Saturday, September 16, 2017

எங்களுக்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம் கிருத்துவ மற்றும் முசுலீம் கல்வி அறக்கட்டளைகள் போதும்

இந்தியா போன்ற ஏழை நாடுகளின் உணவு பஞ்சத்தின் போது தங்களால் ஆன உதவிகளை கிருத்துவ மற்றும் முசுலீம் அறக்கட்டளைகள் வழங்கி வந்துள்ளது வரலாறு. அப்படி வந்தவர்கள் அதோடு நிற்காமல் கல்வியில் பஞ்சம் கண்டு நிற்கும் பின் தங்கிய இடங்களில் தங்களது கல்வி அறக்கட்டளைகளை நிறுவி கல்வியையும் வழங்கி வருகின்றது.

எந்த ஒரு படிப்புக்கும் வேண்டிய தயாரிப்புகளை பெறுவதிலும் செயலாற்றுவதிலும் தியாக உள்ளம் கொண்ட சேவர்களை கொண்ட அமைப்புகள் அவை. எந்த ஒரு இலாப நோக்கும் இல்லாமல் கடவுளுக்கு செய்யும் சேவையாக செய்யும் அவர்களின் சேவை தமிழகத்து ஏழை மக்களுக்கு மிகவும் அவசிமாக இருக்கிற நாட்கள் இப்போது.

மதவாத மைய அரசு உருட்டலும் மிரடட்டலுமாக எங்களுக்கு கும்பிடு போடு இல்லையேல் உனக்கு படிப்போ வேலையோ வாழ்வோ கிடையாது. மீறி எதிர்த்து எதுவும் பேசினால் என்ன நடக்கும் என்று கர்னாடகாவில் கொல்லப்பட்ட எழுத்தாளர்களே சாட்சி என்றும் மிரட்டுகிறது.

குறைந்தது இன்னும் ஒரு 4 வருடங்களுக்கு தமிழகம் தகப்பனை இழந்த குடும்பம் தவிக்கும் குடும்பமாக எடுப்பார் கைப்பிள்ளையாக ஆக்கப்பட்டுவிடும். எந்த தயாரிப்பும் இல்லாமல் மேலும் பல அனிதாக்களை பலிகொடுக்கம் வலிமையோ, புரண்டு வரும் வெள்ளமாக புரட்சி நடத்தவோ இந்த ஏழை மக்களுக்கு நாதி இல்லை.

ஒரு காலத்தில் சங்கதம் பேசினால் அல்ல காதில் கேட்டால் கூட காதில் ஈயத்தை காச்சி ஊற்றப்படும் என்று சொல்லி சொல்லி சங்கதத்தை அழித்துவிட்டு. இன்றைக்கு அதன் அனாதை பிள்ளையான இந்தியை படிக்கவில்லை என்றால் மருத்துவம் படிக்க முடியாது என்று பயமுறுத்தி தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவி இந்தியும் இந்துத்வமும் திணிக்க முற்பட்டு நிறிகிறார்கள். தலைக்கு 15 இலட்ச ரூபாய் கொடுப்போம் என்று சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு வாக்களித்தவர்கள் இன்றைக்கு செய்வதற்கறியாமல் கையை பிசைந்துக்கொண்டு நிற்கிறார்கள்.

இந்த அறிவு பஞ்சத்தை போக்க கிருத்துவ மற்றும் முசுலீம் அறக்கட்டளைகளை உதவும்படி வேண்டுதல்களை வைக்கின்றோம்.

யேசு நாதர் யார் என்றே தெரியாமல் இருந்த ஊரில் கிருத்துவம் சொல்லிக்கொடுத்து அதனுடன் கல்வியையும் வழங்கிய உங்களின் சேவையும் நிகரற்றது. உங்களின் பாதையில் கல்வி அறக்கட்டளைகளை நிறுவி கல்வி சேவையாற்றும் முசுலீம் அறக்கட்டளைகளும் உங்களுடன் எங்களுக்காக நிற்கின்றது. வாருங்கள் வந்து இந்த ஏழை இந்தியாவின் உண்மையான ஏழை மக்களின் கல்விக்கும் ஏதிர்காலத்திற்கும் உதவுங்கள்.

0 comments: