Friday, December 25, 2015

பாசகவின் கள்ள ஆட்டம் பற்றி வானதி சீனிவாசன் கொடுத்து இருக்கும் வாக்குமூலம்


மேலே உள்ள விவாதத்தில் கடைசியில் வரும் 59:20 மணி துளிகளில் இருந்து கவனியுங்கள் வானதி பாசக எப்படி கள்ள ஆட்டம் ஆடுகிறது என்று விளக்குவார்.

உங்களுக்கு இது அவசியமா அப்படி என்றால் நாங்கள் அதை கொடுத்தால் பதிலுக்கு நீங்கள் இதை கொடுத்தால் செய்வோம் என்று ஒப்புக்கொள்கிறார்.

இப்போ உங்களுக்கு புரியுதா ஏன் வெள்ள நிவாரணம் கொடுக்க இந்த ஆத்து ஆதுறாங்கன்னு.  

மத்திய குழு வந்து எவ்வளவு அழிவு என்று கணக்கிட்டு சொன்னதுக்கு பிறகு தருவார்களாமா, நாமும் தெரியாமல் தான் கேட்போம் இலங்கை, நேப்பால் போன்ற நாடுகளில் நடந்த இயற்கை பேரழிகளை எந்த மத்திய அரசு குழு சென்று மதிப்பிட்டு கொடுத்தீர்கள்.

அதாணிக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டால் அடுத்த நாட்டு நிவாரணம் என்ற பெயரில் கணக்கே இல்லாமல் கொடுப்பார்கள்.

ஆனால் தமிழகத்தில் நிவாரணம் கேட்டால் மத்திய குழு மாநிலகுழு, கட்சி குழு என்று வெளியில் குழப்பிவிட்டு திரைமறைவில் நீ அதை செய் பணம் கொடுக்கிறேன் என்று வியாபாரம் பேசுவார்கள். 

பாராளுமன்ற தேர்தல் வரும் போதே இந்த குள்ள நரி கட்சியின் ஓநாய் வேலைகள் எப்படி இருக்கும் என்று தெரிவித்தோம். ஆனால் நாட்டின் வளர்சி என்று உங்களை எல்லாம் பேசி ஏமாற்றினார்கள். 

இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள், இல்லை என்றால் நடுதெருவிற்கு கொண்டு வந்துவிடுவார்கள்.

சர்க்கரை தடவிய நஞ்சை என்ன அழகாக ஊட்டுகிறார் வானதி................தொண்டரே இப்படினா தலைமை எப்படி இருக்கும் சிந்தியுங்கள்.  

மோடி தமிழகத்திற்கு நிவாரணம் தர தாமதப்படுத்துவது ஏன் 

Tuesday, December 22, 2015

இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா - பாகம் 3

திருமணம் என்றால் வெறும் ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் நடத்தும் நிகழ்வு மட்டும் இல்லை. அவனோடு சேர்த்து அவனது கடந்தகால வாழ்க்கையில் இருந்து அவனுடைய நிகழ்காலத்தில் இருந்து வெற்றிகரமான ஒரு எதிர்காலத்திற்கு நகர்த்திக்கொண்டு செல்வதும் தான் வாழ்க்கை என்று அப்பா அடிக்கடி சொல்வார். அப்படி செல்லும் வாழ்க்கையில் அவனது சொந்தம் பந்தம் முதல் நண்பர்கள் வரை காயமும் சாயமும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதில் தான் வாழ்க்கையில் வெற்றி இருக்கிறது என்றும் சொல்வார்.

அப்படி எழுந்த பேச்சுகளில் இருந்த ஆமோதிப்பை இவனை திருமணம் பேசும் சமயத்தில் இருந்து சாமாதானமும் சமரசமும் செய்துக்கொண்டது ஏன் என்று ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

இவர்களுக்கு ஏமாற்ற வேண்டும் என்று இருந்தால் இவனை போல இருக்கும் ஒரு பெண்ணை அல்லவா ஏமாற்றி இருக்க வேண்டும், என்னை எதற்கு இப்படி ஏமாற்றவேண்டும். அதற்கு விதியும் ஆண்டவனும் எப்படி வழி செய்யலாம்.

கதைகளிலும் கட்டுரைகளிலும் சொல்வது போல் எவன் எடுத்தற்கு எல்லாம் ஆமாம் சாமி என்று சொல்கிறார்களோ அவர்கள் சமயம் பார்த்து காலைவாரி விடுவார்கள் என்று பொதுவாக சொல்வது எவ்வளவு பெரிய உண்மையாகிவிட்டது பாருங்கள்.

திருமணத்திற்கு பிறகு வேலை போவேன், நீ கட்டாயம் வேலைக்கு போகனும் அது தான் எனது எதிர்பார்ப்பும் கூட.

என்னை விட குறைந்த சம்பளம் வாங்கும் நீங்கள் நாளை இது பற்றி பேச்சு எழுந்தால், அப்படி நான் என்றைகு கேட்கிறோனோ அன்றைகே நீ என்ன முடிவிற்கு வருகிறாயோ அது எதுவாக இருந்தாலும் எனக்கு சம்மதம் அதற்காக ஏதாவது தேதியிடா வெற்று பத்திரத்தில் கையெழுத்து வேண்டும் என்றாலும் இப்போதே போட்டு கொடுக்கிறேன்.

எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு அதில் ஆண்களும் உண்டு, திருமணத்திற்கு பிறகு அந்த நட்பு தொடரவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். எனக்கு எப்படி என்னுடைய நண்பர்களோ அதே போல் உனக்கு உன்னுடைய நண்பர்கள். என்னுடைய நட்பையும் அதே போல் நீ எடுத்துகொள்ள வேண்டும்.

வேலையில் மேலும் மேல போகனும், எவ்வளவு சீக்கிரம் அந்த இலக்கை அடையமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடையனும். அதுக்கு நிறைய படிக்கனும், பல workshop, Training எல்லம் இருக்குமே. என்னால எந்த முட்டுக்கட்டையும் இருக்காது பதிலா என்னால என்ன செய்ய முடியுமோ அவைகளை கட்டாயம் செய்வேன். எனக்கு அந்த மாதிரியான ஆசையெல்லாம் ஒன்றும் இல்லாததால் வீட்டுக்குள் போட்டியை நீ உணர வாய்பே இருக்காது.

குழந்தை குட்டி என்று ஆகிவிட்டால் பின்னாளில் இவைகளை எல்லாம் என்னால் சாதிக்கமுடியாது. உன்னுடைய சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்காது என்னை நம்பு.

திருமணத்திற்கு பின் என்னுடைய சம்பள பணம் எனது வீட்டிற்கு தேவைபடின் அனுப்புவேன், அது உன்னுடைய பணம் அதை எப்படி வேண்டும் என்றாலும் செலவு செய்ய உனக்கு உரிமை உண்டு. அது மட்டும் இல்லை, நமது குடும்ப செலவு முழுதும் என்னுடையதாக இருக்கும். உன்னுடைய பணத்தை உனது எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றதே எனது விருப்பம்.

திருமணத்திற்கு பிறகு கூட்டு குடும்பம் எல்லாம் சரியாக வராது, நீயும் வேலை பார்க்கிற நானும் வேலை பார்க்கிறேன் எப்படியும் எனது ஊரில் நானோ நீயோ வாங்கும் சம்பளத்திற்கு அந்த ஊரில் வேலை இல்லை. ஆகவே கூட்டு குடும்பம் என்ற சந்தர்பமே இருக்க போவது இல்லை. அப்படி ஒரு சந்தர்பம் வரும்பட்சத்தில் எனது வீடு உனது வீட்டில் உள்ள அத்தனை சுதந்திரமும் உள்ளதாக இருக்கும். அப்படி இல்லை என்று நீ நினைத்தால் முன்னமே சொன்னது போல் நீ எடுக்கும் முடிவுக்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன்.

எனக்கு அவ்வளவாக சமைக்க தெரியாது கற்றுக்கொள்ளலாம் என்றால் அம்மா போடி போய் வேலைய பாரு என்று அனுப்பிவிட்டார்கள். ஆனால் நன்றாக சமைக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு. சரியாகவர கொஞ்ச நாள் ஆகலாம்...... அதை எல்லாம் பற்றி கவலைபடாதே. இருக்கவே இருக்கு அமெரிக்க காலை சிற்றுண்டி, மதியம் மற்றும் இரவு உணவு மட்டும் தான்.

மதியம் எப்படியும் வேலை பார்க்கும் இடத்தில் கிடைக்கும் சூடான உணவை இப்போதைக்கு சாப்பிடுவோம். மாலையில் நேரம் ஆகும் நாட்களில் வெளியில் சாப்பிடுவோம், வேண்டும் என்றால் வாரக்கடைசியில் ஏதாவது சமைத்துக்கொள்வோம்.

பணம் நிறைய செலவாகுமே, வீட்டில் சமைக்கவும் நேரம் ஆகுமே, நீ மட்டும் காலையில் எழுந்து சமைத்துவிட்டு வேலைக்கு போகனுமா, என்னால அவ்வளவு சீக்கிரம் எழுந்து சமைக்கமுடியாது ஆகவே நீ சமைக்கனும்னு நான் எதிர்பார்க்க மாட்டேன்....

இப்படி எல்லாத்தையுமே விட்டுக்கொடுத்தா பிறகு உங்களுக்குன்னு என்ன தான் கேட்பீங்க உங்க பேச்சு கொஞ்சம் பயத்தை கொடுக்குது. இது எல்லாத்தையும் விட்டுக்கொடுத்தா நீ கிடைப்பாய் என்றால் உனக்காக கட்டாயம் விட்டுக்கொடுப்பதில் எனக்கு சந்தோசமே.....

அப்படி என்ன என்னை உங்களுக்கு பிடிச்சு இருக்கு, சொல்ல தெரியல ஆனா உன்னை விட்டா இவ்வளவு அமைப்பா ஒரு பெண் கிடைபாளா என்று தெரியவில்லை.

அப்போ நான் கிடைகிலனா என்ன செய்வீங் செத்துடுவீங்களா, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. என்ன இது வரைக்கும் திருமணம் குடும்பம் என்று சிந்தித்தது இல்லை. முதல் முதலா உன்னோட படத்தை காட்டி வீட்டில் பேசினார்கள், அது வரை பிடிப்பே இல்லாமல் இருந்த எனக்கு உன் படத்தை பார்த்ததும் மனதில் ஒரு பளீச்சு, பிறகு நேரில் பார்த்ததும் அது பளீச் தீர்மானமா மனதில் தோன்றியது. அதனால தான் இவ்வளவும் பேசுறேன். என்ன நீ கிடைகலனா நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான் இப்படியே இருந்திருவேன்.

ஏன் என்னை விட்டா வேறு யாரும் பெண்ணே இல்லையா உலகில், எல்லோரும் நீயும் ஒன்னா. நான் விரும்புவது உன்னை தான், பெண்ணை இல்லை எல்லாவும் பொருந்திய குறையும் நிறையும் நிறைந்த உன்னை தானே தவிர பெண்மைக்கும் அழக்குக்கும்  மட்டும் இல்லை. அது மட்டும் இல்லை உன்னுடைய அழகு வெறும் புரத்தோற்றமாக நான் பார்க்கவில்லை. அது உனது அக அழகின் முழுமையாக தான் எனக்கு தெரிகிறது.

இப்படி வார்த்தைக்கு வார்த்தை வாயை அடைத்து சம்மதிக்க வைத்துவிட்டு இன்றைகு இப்படி பேச இவனுக்கு என்ன தைரியம் இருக்கனும். அதுவும் என்னால எதுவும் செய்யமுடியாதுன்னு நினைப்பா இல்லை செய்ய மாட்டேன்னு தைரியமா......

தொடரும்......


இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா - பாகம் 2

இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா

என்னை ஏன் அவனுக்கு பிடிக்கவில்லை.......

Friday, December 18, 2015

இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா - பாகம் 2

திருமணம் பேசிய நாட்களில் இருந்து இந்த நிகழ்வு வரை நான் செய்யும் எல்லா செய்கைகளையும் ஊக்குவிக்கும் இவன் இது வரை எந்த ஒரு விமர்சனமும் வைக்காமல் இருப்பதை நண்பர்களிடம் பகிர்ந்த போது ஒட்டு மொத்த குரலில் அவர்கள் சொன்னது, அனாவசியாமக சந்தேகப்பட்டு அவனை இழந்துவிடாதே என்று.

மனது அப்பவே சொன்னது ஏதோ சரி இல்லை என்று, என்னவாக இருக்கும் என்று யோசிக்க நினைத்து ஆழ்ந்த சிந்தையில் இருக்கும் போது என்ன யோசனை என்று கேட்பதும். உடம்பு சரி இல்லையா என்று கேட்டுவிட்டதோடு இல்லாமல் கையில் காப்பியுடன் வரும் அந்த பொழுதுகளில் அந்த சிந்தைகள் மீண்டும் மூட்டை கட்டப்பட்டு பரணில் ஏற்றி வைத்துவிட்டு நிம்மதியாக தூங்க சென்றது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

என்னைவிட மிகவும் சுமாராக படித்தவனாக இருந்தாலும் பரவாயில்லை, என்னை விட குறைவான சம்பளம். குடும்ப சொத்து எல்லாம் இவன் வந்து சம்பாத்திதது மட்டும் தான். விரல் விட்டு எண்ணிவிட கூடிய அளவிதான் மிக குறைந்த சொந்தங்கள் இப்படி ஒன்றொன்றாக அம்மாவும் அப்பாவும் அடுக்கும் போது, நான் வாழப்போது அவனோடும் மட்டும் தான அப்பா, மற்றவைகளை பற்றி எனக்கு என்ன என்று அல்லவா கேட்டேன்.........

ஒவ்வொரு முதல் தேதியிலும் எவ்வளவு ஆசையாக சம்பள கணக்கை காட்ட முற்படும் போதும் இது உன்னுடைய உழைப்பு அது இவ்வளவு அவ்வளவு என்று கணக்கு பார்க்க எனக்கு பிடிக்கவில்லை என்று முதல் நாள் முதல் இன்றைக்கு வரை என்ன சம்பாதிக்கின்றேன் என்ன சேர்த்து வைத்து இருக்கிறேன் என்று கூட கேட்க்காமல் விட்டு வைத்ததின் பின் புலம் இப்படி ஒரு இருட்டு பக்கமாக இருக்கும் என்று யாருக்கேனும் கற்பனையாவது தோன்றுமா என்ன....

ஒவ்வொரு முறை அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வு வந்த போது எல்லாம், என்னை விட மிகவும் மகிழ்ச்சி அடைந்தவன் அவன் தான். அதை பார்த்து அவன் அடந்த சந்தோசத்தை பார்த்து வியந்து மகிழ்ந்தது எல்லாம் இந்த துயர முடிவை நோக்கி என்னை நகர்த்த  போட்ட திட்டத்தின் பகுதி என்று இன்றைக்கு விளங்கும் போது எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தேனே என்று மிகவும் வெட்கமாக இருக்கிறது.

தனிமையில் மணிகணக்கில் இணையத்தில் மூழ்கி கிடப்பதும், நேரம் காலம் பார்க்காமல் வரும் அழைப்புகளை ஏற்றுக்கொண்டு ஊர் ஊராக பயணிக்கும் போது எல்லாம் ஒரு வேளை இதுக்காகத்தான் என்று சிறிதும் தோன்றவில்லையே, ஏன் இப்படி ஒரு ஏமாளியாக ஆனேன். இந்த சாதாரண அறிவுக்கூட எனக்கு இல்லாமல் போனது எனது தகுதியா இல்லை அறிவின்மையா.......

எனது அலுவலாக எங்கெங்கெல்லாம் சென்று வந்தேன், எத்தனை நாட்கள் வேலையே கதி என்று இருந்துவிட்டு வந்து இருக்கிறேன். ஒரு நாளேனும் கூப்பிட்டு என்ன கூப்பிடவே இல்லையே, இப்போ எங்கே இருக்கிற, எங்கே போகிற மாலையில் எங்கே எப்போ அறைக்கு வந்த என்று எல்லாம் கேட்காமல் இருக்கும் செய்கைகளை நினைத்து நினைத்து இவனை எப்படி மனதுக்குள் புகழ்ந்தும் எனக்கு போல் யாருக்கு கிடைக்கும் என்று இருந்த இறுமாப்புக்கு சரியான பாடத்தை விதி சொல்லிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

தொடரும்.....

இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா

என்னை ஏன் அவனுக்கு பிடிக்கவில்லை.......

இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா

எல்லோரையும் போல் தான் எனக்கும் தான் திருமணம் ஆனது. படிப்பு முடிந்த கையுடன் வேலை கை நிறைய சம்பளம், புதிய வாழ்க்கை, புதிய நண்பர்கள் என்று விரிந்த வாழ்க்கை கடைசியில் இப்படியா வந்து முடியனும்.......

எப்படி இருந்த இவன் இப்படி மாறிப்போனான், அவனா இப்படி என்றால் எனது சொந்தங்களும் சரி அல்லது நண்பர்களும் சரி, இல்லை அவனது சொந்தமும் நண்பர்களும் அப்படி தான் அதிசயப்பட்டு போவார்கள்.

ஆணழகன் என்று இல்லாவிட்டாலும் வசிகரிக்கும் முகமும் அதில் மின்னி மறையும் அந்த புன்னகையும் கொண்டு தான் இத்தனை கொடூரங்களையும் மறைத்து வைத்து இருந்தானோ...

நிச்சயிக்கப்பட்ட பின்னும் திருமணத்திற்கு பின்னும் என்ன என்ன ஆசை வார்த்தைகளை பேசியவனா இவன்?..... இன்றைக்கு இப்படி இந்த கொடூரத்தை நிகழ்த்தி இருக்கிறான்.

எனக்கு தைரியமும், சுய சிந்தனையையும், சுய மரியாதையும் கொண்ட பெண்களை தான் பிடிக்கும் என்று அவன் சொல்லும் போதே வேறு கோணத்தில் சிந்தித்து இருந்தால் விளையு இதுவாகத்தான் இருக்கும் என்று கணித்து முன்பே ஏதாவது செய்து வாழ்க்கையை காப்பாற்றிக்கொண்டு இருக்கலாம். இப்படி கடைசியில் கழுத்து அறுத்துவிட்டானே படுபாவி....

இவனுடைய அம்மா அப்பா எல்லா என்ன என்ன எல்லாம் ஆசையாய் பேசினார்கள், அவனுக்கு என்ன விட அவன் அம்மாவை தான் அதிகம் பிடிக்கும், சரியான அம்மா புள்ளம்மா அவன் என்று மாமா சொன்ன போது இருந்த நிம்மதியும் சந்தோசமும் சுத்த ஏமாற்று வேலையா...... இல்ல அவர்களுக்கு இவனை பற்றி எதுவுமே தெரியாம மறைச்சு தான் வச்சு இருந்தான ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

இது எல்லாம் தெரிஞ்ச அம்மா அப்பா முகத்தில் எப்படி நான் முழிப்பேன். கொஞ்சம் பொருமையா இருன்னு அப்பா அப்பவே சொன்னாங்க, இவன் பெண்பார்த்துவிட்டு போன நாளில் இருந்து அனுப்பிய குறுஞ்செய்திகளும் மின்னஞ்சல்களும் அவனது அந்த வசீகர புன்னகையை மனதுக்குள் நொடிக்கு ஆயிரம் முறை மின்ன வைத்த மாயம் என்னவோ, அவைகளை எல்லாம் உண்மை என்று நம்பிதானே அப்பாவையும் அம்மாவையும் சம்மதிக்க வைத்தேன்.

கடைசியில்ல என்னை முட்டாளாக்கிவிட்டு போய்விட்டானே......எப்படி முழிப்பேன் அப்பா அம்மா முகத்தில் எனது மனது சொல்கிறது என்று சொன்ன வார்த்தைகளை மறுமுறை எனக்கே சொல்லி காண்பித்தால் நான்டுக்கொண்டு சாகதான் வேண்டும்........

இவனுக்கு தான் இப்படி என்று முன்னமே தெரிந்து தான் வைத்து இருந்தான் என்று என்ன தைரியம் இருந்தால் சொல்வான் என் முன்னால் நின்று.

கேட்ட அதிர்ச்சியில் அவனை திட்டவோ கோபப்படவோ கூட மனம் எழாமல் மௌனமாகவே இருந்ததை அதே வசீகர புன்னகையோடு முடித்தானே என்ன செய்வது, இவன் எல்லாம் நன்றாக..... இருப்பானா......

தொடரும்......

Thursday, December 17, 2015

உச்ச நீதிமன்ற தீர்ப்பு - இனிமேல் பெண்களை சதியில் தள்ளி கொல்லலாம் - இந்தியா வல்லரசு ஆகிவிட்டது

அந்த கோவிலின் ஆகம விதிகளையும் நம்பிக்கையும் பின்பற்றி தான் காரியங்களை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள்.

 நாளைக்கு எங்கள் மறை கணவன் இறந்த பின் மனைவியை சதியில் தள்ளி கொல்ல சொல்கிறது எங்கள் இந்துமத மறை ஆனால் அதை கொலை என்கின்றார்கள் இவர்கள் என்று ஒரு வழக்கு தொடுப்பார்கள்.

அதற்கும் இதே போல் மத நம்பிக்கை சார்ந்த பிரச்சனை, ஆகையால் அன்றைக்கு ஆகம விதிகளை பின்பற்றியது போல் இப்போது இந்துமத மறை நூலில் சொன்னது போலவும் காலம் காலமாக உள்ள பழக்கதின் அடிப்படையிலும் அந்த பெண்களை சதியில் தள்ளி உயிருடன் துடிக்க துடிக்க எரித்து கொன்றது இந்து மத மறைகளின் படி கொலை இல்லை என்று தீர்ப்பு அளிப்பார்கள்.

என்ன அன்றைக்கு கொல்லப்பட போவது காலம் காலமாக இதை சொல்லியும் வலியுறுத்தி வரும் மக்களாக இருக்காது, மாறாக எதிர்க்க திராணியில்ல ஏழைகளாகவும் ஒதுக்கப்பட்டவர்களின் பெண்களை மதகாவலர்களாக சொல்லிக்கொள்பவர்கள் செய்யும் கொலையாக இருக்கும்.

அப்படி கொல்லப்பட்டவர்களாக மக்கள் இயக்கங்கள் நடத்தப்படும் வழக்கு மாவட்டம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை வந்து போக அனேகமாக அதற்குள் பாதிக்கப்பட்ட மக்கள் மறைத்தே போவார்கள்.

60 வருட சுதந்திர இந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழகத்தை ஒரு 100 ஆண்டுகாலத்திற்கு பின் தள்ளிய தீர்ப்பு.

Stupid Star சிம்புவுக்கு எதிரான வழக்கில் என்ன நடக்கும்

மகளீர் அணியினர் சிம்புவிற்கு எதிராக தொடுத்து இருக்கும் வழக்கில் இது தான் நடக்கும்.

 நீதிமன்றம்: பாட்டை நீ எழுதினாயா

சிம்பு: ஆமாம் நான் எழுதினேன்(அதுக்கு இப்ப என்னான்ர சிம்புவின் மன குரலில்)

 நீதிமன்றம்: பாட்டை பாடினாயா

சிம்பு: ஆமாம் பாடினேன் மற்றும் பாடல் பதிவும் செய்தேன்

 நீதிமன்றம்: பாடலை எல்லோரும் கேட்கட்டும் என்று நீயோ அல்லது உனது சார்பில் வெளியிட்டாயா

சிம்பு: இல்லை இல்லவே இல்லை, அந்த பாடலை வெளியிடவோ பொது வெளியில் பாடவோ முற்படவும் இல்லை. எப்படி கோபம் வந்தால் தனி இடத்தில் சத்தமாக திட்டுவோமோ அது போல் தான் இந்த பாடலை பாடி திட்டினேன் என்று சொல்வேன்.

 நீதிமன்றம்: அப்போ பொதுவாகவோ மற்றவர் கேட்கும் விதமாக பாடவும் இல்லை வெளியிடவும் இல்லை தீர்மானமாக சொல்

சிம்பு: இல்லை இல்லவே இல்லை, எனக்கு வேண்டாதவர் யாரோ திருட்டுதனமாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள் அதை பற்றி ஏற்கனவே காவல் துறையிடம் முறையிட்டுள்ளேன்

 நீதிமன்றம்: அப்படி எதுவும் புகார் வந்துள்ளதா

காவல் துறை: ஆமாம் வந்துள்ளது

 நீதிமன்றம்: அப்படியானால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்த புகார் அல்ல ஆகவே இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரிக்கிறது.

வெளியில் வரும் சிம்பு, என்னையும் எனது புகழையும் அழிக்க நினைக்கும் கூட்டதிற்கு சரியான பாடம் புகட்டி இருக்கிறது நீதிமன்றம். நான் பெண்களை மதிப்பவன், விரும்புபவன். வேண்டும் என்றே எனக்கு எதிராக இப்படி எல்லாம் சதி செய்கிறார்கள் என்று சொல்லி விரல் வித்தைகள் செய்து சென்று மறைவார்.

கூடி நின்ற மகளீர் கூட்டம் Stupid Star சிம்பு ஒழிக என்று சொல்லிவிட்டு இதை இதோடு விடப்போவதில்லை உச்ச நீதிமன்றம் வரை சென்று ஞாயத்திற்காக போராடுவோம் என்று செல்வார்கள். அதோடு இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு வரும். அவ்வளவே......

Wednesday, December 16, 2015

Little super starல் இருந்து Stupid Star வரை - சிம்பு

இனிமேல் மக்கள் குறிப்பாக பெண்கள் சிம்புவை இப்படி தான் அழைக்கப்போகிறார்கள்.

ஒரு முறை தவறினால் போனால் போகிறது என்று இருப்பார்கள், ஆனால் மறுபடியும் திரும்ப திரும்ப அப்படியே நடந்தால் திமிர் என்று தான் சொல்வார்.

இப்படி எல்லாம் செய்தால் தன்னை வீரன் என்று நினைப்பார்கள் என்ற சிந்தையில் இப்படி மட்டமான ஒரு விளம்பரத்தை தேர்ந்து எடுத்து இருக்கிறார் இந்த Stupid Star சிம்பு.

ஆகவே இனிமேல் சிம்புவை Stupid Star என்று அனைவரும் அழைப்பாராக.....

Tuesday, December 15, 2015

மோடி தமிழகத்திற்கு நிவாரணம் தர தாமதப்படுத்துவது ஏன்

மோடி அரசு தமிழகத்தை பாரா முகமாக கவனிப்பதும், இது வரையில் நிவாரணங்களை பெரிய அளவில் அறிவிக்காமல் இருப்பதற்கு இவைகள் தான் காரணமாக இருக்கும்.

பெரிய அளவில் நிவாரணம் வழங்கினால் அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணி தமிழக அரசுடையது.

அப்படி செலவிடப்படும் பொருளையும் அதன் விளைவாக வரும் நல்லெண்ணத்தை தமிழகம் மறுபடியும் அதிமுகவிற்கே காட்டுவார்கள் என்ற கணிப்பாக இருக்கலாம்.

இல்லை என்றால் பாசகவை முற்றிலுமாக நிராகரித்து வாக்களித்த மக்களுக்கு சுசாமி சொன்னது போல் எதற்கு மைய அரசு நிதி கொடுக்கவேண்டும் என்றும் இருக்கலாம்.

ஒரு வேளை நிவாரணங்களை மைய அரசே கொடுக்கும் என்றால் இன்னேரம் அதாணி குழுமத்திடம் அந்த பணிக்கான 14,000 கோடி பணம் பட்டுவடா ஆகி இருக்கும். மோடியை குத்துவிளக்கு ஏற்ற வைத்து பணிகள் போர்கால அடிப்படையில் நடந்து இருக்கும்.

அல்லது வெள்ள நிவாரண பணிகளை மைய அரசே கொடுக்கும் வகையில் ஒரு அவசர சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அதாணியிடம் அந்த பணத்தை கொடுக்க காத்துக்கொண்டு இருக்கலாம்.

2016ல் தமிழகத்தில் தேர்தல் மட்டும் இல்லாமல் இருந்தால், இன்னேரம் மோடி அரசு பெரிய அளவில் கையில் துடப்பத்துடன் வந்து கழுவு கழுவு என்று கழுவி விட்டு இருப்பார்கள். அதாணிக்கு வடை போச்சு, நமக்கு நிவாரணம் போச்சு....... நம கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.................

Tuesday, December 8, 2015

பதிவர்கள் களப்பணியாற்றுவோரை புகழ்வதையும் இகழ்வதையும் நிறுத்தினால் நன்றாக இருக்கும்

நிலைமை இன்னனும் சீராகவில்லை, தவிக்கும் மக்களுக்கு உதவும் அத்தனை மக்களின் உதவியும் மக்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்று. இந்த நேரத்தில் அவர்களை புகழ்வதையும் இகழ்வதையும் நிறுத்தி வைப்பது தான் அவர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதை.

அவசியமானவைகளை ஆவனப்படுத்துங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் களப்பணியாற்றும் அந்த முகம் தெரியாத மனிதர்களை புகழ்வதாக நினைத்துக்கொண்டு அடுத்தவர்களை இகழாதீர்கள். அவைகள் முட்டுக்கடையாத்தான் அமையும்.

களப்பணியாற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று சொன்னால் அது மிகவும் சிறிதாக தான் இருக்கும். இருப்பினும் நன்றி கூட சொல்லவில்லை என்று ஆகாமல் இருக்க சொல்வோம் நன்றி. ஊர் கூடி இழுத்தா தான் தேர் என்ற வழக்கை உலகுக்கே மறுபடியும் நினைவுறுத்தும் சாதனையை செய்கிறீர்கள் நீங்கள் தொடரட்டும் உங்களது விலைமதிப்பில்லா பணி.

Thursday, December 3, 2015

இந்திய இராணுவம் பாக்கிட்தான் இராணுவத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

இலங்கை இராணுவத்திற்கு மட்டும் ஒத்துழைப்பு வழங்கி தெற்கு எல்லை பாதுகாப்பை உறுதிபடுத்துவது போல், பாக்கிட்தான் இராணுவத்துடனும் ஒத்துழைப்பு வழங்கி மேற்கு எல்லை பாதுக்காப்பையும் இந்திய இராணுவம் உறுதி செய்யவேண்டும்.

இதே பாணியில் வடக்கு எல்லை பாதுகாப்பிற்கு சீன இராணுவம் கேட்கும் அத்தனையும் கொடுத்துவிடவும் இல்லை என்றால் அவர்களால் நமது எல்லைக்கு பாதுகாப்பில் குந்தகம் வந்துவிடும்.

போங்கட இந்திய இராணுவமும் புடலங்காயும்.....

இந்த மானம் கெட்ட படைக்கு ஒரு தளபதி அதை வழி நடத்த ஒரு அரசியல் தலைமை.........அசிங்கம்

Tuesday, December 1, 2015

மீண்டும் தனது நாட்டுப்பற்று சிறகை விரிக்கும் பாசக கழுகு - நரேந்திர மோடியின் வீட்டில் வான்வழி தாக்குதல்

நரேந்திர மோடியின் வீட்டில் வான்வழி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் என்ற சேதியை அனைவரும் படித்து இருப்பார்கள்.

முதலில் இந்த தாக்குதலுக்கு ஆளாகும் அளவிற்கு நரேந்திர மோடி இது வரை என்ன செய்துவிட்டார் என்று அவரது வீட்டை தாக்க திட்டம் போட்டு இருப்பதாக தகவல் கசியவிட்டவர்கள் சொல்வார்களா.

ஏதோ அவர் உண்டு அவருக்கு ஏவிய வேலை உண்டு என்று அவர்களது முதலாளிகளுக்கு உண்டியல் உலுக்கும் வேலையே கதி என்று இருக்கும் அவரை எதற்காக வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும்.

இப்படி முட்டாள் தனமாக தங்களது வான் தாக்குதல் வல்லமையை ஏழை இந்தியாவில் நடத்தி காண்பித்தால் அவர்கள் என்ன என்ன முறையில் தாக்குவார்கள் என்று தெரிந்து கொண்டு அவர்களை எல்லையிலே பிடித்து அமுக்குவார்கள் என்று அந்த தீவிரவாத கூட்டதிற்கு தெரியாதா என்ன, அவ்வளவு முட்டாள்களா அவர்கள்.

தீவிரவாதிகளின் உலகில் அவர்களது திட்டமும்,ஆள் மற்றும் ஆயுத பலமும் அரசாங்கத்திற்கு தெரியாமல் இருக்கும் வரையில் தான் அவர்களுக்கு பாதுகாப்பு என்றது ஊர் அறிந்த இரகசியம். இருப்பினும் இப்படி ஒரு தகவல் வந்தாக செய்தி கசியவிடுவது நாட்டில் நடக்கும் மகிந்த இராசபட்சே செயல்கள் அதிக பேசு பொறுளாக மாறிவிட்டதை மட்டுப்படுத்தும் செயல் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.

இல்லை நரேந்திர மோடி என்ன ஏழையா இல்லை சிறுபான்மை இனத்தை சேர்ந்தவரா அடித்து கொன்றால் கேட்க்க ஆள் இல்லாத ஆளா, இந்த கதை எல்லாம் வேறு எங்காவது சென்று சொல்லுங்கள் பாசகவினரே.

சொந்த ஆட்களை பலியிடுவதை விட்டு விட்டு ஆக்கபூர்வமான வேலைகளை பாருங்கள் பாசக......போங்கபா உங்க நகைசுவைக்கு அளவே இல்லையா........