Wednesday, February 22, 2017

அதிமுக தலைவராக வைகோ வர வேண்டும்

தலைமை இல்லாமல் தவிக்கும் அதிமுகவை நல்வழிப்படுத்தி தழைக்க வைத்து மீண்டும் ஒரு பலம் பொருந்திய கட்சியாக ஆக்க வைகோவால் தான் முடியும்.

திமுகவை பலப்படுத்தி இன்னும் பெரிதாக கொண்டு வரவேண்டும் என்று வைகோ நினைத்து செயல்பட்ட காலத்தில் அவருக்கு எதிராக கட்சிக்குள்ளே துரோகம் இழைக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கும் செயலுக்கு ஆளானார்.

அன்றையில் இருந்து இன்றைக்கு வரை திமுகவின் தலைமைக்கு ஒரு முடிவு வந்ததும் தான் தான் அந்த பதவிக்கு தகுதியானவர் என்று அழைத்து பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பார்கள் என்று அவரை நம்பவைத்தார்கள் அவரது ஆதரவாளர்கள். திமுகவின் செயல் தலைவர் பதவி வந்ததும் திமுகவையும் அதன் செயல் தலைவரையும் ஒருமையில் விளிக்கும் பழக்கத்துக்கு வந்துவிட்டார் வைகோ.

தமிழகத்தில் புதிதாக முளைத்த சின்ன சின்ன இயக்கங்களை எல்லாம் பொதுவுடைமை கட்சியின் குடைக்கீழ் ஒன்றாக திரட்டி திராவிட கழகங்களுக்கு மாற்றான இயக்கங்களாக உருவெடுக்க வெகுவாக பாடுபட்டவர் என்ற தகுதியின் அடிப்படையில் அதிமுகவினர்கள் வைகோவை அவர்களை தலைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசியலையும் தமிழகத்தின் எதிர்காலத்தையும் துல்லியமாக கணிக்ககூடிய ஆற்றல் வைகோவிற்கு இருந்தமையால் தான் 5வர் கூட்டணி 6வர் கூட்டணி என்று கூட்டி அடுத்த முதல்வர் யார் என்று அறிவிக்கும் தலையை அவருக்கு கொடுத்தார்கள் எதிர் அணியினர்.

என்ன தான் நாஞ்சில் சம்பத்து கூவாய் கூவினாலும் கட்சி தலைவர் பதவி எல்லாம் அவருக்கு கொடுக்கமுடியாது. ஆனால் வைகோவோ ஒரு தீர்க தரிசி, தான் சேரும் இயக்கத்தின் எதிர்காலத்தை அழகாக அமைத்துக்கொடுக்கும் தலைமை பண்பு கொண்டவர். ஆகையால் அவரது திறமை விரயமாகாமல் இருக்க அவரது அன்பு சகோதரியின் கொள்கைகளை காக்க வைகோ அதிமுகவின் தலைமையை ஏற்று அதிமுகவை செழிக்க செய்ய வேண்டுவோம்.......

Monday, February 20, 2017

Fathers & Daughters (2015) - Hillary Clintenம் - திரைவிமர்சனம் 18+ மட்டும்

பொதுவாக அமெரிக்க வாழ்கையையும் அந்த நாட்டின் கட்டற்ற சுதந்தரத்தையும் வார்த்தைக்கு வார்த்தை புகழும் மனிதர்களை பார்க்கும் போது, அந்த சுதந்திரத்தின் பக்கவிளைவுகள் இவர்களுக்கு புரியவில்லையே என்று வருத்தம் வருவது உண்டு.

எந்த ஒரு செய்தியையும் கட்டுரையிலோ அல்லது விளக்க பேச்சின் மூலமோ சொல்வதைவிட படமாக எடுத்தால் எளிதாவும் ஆழமாகவும் புரியும் என்றதிற்கு இணங்க இந்த படம் வந்துள்ளது.

என்ன ஒரு அழுத்தம் இந்த படத்தில், மகளுக்காக போராடும் தந்தையும், அந்த போராட்டத்தில் அமெரிக்க நீதிமன்றங்கள் எந்த மாநிலமாக இருந்தாலும் ஆண்களையும் அவர்களது குடும்ப நலன் சார்ந்த விடயங்களில் நேர்மையாகவோ அல்லது நீதிபாட்டோடொ அனுகாது என்று தெள்ளத்தெளிவாக காட்டி இருக்கும் படம்.

இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை அமெரிக்கர்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று இந்த படம் பார்த்தால் தெளிவாக புரியும். இந்த பாதிப்பின் அளவு அமெரிக்க குடும்பங்களில் 50%த்திற்கும் மேல்.

குடும்ப தகராரில் பாதிப்புக்கு உள்ளாவது குழந்தைகள் மட்டுமே, அப்பனும் அம்மாவும் அது வரையில் சேர்த்துவைத்த பணமும் செல்வமும் இடையில் வழக்கு நடத்தி எல்லாவற்றையும் பிடுங்கி உனக்கு கொடுக்கின்றேன் நீ எந்த முன்பணமும் தரவேண்டாம் என்று பெண் தரப்பும். விட்டேனா என்று பார் என்றும் நாங்கள் இருக்கின்றோம் அவர்களை நொருக்கி பிள்ளைகளையும் உங்களுக்கே வாங்கி கொடுத்துவிடுங்ன்றோம் நிம்மதியாக வாழ்க்கை முழுதும் நீங்கள் இருக்கலாம் என்ன கொஞ்சம் பணம் செலவாகும் என்று ஆண்களை மயக்கி இருக்கும் பணத்தை எல்லாம் கொள்ளை கொண்டு கடைசியில் ஓட்டாண்டியாகவைத்து கடைசியில் நீதிமன்ற ஆணைக்கு இணங்க வேண்டும் என்று விருப்பமில்ல வேலைக்கு சென்று கடனே என்று பிள்ளைகளை கவனிக்கும் நிலை தான் இந்த அமெரிக்க குடும்பங்களின் நிலை.

50% தான் இப்படி என்று நினைத்துவிடாதீர்கள், மீதம் இருக்கும் 50% இந்த இழப்பீட்டில் இருந்து தப்பிக்கவும், தன் விருப்பம் போல் இருக்க முடியாது என்று சகித்துகொண்டும் என்றைக்கு வழக்கு பாயுமோ என்ற பயத்தில் தான் காலத்தை ஓட்டுகின்றது.

அப்படி பயத்தில் காலம் தள்ளும் குடும்பத்தை பற்றிய படம் தான் இந்த படம்.

படத்தின் துவக்கத்தில் ஒரு விருந்தில் இருந்து வெளியேற்றும் ஒரு குடும்பம் கதா நாயகனின் குடும்பம். அந்த கூட்டத்தில் கணவனின் செயற்பாடுகளின் மேல் சந்தேகம் வருவதும் அதனால் விளையும் கோபத்தில் இருவரும் வாய் சண்டை இடுகையில் சாலையில் கவனமில்லாமல் ஓட்டி வண்டி விபத்துள்ளாகுகின்றது.

விபத்தில் மனைவி இறக்க தனியப்பாவாகிறான் ரசில்.

விபத்தில் தலையில் பட்ட அடியில் அடிக்கடி ரசிலுக்கு வலிப்பு வருகின்றது ஆகையால் நரம்பு சம்பந்தபட்ட சிகிச்சைக்கு 7 மாத காலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க மகளை மனைவியின் சகோதரி வீட்டில் ஒப்படைத்துவிட்டு செல்கிறான்.

சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பும் ரசில் தன் மகளை அழைத்து வர செல்ல அங்கே அந்த பெண்ணை மனைவியின் சகோதரியே தத்தெடுத்துக்கொள்வதாக இருப்பதாகவும் அப்படி கொடுக்க மறுக்கும் பட்சத்தில் ரசில் மீது குழந்தையை வளர்க்கவும் தந்தையாக இருக்கவும் தகுதியற்றவர் என்றும் வழக்கு தொடுப்பேன் என்று மிரட்டப்படுகின்றார்,

நம்பி மகளை இவர்களிடம் விட்டு சென்றதிற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று எண்ணிக்கொண்டு கோபமாக மகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு போகின்றார்.

தான் மருத்துவ மனையில் தங்கி இருந்த காலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிடுகிறார் ரசில். தனது முந்தைய படைப்புகள் போல் வரவேற்பை பெறாமல் கடும் விமர்சனத்திற்கு ஆளாகுகின்றது இந்த படைப்பு. அதனால் ரசிலின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் அவரது பெண்ணை தத்து கொடுக்க வேண்டும் என்று மிரட்டப்படுகின்றார்.

வீழ்ந்த தனது படைப்பை தொடர்ந்து சரி செய்ய மீண்டும் ஒரு புத்தகத்தை எழுதுகிறார் ரசில்.

அந்த புத்தகத்தை எழுத துவங்கியது முதல் மீண்டும் மீண்டும் அவருக்கு வரும் அழுத்தங்களினால் மறைந்து இருந்த வலிப்பு மீண்டும் மீண்டும் அவருக்கு வர துவங்குகின்றது. இந்த முறை மகளை விட்டு விட்டு சிகிச்சைக்கு செல்வது இல்லை என்று முடிவெடுக்கின்றார் ரசில்.

இடையில் ரசிலின் மகளை வளர்க்க ரசிலுக்கு தகுதி இல்லை என்றும் அதனால் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றார் மனைவியின் சகோதரி, அவளின் கணவர் ஒரு வக்கீல் மற்றும் நியூயார்க்கில் ஒரு பெரும் செல்வந்தர்.

உடனே இந்த வழக்கை எதிர்கொள்ள நிர்பந்திக்க பட்ட ரசில் தனது நண்பர்களானவர்களை நாடுகின்றார். அவரோ வழக்கை நடத்துவதனால் ஒன்று விளந்துவிடாது எப்படியும் பாதகமாகத்தான் முடியும் ஒரு முறை அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி பார் என்று அறிவுறுத்த பேச்சு வார்த்தைக்கு செல்கிறார் ரசில்.

அந்த பேச்சு வார்த்தையில் இந்த வழக்கை ரசில் கீழ்மை நீதிமன்றத்தில் வென்றால் மேல் முறையீட்டுக்கு மேல் மேல்முறையீடு என்று உச்ச நீதிமன்றம் வரை உன்னை இழுத்தடித்து ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று சிரித்துக்கொண்டே இனிமையான குரலில் இரம்மியமான ஒரு உணவுவிடுதியில் இரகுவரன் பாணியில் மிரட்ட படுகிறார் இரசில்.

தடுமாறிய இரசில் தனது வழக்கறிஞர் நண்பரை பதில் மனு தாக்கல் செய்து வழக்கை நடத்த பணிக்கிறார். அதற்காக ஆகும் செலவை சமாளிக்க முழுவேகத்தில் தனது அடுத்த புத்தகத்தை எழுவதில் தன்னை மூழ்கடித்துகொள்ளும் குழப்பத்தில் பெண்ணை பள்ளியில் இருந்து கூட்டி வருவதில் வரும் தாமத்தத்தில் இருந்து அவளை பெண்கள் மட்டும் படிக்கும் தனியார் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கட்டாய நிலைக்கும் தள்ளப்படும் பரிதாப நிலைக்கு நிலைமை இட்டு செல்கின்றது விதி.

புத்தகம் எழுது ஒரு வேலையை தவிர வேறு எதையும் செய்யமுடியா நிலையில் இரசில் அந்த நோக்கில் அவனது பாசமிகு பெண் கேட்கும் எதையுமே செய்யமுடியாத கால நெருக்கடியில் சிக்கி தவிப்பதும், அதனால் அந்த பெண் குழந்தை விரக்தியின் விளிம்புக்கே அழைத்து செல்வதும் காலக்கொடுமை.

இந்த சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் வழக்கு தொடுத்த வக்கீலின் வீட்டில் வேலை செய்யும் வேலைகாரியுடன் கள்ள தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மணவிலக்கு வழக்கு அவர் மீது பதியப்பட்டு இரசிலின் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு கைவிடும் நிலைக்கு தள்ளப்பட அந்த சந்தோசத்தில் வரும் வலிப்பு இரசிலின் உயிரை மாய்த்துவிடுகின்றது.

பாசமிகு தந்தை உயிருடன் இருக்கும் வரையில் அன்பும் அரவனைபும் கிடைக்காமலும் அவரது இறபிற்கு பிறகு அனாதையாக ஆக்கப்பட்டு பிறகு அதே செல்வந்த சித்தியின் பராமரிப்பில் வளர்ந்தாலும் அன்பில்லாமல் வளர்ந்ததினால் மன நோய்கு ஆளாகிறார் அந்த பெண் அமெண்டா.

பார்க்கும் ஆண்கள் அல்லது வேண்டும் என்று கேட்கும் ஆண்களிடம் எல்லாம் கழிப்பறையிலே உடலுறவு கொள்ளும் அளவிற்கு அந்த மன நோய் இட்டு செல்கின்றது. அப்படி இருக்கும் நோய்க்கு மன நல மருத்துவர்களிடம் பெரும் சிகிச்சையின் பகுதிகளில் அந்த செயற்பாடுகளுக்கு எனக்கு காரணம் தெரியவில்லை மற்றும் அப்படி கொள்ளும் உடலுறவுகளில் எனக்கு எந்த களிப்பும் இல்லை இருந்தாலும் தடுக்கமுடியாமலும் கட்டுப்படுத்த முடியாலும் தான் தன்னிச்சயாக செய்வதாகவும் சொல்கின்றார்.

தான் இழந்த தந்தையின் பாதிப்பு தான் இவ்வளவிற்கும் காரணம் என்றும் துணைக்கு யாராவது ஒருவனை தேர்ந்து எடுத்து காதல் கொள் பிறகு அவனோடு வாழ்வது தான் இந்த நோய்க்கு மருந்தாகும் என்று சொல்ல, அவளது அப்பாவின் கடைசி நூலின் இரசிகனாக இரு எழுத்தாளனை சந்தித்து காதலித்து பிறகு பல குழப்பங்களுக்கு பின் அவனோடு சேர்வதாக கதையை இந்திய பாணியில் முடித்து இருக்கிறார்கள்.

இது பேனா கொண்டு எழுத்தாளரின் கற்பனையில் எழுதிய கதையாக இருந்தாலும், அமெரிக்கர்களின் குடும்ப வாழ்கையும் தனிப்பட்ட வாழ்கையையும் சந்திக்கு கொண்டுவந்து மிகவும் எளிதாகவும் இயல்பாகவும் காட்டி இருக்கின்றது.

இந்த நிலை அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடமும் இப்போது இந்தியர்களில் சில பேர் சமூக ஆர்வலர்களாக காட்டிக்கொண்டு அரசியலில் குதிக்கும் எண்ணதில் இருக்கும் பணக்கார குடும்பங்கள் திணிக்கின்றன.

துவக்கத்தில் வயது வித்தியாசம் பார்க்காமல் பார்க்கும் போது எல்லாம் மிகவும் மரியாதையாக நடந்துக்கொள்வதாக காட்டிக்கொண்டு உடனே இருந்துக்கொண்டு குடும்ப நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு வரும் போதும் போகும் போதும் மிகவும் விலை உயர்ந்த கருவிபினால் படம் எடுப்பார்கள். பிறகு நீதிமன்றதில் அதே படத்தை காட்டி உண்மைக்கு மாறாக பச்சை பொய் வாய்மணக்க புளுகுவார்கள். அவர்களின் இடம் இருக்கும் பணத்தையும் புகழையும் செல்வாக்கையும் பயன்படுத்தி உங்கள் குடும்பத்தை சுக்கு நூறாக நொருக்கி உங்கள் பிள்ளைகளை உங்களையும் கட்டாய ஏழை நிலைக்கு தள்ளுவார்கள்.

இந்த செய்கையினால் இந்த பேராசை இந்திய பணக்காரர்களின் தோளில் மேலும் ஒரு சமூக சேவை பதக்கம் ஏறும் அந்த சேவைக்காக இவர்களின் அரசியல் வாழ்க்கை வலு பெரும். ஆனால் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நாளை அரசாங்கதிடம் நாட்களை தள்ள பணம் வேண்டி விண்ணபிப்பதில் இருந்து அளவில்லா நீதிமன்ற உத்தரவுகளை பெற்று நடுத்தெருவில் நிற்கும் நிலையை உருவாக்கிவிட்டு இந்த செயலுக்கு அவர்களுக்கு உங்களுக்கும் தெரிந்த நண்பர்களை கூட்டி உங்களிடம் இருந்து அழித்து ஒடுக்கி பெறபட்ட உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நீங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தில் கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போல் இவர்கள் விருந்து கொடுத்து மகிழ்வார்கள்.

இந்த கேவலமான செயலுக்கு பெயர் சமூக சேவை என்றும் இந்த கேவலமான நடவடிக்கைக்கு ஆதரவு திரட்ட சமூக வலைதளம் முதல் தமிழ்ச்சங்கம் வரை இரவர்களது கோர கரம் நீளும்.

இவர்களை அடையாளம் காணுவது எளிது

1) வயது வித்தியாசம் காட்டாமல் கண்ட அந்த நொடியில் இருந்தே ஒரு அதீத அக்கரை உள்ளவர்கள் போல் நடிப்பார்கள்.

2) உலக தமிழர்களுக்கு நிகழும் அரசியல் கொடுமைகளில் மிகவும் அக்கரை இருப்பவர்கள் போல் மிகவும் வசீகரமாக பேசுவார்கள், உதாரணம் ஈழத்தின் பேரில் நீங்காத பற்றுக்கொண்டவர்களாகவும் அப்பப்போ பணம் அனுப்பியதாக இரசீதும் காட்டுவார்கள்(யார் அப்பன் வீட்டு பணமோ....)

3) சும்ம சும்மா அவர்களது வீட்டில் எந்த காரணமும் இல்லை என்றாலும் வாரக்கடைசி, பொங்கல், தீபாவளி இல்லை என்றாலும் அப்பா தினம் அம்மா தினம் கொலம்பசு தினம் என்று விருந்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் கட்டாயம் குடும்பத்துடன் வந்து கலந்துகொள்ளுங்கள் என்று வற்புறுத்துவார்கள். அப்படி கலந்துகொள்ளவில்லை என்றால் மிகவும் உரிமையாகவும் கடுமையாகவும் கோபித்துகொள்வார்கள்.

4) ஒரு கட்டத்தில் இந்த செல்வந்த நச்சு குடும்பம் கணவன் மனைவியாக இருக்கும் உங்கள் குடும்பத்தில் உங்கள் மனைவிமார்களிடம் மிகுந்த மரியாதையும் அக்கரையுடனும் பேசவும் விசாரிக்கவும் தனியாக நீங்கள் இல்லாத சமயத்தில் தொடர்புகொள்ளவும் துவங்கும். இந்த புள்ளியில் இருந்து நீங்கள் வசமாக சிக்கினீர்கள் என்று பொருள். (ஆனால் நீங்களோ அடடே தாயகத்தை விட்டு வந்து இருக்கு நிலையில் இவ்வளவு அக்கரை கொண்டு குடும்ப நண்பர்களா என்று வியந்து போவீர்கள்)

5) இந்த குழுவில் ஒரு மனோ தத்துவ மற்றும் மனோவசியம் செய்யும் நபர் இருப்பார் என்றது சிறப்பு. கொஞ்சம் கொஞ்சமாக மனோவசியம் செய்யப்பட்ட பின் உங்களின் கையை கொண்டே உங்களின் கண்களை குருடாக்கும் இந்த போராசை நச்சுக் குடும்பம்.

இப்படி பாதித்த குடும்பங்களை கொண்டு சம்பாதிக்கும் பணத்திலும் புகழிலும் இந்த செல்வந்தர்கள் சுகபோக வாழ்கையில் திளைக்க நீங்களும் உங்களின் அன்பும் பாசமும் உள்ள குழந்தைகளும் கிட்டத்தட்ட வாழ்கையை தொலைத்து மேலே சொன்ன கதையில் காட்டி இருக்கும் அலவல நிலைக்கு தள்ளபடுவீர்கள், கவனம் தேவை.


Friday, February 17, 2017

ஒரு நீதிபதியை இதைவிட அதிகமாக யாரும் கேவலப்படுத்த முடியாது

பொதுவாக நீதிமன்றத்தையோ, நீதிபதியையோ அல்லது நீதிமன்ற தீர்ப்புகளையோ விமர்சிக்க ஒருவருக்கும் அனுமதி இல்லை. இது அனேகமாக எல்லா நாட்டிலும் இருக்கும் சட்டம். மக்களாட்சி கொண்ட நாடுகள் உட்பட.

இந்த பட்டியலில் நீதிமன்றமும் மற்ற நீதிபதிகளுக்கும் விலக்கு உண்டு அனைத்து நாடுகளிலும்.

அந்த அடிப்படையில் நீதியரசர் குமாரசாமியை வரிக்கு வரி விமர்சனம் செய்து தீர்ப்பை வெளியிட்டது இந்தியாவின் உச்ச நீதிமன்றம்.

அந்த தீர்ப்பின் சாரத்தை மக்கள் இப்படி எடுத்துக்கொள்ளலாம்.

வழக்கில் குற்றவாளி என்று அளித்த முந்தைய தீர்ப்பில் சொல்லப்பட்ட அடிப்படை காரணத்தையே மாற்றி காட்டியது மட்டுமோடு நில்லாமல் இந்த அளவிற்கு கொலை செய்தால் அது ஒன்றும் குற்றமாகாது என்றும் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியும் உள்ளார் என்றதாகும் என்பதாகும்.

அதோடு நிற்காமல் வழக்கு நடந்த காலகட்டத்தை எடுத்துப்பார்க்கும் போது முன் தீர்மானிக்ப்பட்ட ஒரு முடிவுக்கு அழக்காக வழியை அமைத்துக்கொடுத்தாகவும் கொள்ளலாம் என்றும் விமர்சித்துள்ளார்கள் உச்ச நீதிமன்றத்தில்.

இந்த தீர்பு மூலம் நீதிமன்றமும் நீதிபதிகளும் முறையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்வார்கள் என்று எந்த உத்திரவாதமும் இல்லை என்று மறைமுகமாக எடுத்துரைத்துள்ளார்கள்.

அறிவியலில் சொல்வது போல் இப்படி தான் நடக்கனும் சூழ் நிலைகள் எந்த மாற்றமும் கொள்ளாத வரை(on Ideal Conditions) என்று வரையறுப்பதை போல்.

அரசாங்கத்தில் ஒரு அங்கமாக விளங்கும் நீதித்துறை என்றது ஒரு பெயர் மட்டுமே, மைசூர் போண்டாவில் மைசூர் இருக்கும் என்று நீங்கள் நம்பினால் கம்பெனி பொருப்பாகாது என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது இல்லை மறுபடியும் நிறூபிக்கப்பட்டுள்ளது...........

Tuesday, February 14, 2017

தமிழக அரசையே கவிழ்க்க கூடிய வலிமை பீட்டாவிற்கு உண்டா

சல்லிக்கட்டு இனி தடையின்றி நடக்கும் என்று சட்டம் ஏற்றியதில் இருந்து தமிழக அரசு தள்ளாட ஆரம்பித்துவிட்டது.

சட்டம் இயற்றி வெற்றியை கொண்டாடும் தருணம் வரைக்கூட பொருக்க முடியாமல் தமிழகத்தில் வன்முறையை விதைத்து அரசையும் மக்களையும் முட்டிக்க வைத்து வேடிக்கை பார்க்கிறது பீட்டா.

அதிமுக அரசு அல்ல வேறு எந்த அரசாக இருந்தாலும் இப்படி எங்களோடு மோதினால் விளைவு இப்படி தான் இருக்கும் என்று இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் மிரட்டல் விடும் தொணியில் தமிழக அரசியலில் ஒரு சூராவளியை உருவாக்கி இருக்கிறது பீட்டா.

தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்த நாளைக்கு அடுத்த நாளே தன் படைகளுடன் சென்று பிரதமரை சந்தித்து விலை பேசி இருக்கிறது பீட்டா. விலையும் அதன் விளைவுகளும் பிடித்து போகவே படிப்படியாக இந்த அரசியல் அலங்கோலத்தை சிந்தாமல் சிதராமல் செயல்படுத்தி இருக்கிறது பீட்டா.

இன்னும் ஒன்றை கவனிக்கலாம், தமிழகத்தில் எது நடந்தாலும் பாசகவினர் தான் பதில் சொல்கிறார்கள். பெரும்பான்மையை நிறுபிக்கும் காலம் வரை ஆளுனரின் செயல்களை ஞாயப்படுத்துவதில் இருந்து ஆட்சி பணி மற்றும் காவல் துறை அதிகாரிகள் வரை என்ன என்ன செய்ய வேண்டும் என்று மறைமுகமாக மைய அரசு ஆணையிடவும். அந்த நகர்வுகளை தமிழக பாசக ஞாயப்படுத்தி பேசுவதையும் நம்மால் காணமுடியும்.

தமிழகத்தின் அடுத்த அரசு அமைந்த கொஞ்ச நாளிலேயே எல்லோர் கண்களிலும் மண்ணை தூவி இனி எப்பொழுதும் சல்லிக்கட்டோ அல்லது நாட்டு மாடுகளையோ அல்லது சொந்த நிலத்தடி நீரையோ இனி தமிழகத்தில் ஒருவரும் கொள்ள முடியா வண்ணம் வழி செய்யப்பட்டு விடும். உதாரணமாக ஐயோடின் இல்லாத உப்பை இனி யாரும் விற்கவும் வாங்கவும் கூடாது என்று தடை வந்தது போல் இருக்கும்.

அப்படி என்ன தான் மந்திரம் ஓதி இருப்பார் பூர்வா சோசிபுரா, மகுடிக்கு மயங்கின பாம்பு போல் மோடி அரசு அரசபயங்கரவாதத்தில் இயங்குகின்றது.

நாம் முன்னறே சொன்னது போல் இந்தியாவின் அடுத்த பிரதமர் பூர்வா சோசிபுரா தான். இவ்வளவு சக்திவாய்ந்த தலைமை அமைவது தான் வலிய பாரதமாக அமையும் என்று பாசக சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை தான்........

சட்டம் இயற்றிய பன்னீர் செல்வம் இனி அரசியல் துறவரம் மேற்கொண்டு காணாமல் போகவேண்டியது தான் போலும்.