Thursday, December 14, 2017

தமிழிசையும் எச்சி இராசாவும் இனி என்ன ஆவார்கள் - நிர்மலா சீத்தாராம் தமிழக முதல்வர்

கார்பரேட் பெரு நிறுவனங்கள் தாங்கள் புதிதாக நுழைய இருக்கும் சந்தையில் ஏற்கனவே சந்தையில் மிகவும் பிரபலமாக மக்கள் விரும்பி வாங்கும் அத்தகைய சேவைகளோ அல்லது பண்டங்களையோ விற்கும் சிறு அல்லது அங்கே பிரபலமாக இருக்கும் நிறுவனங்களை வாங்கி அந்த சந்தையை முன் போலவே தொழில் நடத்துவார்கள்.

பிறகு திரைமறைவில் அந்த பிரபலனமான நிறுவனங்களின் மீது பொருளாதார தாக்குதல்களையும் அதிகார தாக்குதலையும் தொடுப்பார்கள்.

பாசக பசுமாட்டு மாநிலங்களின் கட்சி. அந்த கட்சியோ அல்லது அவர்களின் பெற்றோர்களான மதவாத இயக்கங்களான சங்க பரிவாரங்களுக்கு தமிழகத்தில் என்ன வேலை. ஆனால் இங்கேயும் மக்கள் வாழ்கிறார்கள் தேர்தல் நடத்துகிறார்கள். கோடிக்கணக்கில் தினமும் வியாபாரம் நடக்கின்றது. ஆக இந்த மாநிலத்திலும் பசு மாட்டு சித்தாங்களை பரப்பி அடுத்த வீட்டுகாரர்களை வெட்டிக்கொண்டு சாக வைக்க நினைத்த பாசக தமிழகத்தில் கடையை விரித்து ஆளில்லா கடையில் டீ ஆத்த தொடங்கியது.

அப்படி முதன் முதலில் புதிய சந்தைக்கு வரும் கார்பரேட் நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் சந்தையில் பணிபுரியும் மக்களை நேரடியாக அதிகார செலுத்தினால் பழைய நிர்வாகத்தின் ஒத்துழைப்பு புதிய நிறுவனம் கிடைப்பது அரிது என்றதால் அவர்களுக்கு பழக்கமான மேலும் எத்தனை முறை அசிங்கமாக திட்டினாலும் துடைத்துக்கொண்டு புன்முறுவலோடு எதிர்கொள்ளும் தியாக உள்ளங்களை வேலைக்கு அமர்த்தி வேலையையும் பழைய நிறுவன நிர்வாகத்தை புதிய நிறுவனத்திற்கு வேலைக்கு அமர்த்துவார்கள். இப்போது தமிழிசையும் எச்சி ராசாவும் பாசகவில் தமிழகத்தில் இருப்பது போல்.

பிறகு பழைய நிர்வாகம் முழுமையாக புதிய நிர்வாகதிடம் வந்ததும் கண்கான இடத்திற்கு இந்த பழைய நிர்வாக தலைவார்களை மற்றி மிகவும் கேவலமான வேலைகளை செய்ய சொல்லி வர்புறுத்துவார்கள். இந்த கொடுமை தாங்காமல் விட்டால் போதும் என்று கிடைகின்ற ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு ஓடுவார்கள் அந்த பழைய நிர்வாகத்தலைமைகள்.

தமிழகத்தில் இருக்கும் அதிமுகவை நல்ல விலைக்கு பாசக வாங்கியாச்சு. மெல்ல அதிமுகவின் தலைமை என்று இப்போது துடிக்கும் குட்டி குட்டி தலைவர்களை எல்லாம் கையில் இருக்கும் கொள்ளையடித்த பணத்தை எல்லாம் பிடிங்கிக்கொண்டு ஓட வைத்தாகிவிட்டது.

அதிமுகவின் நிர்வாகம் இப்போது பாசகவின் கைகளுக்கு வந்தாகிவிட்டாசு. இனி இந்த இணைப்பில் பெரிதும் வேலைகளை செய்த தமிழிசை மற்றும் எச்சி இராச போன்ற இடையில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் இனி என்ன ஆவார்கள்.

சென்னை இடைதேர்தலில் மேடைதோறும் உளரிக்கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள் இந்த வகையராக்கள். அனேகமாக இந்த இடைதேர்தலுக்கு பிறகு மெல்ல ஓரம் கட்டப்பட்டு நிர்மலா சீத்தாரம் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து தேர்தலை சந்திக்க உள்ளது பாசக.

இந்த இரும்பு பெண்மணிக்கு முன்னால் தமிழிசையும் எச்சி இராசாவும் இனி என்ன செய்ய போகிறார்கள். பாசக கொடுக்க போகும் பப்பர மிட்டாயை வாங்கிக்கொண்டு அத்வானி வீட்டில் அமர்ந்துகொண்டு புத்தகங்களை எழுதுவதும் பாக்கிட்தானத்திற்கு போவதும் அங்கே சென்று முகமது அலி சின்ன நல்லவர் வல்லவர் என்று புகழ்ந்து வந்ததை போல் அரிதான காரியங்களை செய்துக்கொண்டு இருப்பார்கள் போலும்.

இணைய புலிகள் எல்லாம் இரும்பு பெண்மணியை கிண்டல் செய்யவோ அல்லது கேலிசித்திரங்களோ வரைய முடியாமல் தமிழிசையும் எச்சி இராசாவும் இருந்த காலத்தில் நாங்கள் எல்லாம் எப்படி எல்லாம் பகிடி செஞ்சோம் என்று மலரும் நினைவுகளாக படங்களையும் துணுக்குகளையும் வெளியிட்டுக்கொண்டும் இருப்பார்கள்.

1 comments:

Anonymous said...

அந்தக் கட்சிக்கு தொகுதிக்கு 100 ஓட்டு கிடைப்பதே கஷ்டம். இந்த லட்சணத்தில் நீங்கள் குறிப்பிட்ட நபர் எப்படி முதல்வர் ஆவார்?