ்சு அரசி சொன்ன வாசகங்களுக்கு ஈடு என்று எழுதிய தினமணியின் தலையங்கமும் இன்னமும் மனதை விட்டு அகலவில்லை.

தனக்கு இருக்கும் தனி பெருன்பான்மையை கொண்டே ஆட்சி அமைக்கும் உரிமை கோரும் வாய்ப்பு இருந்தும், பரவாயில்லை வி பி சிங் ஆட்சி அமைக்கட்டும் என்று இருந்ததுன் இன்னமும் நினைவில் இருக்கிறது.
மேலே சொன்னவைகள் எல்லாம் இராச்சீவை பற்றி தெரிந்த பொதுவான செய்திகளே. அவரது தனிப்பட்ட செய்தியாக தெரிய வந்தது எல்லாம், விமானம் தரையிரங்கும் போது தாறுமாறாக ஆட்டம் கண்டால், விமானி வாங்கிக்கட்டிக்கொள்வது. போப்போர்சு பீரங்கி வாங்கியதில் நடந்த ஊழல் (இது தொல்கி பதிவு பத்திர ஊழலில் நடந்த பணத்தோடு ஒப்பிடும் போது, ஒரு சிறிய தொகை), இன்னமும் சில செயல்கள் தாம் வருமே தவிற சுப்பிரமணி சாமியின் மேல் சுமத்தப்படும் எண்ணிக்கை இல்லா குற்றங்கள் போல் வராது. இது அனைவரும் ஒத்துக்கொள்ள கூடிய ஒரு செய்தி.
இந்த மனிதன் இந்தியாவின் மா மனிதனாகத்தான் உலகம் பார்த்தது, இன்னமும் அப்படி தான் நினைவு கூறுகிறது. அந்த மா மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வந்த நிகழ்வை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடுவதற்கு இல்லை தான்.

சென்னை விமான நிலையத்தில் என்று மாறா அந்த புன்னகையுடன் கொடுத்த நேர்காணலில் இந்த தேர்தலில் வெல்லப்போவது கட்டாயம் நாங்கள் தான், இது யாராலும் மாற்றமுடியாத ஒன்று என்றும். தமிழகத்துக்கு வருவது எப்போதும் தனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு செயல் என்றும் புகழ்ந்து திருபெரும்புதூருக்கு சென்றார்.

அங்கே போகும் போது தேர்தல் செலவுக்கு என்று ஒர் 200 கோடி ரூபாய்க்கள் வரை பணமாக உடன் எடுத்து சென்றார் என்று பரவலாக பேசப்படுகிறது.
பல்லாயிரம் தொண்டர்களுக்கு முன் சில நூறு தமிழக பேராய தலைவர்களுடன் உரையாற்றும் விதமாக அங்கே சென்ற இராச்சீவின் அகோர மறைவு எந்த ஒரு தனி மனிதனாலும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒன்றாத அங்கே நிகழ்ந்தேறியது.

அருகே இருந்த மக்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலரது உடலங்கள் எங்கும் சிதறி போர்த்தாக்குதலுக்கு ஆளான ஒரு பூமியாக கலவரப்பட்டு நின்றது அன்று. இந்தியர்கள் மட்டும் அல்லாது, உலகத்தோர் அனைவரது மனதையும் வாட்டி எடுத்த நிகழ்வு அது.

தனது தாய்யின் படுகொலையின் ஈரம் கூட காயாத நிலையில், அவரை அகோரமாக கொன்ற சீக்கியனின் மா நிலத்தில் இந்திராவின் மறைவை தீபாவளியாக கொண்டாக்கொண்டு இருகிறார்கள் என்ற செய்திகள் எல்லாம் காதில் விழுந்து கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் தேவையை கருதி. நாட்டின் நலனுக்காக அந்த இக்கட்டான கட்டத்தில் கட்சியின் தலைவர் பதவியையும், முதன்மை அமைச்சர் பதவினையும் ஏற்றுக்கொண்டவருக்கு இப்படி ஒரு அகோர முடிவு. அந்த குடும்பத்தின் அடுத்த பலி. இவ்வளவு சின்ன வயதில், தன்னை பற்றியும் தனது நாட்டை பற்றியும் பல கனவுகளை சுமந்து வந்த அந்த மா மனிதன் செயலலிதா கலைஞரை தீபாவளிக்கு மக்கள் என்ன செய்வார்கள் என்று சொன்னதை போல அடையாளம் தெரியாமல் உருகுலைக்கப்பட்டார்.

இந்த மறக்க முடியா மரணம் நிகழ்ந்து நீண்ட நாளுக்கு பிறகும் அவர் ஏன் கொல்லப்பட்டார் என்று இது வரையில் யாருக்கும் தெரியவில்லை. எதற்கு யாரால் கொல்லப்பட்டார்கள் என்றும் யாருக்கும் தெரியவில்லை.
கொலைக்கு துணை புரிந்தார்கள் என்ற சிலரையே நீதி மன்றத்திற்கு முன் நிறுத்தி தண்டனையையும் கொடுத்துள்ளார்கள். ஆனால் உண்மையிலேயே யார் இந்த சதியை தீட்டி செயலாக்கினார்கள் என்று இது வரையில் ஒரு வரும் தெரிவிக்கவே இல்லை.

சில மாதங்களுக்கு முன்னாள் குமுதம் இணையதள இதழ் டேட்டு லைன்க்கு அளித்த காணொலியில் திருச்சி சிவா சொன்ன விபரங்களை பார்க்கும் போது மனது பதறாமல் இல்லை. இராச்சீவ் காந்தியில் கொலை நிகழிருந்த மூன்று இரண்டு நாட்களில் சுப்பிரமணிசாமி தன்னிடம் சொன்ன விபரங்களாக திருச்சி சிவா குறிப்பிடும் "இந்த தேர்தல் நடந்தால் தானே பேராயக்கட்சி வெல்லும்", தொலைபேசியில் இராச்சீவ் காந்தியின் மரணம் நிகழ்ந்த சிலமணி துளிகளில் சிவா தெரிவிக்க சுப்பிரமணி சாமியை தொடர்பு கொள்ளுகையில் என்ன என்று கூட கேட்க்காமல் "அந்த மரணம் நிகழ்ந்தது எனக்கு தெரியும்" என்று சுப்பிரமணி சாமி தெரிவிக்க, காவலர்கள் கூட இன்னமும் உறுதி படுத்தாத ஒரு தகவலை இவருக்கு தெரியும் என்று சொன்னாரே என்று எழுப்பும் கேள்விகளை பார்க்கும் போது..........

இராச்சீவின் தொண்டனாக கூட வேண்டாம் சாதாரண மனிதனின் இதயமே இப்படி துடிக்கும் போது, கட்சியின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எப்படி இருந்திருக்க வேண்டும்.

மரகதம் சந்திரசேகர் என்ற ஒரு பேராய கட்சியின் மூத்த உறுப்பினர். இவர் தான் சுபாவையும், சிவராசனையும் அங்கே அழைத்துவந்தார் என்றது ஊர் அறிந்த இரகசியம். இந்த படு கொலைக்கு பிறது மருத்துவ மனையில் அந்த அம்மையாரின் பணியாளர் பெண் அப்பாவி தனமாக சொன்ன "திருச்சி சிவா வரும் வரையில் நன்றாகத்தான் இருந்தார்கள், அவர்கள் வந்ததும் தான் என்னவோ மூர்ச்சையானதை போல் இருந்தார்கள்" என்ற சொல்தொடர்கள் என்ன சொல்கிறது என்று தேடி கண்டுபிடிக்க தேவை இல்லை.

வாழப்பாடி இராமமூர்த்தி என்ற ஒரு பேராய கட்சியின் மூத்த உறுப்பினர். இவர் இராச்சீவ் தமிழகம் வரும் போதெல்லாம் அவருடனே இருக்ந்த ஒரு நபர். இராச்சீவின் தமிழக பயண படங்களி அவருக்கு அருகாமையில் இவர் இல்லாமல் படங்களையே செய்திதாள்களில் பார்க்கவே முடியாது.
இராச்சீவ் இறந்ததும் அவரது சிதறிய உடலை இவரது மேல் துண்டை கொண்டு தான் மூடினேன் என்று உருக்கமாக் எல்ல நேர்க்காணலிலும் காணொலியிலும் கண்கள் கசிய, வார்த்தை தழுதழுக்க சொல்ல இவர் தவறியதில்லை. சாதாரண பயணத்திலேயே படங்களில் ஒட்டிக்கொண்டாவது வரும் இவர், இந்த திருப்பெரும்புதூர் நிகழ்வில் மட்டும் ஒரு சிறுக்கீறல்கள் கூட இல்லாமல் மேல்துண்டை கொண்டு மூடும் அளவிற்கு பாதுகாப்பாக இருந்தது எப்படி.........பதில் சொல்ல அவர் இல்லை. இந்த கேள்வியை நாம் அவரிடம் நேரிடையாக கேட்க்கவும் முடியாது.........

எத்தணையோ முகம் தெரியாத பொதுமக்களும் காவலர்களும் உயிரிழந்த அந்த படுகொலையிலே எந்த ஒரு பேராயகட்ச்சியின் தலைவர்களும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பது ஆச்சர்யம் தராமல் இல்லை. அதோடு மட்டும் அல்லாது, அது வரையில் மா நில கட்சியின் தலைவராக இல்லாத வாழப்பாடி இராமமூர்த்தி அதற்கு பிறகு கட்சியை தொடங்கியதும் தொடர்ந்து அந்த கட்சியினை நடத்தியதும் எப்படி என்று மக்கள் கேட்க்காமல் இல்லை. மிகவும் ஆடம்பரமாக செய்தியாளர்களது கூட்டங்களை அவரால் எப்படி நடத்தமுடிந்தது என்றும் கூட கேட்க்காமல் இல்லை. அப்படியே தேர்தல் செலவுக்கு என்று இராச்சீவ் கொண்டு வந்த அந்த பண பெட்டிகள் என்ன ஆனது என்றும் கேட்க்காமல் இல்லை.

பிறகு அந்த கொலை வழக்கில் சம்பந்த பட்ட சந்திராசாமியை விசாரிக்க வேண்டும் என்ற தருணத்தில் இருந்து விசாரணையில் தகராறுகள் ஆரம்பித்தது உலகம் அறிந்த உண்மை.

பேராயக்கட்சிக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் என்ன சம்பந்தம். எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத சுசாமி எப்படி 5 ஆண்டு காலம் பெட்ரோலிய துறை அமைச்சகத்தில் இருந்தார், ஆட்சியில் அவ்வளவு முக்கியத்துவம் பெற்றார் என்று மக்கள் கேட்க்காமல் இல்லை.

இவை எல்லா கேள்விகளுக்கும் சிகரம் வைத்தாற்போல் இப்போது இன்று குமுதம் ரிப்போர்டரில் அந்த இரங்க நாதன் நேர்காணல் வழங்கியுள்ளார். அதிலே எனது கட்டுரையில் சொன்ன அனைத்து செய்திகளையும் உறுதி படுத்தியுள்ளார். திருச்சி சிவாவை பற்றிய செய்திகளுக்கு அவரது நேர்காணலை குமுதம் இணைய தளத்தில் பார்க்கவும்.

இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த இராச்சீவ் காந்தியின் கொலைவழக்கில் உண்மையை கண்டு பிடிக்க பேராய கட்சியின் தலைவர்கள் முற்படவில்லை. அதை விடுத்து சீமானை கைத்து செய், பிரபாகரனை கொண்டுவா, தமிழர்களை அழித்து ஒழி என்ற பரப்புரை வேறு.

இன்றைக்கு மார்தட்டும் அணைத்து பேராயகட்சியின் தலைவர்களுக்கும் சவாலாக சொல்கிறேன், அந்த படுகொலை நிகழ்ந்த போது நீங்கள் எல்லாம் எங்கே என்ன செய்துகொண்டு இருந்தீர்கள் என்று சொல்லமுடியுமா நெஞ்சில் உரம் இருந்தால் சொல்லிப்பாருங்கள் உங்களது அழகு உங்களுக்கே தெரியும்.

இவர்களாவது பரவாயில்லை, உலகுக்கே தைரியம் வழங்கும் அந்த தைரிய லெட்சுமி அன்றைக்கு கூட்டதிற்கு வருவதாக இருந்த போதும் அந்த ஊர்ப்பக்கமே தலைவைத்து கூட படுக்கவில்லையே அந்த தைரிய லெட்சுமி ஏன் என்று சொல்வாரா அந்த தைரிய லெட்சுமியாவது............

Friday, December 19, 2008

குமுதம் இணைய இதழின் குறும்பு படம்

தமிழர்களுக்கு ஆதரவா குமுதத்தில் செய்தியா, அதை இவ்வளவு நுண்ணோக்கு ஆராய்ச்சி எல்லாம் செய்து கண்டுபிடிக்கனுமா, பொதுவா வட நாட்டவர்களுக்கும், அவர்களது பழக்க வழக்கங்களுகளை மட்டுமே அச்சிடும் இதழாயிற்றே இது !!!!!!!!!!!!!!!!!

Tuesday, December 16, 2008

மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தின் 2008ன் தீபாவளி விழா

நவம்பர் 16ஆம் நாள் 2008ல் அர்பனாவின் சமுக கூடத்தில் மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தின் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.

குறித்த நேரத்திற்கு தமிழ்த்தாய் வாழ்த்துகளுடன் விழா துவங்க பெற்றது. விழாவின் விருந்தினர்களையும் உறுப்பினர்களையும் தலைவர் திரு.சுப்பு வரவேற்று விழாவினை துவக்கி வைத்தார்.

விழாவின் நாயகி ரோசலின் துவக்க உரையுனுடன் முதல் நிகழ்ச்சியாக சேம்பைன் தமிழ் பள்ளியின் மாணவர்களின் தமிழ் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல், இரண்டு, மூன்று என்று மூன்று குழுவாக வந்து குழுப்பாடல்களை மாணவர்கள் பாடிச்சென்றார்கள்.

நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் தமிழ் பள்ளி தான் இது வரையில் மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வியின் பலனை பெற்றோர்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்தை அங்கே காணமுடிந்தது. என்ன சாதித்தது சேம்பைன் தமிழ் பள்ளி என்று கேட்க நினைக்கும் அனைவரும் பதில் செல்லாமல் செல்லி சென்றது. வாழ்க வளர்க சேம்பைன் தமிழ் பள்ளியும் அதன் சேவையும்.அடுத்தாக நடன மாலையாக ஒரு குழு நடனம். இது சின்னம் சிறு சிறுவர்கள் அதிக நேரம் ஆடமுடியாத குழந்தைகளாக

உள்ளவர்களுக்காக அமைக்கப்பட்ட நிகழ்ச்சி. இதில் நான்கு பாடல்களுக்கு நான்கு குழுக்களாக சிறுவர்கள் கையில் விளக்குடனும், தீபாவளி தீபாவளி என்ற நாட்டிய கலபு நடனமாகவும், பஞ்சாப்பியரின் பாரம்பரிய நடனமாகவும், நகரத்து குரும்பு சிறுமிகளாவும் வந்து நடன விருந்தை கொடுத்தார்கள் மத்திய இல்லினாய் தமிழ்சங்க உறுப்பினர்களின் எதிர்காலங்கள்.இதை தொடர்ந்து நாக்கு முக்கா என்ற பொருள் பொருந்திய தமிழிசை பாடலுக்கு சிறார்களும் சிறுமிகளுமாக ஆடிய நடனம் காற்றிலே பறந்து ஆட்டிய முழுப்பாடல் ஆட்டம் அது. ஆண் பாடும் பாடலையும் பெண் பாடும் பாடலையும் இணைத்து ஆறு நிமிடங்களுக்கு வரும் பாடலாக அமைத்து அந்த பாடலை நடனமாடி காண்பித்தார்கள்.


இரண்டு நடனங்களை பார்த்த மகிழ்ச்சியில் இருந்த எங்களுக்கு அடுத்த விருந்தாக சேம்பைன் தமிழ் பள்ளி மாணவர்களின் தீபாவளி பிறந்த கதையை ஆங்கில நாடகமாக நடித்து காட்டினார்கள். அவர்கள் பேசும் ஆங்கிலமும் இந்திய வரலாறும் என்று மிகவும் வித்தியாசமாக அமைந்தது அந்த நாடகம்.அடுத்தாக மகளீர் மன்றம் வழங்கிய கோலாட்டம் நிகழ்ச்சி. கலைஞன் படத்தில் வரும் தில்லு பரு சானே என்ற பாடலுக்கு அழகாகவும் நளினமாகவும் அருமையானதொரு நடனத்தை வழங்கினார்கள். ஒவ்வொரு முறையும் இப்படி நிகழ்ச்சிகளை கொடுக்கும் போதெல்லாம் இவ்வளவு திறைமைகளை இத்தணை நாள் எங்கே மறைத்து வைத்தீர்கள் என்று கேட்கும் விதமாகவே அமையும். இன்றும் அப்படியே அமைந்தது அந்த நடனம்.சிக்காக்கோ தமிழ்சங்கத்தின் சார்பாக விழாவில் கலந்துகொண்ட திருமதி மீனாசுபி அவர்கள் விழாவில் சிறப்புரையாற்றினார்கள். விழாவையும் மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தையும் வாழ்த்தி பேசினார், பொங்கல் விழாவிற்கு சிக்காகோ தமிழ்சங்கத்திற்கு வரும் படியாக அழைப்பையும் விடுத்தார்கள்.

மத்திய உணவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. புளுமிங்குடன்னின் இந்தியா பவனில் இருந்து தருவிக்கப்பட்ட மத்திய உணவு வழங்கப்பட்டது. உணவு இடைவேளையில் காதுக்கும் உணவாக இசை மாலை தொகுத்து வழங்கப்பட்டது.

உணவு இடைவேளைக்கு பிறகு செல்வி சுபாலட்சுமியின் பரதம் நடைபெற்றது.
இவர் சேம்பைன் அர்பனா பல்கலைகழத்தில் மேற்படிப்பு மாணவர். நடனம் கற்றுக்கொள்ளும் சேம்பைன் தமிழ் பிள்ளைகளுக்கு எப்பவும் ஒரு தூண்டுகோலாக இவரது பரதம் அமைவது உண்டு. இந்த முறையும் அப்படியே அமைந்தது.

அடுத்தாக மேடையேறிய பெப்பரபே குழுவினர்கள் மாரி + மாரி = மும்மாரி என்ற ஒரு வித்தியாசமான நாடகத்தை நடத்தினார்கள். தற்பொழுதை சென்னை நகரின் முக்கிய இடங்களின் பெயரில் அரசர்கள் காலத்து கதையாக அமைந்தது அவர்களது நாடகம். ஒரு வகையில் சொன்னால் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் வகையில் இருந்தாலும், நிறைய வித்தியாசமான திருப்பங்களை கதையில் கொண்டு நடத்தி காட்டினார்கள்.

தொடர்ந்து மேடையேறிய செல்வி லாவண்யாவின் குழுவினர்களின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. முத்தாக மூன்று பாடல்களை பாடி அசத்தினார்கள் அந்த குழுவினர்கள். ஒரு கித்தார், மின்னனு இசை கருவி மட்டுமையுமே வைத்துக்கொண்டு சவாலாக அவர்கள் பாடிக்காட்டியது விழாவில் அனைவரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றது.

இதை தொடர்ந்து பெப்பரபே குழுவினர் பெருங்காயம் என்ற ஒரு நாடகத்தை நடத்தி காட்டினார்கள். இந்த நாடகம் சோ இராமசாம 20 வருடங்களுக்கு முன் சென்னை தொலைக்காட்சிக்காக தயாரித்து வழங்கிய சரசுவதியன் செல்வன் நிகழ்ச்சியின் பாதிப்பாக இருந்தாலும் கோலங்கள், செல்வி, அண்ணாமலை என்று அமெரிக்க தமிழர்களை துன்புருத்தும் தொடர்களை துவைத்து கிழித்து காய போட்டபடி இருந்தது இந்த நாடகம்.


நாடகத்தை தொடர்ந்து பிங்கோ விளையாட்டு நடந்தது. எக்கச்சக்கமான சுற்றுகளுக்கு பிறகு முதல் பரிசு அறிவிக்கப்படது.


பிங்கோ விளையாட்டோடு விழாவை முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்சிகள் யாரும் இனிதே முந்தது. அடுத்தாக வரும் புத்தாண்டில் மீண்டும் சந்திப்போம் என்ற அறிவிப்போடு அனைவரும் விடைபெற்றார்கள். 2008 க்குகான தீபாவளி விழா இனிதாக முடிந்தது.

Monday, December 15, 2008

பாக்கிட்தானில் 65 தீவிரவாத இயக்க அலுவலகங்கள் முடக்கம்- குமுதம் இணையதளம்


இப்படி ஒரு செய்தியை குமுதம் இணையத்தில் 14/12/2008ன் தலைப்பு செய்திகளில் ஒன்றாக வந்துள்ளது. இதே சேதியை தினமணி, தினமலர் மற்றும் இந்திய இதழ்களும் மட்டும் இல்லாது. அமெரிக்க ஊடகங்களின் முக்கிய பங்கு வகிக்கும் சி என் என் நிறுவனமும் இந்த செய்தியையும், இது தொடர்பாக பாக்கிட்த்தானின் அறிவுகெட்ட நேர்காணலையும் உளரல்களையும் வெளியிட்டுள்ளது.

http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/12/14/india.mumbai.suspect/index.html
http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/12/11/pakistan.mumbai.attacks/index.html
http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/12/09/pakistan.mumbai.raids/index.html

இந்த தலைப்பை பார்க்கும் இந்தியாவின் சாதாரண குடிமகனின் மனதில் என்ன தோன்றும். நடந்துவரும் உலக பொருளாதார மந்த நிலைகாரணமாக ஆங்காங்கே அமெரிக்க நிறுவனங்களின் இந்திய கிளைகளை மூடுவதை போல் வந்த ஒரு அறிவிப்பு என்று தான் நினைக்ககூடும்.

இந்தியாவின் சாதாரண குடிமகன் என்ன ஐ நா வின் தலைவர்களும், அதன் உளவு நிறுவனமும் கூட இதையேத்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறது போலும்.

இந்த 65 மனித பிணம்தின்னி நிறுவனங்களிலே ஒரு பிணம்தின்னி நிறுவனத்தின் பெயரை சொல்லி அதைமட்டும் பாக்கிட்த்தானும் மற்ற நாடுகளும் தடை செய்யவேண்டும் என்ற ஒரு வெறும் அறிக்கையை மட்டுமே வெளியிட்டது.

அந்த தடை செய்தி வெளியில் வந்த உடனுக்குடன் அந்த மனித பிணம்தின்னி குழுவின் தலைவன் பாக்கிட்தானின் தொலைக்காட்சிகளுக்கும் இதழ்களுக்கும் நேர்காணலை வழங்குகிறான். எப்படி தெரியுமா, இவர்களது தடையை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. இந்த ஐ நா மன்றம் தடைவிதிப்பதால் நாங்கள் கொன்று குவிக்கும் செயலுக்கு என்ன தடை வந்துவிடப்போகிறது.

அமெரிக்காவிற்கே சென்று கொள்ளையாக மக்களை கொன்று குவித்து, அவர்களிடமே எங்களின் ஏக போக அதிபதியை அனுப்பி இன்னமும் நவீனமான விமானமும் ஆயுதங்களையும் வாங்கிவர வைத்தோம். இந்த துக்கட்டா நாடு என்ன இந்தியா சொல்லுமாம் அதை ஐ ஆ மன்றம் கேட்டு தடைவிதிக்குமா. அந்த தடையுத்தரவை நாங்கள் வேறு காரியத்திற்கு வேண்டுமானால் பயன் படுத்தலாமே தவிற வேறு எதற்கும் அது ஆகாது என்ற ஒரு இறுமாப்பான பதில்.

65 மனித பிணம்தின்னி நிறுவனங்கள் என்று சொல்லும் போது அனைத்து நாடுகளின் மனதிலும் வரும் கேள்வி இதுவாகத்தான் இருக்கமுடியும்.

பாக்கிட்த்தானில் இப்போது எந்த ஒரு சுதந்திர போரோ அல்லது போராட்டமோ இல்லை. அது ஒரு சுதந்திர நாடு, மக்களால் மக்களுக்காக மக்களே ஆளப்படும் ஒரு நாடு.

நிலைமை அப்படி இருக்க இது என்னவோ ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் போல் பல குழுக்களாக இவர்கள் மனித வேட்டையாட பயிற்சி கொள்வதும். பல நாடுகளுக்கு சென்று அப்பாவி மக்களை மட்டுமே கொன்று குவித்து இன்பம் காணும் இந்த குழுக்களின் நோக்கம் என்ன.

எங்கேயோ கொலை நடந்த இடத்தில் கிடந்த தலைமுடியின் பாகத்தையும், அவனது கைரேகையையும் மட்டுமே வைத்து கொலைகாரர்களை கண்டு பிடித்து தூக்கிலிட்டு தண்டிப்பது இந்த மனித சமுதாயம். அந்த மனித சமுதாயத்தில். அடுத்த நாட்டு விவகாரங்களில் தலையிடுவது, முடிதால் பயங்கர சாவுகளை நிகழ்த்தி அந்த நாட்டு மக்களை பாதுகாப்பு இல்லாதது போல் ஒரு தோற்றம் கொண்டு வருவது. அதற்காக எண்ணற்ற நிறுவனங்களை அமைத்து கொழுப்பெடுத்த மனிதர்களின் திமிர்பிடித்த பணத்தை பிச்சையாக வாங்கி இப்படி ஒரு பிழைப்பை அந்த நாடே நடத்துகிறது என்றால் அந்த நாட்டை என்ன என்று சொல்வது.

உலக நாடுகள் இந்த மனித சமுதாய சீரழிவு தொழிற்சாலையாக விளங்கும் பாக்கிட்த்தானை இன்னமும் ஒதுக்கி வைக்காமல் இருப்பது ஏன். என்னை கேட்டால் ஒதுக்கி வைப்பது என்று நின்று விடுவதைவிட. இனிமேல் எந்த ஒரு நாடும் இப்படி ஒரு மனித சமுதாய சீர்ரழிவை கனவில் கூட நினைத்து பார்க்க கூட்டத வகையில் பாக்கிட்த்தானுக்கு ஒரு பாடம் கற்பித்து இருக்க வேண்டாமா..........

அதை விடுத்து ஒரு மனித பிணம்தின்னும் குழுவைமட்டும் ஐ நா மன்றம் தடைவிதிப்பதும் அதை அவர்கள் கேளி போசுவது என்ன வகையான செயல் என்றே புரியவில்லை. இப்படியே போனால், இன்றைக்கு அமெரிக்க அதிபரை செறுப்பால் அடித்ததை போல் அனைத்து உலக தலைவர்களையும் இவர்கள் உலக நாடுகளின் முன் செறுப்பால் அடித்து காட்ட தயங்க மாட்டார்கள்.

இதிலே செறுப்பால் அடிப்பது ஒரு அவமான படுத்தும் செயல் என்று இந்த சி என் என் நிறுவனம் ஆராய்ச்சு நடத்தி இதழ்களில் செய்தி வெளியிடுகிறது.

பாக்கிட்த்தானை உலக அளவில் தடை செய்யவேண்டும். அந்த நாட்டோடு உறவோ தொடர்போ கொள்ளக்கூடாது என்று ஒதுக்கிவைக்க வேண்டும். அந்த நாட்டு மக்களில் ஒருவரை கூட தங்களது தேசத்துக்குள் அனுமதிக்க கூடாது. அப்படி செய்தால் தான் இந்த அறிவு கொட்டமக்கள் அந்த மனித பிணம் தின்னும் மக்களை கொழுப்பெடுத்த மனிதர்களின் திமிர்பிடித்த பணத்தில் வளர்த்து உலகை கொல்ல மாட்டார்கள்.

இந்த செயலுக்கு இந்தியா முன்னோடியாக திகழவேண்டும். பாக்கிட்தான் இனிமேல் சீனாவுடனும் கொரியாவிடமே துடுப்பாடம் ஆடிக்கொள்ளட்டும். இந்திய எல்லைகோடுகளையும் நமது எண்ண கோடுகளையும் மூடி உலகை எச்சரிக்கை செய்வோம்.

Wednesday, December 10, 2008

ஒரு மனநோய்( psycho ) கோமாளி நாட்டின் மனநோய்( psycho ) தளபதியின் கோமாளி தனமான பேச்சு.


இலங்கையை ஆண்டுக்கொண்டு இருக்கும் குடும்பம் இலங்கையின் வம்சாவழியினர் தானே அன்றி அந்த நாட்டில் பிறந்த குடிமக்கள் இல்லை. அவர்கள் அனைவரும் அமெரிக்க குடிமக்கள்.

என்றைக்கு இலங்கையில் காரியம் கையை மீறி செல்கிறதோ அன்றைக்கு அமெரிக்காவிற்கு எங்களை காப்பாத்துங்கோ என்ற உடன் அழைத்துக்கொண்டு போக அமெரிக்க படையே வரும் என்ற தைரியத்தில் இன்னமும் தைரியமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு இருக்கிறது அந்த குடும்பம்.

வேறு ஒரு நாட்டின் குடிமக்கள் இலங்கையில் சென்று ஆட்சி செலுத்தலாம். சட்ட திட்டங்களை வகுக்கலாம், அதிகாரம் செய்யலாம். ஆனால் அங்கேயே ஆண்டு ஆண்டு காலமாக பிறந்து வளர்ந்து வரும் மக்கள் சிங்களம் பேசவில்லை, புத்தணை தொழவில்லை என்ற இரண்டே காரணத்திற்காக மட்டுமே வாழவே தகுதியே இல்லை என்று உரைத்து, ஐநா முதல் ஆப்ரிக்கா அந்த கொடிய காரியங்களை சர்கரையும் நெய்யையும் தடவி விற்று வருகிறது இந்த மனநோயாளி குடும்பம்.

உலகில் எந்த ஒரு நீதி தெரிந்த மனிதனிடமும் சென்று இந்த செயல் சரியா என்றால், எதைகொண்டு அடிப்பார் என்று கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை.

சாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று பாரதிமுதல், சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் இட்டார் பெரியோர், இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி என்று அவ்வையார் முதல் இன்று இருக்கும் அத்தணை புரட்சி கருத்தாளர்களும் சொல்லிவரும் இந்த வேளையில். இப்படி ஒரு பிற்போக்கு தனமான ஒரு இழி கொள்கையை மனநோயாளியை( psycho ) போல் பரப்பி. அந்த மனநோயாளி செயலுக்கு 100 ஆயிரக்கணக்கில் பிணங்களை அடுக்கி அந்த பிணங்களின் இரத்ததை பருகி குளித்து இன்னமும் என்ன என்ன வன்செயல்கள் செய்ய முடியுமோ அத்தணையும் செய்யும் மனநோயாளி( psycho ) பிணம் தின்னும் குடும்பம் இந்த குடும்பம்.

இந்த மன நோயாளி கோமாளி சொல்கிறார், வைகோவும் பழ.நெடுமாறனும் கோமாளிகளாம்.

மக்களாட்சி நாட்டில் அரசியல் செய்யும் வைக்கோவும், முன்னாளில் அரசியலும் இன்னாளில் மக்கள் இயக்கம் நடத்தும் பழ.நெடுமாறனும் கோமாளி என்று சொல்ல என்ன தைரியம் வந்து இருக்கவேண்டும் அந்த மன நோயாளிக்கு ( psycho ).

நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாக பிணங்களின் கணக்குகளை பார்த்து இன்றைக்கு இவ்வளவு தான் நாளிழலுக்கு எல்லாம் சொல்லிவிடு என்றும். அப்படியே கொஞ்சம் ஆபாசமாக எண்ணம் வந்தால் இறந்தவர்களை அம்மணமாக்கி தெருமுனையில் சிறுவர் சிறுமியர்கள் பார்ப்பதற்காக அனுப்பியும் வைக்கும் இந்த மனநோயாளி ( psycho ) சொல்கிறார் கோமாளி தனத்தை பற்றி.

முன்பு ஒரு நாள் அனைதுலக மக்களை கூப்பிட்டு கொண்டு புலிகளின் பகுதிக்கு இராணுவமாக சென்ற இந்த மனநோயளியை( psycho ) நோக்கி பறந்து வந்தது புலி குண்டுகளும் எரிகணைகளும். தரையில் இறங்காமலேயே ஓடி ஒளிந்துகொண்டார் இந்த மனநோயாளி( psycho ).

அன்று முதல் 4 மாத காலத்திற்கு இந்த மனநோயாளி( psycho ) எங்கே இருக்கிறார் என்ற தகவல் அவருக்கே கூட தெரிந்து இருக்குமா என்று கூட தெரியவில்லை. ஏன் அப்படி ஓடி ஒளிந்து கொண்டார் இந்த வீரர்.

நாடே இவரது கட்டுப்பாட்டில் என்றும், நாட்டின் பாதுகாப்பு இவரது கையில் என்று அனைத்துலக நாடுகளுக்கு சொல்லி வந்த இவர் அத்துணை மாதகாலம் தலைமறைவாக இருந்தது ஏன் என்று சொல்வாரா இந்த கோமாளி.

தனக்கே பாதுகாப்பு இல்லை என்று ஓடி ஒளிந்து கொண்ட மனிதனால் எப்படி நாட்டையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். அப்படி சொன்னால் அது கோமாளி தனமான பேச்சாகத்தான் இருக்கும். இந்த கோமாளி சொல்கிறார் வைகோவையும் நெடுமாறனையும் பார்த்து.

ஒரு வேளை பைத்தியம் அடுத்தவர்களை பார்த்து சொல்லுமே, நீ பைத்தியம், உங்க அம்மா பைத்தியம் என்று அடுக்கிக்கொண்டே போகுமே அது போல இருக்குமோ. இருந்தாலும் இருக்கும் யார் கண்டது இந்த பைத்தியங்களை...........

முதலில் பிணங்களை அடுக்கி அவைகளின் மேல் நடத்தும் வாழ்க்கையையும், பிற்போக்கு தனமான எண்ணங்களையும் மனதில் இருந்து கழுவி புதுமனிதனாக மாறு. இல்லை என்றால் பேசாமல் பிணம் தின்னும் வேலையை மட்டும் பார். அதைவிடுத்து மனிதனாக மனிதனால் ஆளப்படும் நாட்டைபார்த்து பொறாமை எல்லாம் கொண்டு இப்படி கோமாளி தனமாக பேசிக்கொண்டு அலையவேண்டாம் மன நோயாளியே( psycho ).

Thursday, December 4, 2008

மும்பை தாக்குதலின் அரசியல் நோக்கம் என்னவாக இருக்கும்.....

தாக்குதலின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று ஆராய்வதற்கு முன் இரண்டு நிகழ்வுகளை இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒன்று சமீபத்தில் நிலவருகில் செலுத்திய விண்கலம், இரண்டாவது கடல் கொள்ளையர்களை தாக்கியழித்தது.

முதலாவது நிகழ்வு நாட்டின் அறிவியல் வளர்ச்சியை உலகுக்கு உணர்த்திய ஒன்று. இன்னமும் கிரயோ வடிவமைப்பை முழுமை பெறாத நிலையில் கையில் இருக்கும் வெணையை வைத்தே சமாளி என்று சொல்லி செயல்பட்டவிதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தாமல் இல்லை. இது இரு உலக இந்திய சாதணையே......

இரண்டாவது என்ன தான் அடுத நாடு இந்தியாவை தீண்டினாலும் அவர்கள் எதுவும் செய்யவோ செயல்படவோ மாட்டார்கள். உலகில் இரண்டாம் பெரிய இராணுவம் இருந்தும் என்ன அது தூங்கும் இராணுவம் என்று பகுடி பேசும் உலகுக்கு நடுவில் சென்று கொள்ளையர்களை தாக்கு அழித்து வந்த படை நடைவடிக்கை உலகுக்கு சொல்வது என்ன.

மேற்கு புற கடலில் நமது ஆதிக்கத்தை அது காட்டுகிறது. இராணுவ நடவடிக்கைகளில் நமது நாடு மிகவும் அனுபவம் படைத்த படையது. நான்கு முறை நேரடி களம் கண்ட படைகள் நமது படை. அந்த அனுபவத்தின் தொடராக, பல பன்னாட்டு கப்பல்களை கடத்தி வைத்துக்கொண்டு பணம் பறிக்கும் கொள்ளையர்களை தாக்கி அழித்தது உலகில் மேற்கு கடலில் நாம் கொண்டுள்ள கடலாதிக்கத்தை காட்டுகிறது.

இந்த இரண்டும் யாருடைய கண்ணில் மிகவும் உருத்தலாக இருந்திருக்க வேண்டும், பாக்கிட்த்தானை விட்டுத்தள்ளுங்கள் அவர்கள் பேட்டை கொள்ளையர்களுக்கு சமம், தெரு நாய்க்கு என்றும் கூட சொல்லலாம். ஒரு எலும்பு துண்டை எடுத்து வீசினால் காலை நாவால் நக்கும் நாய்க்கு சமமான செயல்புரியும் நாடு அது. இந்த கேவல பிழைப்பு பிழைத்து மதத்தை காப்பதை விட வேறு ஒரு தொழில் கூட செய்து பிழைத்தால் மனிதன் என்ற ஒரு தகுதியாவது இருந்திருக்கும்.

வேறு யாருக்கு எல்லாம் இது உருத்தலாக இருந்து இருக்கும். சீனாவிற்கு என்று சொல்லலாம், நாம் விண்கலம் செலுத்துவோம் என்றதும் உடனே ஒரு மனிதனை விண்வெளி பாதைக்கு அனுப்பி சிகப்பு கொடியை அவசர அவசரமாக காட்டிய முனைப்பிலேயே அவர்கள் நம்மீது இந்த செயலில் எவ்வளவு காழ்ப்பில் உள்ளார்கள் என்று தெரியும்.

என்ன தான் படைபலம் என்று அவர்கள் வாய்கிழிய கத்தினாலும் அறிவியல் முன்னேற்றத்தில் நமது நாட்டுக்கு அருகில் கூட அவர்கள் கிடையாது. இரசியாவின் துணையுடன் கொண்ட சொற்ப முன்னேற்றங்களாக கொண்டு அவர்கள் போட்ட ஆட்டத்துக்கு எல்லாம் இந்த சந்திர விண்கலம் வயிற்றில் புளியை கரைத்துதான் இருக்கும்.

இவர்களை விட பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் தள்ளாடிகொண்டு நிற்கும் அமெரிக்காவை வெறுப்படைய வைத்திருக்கும் இந்த இரண்டு செயல்களும். அமெரிக்க டாலர் வீழ்ந்ததும் இந்தியா விழுந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு தோற்று போனாலும். மத்திய கிழக்கு பகுதியில் தனது படைகளை நிலை நிறுத்தியுள்ள நிலையில். இந்தியா இப்படி ஒரு படை நடவடிக்கையை மேற்கொண்டு பெயரை தட்டிக்கொண்டு செல்வது கட்டாயம் அவர்களுக்கு பிடிக்காது தான். அதுவும் அவர்களது மொழியில் நாம் எல்லாம் மூன்றாம் தர நாடு ஆயிற்றே.......

ஆக இந்த தாக்குதலில் யாருக்கு அதிக இலாபம் என்று பார்த்தால் சீனாவிற்கும் அமெரிக்காவுக்கும் தான். பாக்கிட்தானுக்கு இல்லை.

யார் பொருட் செலவில் இந்த தாக்குதல் நடந்து இருக்கும் என்றால், அமெரிக்க உளவு நிறுவனத்தை சொல்லலாம். அவர்களது கணிப்பு இப்படி இருக்கும், இந்த தாக்குதலின் அடிப்படையில் பாக்கிட்தானும் இந்தியாவும் மோதும். அந்த மோதலின் விளைவால் இரண்டு நாடுகளும் அழியும். இனிமேல் அங்கே இருக்கும் ஒரே எதிரி சீனா மட்டும் தான். அவர்களுக்கும் ஒரு மூன்று ஆண்டுகள் ஒரு நெருக்கடியை கொடுத்தால் சரியாக போகிறது என்று கருதி இருக்கலாம்.

அல்லது சீனாவோ, இப்போது ஒரு போர் மூள வைத்துவிட்டால். முடிவில் இரண்டு நாடுகளும் அணு ஆயுத போராக மாற்ற வைத்துவிடலாம். பிறகு, இந்தியாவின் பெரும் பகுதியும், பாக்கிட்தானிம் முழு பகுதியும் அழியும். இன்னமும் ஒரு 500 ஆண்டுகளுக்கு தனக்கு அருகில் யாரும் எதிரி இல்லை என்றும் திட்டம் தீட்டி இருக்கலாம்.

அல்லது இவ்வளவு ஏழ்மைகளையும் தனது கந்த துணிக்குள் மறைத்துக்கொண்டு நாடு மேற்கு உலக நாடுகளின் அறிவுத்தேவைகளை பூர்த்தி செய்து அதிக பணம் செய்கிறார்களே. நாமோ ஒருக்கும் அனைத்து மக்களையும் வயது வரம்பு இல்லாமல் வேலை வாங்கினாலும் இவர்கள் வாங்கு பொருட்களின் அளவே வருகிறதே என்ற வயிற்றெரிச்சல்.

அமெரிக்கர்களுக்கும் மேற்குலக மக்களுக்கும் இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றால். உடனே வேலைகளில் உள்ள அனைத்து மேற்குலக மக்கள் எல்லாம் ஊரை காலி செய்து சொந்த ஊருக்கு திரும்பி போனகையுடன். அங்கே எல்லாம் சென்று இனிமேல் வேலை எல்லாம் பார்க்க முடியாது என்று சொல்லவைத்தல். அதன் மூலம் தற்பொழுது இருந்து வரும் பணி பரவலாக்கம் இந்தியாவில் இருந்து ஓழித்தல் இவர்களது நோக்கம்.

ஒபாமாவானாலும் சரி, புசு ஆனாலும் சரி, கான்டலிசா ஆனாலும் சரி நீங்கள் போருக்கு போனால் நாங்கள் ஆதரவளிப்போம் என்று மூச்சுக்கு முன்ணூரு தடவை சொல்வதை பார்த்தால். இவர்கள் சண்டைக்கு போகமாட்டார்கள் போல, அட அடிடா அவனை என்று கூட்டத்தில் இருந்து தள்ளுவதை போல இருக்கிறது இவர்களது செயல்.

இதில் எது உண்மை என்று அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தெரியவரும்.

முதலில் தனக்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றது பாக்கிட்த்தானம். பிறகு அவர்களிடத்து உள்ள அத்தணை இரணுவத்தையும் எல்லையில் கொண்டு வந்து நிறுத்திக்கொண்டு. போருக்கு நாங்கள் தயார் என்று சொல்கிறது. நீங்கள் தான் சம்பந்த படவே இல்லையே பிறகு எதற்கு நடுங்குகிறீர்கள்.

அப்படியே உங்களை நாங்கள் அடிக்க வேண்டும் என்றால், இனிமேல் ஆப்கானித்தானில் இருங்கும் அமெரிக்க படையை கொண்டு தான் அடிப்போம். அடித்துவிட்டு அடிக்காதிங்கோ அமெரிக்க அண்ணா அடிக்காதிங்கே என்று பதிவு முதல், நாழிதள் வரை எழுதி தீர்ப்போம். நீங்களும் திருடனுக்கு தேள் கொட்டியது போல் மனதுக்குள் அழுவீர்கள்.........

ஆப்பசைத்த குரங்காக நீங்கள் படப்போகும் பாட்டை நாங்கள் பார்த்து நகைக்கும் நாட்கள் தூரத்தில் இல்லை கோமாளிகளே.......

ஆதாரம் வேண்டுமாம் ஆதாரம், பெரியண்ணன் அடிப்பான் அவன் கிட்ட கேளு கொடுப்பான் கிலோ கணக்கிலும் மீட்டர்கணக்கிலும்............

அமெரிக்காகிட்ட சொல்லுங்க நாங்க அணுவல்லரசு, யாரையும் தாக்கியழிக்கும் திறன் எங்களுக்கு இருக்கு. எங்கள் மீது கைவைத்தல் நடப்பது வேறு என்று அங்கே சொல்லுங்கள் எங்களிடம் இல்லை. நாங்கள் இனி உங்களை ஒன்றும் செய்வது இல்லை, வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று கடைசியாக செய்யலாம். மாட்டினானே உங்கள் நாட்டின் மடையன் அவனை உலக தொலைகாட்சியின் முன் நிறுத்தி பாக்கிட்தான் அமெரிக்க மக்களாக பார்த்து பார்த்து கொல்ல சொன்னது என்று சொல்ல வைக்கலாம். அதை அமெரிக்க அலை வரிசைகள் மூன்று நாட்களுக்கு ஒளிபரப்பும். பிறகு இருக்கிறது கச்சேரி உங்களுக்கு. ஆதாரம் வேண்டுமாம் ஆதாரம்..........

Thursday, October 30, 2008

பாசாக கட்சி தமிழகத்துக்கு தேவையா.......

கடந்த மூன்று வாரமாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு திரட்டும் வேலையாக பதிவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைதுறையினர் என்று கிட்டதட்ட அனைத்து தரப்பும் இந்த வேலையில் சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.

சில கட்சிகள் தீவிரமாக ஆதரவு தெரிவித்தாலும், சில கட்சிகள் நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கா விட்டாலும் ஒரு கருத்தையாவது சொல்லிக்கொண்டு வந்துள்ளது.

இப்படி ஆதரவு தெரிவிப்பதைவிட இலங்கை தமிழர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேலைகளில் மா நில இதழ்கள் முதல் நாடளவு இதழ்களும் கூட கட்டுரைகளையும், வாசகர்களது கருத்தாக வெளியிட்டும் வந்துள்ளது.

பதிவர்களை கேட்கவே வேண்டாம், யார் முதலில் என்று துவங்கி இன்று வரை இரு சாராரும் போட்டி போட்டுக்கொண்டு எழுதிவருகிறார்கள்.

நாட்டு நடப்புகளில் கருத்து சொல்வது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமை. நீ ஏன் கருத்தே சொல்லவில்லை என்று கேட்டால் அது நாகரீகமாக இருக்காது.

ஆனால் பாருங்கள் இந்த பாசாக இது வரையில் இந்த பிரச்சணையில் வாய்திரக்கவே இல்லை. முதன் முதலாக ஐயா இல கணேசன் சொன்ன ஒரே கருத்து 4 வருடங்களாக அமைதியாக இருந்துவிட்டு தற்பொழுது கருணாநிதி நாடகம் ஆடுகிறார் என்று சொல்லி இருக்கிறார்.

இதை தவிர அந்த செய்தியில் வேறு எதுவுமே சொல்லப்படவில்லை. அவர் சொன்ன கருத்து சரியா இல்லையா என்று பிறகு பார்ப்போம். ஆனால் ஒரு கருத்துக்கூட சொல்லவில்லை என்றால் அந்த கட்சிக்கு தமிழகத்தில் என்ன வேலை என்று தான் கேட்கத்தோன்றுகிறது.

கொல்கத்தாவில் துப்பாக்கி சூடு நடந்து ஒரு 10 நபர் இறந்தார்கள். உடனே பாசாகவின் மாநில உருப்பினர் அம்மா ஒருவர் தனியார் தொலைகாட்சியில் திருமதி பிருந்தா கரத்துடன் விவாததிற்கு வந்தார். விவாதம் முழுதும் பிருந்தா அவர்களை பேசவே விடாமல் கத்து கத்து என்று கத்தினார்.

மொத்த விவாதம் ஒரு மணிக்கும் மேல் நீடித்துக்கொண்டு இருந்தது. இறுதியில் திருமதி பிருந்தா கரத்து குறிப்பிட்டார் குசராத்தில் 3000 கொலைகளை நிகழ்த்திவிட்டு இங்கே 10 மக்கள் துப்பாக்கி சூடி இறந்ததற்கு இப்படி ஓங்கி ஓங்கி பேசுகிறீர்களே அந்த 3000யை பற்றி ஏன் எதுவுமே கருத்து சொல்ல மறுகிறீர்கள் என்று பலமுறை கேட்டார்.

அதற்கு அந்த பாசாக பெண்மணி கிளிப்பிள்ளை போல் திரும்ப திரும்ப கொல்கத்தா கொல்கத்தா என்று மட்டுமே புலம்பியதை மக்கள் மறந்து இருக்க வாய்ப்பில்லை.

இதை இங்கே குறிப்பிடுவதின் நோக்கம், இந்த கட்சியினர் கொல்கத்தாவிலும், குசராத்திலும், அசாமிலும் வாழும் மக்களுக்கு எப்படி செவ்வனே ஆதரவு கொடுக்கிறார்கள் என்று காட்டத்தான்.

கர்னாடகத்தில் பாசாகவின் ஆட்சி அமைந்தவுடன் அவர்கள் தெரிவித்த முதல் கருத்து தமிழகத்துக்கு இனி எந்த ஆற்றிலும் நீர் போகாது என்றது தான். அந்த கருத்தை எதிர்தோ, அல்லது, எங்களது மாநிலமான தமிழகத்து நீர் உரிமையை கட்சியின் பெயரால் எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது என்றாவது சொன்னார்களா பெயருகாவது என்றாலும் இல்லை.

இப்படி தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றது போல் நடந்துகொள்ளும் இந்த கட்சி தமிழகத்தில் இருக்கத்தான் வேண்டுமா. அவர்களுக்கு தமிழகத்தில் என்ன வேலை என்று எனக்கு புரியவில்லை. உங்களுக்காவது புரிகின்றதா.........

கடைசியாக இல கணேசன் அவர்களுக்கு, அது சரி 4 ஆண்டு காலமாக கருணாநிதி சும்மா இருந்துவிட்டு கபட நாடகம் ஆடுகிறார். பாக்கிட்த்தானின் எல்லையில் ஒன்றறை இலட்சம் துருப்புகளை கொண்டு போய் நிறுத்திவைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள் கணேசன். அப்போது அவர்களது இராணுவம் உள்ளே வந்ததா அல்லது நாம் தான் குறைந்தது பாக்கிட்த்தான் ஆக்கிரமிப்பு காசுமீரிலாவது சென்று அவர்களை விரட்டினோமா. அங்கே அத்தணை காலம் துருப்பை நிறுத்த எத்தணை செலவானது என்று சொன்னால் அனைவரும் மயக்கம் போட்டு கீழே விழுவார்கள். இந்த நாடகம் என்ன வகை திரு இல கணேசன் சொல்வீர்களா......

இல்லை நீங்கள் 6 ஆண்டுகள் ஆட்சி நடத்தும் போது இலங்கையில் என்ன பாலாறும் தேனாறுமா ஓடியது..................

Tuesday, October 28, 2008

போலி தமிழர்களுக்கும், போலி இந்தியர்களுக்கும்

இலங்கை தமிழர்களுக்கு உதவவேண்டும் என்ற வேண்டுகளை வைத்தால், அந்த நெருப்பில் எவ்வளவு குளிர்காய முடியுமோ அவ்வளவு குளிர்காயும் போலி தமிழர்களே மற்றும் போலி இந்தியர்களே.....

கருணாநிதி நாடகம் ஆடுகிறார், வைகோ கண்ணப்பன் பிரிவிணை பேசுகிறார், சீமான் அமீர் ஆயுதம் ஏந்த சொல்கிறார்கள், தமிழர்களுக்கு எல்லாம் தமிழ் வெறி தலைக்கு ஏறிவிட்டது (மாலினி பார்த்தசாரதி), முதல்வர் சட்டத்தை காற்றிலே பறக்கவிட்டு விட்டார், தமிழகம் தனி நாடாக போகும், இந்தியாவிற்கு ஒரு காசுமீரம் போதும், தமிழக அரசியல்வாதிகள் இனவெறியூட்டுகிறார்கள், இளைஞர்களை இந்தியாவிற்கு எதிராக திருப்புகிறார்கள், முன்னாள் பிரதமரை கொன்றவர்களை ஏன் தமிழகம் ஆதரிக்கவேண்டும் (அப்பாவி மக்களுக்கு அல்லவா ஆதரவு கேட்டோம்).

இலங்கையில் அவர்கள் இறந்தாலோ கொடுமை பட்டாளோ எங்களுக்கு என்ன ஆனால் குசராத்தில் 60 முதியர்களை கொன்றதுக்காக எதிரணியில் இருக்கும் கருவை மட்டும் அல்ல இனிமேல் உருவாகப்போகும் அணைத்து எதிர்கால கருக்களையும் கணக்கில் கொண்டு சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கக்கூடாது ( இதை சொல்பவர்கள் தமிழகத்து தமிழர்கள்).

இராசீவ்காந்தியின் உயிர் இந்திராகாந்தியின் உயிரைவிட, அன்னல் காந்தியின் உயிரை விட பல ஆயிரம் மடங்கு புணிதமும், மான்பும் பொருந்தியது. ஆகையால், அன்னல் காந்தியை கொன்றவர்கள் நாட்டை ஆளும் கட்சியாக வரலாம். கேட்டால் கோட்சே எவனோ ஒருவன் அந்த ஒருவன் செய்த தவறுக்காக மொத்த இயக்கத்தையும் என்ன சாகவா சொல்லமுடியும். அன்னை இந்திராவை துடிக்க துடிக்க உடலில் 32 குண்டுகள் துளைத்த பின்னும், கையில் இருக்கும் 2 துப்பாகிகளின் குண்டுகள் அத்தணையும் தீரும் வரை சுட்டு. இறந்ததை உறுதி படுத்திக்கொண்டவர்களின் பிறந்த நாளை இன்றும் பஞ்சாப்பில் புணித விழா நாட்களாகவே கொண்டாடுகிறார்கள். அந்த இனத்து மன்மோகன் சிங் இன்றைக்கு அதே கட்சியின் பிரதமர். கேட்டால், மன்னிப்போம் மறப்போம்.

தமிழர்களுக்கு எதிராக இத்தணை தமிழர்களா, இந்தியர்களுக்கு எதிராக இத்தணை இந்தியர்களா.

ஆமாம் நீங்கள் சொல்லும் தமிழர்கள், இந்தியர்கள் விளக்கம் தான் என்ன சொல்லுங்கள் போலி தமிழர்களே, போலி இந்தியர்களே..............

Monday, October 27, 2008

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டியது தமிழகம் மட்டும் அல்ல முழு இந்தியாவும் தான்.

இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு என்று சொன்னாலே என்னவோ ஒரு நாட்டு துரோகியை பார்ப்பது போல் ஒரு கூட்டம் பார்க்கவும், எழுதவும், பேசவும் செய்துக்கொண்டு இருக்கிறது. அதோடு மட்டும் நில்லாது, ஆதரவு தெரிவிப்போரை கைது செய்யவேண்டும், தூக்கிலிடவேண்டும், இன்னமும் என்ன என்ன கொடுமைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்து கொடுமைகளையும் அந்த ஆதரவு தருவோருக்கு கொடுத்து கொடுமை படுத்தவேண்டும் என்று துடித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த பசப்பு வார்த்தைகளை தேசியம், இந்தியாவின் ஒற்றுமை, இந்தியாவின் இறையாண்மை, என்று எத்தணை நாட்டுபற்று வார்த்தைகள் உள்ளனவோ அத்துனை வார்த்தைகளையும் அதன் மேல் தேனாகவும், அமிழ்தாகவும் ஊற்றி அந்த வார்த்தைகளின் பெயரில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரக்கூடாது என்று மறைமுக கட்டளையும் மிரட்டலையும் அந்த கூட்டம் வீசுகிறது.

இதிலே கொடுமை என்ன என்றால், ஆதரவு தெரிவிக்க்லாம் ஆனால், ஆதரவு தெரிவிக்ககூடாது என்று சொல்வது தான் அந்த கொடுமை. குழப்பமாக இருக்கிறதா, எனக்கும் அப்படி தான்.

இலங்கை தமிழர்களுக்காக நாம் நமது வருத்தத்தை தெரிவித்தால் போதுமா, மற்ற படி அரசியல் நடவடிக்கைகளோ, பண உதவியோ, மருத்துவ உதவிகளோ செய்வது எல்லாம் கூடவே கூடாதாம். அது தானாம் அந்த ஆதரவு தெரிவிக்கலாம், ஆனால் ஆதரவு தெரிவிக்கூடாது என்ற தாம்.

அது எப்படிங்க ஆதரவு தெரிவிப்பதாக ஆகும் என்றால், அந்த ஆதரவு மட்டுமே கொடுத்தால் அங்கே இருப்பவர்களது துயருக்கு அது ஒரு நீதியை பெற்று தரும் என்று கேட்டால். இப்படி எல்லாம் நீ பேசினால் நீ நாட்டுக்கு துரோகம் இழைத்ததாக பொருளாக கொண்டு உன்னையும் கைது செய்து இப்போது சிறையிலே போட்டவர்களோ கூட இல்லை திகாருக்கு அனுப்பபடுவாய் என்றும் சொல்கிறார்க.

இவர்களது வார்த்தைகளில் நீதி என்ற பொருளில் ஒரு எழுத்து கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் தெரிவிக்கவும்.

அப்பாவி தமிழர்களை கொல்லாமல் இருக்குமாறு இலங்கை தேசிய வாதிகளுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று சொன்னால் அது அவர்களது இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்ததாக அமையும் என்று தைரியத்தின் மொத்த சொந்தகாரி என்று சொல்லிக்கொண்டு அலையும் அந்த அதி விளம்பர பிரியை 'பயத்தில்' நடுங்கு நடுங்கு என்று கை கால்கள் எல்லாம் உதரல் எடுத்தபடி சொல்கிறார்.

சரி அம்மா நீங்கள் சொல்வது சரி என்று எடுத்துக்கொண்டாலும், அந்த தேசியவாதிகளின் இராணுவத்திற்கு நவீன ஆயுத பயிற்சிகளையும், ஆயுதங்களையும் ஒரு பைசா காசுக்கூட வாங்காமல். எப்படி தமிழகத்தின் உழைக்கும் நடுத்தரவர்க்க மக்கள் தாங்கள் வருடம் முழுதும் மழை, புயல், வெள்ளம் என்றும் பாராமல் உழைத்து உழைத்து கட்டிய வரிப்பணத்தில், அவர்களது பணத்தை கொண்டே அவர்களது அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்குவது மட்டும் எப்படி உங்களுக்கு மனித நேயமாக பட்டது.

சாதாரண வார்த்தைகளில் சொல்வது என்றால் எனது வீட்டு பணத்தை என்னிடம் வரி என்கின்ற பொருளில் வாங்கி எனது வீட்டு தம்பிகளையும், தங்கைகளையும், கொன்று குவித்துக்கொண்டு இருப்பவனுக்கு, இந்த இந்த கத்தியில் குத்து இன்னமும் அழகாகவும் அதிக சிரமம் இல்லாமலும் கொல்லலாம் என்று இந்திய அரசு செய்துகொண்டு இருப்பதை கண்டித்தால். அப்படி சொல்வது பிரிவிணை வாதமாகும் அவர்களை உடனே கைது செய்து அணு அணுவாக இலங்கை தமிழர்களை சிங்களம் கொடுமைபடுத்துவது போல் படுத்தவேண்டும் என்று சொல்லும் தைரிய பெண்மணியாக சொல்லிக்கொள்ளும் பெண்ணே, இது மன நோய் பிடித்தவரின் வாதம் போல உமக்கே தெரியவில்லை சொல்லுங்கள்.

கேள்வி இந்த தைரிய லெட்சுமிக்கு மட்டும் இல்லை, இவரை போல் ஒரு பெரும் கூட்டமே மேடை பேச்சாகவே இதை சொல்லிக்கொண்டும். பிரிவினை பேசுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் அந்த கூட்டத்தையே கேட்கிறேன், நீங்கள் சொல்வதி எள்ளவேயானும் நீதியுண்டா??????????????????????????

உண்மையில் இலங்கை தமிழர்களது நலனுக்கு எதிராக பொருளுதவிகளும் சரி, ஆயுத உதவிகளும் செய்யும் வரையில் தமிழர்கள் யாரும் வரியே கட்டக்கூடாது. அப்படி வரி பணம் கட்டமுடியாது என்று சொன்னால் எத்தணை காலத்திற்கு மற்ற மாநிலங்கள் பணம் கொடுத்து பொருளதவி செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

இப்படி மேடைகளில் பேசுவதோடு நில்லாமல், ஆயுதம் தூக்காமலே இந்திய அரசை நமது கோரிக்கைகளை நிரவேற்றிக்கொள்ள முடியும். இன்றையில் இருந்து இனியாரும் வரிக்கட்ட போவது இல்லை என்று முடிவு எடுப்போம், தமிழர்களுக்கு முழு ஆதரவை அளிப்போம்.

இந்த செய்கையையும், அந்த கூட்டம் ஓடி வந்து இதுவும் நாட்டு துரோகம் தான் என்று வாதிட்டு, தமிழர்கள் அனைவரையும் சிறையில் இட்டு உத்திரபிரதேசத்து ஆட்சி தான் இனி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரையில் போகக்கூடும்.

அதற்கு நாம் சொல்வோம், கார்கில் போர் மூண்ட போது தமிழகம் கொடுத்த நண்கொடை அளவிற்கு வேறு எந்த மாநிலமும் கொடுக்கவில்லை, நமது மாநிலம் பணத்தை வசூலிக்க துவங்கிய போது தான் மற்ற மாநிலங்களும் அதை பற்றியே சிந்திக்க துவங்கியது. அது மட்டும் இல்லாது குசராத்தில் பூகம்பம் வந்த போதும் கூட அவர்களுக்கு என்று அவர்களது மக்களுக்கு அடுத்து அதிக தொகை கொடுத்து உதவியதும் தமிழகமே.

அன்றைக்கு இந்தியாவின் மற்ற பகுதியில் பாதிப்புகள் நேர்ந்த பொழுது எல்லாம் தமிழர்கள் யாரும் கேட்காமலேயே ஓடி ஓடி உதிவினோமே எதனால் எங்களுக்குள் உருக்கும் மனித நேயமும் சகோதரத்துவமுமே. இன்றைக்கு எங்களுடைய சொந்த மக்களை அடுத்த நாட்டில் அடித்து கொன்று குவித்துக்கொண்டு ஒரு மத வெறிக்கூட்டம் அலைகிறது. எங்களது சொந்தங்களை காபாத்துங்கள் என்று நாங்கள் கேட்டால், காப்பாற்றுவதை விட்டு விட்டு நீங்களும் அடித்தான் எப்படி என்று கேட்போம்.

இந்தியாவின் மேல் தமிழர்கள் காட்டிய அன்புக்கும் பரிவுக்கும் இந்தியா திருப்பிகாட்டும் கைமாறா இது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரவேண்டியது இந்தியாவின் கடமை அல்லவா தமிழர்கள் இந்தியர்கள் என்றால். அப்படி இந்தியா நடந்துகொள்ளவில்லை என்றால் இந்தியாவே தமிழர்களிடம் பிரிவினையை காட்டியது போல் ஆகாதா.........

சிந்திக்குமா இந்தியா......அதன் அரசியல் நெரியாளர்கள்.

நாங்கள் இரவல் கேட்கவில்லை எங்களது உரிமையை தான் கேட்கிறோம். சும்மா பூச்சி எல்லாம் காட்டாதீர்கள் அந்த கூட்டமே.

Friday, October 24, 2008

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் அப்படி என்ன குழப்பம் மக்களே

முதலில் ஒரு செய்தியை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். என்ன தீர்வை ஆதரிக்கிறோம் என்றதில் வேண்டுமானால் நமக்குள் குழப்பம் இருக்கலாம். எப்படி பட்ட தீர்வாக இருந்தாலும் தீர்வு கிடைத்தாக வேண்டும் என்றதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது என்று நம்புகிறேன்.

அடுத்தாக தற்பொழுது வலையில் உலாவரும் செய்திகள் இது. தமிழீழம் மலர்ந்தால் தமிழகம் பிளவு படும் என்ற சொல்லாடல்களும், அதில் வரும் பின்னூட்டங்களில் வந்தால் என்ன என்றும் வராதே என்றும் வரும் விவாதங்களை படிக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.

இதன் உச்சம் என்ன தெரியுமா, இந்தியாவுக்கு ஒரு காசுமீரம் போதும் இன்னும் ஒன்று வேண்டாம் என்று சொல்லுவது தான் அபத்தததிலும் அபத்தம்.

என்னவோ காசுமீரம் தவிர, மும்பை, அசாம், ஆந்திரம், கர்னாடகம், குசராத்து போன்ற பகுதிகளில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல். எனக்கு இவ்வளவு இருக்கிறது மற்றதை நீ எடுத்துக்கொள் என்று பக்கத்து வீட்டுகாரர்களை தொந்திரவு செய்வதாக இவர்களுக்கு நினைப்பு(தமிழகம் பிரிந்து போகும் என்று சொல்பவர்களுக்கு).

மேலே சொன்ன இடங்களில் விளையும் குழப்பங்களினால் தமிழர்களின் உணர்வுகளில் என்ன வேறுபாடுகளை தேற்றுவிக்க போகிறது என்று கேட்டால் எல்லோருமே சற்று குழப்பமாகத்தான் விடையளிப்பார்கள்.

ஆனால் அதே நேரத்தில் டெல்லியில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும், மும்பையில் இருந்தும் விரட்டப்படும் தமிழர்களை பற்றிய செய்திகள் வரும்போது கட்டாயம் எல்லோரது மனதிலும் ஆதங்கம் வருவது இயற்கையே. அது மட்டும் இல்லாது இப்படி விரட்டி அடிக்கிறார்களே அது போல நம்ம மாநிலத்தில் நாம் செய்தால் இவர்களுக்கு எப்படி இருக்கும் என்றும் கேட்க தூண்டுவதும் இயற்கையே.

இதில் தனது சொந்தம் என்ற ஒரு உணர்வு இருந்தாலும், இது பின்னாளில் தனக்கு நடக்காது என்று எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை அதனால் இதற்கு இப்பவே ஒரு தீர்வுகாண வேண்டும் என்ற முன் எச்சரிக்கையாவும் கூட எடுத்துக்கொள்ளலாம்.

அந்த அடிப்படையில் தான் கர்னாடகம் தண்ணீர் விட மறுக்கும் போதெல்லாம், கேரளம் பெரியார் அணையிலே பிரச்சனைகளை கிளப்பும் போதெல்லாம், பெட்டி பெட்டியாக பணத்தை பெற்றுக்கொண்டு கிருசுணா நதி நீர் கொடுகிறேன் என்று சொல்லி தனது பணக்கார விவசாயிகளுக்கு வாய்க்கால் அமைத்த ஆந்திரம் செய்கையின் போதும் தமிழர்கள் தங்களது ஆதங்கத்தை கருத்துக்களாகவும் கோபங்களாகவும் வெளிப்படுத்தினார்கள்.

இந்த கோபங்களில் எல்லாம் மக்கள் கேட்டது இது தான், அடுத்த மா நிலம் நமக்கு எதுவும் செய்யாது ஆனால் நாம் மட்டும் ஏன் அவர்களுக்கு இங்கு இருந்து மின்சாரமும், மூல பொருட்களையும் அனுப்பவேண்டும் என்று கேட்டார்கள். சரியான கேள்விகள் தான் ஆனால் விடைதான் என்ன என்று குழப்பம் இருக்கும்.

இந்த கேள்விகளுக்கு படித்தவர்கள் முதல் பாட்டாளிவரை அனைவரது பதிலும் ஏன் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வரும். என்ன தான் பற்றாக்குறையாக இருந்தாலும் குடும்பத்துக்குள் விட்டுக்கொடுப்பது அன்றாட நிகழ்வு. பொதுவில் மூத்தவர்களில் யார் விட்டுக்கொடுப்பது என்று போட்டியும் கூட போடுவார்கள்.

ஆனால் பொதுவில் இந்த விட்டுக்கொடுத்தல் எப்போதாவது ஒருமுறை நிகழ்ந்தால் தான் இந்த நிலை. அதுவே தினமும் என்றால், கிடைக்காதவர்கள் என்ன எப்பவுமே கிடையாதா என்று கேட்பது இயல்பு. இன்று தமிழகத்தின் நிலையும் இது தான். அது தான் கேட்கிறார்கள் எப்பவுமே தண்ணீரோ வாய்ப்புகளோ கிடையாதா என்று.

அந்த குடும்பத்தில் அது சரி என்றால் தமிழகத்தில் கேட்பதும் சரியே.

தமிழகம் பிரிந்து போகும் என்று சொல்பவர்களே, இந்த காரணங்களுக்காக தமிழகம் பிரிந்து போகும் என்று ஏன் இதுவரை நீங்கள் கணிக்கவில்லை என்று தெரிந்துகொள்ளலாமா..........

ஒரு குடும்பத்தில் இருக்கும் இளையவர்களை யாராவது வெளியாள் சீண்டினால் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து கொண்டு சீண்டியவனை தாக்குவதை பார்த்தது இல்லையா நீங்கள். அப்படி தாக்கியதால் அந்த குடும்பத்தை அடிதடி குடும்பம் என்று பெயர் சூட்டுவோமா நாம் தான்.

தாயும் மகளும் சேர்ந்து கோவிலுக்கு போகிறார்கள், அங்கே விடலைகள் அந்த பெண்ணை தகாத முறையில் கேலி பேசுகிறார்கள். அங்கே அந்த தாய் தான் ஒரு தாய் அதுவும் ஒரு தமிழ் பெண்மணி ஆகையால் அதிர்ந்து பேசக்கூடாது. என்ன நடக்கிறதோ அது அப்படியே நடக்கட்டும் என்றா இருந்துவிடுவார். தமிழகம் இல்லை உலகில் எந்த இடமாக இருந்தாலும் சரி எல்லா அம்மாக்களின் இயல்பும் இது மாதிரிதான் இருக்கும் இதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இல்லை.

என்றோ ஒரு நாள் நடக்கும் இந்த வித நடவடிக்கைகளுக்கே இப்படி மூர்க்கம் பெரும் சாதாரண பெண்கள். அன்றாடம் தங்களது கண் முன்னாலே தங்களது மகன்களை சுதந்திரம் வேண்டும் என்று கேட்ட ஒரே காரணத்திர்காக அணு அணுவாக துண்பங்களை கொடுத்து, கடைசியில் உயிரை மாய்த்துவிடும் படி கெஞ்சிய பிள்ளைகளை கண் முன்னே பார்த்தவளை பற்றி இங்கே பேசிக்கொண்டு இருகிறோம் நண்பர்களே. கவனத்தில் கொள்க, அவசரப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம். கனிவேடு கேட்டுக்கொள்கிறேன்.

தாய் தனது பிள்ளைகள் அளவுக்கு அதிகமாக குரும்பு செய்யும் போது கொன்றுவிடுவேன் கொன்று என்று கடிந்துகொள்வது இயல்பாக பார்க்ககூடிய ஒன்று. அப்படி சொல்லும் எவளும் கொல்வதும் இல்லை ஏன் அடிப்பதும் கூட இல்லை. அதை போலத்தான் இன்றைக்கு மக்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசியுள்ளார்கள்.

இப்படி கொன்றுவிடுவேன் என்று சொன்ன தாயின் மேல் வழக்கிட்டு வாதாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த விதமான பதிவுகள். அந்த பதிவுகளின் அப்பத்த உச்சம் தமிழகம் நாளை பிரிந்து போகும் என்ற ஆருடம்.

மேலே சொன்ன எந்த சிக்கலிலும் பிரியவேண்டும் என்று எவனுமே எண்ணாத வேளையில், பிரியவேண்டும் என்று எண்ணுவார்கள் என்று பதிவிடும் இந்த நண்பர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்.

விடுதலை அடைந்த இத்தணை ஆண்டுகளில் கடந்த 10 ஆண்டுகளாகத் தான் காமராசருக்கு பிறகு உரிய கவனிப்புடன் தமிழகம் இருக்கிறது என்று சொன்னால் மறுப்பதற்கு இல்லை.

இப்படி கவனிப்புடன் இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை போலும், அதனால் தான் இதையும் அதையும் எழுதி தப்பு தப்பாக கருத்தாங்களை உருவாக்க எண்ணி இப்படி எழுதுகிறார்கள் போலும். வீணர்களே உங்களது முயற்சி வீழ்வது நிச்சயம். வாழ்த்துகள்.....

அடுத்தவர் வாழ்க்கையையும் உணர்வுகளையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், மற்றும் ஒரு முறை இலங்கை தமிழர்களை பற்றிய பதிவிடும் முன் சிந்தித்து எழுதவும். உங்களை இப்படி ஒரு நிலையில் ஒருவர் பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தால் தெளிவாக புரியும்.

Monday, October 20, 2008

ஸ்ரீவித்யா மூன்றாம் ஆண்டு நினைவு நாள்
உனது உலகமாய் என்னை வைத்திருந்தாய்
எனது உலகமாக உன்னை பார்தேன்
இடையில் ஏன் இந்த கண்ணாமூச்சு
உனது வரவை எதிர்பார்த்து
காத்துக்கொண்டு இருக்கிறேன் அம்மா.............

Tuesday, October 7, 2008

தென் இதியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், உயிர் காக்க உதவுங்கள். (இளகிய மனம் படைத்தோர் இந்த பதிவின் தொடுப்புகளை படிக்கவேண்டாம்).

இவரின் பெயர் மனிசு, ஒரு பொருந்தாத காலமாக இவருக்கு இரத்தபுத்து நோய் தாக்கியுள்ளது. எலும்பு மஞ்சையின் தானம் மூலம் உயிர் பிழக்கும் வாய்ப்பு இருந்தும் இதுவரையில் அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு வாய்க்கவில்லை. அனைத்து தென் இந்திய மக்களிடமும் ஒரு வேண்டுகோளை மட்டுமே வைத்துவிட்டு நம்பிக்கையாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு உள்ளார் இந்த இளம் தந்தை. அவரது நிலைமையை எங்களது எழுத்துக்களால் சொல்வதைவிட அவரது வலைதளத்திலேயே படியுங்கள்.

மறுபடியும் எச்சரிக்கின்றோம், அவரது வலைதளத்தை இளகிய மனம் கொண்டவர்கள் படிக்க வேண்டாம்.

www.lifeformanish.org

இவருக்கு உதவும் பொருட்டு சேம்பைனை சேர்ந்த மருத்துவர், மஞ்சை பொருத்த சோதனை முகாம் ஒன்றை நடத்தவுள்ளார். அதை அவரது மருத்துவமனையில் கீழ்கண்ட தேதியில் நடத்துகிறார். உங்களுக்கோ அல்லது உங்களது தென் இந்திய நண்பர்களுக்கோ இதில் ஆர்வம் இருந்தால் மனிசையோ அல்லது மருத்துவர் சரவணன் அவரையோ அனுகுங்கள். மனிசின் தொடர்புகள் அவரது வலைதளத்தில் உள்ளது. மருத்துவர் சரவணனின் தொடர்புகள் இங்கே.

Dr P.Saravanan,

Is conducting a campaign to help this soul to identify a match for him. Here is Dr.P.Saravanan's Campaign information,

Bone Marrow registration drive
Oct. 18 ...........2008
10.00 am thru 12 noon

Location:
Medical office Bldg
2407 S. Neil street
champaign, IL 61820

at the intersection of Neil St. and Windsor Road
Immediately south of "First State Bank"
Plenty of parking available

Remember this is a drive for registration for Bone marrow donation.......which means they take a "swab" from the inside of the cheek i.e. inside of the mouth. from which they can get the necessary information to see if you are a match.

This is important because the chances of finding a perfect match is very,very slim for South East Asians.We can improve the chances if we do bulk registrationMoreover we can help somebody without any permanant damage to our bodyFAQ given belowMore details at: www.lifeformanish.org

Questions

Eligibility and exclusion criteria Basics:
1. Ages 18-60. No major communicable diseases such as HIV/Hepatitis C and Hepatitis B or major cardiac illness, autoimmune disorders, severe diabetes, history of undergoing a transplant, recent back surgery, severe obesity, chronic lung disease. People with TB or people taking Insulin cannot be a donor either.
2. Ethnic heritage is very important since chances of matching with someone of similar HLA type is higher.
3. Tissue sample for registration is an oral swab (no blood needed)
4. Collection usually is similar to a more involved form of Blood donation via an IV line- which appears to be the need in his case. Occasionally depending on patient needs may need to be a bone marrow donation.
5. Recovery period after donation- short.
6. Marrow recovery in donor if it is a bone marrow donation- 2-6 weeks. In peripheral blood stem cell collection quickly after the donation.
7. Obligation: You could refuse later if contacted.
8. Duration of one staying in registry- until age 60 or if you develop major illness and contact the registry.
9. Indications for the procedure for the recipient: Some forms of leukemia or lymphoma who are not eligible to undergo a self transplant or who do not have siblings or have matched siblings then they proceed to a matched unrelated donor. This in such cases is the patients only chance to survive (some may not).
10. Information: If a donor matches you need to be found quickly. Please ensure you give adequate contact information.
11. Satisfaction you get from saving someone's life- infinite and priceless

sincerely,
P.Saravanan, MD
Champaign clinic

For More information about Manish, Please find this at below link.

click below:

http://www.lifeformanish.org/index.php

He will need "Bone marrow transfusion"
they need to search a lot of people, especially from south india to find a suitable match
If we can agree to be screened we can inform them...screening is simple

FAQ .....available in the above website
let me know what u think
from
P.Saravanan, MD

முகம் தெரியாத இந்த மனிதனை காப்பாற்றுங்கள் நல்ல உள்ளங்களே.........

Sunday, September 28, 2008

இராமன் தேடிய சீதை – திரைவிமர்சனம்

படம் துவங்கியது முதல் இறுதிவரை ஒருவித இருக்கம் படம் முழுவதும் இருப்பது திரைக்கதைக்கும் இயக்குனருக்கும் கிடைத்த வெற்றி. இந்த மாதிரியான கதை பின்னனியில் படங்கள் வந்து வெகுகாலம் ஆனகாலத்தால் படம் அனேக மக்களை கவருவதில் வெற்றியை ஈட்டும்.

திருமணத்திற்கு முன்னே உண்மைகள் தெரிந்தாக வேண்டும் என்று நாயகன் சொல்லும் இடங்களிலும் சரி அதற்கு அந்த பெண்கள் சொல்லும் இடங்களிலும் சரி உண்மை வாழ்க்கை கசப்பு என்று வெளிப்படையாக அழக்காக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மனதளவில் பாதிப்புக்குள்ளானவன் என்ற குறை இருந்தாலும், அதற்கு பிறகு வந்து இறங்கும் அத்தனை இடிகளிலும் கலங்கிப்போகாமல் இருக்கிறான் என்று காட்டியதற்கு இயக்குனருக்கு பாராட்டு. எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ என்ற குரல் கேட்டுவிடுமோ என்று கடைசிவரையில் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது.

ஒவ்வொரு முறையும் தன்னை வேண்டாம் என்று சொன்ன நபர்களை வாழ்க்கையில் திரும்ப பார்க்கும் போதெல்லாம் எழும் வெறுப்பை மாற்றி கல்லூரி காதலர்கள் நடந்துகொள்வது போல் ஒரு அறியாத்தனமாக காட்டும் காட்சிகள் அருமை.

அதிலும் அந்த நாகர்கோவில் காட்சிக்கள் அருமையிலும் அருமை. திரைக்கதையின் விளையாட்டும் இயக்குனரின் கை வண்ணமும் அங்கே தெரிகிறது.

படத்தில் குறைகள் என்று எடுத்து சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும்

1) பசுபதியை பார்க்கும் போது பார்த்திபனின் குரலும் நக்கலும் இல்லையே என்று மனம் நம்மையும் அறியாம்ல் தேடுகிறது (சபாசு படத்தின் பாதிப்பு போலும்)

2) படம் முழுக்க பாக்கியராசின் காட்சிகளாகவே வருகிறதே அவரது குரலோ நகைச்சுவையோ இல்லையே என்று தோன்றுகிறது.

3) இத்தணை நாளாய் போன வித்தியாசாகரின் இசையை கேட்க்க முடிந்தாலும் பாடல்களில் அந்த அழுத்தங்கள் குறையாகவே இருக்கிறது. உங்களிடம் இருந்து இன்னமும் எவ்வளவோ எதிர்பார்க்கிறோம் வித்தியாசாகர் குறிப்பாக அதிகமாக பாடல்களை.....

4) நெடுமாறனின் சண்டைக்காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். சண்டை போட்டால் தான் வீரன் என்ற இலக்கணத்தை இவரும் விடாமல் பிடித்துக்கொண்டு இருப்பது, இவ்வளவு நல்ல கதையில், பால் திரிந்து போகும் விதமாக பட்ட புளிப்பு போல் ஆனது.

இவைகளை தவிர படம் நன்றாக வந்து இருக்கிறது. பாக்கியராசை போல் இவரும் நிறைய கதைகள் கொண்ட படமாக கொடுப்பார் என்று எதிர்பார்ப்போமாக... வாழ்த்துகள் செகன்நாதன்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் மெக்கைன்னு மற்றும் ஒபாமாவின் முதல் விவாத மேடை

ஒவ்வொரு முறை அதிபர் தேர்தல் வரும் போதெல்லாம் இப்படி ஒரு விவாதத்தை நடத்தி மக்களுக்கு ஒரு எண்ண ஆக்கம் நிகழ்த்துவது சிஎன் என் தொலைகாட்சியின் வழமை. அப்படி ஒரு விவாதத்தை நேற்று நடத்திகொடுத்தது.

விவாதத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் இதோ இங்கே உள்ள தொடுப்பை சொடுக்கவும், அவர்களை இணையத்தில் முழு விவாதத்தையும் பார்க்கலாம். மூன்று பாகங்களாக பிரித்து கொடுத்துள்ளார்கள் பார்க்கவும்.

http://www.cnn.com/video/#/video/politics/2008/09/26/sot.debate.obama.mccain.military.strategy.cnn?iref=mpvideosview

விவாதத்தின் முக்கிய பொருட்களும் இருவரது பேச்சும்

முதலில் விவாதம் முடியும் வரை ஒபாமாவையை ஒரு முறைகூட பார்க்காமல் தவிர்த்தது ஏன் என்று மெக்கைன்னு விளக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். ஒபாமாவை பார்ப்பதற்கு அவருக்கு இவ்வளவு பயமாக இருந்திருக்கலாம் அல்லது இவனை எல்லாம் என்ன பார்த்து பதில் சொல்வது என்ற திமிராகக்கூட இருக்கலாம்.

உலகமே எதிர்பார்த்து இருக்கும் ஒரு பொது மேடையிலே இப்படி ஒரு சின்னத்தனமாக நடந்துகொள்ளும் விதம் மெக்கைன்னின் தடுமாற்றத்தின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது. இப்படி எல்லாம் நடந்துக்கொண்டால் தான் நல்லது என்று எடுத்து சொல்ல அவ்வளவு மக்கள் இருந்தும் ஏன் இந்த இருமாப்பு என்று தெரியவில்லை.

சரி இந்த கர்வம் அவரது விவாதத்தில் தெரிந்ததா என்றால், தமிழ்மணத்தில் மக்கள் பொழுது போக்குகாக போடும் மொக்கை பதிவுகளை விடக் கேவலமாக இருந்தது அவரது பேச்சு.

முதல் கேள்வியாக சரிந்து உரு தெரியாமல் சென்று கொண்டு இருக்கும் பொருளாதாரத்தை எப்படி சரி செய்ய போகிறீர்கள் என்று கேட்டால், அதற்கு மெக்கைன்னு சொல்கிறார் இப்படி.

வேலை தரும் நிறுவனங்களுக்கு 35% இருக்கும் வரிவிதிப்பை 11%மாக குறைப்போம். அப்படி செய்வதால் அவர்கள் இன்னமும் அதிக வியாபாரத்தில் முதலீடு செய்வார்கள். அதன் மூலம் பெருகும் வேலை வாய்ப்பால் இந்த பொருளாதாரமே அப்படியே வானுக்கே போகப்போகிறது பாருங்கள் என்று ஒரு போடு போட்டார் பாருங்கள்......

அமெரிக்காவில் நடக்கும் வேலைகளை எல்லாம் உலகம் முழுதும் உள்ள நாடுகளிடம் கொடுத்து செய்ய சொல்லவேண்டுய அவசியம் என்ன வந்தது. குறைந்த முதலீட்டில் இமாலய இலாபம் என்று வருவதால் மட்டுமே. இது பொருளாதாரமோ வியாபாரமோ இன்னமும் என்ன என்ன படிப்புகள் எல்லாம் இருக்கிறதோ அதன் அரிச்சுவடி கூட தெரியாதவனுக்கே தெரியுமே. அவர்களது இலாபத்தில் 35% சதவிகிதம் விதித்துள்ள வரியை இவர் 11%மாக் குறைப்பாராம்.

இதனால் என்ன நன்மை சம்பளம் வாங்கும் மக்களுக்கு நிகழப்போகிறது என்று கேட்டால் ஒன்றும் இல்லை. அந்த 35% விகித வரியிலும், எப்படி எல்லாம் கள்ள கணக்குளை காட்டவேண்டும் என்று அம்பானிகளுகே கத்து தரும் அமெரிக்காவுக்கு இனிமேல் வரியே இல்லை என்று சொல்கிறார் இந்த மனிதன் மெக்கைன்னு.

எந்த ஒரு நாடாக இருந்தாலும், அந்த நாட்டின் அரசாங்கம் நாட்டில் வரும் வரிப்பணத்தில் தான் தனது வளர்ச்சி திட்டங்களையும் வேலைகளையும் செய்யும். அதன் கொள்கைகளையும், செயல்களையும் நடத்திக்கொடுக்கும் நிறுவணங்களுக்கு இவர்களது வேலைகளை செய்து தரும் பணியை ஒப்படைப்பது தான் இத்தணைகாலமாக நடந்துவரும் வழமை. அதை விடுத்து அரசாங்கத்தை போண்டியாக ஒரு திட்டத்தை கையில் வைத்துக்கொண்டு இருகிறேன் என்று உளருவார் என்று எதிர்பார்க்கவில்லை.

ஒபாமா என்ன சொன்னார், நாட்டில் இருக்கும் வேலைகளை திரும்பவும் நாட்டுக்கே கொண்டு வருவது தான் எங்களது முதல் வேலை. நாட்டில் வேலை வாய்ப்புகளை பெருக்கி அடிமட்டத்தில் இருக்கும் மனிதனும் 8 ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு இருந்த வாங்கும் திறனுக்கு அழைத்து செல்வது தான் சரியான பாதையாக இருக்க முடியும். அதை விடுத்து பணம் குவிந்தவர்களிடம் இன்னமும் பணத்தை குவிக்கும் வேலை எல்லாம் வாதத்திற்கு கூட சரி இல்லை என்று அல்லவா சொன்னார்......

இரண்டாவதாக ஈராக்கின் பிரச்சணையை பற்றி உங்களது கருத்து என்ன என்று கேட்டதற்கு மெக்கைன்னு இப்படி பதிலுரைகிறார்.

நாங்கள் ஈராக்கில் வெற்றி பெற்று கொண்டு இருக்கிறேம் இன்னமும் வெற்றி பெற்றுகொண்டே இருப்போம், வெற்றி பெற்றுக்கொண்டு தான் இருப்போம் என்றார்.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற தத்துவம் போலும், இத்தணை முறை சொல்கிறார் போலும். அதுவும் அங்கே போராடும் தளபதியின் பணி மகத்தான பணி என்றும் அவரது வீர தீரங்களையும் வீரர்களது வீரத்தையும் புகழ்ந்து தள்ளினார் பார்க்கணும்.......

இங்கே மெக்கைன்னுக்கு ஒரு கேள்வி, பின்ன என்ன ஐயா சொத்தையான ஒரு தளபதியையா கொண்டு இருக்கும் உங்கள் இராணுவம், அல்லது அல்பைகளாக கொண்ட ஒரு அணியையா அயல் நாட்டு சண்டைக்கு ஒரு நாடு அனுப்பும். எந்த நாடாக இருந்தாலும் தனது மிகச் சிறந்த ஒரு தளபதியையும் அவரது கருத்துக்களை அப்படியே அச்சு பிசக்காமல் செயலாக்கும் ஒரு மிக சிறந்த ஒரு அணியும் தான் நாடு அனுப்புமே தவிற பாக்கிட்த்தான் நடத்தும் கபட நாடகம்போல பேருக்கு ஒரு குழுவை அனுப்பிவிட்டு ஒரே இரவில் ஆப்கானித்தானில் இருந்த ஒன்னரை இலட்சம் பேரும் காணாமல் போனார்கள் என்று கள்ள கணக்கை காட்டும் அணியையா அனுப்பும் அமெரிக்கா......

ஏன் இந்த புகழ்ச்சி, தனது முதுகை தானே சொறிந்துகொள்ளும் வேலை, கேள்வி என்ன ஈராக்க் நடவடிக்கை பற்றிய கருத்து. அதுக்கு எங்களது இராணுவம் அது இது என்றால் அப்போ ஒபாமா என்ன இந்தியாவின் அதிபர் தேர்தலுக்க நிற்கிறார் மெக்கன்னு, அவரும் அதே பெருமை மிகு முப்படைக்கு தலைவனாகத்தான் போடியிடுகிறார் நினைவில் கொள்ளவும்.

ஒபாமா இப்படி பதிலுரைகிறார், 9/11 தாக்குதலக்கு திட்டமிட்டவன் ஒசாமா பின் லேடன், அவன் பதுங்கி இருப்பது ஆப்கானிதானிலோ அல்லது அதன் அண்டை நாடானா பாக்கிட்தானிலோ அவனை இன்னமும் பிடித்து தண்டித்த பாடாக தெரியவில்லை. அல்லது எப்போது பிடிப்போம் என்றோ தெரியவில்லை. அந்த முக்கியமான வேலையை விட்டு விட்டு ஈராக்கில் சென்று அமெரிக்க இராணுவத்தை பலிகொடுத்துக்கொண்டு இருப்பது யாருக்காக என்று கேட்டிகிறார். 4000 வீரர்கள் இது வரையில் மடிந்திருக்கிறார்கள் 30,000 வீரர்கள் இது வரையில் ஊனமாகி வந்திருக்கிறார்கள். இவ்வளவு விலையை கொடுத்தும் ஈராக்கில் அமெரிக்க இரணுவ கட்டுப்பாட்டில் நாடு வந்துவிட்டதா என்றால் இல்லை.

பிறகு வெற்றி கொண்டோம் என்றால் எதை வெற்றி என்று சொல்கிறார் மெக்கைன்னு என்றால் இப்படி விவாதத்தை திசை மாற்றும் செயலாக கைக்காப்பை காட்டி ஒரு அன்னை இப்படி சொன்னார் என்று குரல் நடுங்க ஒரு உருக்கமான கதை வேறு. இப்படி ஒரு சப்பைக்கட்டு கட்டத்தான் பலியாடாக உங்களை உங்களது கட்சி அங்கே அனுப்பியதா மெக்கைன்னு வெட்க்கம்.

இது வரையில் மில்லியன் கணக்கை எல்லாம் தாண்டி இட்டிர்லியன் கணக்கில் அங்கே பணத்தை கொட்டியது யாருக்கா, எதற்காக, அங்கே அணு ஆயுத தயாரிப்பு நடக்கிறது என்று சென்ற இராணுவத்தால் ஒரு ஆதாரத்தை கூட ஈட்டமுடியாத நிலையில், அங்கே மக்களாட்சியை ஈட்டுத்தருவோம் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு பணத்தை கொட்டவேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார் ஒபாமா. இந்த பொருளற்ற நடவடிக்கையை விட்டு விட்டு ஒசாமாவை பிடித்து தருவதாக சும்ம ஒரு பொய்யை சொல்லிவிட்டு தனது இராணுவத்தை காட்டிக்கொடுத்த முசாரப்பை இன்னமும் நம்பிக்கொண்டு 10 பில்லியன் இடாலர் வரை கொட்டிக்கொடுத்ததை எல்லம் நிறுத்துவது மட்டும், இல்லாது.

அமெரிக்க படையே நேரடி தேடுதலில் இறங்க வேண்டும் என்று அல்லவா பதிலுரைத்தார். இந்த 6 ஆண்டுகளில் நல்ல பொருட்க்களை தேடி வைத்துக்கொண்டு இன்றைக்கு அங்கே ஆப்கானில் இருக்கும் அமெரிக்கை படையை நோக்கி அல்குவைதா இராணுவ தாக்குதலை தொடுக்கிறது. அதை எதிர்கொள்ள அமெரிக்க இராணுவம் திணருகிறது. உடன் இருந்து காக்கவேண்டிய பாக்கிட்த்தான் இராணுவமோ எதிரிகளுக்கு அமெரிக்க இராணுவ இரகசியங்களை காட்டிக்கொடுத்து எங்கே எப்போது தாக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து மறைமுகமாகவே நண்பன் என்று சொல்லி முதுகில் குத்தும் பாக்கிட்த்தானின் போக்கிரித்தணத்திற்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும் என்று பொருப்புடனும், தள அறிவுடனும், கடமையாக கருதும் ஒபாமா சொன்ன செய்தியை, என்ன அழகாக திரித்து விடுகிறீர்ரே மெக்கன்னு, நீர் என்ன உண்மையில் ஒரு மக்கைன்னு தானோ......

உலகில் பெருகிவரும் சக்திவள குறைபாட்டை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு மெக்கைன்னு இப்படி சொல்கிறார். 42 அணு உலைகளை தளமமைத்து அதில் வரும் சக்தியை கொண்டு சமாளிக்க போவதாக சொல்கிறார். இன்றைக்கு உலகம் முழுக்க எதிர்கொள்ளும் எரிஎண்ணை தட்டுபாடு தான் அந்த கேள்வியின் முக்கிய பொருள். ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு அணு உலைகளை அமைப்பதால் நிறைய வேலைகளை பெருக்க முடியும் என்று சொல்கிறார். கல்லையும் மண்னையும் சுமக்கின்ற வேலைதான் அமெரிக்கர்களுக்கு சரி என்று முடிவு கட்டிவிட்டீர்கள் போலும் மெக்கைன்னு.

மாற்று எரிசக்த்தி என்ற ஒரு பதம் கூட இல்லை என்றது போல் காட்டிக்கொள்ளும் இந்த மனிதனை தேர்ந்தெடுத்தால் அமெரிக்க மக்கள் எல்லாம் தங்களது வண்டிகளை எல்லாம் இனி குடி இருப்புக்களாக்க மாற்றிக்கொண்டு நாடோடிகளாக அலைய வேண்டியது தான். இந்த கொள்கையை ஒன்றையாவது ஒபாமா கட்சியிடம் கற்றுக்கொள்ள முயற்சியாவது செய்யுங்கள் மெக்கைன்னு.

மெக்கைனின் அரசியல் பேச்சுக்களை கேட்டதும் இல்லை படித்ததும் இல்லை. ஆனால் ஒன்றும் மட்டும் அவரை பற்றி கேள்வி பட்டிருந்தேன். தான் ஒரு முறை தனது படையுடன் எதிரியின் கைகளில் மாட்டிக்கொண்ட போது, மெக்கைன்னை மட்டும் தப்பிக்க வைக்கும் திட்டத்தை முன்வைத்த போது, தனது அணியினர் இல்லாமல் நான் மட்டும் என்றால் அவர்களுடன் இறக்க நானும் தயார் தான் என்று சொன்னவர் என்ற செய்தியை மட்டும் கேள்வி பட்டு இருக்கிறேன்.

ஒபாமாவை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது என்றாலும் நன்றாக பேசவும் அரசியல்கள் செயல்பாடுகளும் அறிந்தவர் என்று கேட்டதுண்டு.

இந்த அடிப்படையில் இந்த விவாதத்தை பார்த்ததில் மெக்கைன்னு ஒரு மெகப்பெரிய ஏமாற்றம். ஒபாமா நன்றாக விவாதித்தார்.

வருகின்ற அக்தோபர் 3ஆம் தேதி துணையதிபர் போட்டியாளர்கள் விவாதம் வருகிறது பார்ப்போம்.

Wednesday, September 24, 2008

100 வருடங்களுக்கு முன்னால் ஒரு கேனைபயல் (அண்ணா) பிறந்தான் என்றதுக்கு எல்லாம் கைதிகளை விடுவிப்பது எந்த வகையிலும் நீதி இல்லை.

இப்படி ஒரு பின்னூட்டம் படித்தேன் இன்று. இந்த அயோக்கிய தனமான பின்னூட்டத்தை பார்த்ததும் கோபமும் எரிச்சலும் வந்தது. அப்போதே அந்த பதிவிலே பின்னூடம் இட்டிருக்க வேண்டும். இருந்தாலும் அவரது வழியில் இன்னமும் எத்தணை கேனப்பயல்களது செயலுக்குகாக நாம் பணத்தையும் மனித வளத்தையும் அள்ளி விரயம் செய்துக்கொண்டு இருக்கிறோம் என்று பட்டியலிடுவோம் என்று தோன்றியதால் விட்டு விட்டு இங்கே கொடுக்கிறேன்.

1) அயோத்தியில் ஒரு கேனபயல் பிறந்தானாம் அதனால் பாபர் மசூதியை இடித்து தரைமட்டம் ஆக்குவார்களாம் இந்த கேனயர்கள்.

2) அதே கேனபயல் இங்கே இலங்கை போக வத்ததாக் ஒரு கேனைபயல் எழுதிவச்சானாம் அதை படிச்சுட்டு இந்த கேன பயல்கள் எல்லாம் தமிழகத்தில் எந்த மேம்பாட்டு திட்டங்கள் எதையும் செய்யக்கூடது என்று சொல்வார்களாம்.

3) அதே கேனப்பயல் அயோத்திக்கு திரும்பி போனனாம் அதனால் இந்த கேனைபயல்கள் எல்லாம் அதை தீபாவளின்னு சொல்லி காசை அள்ளி கொளுத்துவானாம் அதனால இவனுக்கு அதுக்கு விடுமுறையும் விட்டு ஆப்பி திவாலின்னு ஆங்கிலத்துல வாழ்த்து வேற சொல்லனுமாம்.

4) ஒரு பொம்பளை குளிக்கும் போது அதுக்கு காவலா இருக்க தனது உடம்பில் இருக்கும் அழிக்கை திரட்டி உருட்டி ஒரு உருவம் செய்து வைத்ததால் ஒரு கேனைபய பிறந்தான்னு ஒரு கேனைபயல் எழுதினனாம் அதனால இந்த கேனைபயல்கள் எல்லாம் மலையளவுக்கு ஒரு உருவம் செய்து அதை ஊர்வலமா எடுத்துபோவானாம் அதுக்கு நமது வரிப்பணத்தில் பாதுகாப்பும் விளம்பரமும் வேணுமாம்.

5) இந்த அழுக்குருணி பயலை இதுவரைக்கும் வடக்கில் தான் கடல்ல வீசினாங்களாம். இப்போ இந்த கேனைபயல்கள் எல்லாம் சேர்ந்துக்கொண்டு இங்கேயும் அதே மாதிரி கடலில் வீசனும் என்று நீதிமன்றம் உட்பட அனைவரது வேலையையும் கெடுத்து வைப்பானாம்.

6) யாரோ ஒரு கேனையலுக்கு திருமணம் நடந்ததாம் அதனால இந்த கேனை பயல் தினமும் திருக்கல்யாணம் செய்வானாம் அதுக்கு மக்களுடைய வரிப்பணமும் நேரமும் விரயம். அந்த திருமணத்தோரு நிறுத்தினால் பரவாயில்லை. தினமும் முதலிரவு வரை நடத்திக்காட்டுவானாம் இந்த கேனைபயல். அதுக்கு இரவில் 10 மணிக்கும் மேல் பெண்களையும் வயது பெண்களையும் கொண்டு பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு முதலிரவுக்கு அனுப்புவானாம் இந்த கேனைபயல்.

7) கோவிலில் ஆண்பிள்ளைகளின் உருவமும் பெண்பிள்ளைகளின் இருவங்களையும் வைத்துக்கொண்டு தினமும் பாலையும் தேனையும் ஊத்தி குளிப்பாட்டினால் நல்லது ( அது என்ன நல்லதோ ) என்று ஒரு கேனைபயல் எழுதி வச்சானாம் அதனால. ஊரில் இருக்கும் மக்களிடம் எல்லாம் இந்த கேனைபயல் சென்று கதை கதையா சுருள் விட்டு நிறைய பணமா வாங்கி ஒரே பணக்குளியலா இவன் குளிப்பானாம். அதுக்கு மக்களது உழைப்பில் வந்த பணத்தை வாங்கி அலுக்காமல் வாழ்க்கை நடத்துவானாம்.

8) இப்படி இவன் சொல்லும் அத்தணை கேனைதனமான கதை எல்லாம் வடக்கில் நடந்த கதைகள் தான். அந்த வடக்கத்து கேனையர்கள் எல்லாம் எப்படி எங்களுக்கு கடவுளாக முடியும் கேனையா, அவைகளை வடக்கத்தியர்களே கொண்டாடட்டும். நமக்கு ஏன் அவர்கள்.

9) மொழியிலே சிறந்ததுன்னு இந்த கேனையர்கள் சொல்வது வடக்கது மொழியை. கடவுள் கதைகள் அதுவும் வடகத்து கேனைதனமான கதைகள். தலைவர்கள்ன்னு இந்த கேனைபயல் சொல்பவர்கள் எல்லாம் வடக்கத்தியர்கள். அப்படியானல் வடக்கிலே சென்று வாழ வேண்டியது தானே கேனையனே உனக்கு இங்கே தமிழகத்தில் என்ன வேலை.

10) இறுதியாக இந்த கேனைபயல் உட்ட கதையை நம்பின ஒரு பதிவர் பாவம் நாங்கள் எல்லாம் இந்து பந்து சந்து என்று பாவம் மாய்ந்து மாய்ந்து பதிவு எழுதி பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அந்த கேனைபயல்களது கேனைத்தனம் போதும் நண்பரே நீங்களும் அந்த கேனைகளோடு சேரலாமா. நீங்களும் வடக்கத்தியர், நீங்கள் தமிழகத்தோர் இல்லையா......

Monday, September 22, 2008

Traitor --துரோகி -- குருதிபுனல் திரைவிமர்சனம்தற்பொழுது வெளியாகி ஓடிக்குகொண்டிருகும் அங்கிலப்படம் இந்த துரோகி திரைப்படம். இந்த படத்தின் கதையும் திரைகதை அமைப்பும் அப்படியே குருதிபுனலின் வடிவாக இருக்கும். அப்படி ஒரு ஒற்றுமை இந்த படத்திற்கும் குருதிபுனலுக்கும்.
என்ன ஒற்றுமைகள் என்று பார்ப்போம்.
1) குருதிபுனலில் தீவிரவாதிகை பிடிப்பதற்காக ஒரு சிறப்புபடையின் கதையை மூலமாக கொண்ட ஒரு கதை. இந்த ஆங்கிலப்படத்திலும் அதுவே தான் கதை.

2) குருதிபுனலில் கமலிம் பாத்திரமும் சரி, அர்சுனனின் பாத்திரமும் சரி, ஒரு நேர்மை தவறாத பாத்திரமாக அமையும். இங்கேயும் அதே நேர்மை தவறாத ஒரு மனிதனின் கதைதான் படமாகக பட்டு இருக்கிறது.

3) குருதிபுனலில் காவலர்களுக்கிடையே இருக்கும் கருப்பாடுகள் இந்த நாயகர்களை அதிகம் சங்கட்த்துக்கு உள்ளாக்குவார்கள். இந்த கதியிலும் அதுபோல நிறைய கருப்பு ஆடுகளை அதுவும் அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவில் ஊடுருவி இருப்பதாக காட்டப்படும்.

4) குருதிபுனலில், அரசே சில தீவிரவாத செயல்களை தனது சொந்த அலுவலர்களை கொண்டு நிகழ்த்தும். அதும் ஆள் சேதம் இல்லாமல் இருக்கும் வண்ணம் வடிவமைத்து இருக்கும். இந்த கதையிலும் அப்படிதான். தவறி 8 உயிர்கள் போனதில் நாயகன் மிகவும் துடித்து தான் போவான்.

5) குருதிபுனலில் இருப்பது போல் இந்த கதையிலும் இரட்டை நாயகன்கள் இருப்பார்கள். இருவரும் சேர்ந்து தான் எல்லா விசாரணையும் நடத்துவார்கள். என்ன குடும்பம், அது இது என்று தமிழில் வந்தது போல் இல்லை.

இப்படி படத்தில் உள்ள எல்லா செய்திகளையும் ஒப்பிட்டு அலசிவிட முடியும். ஆனால் இந்த ஆங்கில படத்தின் பின்னனி இசையும் திரைக்கதையும் அசாத்தியாக இருக்கும். கடைசிவரையில் என்ன நடக்கும் என்று இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கும் வண்ணம் படம் இருக்கும். அதனால் விமர்சனத்தை இதோடு விட்டு வைகிறேன். நண்பர்கள் படத்தை வார்த்துவிட்டு கருத்து கூறவும்.
தசாவதாரம் CHILL FACTOR படத்தின் தமிழாக்கம் என்று சொன்னதற்கு பழிதீர்க்கும் வண்ணமாக நாம் இந்த படத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் குருதிபுனலோ ARLINGTON ROAD படத்தின் தமிழாக்கமாயிற்றே என்ன செய்ய........

செயலலிதா போக்கில் மாற்றம்; பொதுகுழு காட்டும் உண்மை; தினமலரின் சிறப்பு நிருபர்.-- தினமலரில் இலைகாரர்

http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=504&cls=

தமிழகத்தின் தலைவிதியை பார்த்தீர்களா மக்களே. இந்த அம்மா போக்கில் மாற்றம் வந்ததாம். அதாவது எப்படி என்று அந்த சிறப்பு நிருபர் குறிப்பிடவில்லை. ஆனால் மாற்றம் வந்துள்ளது என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். எப்படி அதோ போகிறானே அவன் மிகவும் மோசமானவன் எனக்கு நன்றாக தெரிந்த ஒருவர் சொன்னார். அவர் சொன்ன சரியாகத்தான் இருக்கும் என்று தனக்கு பிடிக்காதவர்கள் மீது தூற்றுவார்களே அந்த கையால் ஆகாதவர்கள். அவர்களை போல் இந்த சிறப்பு நிருபரும் சொல்கிறார் மாற்றம் வந்துள்ளது என்று.

சரி அப்படி என்ன தான் மாற்றம் வந்துள்ளது என்று செய்தியை படிப்போம் என்று பார்த்தால். இந்த அம்மா செய்தி இதழ்களை எல்லாம் படிப்பதே இல்லையாம், அதை அவரே பெருமையாக பலமுறை சொல்லி இருக்கிறார்களாம். அப்படி பட்டவரின் அன்றைய பேச்சு அன்றாட கட்சியின் நிகழ்ச்சிகளையும் நாட்டு நடப்பையும் செய்தி இதழ்களை மேற்கோல் காட்டி பேசினார் என்று.

அட மூட சிறப்பு நிருபா, அப்படி அந்த அம்மா இது வரையில் படிப்பதோ தெரிந்துகொள்ள விருப்பம் என்று சொல்கிறாயே, நீர் என்ன புகழ்கிறீரா அல்லது இலைக்காரனை போல் வஞ்ச புகழ்ச்சியில் இகழ்கிறீரா. பார்த்து இருங்கள், பின்னாளில் எழுத முடியாத வண்ணம் ஆகிவிடப்போகிறது.

தனது சொந்த விருப்பம் உள்ள செய்திகளாக மட்டுமே இருந்தால் மட்டுமே பார்த்து வந்துள்ளார் இது வரை. எப்படி 2 முறை முதல்வராக இருந்த ஒருவர், தனது சொந்த ஆதயத்துக்காக மட்டுமே செய்திகளையோ, கோப்புகளையோ, அலுவல்களை பார்த்துவந்துள்ளார் என்று எந்த தைரியத்தில் முதல் பத்தியில் எழுதியுள்ளீர் சிறப்பு நிருபரே. உயிர் மேல் ஆசை சிறிதும் இல்லை போலும்.

அதிமுகவில் இருந்து மூத்த உறுப்பினர்கள் எத்தணை மக்கள் திமுகவுக்கு ஓடினார்கள் என்று இப்படியா பட்டியல் இட்டு காட்டிக்கொடுப்பது சிறப்பு நிருபா (இலைகரன்). அதுவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு அந்த அம்மாவோ தனது உடற்பயிற்சிகாக கொடா நாட்டை விட்டு சிறிது உடல் பயிற்சி மேற்கொள்ளும் விதமாக சென்னைக்கு வந்தால், இப்படி அந்த அம்மாவை வஞ்சகமாக வஞ்ச புகழ்சி அணியில் திட்டி தீர்ப்பது இலைகாரனே.

இதிலே ஒரு பத்திமுழுவதும் தினமலரை திட்டினார், சாடினார், குறைபட்டு கொண்டார் என்று வரிசையான பட்டியல் வேறு. தினமலரை புகழவேண்டும் என்றால் புகழ்ந்துவிட்டு போகவேண்டியது தானே பாவும் அதுக்கு எதுக்கையா அந்த அம்மாவை இப்படி பொதுமக்களின் முன் மானத்தை வாங்கவேண்டும்.

இலைக்கார நிருபருக்குத்தான் அறிவில்லை ஆசிரியருக்கும் கூடவா இல்லை. ஒரு வேளை ஆசிரியர்கள் எல்லாம் திமுக ஆட்கள் என்று 6 ஆண்டுகளுக்கு முன் அந்த அம்மா சொன்னதுக்கு பழிவாங்னாரோ என்னவோ. உயர் நீதிமன்றத்தில் வழக்கில் சிக்கி இருக்கும் இந்த நேரத்தில் தினமலருக்கு இப்படி ஒரு வஞ்ச புகழ்ச்சி அணியை சோதனை செய்து பார்க்கத்தான் வேண்டுமா.........இலைகாரரே

Tuesday, September 16, 2008

வெள்ளிதிரை – BOWFINGER படத்தின் கம்பனாக்கம் (தமிழாக்கம்)இந்த படத்தை பார்க்க துவங்கியதும் இப்படிதான் மாயக்க கண்ணாடியும் ஆரம்பித்தார்கள். பிறகு அவ்வளவு வனப்பாக படம் இல்லையே என்ற எண்ணம் மனதில் தோன்றியதை தவிர்க முடியவில்லை. பிறகு படம் கதையில் பயணிக்கும் போது அந்த கவலை மனதை விட்டு மறைந்தது.
மிகவும் அருமையான தொரு கதையாக்கம், அதை விட அருமையான ஒரு பாத்திரமாக்கமாக அந்த 3 வரும் படத்தில் சொலிக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.
கடவுளே வந்து சொல்லி இருந்தாலும் நீ நம்பி இருக்கக்கூடாது என்ற வசனம் முகத்தில் குத்தியது போல் இருந்தது.
வஞனைகள் செய்வாரோடு இனங்க வேண்டாம், பிரகாசுராச்சு அருமையாக களவாடுவதும். பிறகு நிலைமைக்கு மீறிய பேச்சுகளும் அருமையாக இருந்தது. பாசுகரின் வசனங்களும் நக்கலும் அருமை.
படத்தின் இறுதி வரை இது ஏதோ ஒரு படத்தின் கம்பனாக்கமோ அல்லது மொழியாக்கமாகவோ இருக்காது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் BOWFINRER படத்தை பார்த்து அதே போல் எடுத்தால் என்ன என்று தோன்றி இருக்க வேண்டும்.
வெள்ளித்திரையில் வரும் அந்த கடைசி 15 நிமிட கதையமைப்புதான் BOWFINGERரின் முழுக்கதையும். அந்த படம் நகைப்பு வகையாக எடுத்ததால் சும்ம விட்டு விளையாண்டு இருப்பார்கள் ஆங்கிலத்தில்.
பிரபலமான நடிகன் எடி மர்பி, அவனை கொண்டு ஒரு படம் எடுக்கவேண்டும் என்று இந்த இயக்குனருக்கு ஆசை. ஆனால் இயக்குனரிடமோ பணமோ பதவியோ ஏதும் இல்லை. இருந்தாலும் படம் எடுக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியாமலே அவனை வைத்து முழு நீள படத்தையும் எடுக்கிறான். பிறகு உச்சகட்டம் எடுக்கும் போது இயக்குனரின் குட்டு வெளிபடுகிறது. படம் அதோடு நிற்க, இயக்குனர் எப்படி உச்சகட்டத்தை எடுத்து வெற்றி பெறுகிறார் அது மீதி கதை.
வெள்ளித்திரை ஒரு நல்ல கம்பனாக்கம். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

Monday, September 15, 2008

வேகம் -- நாயகன் -- CELLULARரும் -- நடிகை சங்கீதாவும்

நடிகை சங்கீதாவுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தனம் என்று ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் அம்முவாகிய நான் படத்தை அப்படியே மறுபடியும் கேவலமாக எடுத்திருக்கிறார்கள். இதை தெரிவித்த பிறகு நாயகன் என்ற படத்தை பார்த்தேன்.

அது மேலும் ஒரு அதிர்ச்சியை தந்தது. கெஞ்சம் நாளைக்கு முன் வேகம் என்ற ஒரு படம் வந்தது. அந்த படம் ஒரு ஆங்கிலப்படம் CELLULAR ரின் கம்பனாக்கம்(தமிழாக்கம்). ஆங்கிலப்படத்தின் திரைக்கதையை அப்படியே கொண்டு தமிழ் மசாலா தூவி செய்திருப்பார்கள். அதிலும் அந்த சேகரின் மகன் விடும் கொட்டத்தை தாங்காமல் படத்தை ஓடவிட்டு ஓடவிட்டு ஒரு வழியாக பார்த்தேன்.

அதே நேரத்தில் இந்த படம் தெலுகுவிலும் தயாரித்து இருப்பார்கள் போலும். தெலுகுவில் நன்றாக போனதால் அதை அப்படியே மறுபடியும் கம்பனாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

இப்படி தமிழில் வந்த படத்தையே மீள் பதுவு செய்வது என்ன தற்போதய புதிய பழக்கமா என்ன. இல்லை காசு கொட்டி கிடக்கிறதா என்ன.

நடிகை சங்கீதா இனிமேலாவது கதையை கேட்பதோடு மட்டும் அல்லாது மீள் பதிவா என்று பார்த்து நடிக்கவும். பின்னாளில் மீள் பதிவு நடிகை என்று பெயர் வைத்துவிட போகிறார்கள்.

நாயகனில் ஒரு நல்ல செய்தி வேகம் உவேக்காக இருந்தது போல் இல்லாமல் திரைக்கதையை அருமையாக கம்பனாக்கம் செய்துள்ளார்கள். பாராட்டுக்கள்.

Sunday, September 14, 2008

மோடியா!!!! அத்வானியா!!!-- இருவரில் யாரை பிரதமர் ஆக்குவது பாசகா வின் கவலை

குசராத்து கூட்டு கொலைக்கு முன்னாள் வரையில் பாசாகவின் இரும்பு மனிதர் என்று பேசப்பட்டவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான அத்வானி தான் கட்சியின் தலைவர் மற்றும் அடுத்த பிரதமர் என்று அனைவராலும் ஆரூடம் சொல்லப்பட்டவர்.

ஒரே ஒரு கூட்டு கொலை குசராத்தில் அதுவும் எழுந்து ஓடக்கூட முடியாத தனது இனத்தையே சார்ந்த வயது முதிர்ந்த மக்களை அவரகளது அதிகாலை தூக்கத்தில் வண்டி வண்டியாக எண்ணையை ஊற்றி கொளுத்திய செய்க்கைக்கு பின் அதை மற்ற ஒரு இனத்து மக்களின் மேல் பழி போட்டு. அடித்து, துவைத்து ஊருக்கு வெளியில் காயப்போட்ட பிறகு, பத்திரிக்கைகளுக்கு சொன்னார் "இவன்க எல்லாம் இங்கேயும் இந்த இடத்திலேயும் வந்து நல்லா இனபெருக்கம் செய்யுரான்னுக என்று".

இந்த கூட்டு கொலைக்கு பிறகு அத்வானியாவது புத்வானியாவது. இனி குசராத்தின் நிரந்தர முதல்வர் மோடி, ஏன் இந்தியாவின் பிரதமரும் மோடி தான். இவ்வளவு ஏன் அமெரிக்க அதிபர் பதவிக்கு கூட தகுதியான ஒரே தலைவர் மோடி தான்.

இதை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் அந்த கட்சியின் நிர்வாகிகளும் சரி. மற்றவர்களும் சரி இன்னமும் மெக்கைனு ஒபாமா என்று ஆரூடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதை இதை சொல்லி அவரை இந்தியாவிலேயே கட்டி போடாதீங்க ஐயா. உலக்குக்கும் கொஞ்சம் கர சேவை செய்யட்டும் மகிழ்ச்சிய வழியனுப்பி வையுங்கள்.

இந்திய பாராளுமன்ற வரலாற்றிலே கூட்டு கூட்டத்தை கூட்டி புதுமையா வாக்கு எடுத்ததை போல் ஏதாவது ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்து குசராத்து, இந்தியா, மற்றும் அமெரிக்காவின் அதிபர் பதவியை ஒரே நேரத்தில் வகிக்க குசராத்தில் ஒரு அவசர சட்டம் இயற்ற சொல்லுங்கள்.

பிறகு துக்ளக் சோவையும் ஞானியையும் கொண்டு அமெரிக்க அதிபர் ஆவதற்கு ஒரு சிரிப்பு வேண்டும் அந்த சிரிப்பை உலகிலேயே மோடியால் மட்டும் தான் முடியும் என்று எழுத சொல்லுவோம்.

பிறகு பாருங்கள் வால் மார்டிலும். சேம்சு கிளப்பிலும் மொத்தமாகவும் சில்லைரையாகவும் கோமைய வியாபாரம் அபாரம பாசாக கட்சி முத்திரையுடன் விற்கலாம். என்ன அருகிலேயே மட்டுகறியும், பன்றிகறியும் இருக்கும். என்ன இருந்த நமக்கு என்ன, நாம கண்டது எல்லாம் பதவியும் பணமும் தானே......

Saturday, September 13, 2008

அம்முவாகிய நான் -- தனம் -- திரைவிமர்சனம்.

தனம் இப்போது வந்த படம், அம்முவாகிய நான் கொஞ்ச நாளைக்கு முன்னால் வந்த படம். இரண்டுமே ஒரே கதைதான். கதையை விற்றவர் அங்கே இங்கே மாறுதல்கள் செய்து விற்றாரா அல்லது இவர்களே இப்படி மாற்றி கொண்டார்களா தெரியவில்லை.

இரண்டு கதையிலும் கதையின் நாயகனைவிட நாயக்கிக்கு தான் அதிக பகுதிகள். படமே அவளை சுற்றி தான் வரும். இரண்டு கதையிலும் நாயகி ஒரு விபச்சாரியாக வருவர்.

அங்கே கணவனது கனவு நிறைவே வில்லன் இவளுக்கு காம வலை வீசுவான், இங்கே காம வலை வீச வசதியாக இருக்கவே ஊருக்கு கொண்டு வருவான்.

அந்த படத்தில் முன்னாள் வாடிக்கையாளன் கணவனிடமே அவளை இப்போது வருவாயா என்று கேட்டு விட்டு பிறகு மணமானது தெரிந்ததும் மண்ணிப்பு கேட்ப்பார். இங்கே ஒரு காவலரை வைத்து அதே காட்சி.
அன்கேயும் எதிகாலத்தை அழித்தவன் கொலை, இங்கேயும் குடும்பத்துடன் கொலை.

அங்கே எழுத்தாளன் கொண்ட புரட்சிகளை எல்லாம் இங்கே மூடப்பழக்கங்களாக மாற்றி மாற்றம் மட்டுமே செய்துவிட்டு பாவம் சங்கீதாவை இப்படி பாழாக்கி இருக்கிறார்கள். அவரும் ஏதோ விருதுகள் கிடைக்கும் என்று ஒத்துக்கொண்டு நடித்தார் போலும்.

உங்க அட்டகாசத்திற்கு அளவே இல்லையா மக்களே...... உங்களுகே வெளிச்சம்.......

உன்னால் முடியுமா இந்தியா உன்னால் முடியுமாhttp://www.rediff.com/news/2003/jan/02ashok.htm

" What were the other reasons for India not going to war?

The US figures high on this list. The presence of US soldiers and airmen in Pakistani air bases and its naval armada in the Arabian Sea, fighting the war in Afghanistan. The Indian Navy had to be limited in its deployment up to 72 degrees longitude to ensure separation of forces. It is no secret that Indian diplomacy failed to get the US to make Musharraf act on his pledge and in the words of US Secretary of State Colin Powell to end cross border terrorism permanently, irreversibly, visibly and to the satisfaction of India. In fact, George Bush said that India has the riht to defend itself against terrorism.

But the paramount reason for India's 'restraint' was the knowledge that any military action would not achieve the political objective of stopping cross border terrorism. It would inflict punishment but not extract total compliance within the threshold of limited war, the gains from which were estimated to be of doubtful utility. The cardinal principle of war (which is the failure of diplomacy) is that you don't start it unless you are sure you can end it by being better off. "

எப்பொழுதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தை வல்லரசு இந்தியா. இந்தியாவை வல்லரசாக கொண்டு வருவதே எங்களின் நோக்கமும் பணியாகவும் இருக்கும் என்று சொல்வதை நம்மால் காணமுடியும்.வல்லரசு நாடு என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை என்றாலும், தெற்காசியாவின் துணைகண்டம் என்று நாம் நம்மை சொல்லிக்கொள்வது வழக்கம்.
அருகில் இருக்கும் சிறு சிறு நாடுகளுக்கு மனிதாப உதவிகள் உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கும் நாடாகவும் இந்தியா திகழ்வதால் துணைக்கண்டம், பிராந்திய வல்லரசு என்று எல்லாம் சொல்லிகொள்வதில் பொருள் இல்லாமல் இல்லை.
முசாரபை பேச்சு வார்த்தைக்கு ஆக்ராவுக்கு இந்தியா அழைத்து இருந்தது. அந்த கூட்டத்தின் அரசாங்க செய்தி தொடர்பாளரான பெண்மணி அவ்வப்போது பேச்சுவார்த்தையின் முன்னேற்றங்களை பகிர்ந்துகொண்டு வந்தார்.

மூன்று மணி நேரமாக பெரிதாக எந்த ஒரு முன்னேறமும் இல்லாத போது, அப்போது எட்டிய நிலையை விளக்கிவிட்டு எழுந்து செல்ல முற்பட்ட அந்த பெண்மணியை அவரது ஆடைகளை பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு இப்படி எதுவும் சொல்லாமல் சென்றால் என்ன பொருள் என்று கேட்டார்கள் பாருங்கள் அந்த கூட்டத்திற்கு வந்திருந்த பாக்கிட்த்தனிய நிருபர்கள் சிலர்......
அங்கேயே அந்த பொறுக்கி நிருபர்களை நமது சக நிருபர்கள் அடித்து துவைத்து எடுத்திருக்க வேண்டாம். அட அவர்கள் தான் பயந்தார்கள். அங்கே இருந்த காவல் பணியில் இருந்த காவலர்களாவது செய்தார்களா என்றாலும் இல்லை. இராணுவமோ அணிவகுப்பு கொடுப்பதிலும், உயரமான படையாளை கொண்டு முசாரப்புக்கு கைகுலக்க ஏற்பாடுகளைத்தான் பார்த்தார்களே தவிர இந்த செயலை கண்டிகவும் நினைக்கவில்லை தண்டிக்கவும் நினைக்கவில்லை.
http://www.rediff.com/news/2001/jul/18inpak5.htm
அந்த பெண்மணி பின்னாளில் ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் சொன்னார், ஆக்ராவில் இருகிறோமா அல்லது பாக்கிட்தானால் கைப்பற்றபட்ட இடத்தில் இருக்கிறோமா என்று தெரியாத வண்ணமாக அவர்களது செயல் இருந்தது. அவர்களது செயலைவிட, நம்மவர்களின் செயல் தான் இனன்மும் கேவலமாக இருந்தது என்று சொன்னார் அவர்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20107223&edition_id=20010722&format=html" அடுத்தது, பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர்கள், இந்திய அதிகாரி நிருபமா ராவ் அவர்களின் மீது கையை வைத்து இழுத்து, அவரை ஓட ஓட துரத்தி இருக்கிறார்கள், போலீஸ் வந்து அவரைக் காப்பாற்றி இருக்கிறது. பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் ஒரு இந்திய அதிகாரியை துரத்துகிறார்கள். இந்தியப் பத்திரிக்கையாளர்கள் ஒரு மனிதாபிமானத்துக்காகவாவது அவரைக் காப்பாற்ற வேண்டாமா ? சூராதி சூரர்களான இந்தியப் பத்திரிக்கையாளர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். தனியாக ஈஸிச்சேரில் உட்கார்ந்து வாஜ்பாயியையும் அத்வானியையும் லாரல் ஹார்டி என்று கேலி செய்து எழுத நேரம் வேண்டாமா ? வெட்கம்."

தெரு சண்டையாவோ அல்லது பள்ளி மாணவர்களுக்குள் சண்டை என்றாலோ கூட, மேலே கையை வைக்கும் வரைதான் வாய் பேச்சாக இருக்கும். ஒரு முறை கையை வைத்துவிட்டால் போதும், அதற்கு பிறகு அங்கு நடக்கும் பாருங்கள் ஒரு பிரளயம். அவ்வளவு எளிதில் அதை கட்டுபடுத்த முடியாத அடிதடியாக இருக்கும்.

http://www.dnaindia.com/report.asp?NewsID=1039595
“During my post-Kargil misadventure meeting with American President Clinton, I was told by the American leader that nuclear warheads had been shifted from one station to another during the Kargil war. I was taken aback by this revelation because I knew nothing about it. The American president further told me that the nuclear war heads have been moved so that these could be used against India. I was asked by Clinton why I was unaware of these developments, despite being the elected Chief Executive and the Prime Minister of the country. It was a very irresponsible thing to do on General Musharraf’s part.”

கார்கில் பிரதேசத்தில் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் தனது துருப்புகளை வைத்துக்கொண்டிருந்தது மட்டும் இல்லாமல். தனது இராணுவத்தின் கட்டுப்பாடில் அண்டை நாட்டு மனித வெடிகுண்டுகளை அமைத்துக்கொண்டு இந்தியாவின் எல்லைகளுக்குள் ஊடுருவி சரியாக ஒரு இராணுவ தாக்குதை நடத்திக்கொண்டு இருந்தது.

அந்த போக்கிரி செயலுக்கு ஒரு சரியான பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால், அவர்களது எல்லையின்னுள் உள்ள அனைத்து முன்னனி நிலைகளின் மீதும் ஒரு அடையாளம் தெரியாத கப்பலை கொண்டோ, அல்லது அடையாளம் தெரியாத ஒரு விமானத்தை கொண்டோ, அல்லது வேண்டாம் ஒரு அடையாளம் தெரியாத ஒரு படையணியை கொண்டோ ஒரு எதிர் தாக்குதை அவர்களு முக்கியமான ஒரு முன்னனியில் தொடுத்திருக்க வேண்டாமா.

இந்த கபட நாடகம் நடந்து கொண்டு இருக்கையில் நமது முன்னனி படையணி ஒன்று முன்னனி தக்குதலில் மிகவும் சிறந்த அணி அது. பதில் தாக்குதல் ஒன்றை துவக்கினார்கள். அந்த தாக்குதல் இந்த போக்கிரிகளுக்கு பின்னில் இருந்து ஒரு சுட்டாதரவை வழங்கியதற்கு துவங்கிய எதிர் தாக்குதல்.

உடனே அமெரிகாவுக்கு செய்தி பறக்கிறது. உடனே கிளின்டன் ஒரு செய்தியை இந்திய அரசுக்கு தெரிவிக்கிறார். அந்த துள்ளியமான பதில் தாக்குதல் நடத்திய படையணியின் தலைவனை கட்டாய விடுப்பில் இந்த சண்டைகள் முடியும் வரை அனுப்பவேண்டும். அப்படி அனுப்பினால் தான் இந்த சண்டையில் தலையிட்டு உதவுதாக தெரிவிக்கிறார்.

பின்னாளில் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பட்ட பின்னும் இரண்டு ஆண்டுகள் இந்த தலைவலி நீடித்தது எதை காட்டுகிறது. நமது மண்னில் வந்த நமது எதிரியை தாக்கும் வல்லமையும் நமக்கு இல்லை, உரிமையும் நமக்கு இல்லை என்று.

அப்படி என்ன அவர்களால் நம்மை என்ன செய்துவிடமுடியும். என்ன கண்ட இடங்களில் அணுகுண்டுகளை வீசி இருப்பார்கள். இரசியாவுடன் ஏற்பாடுகளை கவனித்துவிட்டு ஒரு அடி அடித்து இருக்கலாம். அப்படி அடித்து இருந்தால், ஒரு வேளை சீனாவின் தலையீடு வரும் பட்சத்தில் அமெரிக்க உதவ வந்திருக்கும். சீனாவின் மற்றும் பாக்கிட்தானின் கொட்டங்களை ஒருங்கே நசுக்கி இருக்கலாம்.

ஆனால் நாம் என்ன செய்தோம் அந்த அண்டை நாட்டோடு கெஞ்சிக்கொண்டு இருந்தோம். இதிலே அணு வல்லரசு, பிராந்திய வல்லரசு என்றெல்லாம் பெயர் வேறு நமக்கு.

வல்லரசு என்றால் எப்படி நாம் நடந்துகொள்ள வேண்டும் தெரியுமா "பாக் அனுமதியின்றி அவர்களது மண்னில் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடந்தது: புசு" என்று இன்றைய தலைப்பு செய்தியாக வந்திருக்கிறதோ அதைபோல அல்லவா அவர்களோடு நடந்திருக்க வேண்டும்.

பாக்கிட்த்தான் தான் அணுகுண்டு வீசுவான், நமக்கு பயம். இலங்கை என்ன செய்துவிட முடியும் நம்மை. தமிழர்களை அழிப்பதற்கு அவன் பாக்கிட்த்தானை கூப்பிடுவானாம், சீனாவை கூப்பிடுவனாம். அன்று பாக்கிட்த்தான் ஆடிய அதே கபட நாடகத்தை இன்றைக்கு இவன் நடத்தி காட்டுகிறான்.என்ன செய்திருக்க வேண்டும் இந்தியா, இன படுகொலையை நிறுத்து. இல்லை எங்களது இராணுவம் வரும் அவர்களை பாதுகாக்க என்று சொல்லி இருக்க வேண்டாமா.

கொரியா, தைவான், ஆங்காங்கு, திபெத்து என்று சீனா தனது அதிகாரங்களுக்குள் அந்த நாடுகளை இந்த நாட்களில் கூட கையக படுத்திக்கொண்டு தான் வருகிறது.
இலங்கையை இந்தியா அடித்து பிடித்தால் எந்த நாடு வர போகிறது. அப்படி அங்கு வந்து நிற்க எந்த நாட்டிற்கும் அங்கு ஒரு அவசியம் இல்லை. அப்படி ஒரு அவசியம் இருந்திருந்தால் எப்பவோ அமெரிக்கா அதை செய்திருக்கும்.நாளைக்கு இதை எல்லாம் கணக்கில் கொண்டு நாளைய அமையும் பாக்கிட்த்தான் அரசு நாளை இந்தியாவை அடிக்கவும் தயங்காது. நாம் தான் எல்லாவற்றிக்கும் அமெரிக்காவையும்(ஐ நா) இரசியாவையும் கேட்டு கேட்டு முடிவெடுப்போமே.

சொந்த மண்ணையும் காக்க முடியவில்லை, அண்டை நாட்டின் மேல் ஆளுமையை செலுத்த முடியவில்லை. இதில் என்ன வல்லரசு பட்டம் அதும் அணு வல்லரசு.
தேசமே என்றைக்கு உன்னை வல்லமை பொருந்திய நாடாக பார்ப்போமோ.......................சுப்பிரமணி சாமியை கேட்டால் சரியாக சொல்வாரோ......