Monday, December 18, 2017

நிர்மலா சீத்தாரமன் தமிழக முதல்வர் - என்னமோ இல்லவே இல்லன்னீங்க

குசராத்து மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாசக ஆட்சியை பிடித்தது போல் தமிழகதிலும் ஆட்சியை பிடித்து இரும்பு பெண்மணி நிர்மலா சீத்தாராமனை தமிழக முதல்வராக உட்கார வைக்கும்.

போட்டியில் இருந்த 2 திராவிட கட்சிகளில் ஒன்றை விலைக்கு வாங்கியாச்சு, அதிமுக கட்சி உருப்பினர்கள் எல்லாம் பாசக கட்சியின் உருப்பினர்களாக மாறிவிட்டார்கள்.

இப்போது எல்லாம் அதிமுக தொண்டர்கள் எல்லாம் இப்படி தான் பேசிக்கொள்கிறார்கள்

என்ன அண்ணென்சி அந்த பேப்பரசி கொஞ்ச குட்ங்கசி, காலையிலசி கப்பிசி டீசி குடிச்சீங்களாசி

அந்த கால காங்கிரசுகாரர்கள் எல்லாம் காந்திகுல்லா போட்டுக்கொண்டு தாங்கள் காங்கிரசுகார்கள் என்று அறிவித்துக்கொண்டது போல் இனி அதிமுககாரர்கள் எல்லாம் தந்தி தொகாவில் தோன்றும் தொகுப்பாளர்கள் போல் ஒர் குளிர்கால உடையில் தான் இனி வேகாத வெயிலிலும் வலம் வருவார்கள்.

அதிமுக மக்கள் இனி காலைவேலைகளில் இனி நாசுடா தான் உண்பார்கள், மதியம் சாவலும் தாலும் உண்பார்கள். இரவில் ரோட்டியும் தாலுமக்கினியும் கூட டிக்கா கோழியோ அல்லது கோப்தா கோழியோ தான் உண்பார்கள். மறந்தும் இட்லி தோசையோ அல்லது சாதம் சாம்பார் என்று சொன்னாலோ உண்டாலோ தமிழகத்தில் உள்ள தனியார் மெக்காலே பள்ளிகளில் தமிழில் பேசினால் ஒரு வார்த்தைக்கு இவ்வளவு என்று வசூலிப்பார்கள், பிள்ளைகளின் பெற்றோர்களும் பெருமையாக அந்த தொகையை கட்டுவார்கள். அது போல இந்த செய்கைகளை கண்காணிக்க எச்சி இராசா மற்றும் தமிழிசை சார்பில் ஆட்கள் போடப்பட்டுள்ளது.

 நிர்மலா சீத்தாரமன் அரசுக்கு துணையாக இருந்து எல்லாம் செய்துகொடுக்கும் படி மைய அரசு எச்சி இராசாவையும் தமிழிசையையும் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அதிமுகவை வாங்கியதில் முக்கிய பங்கு வகித்ததை போல் இந்த மாற்ற முயற்சியிலும் பங்கு எடுத்துக்கொள்ளும்படி பணிக்கப்படுள்ளார்கள். எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான், பிறகு சங்கிகளின் சிங்கிகளே தைரியமான பங்கு எடுக்கும் போது இந்த கண்காணிப்பு எல்லாம் இருக்காது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் குசராத்து மாடலில் தமிழகத்தையும் உலகின் உச்சிக்கு கொண்டு செல்வதாக பாசக சபதம் பூண்டுள்ளது. மக்களே ஆதரவு கொடுத்து உதவுங்கள்.

பின் குறிப்பு, உங்கள் வீட்டில் உள்ள கழிவறைகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தமிழகத்தின் ஆளுனர் மாளிகையை நாடவும். அங்கே இந்த துறையை ஆய்வு செய்யவும் நிவாரணம் அளிக்கவும் மைய அரசின் சார்பாக ஆட்களை நியமித்து இருக்கிறார்கள். யாரையும் நம்புவதாக மைய அரசின் ஆளுனர் இல்லை அவரே நேரில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு உடனுக்குடன் நிவாரணம் வழங்குவார். இந்த பொன்னான வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.

1 comments:

')) said...

கழிப்பறை கட்டாமலே கட்டினத கணக்கு காட்டுற தமிழின அரசியல்வியாதிகளின் மத்தியில் கழிப்பறை கட்ட பணம் கொடுத்து அதை கட்டினதை பார்க்கப் போன உங்க அரசியல் தர்மம் அடகு வைக்கப்பட்டதாக ஒப்பாரி வைக்கும் நேரம் இதற்கு முன் கட்டாமலே கட்டினா கணக்கு காட்டி கட்ட வைத்த நிதியை ஆட்டய போட்ட பயலுகள கண்டுபிடிக்க உங்கள மாதிரி உள்ள புரட்சி போராளிகள் பொங்குவீர்களென்றால் நீங்களும் இந்த மக்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே.