Tuesday, December 25, 2007

நரேந்திர மோடியின் வெற்றி நமக்கு எதை சொல்கிறது.

முதலில் தேர்தலி வெற்றி பெற்ற மோடி அவர்களுக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம்.

பிறகு இந்த வெற்றி நமக்கு விட்டுஸ்செல்லும் செய்தி என்ன என்று பார்ப்போம். இந்த தேர்தலில் பொதுகூட்டங்களில் மோடி பேசியதாகவும், தெகல்கா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியும். இவர்களுக்கு ஒரு பின்னடைவாக இருந்து இருக்க வேண்டியவைகள் என்று அரசியர்கள் கருதும் காலத்தே அவைகளையே பலமாக கொண்டு அருதி பெருன்பாமையுடன் வென்று காட்டி இருக்கும் மோடியின் வெற்றி உணர்த்துவது ஒன்றே.

அது, எங்களது தேவைக்கா என்ன வேண்டுமானாலும் செய்வோம். அதை கேட்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இன்றைக்கு எங்களுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு 3000 மக்களை கொன்றோம், பின்னாளில் தேவை பட்டால் பக்கத்து மா நிலத்தை கூட கலவரம் என்ற பெயரில் கொளுத்துவோம் என்று அல்லவா சொல்லி நிற்கிறது.

தமிழகத்தில் ஈழப்போராளிகளுக்கு ஆதரவாக பேசினார் என்று வைகோவை ஓராண்டு காலம் சிறையில் தள்ளி வேடிக்கை பார்த்தார் செயலலிதா. ஏன்று கேட்டால், அவர் தீவிரவாதிக்கு ஆதரவாக பேசினார் அதனால் சிறையிலிட்டோம் என்று சொன்னார்.

ஆனால், மோடியும் அவரது கூட்டாளிகளும், தன்னிலை விளக்கம் அளிப்பது போல் அவர்கள் செய்த கொலை குற்றத்தை ஆதாரத்துடன் வெளியிட்டத்துடன். அது தப்பா என்று மக்களை பார்த்து கேட்டதாகவும், அதற்கு கரவொளிகளை பதிலாக கொடுத்தார்கள் என்று செய்திகளில் படிக்கும் போது, எந்த அளவிற்கு அந்த கூட்டதிற்கு வெறி ஏற்றி இப்படி ஒரு கேள்வியை கேட்டு இருப்பார் என்று தெரிகிறது.

என்ன செய்து இருக்க வேண்டும், நடுவண் அரசும், தேர்தல் ஆணையமும். இந்த பேச்சுகளுக்காக அவரை அழைத்து விசாரித்தாவது இருக்க வேண்டாமா. இல்லை அது அவருக்கு தேர்தலில் அதிக ஓட்டுகளை வாங்க்கிக்கொடுக்கும் என்ற கணக்கு எல்லாம் சொன்னால், அந்த அரசை முதுகெலும்பு இல்லாத அரசு என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு கொலை செய்தால் கூட மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வாதாடுவார்கள் வழக்குரைஞர்கள். 3000 கொலைகளை செவ்வனே செய்து முடித்துவிட்டு என்ன செய்வாய் என்று கேட்கும் இவருக்கு மீண்டும் முதல்வர் பதவி.

இந்தியா இன்னும் ஒரு இலங்கையாக ஆகும் அதன் துவக்கம் தான் இந்த 3000 கொலையின் துவக்கம். இன்றைக்கு, இசலாமியர்கள் தானே என்று மற்றவர்கள் நினைக்க கூடும். ஆனால் இன்றைக்கு அவர்களுக்கு நடப்பது தான் நாளை நமக்கு எல்லாம் நடக்கும்.

அழிவுப்பாதையில் இந்தியா பயணிப்பதை தான் சொல்கிறது, வேறு என்னவாக இருக்க முடியும்.

கீதை - 3

கைபேசியில் அலுவலகத்தில்ருந்தும் தொலைபேசியில் ஊரில் இருந்து அம்மாவும் அழைத்தனர். அம்மாவிடம் பிறகு பேசுகிறேன் என்றவாரு அலுவலகம் பயனித்தான். செல்லும் வழியிலே என்ன ஏது என்று கேட்டவாரே சென்றவனுக்கு என்ன நடந்து இருக்கும் என்று ஒரு அளவிற்கு ஊகிக்க முடிந்தது.

சென்று பார்த்தாலும் அவனது கனிப்பும் சரியே, அமர்ந்து ஆகவேண்டிய காரியங்களை பார்த்து கொண்டிருக்கையிலேயே, குழு தலை, மேளாலர், இயக்குனர், என்று ஒரு உயர் வட்ட பாதுகாப்பே அவனிடம் வந்து சேர்ந்தது. வேலை என்னமோ ஒரு அரை மணியில் முடித்துவிடலாம் என்று தான் நினைத்து இருந்தான். ஆனால் வந்த உயர்மட்ட குழுவோ இவனிடமும் இவனது குழுத்தகையிடமும் என்ன ஏது என்று விணாவி கொண்டு இருந்தார்கள். வேலை கொஞ்சம் விளக்கம் கொஞ்சம் என்று இவன் இருக்க. இவனது குழுத்தலையே, இவனிடம் கொஞ்சம், மற்றவரிடம் கொஞ்சம் என்று பேசி சமாதானங்களையும், இதற்கு முன் எப்போதெல்லாம் இப்படி நடந்தது என்று விளக்கியும். தங்களது தற்பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது என்றெல்லாம் விளக்கிகொண்டு இருந்தார்.

வந்த உயர் மட்ட குழுவிற்கு ஒரே குறிக்கேள் தான், நாளை காலை தங்களை கேட்டால் தவறு எங்கள் மீது இல்லை என்று சொல்ல வேண்டும். அத்ற்கு என்ன என்ன வேண்டுமே அந்த செய்திகளை மட்டுமே கேட்டு தெரிந்து கலைந்த வண்ணம் இருந்தனர். என்ன அவரவர் அளவுக்கு ஏற்றார்போல் நீட்டியும், மடக்கியும் கேட்டுவிட்டு போனார்கள்.

மும்முரமாக நிரலில் மூழ்கி இருந்தவனை குழு தலை கலைத்தது, என்ன சரி பார் சரி பார் என்று சொன்னேனே. இப்போ பார்த்தாயா எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டியதாயிற்று. இவனுக்கோ அவை எதுவும் காதில் விழவே இல்லை. நமது பக்கம் தவறு எதுவும் நடந்ததாக தெரியவில்லை பிறகு எப்படி இப்படி நடந்தது என்று தகவல்களை சரி பார்க்கும் போது தான் தெளிவாயிற்று எங்கே இருந்து இந்த பிழற்சி பிறக்கிறது என்று. கண்டு பிடித்ததில், இவனைவிட இவனது குழுத்தலைக்குத்தான் மிகவும் மகிழ்ச்சி.

உடனே எங்கே எல்லாம் தகவல்களை தட்டி சொல்ல வேண்டுமோ அங்கே எல்லாம் தட்டி சொல்லியாச்சு. அவனும் அவனது குழுதலையும் புறப்படும் போது மறுபடியும் உயர்மட்ட குழு அலோசனை நடத்தான் விட்டது. இவர்கள் வெளியே செல்லும் போது அவர்கள் வருவதை பார்த்ததும், குழு தலை நீ போ, நான் இவர்களுக்கு விளக்கிகொள்கிறேப் என்று சொல்ல, அப்பாடா என்று வெளியேறினான்.

ஒரு அரை மணியில் வந்து விடலாம் என்று வந்தவன் திரும்பும் போது இரவு 1:00ஐ தாண்டி இருந்தது. பசியோ வயிற்றை கிள்ளியது. எங்கேயாவது ஏதாவது கிடைகிறதா பார்க்கலாம் என்று சென்றான். பார்த்துகொண்டே வந்ததில் வெகு தூரம் வந்து விட்டு இருந்தான். கிடைத்ததை வாங்கி கொண்டு வீடு திரும்பும் போது மணி 2ஐ தாண்டி இருந்தது.

அவசர அவசரமாக உண்டவன் படுக்க போகும் முன் பார்த்தான், இன்னும் ஒரு தொலைபேசி செய்தி இருக்க. பார்த்தவன், அம்மாவை கூப்பிடுவதாக சொன்னது நினைவுக்கு வர. தொடர்பு கொள்ள, அம்மாவோ என்னபா இன்னமும் தூங்காம இருக்கிற, உடம்பு என்ன ஆகிறது படு நாளைக்கு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி முடிக்க இருந்த தூக்கமும் தொலைந்தது அவனுக்கு.

என்னவாக இருக்கும் என்ற குழப்பம் ஒரு பக்கம் இருந்தாலும், எல்லாம் விட்டு இப்படி இங்கே வந்து கிடக்கவேண்டிய தேவை தான் என்ன என்று மனம் மறுபடியும் குழப்ப துவங்க. படுக்கையில் தலையை புதைத்துவைத்து கொண்டான்.

தொடரும்.....

வன்முறை ஒரு தொழிலாகுமா - 8

அரசு, அதிகாரம் என்று வந்தால் இருப்பதை காப்பது, வருவதை எதிர்கொள்வது மற்றும் எதிர்காலத்தை மனதில் கொண்டு வளர்சிதிட்டங்களில் ஈடுபடுது தான் முதலானதாகவும் முறையானதாகவும் பார்க்க முடிகின்றது. ஆனால் இந்த பழி தீர்க்கும் வழக்கம் எங்கே இருந்து இத மனித இனத்தில் தொற்றி இருக்கும்.

குடும்பத்துகுள்ளாகவே பார்த்தாலும் கூட அனைவரும் ஒரு மனதாய் சித்திபதும் இல்லை. அனைவரது முயற்சியும் ஒரே நோக்கத்திலோ அல்லது ஒரே தண்மையாகவும் இருப்பதில்லை.

கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுவதை போல், பானையிலே பங்கு வச்சா பூனைகளும் சொந்தமடா, சோதனையில் பங்கு வச்சா சொந்தமெல்லாம் தூரமடா என்ற வழக்கு தான் நினைவில் வருகிறது. மனிதனாய் பிறந்த அனைவருக்கும் அவன் விரும்புகிறானோ இல்லையோ அவனுக்கு என்று கடமைகள் அவனுடனே பிறந்துவிடுகிறது.

அந்த கடமைகளை எவ்வளவு தூரம் நிறைவேற்றுகிறார்களோ அவ்வளவு முக்கத்துவம் பெறுவார்கள் அவர்களது குடும்பத்தில். தலைபிள்ளை தான் அனைத்திற்கும் பொறுப்பு என்று சொல்லி அவனிடமே எல்லாவற்றையும் எதிர்பார்ப்பது நமது இந்தியர்களுக்கு பழகிபோன ஒன்று. அப்படி அவனும் அவனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கருதி, எல்லா வகையான கடமைக்கும் தன்னை ஆட்படுத்திகொண்டு செவ்வனே செய்து முடிப்பதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.

அப்படி தலைபிள்ளை சரியாக தலை எடுக்கமுடியாத போது அடுத்து யார் பொறுப்பாக இருக்கிறார்களோ அவர்களிடன் அந்த கடமைகள் செல்வதையும் பார்த்துக்கொண்டு தான் வருகின்றோம். அப்படி தன்னையும் மீறி தனது பதவி செல்கிறதே என்று எந்த குடும்பதிலாவது தலைபிள்ளைகள் சண்டைக்கு நிற்பதில்லை. அங்கே அவனால் முடியாத போது அடுத்தவனிடம் பதவி செல்வதை இவன் ஏற்றுக்கொள்வது அதற்கு காரணம்.

இந்த நிலைக்கும், ஆட்சி, அதிகாரம் இவைகளிலும் பதவி இடம் மாறுவதும் அப்படியே. பொதுவில் வேறு எந்த மாற்றமும் இருக்க முடியாது. இன்றைக்கும் கூட அண்ணன் தம்பி சண்டையில் அண்ணம் பக்கம் இவ்வளவும், தம்பியின் பக்கம் இவ்வளவும் என்று கொல்லப்படுவதையும் தான் பார்க்கிறோம். காரணம், தனக்குத்தான் பதவியும் பட்டமும் வரவேண்டும் என்று உரிமை கொண்டாடுவதுடன் நில்லாமல். அதை எதிர்க யாரும் இருக்கக்கூட கூடாது என்று செயல்படுவது தான் காரணம்.

இந்த நிகழ்வைத்தான் தேவர் மகன் திரைபடத்தில் அருமையாக படம் பிடித்து காட்டி இருப்பார்கள். ஊரே மதிகின்றது என்றால் மதிக்கும் படி இருக்கவேண்டும். அப்படி எதுமே செய்யமுடியாது, ஆனால் என்னை தான் அனைவரும் போற்றவும் பாராட்டவும் வேண்டும் என்றால் எப்படி.

தான் தேடும் பதவியின் கடமையறிந்து அவைகளில் பழக்கம் பெற்று அனுபவசாலி ஆன பிறகு போட்டி இட்டால் யார் வேண்டாம் என்று சொல்லப்போகிறர்கள். அதை விடுத்து, எடுத்தேன் கவிழ்தேன் என்று நான் தான், தான் என்றும் அறிக்கை விடுவதும். பணத்தை இறைத்து சாட்சிகளையும், வாக்குகளையும் விளைக்கு வாங்கியும் பதவிக்கு என்று வந்து நிற்போரை என்ன என்று சொல்லவது.

அப்படி கள்ளத்தணமாக பதவிக்கு வரும் நபரால் நாட்டுக்குத்தான் என்ன நன்மை விளைய போகுது. போன ஆட்சியர், கருவூலத்தை காலி செய்துவிட்டு போய்விட்டனர் அதனால் எல்லோரும் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு அலையுங்கள். இதை என்னை தேர்ந்தெடுத்தர்கான கசப்பு மருந்தாக நினைத்து கொள்ளுங்கள் என்று புலம்புவதையும் பார்த்து வருகிறோம். முதல் 4 ஆண்டுகளில் எதையுமே செய்யாமால், வருகின்ற பொருள் செலவே ஆகிவிடக்கூடாது என்று இருந்த அரசு. பிறகு வந்த ஓராண்டில் 4 ஆண்டு சேமிப்பையும் கொட்டி கவிழ்த்ததுடன், வந்த தேர்தலில் பொய்யும் புரட்டும் ஆக புலம்பி தீர்த்ததையும் பார்க்க முடிந்தது.

ஆக மொத்தம் திறமையும், உழைப்பும் இல்லாத இடத்தில் தான் இந்த வித காழ்ப்புகளும், வன்முறைகளும் பிறக்கிறது என்று கொள்வோமா.

இப்படி பதவிகளும் பட்டங்களும் பெறும் மக்களால் எப்படி முறையாக நடந்துகொள்ள முடியும். என்ன செய்யவேண்டும் என்றே தெரியாது பிறகு எப்படி அரசு நடத்துவார்கள். நீட்டும் இடங்க்களில் பச்சை மையில் கையொப்பம் மட்டும் இட்டால் மாட்டும் போதுமா. எதற்காக என்றாவது குறைந்த பட்சம் தெரியவேண்டாம்.

இப்படி குறுக்குவழியில் வரும் அனைவரும் தான் வந்த பாதை போல் வேறு எவரும் வந்துவிட கூடாது என்று எச்சரிக்கையாக இந்த தாக்குதல்களை எடுக்கிறார்கள். இவைகளை ஒரு வரியில் சொன்னால் முடியாது. விளக்கமாக தருகிறேன்.

தொடரும்...................

Friday, December 21, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா -7

ஆக ஆட்சி, அதிகாரம் இவைகளில் இருப்பவர்கள் மற்றவர்களை திறமையாக வேலை வாங்க வேண்டும். அது மட்டும் அல்லாது எப்படி பட்ட நிலைமை வந்தாலும் அந்த நிகழ்வுகளுக்கு தகுந்தது போல் செயல்பட்டு நிலைமையை சீர் செய்யவேண்டும். அந்த நீண்ட பட்டியலை பார்கையில், இப்படி ஒரு அமைப்பு ஏன் தோன்றியது என்ற காரணத்தை புறம்தள்ள வேண்டியதில்லை.

பொதுவாக ஆளுபவருக்கும் ஆளப்படுபவருக்கும் உள்ள ஆளுமை எவ்வளவு என்று பார்ப்போம்.

ஆளப்படுபவன் விரும்பும் வரையில் தான் ஆளுபவரின் ஆளுமை அவரிடம் செல்லும். ஆளப்படுபவனுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டு விடவேண்டும் அவ்வளவு தான் தவிற வேறு விதியே இல்லை என்றெல்லாம் இல்லை. எந்த ஒரு மக்களாட்சி நாட்டிலும் இப்படி தான். மக்களாட்சி முறை மனிதனின் தனி சுதந்திரத்தை போற்றி பாதுகாப்பது இப்படி தான்.

ஒரு குமுகாயமோ அல்லது நாடோ, இந்த தனி மனிதர்களின் தொகுப்பு. அப்படி இருக்கும் போது, அத்தனை மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்கும் விதமாக ஆட்சி அதிகாரம் இருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்வது இயலாவது காரியம். ஆதலால், பெரும்பான்மை மக்கள் என்ன விரும்புகிறார்களோ அவைகளை பொதுக்கொள்கையாக கொள்ளுவது செயலாக்கத்துக்கு வந்தது.

பின்னாளில் இதுவே, ஒரு கட்சியின் விருப்பத்தை எதிரொலிக்கும் ஆட்சியாகவும் மாற்றம் பெற்றவரையிலும் சரி. ஆனால் தற்பொழுது உலக அளவில், தனது விருப்பம்மாக மட்டும் இருந்தால் போதாது இந்த ஆட்சி அதிகாரம். மாறாக தனக்கு பிடிக்காதவைகளுக்கு எதிராகவும் வேண்டும் என்று வந்து நிற்கிறது. உதாரணமாக இலங்கையை எடுத்துக்கொள்வோம், இந்தியாவை தாரளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இன்னம் சில விளக்கங்க்களுக்கு பிறகு இந்தியாவை பார்ப்போம்.

தனது மக்களுக்குத்தான் எல்லாம் என்று நின்று இருந்தால் பரவாயில்லை. ஆனால் எல்லாம் எனக்குமட்டும் தான், தன்னை தவிற பிறகு யாருக்கும் எதுவும் கிடைத்து விடக்கூடாது என்ற பொழுதில் அல்லவா ஆயுத போராட்டம் வரை அவர்களை செயலாற்ற வைத்துள்ளது.

ஆட்சியும் அதிகாரமும் எதற்காக, குமுகாயத்தில் இருக்கும் மக்களின் நலங்களையும், பாதுகாப்பையும் உறுதி படுத்துவதும். அந்த மக்களின் முன்னேற்றத்தையும் வளர்த்து, முன்னால் இருந்ததை விட அதிகம் முன்னேரிய மக்களை அந்த குமுகாயத்தில் விட்டு செல்வது தான் ஒரு ஆட்சியின் கடமை.

இதை ஒரு குடும்பம் கொண்டு விளக்கினால் நன்றாக இருக்கும். ஒரு கூலித்தொழிளர் குடும்பத்தில், அவர் அவரது பிள்ளைகளை கட்டாயம் தன்னை போல ஒரு தொழிளாலியாக வரவேண்டும் என்று நினைக்க மாட்டார். மாறாக தனக்கு மேல் பணியாற்றும் அலுவராகவாது பிள்ளை வரவேண்டும் என்று. திட்டமிட்டு பொருள் சேகரித்து, தேடித்தேடி அனைத்தை பிடித்து பிள்ளைகளை வளர்த்து எடுத்து. தனது அந்திம காலத்தில், தான் நட்ட மரம், இன்று காயும் கனியுமாக இருப்பதை பார்த்து கொண்டாடிவிட்டல்லவா செல்வார்.

இது எந்த பொருளாதாரத்தில் இருக்கும் குடும்பத்திற்கும் பொருந்தும். ஒரு குடும்பத்திலேயே இத்தகைய முன்னேற்றங்களை ஒரு தனி மனிதனால் உருவாக்க முடியும் என்றால். ஒரு ஒட்டு மொத்த குமுகாயத்தையும் ஆளுவோருக்கு எவ்வளவு கடமைகள் இருக்கும். தனது ஒரு வருவாயை மட்டுமே வைத்து இவ்வளவு முன்னேற்றத்தை ஒரு தனி மனிதனால் உருவாக்க முடியும் என்றால். ஒரு நாட்டினுடைய வருமானத்தை கொண்டு என்ன எல்லாம் சாதித்து காட்டமுடியும்.

சொல்லப்போனால், நாட்டின் ஒவ்வோரு மனிதன் ஈட்டும் பொருள் அரசாங்கத்தின் வருவாயே. அந்த மொத்த வருவாயையும் கொண்டு அரசு இயந்திரத்தை நடத்தி மீதம் இருக்கும் பொருளில் மக்களுக்கு வேண்டிய திட்டங்களை கொண்டு, பெற்ற பொருளை மக்களுக்கே திரும்ப கொடுத்து இன்னமு அதிகமாக அவர்களை பொருளீட்ட வைத்து. முதலில் கிடைத்ததைவிட அதிக வருவாயை கிடைக்க செய்வது யார் ஆட்சியில் இருந்தாலும் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்று.

ஆனால் இன்றைக்கு என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது...........

தொடரும்........

Thursday, December 20, 2007

கலைஞருக்கு என்னை கண்டு பயம் - திருவாளர் நடராசன்

"கலைஞருக்கு என் மீது இருப்பது ஒருவித பயம் கலந்த நட்பு....நடராசன் எதை செய்தாலும் சரியாத்தான் செய்வான். நம்மை எதுவும் செய்யாமல் இருந்தால் போதும்! என்று நினைத்து. ரொம்ப கவனமாக பயத்துடனே என் செயல்பாடுகளை அவர் கவனிப்பார். இது அச்சம் கலந்த நட்பு. இது சில முண்டங்க்களுக்கு தெரியவில்லை"

குமுதம் இரிப்போர்டர் பத்திரிக்கையில் வந்த செய்தி இது.

தன்னிடம் கொஞ்சம் காசும் அதை அள்ளிக்கொடுக்க மனமும் இருந்தால் போதும். பத்திரிக்கைகளை இப்படி என்ன, மனமோகன் சிங்குக்கு என்னை கண்டால் ஓடோடி ஒலிந்துகொள்வார். அமெரிக்க அதிபர் மேல் அங்கியை கழட்டி கக்கத்தில் வைத்துக்கொள்வார். ஐரோப்பா கூட்டமைப்பு தினமும் என்னை கேட்டுத்தான் தனது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இப்படி என்ன வேண்டுமானாலும் எழுத வைக்கலாம் போலும்.

கேப்பையில் நெய்வடிகின்றது என்றால் கேட்டு எழுதுபவனுக்கு எங்கே போனது என்று தெரியவில்லை. எவ்வளவு கொட்டிக்கொடுத்தானோ தெரியவில்லை இந்த பத்திரிக்கைக்கு நடராசன். அது சரி அவனது பணமாக இருத்தால் தானே கவலை கொள்ள கதை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு என்று சொல்வார்களே அந்த மாதிரி. தங்கத் தாரகை விருதை போல இருக்கிறது இதுவும்.

குமுதம் பத்திரிக்கையே இன்னமும் இது போல் நிறைய பிதற்றல்களை எழுதவும். இலவச சேவையாக இருந்தால், கீழ்ப்பாக்கம் பக்கம் சென்றால் இன்னமும் இதைவிட அதிக பிதற்றல்கள் கிடைக்கும் நீங்களும் கவர்சி தலைப்புகளுடன் வெளியிடலாம். வாழ்த்துக்கள்.......

வன்முறை ஒரு தொழிலாகுமா - 6

அதிகாரமும், ஆட்சியும் ஏன் இப்படி ஒரு முகம் கொண்டுள்ளது. அதிகாரம் ஆட்சி என்றாலே இப்படி தான் இருக்கும் என்று கொள்ளலாமா. ஆட்சி, அதிகாரம் இவை இரண்டிலும் அடுத்தவர்களை ஏவி வேலை வாங்குவது மட்டுமே வேலை. அதோடு மட்டும் அல்ல, தன்னை சார்ந்து இருக்கும் மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும் இதில் ஒரு பகுதி.

உள்ளபடி பார்த்தால், அடுத்தவர்களை ஆட்டுவிக்கும் ஒரு பொம்மலாட்ட கலைஞர்கள் அவர்கள். இந்த செயலுக்கு இரண்டு முகங்கள் உண்டு, நல்லதும் கொட்டதுமாக.

நல்லவை என்றால், இருக்கின்ற வேலைகளை மக்களிடம் பகிர்ந்துதளித்து விரைவில் முடிப்பது. இதிலே ஒரு வேலையை எப்படி எவர் கொண்டு முடிப்பது என்று தெரிந்துதளித்து கையாளுவது ஒரு தனி திறமை.

கெட்டவை என்றால், அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால், அடுத்தவர்களை தன் விருப்பத்திற்காக அவர்களது விருப்பமோ உடன்படோ இல்லாவிட்டாலும் கூட செய்யவைத்து கட்டாயப்படுத்துவது. இதிலே எல்லா விதமான விதி மீறல்களையும் கொள்ளலாம்.

அதிகாரத்தில் அமர்ந்த முதலில், மிகவும் கடமை பாராட்டும் நபராக மட்டுமே இருப்பவர்கள் பின்னாளில் ஏன் இப்படி வக்கிரம் பிடித்தவர்களாக மாறுகிறார்கள். எதை அவர்களை அப்படி தூண்டுகிறது என்று முதலில் பார்ப்போம்.

அடுத்தவரை வேலை வாங்குவதில் இருக்கும் சிக்கல்கள்

1) அவர் சொல்லும் (ஏவும்) வேலையை செய்துமுடிக்க உடன்பட வேண்டும்
2) அப்படி செய்ய்யும் செயலில் அனுபவம் கொண்டவராக இருக்கவேண்டும்
3) வேலைகளில் இருக்கும் சந்தேகங்கள் அல்லாமல் வேலைகளை பற்றி கேள்வி கேட்க்காமல் செய்து முடிப்பது
4) பொதுவாக இந்த மாதிரியான வேலைகளுக்கு என்ன வெகுமதி கிடைக்குமோ அவைகள் அல்லாமல் வேறு எதும் கேட்டாமல் இருப்பது
5) எப்போது, என்ன நிலைமையில் வேலைகள் கொடுத்தாலும் முடிக்க முன்வருவது மற்றும் முடிப்பது

இப்படி பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.

அப்படி தொகுத்துப்பார்த்தால், என்ன தான் நீதியாக இத்தனை நாள் தெரிந்து வந்தாலும் இவைகளில் ஒரு விதமான அடிமைத்தனம் இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

எவ்வளவு தூரம் வேலை பார்ப்பவர்களுக்கு தேவைகள் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அவர்களது அடிமை போக்கு நீளும். அதன் நீட்சியாகத்தான், வேலைகளின் தொடர்பையும் மீறி இவர்களது உறவு அதிகாரவர்கங்களோடு இருப்பதை பார்க்க முடியும். இதை தான் இன்றைய நாட்களில் சொம்பு தூக்குவது, அய்சு வைப்பது, சால்ரா அடிப்பது, தூக்கு தூக்கி, இளித்துக்கொண்டு அலைவது, அல்லைகை, பார்க்கும் இடங்களில் எல்லாம் காலில் விழுத்து வணங்குவது, தேவைக்கு மிகுதியாக அதிகார வர்கத்தை புகழ்வது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

வீட்டிலே கூட சொன்ன பேச்சை தட்டாமல் கேக்கும் பிள்ளைக்கு இருக்கும் மரியாதை திமிர் பிடித்த குழந்தைக்கு தாய் அல்லாமல் மற்றவரிடத்து இல்லாமல் இருப்பதை சாதரணமாக பார்க்கமுடியும். மனிதர்கள் அனைவரும் பொதுவில் அப்படிதான். பெற்றோரிடம் இப்படி இருப்பதை பாசத்தின் நீட்சி என்று எடுத்து கொண்டாலும். தனக்கும் வேலைக்கும் தவிற வேறு எதுக்குமே தேவை படாத 3வது நபரை பெற்றோருக்கும் மேல் என்று நடத்தவேண்டிய அவசியம் என்ன இந்த விதமான நபர்களுக்கு................

தொடரும்......

Wednesday, December 19, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா - 5

அதிகாரத்தை விட்டுக்கொடுப்பது எளிதான செயலில்லை தான். இருந்தாலும் எதற்குமே ஒரு முடிவு உண்டு, அப்படி முடியும் கால் அடுத்து அந்த அதிகாரத்தை கைபற்றுவது யார் என்ற போட்டியும் விரும்பதகாத காரியங்களும் நிகழ்வதும் உண்டு. உதாரணத்திற்கு இராமாயண பாரதத்தில் துவங்கி உண்மையாக நடந்த்த நலங்கிள்ளி வரலாறுவரை எடுத்துகொள்ளலாம்.

இராமனுக்கு அரச அதிகாரம் இல்லை சரி, பிறகு காட்டுக்கு சென்று வாழவேண்டும் என்ற உத்தரவு எதற்கு. பாண்டவர்கள் தங்களது அதிகாரம் முதல் மனையாள் வரை சூதாட்டதில் தோற்றார்கள் சரி, பிறகு எதற்கு நாட்டைவிட்டு காட்டுக்கும், பிறகு எங்கே இருக்ககிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஒரு தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டளை.

இன்னமும் இப்படி எத்தணையோ உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி வரும் உதாரணங்களை ஆய்ந்தோமானால், பொதுவாக ஒரு செய்தி தெரியும். அதிகாரத்தில் இருப்பவர்கள் விலக மறுப்பதும். அதிகாரத்தில் இல்லாதோர் அதிகாரத்தை அடைய என்ன எல்லாம் செய்யமுடியுமோ அவைகள் அனைத்தும் செய்து பார்ப்பதையும் பார்க்கமுடியும்.

இதில் இதைவிட கொடுமை, அதிகாரத்தில் வரும் புது குழு அல்லது நபர். தனக்கு முந்தைய அதிகார குழுவை படுத்தும் பாடுதான் நாடு கடத்தியல் இருந்து கொலைவரை சென்று நிற்கின்றது.

அவர்கள் தான் இப்போது பதவியில் இல்லை, பிறகு அவர்களை ஒட்டு மொத்தமாக ஒழிக்கவேண்டும் என்ற தேவை எதனால் இவர்களுக்கு வருகின்றது. அவர்களும் இதே தேசம், பூமியில் தான் வார்ழ்கிறார்கள். அதிகாரத்தை இழந்த உடன் அவர்களை, அவர்களது சொந்த தேசத்தைவிட்டோ அல்லது உலகத்தைவிட்டோ மன்னர்கள் அனுப்பி வைத்ததன் காரணம். முன்னாள் மன்னனது விசுவாசிகள், அவரின் வாரிசுகளை கொண்டு வந்து தங்க்களுக்கு எதிரான ஒரு கருத்தாக்கத்தை மக்களின் மனதில் விதைத்துவிட்டால், இத்தணை ஆண்டு காலம் ஆண்ட மன்னனிடமே நாட்டை கொடுத்தால் என்ன என்று இன்னாள் மன்னனுக்கு எதிராக மக்கள் செயல்பட துவங்கினால் என்ன செய்வது செய்வது என்ற அச்சம். அச்சத்தின் துவக்கமாக நம்பாமை, நம்பாமையின் துவக்கமாக, இவர்கள் பிறருக்கு செய்துவந்த துரோகங்கள் என்று ஒரு சங்கிலி தொடராக செல்லுவதை நோக்கமுடியும். மொத்தத்தில் தனது மேலும், தன்னை சார்ந்தவரின் மேலும் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லாமல் இருப்பவர்களது செயலாக அது தெரிகிறது.

ஆட்சி அதிகாரம் என்று இருப்பவர்கள் அனைவரும் இப்படி தான் இருப்பார்களா. அல்லது ஒரு சிலர் மட்டுமே இப்படி இருப்பார்களா?

அமெரிக்காவின் இரட்டைகோபுர தகர்ப்புக்கு பிறகு சவுதி அரேபியாவின் மன்னர் தொலைகாட்சியில் பேட்டி கொடுக்கிறார். அதில் அவர் சொன்ன செய்தி இந்த உகத்தில், உங்களுக்காவது பதவி போனால் உயிராது மிஞ்சும், ஆனால் எங்களுக்கு பதவி போனால் குடும்பம் கூட மிஞ்சாது என்று உலகத்தார் முன்னிலையில் போட்டு உடைத்தார் பார்க்கனும்.

ஆட்சி அதிகாரத்தில் மட்டும் இல்லை இந்த சண்டையும் சச்ரவுகள். வீட்டில் தொடங்கி, காடுவரை அனைதிலும் உண்டு. சாதாரண வரப்பு தகராரில் இருந்து நாட்டு எல்லை வரை இது நீளுவதையும் பார்க்கமுடியும்.

அக்கம் பக்கத்து மாநிலத்து மக்களையும், ஆட்சியர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டுவது. பிறகு அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகளில் குளிர் காயுவதும் தற்பொழுது வழக்கமாக நடப்பதை பார்த்தும் வருகின்றோம்.

மொத்தத்தில் அரசியல்வாதிகளால் இவ்வளவு இடர்பாடுகள் தோன்றுவது ஏன்?...............

தொடரும்..............

Tuesday, December 18, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா - 4

அரசியலும் அரசியல்வாதிகளினது செயல்களை பார்கலாம். குமுகாயம் உருவாக தொடங்கி காலத்தில் சக்தி வாய்ந்தவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் யாராலும் எதுவும் செய்துவிட முடியாது என்று தான் இருந்திருக்கும். பின் நாளில் இதற்கு தீர்வாக குமூக பாதுகாப்பு குழுவை உருவாக்கி எல்லோருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இப்படி ஒரு அமைப்பு உருவாகும் போது அந்த அமைப்புக்கு கட்டளை வழங்கவும், கட்டுப்படுத்தவும் அதிகாரங்களை தலைமை பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் நபருக்கோ குழுவிற்கோ கொடுத்து இருக்கவேண்டும். தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஊர் தலைவர்கள் போல.

இப்படி அதிகாரம் ஓரிடத்தில் குவியும் போது, அந்த அதிகாரம் என்றைக்கும் தவறான முறையிலோ அல்லது சொந்த காரியங்களுக்கு பயண் பட்டுவிடக்கூடாது என்று அப்படி ஒன்று நடக்கும் வரையிலும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்பில்லை தான். ஆனால் அப்படி ஒன்று நிகழும் போது, யாரிடம் சென்று முறையிடுவது.

குமுகத்தில் நிகழும் கொடுமைகளை களைய உருவாக்கப்பட்ட பாதுகாப்பணி, இப்படி ஒரு பாதகத்தை நிகழ்த்தும் போது வேறு எங்கே சென்று முறையிட முடியும் அவர்களால். பிறகு இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழல் உருவாகும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்று பார்க்கும் போது. அதிகார குழுவின் எல்லைகளும், எல்லைகள் மீறபட்டும் போது எப்படி சூழல்களை மாற்றி அமைப்பது என்று வழிவகைகள் தேர்ந்தெடுத்து செயலாக்கும் முறையையும் அறிவித்து செயலாற்றி வந்திருக்கவேண்டும்.

இப்படி சிறியதாக தோன்றியவைகள் பின் நாளில் பெரும் அரசியல் அணியாக விரிவடைந்திிருக்க வேண்டும். தமிழ் வரலாறுகளும் சரி இன்ன பிற வரலாறுகளும் சரி, ஒரு அரசாட்சியை பிடித்தால் அதை தொடர்ந்து அங்கே அவர்களது ஆட்சி நிலைத்து நிற்க என்ன என்ன செய்யவேண்டுமோ அவைகள் அனைத்தும் ஒரு பட்டியலிட்டு நிறைவேற்றுவார்கள். அதிலே மனிதத்தை காணமுடியாது.

முடியாட்சி ஆகட்டும், இல்லை மக்களாட்சி ஆகட்டும். இரண்டிலும் இருக்கும் ஒரு ஒற்றுமை அதிகாரமும், அந்த அதிகாரத்தின் மையமாக ஒருவரே செயல்படுவது தான்.

அப்படி இருக்க 2க்கும் என்ன வித்தியாசம், முடியாட்சி ஒரு எதிரி வந்து வீழ்த்தும் வரையில் அதிகாரத்தில் இருக்கும். ஆனால் மக்களாட்சியோ மக்கள் விரும்பும் வரைக்கும் ஆட்சியில் இருக்கும். அதாவது மக்கள் கூடி எடுக்கும் முடிவுக்கு ஆட்சிக்குழு கட்டுபடவேண்டும். மக்கள் எப்படி கூடி முடிவெடுப்பார்கள், அதைத்தான் தேர்தல் என்று அழைக்கின்றோம்.

என்ன அருமையான ஒரு ஏற்பாடு மக்களாட்சி...........

தொடரும்.........

Saturday, December 15, 2007

சத்தம் போடாதே

நம்பிக்கை தோற்றுவிக்கும் விதமான ஒரு கதையை படமாக கொடுத்த வசந்துவிற்கு வாழ்த்துகள். துவக்கம் முதல் ஒரு இருகமாக செல்லும் படம் பிருத்துவிராசன் வருகைக்கு பிறகு முன்னே பார்த்தவைகள் மறந்தே போகின்றது. கேரளத்து நடினாக இருந்தாலும் தமிழ் நகைசுவையில் விளையாடுகிறார் மனிதன்.

திருமணத்திற்கு பிறகு இப்படி ஒரு குறை எனக்கு இருப்பதாக தெரியவந்து, அவர் என்னை ஒதுக்கி இருந்தால் நமக்கு எப்படி இருக்கும் என்ற வசனதில் அந்த பாத்திரத்தின் பண்பை விளக்கிவிடுகிறார் இயக்குனர்.

தோற்றத்திற்கும் நடத்தைக்கும் தொடர்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல் கனவனை கொண்டு அழகாக உணர்த்தி இருக்கிறார் இயக்குனர். ஆனால் கோர்வையாக பொய் மேல் பொய் சொல்வதும், 6 மாத காலம் கடந்தாக காட்டுவது நம்பும்படியா இல்லை.

பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் பாடலை தவிற்து, பின்னனி இசையோ, மற்ற பாடலோ மனதிலே நிற்கவில்லை. பொதுவாக இந்த மாதிரி படங்க்களுக்கு பின்னனி இசை எவ்வளவு அவசியம் என்று அடுத்தவர் சொல்லி தெரியும் நிலையில் யுவனோ, வசந்தோ இல்லை. இருப்பினும் இப்படி கோட்டை விட்டிருப்பது அவர்களுகு தான் குறையே தவிற நமக்கு அல்ல. இராம் படத்தில் இருக்கும் பின்னனியில் ஒரு 20 சதவிகதமாக கொடுத்து இருக்கலாம்........

பானுவின் வீட்டாறாக வருவோரும், இன்ன பிற கலைஞர்களை விரல் விட்டு கணகெடுத்து விடலாம். தேவைக்கு அதிகமான அரங்க அமைபோ, வீரம் காட்டும் விதமாக ஏக வசனமோ, கோடிகளில் அட்டை பெட்டி குப்பைகளை கொட்டி அதன் நடுவே ஒரு 100 ஆட்க்களை ஆட வைத்து பின்னனியில் வயிற்று வலியில் இரகுமான் கதறும் மற்றும் முக்கும் பாடல்கள் போல் இல்லாமல். அழகாக அளவாக படம் எடுத்தமைக்கு வசந்துவிற்கு பாராட்டுக்கள்.

நகைச்சுவை என்ற பெயரில் தனி மனித தாக்குதலோ, தனி மனித குறைகளை கேளி செய்யும் விதமாக இல்லாமல். நகைச்சுவையில் பானு சிரிக்கும் போது நமக்கும் சிரிப்பு வருவது இயக்குனரின் இன்னும் ஒரு தனி சிறப்பு.

வெற்றிக்கு பிறகு எத்தணையோ வீர வசனங்களை நாயகன் பேசி இருக்க வேண்டிய இடங்களில் ஒரு புன்னகையோடு நிறுத்தும் தைரியம் வசந்துக்கு மட்டுமே. இதிலே பாலசந்தரரை நினைவூட்டுகிறார் நமக்கும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.

படத்தில் இருக்கும் பலம் நல்லவை தான் வெற்றிகொள்ளும், பலவீனம் தனது குறைகளை எவ்வளவு வாக்குறுதிகள் கொடுத்தாலும் யாரிடமும் சொல்ல கூடாது போலும் என்று காட்டி இருப்பது. தவிற்து இருக்கலாம் இதையும் அந்த கடைசி காட்சியையும். குணா, சேது, பிதாமகன் இப்படி கதைகளை போட்டு குழப்பிக்கொண்டார் போலும்.

வாழ்த்துகள் வசந்து, உங்களிடம் இன்னமும் இது போல் நிறைய எதிர்பார்க்கிறோம். கொடுத்து அசத்துங்கள்...

Thursday, December 13, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா - 3

பொதுவாக நீதிக்கு புறம்பாக செயல்கள் அரங்கேறும் போது யாராக இருந்தாலும் கோபம் வருவது இயற்கையே. அப்படி கோபம் கொள்ளும் மனிதர்கள் அனைவரும் நீதிக்காக போராட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அவர்களது நிலைமைகளுக்கு ஏற்றவாரு நடவடிக்கைளை மேற்கொள்ளுவதும் இயல்பு. இது அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் காணக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வு.

அப்படி தட்டிக்கேட்கிறேன் என்று வாங்கிகட்டி கொள்வோர் தான் அதிகம். ஒரு சில பேர் மட்டும் நிலைமைக்கும் அப்பால் செயல்பட்டு நிற்பதை காண நேர்கிறது. உதாரணத்திற்கு இந்தியன் விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முற்படும் போது, உள்ளே இருந்த பயணிகளில் ஒருவரான இராணுவ தலைவனாக பணியாற்றி பணிவிடை பெற்று வெகுகாலம் ஆன போதிலும் அன்று துணிவுமிக்க ஒரு சிலரது துணையுடன் அந்த விமான கடத்தலை தவிற்து கொடுத்த கபில் தேவ் போல் சிலரை உதாரணமாக கொள்ளலாம்.

ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த நிலைமையில் தப்பித்து போனால் மட்டுமே போதும் மற்றபடி வேறு என்ன நடந்தாலும் தனக்கும் நடப்பவைகளுக்கும் சம்பந்தமே இல்லை என்று இருப்பதை பொதுவாக எங்கேயும் காணமுடியும். நடப்பது சகிக்கவே முடியாத கொடுமையாவே இருந்தாலும் இப்படித்தான் எதிர்கொள்வார்கள். குறிப்பாக சொன்னால், பக்கத்து வீட்டில் கூறை எரிந்தாலும் தண்ணீரோடு தயாராக இருப்பார்கள் தீ தனது வீட்டிற்கு வந்ததும் ஊற்றி அனைக்கலாமே என்று.

இந்த கல் நேஞ்சம் அனைவருக்கும் வந்த காரணம் தான் என்ன.

எனக்கு தெரிந்தவரை சிறு வயது முதல் கல்லூரி முடிக்கும் வரை அனைத்து விதமான கல்விகளிலும் நீதிக்கு எதிராக நடக்கும் செயல்களுக்கு பாரதி சொன்ன "மோதி மிதித்து விடு பாப்பா" என்ற வாசகத்தை தான் கொடுத்தது, இன்று கொடுத்துக்கொண்டு இருக்கிறது ஆசிரிய குமுகாயம். இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதினால் தான், மாணவர்களது போராட்ட குணம் தீபொறி தெரிக்கும் போராட்டமாக இருக்கும். மாணவர்கள் கூடி இருக்கும் இடத்தில் ஒரு பிணக்கு என்றால், எளிதில் விட்டு விட மாட்டார்கள் அவர்கள்.

இவர்களது போராட்டத்தை ஊடகங்களும் சரி, காவலர்களும் சரி ஒரு தீய செயலாக எடுத்துகொள்ளுவதும் இல்லை தூற்றுவதும் இல்லை. இதை தற்பொழுது நடை பெற்ற மருத்துவ மாணவர்கள் போராட்டம வரை பார்த்து இருக்கின்றோம். போராட்டத்தில் அவர்கள் கொள்ளும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் காவலர்களுக்கு அதிக வேலைகளை கொடுப்பது இல்லை. சில வேளைகளில் நிலைமை கையை மீறி செல்வதும் உண்டு அண்ணாமலை இராசேந்திரன் போல்.

ஐந்து வயது முதல் 21 அகவை வரை, நீதி, நேர்மை, ஒழுக்கம், குமுகம் என்று இருந்த இவர்கள் தான் பின் நாளில் இந்த தவிற்தலில் ஈடுபடுகிறார்கள். தவிற்க என்ன என்ன காரணங்கள் வேண்டுமோ அவைகள் அனைத்தும் இவர்களுக்கு தெரியும்.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம், எது இவர்களை இப்படி மாற்றம் கொள்ள செய்கின்றது. 21 அகவை வரை இருந்த தைரியம் காணாமல் போகும் காரணம் என்ன..............

தொடரும்.................

Wednesday, December 12, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா-2

சட்டமும், காவல்துறையும் இந்த மாதிரியான வன்முறையாளர்களை அடக்க முடியாத அளவிற்கு என்ன பெரிய வீரர்களா அவர்கள். ஒரு பகுதிக்கு என்று இருக்கும் காவலர்களது எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து செயலாற்றும் போது நாடுமுழுவதும் உள்ள சந்து பொந்துகள் எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே உளவு பெறவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனும் அந்த படைக்கு உண்டு.

இவைகளை போல நாட்டை விட்டே ஓடினாலும் இண்டர் போல் அமைப்புகள் மூலம் வலைவீசும் வலியும் அவர்களுக்கு உண்டு. இராணுவம் நாட்டை சுற்றியும், காவலர்கள் நாட்டின் உள்ளேயும் என்று அவர்களது படையணிகளுக்கு ஈடாக செயல்படக்கூடியவர்கள்.

பார்வைக்கு எளிதாகவும், அடுத்தவர்களை எளிதில் பேசவைக்கும் அவர்களது திறனும் அவர்களுக்கு என்று மட்டுமே இருக்கும் தனி திறன்கள். இவை எல்லாவற்றையும் விட அவர்களுக்குள் இருக்கும் அந்து உள் உந்துதல். பார்க்கும் விடயங்களை கொண்டு முன்னால் கொண்ட விடயங்க்களோடு எளிதில் தொடர்புபடுத்தி கோர்வையாக்கி அனுமானம் பெரும் விதமே தனி, அதற்கு எல்லாம் கவிஞர்களை மிஞ்சிய கற்பனை திறனும் ஆற்றலும் வேண்டும் அவர்களைப்போல்.

இப்படி தனி தகுதிகளும் திறமைகளும் உள்ளடக்கிய காவலர்களை, ஊடகங்களும் சரி, அரசியல் கட்சிக்களும் சரி கோமாளியாக பொதுமக்களுக்கு சித்தரித்து காட்டுவது தான் மிகவும் வேதனையான விதயம்.

பொதுவாக திரையில் காட்டும் காட்சி இது, காவலர்கள் வருவார்கள். கையூட்டு பெறும் பொருட்டு கைகட்டி நிற்பார்கள். அவர்கள் வீசும் வசவுகளையும் ஏச்சு பேச்சுகளையும் கடமையே என்று கேட்டுவிட்டு, விட்டேறியும் பொருளை எடுத்துக்கொண்டு செல்வதாக காட்டினார்கள், காட்டுகிறார்கள், காட்டுவார்கள். உதாரணத்திற்கு தற்பொழுது வெளியாகி படமான மறுதமலை படத்தை எடுத்துக்கொள்ளலாம். வடிவேலு கொண்டுள்ள பாத்திரம் ஒரு பிச்சைகாரனுக்கு ஈடாக சித்தரிக்கபட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.

ஆனால் உண்மை நிலைமை வேறு. காவலர்கள் மட்டும் சற்று கண் அயர்ந்தால் போதும் ஒரு இரவிலே ஊரே தலைகீழாக மாறும் நிலைமை தான் இன்று நாட்டில் இருக்கின்றது. உதாரணத்திற்கு அண்டை நாடான பாக்கிட்தான், இந்தியாவிலே குழப்பம் விளைய வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் கள்ள பணத்தாள்களை துரோகிகளது துணையுடன் நாட்டிலே புளங்கவிட்டது. இந்திய காவல்துறையின் செயல்பாடால் விரைவில் அந்த துரோகிகள் அடையாள படுத்தப்பட்டு, கள்ள தாளின் புழக்கம் அழிக்கப்பட்டது. நாடு முழுவதும் பரவிய அந்த புற்று நோயை கண்டு நீக்கியவர்கள் அவர்கள். இதில் அனைத்து மா நிலத்து காவலர்களும் அடங்குவர்.

இப்படி பட்ட ஒரு பெரும் படையணியை கோமாளியாகவும், கேளிக்குறிய ஒரு கருவாகவும், பொருளாகவும் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன ஊடகத்துக்கு......

தொடரும்........

Tuesday, December 11, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா



எத்தனையோ 100 படங்களும், கதைகளும், கட்டுரைகளும், இன்னமும் எத்தனை வகை செய்தி தொடர்பு சாதனங்கள் உண்டோ அவைகள் அனைத்திலும் வன்முறையை நீதி படுத்துதாத சாதனங்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நல்ல மனிதனாக இருந்த ஒருவன் எப்படி வன்முறையாளனாக மாற்றப்படுகிறான். தனக்காக மாறிய அவன், பிறகு சமுகத்தின் அவலங்களை தட்டிக்கேட்கும் ஒரு பொதுமனிதனாக மாற்றம் பெற்றுவதாக கதைகள் அமைவது உண்டு. இதிலே அந்த கதாபாத்திரத்தின் மேல் கரிசணம் வரும் பொருட்டு நீதிக்கான சண்டையில் அவனோ அல்லது அவனது குடும்பமோ மடிவதாகத்தான் கதைகள் பெரும்பாலும் முடிவது உண்டு.


வன்முறையின் அவசியம் என்ன என்று முதலில் பார்ப்போம். தனது வாழ்க்கைக்கு வேண்டியவைகளை சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கும் ஒரு மனிதன், தானும் அடுத்தவர்களை போல் வாழவேண்டும் என்ற அவா பிறக்கும். அதற்கான எல்ல முயற்சிகளையும் முன்னெடுப்பான். அப்படி அவன் கொள்ளும் எல்ல முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாக நிற்கும் அவனது பொருளாதார நிலை.


பொருள் வேண்டி சென்ற இடத்தில் எல்லாம் பொருள் கிடைகின்றதோ இல்லையோ அவமானம் நிச்சயம் கிடைக்கு. அதுவும் எப்படி பட்ட அவமானம், நீ எல்லாம் ஒரு மனிதன் என்று என்னிடம் பொருள் வேண்டி வந்துவிட்டாய். போடா போய் பிச்சை எடு என்ற வசை சொற்கள்.


பொருள் இல்லை என்றால் வரும் ஏமாற்றத்தைவிட, அதன் பொருட்டு வரும் அவமானங்களை சாதாரண மனிதர்கள் மறப்பதற்கு இல்லை தான். மீண்டும் மீண்டும் முயற்சி. தன்னிடம் மானம் மீதம் இருக்கும் வரை தொடர்வான். ஒரு வழியாக மானம் முழுதும் போன பிறகும், மனது முழுமையாய் மறுத்து போன பிறகு அவனுக்கு தோன்றும்............


கொடு என்று கேட்டால் தூற்றுவார்கள் இனி எடு என்று சொல்லி பார்ப்போம் என்று, செய்யவும் செய்வார்கள். முடிவு அன்றைக்கு பிச்சை எடு என்று ஆனவ ஏளம் செய்தவர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தானே வலிய வந்து பொருள் கொடுத்துவிட்டு போவார்கள்.


இன்றைகு இவர்கள் கொடுக்கும் பொருள் அவனை நல்ல வாழ்க்கையா வாழ வைக்கப்போகிறது. மாறாக இதன் பொருட்டு அவனுக்கு கிடைக்கும் பொருளை முதலில் தான் விரும்பிய வண்ணம் எல்லாம் நினைத்து நினைத்து அனுபவிப்பான். பிறகு கூட இருக்கும் கூட்டாளிகளுக்கு அள்ளி கொடுப்பான். இப்படி ஒரு காளான் முளைத்துள்ளதை கேட்ட பெரிய ஆட்கள் எல்லாம் இவனை தீர்த்துகட்டவோ அல்லது அவனது அணியில் இவனை சேர்க்கவோ செயலாற்ற. அவனுக்கு மறுபடியும் ஒரு போராட்டம்.


இப்படி படி படியாக முன்னேறி ஒரு கால கட்டத்தில், மனித நேயமே இல்லா கொடும் விலங்காக மாற்றம் பெறுவான்.


தொடரும்......

Sunday, December 9, 2007

கற்றது தமிழ் - விமர்சனம்

தலைப்பில் பாதியை மட்டும் கொடுத்து இருக்கிறார்கள். இவன் ஒரு கிறுக்கன், அவன் கற்றது தமிழ் என்று இருந்திருக்க வேண்டும்.

மற்ற படி படத்தில், மலுங்க மலுங்க விழிக்கும் அந்த விழியை தவிற கதையும் கூட இல்லை. நாயகனில் சரண்யாவை பார்த்தது போல் இருக்கிறது அந்த பெண்ணை பார்க்கும் போதெலாம். படத்தின் கோனமும், அவள் பேசும் விதமும் அப்படியே இருக்கிறது. இவைகள் தவிற கதைக்கூட நம்பும் படியாக ஏதும் இல்லை படத்தில்.

இதில் வாழவேண்டும் என்று நினைக்கும் போது காவலர்கள் வேட்டையாடுவதை போல் காட்சீயமைபு வேறு. constant Gardner படத்தை ஈ என்று எடுத்தபோது, அந்த அரங்க அமைப்பும், அந்த கதா பாத்திரமும் சீவாவை வெகுவாக பாதித்து இருக்கும் போலும். அதே போல் மற்றும் ஒரு படம் என்று ஏமாந்தார் போலும்.

அந்த கிறுக்கு கதா பாத்திரம் என்ன படித்து இருந்தாலும் இப்படி தான் செய்யும். அது இப்படி செய்வது கிறுக்கினால் படித்ததினால் அல்ல.......

Friday, December 7, 2007

நல்லவர்கள் உலகம் இது தானா

எது செஞ்சாலும் கேட்காமல் இருக்கும் அப்பா நல்லவர்

எது கேட்டாலும் ஏன் என்று கேட்க்காமல் எடுத்தும், வாங்கியும் தரும் அம்மா மிகவும் நல்லவள்

கூடவே இருந்துகொண்டு இவன்/இவள் செய்யும் அக்கிரமங்க்களை கண்டும் காணாமலும் இருக்கும் நண்பன் மிகவு நல்லவன்

என்ன பாவம் செய்தாலும் தண்டிக்கமலும் மட்டும் இல்லாமல் கேட்ப்பதை விட அதிகம் கொடுக்கும் கடவுள் நல்லவர்

படிக்கவோ, எழுதவோ, வீட்டுப்பாடம் என்று எதுவும் கேட்க்காத ஆசிரியர் மிகவும் நல்லவர்

ஓட்டுக்கு 1000 கொடுக்கும் அரசியல்வாதிகளும் கட்சிகளும் மிகவும் நல்லது

கேட்டவுடன் கடன் கொடுப்பதுடன் திருப்பி கொடு என்று கேட்க்காதவர் மிகவும் நல்லவர்

கட்டணத்துக்கு மேல் மிக அதிக இணாம் கொடுப்பவர் நல்ல வாடிக்கையாளர்

மீதம் சில்லரை கேட்க்காத பயணி மிகவும் கண்ணியமானவர்

காசு குறைந்தாலும் சீட்டு தரும் நடத்துனர் மிகவும் நல்ல நடத்துனர்

சொல்லும் இடத்தில் எல்லாம் வண்டியை நிறுத்தி இறக்கிவிடுபவர் நல்ல ஓட்டுனர்

சொத்தை காய்களையும், சில்லரையும் கேட்டாகவர்கள் நல்லா காய்வாங்கும் வாடிக்கையாளர்

இது இல்லை அது இல்லை என்று சொல்லாதவன் நல்ல குடிமகன்

என்ன அக்கிரமம் செய்தாலும் கேட்காதவள் நல்ல மனைவி

என்ன சொன்னாலும் பணியும் ஆண் மிக சிறந்த கனவன்

இப்படி எத்தனையோ அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி இருப்பவைகள் தான் நல்லது என்றால் அதன் பொருள் தான் என்ன? சோம்பேறித்தனம் இல்லாமல் வேறு என்ன சொல்ல. மேலே சொன்ன அத்தனையிலும் இருக்கும் ஒரே ஒற்றுமை, தனக்கு சொந்தம் இல்லாத அல்லது உழைப்பால் அடையவேண்டியவைகளை கொஞ்சம் கூட உழைப்போ இல்லை வேறு எதுமோ இல்லாமல் அடைவது தான். இது தான் நல்லவர்களின் உலகமா. தலை சுற்றுகிறது.