Wednesday, August 24, 2011

இன்னமும் இது போல் எத்தனை துக்ளக் வேலைகளை செயலலிதா செய்வாரோ

1) சமச்சீர் கல்வியை உடைப்பது, அப்படி சமச்சீர் கல்வி என்று வந்துவிட்டால் பின்னர் எதை சொல்லி கோடிக்கணக்கில் ஒன்றாம் இரண்டாம் வகுப்பில் சேர்க்க பணம் கேட்க்கமுடியும் இந்த கல்வி வணிகர்களால். முதலாளிகளின் எலும்புத்துண்டுக்கு ஓடுவது தானே செயலலிதாவின் தலையாய கடன்.

2) கருணாநிதி ஆட்சியில் கட்டினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக புதிய சட்ட சபையை நாளுக்கு ஒன்றாக அறிவிப்பது என்றைக்கு நிற்குமோ. 5 கோடி மதிப்பில் பழைய திட்டத்தில் புதிய புத்தகங்கள் பெங்களூரு பதிப்பகத்தில் தயாராகிவிட்டது அதற்காகவாது சமச்சீர் கல்வியை தடை செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மன்றாடிய அதிமுக அரசு, 1500 கோடி செலவில் உருவான கட்டிடத்தை அடுத்த வள்ளுவர் கோட்டமாக மாற்ற முயற்சிப்பதை எந்த வகையில் சரி என்று சொல்வாரா. ஒரே காரணம் அந்த கட்டிடத்தில் அரசு நடத்தினால் சீக்கிரம் உயிர் போகும் என்று சொன்ன சோதிடத்தின் மகிமை அல்லவா அது.

3) நீயுடன் புவியீர்ப்பு விசையை கண்டு பிடித்ததை போல, அதிமுக அரசும் அதன் அறிவியலர்களும் சேர்ந்து ஒரு அரிய கண்டுபிடிப்பினை கண்டுபிடித்தது தான் இந்த மூன்றாமது, தமிழ் புத்தாண்டு. 1972ல் உலகறிய சொன்ன விலக்கத்தை எல்லாம் கடலில் வீசி விட்டு, பாம்பு நிலாவை விழுங்குவது தான் சந்திர கிரகணம் என்றும் அதே பாம்பு சூரியனை விழுங்கினால் சூரிய கிரகணம் என்றும் மறுபடியும் சொல்லிக்கொடுக்க ஏற்பாடுகளை செய்த்துகொண்டுள்ளார் போலும்.

இன்னமும் 4 ஆண்டுகாலம் இந்த மாதிரியான துக்ளக் தனங்களை செயலலிதாவும் அவரது வழிகாட்டி சோவும் சேர்ந்து நடத்துவதை பார்த்து இரசிக்கலாம்.