Tuesday, November 27, 2012

இந்திய சுதந்திர போராட்டத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம் வெறுக்கிறோம்

இந்திய சுதந்திர போராட்டம் நடந்த அத்தனை காலமும் எந்த வகை போராட்டமாக இருந்தாலும் எக்கச்சக்கமான உயிர்களை பலி வாங்கிய பின்பு கிடைத்தது தான் இந்த இந்திய சுதந்திரம். குழந்தைகள் பெண்கள் என்றும் பாராமல் செனரல் இடைலெர் சுட்டுக்கொன்றதில் இருந்து, பாக்கிட்த்தானம் பிரிவினை வரை கணக்கில் அடங்கா உயிர்களை பலி வாங்கிய அந்த போராட்டத்தை ஏன் மக்கள் வருடம் தோரும் கொண்டாட வேண்டும்.

இத்தனை உயிர்களை கொன்ற களிப்பை கொண்டா தான் இனிப்பு வழங்குகிறார்களா.

இந்த தேசிய கொடியையும் இராணுவத்தையும் மட்டும் கொண்டு வருவதற்காக எத்தனை ஆயிரம் உயிர்களை பலியிடுவது.

ஆங்கிலேயன் ஆண்டபோது மட்டும் யார் இரணுவத்தில் இருந்தது. இப்போது இருக்கும் இதே மக்கள் தான். என்ன கட்டளை மட்டும் அவன் இட்டான், கடைசியில் மக்களை நசுக்குவது எப்பவும் நம்மவர்கள் தானே.

எத்தனை குறைகள் ஆங்கிலரின் ஆட்சியில் இருந்தாலும் எந்த ஒரு உயிருக்கும் பாதகம் இல்லாமல் அல்லவா இந்திய சுதந்திர போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து, சும்மா வீட்டில் இருந்தவர்களை எல்லாம் தனது மயக்கும் பேச்சுக்கு மயங்க செய்து, வீதிக்கு வரவழைத்து போராட்டம் நடத்த வைத்த இந்த அரசியல் தலைவர்கள் எத்தனை கொடூர மனம் படைத்தவர்களாக இருந்து இருப்பார்கள்.

சாலியன் வாலாபாத்து படுகொலையில் தேசிய தலைவர்கள் ஒருவரும் சாகவில்லை. திருப்பூர் குமரன் இறந்த கூட்டத்தில் அவரை தவிர வேறு பெரிய தலைவர்கள் ஒருவரும் சாகவில்லை.

கப்பலோட்டிய தமிழர் சிதம்பரம் செக்கு இழுத்தார், சிறை அதிகாரிகளால் அடித்து துன்புறுத்தப்பட்டார். அவருடைய சொத்துகள் சூரையாடபட்டது. ஆனால் சுதந்திர போராட்டம் நடத்திய தேசிய தலைவர்கள் ஒருவரும் தங்கள் சொத்துகளை இழக்கவில்லை, செக்கும் இழுக்கவில்லை. மாறாக சிறையில் இருந்தபடி அடுத்தகட்ட போராட்டங்களை வகுத்தார்கள், தன் இந்தியாவின் கண்டுபிடிப்பு என்று புத்தகம் எழுதினார்கள். இப்படி இவர்களின் துன்பத்தில் ஏன் சுதந்திரம் வாங்கி இருக்க வேண்டும்.

இப்படி கொல்லபட்ட மக்களின் சார்பாக எத்தனையோ காரணங்களில் இந்திய சுதந்திரத்தையும், அதன் போராட்டங்களையும் வெறுப்பதாகவும், மறுப்பதாகவும் முதலில் எழுதட்டும், பதிவு செய்யட்டும், பிறகு ஈழ போராட்டத்தை பற்றிய உங்களது விமர்சனங்களை எழுதலாம்.

ஈழத்தையும், அதன் சுதந்திர போராட்டத்தையும் விமர்சிக்க நீங்கள் சொல்லும் அத்தனை காரணமும் எந்த ஒரு சுதந்திர போராட்டத்திற்கும் பொருந்தும்.

Monday, November 26, 2012

நான் செய்வது சரி தானா

இவ்வளவு காலம் எதற்காக காத்து கிடந்தேன், கடைசியில் இப்படி ஆகிவிட்டதே. இப்படி தான் நடக்கும் என்று முன்னமே எல்லோரும் சொன்னார்களே. ஏன் எனக்கு அப்போது எல்லாம் தெரியவில்லை.

இப்போது இப்படி ஒரு நிலைவந்ததும் எது தவறு எது சரி என்று கூட சிந்திக்க முடியாமல் திணறும் நாள் வரும் என்று எண்ணியும் பார்த்தது இல்லை தான். இருப்பினும் இந்த புள்ளி வரை என்னை அழகாக நகர்த்திக்கொண்டு வந்த அனைவரும் இப்போது கைவிட்டு விட்டு, உன் விருப்பம், நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ நடத்திக்கொள் என்று ஒதுங்குவது ஏன்............

இப்படி செய் இது தான் சரி என்று சொன்னால் என்ன குறைந்துவிடப்போகிறது. இப்படி இவர்கள் செய்வது தான், செய்வதா வேண்டாமா என்ற குழப்பம் என்னை செயலற்று தள்ளுவதை இவர்களால் ஏன் புரிந்துக்கொள்ள முடியாமல் போகிறது. அல்லது தவிக்கட்டும் என்று விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறார்களா. என்ன மனிதர்களப்பா இவர்கள்.......

இப்போது இவ்வளவு யோசிக்கும் இவர்கள் துவக்கத்தில் மட்டும் அத்தனை தீவிரம் காட்டுவான் ஏன். இவர்களது தீவிரத்தை பார்த்து நாம்தான் ஏதோ மென்மையாக நடந்துகொள்கிறோம் என்ற குற்ற உணர்ச்சிகள் வரும் அளவிற்கு நடந்துக்கொண்டு விட்டு இப்போது ஒதுங்குவது ஏன்.

இல்லை சும்மா இருந்த என்னை உசுப்பேத்திவிட்டு அதிலே குளிர் காய்த்துவிட்டு இப்போது சிரிக்க முயலுகிறார்களோ, என்ன தான் நடக்கிறது. யோசித்து யோசித்து மண்டையே குழம்பிவிடும் போல் இருக்கிறதே எப்படி இதற்கு ஒரு தீர்வு காண்பது............

ஒரு வேளை இவைகளை எல்லாம் செய்யட்டுமா என்று என்னுடைய திட்டத்தை இவர்களுக்கு முன்னமே அறிவித்தது தான் தவறாகிபோனதோ. படிப்படியாக சொல்லி இருந்தால் ஒத்துழைத்து இருப்பார்களோ......

நேசிப்பு இந்த வார்த்தைக்கு பொருளே இல்லாமல் அல்லவா இத்தனை ஆண்டுகள் கழிந்தது, அந்த நிலைக்கு பதில் செல்ல வைப்பது தான் எண்ணமாக இருந்தது துவக்கத்தில். பிறகு நிகழ்ந்த நிகழ்வுகள் இந்த போக்கை மாற்றி பழிவாங்கும் நிலைக்கு வந்தாலும் எனது செய்கையில் இருக்கும் நீதி இவர்களுக்கு தெரியாமலா போனது.

பதில் சொல்ல வைப்பதற்கும் பழிவாங்குவதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப்போகிறது. பதில் சொல் என்று தெரிந்தவர்கள் முன்னால் தலைகுனிய வைப்பதற்கும் என்ன பெரியவித்தியாசம் வந்துவிட போகிறது. முன்னே செய்வது மனதளவில் சாகடிக்கும் பின்னே செய்வது உடலளவில் சாகடிக்கும். மனதளவில் சாகட்டிக்கலாம் பாவம் இல்லை உடலளவில் சாகடித்தால் மட்டும் பாவம் என்று இவர்கள் சொல்வதில் என்ன பொருள் இருக்கமுடியும். இரண்டும் ஒன்று தான் எந்த வித்தியாசமும் கிடையாது என்று ஏன் இவர்களுக்கு புரியமாட்டேன் என்கிறது.

சண்டைக்கு நிற்கும் போது இந்த மாதிரியான நிலைகள் வரும் என்று எனக்கு தான் தெரியவில்லை, உதவுங்கள் என்ன செய்யலாம் ஆலோசனை சொல்லுங்கள் என்று இவர்களிடம் கேட்டு கேட்டு தானே செய்தேன். அப்போது எல்லாம் நான் பேசும் பேச்சுக்களும் செய்கைகளுக்கு தவறு சொல்லாதவர்கள் இப்போது மட்டும் தவறு சொல்வது ஏன்.

அப்போதே தடுத்து இருந்தால் இந்த நிலைக்கு வந்தே இருக்காதே, எல்லாம் சரியாகிபோகும் என்று இவர்கள் சொன்ன பேச்சை நம்பித்தானே இந்த காரியங்களில் இறங்கினேன். நிலைமை நேருக்கு மாறாக ஆனபின்பு ஆளை கழட்டிவிட்டது நகர்ந்துகொண்டால் எப்படி. இனி நானே தனியாக போராட வேண்டியது தானா. இதைவிட இன்னமும் மேசமான நிலைகள் வந்தால் எப்படி தாங்குவேன்.

யாருக்கு வேண்டும் உங்கள் ஆறுதல், ஆறுதல் தேடியா நான் உங்களிடம் ஓடி வந்தது. தீர்வுக்கு அல்லவா தேடி வந்தேன்.

எனது நேசிப்பு உண்மையானால் நான் பழிவாங்க கூடாது என்று நினைக்கும் நீங்கள், எனக்கு நேசிப்பே கிடைக்கவில்லையே என்று விளக்கும் போது மாய்ந்து மாய்த்து ஆறுதல் சொன்ன நீங்கள் எனது பக்க தவறுகளை ஏன் எடுத்துரைக்கவில்லை. பிடிவாதம் பிடிக்கவும் முரண்டு பிடிக்கவும் அட்டகாசம் செய்யவும் சொல்லிக்கொடுத்தது ஏன்.

எல்லாமே என்னுடை விருப்பம் தான் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிவிட்டு. இப்போது இப்படி செய்வது தவறு அப்படி செய்த்தது தவறு என்று இடித்து கூறுவது ஏனோ...... ஏன் இவைகள் அன்றைக்கு தெரிவியவில்லையோ........

எனக்கு தான் கோபம் கண்ணை மறைத்தது உங்களுக்கு எது மறைத்தது. சின்ன கீறலாக இருந்ததை இன்றைக்கு திருப்பவோ திருத்தி அமைக்க வாய்ப்பே இல்லா நிலைமைக்கு எடுத்து செல்ல தைரியம் சொல்லி வழி ஏற்படுத்தி கொடுத்தவர்களான நீங்களே இன்றைக்கு என்னை குற்றம் சொன்னால் எப்படி.

இப்படி மொத்தமாக எல்லாம் போகும் என்று எடுத்து சொல்லி இருந்தால் இவைகளை வேறு விதமாக நடத்தி இருக்கலாமே. இப்படி முகம் காட்டமுடியாத அளவிற்கு சென்று இருக்க மாட்டேனே........

எனது கோபத்தை இத்தனை வருடங்கள் வீட்டுக்குள் காட்டியது போதாது என்று நான் சொன்ன போது, அந்த பழி வாங்கலே போதும் என்று சொல்லி இருக்கலாமே. அதை விடுத்து இப்படி எல்லாம் நான் செய்ய போகிறேன் என்று சொன்ன போது எல்லாம் சரி சரி என்று சொல்லிவிட்டு. இப்போது என்னை மட்டும் குற்றவாளியாக ஆக்கிவிட்டு நீங்கள் எல்லோரும் வெளியில் நின்றால் என்ன பொருள்........


Monday, November 19, 2012

இங்குலீசு விங்குலீசு - திரைவிமர்சனம்

ஆங்கிலம் எழுத பேச தெரியாதது என்னவோ ஒரு தேவகுத்தம் என்று ஆளாக்ளுக்கு இடித்துரைப்பதை இடித்து உரைத்து இருக்கிறது இந்த படம்.

படத்திற்கு கதை ஒற்றை வரிதான் என்றாலும் அதை மிகவும் அழகாக இந்திய பள்ளி, கடைதெரு, அமெரிக்க தூதகம், அமெரிக்கா, அமெரிக்க உணவு விடுதி, பேச்சு மொழி வகுப்பு என்று சுற்றி சுற்றி வளைய வருகிறது திரைக்கதை.

எவ்வளவு செய்தாலும் தனது குறையையே குத்திக்காட்ட வேண்டுமா என்று நாயகி மனதில் கொள்ளும் வசனங்கள் அருமை.

தனது பிள்ளைகள் முதல் அப்போது தான் பார்க்கும் வெளியாட்கள் வரை அனைவரும் ஒரே அடியாக இப்படி நடந்துகொள்வதை நினைத்து நோகும் காட்சிகள் அருமை. இதன் தாக்கத்தில் மகளின் ஆசிரியரிடம் மகளை பற்றி விசாரிக்கும் போது அவர் மத்த பாடங்களை பற்றி எல்லாம் சொல்லும் போது வெறுமனே கேட்டுவிட்டு ஆங்கிலம் என்று எதிர்பார்புடன் கேட்பதும் அவர் நல்லா படிக்கிறாள் என்று சொல்லும் பதிலுக்கு முகம் மலருவதும் அருமையான காட்சி அமைப்புகள்.

பெண் என்று வந்துவிட்டால் சமுதாயத்தில் ஆண்களின் அணுகுமுறைகளில் எவ்வளவு முரண்பாடுகள் உள்ளது என்று அருமையாக காட்டியுள்ளார்கள்.

அதே சமயத்தில் ஆங்கில ஆசிரியரை சீண்டிப்பார்க்க சந்தர்பம் கிடைத்த போதும், அதை தவிர்க்கும் படி நாயகி கூறும் காரணங்கள் அந்த பாத்திரத்திற்கு ஆண்கள் மேல் வெறுப்பு இல்லை என்று தெளிவாக காட்டுவதற்கா அனைத்து இருப்பது அருமை. பெண்களை பற்றிய செய்கைகள் வந்தாலே, அவர்களுக்கு ஆண்கள் என்றாலே பிட்டிக்காது என்று காட்டமுயலும் கூட்டத்தின் வாயை அடைக்க இந்த காட்சி போலும்.

இந்திய வகை கதைகள் படங்கள் அதுவும் பெண்கள் சம்பந்தபட்ட செய்கைகளாக இருந்தால் விதியை துணைக்கு அழைத்து நொந்துகொள்வது வழக்கம், இந்த அம்சம் படம் நெடுக்க அமைத்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம், குறிப்பாக கடைசி நிமிடத்தில் இலட்டு சிதறும் படி அமைத்து இருக்கும் காட்சிகள்.

இவ்வளவு நேரம் படம் சென்றதே தெரியாத அளவிற்கு திரைகதை அமைத்தற்கும், ஆண்களை சீண்டாமல் பெண்களின் மனப்போராட்டங்களை நினைத்தால் வெற்றிகொள்ளலாம் என்ன வயதாக ஆனாலும் சரி எந்த இடமாக இருந்தாலும் சரி என்று அருமையாக சொன்ன இயக்குனருக்கு பாராட்டுகளை சொல்வோம்.

இந்த படத்தின் கதையில் வாழ்ந்துகாட்டிய சிறீதேவிக்கு வாழ்த்துகள் என்ன அருமையான நடிப்பு. மகனின் காலில் அடிப்பட்ட நிலையில் கூட இல்லையே என்ற காட்சியில், கதையும், வசனமும், இயக்குனரும் சிறீதேவியும் போட்டி போடும் காட்சியில் மிஞ்சி நிற்பது சிறீதேவியே, வாழ்த்துகள். இந்த இயக்குனரிடம் இன்னும் அதிகம் எதிர்பாக்க வைத்துள்ளார்.

Thursday, November 15, 2012

இளையராசா - என்ன கர்வம் மனிதனுக்கு

மனிதனுக்கு என்ன இருந்தாலும் இத்தனை கர்வம் கூடாது. ஊரில் அவரை பற்றி அனேகோர் பேசுவதைப்போல் அவருக்கு இத்தனை கர்வம் கூடாது தான்.

எவ்வளவு கர்வம் இருந்தால் 70கள் 80கள் 90கள் 2000கள் அப்பால் 2010கள் என்று இசை அமைத்துக்கொண்டு இருப்பார் இந்த கர்வி.

ஏதோ ஒரு 10 ஆண்டுகள் இசையமைத்துவிட்டு போக வேண்டியது தானே, இல்லை போனால் போகிறது 20 ஆண்டுகள் என்று இருந்து விட்டு போகட்டுமே. எவ்வளவு திமிர் இருத்தால், தலைகனத்துடன் இத்தனை ஆண்டுகள் இசையமைக்க இவருக்கு.

சிவாச்சி கணேசன் முதல் 2011 அறிமுக நாயகர்கள் வரை இத்தனை விதமான நடிகர்களின் கதைகளுக்கு அடக்கமே இல்லாமல் எப்படி இவர் இசையக்கலாம்.

இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தனக்கு என்று வகுந்து கொண்ட பாதையில் இருந்து வழுவாமல் எப்படி இன்னமும் பயணிக்கலாம் இந்த கர்வி. பல மாய இசை வடிவங்களும் இடி இசையும் வந்து அசத்திக்கொண்டு இருக்கும் இந்த காலத்திலும் எப்படி அவரது இசை மக்களின் மனம் கவரும் வண்ணம் அமையலாம். எத்தனை கர்வம் இருக்க வேண்டும் அவருக்கு.

பாட்டும் பாடின் நடையை கொண்ட கித்தார் தாளமும் அதற்கு என்ற மேள தாளமும் மட்டுமே போதும். பாட்டு இல்லாமல் இருக்கும் இடங்களில் இராக்கு கித்தாரையோ அல்லது வேறு வகையில் ஒரு அலரல் வாசிப்பு என்றாகி விட்ட இந்த காலகட்டத்திலும், காட்சியின் தன்மை பொருத்து அமைய மண்ணின் மணம் போகாமல் இந்திய/தமிழ் இசைப்புகளை உள்ளே புகுத்தி கொடுக்க என்ன கர்வம் இருக்க வேண்டும் இவருக்கு. சாதாரண வார்த்தைகளில் சொன்னால் ஊரே பீச்சா விற்கும் போது இவர் மட்டும் எப்படி முழு சாப்பாட்டை கொண்டு வந்து பரிமாற வேண்டும், கர்வம் தானே மனிதனுக்கு.

இந்த கர்விக்கு கிராமிய இசையும் கர்நாடக இசையும் என்று இருந்துவிட்டு போக வேண்டியது தானே. அதைவிடுத்து, மேற்கத்திய இசை இவருக்கு எதற்கு. கொஞ்சம் கூட அடக்கம் இல்லாமல் இந்திய இசையை மேற்கத்திய வாத்தியம் கொண்டு வாசிப்பதும், மேற்கத்திய தாளகட்டைக்குள் இந்திய இசையை இசைத்துக்காட்டுவதும். என்ன கர்வம் மனிதருக்கு.

இதோடு நிறுத்தினாரா மனிதர், இத்தாலி நாட்டு இசை கலைஞர்களை அழைத்து வந்து தமிழ்ப்பாட்டுக்கு இசை வாசிக்க வைத்துக்காட்டுகிறார் இந்த கர்வி. அவர்களும் என்னவோ இந்தியாவிற்கு போக ஒரு வாய்ப்பு வந்ததே என்று அலைபவர்கள் போலும் உடனே வந்து வாசித்துவிட்டு போகிறார்கள்.

காலத்தில் நிலைத்து நின்ற இயக்குனர்கள் முதல் சில பல படங்களிலே கானாமல் போன இயக்குனர்கள் வரை அனைவருக்கும் எந்த வஞ்சனையும் இல்லாமல் எப்படி ஒரே தரத்தில் இவர் இசையமைத்துக்கொடுக்கலாம். இதை திமிர் என்று சொல்லாமா அல்லது கர்வம் என்று சொல்லாமா. ஆளுக்கு தகுந்தார் போல் கொடுத்து இருக்கலாம், ஆனாலும் மனதுக்குள் வள்ளல் என்ற திமிரா அல்லது எவ்வளவு கொடுத்தாலும் என்னிடம் இருக்கும் இசை குறையாது என்ற கர்வமா.......

இந்தி படங்களுக்கு உங்களின் புது பாடல்கள் எல்லாம் ஒன்றும் வேண்டாம் பழையபாடலில் இருந்து எடுத்து புது பின்னணி இசையில் கொடுங்கள் என்று கேட்டால், முடியாது என்று சொல்ல வேண்டியது தானே. அவர் கேட்டாராம் இவரும் இசைந்து இசைத்தாரம். என்ன கர்வமையா உங்களுக்கு........

வானொலிகளில் இன்றைக்கு 24 மணி நேர சேவைகள் வந்த பிறகு, இரவுக்கு என்று பழையபாடல்கள் அடக்கமாக இருப்பதைபோல் இல்லாமல், இரவிலும், பகலிலும், புது பாடல்கள் என்று வரும் தொகுப்புகள் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ஒலிக்கும் படியாக இசையமைத்து தள்ள இவருக்கு எத்தனை கர்வம் இருக்க வேண்டும்.

ஒரு வேளை இந்த கர்வி அந்த இனிமை 5000 என்று இத்தனை பாடல்கள் இசையமைக்காமல் விட்டு இருந்தால், மாலை நேரத்திலோ அல்லது இரவில் 10 முதல் 10:30 வரை என்று மட்டும் இவரது இசை ஒலித்துக்கொண்டு இருக்கும். இப்படியா செய்வார் கொஞ்சம் கூட அடக்கமே இல்லாமல்.

இந்த கர்வம் போதாது என்று 4 தேசிய விருதுகள் இவருக்கு என்ன கர்வம் இருக்கும் இந்த மனிதருக்கு. ஏதோ ஒன்று அல்லது இரண்டு என்று இருந்துவிட்டு போகவேண்டியது தானே. கர்வம் பிடித்தவர் 4கா வாங்க வேண்டும். மோசம் செய்த்துவிட்டார் மனிதர்.

சரி இந்த அட்டகாசங்களை தமிழோடு நிறுத்திக்கொள்ள வேண்டியது தானே. அதை விட்டு தென்னகத்து மொழிகள் அனைத்திலும் இதே அட்டகாசம். கொஞ்சமும் கூச்சம் இல்லாம், இத்த வீச்சு வீசி இருக்கிறார் இந்த கர்வம் பிடித்த மனிதர்.

தொலைகாட்சிகளில் திறமை காட்ட என்று நடக்கும் நிகழ்சிகளில் பழைய பாடலை பாடினால் ஒன்றும் பெரிதாக அங்கிகாரம் கிடைக்காது என்று ஆகியேவிட்டது. என்னமோ பழைய பாடல்கள் எல்லாம் எவர் வேண்டும் என்றாலும் சும்மா செறுமுவதை போல் பாடிவிடலாம். ஆனால் புதுபாடல்கள் தான் பாடுவதற்கு சிறமம் என்று போல் ஒரு பொது கருத்தை உருவாக்கியாச்சி. அதிக வாத்தியங்கள் இசை இல்லாமல் பாடலும் வார்த்தகளும் கொஞ்சு விளையாடும் அந்த பழையபாடல்கள் பாட திறமை கட்டாயம் வேண்டும். ஏனோ தானோ என்று எல்லாம் படிவிட முடியாது. அந்த பாடல்களில் வார்த்தைகளின் உச்சரிப்புகள் அவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் இனிமையாகவும் இருக்கும். அது சரி கேட்பவர்களுக்கே இந்த இடத்தில் னவா, ணவா, ழ வா, லாவா, இல்லை ளாவா என்று தெரியா நிலையில் "கன்னன் வந்து பாடிகிரான் காடல் சொன்னான்" என்றால் தெரியவா போகிறது. தமிழ் தானே, அதுவும் பழைய பாடல் தானே, அம்மாவை வீட்டில் கிண்டல் செய்வது போல் இருந்துவிட்டு போகட்டும் என்று இருந்துவிடுவார்கள் போலும்.

இருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இசையமைத்த பாடல்களை அழகாக பாடி பரிசும் பெரும் மக்களை பார்க்கும் போது இவர் கொஞ்சம் கூட தன்னடக்கம் இல்லாமல் எப்படி எல்லாம் கர்வமாக இருத்து இருக்கிறார் என்று தெரிகிறது. இவ்வளவு கர்வம் கூடாது தான் இந்த மனிதருக்கு.

பாடல் துவங்கிய கனத்தில் இருந்து முடியும் வரை தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓடுவது போல் ஒரு ஓட்டம். எங்கேயும் தேங்காமல் வடிந்து சொன்றாலும் மனதில் தேங்கி நிற்கிறதே என்ன மோசகார செயல் இது. பாட்டு நின்ற பிறகு, அல்லது கொஞ்ச நாட்கள் நகர்ந்த பிறகு அந்த பாடலை கேட்டால் மக்கள் உடனே மாற்றாமல் முடித்த பிறகு மாற்றுவது போல் ஏன் இசையமைக்க வேண்டும் இவர். அத்தனை ஒழுங்காக இசையமைத்தால் தான் இந்த கர்விக்கு பிடிக்குமா. ஏனோ தானோ என்று அடக்கமாக இசையமைக்காமல் படத்தில் எழுத்துக்கு போடும் பாடல் எல்லாம் வானொலியில் ஒலிபரப்பும் அளவிற்கு ஏன் இசையமைக்க வேண்டும்.

இதிலே கர்வம் கொள்கிறேன் என்ற நக்கல் பதில் வேறு அவருக்கு. என்ன கர்வமையா உங்களுக்கு.

இன்னமும் இந்த கர்வம் குறையாமல் அப்படியே இரும், இத்தனை பாடல்களையும் இசை வடிவங்களையும் இவ்வளவு கர்வமாய் கொடுத்ததை போல் இனிமேலும் அப்படியே கர்வமாக கொடும். அமைதி காக்கிறேன், அடக்கமாக வாசிக்கிறேன் என்று எல்லாம் துவங்க வேண்டும். உனது கர்வ இசையே மீண்டும் மீண்டும் வரட்டும், வந்து எங்களை எல்லாம் வாட்டி எடுக்கட்டும். உனது இசையால் நாங்களும் நல்ல இசையை கேட்கும் கர்வியாகி போனதை இவர்களும் எங்களை மீண்டும் மீண்டும் விமர்சனம் செய்யட்டும்.

உங்களிடம் உங்களது இசையை மட்டுமே இரசிக்கும் கர்விகளுக்கு எத்தனை சொன்னாலும் புரியபோவது இல்லை. அப்படியே புரிந்தாலும் அப்படி இரசிப்பது கர்வம் என்று ஆனால், இன்னமும் கர்வப்படுவோம் என்று அடக்கமே இல்லாமல் வீண் பேச்சு பேச போகிறார்கள்.

இந்தியா தலையில் இன்னும் ஒரு குட்டு கொட்டியது இலங்கை - இந்தியா ஒரு துப்பு கெட்ட தேசம்

அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்தல் முடிந்து தனது முதல் சுற்றுப்பயணத்தில் பர்மா வருகிறார் என்ற செய்தி கசிந்ததும். மக்களாட்சியை மலர செய்வோம் என்று இலங்கையில் அமெரிக்கா கால்பதித்து விடுமோ என்ற பீதியில் சீனா அவசர அவசரமாக இலங்கையில் மிகவும் பாதுகாப்பாக உள்ள சிறையில் தமிழர்கள் புரட்சியில் இறங்கினார்கள் என்ற நாடகத்தை நடத்திமுடித்து இருக்கிறது.

இந்த கலவரத்தை பயன்படுத்தி அந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்தியர்களும் கொல்லப்பட்டார்கள் என்ற கசப்பான உண்மை வெளியே தெரியாது மறைத்துவிட்டார்கள் இலங்கையர்.

இலங்கை சிறையில் ஏன் இந்தியர்கள், கடலோரங்களில் மாட்டும் தமிழர்களை இந்த சிறையில் தானே வைத்து கொடுமைபடுத்தி கொல்கிறார்கள். அப்படி பிடித்து சென்றவர்கள் தான் இந்த கலவரத்தில் பலிகொடுக்கப்பட்டவர்கள்.

எப்படி இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டது, சிங்களத்து மொழியிலே சொல்வதென்றால். "அங்கே இருந்த கலககாரர்களுக்கு துப்பாக்கி சுடத்தெரியாது. அப்படி சுடத்தெரியாத காரணத்தினால் இறந்தவர்களது எண்ணிக்கை 100ஐ மட்டும் தொட்டது. இல்லை என்றால் இழப்பு அதிகமாக இருக்கும்"

அப்போ புலிகள் என்று சொல்லிக்கொண்டு அப்பாவி மக்களை சிறை அடைத்து வைத்து கொடுமை படுத்துவதை சிங்களம் இந்த வாக்கியங்களில் உறுதி கூறுகிறது.

துப்பாக்கியை பயன்படுத்தக்கூட தெரியாத மக்கள் எப்படி ஆயுத கிடங்கை கைப்பற்றினார்கள். அது என்ன குரங்கு கையில் இருக்கும் தேங்காய மற்றவர் வந்து பறித்து செல்ல. இல்லை சின்ன பிள்ளையின் கையில் கொடுக்கப்பட்ட வடையா காக்கா வந்து கொத்திக்கொண்டு போக.

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும். 3 ஆண்டுகள் உணவில்லாமல் துயிலில்லாமல் நலிந்து இருக்கும் மக்கள் சிறை அரண்கள் மீது ஏறி வீர வசனம் பேசியதாக படங்கள் வேறு. என்னே உங்கள் அறிவு.

ஐ நாவை ஏமாற்ற இந்த நாடகமா, அல்லது மியான்மர் வரும் அமெரிக்காவை ஏமாற்ற இந்த நாடகமா. கொஞ்சம் விட்டால் மிஞ்சி இருக்கும் பலகீனமாக கிடக்கும் முதியவர்கள் முதுகு நிறைய வெடிமருந்துகளை சுமந்து வந்து அதிபரை கொலை செய்ய வந்தார்கள் என்றும். அவர்கள் திட்டம் இட்டதை நேரில் பார்த்ததாக கருணாவும், அரசுக்கு துப்பு கிடைத்தது என்று இடக்குலசு தேவாவும் சொல்ல வைப்பார்கள் போலும்.

இத்தனை இந்தியர்கள் கொத்தாக கொன்று குவித்த செய்திகள் வந்தூம் கூட இந்தியா மியான்மரில் அமெரிக்கா வரும் போது எந்த இந்திய 5 நட்சத்திர உணவத்தில் இருந்து உணவு கொடுக்கும் ஒப்பந்தத்தை கொடுக்க வேண்டும் என்றும். இந்திய முதலாளிகளின் பர்மா முதலீடுகளை எப்படி பாதுக்காக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து பேசிக்கொண்டு இருக்கிறதே!!!!!!!!!!

இந்தியா எங்கே அமெரிக்கவுடன் இணைந்து இலங்கையில் மறுபடியும் கால்பதித்து விடுமோ என்று மியான்மரில் வியாபாரம் செய்வதோடு நிறுத்திக்கொள் இல்லை என்றால் இப்போது சிறையில் உள்ள இந்தியர்களை கொன்றது போல் நாளை எல்லையில் வந்து பாக்கிட்த்தானம் நாள்தோறும் பீரங்கி குண்டுகளை வீசுவதை போல் நாங்களும் வீசுவோம் என்று சொல்லாமல் சொல்லி முடித்து இருக்கிறது.

என்ன ஒரு அரை மணி நேரம் ஆகுமா இந்த சிங்களத்தின் வான் படையையும் , இராணுவத்தையும், கடற்படையையும் அழிக்க இந்தியாவிற்கு. அடுத்த அரை மணிக்கு எல்லாம் இலங்கையில் உள் இருக்கும் காவலர் படை நடவடிக்கையின்றி சரணடைய செய்துவிட்டு தனது கடற்படையை அங்கே நிறுத்திவிட்டு பிறகு பேச வேண்டும் தன்மானம் உள்ள நாடாக இருந்தால்.

ஆனால் இந்தியாவிற்கோ இந்திய முதலாளிகள் இலங்கையில் கட்டியுள்ள கட்டுமானங்களையும், மியான்மரில் அமெரிக்க அதிபரின் வருகையின் போது வங்கும் விருந்துகளை கவனிக்கும் ஒப்பந்தங்களும், மேலும் பர்மாவில் இது வரை போட்ட முதலீடுகளும் தான் முக்கியமாக தெரிகிறதே அன்றி தனது சாதாரண மக்களை பற்றி எந்த கவலையும் இந்தியாவிற்கு இல்லை.

இந்தை நன்கு உணர்ந்த சீனம், இலங்கையின் விரலால் இந்தியாவின் தலையில் குட்டுகிறது. இந்தியாவும் தலை குணிந்து குட்டு வாங்க்கொண்டு சிரிக்கிறது. என்ன தேசம், இந்த தேசத்திற்கு இராணுவம், வான்படை, கடற்படை. பேசாமல் எல்லோரையும் அரபு நாடுக்கு கூலி வேலைக்கு அனுப்புவோம் நாட்டிற்கு காசாவது வரும்.

இதில் அப்துல் கலாம் கனவு கண்டதை போல் 2020ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று இளைஞர்களுகு கனவு வேறு. முதலில் நல்லரசு ஆக சொல்லுங்கள் பிறகு வல்லரசு ஆகுவோம்.

நேருவின் தலைமையிலும் இந்திராவின் தலைமையிலும் பாக்கிட்தானத்தை பந்தாடிய இந்திய முப்படையா இப்படி இலங்கையிடம் தொடை நடுங்கி நிற்கிறது, என்ன அவமானம்...................................

Monday, November 5, 2012

சாட்டை படமும் A Ron clark story படமும் திரைவிமர்சனம்

விச்சை தொலைக்காட்சியில் வரும் 7சி தொடரில் நாம் பார்த்து பழகிப்போன ஆசிரியரின் கண்ணியமான கண்டிப்பு.

ஒரு ஆசிரியரின் முயற்சி எந்த அளவிற்கு வீரியம் வாய்ந்தது என்று காட்டும் படம் தான் ஆங்கில படம் A Ron clark story.

முதலில் ஆங்கிலத்தின் கதையை பார்த்துவிடுவோம்.

கதை துவங்கும் போது ஆசிரியர் தான் வேலை பார்க்கும் பள்ளியில் இருந்து விலகுவதாக சொல்லி வெளியேறுவார். என்ன காரணம் என்று கேட்டதற்கு எனக்கு இன்னமும் சவாலாக இருக்கும் ஒரு பள்ளியை தேடி செல்ல போகிறேன் என்று சொல்வார்.

பிறகு நியூயார் நகரில் மிகவும் பின் தங்கிய பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சென்று வேலை கேட்பார். தலைமை ஆசிரியரோ வேலை இல்லை என்று சொல்ல வீதிதளில் அலைந்து திரிந்து கடைசியாக ஒரு ஆசிரியர் உயிருக்கு பயந்து ஓடிய இடத்தை தனக்கு கொடுக்கும் படி கேட்பார்.

அந்த வகுப்பில் இருக்கும் பிள்ளைகளோ 7சியில் வரும் வால் பிள்ளைகளை போல் வால்தனம் செய்வார்கள். அந்த சின்னஞ் சிறு பிள்ளைகளை கவர்ந்து அவர்களை படிக்க வைத்துவிடவேண்டும் என்று ஆசிரியர் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் அந்த பிள்ளைகள் தவிடு பொடியாக்கும் இடங்களை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் படமாக்கி இருப்பார்கள்.

அப்படி ஒரு நாள் ஒரு நிமிடம் மாணவர்களை கவர்ந்த அந்த ஆசிரியர், மாணவர்களை மகுடிக்கு மயங்கிய பாம்புகள் போல் இப்படி படியுங்கள் அப்படி படியுங்கள் என்று சொல்லும் எல்லாம் செய்யும் நல்ல பிள்ளைகளாக மாற்றம் கொள்ள வைப்பர்.

அவரது வகுப்பில் பிள்ளை பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணின் படிப்பை பாதியில் நிறுத்த அவரது தாயார் நினைக்கையில் வீடு வரை சென்று வாதாடும் இடமாகட்டும், சமைக்க என்ற சிறுமி செய்யும் அலும்பு தாங்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறி ஊர் சுற்றி மனதை ஆற்றும் காட்சியாகட்டும், இப்படி எல்லா இடங்களிலும் அந்த ஆசிரியரின் பாத்திரம் மனதை அள்ளிக்கொண்டு செல்லும்.

கடைசியில் ஒன்றும் உருப்படாத வகுப்பு என்று இருந்த அந்த வகுப்பு அந்த வட்டாரத்திலே முதல் இடத்தில் அந்த வருடமே வரும்.

ஆங்கில படத்தில் உச்சம் ஆசிரியருக்கு தொற்று காய்ச்சல் வந்து பள்ளிக்கு வரக்கூடாது என்றாகிவிடும். அந்த வேளை பார்த்து தான் தேர்வும் பக்கத்தில் வர. மாணவர்களுக்கு எடுக்க வேண்டிய பாடங்களை படப்பதிவு செய்த்து வகுப்பு நடக்கும் நேரத்தில் மாணவர்களுகு படமாக ஓட்ட, ஆசிரியரே இல்லாத வகுப்பில் ஆசிரியர் நேரில் பாடம் நடத்தும் போது கவனிப்பதை போல் மாணவர்கள் கவனிப்பதையும் கேள்விகளு பதில் சொல்வதையும் தலைமை ஆசிரியர் பார்ப்பது போல் ஒரு காட்சி அமைத்து இருப்பார்கள் அருமையோ அருமை.

இப்படி எல்லாம் ஆங்கிலத்தில் வந்த படத்தை தான் மிகவும் அழக்காக இந்திய அதுவும் தமிழ் மசால பூசி அருமையாக தயாரித்து இருக்கிறார்கள்.

திரைக்கதையில் காட்டிய கவனத்தை இன்னமும் கதையிலும் காட்டி இருக்கலாம். காட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் சம்பவங்கள் இல்லை என்றது குறையே.

உதாரணத்திற்கு பழனி அறிவிடம் காதல் வேண்டாம் என்று சொல்லும் காட்சி மிகவும் செயற்கையாகவும் நாடகம் பார்க்கும் ஒரு உணர்வையும் கொண்டு வருகிறது. தம்பி இராமையா சண்டை போடும் இடங்கள் தவிர மற்ற காட்சிகள் அனேகமாக செயற்கையாக இருக்கிறது.

தலைமை ஆசிரியரை துணை தலைமை ஆசிரியர் வீடு புகுந்து தாக்கும் இடத்தில் என்ன தான் ஏழை ஆசிரியராக இருந்தாலும் வீடு புகுந்து அடிக்க ஒன்று நெருங்கிய சொந்தமாக இருக்க வேண்டும் இல்லை துணை தலைமை ஆசிரியர் சுத்த பொறுக்கியாக இருக்க வேண்டும். காலில் போடும் காலுறையின் மணம் வீச்சை கூட பொறுட்படுத்தாத அப்பாவி மனிதனாக காட்டிவிட்டு வீடு புகுந்து அடிப்பவராக காட்டும் காட்சி பயங்கர செயற்கை தனமாக இருக்கிறது.

அறிவழகி தமிழுக்கு கிடைத்து இருக்கும் அடுத்த அஞ்சலி. குரலிலும் சரி முகபாவங்களிலும் சரி அஞ்சலியை முதல் படத்தில் பார்த்ததை போல் இருக்கிறது. நான்றாக வருவார் என்று நம்புவோமாக.

இயற்பியல் ஆசிரியர் என்று பெயருக்கு மட்டும் சொல்கிறார்கள், இயற்பியலில் கொஞ்சம் சொல்லித்தருவது போல் காட்சிகள் அமைத்து இருந்தால் இன்னமும் பலமாக இருந்து இருக்கும்.

இப்படி ஆயிரம் குறைகள் சொன்னாலும் சாட்டை அழகாகவும் அருமையாகவும் அமைந்து இருக்கிறது. இன்னமும் இதை போல் மக்களுக்கு தேவையான படங்களை எடுக்கும் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.

3 ஆண்டுகள் கடந்து இன்னமும் மூக்கு சிந்தும் சிங்களம் - அசிங்க அரசியல்

ஐ நா மனித உரிமை குழு சிங்களத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றியதா அல்லது கள்ள வாக்குறுதிகளாவே இன்னமும் இருக்கிறதா என்று அதிகார பூர்வமாக விசாரிக்க வருகிறது என்று வந்த செய்திகளில் இருந்து இன்று வரை இப்படி செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கிறது.

புயலுக்கு பிறகு மிக கொடிய ஆயுதங்களை கண்டுபிடித்தோம், அது சீனாவில் இருந்து கொண்டுவர பட்டுள்ளது. அது எந்த நாடு புலிகளுக்கு வழங்கி இருக்கும் என்ற ஆருடம்.......

இதிலே இன்னனும் ஒரு தளம் புலிகள் கையாண்ட தந்திரம் என்ற தலைபில் ஒரு தொடர்.....

இந்தியாவில் இருக்கும் சிங்கள கைகூலிகள் முக்கியமான படக்காட்சிகளை மறைத்தார் ஏன் எப்படி என்று தினசரிகளில் செய்திகள் வரும்படி செய்கிறார்கள்.....

ஆக மொத்தத்தில் புலிகளின் பெயரை சொல்லி பிச்சை எடுப்பதை சிங்களம் இன்னமும் நிறுத்தவில்லை. அதிலே சல்லடையாக தேடிய போது கிடைக்காத ஆயுதங்கள் புயலில் தானாக வெளியில் வந்து உட்கார்ந்துகொண்டதாம். அப்போ சிங்களம் என்ன மாவுசலிக்கும் சல்லடையை கொண்டு தேடினார்களா இல்லை வீடு சலிக்கும் சல்லடையை கொண்டு தேடினார்களா.....

மீதம் இருக்கும் மக்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்து இந்த நூற்றாண்டின் இணையில்லா கொடுமைகளுக்கான புத்தகங்களை எழுதிக்கொண்டு இருக்கும் சிங்கள வெறியின் ஈன செயல் அல்லவா இந்த செய்திகள்.

இதோடு நிறுத்தினார்கள், நல்லவேளையாக புலிகளை இங்கே பார்த்தோம் அங்கே பார்த்தோம் என்று சொல்லிக்கொண்டு ஆப்ரிகா அண்டார்டிக்க என்று காவடி தூக்கிக்கொண்டு போகாமல் இருக்கிறார்களே..............

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தான் நீதி கேட்டு மக்கள் நிற்கும் போது, உலகில் இருக்கும் விதவிதமான காரணங்களை எல்லாம் சொல்லி உயிர் போகும் நேரத்தில் காப்பாற்றுகிறேன் என்று வந்து தலையில் இருக்கும் தொப்பியை கழட்டிவிட்டு மௌனமான ஒரு அஞ்சலியுடன் செல்வார்கள் ஆட்சியர்கள், காவல் துறையினர் எல்லோரும்.

ஆனால் ஐ நாவோ உலகில் மிகவும் முன்னேறிய நாடுகளின் வழிக்காட்டுதலில் நடக்கும் அமைப்பு எப்படி இப்படி செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுத்ததை போல் சிங்களம் சம்பந்தபட்ட காரியாங்களில் செயலாற்றுகிறது என்று புரிய இல்லை.

இவ்வளவு நடந்த பிறகும் சிங்களத்தின் கைகளிலே மக்களின் விதியை கொடுத்துவிட்டு ஒன்றும் செய்யக்கூடாது என்ன என்று செல்லமாக் சொல்லி 3 ஆண்டுகள் கழித்து வந்து தான் பார்பேன், அது வரைக்கு யார் வந்து சொன்னாலும் அவைகள் எங்களின் காதுகளில் கூட விழாது என்று எப்படி இந்த அமைப்பால் இருக்க முடிகின்றது................

கொடுமை நடக்கிறது என்ற வதந்தி வந்தாலே ஓடிச்சென்று ஐ நாவின் படைகளை நிறுத்தி, நீங்கள் இங்கே வரக்கூடாது, அவர்களும் இங்கே வர மாட்டார்கள் எல்லாம் பேசி முடித்துக்கொள்வோம் என்று சொல்வார்களா இல்லை 3 ஆண்டுகள் கழித்து வந்து பார்ப்போம் என்று சொல்லி செல்வார்களா.......

ஒரு வேளை சிங்களத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் நிறைய பணமும் வெளி நாடுகளில் முதலீடு செய்ய நிறைய முதலீடும், அவர்கள் வாழும் நிலத்தில் பெற்றோலியமும் இருந்து இருந்தால் அமெரிக்கா முதல் ஆப்ரிக்கா வரை முக நூலில் மூச்சுக்கு 300 பதில்கள் பெறுவதை போல் முற்றுகை இட்டு இருப்பார்கள் போலும்.

மனிதனுக்கு இரக்கம் கூட இனத்தையும், நிறத்தையும், பணத்தையும் பார்த்துதான் வரும் போலும். ஆலோசனைகளும் அறிவுரைகளும் அடுத்தவர்களுக்கு தான் போலும், எந்த நாடும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது உலகம்.