Tuesday, April 28, 2015

ஓ காதல் கண்மணி - மணிரத்தினம் மறுபடியும் தனது பாணியில் The Notebook

The Notebook

இதற்கு முன்பு எழுதிய விமர்சனங்கள் போல் மணிரத்தினத்தின் படம் இது வரையில் அவராக உருவாக்கிய படங்களாகவே இல்லை போலும் இதோ ஓகே கண்மணியும் அந்த பட்டியலில் சேர்கிறது.

மணியின் படங்கள் என்றால் உயிர், அவரை போல் ஒருவருக்கும் படம் எடுக்க வராது என்று எல்லாம் இருக்கும் இரசிகர்கள் இந்துடன் விடைபெற்றுக்கொள்ளவும். உண்மையில் என்ன என்று தெரிந்துக்கொள்ள விரும்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்.

மேலோட்டமாக பார்த்தால் இந்த படத்துக்கும் அந்த படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று சாதாரணமாக கேட்பார்கள்.

மூலத்தின் கதையும் திரைகதையும் இது தான்

ஒரு வயதானவர் ஒரு வயதான பெண்ணிடம் தினமும் கதை படித்துக்காட்டுவார். அப்படி படிக்கப்படும் கதைகள் அந்த பெண்ணின் ஆழ்மனதில் பொதிந்துகிடக்கும் நினைவுகளை சில சந்தர்பங்களில் வெளிகொணரும். அப்படி நினைவு வரும் சமயங்களில் அந்த ஆண் தான், தான் மாய்ந்து மாய்ந்து காதலித்த காதலன் பிற்காலத்தில் தனகுள் வந்த நல பாதிப்பால் எல்லாமே மறந்து போய்விடுகிறது என்று அவளுக்கு தெரியவரும்.

அப்படி வரும் நினைவுகள் ஒரு சில நொடிகளுக்கு நீடிக்கலாம் இல்லை சில மணிகளுக்கு நீடிக்கலாம் எப்படி இருந்தாலும் இந்த நிலை இன்னமும் மோசம் அடையுமே தவிர முன்னேற்றம் எல்லாம் வராது என்று மருத்துவர்கள் சொல்லியும் அவளைவிட்டு வேறு எங்கேயும் செல்வதாக இல்லை என்று கடைசிவரை முயன்று கடைசியில் அவள் சொல்வாள் நம்மாள் சேர்ந்து தான் வாழமுடியவில்லை நம்காதல் நம்மை சேர்த்தாவது அழைத்துக்கொண்டு செல்லாதா என்று கேட்க்க காதலால் எல்லாம் முடியும் என்று செல்ல அடுத்த காட்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் கரம் பிடித்தபடி இறந்துகிடக்கும் காட்சியோடு படம் முடியும்.

சரி இதுக்கும் ஓ கே கண்மணிக்கும் என்ன சம்பந்தம்..............

அந்த ஆண் படிக்கும் கதை இவர்களது காதல் அரும்பியது முதல் முதியோர் இல்லத்தில் வந்து சேர்ந்தது முதல் வரும் கதையை அப்படியே துல்கரும், நித்தியாவுமாக மாற்றிவிட்டார் மணி.

இரண்டு வயதானவர்களை அப்படியே அப்படியே வேறு இருபாத்திரமாக மாற்றிவிட்டார்.

மூல படத்தை பார்க்கும் போது கதை சொல்பவர் வேறு யாரோ ஒருவருடைய கதையை தான் சொல்கிறார் என்று நமக்கும் தோன்றும் அதையே அப்படியே திரைகதையாக மாற்றிவிட்டார் அருமையாக.

அமெரிக்க மக்களின் வாழ்கையில் விடலை பருவத்தில் தனக்கு என்று ஒரு துணையை தேர்ந்து எடுத்து அவர்கள் இருப்பது ஒரு வாழ்வியல். அந்த இருவரும் கடைசிவரையில் சேர்ந்து இருந்தாலும் இருப்பார்கள், இல்லை இது விடலை காமம் மட்டுமே காதல் இல்லை என்று தெரியும் பட்சத்தில் வேறு வாழ்கையை தேடுவார்கள் இருபாலரும். இந்த தேடுதல் பல திருமணங்களுக்கும் பிறகும் தொடர்வது ஒரு சோகதை என்றாலும் இப்படி தான் இவர்களது வாழ்வியல் இருக்கிறது.

அப்படி ஒரு கோடை விடுமுறைக்கு நாயகி ஆலிசு ஊருக்கு வர, துல்கர் மும்பைக்கு செல்வது போல் அங்கே ஒரு கூட்டமான கோடைகால விழாவில் அவளை பார்கிறார் நோவா.

பார்த்ததும் மனதுக்குள் மணியடிக்க யார் என்று கேட்க தனது நண்பனின் தேழியின் தோழி என தெரியவர பேச்சு கொடுக்கிறான் நோவா, உன்னை யாருனே தெரியாது தெரிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை என்று சொல்ல, அவர்கள் செல்லும் பெரிய இராட்டினத்தில் தொங்கியபடி ஆலிசை தன்னிடம் வெளியில் வருமாறு கட்டாயபடுத்துகிறான் நோவா, துல்கர் முதலில் பார்க்கும் போது நித்தியா இரயிலில் விழப்போவதாக நடிப்பதை போல்.

பிறகு ஒரு நாள் ஒரு படம்பார்க்க போகும் போது மறுபடியும் இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள், படம் பார்க்கும் இடத்தில் நண்பன் கொஞ்சலில் இறங்க நோவாவும் ஆலிசும் தனியாக இடம் மாறுவார்கள் பேசிக்கொள்வார்கள் துல்கரும் நித்தியாவும் சர்ச்சில் இந்த மூலையில் இருந்து அந்த மூலைக்கு செல் பேசுவது போல்.

அடுத்த காட்சியில் இருந்து இருவருக்கும் ஒரு நெருக்கம் பிறக்கும், இரண்டு வாரங்களில் இருவரும் பிரிக்கமுடியாத காதலர்களாக மாறிவிடுவார்கள். ஊரில் எங்கே எல்லாம் சுத்தமுடியுமோ அங்கே எல்லாம் சுற்றுவார்கள் துல்கரும் நித்தியாவும் மும்பையை சுற்றுவது போல்.

பிறகு ஒரு நாள் கோடை முடியும் தருவாயில் தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக இருவரும் முடிவுகட்டி இடம் தேடும் போது ஒரு பாழடைந்த வீட்டை தேர்ந்து எடுப்பார்கள், துல்கரும் நித்தியாவும் இந்த படு மோசமான விடுதி தான் கிடைத்தது என்று தங்குவார்களே அந்த இடம் போல.

ஆனால் எதுவும் நடக்கும் முன்பு ஆலிசுக்கு எதிர்காலத்தை பற்றிய பயம் வர வேண்டாம் என்று மறுக்க நோவாவும் சரி என்று இருக்க இவர்கள் இருவரும் காணவில்லை என்று ஊரே தேட நண்பன் வந்து அழைத்து செல்வான், பிறகு வழக்கமான குடும்ப சண்டை, அவன் கூலிக்காரன் நீயோ தனியக விமானம் வைத்துகொள்ளும் அளவுக்கு செல்வம் உள்ளவள் என்று ஆலிசின் தாய் தடுக்க இந்த கரளோபகத்தில் நோவாவை பற்றிய மதிப்பீட்டை அவன் கேட்க மனம் உடைந்து ஆலிசை பிரிந்திடுவோம் என்று கிளம்ப ஆலிசு வெளியில் வருகிறாள்,  நோவாவோ இந்த கோடை முடியும் வரை நமது காதல் இருக்கடும் அதற்கு பிறகு வேண்டாம், நீ யாரோ நான் யாரோ என்று இருக்கலாம் என்று விரக்தியில் கூறுகிறான். துல்கரும் நித்தியாவும் அமெரிக்க செல்லும் நாள்வரை இதே போல் தொடருவோம் என்று சொல்வதை போல்.

இந்த இளையவர் கதைவரும் ஓட்டத்தில் அந்த வயதன நோவாவை பார்க்க அவனது பிள்ளைகள் வருகிறார்கள், அவர்களை ஆலிசுக்கு அடையாளம் தெரியவில்லை யார் என்று கேட்க நான் உங்களை பார்த்து இருக்கிறேன் என்று சொல்கிறார்கள் தமிழில் துல்கரின் அண்ணன் குடும்பம் திடீர் என்று சம்பந்தமே இல்லாமல் வந்து போகும் காட்சியாக மணி மாற்றிவிட்டார்.

இந்த திரைகதை வரையில் அப்படியே தமிழுக்கு மாற்றிய மணி, மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு கண்மணி அன்போடு காதலன் எழுதிடும் கடிதமே என்று பாட்டாகவே பாடிவிட்டார்.

 நோவாவின் காதல் என்ன ஆனது என்ற ஆழமான பின் பாதி கதையில் ஆலிசு ஒரு இரண்டு நாள் வெளியூருக்கு சென்று வருகிறேன் என்று சென்றதும் கதையில் ஒரு பூகம்பம் வெடிக்கும், நித்தியா 2 நாள் வெளியூர் சென்று வந்ததும் சண்டைபிடிப்பது போல்.

அதற்கு அடுத்து வரும் திரைகதையை அனேகமாக இன்னமும் ஒரு 5 அல்லது 10 ஆண்டுகளில் ஓகே கண்மணி - 2 என்று எடுக்கும் நிலையில் இந்திய வாழ்வியல் மாறும், மக்களும் முகநூலில் இருந்து இன்னமும் இன்ன பிற இடங்கள் வரை என்னான்ற இப்ப என்று எழுதி தள்ளுவார்கள், அது தான் இது வரை இப்போது போதும் என்று நிறுத்திக்கொண்டார் போலும்.

கிடைத்தால் முடிந்தால் மூலத்தை பாருங்கள் உங்களுக்கு ஓகேக விட பிடிக்கும்.............

சுகாசினி ஏன் எங்களை எல்லாம் கடிந்து கொண்டார்கள் என்று இப்ப உங்களுக்கு புரியுதா இந்த கட்டி ஏன் நான் வாங்கினேன்னு..............

ஆலீசா நடித்த நடிகையின் முக அமைப்பு அப்படியே நித்தியாவின் முக அமைப்போடு எல்லா கோனங்களிலும் ஒத்துபோவதை காண்பீர்கள்........

மணியின் இராவணன் விமர்சனம்

Friday, April 24, 2015

அவர்கள் உண்மைகள் இனி என்ன எழுதினாலும் ஏம்பா உது உன்னுடையதா இல்ல மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்தா என்று கேட்கனும் போல

கொஞ்ச நாட்கள் ஏதோ உண்மையிலே தனது கருத்துகளை பதிந்து வந்தார்.

அட தினமும் எழுத இவருக்கு சங்கதி எங்கே இருந்து உதிக்கிறது அதுவும் பலமான வேலை பளுவிற்கு நடுவில் வியந்த பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த அடுத்த தளங்களில் இருந்து செய்திகள் கேள்வி பதில் என்ற பாணியில் கொஞ்ச நாள்.

இப்போது முழுமையாக கொங்கு தேர் வாழ்க்கை என்று முழு நேரமாக அடுத்தவரின் எழுத்துகளை பாண்டியனின் ஆயிரம் பொற்காசுகளுக்கு கொண்டு வந்து நிற்கிறார் போலும்.

என்னமோ முற்போகு சிந்தனை செல்வன், பெண்ணியம் பற்றி எல்லாம் பேசியவர் இந்த எழுத்துகளுக்கு மயங்கி இருக்கிறார் என்றால் அது அவருக்குள் தூங்கிக்கொண்டு இருந்த மிருகம் இன்றைக்கு விழித்துக்கொண்டது என்று தான் பொருள்.

இந்தி ஏன் படிக்க விடாமல் தடுத்தார்கள் என்று அறியாமல் கேட்க்கும் கேள்விகள் போல இந்த  புளித்து போன கேள்விகள். பல கோடி தடவை முயன்றும், மறுபடியும் வந்து நிற்கும் அத்தனை கேள்விகளும் அப்படியே வந்து இருக்கிறது. என்ன கொடுமை சரவணா............

கொஞ்சம் விட்டா கருப்பு தோல் மனிதர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்று எழுதுவார் போலும்..........................

Tuesday, April 21, 2015

மோடியும் - செயலலிதாவும் - முதல் ஆட்சி ஒரு ஒப்பீடு

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்த அடுத்த ஒருவரை ஆட்சியில் இது நடந்ததுக்கு காரணம் என்று அமைச்சர் முதல் அடி மட்ட தொண்டன் வரை காட்டியது இல்லை. அம்மையார் ஆட்சியில் இல்லை என்றாலும் உத்தரவுகள் எல்லாம் இவர் தான் கொடுப்பார்.

மோடி செல்லும் விழா மற்றும் அரசு சார்ந்த சந்திப்புகள் ஆகட்டும் எல்லாம் வளர்ப்பு மகன் திருமண தடபுடல் அளவும் அதையும் விஞ்யும் தான் இருக்கிறது.

வெறும் அறிக்கைகளும், அடுத்த நாட்டவரையும் எதிர் கட்சியினரையும் ஒருமையில் விளித்தலும். செர்மேன் நாட்டில் எதிர்கட்சி பற்றி புகார் ஏன். டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டான் பாணியில், வளருங்கள் மோடி. அம்மையார் அன்டை மாநில முதல்வர்களை எல்லாம் தகாத வார்த்தைகள் கொண்டு சாடியது அனைவரும் நினைவில் வரலாம் இவைகளை பார்க்கும் போது.

பகட்டான உடையில் இருந்து எங்கே சென்றாலும் ஏராளமான கெடுபிடிகளும் எடுபிடிகளும். அப்படியே சென்னையில் 1000 வண்டி ஊர்வலம் வந்து போவது நினைவில் வருவதை தவிர்கமுடியவில்லை.

முந்தைய ஆட்சி விட்டு சென்ற திட்டங்களுக்கு வெறும் பெயர் சூட்டும் விழாக்கள் மட்டும். புதிய வீரானம் ஏரி திட்டம் போல்.

பெரும் பணக்காரர்களுக்கு சாதகமானவைகள் மட்டும் நிறைவேற்றப்படுதல் மற்றவர்களுக்கு எல்லாம் கட்சி சின்னமும் பிரியாணி பொட்டலங்கள் மட்டுமே.....

சசிகலா நடராசன் மட்டும் இல்லை, திரைமறைவில் அழகாக மறைக்கப்படு இருக்கிறதோ என்னவோ.......

ஆனால நடராசன் மாதிரி அதானி அரசின் அத்தனை பேச்சுகளும், திட்டங்களுக்கும் சொந்தகாரராக இருத்தல்.

அரசின் பெயரால் தனியார்கள் கொள்ளை அடித்தல் எல்லா மட்டங்களிலும். தற்பொழுது பி எசு என் எல் சென்னை நிறுவனத்தின் மோடம் விணியோகம் தனியாருக்கு கொடுக்கப்பட்டு, அவர் அவர் வீட்டில் இருக்கும் மோடம் சகட்டு மேனிக்கு வேலை செய்யாமல் செய்து 2000 கொடுத்தால் மற்று ஒன்று கொடுக்கிறேன் என்றும். அப்படி கொடுக்க முடியாது என்றால் தனியாருக்கு மாறிக்கோ என்று அடாவடி செய்தல். சுமங்கலி கேபிளை போல்.

மோடியை தவிர ஒருவருக்கும் ஒன்றுமே தெரியாதது போல் மக்களுக்கு காட்டுதல். பீடா கடை திறப்பு என்றால் கூட அது மோடி தான் திறக்கனும் இல்லை என்றால் தலை எடுக்கப்படும் கணக்காக பயமூட்டுதல்.

எதிர்கட்சினர்களை சபையில் பேசவே விடாமல் செய்தல். அப்படியே பேசினாலும் அரகர சங்கர சிவ சிவ சங்கரா என்று மோடி அர்சரனை தவிர எதுவும் பேசக்கூடாது என்று அவசர சட்டம் கொண்டு அடக்குதல்.

அடிப்படை தேவைகளை கிடைக்கவிடாமல் செய்வது. மக்களுக்கு நேரடியாக பலன் கிடைக்கும் திட்டங்களை எல்லாம் முடக்கி தண்டல்காரர்களுக்கு தாரைவார்ப்பது. மோடமை போல், உழவர் சந்தையை ஒழித்து கட்டுவதை போல்.

மாட்டுக்கறி என்று ஏளனமாக பேசிவிட்டு, கையில் பிச்சை பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஆதானிகளையும் கூட அழைத்து சென்று மாட்டுகறி சாப்பிடும் மக்களிடம் மடி பிச்சை கேட்டல். தன் மேல் உள்ள வழக்குக்காக காங்கிரசுடன் இரகசியமாக  கெஞ்சியதும் முடியாது என்று தெரிந்ததும் அண்டானியோ மொயோ என்று அளந்துவிடுவதும் போல.....

தன்னை தானே புகழ்ந்துகொள்ளுதலும், உலகமக இரட்சகர் இவரே என்று பின்னால் ஒரு குழு நின்றுக்கொண்டு அர அர சங்கர சிவ சிவ சங்கர என்று அதையே திரும்ப திரும்ப சொல்வதும். இதுக்கு அம்மையாருக்கு உதாரணமே தேவை இல்லை.......

வாய்திறந்தால் இந்து இந்து என்று போசுவதும், தேர்தலுக்கு முன் என்னமோ ஆட்சிக்கு வந்தால் உடனே பாக்கிட்தானத்தை அடித்து உதைத்து காய வைப்பவர் போல் படம் காட்டியது என்ன. வந்த பிறகு ஒரு ஆண்டு முடிவடையும் போது காசுமீரத்து அரசியலில் பாக்கிட்தானம் அழகாக ஒரு பொம்மை அரசை கொண்டுவர அதை மண்டியிட்டு வரவேற்பது என்ன அடடா என்ன அழகு.

இப்படி நிறைய எழுதிக்கொண்டே போகலாம், அப்போ சுருக்கமா சொன்ன தேர்தலுக்கு முன்னால் வந்த வதந்திகளின் படி செயலலிதா பிரதமர் ஆகி இருந்தால் என்ன என்ன எல்லாம் செய்வாரோ அவைகளை மட்டுமே மோடி செய்கிறார் என்று சொல்லலாமா.

இல்லை இதுக்கு எதுக்கு மோடி என்று வேறு ஒருவர் அது தான் செயலலிதாவே இருக்கிறார் பேசாமல் செயலலிதாவையும் அவரசு அடிபொடிகளையும் தெல்லிக்கு அனுப்புங்கள் இதைவிட சிறப்பான ஆட்சியை மக்களுக்கு காட்டுவார்கள் என்று சொல்லலாமா.........

முடிவு உங்களிடமே.... இதன் முன்னோடமாக தான் தமிழிசை 2016 பசக ஆட்சிதான் என்று மறைமுகமாக சொல்லி இருக்கிறார் போலும்........

Friday, April 17, 2015

பெரியார் சொன்ன பொய்யுரைகள் - எப்படி மக்களை ஏமாற்றி இருக்கிறார் பாருங்கள்

இது தினமணியில் வந்திருக்கும் மோடியின் உரை சுருக்கம்

"மனிதநேயம் வளர்வதற்கு ஹிந்துத்துவம் மூலமாக பாடுபட வேண்டியது அவசியம்.
ஹிந்துத்துவம், என்பது மதம் அல்ல; அது வாழ்க்கை முறை என்ற அருமையான விளக்கத்தை, தில்லி உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. அந்த விளக்கத்தை நான் நம்புகிறேன்.
ஹிந்து மதம், அறிவியல்பூர்வமான வழியில் வன உயிரினங்கள் உள்பட இயற்கையின் நன்மைக்காக செயலாற்றி வருகிறது என்றார் மோடி."

ஆனால் பெரியாரோ மதங்களும் மத சடங்குகளும் தான் மனிதனை பிரித்து தாழ்த்தி அவமானபடுத்தி வெறுப்புகளின் ஊற்றுக்கண் என்றும். இதன் மூலம் கடவுள் என்ற நம்பிக்கையே என்று பொய் சொல்லிவிட்டு போனார் போலும்.

உச்ச நீதிமன்றமே சொல்லி விட்டதாகத்தான் மோடியும் சொல்லி இருக்கிறார். உண்மையில் நீதிமன்றம் அப்படி சொன்னதா?..... தெரியாது. அப்படி சொன்னால் பிறகு இந்து மத்தை பரப்ப நினைக்கும் மக்களின் மனதில் அடுத்த மதத்தினர் மீது இவ்வளவு காழ்புக்களை அவைகள் ஏன் விதைக்க வேண்டும். 

அடுத்தவர் என்ன சாப்பிடவேண்டும் என்று துவங்கி எங்கே வைத்து எரியூட்டபடவேண்டும் என்று நிர்மானிக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது. 

இந்து மதம் ஒரு வாழ்வியல் என்றால், இதே போல் வாழ்வியலை தான் தாலிபானும் கொண்டுள்ளார்கள். அவர்களை மட்டும் ஏன் மக்கள் காட்டுமிராண்டி என்கிறார்கள். 

பொய் யார் சொல்கிறார்கள், உச்ச நீதிமன்றமா, அல்லது நீதிமன்றத்தின் பெயரில் மோடியா அல்லது பெரியாரா தெரிந்தவர்கள் சொல்லவும்...........

மக்கள் குறை கேட்க தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் குழு - அப்போ சு சா இது வரைக்கும் என்ன குறைன்னு சொல்லவே இல்ல

தமிழகத்து பசக அமைபினர்கள் எல்லாம் எந்த குறையும் தமிழகத்தில் இல்லை என்று கட்சி மேலிடத்தில் சொல்லிவிட்ட பிறகும் அப்படி அவர்கள் சொன்னது சரி தானா என்று தெரிந்து ஊர்சிதப்படுத்த அமைச்சர் குழு வருகிறது போலும்.

சு சா, தமிழிசை, பொன்ரா, பிரச்சனை பெரியசாமி ராசா போன்ற பசக பெரிய தலைகள் எல்லோரும் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவதாகத்தான் மோடியிடம் சொல்லி இருக்கிறார்கள் போலும்.

செயலலிதாவை சிறையில் அடைத்து வைத்தது முதல் இது வரை ஆட்சி நடந்து வரும் முறையை பார்த்து உலகமே சிரிக்கின்ற நிலையில் வாய் திறக்காத பசக. அடுத்தது தமிழகத்தில் பசக தான் ஆட்சி என்று ஊர்க்கு ஊர், மேடைக்கு மேடை முழங்கிய பசக.

இடைத்தேர்தலில் மண்ணை கௌவிய பிறகு, சும்மா இலங்கையை வைத்து ஆடிய மங்காத்தா எல்லாம் பலிக்காது என்று அறிந்து இரண்டு அம்ச தாகுதலில் இறங்கி இருக்கிறது போலும்.

ஒன்று காவலர்களின் துணையுடம் எதிரணியினருக்கு எதிராக வன்முறையில் இறங்குதல். திக போராட்டத்தில் வன்முறை, புதிய தலைமுறை தொக அலுவலக வெடி குண்டு தாக்குதல் என்றும்.

மற்ற வழியில், தமிழகத்தில் தலைவிரித்து ஆடும் குறைகளை கேட்டு தீர்க்க அமைச்சர் குழு வருகிறது என்ற அறிப்பும் அதை தொடர்ந்து செய்தி தாள்கள் வெளியிட்டு இருக்கும் தலைப்பும்.

மத்திய அமைச்சரவை என்ன தான் திட்டம் வகுத்தாலும் அதை மாநிலத்தில் செயல்படுத்துவது மாநில அரசு தான். தமிழகத்தின் மான்புமிகு முதலமைச்சர் பன்னீர் செல்வம் எழுதிய எந்த வேண்டுதலுக்கும் பதில் கூட தெரிவிக்காத மைய அரசு இப்போது நேரடியாக மக்களை நேர்காணலுக்கு அழைப்பதன் நோக்கம் என்ன.

தாய் தகப்பன் இல்லாத வீட்டில் குழந்தைகளை கவனிக்க வரும் மூன்றாம் மனிதனாக செயல்பட நினைக்கிறது மைய அரசு. 

முதலில் செயலலிதாவை சிறைக்கு அனுப்பியது, இரண்டாவது மாறன் சகோக்களின் உடைமைகளை முடக்கியது. இப்போது அதிகாரமாக வலம் வருவது என்று தண்டல்காரன் பாணியில் நடந்து வருகிறது மைய அரசு.

அத்வானியின் பாணியில் தமிழகத்து மைய அமைசர்கள் வந்து போன பிறகோ அல்லது வரும் முன்னோ குண்கள் வெடிக்காமல் இருந்தால் சரி தான். முன்பு எப்போதெல்லாம் அத்வானி தமிழகம் வந்து சென்றாரோ அப்போது எல்லாம் முன்போ பின்போ குண்டுகள் வெடித்து சிதறியது அனைவரும் அறிவீர்.

இந்தியாவை பொருத்த மட்டில் சகிப்புத்தன்மையில் முதலிடம் தமிழகமே, மொழி தவிர்த்து மற்றவைகளில் தமிழகம் சகிப்புத்தன்மையுடன் தான் நடந்துக்கொண்டு வருகிறது.

இந்த பொருமையும் பெருமையும் இல்லாமல் செய்ய சதி நடக்கிறது மக்களா கவனமாக இருங்கள். இருட்டில் கிள்ளிவிட்டு அடுத்தவனை கைக்காட்டிவிட்டு அவர்கள் சென்றுவிடுவார்கள்.

கடைசியாக ஒன்று தமிழிசை இந்த செய்திபற்றி ஒன்றும் சொல்லாத நிலையில் இது கடைசியில் அந்த அமைசரின் தனிப்பட்ட அறிக்கை என்று நாளைக்கு சொன்னாலும் சொல்வார்கள்.

Thursday, April 16, 2015

ஏன் பாக்கியராசு பார்த்திபனை ஒன்றுமே சொல்லவில்லை -- சுகாசனியின் ஒப்புதல் பெற்ற விமர்சனம்

கதை திரைகதை வசனம் இயக்கம் - பார்த்திபனின் சமீபத்திய படைப்பு. சமீபத்திய நுட்பங்களை எல்லாம் அழகாக பயன்படுத்தி கதை சொல்லி இருப்பார்.

இந்த படமும் பாரிச்சாதமும் அடிப்படையில் ஒன்று தான், என்ன அது சிவப்பு நிற குடை இது வெள்ளை நிறத்து குடை அவ்வளவு தான் வித்தியாசம்.

ஏன் இந்த படம் அமைப்பு பற்றி பாக்கியராசு எதுவுமே சொல்லவில்லை, பார்த்திபன் என்றதாலா இல்லை இன்னமும் இது போல் நிறைய நிற குடைகள் வரட்டம் என்ற ஆவலா அவருக்கு தான் வெளிச்சம்.

Tuesday, April 14, 2015

ஆதார் அட்டையும் அம்பானி பெருமக்களும் - இந்தியா அமெரிக்கா போல் வல்லரசு ஆகும்!!!!!

வால்மார்டு வருகிறது என்றதும் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் எதிர்த்தார்கள் சரி, ஆனால் அம்பானிகள் எதிர்க வேண்டிய தேவை என்ன.

எல்லா பெரு நகரங்களிலும் ரிலையன்சு பெருஅங்காடிகளை கட்டிய மாயம் என்ன....

ஏன் என்று கேட்டால் இப்படி காரணம் சொல்வார்கள்.....

ஒரு நாள் நான் மும்பையில் இருந்து புனேவிற்கு சென்றுக்கொண்டு இருந்தேன் அங்கே இரு ஏழை உழவர் தனது காய்கறிகளை எல்லாம் ஏற்றிக்கொண்டு இருந்தார், அவை எல்லாம் கிட்டத்தட்ட வீணாகும் நிலையில் இருக்க ஏன் ஐயா இப்படி என்று கேட்டதும்.

"என்னங்க செய்யுரது, விளைய வச்சு, அறுத்து ஒரு வாரம் ஆகுது. ஊரில் இருந்து சந்தைக்கு கொண்டு போக வந்தேன் அந்த நேரம் பார்த்து மாட்டு வண்டியோட அச்சாணி உடஞ்சு போச்சு. அங்கே இங்கே என்று அலைந்து கொண்டு வருவதற்கு 2 நாள் ஆயிடுச்சு. இரவோடு இரவா போனாதான் அந்த சந்தையில விக்கமுடியும்.

இப்ப பாருங்க 4 நாள்லில் காய் எல்லாம் வாடிப்போச்சு, இதை சந்தை வரைக்கு கொண்டு போனா மாட்டு வண்டி கூலி கூட கிடைக்காதுன்னு மாட்டுகே கொடுதிடலாம்ன்னு வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகிறேன்னு சொன்னார்."

என்று சொல்லி நம்மை எல்லாம் டாட்டா அளவுக்கு பேசி குளிரூட்டுவார்கள்.

நண்பர் ஒருவரிடம் இது சம்பந்தமாக பேசும் போது அவரும் சொன்னார்கள் சென்னை பெங்களூர் தடத்தில் முன்பு எல்லாம் அழுகிய காய்கறிகள் நிறை கொட்டிக்கிடக்கும் இப்போது காணக்கிடைப்பது இல்லை என்று சொன்னார்கள்.

ஏழை என்ற வார்த்தைகளை கூட வெறுக்கும் இவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கரை என்று பார்த்தால் தான் அவிழ்கிறது மர்ம முடிச்சு.

அமெரிக்காவில் அனைத்து மக்களுக்கும் ஒரு அடையாள எண் கொடுப்பார்கள். உங்களது வரவு செலவு மற்றும் வரி கணக்குகள் மற்ற இத்தியாதிகளை எல்லாம் இதனுடன் இணைத்து வைப்பார்கள்.

சரி தானே சரியான செயல் தானே என்று தோன்றும் நமக்கு. ஆனால் இது தான் சூட்சமம்.

அமெரிக்காவில் ரேசன் கடைகள் கிடையாது. அத்தியா அவசிய பொருட்கள் அனைத்தும் கடைகளில் தான் வாங்க வேண்டும்.

3 முதல் 5 பேர் கொண்ட குடும்பமாக இருந்தாலும் $500 முதல் $700க்குள் அவர்களது உணவுக்கு சரியாக இருக்கும். அதற்கும் மேல் இல்லத்திற்கு தேவைபடும் மற்ற பொருட்கள், மின்சாரம், என்று ஒரு $1000 இருந்தால் ஒரு சராசரி வாழ்கையை வாழ்ந்து விட முடியும்.

சரி இதுக்கும் ஆதார் அட்டைக்கும் என்ன சம்பந்தம்......இல்லை அம்பானிக்கும் தான் என்ன சம்பந்தம்.........

மேலே சொன்னவைகள் எல்லாம் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் குடும்பங்களை பற்றிய தகவல்கள். அமெரிக்காவின் மற்றொரு முகம் அனேகருக்கு அதிகம் பரிட்சயம் இல்லாத முகம் அது.

பார்கிற வேலை போய்விட்டது என்றால், வேலை போன தேதியில் என்ன சம்பளம் வாங்கினீர்களோ அதில் 60% பணத்தை நீங்கள் அடுத்த வேலை வாங்கும் வரையோ அல்லது 6 மாத காலமோ கொடுக்கும்.

இந்த 6 மாதங்களும் கடந்தாலும் இன்னமும் 2 வருடங்களுக்கு வேறு வேலைக்கு தன்னை தயார்படுத்திகொள்ள தேவையான தொழில் பயிற்சி மேற்கொள்ள மற்றும் குடும்பத்தை நடத்த உதவி தொகை கிடைக்கும்.

இப்படி மாத மாதம் ஆயிரகணக்கான மக்களுக்கு அரசு பணம் கொடுத்து உதவிக்கொண்டு இருக்கிறது அமெரிக்காவில்.

நல்ல செய்கை தானே அதனால் என்ன......

அப்படி கொடுக்கும் உதவி தொகையாகட்டும் அல்லது வேறு வகை உதவியாகட்டம், மக்கள் அந்த பணத்தை தவறாக பயன் படுத்தாமல் இருக்கும் பொருட்டு, பணமாக கொடுக்காமல் ஒரு கடன் அட்டையாக கொடுக்கும்.

அந்த அட்டையின் பெயர் லிங்கு கார்டு, நண்பர் ஒருவர் அந்த கார்டை அங்க கொண்டு லிங்கு கொடுங்க இங்க கொண்டு லிங்கு கொடுங்க என்று வேடிக்கையாக எழுதினது நினைவுக்கு வரலாம்.

சரி இதுக்கும் அம்பானிக்கும் என்ன சம்பந்தம்........

அரசு தரும் சலுகைகளை மக்களிடம் கொண்டு சேர்க நிறைய வழிகளை வைத்து இருந்தார்கள். அதில் மக்களிடம் நேரடியாக செயல்பட்டது ரேசன் கடைகள்.

படிப்படியாக அதற்கு மூடு விழா நடத்தியாச்சு, இரண்டாவதாக விவசாய மணியமாக கொடுத்து வந்த மாணியம் எல்லாம் இனி கிடையாது என்று சிறு விவசாயிகளை கொன்றாச்சு...

சரி அப்போ இனிமேல் அரசாங்கம் இல்லாதபட்டவங்களை கைவிட்டு விடுமா என்றால் இல்லை, இப்போது அனைவரும் வங்கி கணக்கை தொடங்கி அதை தாசில்தார் ஆபீசில கொடுங்க என்று வந்த உதிரவு எதுக்கு என்று ஓர் அளவிற்கு யூகித்து இருப்பீர்கள்.

இது தான் கடைசியா நடக்கும் தவிக்கும் மக்களு அரசின் உதவி என்று சொல்லி ஏழைகள் இனி ரேசன் கடைகளில் வரிசையில் வெயிலில் நிற்க வேண்டாம் அம்பானி அண்ணனின் குளுகுளு கடையிலே சென்று வேர்க்காமல் விறு விறுக்காமல் ஆதார்/லிங்கு அட்டையில் தரமான பொருட்களை வாங்கிக்கொண்டு வரலாம் என்று அரசு பொருளில் அம்பானிகள் விளம்பரம் கொடுப்பார்கள்.

அமாம் ரேசன் கடையில் கொடுத்த அரிசியைவிட அம்பானி கடையில் கொடுக்கிற அரிசி நன்றாக இருக்கிறது என்று பசக உருப்பினர்கள் கொண்டு அதிதீர விளம்பரம் வரும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்கிறேன் என்று ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உள்ளாடைகளை அணிவித்துக்கொண்டு மோடி மேளம் அடிப்பார்.

உணமையில் நடக்க இருப்பது என்ன, இது நாள் வரையில் ஒரு பைசா கூட வரிக்கட்டாத அம்பானி இனிமேலும் வரிகட்ட வேண்டாம். காரணம் அரசாங்கத்தின் வேலையை இனி அவரது நிறுவனம் செய்யபோகிறதினால்.

மேலும் அரசு சலுகை என்று அளிக்க இருக்கும் அவ்வளவு பணமும் இனி அவர்கள் கையில். அப்ப மீதி என்று கேட்கிறீர்கள் வேற யாருக்கு டாசுமார்க்கு தான்..........

இப்போ தெரியுதா ஏன் ஆதார் அட்டை, ரேசன் மூடு, வங்கி கணக்கு தொடங்கு என்று வரிசையா உத்தரவுகள் பறகிறது என்று. அனுபவி ராசா அனுபவி, இந்த பாவிகள் வேண்டாம் என்று சொல்ல சொல்ல ஓட்டு போடீர்களே மக்களே அனுபவியுங்கள்.......

Saturday, April 11, 2015

சந்தனமர சாவும் செம்மர சாவும்

வீரப்பனை கொன்று அசுரன் அழிந்தான் என்றார்கள், இப்போது செம்மர சாவில் திருடர்கள் அழிந்தார்கள் என்கிறார்கள்.

என்னமோ வீரப்பன் வீட்டுக்கு விறகு கட்டாக வெட்டியதாக தான் எல்லோரும் எடுத்துக்கொண்டார்கள் போலும்.

அதே போல தான் இந்த செம்மரமும் ஏதோ இந்த கூட்டம் வீடுக்கு கடைகால் போட காட்டில் மரம் வெட்டினார்கள் என்றும் நினைத்து பேசுகிறார்கள் போலும்.

வீரப்பன் வெட்டிய டன் கணக்கான மரங்கள் எங்கே சென்றது, யார் வாங்கினார்கள், என்ன செய்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா.

வீரப்பனை சுட்டுக்கொல்ல இவ்வளது பணம் செலவழித்த தமிழகம் ஏன் அந்த மரத்தை அவனிடம் இருந்து வாங்கியவரின் பெயரையோ அல்லது மரங்கள் என்ன ஆனது என்று கூட சொல்லாமல் விட்டு விட்டது.......

சட்டதின் பார்வையில் கொலை செய்தவனுக்கு தூக்கு கொலைக்கு தூண்டியவனுக்கு என்றும் தண்டனை உண்டு.

அப்படி இருக்க மரத்தை வெட்டியவனுக்கு தண்டனை கொடுத்தாச்சு, வெட்ட சொன்னவனுக்கு. கிட்டதட்ட 20 ஆண்டு காலம் மரங்கள் எல்லாம் என்ன ஆச்சு, உங்களுகாவாது தெரிந்தால் தெரிவியுங்கள்.

சந்தனத்தில் கோட்டை விட்டதை இப்போது செம்மரத்தில் பிடிக்க பார்கிறார்கள். ஐதிராபாத்து நீதிமன்றம், இந்த துப்பாக்கி சுடு சமாச்சாரமாக சீபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பார்க்கலாம் யார் யார் தலை எல்லாம் உருளுது என்று.......

Thursday, April 9, 2015

ஆந்திர காவல் படையை அப்படியே நாட்டின் எல்லை படையாக்க மத்திய அரசு உத்தரவு

எல்லை தாண்டினாலோ அல்லது எல்லையில் வந்து செய்யக்கூடாது என்று சொன்ன செயல்களில் ஈடுபட்டாலோ அது சொந்தமோ பந்தமோ அல்லது எதுவாக இருந்தாலும் சுட்டுக்கொல்ல வேண்டும் என்றது எல்லை பாதுகாப்பு படைக்கு வேண்டிய அடிப்படை தகுதி.

இந்த தகுதி இருக்கிறதா என்று எண்ணற்ற சோதனைகளை கொண்டு அறிந்து படையில் சேர்ப்பார்கள். அதை அழகாக நிரூபித்த இந்த காவலர் படையை அப்படியே பாக்கிட்தான எல்லையிலும் காசுமீரத்து எல்லையிலும் பணியாற்ற மத்திய அரசு ஆணையிட்டு கௌரவபடுத்தியுள்ளது.

இந்த அளவுக்கு பயிற்சி கொடுத்த ஆந்திர காவல்படை தலைமையை இனி இராணுவ பயிற்சி மையத்தின் தலைமையாகவும். இனி இராணுவ பயிற்சி மற்றும் பணியில் சேர்க்கும் வேலைகளும் ஆந்திர அரசிடம் ஒப்படைப்பதாக முடிவெடுத்துள்ளதை கண்டு மற்ற மாநில அரசுகளும் ஆந்திர காவலர்கள் போல் எந்த உணர்வும் இல்லாத எல்லை படையாக நாட்டினுள் செயல்படுங்கள் என்று வாய்வழி உத்தரவுகளை வழங்கியதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

இப்படி கடமையாற்ற முடியாது என்று சொல்லுங்கள் ஆந்திர காவல் படையை அப்படியே இங்கே கொண்டு வந்துவிடுவேன் என்று அனைத்து மா நில முதல்வர்களும் அவரவர் காவல் துறைக்கு சுற்றறிக்கை அனுபி அவர்கள் எல்லாம் வேறு வழியில்லாமல் பக்கத்து மாநிலத்தவர்கள் யாரும் மாட்டுவார்களா என்று இரவு பகலாக காத்துக்கொண்டு இருப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரம் தெரிவிக்கின்றது.

இது எல்லாவற்றிற்கும் படி மேல் போய் பசக ஆட்சியாக இருப்பதால் தான் இப்படி சுதந்திரமாக ஆந்திர காவலர்களால் சுடமுடிகிறது என்று பசகவின் தமிழக அதிகார்பூர்வ பேச்சாரளர் தமிழிசை சௌந்தராசன் தெரிவித்துள்ளார் போங்கள்...........

Tuesday, April 7, 2015

அடுத்ததாக பசக(BJP) அரசு கொண்டு வரும் திட்டம்

பசுவின் புனிதத்தை காப்பாற்ற இனி மாட்டிறைசி உட்கொள்ளும் நாடுகள் எதனுடனும் இனி இந்தியா வரத்தகமற்றும் எந்த ஒரு தொடர்பும் வைத்துக்கொள்ளப்போவது இல்லை என்றும்.

இதையே சட்டமாக கொண்டு வந்து இனி யாராவது டாலர் பௌன்டு என்ற வார்த்தைகளை சொன்னால் கூட கடும் தண்டனைகளை கொடுக்கும் வகையில் அவசர சட்டம் ஒன்றையும் கொண்டு வர உள்ளது.

இதன் விளைவாக வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் நாடு திரும்ப கால அவகாசம் கொடுக்கப்படும். அப்படி திரும்புவர்கள் தவிர மற்ற அனைவரின் கடவு சீட்டுகளை ஒரே அடியாக முடக்குவதுடன், அவர்களுக்கு என்று இந்தியாவில் இருக்கும் சொத்துகளை பரிமுதல் செய்து பசக கொள்கை பரப்புக்கும் மாடு பாதுகாப்பு திட்டத்திற்கு செலவுசெய்யும் திட்டத்தையும் ஒரு அவசர சட்டமாக கொண்டு வரும் என்றும் தெரிகின்றது.

அது மட்டும் இல்லாமல், இனி இந்தியாவில் ஒரு குண்டூசி விற்பது என்றாலும் அவைகளை செய்பவர்களில் யாரும் மாட்டிறைச்சி சாப்பிட்டோராக இருக்க கூடாது என்றும் சட்டம் கொண்டுவர ஆலோசனை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இனி உயிர்காக்கும் மருந்தாக இருந்தால் கூட அதை பசக சோதனை செய்து சுத்த சைவத்தாரால் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரை வழங்கும் வரை எல்லோரும் காத்துக்கிடக்க வேண்டி இருக்கும்.

மாட்டிறைச்சி சாப்பிடும் உலகத்தாரது செய்திகளை இனி இந்திய செய்தி தாள்கள் வெளியிடவும் தடை வரும்.

கூகுல் மற்றும் இணையம் எல்லாம் மூடி கோகுல் என்ற தேடுபொறியும், கோணையம் என்ற ஒன்றும் இந்தியாவில் அறிமுகபடுத்தபடும். இதை தவிர கடலோர இடங்களில் தவறியும் கூகுலோ அல்லது இணையமோ பயன்படுத்துவது தெரிந்தால் எல்லை தாண்டிய பயங்கரவாதமாக கருதி கொல்லப்படும் தண்டனை முதல் என்ன என்ன தண்டனைகள் கொடுக்கலாம் என்று அலோசித்து வருகிறார்கள்.

பசுவை வதைத்து பெறப்படும் பால், வெண்ணை, நெய் பொருட்களுக்கு நிரந்தர தடையையும் அறிவிக்க உள்ளது. வேண்டும் என்றால் கோமியம், மற்றும் அதனுடன் கிடைக்கும் சானியை மட்டும் வேண்டும் என்றால் பயன் படுத்திக்கொள்ளலாம் என்றும் ஒரு அவசர சட்டம் தயாராகிக்கொண்டு இருப்பதாக தகவல்.

இனி மாட்டிறைச்சி காரர்களில் உடையான கோட்டு சூட்டுகளுக்கும் தடையை அறிவிக்க உள்ளார்கள் பசகவினர். இனி எல்லோரும் வேட்டி சட்டைக்கு மாற வேண்டியது தான். இனி எங்காவது எவனாவது பேன்டு சட்டையில் பார்த்தால் அவ்வளவு தான்.

இப்படியே ஒரு நீண்ட பட்டியல் போகுது, அப்படியே மறுமுறையும் படிக்கும் போது ஏதோ தாலிபான் ஆட்சியின் அடிப்படைவாத அரசு பட்டியல் மாதிரி தெரியுது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது......................