Thursday, January 29, 2015

தொல்காப்பியம் முதல் பாரதி வரை 120 புத்தகங்கள் மலிவான விலையில் அமெரிக்காவில் கிடைக்கிறது

படத்தில் அழுத்தினால் பெரிதாக தெரியும், நல்ல வாய்பு நழுவவிடாதீர்கள்.

வணக்கம் !!
கலைஞன் பதிப்பக வைரவிழாவை முன்னிட்டுத் தொல்காப்பியம் தொடங்கிப்  பாரதி வரை உள்ள இலக்கியங்களை, மலேசியாவில் நடைபெற்று வரும்  9-ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் இந்திய ஆய்வியல் துறை, மலாய்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து வெளியிடப்பட உள்ளன.

இதன் முழு விபரங்களையும் இணைத்துள்ளேன், நண்பர்களுக்கு பகிரவும்.


நன்றி !!


அமெரிக்காவில் இந்த புத்தகத் தொகுப்பை சலுகை விலையில் பெற :

அருள் பிரசாத்

+1 734-272-6791

kalaignan.usa@gmail.com

https://www.facebook.com/kalaignan.usa

Monday, January 12, 2015

உளவாளி சுப்ரமணிசாமிக்கு அடுத்த வேலைக்கு நேரம் வந்தாசு - பாக்கிட்தானத்துடன் பேசுவார்

சுசா தொகாவில் அழுது வடிந்து இன்னமும் ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள்ளாகவே பாக்கிட்தானத்தில் இருந்து இந்தியா எங்களுடனான உறவை மேம்படுத்தும் விதமாக செயல்படவில்லை என்று அறிவிப்பு செய்துள்ளது.

இப்போது சுசா தொகாவில் சொல்வார் மோடி ஒரு முறை பாக்கிட்தானத்தோடு தொலைபேசியில் பேசினார் உடனே பாக்கிட்தானம் இந்தியாவின் நட்பு நாடு என்று மாறிவிட்டது. மேலும் இது வரை இந்த பிரச்சனைகள் தொடர்பாக எங்கே எல்லாம் கலவரம் வந்துக்கொண்டு இருந்ததோ அங்கே எல்லாம் இனி பாலாறும் தேனாறுதான் ஓடபோகிறது என்ற போக்கில் பேச போகிறார்.

தமிழிசை சௌந்தர்ராசன் சுசா பேசுவதை எல்லாம் கணக்கில் எடுத்துகொள்ளாதீர்கள் என்றும், மோடி கட்சி மக்கள் பொறுப்புடன் பேச வேண்டும் என்று தினதந்திக்கு மட்டும் பேட்டி கொடுப்பார்கள், அதுவும் கடைசி பக்கத்தில் ஒருவரின் கவனத்திற்கும் படாதபடி சின்ன எழுத்துக்களில் வரும்.

 நாடே இந்தியா பாக்கிட்தான் பிரச்சனையை மோடி ஒரே ஒரு அழைப்பில் தீர்த்துவிட்டாரே என்று கொண்டாடும் என்று பதிவர்கள் தொட்டு தொகா வரை வரிந்துகட்டி எழுதிய பின், பாசாக வின் செய்தி தொடர்பாளர் ஒன்றும் அப்படி சொல்லவில்லையே. தீர்வு கானவேண்டும் என்று எங்களுக்கு ஆர்வம் இருக்கிறது ஆனால் பாக்கிட்தானம் நமது நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று முந்தைய ஆட்சிகாலத்தில் சொன்ன அதே பதிலை பட்டும் படாமல் சொல்வார்கள்.

இன்னமும் என்ன என்ன கூத்துகளை உளவாளி சுசா ஆடிக்காட்டபோகிறார் என்று பார்ப்போம்...........

Saturday, January 10, 2015

உளவாளி சுப்ரமணிசாமிக்கு ஏன் இவ்வளவு வருத்தம் - இரகசியம் இது தான்

ஆடு நனையுதேன்னு ஓநாய் ஒன்று தேம்பி தேம்பி அழுததாம்ன்னு நம்ம ஊரில் ஒரு வழக்கு சொல்வார்கள். அது போல அடுத்த நாட்டில் ஒரு ஆள் தேர்தலில் வரமுடியாமல் போனதற்கு மோடியே வரமுடியாமல் போனால் போல் ஒரு தவிப்பு இவருக்கு. காரணம் என்னவாக இருக்கும்.

திரும்ப திரும்ப திருப்பதிக்கு வர சொல்லி சொன்னதில் இருந்து போர்காலம் வரை தொட்டு அவரின் சார்பாக இந்தியாவிலும் இன்னமும் அவர் உளவு பார்த்து சொல்லும் அத்தனை நாடுகளுக்கும் இவருக்கு உதவ சொல்லி நிறைய பெட்டிகளை நிறப்பி இருப்பார் இது வரையில்.

இந்த முறையும் அவரே ஆட்சிக்கு வந்தால் இது போல் இன்னமும் காட்டிக்கொடுத்து பெட்டிகளை அள்ளலாம் என்ற ஆவலில் தான் மீனவர் நாடகத்தில் இருந்து அத்தனையும் அரங்கேறியது.

இங்க பெட்டிய வாங்கி யார் யாருக்கு எல்லாம் கொடுகிறேன் என்று சொல்லி எங்க எங்க எல்லாம் தரகு பேசி இவர் பெட்டி வாங்கினாரோ தெரியவில்லை. அப்படி கொடுத்தவர்கள் எல்லாம் நாளைக்கு வந்து படம் வசூல் ஆகல அதனால நாங்க கொடுத்த பணத்தை எடுன்னு சொன்னா என்ன சொல்வது என்ற வருத்தனே தவிர அவர் மேல பாசம் அப்படி இப்படி என்று எல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது.

இன்னும் சிறிது நாளில் ஒரு அரசியல் தலைவரின் இரகசிய பேரம் ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று பத்திரிக்கைகளில் வரும் பாருங்கள். அப்படி வரும் பட்சத்தில் பெட்டி கொடுத்தவர்கள் அதிகம் நெருக்கடி கொடுத்தால் உங்களுக்கும் இது நடக்கும் என்று எச்சரிக்கும் விதமாக அது அமையும் பாருங்கள், அப்போது தெரியும் சுசாவா இல்ல ஓநாயா என்று.

இந்த ஓநாய் தொல்லை தாங்கல யாராவது ஓநாய் மருந்து இருந்தால் எடுத்துகிட்டு வந்து அடியுங்களேன்...........

Friday, January 9, 2015

காவியத்தலைவனில் இரகுமான் இசையும் - மொசார்ட்டின் இசையும்


எனது காவியத்தலைவனின் விமர்சனத்தில் இந்த படம் மொசார்ட்டு படத்தின் கம்பனாக்கம் என்று எழுதி இருந்தேன்.

இதோ இங்கே காவியத்தலைவனில் வரும் குதிரை பாட்டையும், மொசார்ட்டில் அவர்கள் கொடுத்துள்ள குதிரை பாட்டையும் பார்த்து மகிழுங்கள்.

காவியத்தலைவனில் வரும் குதிரை மேடை காட்சி


மொசார்டில் வரும் குதிரை மேடை காட்சி

வாபா வையோ அல்லது செமோவையோ கேளுங்கள் எங்களுக்கு இப்படி ஒன்று இருக்கு என்றே தெரியாது என்று சொல்வார்கள்.


 நன்றி கூகுல்

மிசுகின் பிசாசு போல் இந்த படமும் உங்களுக்கு பிடிக்கலாம் - Delivery Man

Delivery Man

இந்த படத்தின் நடிகன் எப்பவும் தான் ஒரு சராசரியான ஆள் என்ற பாத்திரங்களை மட்டும் ஏற்று நடிப்பவர். படம் என்றாலே மற்றவர்களை விட அதிக பலம் இன்ன இத்தியாதி என்று இருக்கும் பந்தாக்கள் எல்லாம் இல்லாமல் இயல்பாக வரும் பாத்திரம் தான் இவரது தேர்வு.

இந்த படமும் அப்படி தான்.

பாசம், குடும்ப கடமை மற்றும் குடும்பம் சார்ந்த விட்டுக்கொடுத்தலுக்கு தற்பொழுது கொடுக்கப்படும் பொருள் இளிச்சவாய் தனம். இது எந்த நாடாக இருந்தலும் சரி, இந்தியாவில் அதிகமாக தற்பொழுது பரவி வருகிறது.

குடும்பத்துக்குள் எழும் சின்ன சின்ன எதிர்பார்ப்புகளை எல்லாம் வீண் செலவுகள் என்று கருதுவது இயல்பாகி வருகின்ற இந்த கால கட்டத்தில் தனது தாயின் இறுதி காலத்தில் அவளது திருமண நேர ஆசையை நிறைவேற்றும் மனிதன் அதற்காக வாங்கிய கடன் அவனை பணத்தை கொடு இல்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டும் மனிதர்களிடம் இருந்து எப்படி விடுபடுகிறான் என்ற கதையை நிறைய உணர்வு பூர்வமாக படமாக்கி இருக்கிறார்கள் இந்த படத்தில்.

பணத்திற்காக பாசத்தை அடகு வைக்காதே என்று அவனது தந்தை கூறும் காட்சியும் சரி, கடையில் அவனக்கு மகன் பிறந்து இருக்கும் வேளையில் அவனது குடும்பம் வந்து அந்த குழந்தையை பார்க்க வரும் காட்சியும் சரி அவ்வளவு நிறைவாக எடுத்து இருக்கிறார்கள்.

வெளி நாடுகளை பற்றிய ஒரு பொது மதிப்பீடு இந்தியர்களின் மனதில் உண்டு அதும் அமெரிக்கா என்றால் உணர்சிகளே இல்லாமல், குடும்பம் என்றால் என்ன என்று கேட்கும் மனிதர்கள் என்று ஒரு பொது கருத்து உண்டு. அந்த கருத்துகளை இந்த படம் கட்டாயம் நீங்கள் பார்காத அமெரிக்க குடும்ப பாசத்தை காட்டும் படம்.

எந்த நாடாக இருந்தாலும் மனிதன் மனிதந்தான் குடும்பமும் பாசமும் ஒன்று தான், கதைகளிலும் படங்களிலும் நமக்கு வேறு எவைகளையோ காட்டி கட்டி வைத்து உள்ளதை இந்த படம் உணர்த்தும். படம் வயது வந்தவர்களுக்கு மட்டுமே குழந்தைகள் கேட்டும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போகலாம்.....