Tuesday, August 29, 2017

அன்புமணி மருத்துவ மாணவ சேர்க்கை ஊழல் இருக்கட்டும் உங்களின் அரசு மருந்து ஆலை மூடலுக்கு தண்டனை எப்போது

மருத்துவ மாணவர் சேர்க்கையில் போலி சான்றிதழ்ல்களை கொடுத்து ஊழல் செய்தோரை தண்டிக்க வேண்டும் என்ற உங்களின் ஞாயமான கோரிக்கை புரிகின்றது. அதே போல் நீங்க சுகாதார அமைச்சராக இருந்த போது இந்தியாவில் இயங்கி வந்த அரசு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளை எல்லாம் மூடி அயலக மருந்தாலைகளில் தயாரிக்கும் மருந்துகளை தான் இனி அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைவரும் வாங்க வேண்டும் என்று நடந்துக்கொண்டீர்.

அதை அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் அடுத்த முதல்வர் நான் தான் என்று கையில் ஒரு எழுது கோலுடன் கையெழுத்து தான் போடுவேன் என்று விளம்பரப்படுத்துனீர்கள். அதுகாரும் தந்தி தொகாவில் பாண்டே கேட்ட இதே கேள்விக்கு அந்த மூடப்பட்ட மருந்தாலைகளுக்கு(தமிழக்த்தில் உதகமண்டலத்தில் ஒரு அரசு மருந்தாலை) பதில் உலக தரமான அளவில் புதிய ஆலைகளை திறக்க உத்தரவிட்டதும் அது விரைவில் சென்னையில் திறக்கபடும் என்றும் சொன்னீர்கள்.

ஆனால் இது வரையில் அந்த ஆலையும் திறக்கபடவில்லை, சாதாரண எளிய மக்களும் அவர்களுக்காக இயங்கி வந்த அரசு மற்றும் அரசு சார்பு மருத்துவமனைகளும் தனியாரிடம் தான் இப்பொழுதும் மருந்துகளை வாங்குகின்றனர்.

இந்த கொள்ளைக்கு துணை போன உங்களுக்கு எப்போது தண்டனை என்ன தண்டனை என்று நீங்களே சொல்லிவிடுங்கள் அன்புமணி.

வெறும் 1 ரூபாய்க்கும் 2 ரூபாய்க்கும்  கிடைத்துக்கொண்டு இருந்த பேராசிட்டமால் இன்றைக்கு எவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கின்றது தெரியுமா. உயிர்காக்கும் மற்றும் மிகவும் அவசியமான மருந்துகளை தயாரித்து வழங்கிய அந்த 4 அரசு மருந்தாலைகளை மூட சொல்லி சொன்ன அந்த தனியார் மருத்தாலைகள் யார் யார், என்ன என்ன காரணங்களுக்காக அந்த ஆலைகளை நீங்கள் மூடினீர்கள் என்று தனியாக ஒரு விளக்கம் அளிக்க தேவை இல்லை. இன்றைக்கு பாசக எப்படி புது புது காரணங்களை சொல்லி பொது வினியாகங்களை மூடி தனியார் நிறுவனங்களிடம் பொருட்களை வாங்கிகொள்ளுங்கள் என்று சொல்கின்றனவோ அதை அன்றே செய்து முடித்த முன்னோடியல்லவா பதில் சொல்லுங்கள்.

0 comments: