Wednesday, August 30, 2017

நல்லவேளை பாசக நித்தி ஆணையம் குடும்பங்களை பற்றி எதுவும் ஆராயவில்லை

இந்த நித்தி ஆயோக்கின் ஆயோக்கியர்கள் அவ்வப்போது கிறுக்கு தனமாக பிதற்றுவார்கள் அப்படி பிதற்றியதின் உச்சம், அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்ற ஆலோசனை.

ஏன் அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுக்க வேண்டும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையில் வீழ்ச்சி அடைந்து நலிவடைத்துள்ளது அதனால் தனியாரிடம் தரவேண்டும் என்று ஆலோசனையை வழங்கியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏமாளி இந்தியர்கள் இருக்கும் வரையில் பிடுங்கி திண்பது என்று இருக்கிறார்கள் போலும் இந்த தனியார் நிறுவனத்தினர்கள்.

வருமானம் கூடிப்போச்சு அதனால் உங்களுக்கு பொதுவினியோகத்தில் பொருட்கள், சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவு செய் என்று சொல்லாமல் சொல்கிறாகள். மேலும் நாடெங்கிலும் உள்ள அரசு பள்ளியில் இலவச கல்வியை அடிப்படை உரிமையாக பெற்று வந்தார்கள். இப்போது பொருட்களுக்கு செலவழித்தது போக மீதம் இருக்கும் பணத்தை அடிப்படை கல்வியில் இருந்து செலவு செய் என்று சொல்கிறார்கள்.

இந்த நித்தி ஆயோக்கியர்களை குடும்ப நலம்பற்றி சொல்ல சொல்லி இருந்தால் எந்த மனைவிமார்களும் வசதியான ஒரு வாழ்க்கையை வாழவில்லை ஆகையால் இனி மேல் இவர்களுக்கு கணவன் தேவை இல்லை பதிலாக தனியார் வழங்கும் கணவன் சேயைதான் வாங்க வேண்டும் என்று உத்தரவிடுவார்கள் போலும்.

தலை இருந்தா தானே தலைவலி என்று சொல்வதை போல், நல்ல அரசு. இந்த அரசு தான் வேண்டும் என்று தவமிறுந்த இந்தியர்களே உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.......

Tuesday, August 29, 2017

அன்புமணி மருத்துவ மாணவ சேர்க்கை ஊழல் இருக்கட்டும் உங்களின் அரசு மருந்து ஆலை மூடலுக்கு தண்டனை எப்போது

மருத்துவ மாணவர் சேர்க்கையில் போலி சான்றிதழ்ல்களை கொடுத்து ஊழல் செய்தோரை தண்டிக்க வேண்டும் என்ற உங்களின் ஞாயமான கோரிக்கை புரிகின்றது. அதே போல் நீங்க சுகாதார அமைச்சராக இருந்த போது இந்தியாவில் இயங்கி வந்த அரசு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளை எல்லாம் மூடி அயலக மருந்தாலைகளில் தயாரிக்கும் மருந்துகளை தான் இனி அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைவரும் வாங்க வேண்டும் என்று நடந்துக்கொண்டீர்.

அதை அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் அடுத்த முதல்வர் நான் தான் என்று கையில் ஒரு எழுது கோலுடன் கையெழுத்து தான் போடுவேன் என்று விளம்பரப்படுத்துனீர்கள். அதுகாரும் தந்தி தொகாவில் பாண்டே கேட்ட இதே கேள்விக்கு அந்த மூடப்பட்ட மருந்தாலைகளுக்கு(தமிழக்த்தில் உதகமண்டலத்தில் ஒரு அரசு மருந்தாலை) பதில் உலக தரமான அளவில் புதிய ஆலைகளை திறக்க உத்தரவிட்டதும் அது விரைவில் சென்னையில் திறக்கபடும் என்றும் சொன்னீர்கள்.

ஆனால் இது வரையில் அந்த ஆலையும் திறக்கபடவில்லை, சாதாரண எளிய மக்களும் அவர்களுக்காக இயங்கி வந்த அரசு மற்றும் அரசு சார்பு மருத்துவமனைகளும் தனியாரிடம் தான் இப்பொழுதும் மருந்துகளை வாங்குகின்றனர்.

இந்த கொள்ளைக்கு துணை போன உங்களுக்கு எப்போது தண்டனை என்ன தண்டனை என்று நீங்களே சொல்லிவிடுங்கள் அன்புமணி.

வெறும் 1 ரூபாய்க்கும் 2 ரூபாய்க்கும்  கிடைத்துக்கொண்டு இருந்த பேராசிட்டமால் இன்றைக்கு எவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கின்றது தெரியுமா. உயிர்காக்கும் மற்றும் மிகவும் அவசியமான மருந்துகளை தயாரித்து வழங்கிய அந்த 4 அரசு மருந்தாலைகளை மூட சொல்லி சொன்ன அந்த தனியார் மருத்தாலைகள் யார் யார், என்ன என்ன காரணங்களுக்காக அந்த ஆலைகளை நீங்கள் மூடினீர்கள் என்று தனியாக ஒரு விளக்கம் அளிக்க தேவை இல்லை. இன்றைக்கு பாசக எப்படி புது புது காரணங்களை சொல்லி பொது வினியாகங்களை மூடி தனியார் நிறுவனங்களிடம் பொருட்களை வாங்கிகொள்ளுங்கள் என்று சொல்கின்றனவோ அதை அன்றே செய்து முடித்த முன்னோடியல்லவா பதில் சொல்லுங்கள்.

Monday, August 28, 2017

மோடியின் தனிப்பட்ட கருத்து -- மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது

பொதுவாக பாசகவின் யார் யார் எது எது பேசினாலும் அது அவரது தனிப்பட்ட கருத்து என்று தான் தமிழக பாசகவினர்கள் சொல்வார்கள். அந்த வகையில் பார்த்தால் மோடி சொல்லி இருக்கும் இந்த மதத்தின் பெயரால் வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது என்ற கருத்தும் மோடியின் தனிப்பட்ட கருத்து தான் போல.

இந்த மாதிரியான கருத்துக்களை மோடி கடைசியாக அமெரிக்க பயணம் சென்று வந்ததில் இருந்து அடிக்கடி சொல்கிறார். யாருடைய வற்புறுத்தல் என்று தெரியவில்லை.

மதத்தின் பெயரால் 3 நாட்களில் 1,60,000 மக்களை கொன்று குவித்தவர் இந்த மோடி, அவர் சொல்கிறார் மத்தின் பெயரால் வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது என்று.

Monday, August 21, 2017

ஒரு டீக்கடைகாரரும் அவரது பிட் நோடீசு அடிக்கும் நண்பரும்

ஒரு ஊரில் ஒரு டீக்கடைகாரர் இரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தார். அந்த கடைக்கு தேவையான காகிதங்களை பெற எண்ணி நகர் முழுதும் அலைந்தார். கடைசியில் அவருக்கு கட்டும் விலையில் வினியோகிக்க முடியாமலும், நன்றாக எழுத்துக்களும் அச்சும் வரவில்லை என்று மக்களால் நிராகரிக்கப்பட்ட பிட் நேடீசுகள் இந்த டீக்கடைக்காரின் விலையடக்கத்தில் கிடைக்க அங்கேயே வாங்கி அந்த பிட் நோடீசுகளில் அன்றாடம் டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பொட்டலம் மடித்து கொடுத்துவந்தார்.

நாளடைவில் அந்த பிட் நோடீசு அடிப்பவரும் டீக்கடைக்காரரும் நெருக்கமான் வியாபாரிகளானர்கள். பிட் நோட்டீசு அடிப்பவருக்கு டீக்கடைக்கு கொடுக்கும் மட்ட காதிகங்களில் தான் அதிக இலாபம் வந்தது. ஆகவே கொஞ்சம் கொஞமாக அச்சடிக்கும் நுட்பங்களையே மறக்க துவங்கினார்.

டீக்கடைக்காரரும் பிட் நோட்டீசு அடிப்பவரும் அன்றாடம் மாலையில் சந்தித்துக்கொண்டு தங்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கலந்தாலோசிக்க துவங்கினர். அங்கனம் பேசும் போது எல்லாம் பிட் நோடீசுகாரருக்கு கோடி கோடியில் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் அதற்கு தகுந்தார் போல் அச்சடிக்கும் திறனோ முயற்சியோ இல்லாமல் இருந்தார்.

இப்படி காலம் உருண்டோடியதில் டீக்கடைக்காரர் ஒரு நாள் அந்த நாட்டின் பிரதமர் ஆனார். டீக்கடைக்காரருக்கு அவரது நண்பர்கள் யாவரும் சேர்ந்து ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் அந்த பிட் நோட்டீசு நண்பரும் கலந்துக்கொண்டு இருந்தார்.

 நீண்ட நாளைக்கு பிறகு சந்தித்துக்கொள்ளும் இந்த நண்பர்கள் தங்களது பழைய நட்பையும் அது தொடர்பான பேச்சுக்களையும் அசைப்போட்டர்கள். அப்போது தான் டீக்கடைக்காரர் பிட் நோட்டீசுகாரருக்கு எதிர்காலத்தில் தான் உதவுவேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வரவும், மேலும் பிட் நோடீசுகாரர் மிகவும் ஏழ்மையான நிலையில் சாப்பாட்டிற்கே அலையும் நிலையி அன்றாடம் காட்சியாக வாழ்வதும் பார்த்து சகிக்காமல் மனமுடைந்து போகிறார் அந்த டீக்கடைக்காரர்.

அன்றைய இரவு முழுதும் மனவலியில் துடித்த அந்த டீக்கடைக்காரர் காலையில் ஒரு யோசனை பிறக்கிறது. அன்று தனது அமைச்சரவை சக்காக்களை அழைத்து இன்று இரவு ஒரு முக்கிய முடிவை அறிவிக்க போகின்றேன் என்று மட்டும் சொல்லிவிட்டு பாராளுமன்றத்திலே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.

இரவு அந்த நாட்டில் இருக்கும் 1000 மற்றும் 500 மதிப்பு கொண்ட பணம் இனி செல்லாது என்று அறிவிக்கின்றார்.

 நாட்டுமக்களும் அமைச்சர்களும் குழம்பிப்போய் நிற்கும் போது, அந்த பிட் நோட்டீசுகாரர் மட்டும் நாட்டில் இருக்கும் பழைய அச்சடிக்கும் இயந்திரங்கள் எங்கே சல்லீசாக கிடைக்கும் என்று தேடி அலைகிறார். அங்கே இங்கே என்று அலைந்து கடைசியில் அந்த நாட்டில் வெகு வருடங்களுக்கு முன் இருந்த லாட்டரி சீட்டை அச்சடிக்கும் இயந்திரம் தான் இவரின் விலைக்கு படிந்த விலையில் கிடைக்கிறது. அந்த இயந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த டீக்கடைக்காரரை தொடர்புகொண்டு தான் வாங்கிய இயந்திரம் பற்றி செய்தியை தெரிவிக்கிறார்.

டீக்கடைக்காரருக்கோ மகிழ்ச்சி தாங்க முடியவில்லை, தனது பழைய நண்பருக்கு தான் நினைக்கும் திட்டங்கள் அவருக்கு புரிகின்றதே என்று அகமகிழ்ந்து பழைய 1000 மற்றும் 500 பணதிற்கு பதில் புதிய பணத்தை இரவோடு இரவாக அடிக்கும்படி பணிக்கிறார் டீக்கடைக்காரர்.

பிட் நோட்டீசு அடிப்பவரும் தன்னால் முடிந்தவரை அந்த லாட்டரி இயந்திரத்தில் பணத்தை இரவு முழுவதும் காலால் மிதித்தே பிட் நோட்டீசு அடிப்பது போல் அடித்து முடிக்கிறார். காலையில் அச்சடித்த புதிய லாட்டரி டிக்கட்டுகள் போல் இருக்கும் அந்த பணத்தை கொண்டு சென்று தனது நண்பனிடம் காட்டுகிறார். அதை பார்த்த டீக்கடைக்காரர், எவ்வளவு பணம் அச்சடித்து இருக்கிறீர்கள் என்று வினவுகிறார். இரவு முழுவதும் அச்சடித்ததில் 500ல் ஒரு 500ரும் 1000த்தில் ஒரு 500ரும் அச்சடித்தாக சொல்கிறார்.

அந்த டீக்கடைகாரர் ஒரு காகிதத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு என்றால் எத்தனை நாளில் பூர பணமும் அச்சடிக்க முடியும் என்று கணக்கிட்டு பார்த்து, இனிமேல் நீங்கள் 1000 பணம் அச்சடிக்க வேண்டாம் அதற்கு பதில் 2000 பணமாக அச்சடிங்கள். 2000 பணத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று சொல்கிறார்.

இப்படியே ஒரு 50 நாட்கள் செல்கின்றது, 50 நாட்களுக்கு பிறகு அந்த நாட்டில் அது வரையில் 2000 பணத்தை பார்க்காத மக்கள் 2000 பண தாளை கண்டதில் ஆனத்த கூத்தாடி பார்ப்பவர்கள் எல்லோருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள்.

பிறகு மெதுவாக 500 பணத்தாளும் அச்சடித்து கொடுத்தார். இப்படியே 10 மாதத்தில் அந்த பிட் நோட்டீசு அடிப்பவரின் அச்சு வேலை தொடர்கின்றது. 10 மாதத்திற்கு பிறகு 200 பணத்தாளும் 50 பணத்தாளையும் மிச்சம் மீதி இருக்கும் மையை வைத்து அடித்து கொடுக்கிறார் அந்த பிட் நோட்டீசுகாரர்.

அப்போது அந்த டீக்கடைக்காரர் தனது நண்பரை பார்த்து கேட்கிறார் கோடி கோடியாக அச்சடித்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றீரே இப்போது திருப்தியா என்றார். அதற்கு அந்த பிட் நோட்டீசுகார் மிக்க நன்றி, இது போல் இன்னும் மிச்சம் இருக்கும் பணங்களையும் அச்சடிக்கும் வேலையையும் எனக்கே கொடுங்கள், சம்பாதித்த செல்வத்தில் பக்கத்து நாட்டின் லாட்டரி அடிக்கும் இயந்திரம் ஒன்றை வாங்கி இருப்பதாக சொன்னார் அந்த பிட் நோட்டீசுகாரர்.

தனது பிட் நோட்டீசுகாரரின் நட்பை மற்றவர்களு தெரியாமல் பார்த்துகொள்ள அந்த டீக்கடைக்காரர் தந்திரமாக நாட்டின் முன்னேற்றத்தின் பால் பற்றுக்கொண்டு புதிய பணத்தை தயாரிக்க உத்தரவிட்டதாகவும். அனைவரும் ஒத்துழைத்தால் தான் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று தெரிவித்தார். உடனே மக்கள் அனைவரும் இன்னும் ஒருமுறை இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்.

இன்றைக்கும் அந்த பிட் நோட்டீசுகாரர் மும்முரமாக தனது பழைய இயந்திரத்தில் மிச்சம் மீதி இருக்கும் மையை எல்லாம் ஊற்றி அச்சடித்துக்கொண்டு அயராது உழைக்கிறார் தனது உற்ற நண்பனுக்கு உதவும் பொருட்டு........

Thursday, August 17, 2017

நீட் அவசர சட்டம் - தமிழகத்தின் அடுத்த இரும்பு பெண்மணி நிர்மலா சீத்தாராம் தான் போல

 நீட் அவசர சட்டம் கொண்டு வாருங்கள் மைய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று 3 நாட்களுக்கு முன் சொன்னார் நிர்மலா, அடுத்த நாள் தமிழகத்தின் சட்ட பேரவையில் அவசர சட்டம் நிறைவேற்றப்படுகின்றது. அடுத்த நாள் மைய சட்ட அமைச்சகத்தில் ஒப்புதல் வழங்கப்படுகின்றது, இன்று 3வது நாளில் மனிதவள மற்றும் கல்வி துறையிலும் அங்கிகரிக்கப்பட்டு செயலுக்கு வந்துவிட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் மக்கள் அறியப்படுவது, பாசக நினைத்தால் 3 நாளில் சல்லிக்கட்டு மீளக்கொண்டு வந்து இருக்கனும். ஆனால் 10 இலட்சம் மக்கள் மெரினாவில் கூடி தமிழக அரசை கழுவி ஊற்றியபிறகும், பீட்டாவின் தமிழக தலைவர் தமிழ் பெண்களை எல்லாம் பாலியல் சுகத்திற்கு அலைபவர்கள் என்று வக்கிரமாக பேட்டிக்கொடுத்த பிறகும், மெரினாவை சுற்றியுள்ள குப்பங்களை எல்லாம் காவலர்களே தீயிட்டு கொளுத்திய பின்பு தான் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் இல்லை.

இப்படி ஒரு விவகாரத்தை தீர்க்க வேண்டும் என்றால் கத்தி இன்றி இரத்தம் இன்றி 3 நாளிலே எல்லா விதமான ஒப்புதல்களை எல்லாம் பெறப்பெற்று முடிக்க முடியும் என்று காட்டியுள்ளார்.

மேலும் குட்டி குட்டி தலைவர்களான தலைவர்களான பொன்ரா தமிழிசை எச்சி இராசா எல்லாம் பேட்டி கொடுப்பதற்காக வேலை கொடுக்கப்பட்ட தலைவர்கள் மட்டும் தான் முடிவுகள் எடுப்பதும் செயல்படுத்துவது இந்த இரும்பு பெண்மணி நிர்மலா என்று தான் காட்டியுள்ளார்கள்.

முடவனுக்கு கொம்பு தேன் மேல் ஏன் ஆசை என்று இனி அந்த குட்டி குட்டி தலைவர்கள் மற்றும் விவாத தலைவர்களும் தங்களின் இரும்பு பெண்மணியின் பின் அணிவகுத்து செயல்படுவது தான் அவர்களுக்கு நல்லது என்றும் மைய பாசக தெளிவிபடுத்தி உள்ளதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

Wednesday, August 16, 2017

இந்தியாவை நாம் ஏன் வெறுக்கனும்

இந்தியா எனது தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள், சமூகத்தின் பால் வரும் வேறுபாடுகளை அரசியல் அமைப்பின் பாலும் சட்டத்தின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன் என்று உறுதி கூறிய நாட்கள் நினைவுக்கு வந்து போகின்றது.

அந்த மூவர்ணக்கொடியை பார்த்ததும் மனதுக்குள் வரும் அந்த சிலிப்பும் பெருமிதமும் கனவாகவும் அந்த கால நினைவுகளாகவும் மட்டுமே ஆகிவிட்டுமோ என்ற அச்சமே வருகின்றது.

நாளை நள்ளிரவில் இந்த மூவர்ணக்கொடு செல்லாது நாளையில் இருந்து இனி எல்லோரும் பச்சை நிறக்கொடியை தான் இந்தியாவின் கொடியாக வணங்கவேண்டும் என்று சொல்லிவிடுவார்களே என்று கிலியாகவும் இருக்கிறது.

வீட்டு நலனையும் உனது சொந்த நலனையும் விட நாட்டின் நலம் தான் முக்கியம் என்றும் அதற்காக நீ அனைத்தையும் விட்டுக்கொடுத்தால் தவறில்லை என்று வா உ சி யை உதாரணமாய் காட்டி பேசுவார்கள். வெள்ளையர்களை எதிர்த்து சுதேசி கப்பல் விட்டவரை அந்த கப்பலை கடைசியில் வெள்ளையரிடமே விற்ற கொடுமை இந்தியாவில் மட்டுமே நடக்கும். அதை விடக்கொடுமை எல்லாம் இப்போது நடந்துக்கொண்டு இருக்கிறது.

உணவு பாதுகப்பு திட்டமாம், அந்த திட்டத்தால் மக்கள் எல்லாம் அதிகவிலை கொடுத்து தான் உணவை வாங்க வேண்டும், திட்டத்திற்கு பெயர் உணவு பாதுகப்புத்திட்டம். என்னே கொடுமையடா

கதிராமங்கலத்தில் குடி நீர் நன்றாகத்தான் இருக்கின்றதாக ஒரு சாதிக்கட்சி தலைவர் சொல்கிறார், ஆனால் அவர் கோவையில் நல்ல குடி நீரைக்குடித்துக்கொண்டு கதிராமங்கலத்து மக்களின் நீருக்கு சான்றிதழ் வழங்குகிறார்.

மைய அரசில் அங்கம் வகிக்காத மாநிலங்களை எல்லாம் சுடுகாடாக மாற்றும் திட்டத்துடன் இயங்கும் அரசியல் நகர்வுகளை தமிழகத்தில் நடத்தி எங்கே எல்லாம் விவசாயம் நடந்ததோ அங்கே எல்லாம் தரிசு நிலங்களாக கானும் கொடுமை அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

நீதிமன்றங்கள் செல்லரித்து உளுத்துக்கொட்டும் நிலையில் இருக்கின்றது, கணக்கு பாடம் படிக்கும் மாணவர்கள் எல்லாம் 2 + 2 = 5 என்று எள்ளி நகையாடுகிறார்கள், 1000 கோடி ரூபாய் கொடுத்தால் 2 + 2 = 1 என்றும் கூட தீர்புகிடைக்கும் என்று நகைக்கிறார்கள்.....

கொலை செய்வது பாவம் என்றும் மரண தண்டனைக்கு உரிய குற்றம் என்று தான் இது வரையில் கேள்விப்பட்டு இருக்கின்றோம் ஆனால் மாகாத்துமா என்று உலகமே கொண்டாடியவரை கொன்றது ஒன்றும் குற்றமே இல்லை என்று பகவத் கீதையை சாட்சியாக கூறும் கொடுமைகளை எல்லாம் பார்க்கிறோமே என்று மனம் பதறுகின்றது.

எந்த மொழி பேச வேண்டும் என்றதில் இருந்து என்ன உண்ண வேண்டும் உடுத்தவேண்டும் தெய்வமாக வேண்டும் என்று கட்டளையிடும் அரசை இந்தியா என்றுமே கண்டது இல்லை ஆனால் இன்று இவைகள் தான் நாள்ளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நடந்துக்கொண்டு இருக்கிறது.

 நாடு முன்னேறுகிறது என்று தான் அடிக்கடி சொல்கிறார்கள் ஆனால் சாமானியனை இனிமேல் தனது அத்தியா அவசிய பொருட்களை கூட அதிகப்படியாக பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் என்ற நிலை முன்னேற்றம் இல்லை என்றது பொருளாதாரம் தெரியாதவர்களுக்கு கூட தெளிவாக தெரியும், ஆனால் மைய அரசை சேர்ந்த தமிழக அரசியல்வாதிகள் தமிழகத்திலும் இந்தியாவிலும் பாலாறும் தேனாறும் ஓடுவதாக சொல்கிறார்கள்.

நாளைக்கு நாள் வேலை வாய்ப்புகள் குறந்துக்கொண்டே வருகின்றது, விலைவாசியே வின்கல வேகத்தில் பறக்கின்றது.

4 வருட பட்டம் பயின்றால் தான் அமெரிக்கவில் வேலை கிடைக்கும் என்று ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு என்று ஆங்கில வழி கல்வி பள்ளிகளும் கல்லூரிகளும் கல்லா கட்டியது, இந்த வருடம் இயந்திர பொறியியல் படிப்பு படிக்க ஆளே இல்லை, பொறியிலே வேண்டாம் என்று மக்கள் ஒதுக்க ஆரம்பித்து வருடங்கள் ஆகுகின்றது ஆனால் நாடு நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கிறது என்று மாதம் ஒரு முறை வானொலியிலும் தொகாவிலும் பேட்டிகள் பறக்கின்றது.

நாட்டில் அனைத்து மக்களும் ஒரே பாடத்திட்ட தேர்வு முறை தான் எழுதவேண்டும் என்கிறார்கள் அப்படியானால் ஏழைகள் படிக்க அரசுபள்ளி பாடத்திட்டமும், கொஞ்சம் பணம் உள்ளவர்களுக்கு மக்காலே பாடதிட்டமும், பெரும் செல்வந்தர்களுக்கு என்று சொகுசு படசாலைகளும் நாட்டில் எதற்கு. அப்படி எந்த கல்வி சிறந்ததோ அதை அரசு கல்வியாக வழங்க வேண்டியது தானே ஆனால் அந்த மட்டமான படிப்பை தான் அரசு வழங்குமாம் ஆனால் மேற்படிப்பு சொகுசு படிப்புபடித்தவர்களுக்கு மட்டும் தானாம்.

இதை எல்லாம் பார்க்கும் போது இது என்ன நாடு என்று வெறுப்பே வருகின்றது. ஆனால் இது என்னுடைய நாடாச்சே, இந்த வெறுப்பு அரசு நடத்தும் அந்த அரசியல்வாதிகள் மேலும் ஆட்சியின் மேலும் அல்லவா வெறுப்பு வரவேண்டும் அதை விட்டு நாட்டின் மீது ஏன் கோபம் வருகின்றது.

அது சரி சொந்த நாட்டிலே அகதியாய் வாழ யாருக்கு தான் பிடிக்கும், என்ன உண்ண வேண்டும், உடுத்த வேண்டும், படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று வாழும் வீட்டிலேயே வாழ முடியாதவர்களை அப்படி ஒரு நாட்டில் வசிக்க சொன்னால் எப்படி அதுவும் எப்படி சொல் பேச்சு கேட்கவில்லை என்றால் எப்படி கொல்லப்படுவீர்கள் என்று மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்து அடித்தே கொன்று அல்லவா உதாரணம் காட்டுகிறார்கள்.... என்னே ஒரு கொடுமை.

Monday, August 14, 2017

நிர்மலா சீதாராம் தான் பாசகவின் தமிழக முதல்வர் வேட்பாளரா

தமிழகத்தில் எந்த அவசர சட்டமாக இருந்தாலும் சரி அல்லது முக்கிய பிரச்சனைகளாக இருந்தாலும் சரி நிர்மலா சீதாராம் தான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.

காளை மாடு மட்டும் காட்டு விலங்காக அறியப்பட்ட சதியின் பின்னணி, பின்னர் காளை மாட்டை காட்டு விலங்கு இல்லை வீட்டு விலங்கு தான் என்று வரலாற்று சான்றாக அறிவித்தால், அதன் அவசர சட்டம், தமிழகத்திற்கு நீட்டு தேர்வு அவசியாமா இல்லையா என்ற முடிவை அரசு சார்பாக அறிவித்தல், ரேசன் பொருட்கள் தமிழகத்திற்கு தேவையா இல்லையா என்று வரையறுப்பது, கூடங்குளத்தில் அணு மின்னிலையம் அமைப்பது தமிழகத்திற்கு நல்லதா தீயதா என்று ஆராய்சி முடிவுகளை வெளியிடுவதும் அதை பொருத்து அறிவிப்பதும், நெடுமங்கலம், கதிராமங்கலம் என்று தமிழகத்தை சீரழப்பதற்காக துடிக்கும் திட்டங்கள் தமிழகத்திற்கு வந்தே தீரும் என்று சொல்வதும் அறிவிப்பதும், அதிமுக அணி சேரவேண்டுமா இல்லையா, தமிழகத்து சட்டபேரவை சரியாக நடக்கின்றதா இல்லையா என்று அனைத்து விதமான அறிவிப்புக்கும் அதிகார பூர்வமாக நிர்மலா சீத்தாராம் தான் அறிவிக்கின்றார், பேசுகின்றார்.

பாசகவின் மற்ற குட்டி குட்டி தலைவர்கள் தமிழைசை, பொன்னார், எச்சி ராசா போன்றோர்கள் போல் விவாதத்தில் கலந்து கொள்வது, விமான நிலையமுதல் தொகா விவாதங்களுக்கு பேட்டி அளிப்பது போன்ற வெட்டி வேலைகள் எல்லாம் இவருக்கு இல்லை.

வெங்கையா நாயிடுவும் இவரை போல் வெட்டிப்பேச்சுகள் எல்லாம் பேசுவது இல்லை ஆனால் ஊடகங்கள் எல்லாம் தமிழகத்தின் உண்மையான முதல்வர் வெங்கையாவா என்று எழுதி தீர்த்தார்கள், ஆனால் அவரை துணை குடியர்சு தலைவராக அறிவித்தது பாசக, இந்த நிலையில் தமிழகத்தின் பாசக முதல்வராக வரப்போகின்றவர் நிர்மலா சீத்தாராம் தான் என்று தெளிவாககின்றது.

சொல்ல முடியாது நாளையே இவரை அதிமுகவின் தலைவராக பாசக ஆக்கினாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை தான். அடுத்த அதிமுகவின் முதல்வராகக் கூட வர வாய்ப்பு இருக்கின்றது.

பாசகவின் மற்ற குட்டி குட்டி தலைவர்களான பொன்னார், தமிழிசை, எச்சி ராசா எல்லாம் பப்பர முட்டாயை வாங்கிக்கொண்டு மற்ற தமிழர்கள் போல் வந்தே மாதரம் என்று கொடியை குத்திக்கொண்டு அன்னாந்து வானத்தை பார்க்கவேண்டியது தான் போலும்.........

Friday, August 11, 2017

மோடி அமெரிக்காவிற்கு சென்று வந்தது சீனாவோடு சண்டைக்கு போகத்தானா

சூன் மாதம் அமெரிக்காவுக்கு சென்று வந்தன் இரகசியம் இது தானா. வட கொரியா கட்டுக்கு அடங்காம ஆடுது. அதை ஆதரிக்கவும் மேன் மேலும் தூண்டவுன் சீனா மும்முரமாக இருக்கிறது. உலக நாடுகளில் எதுவாலும் வட கொரியாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

சீனாவை இந்திய முனையில் இராணுவ தாக்குதலுக்கு உள்ளாக்கினால் இந்திய பெருங்கடலிலும் ஆசிய நிலப்பரப்பிலும் நிலை கொண்டு இருக்கும் சீனப்படை இந்தியா நோக்கி நகரும். மேலும் இந்த பலவீனத்தில் வட கொரியா அடக்கி வாசிக்கும் என்றது அமெரிக்க கணக்கு.

சரி அப்போ இந்தியாவின் நிலை என்னவாகும், அதான் அருண் சேட்லி சொல்கிறாரே, 1962ல் இருந்த நிலை வேறு இப்போது நாங்கள் அமெரிக்காவின் கை கூலிகளாக இருக்கும் நிலை வேறு என்று சொல்லாமல் சொல்கிறார்.

சீனாவும் வட கொரியாவும் இனி என்ன செய்கின்றது என்று பார்த்து அமெரிக்க இந்தியாவிம் மூலம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடும்.

அது வரையில் ஏற்படும் பொருளாதார நட்டம் முதல் இராணுவ நட்டம் வரை இந்தியர்களுக்கு பப்பர மிட்டாய் கொடுத்து ஏமாற்றவும் அமெரிக்கா திட்டத்துடன் உள்ளது.

இந்திய சீன போர் வெடிக்கும் கால், காசுமீரத்தை பாக்கிட்தானத்துடன் இழந்தது போல் வட கிழக்கு மா நிலங்களை சீனாவிடம் இழக்க நேரிடும்.

நாமும் பழைய இந்திய படத்தை வைத்துக்கொண்டு தலை இல்லாத இந்தியாவையோ அல்லது இடக்கை இல்லாத இந்தியாவையோ நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று வசனம் பேச வேண்டியது தான்.....

Wednesday, August 9, 2017

நடு இரவில் அந்த பெண்ணுக்கு அங்க என்ன வேலை -- சுடலைமாடன் வருகையில்

அந்த பெண் வர்னிகா ஏன் நடு இரவில் வெளியில் செல்ல வேண்டும். வடக்கில் இரவில் தனியாக இருக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டும் எப்படி இந்த பெண்ணுக்கு நடு இரவில் தனியாக பயணிக்கும் தைரியம் வந்தது.

ஆண்மகன் விகாசு பாரால அதுவும் உலகை ஆளும் பாசகவின் கட்சியை சேர்ந்த பெரும் புள்ளியின் மகன் இரவிலும் பகலிலும் உல்லாசமாகவும் சல்லாபமாகவும் வாழ சர்வ தகுதிகளையும் பெற்றவன் இரவில் நாடு நன்றாக உள்ளதா என நகர்வலம் வரும் வேளையிலா இந்த பெண் வர்னிகா தனியாக வெளியில் செல்வாள்.

நாடும் உலகும் இருக்கும் நிலையில் படித்து பெரிய பதவியில் இருக்கும் ஒரு ஆட்சியர் இப்படியா கொஞ்சம் கூட பொருப்பில்லாமல் வயசு பெண்ணை இரவில் ஊர் சுற்ற அனுப்புவது. என்ன ஒரு ஒழுக்கம் கெட்ட குடும்பம் இவர்களது குடும்பம்.

பெண் என்றால் வீட்டில் அந்த 4 சுவர்களுக்குள் முடங்கி கிடந்து வீட்டு ஆண்கள் வீட்டிற்கு வருவதற்குள் சமைத்து, துவைத்து கணவனின் வருகைக்காக காத்து இருக்காமல் இது என்ன திமிர்தனமா வண்டியை ஓட்டிக்கொண்டு அலைவது.

நிர்பயா ஒரு கற்பனையான பெயர் தான் ஆனால் அந்த பெண்ணிற்கு நடந்த கொடுமைகள் எல்லாம் உண்மை அந்த தகவல்கள் எல்லாம் தெரிந்தும் இப்படி இரவில் வர்னிகாவை வெளியில் வண்டியை எடுத்துக்கொண்டு அலைய வைத்த பெரும் தேவை தான் என்ன....

சுடலைமாடன் வருகையில் குறுக்கே வரும் மக்களின் உயிரை எல்லாம் குடித்துவிடும் என்று தெரியாதா தெரிந்தும் தன் பெண்ணை அனுப்பி நாடகம் ஆடி எங்களது கட்சிக்கும் குடும்பத்திற்கும் கெட்ட பெயரை உண்டாக்கிறார் என்று வர்னிகாவின் மீதும் அவரது பெற்றோர்களின் மீதும் வழக்கு தொடரவும் தண்டனையளிக்கவும் வேண்டும்.

எப்போது தான் இந்த புத்தி கெட்ட நிர்பயா பெண்கள் திருந்துவார்களோ ஆண்களை இப்படி பாடாய்படுத்துவதை நிறுத்துவார்களோ.......

Tuesday, August 8, 2017

மோடி இந்தி பேசும் மக்கள் ஏன் ஆங்கிலம் பேச மறுக்கிறார்கள்


இந்தி பேசும் மக்கள் ஏன் ஆங்கிலம் பேச மறுக்கிறார்கள் மேலும் அவருடம் ஆங்கிலத்தில் பேசுவதை ஏன் வெறுக்கிறார்கள் என்று இந்த படத்தை பார்த்தால் தெளிவாகத்தெரியும்.


மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நகைச்சுவையாக தெரியும் ஆனால் அந்த உச்சரிப்பை கவனியுங்கள் எவ்வளவு ஊன்றி போய் இலயித்து இந்த ஆங்கில வார்த்தைகளை பொருத்தி மகிழ்கிறார்கள் என்று தெரியும்.

இந்தியாவில் எந்த மா நிலம் சென்றாலும் இந்த இந்திகாரர்களுக்கு இந்தியில் பேசுவார்கள் எழுதி வைப்பார்கள். ஆனால் தமிழகத்தில் முக்கிய நகரங்கள் தவிர பாசக உறுப்பினர்கள் வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் தான் பேசுவார்கள். இந்த முறையில் ஆங்கிலம் படித்தவர்களால் எப்படி நாம் பேசும் ஆங்கிலம் புரியும் அது தான் எரிச்சல்படுகிறான் கத்துகிறான் சட்டம் ஏற்றுகிறான்.

இந்திய பிரதமர் மோடியின் ஆங்கிலமும் இப்படி தான் இருக்கும் கவனியுங்கள்.

Monday, August 7, 2017

சீன பொருட்கள் இருக்கட்டும் நமக்கு வடக்கத்திய பொருட்கள் தேவை தானா - தேசதுரோகிகள்

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைக்க சீனா முயல்வதாகவும், அதை சமன் செய்யும் விதமாக சீனாவின் தயாரிப்புகளை வாங்குவதை எல்லோரும் தவிர்க்க வேண்டும் அப்படி செய்யாதவர்கள் எல்லாம் தேச துரோகிகள் என்றும் சங்கிகள் பரப்புரை செய்வதை பார்க்கின்றோன்.

சங்கிகளின் வாதத்தின் படி பார்த்தால் நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் அண்டை நாட்டின் தயாரிப்புகளை தவிர்ப்பதால் அவர்களின் அரசியல் சதியில் இருந்து தாய் நாட்டை காக்க வேண்டிய கடமை நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது.

இப்படி செய்வதனால் சீனா தனது வர்த்தகம் பாத்திப்பில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியாவின் பொருளாதாரார சீர் குலைவுகள் ஏற்படாத வண்ணன் இணக்கமாக நடந்துகொள்ளும் என்றும் நமக்கு பாடம் எடுத்து சொல்லிக்கொடுக்கிறார்கள்.

சரி தானே என்று தோன்றுமே, அதானே என்று சபாசு போட்டு சப்பைக்கட்டுகள் அதிகமாகவும் வரும்.

இந்த கூற்றுபடி பார்த்தால் இன்றைய தமிழக நிலைக்கு வடக்கத்திய அரசியல்வாதிகளும் அவர்களை கைப்பாவையாக அரசு நடத்த அனுப்பிய வடக்கத்திய பணக்காரர்களும் தான் காரணம்.

இந்த கூற்றை நிறூபிக்கும் விதமாக எச்சி ராசா பாசக மேடையில் இன்று முழங்கியும் இருக்கிறார்.

ஆகவே இன்று முதல் வடக்கத்திய பொருட்களை தமிழர்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும். அரிசி பருப்பை கூட வடமாநிலத்தவர்கள் விற்கும் பொட்டளப்பைகளில் தான் வாங்க வேண்டுமா என்ன.

பெட்ரோல் முதல் அரிசி பருப்பு வரை தமிழகத்து தொழில் முனைவோரை தான் ஊக்குவிக்க வேண்டும். இன்றைக்கு துணிமணிகள் முதல் செல்பேசி சேவை முதல் வடக்கதியர்கள் விற்கிறார்கள். ஏன் தமிழர்களுக்க்கு அந்த சேவைகள் எல்லாம் வழங்கும் தொழில் நுட்பமும் வசதியும் இல்லையா.

தமிழகத்தில் ஐபியல் அணியை விலைக்கு வாங்கி நடத்தமுடியுது செல்பேசி சேவை நிறுவனம் தொடங்கமுடியாதா.

பணம் இல்லை என்று சொல்ல வேண்டாம் மனம் இல்லை என்று சொல்லவும். பணமும் செல்வமும் இல்லாமல் தான் நாம் இலட்சகணக்கில் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு அன்றாடம் தினக்கூலி 700 ரூபாய்க்கு வேலை கொடுக்கின்றோமா.

வட மாநிலங்களுக்கு ஆபத்து என்றால் சீன எல்லையை விட்டுக்கொடுக்க இந்திய அரசு தயாராக இருக்கின்றது. தமிழக பாசகவிற்கு தலைவராக வடக்கதியர் வடக்கதிய உடையில் வந்து வட மாநில மொழியில் தான் பேசுவார்.

இந்த வடக்கதியர்களால் தான் தமிழகம் நிவகிக்கபட வேண்டுமா ஏன் தமிழகத்தில் ஒருவருமா இல்லை.

மூச்சுக்கு 300 தடவை ஊழல் என்று சொல்லும் பாசகவின் அமித்து சாவின் சொத்துக்கள் 3 ஆண்டுகளிம் 300% உயர்ந்ததின் அடிப்படை என்ன என்று விளக்க தயாராக இல்லை. அது மட்டும் இல்லாது இது வரை மோடி வெளி நாடுகளுக்கு சென்று இந்தியாவிற்காக கொண்டு வந்தது என்ன எவ்வளவு என்ற தகவலையும் தெரிவிக்க மறுகின்றது.

வடக்கில் இருக்கும் மக்கள் தமிழகத்தின் மாடுகள் என்ன செய்ய வேண்டும் கூடாது என்று தீர்மானிக்கிறார்கள். தமிழர்கள் என்ன கொண்டாட வேண்டும் என்ன உடுத்த வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். அதைவிட கேவலம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.

இன்று முதன் வடக்கதிய பொருட்களையும் சேவைகளையும் தவிர்ப்போம். தமிழக பொருட்களை வாங்கி தமிழர்களை ஊக்கப்படுத்துவோம். அப்போது தான் தமிழர்களின் நிலை முன்னேறும். இதை செய்யவோ பரப்பவோ மறுப்பவர்கள் மாநில துரோகிளாவார்கள்.

Thursday, August 3, 2017

கலாமும் திருவள்ளுவரும் -- திக காரங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் போல

அரசியல் மேடை பேச்சுக்களை கேட்க சுவையாக திகழ்வது தி கவும் பொதுவுடமையாளர்களுடையதும் தான். காரணம் இவர்களிடம் தான் அதிகமான பொருளடக்கம் இருக்கும் எடுத்துக்கொண்ட தலைப்பில் மணிக்கணக்கில் உதாரணங்களுடன் கொட்டுவார்கள்.

தி கவினர் பேசும் போது அதிகம் ஆளும் சொல்லாடல்களில் முக்கியமானது இந்து மதம் எப்படி எல்லா மதத்தையும் விழுங்கி ஏப்பம்விட்டது என்றதாகும். அந்த வகையில் அவர்கள் காட்டும் மேற்க்காட்டுதல் திருவள்ளுவரை.

ஒரு காலத்தில் திருவள்ளுவர் சிலை என்றால் ஒரு முனிவனின் சிலையாக இருக்கும், தலையில் முடிந்த கொண்டையும் கையில் ஓலை சுவடி என்றும் மட்டும் தான் இருந்தது. பிறகு அதுவே நெற்றியுல் திருநீர் அணிந்து வர துவங்கியது. பிறகு மெல்ல அந்த சிலையி பூணூலுடன் வரத்துவங்கி இன்றைக்கு திருவள்ளுவர் சிலையில் பூணூல் இல்லை என்றால் பொருட்குற்றமாக பார்க்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

இதை விளக்கும் போது திகாவினர் சொல்லும் வியாக்யாஞானம் இது தான், எது எல்லாம் அறிவில் சிறந்து விளங்குகின்றதோ அல்லது சிறப்பாக இருக்கின்றதோ அவைகள் எல்லாம் எங்களுடையவைகள் மட்டும் தான் அல்லது எங்களால் மட்டும் தான் சிறந்தவைகளை கொடுக்க முடியும் என்று பறைச்சாற்றுவது அவர்களது இயல்பு.

அந்த அளவில் உலகப்பொதுமறையாக திருக்குறளுகு ஒரு அங்கிகாரம் கிடத்ததும் திருவள்ளுவருக்கு பூணூல் சூட்டும் சடங்கும் நடந்தேறியது என்று கூறி இன்னும் கொஞ்ச நாள் பொருங்கள் ஐயா பெரியாருக்கும் பூணூல் போட்டு இவர்களே பேசுவார்கள் பாருங்கள் என்று நகைப்பாக சொல்வார்கள்.

அந்த வரிசையில் இந்து மதம் கலாமுக்கு பூணூல் அணிவிக்காமல் இருந்தால் சரி தான்.

கலாம் ஐ நா சபை கூட்டதில் பேசும் போது கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றதை அழகாக குறிப்பிட்டு பேசினார் அது போல் மேற்கோள் காட்டும் இடங்களில் எல்லாம் தமிழ் நூட்களையே தான் மேற்கோள் காட்டினாரே அன்று கீதையில் தான் எல்லாம் இருக்கிறது என்று, காலை மாலை மதியம் இரவு உணவுக்கு முன் இரவுக்கு பின் என்று கீதை படித்தாகவோ அல்லது கீதையை என்னுடனே எப்பொழுதும் வைத்து இருப்பதாகவோ அல்லது தனக்கு பிடித்த புனித நூல் கீதை என்றோ என்றைக்கும் கலாம் குறிப்பிட்டது கிடையாது.

அதே சமயத்தில் கீதையை அவர் விமர்சிக்கவும் இல்லை, நல்ல பகுதிகளை எடுத்துக்கொண்டும் கெட்டபகுதிகளை உதாசிக்கவும் தயங்கவில்லை.

தி க காரர்கள் சொல்வதை போல் எது சிறந்ததோ அவைகள் எங்களிடையவைகள் மட்டுமாகத்தான் இருக்க முடியும் என்று மேலும் பறைசாற்றி இருக்கிறது இந்து மதம். நாளையே பூணூலுடன் கலாமைக்கண்டால் ஆச்சர்யப்படாதீர்கள்.....