Wednesday, December 13, 2017

சென்னை இடைதேர்தலில் பாசகவினர் இப்படி தான் பேசி ஓட்டு கேட்பார்கள்

உங்களுக்கு கோவில் வேண்டுமா மசூதி வேண்டுமா, கோவில் வேண்டும் என்றால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள்

காசுமீரத்தில் அமைதி திரும்ப வேண்டுமா எங்களுக்கு ஓட்டு போடுங்கள்

வருடா வருடம் தீபாவளி கொண்டாட வேண்டுமா எங்களுக்கு ஓட்டு போடுங்கள்

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படாமல் இருக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

இந்தியா வல்லரசு ஆக வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

உலகத்தார் அனைவரும் யோக கற்றுக்கொள்ள வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

எல்லையில் இருக்கும் இராணுவ வீரர்கள் திறம் பட செயலாற்ற வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

காவிரியில் தண்ணீர் வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

சென்னையை சுனாமி தாக்காமல் இருக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

இந்து கடவுளையும் இந்து மதத்தையும் உலகம் பாராட்டி இந்து உலகமாக மாற வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நல்ல முறையில் நடக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

இந்த தேர்தலில் பாசகவை நீங்கள் வெற்றி பெற செய்தால் நாளைக்கு இந்திய பிரதமராக எடப்பாடி பழனிசாமி வருவார் அதற்காகவாது வாக்களியுங்கள்

தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் ஒதுக்குபுரமாக விற்கும் மதுவை பகிரங்கமாக சாலையோர உணவங்களிலே பரிமாற எங்களுக்கு வாக்களியுங்கள்

சென்னையில் இருக்கும் ரிசர்வு வங்கியில் உங்கள் 2000 தாளுக்கு சில்லரை தர வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்
 
எங்களுக்கு வாக்களித்தால் தான் சென்னை விமான நிலையத்தில் மேலும் மேலும் கண்ணாடிகள் விழாமல் பார்த்துக்கொள்ளுவோம்
 
 உத்திரபிரதேசத்தில் ஆக்சிசன் இல்லாமல் குழந்தைகள் இறந்ததை போல் இங்கேயும் இறக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

நாட்டில் வாரா கடனாக இந்தியாவின் தலை சிறந்த ஏழைகள் கட்டாமல் விட்ட பணத்தை எல்லாம் வசூலிக்க வேண்டுமா எங்களுக்கு வாக்களிக்காதீர்கள்

உங்களிடம் உள்ள அடையாள அட்டைகள் போதாது நாளைக்கு கோதார், போலார், பாலார், டூலார் என்ற அட்டைகள் எல்லாம் வேண்டுமா எங்களுக்கு வாக்களியுங்கள்

தப்பி தவறிக்கூட பணமதிப்பிழப்பு பற்றியோ, ஒளிரும் இந்தியா என்றோ அல்லது வைபரண்டு குசராத்து என்றோ ஒரு வார்த்தை கூட ஒலிக்க போவது இல்லை

ஆளே இல்லாத டீ கடையில் யாருக்கு ஐயா டீ ஆத்துகிறீகள் பாசகவினரே. அது தான் அதிமுகவை விலைக்கு வாங்கியாச்சு பேசாமல் அவர்கள் சார்பில் பாசகவினரை நிற்க வைத்து வெற்றி பெற்ற பிறகு அதிமுக கட்சியை நாங்கள் பாசகவோடு இணைத்துவிட்டோம் இனிமேல் யாரும் இரட்டை இலையோ அல்லது திராவிடம் என்றோ சொல்லவோ பேசவோ கூடாது என்று தைரியமாக அறிவிக்க வேண்டியது தானே அதை விடுத்து இந்த சொத்த தேர்தல் சந்திப்புகள் எல்லாம் எதற்கு.

0 comments: