Monday, March 21, 2011

மானம் கெட்ட இந்தியா, லிபியா பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது, நீலி கண்ணீர் வடிக்கிறாயோ......

வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருக்கும் செய்தியை பாருங்கள்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=393754&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

"லிபியாவில் தற்போதைய வன்முறை நிகழ்வுகள், விமானத் தாக்குதல்கள் ஆகியவற்றை மிகவும் கவலையுடன் கவனித்து வருகிறோம். வன்முறைகளையும் வேறுபாடுகளை களைய படைகளை பயன்படுத்துவதையும் கைவிட வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொள்கிறது. ஆயுத மோதலை நிறுத்தவேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை." என்று எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.

ஏன் இலங்கையில் இப்படி தானே நடந்தது, அப்போது எல்லாம் என்ன செய்தீர்கள் நீங்கள். இப்போது கடாபீ மக்களை படுகொலை செய்வதை போல் தானே அன்று ஒரு இலட்சம் மக்களை ஒரிரு நினங்களில் கொன்றார்கள். அப்போது எல்லாம் இந்தியா தன் பங்குக்கு ஆளையும், ஆயுதங்களையும், காட்டிக்கொடுக்கும் செயலையும் எந்த வெட்கமும் இல்லாமல் செய்துவிட்டு. இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடித்துக்காட்டுகிறீர்களோ.

ஏன் இவர்கள் தான் மனிதர்களா, அங்கே இலங்கையில் இறந்தவர்கள் எல்லாம் என்ன எள்ளும் புல்லும்மா.........மனம் கெட்டவர்களே, நீங்கள் எல்லாம் எந்த கதிக்கு ஆளாவீர்களோ...அந்த கடவுளுக்கே வெளிச்சம்.........

Sunday, March 20, 2011

ஏழைகளை நம்பவைத்து ஏமாற்றபோகும் கலைஞர்

பிறந்ததில் இருந்து பார்வை தெரியாத ஒருவனுக்கு பார்வையை கொடுத்து உலகின் அழகை நன்றாக இரசிக்க வைத்துவிட்டு, அவன் இழந்ததை பெற்றுவிட்ட மகிழ்ச்சி கலைவதற்குள் அவனது பார்வையை பிடுங்கினால் என்ன அவதிகுள்ளாவானோ அப்படி அல்லவா அமையபோகிறது இந்த தேர்தல் ஏழை மக்களுக்கு.

உலகில் அனேக நாடுகளின் பொருளாதாரம் வேறு இந்தியாவின் பொருளாதாரம் வேறு.

உதாரணத்திற்கு அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம். அமெரிக்காவில் கிடைக்கும் சராசரி சம்பளத்தில் அனேக அமெரிக்கர்கள் உண்ணும் உணவு எளிதில் வாங்கி உண்ண முடியும். பொரும் பணக்காரர்களும் நடுத்தர மற்றும் அடிதட்டு மக்களும் உண்ணும் உணவுக்கு அதிக வித்தியாசம் கிடையாது.

எளிய வார்த்தைகளில் சொன்னால் கையேந்து பவனில் இருந்து விலை உயர்ந்த உணவகங்களுக்கும் உணவு தரத்தில் அதிக வித்தியாசம் இல்லை.

அனேக உலக நாடுகளும் இப்படி தான். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் வித்தியாசம். கையேந்தி பவனில் சாப்பிட்டால் பழக்கம் இல்லாத மக்களுக்கு வாந்தியும் பேதியும் வருவது நிச்சயம். உணவுகளின் விலையை கீழ் இருந்து மேலே பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கும்.

உணவகத்தில் தான் இப்படி தான் என்று இல்லை. மக்கள் வாங்கும் அரிசியில் எத்தனை விதம், விலையிலும் தரத்திலும். அடி தட்டு மக்களும், சத்துணவு கூடத்தில் கொடுக்கும் உணவையும் எந்தனை மக்கள் சுவைத்து இருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் அந்த கூடத்தின் பக்கத்தில் செல்லும் போது அடிக்கும் வீச்சம் அனேகமனோருக்கு பரீட்சயம் இருக்கும் என்று நம்பிகிறேன்.

இப்படி ஒரு மோசமான நிலையில் இருந்த நிலையில், மலிவு விலையில் தரமான அரிசி என்று கொடுத்தார் கலைஞர். தனது தேவைக்கு போக மிச்சம் என்று மக்கள் வெளியில் விற்கும் அளவிற்கு மக்களுக்கு இன்று கிடைத்துக்கொண்டு இருக்கிறது.

இன்னமுன் எத்தனை காலத்திற்கு கிடைக்கும், ஆட்சி கலையும் வரை தான். ஆட்சி மாறியதும் செயா செய்யபோகும் முதல் வேலை, இந்த ஏழைமக்களுக்கு உள்ள அனைத்து சலுகைகளையும் தூக்குவது தான்.

அதிமுகவிற்கு தான் ஏழை என்றாலே பிடிக்காதே, அவ்வளவு வெறுப்பு அவர்களுக்கு இந்த மக்களை பார்த்தால்.

இப்படி ஒரு உணவு சொகுசை கலைஞர் மக்களுக்கு காட்டி பழக்கி இருக்கவேண்டாம், பிறகு இந்த உணவுக்காக மக்கள் ஏங்கவிடவும் வேண்டாம்.

இந்தியாவில் உணவு விலைகள் இன்று அமெரிக்காவில் விற்கும் இடாலர் விலைக்கு சமாக விற்கிறார்கள் இட்டிலியும் தோசையும் கூட. வெளி நாட்டு உணவுகளுக்கு அந்த உணவகம் தான் விலை தீர்மானிக்கும், அது அமெரிக்காவுக்கு சரி ஆனால் இந்தியாவிலும் அதே விலைக்கு என்றால் எப்படி, தலை சுற்றுகிறது......

உதாரணத்திற்கு கேஎப்சி கோழி 8 துண்டுகள் ரூ1350, அமெரிக்காவில் அதே நிறுவனம் 10 துண்டுகளை 10 இடாலர்களுக்கு கூவிக்கூவி விற்பது இந்தியாவில் எத்தனை மக்களுக்கு தெரியும்.

ஆட்சி மாற்றம் வந்தால் ஏழை மக்கள் சாப்பாடுக்கு காவடி எடுக்கப்போவது நிச்சயம்.

Friday, March 11, 2011

இலங்கையில் பின்லேடன் தலைமையில் அல்குவைதா தீவிரவாத பயிற்சி முகாம் - அமெரிக்க உளவு நிறுவனம் தகவல்

இலங்கையில் பின்லேடன் நேரடி தலைமையில் அல்குவைத்தா தீவிரவாத முகாம்கள் இரகசியமாக நடந்து வருவது அமெரிக்க உளவு நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது.

பின்லேடன் ஆப்கானிலும், பிறகு பாக்கிட்த்தணத்திலும் இருப்பதாக சந்தேகித்து தாக்குதல்களை தொடுத்த அமெரிக்க இரணுவம் இது வரை பின்லேடனை பிடிக்கவோ கொல்லவோ முடியாத நிலையில் இந்த செய்தி கசிந்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் இலங்கை அரசை விசாரித்த அமெரிக்காவை சரி கட்ட எண்ணிய இலங்கை அரசு, சமாதானத்திற்கான போரில் அழிக்கப்பட்ட புலிகள் தான் பீனிக்சு பறவையாக உயிர்த்தெழுந்து அமெரிக்கா, ஆப்ரிக்கா, அண்டார்டிக்கா என்று உள்ள தனது சாக்களுடன் இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தின் சென்னை செயின்டு சார்சி கேட்டையின் பின்புறம் இந்திய இராணுவத்தின் நேரடி பார்வையில் மீண்டும் பயிற்சியில் ஈடு படுக்கிறார்கள் என்று சொல்லி சமாளித்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.

அதுமட்டும் அல்லாது அப்படி பயிற்சி அளிப்பதை இலங்கையின் உளவு நிறுவனமும், பாக்கிட்த்தாணத்து ஐஎசுஐ நிறுவனமும், சீனாவின் உதவியோடு, சீன உளவு செயற்கை கோள் உதவியுடன் படம்பிடித்த படங்களையும் அமெரிக்காவிடம் அளித்துள்ளதாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றது.

இப்படி இலங்கை அரசு தெரிவிக்கும் செய்தியை ஒரு வேளை இந்திய அரசு மறுக்குமாயின், சீனாவிற்கு திரிகோணமலையை மொத்தமாக எழுதிக்கொடுக்கும் என்ற இரகசிய மிரட்டலையும் மனமோகன்சிங் அலுவலகத்திற்கு ஒரு தபால் அட்டை மூலம் அனுப்பியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.

இந்தியாவின் காலின் கீழ் சீனா மூக்கை நுழைப்பதையோ அல்லது பாக்கிட்த்தாணத்திற்கு இலங்கையில் தளம் அமைத்துக்கொடுப்பதையோ விரும்பாத இந்தியா, சென்னை காவலர் தலைவர் ஒருவரை மட்டுமே கொண்டு அந்த செய்தியை மென்மையாக கண்டித்து, கண்டும் கானாமலும் விட்டுவிட்டது என்றும் தெரிவிக்கின்றது.

நமக்கு என்ன, நாம் நமது வேலையை கவனிப்போம். இப்போது அதிக விவாதம் நடக்கும் செய்தி கிரிகெட்டும், திமுகவின் தேர்தல் உடன்படிக்கையும். மாய்ந்து மாய்த்து எழுதுவோம். வாழ்க இந்தியா, வளர்க அதனது குடியாட்சி.

அடடா அமெரிக்காவையும் எதெதோ சொல்லி ஏமாற்றிவிட்டார்களே இந்த இலங்கை எத்தர்கள்.................shame shame puppy shame........

நடுநிசி நாய்கள் - சைகோ ( Psycho 1998) படத்தின் உருவல்

கௌதமும் சரி, அவரது இரசிகர்களும் சரி, சிகப்பு ரோசாக்களை சொல்லி சொல்லி, நாய்கள் படம் அந்த படத்தை போல் அழகாக வந்துள்ளது என்று சொல்லி சிலிர்த்துக்கொண்டார்கள். இவ்வளவு ஏன் பாரதிராசாவையே அழைத்து மக்கள் முன்னிலையில் கருத்துக்கள் கேட்க்கும் அளவிற்கு சென்றார்கள் என்றால் பாருங்கள்.

1998க்கு முன்னால் அல்பிரடு இரிச்சுகாக்கு இந்த படத்தை எடுத்து இருந்தார். இந்த மனிதரை பற்றி தனியா ஒன்றும் நான் சொல்லி தெரிந்து கொள்வதற்கு இல்லை. திகிலும் மர்மமும் நிறைந்த திரை ஓவியங்களை வழங்கி திரைபடங்களின் போக்கில் ஒரு புதிய ஓட்டத்தை அளித்த மேதை இவர். இவரது படங்களை பார்த்தவர்களுக்கு எனது கருத்து புரியும் என்று நம்புகின்றேன்.

பிறகு 1998ல் மறுபடியும் வண்ண ஓவியமாக இந்த படம் எடுக்கப்பட்டது. அதே கதையும் திரைக்கதையும், நவீன அரங்கு தவிர.

இந்த படத்தின் தாக்கத்திலே பாலுமகேந்திரா, இந்திய அதுவும் தமிழ் கலாச்சார கலவைகளை கலக்கி மூடுபனி என்று எடுத்து இருந்தார்.

இப்படி பலவாரியாக நமக்கு நல்ல அறிமுகமான படத்தை எப்படி ஒரு புது கற்பனை என்று சொல்லிக்கொண்டு எடுத்தார் என்று தெரியவில்லை.

அதுவும், பாரதிராசாவை கூப்பிட்டு சப்பைகட்டு கட்டும் அளவிற்கு. பாக்கியராசின் திரைக்கதையில் இருந்த அந்த விறுவிறுப்பு நாய்கள் படத்தில் இல்லை, இல்லவே இல்லை. எப்போது படம் முடியும் என்று தான் இருந்தது வேறு செய்தி.

என்ன ஒரே ஒரு வித்தியாசம், தன்னை வளர்த்தவளையே... என்ற செய்தி தவிர.

பெற்றால் என்ன வளர்த்தால் என்ன அன்னை அன்னையே. அது எந்த பிறவியிலும் அந்த உறவில் எந்த மாற்றமும் கிடையாது. இது அனேகமாக அனைத்து மதமும் மனித நேயமும் ஒருங்கே சொல்லும் செய்தி. உலகின் எந்த பகுதியிலும் இந்த கருத்துக்கு மாற்று கருத்துக்கள் கிடையாது.

இடெக்கான் கெரால்டுவில் இந்த மாதிரியான செய்திகளை சோபாடே பெங்களூருவில் வரும் ஞாயிற்று கிழமை இதழில் ஆராய்ச்சி செய்ததுண்டு, 1998களில் படித்தாக நினைவு. அந்த செய்திகளை பற்றி அதிகம் அலட்டிக்கொண்டது இல்லை. ஏன் என்றால் அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் 5 உரூபாய்களுக்கு கிடைக்கும் இந்து நாள் இதழ் அங்கே அன்றைக்கு 1 உரூபாய்கு அந்த நாளில் விற்ற நாட்கள் அவை. போட்டியின் பெயரில் நடக்கிறது என்று தான் நினைத்து அலட்டிக்கொண்டது இல்லை.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு வடக்கில் வாழும் தமிழர்கள் எல்லாம், மிருகங்களாக வாழ்வதாகவும். தமிழகம் தவிர்த்த மற்ற தமிழர்கள் எல்லாம் பேய்கள் என்ற அளவிற்கு சொல்ல வந்துள்ளார் கௌதம்.

ஏன் நீங்கள் ஒரு மளையாளி அதுவும் கேரளம் விட்டு விட்டு தமிழகத்தில் திருச்சியில் பொரியியல் படித்து இப்போது படமெடுத்துக்கொண்டு இருப்பவர். ஊர் விட்டு ஊர் வந்த மளையாளிகள் எல்லாம் இப்படி பட்ட வாழ்கை தான் வாழ்கிறார்கள் என்று ஒரு சப்பை கட்டு கட்டி இன்னும் ஒரு ஆங்கில படத்தை பிரதி எடுத்து முன்னால் தலையாக வைத்து இரு வேறு படம். அந்த ஆங்கில படத்தில் இது எல்லாம் இல்லை என்று சொல்ல வேண்டியது தானே.

பாம்பின் கால் பாம்பறியும் என்றது போல் அல்லவா இருக்கிறது உங்களது பாத்திர படைப்பு. இதிலே கலைஞர் தொலைகாட்சியில் கௌதமோடு நேரடியாக கேள்வி கேட்கலாம் பாருங்கள்..........

அகில உலக ஒழுக்க காவலர்கள் காவி கரசேவகர்கள் யாரும் கௌதமையோ அல்லது அவரது படத்தில் வேலை செய்தவர்களையோ தலை முடியினை பிடித்து நடுத்தெருவில் போட்டு அடித்து துவைத்தோ(பெங்களூருவில் நடந்து போல்) அல்லது பூனாவில் பிப்ரவரி 14ல் சிற்றுண்டி கடையில் குண்டு வைத்ததை போல் ஏன் பாதுகாக்க வரவில்லை. குறைந்தது ஊடகங்களிலாவது கண்டித்து இருக்கலாம். ஒரு வேளை கௌதம் மேனன் எடுக்காமல் கௌதம் சிகாமணியாக இருந்திருந்தால் ஊர் ஊருக்கு நாயுக்கும் கழுதைக்கும் திருமணம் செய்த்து விருந்து வைத்து, கண்டித்திருப்பார்கள் போலும். என்ன ஒழுக்க காவலர்களோ, என்ன கொள்கையோ, கோட்பாடோ.........

சரி படத்திற்கு வருவோம், ஆங்கில படத்தில் வரும் கதை இது தான். கொடூர கணவனால் கொடுமை படுத்தப்பட்ட தாய் தனது மகனுக்கு மனதில் தனக்கு பாதிப்பு வந்தது போல் இனி ஒருவருக்கும் கொடுமை நடக்கக்கூடாது என்று சொல்லும் போதனையில் பாதை தவறியவனாக அனைத்து பெண்களும் மோசம் அவர்களால் தான் சமுதாயமே இப்படி ஆனது என்று நம்பி. ஒவ்வொருவராக பொரி வைத்து பிடித்து இரசித்து இரசித்து கொல்லும் கொடூரனின் கதை. இந்த கதையின் முழு முடிச்சும், அப்பாவி பையன் ஆனால் அவர்களை தீர்த்துகட்டுவதோ அவனது தாயார் என்று கதை நகரும். இறுதியில் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகும்.

தமிழில் பார்க்கும் அழகு பெண்கள் எல்லாம் எனக்கு வேண்டும் என்று நினைக்கும் தன்னிலையற்ற கதா பாத்திரம். அப்படி பல பெண்கள் வீட்டில் இருந்தும் இன்னமும் அதிக பெண்கள் வேண்டும் என்று வெளியில் அலைவது எந்த அடிப்படையில் என்று கௌதம் தான் விளக்க வேண்டும்.

ஆங்கில கதையிலும் சரி மூடுபனியிலும் சரி, கொலை உணர்வுக்கும் அப்பால் ஒரு நல்ல பெண்ணோடு வாழவேண்டும் என்ற ஒரு ஆசை அவனுள் இருப்பதாக கதையில் காட்டி இருப்பார்கள். ஆனால் நாய்கள் படத்தில் அவனுக்கு தாய்க்கு பிறகு ஒரு பெண் தேவை படுவதெல்லாம் காமத்திற்கு மட்டுமே என்று காட்டி இருப்பது திருமணத்தை விபச்சாரத்தோ ஒப்பிட்டு மகிழும் அரைவேக்காட்டுகளின் கருத்தை போல் அல்லவா இருக்கிறது.

ஈசன், நாய்கள், யுத்தம் செய் போன்ற படங்கள் தமிழகத்திற்கு சொல்லும் ஒரே ஒரு நல்ல செய்தி இது தான். மாறியுள்ள இந்த பணம் புழங்கும் சமுதாயத்தில் வரம்புக்கு மீரிய வன்செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகள் படித்துவிட்டு ஆயிர கணக்கில் பணம் சம்பாதிக்கும் அதே வேளையில் இந்த சமுதாயத்தில், அதுவும் குறிப்பாக பெண்கள் எந்தவிதமான பாதுகாப்பின்மையில் இருக்கிறார்கள் என்ற ஒரு எச்சரிக்கையாக வேண்டும் என்றால் வைத்துக்கொள்லலாம். அப்படி இருப்பினும், இப்படி ஒரு கெட்ட செய்தியை சொல்லித்தான் பயமுறுத்த வேண்டும் என்று இல்லை, இத்து மதத்தில் நரகத்தில் பிறகு எண்ணை சட்டியில் போட்டு உயிரோடு துடிக்க துடிக்க வறுத்து எடுப்பார்கள் என்று சொல்வதை போல். மாற்றாக திருக்குறளில் சொல்வதை போல் ' நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்று' என்று மகேந்திரன் பாணியில் மென்மையாக எடுக்க கற்றுக்கொள்ளுங்கள், நீங்களும் ஆசுகர் விருது பெறலாம் நாளை.

Tuesday, March 8, 2011

தமிழகம் என்ன தனி நாடா, அல்லது இந்தியாவின் ஒரு மாநிலம் தானா......

எந்த மாநிலத்திற்கும் இல்லாத ஒரு தனி மரியாதை தமிழகத்திற்கு.

இந்தியாவில் வெளிவரும் தமிழக ஊடகங்கள் தவிர மற்ற அனைத்து ஊடகங்களுக்கு தமிழக பெயர்களை உச்சரிக்க நாக்கு தடுமாறும் அது எப்படி சீன அதிபரின் பெயரை கூட அவ்வளவு இலகுவாக சொல்லும் அந்த நாக்களுக்கு தமிழகத்து பெயர்களை சொல்வதில் அப்படி ஒரு பொருப்பின்மை. உதாரணமாக தமில் மனிலா காங்கிரசு என்று அன்றைகு மூச்சுக்கு 300 தடவை சொன்னவர்கள் இல்லையா அவர்கள்.

உபியில் 5 நாடாளுமன்ற உருப்பினர்கள் கொண்ட கட்சி எல்லாம் அமைச்சுபதவி, ஆனால் 30 உருப்பினர்கள் இருந்தால் கூட வெளியில் இருந்து ஆதரவு கொடு என்ற ஆனை தமிழகத்திற்கு.

மும்பையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்தியாவின் 9/11 இது என்று மூச்சுக்கு 300 தடவை அலரியது அனைத்து ஊடகங்களும். எல்லா மத கோயில்களிலும் பூசை எல்லாம் செய்து செய்தியாக்கினார்கள் அவர்கள் எல்லாம் பிழைக்க வேண்டும் என்று.

ஆகா என்ன மனித தன்மை என்று தமிழகத்து ஊடகங்கள் கூட பெருமை பேசின. ஆனால் கிட்டதட்ட 1 1/2 இலட்சம் மக்கள் கொல்லப்படும் போது இதே ஊடகங்கள் இந்தியாவிம் நடந்த கிரிகெட்டு போட்டியினை காட்டியதும். அப்படி ஒரு நிகழ்வே நிகழவில்லை என்றது போல் கானாமல் இருந்தது தான் என்ன நீதி என்று புரியவில்லை.

ஏன் இலங்கையில் மடிந்த அந்த மக்கள் எல்லாம் மக்கள் இல்லை, அவர்களது உயிர்கள் எல்லாம் உயிர்கள் இல்லை. அவர்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா........

இங்கு இருந்து வடக்கு பயணம் சென்றால், ஆங்கிலத்தில் எந்த கேள்வியும் கேட்கமுடியாது. முதலில் வரும் பதில் ஆங்கிலம் தெரியாது. இரண்டாவதாக இந்தி தெரியாதா என்ற கேள்வி. அதுவே அவர்கள் தமிழகம் வந்தால் அவர்களுக்கு பெயர் பலகையில் இருந்து பதில் சொல்வது வரை இந்தியில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் சொல்வார்கள் தமிழகம் சென்றால் நம்மால் வண்டி பார்த்து கூட போகமுடியாது என்று.

வண்டியின் தடம் எண் முதல் தேசம் முழுவதும் ஒளிபரப்பாகும் கிரிகெட்டு விளையாட்டு போட்டிகள் வரை எல்லாமே இந்தியில் தான் இருக்கும் ஏன் அந்த கிரிகெட்டு ஓட்டங்களையும் அது போல எண்களில் காட்ட வேண்டியது தானே அதைவிடுத்து தமிழர்களுக்கும் புரியும் படி எதற்கு காட்டவேண்டும்............

வடக்கத்திய நிறுவனங்களின் தமிழக கிளைகளிலும் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் வேலைக்கு மட்டும் தமிழகத்து மக்கள் ஆனால் மேளாலர் மற்றும் மற்ற பதவிகளுக்கு எல்லாம் வடக்கத்தியர்கள். ஏன் அந்த வேலை எல்லாம் இந்த மக்கள் செய்யமாட்டார்களா. அல்லது அதிகாரம் எல்லாம் இவர்கள் செய்யக்கூடாது என்ற உயர்ந்த சிந்தனையா......

இவைகள் எல்லாம் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்,தேச பிதா காந்தியின் கொலைக்கு அந்த கட்சி 6 ஆண்டுகள் நாட்டை ஆளலாம், அன்னை இந்திராவின் கொலையை செய்தவர்களும் கூட நாட்டை ஆளலாம் ஆனால்........................அந்த ஒரு தனிமனிதனின் மேல் தமிழக காங்கிரசுகாரர்களுக்கு இவர்கள் இருவரையும் மிஞ்சின பாசம் ஏனோ தெரியவில்லை.

இந்த இலட்சணத்தில் காங்கிரசும் மற்ற வெளி மாநில கட்சிகள் எல்லாம் வரும் தேர்தலில் தனித்து நின்று தமிழகத்தை முன்னேற துடிக்கப்போகிறது. வாக்காள பெருமக்களே அந்த இந்தி கட்சிகளுக்கு உங்களின் பொன்னான வாக்குகளை அளித்து அவர்களை தமிழகத்திலே உட்கார்ந்துக்கொண்டு நம்மை எல்லாம் தமிழகத்தில் இருந்து விரட்ட ஏற்பாடு செய்யுங்கள்.