Tuesday, July 26, 2016

கபாலி நிமித்தமாக IT மக்களுக்கு தொற்றி கொண்ட சமூக சிந்தனை வியாதி

கபாலி படம் வர இருக்கும் வாரத்தில் இருந்து இன்று வரை இப்படி ஒரு செய்தி இணையத்தில் வலம் வருகின்றது. இவ்வளவு சம்பாதிக்கும் நடிகர் தமிழகத்துக்கோ இந்தியாவிற்கோ என்ன செய்து இருக்கிறார். அவரது படத்தை பார்க்க இவ்வளவு காசு கொடுக்க வேண்டுமா என்று.

இதிலே பியூசை வேற வம்புக்கு இழுத்து ஒரு ஒப்பீடு வேறு, என்னத்த சொல்ல.

நாமும் கேட்போம் இந்த IT மக்களை பார்த்து, இணையத்தில் பொங்கி வழியும் சமூக புலிகளே உங்கள் தந்தையின் சம்பளத்தை விட நீங்கள் குறைந்தது 5 மடங்கு சம்பளம் வாங்குகிறீர்கள்.

அந்த குறைந்த அளவு சம்பளத்தில் உங்கள் அப்பா உங்களுக்கு நீங்கள் படிக்கும் போது என்ன என்ன எல்லாம் கேட்டீர்களோ அவைகளை குறைகளே இல்லாமல் வாங்கிக்கொடுத்து அழகு பார்த்தார்.

அது மட்டும் இல்லாது தொழில்நுட்ப்ப கல்வியை பயில செய்து இப்படி 5 மடங்கு அதிக ஊதியம் பெற வழி செய்த்தார்.

இந்த 5 மடங்கு சம்பளத்தில் எவ்வளவு பணத்தை எடுத்து நீங்கள் எல்லாம் எழுதும் ஏழை எளிய மக்களுக்காக செலவிட்டும், நாட்டின் நலனுக்காக செலவும் செய்து இருக்கிறீர்கள்.

சென்னை வெள்ளத்தின் போது களத்தில் இறங்கியும் அங்கே வராமலும் உதவிகளை கொட்டி குவித்த நல்ல உள்ளங்களை பார்த்து நான் கேட்க்கவில்லை என்றது வெட்ட வெளிச்சம். அவர்கள் கட்டாயம் இப்படி எழுதியிருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த இணைய சமுதாய புலிகள் வெகுண்டெழுந்து இலாப நட்ட கணக்குகளை எல்லாம் பட்டியலிட்டு எழுதி மீதி இவ்வளவு பணம் எதற்கு என்று எழுதும் நீங்கள், வெறும் ரூ4.80க்கு ஒரு கோக்கு/பெப்சி பாட்டிலை மொத்தவிலையில் வாங்கி ரூ65க்கு விற்கிறார்களே அவரகளது இலாபம் என்ன ஆனது என்றும், அந்த நுகர்வோர் பொருட்களை வாங்காதீர்கள் என்று இவர்கள் எழுதுவது உண்டா.

உள்ளூர் தயாரிப்பான இட்டிலி தோசைக்கு அதே 10, 40 ரூபாய். ஆனால் இதய நோயை வரவழைக்கும் பிட்சாவும் பர்கரும் 200 முதல் 500 வரை. நறுக்கியது போக மிச்சம் கீழே விழுந்த துண்டு காய்கறிகளையும் மிச்ச மீதியான சீசையும் கொண்டு தயாரிக்கப்படும் உணவு பீட்சா, இப்போது இதை ஏதோ ஒரு புதிய தயாரிப்பாக கருதிக்கொண்டு தயாரிக்கிறார்கள் என்றது வேறு கதை. பர்கர் கதையோ இன்னும் பரிதாபம், ஆடு மற்றும் மாட்டின் இறைச்சிகளை வேண்டிய துண்டுகளாக வெட்டி எடுத்தபின் விழும் மிச்ச மீதிகளை எடுத்து கொஞ்சம் மாவு மற்றும் முட்டையுடன் அரைத்து வடைபோல் தட்டி கல்லிலோ அல்லது எண்ணையிலோ சுட்ட உணவு பர்கர்.

இறைச்சியில் மிஞ்சிக்கிடக்கும் கொழுப்பை அப்படியே சோப்பு தயாரித்து கரை நல்லது என்று பலபளப்பான விளம்பரத்துடன் வெளியிடுவார்கள், இவர்களும் அவைகளை வாங்கி பூரிப்பு அடைவார்கள்.

ஆக மொத்தம் அமெரிக்காவில் கீழே கொட்டும் பொருட்களை எல்லாம் பொருக்கி சிகுனா தாளில் சுற்றி அழகாக ஆங்கில பெயர் சூட்டி கொடுத்தால் ஒன்று பத்துவிலை கொடுத்து வாங்கி சாப்பிட்டு பெருமை பேசும் இந்த மக்கள் ஏன் உள்ளூர் சத்தான தயாரிப்பான உணவுகளை வாங்கு சாப்பிடுவது இல்லை. இந்த கழிவு பொருட்களுக்கு இவ்வளவு விலையா ஏன் என்று இந்த இணைய புலிகள் என்றைகாவது கேட்டது உண்டா.

அவனவன் திறமைக்கு ஏற்றார் போல் அவனவன் சம்பாதிக்கின்றான், அடுத்தவனுக்கு பிரசங்கம் செய்யும் முன்பு தான் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்ருங்கள் இணைய புலிகளே.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன் படம் வந்த போது எந்த சலனமும் இல்லாமல் இருந்தது போல் இருந்துவிட்டு போங்கள் கபாலிக்கும்.

Monday, July 25, 2016

கபாலி - மோசடி , கெட்ட கனவு - தினமணியின் கண்டுபிடிப்பு

கபாலி - ஒரு கெட்ட கனவு!

"தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக அரைத்துக் கொண்டிருக்கும் அரதப் பழசான நல்ல தாதாவுக்கும் கெட்ட தாதாவுக்குமான மோதல்தான் கதை. அந்த தாதாக்களின் கதையை அப்படியே படமாக்கினால் "முற்போக்குவாதி' பட்டம் கிடைக்காது என்பதனால், அதில் தமிழ் உணர்வையும், ஜாதிக் கொடுமையையும் கலந்து படமாக்க முற்பட்டிருக்கிறார் பா.ரஞ்சித்.

மலைகளாகக் கிடந்த மலேசியாவை சீராக்கி பொன் விளையும் பூமியாக மாற்றிய தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறார் கபாலியாக வரும் ரஜினி. அந்த முன்னேற்றம் பிடிக்காத மலாய் முதலாளிகள் ரஜினியையும், அவரது குடும்பத்தையும் சிதறடிக்கிறார்கள். பின் அந்த முகாமுக்குள் நடக்கும் தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி, "தமிழன் முன்னேறினா பிடிக்காதா..! ஒரு தமிழன் ஆளக் கூடாதா? நான் ஆளப் பிறந்தவன்டா...' என ரஜினி தரும் பதிலடிதான் கபாலியின் கதைக் களம்."

கபாலி மோசடி! 

"50 நிறுவனங்களைக் கொண்ட டி.வி.எஸ். குழுமத்தில் 39,000 தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை பார்க்கிறார்கள். அவர்களது ஆண்டு பற்றுவரவு ரூ.42,000 கோடி. முருகப்பா குழுமத்தின் 28 நிறுவனங்களில் 32,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களது வருடாந்திர விற்று வரவு ரூ.26,000 கோடி. அமால்கமேஷன் குழுமத்தில் 47 நிறுவனங்களில் 50 தொழிற்சாலைகள், 15,000-க்கு அதிகமான தொழிலாளர்கள். ஆண்டு பற்றுவரவு ரூ.9,300 கோடி. அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாத, அவர்களுக்கு முக்கியத்துவம் தராத ஊடகங்கள், "கபாலி' போன்ற திரைப்படங்
களுக்கு, அதிகபட்சம் ரூ.1,000 கோடி புரளும், சினிமா துறைக்கு இவ்வளவு முக்கியத்துவமும் விளம்பரமும் தருகின்றனவே, இதற்குக் காரணம் என்ன? ரசிகர்கள் முட்டாள்களாக இருப்பதுதானே!"

மேலே சொன்ன 2 செய்திகளும் கபாலியை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கில் எழுதவில்லை நடுநிலையோடு தான் எழுதினோம் என்றும் சொல்வார்கள் தினமணியை அனுகினால். 

நாமும் அட நல்லது தானே சொல்கிறார்கள், நல்லது சொன்னால் கேட்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்களே என்றும் கூட தோன்றும்.

தினமணி செய்திதாள் துவங்கி இலாபம் பார்க்க துவங்கியது முதல் இன்றைக்கு வரை தமிழகத்தில் உள்ள அத்தனை பள்ளி இல்லா ஊர்களிலும் பள்ளிகளை கொண்டுவந்து கொடுத்துள்ளது.

தமிழகத்து விவசாயிகளின் நலன் காக்க காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படும் கர்னாடக அரசை நிர்பந்திக்க உச்ச நீதிமன்றத்தை அனுகி உத்தரவை பெற்று இரணுவ நடவடிக்கைக்கு உட்படுத்தி தமிழகத்தை காத்து நின்றது.

தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு அரசு துறைகளில் மட்டும் இல்லாமல் தனியார் துறைகளிலும் வேலை வாங்கிக்கொடுத்து வாழ வைத்து அழகு பார்த்தது.

இப்படி ஏதாவது இது வரை தினமணி செய்ததுண்ட அதன் இலாபத்தில். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் செய்து இருக்கலாம்.

தான் ஒரு செய்தி வியாபார நிறுவனம் என்றதை சாதகமாக பயன்படுத்தி திரைபடமும், பொழுதுபோக்கு ஊடகங்களும் அதன் தயாரிப்புகளினால் நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு என்றது போல் ஒரு பிம்பத்தை விதைக்க எண்ணி துனிகின்றது.

கிரிகெட் விளையாட்டாலும் அதன் சமீபத்திய வடிவமான ஐபியல் ஆகட்டும் இல்லை உலக கோப்பையாகட்டும் இதனால் நாட்டிற்கு விளையும் நன்மை என்ன என்று இது வரை எழுதாது ஏன். அந்த விளையாட்டாலும் அதனால் பணம் பெறும் விளம்பர மற்றும் விளையாட்டு வீரர்களால் எல்லாம் இந்த தொழில் நிறுவன ஊழியர்களுக்கு என்ன என்ன கிடைத்தது என்று தினமணி தான் சொல்ல வேண்டும்.

அவரவர் அவர்களின் வேலைகளை பார்கிறார்கள். என்ன அதையும் தாண்டி சமூக சிந்தனை, அக்கறை, சீர்திருத்தம் என்றும் கூட சென்று செய்வது அவர்களது தனி தகுதி. ஆனால் அது தான் அவர்களது வேலை கிடையாது. எப்படி தினமணி தன் வேலையை மட்டும் பார்கிறதோ அதே மாதிரி.

தனக்கு வந்தால் இரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சாரு என்ற எண்ணத்திமிரில் இருந்து வெளிவரவும்.

சமூகத்தில் வெறுப்பை விதைப்பதில் இருந்து வெளியேறி நல்ல செய்திகளை பரப்பவும். உங்களது செய்திவியாபாரம் தன்னால் வளரும், இப்படி குறுக்கு வழியில் வாழ்வை தேடுவதை நிறுத்திக்கொண்டால் நல்லது.

பின் குறிப்பு: தினமணியின் செய்தியில் இருந்து ஒருசில பகுதிகளை எடுத்து இணைதுள்ளேன். பின்னாளில் அவைகள் தூக்கப்படலாம் என்ற நிலைக்காக

Wednesday, July 20, 2016

காங்கிரசும் பாசகவும் இல்லாத இந்தியாவே வைக்கோவின் அடுத்த திட்டம்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, காங்கிரசும், பாசகவும் இல்லாத அரசு தான் இந்தியாவை ஆளவேண்டும் என்று மக்கள் நல கூட்டணியை இந்திய அளவிற்கு கொண்டு செல்லும் திட்டத்தில் வைக்கோ இருக்கிறார்.

பாகசவும் சரி காங்கிரசும் சரி இது வரையில் இந்தியாவிற்காக ஒன்றும் செய்துவிடவில்லை என்றும். இந்தியாவிற்காக இந்த இரு கட்சிகளும் ஒரு கீரையை கூட கிள்ளி போட்டது இல்லை என்ற வியூகத்தில் இவர்களது தேர்தல் பிரச்சாரங்கள் அமையும் என்றும் தெரிகின்றது.

இந்த இரு அரசுகளும் மாறி மாறி இலங்கையுடன் இணைந்துக்கொண்டு தமிழர்களும், பாகிட்தாணுடன் சேர்ந்துக்கொண்டு வட மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்றும், சீனாவோடு இணைந்துக்கொண்டு காசுமீரம் மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்றும் மக்களிடம் எடுத்து சொல்லவும் திட்டம் இருப்பதாக தெரிகின்றது.

வேண்டும் என்றால் விசயகாந்தை பிரதம வேட்பாளராக அறிவிக்கவும் தயாராக இருப்பதாகவும், வேறு யாரும் விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும் என்றும் இரகசிய அறிவிப்பும் வெளியாகி இருப்பதாக தகவல்.

தேசிய அளவில் மநகூயில் பொதுவுடமை கட்சியினர்கள் இருப்பது மக்கள் அறிந்ததே, அதனுடன் வலு பெற்ற கட்சிகளை இப்போது இருந்தே ஒருங்கிணைத்தால் வெற்றி நிச்சயம் என்றது அடிப்படை அரசியல் அறிவு இல்லாதவனால் கூட எளிதாக கணிக்க கூடியதே என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வருகின்ற நாடளுமன்ற தேர்தல் முடிந்ததும் என்னுடைய திட்டமும் இராசதந்திரங்களையும் மக்களும் பாசக மற்றும் காங்கிரசு புரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவின் எதிர்காலமே, விடிவெள்ளியே என்று நாடே உங்களை கொண்டாட போகிறது, வாழ்த்துகள் வைகோ.

Tuesday, July 19, 2016

இது அல்லவோ தீர்ப்பு - காந்தியை கொன்றது கோட்சே என்ற தனி நபர் - அப்போ

மாகாத்துமா காந்தியை கொன்றது நாதுராம் கோட்சே என்ற ஆள் மட்டுமே, ஏன் அந்த துப்பாக்கி மட்டும் தான் என்றும் கூட சொல்லலாம். அதை விடுத்து RSS இயக்கம் அதன் தலைமை, தொண்டன், தளபதி, திட்டமிட்டோர், இரயிலுக்கு பயண சீட்டு வாங்கிக்கொடுத்தோர், துப்பாக்கி குண்டு வைக்க பை வாங்கி கொடுத்தோர், துப்பாக்கி வாங்கி கொடுத்தோர், கொல்ல சொல்லி மூளை சளவை செய்தோர், கூப்பிட்டுக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் தங்கவைத்தோர், உடன் பேசி சதி செய்தோர் என்று எல்லாம் சொல்வது உண்மைகளின் திரிபுகள் என்று என்ன அழகாக தீர்ப்பளித்துள்ளார்கள்.

அட இந்த நீதிபதிகள் இல்ல இந்த எழுவர் விடுதலையை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள், வட போச்சே...........அடடா இந்த வடக்கத்திய மக்களுக்கு வாச்சது நமக்கு வாய்க்காமல் போச்சே...........

Monday, July 18, 2016

சுவாத்தி கொலை உண்மையை தானாக முன் வந்து ஒத்துக்கொள்ளும் பாசக - எச்சி இராசாவின் ஒப்புதல் வாக்குமூலம்

சுவாத்தியின் கொலையை பயன்படுத்தி இன்னும் ஒரு கோத்ரா கலவரம் செய்ய பாசக தீவிரம்

இந்த பதிவை எழுதியபோது என்னவோ கற்பனையாக எழுதியதாக தான் எல்லோரும் பார்த்தார்கள் சிலர் பின்னூட்டமும் இட்டார்கள்.

இன்றைக்கு வந்திருக்கும் செய்தியை பாருங்கள் பாசகவின் திட்டம் என்னவாக இருந்தது என்று எச்சி.இராசா தெளிவாக வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

 நக்கீரனில் வெளியான செய்தி

செய்தி அழிக்கப்படலாம் இணைப்பு நீக்கப்படலாம் அதனால் அந்த செய்தியை எடுத்து இணைத்துள்ளேன்.

"
ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு? : எச்.ராஜா 

சுவாதி கொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து பாரதீய ஜனதா அகில இந்திய செயலாளர் எச்.ராஜா,

’’நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொல்லப்பட்டது பற்றி பல்வேறு தகவல்களை திருமாவளவன் கூறிவருகிறார்.

சுவாதி முஸ்லீமாக மதம் மாற இருந்ததாக அவர் கூறி இருக்கிறார். அவருக்கு இந்த தகவலை சொன்னது யார்? சுவாதி எதற்காக மதம் மாற நினைத்தார்? அவரை மதம் மாற சொன்ன பையன் யார்? இவையெல்லாம் திருமாவளவனுக்கு தெரிந்திருக்கிறது’’என்று கூறியுள்ளார்.

அவர் மேலும்,  ‘’எங்களுக்கு கிடைத்த தகவல்படி அந்த பையன் இந்துவாக மாறி சுவாதியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் அதற்காக சைவஉணவுக்கு அவர் மாறியதாகவும் சொல்கிறார்கள்.  அவர் இந்துவாக மாறிவிடக்கூடாது என்பதற்காக சுவாதியை கொலை செய்துவிட்டதாக பேசுகிறார்கள். இப்போது அதை திசைதிருப்புவதற்காக திருமாவளவனை பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு? இந்த கொலை பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது யாரும் எதுவும் பேசாத நிலையில் திருமாவளவன் புதிது புதிதாய் தகவல்களை சொல்கிறார். எனவே இந்த வழக்கில் பல உண்மைகள் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே சுவாதி கொலை தொடர்பாக போலீசார் திருமாவளவனிடம் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்."

திருமாவளவனுக்கு எப்படி இவ்வளவு செய்திகள் தெரியும் என்று கேட்கும் எச்சி.இராசாவுக்கு எங்களுக்கு கிடைத்த தகவலின் படி என்று சொல்லிய தகவல்களை கொடுத்தது யார் என்று சொல்ல கடமைபட்டு இருக்கிறார். மேலும், துவக்கத்தில் இருந்து முசுலீம் என்ற சொல் இந்த வழக்கில் அதிகமாக பயன்படுத்தபட்டு இருப்பதை கவனிக்க முடியும்.


இந்துவாக மாற இருந்ததால் சைவம் சாப்பிட்டார் என்ற தகவல்கள் மட்டும் எப்படிஎச்சி.இராசா வகையாருக்கு தெரியும், கொடுத்தவர்கள் யார். யாருடைய தலைமையில் இந்த செய்திகள் எல்லாம் திரட்டப்பட்டது என்றும் சொல்ல இவர் கடமைபட்டுள்ளார்.

தமிழகத்தில் தன்மக்களை பலி கொடுத்தாவது தங்களது அரசியல் கணக்கை தொடங்க வேண்டும் என்று பாசக அலைகின்றது. நாளை கொல்லப்படப்போவது உங்கள் மகள்/மகனாக இருக்கலாம் சிந்தியுங்கள் மக்களே இந்த மாதிரியான செய்திகளை புரம் தள்ளுவது மட்டும் இல்லை பரப்பவும் அனுமதிகாதீர்கள்.

FeTNAவும் பரதேசியும் இன்னும் பலரும்

பொதுவாக நட்சத்திரங்களை தூர இருந்து இரசிப்பது போல் இருக்காது அருகாமையில் பார்க்கும் போது. ஆனால் இந்த FeTNA விழாவின் அதிசயமே அதற்கு நேர்மாறாக இருப்பது தான்.

மயில்சாமி அண்ணாதுறையை சாப்பிடவிடாமல் துரத்திய செய்தியாளர்களை கண்டதும் அட விடுங்கப்பா அவர் சாப்பிட்ட பிறகு கேள்விய கேளுங்கள் என்று நாம் சொல்லும் அளவிற்கு மிகவும் எளிமையான மனிதாராக இருந்தார் அவர்.

அவர் மேடை பேச்சும் என்ன அருமையாக இருந்தது, தான் தமிழில் தான் படித்தேன் என்ற செய்தியை பெங்களூரில் கன்னட மாணவர்களுக்கு தமிழிலேயே சொல்ல செய்து, கன்னட மாணவர்கள் கன்னடத்தில் தான் படிக்கவேண்டும் என்று சொன்ன நிகழ்வும் நெஞ்சை ஈர்த்தது.

அதை தொடர்ந்து தமிழருவிமணியன் அவர்களின் அரசியல் பேச்சாகட்டும் இலக்கிய பேச்சாகட்டும் என்ன அருமையாக எடுத்துரைத்தார். சந்தித்த அனைவரையும் சென்னை வந்தால் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்ததின் அருமை நேரில் கண்டவருக்கு மட்டுமே தெரியும்.

அன்று விடுதலை புலிகளையும் ஈழத்தையும் பற்றி பேசிய அடேல் பார்கர் பேச்சு ஆகட்டும் அதை பற்றி பொய்யும் புரட்டுமாக விகடன் செய்தியாளர் கண்ணில் பார்த்தது போல் செய்தி வெளியிட்டதாகட்டும் பிரமிப்பு தான். குறிப்பாக அடேல் பேச்சுக்களின் இடையிடையே காண்பிக்கப்பட்ட படங்களுக்கு பிள்ளைகளின் கண்களை பெற்றோர்கள் மூடினார்கள் என்று எழுதினாரே அந்த மூடருக்கு சிங்கள அரசாங்கம் எவ்வளவு கைமாற்றியது என்று சொன்னால் நல்லது.

இப்படி நேரில் சந்தித்திராத நட்சத்திரங்களை நேரில் சந்திக்கும் போதும் அவர்களுடன் அளவளாவும் போது நமக்குள் ஏற்படும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அனுபவித்தால் மட்டுமே உணரகூடிய ஒன்று.

கவிஞர் பாசுகரன் அவர்களது கவியரங்கமும் அவரது இலக்கிய பேச்சும் அருமை, அரசியல் வாதிகளை பற்றி அவர் சொன்ன கவிதைக்கு சான்றாக அடுத்த மேடையிலே நடராசன் சசிகலா பேசியதை பார்க்கும் போது சிக்காத ஆள் இல்லை.

பாடகி அனுராத சிறீராம் ஆங்கிலத்தில் பேச கீழ ஒரு தமிழ்மகன் குறள்கொடுக்க நானும் பச்சை தமிழச்சிதான் என்று அவர் சீறீய காட்சியாகட்டும் அழகோ அழகு.

அங்கே கலந்துக்கொண்ட தமிழ் பிள்ளைகள், கொஞ்சு தமிழில் தனக்கு தமிழ் தெரியவில்லை என்று தட்டுதடுமாறி சொல்லிய வாக்குமூலம் அருமையாக இருந்தது.

கடைசி நாள் நிகழ்ச்சியில் சிலம்பொலி செல்லப்பன் அவர்களும், தமிழருவிமணியன் மற்றும் கவிஞர் பாசுகரன் அவர்களும் பிளந்துகட்டிய இலக்கிய சொற்பொழிவாகட்டும் அருமையோ அருமை.

அதே கூட்டத்திற்கு நடிகர் சீவா, பசுபதி, கவிஞர் வைரமுத்துவும் வந்திருந்தார்கள் என்றது வேறு செய்தி.

இந்த வரிசையில் இன்றைக்கு பதிவர் பரதேசி அவர்களின் அனுபவம் பகிர்ந்து இருந்தார். 7 ஆண்டுகளுக்கு முன் அட்லாண்டாவில் நடந்த நிகழ்வு இன்றைக்கு தான் நடந்தது போல் இருக்கிறது அந்த அன்பும், வரவேற்பும், உபசரிப்பும். விழாவில் கலந்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த அருமை.

Thursday, July 14, 2016

இந்த முட்டாள் கணவருக்கு சட்டப்புலிகள் யாராவது உதவுங்களேன்..........

மணமுறிவு வழக்கில் தனது நேற்றைய  மனைவியும் என்னாள் பிள்ளை பராமரிப்புக்கும் பணம் கொடுக்க முடியாது என்று தொடுத்த வழக்கில், பெண்களை பொருளீட்ட சொல்வது இந்து மத தர்மங்களுக்கு எதிரானவை என்றும். மாதம் ரூ 5000 கைக்கும் வாயுக்கும் மட்டுமே சரியாக இருக்கும் என்று நீதிமன்றம் தீர்ப்பில் அந்த முட்டாள் நேற்றைய கணவரை கடிந்து இருக்கிறது.

சென்ற ஆண்டு இந்தியாவின் திட்ட ஆணையம் நாள் ஒன்றுக்கு ரூ22 இருந்தால் அவர் வறுமை கோட்டிற்கு கீழ் இல்லை என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு அரசு கெசட்டில் கிடைக்கும். அந்த கெசட்டின் பிரதியையும் மேலும் நேற்றைய மனைவி வேலை பார்க்கவில்லை என்ற சாட்சியத்தின் அடிப்படையில் அவர் வேலை செய்யும் மத்திய/மாநில அரசு நிறுவனத்தின் மேலாளரை நீதிமன்ற அழைப்பு கட்டளையில் இணைத்து விசாரித்தால் இந்த தீர்ப்பு திருத்தப்படலாம்.

ஒரு நாளைக்கு ரூ22 என்றால் ரூ 682ல் அவரது வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகி விடுகின்றது, மீதம் இருக்கும் ரூ4312ல் அவர் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்றும் வாதிடலாம்.

நீதிமன்றத்தை பொருத்த அளவில் சாட்சிகளின் அடிப்படையில் தான் அனுகவேண்டு அன்றே உணர்வு பூர்வமாக இல்லை. என்ன இதை சொல்வது ஒரு மிகவும் புகழ் பெற்ற வக்கீலாக இருக்க வேண்டும் அவ்வளது தான். இருந்தாலும் இந்த வாதத்தை நிதிமன்றம் தன்னிச்சையாக புறம் தள்ளும் அதிகாரம் பொருந்தியது என்றதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஏன்டாமக்கா கட்டும்போதே தெரியாதா பின்னாளில் வழக்கு அது இது என்று வரும் என்று........

யார் அப்பன் வீட்டு பணம் இந்த ரூ616 கோடி மோடி தான்சானியாக்கு தூக்கி கொடுக்க

மோடி பதிவி ஏற்றதில் இருந்து அந்த நாடுக்கு இவ்வளவு பணம், இந்த நாட்டு இவ்வளவு என்று வெவ்வேறு நாடுகளின் பெயரில் இந்தியாவின் வரிப்பணத்தை அள்ளி அள்ளி வீசுகிறார்.

இந்த பணம் எல்லாம் மோடி குசராத்து முதல்வராக இருந்த போது சம்பாதித்ததோ இல்லை பாசகவின் கட்சி பணமோ இல்லை.

இந்தியாவில் மாதம் கையெழுத்திட்டு சம்பளம் பெறும் நடுத்தர வர்க மக்களை கேட்காமலேயே அவர்களது சம்பளத்தில் இருந்து அரசு எடுத்துக்கொள்ளும் வரிப்பணம்.

அடி தட்டு மக்கள் பெறும் தின சம்பளத்திற்கு அவர்கள் வரி கட்டுவது இல்லை. மேல் தட்டு மக்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் வரிக்கட்டுவதும் இல்லை வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதும் இல்லை.

மேல் தட்டுமக்கள் உடனே வரிந்துக்கட்டிக்கொண்டு அப்போ இந்திய அரசின் வரிப்பணம் பூரா நடுத்தட்டு மக்களின் வருமான வரிப்பணமா என்று மிகவும் புத்திசாலி தனமாக கேட்ப்பார்கள். ஆமாம் நடுத்தட்டு மக்களின் வருமான வரிப்பணமும், அது நிமித்தமாக ஆன செலவுக்கு தொழில் நிறுவனங்கள் வருமான வரி கட்டாமல் தவிர்க்க கணக்கு காட்டி கட்டிய பணமே அன்றி மேல் தட்டுமக்களின் வருமான வரிப்பணம் இல்லவே இல்லை. அது மட்டும் இல்லாது அனைத்து தட்டு மக்களும் வாங்கும் சேவைக்கும், பொருட்களுக்கும் விதிக்கும் வரியுமே இந்த மோடி அரசாங்கம் வாரி வழங்கும் இந்த பணம்.

இப்படி அடுத்த நாடுகளின் பெயரில் உதவி என்று மோடி திட்டங்களாக கொடுக்கும் பணம் அதானியின் நிறுவனங்களில் ஒன்று ஒப்பந்தம்மிட்டு இந்திய அரசின் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த நாடுகளில் பணியை பூர்த்தி செய்யும்.

இலவசமாக இந்திய அரசு அடுத்த நாட்டிற்கு செய்யும் உதவி அதனால் எந்த தரத்தில் அந்த பொருட்களோ உதவிகளோ இருக்கிறது என்று அந்த நாடுகள் வாய்திறப்பது இல்லை காரணம் அவைகள் இலவசமாக வலிந்து கொடுக்கப்பட்டவை.

கிட்டதட்ட உள்ளாட்சி தேர்தல் முடிந்த உடனே நன்றாக இருக்கும் தெரு சாக்கடைகளை உடைத்துவிட்டு மீண்டும் அதே சாக்கடைகளை முன்பைவிட கேவலமாக கட்டுவார்களே அதே போல் இருக்கும் இந்த இந்த வெளிநாட்டு இலவச திட்டங்கள்.

இந்த உப்புமா திட்டங்களுக்கு சிறு நகரங்கள் முதல் பெரு நகரங்கள் வரை வாழும் நடுத்தட்டு மக்கள் தங்களது சமையல் எரிக்காற்று மானியம் முதல் சிறு விவசாயிகள் வரை உர மானியம் வரை விட்டுக்கொடுத்தல் வேண்டும்.

ஏன் என்றால் அப்போது தான் இந்தியாவிற்கு சமீபத்தில் உலக வங்கு கொடுத்த 620 பில்லியன் அமெரிக்க டாலர் சூரிய சக்தி மின்சார அமைப்புகளுக்கான உதவி  தொகை கிடைக்கும்.

அந்த உதவி தொகைகளையும் அதானியின் இன்னும் ஒரு உப்புமா நிறுவனம் உப்புமா தயாரிப்புகளை நடுத்தர மற்றும் கிராமபுர மக்களின் கூறைகளில் நிறுவி விட்டு 70% முதல் 90% சதவிகித பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு மின்மிகை நாடாக இந்தியா ஆகிவிட்டது ஆகையால் அடுத்த ஆண்டில் சர்வதேச மின்மிகை நாடு இந்தியா என்று ஐநா அறிவிக்க வேண்டும் என்று சொல்லி ஒரு 2 மில்லியன் அமெரிக்க டாலரில் ஆப்ரிக்க நாடுகளில் ஒரு நாட்டுக்கு உதவி என்று அறிவிக்கும் மோடி அரசு.

உலக வங்கி கடன்/உதவி கொடுத்தாலும் அதானிக்கு, இந்தியா வெளி நாடுகளுக்கு உதவி என்று அறிவித்தாலும் அதானிக்கு ஏன் இப்படி விஞ்னான பூர்வமான ஊழல். பேசாமல் அப்படியே இந்தியாவில் வரும் அரசு வருமானம் எல்லாம் இனி அதானிக்கு தான் என்று சொல்லிவிட வேண்டியது தானே மோடி..........

எதிர்கட்சிகளும் சரி செய்தி இதழ்களும் சரி, ஏன் பொருளாதார புலிகள் என்று சொல்லும்/சொல்லிக்கொள்ளும் வல்லுனர்களும் சரி இது வரையில் இவைகள் பற்றி வாய்திறக்காமல் இருப்பது சோகமே.......

காசுமீருக்கு வாச்சது ஈழத்திற்கு வாய்க்காமல் போனதே........

காசுமீரில் எது நடந்தாலும் அந்த ஊர் மக்கள் கேட்கிறார்களோ இல்லையோ பக்கத்து நாடும் அதன் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் கட்டாயம் கேட்ப்பார்கள். அது மட்டும் இல்லை அதற்கு மிகவும் பொறுப்பாக இந்திய அரசும், இராணுவமும் கூட ஐநா சபை வரை சென்று புகாரில் இருந்து சமாதானம் வரை சொல்லும்.

சரியோ தவறோ, நல்லதோ தீமையோ இருப்பினும் விடமாட்டார்கள் என்ற தைரியம் இருப்பதால் தான் காசுமீரத்தில் இன்றைக்கு உயிரை கொடுத்தாவது போராடுவோம் என்று போராடுகிறார்கள்.

இத்தனை ஆண்டுகளில் அங்கு ஒரு கருணாவை கண்டு பிடிக்க முடியவில்லை, ஐநாவுக்கு வா, செனிவாக்கு வா என்று தண்ணீர் காட்ட முடியவில்லை. ஒரு டக்குலசுசை கண்டு பிடிக்கமுடியவில்லை, ஒரு சுப்பிரமணி சாமியை கண்டு பிடிக்கமுடியவில்லை, என் ராமைவிட்டு சுதந்திர காசுமீரம் வந்தால் அவர்கள் இந்தியாவையே தீயிட்டு கொளுத்திவிடுவார்கள் என்று எழுத வைக்க முடியவில்லை.

ஆனால்  ஒன்று மட்டும் சாத்தியம் ஆக்கி இருக்கிறது, IPKF போல் காசுமீரத்திலும் இராணுவம் கட்டற்ற பாலியல் வன்முறையை மேற்கொண்டு வருவது மட்டும்.

காசுமீரம் இந்தியாவின் ஒரு பகுதி, அப்போ ஈழம் என்ன ஆப்ரிகாவின் பகுதினா அவர்கள் சொன்னார்கள்.

ஈழம் அமைந்தால் அது இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையும் என்று அவாள் எல்லாம் சொல்வார்கள். ஆனால் காசுமீரமும் அதனால் இந்தியாவிற்கு ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் இழப்பினை பற்றி வாய் திறக்கமாட்டார்கள் ஏன் இந்தியும், அரபியும் பேசுவதாலா....இல்லை தமிழ் பேசாததினாலா....

இது என்ன மாயமோ................

Wednesday, July 13, 2016

பாமக, இராமதாசு மற்றும் அன்புமணி சாதியை தவிர வேறு எதை பற்றியும் பேசாதது ஏன்

July 12 2016
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுப்பு: ராமதாஸ் கண்டனம்

July 11,2016
இழுக்கு சேர்ப்பதற்கு அல்ல 'எழுத்து சுதந்திரம்'- 'மாதொருபாகன்' வழக்கில் ராமதாஸ் கருத்து

July 09, 2016

ராம்குமாரை கதாநாயகனாக சித்தரிக்க முயற்சி: ராமதாஸ் கருத்து

July 06, 2016
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநகரமாக சென்னை மாறி வருகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டுDec 6,2012
ஆமாம், நான் ஜாதி வெறியன்தான்... டாக்டர் ராமதாஸ் பரபரப்புப் பேச்சு


நாளிதழ்களையோ அல்லது வேறு இதழ்களையோ திரந்தால் இராமதாசோ, பாமகவோ அல்லது கையெழுத்து தான் போடுவேன் என்று சொல்லும் அன்புமணியாகட்டும் இவர்கள் வெளியிடும் கண்டனங்கள் ஆகட்டும், அறிவிப்புகள் ஆகட்டும் அனைத்துமே சாதியை சார்ந்தே இருப்பதேனோ தெரியவில்லை.

இந்த செய்திகளுக்கு நடுவில் பல கொலைகள் நடந்தது உண்டு, ஆனால் இவர்களோ இவர்களது இயக்கமோ சாதிய முக்கியத்துவம் பெறாத கொலைகளுக்கோ சச்சரவுகளுகோ எந்த முக்கியத்துவமும் கொடுப்பதே இல்லை.

இந்த சாதிய இயக்கம் தமிழகத்தை ஆளுவதற்கு ஏற்ற கட்சி என்று இராமதாசும் அவரது மகனும் மக்களுக்கு சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக்கூட சாதியின்றி பார்க்க முடியாத இந்த மனிதர்கள் தாம் மக்களை வழி நடத்தபோகும் தலைவர்கள் நம்புங்கள்.

50 ஆண்டு காலமாக முன்னோக்கி நகர்த்திகொண்டு வந்த மக்களை 200 ஆண்டுகளுக்கு ஆங்கிலேய அடிமை காலத்துக்கு அல்லவா இவர்கள் நம்மை அழைத்து போக முற்படுகிறார்கள் இந்த தேசபக்தர்கள்.

தேர்தல் காலங்களில் எதிர் அணியினர்களை மாக்களாக மதித்தும் மிதித்தும் பேசிய இவர்களது பேச்சுகளை மக்கள் அறிவார்கள்.

எதற்கு எடுத்தாலும் வன்னியர்கள் என்று பேசும் இந்த மக்களால் எப்படி அடுத்தவர்ளோடு இணக்கமாக செயல்பட முடியும்.

அது மட்டும் இல்லாது சாதி வளையங்களை தொகுப்பதும், நாதியற்றவர்களை அடித்து கொல்லவும் தூண்டும் இவர்கள் தண்டிக்கபட வேண்டியவர்கள்.

இந்திய அரசியல் அமைப்பில் சாதிக்கு எதிராக உள்ள அனைத்து பிரிவுகளிலும் குற்ற நடவடிக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்பட்டு வரும் இந்த சாதி இயக்கம் தான் தமிழகத்தையும் இந்தியாவையும் ஏன் அமெரிக்காவையும் ஆள பிறந்த மக்கள் மற்றும் இயக்கம்.

Tuesday, July 12, 2016

நாட்டு நடப்பே தெரியாத விசயகாந்து ஐயோ பாவம் - சீர்திருத்த பள்ளி

1988ல் சலாம் பாம்பே என்று ஒரு படம் வந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அந்தப்படம் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் பாம்பாய் ஓடி வந்து வாழ்க்கையை தொலைத்த ஒரு சிறுவனின் கதை. சமீபத்தில் கூட இந்த கதையை அழகாக மெழுகேத்தி சிலம் டாக்கு மில்லினர் என்று ஆசுகர் வாங்கிய கதையும் உண்டு.

திரைதுறையை சேர்ந்த இவருக்கு சிறார் சீர்திருத்த பள்ளி எல்லாம் எப்படி நடக்குதுன்னு தெரியாதாம். சீரழிக்கும் பள்ளியா என்று கேட்கிறார் அப்பாவி போல்.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்ற வழக்கு இன்றைக்கும் அன்றாடம் நாம் பார்க்கும் காட்சிகள்.

அதனால் தான் சின்ன பிள்ளைகளை இதை பார்க்காதே படிக்காதே என்று சட்டமும் கொண்டு அடக்கி வைத்துள்ளார்கள். இளம் கன்று பயம் அறியாது, பயம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் தான் செய்யப்போகும் செயலால் தனது வாழ்க்கையும் அடுத்தவர் வாழ்க்கையும் எந்த நிலைக்கு தள்ளப்படும் வயது இல்லாத பிள்ளைகளை வீட்டுலேயே கட்டுப்படுத்தியும் கண்டித்தும் வளர்க்க வேண்டும் என்றது ஊர் அறிந்த உண்மை.

மற்ற நாடுகளை விடுவோம் இந்தியாவில் குற்றமும் தண்டனை என்று கிடையாது. குற்றமும் குற்றம் புரிந்தவனின் பின்னணியும் என்று தான் இருக்கிறது.

கொலையே ஆனாலும் 100 கோடி ரூவா படம் வீணாய் போகும், தேசபக்தி படத்துல எல்லாம் நடிச்சி இருக்கார்ன்னு சொல்லிகிட்டு வெளியில வந்து தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் பின் தர்மம் வெல்லும் என்று கையை ஆட்டி ஆட்டி வசனம் பேசலாம்.

ஆனால் இப்படி பின்னணி இல்லை என்றால் அடுத்தவன் செய்த கொலைக்கு கூட தான் பலிகடாவாக்கப்படுவதை எவனாலும் தடுக்க முடியாது இந்தியாவில்.

கோபத்திலும் ஆத்திரத்திலும் அறியாமல் செய்த தவறு வருந்தி திருந்தும் இடம் தான் சிறையும் சீர்திருத்த பள்ளியும். ஆனால் அங்கு செல்பவர்களை எப்படி நடத்துகிறார்கள்.

சட்டம் என்ன எல்லாம் சொல்கிறதோ அவைகளுக்கு நேர் எதிர்மாறாக நடந்து அந்த சிறார்களையும் கைதிகளையும் வெளி உலகுக்கே தகுதி இல்லாதவனாக தான் மாற்றிவிடுகிறது இந்திய சமூக அமைப்பு.

சட்டம் ஒரு தண்டனை கொடுத்தால் அதற்கு மேல் சமுதாயம் கொடுக்கும் தண்டனை அதைவிட கொடூரம்.

இவைகள் எல்லாம் தெரியாதது போல் ஐயா விசயகாந்து கேள்வி கேட்கிறார், எழுதி கொடுத்தவனை பிடித்து நாலு நல்லா நடு மண்டையில போடுங்க.............

Monday, July 11, 2016

மாதொருபாகனை விமர்சிக்கும் குருமூர்த்தி நடிகர் உதயநிதியை விமர்சிகாதும் வழக்கு போடாததும் ஏன்

மாதொருபாகனை வரிக்கு வரி விமர்சனம் செய்தும் நீதிமன்றதில் வழக்கில் வாதாடிய குருமூர்த்தி அதே பாணியில் இருக்கும் திரைபடம் மனிதன் படத்தை விமர்சிக்காமலும் வழக்கு தொடுக்காமலும் இருப்பது ஏன் என்று விளக்குவாரா.

என்ன தான் படம் துவங்குவதற்கு முன் அனைத்தும் கற்பனை என்று சொன்னாலும், வழக்கை துவங்கும் முன்பு அனைவருக்கு முன் நிலையிலும் ஒரு நீதியரசர் ஒரு செல்வாக்கு மிகுந்த வக்கீலுடன் தனது வீட்டு மனை வாங்குதல் பற்றி பேசுவதாக காட்டுவதாகட்டும்.

நீதியரசர்களுகே சந்தேகம் என்றால் உங்களை தானே கேட்ப்பார்கள் என்று நீதியரசர் சொல்லும் வசனமாகட்டும்.

எந்த நீதிபதி அப்படி நடந்துகொள்கிறார்கள் என்ற அரைகூவலையாவது விட்டிருக்க வேண்டும் இந்த குருமூர்த்தியும் அவரது பின்னால் இருந்து இயக்கும் சக்திகளும்.

சாட்சி யார் என்று நீதிமன்றத்தில் குறிபிட்டே ஆகவேண்டும் என்று கேட்பதும், பின் குறிப்பிட்டதும் சாட்சிகளை கொல்வதும், மிரட்டுவதும், கடத்துவதும் என்று அழகாக படம் முழுக்க காட்டியுள்ளார்கள். இந்த காட்சிகள் பார்க்கும் மக்களை நாடு இப்படி தான் நடந்து கொண்டு இருக்கிறது என்று நினைக்க வைக்கும் விதமாக இருக்கிறது என்று ஏன் இவர்கள் கொதித்து எழவில்லை.

அதுவும் இந்த படம் தேர்தக் சமயத்தில் வெளி வந்தவை, அதுவும் ஒரு பலம் பொருந்திய கட்சியை சேர்ந்தவர் நல்லவர் போல் வேடம் இட்டு நடித்து நாட்டையும் வீட்டையும் காக்கும் சக்தி அவரிடம் உள்ளது போல் நடித்து நாட்டு மக்களை ஏமாற்ற பார்த்துள்ளார் என்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை.

படத்தின் இன்னும் ஒரு கொடூரம் என்ன என்றால் செல்வந்தர்கள் இரவு நேரங்களில் பெண்களை காரில் ஏற்றிக்கொண்டு செல்வதும், இவன் அழைத்து செல்லும் பெண் அவனிடம் தனது தொடர்பு எண்ணை சொல்வதும் போல் காட்சிகளை அமைத்து பெண்களை இழிவுபடித்தியுள்ளார் என்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை.

வடகத்திய தொழில் அதிபர் என்றால், அவரது மகன் இரவு நேரங்களில் குடித்துவிட்டு தான் வீட்டுக்கு தாறுமாறாக வண்டியை ஓட்டி வருவான் என்றும். நடைபாதை என்றால் தூங்கும் இடம் அல்ல என்றும் அதே சமயத்தில் வண்டி ஓட்டுவதற்கும் இல்லை என்றும் சொல்லும் போன்ற வசனங்கள் சாலையோர மக்களை மனம் நோகும்படி இருக்கிறது என்று ஏன் வழக்கு தொடுத்து படத்திற்கு தடை இன்னும் வாங்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு திறமையான வக்கீல் தனது சம்பள பணத்தில் ஏமாற்றபட்டால் இப்படி தான் சட்டத்தின் விளையாட்டில் இறங்கி பணம் கொள்ளையடிப்பார் என்றால், தனக்கு எதிரிகளே கிடையாது தெரியுமா என்று சொல்லும் அந்த செல்வந்தர் இந்த வக்கீலிடமே தஞ்சம் அடையும் படி கதையமைத்து இருப்பது செல்வந்தர்களின் மனம் புண்பட்டுவிட்டது என்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை.

இவை எல்லவறறையும் விட, வெட்ட வெளியில், அனைவரும் பார்க்க ஞாயத்திற்காக போராடும் இளைஞனை விலை பேசும் விதமாக காட்டுவதும் பிறகு அவன் அதை எதிர்த்து போராடுவதாக காட்டுவதும் ஏர்செல் மேக்சிசு வழக்கில் மாட்டி இருக்கும் மாறன் சகோதர்கள் மிகவும் ஞாயமானவர்களாக படம் காட்டுகிறது என்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை குருமூர்த்தி மற்றும் குழுவினர்கள்.

ஏன் என்றால் மாதொருபாகன் ஆசிரியர் போல் ஓங்கி அடித்தால் ஒரு டன் வெய்ட்டுடா பாக்குறியா பாக்குறியா என்று வசனம் பேசி அடிக்க உதயநிதி என்ன கேட்க நாதியில்ல பிள்ளையா.

துப்பு கெட்ட குருமூர்த்தி இதிலே அவனை கூப்பிடு கேளுங்க இவர்களை கூப்பிடு கேளுங்கள் என்று சினிமா வசனம் போல் வசனம் வேறு.

கேட்பவர் கேனையாக இருந்தால் கோட்சே மகாத்துமா என்று சொல்வார்கள் இந்த கோத்ராகாரர்கள்........

இளிச்சவாயன் இந்தியன் ஏமாறுவதில் அப்படி ஒரு பெருமிதம்

வெளி நாடுகளில் எல்லாம் நல்ல சாலை வசதிகள் இருக்கின்றது. ஒரு இடத்திற்கு போவதென்றால் சட்டு என்று போவோம் என்று கர்வமாகவும் பெருமையாகவும் சொல்லும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நடுவே, இந்தியர்களும் எங்களுக்கும் சாலை வசதிகள் உங்கள் போல் உண்டு என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு நாட்டின் அடிப்படை தேவைகளில் ஒன்று ஆகுகிறது சாலை வசதி. அப்படி கொடுப்பது அரசின் கடமை. உலக நாடுகளில் முன்னேறிய நாடுகளை போல் நாங்களும் உங்களுக்கு வசதி செய்து தருகின்றோம் என்று சொல்லி இந்திய அரசும் மக்களுக்கு சுங்க சாலைகளை அறிமுகம் செய்தது.

இந்த சுங்க சாலைகள் வருவதற்கு முன்பு வருடம் ரூ200 சாலை வரியாக கட்டினால் போதும். தமிழகத்தில் எந்த இடத்திற்கு வேண்டுமானால் போய் வரலாம். ஆனால் இன்றைக்கு எந்த இடத்திற்கு சொல்வதானாலும் சுங்க வரி செலுத்தாமல் செல்ல முடியாது.

கிட்ட தட்ட ஆங்கிலேயன் காலத்து சட்டம், ஆங்கிலேயன் அமைத்து கொடுத்த சாலையை பயன்படுத்த சுங்கம் என்று சொன்னார்கள்.

ஆனால் இப்போது இந்திய அரசு அமைத்த சுங்கவரி சாலையை பயன்படுத்த இந்தியர்களுகே சுங்கம் என்றது எப்படி இருக்கிறது. சரி சுங்கம் என்று வந்துவிட்டால் கட்டிதான் ஆகவேண்டும். சரி மற்ற நாடுகளில் சுங்கம் செலுத்தவேண்டாம் என்றால் சுங்கம் இல்லா சாலைகள் நாடு முழுக்க உண்டு. என்ன வேலை நேரங்களில் மிகவும் நெரிசலாக இருக்கும் அவ்வலவு தான் சுங்கம் பைசா கட்ட தேவை இல்லை.

ஆனால் இந்தியாவிலோ இருக்கும் ஒரே சாலைக்கு ஆங்காங்கே புறவழி சாலைகளையும் இணைப்புகளையும் மட்டும் கட்டிவிட்டு எவன் எங்கே சென்றாலும் சுங்கம் கட்டினால் தான் ஆச்சு என்றால் எப்படி.

புறவழி சாலைகளையும் அதன் இணைப்புகளும் வேண்டும் என்றால் கூட எதற்கு என்று தான் கேட்க வேண்டும் கொடுக்கலாகாது. எங்களுக்கு வழி செய்து கொடுக்கத்தான் எங்கள் நிலங்களையே கையகப்படுத்தி சாலைகளை அமைத்துள்ளாய். அப்படி இருப்பின் என்னிடம் எப்படி சுங்கம் கேட்க முடியும் கேட்டார்களா இது வரையில்.

ஒரு சில தடங்களில் இன்னும் ஒரு 16 கிமி சென்றால் ஊர் வந்துவிடும் ஆனால் அந்த தூரத்திற்கு சுங்கம் மட்டும் 110 வரை வசூலிக்கிறார்கள்.

இந்தியர்களும் அழகாக சிரித்தபடி சுங்கம் கட்டி பெருமை கொள்கிறார்கள், அட இளிச்ச வாய இந்தியர்களா உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா.......

Thursday, July 7, 2016

இந்தியாவில் காமிரா செல்பேசிகளை உச்ச நீதிமன்றம் தடை விதித்தாலும் விதிக்கலாம்

அந்த நாயை 4வது மாடியில் இருந்து வீசி அதை காமிரா செல்பேசி மூலம் தான் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

எப்படி மாடுகளை வளர்க்கவோ, கொல்லவோ, சாப்பிடவோ தடை இல்லையோ அது போல நாயை வளர்க்கலாம், கொல்லலாம், சாப்பிடலாம் தடை ஏதும் இல்லை. ஆனால் அந்த நாயயை 4 மாடியில் இருந்து தூக்கி எரிய காரணமாக அமைந்த செல்பேசியையும் அதை இணையத்தில் வெளியிட்ட தால் இணையத்தையும் தடை செய்ய பீட்ட நிறுவனமும் விலங்கார்வலர்களும் வழக்கு தொடுக்க உள்ளனர்.

அல்லது குறைந்தது முக நூலுக்காவது தடை  விதியுங்கள் என்றும் கூட சொல்வார்கள்.

பிறகு ஒவ்வொரு தேர்தலுக்கும் கட்சி மாறுபாடு இல்லாமல் நான் அனுமதி வாங்கி தரேன் எனக்கு ஓட்டு போடுங்க என்று பல் இளிக்கும். பாசக மாநில அரசு தான் செய்யனும் என்று ஒரு 100 நாட்கள் கழித்து சொல்லும்.

இந்தியாவின் விலையுயர்ந்த வக்கீல்கள் பணமே வாங்காமல் வாதாடி தடை வாங்கி தருவார்கள் பாருங்கள்.

Wednesday, July 6, 2016

உடுமலைக்கு குரல் கொடுக்காத இராமதாசும் எச்சி இராசாவும் இப்போ கதறுவதேன்

உடுமலை சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு வேறு முக்கியமான செய்திகளை கொடுத்து இருக்கிறேன் சென்று அதன் வேலைகளை பாருங்கள் என்று கூறினார் ஐயா இராமதாசு அன்று. ஏன், அன்று கொல்லப்பட்ட நபர் சுவாதியின் சாதியை சார்ந்தவர் இல்லை அதனால். இன்றைக்கு கேட்டால் மருத்துவர் ஐயாவும் அவருடன் கையெழுத்துடன் அலையும் அவரது செல்லமகனும் வேறு எதாவது ஒரு கதை சொல்லி அன்னை பிள்ளைகளுக்கு சாதம் ஊட்டுவது போல் பொய்யுரைபார்கள்.

இந்த எச்சி இராசா மற்றும் சிரிப்பு நடிகர்கள் சேகரும், மகேந்திரனும் அன்றைக்கு எதுவுமே நடக்காதது போல் இருந்துவிட்டு இன்றைக்கு அடவு கட்டி ஆடுவது என்ன பாருங்கள். என்ன இவர்களின் மனித நேயம்.

மறைந்த அந்த பெண்ணின் மறைவை வைத்து தமிழகத்தில் எப்படியாவது ஒரு கோத்ராவை உருவாக்கி விடவேண்டும் என்று அழகாக காய் நகர்த்துகிறார்கள்.

இன்றைக்கு சென்னையில் வெளியில் ஆண்களுடன் சுத்தும் பெண்களை பார்க்கும் போது அடுத்த பலிகெடா இவராக கூட இருக்க கூடும் என்ற நிலையில் தான் இருக்கிறது.

மேலும் இப்படி பொதுமக்கள் பார்க்கும் படி பெண்கள் துன்புறுத்தப்படுவதும் கொல்லப்படுவதும் இது முதல் முறை இல்லை என்ற செய்தியையும் அழக்காக இந்த கோத்ரா கூட்டம் மறைப்பதையும் பார்க்கமுடியும்.

வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தாகிவிட்டது அங்கே சங்கர் ராமன் கொலை வழக்கில் சொன்ன தீர்ப்பு போலவா எதுவுமே நடக்கவில்லை என்று சொல்ல போகிறார்கள். எப்படியும் இதோடு சேர்த்து இல்லாத பொல்லாத வழக்குகளையும் இன்ன இன்ன இத்தியாதிகளையும் அவன் மீது சுமத்தி அவனது குடும்பம் மட்டும் அல்லாது அவன் ஊர் என்று சொன்னால் கூட தள்ளி நில்லு என்று சொல்கின்ற அளவிற்கு ஆக்காமல் விடமாட்டார்கள்.

இதில் பலியான அந்த பெண் தான் பாவம், முதலில் அந்த பெண் மிகவும் புனிதமானவர் என்று வரிக்கு வரி செய்தியாளர்கள் எழுதினார்கள்.

பிறகு அன்றைக்கு அந்த பெண்ணை கண்ணம் கண்ணமாக அடிக்கும் போது எதிர்ப்பு காட்டாமல் வாங்கினார் என்று சொன்னார்கள்.

இன்றைக்கு அந்த நபர் வேறு இந்த பிடிபட்ட நபர் வேறு என்று சொல்கிறார்கள்.

கூட்டிகழித்து பார்த்தால் கடைசியில் சுவாதியின் மானம் கப்பல் ஏறும் போல் தோன்றுகிறது.

சுவாதி 21ன்னை தாண்டிய வளர்ந்த பெண் அவளது விருப்ப படி என்ன வேண்டும் என்றாலும் செய்வார் என்று கோபி நாத்து ஒரு கூட்டத்தை கூட்டி நீங்க ஏன் பெண்களோடு சுத்துகிறீர்கள் என்று நமீதாவை கூட்டி கேள்வி கேட்க வைக்காமல் இருந்தால் சரி.

சென்னையில் ஒரு தனியார் கணணி மையம் அதிலே சுமார் 19 அல்லது 18 வயது மதிக்க தக்க இளைஞன் யாரோ ஒரு பெண்ணுடன் தொலை பேசியில் பேசிக்கொண்டே அந்த மையத்து வேலைகளை பார்க்கிறான். அலை பேசியில் அடுத்தவர்கள் முன் பேசும் பேச்சுகள் இல்லை அவைகள், கேட்பவர்கள் முகம் சுளிக்கும் பேச்சுகள். இது காலை 10:30 மணிக்கு நடக்கும் காட்சிகள்.

தங்களின் அந்தரங்கம் பார்ப்பவர்களுக்கு காட்சி பொருளாக ஆக்கப்படுகின்றதே என்று கூட தெரியாத பெண் ஒரு நாள் சுவாதி போல் ஆக்கப்படுகின்றாளோ இல்லை உடுமலையில் மண்டை உடைக்கப்பட்டு யாரும் கேட்க்காத நிலைக்கு தள்ளப்படுகின்றாளோ, அது அந்த பையனின் சாதியை பொருத்து அல்லவா நிர்ணயக்கப்படும். அந்த பையன் என்ன சாதியோ, இராமதாசும் கோத்ரா கூட்டங்களும் கண்டுபிடித்து நிறுத்தினால் நல்லது.

Friday, July 1, 2016

மோடி அரசே சோலார் மானியத்தி விட்டுக்கொடு ஒரு ஏழை நாட்டில் விளக்கெரியட்டும்

கீழே கொடுத்து இருக்கும் மோடியின் விளம்பரம் நடுத்தர மக்களின் மனசாட்சியை குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுத்தி நான் செத்தாலும் பரவாயில்லையா அவன் நல்ல இருந்துட்டு போகட்டும் என்று இது வரை 1 கோடி பேர் திருப்பிக்கொடுத்துவிட்டதாக மோடி அரசே விளம்பரம் செய்கின்றது.

ஒரு மாதத்தில் பாதி நாட்கள் வெளி நாடுகளில் வாழும் ஒரே பிரதமர், ஆசியாவில் எந்த நாட்டிற்கு எந்த பாதிப்பு வந்தாலும் பணத்தையும் மற்ற உதவிகளையும் கேட்காமலேயே அள்ளி வீசும் நாடு. உலக அணுசக்தி நாடுகளின் பட்டியலிலும் பாதுகாப்பு கவுன்சிலிலும் நிரந்தர இடம். 21 முதல் 60 செயற்கைகோள்களை விண்ணில் ஒரே ஒராக்கெட்டில் செலுத்த வல்லமை உள்ள நாடு. உலகிலேயே மிக பெரிய இராணுவம். ஆசியாவிலே அதிக தொழிலாளர்களை கொண்ட நாடு.

இப்படி தாறுமாறாக பணம் கொண்ட நாடு இந்தியா என்று சொல்வதிலும் விளம்பரப்படுத்துவதிலும் மோடிக்கும் மோடி அரசுக்கும் அலாதி பெறுமை அடவு கட்டி ஆடும்.

 நடுத்தர குடும்பங்கள் தாங்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று வேண்டும் இவர்கள். இந்த பகட்டு அரசுக்கு எதுக்கு 620 மில்லியன் டாலர் சோலார் மானியம்.

மோடி அரசுக்கு உலக வங்கி வழங்கி இருக்கும் மானியம்

World Bank approves $625-million aid for India's solar programme

இவனுங்க வாங்கினா உதவி நடுதர மக்கள் வாங்கினா மானியமா.

உள்ளே உள்ள செய்தியை பார்த்தால் இந்த உதவி யாருக்குக்கொடுக்கப்படும் என்று எழுதி இருக்கிறது என்று பாருங்கள், இந்த மானியம் யாருக்கு என்று புரியும்.

இந்த தொழில் நுட்பத்தில் முன் அனுபவமும், தொழில் நடத்தும் அளவிற்கு பணவளமும் இருப்போருக்கு மட்டுமே இந்த மானியமும் முதலீட்டு தொகையும் கொடுக்கப்படும் என்று சொல்லி இருப்பதும். தமிழக முதல்வரை அதானி குழுமம் வந்து சந்தித்து இருப்பதையும் இணைத்து பாருங்கள் செய்தி விளங்கும்.

வெட்கம் கெட்ட மோடி அரசு இந்த மானங்கெட்ட அரசின் பசப்பு வார்த்தைகளை நம்பி 1 கோடு நல்ல மக்கள் வஞ்சிக்ப்பட்டு விட்டார்களே என்ன செய்ய.

சுவாத்தியின் கொலையை பயன்படுத்தி இன்னும் ஒரு கோத்ரா கலவரம் செய்ய பாசக தீவிரம்

சிரிப்பு நடிகர்கள் அடவு கட்டி ஆடுவதை பார்த்தால் சொந்த மக்களை தாங்களே கொளுத்திவிட்டு அவர்கள் தான் கொளுத்தினார்கள் என்று சொல்லி 1 1/2 இலட்சம் மக்களை 3 நாட்களில் கொன்று குவித்து அதன் மூலம் ஆட்சிக்கு வந்த பாசக. தமிழகத்தில் தனது கணக்கை துவங்க இப்படி ஒரு திட்டம் தீட்டி தங்கள் மக்களை பலி கொடுக்கும் திட்டதில் சுவாத்தி கொல்லப்பட்டு இருப்பாரோ என்று தோன்றுகின்றது.

இதில் கவனிக்க வேண்டிய ஒற்றுமைகள் இறந்தவர் அதே போல் ஒரு பார்ப்பணர் வகுப்பை சேர்ந்தவர். கொன்றவர்கள் என்று அன்று குற்றம் சுமத்தியதும் முசுலீம்கள் இன்றைக்கு கொன்றதாக் சொல்லும் நபரும் ஒரு முசுலீம். அன்று கொலை நடந்ததும் அதிகாலை ஒரு இரயில் நிலையத்தில் இன்றைகு நடந்து இருப்பதும் அதே காலை இரயில் நிலையத்தில்.

இந்த விபரங்கள் தெரியாமல் அடவு கட்டும் சிரிப்பு நடிகர்களின் விளம்பரத்தில் அங்கும் இங்கும் வெடிக்கும் கருத்துகளும் கருத்து மோதல்களும் அவர்களின் தமிழக கோத்ராவை போற்றி வளர்க்கிறதோ என்று அச்சமாக இருக்கிறது.

ஒரு வேளை எனக்கு மட்டும் தான் இப்படி தோன்றுகின்றதோ இல்லை உண்மையே இப்படி தானா..................