Tuesday, September 19, 2017

இளையராசாவையும் மே 17ஐயும் ஞாபகப்படுத்திய டன்கிரிக்கு(Dunkirk) படம்

பொதுவாக ஒரு நல்ல படம் பார்த்தால் அந்த படத்தின் பாதிப்பு மனதை விட்டு அவ்வளவு எளிதில் நீங்காது. அதுவும் மனதில் ஏற்கனவே பார்த்த பல விடயங்களை கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தவும் செய்யும்.

இந்த டன்கிரிக்கு படமும் அப்படி ஒருபடம்.

போர் சம்மந்தமான படம் என்றால் நிறைய காட்டி மக்களை கட்டி போட்டு வைக்க முடியாது. முதலில் காட்சியின் விரிவுக்கு என்று ஒரு பிரமாண்டத்தை காட்டுவார்கள், பிறகு கதைக்கு சம்பந்தமான சிலரையும் அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்று காட்டுவதும் தான் இயல்பு. அந்த வகையில் இந்த படமும் வரலாறில் யார் யார் எல்லாம் பதிவு பெற்றார்களோ அவர்களை மட்டும் ஆங்காங்கே காட்டி திரைகதையில் பதிக்கிறார் இயக்குனர்.

படத்தின் நாயகன் இசை தான், முதன் முதலில் ஆள் அரவம் இல்லாமல் இருக்கும் மையான அமைதியான ஊரில் அந்த வீரர்கள் நடக்கும் இடத்தில் மெல்லிதாக ஒலிக்கும் அமானுசிய ஒலி மெல்ல மெல்ல திகில் இசையாக் சீற்றம் கொள்கிறது.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று கடற்கரைக்கு வரும் காட்சியில் இன்னும் வீரியம் கொள்கின்றது. விரக்தியுன் உச்சத்தில் இருக்கும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தும் ஏதும் பேசிக்கொள்ளவோ என்ன ஆச்சு என்று விசாரித்துத்துகொள்ள முடியாத அளவிற்கு ஒரு விரக்தி. எப்போது தாக்குதல் நடக்கும் அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று ஊகிக்க முடியாத மர்மமாய் அடுத்தடுத்து நகர்கின்றது.

கொஞ்சம் கொஞ்சமாக இசை அங்கே தீவிரமாக அதே சமயத்தில் மெல்லிதாகவும் ஒலிக்கின்றது.

பிறகு அங்கே நடக்கும் தாக்குதலுக்கு பிறகு ருத்ர தாண்டவம் ஆடுகின்றது இசை. சிறப்பு சத்தமும் பின்னணி இசையும் அற்புதமாக நடனமாடுகின்றது படம் இறுதி வரை.

படம் முடிந்த பிறகு இந்த மாதிரி ஒரு ருத்ரதாண்டவ இசையை இதற்கு முன் எங்கேயோ கேட்டோமே என்று நினைக்கையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நினைவுக்கு வந்தது.

முதல் காட்சியில் துவங்கும் இசை பின்பு மெல்ல மெல்ல உக்கிரமாகி பிறகு கரைபுரண்டு ஓடும். கிட்டதட்ட ஒரு போர் படத்தின் இசையின் அத்தனை பாகங்களையும் கொண்டு இருந்தது அந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இசை.

இன்னும் கொஞ்ச நாளில் அந்த ஓ நாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் இசையுடன் இணைத்து இரசிகர்கள் காட்சிகளை வெளியிடப்போவது உறுதி.

மே 17ல் கொத்து கொத்தாய் எங்கே மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்டு எப்படி குண்டு வீசி கொன்றார்கள் என்று ஆவனங்கள் கூட நமக்கு காட்டவில்லை. ஆனால் இப்படி தான் கொன்றார்கள் என்று அழகாக இந்த படம் காட்டியுள்ளது.

போர் நடவடிக்கைகளில் செஞ்சிலுவை வாகனங்களை தாக்க கூடாது என்ற விதி அனைவரும் கடைபிடித்தே ஆகவேண்டிய ஒன்று ஆனால் டன்கிரிக்கில் முதலில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது அந்த செஞ்சிலுவை கப்பல் தான் என்று பார்க்கும் போது எப்படி பட்ட போர் அது என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

இந்த படதிற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம் இந்த இரண்டு பிரிவிலும் விருது கிடைக்க வாய்போ இல்லை. காரணம் எந்த ஒரு இடத்திலும் இராணுவம் பயன்படுத்தும் ரேடியோவை காட்டவில்லை. அது மட்டும் இல்லாது ஒரு குண்டு தாக்கிய 20 வினாடியில் கப்பல்கள் மூழ்குவதாகவும் காட்டியுள்ளார்கள். நல்ல ஆவணப்படம் என்றும் கூட சொல்ல முடியாது காரணம், படத்தில் தொழி நுட்ப முறையில் சேத்துள்ள கடலும் வானமும் சேர்ந்த காட்சிகளில் நிறைய சித்தரிக்கப்பட்டது போல் இருகின்றது.

வலுக்கட்டாயமாக காட்சிகளை திணித்தது போல் கையாண்டு இருக்கிறார்கள்.

2017ஆம் ஆண்டிற்கான ஆசுகர் விருதில் இசைக்கு மட்டுமாவாது போட்டியில் எடுப்பார்கள் மற்ற வகையில் சந்தேகம் தான்.


0 comments: