Tuesday, June 26, 2018

அவசர நிலையை பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது

சிறுபான்மையினர் அச்சத்தில் வாழ்வது, உரிமைகள் மறுக்கப்படுவது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தனது விருப்பம் போல் செயல்படுவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல். எந்த வித ஞாய தர்மங்களுக்கும் கட்டுப்படாமல் தான் தோன்றி தனமாக செயல்படுவது.

நாட்டின் வளங்களை ஏகாதிபத்தியமாக ஒரு சில முதளாலிகளுக்கு உரிமையை கொடுத்து ஏன் இப்படி என்று கேட்டால் கேட்பவரின் வாயிலேயே சுட்டுக்கொல்வது. இந்தியாவின் வளங்களை வெளி நாட்டு மக்களுக்கு விற்பது, ஏன் என்று கேட்டால் நள்ளிரவில் வீடு புகுந்து சிறைப்பிடித்து வெளியே வரமுடியா வண்ணம் அடைத்தல்.

வானொலியையும் தொலைக்காட்சியையும் கையில் வைத்துக்கொண்டு புளுகுவது. பாட புத்தகங்களில் உண்மைக்கு புறம்பாக வரலாறுகளை திரித்து எழுதுவது. மக்களின் அடிப்படை தேவைகளை தேவைக்கள் அதிகரிக்கும் போது கள்ள சந்தையில் விற்பது போல் அரசே அதிகவிலைக்கு விற்பது, பெட்ரோல் பொருட்களைப் போல்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம், அவர்களின் ஆதாரங்களை அழித்து வெளி நாட்டு முதளாலிகளின் வர்த்தகத்தை கொண்டு வந்து நடத்த மறைமுகமாக ஆதரவு அளிப்பது.

நாட்டில் படிப்புகளில் இந்த இந்த படிப்புகளை இவரிவர்கள் தான் படிக்க வேண்டும் என்ற ரீதியில் ஒழிக்க திட்டங்களை நிறைவேற்றுவது.

எவனோ ஒரு வெளி நாட்டு முதாளாலி தான் இந்தியாவில் வாங்கி இருக்கும் கஞ்ச மலையில் இருக்கும் தாதுகளை விரைவாக சென்னை துறைமுகத்திற்கு எடுத்து செல்ல 10,000 கோடி செலவில் பசுமைகளை அழித்து ஒரு சாலையை நிறுவுவது.....

சட்ட சபை தேர்ததில் வெற்றி பெற்ற கட்சிகளை விட்டு விட்டு தோற்று போன கட்சிகளை தங்களின் கட்சிகாரர்களை கொண்டு ஆட்சி அமைக்க அழைப்பது.

இப்படி மோடி பற்பல மக்களாட்சி முறைகளை எல்லாம் நிலை நாட்டி வரும் வேளையில் அவசர நிலை குறித்து பேசுவது மிகவும் பொருத்தமாகவும் அழக்காகவும் இருக்கிறது.......

Friday, June 22, 2018

இந்தி பேசாமலும் கருப்பாகவும் ஆங்கிலம் பேசுபவனாக இருந்தால் அவன் தமிழன்

சிக்காக்கோ விமான நிலையத்தில் நடந்த நிகழ்வு இது. ஒரு வயதான எழுதபடிக்க தெரியாத வடக்கதிய பெண்மணி தனியாக இந்தியா செல்லுகிறார். அவரை சரியான விமானம் பிடித்து செல்லும் வகையில் அவருக்கு சர்க்கர நாற்காலி சேவை வேண்டும் என்று கேட்டு கொடுத்துள்ளார்கள் அவரை தனியாக இந்தியா செல்ல அனுப்பியவர்கள்.

அந்த எழுதபடிக்க தெரியாத வடக்கத்திய பெண்மணி அவளை ஏற்றிக்கொண்டு நெடுந்தூரம் அவரை தள்ளிக்கொண்டு வரும் போது தொடர்ந்து இந்தியில் அவனுடன் இந்த பெண்மணி பேசுகிறார். அந்த கருப்பர் இனத்தை சேர்ந்த 19 அல்லது 20 வயது மதிக்கத்தக்க இளைஞனோ ஆங்கிலத்தில் சொல்லவும் என்று மறுபடியும் மறுபடியும் வேண்ட, இவரோ வம்படியாக இந்தியில் பேச ஒரு கட்டத்தில் அந்த பெண்மணி அந்த கருப்பர் இன இளைஞனை பார்த்து நீ தமிழா என்று கேட்க நாங்கள் எல்லோரும் வாய்விட்டு சத்தமாக சிரிக்க அந்த பெண்மணி ஏன் சிரித்தோம் என்று தெரியாமல் கோபத்தில் இந்தியில் திட்டுவதை அவதானிக்க முடிந்தது.

தமிழன் என்றால் கருப்பாக இருப்பான், ஆங்கிலத்தில் பேசுவான் அதுவும் அமெரிக்கர்கள் பேசுவது போல் நவமாகவும் நாகரீகமாகவும் பேசுவான், ஆனால் இந்தி தெரியாது என்றது வடக்கத்தியர்களின் விளக்கம் போலும்.

Sunday, June 3, 2018

இளையராசா - இளமை இசையின் 75ஆம் பிறந்த நாள்

அம்மாவின் பாசத்தை விவரிக்க முடியுமா இல்லை அப்பாவின் அன்பை தான் அளவிடமுடியுமா. அது போலத்தான் இளையராசாவின் இசையும், அதை உணரமட்டும் தான் முடியும். உயிர் இருந்து உடலை இயக்குவது போல் உள்ளத்தில் இருந்து மனதை இயக்கும் மந்திரம் அவரின் இசை. நீண்ட நெடுந்தூர பயணம் கூட அதுக்குள் முடிந்துவிட்டதா என்று உணரவைக்கும் பாடல்கள் என்னுடன் இருக்கும் வரையில். அடடா இன்னும் இவ்வளவு பாடல்கள் இருக்கின்றதோ எப்போது கேட்டு முடிப்போம் என்று இருக்கும்.

காலை மாலை இரவு அதிகாலை என்று பிரித்தாலும் வருவது என்னவோ இவரது இசையே. பின் இரவில் மட்டும் கருப்புவெள்ளை பாடல்கள் இல்லை என்றால் விடியும் வரை விழித்து இருப்பது உறுதி. பலமுறை முயன்று பார்த்த தோல்வியின் பாடங்களாய் கருப்புவெள்ளை பாடல்கள் பின்னிரவில் மட்டும்.

வயது எல்லாம் ஒரு எண்ணிக்கையே, படைப்புகள் என்றால் அது வயதாக இருப்பதே படைப்புகள். இளையராசாவின் இசை அந்த வரிசையில் சேர்ந்து பல பத்தாண்டுகளை கடந்துவிட்டது. இரண்டு தலைமுறை என்று மட்டும் எழுதுகிறார்கள். அது இன்னும் எத்தனை தலைமுறையை கடக்கப்போகின்றது என்று இருந்து பார்க்கவேண்டும் போல் இருக்கிறது..........

Friday, June 1, 2018

சல்லிக்கட்டு போராட்டத்தில் காவலர்கள் சீருடையில் வந்த தீவிரவாதிகள் - Gujarat Model

சென்னையில் நடந்த சல்லிக்கட்டு போராட்டத்தில் காவலர்ளின் உடையணிந்து வந்து வாகனங்களுக்கும் கூரைவீடுகளுக்கும் தீ வைத்த சீருடை தீவிரவாதிகளை பற்றி தலைவரும் அவரது எசமானர்களான தமிழிசையும் இது வரையில் வாய்திறக்காமல் இருப்பதன் மர்மம் என்ன என்று சொல்லமுடியுமா....

அன்றைக்கு காவலர்களின் சீருடையில் வந்த அந்த தீவிரவாதிகள் இன்றைக்கு தூத்துகுடியில் சீருடையில்லாமல் வந்து கலவரம் செய்து இருக்கிறார்கள்.

எங்கே பொதுமக்கள் பார்த்துவிடுவார்களோ என்று மக்களிடம் இருக்கும் அத்தனை கருவிகளையும் அலைபேசிகளையும் பிடுங்கி வைத்துவிட்ட பிறகு நடந்து தான் வன்முறை.

அது எப்படி ஒரு பத்திரிகை நண்பர்கள் கூட படம் எடுக்கமுடியாமல் போனது விளக்குவார்களா........

இதே கூட்டம் நாளை இந்துக்கள் போராட்டத்தில் தலையில் குல்லாய்யுடனும், முசுலீம்களின் போராட்டங்களில் காவி உடையணிந்தும் வந்து வன்முறையில் ஈடுபடும்.

அப்படியே குசராத்து கலவர வடிவம் தூத்துகுடியில் அதே பாணியில் பிறகு காவலர்கள் என்ன பார்த்துக்கொண்டா இருப்பார்கள் எனேற கேள்வி வேறு.............