Thursday, September 21, 2017

கேப்டன் விசயகாந்தும் பிரமர் மோடியும் நல்ல நடிகர்கள் மட்டுமே தலைவர்கள் அல்ல

விசயகாந்து நடிகராக திரையில் தோன்றும் போது நீதிமன்றங்களில் அவருடைய பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது, சாட்சியாக வந்தாக்கூட நீதிபதியையே கிண்டலாக பேசுவார். 20, 30 ஆட்கள் அவரை தாக்க வரும்போதும் ஒரே கையால் அந்த 20, 30 பேரையும் காற்றில் பறக்கவிட்டு முழங்காலிட்டு தலையை மெல்ல தூக்கி ஒரு சல்யூட் வைப்பார். பெண்களை கிண்டல் செய்யும் அல்லது துன்புறுத்தும் கூட்டங்களைக்கண்டால் விரட்டி விரட்டி அடித்தே கொல்வார். ஏழைகளை கண்டால் கையில் இருக்கும் பொருளோ பணமோ கொடுத்துவிட்டு அவர்கள் வீட்டு கூழ் கஞ்சியினை வாங்கி ருசிப்பார்.

நாடுன்னா என்னான்னு தெரியுமா என்று துவங்கி மருத்துவமனையில் நடக்கும் ஊழலில் தொடங்கி ஏசிஎப் என்ற ஒரு அணியை உருவாக்கி ஊழையும் அதன் சார்ந்தவர்களையும் வேறோடு அழிப்பார். இப்படி விசயகாந்தை பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

ஆனால் விசயகாந்தை திரையில் இல்லாமல் நேரில் சந்தித்த மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். ஒரு 4 வரிகளை தொடர்ந்து பேச அவரால் முடியவில்லை. 5 செய்திகளை கோர்வையாக பேச தெரியவில்லை. அது மட்டும் அல்லாது அவருக்கு பேச தெரியவில்லை என்றது அந்த இடத்தை அவரது வீட்டம்மா பயன்படுத்திக்கொண்டு எவ்வளவு மோசமாக பேச முடியுமோ அவ்வளது மோசமாக பொது மேடைகளில் அசிங்கபடுத்தினார்.

இந்த எல்லாம் மக்களை முகம்சுழிக்க வைத்ததே அன்றி எந்த விதத்திலும் பாராட்ட வைக்கவில்லை. சென்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விசயகாந்தை பொது இடங்களிலோ பொது மேடைகளிலோ ஏன் தொகாவிலோ கூட காணமுடியவில்லை.

திரையிலே இயக்குனர்களால் கட்டி எழுப்பப்பட்ட அந்த பிம்பம் நேரில் செயலில் வரும் போது அந்த பிம்பத்தின் 1000 ஒரு பகுதி கூட உண்மை இல்லை என்று தெளிவுபடுத்தியது.

விசயகாந்து செய்த குற்றம் என்ன, தன்னுடையக கதைக்கு ஏற்றவாறு அவரை மிகப்பொருத்தமாக நடிக்க வைத்து அழகு பார்த்தார்கள் இயக்குனர்கள். அந்த பிம்பத்தை உண்மை என்று ஒரு கூட்டம் நம்பியது இது அவர்களின் அறிவின்மையே அன்றி எப்படி விசயகாந்தின் குற்றமாகும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த பிம்பம் உண்மை என்று விசயகாந்தே நம்பியதின் விளைவு தான் இவ்வளவு அவமானங்களை அவர் பொது வெளியில் சந்திக்கின்றார்.

இந்த விசயகாந்தை போன்று தான் பிரதமர் மோடியும், பின்னால் இருந்து இயக்கும் கூட்டம் கொடுக்கும் வசனங்களை மேடைகளிலிலே அழகாக அரிதாரம் பூசி கை கால்களை ஆட்டி கிட்ட தட்ட நடனமாடி வசனம் பேசுவார்.

வானத்தை வில்லாக வலைப்பேன் என்பார், மணலை கயிறாக திரிப்பேன் என்பார், வலது பக்கம் திரும்பினால் ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் வீடு தேடி வரும் ஒரே ஒரு ஓட்டு மட்டும் போடு என்பார். இடது பக்கம் திரும்பினால் இந்தியாவை குறி வைக்கும் எதிரி நாடுகள் தொடை கை கால் நடுங்கி தன் நாட்டை நரகாசுரன் பூமியை பாய் போல சுறுட்டி கடலுக்கடியில் ஒளித்து வைத்தது போல் தங்களது நாட்டை பாயாக சுறுட்டி கொண்டு இந்தியாவை விட்டு வெகு தொலைவில் கண்காணாத இடத்திற்கு கொண்டு மறைவாக வாழ்வார்கள்.

இந்தியாவின் ஏழை மக்கள் எல்லாம் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பார்கள், ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடோ அல்லது மத சாதி பாகுபாடோ இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள் என்றும். பொருளாதாரம் அமெரிக்காவையே மிஞ்சி அமெரிக்கர்களே இனி இந்திய ரூபாயில் தான் வர்த்தகம் செய்யவேண்டும் என்று சொல்வார்கள் என்றும். இந்தியாவையே இல்லை இல்லை உலகையே காக்க அவதரித்த கடவுள் என்றும் அந்த கூட்டம் கதை திரைக்கதை வசனம் பாடல் இசை ஒளிப்பதிவு பின்னணி குரல் என்று அனைத்து தரப்பிலும் வேலையில் இறங்கி கட்டமைத்தது இன்னும் அதை மீண்டு நிறுவ பார்க்கிறது.

ஆனால் உண்மையில் நாட்டில் நடப்பது என்ன, கருப்பு பணத்தை ஒழிக்கின்றேன் 50 நாட்கள் மட்டுமே பொறுத்து கொள்ளுங்கள் நான் செய்வது தவறாக இருந்தால் என்னை தீயிட்டு கொளுத்துங்கள் என்றார் இன்றைக்கு மக்களுக்கு கொளுத்தனும் என்ற ஆவல் இருந்தாலும் அந்த அளவிற்கு விலை கொடுத்து பெற்றோல் வாங்க வசதியில்லாமல் மக்கள் தயங்குகிறார்கள். இல்லை என்றால் ஊர்க்கு ஊர் தொட்டிகளை நிறப்பி அந்த செயல் எங்கள் ஊரில் நடக்கட்டும் என்று திருவிழாவே எடுப்பார்கள் போலும்.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க பசு மாட்டையும் அதன் கழிவுகளில் எப்படி தங்கம் உட்பட பல தயாரிப்புகளை செய்யலாம் என்ற ஆராய்ச்சிகளுக்கு கோடான கோடி மக்கள் வரிப்பணத்தை இறைத்து அது அமெரிக்க பல்கலைகள் வரை பல் இளித்துக்கொண்டு நிற்கின்றது.

பசுவின் பெயரில் சட்டம் இயற்றுவதும் அதன் பாதுகாப்பின் பெயரில் சாதாரண மக்கள் பொது இடங்களில் அடித்து கொல்வதும் அது பசுக்கறி தானா என்ற அறிய ஒரு அறிவியல் அறிஞர் சாதணம் வடிவத்தவரை வந்து நிற்கின்றது.

இப்படி வரி விதித்தால் மக்கள் பலனடைவார்கள் என்று சொல்லி சாதாரண மக்கள் 100 ரூபாய் கொடுத்த இடங்களில் 130 ரூபாய் கொடுக்க வைத்து ஏழைகள் எல்லாம் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்றும் அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் கள்ளப்பணம் வைத்து இருப்பவர்கள் என்று புரட்டு பேசியும் மகிழ்ந்ததை மக்கள் இரசிக்கவில்லை.

கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வருகின்றேன் என்ற பெயரில் நாட்டில் இயங்கிக்கொண்டு இருந்த கல்வி அமைப்பை மடை மாற்றி விடுவதையும் மக்கள் இரசிக்கவில்லை.

ஏன் ஐயா இப்படி எல்லாம் சொத்தப்பல் திட்டங்கள் தவிர உங்களிடம் வேறு எந்த திட்டமும் இல்லையா என்றால் அந்த சொதப்பல் திட்டங்கள் எல்லாம் காங்கிரசு அரசால் கொண்டுவரப்படு நிலுவையில் உள்ளவைகளே, நாங்கள் செயல்படுத்தினோம் நீங்கள் காங்கிரசை தான் திட்டவேண்டுமே தவிர எங்களை இல்லை என்று சொல்கிறார்கள். தெரியாமல் தான் கேட்கின்றோம் பசுவும் பசு சார்ந்த திட்டங்கள் தவிர உங்களுக்கு வேறு எந்த திட்டங்களும் வகுக்க தெரியாதா இல்லை தெரியாது போல் நடிக்கிறீர்களா.... அது சரி சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு.

அப்போ திரையில் அடுத்தவர் எழுதி இயக்கிய கதா நாயகனும் அடுத்தவர் எழுதிக்கொடுத்ததை மேடைகள் தோறு அடவு கட்டி ஆடிய உங்களுக்கும் என்ன வித்தியாசம். இந்த பொம்மை நாயகனை இன்னமும் இணையத்தில் பிரதமரின் செய்கையை நீதிமன்றம் கூட கேள்வி கேட்க துணியவில்லை என்று எழுதி மகிழ்கின்றது.

தினமும் தொகாவில் வரும் விசயகந்து போதையில் தள்ளாடும் நிகழ்வுகளும் சரி மோடியும் அவரது கூட்டமும் உளரி கொட்டுவதும் ஒன்றாகத்தான் மக்களுக்கு தெரிகின்றது.

நீங்கள் இருவரும் திரையிலும் மேடையிலும் நன்றாக நடிக்க மட்டுமே தெரிந்தவர்கள் என்றும் தலைவர்கள் இல்லை என்றும் மக்கள் நன்றாக புரிந்துக்கொண்டுள்ளார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்தால் உலகில் புன்னியம் பெருகி பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்ன மோடியின் அடிபொடிகளில் ஒருவரான ராம் செத்மலானியின் வாக்கு மூலம் இணையத்தில் பரவுகின்றது அதை படித்து பாருங்கள் நாங்கள் சொல்வது எவ்வளவு உண்மை என்று உங்களுக்கே தெரியும்.

0 comments: