Wednesday, October 30, 2013

காந்தியை கொன்றது கொலையாகாது -- கோட்சேவும் பதிவர்களும்

காந்தி சுதந்திர போராட்டம் நடத்தாவிட்டாலும் சுதந்திரம் கிடைத்து இருக்கும், காலத்தின் கட்டாயம் அது என்று துவங்கி ஏன் காந்தி கொல்லப்பட வேண்டும் என்ற விளக்கத்தை கொடுக்க என்று பயணித்த கட்டுரையை ஆவலுடன் படித்தேன்.

என்ன காரணத்தை சொல்கிறார்கள் என்று படித்ததில் ஏமாற்றமே மிஞ்சியது.

அந்த கட்டுரை கிட்ட தட்ட தினமலரில் செய்திகளை வாசிப்பது போல் இருந்தது. தினமலரில் இப்படி தான் செய்திகளை எழுதுவார்கள். தலைப்பை மட்டுமே படித்தால் போதும், உள்ளே செய்தியில் தலைப்பு சம்பவம் எங்கே நடந்தது என்றதை முதல் பத்தியிலும், எந்த ஊரில் நடந்தது என்றதை இரண்டாம் பத்தியிலும் எழுதுவார்கள். இவைகளை தவிர வேறு எந்த விபரத்தையும் உள் செய்திகளில் தெரிந்துக்கொள்ள முடியாது. ஆக தலைப்பை வாசித்து விட்டால் மேலே தெரிந்துகொள்ள ஒன்றும் இல்லை தினமலரில்.

அப்படி மேலே விபரங்கள் தேவைபடின் மற்ற இதழ்களில் தேடித்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அது போல தான் இந்த கட்டுரையும் இருந்தது.

வரலாறில்  நமக்கு தெரியாத ஒரு செய்தியையோ அல்லது இது வரை தெரிவிக்காத ஒரு மாற்று பார்வையோ என்றும் கூட நினைத்து தான் படிக்க நினைத்தேன். எல்லா கொலைகாரர்களும் அவர்கள் செய்த கொலை மிகவும் ஞாயமான செயல் என்றும். கொலையுண்ட நபர் அதற்கு தகுதியானவர் என்று தான் கூறி வருகிறார்கள்.

ஆதிரத்திலும் அவசரத்திலும் செய்துவிட்டு பின்னாளில் அவைகளுக்குகாக வருந்தியவர்களை தவிர மற்ற அனைவரின் வாக்குமூலமும் கோட்சேவின் வாக்குமூலமும் ஒன்றே. என்ன கோட்சே கொன்றது காந்தியை என்ற ஒரு வித்தியாசத்தை தவிர.

காந்தி என்று வேண்டாம் மற்ற யாராக இருந்தாலும் அவரை கொல்லும் உரிமையை சட்டம் ஒருவருக்கும் கொடுக்கவில்லை.

சரி கோட்சே தான் சரியான ஒரு காரணத்தை கூற முடியவில்லை, கோட்சேவின் செயல் சரியே என எழுதும் இந்த பதிவரின் பார்வையாவது என்ன என்று எழுதி இருக்கலாம் அதுவும் இல்லை. கிட்ட தட்ட நகைப்புக்கு என்று சொல்வது போல், "அதோ போரானே அவன் சுத்த மோசம்" என்பார்கள். உனக்கு அவனை தெரியுமா என்றால் இல்ல எனக்கு நல்லா தெரிஞ்ச ஒருத்தர் சொன்னார் மோசம்னு அதான் சொன்னேன் என்பார்கள். அதை போல் எழுதுகிறார் இந்த பதிவரும்.

கோட்சே காந்தியின் மீது வைக்கும் குற்ற சாட்டு இது தான், இந்து முசுலீம் கலவரத்தில் காந்தி முசுலீம்களுக்கு ஆதரவாக பேசினார் செயல்பட்டார் மற்றும் இந்து விழாக்களில் குறானை படிக்க செய்தார் அதனால் கோவில்களின் புனிதம் கெட்டுவிட்டதாகவும். இப்படியே விட்டால் முசுலீம்கள் நாட்டில் ஆதிகம் செலுத்துவார்கள் என்று அஞ்சியதாகவும், இவைகள் எல்லாம் நடக்காமல் இருக்கவேண்டும் என்றால் காந்தி இல்லாமல் போனால் இது நடக்காது என்று எண்ணியதாகவும் அதனால் கொன்றதாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார் கோட்சே என்று எழுதியுள்ளார் அந்த பதிவர்.

கோட்சேவின் வாக்குமூலத்திலும் சரி , இந்த பதிவரின் பதிவிலும் சரி கலவரத்திற்கு யார் காரணம் என்றோ அல்லது எப்படி அந்த கலவரத்தை புத்திசாலி தனமாக துவங்கிவிட்டு ஊரை இரண்டாக்கி வேடிக்கை பார்த்த அந்த கூட்டத்தை பற்றி எதுவுமே சொல்லாமல் இருப்பது ஆச்சரியமாக மட்டும் இல்லை பரிதாபமாகவும் இருக்கிறது.

சரி அந்த காலத்தில் இந்த விதமான தகவல்களை சேகரிப்பதும் தெரிந்துகொள்வதும் கடினம் தான். ஆனால் இத்தனை ஆண்டுகாலம் ஆன பிறகும் இந்து முசுலீம் கலவரம் யார் தொடங்கினார்கள் எதற்காக தொடங்கினார்கள், அந்த கலவரத்தால் குளிர் காய்ந்தவர்கள் காய்ந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் யார் என்று இதுவரை எந்த கட்டுரையிலும் செய்தியிலும் வரலாற்று ஆசிரியர்களும் சொல்ல கேட்டது இல்லை.

இந்த ஒரு கேள்விக்கு விடை தெரிந்துவிட்டால் நாட்டில் இந்து முசுலீம் கலவரம் வெடிக்கும் போது எல்லாம் கையாளுவது எளிதாக இருக்கும். மக்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.

நம்மால் வெகு சமீபத்தில் நடந்த குசராத்து கலவரத்திற்கு காரணம் யார் என்று கூட கண்டுபிடிக்கவோ அல்லது அப்படியே உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தாலும் நிரூப்பிகவோ அல்லது அப்படி தூண்டியவர்களை தண்டிக்கவோ முடியுமா என்ன......

காந்தியை கொன்றதிற்கு இது தான் காரணமாக இருக்க முடியும். அவர் கொல்லப்படுவதற்கு முன்னால் நடந்த மதகலவரம் வரை காந்தியின் தலையீட்டால் நிறுத்தியும் கட்டுப்படுத்தபட்டும் வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே.

இந்த கலவரம் குசராத்தில் வந்தபோது எப்படி ஒரு இன சுத்திகரிப்பு வேலை நடந்ததோ அதே சுத்திகரிப்பை நடத்த எண்ணி தான் காந்தியின் காலத்திலும் கலவரங்கள் தூண்டிவிடபட்டது. ஆனால் அந்த எண்ணம் ஈடேராமல் தடுத்தது காந்தியே. உயிர்போகும் விளிம்பு வரை உண்ணா நோம்பு மேற்கொண்டு நிறுத்தியதை நாடே அறியும்.

அப்படி இந்தியாவில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் இதுபோல பாக்கிட்தானத்திற்கு சென்று முறையிட இருப்பதாக காந்தியின் திட்டம் இருந்தது. இந்த நிலையில் காந்தி சுட்டு கொல்லப்படுகிறார் என்றால் என்ன நோக்கமாக இருக்கும்.

எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்து முசுலீம் கலவரம் முடக்கப்பட்டுவிட கூடாது என்ற காரணத்தை தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்.

 நிலவரம் இப்படி இருக்க கோட்சேவோ காந்தியால் அரசியலில் வெற்றிகொள்ள முடியாதவர் என்றும் அவரால் ஒன்றும் விளையபோவது இல்லை என்றும், இப்படி எந்த ஒரு பயனும் இல்லாமல் இருப்பவரை கொல்வது நாட்டிற்கும் மதத்திற்கும் நல்லது என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்த பதிவர் எழுதியுள்ளார்.

எந்த ஒரு தலைவரையும் நமக்கு பிடித்து ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை தான் ஆனால் அதே சமயத்தில் நமக்கு பிடிக்கவில்லை என்ற ஒரு காரணத்தை ஞாயபடுத்த அவர்களை கையால் ஆகாதவர் போல் சித்தரிப்பது எந்த விதத்திலும் சரியான செயல் இல்லை. கோட்சே ஒரு மத, இன, சாதி வெறியர் என்றதை இன்னமும் அதிகமாக ஆதாரங்களை கொண்டு நிருவ வேண்டியதில்லை. அவருடைய வாக்குமூலமே அதற்கு தகுந்த சாட்சியாக எடுத்துகொள்ளலாம்.

பிசேபி கட்சியின் சித்தாந்தங்கள் தான் பிடிக்கிறது, அடுத்தவர்கள் மகிழ்சியாக இருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அந்த கட்சியினர். அவர்களை போல் வயிற்றெறிச்சல் கொண்டவர் தான் நானும் என்று இந்த பதிவர் நேர்மையாக் ஒத்துக்கொண்டு போகலாம் அதைவிடுத்து ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையாக அழுது தள்ளி இருக்கிறார் இந்த பதிவர், பாவம் மனிதர், இதற்கு நம்பள்கி ஆதரவு வேறு என்ன கொடுமை சரவணா......


Thursday, October 24, 2013

மெட்ராசு கபே (Madras Cafe ) அடுத்து பூனா கபேன்னும் படம் இப்படி எடுப்பார் சாம் ஆபிரகாம் -- பாவம் மோடி

படம் துவங்கும் போது இந்த கதையில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் கற்பனையே அப்படி உண்மை சம்பவங்களை நினைவு படுத்துமாயின் அவைகள் ஏதேட்சையாக நடந்தவைகளாகத் தான் இருக்கும் என்று துவங்கி படம் இப்படி பயணிக்கும்.

பாங்காக்கில் ஒரு குசராத்தி சப்பானிய உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகள் நடத்துவார். அவரது உரையாடலில் திரும்பவும் காங்கிரசு ஆட்சிக்கு வரும் என்ற உத்தேச தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு எப்படியாவது இந்த முறை மோடியை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் அதற்கு சப்பானியர்கள் என்ன விலை கொடுப்பார்கள் என்று கேட்பார்.

அப்போது அந்த சப்பானிய உயர் அதிகாரிகள் அவர்களின் நாட்டில் தற்பொழுது வெடிக்க காத்துக்கொண்டு இருக்கும் அணு உலையில் காத்துக்கிடக்கும் 1331 குச்சிகளையும் அடியோடு நீக்கி அப்படியே வெடித்தாலும் சப்பான் தாக்கபடாத தூரத்திற்கு எடுத்து சென்றுவிட்டால் மோடி பிரதமர் ஆக்க எத்தனை கோடி ஆயிரங்கள் செலவாகுமோ அவைகளை லண்டனில் உள்ள ஒரு வங்கி மூலமாக கொடுக்க ஏற்பாடு செய்வதாக வாக்கு கொடுப்பார்கள்.

அதை தொலை தொடர்பில் கேட்ட மோடி தனது உயரதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை நடத்துவார். அந்த ஆலோசனையில் பூனாவின் சிறந்த காவலர்களில் திறமையான ஒருவரை சப்பானுக்கு அனுப்பி அங்கே அந்த அணு உலையில் வேலை பார்த்து பிறகு வேலை போனவர்களில் ஒரு தொழில் நுட்பபிரிவை உருவாக்கி அவர்களது துணையில் அந்த அணு உலையில் இருக்கும் அணு கதிர் குச்சிகளை வெளியில் கொண்டுவர திட்டம் இடுவார்.

அப்படி திட்டம் தீட்டும் போது சப்பானிய நாட்டின் தொழில் அதிபர்கள் காங்கிரது ஆட்சி இந்தியாவில் மீண்டும் மலர்வதை தடுக்க திட்டம் தீட்டுவதாக இங்குலாந்தின் உளவு துறைக்கு செய்தி பறக்கும். அதை தொடர்ந்து அங்கு வேலைபார்க்கும் ஒரு இந்தியர் அதுவும் பெண் பத்திரிக்கையாளர் வாயில் என்னேரமும் சுருட்டுனம் கூடவே ஒரு அதி உயர் சாரயத்துடனும் தனது படபிடிப்பு கருவிவை வைத்துக்கொண்டு பாங்காக்கு கள்ள தோணியில் பயணிப்பார்.

அதே தோணியில் மோடியின் ஆளும் பயணிப்பார், இருவருக்கும் இடையில் நடக்கும் வசனங்களில் காவலர் மாநில பற்றுடனும் நிருபர் ஞாய பற்றுடனும் பேசிக்கொள்வார்கள்.

பாங்காக்கு நகரை அடைந்ததும் ஒரு இரகசிய இடத்தில் காவலர் சப்பானின் அணுகுச்சிகளை அகற்ற கூட்டிய குழு கூடி நிற்கும். அந்த குழுவின் தலைமையை இந்த காவலர் சப்பான் மொழியில் அண்ணா என்று விளிப்பார். அவரும் பதிலுக்கு தான் கூட்டி வந்திருக்கும் குழுவிற்கு நல்ல விலையில் பணம் கொடுத்தால் அவர்கள் நல்ல ஒத்துழைப்பை தருவார்கள் என்றும். அப்படி தராவிடின் இந்த திட்டத்தை இந்தியாவில் காங்கிரசு கட்சிக்கு தெரியபடுத்துவேன் என்றும் மிரட்டுவார் சப்பான் அண்ணா.

காவலரோ வேலையின்றி புரக்கணிப்பட்ட உங்களுக்கு உதவும் எண்ணத்தோடு எங்களது முதல்வர் மோடி இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள் அதற்கு நன்றியாக நீங்கள் எல்லோரும் உங்களது உயிரை கொடுத்தாவது இந்த வேலையை முடிக்கனும் அதைவிடுத்து இப்படி உங்கள் நலனை முன்னிருத்தி பேரம் பேசினால் எப்படி என்று கண்டிபுடன் கேட்ப்பார்.

ஒரு வழியாக பேரம் பேசி சப்பான் அண்ணா தனது ஆட்கள் எல்லாம் செத்தாலும் தனக்கும் ஒரு பெரும் தொகை செயலுக்கு முன்னமே கிடைக்கும் என்ற உறுதியை பெற்று அந்த அணு குச்சிகளை சப்பானில் இருந்து எடுத்து இந்த காவலரிடம் கொடுக்க வேலைகளை முடுக்குவார்.

இந்த அணுகுச்சிகளை கதிர்வீச்சு தாக்காமலும் வெடிக்காமலும் வெளியில் கொண்டு வர பூனாவில் அசுர குழாய்களை ஒருவருக்கும் தெரியாமல் ஒரு மாநில அரசு நிறுவனம் மோடிக்கு செய்துகொடுக்க முன்வரும். அந்த குழாய்களை வடிவமைததும் அவைகளை கொண்டு சீன நிறுவனத்திடம் கொடுத்து செய்து சப்பானுக்கு அருகில் இருக்கும் கடற்கரையில் கொண்டுவந்து கொடுக்கும்மாறு ஒரு இரகசிய பேரமும் நடக்கும்.

இந்த இரகசிய பேரம் ஒருவருக்கும் தெரியாமல் இருக்க சீன முக்கா என்ற ஒரு உயர் அதிகாரியை அந்த பூனா காவலர் கண்டுபிடித்து வேலைக்கு அமர்த்துவார். அவரும் ஒரு மாத காலத்திலே தன்னிடம் இருக்கும் அடிமைகளை எல்லாம் தட்டி தகுடு எடுத்து குழாய்களை கொண்டுவந்து சப்பான் கடலில் கொண்டுவந்து கொடுத்துவிடுவார்.

அடுத்து அந்த குழாய்கள் எடுத்துகொண்டு போய் சப்பானிய அணு உலைக்கு 60 மைல் தொலைவில் கடலில் நின்றபடி இந்தியாவின் மற்றும் இரசிய செயற்கைகோளின் உதவியுடன் இயந்திர மனிதர்களை கொண்டு அணு உலையின் கொதிகலனுக்கு இணப்பு கொடுத்து கடல் நீர் கொண்டு தள்ளியே அந்த 1331 அணு குச்சிகளையும் கப்பலுக்கு அந்த இயந்தர மனிதர்களின் உதவியுடனே முடித்துவிடுவார்கள்.

அப்படி கொண்டு வந்த அணு குச்சிகளுடன் கப்பல் புறப்படும் போது அமெரிக்காவின் செயற்கை கோளில் சப்பானிய கடலில் ஒரு பெரிய கதிர்வீச்சு தென்படுவாதாகவும். அது என்ன என்று துப்பு துலக்கவும் தனது உளவு நிறுவனத்தை அனுப்பும்.

அந்த உளவு நிறுவனம் இந்த கதிர்வீச்சும் அதன் காரணமும் அறிந்து உலகுக்கு தெரிவிக்காமல் இந்தியாவில் காங்கிரசை மறுபடியும் எப்படி ஆட்சியில் கொண்டுவருவது என்று சிஐயேவிடம் கேட்கும்.

சிஐயேவும் மோடியை இல்லாமல் செய்துவிட்டால் காங்கிரசு பிழைக்கும் என்று தனது கணிப்பை சொல்லும். அந்த கணிப்பை எடுத்துக்கொண்டு எப்படி இதை செய்துமுடிப்பது என்று தனது சிறந்த வல்லுனர்களை சிஐயே கேட்கும். அவர்களும் இப்போதைக்கு ஒருவருக்கும் சந்தேகம் வராமல் மோடியை அடிக்க வேண்டும் என்றால் அது பாக்கிட்தானியர்களை கொண்டு செய்தால் தான் அமெரிக்காவின் மேல் ஒருவருக்கும் சந்தேகம் வராது என்று பரிந்துரைக்க. அப்படியே திட்டதினை செயல் படுத்துவார்கள்.

மறுமுனையில் மோடியின் ஆட்களோ அணு குச்சிகள் திட்டமிட்டபடி தமிழக எல்லையில் கொஞ்சம், வங்காள ஆந்திர எல்லையில் கொஞ்சம் என்று பிரித்து நிறுத்தி வைத்துகொண்டு இந்த 3 மாநில அரசுகளின் மின் தேவையை பூர்திசெய்ய மோடி உதவுவதாகவும். மின் பஞ்சத்தை நொடியில் காணாமல் போக வைப்பதாகவும் தேர்தல் வியூகங்களில் சொல்லும்.

இதை கேட்ட மற்ற மாநிலங்களும் தங்களின் மின் தேவைகளையும் போக்கும் மாறு மோடியிடம் மன்றாடும். அவரும் அவரை பிரதமர் ஆக்குவதாக இருந்தால் அவர் இந்தியாவில் தயாரிக்க போகும் மின்சாரம் சப்பான் வரை பாயும் என்றும் தனது தேர்தல் பிரச்சாரங்களில் முழங்குவார்.

ஒளிரும் பாரதம் என்றது போக ஒளிரும் உலகம் என்று அமிதாபச்சன், மணிரத்தினம், இரகுமான் என்று ஒரு கூட்டணியில் ஒரு 100 விளம்பர படங்களை இந்தியாவில் பேசும் அத்தனை மொழியிலும் சப்பானிய எழுத்துகளுடன் தயாரித்து வெளியிடுவார்.

இதை எல்லாம் பார்க்கும் பாரத மக்களும் மற்ற தலைவர்களும் என்ன அறிவு இந்த மோடிக்கு எப்படி பட்ட தலைவரை இந்தியா தவம் செய்து பெற்றுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் இந்தியா இப்படி இருளுக்குள் இருந்துவிட்டதே என்று மக்களும் தலைவர்களும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை மோடியின் உளவு கூட்டம் சேகரித்து மோடிக்கு கொடுக்கும்.

இப்படியே தேர்தல் அருகாமையில் சந்திராசாமி சுபிரமணியசாமி என்ற இருவர்களும் சேர்ந்து பாக்கிட்தானிய கூலி படைகளை தந்திரமாக மும்பையின் கரை வழியாக் குசாராத்துகுள் அழைத்து வந்து மோடியின் முக்கியமான மிகவும் நம்பகமான பெண் பாராளுமன்ற உருப்பினர் வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பார்கள்.

தேர்தலில் வெற்றி பெறுவதை உறுதிபடுத்தும் வேலைகளில் மூழ்கி இருந்த அந்த சிறந்த காவலர் குசராத்தில் என்னமோ நடக்க போகுது என்று அந்த லண்டன் குடிகார பெண் நிருபர் சொல்ல. உடனே இருக்கும் இடத்தை விட்டு காவலர் குசராத்துக்கு செல்வார்.

மற்ற எல்லா மாநிலங்களுக்கும் மிகுந்த பாதுகாப்புடன் சென்ற மோடி தனது மாநிலத்தில் நடக்கும் பொதுகூட்டதில் பேச செல்லுவார். தனது மண்ணில் தன்னை யாரும் எதும் செய்ய மாட்டார்கள் என்றும் பதிரிக்கைகளுக்கு சொல்லியும் செல்வார்.

இந்த இடத்தில் அந்த சிறந்த காவலர் வகுத்து கொடுத்த வியூகமான இன்னும் ஒரு கோத்ராவை மோடியின் கட்சியினர் பொதுக்கூட்டம் நடக்கும் மூலைக்கு எதிர் திசையில் சத்தம் இல்லாமல் நிறைய முசுலீமுகள் இருக்கும் இடத்தில் நடத்துவார்கள்.

அதே நேரம் பொது கூட்டத்தில் பாக்கிட்தானியர்களின் கூலிப்படை தங்களது கைவரிசையை காட்டும். அந்த சிறந்த காவலர் அப்போது தான் பொது கூட்டதிற்கு வருவார். அவர் நினைப்பார் அவரது ஏற்படுகளின் படிதான் செயற்கை கலவரம் நடக்கிறது என்று. ஆனால் உண்மையில் மோடியும் அவரது சிறந்த குழுவையும் அந்த பாக்கிட்தானியர்கள் அழித்து அவர்களும் மடிவார்கள்.

பிறகு நடந்தவை என்ன என்று விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைப்பார்கள் மத்திய அரசில், அவர்களது ஆணையத்தில் அமெரிக்கா எப்படி மோடியை கொல்ல திட்டம் தீட்டியது என்ற ஒன்றை மட்டும் வெகு விளக்கமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் எழுதி ஆதாரங்களுடன் கொண்டு கொடுப்பார் இந்த குசராத்தின் சிறந்த காவலர். ஆணையமோ பிறகு பார்கலாம் என்று சொல்லி புறக்கணிக்கும்.

உடனே அவர் அந்த லண்டன் குடிகார பெண் நிருபருக்கு அனுப்புவார், அவரும் சப்பானில் என்ன நடந்தது, அந்த பணம் என்ன ஆனது, 3 மாநிலங்களின் கரையில் நிறுத்திய அணுகுச்சிகள் என்ன ஆனது. இதில் யார் யார் எல்லாம் பாதிக்கப்பட்டார்கள். எத்தனை ஆயிரம் மக்களும் கடல் வளங்களும் எதிர்கால சந்ததிகளும் அழிக்கப்பட்டது என்ற உண்மைகளை எல்லாம் வசதியாக மறைத்து வைத்துவிட்டு, உலகுக்கே ஒளி கொடுக்க நினைத்த ஒரு தலைவனை எப்படி பாக்கிட்தானியர்களும் முசுலீம்களும் அமெரிக்க உளவு நிறுவனமும் சேர்ந்து அழித்தது என்றும் அதை காக்காமல் எப்படி தான் தவறவிட்டேன் என்றும் அழுதுக்கொண்டும் அந்த சிறந்த காவலர் பாதரியிடம் செல்லி பாவமன்னிப்பு கோட்கும் காட்சிகளுடன் படமும் முடியும்.

படத்தை பார்க்கும் வட இந்தியர்கள் ஆகா படம் என்ன அழகாக எடுத்து இருக்கிறார்கள், எத்தனை அழகாக இருக்கிறது என்று வாயார புகழ்ந்து தள்ளுவார்கள்.

கதிர்வீச்சால் பாதிக்கபட்ட 3 மாநில மக்கள் எல்லாம் இந்த படத்தை பார்த்துவிட்டு எங்கட சப்பானை பற்றியோ அல்லது நம்ம பாதிப்பை பற்றியோ ஒரு செய்தி கூட படத்தில் இல்லையே என்று தப்பி தவறி சொல்லிவிட்டார்கள் என்றால் போதும். பாதிக்காத மாநில காரர்கள், வந்து ஒரு குதி குதிப்பார்களே பார்க்கனும். 

மறுபடியும் இப்படி முழு பூசணிகாயை சோற்றி மறைத்து எந்த படம் எடுக்கலாம் என்று சாம் ஆபிரகாம் தேடி அலைவார் போலும்........

படத்தில் பாங்கக்கு, சப்பான், அமெரிக்கா, பாக்கிட்தானம் என்று சதிகள் நடக்கும் இடங்களில் எல்லாம் ஒரு பூனா கபே என்ற ஒரு பெயர் பலகையை காட்டவேண்டும், திரைகதை திருத்தத்தில் சேர்த்துகொள்ள சொல்லலாம்.....

Saturday, October 19, 2013

தி காஞ்சூரிங்கு ( The Conjuring )-- தமிழும் ஆங்கிலமும் திரைவிமர்சனம்


சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியாகி வெற்றிகரமாக பொருளீட்டிய படம் இது. 1970களின் கதைகளை சமீபத்தில் ஆலியுட்டு அதிகம் படமாக்குகிறது. அதுவும் பேய் படங்களில் இவைகள் அதிகம். காரணம் அறிவியலின் வீச்சில் காலப்போக்கில் இந்த வகை கதைகளும் அருகிபோனது காரணமாக இருக்கலாம்.

வெளி உலக மனிதர்களின் படங்களுக்கு என்ற ஒரு நாயகி இருக்கிறார் சிங்கோர்னி வீவியர். அனேகமாக எல்லா வெளி உலக மனிதர்களின் படங்களில் இவர் இல்லாமல் பார்க்க முடியாது.

அது போல இப்போது இந்த பேய் படங்களுக்கு என்று ஒரு நாயகியை பிடித்தி இருக்கிறார்கள் வேரா பிளமிங்கா. மிக சரியாக பொருந்துகிறார் அந்த வேடங்களில். அவரது கண்களில் வெளிப்படும் மிரட்சியும் வசனம் பேசும் விதமும் பார்பவர்களை அந்த பாத்திரத்தின் மீது பரிதாபமமும் அவருடன் நமக்கும் அந்த பயம் தொற்றி கொள்ளும் அளவிற்கும் இருக்கிறது.

முதல் முதலில் இவரது நடிப்பில் வெளியான ஆர்பன் படத்தில் அசத்தி இருப்பார். அதே அசத்தலில் இந்த படமும். அருமையாக நடித்து இருக்கிறார் வேரா.

அமெரிக்காவில் அன்று தொட்டு இன்று வரைக்கும் வாழையடி வாழையாக சொல்லும் சொல்லும் செய்திகள் இவைகள். ஒன்று ஆனாதை விடுதியில் இருந்து பிள்ளைகளை எடுத்து வளர்க்காதீர்கள் என்றும். வீட்டு கடன் கட்ட முடியாமல் வங்கிக்கு கொடுத்த சொத்துகளை வாங்காதீர்கள் என்ற இரண்டும். இவைகளில் வேரா ஏற்கனவே ஆர்பன் படத்தில் ஆனாதை இல்லத்தில் இருந்து பெண்ணை எடுத்து வளர்க்க முடிவெடுத்து முயலும் போது என்ன என்ன தொல்லைகளை சந்தித்தார்கள் என்று சித்தரித்து காட்டியது ஆர்பன் படம்.

இப்போது வீட்டை அடிமாட்டு விலைக்கு கிடைக்கிறது என்று பேய் கொண்ட வீடு என்று தெரியாமல் அடிமாட்டு விலைக்கு கிடைகிறது என்று ஒரு நடுதர குடும்பம் தனது 5 பெண்பிள்ளைகளுடன் அந்த வீட்டிற்கு குடியேறிய உடன் நடக்கும் பேயாட்டங்களை படத்தில் காட்டி இருக்கிறார்கள்.

இந்த கதை உண்மை கதையின் பின்னணியில் எழுதி எடுத்தது என்றும், வேரா நடித்த அந்த பாத்திரம் இன்றும் இருக்கிறார்கள் என்றும் கடைசியில் காட்டுகிறார்கள்.

படத்தின் பலம் திரைகதை மற்றும் இசையாக இருந்தாலும், அந்த கடைசி காட்சியில் வேரா பேசும் வசனங்கள் தான் மிகவும் முக்கியமாக அமைத்து இருந்தது. ஏனோ அவைகளை தமிழ் பிரதியில் அவசரத்திற்கு கிண்டிய உப்புமாவாக ஆக்கிவைத்துள்ளார்கள்.

பேய்யின் ஆக்கிரமிப்பில் ஆட்கொள்ளும் மனிதனின் மனம் அதற்கு முழு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றது தான் இந்த பேய் ஆக்கிரமிப்புகள் மற்றும் மனோவசியமும் அப்படி தான் என்று சொல்கிறார்கள். அப்படி அந்த சூனியகாரியின் பேய் அந்த ஏழை தாயின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக ஆகிரமித்து. கடைசியில் ஆட்கொண்டு மகளை கொல்ல தூண்டும் அந்த காட்சியில் வேரா அந்த தாயின் அதி மகிழ்ச்சி தருணங்களை தொடர்ச்சியாக பேசி தாயின் மனதை நல்ல வழிக்கு திருப்பும் தருணங்களை அவசரத்தில் கிண்டிய உப்புமாகாக மொழிபெயர்த்தும் பேசியும் உள்ளார்கள் தமிழில்.

மேலும் குழந்தைகள் பேசும் வசனங்களை பெரியவர்கள் கடினப்பட்டு சிறுமியாக பேசி இருப்பது இரசிக்கும் படியாக தமிழில் இல்லை.

ஒரு நல்ல பேய்படம் அந்த படத்தை இப்படியா ஒப்புக்கு சப்பாணியாக மொழிபெயர்கனும்.............

Tuesday, October 15, 2013

நய்யாண்டி -- இவ்வளவு பெரிய மோசடி விளம்பரமா இந்த படத்திற்கு

படம் எவ்வளவு பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. காட்சிக்கு காட்சி தொடர்பிண்மை, என்ன தான் நையாண்டி படமாக இருந்தாலும் இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னால் வந்த வவாச படத்தின் கரு அதை பின்னிய வசனம் காட்சி என்றாலும் எந்த சம்பந்தமும் இல்லாமல் வரும் காட்சிகள் இரசிக்கும் படியா இல்லை.

கிட்ட தட்ட ஒய்சி மகேந்திரன் நாடகம் போல இதுக்கு இப்ப இங்க சிரிக்கனும் என்று விளக்கம் சொல்லும் நிலையில் தான் படத்தின் நகைசுவைகள் இருக்கிறது.

கிட்ட தட்ட அன்றாட தொடர்களிலும் தற்பொழுது வருகின்ற படங்களில் வரும் காட்சிகளை அப்படியே அப்பட்டமாக காட்சியாக்கி இருப்பது தெரிகின்றது.

படத்தை பார்த்த படக்குழு கட்டாயம் கல்லா கட்டாது என்று தெரிந்து என்ன கேவலமான ஒரு விளம்பரம் இந்த படத்திற்கு........ ஐயோ பாவம் அந்த நடிகை......

Monday, October 7, 2013

ஓநாயும் ஆட்டுகுட்டியும் -- குருதிபுனலும்

குபுவில் இல்லாத அம்சம் இந்த ஓஆவில் இருப்பது என்ன என்று பார்த்தால் அது இளையராசாவாத்தான்  இருக்கும்.

மற்றபடி ஒரு மர்ம கதையின் போக்கும் திரைக்கதையும் அழகாக அமைத்துள்ளார் இயக்குனர்.

என்ன முந்தைய 5 படங்களை பார்த்த நமக்கும் இந்த படமும் ஏதோ ஒரு ஆங்கபடத்தின் தழுவலாகவே இருக்கும் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம் எளிதில்.

அந்த சக்கிர நாற்காலி வில்லனையும் அந்த காட்டிக்கொடுக்கும் காவலனையும் தவிர்த்து இருந்தால் இத்த படம் தழுவலோ என்ற சந்தேகம் கூட வந்திருக்காது.

நிறைவாக அமைந்த படம் என்ன நிறைய நட்சத்திரங்கள் இருந்திருந்தால் சொலித்திருக்கும், இருந்தாலும் பரவாயில்லை என்று மக்கள் பார்கிறார்கள் போலும்.

சின்ன கதை அதை வைத்துக்கொண்டு 2:30 மணி நேரம் திரையில் காட்ட போகிறார்கள் என்றதும் அடுத்தது என்ன என்ன என்ற மர்மம் கடைசிவரையில் நீடிப்பது சுவாரிசியம்.

அப்படி எங்கே தான் சென்று தப்பிக்க போகிறார்கள் என்று யூகிக்க முடியாத முடிவு நிறைவான முடிவு.

இந்த இயக்குனரின் படங்களை பாராட்டி எழுதியதில்லை காரணம் மூலபடத்தின் வாசனை அப்படியே வருவதான். ஆனால் இந்த படத்தை அழகாக எழுதியிருக்கிறார் இயக்குனர்.

என்ன இளையராசாவின் அற்புதங்கள் இவரின் கதையோடு பார்வையாளர்களை ஒரு ஆட்டு ஆட்டி வைக்கிறது நமக்கே தெரியாமல். இராசா இராசா தான் உங்களை போல் இசைக்க இன்னமும் தமிழில் ஆள் இல்லை, பார்க்கலாம் ஏதும் படம் வருகிறதா என்று.....

குபுவை கமலும் அர்சுனும் விற்றுக்கொடுத்தார்கள், இந்த ஓஆவை மக்கள் விற்றுக்கொடுப்பார்களாக......

வாழ்த்துகள் மிசுகின், இன்னமும் இது போல் வசூலும் கூடிய படைப்புகளை கொடுக்க வேண்டுவோம்.

என்ன இவரது நண்பர் என்று சொல்லிக்கொள்ளும் சாரு ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் மௌனம் காத்துகொண்டு தான் இருக்கவேண்டிய நிலை பாவம் அவருக்கு.... பார்ப்போம் என்ன எழுதுகிறார் என்று.....

6 மெழுகுவர்த்திகள் -- திரைவிமர்சனம் -- The Changeling

ஆங்கிலப்படத்தை பார்த்து அச்சுபிசக்காமல் எடுக்கும் காலம் போலும் இது.

என்ன கதையில் சிற்சில மாற்றங்கள் மற்றபடி கதை அப்படியே மூலகதை.

ஆங்கிலத்தில் ஏஞ்சலீன தமிழில் சாம் அவ்வளவு தான் வித்தியாசம்.

ஏன்ஞலீனாவின் கணவன் ஓடிவிட்டதாக காட்டுவார்கள், சாமின் மனைவி வந்துடுங்க இன்னமும் எத்தனை பிள்ளை வேண்டும் என்றாலும் பெற்று தருகிறேன் என்று அதற்கு ஈடாக சொல்லுவார்....

ஆங்கிலத்தில் அந்த வயது சிறுவர்களை கடத்தி துன்புறுத்தி கொலைசெய்வதில் அவனுக்கு ஒரு அலாதி இன்பம், இது உண்மையில் நடந்த கதை அமெரிக்காவில்.

தமிழிலோ சிறுவர்களை கடத்தி பணம்பன்னுவது தொழிலாக காட்டப்பட்டு இருக்கிறது.

ஒரு அடிதடி நடைகை, அம்மாவாக நடிக்கும் காட்சிகளை மிகவும் அருமையாக காட்சியாக்கி இருப்ப்பார் ஈசுடுவுட்டு. குறிப்பாக அந்த புது பையம் அம்மா என்று விளிக்கையில் தட்டைவிட்டு எறிந்து பேசும் வசனங்களும் ஏஞ்சலீனாவிற்கு புதிது. சாம் பாவம் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் இவைகளுக்கு தமிழில்.

ஆங்கிலத்தில் தப்பித்த பையன் கடைசியில் தரும் நம்பிகையை தமிழில் வெற்றியாகவே காட்டியிருக்கிறார்கள்.

ஒரு வேளை ஆங்கிலத்தில் காட்டியது போல் இளம் பிள்ளைகளை கொண்டுவர்ந்து நறுக்கி கொல்லும் காட்சிகளை வைத்தால் அவைகளுக்கு அச்சாரமாக அமையுமோ என்று கதையை மாற்றி இருக்கலாம். இருந்தாலும் கதை எங்கு இருந்து எடுத்து ஆளப்பட்டது என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.....

ஆங்கிலத்தில் மற்ற பையனை கொண்டு வந்து கொடுத்து இது தான் உனது பிள்ளை என்று சொன்னதற்கும். அப்படி மற்ற பிள்ளையை கொடுத்ததை நீதிமன்றம் சென்று சொல்வேண் என்று சொன்னதற்காக பைத்தியகாரியாக சித்தரித்து துன்புரியதற்கும் அந்த காவலரும் அவரது மேலதிகாரியையும் வீட்டிற்கு அனுப்பும் காட்சிகள் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

சமூக விழிப்புணர்வுகு என்று படம் எடுத்தால் அவைகளில் இவைகளும் இருக்க வேண்டும். இல்லாமல் போனம் ஏமாற்றமே... என்ன தான் மோசமாக சமூகம் மாறி இருந்தாலும் அதிலும் நெஞ்சில் ஈரம் உள்ள மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் எல்லா இடங்களிலும்.

Sunday, October 6, 2013

தங்க மீன்கள் - திரைவிமர்சனம்

படம் முழுக்க தந்தையின் தவிப்பை அடுத்தவர்கள் பைத்தியகார தனமாக பார்க்கும் விதமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

மனைவியும் கூட தன்னை அவமானபடுத்துவதாக நினைக்கும் தந்தை மகளை விட்டு பிரியும் காட்சிகளுக்கு கொடுக்கும் விளக்கம் போதுமானதாக இல்லை.

மகளின் பாத்திரப்படைப்பு அபாரம். குறிப்பாக அப்பாவுக்கா என்று மகள் பள்ளியில் திருடும் அளவிற்கு செல்வதாக காட்டி இருப்பதுவும்....

அப்பாவிற்கு காய்ச்சல் என்று தெரிந்ததும் உங்களை யாருப்பா பார்த்துகொள்வார்கள், கஞ்சி வச்சி கொடுப்பாங்க என்று பதரும் காட்சிகளும். மடியில் கிடைத்தவைகளை அள்ளிக்கொண்டு அப்பாவிற்கு கஞ்சி வைத்துகொடுக்க கிளம்பும் காட்சிகளும் அருமை. அப்பாக்கள் மகளை என்னை பெற்றவளே என்று விளிக்கும் சொல்லின் மகிமை இது....

மகளின் அப்பாவி தனத்தை கலைக்காமல் அவளது அப்பாவி தனத்திற்கு தீனிபோடுவதும், அவளது அப்பாவி தன கேள்விகளுக்கு பொருமையாக பதில் சொல்லும் காட்சிகளிலும் பொறுப்பான அப்பாவாக தெரிகிறார்.

அப்பாவின் பொறுப்பில் பாதி கூட அடுத்த சொந்தங்களுக்கு இல்லாமல் காட்டுவது நம்பும் படியாக இல்லை. குறிப்பாக தாத்தா பாட்டுக்கு கூட இல்லாமல் இருப்பதாக காட்டும் காட்சிகளை சொல்லலாம்.

எவிட்டா ஆசிரியையின் காட்சிகளை இன்னமும் கொஞ்சம் அதிகம் காட்டி இருந்தால் விளக்கம் அதிகம் சொல்லி இருக்க தேவை இல்லை....

மகளுடன் எடுத்த காட்சிகளுடன் மற்றவர்களுடனும் எடுத்து இருந்தால் இன்னமும் நிறைவாக இருந்து இருக்கும். மனைவி உட்பட அனைவருக்கும் காட்சிகளில் வஞ்சம்.....

காதலித்து மணந்த மனைவி கணவனுடன் தனியாக பேச கடை தொலைபேசியில் பேச என்ன அவசியம் என்று சரியாக சொல்லவில்லை அதுவும் மகளிடம் இவ்வளவு பாசம் உள்ள தந்தை அப்படி நடந்துகொள்ள அவசியம் இல்லை என்ன தான் கோபம் இருந்தும்.....

அப்படி இப்படி குறை இருந்தும் படம் நன்றாக வந்து இருக்கிறது. கற்றது தமிழில் கண்ட குறைபோல் அவனால் ஆகாமல் போனதற்கு தமிழ் படித்தது தான் காரணம் என்று காட்டுவது போல் இந்த படத்தில் மகளுக்கு இருக்கும் குறைக்கு அடுத்தவர்கள் தான் காரணம் என்று காட்டுவது போல் காட்சிகள் அமைந்து இருப்பது சோகம்.

படத்தின் துவக்கத்தில் இருந்து சேரன் எங்கோ மறைந்து கொண்டு பேசுவது போல் ஒரு தோற்றம் வருகிறது வருகின்ற படத்தில் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.......

சரண்யாவுக்கு மாற்றாக ஒரு இளம் அம்மாவை கண்டுபிடித்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர், இனி அதிக படங்களில் இது மாதிரி கையால் ஆகாத அம்மாவா இவரை பார்க்கலாம்.........
பாசமிகு அப்பா.... அதைவிட பாசமிகு மகள்........அருமை.