Friday, December 30, 2016

இந்துவும் இரத்தமும் Bloodம் மற்றும் இயக்குனர் பாலாவும்

தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்! என்று தமிழிலும்

The Revenant: a pure, visceral experience என்று ஆங்கிலத்திலும் இந்து இதழ் செய்திகளை வெளியிட்டு இருக்கிறது.

இதோ முதலில் ஆங்கில செய்திகளை இங்கே எடுத்து வைப்போம் பிறகு காணாமலும் போகலாம்.

This is a Man vs Wild survival drama, a revenge saga and an existential journey, besides its artistic politicking. And at times, you feel it is too much to meld into a coherent film. Viewers looking for an overall emotional impact may be disappointed. It works not so much as a movie with a message but as a pure, visceral experience.

DiCaprio’s daredevilry as an actor and the extreme conditions with which the film has been made has made The Revenant this year’s biggest Oscar special movie event. That may have irked the inner cynics within fans of Inarritu, who is somewhat an iconoclast. But these scenes really are groundbreaking, each beat and nuance executed with supreme cinematic control – the scene where Glass escapes from the French and falls off a cliff with his horse is a heart-stopper.

அப்படியே இந்த ஆங்கிலப்படத்தை பற்றி என்ன அருமை ஆகா ஓகோ அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது என்று எழுதி இருக்கிறது இந்து. முழுவதையும் படிக்க அந்த தளத்தில் சென்று வாசித்துக்கொள்ளுங்கள்.

இதே இந்து தமிழில் என்ன எழுதி இருக்கிறது பாருங்கள்....

பாலா 
 
'சேது' படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர். ஆனால், 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் விரும்பிப் பார்த்தவர்களைக் கூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு செய்துவிட்டார். ரத்தம் தெறித்தல், குரல்வளை நெறித்தல், வினோதமான பழிவாங்கும் படலம்தான் பாலாவின் படம் என்று காலப்போக்கில் மாறிப்போனது. தாரை தப்பட்டை, கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை உண்மையும் உருக்கமுமாக சொல்வார் என நம்பி தியேட்டருக்குள் போனால் இந்த முறையும் ரசிகர்களின் குரல்வளையைக் கடித்து துப்பிதான் பாலா அனுப்பினார். 

கதைக்கோ திரைக்கதைக்கோ தேவை இருக்கிறதோ இல்லையோ அதைக் காட்டிலும் அதிகமான குரூரம், வன்முறை, குரோதம் போன்றவற்றை வெளிப்படுத்தித்தான் மனித நேயத்தை உணரவைக்க வேண்டும் என்பதில் பாலா உறுதியாக இருப்பது எதனால் என்பதை இன்னமும் ரசிகர்களால் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.

'தாரை தப்பட்டை' பாலாவுக்கு ஏழாவது படம். ஆனால், எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையாக பாலாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அனுராக் காஷ்யப், ராஜ்குமார் ஹிரானி முதலான இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் கண்டு வியக்கிறார்கள். அப்படிப்பட்ட முக்கிய சினிமா படைப்பாளி காட்சிப்படுத்துதலில் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

ரிவரண்ட் படம் ஆசுகர் படம் என்றதால் அனேக மக்கள் பார்த்திருக்க வாய்பு இருக்கிறது.

அந்த படம் துவங்வது துப்பாக்கி சூடில் தான், அந்த முதல் தோட்டாவில் இருந்து கடைசியில் கத்தியில் குத்தி குதறி ஆற்றில் வீசி பிறது அவனை இன்னும் ஒருவன் பிடித்து அவனது பாணியில் கழுத்தை அறுத்து நீரில் முக்கி இறக்க வைக்கும் காட்சியில் முடிகின்றது.

வெள்ளை பனி தரையில் தாரை தாரையாக சிவப்பு இரத்தம் அந்த கடைசி காட்சியில். கொட்டவனின் விரலை வெட்டிவதில் ஊற்ற தொடங்கும் இரத்தம் கடைசியில் ஓடும் குளிர் நீரில் முழுவதுமாக கழுவி முடிவதில் முடிகின்றது அந்த இரத்த கறைகள்.

ஓடும் குதிரையோடு ஒரு 100 அடியில் விழுவான் நாயகன் இருவரும் விழுந்து நிலைகுலைவதை மலையின் மேல் காற்றில் பறந்து காட்டுவார்கள் அதை தான் இந்து ஆங்கிலத்தில் இப்படி குறிப்பிடுகிறது.

"The Revenant is a very visual film, a technical marvel and a feast to the senses. Inarritu’s long-time collaborator, Lubezki has always brought out the holistic, spiritual soul of his films. Here he meditates on the wilderness, filming in natural light in magic hours and giving us some of the most stunning images we have seen in the movies in the recent past."

அப்படி மலையில் இருந்து விழுந்த குதிரையை கிழித்து உடலில் இருக்கும் பகுதிகளை நீக்கி விட்டு அதில் பதுங்கி உறங்கி உயிர் தப்பிப்பது என்று எக்கச்சக்க இரத்த சமாச்சாரங்கள் நிறைந்த படம் தான் இந்த ரிவரண்ட்.

அப்போ ஆங்கிலத்தில் Blood வந்தால்  very visual film, and giving us some of the most stunning images we have seen in the movies in the recent past.

தமிழில் இரத்தம் வந்தால்  "கதைக்கோ திரைக்கதைக்கோ தேவை இருக்கிறதோ இல்லையோ அதைக் காட்டிலும் அதிகமான குரூரம், வன்முறை, குரோதம் போன்றவற்றை வெளிப்படுத்தித்தான் மனித நேயத்தை உணரவைக்க வேண்டும்"

என்னையா நீங்களும் உங்கள் ஞாயமும்.

தற்பொழுது உலகத்தில் நல்லவர்களுக்கு ஒரு விளக்கம் சொல்கிறார்கள் இப்படி

ஏங்க அவன் தான் அப்படின்னு உங்களுக்கு தெரியும், ஆனால் நீங்க நல்லவங்களாச்சே இப்படி எல்லாம் பேசவோ செய்யவோ மாட்டீங்களே. போனா போகுது விட்டு கொடுத்துடுங்க......

தனக்கு ஞாயமாக கிடைக்க வேண்டிய எல்லாத்தையும் கெட்டவர்கள் தன்னிடம் இருத்து பிடுங்கும் போது உங்களுக்கு உலகம் சொல்லும் நீதி இது.

அதை தான் இந்துவும் கடைபிடிக்கிறது போலும்.

ரிவரண்டைவிட தாரை தப்பட்டையில் வன்முறை மிகக்கம்மி. ஒரு மூலையில் கோழியை முடக்குங்கள் அதுவரை ஓடிய கோழி நம்மீது பாயும், கோழிக்கே அப்படி என்றால் மனிதனுக்கு எப்படி இருக்கும்.

அதுவும் தான் காதலித்த பெண் நல்லா இருக்கட்டும் என்று விட்டுக்கொடுக்க வைக்கப்பட்ட பெண், அவளாது நல்லா இருக்கட்டுமே என்று அனுபியவளை இப்படி காசுக்காக கசாப்பு செஞ்சதை பார்த்துக்கொண்டு எந்த ஆண் சும்மா இருப்பான் என்று இந்து இதழ் தான் விளக்க வேண்டும்.

அது மட்டும் இல்லை ஏன் இந்த இரத்த வாடையை பற்றி ரிவரண்ட் பட விமர்சனத்தில் ஒரு வரிக்கூட எழுதவில்லை என்றதையும் விளக்கினால் நாம் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

Thursday, December 29, 2016

மோடியையும் அவரது அரசையும் கேலி பேசும் ப சிதம்பரத்தை வன்மையாக கண்டிப்போம்

என்னமோ மோடி கையாலாகதவர் போல் சித்தரித்து பேட்டியளித்து வருகிறார் ப சிதம்பரம்.

சமீபத்தில் ஒரே மாதிரியான கேள்விகளுக்கு ஒரே மாதிரியான பதிலை திரும்ப திரும்ப தமிழில் இருக்கும் ஊடகங்களுக்கு கேள்வி பதிலாக அளித்து வருகிறார் ப சிதம்பரம்.

சிதம்பரம் சிலாக்கித்து சொல்லும் செய்திகளுல் உள் குத்துகள் இவைகள்

1) மோடிக்கோ மோடி அரசுக்குகோ திட்டமிடல் என்றால் என்ன என்றே தெரியாது என்று இந்த செல்லா நோட்டு விவகாரத்தில் காட்டி இருக்கிறார்கள் என்று பொருள் பட மிகவும் நக்கலாக பதிலுரைக்கிறார், இதிலே பாரத பிரதமரை நான் நக்கல் செய்யமாட்டேன் என்று முகவுரை வேறு

2) மோடியும் மோடி அரசும் மூச்சுக்கு 300 தடவை பொய் சொல்கிறார்கள், அவர்கள் சொல்லும் எதையும் நம்புவதற்கு இல்லை என்று சொல்கிறார்.

3) மோடியும் மோடி அரசும் வெறும் வசனம் மட்டுமே பேசுபவர்கள் அவர்களுக்கு செயல் எதுவும் செய்ய துப்பு கெட்டவர்கள் என்றும், உதாரணமாக இந்த செல்லா நோட்டு விவகாரத்தில் கருப்பு பணம் ஒழியும் என்று சொன்னார்கள், எங்கே கருப்பு பணம் என்று நாங்களும் மக்களோடு சேர்ந்து கேட்கையில், இல்லை இது ஊழலை ஒழிக்க என்று சொன்னார்கள். புது நோட்டிலேயே இலஞ்சபணம் பிடிப்பட்டதே என்று சொன்னதும் பணமில்லா வர்த்தகம் என்று சொல்கிறார்கள் என்று பொய்யான புகார்களை அடுக்குகிறார்.

4) 50 நாளில் இந்த இடர்பாடுகள் நீங்கவில்லை என்றால் என்னை தீயில் இட்டு கொளுத்துங்கள் என்று பெரும் நம்பிக்கையில் மோடி சொன்னதை அப்படி செய்யலாமா என்று கேட்க்காது தான் சொச்சம் மற்றபடி சுற்றி வளைத்து அங்கே கொண்டு வந்து விடுகிறார்

5) மோடிக்கும் மோடி அரசுக்கும் கருப்பு பணம் என்றால் என்ன என்றே தெரியவில்லை என்று வேறு குறிப்பிடுகிறார், கருப்பு பணம் என்றால் என்ன என்றே தெரியாமல் எப்படி கருப்பு பணத்தை ஒழிப்பார்கள் என்று வேற நக்கல் பேசுகிறார்.

6) 100ரூ பொருளை நான் எதற்கு 102ரூக்கு வாங்கனும் என்று வேற வியாக்கானம் பேசுகிறார், மக்கள் இப்போது 10ரூ சில்லரையை கூட கேட்டு வாங்குவது இல்லை என்று ப சிதம்பரத்திற்கு தெரியாமல் போனது ஏனோ, மோடி கூப்பிட்டு தான் விளக்கனும் போலும்.

7) நாட்டில் கள்ளப்பணம் எப்படி உருவாகுகிறது என்று எளிமையாக சொல்கிறேன் என்று மருத்துவ கல்லூரி, மருத்துவர்கள் மற்றும் வக்கீல்களை உதாரணமாக சொல்கிறார்.

8) இது வரையில் சும்மா கொஞ்சோண்டு கிடைத்த 500 கோடி புது நோட்டுக்களை என்னவோ மோடியும் மோடி அரசும் கொண்டு போய் அந்த பிடி பட்டவர்களிடம் கொடுத்ததை போல் சித்தரித்து பேசுகின்றார்.

9) மோடியும் மோடி அரசும் நாட்டின் எல்லையில் மட்டும் பாதுகாப்பு வீரர்கள் நின்றால் பத்தாது வீட்டில் இருக்கும் அனைவரும் நாட்டின் காவலர்கள் ஆகவேண்டும் என்ற உண்ணதமான நோக்கில் பணம் எடுக்கின்றேன் என்ற போர்வையில் உள் நாட்டை பாதுகாக்கும் பணியில் இலவசமாக தாய் நாட்டுற்கு கடமையாற்றுபவர்களை, பணம் இல்லாமல் மக்கள் வங்கி வங்கியா பணம் தேடி அலைகிறார்கள் என்று கேலி செய்கிறார்.

10) ப சிதம்பரத்திற்கே ஒரு சின்ன அளவிற்கு தான் 2000 நோட்டு கிடைத்ததாம், பிறகு எப்படி அடுத்தவர்களுக்கு கிடைக்கும் என்று பொய் சொல்லுகிறார். முன்னமே சொன்னது போல் அரசு அதிகாரிகளே 500 கோடிகளுக்கு புது பணம் வைத்து இருக்கும் போது ஒரு அரசியல்வாதி அதுவும் நிதியமைச்சராக இருந்தவர் அவருக்கா தேவை என்றால் பணம் பெற்றுக்கொள்ள தெரியாது. யாரை ஏமாற்றுகிறீர்கள் சிதம்பரம் விளக்கம் சொல்லுங்கள்.

11) இவைகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல் இந்த பண தட்டுப்பாடு நீங்க இன்னனும் 6 மாதம் ஆகுமாம், பொருத்து இருந்து பாருங்கள் சிதம்பரம். மோடியும் மோடி அரசும் சனவரி 1 கூட இல்லை 31லேயே இந்த பண தட்டுப்பாட்டை ஓர் இரவில் நீக்குகிறார்களா இல்லையா என்று பாருங்கள்.

12) வங்கி கணக்கில் பணம் இருக்கிறது பணம் எடுக்கப்போனால் தர மறுக்கிறார்கள் இது சட்ட மீறல் என்றும் நக்கலடிகிறார்கள். போகிற போக்கில் நாட்டின் எல்லையில் இராணுவ வீரர்களை குளிரில் நிறுத்தி துன்புறுத்துகிறார் மோடியும் மோடி அரசும் என்று சொல்வார் போல. எல்லையில் இருக்கும் இராணுவ வீரர்கள் எப்படி கேள்வி கேட்க்க கூடாதோ அதே போல் மோடி அரசில் நாட்டில் வாழும் யாரும் கேள்வி கேட்க்க கூடாது என்ற அடிப்படை கூட புரியாத மனிதர் இந்த ப சிதம்பரம்

போங்கையா போய் வேறு வேலை ஏதாவது இருந்தால் பாருங்கள்.

பாசகவின் செய்தி தொடர்பாளர்கள் சொன்னது போல் இன்னும் 100 ஆண்டு காலம் மட்டும் இல்லை இந்த பூமி அழியும் வரை நிரந்தர பிரதமர் மோடி தான். ஏன் நாளை காங்கிரசே ஆட்சிக்கு வந்தாலும் மோடி தான் பிரதமர் அவர் சொல்வது தான் சட்டம். இந்த சாதாரண செய்தியை கூட புரிந்து கொள்ள பொருத்துக்கொள முடியாத மனிதர் ஐயா நீங்கள்........என்ன அரசியல்வாதியோ நீங்கள்..........

2017ல் பாசக அரசு செய்யவிருக்கும் அசுரதனங்கள்

மக்களை பயமுறுத்தி கையில் இருக்கும் திருப்பதி உண்டியல் வரை உள்ள கடைசி பணத்தையும் மிரட்டி வங்கியில் அடைத்த அரசு சாதாரண மக்களின் மீது வேறு என்ன என்ன எல்லாம் செய்த்தால் துன்பப்படுவார்கள் என்று ஆராய்ந்து சொல்ல "சாதார்ண் சன் துக்க யோசனா ஆயோக்கு" என்ற ஆணையத்தை அமைத்து அவர்கள் சொல்லும் பரிந்துரைகளை ஏற்று செயல்படவுள்ளார்.

இந்த சாதார்ண் சன் துக்க யோசனா ஆயோக் ஆணையத்தின் வேலையே சாதாரண மக்களை எப்படி எல்லாம் துக்கத்தில் ஆழ்த்துவது என்று ஆராய்ந்து இம்சை அரசன் 23ம் புலிகேசியினிடம் ஒ ஓ மன்னிகனும் பிரதமரிடம் சொல்லும்.

இந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசியும் மன்னிகனும் பிரதமரும் அதை ஒரு முறைக்கு ஆயிரம் முறையேனும் சிந்தித்து பார்ப்பார். கோடி சாதாரண மக்கள் கொல்லப்பட்டால் கூட பரவாயில்லை ஆனால் ஒரு பாசகவை ஆதரிக்கும் பணக்காரர்களுக்கு கூட எந்த பாதிப்பும் வந்துவிட கூடாது என்று ஆயிரம் முறை மனதுக்குள்ளே ஒரு Monkey Bathதை அவருக்கு மட்டுமே ஓட்டி பார்ப்பார்.

அப்படி சாதாரண மக்கள் தெருத்தெருவாக அலைவதையும் தங்களது கையால் ஆகா தனத்தால் விழி பிதுங்கி செய்வது அறியாது கோபத்தை எல்லாம் விழுங்கிவிட்டு மாலையில் அக்கடான்னு இருக்கும் வேளையில் மோடி தொகவில் தோன்றி எனது சாதார்ண மக்கள் ஏழைகள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்று மிகவும் அக்கரையாக சொல்வார்.

இந்த கையால் ஆகாக சாதார்ண மக்கள் நினைத்துக்கொள்வார்கள் அட நமக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் கொடுமைகள் போலும் மோடி சொல்வது போல் மற்ற ஏழை மக்கள் எல்லாம் நிம்மதியாக தூங்கிறார்கள் போல் தான் இருக்கிறது. நாம் மட்டும் ஏன் கோபப்பட வேண்டும் ஆகையால் நாளைக்கு எங்கே சென்று அலையலாம் என்று மனதுக்குள் ஒரு உத்தேச திட்டத்தை தீட்டிவிட்டு மயங்கி போய் தூங்குவான்.

50 நாட்களாக பிச்சைகாரர்கள் போல் தெருவில் அலைந்து திரிந்த மக்களும் சரி, அவர்கள் சென்று வேலைக்கு சென்று வரும் நிறுவனங்களும் சரி பணம் வாங்க போனேன் என்று சொன்னால் கடிந்துகொள்வதோ இல்லை நடவடிக்கை எடுத்தால் இம்சை அரசனிடம் இருந்து நடவடிக்கை பாயுமோ என்று அமைதியாக இருக்கிறார்கள் அல்லது பொருத்து கொள்கிறார்கள் தற்பொழுது.

சாதார்ண் சன் துக்க யோசனா ஆயோக் ஆணையம் பரிந்துரைத்திருப்பது இது தான்

1) வங்கியில் மக்கள் செலுத்தியுள்ள பணம் 2016ல் உள்ள பணம், 2016ல் இரண்டு மாதம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தின் வருமானமாக கருதி அதன் அடிப்படையில் 2016ஆம் ஆண்டின் ஆண்டு வருமானம் என்ன என்று பார்த்து வங்கியில் மிச்சம் இருக்கும் பணத்தில் வருமான வரியாக அப்படியே எடுத்துகொள்வது.

2) வருமான வரி செலுத்த முடியாத அளவிற்கு பணம் செலுத்தியவர்களின் பண அட்டையில் இந்த 2 மாதம் செலவழித்த தொகையை கொண்டு அவர்களது தோராய வருமானத்தை கணக்கிட்டு சனவரிக்குள் இந்த வருமான வரியை கட்டாவிட்டால் உங்களை சிறையில் தள்ளுவோம் என்று வருமான வரி துறையை வைத்து அறிக்கை அனுப்புவது.

3) இந்த இரண்டு மாத காலத்தில் நகையோ இடமோ பொருளோ வாங்கி இருந்தால் அவைகளையும் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தையும் ஒன்றாக சேர்த்து வருட வருமானத்தை கணக்கிட்டு அந்த பெரும் தொகைக்கு வருமான வரியை கட்டு இல்லை என்றால் சிறை என்று அறிக்கை அனுப்புவது.

4) பணம் எடுக்க போனேன் என்று வேலைக்கு தாமதமாக வருபவர்களுக்கு 2 முறை மட்டும் மிக கருணையாக மன்னிப்பதும் பிறகு வேலையை விட்டே அனுப்புமாறு இரகசிய அறிக்கையை வேலை நிறுவனங்களுக்கு அனுப்புவது.

என்று இந்த 4 அறிவிப்புகளை சனவரியில் அனுப்ப சாதார்ண் சன் துக்க யோசனா ஆயோக்கின் ஆயோகியர்கள் பரிந்துரை அனுப்பியுள்ளார்கள்.

இந்த ஆயோக்கியர்களின் ஆலோசனை பாசகவின் பணக்காரமக்களை எந்தவிதத்திலும் இம்மியளவும் பாதிக்காது என்று ஆராய்ந்த பிறகு சாதார்ண மக்களின் மீது பாய்ந்து குத்தி குதறி எடுக்க பாசக அரசு தயாராகி வருகின்றது.

சனவரியில் இம்சையரசன் 23ம் புலிகேசி மன்னிக்கனும் பிரதமர் மோடி தொகாவில் தோன்றி சாதார்ண ஏழைமக்கள் இப்போது தான் நிம்மதி பொருமூச்சி விட்டிருக்கிறார்கள் என்று அழுதுக்கொண்டே சொல்வார்.

இதை கேட்கும் சாதார்ண மக்கள் அட நாம் மட்டும் தான் துன்பம் அனுபவிக்கிறோம் போல மற்ற சாதார்ண மக்கள் ஏழைமக்கள் எல்லாம் நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள் என்று அடுத்த நாள் எந்த தெருவில் வேலைக்கு பங்கம் இல்லாமல் சென்று அலைவது என்று திட்டமிட்டுக்கொண்டே மயக்கம் வரும் வரையில் சிந்தித்து புலம்பிவிட்டு தூங்குவான்.

Wednesday, December 21, 2016

இந்திய மக்களே இனி அமெரிக்க டாலருக்கு மாறுங்கள் இந்திய பணத்தில் பரிவர்த்தனைகள் வேண்டாம்

இந்திய மக்களே இனி அமெரிக்க டாலருக்கு மாறுங்கள் இந்திய பணத்தில் பரிவர்த்தனைகள் வேண்டாம்.

உலகில் பொருட்செல்வத்தில் மிகவும் பலவீனமாக உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் பொதுவாக தெருக்களில் விற்கும் பொருட்களை கூட அமெரிக்க டாலருக்கு தான் விற்பார்கள்.

அது மட்டும் இல்லாது இன்றைக்கு இரவு 9:00க்கு மேல் இந்த நோட்டுகள் எல்லாம் செல்லாது என்று அமெரிக்க அறிவித்ததும் இல்லை அறிவிக்க போவதும் இல்லை.

ஆக இந்திய மக்கள் அனைவரும் இனி வங்கிகளில் அமெரிக்க டாலரில் சேமிக்கவும், கையில் செலவுக்கு அமெரிக்க டாலரையே எடுத்து செல்வதும் தான் பாதுகாப்பு.

இப்படி அமெரிக்க டாலரில் வியாபாரம் செய்வது சாத்தியமா என்று நீங்கள் கேட்கலாம்.

இன்று இந்தியாவில் விற்கும் பொருட்கள் அனைத்துமே அமெரிக்க டாலரின் விலையில் எவ்வளவு விற்கிறார்களோ அதே விலைக்கு தான் விற்கிறார்கள் இந்தியாவிலும். ஆக விலையில் ஒன்று கூட குறைய கொடுக்க போவது இல்லை.

என்ன ஒவ்வொரு முறையும் ரூபாயில் இருந்து அமெரிக்க டாலருக்கு மாற்றும் போதும் மாற்ற கட்டணம் வசூலிப்பார்கள்.

ஒரு கட்டத்தில் அனைத்து மக்களும் அமெரிக்க டாலரே கொடுத்து அமெரிக்க டாலரை வாங்கும் நிலை வந்ததும் அதற்கு அப்பால் மாற்று கட்டணம் கட்ட தேவை இருக்காது (கையில் இருக்கும் உங்கள் பணத்தை இப்போது எடுக்க முடியாது என்று இந்த அரசு சொல்லாம் ஆனால் பிறகு நாளைக்கு எடுக்கவே முடியாது என்று கூட வந்து தண்ணிச்சையாக சொல்லாம்).

காவிகளின் கோமாளி தனத்தால் நாம் ஏன் பலியாக வேண்டும், ஆகவே நம்பிக்கையான வங்கிகளில் எங்களுக்கு அமெரிக்க டாலர் வேண்டும் என்று சொல்லுங்கள். 1,5,10,20 அமெரிக்க டாலர்களாக மாற்றிக்கொள்ளுங்கள்.

பிறகு அனேக இடங்களில் 1 அமெரிக்க டாலர் தாள்களே போதுமானதாக இருக்கும். மற்ற இடங்களில் தேவைக்கு ஏற்ப 5 அல்லது 10 முதல் 20 அமெரிக்க டாலர்களை பயன் படுத்தலாம்.

அமெரிக்க டாலர்களில் இந்திய பணத்தை மாற்றி கொடுக்க கட்டுப்பாடு உள்ளது. இருந்தாலும் இப்போது இருக்கும் நிலையில் இந்திய பணம் பெறுவதை விட எளிதாக அமெரிக்க டாலரை பெறமுடியும். ஆகவே உங்களுக்கு தெரிந்த நன்கு அறிந்த மக்களை கொண்டு இந்த மாற்றங்களை செய்யுங்கள்.

இனி மிச்சம் இருக்கும் பாசக அரசு காலம் வரை அமெரிக்க டாலரிலே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.

இந்த பதிவை பார்த்ததும் காவிக்கூட்டம் நாட்டு துரோகம் என்று ஆரம்பிப்பார்கள், அவர்களுக்கும் உங்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்கின்றேன். இன்றைக்கு அமெரிக்காவுடன் மென் பொருளிலும் மற்ற வர்த்தகத்திலும் ஈடுபடும் அனைத்து பெரு நிறுவனங்களும் அமெரிக்க டாலரில் தான் பரிவர்த்தனைகள் செய்கின்றது. ஆக நீங்களும் இனி பெரு நிறுவனங்களை போல் அமெரிக்க டாலரில் பரிவர்த்தனை செய்யுங்கள்.

அமெரிக்க டாலரை ஈட்டி தருவதனால் அந்த பெரு நிறுவனங்களுக்கு நிறைய சலுகைகள் உண்டு. வருமான வரியிலும் அப்படி தான், நீங்களும் அமெரிக்க டாலரில் பர்வர்த்தனைகள் செய்வதால் நாளை மோடி அரசு உங்களுக்கு வருமான வரி சலுகைகள்  கூட அளிக்கலாம். இல்லை எப்போதும் போல் இளிச்சவாயன் நடுத்தரவர்க்கம் ஆனதால் ஏதோ ஒரு காரணத்தால் உங்களது அமெரிக்க டாலரும் கூட எதற்கும் தகுதி இல்லாத பணமாக கூட அவர் அறிவிக்கலாம்.

எது எப்படி போனாலும் உங்களிடம் இருக்க போகும் அமெரிக்க டாலர் செல்லாது என்று சொல்லவோ அவைகளை மாற்றமுடியாமல் புது நோட்டு இல்லை பழைய நோட்டு என்று சொல்லவோ மோடி அரசால் முடியாது. ஆக அமெரிக்க டாலராக உங்க இந்திய பணத்தை மாற்றுங்கள். இனி அமெரிக்க டாலரிலேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.

சிறு பிள்ளை தனமாக மோடி தரமாட்டேன் போ என்று சொல்வதற்கு பெரிய மனித தனமாக வேண்டாம் நீயே வச்சுகோ என்று திருப்பி சொல்லுங்கள்.......

அரசு உங்கள் மேல் திணித்து இருக்கும் அரசபயங்கரவாதத்தை அவர்களுக்கே திருப்பி கொடுங்கள்.

ஏடியமிலும் இந்திய வங்கிகளின் வாசலிலும் நிற்பதை நிறுத்துவிட்டு அமெரிக்க டாலர் கிடைக்கு இடங்களுக்கு சென்று கேளுங்கள், இன்றைக்கு நோட்டு இல்லை என்றால் நாளையே கிடைக்க மின்னல் வேகத்தில் அமெரிக்க டாலரை கொண்டு வந்து இறக்கும் அமெரிக்க அரசு. அமெரிக்க அரசு டாலரை இந்தியாவில் இறக்க கூடாது என்று சொல்ல மோடிக்கு திராணி இல்லை என்றது வெளிப்படை.

Saturday, December 17, 2016

ஏன் சசிகலா அதிமுக முதல்வராக கூடாது

சசி தலைவராவதும் முதல்வராவதும் அவரது மற்றும் அதிமுகவின் தொண்டர்கள் விருப்பம். இதிலே பாசக ஒன்றும் அறிவுரை செல்ல தேவையில்லை.

என்னமோ நல்லவர்கள் போல் குறுக்கு வழியில் பதவிக்கு வரவேண்டிய தேவை எல்லாம் எங்களுக்கு இல்லை என்று எச்சி ராசா பதில் சொன்னார்.

அதை தொடர்ந்து குருமூர்த்தி வழக்கு தொடுக்கிறார், சேகர் கருத்து சொல்கிறார். இவர்களின் அல்ல கைகள் இணையத்தில் நகைப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் அதிமுகவிற்கு தெரியும் யாரை தேர்ந்தெடுப்பது என்று.

இதிலே சாக்குலேட்டுடன் ஒட்டி இருந்தால் அந்த அட்டையை யாரும் சாப்பிடமாட்டாங்க என்ற நக்கல் வேறு.

 நாமும் தெரியமல் தான் கேட்ப்போம், செயலலிதிலா எந்த அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர். எந்த எந்த இயக்கங்களில் சேவையாற்றி இருக்கிறார். அவருடைய அரசியல் நம்பிக்கைகள் என்ன. அல்லது நோக்கங்கள் தான் என்ன.

முன்னால் முதல்வரின் ஆசை நாயகியாக இருந்தவர், முதல் முறை ஆட்சி கிடைத்ததும் என்ன செய்வதென்றே தெரியாமல் நடராசனிடன் ஆட்சியை ஒப்படைத்து  விட்டு தோழியுடன் ஓய்வெடுத்தவர். சித்தன் போக்கு சிவன் போக்கு என்று நடராசனோ எங்கே எல்லாம் காசு வருகின்றதோ அங்கே எல்லாம் கல்லாகட்ட கடைசியில் சுடுகாட்டு ஊழல் வரை கதை நீண்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அதன் பிறகு வந்த ஆட்சியில் எல்லாம் திமுக தொடங்கி முடிக்கும் தருவாயில் இருக்கும் திட்டங்களுக்கு பெயர் மாற்றுவது இல்லை திமுகவின் பழைய திட்டங்களை புதிய என்ற பெயருடன் செய்வதை தவிர செயா இது வரையில் வேறு எதையுமே செய்தவர் இல்லை.

என்னமோ இரும்பு பெண்மணியாம், அசைக்க முடியாதவராம். அரசியல் ஞானம் கொண்டவராம். எவ்வளவுடா அளந்து விடுவீங்க அதுவும் பாசகவின் சார்பில். அதிமுக அடிக்கின்ற சால்ராவைவிட உங்கள் சால்ரா தாங்கமுடியவில்லை சகிக்கவும் இல்லை.

சசியின் பிடியில் சிக்கி வெளிவர முடியாமல் சண்டை வரும் போது எல்லாம் வனவாசம் போகின்றேன் என்று ஆளுனருக்கு கடிதம் அனுப்பியது எல்லாம் பாசகவிற்கு தெரியாது போலும்.

செயா இறக்கும் வரையில் சசியிடம் இருந்து யாராலும் பிரிக்கமுடியாத தோழியாக வைத்துக்கொண்ட இரும்பு பெண்மணி சசி.

அன்றைக்கு எப்படி எந்த தகுதியும் இல்லாமல் இறக்கும் வரை முதல்வராக இருந்தாரோ அதே போல் சசியாலும் இருக்கமுடியும்.

அதிமுகவை பொருத்த வரையில் மக்கள் பார்க்க ஒரு பெண்ணின் காலில் விழுந்தால் கோடி கோடியாக கிடைக்கும் என்றால் காலிலேயே விழுந்தே கிடக்க கூட அவர்கள் தயார். அதில் உங்களுக்கு என்ன சங்கடம்.

தமிழகத்தில் திமுகவை எதிர்த்து நிற்க ஒரு ஆள் வேண்டும் அவ்வளவு தான் அது யார் என்றது எல்லாம் முக்கியம் இல்லை.

ஏன் அன்புமணி, விசயகாந்து, சீமான் எல்லாம் ஆசைபடலியா. அந்த மாதிரி ஆசைபடலாம் ஆனால் எத்தனை பேரால் பதவிக்கு வரமுடியும்.

அதிமுக ஆட்சிகாலத்தில் எப்படி எல்லாம் திட்டம் தீட்டப்பட்டது எங்கே என்ன பேச வேண்டும், யார் யார் எல்லாம் வேலை முடித்து கொடுப்பார்கள். எந்த எந்த ஆளுக்கு என்ன என்ன கொடுக்க வேண்டும் என்று நரசிம்ம ராவு காலத்தில் இருந்து மோடி காலம் வரை கூடவே இருந்து பார்த்த அனுபவம் கொண்டவர் சசி.

ஆகவே அரசாள கொடுத்தால் கடைசிவரையில் காலம் ஓட்ட தெரிந்தவர் சசி. செயா எப்போதாவது வெளியில் வந்து அண்ணா நாமம் வாழ்க புரட்சி தலைவர் வாழ்க என்று சொன்னது போல் சசியால் செயல்பட முடியாதா என்ன.

அதே நடராசன் இருக்கிறான், அன்றைக்கு செயாவிற்கு தப்பு தப்பாக சொல்லி கொடுத்த அல்ல கைகளும் இருக்கிறார்கள் அவர்கள் சேர்ந்து சசியை ஒழிக்கனும் என்று நினைத்தாலும் அந்த கால அனுபவத்தை மனதில் வைத்து கடைசிவரை மாட்டாமல் எப்படி தப்பிப்பது என்று சசிக்கு தெரியும்.

அப்படியேதும் மாட்டினால் கொமாரசாமி கிடைக்காமலா போய்விட போகிறார்கள். 2+2= 0 என்று சொல்ல ஒரு பெங்களூரு கணக்கி கிடைக்காமலா போய்விட போகின்றது.

மரியாதையா போய் உங்கள் வேலையை பாருங்கள், சசி தமிழகத்திற்கு மட்டும் தலைவியாக போவது இல்லை இந்தியாவை ஆளப்போகும் இரும்பு பெண்மணி. அவரை பற்றி எல்லாம் தப்பும் தவறுமாக பேசுவதையும் எழுதுவதையும் நிறுத்திக்கொள்ளுங்கள் வயிற்றெரிச்சல்காரர்களே......

Friday, December 16, 2016

மோடி 340 கோடி யார் அப்பன் வீட்டு பணம் எடுத்து உங்க ஏழைகளுக்கு கொடுக்க

"பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை ஊக்குவிக்கும் விதமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கு ரூ.340 கோடி அளவிலான தினசரி, வாராந்திர ரொக்கப் பரிசை நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அறிவித்துள்ளார்.

 இது கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் முதல் தொடங்கி ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கும்."

இது யார் அப்பன் வீட்டு பணம் மைய நிதி ஆணையம் எடுத்து உங்கள் ஏழைகளுக்கு இறைக்க.

பணமில்லா வர்த்தகம் புரிவோரும் அதில் வாங்குபவர்களும் என்ன கையில் இருக்கும் கடைசி பணத்தாள் வரை வங்கியில் போட்டுவிட்டு எப்போது எடுக்கலாம் என்று வீட்டும் வங்கிக்கும் அலையும் குடியானவனுக்கா கிடைக்க போகுது.

ஞாயமா இப்படி பணத்தை கட்டாயப்படுத்தி பிடுங்கி வைத்த இத்தணை நாளுக்கும் அவர்களுக்கு வட்டி கொடுப்பதை விட்டுவிட்டு சொகுசாக வாழும் மக்களுக்கும் அவர்களுக்காக குளுகுளு அறையமைத்து வியாபாரம் செய்பவனுக்குமா இந்த 340 கோடி.

என்ன ஒரு திமிர் நடவடிக்கை அதுவும் உங்கள் பணத்தை பிடுங்கி அதிலே உங்களுக்கே என்ன அழகாக மோடி வித்தை காட்டுகிறார்.

மைய நிதி ஆணையம் இந்த பணம் எந்த நிதியில் இருந்து பெறப்பட்டது என்றும் எந்த எந்த பொது மக்களுக்கு போய் சேர்ந்தது என்றும் கணக்கு காட்ட கடமைபட்டவர்கள்.

இப்போ தெரியுதா கருப்பு பணம் எவ்வளவு பெரிய ஊழல் என்று. ப சிதம்பரம் சும்மா பேசினால் பத்தாது, இதை நீதிமன்றம் வரை கொண்டு போய் இந்த கள்ள ஆட்ட மோடியை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் இது போல் பாசகவின் சதுரங்க ஆட்டம் ஓயப்போவது இல்லை.

ஒரு வேளை S.V சேகர் நாட்டுக்காக அவர் பணத்தை கொடுத்து இருப்பாரோ.........

Thursday, December 15, 2016

மோடிக்கு பதில் அதிமுக சி பொன்னையனை பிரதமராக்கி இருக்கலாம்

இளிச்சவாயன் இந்தியன் திருப்பி கேள்வி கேட்க கூட தயங்குகின்ற இந்தியர்கள் இருக்கும் வரையில் உங்கள் பணத்தையே பிடுங்கி அதில் உங்களுக்கே பப்பர மிட்டாய் வாங்கி கொடுத்து நன்றாக சப்பு கொட்டி சாப்பிடுங்கள் என்று அழக்காக சொல்வார்கள் இந்த பாசகவினர்.

சி பொன்னையன் நிதி அமைச்சராக இருந்த சமயம் தமிழகத்தில் கடும் நிதி பற்றாகுறை. எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்த சமயத்தில் இந்த பொருளாதார மேதையான பொன்னையன் ஒரு யோசனையை சொல்லி அதை வலுகட்டாயமாக செயல்படுத்தவும் செய்தார்.

அரசாங்கத்திடம் வேலைபார்க்கும் மக்கள் தங்களது ஓய்வூதிய வைப்பை அப்படியே அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிடித்து வைத்துக்கொண்டு அரசாங்க வருமானமாக கணக்கு காட்டி சமாளிப்போம் என்று சொன்னது மட்டும் இல்லாது.

அந்த பணத்தை நம்பி பல நல்லகாரியங்கள் ஏழை எளியவர்களின் வீட்டில் நடக்கும், அவைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் எகத்தாளாமாக பேசியும் ஏன் என்று கேட்டவர்களை ஏகவசனங்களில் விமர்சிக்கவும் செய்தார் இந்த பொருளாதார மேதை சி பொன்னையன்.

இதே திட்டத்தை முன்னோடியாக எடுத்துக்கொண்ட நம்ப இந்த காலத்து பொருளாதார மேதை மோடி அதை இந்தியா முழுக்க செயல்படுத்தியுள்ளார்.

கருப்பு பணத்தை ஒழிப்பதாக சொல்லிக்கொண்டு ஏழை எளியவர்களின் பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று பொய் சொல்லி வங்கியில் போட சொன்னதுடன். உங்க பணமாகவே இருந்தாலும் நீங்களும் கூட அதை திரும்ப எடுக்கமுடியாது என்றும் பிறகு சொல்லி இருக்கிறார்.

சாதரணமாக இப்படி வங்கிகளில் வைக்கப்படும் நிதிக்கு வட்டி கொடுப்பார்கள். அந்த வைப்பு பணத்தை வங்கி முதலீட வைத்துக்கொண்டு அதன் தொழிலை செய்து வருவதும் தான் வங்கியின் வர்த்தகம்.

ஆனால் இந்த இக்கட்டான காலகட்டத்தில் வலுகட்டாயமாக வைக்கப்பட்ட பணத்திற்கு என்ன வட்டி கொடுக்கப்போகிறார்கள் இந்த பணத்தை வலுகட்டாயமாக வங்கியில் போட சொன்னவர்கள்.

எங்கே எடுத்து உபயோகப்படுத்த படுகின்றது உங்கள் பணம்,யாரேனும் ஒருவராது சொன்னார்களா...

உங்கள் பணத்தை செலவு செய்ய வரம்ப்பை நிர்நயிக்க அரசாங்கத்திற்கு என்ன உரிமை இருக்கிறது. அல்லது அவர்கள் சொன்ன வரம்புக்குள் உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு அது சரியான தொகையாக இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் உங்களும் உதவாது உங்கள் பணம் பூதம் காத்த புதையலாக வங்கியில் ஏன் போய் வட்டியில்ல கடனாக நீங்கள் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டும்.

பாசக அரசுக்கு நிதி திரட்ட வேறு வழியே தெரியவில்லையா, ஏழை எளியவரிடம் தான் பிடுங்கி தின்று 35 இலட்ச ரூபாய்கு கோட்டும் சூட்டும் தைத்துக்கொண்டு செல்பி படம் எடுத்து காட்டவேண்டுமா....

சென்றமுறை பாசக அரசு வந்தபோது கச்சா எண்ணை பரிவர்த்தனைகளில் பிடித்த சொகுசு வரியை கொண்டு மண்ணெணையும் டீசலும் குறைந்த விலையில் கொடுத்துக்கொண்டு வந்ததை காண பொருக்காகதவர்களாக. அந்த பணத்தை அப்படியே எடுத்து காலி செய்து தங்க பாதை திட்டம் என்று அழித்தார்கள்.

ஐயய்யோ போச்சே என்று மக்கள் புலம்பிய போது இந்த சாலைகள் அமைப்பதினால் பாருங்கள் இந்தியாவின் பொருளாதாரமும் ஏழைகளின் வாழ்வும் எப்படி மேம்பட போகின்றது என்று சொன்னார்கள். வழக்கம் போல மக்களும் இனிமேல் இந்தியாவில் எல்லாம் சல்லீசாக கிடைக்கபோகுதுன்னு வாய் பிளந்தார்கள்.

இந்த பணத்தை பாசக அரசு ஏப்பம் விடும் முன் 5 ரூபாய்கு மாலையில் சிற்றுண்டியே முடிக்கலாம் ஆனால் இன்று வெளியில் சைக்கில் நிறுத்த கூட இந்த பணம் இன்று உதவாது.

ஆனால் அன்றைக்கு 1000 கோடிகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்த முதலாளிகள் எல்லாம் இன்றைக்கு இலட்சம் கோடிகளுக்கு வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த ஏழைகளை வாழ வைக்க உண்மையான ஏழைகளின் வயிற்றில் அடித்து தான் பிழைக்க வேண்டுமா என்ன.....

அதே போல் இன்றைக்கு வேறு எந்த எந்த ஏழைகளை பிழைக்க வைக்க உழைக்கும் மக்களின் பணத்தை வங்கியிலே வலுகட்டாயமாக பிடிங்கியது மட்டும் இல்லாது இப்போது தான் ஏழைகள் நிம்மதியாத தூங்குகின்றனர் என்று மேடையில் அடவு கட்டி கூத்தாடினார் மோடி.

நேர்மைனா என்னம்மா என்று குழந்தை கேட்க அமாம்டா கண்ணுன்னு அம்மா சொல்வது போல் நேர்மை தேசப்பற்று என்று எல்லாம் இனிமே பாசக கண்ணுன்னு அந்த அம்மாவை வைதே சொல்ல வைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.

Tuesday, December 13, 2016

அடுத்த அமைய இருக்கும் பாசகவின் தமிழக முதல்வர் யாராக இருக்கும்

தமிழக பாசகவை பொருத்த அளவில் வெளியில் பெயர் தெரியும் அளவிற்கு இருப்பவர்கள்

தமிழிசை - பாசகவினால் தான் இந்தியாவில் மட்டும் அல்ல உலகிலேயே தங்கமும் எண்ணைவிலையும் குறைந்துள்ளது என்று அறிவார்ந்த வாதம் புரிந்தவர். இது தவிர நாள்தோரும் அவர் கொடுக்கும் பேட்டியை படித்தீர்கள் ஆனால் முதல்வர் பதவிக்கு இவர் எவ்வளவு தகுதியானவர் என்று தெரியும்.

வானதி சீனிவாசன் - இவர் தொழில் முறையில் வழக்குரைஞர் ஆகையால் அந்த புலமையை எல்லாவற்றிலும் அழக்காக காட்ட கூடியவர். சென்ற பொங்களுக்கு எப்படின்னு சொல்ல மாட்டேன் ஆனால் சல்லிக்கட்டு நடக்குதா இல்லையான்னு பாருங்க என்று முதலில் தந்தி ரங்கராசுகும் அதை தொடர்ந்து தமிழகத்துக்கும் அல்வாவை அள்ளி வீசிய வாய் சொல் வீரங்கனை இவர். வார்த்தைகளிலேயே மோடி மேடையில் அடவு கட்டி ஆடும் கூத்தை வார்த்தையிலேயே அழகாக ஆட தெரிந்தவர்.

பொன் இராதாகிருட்ணன் - இவர் அதிகம் பேசவதில்லை இருந்தாலும் சத்தம் போடாமல் அதாணியின் வேலைகளை சிவனேன்னு சிரத்தில் ஏற்றி சத்தமே இல்லாமல் தமிழகத்தில் நிறைவேற்றி முதலளிக்கு சாமரம் வீசும் விசுவாசி.

குருமூர்த்தி - ஏழை எளியவரின் தங்கத்தை பிடுங்கி வைத்துக்கொண்டு பாரதத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்று பாசக வென்றதும் மக்களுக்கு இந்து மற்றும் தினமணியில் மிக தைரியமாக செய்தி சொன்னவர். அவர் சொன்ன பாதையில் தான் இப்போது கட்சியும் பயணிக்கின்றது.

எச்சி இராசா - பேசவும் தெரியாது கேள்வி கேட்கவும் தெரியாது. 2 நிமிடத்திற்குள் தான் என்ன சொன்னோம் என்ற ஞாபகம் கூட இல்லாமல் சொல்லவே இல்லையே என்று தன் மானத்தையே தானே மக்கள் முன் வாங்கிகொள்ளும் அறிவாளி. இந்த அழகில் இவர் தான் பாசகவின் தேச தலைவர் அந்த பதவிக்கு என்ன மதிப்பு என்று இவரை வைத்தே தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

இவர்களை தவிர மற்ற ஒருவரையும் பாசக என்று சொன்னால் கூட தமிழகத்தில் ஒருவரும் நம்ப மாட்டார்கள். இவர்கள் தவிர இன்னும் சில மக்கள் தொகவில் விவாதத்திற்கு வருவது உண்டு. அப்படி வருபவர்கள் அனைவருமே கையில் ஒரு நீதிமன்ற தீர்பை கையில் வைத்து இருப்பார்கள், நாம் ஏதாவது கேட்டால் நீதிமன்ற தீர்ப்பில் சொல்லி இருக்கிறது என்று சொல்வார்கள். சரி நீதிமன்றதில் செயலலிதா குற்றமற்றவர் என்றும் தான் சொல்லி இருக்கிறார்கள் நீங்கள் ஒத்துகொள்கிறீர்களா என்றால் இல்லை என்பார்கள்.

ஆகையால் அவர்களை எல்லாம் இந்த எடுபிடி வேலைகள் தவிர மற்ற உயர் பதவிக்கு எல்லாம் கூப்பிடுவார்கள் எந்த சந்தேகமும் வேண்டாம் அவர்கள் எல்லாம் கடைசிவரையில் நிறுவன விளம்பரங்களில் தொடங்கி விளம்பரங்களிலே வாழ்கை முடியும் விளம்பர நடிகர்களாக மட்டும் கொள்வோம்.

ஆக போட்டி இந்த 4வருக்கும் தான், யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. தமிழிசையும் எச்சி ராசாவும் ஒரே இரகம் உளரி கொட்டுவதில் கை தேர்ந்தவர்கள் ஆக அவர்களுக்கு அடவு கட்டி மேடைகளில் மோடி போல் கூத்தாட எல்லாம் தெரியாது என்றது வெளிச்சம்.

குருமூர்த்தி இந்திய நிதி அமைச்சர் பதவிக்கு தகுதியானவராக தன்னை நினைத்து கொள்பவர் ஆக முதல்வர் பதவியே ஆனாலும் தனக்கு வேண்டாம் என்று சொல்லும் குணமுடையவர்.

மீதம் இருப்பது பொன்ராவும் வானதியும் தான், இதில் வானதி இதுவரையில் எந்த முதலாளியின் வேலையாளாய் கடமை நிறைவேற்றியவர் இல்லை ஆனாலும் மோடி மேடையில் ஆடும் கூத்தை தாளம் தப்பாமல் இவரும் வார்த்தைகளிலேயே ஆட கூடியவர். ஆனாலும் சசியை முன்னிருத்தும் எண்ணம் ஒரு சாராருக்கு இருப்பதால் மீண்டும் இரு மகளீர் போட்டியா என்ற கேள்வியில் இவருக்கு வாய்ப்பு குறைவு தான்.

அனேகமாக பொன்ராவுக்கு தான் அந்த வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழகத்தில் இனி எல்லோரும் குர்த்தாவும் பைசாமாவும் தான் அணிவார்கள், பேசும் போது எல்லாம் வாங்க்ச்சி போங்கச்சி என்று தான் பேசுவார்கள். திருமண வைபவங்களில் அந்த லட்டுச்சியை கொஞ்சம் இந்த இலைச்சியில் வைங்கச்சி என்று பேசி அகமகிழ்வார்கள்.

எல்ல தெருக்களிலும் திடீர் திடீர் என கணேசும் அனுமாரும் தோன்றுவார்கள், மக்கள் எல்லாம் நெற்றியில் செந்தூரமை நாமமாம இட்டுக்கொண்டும் வாயில் பீடாவை கொதப்பியபடி தான் அலைவார்கள்.

வட நாட்டில் இருந்து வருபவர்கள் எல்லாம் என்ன ஏதோ ஒரு நாடோடி கூட்டத்தில வந்து மாட்டிகிட்ட மாதிரி இருக்கு என்று பேந்த பேந்த முழிப்பார்கள்.

கிட்டதட்ட கல்கத்தா கலவரத்திற்கு பிறகு கல்கத்தா எப்படி தன்னை கீழ்தரமான ஒரு மத கலவரத்துக்கு தயார்படுத்திக்கொண்டதோ அப்படி ஒரு தோற்றத்திற்கு பாசக தமிழகத்தை இழுத்து சென்று, போதை நல்லா ஏறிகிச்சி இப்ப கைஎழுத்து போட சொல்லு நீட்டுர இடத்துல எல்லாம் போடுவான் பார்ன்னு சொல்லி சிரிப்பார்கள்.

இது புரியாம பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மாணவர்களுக்கு பாசக வந்தால் ஊழல் ஒழியும் உங்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் தனியாக வங்கி கணக்கு தொடங்கி அதில் இந்திய அரசு சார்பில் 15 இலட்சமும் தமிழக அரசு சார்ப்பில் 20 இலட்சமும் கொடுப்பப்படும் என்று பரப்புரை செய்வார்கள். அவர்களும் அப்படியே வாய் பிளந்து கனவில் அலைந்து திரிந்து எங்கே எத்தனை இடம் வாங்குவது என்ற கணக்கில் ஓட்டுகளை அள்ளிவிடும்.

பாசகவின் 5 ஆண்டு ஆட்சிக்கு பிறகு பீகாருக்கு தமிழ் மக்கள் மறுபடியும் கூலி வேலை பார்க்க கிளம்ப வேண்டியது தான் தயாராய் இருங்கள்.

பாசக நல்லவங்க எல்லோரும் வராங்க உடமைகளை எடுத்து பத்திரமா வச்சுகுங்க இல்ல கள்ள சொத்து இல்லை கள்ள பணமும் சொல்லி பிடிங்கிகிட்டு போய் 120 கோடி 69 கோடின்னு வச்சுகிட்டு நமக்கு வாட்சப்புலே படம் எடுத்து அனுப்புவானுக.......

Saturday, December 10, 2016

நல்ல வேளை மோடிக்கு கல்யாணம் குடும்பம்னு ஆகுல

பொதுவா குடிகார தந்தையையும் ஊதாரி கவணனை குடும்பத்தில் ஒருவனுக்கும் பிடிக்காது. காரணம் அவன் குடிக்கிறான் என்றோ அல்லது ஊதாரியாக திரிகின்றானோ என்றோ அல்ல.

பிறகு ஏன் இவ்வளவு கெட்ட பெயர் அவனுக்கு

வீட்டுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத அந்த மனிதன் போதையில் ஆட வீட்டில் இருக்கும் நண்டு சுண்டு வரை களை வெட்டி காசு கொண்டு வந்து கொடுத்தால் அந்த காசிலே குடித்துவிட்டு திங்க அத கொண்டு வா இந்த கொண்டு வான்னு ஆடுவானுக. அதனால் தான் யாருக்கும் பிடிக்காது.

சுருங்க சொன்னா கணவன் என்ற ஒரே காரணத்திற்காக அவனது உல்லாச வாழ்வுக்கு குடும்பத்தையே பலி கொடுக்கும் இயல்பை கொண்டவர்கள் அவர்கள்

இவனுக்கு வாக்க பட்ட பெண்களிடம் கேளுங்கள் எல்லாம் விதி, பெத்தவங்க இந்த சனியனை என் தலையில கட்டிட்டுடாங்க என்ன செய்யுரது விதியேன்னு வாழறேன் சொல்லுவாங்க

ஒரு வேளை மோடிக்கு குடும்பம் குழந்தைகள் என்று இருந்து இருந்தா இப்படி தான் இரவும் பகலும் நாட்டுகாக என்று சொல்லி வெய்யிலிலும் மழையிலும் சோறு தண்ணியில்லாம் சாகடித்து இருப்பார் நம்மை எல்லாம் சாகடிப்பது போல்.

தப்பிச்சுது ஒரு குடும்பம் ஆனா நாம் தான் நல்லா மாட்டிகிட்டோம்......

15 இலட்ச ரூபாய் கிடைக்கும் என்று சொன்னதும் ஆப்பசைத்த குரங்கின் கதையா இல்ல ஆகிப்போச்சு நம்ம நிலைமை


Wednesday, December 7, 2016

அதிமுக மொத்தமாக பாசகவிற்கு விற்கப்படுவிட்டது

தமிழகத்தில் அதிமுக தோற்றமும் அவசியமும் இன்றைக்கு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில். அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் கூட எழாத நேரத்தில் பன்னீர் அடுத்த முதல்வராக பதவி ஏற்பதும் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று அழக்காக காட்டுகின்றது.

 நாங்கள் நினைப்பது தான் நடக்க வேண்டும் என்று அதிமுகவை மறைமுகமாக இயக்கிய கூட்டத்திற்கு இனி எந்த முகமுடியும் தேவை இருக்காது. மாறாக பாசகவாகவே இனி வலம் வருவார்கள்.

அது மட்டும் இல்லை அதிமுகவை மெல்ல பாசகவில் கரைத்து பாசகவும் அதிமுகவும் இரட்டை இலையும் ஒன்று தான் என்று நிறுவார்கள்.

சரி அதிமுகவை எப்படி முழுவதுமாக விலை பேசி விற்கமுடியும். யார் விற்று இருப்பார்கள் எவ்வளவிற்கு விற்று இருப்பார்கள்.

இனி அதிமுகன்னோ அல்லது செயலலிதா அப்படி இப்படி சொல்லிக்கொண்டு கட்சி இனி எந்த செயலையும் செய்யக்கூடாது.

உடல் நிலையை காரணம் காட்டி முதல் கட்ட தலைவர்கள் எல்லாம் ஒதுங்குவார்கள் இல்லை பாசகவில் இணைவார்கள்

பிறகு ஒரு 3 முதல் 6 மாத காலத்தில் ஒத்துவராதவர்கள் எல்லாம் ஊழல் அடிப்படையில் சிறையில் அடைத்த பிறகு இன்று இரவு முதல் தமிழக அரசு செல்லாது என்ற அறிவிப்பு வரும். காரணம் கேட்டல் சட்டம் ஒழுங்கு சரி இல்லை, ஏழைகளால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று சொல்வார்கள்

பிறகு அதே MGR பெயரிலும் செயலலிதா பெயரிலும் பாசக ஓட்டு கேட்கும் ஆட்சியை பிடிக்கும்

ஒத்து வருபவர்களின் கருப்பு பணம் வெள்ளையாக மாற்றிக்கொடுக்கப்படும், மாட்டேன் என்கிறவர்கள் கருப்பாடுகளாக கருப்பு பண முதலைகளாகவும் திகாரில் அடைக்கப்படுவோர்.

சில ஆயிரம் வைத்து இருக்கும் தொடண்டன் முதல் பல கோடி வைத்து இருக்கும் அமைச்சர்கள் வரை இந்த பேரத்திற்கு படியாத ஆளே இல்லை

அம்மையாரின் மறைவு தமிழகத்தை அழிவு பாதையை நோக்கி திருப்பி விட்டதே ஐயோ பாவம் தமிழகம்.

இனி நாள்தோரும் தாத்ரி பாணியில் மக்கள் தெருக்களில் அடித்து கொல்லப்படுவார்களே கடவுளே யார் காப்பாற்றுவார்கள் இனி தமிழகத்தை

Friday, December 2, 2016

மோடி ஆதரவாளர்கள் உருவாக்கிவரும் இராணுவ வீரர்கள் நகைப்புகள் சர்த்தார் நகைப்புக்கு இணையாக

மோடி ஆதரவாளர்களும் மோடியும் மட்டும் தான் தேசபக்தர்கள் மற்ற அனைத்து மக்களும் தேச துரோகிகள் என்று அவர்களுக்கு எண்ணம்.

எதை எடுத்தாலும் தேச துரோகம் என்று கதரும் இந்த கூட்டம் உருவக்கி வரும் இந்திய இராணுவ வீரர்கள் நகைப்பு சர்த்தார் நகைப்புகளையும் மிஞ்சும் போல இருக்கு.

வஞ்ச புகழ்ச்சி அணியில் தான் இவர்கள் இதை எழுதி இருக்கோனும்

இந்திய இராணுவ வீரன் சொன்னானாம் எனக்கும் பாக்கிட்தானத்திற்கும் எந்த பகையும் இல்லை என்று சொன்னானாம்.

ஏன் மோடி ஒருத்தருக்கும் சொல்லாமா திருட்டுதனமா அங்கே போய் கல்யாண விருந்து சாப்பிட்டு வந்ததால அது சம்பந்தி நாடு ஆயிடுச்சோ இவருக்கு.

இல்ல இராணுவத்தில பாசக பாராளுமன்றதிற்கு சொன்று ஆட்சி நடத்தாம வெறும் சாதி மத பிரச்சாரம் மட்டு செஞ்சுட்டு நாட்டை சுரண்டி முதலாளிகங்க கைல குடுக்கிற மாதிரி வெட்டி வேலை பார்க்கலாம்ன்னு எந்த கேணை பயலாவது சொல்லி அனுபிச்சானுகளான்னு தெரியல

பள்ளிக்கு போன படிக்கனும், மரம் வெட்ட போன மரம் வெட்டனும், மீன் பிடிக்க போன மீன் பிடிக்கனும் அது போல இராணுவத்துக்கு போன சுடனும்னு உங்களுக்கு எல்லாம் படிக்கும் போது சொல்லிக்கொடுக்கல போல இருக்கு எங்கேபா படிச்சிங்க கேந்திர வித்யாலயா

 நாட்டில இன்னும் பாக்கிட்தானத்து மேல போரே அறிவிக்கல அதுக்குள்ள உண்ணை யாருயா அங்கே போய் சுட சொன்னது இல்ல வேலை இல்லன்னு நீயா அங்க போனியா

இராணுவத்துல போய் சப்பாத்தி சுடலாம்னு இருந்திருப்பார் போலும் அவரை போய் துப்பாக்கியால சுட சொல்லி பயந்து பாக்கிட்தானம் பாக்கிட்தானம்ன்னு சொன்னா தேச பக்த்தர்ன்னு நம்பி நிறைய பணம் கொடுப்பாங்கன்னு கவி பட சொல்லி அனுபிச்சுதா

இல்ல இந்திய இராணுவ வீர்களும் நாட்ட காப்பாத்துர வேலையெல்லாம் விட்டுட்டு வங்கி வாசல்ல நோட்டு மாத்த நிக்க வச்ச வைதெரிச்சல்ல பேசுராரு போலும்

 நல்லா பாருங்கபா அது கூர்க்காவா இருக்க போது எதிரி நாடு எதுன்னு வடக்க உள்ள கேந்திரவித்யாலயா பாலர் பள்ளியில கேட்ட கூட பாக்கிட்தானம் என்று அழகாக தெரியுமே இந்த ஆள் என்ன மழைக்குகூட கேந்திர வித்யாலயா பக்கம் போயி இருக்க மாட்டார் போலும்.

இனி இப்படி எல்லாம் இந்திய இராணுவ வீரர் நகைப்புகள் வர போகுது, தடம் போட்டு கொடுத்த பாசகவிற்கு தான் நன்றிய சொல்லனும். குசுவந்து சிங்கு சர்த்தார் நகைப்பு என்று தொகுத்து புத்தகமா வெளியிட்டது போல் வராமல் இருந்தால் சரி

 நாட்டு நட்டப்பும் தெரியல அடுத்தவன் வேதனையும் புரியலனா அவன் கட்டாயம் பாசகவினராக தான் இருக்கனும். இன்னும் இது மாதிரி இந்திய இராணுவ வீரர்களை கேணைபயல்களாக வர்ணித்து எழுதி அனுப்பவும் அவர்கள் பார்த்து பூரித்து போவார்கள். ஏன் கேட்ட பாரத்து சவான்கீ சேன்னு சொன்னா போச்சு அவ்வளவு தானே....


https://1.bp.blogspot.com/-gypMmblfYuU/WD-MhzuGxOI/AAAAAAAANJU/s8lyVyY1DnoDO-bBE_LmtN0S0mglHvWTgCLcB/s1600/IMG-20161129-WA0118.jpg

Tuesday, November 22, 2016

மோடியின் இன அழிப்பின் முன்னோட்டம் இந்த கருப்பு பண அழிப்பு நடவடிக்கை

அது எப்படி ஒட்டு மொத்த பாசக மக்களும் இந்த ரூவா நோட்டு பிரச்சனையில் மாட்டாமல் போனர்கள்.

பிரச்சனையில் மாட்டியவர்கள் எல்லாம் சொன்ன செய்திகள் இவைகள் தாம்

1) தான் அன்றைகு சம்பாதித்த பணம் மாற்ற வேண்டும் இல்லை தான் சேர்த்து வைத்த பணம் மாற்ற வேண்டும்.

2) தன்னுடைய செலவுக்காக எடுத்து வைத்த பணம் மாற்ற வேண்டும் இல்லை தனக்கு இந்த தேவைக்கு இப்போது பணம் வேண்டும்

3) தனது வியாபாரத்திற்கு அடுத்த நாள் தேவைக்கு இது வேண்டும் இல்லையேல் நாளைய வியாபாரம் போகும் வருமானம் போகும் என்ற வைகைகள் மட்டுமே

இவைகள் தவிர மற்ற அனைத்து வகையனர் ஒருவரும் வங்கியின் வாசலுக்கு வரவில்லை S.V சேகரை போல்.

அப்போ பாசகவில் இருக்கும் அடி மட்ட தொண்டர் முதல் பிரதமர் வரை ஒருவரும் பணம் மாற்றவில்லை என்றதை அதன் விளம்பர தொடர்பாளர் S.V.சேகர் தெரிவித்துள்ளார்.

ஒருவர் சரி அல்லது ஒரு கூட்டம் சரி அது எப்படி ஒட்டு மொத்த கட்சியின் அடிமட்ட தொண்டன் வரையிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடியும்.

அறிவியலிலும் கணிதத்திலும் ஏற்றதாக(Ideal situation) என்று ஒரு சூழ்னிலையை சொல்லி அதில் இவை சாத்தியம் என்று சொல்வார்கள்.

ஆனால் அப்படி பட்ட சூழல் நிகழ்வில் சாத்தியம் இல்லை என்றது 8ஆம் வகுப்பு மாணவனுக்கு கூட தெளிவாக தெரிந்த ஒன்று.

உதாரணமாக சொல்வதென்றால் தன்னைவிட 4மடங்கு எடை கொண்டவனை தனது சுண்டு விரலால் தூக்கி எறிய முடியும் என்று அது வெற்றிடமாக(Vacuum) இருப்பின் என்று அறிவியல் சொல்கின்றது.

ஆனால் நிகழ் வாழ்க்கையில் இந்த சூழழை யாராவது சந்தித்ததுண்டா அல்லது சந்திக்க போவது தான் உண்டா.

ஆனால் இந்த சூழழை பாசக சந்தித்து இருக்கிறது, பிரதமர் வரை அடி மட்ட தொண்டன் வரை அவனது அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ எந்த ஒரு மருத்துவ அவசரமும் இந்த 12 நாட்களில் எழவில்லை. பாவம் அவர்களுக்கு உறவுகளே இல்லை என்று வைத்து மன்னிப்போம்.

ஆனால் சிறு மற்றும் பெரு வியாபாரம் கூட பாதிக்கவில்லை என்று அல்லவா கூறுகிறார்கள். அதொடு மட்டுமா எந்த வித தரகும் எங்களுக்கு பங்கமாகவில்லை என்றல்லவா சொல்கிறார்கள்.

அப்போ பாசகவை சேர்ந்த வியாபாரிகளே இல்லை என்கிறார்களா இல்லை அவர்கள் ஒருவரும் பாதிக்கவில்லை என்கிறார்களா. இல்லை தொருக்கோடியில் பீடா விற்கும் நபர் எல்லாம் கடனட்டை மூலம் தான் வியாபாரம் செய்கிறார்கள் என்று நமக்கு காதில் பூ சுற்றுகிறார்களா.

அது எப்படியா இவர்கள் மட்டும் பாதிக்கப்படவே இல்லை........

ஊரில் வருவது சுனாமி என்றால் அதற்கு ஏழை பணக்காரகள் தெரியாது, வெள்ளம் என்றாலும் தெரியாது ஆனால் கலவரம் என்றால் கட்டாயம் தெரியும். குசராத்து கலவரத்தில் பாதித்த பாசகவினர்கள் பட்டியலிட சொல்லுங்கள் பார்க்கலாம்(அவர்களாக தீயிட்டு கொளுத்திய கோத்ராவை கொண்டு வந்து ஒப்பாரி வைப்பார்கள் நம்பாதீர்கள்).

S.V. சேகர் சொல்வதை போல் கணக்கில் இருக்கும் சொத்தே 30கோடி என்றாலும் நாம் எல்லாம் 2 , 500 ரூ தாளில் கடலையை கட்டி அடுத்தவருக்கு படம் காட்டி சாப்பிடுவோமா. இல்லை அவர்கள் தாம் செய்வார்களா, சாதாரண காகிதம் காலில் பட்டாலும் கண்களில் ஒற்றி கொள்ளும் கட்சியினை சேர்ந்தவர் அடவுகட்டி 1000 ரூவாய் தாளில் கடலை வைத்து உங்களை பகிடி செய்கிறார் என்றால் அடவுக்கு எவ்வளவு பணம் கொடுத்து இருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள்.

பாசகவின் குறி சிறு தொழிலை முற்றிலும் அழிப்பது என்றாகிவிட்ட நிலையில் ஒன்றும் இல்லாதவர்களை ஏன் பாடாய் படுத்துகிறாய் என்றால் எல்லையில் இராணுவ வீரன் சாகவில்லையா பட்டினி கிடக்கவில்லையா அப்படி இப்படி என்று எடுபிடிகளை வைத்து விளக்கபடம் வேறு.

அட முட்டாளே அந்த இராணு வீரர்களுக்கு எல்லாம் அதற்கு சம்பளம் கொடுக்கிறார்கள் வெறுமெனே தான் சம்பாத்தித்த பணத்தை மாற்ற வெட்டியாக ஒன்றும் அவன் வரிசையில் நிற்கவில்லை. தவிர நாட்டை காக்கவும் அதற்கான தொழிலில் உயிர் போகும் என்றது தெரிந்தே அந்த விளைவுக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும் என்று தான் அந்த வேலைக்கு செல்கிறார்கள். விரும்பி செல்வோர் சொற்ப எண்ணிக்கையே....

அவர்களது வேலையை நாட்டுமக்களின் சுமைகளோடு சம்பந்த படுத்தி பேச உங்களின் அறிஞர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

தவிர பாசகவினர்கள் சொல்கிறார்கள், நாட்டுக்காக உங்கள் தாய் இறந்தால் என்ன, தந்தை இறந்தால் என்ன, இல்லை மகன், மகள் இறந்தால் என்ன என்று, நாட்டுகாக இந்த இறப்பை பொறுத்துக்கொள்ளுங்கள் என்று அழகாக புத்திமதி சொல்கிறார்கள். நானும் தெரியாமல் தான் கேட்கிறேன் அன்றைக்கு கோத்ராவில் இறந்தவர்களை பாசக இப்படியா பாவித்தது அதையே காரணம் காட்டி நாடு முழுவது கலவரம் வெடிக்கவில்லை.

அப்போ பாசக மக்கள் இறந்தால் அது சாவு மற்றவர்கள் இறந்தால் நாட்டுகாக பொறுத்துக்கொள்ள வேண்டும் அப்படி தானே S.V.சேகர்

வீட்டு மனை விற்பவனும் சிறு வியாபாரம் செய்வனுடன் தான் தகறாறு என்றால் அவனிடம் வாங்குபவனும் அவனுக்கு விற்பவனும் ஏனையா அல்லல் படவேண்டும்.

உலகில் எந்த ஒரு நாட்டிலும் தான் சம்பாதித்த பணத்தில் தனக்கு உரிமை இல்லை என்று சொல்லும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் தமிழர்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதும் அவர்களுக்கு உரிமையில்லை எப்போது வேண்டும் என்றாலும் அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். அப்படி செய்ததினால் தான் ஆயுத போராட்டத்திற்கு அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.கிட்டதட்ட அதே நிலையை இன்றைக்கு பாரதம் சந்தித்துக்கொண்டு இருக்கிறது.

 நீங்கள் சம்பாதிக்கும் பணம் நேராக வங்கிக்கு தான் செல்ல வேண்டும், அதோடு சரி. ஆனால் அவைகளை நீ எடுக்கலாமா கூடாத என்று நாங்கள் சொன்னால் தான் எடுக்க வேண்டும். அப்படியானால் நான் எதற்கு வங்கியில் செல்லுத்த வேண்டும், ஏன் என்றால் நீ சம்பளமாக வாங்கிய பணம் இனிமேல் செல்லாது, அப்படி வேண்டும் என்றால் வங்கியில் போடு...இது இன அழைப்பின் துவக்கம் போல் தெரிகின்றது.

அடுத்தாக மோடி இப்படி சொல்வார் தயாராக இருந்து கொள்ளுங்கள் மக்களே

வங்கியில் கணக்கு துவங்க சொன்னோம் பேசாமல் இருந்தீர்கள் -- எங்களால் நீங்கள் இந்த முகவரியில் தான் இருக்கிறீர்கள் என்று உறுதிபடுத்த முடியவில்லை

ஆதார் அட்டைக்கு விரல் ரேககைகள் பதிய சொன்னோம் -- ஆனால் நீங்கள் பதியவில்லை, ஆகவே இவைகள் இரண்டும் இல்லாத மக்கள் எல்லாம் திவிரவாதிகள் என்று நாளை சுட்டுக்கொள்வார்கள் காசுமீரத்தில் சுடுவதை போல்.

S.V.சேகரின் பேச்சை நன்றாக கவனியுங்கள் அவர்கள் கவனமாக சொல்வது இதுதான் மாவோஸ்டுகள், தீவிரவாதிகள் என்று அடுத்து நடக்க இருக்கும் நிகழ்விகளுக்கு கோடிட்டு தன்னையும் அறியாமல் காட்டுகிறார்.....கவனியுங்கள்

சனவரியில் தெரியும் என்று சொன்னதன் அடிப்படை இதுதான், எப்படி கண்ணையா குமார் சிறையில் அடைக்கப்பாடானோ அதே பாணியில் இனி ஊர்கள் தோரும் சிறைகள் நிறப்பபடும், தேவையின் அடிப்படையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்படுவர்.

பயம் தெளிந்து வீதியில் வந்து போராட துவங்கும் முன் பாசக தவிர நாட்டில் ஆளே இருக்கமாட்டார்கள்.

இது வெறும் கற்பனையல்ல இந்த பணத்தகராரில் ஒருவராவது நீதிமன்றம் செல்ல முடிந்ததா. இல்ல வீதிக்கு வந்து போராட முடிந்ததா. அந்த அளவிற்கு துல்லிய தாக்குதலாக இருக்கும்.

ஒன்று பாசகவின் உறுப்பினர்கள் ஆகுங்கள் இல்லை உயிரை மாய்த்துகொள்ள தயாராய் இருங்கள்.

நீங்கள் போனாவது பரவாயில்லை உங்களி கண் முன்னே உங்களின் பிள்ளைகளை அழித்து உங்களை பார்த்து நாட்டுகாக என்று சிங்கள அரசு செய்ததை போல் செய்து உங்களுக்கு கொஞ்சம் கூட நாட்டுபற்றே இல்லை என்று சொல்லி ஒரு 2000 ரூ தாளில் கடலை உருட்டி உண்டு காட்டுவார்கள், அனுபவிங்க மக்கா அனுபவிங்க.......

ஐயோ பாவம் இந்தியா........கடவுள் தான் காப்பாற்றனும்......

Tuesday, November 15, 2016

மோடி நடுதர வர்கத்திற்கு அடுத்து கொடுக்கப்போகும் அடி இது தான்

500, 1000 ரூபாய் தாள்களை செல்லவே செல்லாது என்று அறிவித்தால் இந்தியாவில் ஊழல் ஒழிந்து நாடு ஒரே இரவில் மறுபிறப்பு எடுத்துவிட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

கருப்பு பணம், பணமாக ஏழைகளின் கையில் இருந்தவைகளை எல்லம் புனிதப்படுத்தியாச்சு. மிச்சம் என்ன இருக்கும் ஏழைகளிடம் என்று கணக்கு பார்த்ததில் மோடியின் ஆலோசகர்கள் சொன்ன ஆலோசனை இது.

சரி கருப்பு பணத்தை எல்லாம் ஏழைகளிடம் இருந்து பிடிங்கியாச்சு, அப்படி அடித்து பிடித்து பிடிங்கியதில் இது வரை வந்தது வெறும் 3 இலட்ச்சம் கோடி ரூபாய்க்கள் மட்டுமே வங்கிகளில் வந்தாக சக்திகாந்து தாசு குறிப்பிடுகிறார். அப்படியானால் மிச்ச பணம் எல்லாம் எங்கே என்று கணக்கு போடுகிறார்கள்.

இந்தியாவின் மொத்த பணம் சுமார் 6,3800,000 கோடிகள். அதில் 30 இலட்சம் கோடிகள் இது வரையில் வங்கிகளில் மக்கள் செலுத்தியுள்ளதாக அறிவித்து இருக்கிறார்கள் . ஆக இது வரையில் 4.7% கருப்பு பணம் தான் வெளியில் வந்து இருக்கிறது.

மீதம் இருக்கும் 95% சதவிகிதம் பணம் எங்கே யாரிடம் இருக்கிறது என்று அலோசித்தார்கள்.

அப்போது தான் தெரிந்தது மீதம் இருக்கும் பணம் எல்லாம் நிலம், வீடு, வீட்டு மனையாக, தங்கம் மற்றும் தங்க நகைகளாக மக்கள் பதுக்கி வைத்துள்ளார்கள்.

ஆகவே விரைவில் உங்களின் நிலம் பதிந்த பத்திரம் செல்லாது என்று அறிவித்து 2 நாட்களுக்குள் புதிய நில பத்திரங்களை பதிய வேண்டும் என்றும் அப்படி பதியும் போது ஆதார் அட்டை இல்லாதோரின் நிலம், மற்றும் அனைத்து சொத்துகளையும் அரசாங்க சொத்தாக எடுத்துக்கொண்டு கருப்பு பண வரவில் வைக்கலாம் என்று அறிவிறுத்தபட்டுள்ளது.

அதை தொடர்ந்து மக்களிடம் இருக்கும் நகை மற்றும் தங்கங்கள் எல்லாம் அரசாங்கத்திடம் ஒப்படைத்து அதற்கு ஈடானா தங்க பத்திரங்களை மக்கள் வாங்கிட வேண்டும் என்றும் அறிப்பார்கள்.

இரண்டு நாட்களுக்கு பிறகு யார் யாரிடன் தங்கம் இருக்கிறர்து என்று பார்த்தால் கருப்பு பணம் என்று பார்ப்பவர்கள் தகவல் கொடுக்க, கைத்து செய்து சிறையில் அடைத்து கருப்பு பணத்தை மீட்டு மீதம் இருக்கும் 95% கருப்பு பணத்தையும் மீட்டு எடுப்போம் என்று திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

நிலப்பதிவு மற்றும் தங்க ஒப்படைப்பு நிலவரங்களை அடுத்து அப்படியும் 95% சதவிகித நீடிப்பு நீடித்தால் வீட்டில் இருக்கும் தட்டுமுட்டு சாமான்கள், கிழிந்த பாய்களையும் ஒப்படைத்து விடும்படி அரசு ஆனை அறிவித்து இன்றைக்கு தான் ஏழைமக்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்று அமெரிக்காவில் சென்று உரையாற்றுவார் மோடி.

இந்த அரசு தான் வந்தாள வேண்டும் என்று தவம் கிடந்த மக்களே வீட்டு மற்றும் சொத்து பத்திரத்திற்கு ஈடான முத்திரை தாள்களை இப்போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால் அனைத்தும் பாழாய் போகும், பிறகு பாசக கைக்கூலிகள் நாட்டு நலனுக்கு உங்கள் சொத்தை விட்டு கொடுத்துவிட்டு தெருவில் தூங்கினால் என்ன கேடு வந்துவிட போகிறது என்று செய்தி தாயாரித்து வெளியிடுவார்கள்.

Wednesday, November 9, 2016

துக்ளக் மோடி-அதாணியும் அம்பாணியுமா மூட்டைய தூக்கிக்கிட்டு பணம் மாத்த போறாங்க

அவரசத்துக்கு ஆகும்னு ஒன்னு இரண்டா சேர்த்து வைத்திருப்பவனும், 1 இலட்ச்ச ரூபாய் முதல் 10 இலட்ச ரூபாய் வரையிலும் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளும் தான் இந்த சிக்கலில் மாட்டி தவிக்க போகிறார்கள்.

மாத சம்பளக்காரர்களும் பெரும் பண முதளைகளும் வெறு கணக்கு தாள்களில் அல்லவா பணத்தை வைத்துள்ளார்கள். அவர்களுக்கு எப்போது பணம் வேண்டுமோ அப்போது எடுக்கும் போது அன்றைக்கு அடித்த தாளாக அல்லவா கொடுப்பார்கள்.

இந்த அடித்தட்டு மக்களுக்கு நன்மை புரியத்தான் துக்ளக் மோடி பிரதமராக வரவேண்டும் என்று பாசகவும் அதன் அடி பொடிகளும் நாங்கள் வந்தான் அனைவருக்கும் வேலை வாங்கித்தருவோம் என்று ஏமாற்றி வாக்கை அள்ளினார்கள் (தமிழ் நாட்டின் நிலை வேறு).

இந்த அடித்தட்டு மக்களை நோகாடிப்பதிலும் சாகடிப்பதிலும் அப்படி ஒரு மகிழ்ச்சி பாசகவிற்கு.

கிராமத்து சுப்பன்,குப்பன் வரையில் வண்டியில் சென்றார்கள், இன்றைக்கு பெட்ரோல் வானத்திற்கு பறந்தது.

அனைத்து விடுகளுக்கும் சமையல் வாயு இணைப்பை வாங்கினார்கள் - இன்றைக்கு வாங்க முடியாத அளவிற்கு விலையை உயர்த்தியாச்சு.

சாலையிலும் இரயிலிலும் அடித்தட்டு மக்கள் பயணித்தார்கள், இன்றைக்கு 10% மட்டும் வாங்கக்கூடிய விலையில் மற்றவை எல்லாம் பணம்படைத்த மக்களுக்கு மட்டுமே.

BSNLல் சேவை பெற்று அனைவரும் செல்லும் இணையமும் பயன்படுத்தினார்கள். இன்றைக்கு அனேக இடங்களில் இந்த சேவையை கிடைக்காத வண்ணம் செய்தாச்சு. மக்கள் அதாணிக்கும் அம்பாணிக்கும் கொட்டிக் கொடுக்கபட்டுவிட்டார்கள்.
.
.
.
.
.

அனேகமாக இன்னும் கொஞ்ச காலத்தில், சுமார் 40 வருடங்களுக்கு முன் வெளியூர் போவதாக இருந்தால் மாட்டு வண்டியை பூட்டி, கட்டு சோற்கட்டி செல்வது போல் அடி தட்டு மக்களை காவடி எடுக்க வைத்துவிடுவார்கள் போலும்.

ஏன்டா இந்த நிலைமை என்று கேட்டீர்கள் என்றால் பல் இருப்பவன் பட்டாணி சாப்பிடுகிறான் என்று எகத்தாளம் பேசுவார்கள்.

பாசகவிற்கு ஓட்டு போடாதே என்று அன்றே சொன்னோம், அன்றைக்கு பாலாறும் தேனாறும் அல்லவா பாயப்போகிறது என்று சொன்னர்கள். எங்களை நம்பாமல் அவர்களை நம்பி இப்படி விட்டில் பூச்சாய் போனீர்களே, உங்களுக்கு இதும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

அடுத்த தேர்தலிலும் இந்த துக்ளகையே தேர்ந்து எடுங்கள் இன்னும் நிறைய உங்களிடம் இருந்து பிடுங்கவேண்டி இருக்கிறது அந்த வகிரம் பிடித்த கட்சியினருக்கும் துக்ளக்கிற்கும்.

ஆனாலும் ஒரு இந்து ஆட்சியரை பார்த்து அவரை போல் நடந்துக்கொண்டு இருக்கலாம், இந்து மதம் என்று சொல்வது எல்லாம் சும்மா பேச்சுக்கு தான் போலும்............

Tuesday, November 1, 2016

PINK - இந்திப்பட விமர்சனம்

சட்டங்களும், காவல்துறையும் பணமும் பலமும் உள்ளவரிடம் தஞ்சம் புகும் என்ற வள்ளுவனின் வாக்கை அழகாக எடுத்துகாட்டும் படம்.

அடுத்தவர் வீட்டு பெண்கள் என்றால் அவர்களுக்கு கிள்ளு கீரை என்று அழக்காக காட்டிய படம் இது.

தமிழில் விதி என்று ஒரு படம் பட்டி தொட்டியெல்லாம் பெண்களை பற்றிய கௌரவம் தொகுத்து வழங்கிய படம். அந்த காலத்தில் இந்த படத்தின் வசனம் அனேகமாக எல்லோரும் ஒரு பதிவு வைத்து இருப்பார்கள்.

படம் பதட்டத்தில் துவங்கி அமைதியிலும் நிறைவிலும் நிறைவு பெற்றது அழகு. எங்கே படத்தின் முடிவு அதிகம் பேசப்படவேண்டும் என்று நீதி தலையை தொங்கப்போட்டுக்கொள்ளுமோ என்ற பயம் கடைசி வரையில் இருந்தது.

ஒரு வழக்கு எப்படி நடக்குமோ அப்படி அழக்காக காட்டி இருக்கிறார்கள், வழக்கின் காலம் எவ்வளவு என்று அமிதாப்பின் மனைவி மறைவையும் வில்லனின் வடுக்கள் காயத்தில் இருந்து தழும்பில் முடியும் வரை என்று சின்ன சின்ன நுணுக்கங்களையும் ஆராய்ந்து கையாண்டு இருக்கிறார்கள்.

எந்த ஒரு வழக்கிலும் பிரதிவாதியை உணர்ச்சி வசப்படுத்தி முட்டாளாக்கும் போக்கு என்றைக்கு தான் ஒரு முடிவுக்கு வருமோ தெரியவில்லை. இது அமெரிக்க நீதிமன்றங்களுக்கும் பொருந்தும்.

இடைவேளை வரை படம் பயணிப்பதே தெரியவில்லை. அதற்கு பிறகு படம் முடிவுக்கு வந்து நிற்கும் போது தான் தெரிகின்றது. நல்ல படம். தில்லி மக்களுக்கு இந்த படம் தேவைதான்.

Thursday, October 27, 2016

தொடரி படமும் - Unstoppable (2010)மும் திரைவிமர்சனம்

UnStoppable(2010)

தொடரி துவங்கியதில் இருந்து ஏதோ ஒரு பெரிய சின்னத்திரை தொடரை இடையில் இருந்து பார்ப்பது போல் ஒரு தோற்றம்.

கதையில் அதே அந்த காலத்து கஞ்சத்தனம், சின்னதாக கதை சொல்ல வேண்டும் என்று நாயகனை அனாதையாகவும், அழுத்தமாக இருக்க வேண்டும் என்று நாயகி மாற்றாம் தாய் வளர்க்கும் பிள்ளையாகவும் என்று கதையை எழுதி தள்ளி இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் படத்தின் கதை இவ்வளவுதான். இரயில் நிறுவன நட்டத்தை கணக்கு காட்டி அந்த வண்டி ஓட்டுனரை 30 நாளில் பணியில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துவிட. அவனும் மிச்சம் இருக்கும் நாட்களை விபத்து இல்லாமல் கடக்கவேண்டும் என்று வேலைகளை மேற்கொள்ளுகிறார்.

அவருடன் அன்றைக்கு வேலைக்கு வருபவனின் குடும்ப வாழ்க்கை சிதைந்து மறுபடியும் கூடுமா இல்லை அவ்வளவு தானா என்ற மனப்போறாட்டம் வண்டியில் மாட்டியுள்ள அந்த நிறுத்தி (Break) தொடர் அறுந்து விழுவதை கூட கவனிக்காமல் செல்கின்றான்.

அதற்குள் இவர்கள் செல்லும் பாதையில் ஒரு சோம்பேறி ஊழியரின் அலட்சியத்தால் ஆள் இல்லாமல் பயங்கர வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு மணிக்கு 140 கிமீ வேகத்தில் செல்கின்றது.

அதே சமயம் பள்ளி சிறார்களை ஏற்றிக்கொண்டு சின்ன சுற்றுலாவாக இன்னும் ஒரு வண்டி எதிர் திசையில் வருகின்றது.

இந்த 3 வண்டிகளும் பயண்படுத்தும் பாதை ஒன்றே, எப்படி விபத்தை தவிற்பார்கள் அல்லது என்ன ஆகும் என்று திரைகதை ஆங்கிலத்தில்.

இதை மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு தமிழ் படமாக மாற்றிவிட்டார்கள்.

ஆனாலும் கீர்த்தியை அனியாத்திற்கு கேணை கிறுக்கச்சியாக காட்டி இருப்பது சகிக்கவில்லை. அதே மாதிரிதான் அந்த சேட்டன் கதையும்.

அப்படியே எடுக்க வேண்டியது தானே அது என்ன மசால தடவி கொடுப்பது போங்கப்பா நீங்களும் உங்க ஆலிஉட் உறுவலும்.

அது தான் கதையின் முன் பாதியை சமோசா விற்பதாக மாற்றினீர்களே அதே போல் ஒரு கதையையும் எழுத வேண்டியது தானே அது மட்டும் என்ன சுட்ட பழபாக. பாழாய் போச்சு தமிழகத்து படைப்பாற்றல்.

அன்னை ஸ்ரீவித்யா அவர்களின் 10 ஆண்டு நினைவு

பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் நினைவு அலைகளை எழுதும் போது இல்லாத வலி இந்த பத்தாம் ஆண்டு நினைவு குறிப்புகளை எழுதும் போது வந்தது.

நீ இல்லாத இந்த வெறுமை நாட்களை எப்படி கடப்பேன் என்று இருந்த நிலை மெல்ல பழகித்தான் போச்சு என்றும் இருந்தேன். இருந்தாலும் இந்த ஆண்டு புரட்டியே தான் போட்டுவிட்டது.

ஒவ்வொரு முறை எழுத நினைக்கையிலும் முதல் வார்த்தைகளுடன் நின்று தான் போய்விட்டது.

மீண்டும் மீண்டும் உனது நினைவு அலைகள் நீண்டு நாட்கணக்கில் அடங்காமல் வாட்டிய போது தான் தெரிந்தது எங்களை பிரியும் நிலையில் உன் மனது என்ன என்ன வேதணைகளில் துடித்து இருக்கும் என்று.

எங்கு இருகிறாய் என்று தெரியவில்லை இருந்தாலும், தினமும் என்னை அங்கு இருந்து பார்த்துக்கொண்டும் வாழ்த்திக்கொண்டும் இருக்கிறாய் என்று.............

Saturday, October 8, 2016

ரெமோ - திரைவிமர்சனம் இதுக்கு பேசாம wedding singer கதையையே எடுத்து இருக்கலாம்

wedding singer

என்னமோ வித்தியாசமா படம் என்று சொன்னார்களேன்னு பார்த்தால் கடைசியில இந்த wedding singer கதைய அப்படியே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு எடுத்து இருக்கிறார்கள் மற்றபடி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

அந்த சிறுமியை காப்பாற்றுவதாக அந்த சிறுவனுடன் டுருபெரி மோரை நடனம் ஆடவைத்து நாயகியின் மனதில் இடம்பிடித்ததை மாற்றி அமைத்து இருக்கிறார்.

 நிச்சயம் ஆன பின்னும் அடுத்த பெண்களின் பின்னழகை ஆபாசமாக விளிக்கும் அந்த ஆடவனின் வசனங்களை இவளை பார்த்ததும் அவளை விட்டு விட்டு வந்துவிட்டேன் என்று சொல்வதாக மாற்றிவிட்டார்கள்.

திருமணங்களில் மட்டும் பாடி சொற்பபணம் ஈட்டும் நாயகன் ஆங்கிலத்தில் இதில் நடிக்க வேண்டி வேலை இல்லாமல் அலைவதாக காட்டியுள்ளார்கள்.

கண்ணாடியில் ஜூலியா கூலியா என்று சொல்லிப்பார்ப்பதையும், நாயகனின் அன்புள்ளம் கண்டு வியந்தலும் என்று இருந்த காட்சிகளை எடுக்க படாது பாடு பட்டுள்ளார் இயக்குனர்.

என்ன அந்த டுருபெரி மோர் காட்டும் அதே அப்பாவி தனம் இந்த நாயகிக்கும் பொருந்தி இருக்கிறது.

பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் இருந்தாலும் இவ்வளவு நல்ல ஆண்களும் உலகில் இருக்கிறார்களே என்று அதிசயக்கும் காட்சிகள் எல்லாம் தமிழில் காணாமல் போனது ஏன் என்று இயக்குனரும் அவரது கதை சொன்ன பட்டாளமும் விளக்கினால் நல்லது.

ஆங்கிலத்தில் நாயகனுடன் பாடும் ஒரு திருனங்கை வருவார் அந்த பாத்திரத்தை பயன்படுத்தி திரைகதையில் மாற்றுவோம் என்று துவங்கி முதல் கோணல் முற்றிலும் கோணலாக சென்று முடிந்து இருக்கிறது.

என்ன அருமையான படம் இந்த wedding singer. அதை கடித்து குதறி குத்துயிரும் கொலை உயிருமாக கொடுத்து இருக்கிறார் இந்த இயக்குனர்.

ஆங்கிலத்தில் படம் துவங்கியதில் இருந்து கடைசிவரை எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் படம் பயணிக்கும். ஆனால் தமிழிலோ சிவா தனது விமர்சனங்களில் அடுத்தவர் படங்களில் பகிடியடிக்கும் அத்தனை நக்கல் சம்பவங்களுமாக இந்த படம் அமைந்தது கொடுமையே.....

எப்பவுமோ சிவாவை பெண் வேடத்தில் பார்க்க சலிப்பாக இருக்கிறது இது அந்த இயக்குனருக்கு தெரியாமல் போனது சோகமே.

Wednesday, September 14, 2016

நல்லவேளை அமித்து சா பக்ரீத்துக்கு வாழ்த்து சொல்லவில்லை

ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது போல் பக்ரீத்துக்கும் அமித்து சா வாழ்த்து சொல்லி இருந்தால் எப்படி இருந்து இருக்கும் நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

சமீபத்திய பெங்களூரு நிலைமை இந்தியா முழுவதும் பரவி இருக்கும், பாசகவும் மோடியும் மாய்ந்து மாய்ந்து அறிக்கை ஒரு பக்கம் வாசித்துக்கொண்டே அனைவரும் காலியா என்று இரகசியம் கூட்டம் நடத்தி காவல் துறையோ மற்ற பாதுகாப்பு நிறுவனங்களோ வராமல் நான் பார்த்து கொள்கின்றேன் எல்லோரையும் இந்த சந்தர்பம் கொண்டு தீர்த்துகட்டுங்கள் என்று அல்லவா உத்தரவுகளை வழங்கி கொண்டு இருப்பார்கள்........

Tuesday, August 30, 2016

அப்போ இந்தியாவில் இனி யாரும் ஓட்ட பந்தையம் நடத்தவோ, கலந்துக்க கூடாதுன்னு ஆணை பிறப்பிக்கபடும்

http://ramaniecuvellore.blogspot.com/2016/08/blog-post_90.html


இந்தியாவில் இனி யாராவது ஓடினாலோ அல்லது ஓட்டப்பந்தையம் பற்றி பேசினாலோ எழுதினாலோ கடும் தண்டனைகளுக்கு ஆளாகி சாக வேண்டியது தான் என்று அரசு விரைவில் ஆணை பிறப்பிக்கபடும் என்று எதிர்பார்ப்போமாக.

அது மட்டும் இல்லாது இனி இந்தியா எதிர் வரும் நாட்களில் ஒலிம்பிக்கு முதல் அனைத்து விதமாக விளையாட்டு போட்டிகளையும் இந்தியாவில் தடை விதித்துவிட்டு, அந்த காலத்தில் விளையாடியது போல் வில் வித்தை, கட்டை விரலை வெட்டுதல், தேர் ஓட்டுதல், புறா விளையாட்டு என்று மட்டும் நடத்தும். அல்லது மாட்டிறைச்சி இல்லா உணவர்களால் விளையாடும் விளையாட்டுக்கள் மட்டும் என்று சிமிர்த்தி இராணி தலைமையில் ஒரு குழு அமைத்து பரிந்துரைக்க சொல்லும்.

அதோடு மட்டும் நில்லாது மாட்டிறைச்சி உட்கொள்ளும் நாட்டுடன் இனி எந்த ஒரு விளையாட்டோ வியாபாரமோ இந்தியா நடத்தாது என்றும் அறிவிக்கும். இல்லை என்றால்; இது என்ன பாசக ஆட்சி இது.

மாட்டிறைச்சி நாடுகளுடன் வியாபாரம் செய்யும் கணவான்களே உங்கள் தொழிலுக்கு உசைன் போல்டு போட்ட குண்டை பார்த்தீர்களா இந்த ஒலிம்பிக்கு இப்படியா உங்களுக்கு வினையாக முடியானும்.

ஒரு வேளை இந்தியா வாங்கிய பதக்கங்களை எல்லாம் திருப்பி கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டால் வெள்ளி வென்றவளுக்கு அறிவித்த அத்தனை பரிசுகளும் திரும்ப பெற்றுவிடுவார்களோ.....சிந்து தென்னகத்தவராயிற்றே செஞ்சாலும் செய்வாங்க......


https://1.bp.blogspot.com/-8VD-5Ws_WYM/V8Woa0EoM3I/AAAAAAAAMgA/-zCrZ1tCCK0aCKW6_C0dIAeZJhAgVJPzwCLcB/s1600/14051633_10206837014546753_259085067589701593_n.jpg

Friday, August 5, 2016

பாசகமீதும் மோடிமீதும் உள்துறை அமைச்சருக்கு என்ன கோபம் - இப்படி போட்டு தாக்கி இருக்கிறார்

பயங்கரவாதிகளை தியாகிகள் எனப் புகழ வேண்டாம்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் கண்டிப்பு

"விஷயங்களைத் தெரிவித்தார். அவர் பேசியதாவது:
பயங்கரவாதிகளை தியாகிகள் என்று புகழ்பாடக் கூடாது. பயங்கரவாதிகளில் நல்லவர்கள் என்றும் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது.

நமது பிராந்தியத்தின் அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் தொடர்கிறது. பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் பகுதியாக தெற்காசியா நீடிக்கிறது. அண்மையில் பதான்கோட்,
டாக்கா, காபூல் உள்ளிட்ட பகுதிகளில் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை இந்தப் பிராந்தியம் சந்தித்தது. 

பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் வெறுமனே கண்டிப்பது மட்டும் போதாது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நமது உறுதியை வலுப்படுத்துவதோடு, இந்த அச்சுறுத்தலை முடிவு கட்ட கடும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். 

பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக மட்டுமின்றி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நாடுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."

கோட்சேவை புகழ்பாடுவதும், குசராத்தில் ஒரு இரவில் 1,50,000 மக்களை திட்டமிட்டு கொன்றுகுவித்தது, நாடு முழுவதும் மக்கள் எப்போது நாம் தாக்கப்படுவோம் என்று நடுங்கியபடி வாழும் நிலைக்கு இந்தியாவை கொண்டு வந்த மோடியையும் பாசகவையும் அழகாக பெயர் சொல்லாமல் அழகாக போட்டு தாக்கியுள்ளார் உள்துறை அமைச்சர் இராசனாத்து சிங்கு.

நாட்டில் மதத்தின் பெயரால் நடத்த கொலைகளை கண்டிக்ககூட தைரியம் இல்லாத அரசாகவும் பிரதமராக இருப்பதையும் குறிபிடதவரவில்லை.

"பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக மட்டுமின்றி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நாடுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."

RSSசையும் அதன் அரசியல் வடிவமான பாசகவையும் மறைமுகமாக அழகாக வாறியுள்ளார் சிங்கு. 

அடுத்தவர்களுக்கு என்றால் அறிவுரை இலவசம் என்றது போல் அழகாகபேசுகிறார்கள் இந்த காவிகுஞ்சுகள்.

Monday, August 1, 2016

பாசக வளர்க்கும் பிம்பம் - விழித்துகொள்ளுமா அரபு நாடுகளும் அதன் முதலாளிகளும்

சவூதியில் சிக்கியிருக்கும் 10,000 இந்தியர்களும்  தாயகம் அழைத்து வரப்படுவார்கள்: சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

இன்றைய செய்திகளில் மேலே சொன்ன செய்தி தலைப்பாய் வந்துள்ளது, இப்படி அரபு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மட்டும் மிகவும் முக்கியம் கொடுத்து செய்தி அடிக்கடி வெளியாவதை கவனிக்க முடியும்.

சவுதியில் மட்டும் இல்லை உலகில் எந்த நாட்டில் எல்லாம் வேலைக்கு மக்கள் செல்கின்றார்களோ அங்கே எல்லாம் இந்த அவலம் தொடர்வது தவிர்க்க முடியாதும் கூட. வேலை அதிகம் இருக்கும் போது மக்களை தேவைக்கு அதிமாக குவிப்பதும் வேலை முடிந்த உடன் திரும்பி செல்லுமாறு அறிவுருத்துவதும் தான் அனேகமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை.

நாட்டின் உள்ளே அழைத்து வரும் போது விசா மற்றும் பயண ஏற்பாடுகளை அந்தந்த நிறுவனங்களே கவனித்துக்கொள்ளும். ஆனால் திரும்பி செல்வதும் மாற்று ஏற்படுகளை கவனித்துகொள்வதும் அவரவருடைய தனிப்பட்ட கடமையாகி போகின்றது. திரும்பி செல்லவும் அழைத்து வந்த நிறுவனம் தான் கவனிக்க வேண்டும் என்று பாராளுமன்றதில் அம்மையார் கொடுத்து இருக்கும் தகவல் தவறானது.

அந்தந்த நாட்டின் நடப்புகளில் சொல்வதை போல் வேலை இல்லை நாடு திரும்பவும் என்று அறிவித்ததோடு நிறுவனங்களை கடமை முடிகின்றது.

தாயகம் திரும்புவது திரும்பாததும் அவரருடைய தனிப்பட்ட செயல்.

சம்பாதித்த காசை எல்லாம் குடும்பத்திற்கு அனுப்பிவிட்டு  அடுத்த மாத சம்பளத்தை எதிர்பார்த்து இருக்கும் குடும்ப தலைகளும் சரி, கடமைகளை செய்ய நேர்ந்துவிட்ட தலைமகன்களுக்கும் சரி. அடுத்த மாத சம்பளம் வந்ததும் பார்த்துக்கொள்வோம் என்று இருந்த அப்பாவிகளின் நிலையை தான் இந்த அம்மையார் என்னவோ மாபாதக செயலாக வர்ணித்து பேசியுள்ளார்.

அப்போ அமெரிக்கா முதல் அத்தேரிலியா வரை வேலை பார்க்கும் தகவல் தொழில்னுட்ப்ப ஆட்கள் எல்லாம் எப்படி இந்த பட்டியளில் விடபட்டார்கள் என்று விளக்குவார்களா அம்மையார்.

எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்றதை விட எந்த விகிதத்தில் தங்களது ஊதியத்தை இந்த தலைமகன்கள் தாயகம் அனுப்புகிறார்கள் என்றால் எந்த வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி அவர்களின் அயலக பொருளாதார நிலை கிட்டத்தட்ட ஒன்றாக தான் இருக்கும், எப்படி....

அளவுக்கு மீறிய குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்ச நாளைக்கு என்று வெளி நாட்டில் வேலைக்கு வரும் சராசரி ஆணும் சரி பெண்ணும் சரி, தனது தேவைகள் பூர்த்தி ஆகுகின்றதோ இல்லையோ குடும்பத்தின் தேவைகளை பூத்தி செய்வதையே பிறவியின் பயனாய் நினைத்து செயல்படுவோர் இவர்கள்.

கொஞ்ச நாள் தான் பிறகு நிலைமை சரியானதும் நமது தேவைகளை சரி செய்துகொள்வோம் என்ற கனவில் இருப்பார்கள் ஆரம்பத்தில்.

பிறகு காலம் செல்ல செல்ல தான் புரியும், தற்பொழுதைய நிலைக்கு ஏற்ப தனது குடும்ப தேவைவகள் அதிகரித்துக்கொண்டே தான் செல்லுமே தவிர நிறைவேறியதாக ஒரு நிலையை தொடாது என்று.

இருப்பினும் எந்த ஒரு சலனதிற்கும் மனதில் இடம் கொடுக்காது கொண்ட கடமையை செவ்வனே செய்துவரும் அந்த அன்பான மக்களின் நிலையை என்னவோ சவுதியிலும் மற்ற அரபு நாடுகளில் மட்டுமே நசுக்கப்படுவதாக பாசக பரைசாற்றவும். அவர்களின் பாதுகாவலனாகவும் அரணாகவும் தான் இருப்பதாக பாசக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றது.

இது ஏனைய எல்லா நாடுகளின் நிலைமை தான் என்று சொல்ல மறுபதன் அரசியலை அரபு நாடுகளில் வேலைபார்க்கும் நண்பர்களும் அவர்களின் குடும்பங்களும் விளங்கி கொள்ளுதல் அவசியம். மற்ற நாடுகளில் இருக்கும் இத்தகைய மக்களை ஏன் பாசக அரசு கண்டுகொள்வதில்லை என்று விளக்கவும் வேண்டும்.

இந்த நிலைமைக்கு ஒரு திறம் வாய்ந்த அரசு என்ன செய்யவேண்டும் இலவசமாக உணவும் பயண ஏற்பாடுகள் மட்டும் கவனித்தால் மட்டுமா அதன் கவலை. இந்த நிலை மேலும் நடக்காமல் இருக்க அப்படி குறைந்த சம்பளத்தில் அழைத்து செல்லும் நிறுவனங்கள் அழைத்து செல்ல பயண ஏற்பட்டுகளை கவனிப்பது போல் திரும்பி வரும் ஏற்பாட்டுகளையும் கவனிக்க வேண்டியது கட்டாயம் என்று ஆக்க வேண்டாமா.

வியாபாரம் பட்டு போய்விட்டது ஆகையால் நாங்கள் எங்கள் நிறுவனத்தை மூடுகின்றோம் இந்த நிலையில் எங்களால் பயண ஏற்பாட்டை கவனிக்க முடியாது என்று நீலிக்கண்ணீர் சிந்துவார்கள் என்று எதிர்பார்த்து. பாரத்தது ஆட்களை வெளி நாடுகளில் குறைந்த சம்பளத்திற்கு அழைப்பதாக இருந்தால், இந்திய குடியுரிமை இருக்கும் வரையில் அவர்களது தாயக திரும்ப பயண தொகையை விசா கிடைக்கும் காலம் வரையில் கணக்கிட்டு முன்பணமாக கொடுக்க வேண்டும் கடாயமாக என்று அல்லவா பேசி இருக்க வேண்டும் அம்மையார்.

அதை விடுத்து அந்த முதலாளிகளின் கொள்ளை இலாபத்தில் விளையும் நட்டதிற்கு நடுத்தர மக்கள் கட்டும் கட்டாய வரிப்பணத்தில் அல்லவா பாசக அரசியல் விளம்பரம் செய்கின்றது.

எந்த ஒரு நாட்டிலும் தன்னால் தாயகம் திரும்ப முடியவில்லை அதனால் என்னை திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று அயலுரவு நிறுவனங்களை அனுகினால் ஏற்பாடு செய்வார்கள் அவர்களது பணத்திலே என்ன திரும்ப அந்த நாட்டிற்கு வர விசா கொடுக்க மாட்டார்கள் அவ்வளவு தான்.

நிரந்தரமாக ஒரு தீர்வை எட்டுவதற்கு பதில் என்ன ஒரு கபட நாடக பாசக அரசில். அது சரி நாடகம் ஆடியே நாட்டை பிடித்தவர்கள் ஆயிற்றே இவர்கள் வேறு என்ன செய்வார்கள்.

சரி ஆளும் பாசக தான் செய்யவில்லை எதிர்கட்சியாவது இப்படி ஒரு குரளை எழுப்புகிறார்களா என்று பார்ப்போம்........

இந்த கட்டண வசூலை இந்திய அரசு வசூலித்து நடவடிக்கைகளுக்கு பயன் படுத்துவதை விட எந்த நாடு விசா கொடுக்கின்றதோ அந்தந்த நாடுகளே வசூலித்து நடைமுறை படுத்தினால் இன்னமும் நப்பிக்கையாகவும் சிறப்பாகவும் இருக்கும்........கவனிப்பார்களா அரபு நாடும் அதன் முதலாளிகளும்.

Tuesday, July 26, 2016

கபாலி நிமித்தமாக IT மக்களுக்கு தொற்றி கொண்ட சமூக சிந்தனை வியாதி

கபாலி படம் வர இருக்கும் வாரத்தில் இருந்து இன்று வரை இப்படி ஒரு செய்தி இணையத்தில் வலம் வருகின்றது. இவ்வளவு சம்பாதிக்கும் நடிகர் தமிழகத்துக்கோ இந்தியாவிற்கோ என்ன செய்து இருக்கிறார். அவரது படத்தை பார்க்க இவ்வளவு காசு கொடுக்க வேண்டுமா என்று.

இதிலே பியூசை வேற வம்புக்கு இழுத்து ஒரு ஒப்பீடு வேறு, என்னத்த சொல்ல.

நாமும் கேட்போம் இந்த IT மக்களை பார்த்து, இணையத்தில் பொங்கி வழியும் சமூக புலிகளே உங்கள் தந்தையின் சம்பளத்தை விட நீங்கள் குறைந்தது 5 மடங்கு சம்பளம் வாங்குகிறீர்கள்.

அந்த குறைந்த அளவு சம்பளத்தில் உங்கள் அப்பா உங்களுக்கு நீங்கள் படிக்கும் போது என்ன என்ன எல்லாம் கேட்டீர்களோ அவைகளை குறைகளே இல்லாமல் வாங்கிக்கொடுத்து அழகு பார்த்தார்.

அது மட்டும் இல்லாது தொழில்நுட்ப்ப கல்வியை பயில செய்து இப்படி 5 மடங்கு அதிக ஊதியம் பெற வழி செய்த்தார்.

இந்த 5 மடங்கு சம்பளத்தில் எவ்வளவு பணத்தை எடுத்து நீங்கள் எல்லாம் எழுதும் ஏழை எளிய மக்களுக்காக செலவிட்டும், நாட்டின் நலனுக்காக செலவும் செய்து இருக்கிறீர்கள்.

சென்னை வெள்ளத்தின் போது களத்தில் இறங்கியும் அங்கே வராமலும் உதவிகளை கொட்டி குவித்த நல்ல உள்ளங்களை பார்த்து நான் கேட்க்கவில்லை என்றது வெட்ட வெளிச்சம். அவர்கள் கட்டாயம் இப்படி எழுதியிருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த இணைய சமுதாய புலிகள் வெகுண்டெழுந்து இலாப நட்ட கணக்குகளை எல்லாம் பட்டியலிட்டு எழுதி மீதி இவ்வளவு பணம் எதற்கு என்று எழுதும் நீங்கள், வெறும் ரூ4.80க்கு ஒரு கோக்கு/பெப்சி பாட்டிலை மொத்தவிலையில் வாங்கி ரூ65க்கு விற்கிறார்களே அவரகளது இலாபம் என்ன ஆனது என்றும், அந்த நுகர்வோர் பொருட்களை வாங்காதீர்கள் என்று இவர்கள் எழுதுவது உண்டா.

உள்ளூர் தயாரிப்பான இட்டிலி தோசைக்கு அதே 10, 40 ரூபாய். ஆனால் இதய நோயை வரவழைக்கும் பிட்சாவும் பர்கரும் 200 முதல் 500 வரை. நறுக்கியது போக மிச்சம் கீழே விழுந்த துண்டு காய்கறிகளையும் மிச்ச மீதியான சீசையும் கொண்டு தயாரிக்கப்படும் உணவு பீட்சா, இப்போது இதை ஏதோ ஒரு புதிய தயாரிப்பாக கருதிக்கொண்டு தயாரிக்கிறார்கள் என்றது வேறு கதை. பர்கர் கதையோ இன்னும் பரிதாபம், ஆடு மற்றும் மாட்டின் இறைச்சிகளை வேண்டிய துண்டுகளாக வெட்டி எடுத்தபின் விழும் மிச்ச மீதிகளை எடுத்து கொஞ்சம் மாவு மற்றும் முட்டையுடன் அரைத்து வடைபோல் தட்டி கல்லிலோ அல்லது எண்ணையிலோ சுட்ட உணவு பர்கர்.

இறைச்சியில் மிஞ்சிக்கிடக்கும் கொழுப்பை அப்படியே சோப்பு தயாரித்து கரை நல்லது என்று பலபளப்பான விளம்பரத்துடன் வெளியிடுவார்கள், இவர்களும் அவைகளை வாங்கி பூரிப்பு அடைவார்கள்.

ஆக மொத்தம் அமெரிக்காவில் கீழே கொட்டும் பொருட்களை எல்லாம் பொருக்கி சிகுனா தாளில் சுற்றி அழகாக ஆங்கில பெயர் சூட்டி கொடுத்தால் ஒன்று பத்துவிலை கொடுத்து வாங்கி சாப்பிட்டு பெருமை பேசும் இந்த மக்கள் ஏன் உள்ளூர் சத்தான தயாரிப்பான உணவுகளை வாங்கு சாப்பிடுவது இல்லை. இந்த கழிவு பொருட்களுக்கு இவ்வளவு விலையா ஏன் என்று இந்த இணைய புலிகள் என்றைகாவது கேட்டது உண்டா.

அவனவன் திறமைக்கு ஏற்றார் போல் அவனவன் சம்பாதிக்கின்றான், அடுத்தவனுக்கு பிரசங்கம் செய்யும் முன்பு தான் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்ருங்கள் இணைய புலிகளே.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன் படம் வந்த போது எந்த சலனமும் இல்லாமல் இருந்தது போல் இருந்துவிட்டு போங்கள் கபாலிக்கும்.

Monday, July 25, 2016

கபாலி - மோசடி , கெட்ட கனவு - தினமணியின் கண்டுபிடிப்பு

கபாலி - ஒரு கெட்ட கனவு!

"தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக அரைத்துக் கொண்டிருக்கும் அரதப் பழசான நல்ல தாதாவுக்கும் கெட்ட தாதாவுக்குமான மோதல்தான் கதை. அந்த தாதாக்களின் கதையை அப்படியே படமாக்கினால் "முற்போக்குவாதி' பட்டம் கிடைக்காது என்பதனால், அதில் தமிழ் உணர்வையும், ஜாதிக் கொடுமையையும் கலந்து படமாக்க முற்பட்டிருக்கிறார் பா.ரஞ்சித்.

மலைகளாகக் கிடந்த மலேசியாவை சீராக்கி பொன் விளையும் பூமியாக மாற்றிய தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறார் கபாலியாக வரும் ரஜினி. அந்த முன்னேற்றம் பிடிக்காத மலாய் முதலாளிகள் ரஜினியையும், அவரது குடும்பத்தையும் சிதறடிக்கிறார்கள். பின் அந்த முகாமுக்குள் நடக்கும் தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி, "தமிழன் முன்னேறினா பிடிக்காதா..! ஒரு தமிழன் ஆளக் கூடாதா? நான் ஆளப் பிறந்தவன்டா...' என ரஜினி தரும் பதிலடிதான் கபாலியின் கதைக் களம்."

கபாலி மோசடி! 

"50 நிறுவனங்களைக் கொண்ட டி.வி.எஸ். குழுமத்தில் 39,000 தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை பார்க்கிறார்கள். அவர்களது ஆண்டு பற்றுவரவு ரூ.42,000 கோடி. முருகப்பா குழுமத்தின் 28 நிறுவனங்களில் 32,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களது வருடாந்திர விற்று வரவு ரூ.26,000 கோடி. அமால்கமேஷன் குழுமத்தில் 47 நிறுவனங்களில் 50 தொழிற்சாலைகள், 15,000-க்கு அதிகமான தொழிலாளர்கள். ஆண்டு பற்றுவரவு ரூ.9,300 கோடி. அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாத, அவர்களுக்கு முக்கியத்துவம் தராத ஊடகங்கள், "கபாலி' போன்ற திரைப்படங்
களுக்கு, அதிகபட்சம் ரூ.1,000 கோடி புரளும், சினிமா துறைக்கு இவ்வளவு முக்கியத்துவமும் விளம்பரமும் தருகின்றனவே, இதற்குக் காரணம் என்ன? ரசிகர்கள் முட்டாள்களாக இருப்பதுதானே!"

மேலே சொன்ன 2 செய்திகளும் கபாலியை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கில் எழுதவில்லை நடுநிலையோடு தான் எழுதினோம் என்றும் சொல்வார்கள் தினமணியை அனுகினால். 

நாமும் அட நல்லது தானே சொல்கிறார்கள், நல்லது சொன்னால் கேட்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்களே என்றும் கூட தோன்றும்.

தினமணி செய்திதாள் துவங்கி இலாபம் பார்க்க துவங்கியது முதல் இன்றைக்கு வரை தமிழகத்தில் உள்ள அத்தனை பள்ளி இல்லா ஊர்களிலும் பள்ளிகளை கொண்டுவந்து கொடுத்துள்ளது.

தமிழகத்து விவசாயிகளின் நலன் காக்க காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படும் கர்னாடக அரசை நிர்பந்திக்க உச்ச நீதிமன்றத்தை அனுகி உத்தரவை பெற்று இரணுவ நடவடிக்கைக்கு உட்படுத்தி தமிழகத்தை காத்து நின்றது.

தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு அரசு துறைகளில் மட்டும் இல்லாமல் தனியார் துறைகளிலும் வேலை வாங்கிக்கொடுத்து வாழ வைத்து அழகு பார்த்தது.

இப்படி ஏதாவது இது வரை தினமணி செய்ததுண்ட அதன் இலாபத்தில். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் செய்து இருக்கலாம்.

தான் ஒரு செய்தி வியாபார நிறுவனம் என்றதை சாதகமாக பயன்படுத்தி திரைபடமும், பொழுதுபோக்கு ஊடகங்களும் அதன் தயாரிப்புகளினால் நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு என்றது போல் ஒரு பிம்பத்தை விதைக்க எண்ணி துனிகின்றது.

கிரிகெட் விளையாட்டாலும் அதன் சமீபத்திய வடிவமான ஐபியல் ஆகட்டும் இல்லை உலக கோப்பையாகட்டும் இதனால் நாட்டிற்கு விளையும் நன்மை என்ன என்று இது வரை எழுதாது ஏன். அந்த விளையாட்டாலும் அதனால் பணம் பெறும் விளம்பர மற்றும் விளையாட்டு வீரர்களால் எல்லாம் இந்த தொழில் நிறுவன ஊழியர்களுக்கு என்ன என்ன கிடைத்தது என்று தினமணி தான் சொல்ல வேண்டும்.

அவரவர் அவர்களின் வேலைகளை பார்கிறார்கள். என்ன அதையும் தாண்டி சமூக சிந்தனை, அக்கறை, சீர்திருத்தம் என்றும் கூட சென்று செய்வது அவர்களது தனி தகுதி. ஆனால் அது தான் அவர்களது வேலை கிடையாது. எப்படி தினமணி தன் வேலையை மட்டும் பார்கிறதோ அதே மாதிரி.

தனக்கு வந்தால் இரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சாரு என்ற எண்ணத்திமிரில் இருந்து வெளிவரவும்.

சமூகத்தில் வெறுப்பை விதைப்பதில் இருந்து வெளியேறி நல்ல செய்திகளை பரப்பவும். உங்களது செய்திவியாபாரம் தன்னால் வளரும், இப்படி குறுக்கு வழியில் வாழ்வை தேடுவதை நிறுத்திக்கொண்டால் நல்லது.

பின் குறிப்பு: தினமணியின் செய்தியில் இருந்து ஒருசில பகுதிகளை எடுத்து இணைதுள்ளேன். பின்னாளில் அவைகள் தூக்கப்படலாம் என்ற நிலைக்காக

Wednesday, July 20, 2016

காங்கிரசும் பாசகவும் இல்லாத இந்தியாவே வைக்கோவின் அடுத்த திட்டம்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, காங்கிரசும், பாசகவும் இல்லாத அரசு தான் இந்தியாவை ஆளவேண்டும் என்று மக்கள் நல கூட்டணியை இந்திய அளவிற்கு கொண்டு செல்லும் திட்டத்தில் வைக்கோ இருக்கிறார்.

பாகசவும் சரி காங்கிரசும் சரி இது வரையில் இந்தியாவிற்காக ஒன்றும் செய்துவிடவில்லை என்றும். இந்தியாவிற்காக இந்த இரு கட்சிகளும் ஒரு கீரையை கூட கிள்ளி போட்டது இல்லை என்ற வியூகத்தில் இவர்களது தேர்தல் பிரச்சாரங்கள் அமையும் என்றும் தெரிகின்றது.

இந்த இரு அரசுகளும் மாறி மாறி இலங்கையுடன் இணைந்துக்கொண்டு தமிழர்களும், பாகிட்தாணுடன் சேர்ந்துக்கொண்டு வட மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்றும், சீனாவோடு இணைந்துக்கொண்டு காசுமீரம் மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்றும் மக்களிடம் எடுத்து சொல்லவும் திட்டம் இருப்பதாக தெரிகின்றது.

வேண்டும் என்றால் விசயகாந்தை பிரதம வேட்பாளராக அறிவிக்கவும் தயாராக இருப்பதாகவும், வேறு யாரும் விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும் என்றும் இரகசிய அறிவிப்பும் வெளியாகி இருப்பதாக தகவல்.

தேசிய அளவில் மநகூயில் பொதுவுடமை கட்சியினர்கள் இருப்பது மக்கள் அறிந்ததே, அதனுடன் வலு பெற்ற கட்சிகளை இப்போது இருந்தே ஒருங்கிணைத்தால் வெற்றி நிச்சயம் என்றது அடிப்படை அரசியல் அறிவு இல்லாதவனால் கூட எளிதாக கணிக்க கூடியதே என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வருகின்ற நாடளுமன்ற தேர்தல் முடிந்ததும் என்னுடைய திட்டமும் இராசதந்திரங்களையும் மக்களும் பாசக மற்றும் காங்கிரசு புரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவின் எதிர்காலமே, விடிவெள்ளியே என்று நாடே உங்களை கொண்டாட போகிறது, வாழ்த்துகள் வைகோ.

Tuesday, July 19, 2016

இது அல்லவோ தீர்ப்பு - காந்தியை கொன்றது கோட்சே என்ற தனி நபர் - அப்போ

மாகாத்துமா காந்தியை கொன்றது நாதுராம் கோட்சே என்ற ஆள் மட்டுமே, ஏன் அந்த துப்பாக்கி மட்டும் தான் என்றும் கூட சொல்லலாம். அதை விடுத்து RSS இயக்கம் அதன் தலைமை, தொண்டன், தளபதி, திட்டமிட்டோர், இரயிலுக்கு பயண சீட்டு வாங்கிக்கொடுத்தோர், துப்பாக்கி குண்டு வைக்க பை வாங்கி கொடுத்தோர், துப்பாக்கி வாங்கி கொடுத்தோர், கொல்ல சொல்லி மூளை சளவை செய்தோர், கூப்பிட்டுக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் தங்கவைத்தோர், உடன் பேசி சதி செய்தோர் என்று எல்லாம் சொல்வது உண்மைகளின் திரிபுகள் என்று என்ன அழகாக தீர்ப்பளித்துள்ளார்கள்.

அட இந்த நீதிபதிகள் இல்ல இந்த எழுவர் விடுதலையை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள், வட போச்சே...........அடடா இந்த வடக்கத்திய மக்களுக்கு வாச்சது நமக்கு வாய்க்காமல் போச்சே...........

Monday, July 18, 2016

சுவாத்தி கொலை உண்மையை தானாக முன் வந்து ஒத்துக்கொள்ளும் பாசக - எச்சி இராசாவின் ஒப்புதல் வாக்குமூலம்

சுவாத்தியின் கொலையை பயன்படுத்தி இன்னும் ஒரு கோத்ரா கலவரம் செய்ய பாசக தீவிரம்

இந்த பதிவை எழுதியபோது என்னவோ கற்பனையாக எழுதியதாக தான் எல்லோரும் பார்த்தார்கள் சிலர் பின்னூட்டமும் இட்டார்கள்.

இன்றைக்கு வந்திருக்கும் செய்தியை பாருங்கள் பாசகவின் திட்டம் என்னவாக இருந்தது என்று எச்சி.இராசா தெளிவாக வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

 நக்கீரனில் வெளியான செய்தி

செய்தி அழிக்கப்படலாம் இணைப்பு நீக்கப்படலாம் அதனால் அந்த செய்தியை எடுத்து இணைத்துள்ளேன்.

"
ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு? : எச்.ராஜா 

சுவாதி கொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து பாரதீய ஜனதா அகில இந்திய செயலாளர் எச்.ராஜா,

’’நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொல்லப்பட்டது பற்றி பல்வேறு தகவல்களை திருமாவளவன் கூறிவருகிறார்.

சுவாதி முஸ்லீமாக மதம் மாற இருந்ததாக அவர் கூறி இருக்கிறார். அவருக்கு இந்த தகவலை சொன்னது யார்? சுவாதி எதற்காக மதம் மாற நினைத்தார்? அவரை மதம் மாற சொன்ன பையன் யார்? இவையெல்லாம் திருமாவளவனுக்கு தெரிந்திருக்கிறது’’என்று கூறியுள்ளார்.

அவர் மேலும்,  ‘’எங்களுக்கு கிடைத்த தகவல்படி அந்த பையன் இந்துவாக மாறி சுவாதியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் அதற்காக சைவஉணவுக்கு அவர் மாறியதாகவும் சொல்கிறார்கள்.  அவர் இந்துவாக மாறிவிடக்கூடாது என்பதற்காக சுவாதியை கொலை செய்துவிட்டதாக பேசுகிறார்கள். இப்போது அதை திசைதிருப்புவதற்காக திருமாவளவனை பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு? இந்த கொலை பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது யாரும் எதுவும் பேசாத நிலையில் திருமாவளவன் புதிது புதிதாய் தகவல்களை சொல்கிறார். எனவே இந்த வழக்கில் பல உண்மைகள் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே சுவாதி கொலை தொடர்பாக போலீசார் திருமாவளவனிடம் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்."

திருமாவளவனுக்கு எப்படி இவ்வளவு செய்திகள் தெரியும் என்று கேட்கும் எச்சி.இராசாவுக்கு எங்களுக்கு கிடைத்த தகவலின் படி என்று சொல்லிய தகவல்களை கொடுத்தது யார் என்று சொல்ல கடமைபட்டு இருக்கிறார். மேலும், துவக்கத்தில் இருந்து முசுலீம் என்ற சொல் இந்த வழக்கில் அதிகமாக பயன்படுத்தபட்டு இருப்பதை கவனிக்க முடியும்.


இந்துவாக மாற இருந்ததால் சைவம் சாப்பிட்டார் என்ற தகவல்கள் மட்டும் எப்படிஎச்சி.இராசா வகையாருக்கு தெரியும், கொடுத்தவர்கள் யார். யாருடைய தலைமையில் இந்த செய்திகள் எல்லாம் திரட்டப்பட்டது என்றும் சொல்ல இவர் கடமைபட்டுள்ளார்.

தமிழகத்தில் தன்மக்களை பலி கொடுத்தாவது தங்களது அரசியல் கணக்கை தொடங்க வேண்டும் என்று பாசக அலைகின்றது. நாளை கொல்லப்படப்போவது உங்கள் மகள்/மகனாக இருக்கலாம் சிந்தியுங்கள் மக்களே இந்த மாதிரியான செய்திகளை புரம் தள்ளுவது மட்டும் இல்லை பரப்பவும் அனுமதிகாதீர்கள்.

FeTNAவும் பரதேசியும் இன்னும் பலரும்

பொதுவாக நட்சத்திரங்களை தூர இருந்து இரசிப்பது போல் இருக்காது அருகாமையில் பார்க்கும் போது. ஆனால் இந்த FeTNA விழாவின் அதிசயமே அதற்கு நேர்மாறாக இருப்பது தான்.

மயில்சாமி அண்ணாதுறையை சாப்பிடவிடாமல் துரத்திய செய்தியாளர்களை கண்டதும் அட விடுங்கப்பா அவர் சாப்பிட்ட பிறகு கேள்விய கேளுங்கள் என்று நாம் சொல்லும் அளவிற்கு மிகவும் எளிமையான மனிதாராக இருந்தார் அவர்.

அவர் மேடை பேச்சும் என்ன அருமையாக இருந்தது, தான் தமிழில் தான் படித்தேன் என்ற செய்தியை பெங்களூரில் கன்னட மாணவர்களுக்கு தமிழிலேயே சொல்ல செய்து, கன்னட மாணவர்கள் கன்னடத்தில் தான் படிக்கவேண்டும் என்று சொன்ன நிகழ்வும் நெஞ்சை ஈர்த்தது.

அதை தொடர்ந்து தமிழருவிமணியன் அவர்களின் அரசியல் பேச்சாகட்டும் இலக்கிய பேச்சாகட்டும் என்ன அருமையாக எடுத்துரைத்தார். சந்தித்த அனைவரையும் சென்னை வந்தால் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்ததின் அருமை நேரில் கண்டவருக்கு மட்டுமே தெரியும்.

அன்று விடுதலை புலிகளையும் ஈழத்தையும் பற்றி பேசிய அடேல் பார்கர் பேச்சு ஆகட்டும் அதை பற்றி பொய்யும் புரட்டுமாக விகடன் செய்தியாளர் கண்ணில் பார்த்தது போல் செய்தி வெளியிட்டதாகட்டும் பிரமிப்பு தான். குறிப்பாக அடேல் பேச்சுக்களின் இடையிடையே காண்பிக்கப்பட்ட படங்களுக்கு பிள்ளைகளின் கண்களை பெற்றோர்கள் மூடினார்கள் என்று எழுதினாரே அந்த மூடருக்கு சிங்கள அரசாங்கம் எவ்வளவு கைமாற்றியது என்று சொன்னால் நல்லது.

இப்படி நேரில் சந்தித்திராத நட்சத்திரங்களை நேரில் சந்திக்கும் போதும் அவர்களுடன் அளவளாவும் போது நமக்குள் ஏற்படும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அனுபவித்தால் மட்டுமே உணரகூடிய ஒன்று.

கவிஞர் பாசுகரன் அவர்களது கவியரங்கமும் அவரது இலக்கிய பேச்சும் அருமை, அரசியல் வாதிகளை பற்றி அவர் சொன்ன கவிதைக்கு சான்றாக அடுத்த மேடையிலே நடராசன் சசிகலா பேசியதை பார்க்கும் போது சிக்காத ஆள் இல்லை.

பாடகி அனுராத சிறீராம் ஆங்கிலத்தில் பேச கீழ ஒரு தமிழ்மகன் குறள்கொடுக்க நானும் பச்சை தமிழச்சிதான் என்று அவர் சீறீய காட்சியாகட்டும் அழகோ அழகு.

அங்கே கலந்துக்கொண்ட தமிழ் பிள்ளைகள், கொஞ்சு தமிழில் தனக்கு தமிழ் தெரியவில்லை என்று தட்டுதடுமாறி சொல்லிய வாக்குமூலம் அருமையாக இருந்தது.

கடைசி நாள் நிகழ்ச்சியில் சிலம்பொலி செல்லப்பன் அவர்களும், தமிழருவிமணியன் மற்றும் கவிஞர் பாசுகரன் அவர்களும் பிளந்துகட்டிய இலக்கிய சொற்பொழிவாகட்டும் அருமையோ அருமை.

அதே கூட்டத்திற்கு நடிகர் சீவா, பசுபதி, கவிஞர் வைரமுத்துவும் வந்திருந்தார்கள் என்றது வேறு செய்தி.

இந்த வரிசையில் இன்றைக்கு பதிவர் பரதேசி அவர்களின் அனுபவம் பகிர்ந்து இருந்தார். 7 ஆண்டுகளுக்கு முன் அட்லாண்டாவில் நடந்த நிகழ்வு இன்றைக்கு தான் நடந்தது போல் இருக்கிறது அந்த அன்பும், வரவேற்பும், உபசரிப்பும். விழாவில் கலந்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த அருமை.

Thursday, July 14, 2016

இந்த முட்டாள் கணவருக்கு சட்டப்புலிகள் யாராவது உதவுங்களேன்..........

மணமுறிவு வழக்கில் தனது நேற்றைய  மனைவியும் என்னாள் பிள்ளை பராமரிப்புக்கும் பணம் கொடுக்க முடியாது என்று தொடுத்த வழக்கில், பெண்களை பொருளீட்ட சொல்வது இந்து மத தர்மங்களுக்கு எதிரானவை என்றும். மாதம் ரூ 5000 கைக்கும் வாயுக்கும் மட்டுமே சரியாக இருக்கும் என்று நீதிமன்றம் தீர்ப்பில் அந்த முட்டாள் நேற்றைய கணவரை கடிந்து இருக்கிறது.

சென்ற ஆண்டு இந்தியாவின் திட்ட ஆணையம் நாள் ஒன்றுக்கு ரூ22 இருந்தால் அவர் வறுமை கோட்டிற்கு கீழ் இல்லை என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு அரசு கெசட்டில் கிடைக்கும். அந்த கெசட்டின் பிரதியையும் மேலும் நேற்றைய மனைவி வேலை பார்க்கவில்லை என்ற சாட்சியத்தின் அடிப்படையில் அவர் வேலை செய்யும் மத்திய/மாநில அரசு நிறுவனத்தின் மேலாளரை நீதிமன்ற அழைப்பு கட்டளையில் இணைத்து விசாரித்தால் இந்த தீர்ப்பு திருத்தப்படலாம்.

ஒரு நாளைக்கு ரூ22 என்றால் ரூ 682ல் அவரது வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகி விடுகின்றது, மீதம் இருக்கும் ரூ4312ல் அவர் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்றும் வாதிடலாம்.

நீதிமன்றத்தை பொருத்த அளவில் சாட்சிகளின் அடிப்படையில் தான் அனுகவேண்டு அன்றே உணர்வு பூர்வமாக இல்லை. என்ன இதை சொல்வது ஒரு மிகவும் புகழ் பெற்ற வக்கீலாக இருக்க வேண்டும் அவ்வளது தான். இருந்தாலும் இந்த வாதத்தை நிதிமன்றம் தன்னிச்சையாக புறம் தள்ளும் அதிகாரம் பொருந்தியது என்றதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஏன்டாமக்கா கட்டும்போதே தெரியாதா பின்னாளில் வழக்கு அது இது என்று வரும் என்று........

யார் அப்பன் வீட்டு பணம் இந்த ரூ616 கோடி மோடி தான்சானியாக்கு தூக்கி கொடுக்க

மோடி பதிவி ஏற்றதில் இருந்து அந்த நாடுக்கு இவ்வளவு பணம், இந்த நாட்டு இவ்வளவு என்று வெவ்வேறு நாடுகளின் பெயரில் இந்தியாவின் வரிப்பணத்தை அள்ளி அள்ளி வீசுகிறார்.

இந்த பணம் எல்லாம் மோடி குசராத்து முதல்வராக இருந்த போது சம்பாதித்ததோ இல்லை பாசகவின் கட்சி பணமோ இல்லை.

இந்தியாவில் மாதம் கையெழுத்திட்டு சம்பளம் பெறும் நடுத்தர வர்க மக்களை கேட்காமலேயே அவர்களது சம்பளத்தில் இருந்து அரசு எடுத்துக்கொள்ளும் வரிப்பணம்.

அடி தட்டு மக்கள் பெறும் தின சம்பளத்திற்கு அவர்கள் வரி கட்டுவது இல்லை. மேல் தட்டு மக்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் வரிக்கட்டுவதும் இல்லை வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதும் இல்லை.

மேல் தட்டுமக்கள் உடனே வரிந்துக்கட்டிக்கொண்டு அப்போ இந்திய அரசின் வரிப்பணம் பூரா நடுத்தட்டு மக்களின் வருமான வரிப்பணமா என்று மிகவும் புத்திசாலி தனமாக கேட்ப்பார்கள். ஆமாம் நடுத்தட்டு மக்களின் வருமான வரிப்பணமும், அது நிமித்தமாக ஆன செலவுக்கு தொழில் நிறுவனங்கள் வருமான வரி கட்டாமல் தவிர்க்க கணக்கு காட்டி கட்டிய பணமே அன்றி மேல் தட்டுமக்களின் வருமான வரிப்பணம் இல்லவே இல்லை. அது மட்டும் இல்லாது அனைத்து தட்டு மக்களும் வாங்கும் சேவைக்கும், பொருட்களுக்கும் விதிக்கும் வரியுமே இந்த மோடி அரசாங்கம் வாரி வழங்கும் இந்த பணம்.

இப்படி அடுத்த நாடுகளின் பெயரில் உதவி என்று மோடி திட்டங்களாக கொடுக்கும் பணம் அதானியின் நிறுவனங்களில் ஒன்று ஒப்பந்தம்மிட்டு இந்திய அரசின் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த நாடுகளில் பணியை பூர்த்தி செய்யும்.

இலவசமாக இந்திய அரசு அடுத்த நாட்டிற்கு செய்யும் உதவி அதனால் எந்த தரத்தில் அந்த பொருட்களோ உதவிகளோ இருக்கிறது என்று அந்த நாடுகள் வாய்திறப்பது இல்லை காரணம் அவைகள் இலவசமாக வலிந்து கொடுக்கப்பட்டவை.

கிட்டதட்ட உள்ளாட்சி தேர்தல் முடிந்த உடனே நன்றாக இருக்கும் தெரு சாக்கடைகளை உடைத்துவிட்டு மீண்டும் அதே சாக்கடைகளை முன்பைவிட கேவலமாக கட்டுவார்களே அதே போல் இருக்கும் இந்த இந்த வெளிநாட்டு இலவச திட்டங்கள்.

இந்த உப்புமா திட்டங்களுக்கு சிறு நகரங்கள் முதல் பெரு நகரங்கள் வரை வாழும் நடுத்தட்டு மக்கள் தங்களது சமையல் எரிக்காற்று மானியம் முதல் சிறு விவசாயிகள் வரை உர மானியம் வரை விட்டுக்கொடுத்தல் வேண்டும்.

ஏன் என்றால் அப்போது தான் இந்தியாவிற்கு சமீபத்தில் உலக வங்கு கொடுத்த 620 பில்லியன் அமெரிக்க டாலர் சூரிய சக்தி மின்சார அமைப்புகளுக்கான உதவி  தொகை கிடைக்கும்.

அந்த உதவி தொகைகளையும் அதானியின் இன்னும் ஒரு உப்புமா நிறுவனம் உப்புமா தயாரிப்புகளை நடுத்தர மற்றும் கிராமபுர மக்களின் கூறைகளில் நிறுவி விட்டு 70% முதல் 90% சதவிகித பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு மின்மிகை நாடாக இந்தியா ஆகிவிட்டது ஆகையால் அடுத்த ஆண்டில் சர்வதேச மின்மிகை நாடு இந்தியா என்று ஐநா அறிவிக்க வேண்டும் என்று சொல்லி ஒரு 2 மில்லியன் அமெரிக்க டாலரில் ஆப்ரிக்க நாடுகளில் ஒரு நாட்டுக்கு உதவி என்று அறிவிக்கும் மோடி அரசு.

உலக வங்கி கடன்/உதவி கொடுத்தாலும் அதானிக்கு, இந்தியா வெளி நாடுகளுக்கு உதவி என்று அறிவித்தாலும் அதானிக்கு ஏன் இப்படி விஞ்னான பூர்வமான ஊழல். பேசாமல் அப்படியே இந்தியாவில் வரும் அரசு வருமானம் எல்லாம் இனி அதானிக்கு தான் என்று சொல்லிவிட வேண்டியது தானே மோடி..........

எதிர்கட்சிகளும் சரி செய்தி இதழ்களும் சரி, ஏன் பொருளாதார புலிகள் என்று சொல்லும்/சொல்லிக்கொள்ளும் வல்லுனர்களும் சரி இது வரையில் இவைகள் பற்றி வாய்திறக்காமல் இருப்பது சோகமே.......

காசுமீருக்கு வாச்சது ஈழத்திற்கு வாய்க்காமல் போனதே........

காசுமீரில் எது நடந்தாலும் அந்த ஊர் மக்கள் கேட்கிறார்களோ இல்லையோ பக்கத்து நாடும் அதன் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் கட்டாயம் கேட்ப்பார்கள். அது மட்டும் இல்லை அதற்கு மிகவும் பொறுப்பாக இந்திய அரசும், இராணுவமும் கூட ஐநா சபை வரை சென்று புகாரில் இருந்து சமாதானம் வரை சொல்லும்.

சரியோ தவறோ, நல்லதோ தீமையோ இருப்பினும் விடமாட்டார்கள் என்ற தைரியம் இருப்பதால் தான் காசுமீரத்தில் இன்றைக்கு உயிரை கொடுத்தாவது போராடுவோம் என்று போராடுகிறார்கள்.

இத்தனை ஆண்டுகளில் அங்கு ஒரு கருணாவை கண்டு பிடிக்க முடியவில்லை, ஐநாவுக்கு வா, செனிவாக்கு வா என்று தண்ணீர் காட்ட முடியவில்லை. ஒரு டக்குலசுசை கண்டு பிடிக்கமுடியவில்லை, ஒரு சுப்பிரமணி சாமியை கண்டு பிடிக்கமுடியவில்லை, என் ராமைவிட்டு சுதந்திர காசுமீரம் வந்தால் அவர்கள் இந்தியாவையே தீயிட்டு கொளுத்திவிடுவார்கள் என்று எழுத வைக்க முடியவில்லை.

ஆனால்  ஒன்று மட்டும் சாத்தியம் ஆக்கி இருக்கிறது, IPKF போல் காசுமீரத்திலும் இராணுவம் கட்டற்ற பாலியல் வன்முறையை மேற்கொண்டு வருவது மட்டும்.

காசுமீரம் இந்தியாவின் ஒரு பகுதி, அப்போ ஈழம் என்ன ஆப்ரிகாவின் பகுதினா அவர்கள் சொன்னார்கள்.

ஈழம் அமைந்தால் அது இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையும் என்று அவாள் எல்லாம் சொல்வார்கள். ஆனால் காசுமீரமும் அதனால் இந்தியாவிற்கு ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் இழப்பினை பற்றி வாய் திறக்கமாட்டார்கள் ஏன் இந்தியும், அரபியும் பேசுவதாலா....இல்லை தமிழ் பேசாததினாலா....

இது என்ன மாயமோ................

Wednesday, July 13, 2016

பாமக, இராமதாசு மற்றும் அன்புமணி சாதியை தவிர வேறு எதை பற்றியும் பேசாதது ஏன்

July 12 2016
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுப்பு: ராமதாஸ் கண்டனம்

July 11,2016
இழுக்கு சேர்ப்பதற்கு அல்ல 'எழுத்து சுதந்திரம்'- 'மாதொருபாகன்' வழக்கில் ராமதாஸ் கருத்து

July 09, 2016

ராம்குமாரை கதாநாயகனாக சித்தரிக்க முயற்சி: ராமதாஸ் கருத்து

July 06, 2016
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநகரமாக சென்னை மாறி வருகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டுDec 6,2012
ஆமாம், நான் ஜாதி வெறியன்தான்... டாக்டர் ராமதாஸ் பரபரப்புப் பேச்சு


நாளிதழ்களையோ அல்லது வேறு இதழ்களையோ திரந்தால் இராமதாசோ, பாமகவோ அல்லது கையெழுத்து தான் போடுவேன் என்று சொல்லும் அன்புமணியாகட்டும் இவர்கள் வெளியிடும் கண்டனங்கள் ஆகட்டும், அறிவிப்புகள் ஆகட்டும் அனைத்துமே சாதியை சார்ந்தே இருப்பதேனோ தெரியவில்லை.

இந்த செய்திகளுக்கு நடுவில் பல கொலைகள் நடந்தது உண்டு, ஆனால் இவர்களோ இவர்களது இயக்கமோ சாதிய முக்கியத்துவம் பெறாத கொலைகளுக்கோ சச்சரவுகளுகோ எந்த முக்கியத்துவமும் கொடுப்பதே இல்லை.

இந்த சாதிய இயக்கம் தமிழகத்தை ஆளுவதற்கு ஏற்ற கட்சி என்று இராமதாசும் அவரது மகனும் மக்களுக்கு சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக்கூட சாதியின்றி பார்க்க முடியாத இந்த மனிதர்கள் தாம் மக்களை வழி நடத்தபோகும் தலைவர்கள் நம்புங்கள்.

50 ஆண்டு காலமாக முன்னோக்கி நகர்த்திகொண்டு வந்த மக்களை 200 ஆண்டுகளுக்கு ஆங்கிலேய அடிமை காலத்துக்கு அல்லவா இவர்கள் நம்மை அழைத்து போக முற்படுகிறார்கள் இந்த தேசபக்தர்கள்.

தேர்தல் காலங்களில் எதிர் அணியினர்களை மாக்களாக மதித்தும் மிதித்தும் பேசிய இவர்களது பேச்சுகளை மக்கள் அறிவார்கள்.

எதற்கு எடுத்தாலும் வன்னியர்கள் என்று பேசும் இந்த மக்களால் எப்படி அடுத்தவர்ளோடு இணக்கமாக செயல்பட முடியும்.

அது மட்டும் இல்லாது சாதி வளையங்களை தொகுப்பதும், நாதியற்றவர்களை அடித்து கொல்லவும் தூண்டும் இவர்கள் தண்டிக்கபட வேண்டியவர்கள்.

இந்திய அரசியல் அமைப்பில் சாதிக்கு எதிராக உள்ள அனைத்து பிரிவுகளிலும் குற்ற நடவடிக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்பட்டு வரும் இந்த சாதி இயக்கம் தான் தமிழகத்தையும் இந்தியாவையும் ஏன் அமெரிக்காவையும் ஆள பிறந்த மக்கள் மற்றும் இயக்கம்.

Tuesday, July 12, 2016

நாட்டு நடப்பே தெரியாத விசயகாந்து ஐயோ பாவம் - சீர்திருத்த பள்ளி

1988ல் சலாம் பாம்பே என்று ஒரு படம் வந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அந்தப்படம் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் பாம்பாய் ஓடி வந்து வாழ்க்கையை தொலைத்த ஒரு சிறுவனின் கதை. சமீபத்தில் கூட இந்த கதையை அழகாக மெழுகேத்தி சிலம் டாக்கு மில்லினர் என்று ஆசுகர் வாங்கிய கதையும் உண்டு.

திரைதுறையை சேர்ந்த இவருக்கு சிறார் சீர்திருத்த பள்ளி எல்லாம் எப்படி நடக்குதுன்னு தெரியாதாம். சீரழிக்கும் பள்ளியா என்று கேட்கிறார் அப்பாவி போல்.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்ற வழக்கு இன்றைக்கும் அன்றாடம் நாம் பார்க்கும் காட்சிகள்.

அதனால் தான் சின்ன பிள்ளைகளை இதை பார்க்காதே படிக்காதே என்று சட்டமும் கொண்டு அடக்கி வைத்துள்ளார்கள். இளம் கன்று பயம் அறியாது, பயம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் தான் செய்யப்போகும் செயலால் தனது வாழ்க்கையும் அடுத்தவர் வாழ்க்கையும் எந்த நிலைக்கு தள்ளப்படும் வயது இல்லாத பிள்ளைகளை வீட்டுலேயே கட்டுப்படுத்தியும் கண்டித்தும் வளர்க்க வேண்டும் என்றது ஊர் அறிந்த உண்மை.

மற்ற நாடுகளை விடுவோம் இந்தியாவில் குற்றமும் தண்டனை என்று கிடையாது. குற்றமும் குற்றம் புரிந்தவனின் பின்னணியும் என்று தான் இருக்கிறது.

கொலையே ஆனாலும் 100 கோடி ரூவா படம் வீணாய் போகும், தேசபக்தி படத்துல எல்லாம் நடிச்சி இருக்கார்ன்னு சொல்லிகிட்டு வெளியில வந்து தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் பின் தர்மம் வெல்லும் என்று கையை ஆட்டி ஆட்டி வசனம் பேசலாம்.

ஆனால் இப்படி பின்னணி இல்லை என்றால் அடுத்தவன் செய்த கொலைக்கு கூட தான் பலிகடாவாக்கப்படுவதை எவனாலும் தடுக்க முடியாது இந்தியாவில்.

கோபத்திலும் ஆத்திரத்திலும் அறியாமல் செய்த தவறு வருந்தி திருந்தும் இடம் தான் சிறையும் சீர்திருத்த பள்ளியும். ஆனால் அங்கு செல்பவர்களை எப்படி நடத்துகிறார்கள்.

சட்டம் என்ன எல்லாம் சொல்கிறதோ அவைகளுக்கு நேர் எதிர்மாறாக நடந்து அந்த சிறார்களையும் கைதிகளையும் வெளி உலகுக்கே தகுதி இல்லாதவனாக தான் மாற்றிவிடுகிறது இந்திய சமூக அமைப்பு.

சட்டம் ஒரு தண்டனை கொடுத்தால் அதற்கு மேல் சமுதாயம் கொடுக்கும் தண்டனை அதைவிட கொடூரம்.

இவைகள் எல்லாம் தெரியாதது போல் ஐயா விசயகாந்து கேள்வி கேட்கிறார், எழுதி கொடுத்தவனை பிடித்து நாலு நல்லா நடு மண்டையில போடுங்க.............

Monday, July 11, 2016

மாதொருபாகனை விமர்சிக்கும் குருமூர்த்தி நடிகர் உதயநிதியை விமர்சிகாதும் வழக்கு போடாததும் ஏன்

மாதொருபாகனை வரிக்கு வரி விமர்சனம் செய்தும் நீதிமன்றதில் வழக்கில் வாதாடிய குருமூர்த்தி அதே பாணியில் இருக்கும் திரைபடம் மனிதன் படத்தை விமர்சிக்காமலும் வழக்கு தொடுக்காமலும் இருப்பது ஏன் என்று விளக்குவாரா.

என்ன தான் படம் துவங்குவதற்கு முன் அனைத்தும் கற்பனை என்று சொன்னாலும், வழக்கை துவங்கும் முன்பு அனைவருக்கு முன் நிலையிலும் ஒரு நீதியரசர் ஒரு செல்வாக்கு மிகுந்த வக்கீலுடன் தனது வீட்டு மனை வாங்குதல் பற்றி பேசுவதாக காட்டுவதாகட்டும்.

நீதியரசர்களுகே சந்தேகம் என்றால் உங்களை தானே கேட்ப்பார்கள் என்று நீதியரசர் சொல்லும் வசனமாகட்டும்.

எந்த நீதிபதி அப்படி நடந்துகொள்கிறார்கள் என்ற அரைகூவலையாவது விட்டிருக்க வேண்டும் இந்த குருமூர்த்தியும் அவரது பின்னால் இருந்து இயக்கும் சக்திகளும்.

சாட்சி யார் என்று நீதிமன்றத்தில் குறிபிட்டே ஆகவேண்டும் என்று கேட்பதும், பின் குறிப்பிட்டதும் சாட்சிகளை கொல்வதும், மிரட்டுவதும், கடத்துவதும் என்று அழகாக படம் முழுக்க காட்டியுள்ளார்கள். இந்த காட்சிகள் பார்க்கும் மக்களை நாடு இப்படி தான் நடந்து கொண்டு இருக்கிறது என்று நினைக்க வைக்கும் விதமாக இருக்கிறது என்று ஏன் இவர்கள் கொதித்து எழவில்லை.

அதுவும் இந்த படம் தேர்தக் சமயத்தில் வெளி வந்தவை, அதுவும் ஒரு பலம் பொருந்திய கட்சியை சேர்ந்தவர் நல்லவர் போல் வேடம் இட்டு நடித்து நாட்டையும் வீட்டையும் காக்கும் சக்தி அவரிடம் உள்ளது போல் நடித்து நாட்டு மக்களை ஏமாற்ற பார்த்துள்ளார் என்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை.

படத்தின் இன்னும் ஒரு கொடூரம் என்ன என்றால் செல்வந்தர்கள் இரவு நேரங்களில் பெண்களை காரில் ஏற்றிக்கொண்டு செல்வதும், இவன் அழைத்து செல்லும் பெண் அவனிடம் தனது தொடர்பு எண்ணை சொல்வதும் போல் காட்சிகளை அமைத்து பெண்களை இழிவுபடித்தியுள்ளார் என்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை.

வடகத்திய தொழில் அதிபர் என்றால், அவரது மகன் இரவு நேரங்களில் குடித்துவிட்டு தான் வீட்டுக்கு தாறுமாறாக வண்டியை ஓட்டி வருவான் என்றும். நடைபாதை என்றால் தூங்கும் இடம் அல்ல என்றும் அதே சமயத்தில் வண்டி ஓட்டுவதற்கும் இல்லை என்றும் சொல்லும் போன்ற வசனங்கள் சாலையோர மக்களை மனம் நோகும்படி இருக்கிறது என்று ஏன் வழக்கு தொடுத்து படத்திற்கு தடை இன்னும் வாங்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு திறமையான வக்கீல் தனது சம்பள பணத்தில் ஏமாற்றபட்டால் இப்படி தான் சட்டத்தின் விளையாட்டில் இறங்கி பணம் கொள்ளையடிப்பார் என்றால், தனக்கு எதிரிகளே கிடையாது தெரியுமா என்று சொல்லும் அந்த செல்வந்தர் இந்த வக்கீலிடமே தஞ்சம் அடையும் படி கதையமைத்து இருப்பது செல்வந்தர்களின் மனம் புண்பட்டுவிட்டது என்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை.

இவை எல்லவறறையும் விட, வெட்ட வெளியில், அனைவரும் பார்க்க ஞாயத்திற்காக போராடும் இளைஞனை விலை பேசும் விதமாக காட்டுவதும் பிறகு அவன் அதை எதிர்த்து போராடுவதாக காட்டுவதும் ஏர்செல் மேக்சிசு வழக்கில் மாட்டி இருக்கும் மாறன் சகோதர்கள் மிகவும் ஞாயமானவர்களாக படம் காட்டுகிறது என்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை குருமூர்த்தி மற்றும் குழுவினர்கள்.

ஏன் என்றால் மாதொருபாகன் ஆசிரியர் போல் ஓங்கி அடித்தால் ஒரு டன் வெய்ட்டுடா பாக்குறியா பாக்குறியா என்று வசனம் பேசி அடிக்க உதயநிதி என்ன கேட்க நாதியில்ல பிள்ளையா.

துப்பு கெட்ட குருமூர்த்தி இதிலே அவனை கூப்பிடு கேளுங்க இவர்களை கூப்பிடு கேளுங்கள் என்று சினிமா வசனம் போல் வசனம் வேறு.

கேட்பவர் கேனையாக இருந்தால் கோட்சே மகாத்துமா என்று சொல்வார்கள் இந்த கோத்ராகாரர்கள்........