Thursday, October 15, 2015

இனிமேல் பாசக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பயங்கரவாதம் வெடிக்கும் - பாக்கிட்தான் போல் பாசக

மதவாதிகள் யார் என்றும் அதில் பாசகவின் பங்கு என்ன என்றும் உலகிற்கே தெரியும்.

நாட்டில் நடக்கும் மத வன்முறைகளுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதாடுகிறது பாசக.

இது எப்படி இருக்கிறது தெரியுமா, இந்தியாவில் பயங்கரவாதத்தை நிகழ்த்த ஆட்களை தயார் செய்து அனுப்பிவிட்டு. அவர்கள் மும்பையில் மாட்டியது போல் மாட்டிக்கொண்டால் பயங்கரவாதிகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாக்கிட்தானம் சொல்வது போல் இருக்கிறது பாசக சொல்லும் பதில்கள்.

பாக்கிட்தானத்தின் இந்த கருத்தை பாசகவோ ஐநா சபை வரை சென்று இல்லை என்று வாதிடுபவர்கள் தான் இந்த பாசக. ஆனால் பாசக மேல் இந்த குற்றம் வைக்கும் போது பாக்கிட்தானம் சொல்வதை போல் சகிப்புத்தன்மைக்கும் இந்தியாவின் பன்முக தன்மைக்கும் மொத்த குத்தகையை பாசக எடுத்து இருப்பது போல் பாசாங்கு செய்திகளை வெறும் வார்த்தைகளாக விற்று வருகின்றது.

எழுத்தாளர்கள் புரட்சி செய்தால் அந்த எழுத்தாளர்கள் பாசகவின் கொலை மற்றும் வெறுப்பு கொள்கைகளை பரப்பாதவர்கள். அதனால் அவர்கள் செய்யும் புரட்சி எல்லாம் எங்களுக்கு புரட்டு தான் என்கிறது.

ஆக மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால் பாசக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இனி இது போல் நூறு ஆயிரம் கலவரங்கள் பாசகவினரால் நிகழ்த்தபடும் என்று மறைமுகமாக அறிவித்து இருக்கிறது பாசக அரசு.

அப்படி நடக்கும் கலவரங்களுக்கு மாநில ஆட்சியில் இருக்கும் பாசக இல்லாதாரே பொறுப்பு என்று அடுத்த கொலைக்கு தயாராகிவிடும் பாசக பாக்கிட்தானம் போல்.

பாசக தான் வேண்டும் என்று வேண்டிய மக்களே அனுபவிங்கள்..........

Wednesday, October 14, 2015

இது தான் இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஜோக்கு -- திரும்ப திரும்ப பொய் சொல்லும் மோடி


மோடி தாத்ரி சம்பவம் பற்றி திருவாய் மலர்ந்தது. இந்த அளவிற்காவது பயம் இருக்கிறதே என்று எடுத்துகொள்ள வேண்டியது தான்.

"பாஜக எப்போதுமே மதச்சார்பின்மையை பின்பற்றுகிறது. வேற்றுமையில் மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து விலகியதில்லை. தாத்ரி போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை பாஜக ஒருபோதும் ஆதரித்தது இல்லை.

பாஜக மதவாதத்தை தூண்டுவதாகவும், சமூகத்தில் பிளவு உண்டாக்குவதாகவும் கூறும் எதிர்க்கட்சிகள் சில சூழ்நிலைகளை சாதகமாக்கிக் கொண்டு மக்களிடையே பிளவை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. "

என்ன ஒரு கண்டுபிடிப்பு, அப்போ இதை செய்பவர்கள் எல்லாம் குசராத்து கலவரத்தில் செவ்வனே பணி செய்துவிட்டு பதுங்கியவர்களோ..........

உங்க பொய் மூட்டைகளுக்கு அளவே இல்லையா......

Tuesday, October 13, 2015

தொடரும் பாசக இந்துத்துவா கொலைகள் -- காந்தி முதல் தாத்ரி வரை

விகடனில் வெளியாகி இருக்கும் மகேசு சர்மாவின் பேச்சு

மகேசு சர்மா - இவரை ஏன் இந்தியாவின் பிரதிநிதியாக அமெரிக்கா மற்றும் ஐநாவிற்கும் அனுப்பக்கூடாது

இனி மோடி தனது வெளி நாட்டு பயணங்களுக்கு இவரை உடன் அழைத்துக்கொண்டு சென்று முதலீடுகளை கொடுக்கும் முதலாளிகளிடமும் அந்த நாட்டு அரசியல்வாதிகளுடனும் பேசச்சொல்லாம்.

உண்மையில் பாரதிய சனதா கட்சியின் நிறம் என்ன என்று அழகாக வெளிச்சம் போட்டுகாட்டிடுவார் இந்த மனிதர்.

இரண்டாம் வகுப்பு மாணவர் சக நண்பர்களுடன் நடக்கும் குழந்தை விளையாட்டில் பேசிக்கொள்வது போல் அல்லவா பேசிக்கொண்டு இருக்கிறார் மனிதர்.

பாவம் இந்த குழந்தை எல்லாம் கட்சியில் சேர்த்துகொண்டு ஆட்சி நடத்துகிறது பாசக. மோடி பேசுவது போல் அந்த பக்கம் கூட்டத்தை அனுப்பி மக்களை கொலை செய்ய அனுப்பிவிட்டு இந்த பக்கம் தொலைகாட்சியில் அழுதுகாட்டும் மோடியின் நடிப்பு எல்லாம் இவருக்கு கற்றுக்கொடுக்கவில்லை போலும்.......

பாசக தான் வேண்டும் என்று வேண்டி விரும்பிய மக்களின் மகன் மகள்களுக்கு இந்த அனியாயம் நடக்கும் வரை இதன் கொடுமைகள் அவர்களுக்கு புரிய போவது இல்லை.

நல்ல வேளை பெரியார் உயிருடன் இல்லை அப்படி இருந்து இருந்தால் பாசக காந்திக்கு அடுத்து பெரியாரையும் கொலை செய்து இருக்கும்..................

Friday, October 9, 2015

உங்களிடம் பசு உள்ளதா - மாதம் ரூ25000 பராமரிப்பு தொகை கொடுக்க பாசக முடிவு

பசுவை வைத்து நடந்த அசம்பாவிதங்களை பார்த்து வருந்திய பாசக இனி பசு வைத்து இருப்போருக்கு பசு உயிருடன் இருக்கும் வரையில் மாதம் ரூ25,000 பணம் வீடு தேடி வந்து கொடுப்பதாக தீர்மானித்து இருக்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாது பசு இறந்தபிறகும் பசு வைத்து இருந்தவர் இறக்கும் வரையில் மாதம் அந்த பசுவை வைத்து இருந்தர்காக ரூ20,000 கொடுப்பதாகவும் திட்டம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்களே என்று கேட்டதற்கு, பசுவை வைத்து அரசியல் செய்யும் எங்களிடம் பசுக்கள் இல்லை. மாறாக வறுமையின் காரணமாகவும், செலவின் காரணமாகவும் தான் பசுக்கள் விற்கப்படுகின்றது. ஆகவே பசுக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் இப்படி காப்பாற்றினால் தான் உண்டு என்றும் சொன்னார்கள்.

எப்போது இருந்து பணம் கிடைக்கும் என்று கேட்டதற்கு பொது மக்களிடம் பசுவின் புனிதமும் தேவையும் எடுத்து சொல்லி இப்போது தான் நிதி திரட்ட துவங்கியுள்ளோம். மேலும் பாசக கட்சியின் தயவோடு தொழிலில் கொழிக்கும் தொழில் நிறுவனங்கள் கணிசமான தொகையை வழங்கவும் உள்ளது என்று தெரிவித்தார்கள்.

பணம் கிடைக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டதற்கு, உங்கள் பகுதியில் உள்ள பாசக ஊழியர்களை அனுகி எங்கே எவ்வளவு பசுக்களை வைத்து இருக்கிறீர்கள் என்று தெரிவித்தால் போதும். மேலும் இது வரையில் எவ்வளவு பசுக்கள் உங்களிடம் இருந்து இருக்கின்றது என்ற கணக்கையும் கட்டாயம் தெரியபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றார்கள்.

இப்படி பணம் கொடுப்பதனால் நிறைய செலவு பிடிக்குமே என்று கேட்டதற்கு, யாருக்கு செய்கின்றோம், பசு எனது தாய். தாய்க்கு செய்வதற்கு என்ன கணக்கு இருக்கிறது என்று பெருமையாக சொன்னார்கள்.

இந்த திட்டம் தமிழகத்தில் மட்டுமா இல்லை அனைத்து இந்தியாவிலுமா என்று கேட்டதற்கு, தமிழகத்தில் துவங்கி அனைத்து இந்தியாவிலும் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்த துவங்கும் என்று தெரிவித்தார்கள்.

குசராத்து கலவரத்தில் மோடி அரசின் பங்கு என்ன விளக்குகிறார் சித்தார்த்து நாத்து சிங்கு

குசராத்து கலவரங்களில் மோடியின் அரசு எவ்வளவு மெத்தனமாக இருந்தது
இந்த ஒரு கொலைக்கு சித்தார்த்து சொல்லும் அத்தனை காரணங்களும் அன்றைக்கு குசராத்து கலவரத்திற்கு பொருந்தும். 30 நிமிடங்களில் காவலர்கள் ஏன் வந்து அடக்கவில்லை என்று சொல்கிறார். ஆனால் 3 நாட்களுக்கு அன்றைக்கு காவலர்கள் வராமல இருந்ததே அதை பற்றி என்ன என்று சொல்வார்களா......

பசுவை வதைகிறதாக வந்ததின் புகாரின் பேரில் என்று சொல்கிறார், அப்போ பால் கறக்கும் கைகளை எல்லாம் வெட்ட போகிறார்களா இவர்க்கள்.

முதலில் இந்த பசு சம்பந்தமாக இருக்கும் சட்டத்தை முழுதும்மாக நீக்கவேண்டும், என்ன அசிங்கமான ஒரு போக்கிறகு வழி வகுத்துவிட்டது. ஒரு விலங்கிற்காக மனிதன் கொல்லப்படுவது என்ன ஞாயம் என்று தெரியவில்லை.

பசுக்கறி சாப்பிட பாக்கிட்தானத்திற்கு எல்லாம் போகவேண்டாம், கேரளா போதும். முடிந்தால் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.

இன்றைக்கு பூனாவில் இருக்கும் 5 நட்சத்திர உணவகங்களிலும், மற்றும் நாட்டில் இருக்கும் 5 நட்சத்திர விடுதிகளுலும் மாடு உண்ணும் வெளினாட்டினருக்கு என்று மாட்டுகறியை சமைத்து அதிகவில்லைக்கு விற்கிறார்கள். ஏன் அங்கே எல்லாம் சென்று இவர்களது வீரத்தை காட்டவேண்டியது தானே........

அடித்து கொன்றவர்கள் இந்து மத அடிப்படை வாதிகள் என்று சொல்லாமல் ஏதோ ஒரு பயங்கரவாத கும்பல் என்று சொல்கிறது அரசியல் கட்சிகள்........

வடமாநிலங்களில் படிப்பறிவு இல்லை என்றும், எவ்வளவு காட்டுமிராண்டி தனமாக இருக்கிறார்கள் என்றும் இந்த சம்பவம் காட்டுகிறது.

Thursday, October 1, 2015

பெண்ணின் சுதந்திரம் இவ்வளவு தானா

தனது வீட்டு பெண்கள் என்ன செய்தாலும் சரி ஆனால் அடுத்தவர் வீட்டு பெண்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்கவேண்டும் என்று அடுக்குவதேனோ.......

உங்கள் வீட்டு பெண்களை பார்த்து உங்களுக்கு இந்த மாதிரியான எண்ணங்கள் எல்லாம் வருகின்றதா என்று கேட்டால் அனைத்து ஆண்களும் இல்லை என்று தான் சொல்வார்கள், பிறகு அடுத்தவர் வீட்டு பெண்கள் என்றால் மட்டும் உங்களுக்கு எல்லாம் இவ்வளவு இளக்காரமா

இந்த எண்ணம் மாறும் வரையில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடையாது.

நல்ல வேளை குமுதம் இதழ் பொது இடங்களில் பாலூட்டும் அன்னையின் படத்தை மறைந்து இருந்து எடுத்து எல்லை மீறும் பெண்கள் என்று கட்டுரையிடாமல் போனார்களே என்று பெருமை பட்டுகொள்வோம்.

அந்த அன்னையின் செய்கையை எந்த வக்கிரமும் இல்லாமல் தவிர்த்துவிட்டு செல்லும் இதே பொதுமக்கள் இளம்வயது பெண்களை ஈயாக மொய்பது ஏனோ........

ஆண்களின் கண்ணியம் அவனது நடத்தையில் இருக்க வேண்டுமே தவிர பெண்ணின் தோற்றதில் வைக்ககூடாது. அவனுக்கு தான் ஆண் என்று பெயர் இல்லை என்றால் விலங்கு என்று தான் பொருள்.

போய் வேறு எதாவது வேலை இருந்தால் போய் பாருங்கள் அதைவிடுத்து இல்லாத பிரச்சனைகளை எல்லாம் எடுத்து ஆராய்வதைவிடுத்து.....

சுஜாத்த துவங்கி வைத்த இந்த குமுதம் மஞ்சள் பத்திரிகை தண்மையை மாற்றிக்கொள்ள வேண்டும். நேர்மையாக எழுதியே பிரபலபடுத்தலாமே இந்த கேவலமான வேலைகள் எல்லாம் தேவை தானா......குமுதம் குழுவினர் சிந்திப்பார்களா.....

குற்றம் கடிதல் - ஆசுகர் விருது பெறுமா........

படத்தில் முன்னுக்கு பின் முரணான கருத்துகள் விரவி கிடக்கிறது.

எந்த ஒரு படமும் ஒரு மைய கருத்தை வலியுறுத்தி எழுதி எடுக்கபடும். ஆனால் இந்த படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று உறுதியாக சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.

அது மட்டும் இல்லாது காட்சிபடுத்தலில் அதிகமாக காட்சிபிழைகள் உள்ளது, உதாரணமாக. மயங்கிய சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து செய்திகள் தீயாக பரவி உடன் படிக்கும் மாணவியை பேட்டி எடுக்கும் காட்சிகள் கதைபடி இரவு 10:00க்கு மேல் நடப்பது போல் காட்டி இருப்பார்கள். அந்த நேரத்தில் மாலையில் மலர்ந்தும் மலராமலும் இருக்கும் முல்லை பூவை சிறுமி தலையில் அணிந்துக்கொண்டு பேட்டி கொடுப்பது போல் காட்சி அமைப்பு, இது கட்டாயம் தனிக்கை குழுவிற்கு பட்டர்த்தவமாக தெரியும், படகுழுவுக்கு கண்ணில் படாமல் போனது ஏமாற்றமே....

கதையில் வரும் பாத்திரங்களும் முன்னுக்கு பின் முரணாகவே நடந்துகொள்கிறார்கள் தலைமை ஆசிரியரை தவிர. உதாரணமாக பாலியலை மாணவரிடம் பேசுவதில் என்ன தவறு என்று சொல்லும் ஆசிரியைக்கு சக ஆசிரியை தன்னை போலவே தான் கண்டிப்பு காட்டி இருப்பார்கள் என்று பேசுவதை விடுத்து எதிராக பேசுவதும் நடந்துகொள்வதும் இயல்பாக இல்லை.

ஆசிரியை என்ன மதம் என்று காட்டியும், கலப்புமணம் புரிந்தவர் என்று வலிய காட்டினார்கள் ஏன் என்று தெரியவே இல்லை.

இடையே காவலர்களையும் காட்டினார்கள், என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று உறுதிபட தெரிவிப்பதைவிட குண்டான மகனையும் கொழுப்பு உணவையும் உட்கொள்பவராகவும் காட்டி இருக்கிறார்கள் ஏன் என்று படக்குழுவினர் தான் சொல்லவேண்டும்.

பொதுவுடமைவாதிகள் என்றால் கையை நீட்டுபவர்கள் என்று துவக்க காட்சியில் இருந்து காட்டுவது ஏனோ தெரியவில்லை ஒருவேளை அமெரிக்காவிற்கு பிடிக்கட்டும் என்றா என்று தெரியவில்லை. ஒரு இயக்கவாதியாக இருப்பவர்கள் எந்த ஒரு சூழலிலும் கண்ணியமாக நடந்துகொள்பவர்கள் படத்தில் காட்டிய தலைமை ஆசிரியர் குடும்பம் போல், அதை விடுத்து  அடாவடியாக காட்டி இருப்பது எதிர்மறை பாத்திர படைப்பு, சொல்லமுடியாது இந்த ஒரு காரணத்திற்காக ஆசுகரில் தேர்ந்து எடுத்தாலும் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

கைக்குட்டையில் இரத்ததுடன் கண்டேன் என்று சொல்லும் சிறுமியின் காட்சிகள் யாரையோ சமாதனப்படுத்த வலிய திணித்தது போல் இருக்கிறது.

அந்த ஏழை அம்மாவையும் சிறுவனையும் இன்னமும் அதிக கோணங்களில் மனதில் பதியும் படி முகம் தெரியும் படி காட்சிபடுத்தி இருக்கலாம் என்னவோ வேண்டாம் என்று நிழல் மனிதர்களாகவே கடைசிவரை காட்டியது ஏமாற்றமாகவே இருக்கிறது.

காதல் திருமணம் என்றால் வேலைபார்க்கும் பள்ளியில் சொல்லிக்காமல் சென்று தான் செய்துகொள்ள வேண்டுமா என்ன, விடுப்பு எல்லாம் கொடுக்கமாட்டார்களா என்ன 3 நாள் ஆளைகானும் என்று காட்டுவது ஏனோ இயக்குனருக்கே வெளிச்சம்.

சங்கடங்கள் அதிகம் ஆகும் கட்டத்தில் நெற்றியில் இருக்கும் திலகத்தை அழிப்பதாக காட்டியதின் அடையாளம் கிருத்துவர்கள் கலப்புமணம் செய்துக்கொண்டால் இப்படி தான் துன்பம் அனுபவிப்பார்கள் என்று மத போதகர்கள் சொல்வது போல் காட்சிபடுத்தியதை கண்டிக்க வேண்டும்.

கடைசியாக தாய் நாவலை எதுக்கு காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை, அதற்கு பதிலாக புத்துயிர்ப்பு காட்டி இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும்.

இந்த படத்தைவிட காக்கா முட்டை தெளிவாகவும் நல்ல ஓட்டத்துடனும் இருந்தது...........