Friday, December 15, 2017

முள்ளும் மலரும் - இளையராசா - மான் இனமே பாடலும்

இளையராசா இசையமைக்கும் படங்களில் ஒரு பாடல் படம் முழுவதும் பல்வேறு தாளங்களிலோ அல்லது பல்வேறு இசைக்கருவிகளிலோ வரும். உதாரணமாக புதுக்கவிதை படத்தில் வெள்ளை புறா ஒன்று என்ற பாடல் படத்தில் 20 இடங்களிலாவது வந்து போகும். பழைய நினைவுகளையும் நெருக்கங்களையும் நினைவூட்டும் காட்சிகள் அந்த துண்டு இசை மனதை வருடுவதை அந்த பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் போது காட்சிகள் மனதில் வந்து போவதை உணர முடியும்.

முள்ளும் மலரும் படத்தை பொருத்த அளவில் அந்த படத்திற்கு இளையராச தேர்ந்து எடுத்துக்கொண்ட பாடல் தான் இந்த மான் இனமே பாடல்.

ஆனால் படத்திற்கு விமர்சனம் எழுதும் ஒருவரும் இது வரையில் இந்த பாட்டை குறிப்பிடாமல் எழுதுவது சோகமே.

படம் துவக்கத்தில் பெயர் போடும் இடந்தில் வரும் இந்த பாடல், அந்த அண்ணன் தங்கை பாச நெருக்கடியில் எல்லாம் ஒலிக்கவிட்டிருப்பார் இளையராசா.

குறிப்பாக அந்த கடைசி காட்சியில் ஓடி வந்து அண்ணே என்று கட்டிக்கொள்ளும் அந்த தருணத்தில் ஒரு 6 அல்லது 10 நொடிகளுக்கு வந்து போகும் அந்த பாடல் அந்த பாச நெருக்கடியை அழுத்தமாக பதிவு செய்யும். அங்கு மட்டும் என்று இல்லை படத்தில் எங்கே எல்லாம் அண்ணன் தங்கை பாச நெருக்கடி வருகின்றதோ அங்கே எல்லாம் இந்த பாடல் ஒரு 5 , 10 நொடிகளில் உணர்சிகளை தூவி செல்லும்.....

எனக்கு தெரிந்த வரையில் எழுத்துக்கு வரும் பாடலை படம் முழுவதும் வரும் தீம் இசையாக அதிகம் இல்லை அதில் இந்த படமும் ஒன்று.

மேலும் சோபாவை பொருத்த அளவில் அவளின் ஆனந்தத்தை விவரிக்க ஒரு பின்னணி இசை வரும் அந்த இசையின் தாக்கத்தில் பின் நாளில் சூரியகாந்தி படத்தில் அதே சோபா பாத்திரம் இனி வாழ்க்கையில் என்ன செய்ய போகின்றோன் என்று தடுமாறும் காட்சிகளை கனவுகளே என்று ஒரு மான்டேசு பாட்டில் படம் பிடித்து இருப்பார்கள். இசை என்னவோ மலேசியா வாசுதேவன் ஆனால் இந்த முள்ளும் மலரும் இசையில் அந்த கனவுகளே பாடல் வந்திருப்பதை கவனிக்கமுடியும்.

2 comments:

Anonymous said...

அந்த படத்தின் பெயர் சூரிய காந்தி அல்ல
சாமந்தி பூ

சாமந்தி பூ சிவகுமார் , ஷோபா நடித்த படம்
இசை வாசுதேவன்

சூரிய காந்தி பழைய படம்

')) said...

சுட்டியமைக்கு நன்றி நண்பரே