Saturday, July 21, 2018

இராகுல் காந்தி கொட்டியிருக்கும் பொய்கள்

GST வரி விதிப்பின் மூலம் பொருட்களின் விலை குறையும் என்று சொன்னார்கள் -- அன்றைக்கு 2 ஒரு காபி 20 ரூபாக்கு விற்றது, இன்றைக்கு அதே காபி வெறும் ரூபாய் 26 விற்கிறது. விலை குறைந்தது இராகுலின் கண்களுக்கு தெரியவில்லை போலும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்புக்களை உருவாக்குவோம் -- கடந்த ஆண்டு 4 இலட்சம் வேலை வாய்புகள் மட்டுமே என்று சொல்கிறார் இராகுல் -- பாசக ஆண்டிற்கு 2 கோடி என்று தான் சொன்னதே தவிர ஒரு ஆண்டுக்கு என்று சொல்லவில்லை, இதே அளவில் வேலை வாய்புகளை உருவாக்கினால் 50 ஆண்டுகளில் 2 கோடி வேலை வாய்புகளை உருவக்க முடியும் என்றது 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கும் கணக்கு போட தெரிந்த ஒன்று, இராகுலுக்கு கணக்கும் போட தெரியவில்லை என்று நிறுபித்துவிட்டார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தோல்வி -- யார் சொன்னது இராகுல், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இரண்டே ஆண்டுகளில் சுட்சர்லாந்து நாட்டில் காங்கிரசு ஆண்ட 70 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட தொகையைவிட வெறும் இரண்டு மடங்கு பணம் மட்டுமே இரண்டே ஆண்டுகளில் அதிகம் சேர்ந்ததாக சுட்சர்லாந்து நாடு தெரிவிக்கின்றது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மட்டும் இல்லை என்றால் இதுவே 1000 மடங்கு அல்லவா அதிகரித்து இருக்கும் அதுவும் பாசக ஆட்சியில் 1000 மடங்கு அதிர்கரித்தது என்று அல்லவா வரலாறு பேசும்.

அது மட்டுமா தங்கம் வாங்க விற்க, மாடுகள் வாங்க விற்க ஆதார் எண் அவசியம் என்று கொண்டு வந்தால் தான் தமிழ் நாட்டில் பிடிபட்ட சேகர் ரெட்டி மற்றும் அருப்புக்கோட்டையில் வெறும் 250 கிலோ, 120 கிலோ தங்கம் மட்டும் சேர்த்து வைத்து இருந்தார்கள். அப்படி ஆதார் எண் அவசியம் இல்லை என்று இருந்தால் பட்டி தொட்டி எல்லாம் இருக்கும் குப்பனும் சுப்பனும் அவனவன் வீட்டில் 10 முதல் 20 கிலோ வரையில் அல்லவா தங்கம் வாங்கி குவித்து இருப்பார்கள். தங்கம் தொழிலதிபர்கள் மட்டுமே வாங்கும் பொருள் அதை எப்படி, மற்றவர்கள் வாங்கலாம் இராகுல் உங்களுக்கு விவத்தையே இல்லையே.

தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகளில் 5 பேர் செல்ல கொடுக்கும் பணத்தில் தனியாக ஒரு காரை அமர்த்தி கொண்டு சென்றுவிடலாம் என்ற நிலை. இந்த விலை வாசியில் சுங்கம் என்ற பெயரில் ஒவ்வொருவரிடமும் வரிடத்திற்கு 180 கிலோமீட்டருக்கு ரூபாய் 15,000 வரை சுங்கம் எதற்கு செலுத்த வேண்டும் என்று அனியாயமாக இராகுல் கேட்கிறார் -- பிறகு நாட்டில் இருக்கும் குப்பன் சுப்பன் எல்லாம் ஏதோ TVS 50 தான் வாங்குகிறார்கள் என்று பார்த்தால் இப்போது கார் எல்லாம் வாங்கிக்கொண்டு வாரமானால் கூட்டம் கூட்டமாக ஊர் சுற்ற கிளம்பினால் எப்படி. அது எல்லாம் பணக்காரர்கள் செய்யும் வேலை அதை எப்படி குப்பனும் சுப்பனும் செய்யலாம், இது கூடவா தெரியாது இராகுல். அது தான் சுங்கம், பெட்ரோலிய விலை, மற்றும் அதிக டிக்கட்டுகள்.

நாளை தமிழகத்தை ஆளப்போகும் நிர்மலா சீத்தாராமன் பொய் சொல்வாரா இல்லை வெறும் பிரான்சை ஆளும் அதிபர் பொய் சொல்வாரா -- இது கூட தெரியவில்லையே இராகுல். ஆதாரத்துடன் நிர்மலா நிரூபித்துவிட்டாரே அந்த பிரான்சு அதிபர் தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்ளப்போகிறார்.

இராகுல் சொன்னதிலே மிகவும் பெரும் பொய் இது தான் - பிரதமர் நாட்டின் பெரும் முதல்வர்களுடன் தான் உறவாடுகிறார் என்றது. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதான் இராகுல் 2016ல் டிசம்பர் 8ற்கு பிறகு பிரதமர் சொன்ன முதல் அறிக்கையில் இப்போது தான் ஏழைகள் எல்லாம் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்றது. அன்றைக்கு முதல் இன்றைக்கு வரை ATM ஏடிஎம் வாசலில் நிற்பது அதாணியும் அம்பானியும் தானே தவிர ஏழைகளோ அல்லது நடுத்தர வர்க மக்களோ கிடையாது. பிரதமரின் அந்த ஏழைகளின் அபிமானத்தையே கிண்டல் செய்துள்ளார் இராகுல்.

பிரதமர் எப்போதும் கோட்டு சூட்டு போட்டவர்களிடம் மட்டுமே பேசுகிறாராம் - இராகுல் பன்னீர் செல்வத்தை பார்த்து இருக்கிறீர்களா அவரை மட்டும் 2 மாதங்களில் 50க்கும் மேற்பட்ட வரை பார்த்து இருக்கிறார். பன்னீர் எவ்வளவு எளிமையான மற்றும் ஏழை என்றது நாட்டிற்கே தெரியும். அந்த மாதிரியான தியாகிகளை சந்திப்பதை மட்டுமே தனது கொள்கையாக கொண்டுள்ள மோடியை கிண்டல் எல்லாம் அடிக்காதீர் இராகுல்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லையாம் -- நாட்டில் பாசகவிற்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் முதலில் தள்ளுபடி செய்யபடுவது விவசாயி கடனை தான். பாசகவை தேர்ந்து எடுக்காதது அந்த அந்த மாநிலங்களின் தனிப்பட்ட பிரச்சனை. பாருங்கள் அருகில் இருக்கும் குட்டி குட்டி நாடுகள் எல்லாம் மோடி புகழ் பாடுகிறார்கள், மொத்த தென்னகத்து மக்களுக்கும் தேவைபடும் 10 ஆண்டுகளுக்கு உண்டான பணத்தை எடுத்து அந்த நாடுகளின் பெயரில் அதாணிக்கும் அம்பானிக்கும் மோடி வழங்குவது எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை போலும். இப்படி புலம்புவதை விட பாசகவிற்கு வாக்கு அளிக்க சொல்லி அந்த மக்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லுங்கள் இராகுல்.

 நன்றாக ஞாபம் வைத்துக்கொள்ளுங்கள் இராகுல் மோடி ஒரு ஏழை தாயின் மகன், எப்படி ஒரு ஏழை தாயின் மகன் கல்லூரியில் சேர்ந்த உடன் தனது வகுப்பில் படிக்கும் பணக்கார மாணவர்களின் நண்பனாக ஆக்கிக்கொண்டு அவர்களை போல் இவனும் உண்ண உடுத்த தனது ஏழை தாயிடம் ccc புத்தகம் வாங்க பணம் வேண்டும் என்று பொய் சொல்லி வாங்கிய கதை எல்லாம் உங்களுக்கு தெரியாதா. ccc புத்தகம் என்றால் சினிமா சிகிரெட்டு காப்பி என்று தெரியவில்லை என்றால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இராகுல். இப்படி ஒரு ஏழை தாயின் மகன் பணக்காரர்களுடன் தானும் பரம்பரை பணக்காரர் போல் பழகுவதை பார்த்து பொறாமை கொள்ளாதீர்கள் இராகுல். ஏழைகளின் பிரச்சனை உங்களுக்கு புரியாது இராகுல்....