Wednesday, October 31, 2018

ரபேல் விமான இரகசியம் சீனா தான் காரணமா

ரபேல் விமான ஒப்பந்தம் பற்றிய செய்திகளை இரகசியம் என்றும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான செய்தியாகையால் விபரங்களை வெளியிட முடியாது என்றும் கூறும் இரகசியம் இதுவாக தான் இருக்க முடியும்.

இந்த ஒப்பந்தம் வெளியாகும் முன் மோடி சீனா சென்று வந்தது மக்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்தியாவின் விமானப்படை வலுப்பெறுவதை சீனா விரும்பவில்லை. ஆகையால் விமான படையின் வலிமையை காக்கும் விதமாக வாங்க இருக்கும் விமானங்களையும் மற்ற தவாடங்களையும் வாங்க கூடாது என்று மோடி சீனாவில் மிரட்டப்பட்டு இருக்கனும்.

அப்படி மிரட்டப்பட்டு மிரண்டு போன மோடி நாடு திரும்பியதும், தனக்கு சீனாவால் இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றும் நிமித்தமாக 128 விமானமாக இருந்த ஒப்பந்தத்தை வேண்டாம் என்று முடிவு எடுத்தது. பிறகு எதிர்கட்சிகளும் செய்தியாளர்களும் கேள்வி கேட்ப்பார்களே என்று ஒப்புக்கு 36 விமானங்கள் மட்டும் வாங்குவதாக அறிவிப்புகளை வெளியிட்டது.

அந்த 36 விமானங்களும் பொம்மை விமானங்களை கூட தயாரித்த அனுபவம் இல்லாத நிறுவனத்திடம் கொடுத்து எந்த விதமான தரமும் திரனும் இல்லாத பொம்மை விமானங்களாக தான் இருக்க வேண்டும் என்ற சீனாவின் மிரட்டலுக்கு கட்டுப்பட்ட மோடி அவ்வாரே செய்தார்.

படிப்படியாக இதே போல் இந்தியாவின் பாதுகாப்பு துறையை முற்றிலுமாக வலுவிழக்க செய்யுமாறும் மோடி மிரட்டப்பட்டுள்ளார். அதன் பொறுட்டு பிரான்சு, இசுரேல் மற்றும் இரசியாவிடம் இருந்து எந்த விதமான பயனும் இல்லாத ஆயுதங்களை மட்டும் கண்துடைப்புக்காக வாங்குவதாக சீனாவின் ஆணைக்காக செய்து இருக்கிறார் பிரதமர் மோடி.

இது புரியாமல் எதிர்கட்சிகளும் செய்தியாளர்களும் ரபேல் ஊழல் என்று பிதற்றுகிறார்கள். அதுவும் சிதம்பரமும் இதே போல் பேசுவது எரிச்சலை வரவழைக்கிறது.

இனி காலத்திற்கும் இந்தியா சீனாவின் அடிமையாக இருக்கும் படியாக பாசக சத்தம் இல்லாமல் செய்துவிட்டு, மோடி ஒருவரை பார்த்து அமெரிக்கா பயப்படுகிறது என்று தனது சங்கிகளை விட்டு செய்தி பரப்ப செய்கின்றது.......

Tuesday, October 30, 2018

இதுக்கு பேசாம தமிழக முதல்வராக்கி இருக்கலாம் - ராசபட்சே

அமெரிக்க உளவாளி சுசாமி மகிந்த ராட்சபட்சேயை இந்தியாவுக்கு வான்னு சொன்னராம், அவரும் வந்தாராம். வந்ததும் எப்படி இலங்கையின் பாராளமன்றத்தை கலைத்து ராசபட்சே பிரதமர் ஆவது என்று சுசாமி இரகசியம் சொல்லி கொடுத்தாராம்.

இலங்கை சென்ற அவர் நேர கடமையாக இதை செய்தாராம், மோடியின் இராசதந்திரம் பலித்துவிட்டதாம். சீனாவும் அமெரிக்காவும் இனி எப்படி மோடியை மிரட்டுவது என்று விழி பிதுங்கி இருப்பதாக பாசகவின் ஊதுகுழல்கள் செய்திகளை கசிந்துவிட்டுக்கொண்டு இருக்கிறது.....

இதுக்கு பேசாம இராசபட்சேவை தமிழக முதல்வராக ஆக்கி இருக்கலாம் பாசக........

Monday, October 22, 2018

அன்னை ஸ்ரீவித்யா அவர்களின் நினைவாக

பூவுலகை விட்டு மறைந்தாலும் எங்கள் நெஞ்சில் என்றும் வாழும் அன்னையே. நீ கொண்ட நிம்மதி கொண்டு அமைதியாய் இருந்து எங்களை வாழ்த்து.

Thursday, October 18, 2018

குசராத்து மாதிரி கேரளாவில் கலவரம் - தூத்துகுடி துணை தாசில்தார் எங்கே

சபரிமலைக்கு வரும் பெண்களின் பின்னணியை ஆராயவேண்டும் என்று எச்ச சர்மா தெரிவித்துள்ளார். இன்று மோகன் பகாவத்து சபரிமலையை கலவர பூமியாக அந்த தீர்பு மாற்றிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தை குற்றம் சாற்றுகின்றார்.

குசராத்து கலவரத்துக்காக தனது சொந்த மக்களையே கொன்று குவித்துவிட்டு அதை இசுலாமியர்கள் தான் செய்தார்கள் என்று பொய் பரப்புரையை பரப்பிவிட்டு 6 நாட்களில் ஒன்னறை இலட்சம் மக்களை கொன்று குவித்தது போல் கேரளத்தில் நடத்த பாசக சதிகளில் ஈடுபட்டு வருவதை எச்ச சர்மா மற்றும் மோகன் பகாவத்தின் குற்ற சாற்றுகளில் இருந்து தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

யார் வேண்டும் என்றாலும் அர்சகராக ஆகலாம் என்று முதன் முதலில் நிறுவிய அரசையும் அந்த கட்சியையும் நாட்டைவிட்டே ஒழிப்பது தான் இவர்களது திட்டம்.

தூத்துகுடியில் துப்பாக்கி சூடுக்கு ஆணையை வழங்கிய துணை தாசில்தாரை பாசக தேடிக்கொண்டு இருக்கிறது. அவரை அவசர அவசரமாக சபரிமலைக்கு அனுப்பி துப்பாக்கி சூடு நடத்த ஆணையை வழங்குமாறும் ஏற்பாடுகள் ஆகிகொண்டு இருக்கிறது.

கேரளாவில் இருப்பது ஒன்றும் பழனிசாமியின் பொம்மை அரசு ஒன்றும் இல்லை என்று நிரூபிப்பார்களா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

Tuesday, October 16, 2018

மோடியின் செல்வாக்கு இவ்வளவு தானா - ஒரு வேளை அம்பானி முயன்று இருந்தால்

கச்சா எண்ணையை வாங்க இந்திய ரூபாயில் வர்த்தகம் புரிய வேண்டும் என்று வைத்த யோசனாவை முழுக்க எண்ணய் விற்கும் நிறுவனங்கள் நிராகரித்து விட்டதாக தகவல் வந்துக்கொண்டு இருக்கிறது. மோடி பிரதமரானால் எல்லோரையும் தூக்கி போட்டு பந்தாடுவார் என்று வர்ணித்தார்கள் சங்கிகள். ஆனால் இந்தியாவின் ரூபாயில் எல்லாம் வர்த்தம் செய்யமுடியாது வேண்டும் என்றால் அமெரிக்க டாலரோ அல்லாது யூரோவாகவோ தந்தால் சரி என்று நினைக்கிறார்கள் போலும்.

அது சரி நாளை ஒரு இரவு தொலைகாட்சியில் தோன்றி எண்ணை வாக்க கொடுத்த ரூபாய் எல்லாம் செல்லாது என்று மோடி பதவி இறங்கும் போது சொல்ல மாட்டார் என்று எந்த நிச்சயமும் இல்லை என்று நினைத்து இருப்பார்கள் போலும், அப்படி இல்லை என்றால் அம்பானியிடம் கொடுக்க அரபு நாடுகளில் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிந்து இருக்கும் போலும்.........

Thursday, October 11, 2018

பொக்ரான் ( பார்மனு ) - பாசகவின் இந்தி பிரச்சார படம்

பாசகவின் சாதனைகள் என்று பிரச்சாரம் செய்யும் விதமாக எடுக்கப்பட்ட படம் இந்த பொக்ரான் இந்திபடம்.

படம் துவங்கும் போது அமெரிக்கா அணு குண்டு வெடிச்சது வல்லரசு ஆனது, சீனா அணு குண்டு வெடிச்சது வல்லரசு ஆனது. அது போல நாமும் அணு குண்டு வெடித்தால் வல்லரசு ஆகலாம் என்று துவங்கும்.

வல்லரசு - இது பாசகவின் பிரச்சாரகளில் பிரதானமாக அடிக்கடி சொல்லப்படும் வார்த்தைகளில் ஒன்று.

1995ஆம் ஆண்டில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இப்படி சொன்னவுடன் வரும் சமோசாவை சாப்பிட அலையும் கூட்டம் முன்னே பேசினோமே என்று வருத்தப்படும் காட்சி வைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நாடும் நாட்டுப்பற்றும் பாசவிற்கு தான் சொந்தம் என்றும் மற்றவர்களுக்கு சமோசாவும் நாடும் ஒன்று என்று சொல்வதாக காட்சி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் அந்த குறித்த நேரத்தில் வேலைகள் எல்லாம் முடித்த பின்பும் ஆபிரகாம் போ என்று சொல்லும் வரையில் இராணுவ வீரர்கள் நிற்பது போலவும், இவன் கையை காட்டும் போது தான் விளக்கை அனைப்பதாக காட்டுவதும் சிறுபிள்ளை தனமாக இருக்கிறது. அங்கு இருக்கும் அனைவருக்கும் அந்த குறித்த நேரத்தில் வேலைகள் முடிக்க வேண்டும் என்று தெரிந்தும் ஆபிரகாமை எல்லா நொடிக்கும் எதிர்பார்ப்பதை எப்படி பின் சொல்வது...

பஞ்சபாண்டவர்கள் என்றும் பாரதம் என்றும் பாசகவின் வசனங்கள் வியூகம் அமைக்கும் போதே வந்து போகின்றது.

இவ்வளவுக்கும் நடுவில் பாசவின் ஆட்சியிலும் பாக்கிட்தாணில் இருந்து  இராசதானில் வந்து சர்வ சாதாரணமாக உளவு பார்ப்பதாக காட்டி பாசகவை காட்டி கொடுத்துள்ளார்கள் ஆபிரகாம் குழுவினர்.....

அந்த அணு குண்டு எப்போது வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பு படம் முடியும் வரையில் இவைகள் அனைத்தும் தாண்டி படத்தில் எதிர்பார்க்க வைப்பது படத்தின் பலம்.

இன்னும் இது போல பணமதிப்பிழப்பு பற்றியும் ஆபிரகாம் குழுவினர் படம் எடுத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்.........

Wednesday, October 10, 2018

நக்கீரன் கோபாலன் வழக்கில் பாசக சங்கிகள் இப்படி தான் பேசுவார்கள்

அமெரிக்கா போன்ற மிக முன்னேறிய நாடுகளில் எல்லாம் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் எழுதும் செய்தி ஊடகங்களும் அதன் கட்டுரையாளர்கள் முதல் செய்தி ஆசிரியர்கள் வரை தேசதுரோக வழக்கில் உள்ளே தள்ளி சாக அடிப்பது தான் வழக்கம் அப்படி தான் இந்திய அரசும் நடந்துக்கொண்டுள்ளது, இதில் என்ன தவறு என்று கோலாகல சீனீவாசன் முதல் மற்ற அடி பொடிகள் வரை கேட்பார்கள் பார்க்கனும்....