Tuesday, January 29, 2008

இது தான் இன்றைய இந்திய மதசர்பின்மையின் லட்சணம்.(குருமூர்த்தியும் அயோத்தி குப்பம் மோடியும்)

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20080127133338&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist=

இது தான் இன்றைய இந்திய மதசர்பின்மையின் லட்சணம் என்று மிகவும் வேதனையோடும் வருத்தங்களோடும் குருமூர்த்தி தனது கட்டுரையை முடித்து இருக்கிறார்.

கட்டுரையின் நோக்கம் மோடியின் வெற்றிக்கு பிறகு அரசியல் விமர்சனம்
என்ற பெயரில் ஒருவர் எழுதிய கட்டுரையில் "மோடி நம்முடன் இருக்கும் (உயிருடன் என்று குருமூர்த்தி சேர்த்துகொண்டதாக படும் வகையில் இப்படி குறிப்பிட்டுடிருந்தார்) வரையில் குசராத்து அரசியலை மாற்றியமைப்பதை போல மாற்றிவிடுவார்" என்று குறிப்பிட்டதாகவும், இதன் மூலம் அந்த கட்டுரையாளர் மோடியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று ஆணித்தனமாக குறிப்பிடுகிறார் என்றும்.

தொடர்ந்து மத சார்பின்மையின் பல பரிணாம வளர்ச்சிகளை பட்டியலிட்டு, பல அரசியல் காலங்களையும், காங்கிரசு தலைவர்களையும் குறிப்பிட்டு அவர்களதும் அவர்களது கட்சிக்களையும் குறைகூறி இருக்கிறார்.

கட்டுரையை மேலோட்டமாக பார்த்தால், கோட்சே காந்தியை சுட்டு வீழ்த்திய போது அனைத்து இந்தியர்களுக்கும் மனதில் ஏற்பட்டதே ஒரு இனம் புரியாத வலி அதை போலவே இப்படியா எழுதுவான் ஒரு கட்டுரையாளன். என்ன கொடூரமான மனம் கொண்டவனாக அவன் இருக்க கூடும். இத்தனை கீழ்தரனாம எண்ணம் கொண்டவர்கள் தானா அந்த அரசியல் விமர்சகர்கள். மனதில் ஈவு இரக்கம் என்று எதுவும் இல்லமல் இருக்கும் அரக்கர்களா அவர்கள் என்று பொருள் படும் படி குருமூர்த்தி அருமையாகவே கட்டுரையை தீட்டியுள்ளார்.

ஆனால் இங்கு இபொழுது காந்தியும் கொல்லபடவில்லை, அல்லது காந்தியை போல் கொல்லாமை கொள்கையாக கொண்டவரை, அவரை காலில் விழிவது போல் நடித்து, ஆசிர்வதிக்க கையை தூக்கும் போது கொஞ்சமும் பிசக்காமல் நெஞ்சிலேயே துப்பாக்கியை கொண்டு கொன்று அந்த பழியை வேறு மதத்தினரது மேல் இட்டு நாடு தழுவிய கலவரம் வெடிக்க வைக்கவும் இல்லை. அதன் பிறகு நீதிமன்றத்தில் நான் பைதியம் இல்லை மேலும் அவரது சித்தாந்தங்கள் எனக்கு பிடிக்கவில்லை, இப்படியே விட்டால் என்னக்கு பிடிக்காதவைகளாகவே அவர் செயல் பட்டுக்குகொண்டு இருப்பார் அதனால் தான் கொன்றேன் என்றும் யாரும் சொல்லவும் இல்லை.

பிறகு அப்படி வருந்தும் அளவிற்கு என்ன தான் நடந்தது குருமூர்த்திக்கு, அதுவும் ஒரு 60 ஆண்டு கால அரசியலையே மொத்தமாக திட்டி வருந்தும் அளவிற்கு. அந்த கட்டுரையாளர், மோடி இருக்கும் வரை குசராத்தில் அரசியல் மாற்றம் கொண்டு வரமுடியாது அது போல தேசிய அரசியலும் ஆகிவிடப்போகிறது. அதனால் எப்படி செயல் பட்டால் அதை தவிற்கலாம் என்று ஒரு கருத்தை மொழிந்துள்ளார். அந்த கருத்து என்ன என்று குருமூர்த்தி குறிப்பிட்டு எழுதி இருக்கும் வசனங்கள் நிச்சயம் இருக்க வாய்ப்புகள் இல்லை.

காரணம் மோடி ஒன்றும் இராமன் ஒரு கற்பனை கதாப்பாத்திரம் என்றும் சொல்லவில்லை, தவிற கட்டுரையாளரோ ஒன்று முற்றும் துறந்த துறவியும் இல்லை. மோடியின் தலையையும், நாவையும் கொய்து வா, உனது எடைக்கு எடை தங்கம் காசி துறவிகளின் கையால் கொடுத்து அப்படியே சுவர்கத்துக்கு நேரே ஒரு முதல் வகுப்பு சீட்டையும் தருகிறேன் என்றும் கூட அந்த கட்டுரையார் சொல்லி இருக்க முடியாது.

ஒரு மா நிலதின் முதல்வராக இருந்துகொண்டு, கிடைத்த வாய்பினை தவறவிடாமல் அயோத்தி குப்பம் இரவியை போல் ஒரு கூட்டத்தை கூட்டிக்கொண்டு தனது மனதில் இருந்த வேறுப்பை கொட்டி, பாய்ந்தும் பயந்தும் ஓடும் மான் கூட்டத்தில் துரத்தி துரத்தி இரசித்து புசித்து வாழும் மிருகத்தை போல திருப்பி அடிக்க முடியாத வயதானவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்துவிட்டு. 3 நாட்களுக்குள் நிலைமையை கட்டுகுள் கொண்டுவர முடியவில்லை என்று வாய் கூசாமல் பதில்ளித்தது மட்டும் இல்லாமல். இது வரையில் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததிற்கு அவர்மட்டும் இல்லை, அந்த கட்சியினது கடை நிலை தொண்டன் கூட ஏன் வருத்த வேண்டும், வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று அல்லவா கேட்டுகொண்டு வருகிறார்கள்.

இவர்தான் இந்தியாவின் மிகவும் திறமை வாய்ந்த முதல்வராம், பிரதமராக வர தகுதியுள்ள ஒரே மனிதன் என்று திரு சோ இராமசாமி திருவாய் மலர்ந்திருக்கிறார்.

ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் இராமச்சந்திரன் முதல்வராக இருக்கும் போது, தமிழகமே சாதிக்கலவரம் வெடித்து தீயாக பரவிக்கொண்டு இருந்த காலத்தில், சுமார் 3 மாத காலத்திற்கு ஆயுத படையணியினை ஊர் ஊருக்கு நிறுத்தி கலவரத்தில் அப்பாவி மக்கள் மடியாமல் பாதுகாத்தார் அந்த படிக்காத முதல்வர். அவரை நொடிக்கு ஒரு முறை கேளிசெய்து மகிழ்ந்த திரு சோ இராமசாமி, இந்த அயோதி குப்பம் மோடியை பிரதாமராக வேண்டும் என்று விழைகிறார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. உங்களுக்காவது ஏதாவது விளங்குதா.

ஒரு முதல்வர் அவரது மா நிலத்தில் நடக்கும் கலவரத்தை அடக்கும் அருகதை இல்லை ( அப்படி சொல்லிகொள்கிறார்கள்). 3000 அப்பாவி மக்களை கொன்று குவித்தது குற்றமோ பாவமோ இல்லை, இப்படி பட்ட மனிதனை தேசிய அரசியலில் விட்டால் பிறகு நாடே சுடுகாடாக ஆகும் என்ற பொருளில் சொன்ன கட்டுரையாளரை என்னமோ காந்தியை சுட்டு கொன்றுவிட்டு நான் மன நோயாளி இல்லை என்று சொல்லிய கோட்சேவை சொல்வதை போல குறிபிட்டுள்ளார்.

மோடி கொன்றால் கூட குற்றம் இல்லை, ஆனால் இவரால் ஆபத்து வர இருக்கிறது என்று சொன்னாலே பாவம், ஒறுக்ககூடிய குற்றம் என்று சொல்ல குருமூர்த்திக்கு எப்படி தான் வாய் வார்த்தைகள் வருகின்றதோ...

குருமூர்த்தின் குடும்பத்தின் பெண்களையும், குழந்தைகளையும், வயதானவர்களையும் குருமூர்த்தியின் செய்கைக்காக அயோத்தி குப்பம் மோடியிடம் சொல்லி ஒரு 3 நாட்கள் நேரம் கொடுத்து குசராத்தில் நடத்தியது போல் நடத்தி, குறிப்பாக வயிறு பிள்ளையோடு இருக்கும் பெண்கள் இருந்தால் முதலில் அனுப்பசொல்லி அந்த அக்கிரமங்களின் வக்கிரங்களை வாய் மொழியாக சொல்ல சொல்லி காணொலியாக்கி குருமூர்த்திக்கு காண்பித்து. பிறகு இப்படி ஒரு கட்டுரை எழுத சொல்லி கேட்க்கவேண்டும் என்ன எழுதுகிறார் என்று பார்க்க வேண்டும். முடிந்தால் அவரது சித்தாந்த தோழர் திரு சோ இராமசாமியின் குடும்பத்தையும் அழைத்து செல்ல சொல்ல வேண்டும். துக்ளக் ஆண்டு விழாவில் என்ன சொல்கிறார் என்றும் பார்க்க வேண்டும் செய்வார்களா. எழுத்திலே இவ்வளவு நாராசமாக இருக்கிறதே, எப்படி தான் பொறுத்து கொண்டு இருகிறார்களோ அந்த குசராத்து மக்கள்.

Saturday, January 12, 2008

சக்தே - திரைவிமர்சனம்


பாக்கிட்தானுக்கு எதிராக நடக்கும் உலக கிண்ண ஆக்கி இறுதி பந்தையத்தில் கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்ட இசுலாமிய இளைஞனின் கதையை பற்றிய கதை. வெற்றி கொண்டாலும், தவறவிட்டாலும் அணியின் தலைவன் என்ற முறையில் எதிர் அணியினரை கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தது தான் தாமதம். அதை படமெடுத்து புள்ளி வைத்து கோடு போட்டு பிறகு சாலை இட்டு கடைசியில் அணையையே கட்டி நிற்கிறது பத்திரிக்கை உலகம்.
நொந்து நூலாகி கடைசியில் தனது தேச பற்றையும், ஆக்கியின் திறமையையும் நிறூபிக்க வேண்டிய நிலைமையில் இருக்கும் அந்த ஆளிடம் இந்திய ஆக்கி பெண்கள் அணியினை பயிற்றுவிக்கும் பொருப்பளிக்கபடுகிறது.


அந்த 16 பெண்களையும் அறிமுக படுத்தும் படலத்தில் இரத்னா பிரசாத் என்று சொல்லும் தமிழக பெண்மனியின் முகத்தை கூட திரையில் படம் முடியும் வரையில் காண்பிக்காமல் விட்டதை சொல்லாமல் விடமுடியவில்லை. தெலுகு பெண்னை பார்த்து தமிழா என்று கேட்க்க, அவள் தெலுகு என்று சொல்ல, என்ன வித்தியாசம் என்று கேட்க்க. பஞ்சாபிக்கும் பிகாரிக்கும் உள்ள அதே வித்தியசம் தான் என்று சொல்லுவது நல்ல வசனம்.

மொத்த அணியாக முதல் முதலில் அவர்கள் செர்ந்த்து செயல்படும் காட்சி அமைப்பு அற்புதம். அப்போது தொடங்க்கிய தொடக்கம் படம் முடியும் வரையில் மிகவும் விருவிருப்பாக கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

சோர்வடைந்த அணியினரை, நீங்கள் எல்லாம் பெண்கள் உங்களால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்டு உச்சாக படுத்தும் காட்சியும். திரையில் பிரீத்தியும், கோமலும் சண்டையிட்டு கொள்ளும் காட்சிகளும், பில்வீர் பல பெண்களுடன் மோதும் காட்சிகளும் அழகாக படமாக்க பட்டுள்ளது.

ஆக்கியின் ஆட்டத்தையோ, அல்லது அதற்கு வேண்டிய உத்திகளையோ காட்டாமல், அணியினர்களிடம் நடைபெறும் நிகழ்வுகளை மட்டுமே கொண்டு காட்சி அமைபுக்கள் இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு.
கடைசி காட்சியில் என்ன என்னவோ நடக்க போகிறது என்று காக்க வைத்து காட்சிகளை அழகாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

படத்தை பார்க்கும் போது, Remember the Titans and stick it on படங்கள் மனதில் வந்து போவதை தவிற்க முடியவில்லை. குறிப்பாக சாருக்கானில் உடல் மொழி டென்சல் வாசிங்டன்னின் உடல் மொழியோடு அப்படி ஒத்து போவது ஒரு காரணமாக இருக்கலாம்.
நல்ல படம், தமிழில் வசன எழுத்துகளை தருகிறார்கள் திரையில்.

Wednesday, January 9, 2008

இந்தியர்களை வேலைக்கு சேர்க்காதே, மலேசிய அரசு திடீர் தடை, தமிழர்களுக்கு பெரும் பாதிப்பு. காவிக்கூட்டமே இப்போ நிம்மதியா.

இந்து(தின)மலர் பத்திரிக்கையின் இனையதளத்தில் வந்திருக்கும் செய்தி. மேலே உள்ள தலைப்பில் செய்தியை வழங்கியுள்ளது. இந்த செய்தி வெளியான கொஞ்ச நேரத்தில் மலேசிய அமைச்சர் சாமிவேலு மறுப்பு தெரிவித்தார், செய்தி வெறும் வதந்தி தான் என்று. இந்த செய்தியில் மறைந்து கிடக்கும் இரகசியத்தை பார்ப்போம்.

செய்தி உண்மையோ வதந்தியோ, ஆனால் இப்படி ஒரு செய்தி வரக்காரணம் என்ன?

"மலேசியாவில் இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறார்கள், அதற்காக இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து பேரணியை நடத்தினார்கள். அந்த பேரணியில் தண்ணீரை அடித்து கலைத்தும், சிறையில் இட்டும் இந்துக்களை கொடுமை படுத்தினார்கள்" என்ற செய்திகளை தமிழ்பத்திரிகைகளில் படித்தது நினைவில் இருக்கலாம்.

இப்படி ஒரு போராட்டம் நடக்க காரணம் என்ன, அதன் பின்னனியில் இருந்து இயக்கியவர் யார் என்ற செய்தி எல்லாம், குமுதம் இதழில் மலேசிய அமைச்சர் சாமிவேலு தெரிவித்திருந்தையும் படித்திருப்பீர்கள்.

அன்றைக்கு வரிக்கு வரி இந்து, இந்து, இந்து என்று எழுதிய தமிழ் பத்திரிக்கைகள் ஏன் இன்றைக்கு இந்தியர்கள், தமிழர்கள் என்று எழுதுகிறார்கள். அல்லது இந்துக்கள் எல்லாம் தடை இல்லை இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் மட்டும் தான் தடை விதிக்கவேண்டும் என்று மலேசிய அரசு அலோசிப்பதாகவும் அல்லவா செய்தி சொல்லி இருக்கிறார்கள்.

உண்மையில் மலேசியாவில் என்ன குழப்பம், இந்து, இந்தியர், தமிழர் என்ற குழப்பம் ஏன் வரவேண்டும்.

மலேசியவோ, அமெரிக்காவோ, எந்த ஒரு நாட்டிற்கும் பிழைக்கபோவது நடு தட்டு மற்றும் கீழ் தட்டு மக்கள் மட்டுமே. சொந்த நாட்டில் பிழைப்பும் பணமும் கிடைக்கபோவது இல்லை. கொண்ட கொஞ்ச கல்விக்கு நல்ல சம்பாதியம் வெளி நாடுகளில் கிடைக்கும் என்ற வந்திறங்கும் மக்களை இந்தியர்கள் என்று அழைக்காமல், இந்து, மதம், மொழி என்று மறுபடியும் ஒரு குட்டி இந்தியத்தை உருவாக்கி. வந்த நாட்டில், அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிராக அவர்களை தூண்டிவிட்டு அடிவாங்க வைத்து. உதை கிடைத்ததும், இந்தியர்கள் வதைக்கப்படுகிறார்கள் என்று சொல்லுவது ஏனோ.

முன்னே நீங்கள் கண்டு பிடித்த இந்துகள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் அப்பனே தெரியபடுத்தவும். மதத்தின் பெயரால் நடு தட்டும், கீழ்தட்டு மக்களும் இன்னமும் எத்தணை கொடுமைகளைத்தான் அனுபவிப்பார்களோ பாவம்.

இப்போது வதந்திதான் வந்து இருக்கிறது. பிறகு இதையே முன்னுதாரணமாக கொண்டு, மற்ற எல்லா நாடுகளும், இந்துக்களுக்கு (இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் என்று எடுத்து கொள்க, நன்றி தமிழ் பத்திரிக்கை உலகம்) எதிரான சட்ட நடவடிக்கையில் இறங்க கூடும். பின்னாளில் கொஞ்சம் நஞ்சமாவது பொருளாதார முன்னேறம் கண்ட இந்த நடு தட்டு மற்றும் கீழ்தட்டு மக்கள் இனிமேல் அடுத்த தலைமுறைகள் அதே பஞ்ச பாட்டு பாடிக்கொண்டு நிழல்கள், வறுமையின் நிறம் சிகப்பு படங்களில் காட்டுவது போல் கலைகல்லூரியில் பயின்று தத்துவம் பேசிக்கொண்டு அலைய வேண்டியது தான்.

இவர்கள் முன்னேறுவதில் அப்படி என்ன தான் பொறாமையோ இவர்களுக்கு. நல்ல இந்து, நல்ல மதம். மதத்தை மனித முன்னேறத்திற்கு பயன் படுத்துங்கள். இது ஒரு பாடமாக இருக்கவேண்டும் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் (இந்துக்களுக்கு, நன்றி தமிழ் பத்திரிக்கை உலகம்).

Tuesday, January 1, 2008

செல்லும் வருடம் இனிய நினைவுகளை கொண்டும் விட்டும் சென்றது, வரும் வருடம் இன்னமும் இனிய நினைவுகளாய் மலர்ந்து நிறைந்திட வேண்டுவோம் வாழ்த்திடுவோம் அனைவரையு

செல்லும் வருடம் இனிய நினைவுகளை கொண்டும் விட்டும் சென்றது, வரும் வருடம் இன்னமும் இனிய நினைவுகளாய் மலர்ந்து நிறைந்திட வேண்டுவோம் வாழ்த்திடுவோம் அனைவரையும்.