Wednesday, December 27, 2017

ஆளுனரிடம் எதற்கு மனு கொடுக்கப்படுகின்றது - அவர் அப்படி என்ன தான் செய்வார்

சமீப காலமாக ஆளுனர் மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் சரிவர நடக்கின்றனவா என்று நேரில் சென்று ஆய்வு நடத்துகிறாராம்.

சரி அவரது செயல் வண்டியில் நடத்துனர் சரிவர எல்லோருக்கும் சீட்டை கொடுத்து காசை வாங்குகிறாரா இல்லையா என்று சென்று சோதிப்பது போல் தான் என்று எடுத்துக்கொண்டாலும் கூட.

அவர் செல்லும் இடங்கள் எல்லாம் கால் கடுக்க நின்று ஆளுனரிடம் மனுக்களை கொடுக்கிறார்கள் மக்கள். அப்படி இது வரையில் பெறப்பட்ட மனுக்களுக்கு இது வரையில் எது ஒன்றுக்காவது பதில் கிடைத்து இருக்கிறதா என்று இது வரையில் வெளியிட்டது இல்லை. நன்றாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இந்த செய்தியை நாம் எழுதிய உடன் அமெரிக்காவுல மைகேல் சாக்சன் கூப்டாங்கோ சப்பான்ல சாக்கிசான் கூப்டாங்கோ என்று பாசகவின் அடிபொடிகள் எழுதுவார்கள்.

பிறகு ஏன் போகும் இடங்களில் எல்லாம் மனுக்களை ஆளுனர் பெற்றுக்கொள்கின்றார், நடப்பது அதிமுக நடத்தும் அரசு, ஆளுனரின் அரசு அல்ல. அப்படி வாங்க பெறும் மனுக்கள் தகுதியானவையா இல்லை நிராகரிக்கப்பட வேண்டியவைகளா என்று முடிவெடுக்க வேண்டியது அதிமுக அரசு ஆளுனர் அல்ல.

இந்த மனுக்கள் எல்லாம் ஆளுனர் பொது மக்களிடம் இருந்து பெற்று உள்ளார் ஆகவே இவைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கலாமே தவிர இதை செய் என்று உத்தரவிட ஆளுனருக்கு அதிமுக அரசு பதவியில் இருக்கும் வரை அதிகாரம் கிடையாது.

பிறகு ஏன் போகும் இடமெல்லாம் ஆளுனர் மனுக்களை பெறுகின்றார் என்று கேளுங்கள், உங்களுக்கு மட்டும் இரகசியமாக சொல்வார், பாசக மக்களின் மனுக்கள் மட்டும் தான் ஆளுனரால் ஏற்றுக்கொண்டு நடவடிக்கைக்கு வற்புறுத்த முடியும் செய்யவும்படும். அதை பார்க்கும் பொது மக்கள் ஆளுனர் தான் ஆட்சியில் இருப்பதாகவும் அவரிடம் சொன்னால் எல்லாம் சரியாகி விடும் என்று ஒரு இணை அரசாங்கம் அவர் நடத்துகிறார் என்று மக்கள் நினைக்கட்டும் என்ற கேவலமான செயலாக இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்.

போகும் இடங்களில் எல்லாம் கழிப்பறைகள் கட்டி இருக்கிறதா இல்லையா என்று சரிபார்க்கும் ஆளுனருக்கு மா நிலத்தில் GST என்ற பெயரால் நடத்தப்படும் கொள்ளையை கண்காணிக்கவோ பரிசீலனை செய்யவோ அவகாசமோ அவசியமோ இல்லையே ஏன். ஏன் என்றால் அவை செய்ய அவருக்கு உத்தரவு வரவில்லை. கொடுத்த உத்தரவு மக்கள் முன்னால் தோன்றி என்னவோ அவர்தான் அரசாங்கம் நடத்துவதாகவும் அதிமுக அமைச்சரவை என்னவோ ஒரு பொம்மை அமைச்சரவை என்று மக்களுக்கு நிறுவு என்று அளித்த உத்தரவை செவ்வனே செய்யும் அடிமையாக அழகாக நடந்துக்காட்டியுள்ளார் பன்வாரிலால்.

0 comments: