Friday, August 28, 2015

ஷீனா போரா கொலை வழக்கு - Flowers in the Attic (2014) திரைபடமும்

ஷீனா போரா கொலை வழக்கு

பொதுவாக ஆங்கிலப்படத்தை பார்த்து தமிழில் எடுத்துள்ளார்கள் என்று விமர்சனம் செய்வது வழக்கம். ஆனால் சென்ற ஆண்டு பார்த்த இந்த ஆங்கிலப்படத்தில் காட்டியது போல் ஒரு உண்மை நிகழ்வு இந்த கொலை வழக்கு.

என்ன கொலை மட்டும் தான் ஆங்கில படத்தில் இல்லை மற்ற அனைத்தும் அந்த படத்தில் உள்ளது. ஆங்கிலப்படத்தை பார்க்க துவங்கியதும் இப்படி ஒரு கொடூரமான படமா என்று இருந்தது.

ஒரு பணக்கார பெண்ணுக்கு தகாத காதல் (தனது சகோதர முறை ஆணை காதலித்து மணம் செய்வது), அதை தொடர்ந்து வீட்டை விட்டு விரட்டப்பட்டவளாக ஆகிறாள். அந்த பந்ததில் 4 குழந்தைகளுக்கு தாயாகிறாள். பின்னர் நிகழும் ஒரு விபத்தில் அவளது கணவம் இறக்கிறான்.

4 பிள்ளைகளை வைத்துக்கொண்டு வீட்டு வாடகைக்கூட கொடுக்க முடியாத நிலையில் தனது பெற்றோரை உதவிக்கு தொடர்புகொள்கிறாள். அவளது அம்மா மிகவும் இரகசியமாக இவளுக்கு உதவ முன் வருகிறாள் அதற்கு விலையாக இவளுக்கு நடந்த திருமணமோ அதில் பிறந்த 4 பிள்ளைகளை பற்றி வெளியே சொல்வே கூடாது என்று நிபந்தனைகளை விதிக்கிறாள்.

பிறகு பெற்றோருடன் ஒரு பெரிய பண்ணை வீட்டில் தங்குகிறார்கள், பிறகு தான் தொடங்குகிறது கொடுமைகள். வீட்டில் பாழடைந்த பொருட்களை அடுக்கி வைக்கும் ஆங்கிலத்தில் சொல்லும் அட்டிக்கு அந்த 4 குழந்தைகளை இருக்க சொல்லிவிட்டு இவள் மட்டும் வெளியில் சென்று வருவாள்.

வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் என் குழந்தைகள், உங்களை தவிர எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை, கொஞ்ச நாள் பொருங்கள் உங்களின் தாத்தா எனது பெயருக்கு சொத்துகளை எழுதும் வரை தான் நமது கவலைகள் எல்லாம். பிறகு நமக்கு என்று ஒரு வீடு என்று வசதியாக வாழ்வோம் என்று சொல்லி குழந்தைகளை அந்த பூட்டிய அறையில் விட்டு விட்டு செல்வாள்.

பிறகு சிறை அறைக்கே உணவுகளை கொண்டு வந்து கொடுப்பது போல் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வார்த்தை வார்த்தை ஐ லவ் யூ என்று சொல்லி செல்வாள்.

இப்படியே சில மாதங்கள் கழிய பிள்ளைகளும் வெளி உலகை கானாமல் எத்தனை காலம் இருப்பது என்று ஒருவருக்கும் பெரியாமல் கள்ள சாவி தயாரித்து இரகசியமாக வெளியே சென்று வருவார்கள். அப்படி ஒரு நாள் சென்று பிடிபட, பாட்டி பிடி பிடி என பிடித்துவிடுவார் அந்த பிள்ளைகளை.....

இப்படியே சில வருடங்களும் தொடரும் இந்த கொடுமைகள், ஒரு கட்டத்தில் அந்த இளம் தாய்க்கு மறுமணம் செய்ய தீர்மானிக்க, தொல்லையாக இருக்கும் குழந்தைகளை கொன்றுவிடுவது என்று உணவில் நச்சு கலந்து கொண்டு வந்து கொடுத்து செல்வார் மீண்டும் வார்த்தைக்கு வார்த்தை ஐ லவ் யூ என்று.

ஒரு கட்டத்தில் அன்னை செய்த அதே தவறை பிள்ளையும் செய்யும் கொடுமையும் இந்த படத்தில் உண்டு.......என்டா கதை இது என்று பார்த்தால் இன்றைக்கு உண்மை நிகழ்வு என்று இந்த செய்தி. தல சுத்துதப்பா.................

Thursday, August 27, 2015

விகடன் வெளியிட்டிருக்கும் தவறான தகவல் - 'டிப்ஸ்'ஸில் குறும்பு... பதிலடி கொடுத்த பணிப் பெண்!

'டிப்ஸ்'ஸில் குறும்பு... பதிலடி கொடுத்த பணிப் பெண்!

விகடனில் வெளியிட்டு இருப்பது போல் ஒரு மணி நேரத்து சம்பளம் $2.5 என்ற தகவல் கதையாத்தான் இருக்கும், வேண்டும் என்றால் $25.00 ஆக இருக்கலாம். மற்றபடி சொன்ன தகவல்கள் ஓர் அளவுக்கு உண்மையே.

நுகர்வோர்(Serving) வேலைகளில் இந்த இணாம் தான் அவர்களது வருமானத்தில் பெரும்பகுதி.

சமீபத்தில் செலவுக்கு கொடுக்க வேண்டிய தொகையைவிட அதிகமாக இணாம் கொடுக்க, வேண்டாம் என்று மறுத்தும் எனக்கு தெரியும் நுகர்வோர் வேலையில் இணாம் எவ்வளவு முக்கியம் என்றும், தானும் நுகர்வோர் வேலையில் தான் இருக்கிறேன் என்று சொல்லிச்சென்ற அந்த முகம் தெரியாத பெண்மணியை ஞாபகப்படுத்தியது இந்த கட்டுரை.....

பூனை குட்டி வெளியே வந்துவிட்டது - குசராத்து கலவரமும் - விசுவ இந்து பரிச்சித்து அறிக்கையும்

என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு பார்த்தோம், இன்றைக்கு விசுவ இந்து பரிச்சித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. குசராத்து கலவரத்தை காரணம் காட்டி நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீட்டை முழுவதுமாக ஒழித்து, பழையபடி மக்கள், வரும் வருமானத்தில் தீபாவளிக்கு ஒரு புத்தாடையும் பொங்களுக்கு ஒன்றும் என்றும் மற்றவைகள் எல்லாம் செலவழித்து அதே பழைய வாழ்க்கை முறைகு தள்ள துடிக்கின்றது போலும்.

இட ஒதுகீடு இல்லாத நிலையிலும், பொது நுழைவு தேர்வும் இல்லாத நிலையில் மக்களுக்கு தொழிற்படிப்புக்கான வாய்ப்புக்கள் என்ன என்ன விதமாக அர்ப்ப காரணங்களை காட்டி நிராகரிக்கபட்டது என்று எல்லாம் தனியாக எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை, அனைவரும் அறிந்த இரகசியம்....

இதிலே குசராத்தில் நடந்த கலவரம் மேலும் பெருவாரியாக மற்ற சில/பல மாநிலங்களிலும் பரவும் அபாயம் இருப்பதாக விஇப தெரிவிப்பதில் இருந்தே நீதிமன்றத்தில் இந்த வழக்கை எப்படி எடுத்துக்காட்டி தடைகளை பெற்றுவிடவும் திட்டம் இருக்கிறது என்று தெளிவாக தெரிகின்றது.

அதுவும் உச்ச நீதிமன்றதில் தடையை பெறவும் ஆயத்தம் ஆனதாகவும் தெரிகின்றது, அப்படி ஒரு ஆணையம் அமைக்கப்பெற்றால் குறைந்த காலத்தில் 20ரூ வருமானத்தில் ஒரு குடும்பமே நடத்தலாம் என்று திட்ட ஆணையம் வழங்கிய அறிக்கை போல் அல்லவா இந்த ஆணையத்தின் அறிக்கையும் இருக்கும்.

 நீதிமன்றத்தை பொருத்த அளவில் சாட்சிகளும் ஆவணங்களும் மட்டும் இருந்தால் போதும் மற்றபடி சரியா தவறா என்று எல்லாம் பார்க்கமாட்டார்கள், கொமாரசாமி விளக்கிய 20% போல்.

கல்வி வேலை வாய்ப்புகளை அழகாக அழித்திவிட்டு ஒரு பக்கம் எளிய மக்கள் மேலும் ஏழ்மைக்கு தள்ளிவிட்டு பணக்காரர்கள் மேலும் கல்லாகட்டும் காட்சி எல்லாம் பார்க்க இருக்கின்றோம்.

சுதந்திர இந்தியாவில் இது வரை கண்டுவந்த சமூக வளர்ச்சி இனி பாதாளம் நோக்கி பாயம் பேராபத்தில் இருக்கின்றோம். பாசக வந்தால் நாடு செழிக்கும் என்று சொன்னார்கள் நம்பினீர்கள் யாருக்கு செழிக்கும் என்று கேட்க்க தவறிவிட்டீர்களே........அனுபவி ராசா அனுபவி.................................

Wednesday, August 26, 2015

அடடா குசராத்தில் பாலாறும் தேனாறும் அல்லவா ஓடுவதாக நமக்கு சொன்னார்கள் - ஐயோ பாவம் இந்தியா


குசராத்து மாதிரியில் இந்தியாவை கட்டமைபோம் என்று பாசக மக்கள் சொல்லிவருவது இதை தானா. பெரும் வர்த்தகர்கள், நாட்டின் பொருளாதாரத்தையே வடிவமைப்பவர்கள். குசராத்து நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளதவி கொடுக்கும் போது வேண்டாம் என்று சொன்னவர்கள். தங்களது துயரை தாங்களே துடைத்துக்கொள்கின்றோம் என்று வெளி நாட்டுவாழ் இந்தியர்களின் பங்களிப்பால் விரைவில் மீண்டவர்கள் என்று எல்லாம் நமக்கு சொன்னார்கள்.

இப்போது பார்த்தால் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகள் படிக்க வழியில்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் வன்முறையாம்.

 நாமும் தெரியாமல் தான் கேட்போம், பள்ளியில் இடம் கிடைக்காதா, இல்லை கல்லூரியில் இடம் கிடைக்காதா. எங்கே இடம் கிடைக்காது என்று நினைத்துக்கொண்டு போராடுகிறார்கள் என்று சொன்னால் மக்களுக்கும் விளங்கும் .....சொல்வார்களா


நேற்று தான் அமித்து சா மோடியின் ஆட்சியில் எங்குமே வன்முறையோ ஊழலோ இல்லை என்று திருவாய் மலர்ந்தார்.........எங்கேயோ இடிக்கிறது போல தெரியுதே........அத்வானி தமிழகம் வந்து போன போது எல்லாம் குண்டுகள் வெடித்தது போல..........

Tuesday, August 25, 2015

"கேளடி கண்மணி" 25 ஆண்டுகள் - ரசிகனின் - கானா பிரபா

ஒவ்வோரு பாடலும் படமும், கதையும் கட்டுரைகளும் நமது வாழ்வில் நீங்காத ஒரு அங்கமாகவே மாறியுள்ளதை கவனிக்கமுடியும்.

குறிப்பாக இனிய நினைவுகளாவும், சோக நிகழ்வுகளாகவும் இருக்கலாம். ஒரு 5 நிமிடம் தான் அந்த பாடல்கள் என்றாலும் அப்படியே அந்த காலத்துக்கு நம்மை கையைபிடித்து அழைத்து சென்று திரும்பும் ஒரு அதிசயம்.

கானா அண்ணா குறிப்பிடுவதை போல் மிகுந்த பொருளாதார சிரமங்கள்கு ஊட கடந்துவந்த பாதையை கொண்டவர்களுக்கு எப்போதும் துணையாக இருந்துள்ளது வானொலி. ஒன்று இல்லை இரண்டு இல்லை என்ன என்ன அலைவரிசைகளில் எப்போது எல்லாம் பாட்டு வரும் என்று காத்து இருந்து கேட்ட காலம் எல்லாம் மலையேறி போனது என்னவோ சோகம் தான்.

இது என்ன மாயம் - திரைவிமர்சனம் - The Truman Show (1998)

முதலில் இது என்ன மாயம் குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்போம்.

The Truman Show ஆங்கிலப்படத்தை பார்த்த பொழுது இப்படி ஒரு படம் தமிழில் வருமா என்று ஆச்சர்யமாக இருந்தது.

ஆங்கிலப்படத்தின் கதை இவ்வளவு தான், பிறந்தது முதல் ஒரு குழந்தையின் வாழ்க்கையை அப்படியே 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்புகிறார்கள் ஒரு தொலைகாட்சியினர்.

அந்த தொக தொடரில் துருமென் தவிர மற்ற அனைவரும் நடிகர்கள், ஒவொரு காட்சியையும் சுவாரிசியமாக உள்ளதாக ஆக்க நிகழ்சியின் இயக்குனர் என்ன என்ன நடக்க வேண்டும் என்று வடிவமைத்து இயக்குவார்.

எல்லா பையன்களுக்கும் இருப்பது போல் துருமென்னுக்கு ஒரு நண்பன், வீடு, அம்மா, அப்பா, வேலைக்கு அலுவலகம் ஊர் என்று நிகழ்வாழ்வில் உள்ளது போலவே படபிடிப்பு தளம் அமைத்து இருப்பார்கள்.

துருமென் என்ன சாப்பிடுகிறான், என்ன படுக்கையில் படுக்கிறான் என்று ஒவ்வொரு பொருளும் விளம்பரமாக வருவதும் அதை பார்த்து மக்கள் வாங்கி வைத்து அப்படியே செய்து பார்ப்பதும், துருமெனுடனான பேச்சுககளுக்கு இடை இடையே விளம்பர வசனங்கள் பேசுவது என்று படம் அழகாக நகரும்.

 நிகழ்ச்சியின் இயக்குனர் எழுதிய துருமெனின் காதலியின் மேல் ஈர்பு வராமல் வேறு ஒரு நடிகையை பார்த்ததும் மையல் கொள்வதும், அவளை இரகசியமாக தேடுவது கண்டு அவளை தொடரைவிட்டு நீக்குவதும், பிறகு அவளை தேடி கண்டுபிடிப்பதும் என்று ஒரு ஓட்டமும்.

அவளை உலகின் வேறு முலைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள் என்று தெரிந்துக்கொண்டு கடலில் ஒரு சிறிய படகில் செல்ல முற்படுவதும் என்று அழகான கதையும். ஏதோ நடக்கிறது என்று கண்டுபிடித்துவிட்ட துருமெனுக்கு என்ன என்று தெரிந்து கொள்ள முனைவதும். அதுவரையில் மற்ற கதாபாத்திரங்கள் வசனங்கள் மட்டுமே பேசியவர்கள்  உண்மையிலே நடப்பது போல் நடத்துவதாக ஓடுவது ஆடுவதும் ஆக ஒரு விருவிருப்பான திரைகதையாகவும் அமைத்து இருப்பார்கள்.

தமிழில் இந்த நுட்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு அழகாக வேறு ஒரு கதையும் திரைகதையும் அமைத்து எடுத்து இருக்கிறார்கள். நன்றாகவும் வந்து இருக்கிறது, வாழ்த்துக்கள்.

Friday, August 21, 2015

7000 மாணவர்கள் சேர்ந்து அதகளபடுத்திய ஊர் - sororityயும் - fraternityயும்

உலக அளவில் 10வது தரத்தில் இருக்கும் ஒரு அமெரிக்க பல்கலைகழகம் இருக்கும் ஊரில் 2015 - 2016 ஆம் ஆண்டுக்கான கல்லூரி கல்வியாண்டு 08/20/2015ல் துவங்கியது. வகுப்புக்கள் 08/24/2015ல் இருந்து துவங்குகிறது. புதிதாக கல்லூரிக்கு வந்து இருக்கும் மாணவர்களை அவர்களது துறைகளை சேர்ந்த மாணவர்கள் அறிமுகபடுத்தும் விழா நேற்று நடந்தது.

இந்த 7000 மாணவர்களில் சுமார் 3000 மாணவர்கள் இந்த அறிமுக உபச்சாரவிழாகளில் கலந்துகொண்டனர்.

துறைவாரியாகவும், குழுவாரியாகவும் நடந்த உபசரிப்பு என்றதால், ஊரின் ஒரு பகுதியில் பல்வேறு இடங்களாக பிரித்து கொண்டாடினார்கள்.

மாலை 5:00க்கு துவங்கிய கொண்டாட்டங்கள் இரவி 2:00 வரை நீடித்தது. 2:00க்கு மேல் வீடுகளில் கொண்டாடியவர்கள் விடிய விடிய தொடர்ந்தார்கள்.

கொண்டாடங்கள் கொண்ட தெருக்களில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஒரு கட்டத்தில் கட்டுக்குள் வராத கூட்டங்களை காவலர்கள் புகுந்து வீட்டு போக சொல்லி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள்.

ஒரு சில இடங்களில் சிறு சிறு மோதல்களும் இடம் பெற்றது. இருந்தும் காவலர்கள் அழைக்கப்படவில்லை என்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

காவலர்களை பார்த்த மாணவர் கூட்டம் அமுக்கியே வாசித்தது. காரணம் புதிதாக ஒன்றும் சொல்ல தேவை இல்லை அவர்கள் அனேக மக்கள் நிலத்திலேயே மிதந்துக்கொண்டு இருந்தனர்.

இந்த கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுத்து இருந்த அமைப்பினர்கள், கொண்டாட்டங்கள் முடித்த கையோடு மக்களை வீட்டுக்கு வழியனுப்பிவைத்தனர்.

இத்தனை அதிக அளவில் மாணவர்கள் கூடியும் அதுவும் சரக்கு உபசரிப்பாக இருந்தும் காவலர்களை குவிக்காமலும் அடிதடியும் இல்லாமலும் சுமூகமாக நடந்தேரியதை பார்க்கும் போது மாணவர்களின் கட்டுப்பாடும், அதைவிட அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் சுதந்திரமும் நம்மை பயமுடுத்தவே செய்கின்றது.

ஒரு வேளை இப்படி ஒரு உபசரிப்பு இந்தியாவில் நடந்து இருந்தால் அனேகமாக அடிதடி கலாட்டாவாக முடிந்து தான் இருக்கும்........ அதுவும் புதிய பழைய மாணவர்கள் கூடும் இடம் என்றால்.......

மோடியின் அரபுநாடு பயணத்தினால் இந்தியாவிற்கு என்ன கிடைக்கும்
அமெரிக்காவோ, பிரிடனோ இல்லை பிரான்சோ மோடி சென்று இருந்தால் இந்தியாவிற்கு வேலை, தொழில் நுட்ப உதவி கிடைக்கும் என்று சொல்லாம். இல்லை ஆப்ரிக்கா, இலங்கை, மொரீசியசு போன்ற நாடுகளுக்கு சென்று வந்தார் என்றால் இந்தியாவால் அந்த நாடுகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கு பண உதவி செய்கின்றேன் என்று அதானிக்கும் அம்பானிக்கும் அந்த திட்ட பணத்தை கொடுப்பார்கள் என்று சொல்லாம்.

இந்த இரண்டு வகையிலும் அடங்காத அரபு நாடுகளுக்கு மோடி ஏன் செல்ல வேண்டும்.

அரபு நாடுகளில் நடக்கும் அலுவலக வேலைகளை இந்தியாவில் இருந்த படியே நீங்கள் தூங்கி எழுந்திரிக்கும் போது தயாராக இருக்கும் என்று தகவல் தொழில் நுட்ப வேலையை இந்தியாவிற்கு கொடுங்கள் என்று கேட்கமுடியுமா.

இல்லை அரபு நாடுகள் அணுமின் நுட்பத்திலோ அல்லது இராக்கெட்டு நுட்பதிலோ அல்லது நாட்டின் பாதுகாப்பு திட்டங்களிலோ அதி நவீண நுட்பங்களை வைத்துள்ளதால் இந்தியாவிற்கு அந்த திட்டங்களில் தொழில் நுட்ப உதவிகளை வழங்கும் படி கேட்டிருப்பாரா...

அல்லது அரபு நாட்டின் பிரதான தொழிலான எண்ணை துரப்பனங்களில் இந்தியா உதவும் என்று கேட்டு போனாரா.........

இப்படி எந்தவிதத்திலும் இந்தியாவின் வளர்ச்சிக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ எந்த பயனும் கொடுக்க முடியாத அரபு நாடுகளுக்கு மோடி அரசு முறை பயணம் போகவேண்டிய அவசியம் என்ன என்று பாசகவோ அல்லது மோடியை தாங்கி பிடிக்கும் பதிவர்களாவது தெளிவுபடுத்துவார்களா.

இதிலே சில அரபு நண்பர்கள் மோடி எப்படி இந்திய பொருளாதாரத்தை குசராத்து பாணியில் தூக்கி நிறுத்துகிறார் பாருங்கள் என்று எழுதி தீர்த்து இருக்கிறார்கள்.........

மோடியின் அரபு பயணம் மேலே உள்ள படத்தில் காட்டுவது போல் அல்லவா இருக்கிறது.

Tuesday, August 18, 2015

சீனா உண்மையில் ஒரு பொதுவுடமை நாடு தானா - இந்தியா உண்மையில் ஒரு ஏழை நாடா

மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணும் அவரது தாயாரையும் பார்க்க நேர்ந்தது. எங்கே இவ்வளவு தூரம் என்று விசாரித்ததில் அந்த பெண்ணிற்கு அமெரிக்க பல்கலையில் படிக்க இடம் கிடைத்து இருப்பதாகவும், அந்த பெண்ணின் தாயார் அவளுடன் தங்கி எல்லாம் செய்துகொடுத்துவிட்டு பிறகு ஊர் திரும்ப இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பெருமைக்கு உரிய செய்தி என்றாலும் ஆச்சரியத்திற்கும் உரிய செய்தியாக இருந்தது. ஒருவரை ஊருக்கு விமானம் ஏற்றி அனுப்பவே திணறிய காலம் போய் இப்போது அமெரிக்க வரை வந்து வீடுபிடித்து கொடுத்துவிட்டு செல்லும் ஆற்றல் பெற்ற பெற்றோராக இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது.

பெண்களை படிக்க வைக்கவேண்டுமா என்ற காலம் எல்லாம் போய் என்ன என்ன படிக்க முடியுமோ அவ்வளவும் படி என்று அவளை கொண்டாடிய இந்த தாய் தந்தையரை வாழ்த்துவோம்.

இதே பாணியில் ஒரு சீன குடும்பத்தையும் பார்க்க நேர்ந்தது. இந்தியாவில் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அல்லது தங்களது பணத்தை எல்லாம் பிள்ளைகளுக்காகவே செலவிடுவோம் என்ற தியாக பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்றதாலும் இது சாத்தியம் என்று வைத்துக்கொண்டாலும்.

சீனர்கள் எப்படி அதுவும் ஒரு பொதுவுடமை கொள்கையில் வாழும் நாட்டில் தனியுடமைகள் ஏதும் கூடாது என்று இருக்கும் நாட்டில் ஏகாதிபத்திய அமெரிக்கா என்று மூச்சுக்கு மூச்சு சொல்லும் நாட்டில் இருந்து பட்டபடிப்பில் சேர பெற்றோர் சகிதமாக வந்து இறங்கி இருப்பதை நம்பவே முடியவில்லை.

அமெரிக்க வாழ் இந்தியர்களால் இந்தியாவுக்கு ஒரு பயனும் இல்லை - மோடி
2.23ல் இருந்து கவனிக்கவும் மோடி சொன்னதாக சேகர் என்ன சொல்கிறார் என்று. அன்று ஒரு பயனும் இல்லை என்று சொன்னவர் தான் இன்று இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்று கையேந்திக்கொண்டு நாடு நாடாக அலைகிறார். அதுவும் அபுதாபியில் போன பாசக அரசு விடுத்த அழைப்பை ஏற்று முதலீடு செய்ததை நினைவு கூர்ந்ததாகவும் இன்றைக்கு செய்திகள் வருகின்றது.

 நேரத்திற்கு தகுந்தது போல் ஒரு பேச்சு நித்தமும்...........

Monday, August 17, 2015

இன்னும் ஒரு மாட்டுகறி நாட்டிடம் கையேந்தி நிற்கிறது மோடி அரசு - அபுதாபியில் மோடி கையேந்தி நிற்கும் காட்சி

இந்தியாவில் இருக்கும் சாதாரண மக்களை அதை சாப்பிடாதே இதை சாப்பிடாதே என்று முழங்கும் பாசக திரும்ப திரும்ப மாடுகறி உண்ணும் மக்களிடமே கையேந்தி நிற்பது எதற்கு. அப்போ மாட்டுகறி இல்லை பிரச்சனை இந்தியாவில் அதை உண்ணும் மக்கள் தான் பிரச்சனை பாசகவிற்கு. அதை நேரடியாக சொல்லாமல் அது இது என்று சொல்கிறார்கள்.
மாட்டுகறி உண்ணும் மக்களால் தயாரிக்கபட்ட ஆப்பில் அலைபேசியில் மாட்டுகறி சாப்பிடும் மக்களுடன் படம் பிடித்துகொள்வது எத்தனை மகிழ்ச்சி மோடிக்கு பாருங்கள்.

Saturday, August 15, 2015

ஆட்களை கொலை செய்வது மிகவும் புணிதமான செயல் - குருமூர்த்தி சுப்பிரமணிசாமி

பழிவாங்கும் நடவடிக்கையா? அதிகார துஷ்பிரயோகமா?

சங்கர் ராமன் கொலை வழக்கை பற்றிய செய்திகளில் கருத்து தெரிவிக்கும் போது இதே குருமூர்த்தி நாட்டின் பாதுகப்புக்கும் சமூக பாதுகாப்புக்கும் அச்சுருத்தலாக இருக்கிறது இந்த கொலைகள் என்று சொல்லாமல். சங்கர் ராமன் கொலையே செய்யப்படவில்லை என்றும், அப்படியே கொலை செய்யப்பட்டு இருந்தால் அது அவரது பாவத்திற்கு கிடைத்த பலனாக இருக்கும் என்று சொன்னவர், மாறனின் வழக்கை நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்ட அச்சுருத்தலாக கொண்டு விசாரிக்க வேண்டும் என்று தினமணியில் எழுதுகிறார்.

மாறன் தவறு செய்தாரா இல்லையா என்றது நீதிமன்றமும் மபுது (CBI) பார்த்துகொள்ள வேண்டியவைகள். ஆனால் கொலை அதுவும் கோவிலில் வைத்து துடி துடிக்க பட்ட பகலில் நிறைய சாட்சிகளை வைத்துக்கொண்டே நிகழ்த்தப்பட்ட வழக்கு விசாரிக்க தகுதியானவை அல்ல என்று இந்தியாவின் அட்டர்னி செனரல் சொல்லிவிட்டதால் மேல் முறையீடு செய்ய தகுதியில்லா வழக்கு என்று சப்பை கட்டு கட்டியவர்கள் பண மோசடி வழக்கை  நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுருத்தல் என்று திசை திருப்புகிறார்.

ஒரு வழக்கை எப்படி நடத்த வேண்டும் என்று இந்தியாவின் அட்டர்னி செனரலுக்கு வகுப்பு எடுக்கிறார்.

பாவம் அந்த அட்டர்னி செனரல், நாளை இந்த செய்திகளை படித்துவிட்டு அவரது வீட்டார்கள் அவரை பார்த்து அசடு என்று கேளி போசபோகிறார்கள்.

ஆமாம் பாசக ஆட்சியில் பாசகவிற்கு வேண்டியவர் அல்லவா அட்டர்னி செனரலாக நியமிக்கபட்டு இருப்பார். பாவம் இவாளுக்கு வேண்டியவர் இல்லை போலும் அது தான் இப்படி சினிமா வசனங்கள் எல்லாம் எழுதி அவரை நையாண்டி செய்கிறார்.

குருமூர்த்தி வகையராக்களுக்கு நீதிமன்ற நடைமுறை ஒன்றை சொல்லிக்கொடுப்போம்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது மாறன் மபுது இல்லை, ஆகவே வழக்கை முன்னடத்தும் உரிமை மாறனின் வக்கீலுக்குத்தான் உண்டு. அதனால் அவர் தொடும் விவகாரங்களை தவிர வேறு ஒன்றும் நீதிமன்றத்தில் அந்த வழக்கின் வாதத்தில் கொண்டு வர முடியாது என்ற அடிப்படை கூட தெரியாத குருமூர்த்தி பாவம் பக்கம் பக்கமாக சினிமா வசனம் எழுதி மக்களின் மனதில் இடம் பிடிக்க பார்க்கிறார்.

பேசாமல் போய், அடித்தால் எதிர்த்து நிக்க முடியாதவர்களாக சென்று கொலை செய்து அதை புணிதமான செயல் என்று கட்டுரை எழுதுங்கள் பிரச்சாரங்கள் செய்யுங்கள். பாவம் ஏன் இந்த வீண் வம்பு உங்களுக்கு.

அப்போ சுப்பிரமணி சாமி பார்த்துவந்த இந்த துப்பரிவாளர் வேலை குருமூர்த்தியிடம் கொடுத்துவிட்டார்கள் போலும்.........

Friday, August 14, 2015

தமிழகத்தில் அடுத்த ஆட்சி பாசக தான் -- பாவம் தமிழக மக்கள் -- மோடி சந்திபின் இரகசியம்

இது வரையில் என்ன என்னவோ செய்து பார்த்தும் திராவிட கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வரும் வாய்ப்போ இல்லாத நிலையில் பாசகவின் செயல்கள் நமக்கு தெளிவுபடுத்துவது என்ன.

தமிழருவி மணியன் சொன்னது போல் திமுக இனி ஆட்சியில் அமர்வது சாத்தியம் இல்லாத ஒன்று தான். ஆனால் செயலலிதா அப்படி இல்லை குறைஞ்சது திமுக வரக்கூடாது என்றதுக்காவது அவரை மக்கள் தேர்ந்து எடுக்கும் சூழ்நிலை தான் கடந்த 10 ஆண்டுகளாக நிலவி வருகின்றது.

ஆக செயலலிதாவை தேர்தலில் இல்லாமல் செய்துவிட்டாலே போதும் என்ற ஒரே நோக்கில் அவரது சிறை தண்டனையை உறுதிபடுத்தும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள இந்த வேளையில் கொஞ்சம் கூட அவசியமே இல்லாத சூழலில் மோடி தமிழகம் வந்து போகவேண்டிய அவசியம் என்னவாக இருக்கும்.

செயலலிதா மேல் தொடுக்கப்பட்ட வழக்கு நீர்த்துப்போகவும் அப்படி உச்ச நீதிமன்றத்தில் நீர்த்து போனால் இனியும் வரப்போகும் வழக்குகளையும் இந்த வழக்கின் அடிப்படையில் நீர்த்து போகவும் செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், இந்த வழக்கை எப்படி முடித்தால் சரியாக இருக்கும் என்ற ஆலோசனையில் நீதித்துறையும் அரசியல் துறையும் நீண்ட ஆய்வுக்கு பிறகு இப்படி முத்தால் தான் நாட்டிற்கு நல்லது என்று ஒரு வரைவு தயாரித்து ஆலோசனைக்கு அனுப்பி இருக்கும். அதை தெரிந்து கொண்ட பாசக இது தான் சமயம் என்று தனது வெற்றியை இதன் மூலம் நிறவேற்றும் எண்ணதின் வெளிபாடே மோடி செயலலிதா சந்திப்பு.

டான்சி வழக்கில் செயலலிதாவை விடுவித்ததை போலே இந்த வழக்கிலும் ஒரு சப்பை கட்டைகட்டி கௌரவமாக விடுவிக்கப்படுவார். அப்படி விடுவிக்கும் கால் தனது உடல் நிலையை காரணம் காட்டி செயலலிதா அமெரிக்காவிற்கோ அல்லது மற்ற ஒரு பாதுகாப்பான நாட்டிற்கோ சிகிச்சைக்கு என்று சென்று அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவார்.

இதன் இடையில் மாறன் சகோதரர்களின் சொத்தை முடக்கியது போல் திமுகவின் சொத்துகளையும் முடக்கியும் கலைஞரை தனிமைபடுத்தியும் விடுவார்கள். இந்த தேர்தலில் திமுக வர வாய்பே இல்லை என்றாலும் செயலலிதா இல்லாத வெற்று இடம் இவருக்கு கிடைகாமல் இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அவ்வளவு நடக்கும்.

பாராளுமன்ற தேர்தலில் அள்ளி வீசிய வசீகர பேச்சுகளை போல், தமிழகத்தில் அனைத்து வீட்டு பிள்ளைகளில் ஒருவருக்காவது அரசு வேலை என்று தனது தேர்தல் அறிக்கையை துவங்குவார்கள். எப்படி இந்தியாவின் ஒவ்வொருவருக்கும் 15 இலட்ட ரூபாயை கொண்டுவந்து உங்களது வங்கி கணக்கில் போடுவோம் என்று சொன்னார்களோ அதே போல் சொல்வார்கள்.

அந்த பிள்ளைகள் வேலை கிடைக்கும் என்று நம்புவார்களோ இல்லையோ அவர்களை பெற்று படிக்க வைத்துவிட்டு நிற்கும் பெற்றோர்கள் அரசு வேலை கிடைத்தால் கூட போதும் என்று நினைத்து பாசகவின் ஆசை வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு வாக்கை அள்ளி கொட்டுவார்கள்.

பள்ளிபடிப்பை முடித்து தொழிற்கல்வி போகமுடியாமல் தவிக்கும் பிள்ளைகளும் இந்த அரசு வேலை கிடைக்கும் என்றும் நம்பி பாசகக்கு வாக்கு சேகரிப்பார்கள்.

இது மட்டும் இல்லாது பாசக வந்தால் நாட்டில் புண்ணியம் பெருகும் என்று மதத்தலைவர்களை விட்டு சொல்ல சொல்வார்கள்.

தமிழக மக்களின் நல வாழ்வு மட்டுமே எங்களின் இலட்சியம் என்று வடகத்தியர்கள் அனைவரும் "வணக்கம் அனுபான வாக்கால மக்குலே" என்று அழகு தமிழில் பேசி வலம் வருவார்கள்.

இந்த வித்தைகளை எல்லாம் கண்டு களித்து இருக்கும் சாதிகட்சிகளும், இது வரையில் மக்களும் திராவிட கட்சிகளும் ஒதுக்கி வைத்து இருந்த சின்ன சின்ன தலைவர்களும் இந்த "வனுக்கம் தமிலக மக்குலே" மக்களுக்கு மேடைகளில் நின்று மொழி பெயர்த்து பூரித்து போவார்கள்.

இந்த மாயைகளின் முடிவில் தமிழகத்தில் 2016ல் பாசக ஆட்சி மலரும். ஆட்சிக்கு வந்ததும் பாசக எல்லா இடங்களிலும் தங்களுக்கு வேண்டியவர்களை நிறுவுவார்கள். அப்படி வேலைக்கு வரும் ஆட்கள் குறைந்தது 30, 40 ஆண்டுகளாவது வேலையில் இருப்பார்கள். அந்த 30, 40 ஆண்டும் பாசக ஆட்சியாகத்தான் இருக்கும் தமிழகத்தில்.

இந்த நிலையை எட்டி தான் தமிழகம் எப்படி ஒரு நல்ல நிலையில் இருந்தது என்று தெரிந்து கொள்ளும். இப்போது சொல்வதை போல் காமராசர் ஆட்சி என்று சொல்வதை போல் அன்றைக்கு திராவிட ஆட்சி என்று மக்கள் தெருவுக்கு தெரு சொல்லி பெருமிதம் அடைவார்கள்.

பாசகவின் தமிழக ஆட்சியில் இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசமாத்தான் இருக்கும் என்றதில் சந்தேகம் ஏதும் இல்லை.

தனது பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்று நம்பி வாக்களித்த அந்த பேற்றோர்கள் கடைசிவரை கட்சி அலுவலுகத்துக்கும் வேலை வாய்பு அலுவகத்துகும் அலைவதை வைத்து நிழல்கள் போல் இன்னமும் அழுத்தமாக படங்கள் நிறைய வரும். தமிழ்கம் திருத்தவே முடியாத புண்ணிய பூமியாகி காவியுடையணிந்து அரிவாளுடன் ஓடும் காட்சிகள் எல்லாம் அன்றாடம் நடக்கும் காட்சிகளாகிவிடும்.

மறுபடியும் அந்த சாதாரண மனிதர்கள் சிந்திப்பார்கள் என்ன செய்து இவைகளை மாற்றலாம் என்று, அப்போது பாசகவினர் திமிராக சொல்வார்கள் இங்க எல்லாம் இப்படி தான் பிடிக்கவில்லை என்றால் பாக்கித்தானுக்கு போ என்று சொல்வார்கள் தேசபக்தர்களாக.......

Thursday, August 13, 2015

அப்போ சுசுமா சுவராச்சு லலித்மோடிக்கிட்ட பணம் வாங்கிக்கொண்டு மனிதாபினாம உதவி உதவியது உண்மை

 நேற்றைக்கு நாடாளுமன்ற விவாதத்தில் லலித்மோடியிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்ற கேள்விக்கு மறுக்காமல் சோனியா குத்ரோச்சிகிட்ட வாங்கின பணம் எவ்வளவுன்னு சொன்னதின் மூலம் உதவியை வியாபாரமாக சுசுமா செய்து பணம் பார்த்து இருக்கிறார் என்று ஒத்துக்கொண்டு விட்டார். இனிமேல் கேட்டால் நான் எப்போது அப்படி சொன்னேன் என்று நீதிமன்றதில் பிறழ் சாட்சிகள் பிறழ்வது போல் பேசுவார்.

இதிலே லலித்மோடி ஒன்றும் ஓடி ஒளிந்துக்கொள்ளவில்லை என்ற சான்றிதழ் வேறு.

அது சரி காந்தியை கொலை செய்த கட்சியினர் இடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்....

மனிதாபிமான உதவி என்ற என்ன அழகான அலங்கார வார்த்தைகள் இந்த உதவி வியாபாரத்திற்கு. ஆக பணமும் பதவியும் பட்டமும் சாதியும் இருந்தால் பாசக ஆட்சியில் எது வேண்டும் என்றாலும் விலைக்கு வாங்கலாம்.

இப்படி தான் பாசக ஆட்சி இருக்கும் என்று அன்றைக்கு நாங்கள் சொல்லும் போது இல்லை இல்லை இல்லவே இல்லை என்று சொன்னவர்கள் எல்லாம் ஏன் மௌனித்து இருக்கிறார்கள் இன்று, ஏமாந்து போனோம் என்ற ஏமாற்றம் இல்லாமல் வேறு என்னவாக இருக்கும்.

Wednesday, August 12, 2015

அன்புமணி இராமதாசு உடனடியாக கட்டப்போகும் இலவச மருந்து ஆலைகள்

கடந்த சில மாதங்களாக தமிழகத்தை தூக்கி நிறுத்த தன்னால் மட்டும் தான் முடியும் என்றும், தன்னை தவிர வேறு ஒருவராலும் இதை செய்யமுடியாது என்றும் சொல்லிக்கொண்டு வரும் அன்புமணி அதன் தொடர்ச்சியாக இந்த செயலை செய்துவிட்டு ஓட்டு கேட்க்க வர இருக்கிறார்.

தான் வகித்த மருத்துவ நல துறையில் இந்தியாவின் தேவைகளையும் அத்தியாவசியங்களையும் பூர்த்தி செய்வதற்காகத்தான் அரசு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை மூடியதாகவும் அப்படி மூடிய மருந்து ஆலைகளுக்கு பதிலாக வேறு ஒரு ஆலையை சென்னையில் கட்ட முற்பட்டதாகவும். ஆனால அந்த ஆலை முடிக்கப்பட இல்லாத நிலையில்.

தான் இனி மைய அரசு அமைச்சராக விருப்பம் இல்லாமல் இருப்பதால் ஆலையும் வேண்டும் மக்களும் பயனடைய வேண்டும் ஆகையால் இலவச மருந்த ஆலைகள் 5 அல்லது 6 ஆலைகளை தமிழகத்தில் துவங்கி இலவசமாக மருத்துகளை தயாரித்து மக்களுக்கு கொடுக்க இருக்கிறார்.

ஏன் இப்படி இலவசமாக மருந்து தயாரிக்கும் ஆலையை நிறுவ இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்க்க நினைக்கும் மக்களுக்கு அன்புமணியும் அவரது கட்சியினரும் சொல்லும் செய்தி இதுதான்.

அரசை அது செய் இது செய் என்று எத்தனை காலத்திற்கு தான் மக்கள் சார்பாக நாங்கள் வேண்டி நிற்பது. எப்படியும் எங்களது பணத்தை வாரி இறைத்து ஆட்சியை பிடித்து பிறகு அரசு செலவில் இந்த ஆலைகளை கட்டி அதற்கு பிறகு தயாரிப்பில் வரும் மருந்துகளை மக்களுக்கு கொடுக்க எப்படியும் வெகுகாலம் பிடிக்கும். ஆகையால் தேர்தலுக்கு நாங்கள் வாரி இறைக்க இருக்கும் பணத்தை மக்களுக்காக இப்பவே இன்னமும் 2 மாதங்களுகுள் மருந்தை தயாரித்து கொடுத்துவிட்டு தான் ஓட்டே கேட்க போகின்றோம்.

அப்படி வரும் அந்த ஆலைகளில் நானோ எனது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கோ எந்த பதவியும் எடுத்துக்கொள்ள போவது இல்லை என்ற உறுதிமொழியை என்னால் கட்டாயம் கொடுக்கமுடியும் என்றும் சொல்லி இருக்கிறார். அது மட்டும் அல்ல இந்த மருந்து ஆலைகளுக்கும் பாமாகவுக்கும், வன்னியர் அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற உறுதிமொழியையும் கூடவே தெரிவித்து இருக்கிறார்.

இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டதற்கு, மருத்துவ துறையில் அமைச்சராக இருக்கும் போது மக்களின் மருந்து தேவை எவ்வளது என்று தனது துறை கணக்கிட்டு அளித்த அறிகையின் அளவு மிகவும் பெரியது என்றும் அதிலே தமிழகத்தில் உடனடி மருந்து தேவைகள் எத்தனை கோடி எனவும் தெளிவாக தெரியவர இந்த முடிவு எடுத்தாக தெரிவிக்கின்றார்.

இங்கே நாம் ஒரு செய்தியை உற்று நோக்க வேண்டும் அதிமுகவும் திமுகவும் மதுவை தயாரித்து தமிழகத்தை அழித்துவந்த நிலையில் தமிழகத்தை மட்டும் அல்ல உலகையே தனது மருந்து தயாரிப்பால் காப்பாற்றுவது மட்டும் அல்ல இலட்ச கணக்கில் தமிழக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் உத்திரவாதத்தையும் அன்புமணி உறுதிபடுத்துகிறார்.

உங்களுக்கு இது சம்பந்தமாக சந்தேகம் இருந்தால் அவரை நேரிலோ அல்லது எந்த விதத்தில் தொடர்பு கொண்டாலோ அவராகவே விளக்கம் அளிக்க ஆவலாக உள்ளார்.

Friday, August 7, 2015

Bajrangi Bhaijaan - திரை விமர்சனம் - The Terminal (2004)

The Terminal (2004)

தற்பொழுது அதிகம் பேசப்படும் படமாக ஓடிக்கொண்டு இருக்கிறது இந்த இந்தி படம்.

உண்மை சம்பவமாக ஒரு சிறுமி பாக்கிட்த்தானத்தில் அவதி படுவதாகவும், இந்தி படத்தில் வருவதை போல் அவளை அவளது பெற்றோருடன் சேர்க்க இந்திய வெளியுரவு துறை முயலுவதாகவும் கூட செய்தி அடிப்படுகிறது.

சரி விமர்சனத்திற்கு வருவோம்.

ஆங்கிலப்படத்தின் கதை இது தான்,கிரகோசியா நாட்டில் இருந்து அமெரிக்க நியூயார்க் நகருக்கு வந்து இறங்கும் சமயத்தில் புரட்சி வெடிக்கிறது கிரகோசியாவில். ஆகவே நாயகனின் கடவு சீட்டு செல்லாதாகவும் அறிவிக்கப்பட்டு அமெரிக்காவில் இறங்கி வெளியே செல்ல முடியாதபடியும் தாயகம் திரும்ப முடியாமலும் அங்கேயே மாட்டிக்கொள்கிறார்.

ஆங்கிலம் தெரியாத விக்டருக்கு விமான அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் என்று புரியவும் இல்லை, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார். 

தினமும் குடியேற்ற அதிகாரிகளை சந்திப்பதும் அமெரிக்கவிற்குள் விடமாட்டோம் என்று விரட்டி அடிப்பதுமாகவும் செல்லும் ஆரம்ப காட்சிகள்.

இவ்வளவு பிரச்சனைகள் வேண்டாம் ஊருக்கு திரும்பி போ என்றால் முடியாது என்று சொல்வான் விக்டர். எப்பவும் கையில் ஒரு சிறுய அலுமினிய பெட்டி ஒன்றை கெட்டியாக பிடித்துக்கொண்டே இருப்பார். அது என்ன என்று கேட்டால் பதிலும் சொல்ல மாட்டார்.

ஒரு கட்டத்தில் விக்டரை என்ன செய்வது என்று தெரியாமல் திணரும் அதிகாரி அவனாக இந்த எல்லை தாண்டி செல்லட்டும் காவலர்களிடம் ஒப்படைத்து நாம் நிம்மதி அடையலாம் என்று இருப்பார். ஒவ்வொரு முறை அந்த எல்லை கோடுவரை செல்வதும் பிறகு தான் கண்காணிக்கபடுகின்றோம் என்று தெரிந்து திரும்புவதுமாக கதை நகரும்.

இதற்கு இடையில் விமான பணிபெண் ஒருவரை சந்திப்பதும் தான் பழகிக்கொண்டு இருந்த அந்த பணக்கார நபர் இவளிடம் பொய் சொல்வதை பொறுத்துக்கொள்ளாமல் அவனை பிரிந்துவிடவேண்டும் என்ற நிலையில் விக்டரை சந்திக்க விக்டருக்கு அவளிடம் ஒரு பரிவும் பிறகு காதலாகவும் மலருகிறது.

இப்படியே ஓடும் கதையில் கிட்ட தட்ட ஒரு 9 மாத போராட்டதிற்கு பிறகு ஒரு நாள் அனுமதி பெற்று அமெரிக்கா உள் சென்று திரும்புவதாக கதையும் திரைகதையும் அமைத்து எடுத்து இருப்பர்கள்.

சரி இந்த படத்திற்கு இந்தி படத்திற்கு என்ன சம்பந்தம் என்று கேட்பது புரிகின்றது.

ஆங்கிலத்தில் தனது அப்பாவின் கடைசி ஆசையை நிறவேற்றும் பொருட்டு அமெரிக்க வருவான் விக்டர். இந்தியில் டெல்லிக்கு செல்வான்.

விக்டர் அன்பான அடுத்தவரை மிகவும் மதிக்கும் குணம் கொண்டவராக ஆங்கிலத்தில் காட்டுவார்கள். இந்தியில் அவன் சிறந்த பக்திமானாக காட்டபடுவார்.

ஆங்கிலத்தில் அறிமுகம் இல்லாத அந்த பெண் அழுவதை பார்க்க பொறுக்காத விக்டர் அவளுக்கு உதவும் விதமாக தொடங்கும் செயல்களை முதலில் சந்தேகித்து பிறகு அவளுடைய வாழ்கையை அடகு வைத்து விக்டர் அமெரிக்கா உள் செல்ல அனுமதி பெற்று தருவாள், விக்டரிடம் அவளுக்கு பிடித்தது மறன படுக்கையில் தன் தந்தைக்கு செய்து கொடுத்த வாக்கு தவறாமை.

இந்தியில் மிச்ச காசை கொடுக்கிறேன் என்று துவங்கும் அந்த சந்தேக காட்சிகள் கடைசியில் இவனது அப்பாவி தனத்தை பார்த்து காதல் பிறக்கும் பிறகு பாக்கிட்தானம் செல்வதற்கு அவளது வாழ் நாள் சேமிப்பை தூக்கி கொடுப்பாள்.

ஆங்கிலத்தில் ஒரு முறை மொழி பெயற்பாளராக விக்டரை அழைக அவனோ தன் தந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சக பயணி கொண்டுவரும் மருந்தை பிடித்து வைத்துக்கொண்டு கடமையாற்றும் அதிகாரியிடம் இருந்து மருந்து ஆட்டிற்கு தான் என்றும் ஒரு பொய் சொல்லிக்காப்பாற்றும் தருணத்தில் வஞ்சம் வைக்கப்பட்டுவிடுவார் விக்டர்.

இந்தியில் எல்லையை திருட்டு தனமாக கடந்து எல்லை காவல் படையிடம் அனுமதி கொடுத்தால் தான் பேவேன் என்று அடம்பிடிப்பது போல் காட்டி இருப்பார்கள். தவிர நிறை அடி உதை என்று வாங்கியும் கிளம்புவதாக காட்டி இருப்பார்கள்.

9 மாத போராட்டதிற்கு பிறகு கிரகோசியா நாடு மறுமடியும் புரட்சியில் இருந்து மீண்டு இவன் தாயகம் திரும்பும் நிலை வரும். அமெரிக்கா செல்ல ஒரு நாள் அனுமதிகிடைத்தும் ஒரு கையெழுத்து இல்லை என்று நிலைய அதிகாரி அவம் செயிக்கக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் அனுப்பமுடியாது என்று சொல்வார் செயல்படுவார்.

இந்தியில் நீண்ட பயண்திற்கு பிறகு அந்த பெற்றோருடன் பிள்ளையை சேர்த்து நாடு திரும்பும் நாளில் விடமாட்டேன் என்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி அடுத்த நாட்டுகாரர் நமது நாட்டின் கதவுகளை தொடவோ திறக்கவோ அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வார்.

ஆங்கிலத்தில் கடைசி உச்சகட்ட காட்சியில் விக்டர் விமான நிலையத்தில் இருந்து செல்கிறான் என்று தெரிந்துக்கொண்டு அவனுக்கு அது இது என்று விமான நிலைய கடைக்காரர்கள் கொடுத்து அனுப்புவார்கள்.

அந்த விமான நிலைய கோட்டை தாண்டும் தருணத்தில் விக்டரை கைது செய் என்று நிலைய அதிகாரி சொல்ல அந்த காவலனோ நியூயார் நகருக்கு வரவேற்கின்றோம் என்று சொல்லி வெளியே பனி அடிக்கிறது இந்த மேல் கோட்டை போட்டுக்கொண்டு செல் என்று அனுப்புவார்கள்.

அப்படி அனுப்பும் போது அந்த விமான நிலைய வாசலில் உள்ளேயும் வெளியேவும் மக்கள் கூடம் அலை அலையாக நின்றுகொண்டு அனைவரும் நிம்மதி அடைவார்கள். அவனும் வந்த வேலை முடித்து வீடு திரும்புவான்.

இந்தியில் அவ்வளவு நீள பனியாற்றில் இவன் கடந்து போவதும் அம்மாவை இழந்த குழந்தைக்கு வராத குரல் இவன் போவதை பார்த்து வருவதாக பூ சுற்றுவார்கள். அலை கடல் என மக்கள் இரண்டு பக்கமும் வந்து ஆதரவு தருவதாக காட்டியுள்ளார்கள்.

9 மாத விமான நிலைய வாழ்கையில் விக்டருக்கு 3, 4 பாத்திரங்கள் உதவி செய்யும் அதை இந்தியில் நிருபர் உதவுவதாக காட்டியுள்ளார்கள்.

இப்படி ஆங்கிலத்தில் வந்த ஒரு யதார்த்த படத்தை எடுத்து இந்து முசுலீம் சாயம் பூசி இந்தியா பாக்கிட்த்தானம் சாயம் பூசி அழகாக நம்மை எல்லாம் ஏமாற்றி விற்று இருக்கிறார்கள் இந்தி பட குழுவினர்.

இதிலே அந்த சின்ன பொண்ணு அழுவது அது இது என்று இழுத்து இழுத்து வலுக்கட்டாயமாக காட்டுவதும். அப்பாவி தனம் என்று சல்மானுக்கு கொடுத்து இருக்கும் காட்சிகளும் எரிச்சல் கொட்டும் காட்சிகளாக உள்ளது. உதாரணமாக அந்த சிறுமிக்கு ஆட்டுகறியோ மாட்டுகறியோ தான் சாப்பிடுவார் வேறு எந்த வகை உணவும் சாப்பிட மாட்டாள் என்று காட்டும் காட்சிகள்.

Wednesday, August 5, 2015

ஒரு பிள்ளைய ஆரம்ப பள்ளிக்கு அனுப்பவே புலம்பும் அமெரிக்க பெற்றோர்

அன்று ஒரு ஞாயிற்றுகிழமை இரவு 11:00 மணிக்கு மேல் ஒரு அமெரிக்க தம்பதியினர் மும்முரமாகவும் அதே சமயத்தில் மிகவும் களைப்பாகவும் அவசர அவசரமாக வாங்கிய பொருட்களுக்கு பணம்கட்டும் மும்முரத்தில் இருக்கும் போது நடந்த உரையாடலை கேட்க்க நேர்ந்தது.

எப்படி இருக்கீங்க என்று கேட்டதற்கு மிகவும் களைப்பாக இருக்கிறோம் என்றும். எவ்வளவு ஆச்சு என்று கேட்டதும் $145 ஆஆ என்று வாயைபிளந்து ஒரே ஒரு பிள்ளையை ஆரம்ப பள்ளிக்கு அனுப்பவே இவ்வளவு ஆகுகிறதே இன்னமும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்களே என்று அந்த அம்மா சொன்னது இன்னமும் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டு இருக்கிறது.

இந்த $145 பணம் ஒரு வருடத்திற்கு ஆகும் செலவு என்றதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஒரு $145 கே இப்படி வாயை பிளக்கும் இந்த தம்பதியர் அந்த பிள்ளையை எப்படி மேற்படிப்புக்கு எல்லாம் அனுப்புவார்கள் என்று நினைக்கையில் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையும் என்று ஓர் அளவுக்கு யூகிக்க முடிகிறது.

ஒரு வேளை இந்தியாவில் இருக்கும் நிலைபோல் ஆரம்ப பள்ளியில் சேர்க்க ஒரு பெரிய தொகை, பிறகு மாதமாதம் இவ்வளவு, புத்தகத்திற்கு இவ்வளவு, வீட்டில் இருந்து பள்ளி கூட்டி செல்ல இவ்வளவு, அந்த பள்ளியில் படிப்பு தவிர இன்ன இன்னவைகள் எல்லாம் கற்றுக்கொடுக்கிறார்கள் அதில் ஏதாவது ஒன்றில் கட்டாயம் இருக்க இவ்வளவு, அந்த தினம் இந்த தினம் கொண்டாட இவ்வளவு, பள்ளியில் இங்கே அழைத்து செல்கிறார்கள் அதுக்கு இவ்வளவு, புத்தகத்திற்கு இந்த மாதிரி அட்டை போடனும் அதுக்கு இவ்வளவு, இது எல்லாம் போக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கணணிபயிற்ச்சிக்கு இவ்வளவு போக கைக்கும் அன்றாடம் கொஞ்சம் பணம் என்று எல்லாம் கொடுக்க வேண்டி வந்தால் இந்த பெற்றோர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்.

அனேகமாக குழந்தைகளே வேண்டாம் என்று இருந்துவிடுவார்கள் போலும். மேலே சொன்ன அத்தனையும் இங்கே இலவசமாக அரசாங்கம் வழங்கும் வசதிகளில் இவர்கள் பங்குக்கு உணவும் இருப்பிடமும் இந்த ஆரம்ப தேவைகளை மட்டும் வாங்கிக்கொடுத்தால் போதும். சீருடைகூட பல பள்ளிகளில் கிடையாது.........

உண்மையில் இந்தியாவில் வளரும் பிள்ளைகள் இப்படிபட்ட பெற்றோர்கள் கிடைத்தற்கு கொடுத்து வைத்துதான் இருக்கவேண்டும்.......