Thursday, December 4, 2014

மிசுகின் அதிகமாக விமர்சிக்கபடுவதும் அதே பாணியில் செயல்படும் மற்றவர்கள் தப்பிபதும் ஏன்?????

மிசுகினை பொருத்தவரை அவர் வேற்று மொழிபடங்களை தமிழில் எடுப்பதும், அல்லது தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி எடுப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்.

இதில் கமலை வம்புக்கு இழுப்பது வேறு. ஏன் கமலோடு நிப்பாட்டி விட்டீர்கள், பாலுமகேந்திரா, பாலசந்தர், அனந்து, மணிரத்தினம் தொடங்கி இக்காலத்து இயக்குனர் வரையில் திட்டி தீர்க வேண்டியது தானே அது என்ன கமல் மட்டும்.

வேற்று மொழி படங்களை தமிழில் கொடுப்பதை மக்களும் நிராகரிக்கவும் இல்லை அளவுக்கு மீறி விமர்சிப்பதும் இல்லை.

எனக்கு தெரிந்து பாலுமகேந்திராவின் படைப்புகளை அனைத்தும் வெகு சிலவைகள் தவிர அனைத்தும் ஆங்கிலபடங்களின் தமிழாக்கம் தான். எந்த படத்தை மக்கள் நிராகரித்தார்கள், அல்லது அளவுக்கு மீறி விமர்சனம் செய்தார்கள். காரணம் அவரது படங்களில் ஒரு முழுமையும் நிறைவும் இருக்கும். சரியா சொல்வதென்றால் செய்வன திருந்த செய் என்ற சொல்லுக்கு ஏற்று செய்வார். எந்த ஒரு படத்திலிலும் அவர் இந்த சொதப்பு சொதப்பியது இல்லை.

அது போல தான் கமலும், எடுக்கும் எல்லா படங்களிலும் ஒரு நிறைவு இருக்கும். அந்த படங்களை மக்கள் முழுமையாக எற்றும் கொள்கிறார்கள். என்ன எந்த படத்தின் மொழியாக்கம் என்று குழந்தைகளுக்கு கூட தெரிந்து இருந்தும் ஆமாம் என்றும் சொல்ல மாட்டார் இல்லை என்றும் மறுக்க மாட்டார். அதை விடுத்து ஏன்டா விமர்சனம் செய்கிறீர்கள் என்று எரிந்து விழுந்தது இல்லை. அந்த மனம் உங்களுக்கு இல்லாமல் போனது வருத்தமே.

விமர்சனம் செய்ய உங்களை போல் திரை கலை தெரிந்து இருக்கனும் என்று அவசியம் இல்லை. நன்றாக இருக்கிறது இல்லை, மற்றும் எந்த படத்தின் சாயல் என்று சொல்ல தெரிந்தால் போதும். அதற்காக விமர்சனம் செய்பவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக மட்டமாக நீங்கள் பேசி சீண்டுவதால் தான் வாங்கி கட்டிக்கொள்கிறீர்கள்.

 நானும் கூடத்தான் உங்களை விமர்சனம் செய்து இருக்கிறேன் ஆகவே தான் பொதுபடையாக சொன்ன உங்கள் கருத்திற்கு எனது பதில். எங்கே நான் எழுதிய விமர்சனங்களுக்கு பதில் கொடுங்களேன் பார்ப்போம் உங்களால் முடிந்தால். எனது விமர்சனங்கள் உண்மை என்று உங்களுக்கும் எனக்கும் நன்றாக தெரியும். அதை அப்படியே விட்டு விட்டு அடுத்த வேலைகளை கவனியுங்கள்.

மற்றவர்களை போல் உங்கள் படத்திலும் ஒரு நிறைவு இருக்கும், அதை தொடருங்கள். அதைவிடுத்து இப்படி திட்டுவது பேசுவதும் உங்களுக்கு அழகு இல்லை, இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.........

Wednesday, December 3, 2014

காவியத்தலைவன் - Amadeus Mozart - பாலசந்தர் - அனந்து - மற்றும் வசந்த பாலன்

அதிகம் பீடிகை இல்லாமல் சொல்வதென்றால் காவியத்தலைவன் அமென்டுயுசு மொசார்டு (Amadeus Mozart)  http://www.imdb.com/title/tt0086879/ படத்தின் தமிழாக்கம் என்று சொல்வதை விட கம்பனாக்கம் என்று சொல்லாம்.

இந்த ஆங்கிலபடத்தின் கதையும் திரைக்கதையும் அப்படி ஒரு அருமையாக பொருத்தமாக அமைத்து இருக்கும் மூலத்தில்.

ஆங்கிலபடத்திற்கு இசை மொசார்டு தான், அவ்வளவு அருமையாக எடுத்து கையாண்டு இருப்பார்கள் காட்சிகளுக்கு ஏற்ப.

மொசார்டின் வாழ்க்கை வரலாறை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் படம் இந்த ஆங்கிலப்படம்.

இந்த ஆங்கிலபடத்தின் பாதிப்பில் இருந்து மீளாது இருந்த பாலசந்தரும் அனந்தும் இணைந்து சிந்து பைரவி என்று தமிழில் முதலாவதாக எடுத்தார்கள் அதே கதை, திரைகதை என்ன கர்னாடக சங்கீத பாடகன் என்று மட்டும் மாற்றினார்கள்.

மேலும் மொசார்டின் ஏழ்மைக்கு காரணம் அவரது கர்வம் என்று ஆங்கிலபடத்தில் சொன்னாலும் மற்றவர்களின் பொறாமை தான் உண்மையான காரணம். அரசனின் சொந்தகாரிக்கு இசை சொல்லிக்கொடுக்கும் வாய்பை பொய் சொல்லி கிடைக்க விடாமல் செய்ததும்.

ஒரு மிக கொடிய நய வஞ்சகனை நல்லவன் என்று நம்பி அவனிடமே தனது பலவீனங்களையும் மற்றும் எதிர்கால திட்டங்களையும் சொல்லி ஏமாற்றம் கண்டதும் தான் உண்மையான காரணம்.

இந்த காரணங்களை எல்லாம் சொன்னால் தமிழில் இரசிக்க மாட்டார்கள் என்று தெரிந்து மொசார்டின் பலவீனங்களில் ஒன்றான பெண்களை மட்டும் எடுத்துக்கொண்டு கையாண்டு திரைகதையை அமைத்து சிந்து பைரவி என்று எடுத்து இருப்பார்கள்.

 மொசார்டு தனது பொருளாதார நிலையை சரி செய்ய மாணவர்களை தேடும் காலங்களில் ஒரு பெரும் பணக்காரன் தனது நாயிக்கு பிடிக்கிறது உனது இசை எங்கே இன்னும் கொஞ்சம் வாசி/பாடு என்று கேட்கும் சமயம் கோபித்துக்கொண்டு சொன்றுவிட்டு பிறகு அங்கேயே போய் உங்கள் நாய்களுக்காக பாடுகிறேன் பணம் தர முடியுமா என்று கேட்பார் மொசார்டு. இதை தான் சிந்து பைரவியில் யாருடன் பழகமாட்டேன் என்று மறுத்து செல்லும் அந்த பாடகன் கடைசியில் தண்ணி தொட்டி தேடி வந்த கன்றுகுட்டி நான் என்று பாடி சாராயம் வாங்கி குடிப்பதாத படம் எடுத்து இருப்பார்கள்.

இப்படி எல்லாம் எழுதி படம் எடுத்தும் ஆறாத அனந்து இன்னும் ஒரு கோணமாக சிகரம் என்று அதே மொசார்டு படத்தை எடுத்தும் இருந்தார். என்ன சிகரத்தில் மொசார்ட்டின் தனிபட்ட வாழ்கை சரியாக அமையவில்லை என்றதையும் நம்பியவன் ஏமாற்றிவிட்டான் என்றதையும் மட்டும் கொண்டு கதையமைத்து எடுத்து இருந்தார் அனந்து.

இதோ இப்போது வபாலன் செமோ கூட்டணி.

இந்த கூட்டணி இதற்கு முன்னே அங்காடி தெரு - The Perfect Crimeஎன்ற படத்தை அங்காடி தெருவாக எடுத்ததை புகழ்ந்து எழுதி இருந்தேன். ஆனால் இந்த படத்தை அப்படி புகழ முடியவில்லை.

காரணம், கதையிலும் திரைகதையிலும் அவ்வளவு தோய்வுகள்.

மொசார்ட்டு படத்தில் வில்லன் தான் நடந்தது என்ன என்று கதையை ஆரம்பத்தில் இருந்து சொல்வான். அது போலே இதிலும் பிருத்திவி சொல்வதாக அமைத்துக்கொண்டார்கள் சரி. எப்படி போகிறது என்று பார்ப்போம் என்று பார்த்தால் எல்லா இடத்திலும் தொக்கி தொக்கி நிற்கிறது.

இது வரையில் காலம் காலமாக கூத்து நடத்தும் சாமி எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே நடத்திவரும் அவருக்கு புதிதாக செய்த்த சில மாற்றங்கள் வந்ததும் அது தான் சரி என்று சொன்னாராம். 

இது ஆங்கிலத்தில் வில்லனை மன நலமருத்துவ மனையில் பார்பதற்காக வந்து இருக்கும் பாதரியிடம் வில்லன் தான் எழுதிய இசையை வாசித்து காட்டி இது எப்படி இருக்கு என்று கேட்பான், அதற்கு பாதரியார் எப்பவும் கேட்டது போல் இல்லையே என்று சொல்லும் போது மொசார்டின் ஒரு துள்ளல் இசையை வாசித்து இது எப்படி இருக்கிறது என்பார். உடனே அந்த பாதரியார் அட இது உன்னுடைய இசையா என்ன அற்புதமாகவும் குதுகலமாகவும் இருக்கிறது என்பார். அதை பார்த்ததும் இறுகி போன முகத்துடன் அது மொசார்ட்டின் இசை என்று சொல்வதை தான் சாமி இப்படி சொல்லிடிச்சு என்று மாற்றிக்கொடுத்துள்ளார்கள்.

இசையை ஏன் இரகுமானிடம் கொடுத்துள்ளார்கள் என்று உங்களுக்கு இப்போது புரிந்து இருக்கும். மொசார்டில் வருவது போல் நல்ல இசையை கூத்திசையாக கொடுக்கும் கட்டாயத்தில் இரகுமான்.

அடிக்கடி இருவர் படத்தில் வரும் பூங்கொடியின் புன்னகை பாடலின் வாசம் பாடல் மற்றும் பின்னணியிலும் வருகிறது தவிர்த்து இருக்கலாம்.

இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கிறது ஆனால் இருவர் படத்தில் பாடலை திரும்ப திரும்ப கேட்க வைத்ததை போல் அமையவில்லை.

மொசார்டை அவரது அப்பாவின் முகமுடியிடன் வந்து பயம் கொள்ள செய்வதையும், அப்பா இறந்த பிறகும் இறப்பின் சோகத்தை சொல்லும் இசை வடிவத்தில் சோகத்தை சொல்லி பிழியும் காட்சி களையும் சுதந்திர போராட்ட காட்சிகளாக மாற்றிவிட்டார்கள்.

மன்னர் தடை செய்த ஆட்டங்களை கொண்டு நாடகம் அமைப்பதும், பின்னர் மன்னரே அவைகள் இருக்கட்டுமே என்று சொல்லும் நிகழ்வுகளை மொத்தமாக சுதந்திர போராட்டமாக மாற்றி எழுதியுள்ளார்கள் இதிலே.

வடிவு கதாபாத்திரத்தை ஆங்கிலத்தில் வில்லன் மொசார்டின் மனைவியுடன் செய்யும் வில்ல தனத்தை அப்படியே தமிழுக்கு காதல் என்று மாற்றி விட்டார்கள். காதலுக்கு அந்த பாத்திரம் சொல்லும் காரணங்கள் அவ்வளவு அழுத்தமாக இல்லாமல் போனதற்கு புகுத்த வேண்டும் என்று புகுத்தியது தான் காரணம்.

நான் தான் மொசார்டை கொன்றேன் என்று புலம்பும் வில்லனை நிகழ்வில் செய்யவைத்து இருக்கிறார்கள் தமிழில்.

வபாலனும் செமோ இன்னமும் அழுத்தமாக கதையை அமைத்து இருக்கலாம், கதை அமைத்து இருத்தால் திரைகதையும் அமைந்து இருக்கும் அங்காடி தெரு போல். அடுத்த படைபில் கவனம் அதிகம் தேவை. இவ்வளவு இருந்தும் படம் ஒரு நிறைவு இல்லாமல் இருக்கிறது.

Monday, November 24, 2014

அமெரிக்காவின் காமராசரர்கள்

காலை மணி 6:00 வெளியிலோ குளிர் -10 C,  இதில் மணிக்கு 20 மைல் வேகத்தில் காற்று வேறு. 6:30க்கு அங்கு இருப்பதாக பேச்சு, இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும்.

சரியாக 6:40க்கு மூவருமாக கிளம்பினோம். மொத்தம் 71 மாணவர்களை ஏற்றி செல்லும் வண்டியில் சென்றோம். டெபியும், க்காபியும் தான் வழக்கமாக செல்வார்கள் இந்த வேலைக்கு, அன்றைக்கு ஆர்வமாக கேட்டதால் உடன் அழைத்து சென்றார்கள். நினைத்த உடன் கூட செல்ல எல்லாம் அனுமதி இல்லை. முறையாக அனுமதி பெற்ற பிறது தான் இன்றைக்கு...

வானம் விடிந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வர துவங்கி இருந்தது. அந்த தெரு முனையில் வந்து நின்றதும் வீட்டின் கதவை திறந்து வயதான ஒருவருடன் அந்த சிறுவன் வண்டியை நோக்கி வருகிறான். முதலில் பார்க்க ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. பிறகு வண்டிக்கு வந்து உள்ளே ஏறும் போது தான் வித்தியாசம் தெரிந்தது.

இரண்டு நொடிக்கு மேல் பார்க்க முடியமால் தலையை எதிர்திசையில் பின்னுக்கு செல்லும் மொட்டை மரங்களில் புதைத்து உலகத்தின் விந்தைகளை மனதில் அசைபோட்டபடி செல்ல....

அடுத்த நிறுத்தத்தில் ஒரு சிறுமி அதே நிலையில் பார்க்க இன்னமும் கொடுமையாக இருந்தது. உள்ளே வரும் ஒரு இருவரையும் க்காபி இருக்கையில் அமர்த்தி இருக்கையுடன் இணைத்து கட்டிவிட்டு என்னை பார்த்து ஒரு புன்னகைதார்.

இந்த சிறுமியை பார்த்தவுடன் மனது இருப்பு கொள்ளமுடியவில்லை. இறங்கி ஓடிவிடலாம் போல் இருந்தது, இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் இருக்கையில் புதைந்த வண்ணம் மனதுக்குள் இருக்கும் நடுக்கம் வெளியில் தெரியாமல் இருக்க. டெபி மெல்ல துவங்கினார், என்ன எப்படி இருக்கிறது என்று.

விடை சொல்ல தெரியாமல் நெளிவதை பார்த்தவுடன், மிகவும் அழகாக பேச்சை மாற்றினார் டெபி. இதோ பார் இந்த தெரு முனையில் மாலையில் மிகவும் கூட்டமாக இருக்கும் என்றும் அங்கே கன்றுகுட்டி கணக்காக காலை நடைக்கு அழைத்து சென்ற நாய் என்று அவர் எவ்வளவு கூறியும் எனக்கு மனமோ அந்த இறுகிய நினைவில் இருந்து மீளாமல் இருந்ததை கவனித்த டெபி அதற்கு பிறகும் எதுவும் பேசாமல் அவரது வேலையில் மூழ்கினார்.

ஒன்று இரண்டு என்று அங்காங்கே என்று இருந்து வந்தவர்கள் மொத்தம்15 தொட்டது அப்போது க்காபி சொன்னார் இந்த நிறுத்தத்தில் வருபவன் உட்காரும் இடத்தில் தான் நீ உட்கார்ந்து இருக்கிறாய் அவன் வந்ததும் அவனை ஓரத்தில் உட்காரவைத்து நீயும் அங்கேயே உட்காந்துகொள் என்றார். எனக்கோ மனதுக்குள் பதற்றம் முழு அளவில் தொற்றிக்கொண்டது.........

அவனது இடமும் வந்தது அவனும் வந்தான், அருகில் வந்தது தான் தாமதம் எனக்கு மயக்கம் வராத குறைதான். இன்னமும் எவ்வளவு நேரம் இப்படி உட்கார்ந்து இருக்கவேண்டும் என்று கவலையாக இருக்கும் என்னை பார்த்து டெபி இன்னும் கொஞ்ச நேரம் தான் உட்கார்ந்து இரு என்றார்.

மனதை அமைதிப்படுத்திக்கொண்டு உட்கார்ந்து இருக்கையில் வந்தது அந்த பள்ளி. அந்த பள்ளியை பார்த்தது சுற்றும் முற்றும் பார்த்தால் மற்ற மாணவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்க இந்த மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் எப்படி அங்கே படிப்பார்கள் என்ற கேள்வி மனதில் எழ, வண்டியின் அருகே வந்தார் அந்த மாணவர்களின் ஆசிரியர். முகம் நிறைந்த புன்னகையுடன் வந்து அந்த மாணவர்களில் ஒரு பகுதியை அழைத்து கொண்டு செல்ல வண்டி மறுபடியும் அடுத்த பள்ளியை நோக்கி ஓட்ட தொடங்கினார் டெபி.

வண்டி முன்னே செல்ல செல்ல மனது இந்த குழந்தைகளின் நிலைகளை நினைத்து வருத்தத்தில்லும் வேதணையிலும் இறுக துவங்கியது.

மணிரத்தினத்தின் அஞ்சலியில் பார்த்த அஞ்சலியை போல் இந்த குழந்தைகள். வண்டிக்கு வரும் போது அஞ்சலி நடந்து வருவதை போல நடந்து வந்ததும். வண்டிக்குள் வந்ததும் பள்ளி வரும் வரையில் வெளியில் வேடிக்கை கூட பார்க்க தெரியாமல் உடன் பையில் கொண்டு வந்து இருக்கும் பொம்மைகளை வெளியில் எடுத்து அவைகளுடன் விளையாடுவதும், சிலரோ காலை தூக்கம் கூட கலையாமல் வண்டியில் வந்து தொடர்வதும் என்று இருந்ததையும் ஒப்பிட்டு பார்த்த வண்ணமாக இருந்தது.

அடுத்த பள்ளியில் அனைவரும் இறங்க வண்டி மறுபடியும் துவங்கிய இடத்தை நோக்கி சென்றது, இறங்கி அந்த இருவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அங்கு இருந்து கிளம்பினேன்.

மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்தது, இதுவே இந்தியாவாக இருந்து இருந்தால் என்ன என்ன எல்லாம் நடந்து இருக்கும் என்று..........

என்ன நடந்து இருக்கும் 71 மாணவர்கள் தான் செல்லலாம் என்று சொன்ன அந்த வண்டியில் குறைந்து ஒரு 150 மாணவர்களை வெற்றிலை கட்டு போல் அடுக்கி இருப்பர்கள் அதுமட்டுமா. இங்கே இரண்டு பள்ளிகளுக்கு என்று சென்ற வண்டி குறைந்தது ஒரு 20 பள்ளிகளுக்கு வேண்டிய மாணவர்களையாவது எற்றிகொண்டு சென்று இருக்கும்.

இதுமட்டுமா க்காபி போன்று பார்த்துக்கொள்ள வருபவரின் வசவுகளை நம்மால் எல்லாம் காதுகொடுத்து கேட்க முடியுமா என்ன.

இவை எல்லாம் பரவாயில்லை, இவர்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளி வைத்து அந்த பக்கம் செல்வதே பாவம் என்று மற்றவர்கள் எல்லாம் பதுங்கும் காட்சி எல்லாம் சாதாரணமாக பார்க்க முடிந்து இருக்கும்.

இங்கே அரசாங்கமே நடத்தும் இந்த விதமான பள்ளிகளை அங்கே இந்தியாவில் தனியார் பள்ளிகளாகவும், குறைக்கு ஏற்றார்போல் பணத்தை அந்தந்த பெற்றோரிடம் கறந்து இருப்பர்கள்.

அமெரிக்காவை பொருத்தவரை பிறந்த குழந்தைகள் அனைவரும் அரசாங்கத்தின் தத்துபிள்ளைகள் 18வயது ஆகும் வரை.

அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது பெற்றோர்களின் கடமை, அப்படி பெற்றோர்களால் முடியவில்லை என்றால் அரசாங்கம் அந்த பொறுப்பை எடுத்துக்கொள்ளும்.

காலை உணவு முதல் இப்படி சிறப்பு தேவைகள் உட்பட அனைத்தையும் அழகாக திட்டமிட்டு முடிந்தவரையில் எந்த குறையும் இல்லாமல் அழகாக நடத்தியும் வருகிறது. அதுவும் அம்மா அப்பா படிக்க வைக்கவோ அல்லது நல்லா பார்த்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்றால், அவர்களுக்கு என்று இல்லம் அமைத்து அவர்களுக்கும் என்று எந்த ஒரு குறையும் இல்லாமல் பார்த்துகொள்வதை பார்க்கும் போது, காங்கிரசு கட்சி சொல்லும் மீண்டும் காமராசர் ஆட்சி என்று சொல்வதில் உள்ள பொருள் அருமையாக விளங்குகிறது.

ஒரு காமராசர் இல்லை ஆயிரம் காமராசர்கள் சேர்ந்து கட்டமைத்த இந்த அமெரிக்க இளைய மாணவ சமுதாயத்தை பார்க்கும் போது, இந்தியா இது போல் வல்லரசாக எப்போது தான் மாறுமோ என்ற ஏக்கம் மனதில் வந்து சேர்வதை தவிர்கமுடியவில்லை........

Friday, November 21, 2014

ஒரு ஊர்ல இரண்டு ராசாவும் Edge of Darknessவும்

http://www.rottentomatoes.com/m/edge_of_darkness/

மேலோட்டமாக பார்த்தால் இந்த படம் புதிதாக முளைக்கும் முதலளிகளின் பேராசையை காட்டிக்கொடுக்கும் படம் போல தெரிந்தாலும். இது ஆங்கிலப்படம் தி எட்சு ஆப் தி டார்க்னசு
படத்தை அப்படியே தமிழ் மசாலா தூவி எடுத்துள்ளார்கள்.

என்ன தந்தையும் மகளுமாக இருக்கும் அந்த உறவை இரண்டு ஆட்களாகவும் இன்னமும் இத்தியாதி இத்தியாதி என்று மாற்றம் மட்டும் கொடுத்துள்ளார்கள்.

மற்றபடி இவர்கள் தேடி செல்லும் வழக்கறிஞர் ஏமாற்றுவதில் இருந்து சம்மந்தபட்ட  அனைவரையும் தீர்த்துகட்டும் காட்சிகள்வரை அப்படியே எடுத்துள்ளார்கள். என்ன கடைசியில் வில்லனை கொன்றுவிட்டு தந்தையும் மறைவார், அதை மட்டும் மாற்றி திருந்தியதாக கொடுத்துள்ளார்கள் மற்றபடு மூலத்திற்கும் இதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.


இளையராசா பற்றிய நெல்சன் சேவியர் பதிவுக்கு எனது பதில்

ஏராளமான முறை விளக்கியது போல் இராசாவின் இசை கலப்பிசையாக இருக்கும் அல்லது நமது இசையாக இருக்கும். அந்த எல்லையை தாண்டி திரைபாடலுக்குள் அதிகம் இரசா புகுத்தவில்லை என்றது தான் உண்மை.

ஆனால் இரகுமானின் இசை இதே பாணியில் பயணித்த வரையில் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் விதமாகத்தான் இருந்தது. ஆனால் சமீபத்தில் இரகுமானை பார்த்து குட்டி குட்டி இசையமைப்பாளர்கள் எல்லாம் போடும் போடை பார்த்த இரகுமானும் தனக்கும் இதைவிட அதிகம் தெரியும் என்று காட்ட அப்படியே மேற்கத்திய இசையை தமிழ் வார்த்தைகளில் கொடுக்க துவங்கியதில் இருந்து இரகுமானின் பாடல்கள் மனதில் பதிவது இல்லை என்றதே உண்மை.

விச்சை தொக போட்டிகளிலும் கூட இரகுமானின் சமீபத்திய பாடல்கள் வருவது இல்லை என்றதையும் நம்மால் கானமுடியும்.

காரணம் மேற்கத்திய இசை தான் வேண்டும் என்றால் காட்டுவதற்கு இன்றைகு நிறைய தொக இருக்கின்றது. அவைகளை பார்த்து பழக்கப்பட்டவர்கள் தாம் இரகுமானின் அனேக இரசிகர்கள். அவர்களில் அதிகமானோர் தாங்கள் மிகவும் அறிவும் திறனும் மிக்கவர்கள் என்று காட்டுவதற்காக ஆங்கில இதழ்கள் படிப்பதில் இருந்து ஒரு மேற்கத்தைய வாடையும் வாழ்பவர்கள். அவர்களுக்காக இசையமைபதை குறைத்துக்கொண்டு சாமனியனுக்காக இரகுமான் இசையமைப்பாரானால் மீண்டும் மனதுக்குள் நிற்கும் பாடல்கள் வரும் என்றதில் சந்தேகம் இல்லை.

இரசிகர்களை ஏமாற்றுகிறாரா அல்லது இசையை வாரி வழங்குகிறாரா இரகுமான் என்று பார்ப்போம். பூங்காற்றிலே போன்ற பாடல்கள் மீண்டும் வருமா என்று காத்திருந்து பார்ப்போம்.

Thursday, November 20, 2014

மோடி வித்தை காட்டும் இராசபட்சேவும் சுசாமியும்

செயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து தூக்கு தண்டனையை நிறுத்தினாரோ அன்றில் இருந்து என்ன செய்தால் தமிழகத்தில் பலமாக காலூன்ற முடியும் என்று எந்த எந்த வழி என்று சளித்து எடுத்து ஒன்று ஒன்றாக செயல் படுத்துகிறது போலும் மோடி அரசு.

வழக்கம் போல் எல்லா சதி வேலைகளையும் காட்டிக்கொடுக்கும் வேலைகளையும் அழகாக செயல்படுத்தும் சுசாமி இந்த செயலிலும் அழகாக செயலாற்றியுள்ளார்.

அப்படி ஒரு தீர்மானத்தை செயலலிதா கொண்டு வந்தர்காக செறைக்கு செல்ல வேண்டி வந்ததும். பிணையில் வெளியில் வந்ததும் மீனவர்களை பிடித்து வைக்க சொல்லிவிட்டு அதிமுக,செயலலிதா எதுவும் அதிரடியாக செய்கிறார்களா என்று நோட்டம் விட்ட பிறகு தனது இரகசிய பேரத்தை மோடி அரசு சுசா வழியா நிறைவேற்றியுள்ளது எத்தனை மக்களுக்கு புரிய போகிறது.

ஒரு வேளை செயலலிதா ஏதேனும் அதிரடியாக செய்து இருந்தால் அல்பமாக ஒரு காரணத்தை சொல்லி அவரின் பிணையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதாக திட்டமாக இருந்து இருக்கும் போலும். தற்கொலை செய்துகொள்ள போகின்றேன் என்று மிரட்டும் விடலைகளை போலும் தேள் கொட்டிய திருடனாகவும் செயலலிதாவின் மௌனத்தை எதிர்கொள்ள முடியாமல் என்னவோ மோடி கேட்டுக்கொண்டாராம் சுசா சட்டங்களை எடுத்து சொன்னாராம் இராசபட்சே விட்டு விடுங்கள் என்று நீதிமன்றம் சொன்ன தீர்பை எடுத்து குப்பையில் வீசினாராம்.

பொய் வழக்கு என்று சொல்லாமல் நாடு இராசபட்சேக்கு கடமைபட்டிருக்கிறது என்று சுசா சொல்கிறார். நல்லவேளை இராமருக்கு கோவில் கட்டுவது போல் இராசபட்சேக்கு கோவில் கட்டவேண்டும் என்றும் அதற்கு ஒரு தேர் அணிவகுப்பு தொடங்குவதாக மோடி அரசு சார்பாக சுசா அறிவிப்பதாக செய்தி வெளியிடாமல் இருப்பது ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.

மோடி மிகவும் பலமான அரசியல் தலைவர் என்று காட்ட மேலும் தமிழக மீனவர்கள் மற்றும் மற்ற வேலைகளில் இருக்கும் தமிழர்களை சுமத்ரா, மியான்மர், பிலிபைன்சு, மொரிசியசு என்று குட்டி குட்டி நாடுகளில் இது போல பொய் வழக்குகளில் தூக்கு தண்டனை என்று சொல்வதும். அவரின் சொந்த காரர்கள் போராடுவதும் சுசா என்ன செய்யலாம் என்றும் சொல்வதும் மோடி அவர்களை விடுவிக்குமாறு சொல்லவும் உடனே அவர்களும் விடுவதும் இனி வாடிக்கயாகிவரும். இதை எல்லாம் பார்க்கும் மக்கள் மோடி கட்சி தான் பலம் வார்ய்ந்த கட்சி என்று நம்பி தமிழகத்தில் மோடி கட்சியின் அரசு அமையூமாறு மன நிலைக்கு வரும் என்ற நம்பிக்கை சுசாக்கும் அவரது வகையராவுக்கும்.

திருத்தி அமைக்கும் வரலாறு பாட புத்தகங்களில் மோடி எப்படி பலம் வாய்ந்தவராக இருந்தார் என்று இந்த சம்பவங்களை கொண்டு விவரிப்புகள் வரும். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த அரசு ஒரு துரும்பை கூட தூக்கு வைக்கவில்லை என்றும் உண்மையான அக்கறை கொண்டவர்களும் பலம் உள்ள்வர்கள் அவர்களே என்றும் எழுதுவார்கள்.

இந்த பிழைப்பு பிழைப்பதற்கு பதில் அந்த தொழிலை சுசாவும் மோடியும் அவரது ஆலோசகர்களும் செய்யலாம். இலங்கை அடுத்த பாக்கிட்தானம் ஆகிறது என்று வெளிப்படையாக தம்பட்டம் அடித்திருக்கிறது. யார் யார் எல்லாம் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்காக இலங்கையின் இராணுவம் முதல் நீதிமன்றம் வரை கூலி வேலை பார்கும் என்று அழகாக காட்டி சந்தையை திறந்துள்ளது இலங்கை.

மோடிக்கும் அவரது சாகாக்களும் உண்மையிலே அரசியல் பலம் இருப்பதான நினைத்தால் செயலலிதா கொண்டுவந்த தீர்மானம் போல் ஏதேனும் செய்யட்டும். அதைவிடுத்து ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று அப்பாவி மக்களின் வாழ்கையை பலியிடுவதை நிறுத்திகொள்ளவும். இத்த மானம் இல்லா சுசா இந்த அரசியல் பொறுக்கிதனத்தை எப்போது தான் நிறுத்துவாரோ, தாங்க முடியல அவரது கொசுத்தொல்லை...................யாராவது கொசு மருத்து இருந்தால் கொஞ்சம் உதவுங்களேன்.

Thursday, October 23, 2014

அன்னையின் நினைவாக







எங்கு இருந்தாலும் உன்னையும் நான் மறப்பதற்கு இல்லை, நீயும் என்னை மறப்பதற்கும் இல்லை. நீ இன்று என்னோடு இல்லை நானும் உன்னோடு இல்லை. நீ இல்லாத நினைவும் என்னோடு இல்லை. எங்கு இருந்து நீ வாழ்த்துகிறாயோ தெரியாது ஆனால் என்ன என்று வாழ்த்துவாய் என்று எனக்கு நன்றாக தெரியும் என்னை பெற்றவளே. அமைதியாய் நீ வாழும் இடம் தேடி நான் வரும் காலம் வரை உன் நினைவுகளுடன் காத்து இருப்பேன்.

Sunday, February 16, 2014

இளையராசாவுக்கு இசை கற்றுக்கொடுக்க வரும் அமுதவன்

இவரின் இளையராசா பற்றிய விமர்சனங்களை படித்தோமானால் அதில் தெரித்து வழியும் வயிற்றெறிச்சல் நன்றாக தெரியும்.

உதாரணமாக கீழே உள்ளவைகளை காணலாம்.

"
அடுத்து வருபவர்களும், புதிதாக வருபவர்களும் - தங்களுக்கென்று ஏதாவது வித்தியாசம் செய்து காட்டவேண்டாமா? இளையராஜா என்ன செய்கிறார் இந்த இடையிசையில் ‘முழுமை பெற்ற ஒரு இசைத்துணுக்கு’ ஒலிப்பதை மாற்ற எண்ணி சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு வயலின் கீற்று, ஒரு கிடாரின் சிறு இசை…இன்னமும் வெவ்வேறு வாத்தியங்களில் சின்னச்சின்ன இசை இழைகள் என்று கோர்த்து வாசிக்கவைத்து ‘எப்படியோ ஒரு வழியாக’ சரணத்துக்குக் கூட்டி வருகிறார். மறுபடி அடுத்த சரணத்தில் இதையே இன்னும் அங்கே கொஞ்சம் மாற்றி இங்கே கொஞ்சம் மாற்றி என்று வித்தைகள் செய்து பாடலை முடிக்கிறார்.
ரிசல்ட் என்னவென்றால் கேட்பதற்கு பழைய வழக்கமான பாடல்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்ட பாடல்போல் ஒலிக்கிறது. தோன்றுகிறது.
பின்னர் இதே பாணியைத் தம்முடைய பாணியாகவும் அவர் ஆக்கிக்கொண்டுவிட்டார்.
பாடல் வித்தியாசமாக ஒலிக்கிறது சரி; பிரச்சினை என்னவென்றால், இந்த இசைத்துணுக்குகள் கோர்வையாக இல்லாத காரணத்தினால் எந்த வாத்தியக்காரர்களாலும் தனித்தனி இழைகளாக வாசிக்கப்பட்ட இந்த இசைத்துணுக்குகளை நினைவில் வைத்துக்கொண்டு வாசிக்கமுடியாது.
ஏன் இளையராஜாவுக்கே அந்த இசைத் துணுக்குகள் ஞாபகமிருக்க வாய்ப்புகள் இல்லை. அவர் ‘எழுதிக்கொடுத்துவிடுகிறார்’ என்கிறார்களே அது இதைத்தான்.
இதனை ‘எழுதிக்கொடுக்காமல்’ அந்தக் கடவுளே வந்தாலும் வாசிக்கமுடியாது. அதனால்தான் இளையராஜாவின் ஆர்க்கெஸ்ட்ரா நடைபெற வேண்டுமென்றால் மிக அதிகமான பயிற்சிகள் நடைபெற வேண்டியுள்ளது. நிறைய ஒத்திகை திரும்பத் திரும்ப பார்க்கவேண்டியுள்ளது.
ரிகர்சல்……………மீண்டும் மீண்டும் ரிகர்சல் என்பார்கள்!"
 

மொத்தத்தில் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள், இராசாவின் பாடலில் ஒரு ஓட்டம் இல்லாமல் அங்கே இங்கே என்று தட்டு தடுமாறி அடுத்த சரணத்திற்கு வருகிறது என்று மனதார பொய் சொல்கிறார்.

இராசாவின் இரசிகர்களுக்கு தெரியும் அவரது இசையில் படத்தின் பின்னணி இசையை கூட மனப்பாடமாக அறிய படுத்தியவர் இராசா.

உதாரணத்திற்கு சொல்வதென்றால் நகுருதனா திரனன என்று எத்தனை படங்களில் இலவகமாக அமைத்துவைத்துள்ளார் இராசா. எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் கொடுத்த இசை தலைமுறைகளையும் தாண்டி இந்த தலைமுறைகளும் இந்த துணுக்கு இசையை கேட்டதும் அதன் சாரம் என்ன என்று நொடியில் சிரிக்கும் வண்ணமாக இருப்பதை இவர் பார்த்திருக்க மாட்டார் போலும்.

எதோ கங்கை அமரன் சொன்னார் என்று அவரது வார்த்தைகளால் இராசாவை குறைசொல்வதில் இவருக்கு ஒரு பெருமை பாவம்.

எந்த எந்த பாடல்களை எப்படி தழுவினார்கள் என்று கங்கை அமரன் இல்லை இராசாவே பெரிய பட்டியலை கொடுத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாது அவருடைய மிகவும் பிரபலமான பாடலை எப்படி எல்லாம் மாற்றி பாடலாம் என்று சமீபத்திய வெளி நாட்டு கச்சேரிகளில் விளக்கியும் காட்டியுள்ளார். வாய்பு கிடைச்சாசு இனி முடிந்த அளவுக்கு குத்தி கிழி என்று கொலைவெறியுடன் அவர் தாக்கிய பதிவு தான் இந்த பதிவு.

அமுதவனுக்கு மட்டும் அல்ல அவை போல நினைக்கும் மற்றவர்களுக்கும் சொல்லுவோம். நீங்கள் என்ன தான் சேற்றை வாரி இறைத்தாலும், இராசாவின் புகழ் மறைக்க முடியாக ஒன்று. அவர்களு நீங்களும் நாங்களும் விளம்பரம் ஓட்ட வேண்டியது இல்லை. அவரது படைபுகள் அவரை என்றைக்கும் அடையாளம் காட்டும்.

எங்களுக்கு இராசாவையும் தெரியும், மெல்லிசை மன்னரையும் தெரியும், கருப்பு வெள்ளை காலத்து பாடல்களில் இருந்து சமீபத்திய பாடல்கள் வரை தேடித்தேடி இரசிகின்றோம்.

இனிமேலாவது மெல்லிசை மன்னருக்கு இசைகற்றுக்கொடுப்பதை நிறுத்திவிட்டு வேறு எதாவது வேலை இருந்தால் பாருங்கள். வயிறு எரிந்து தீஞ்ச வாசனை தாங்கவில்லை ஆளைவிடுங்கப்பா................

Tuesday, January 14, 2014

இலே மிசரபா -- 2013ன் ஆசுகர் தட்டி செல்லுமா (Les Miserables)

இந்த படத்தின் மேல் அப்படி என்ன காதலோ இவர்களுக்கு. எத்தனை முறை எடுப்பார்கள் இந்த படத்தை, இதோ இன்னும் ஒரு வடிவம், நாட்டிய நாடகமாக.

இத்தன் முந்தைய வடிவத்திற்கும் இதற்கும் கதையிலும் சம்பவங்களிலும் சில மாறுதல்கள் மட்டுமே. என்ன அற்புதமாக வந்திருக்கிறது படம்.

பொதுவாக ஏற்கனவே பார்த்த ஒரு படத்தை மீண்டும் பார்க்கும் போது சலிப்பும் அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரிந்து இருப்பதால் என்ன என்று இருக்கும். ஆனால் இந்த படம் பார்க்கும் போது இவைகள் இரண்டும் வராமல் நம்மை படத்தின் கடைசி வரை மிகவும் கவனமாக நகர்த்தி செல்கிறார்கள் பட குழுவினர்கள்.

படத்தில் வசனம் வரும் இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அவ்வளவும் பாடல்களே, ஒன்று கூட சுமார் என்று சொல்லும் விதமாக இல்லை.

எனக்கு மிகவும் பிடித்தது Look Down இந்த பாடலே. பிரஞ்சு புரட்சி துவங்கும் காட்சியில் துவங்கும் இந்த பாடல், எத்தனை எத்தனை காட்சி இடங்களும் பாத்திரங்களும் என்று காட்சியும் பாடலும் போட்டி போட்டு கொள்ளும் பாடல் இது.

ஒரு கூட்டமே பாடும் இந்த பாடலில் அப்படியே அந்த காட்சி மனதில் பதிந்துவிடும், பாடல்களின் வரிகளில் இன்னும் எந்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே கருத்துகள் ஒலிப்பது ஆச்சரியமாக இருந்தது.

அந்த கால காட்சி அமைப்பும், பாடல்களும், ஒளிப்பதிவும் நிச்சயம் விருதுக்கு உரியவையே. எனக்கு கதையின் நாயகனாக நடித்தவரையும் வில்லனாக நடித்த இருவரையும் பாத்திரத்துடன் இணைத்து பார்க்க முடியவில்லை. இதன் முந்தைய வடிவத்தில் இவைகள் இரண்டும் அப்படி பாத்திரத்துடன் ஒன்றி இருந்தது, ஆக இவர்கள் கேட்டு இருப்பது போல் 8 விருதுகள் வாங்குவதற்கு இல்லை, மேலே சொன்ன 3 நிச்சயம்.

ஆனால் போட்டிக்கு என்று ஒசாமா பின்லேடனை கொன்றதை அடிப்படையாக கொண்ட படமும் போட்டியில் நிற்கிறது. இந்த வகையராவில் பார்த்தால் ஒசாமா படம் மிகவும் சாதாரண படம் தான், இருப்பினும் இதன் இயக்குனர் Hurt lockerக்கு வாங்கியது போல் இதற்கும் வாங்கினால் அச்சர்யபடுவற்கு இல்லை.

தூம் - 3ம் ஆங்கிலப்படம் The prestigeம்

தூம் படம் துவக்கத்தில் இருந்து கடைசிவரை இந்த ஆங்கிலப்படத்தை அப்படியே எடுத்து இஒருக்கிறார்கள். என்ன கதையில் ஒரு சின்ன மாற்றம் ஆங்கிலத்தில் கூடவே இருப்பவன் தான் எதிரி, இந்தியிலோ வங்கியை எதிரியாக்கியை எடுத்து உள்ளார்கள் அவ்வளவுதான்.

அரங்கங்களும் அப்படியே ஆங்கிலப்படத்தில் உள்ளது போல் அமைத்துள்ளதை பார்க்கமுடியும்.

ஆங்கிலத்தில் பல திருப்பங்களை கொண்டு திரைக்கதை அமைத்து இருப்பார்கள். இந்தியிலோ ஒரு சில திருப்பங்கள் மட்டுமே அதுவும் கடைசியில் இரகசியம் என்று அமீர் நினைத்ததை கத்ரீனா போட்டு உடைப்பது பரிதாபமான காட்சி.

Source Code என்று ஒரு படம், அதிலே சிக்காகோவிற்கு 10 மைல் தொலைவு வரை இருக்கும் தெற்கு இரயில் பாதையின் நிறுத்தங்களும் மற்றும் 3 அல்லது 4 அரங்குகள் மட்டும் கொண்டு மிகவும் அற்புதமாக படமாக்கி இருப்பார்கள்.

அது போல் மிகவும் கவனமாக மிக சொற்பமான வெளிபுர படபிடிப்புகளை மட்டும் கொண்டு மற்ற எல்லாம் உள்ளரங்கிலேயே அழகாக எடுத்து சிக்கனமாக முடித்து இருக்கிறார்கள்.

என்ன இந்திய திரையினருக்கே உள்ள இலக்கணத்தின் படி அமெரிக்க காவல் துறையும் இன்னமும் இருக்கும் மக்கள் எல்லாம் முட்டாள்கள் என்றும் அபிசேக்கு தான் உலகிலேயே அறிவு உள்ளவர் என்றும் கண்பிப்பது தான் சகிக்கவில்லை., வேடையாடு விளையாடிவில் இராகவனை காட்டுவது போல்.

சிக்காகோவில் கதை நடக்க திடீர் என்று ஊவர் அனையில் கடைசிக்காட்சிகள் வருவது ஏனோ என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

அது மட்டும் இல்லாது, சிக்காகோ என்று எந்த படத்தில் காட்டினாலும் அந்த மிச்சிகன் ஏரியில் இருந்து அழகான நீல வானமும் கடல் போல் காட்சியளிக்கும் அந்த ஏரியும் மட்டும் அல்ல எந்த ஒரு சிக்காகோ அடையாளத்தையும் காட்டாமல் விட்டதுவும் ஏனோ என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

இவ்வளவு இருந்தும் படம் வசூல் அள்ளுவது ஆச்சரியமாக இருக்கிறது.......