Thursday, November 30, 2017

மோடியை பார்க்கும் போது எச்சி ராசா தமிழிசை எல்லாம் சும்மா

தனக்கா இல்லை என்றாலும் தான் வகிக்கும் பதவியின் மதிப்புக்காக என்றாவது மக்கள் நாகரீகமாக நடந்துகொள்வதுண்டு.

இது பாசகவை பொருத்த அளவில் தேவையே இல்லாத ஒன்று போலும்.

மோடி உளரி கொட்டுவதை பார்த்தால் அவர் உண்மையிலேயே பிரதமரா இல்லை தேனீர் கடையில் அமர்ந்துகொண்டு வம்பு பேசுபவரா என்று தெரியாத அழகாக இருக்கிறது.

மக்களுக்கு நன்றாத தெரிந்த உண்மைகளையே இல்லை என்று வாய் மணக்க புளுகுவது, மீண்டும் மீண்டும் அந்த பொய்யையே பேசுவது. கொஞ்சம் கூட கூச்ச நாணமே இல்லாமல் பல்லிளித்துக்கொண்டு அவைகளையே சொல்லும் போது மிகவும் எரிச்சலாக இருக்கிறது.

அதோடு நிற்காமல் டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டான் என்ற அளவிற்கு இருக்கிறது அவரது காங்கிரசு பற்றிய விமர்சனங்கள்.

கிட்டதட்ட ஒரு 3 அல்லது 4 வகுப்பு படிக்கும் குழந்தை கூட கொஞ்சம் கௌரவமாகமும் நாகரீகமாகவும் நடந்துகொள்ளும் அந்த அளவுக்கு கூட இல்லையே இந்த பாசக பிரதமர்.

சென்னை தேர்தலில் பணப்பட்டுவாடா இல்லை என்றால் பாசக வெற்றியை ஈட்டும் என்று வருமான வரி சோதனைகள் மூலம் பணத்தை எல்லாம் முடிக்கிவிட்டதாக எண்ணி மனப்பால் குடிக்கிறார்கள்.

தேர்தல் வந்தால் அல்லவா தெரியும் எங்கே இருந்து அந்த 2000 சலவை நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து வருகின்றது என்று........

Tuesday, November 21, 2017

தமிழகத்தில் ஒரு கோத்ராவை நடத்த திட்டமிடும் பாசக - ஆளுனரின் கோவை ஆய்வு

திடமான ஆட்சி இல்லை என்றாலும் வலுவான மதவாதம் தலைதூக்கவில்லை என்றாலும், மதவாத ஆதரவு உள்ள இடங்களிலும் மனங்களிலும் ஒரு சின்ன தீயை பற்ற வைத்துவிட்டால் கோத்ராவை காரணம் காட்டி குசராத்து முழுவதும் கலவரத்தில் மூழ்கி முத்தெடுத்ததை போல் தமிழகத்திலும் ஒரு கோத்ராவை நடத்தி மீன் பிடிக்கும் திட்டத்தின் முன் வடிவம் தான் ஆளுனரின் கோவை ஆய்வு.

பாசக மக்கள் அனைவரும் நேராக கோவை செல்வதையும், கோவையிலேயே அனைத்து மதவாத நடவடிக்கைகளையும் துவக்குவதின் நோக்கமும் கோவையில் வெளிப்பட்ட எதிர்பும் முன்னாள் வன்முறை சம்பவங்களும் தான்.

இன்னமும் பத்தவைத்துவிட்டால் பற்றி எரியும் தன்மையுடன் அந்த இடம் இருப்பதாலும் அங்கே சென்று பத்தவைத்து தமிழகத்தை பாழாக்கலாம் என்று பாசக துடிக்கின்றது.

கடைசியாக அத்வானி கோவை சென்ற பிறகு பாசகவால் வெடிக்கப்பட்ட வெடிகுண்டுக்கு பிறகு இது வரையில் கோவையில் வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. எப்படியாவது மீண்டும் கோவையில் வெடிகுண்டுகள் வெடிக்க செய்யவேண்டும் என்று பாசக துடிக்கின்றது என்று அவர்களின் அளவுக்கு மீறிய கோவை பாசத்தில் தெரிந்துகொள்ளலாம். பாவம் கோவையில் எந்தெந்த பாசக மக்களின் அம்மா அப்பாகளை இந்த முறை உயிருடன் எரிக்க பாசக திட்டமிட்டுக்கொண்டு இருக்கின்றதோ, பாவம் அந்த வயதானவர்கள்.....

ஆளுனர் சட்டதின் உட்பட்டு நடத்தி இருக்கும் ஆய்வின் நோக்கமும் விளக்கமும் இந்த விபரீத வெடிகுண்டு ஆசையின் வெளிப்பாடே.

தமிழகத்தை ஆளும் தற்பொழுதைய பொம்மை அரசு தங்களிடம் உள்ள கொள்ளை காசுக்களை செல்லும் பணமாக மாற்றி பதுக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் கால் தமிழகத்தையே அழிக்க கூட தயங்காதவர்கள் என்று பலமுறை நிறுபித்தவர்கள் இந்த ஆட்சியர்கள்.

ஓநாயின் காவலில் ஆட்டுகுட்டிகளை விட்டது போல் இந்த ஓநாய் அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கொண்டு மக்கள் படும் அவதியை எப்படி தான் புரியவைப்பதோ......

GST மற்றும் Demonetization பிரச்சனையால் எங்களுக்கு எல்லாம் எந்த குறையும் இல்லை என்று 2000 ரூபாய் தாளில் வறுகடலையை தின்றுக்கொண்டு திமிராக பேட்டி கொடுத்த நடிகர்கள் எல்லாம் இப்போது முகமுடிகளில் மறைந்துக்கொண்டு அலைவதை கண்கூடாக காணமுடியும்.

கையில் இருக்கும் ஐந்து விரல்களும் வித்தியாசமாக தான் இருக்கும் ஆனால் அந்த ஐந்து விரல்களும் சேர்ந்தால் தான் கையில் வேலையை செய்யமுடியும் என்ற சாதாரண அறிவுக்கூட இல்லாத எச்சி ராசா போன்றோர்கள் மிகவும் நீளமான விரல் மட்டும் தான் உயர்ந்தது அந்த ஒன்று மட்டுமே இருந்துவிட்டால் உடலின் அத்தனை தேவைகளையும் எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்றிகொள்ளலாம் என்றும் வாதாடுகின்றார்கள்.

அது மட்டுமா, அந்த வேற்றுமைகளோடு எல்லாம் என்னால் வாழமுடியாது என்றும் கூறி அனைவரும் தன்னை போல் வேற்றுமைகளை போற்றி வளர்த்து வெறுப்பை கொட்டவேண்டும் என்றும் சொல் மக்கள் அவைகளை செய்யவேண்டும் என்று பேட்டி கொடுக்கிறார்.

பாவம் அவருக்கு தெரியாது இயற்கை அப்படி வேற்றுமைகளோடு தான் மனிதன் வாழவேண்டும் என்று ஆணுடன் எல்லா வேற்றுமைகளையும் கொண்ட பெண்ணோடு வாழ வைத்துள்ளார் என்று.

ஏன் நாளையில் இருந்து பாசகை சொல்ல சொல்லுங்களேன் நாங்கள் வேற்றுமையுடன் உள்ள பெண்களுடன் இனி குடும்பமாகவோ அல்லது அவர்களோடோ இல்லாமல் இனி தனியாத்தான் வாழுவோம் என்று.

அப்போ தமிழிசையார்கள் எல்லாம் என்ன சொல்வார்கள் ஆண்களோடோ அல்லது ஆண்களுடைய என்றவைகளோடோ எங்களு எந்த சம்பந்தமும் இல்லை என்று புரட்சி பேசுகிறார்களா என்று பார்ப்போம்............

Thursday, November 16, 2017

குருடாகவும் செவிடாகவும் அறிவின்மையாகவும் இருந்த வருமான வரி துறை பாசகவால் புணர்சென்மம் எடுத்தது

2014ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவைகள் யாவும் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அறிந்து அவைகள் யாவும் தண்டனைக்குறிய குற்றமாக அறிவித்தது இந்திய நீதிமன்றம்.

2014, 2015, 2016 மற்றும் 2017 தற்பொழுது வரை அந்த தீப்பு கண்களில் தெரியாமலும் நீதியரசர் சொன்னவைகள் காதுகளில் கேட்க்காமலும் இப்படி எல்லாம் தீர்புகள் வந்தால் என்ன செய்வது என்றே தெரியாமலும் இருந்து வந்த இந்திய வருமான வரி துறைக்கு இன்றைக்கு தான் 150 வண்டிகளை ஒருங்கே கூட்டி ஒரே நேரத்தில் கூண்டோடு அமுக்கி விபரங்களை எல்லாம் கண்டுபிடித்து வழக்கு தொடுப்பதாக அறிவித்து இருக்கிறது.

தமிழிசை மற்ற பாசகவின் ஊது குழல்கள் யாவும் இதுவரையில் இந்திய வருமான வரி துறைக்கு எப்படி வருமான வரி சோதனை செய்வது என்றது மட்டும் இல்லை எப்படி எல்லாம் மக்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார்கள் என்று கண்டுபிடிக்கு உத்திகள் கூட தெரியவில்லை என்றும். பாசகவும் அதன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வெற்றியாலேயே இந்த கணக்குகளை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அளந்துவிடுகிறார்கள்.

இந்திய வருமான வரி துறை என்ன புதிதாக துவங்கப்பட்ட அரசியல் கட்சியா எது எப்படி என்று இது வரையில் தெரியாமல் புதிதாக வந்து இருக்கும் அரசு எப்படி என்ன என்ன செய்யவெண்டும் என்று சொன்னதும் அது படி செய்த்ததினால் பலன் கிடைத்து என்று சொல்லிக்கொள்ள.

உங்களின் சொந்தங்கள் யாரும் இந்திய வருமான வரி துறையில் பணிபுரிந்தால் அவர்களை உங்களுக்கு தெரியாது என்று இனி சொல்லிவிடுங்கள் இல்லையேல் அந்த கேணைபயல்களை போல் உங்களையும் கேணையன்களாக நினைத்து மக்கள் தூற்றுவார்கள்.

மைய அரசின் ஏவலாளியாக செயல்படும் அனைத்து துறைகளும் இப்படி தான் மக்களால் தூற்றப்படும்.

அந்த வெட்கம் கெட்ட துறையின் நல்லவர்கள் கூட இதுவரையில் இது ஒன்றும் பாசக கற்றுக்கொடுத்து எங்களுக்கு தெரிந்தவைகள் அல்ல என்ன எங்களை செயல்படவிடாமல் அரசில் இருப்பவர்கள் தடுக்கிறார்கள் என்று தைரியமாக மக்களுக்கு சொல்வார்களா.......

இன்னும் சில நாட்களில் இந்திய வருமான வரி துறையின் முக்கிய பொறுப்புக்கு வருவார் சிலர், அவர்கள் தான் இந்த திட்டமிடப்பட்ட துல்லிய தாக்குதல்களை வகுத்து குறிப்பிட்ட நபர்களை பழிதீர்த்துக்கொள்ள பயன்பட்டவர்கள் என்று மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

Tuesday, November 14, 2017

அசிங்கப்பட்டது தந்தி தொகா ரங்கராசு பாண்டேவா இல்லை பாசகவா - ப சிதம்பரம்



38 நிமிடம் ஓடும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிதம்பரம் கேட்கும் பதில் கேள்விகளுக்கு பாண்டே என்ன சொன்னார் என்று வெட்டி ஒளிபரப்பியதிலேயே தெரிகின்றது தந்தி தொகாவின் நேர்மை.

பல இடங்களில் பாசகவின் தமிழக கொள்கைபரப்பு செயலாலராக பாண்டே கேட்ட கேள்விகளுக்கு திரும்ப திரும்ப நிறுவ நினைத்தாலும் பூசி மொழுக முடியாமல் விழி பிதுங்கி வெட்டி ஒட்டியதை பார்க்க முடிந்தது.

சிதம்பரத்தின் ஞாயமான கேள்விகளுக்கு பாண்டேவின் பதில்கள் என்னவாக இருந்திருக்கும் என்று ஊகிப்பதைவிட என்ன என்று அவர்களே காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒன்றும் தெரியாதவர்களை பேட்டி எடுத்து குழப்பு அவமானபடுத்தும் நோக்கம் கொண்ட பேட்டியாக இந்த கேள்விபதில் நிகழ்ச்சியும் அமையும் என்று வந்திருந்த பாண்டே பெருத்த ஏமாற்றத்துடன் நிகழ்ச்சியை முடித்தது வெளிப்படையாக தெரிந்தது.

இந்த நிகழ்சியை பார்க்கையில் சென்ற ஆண்டு இறுதியில் புதிய தலைமுறைக்கு சிதம்பரம் அளித்த கேள்விபதில் கண்ணில்பட அதையும் பார்க்க, ஓராண்டாக அந்த விடை தெரியாத கேள்விகளும் மாறவில்லை அதற்கு சிதம்பரத்தின் பதிலும் மாறவில்லை. அன்றைக்கு இருந்த நிலையில்  இருந்து நாடு இன்னமும் மோசமாகத்தான் போய் கொண்டு இருக்கிறது, மோடியும் பாசகவும் சொல்வது போல் கொஞ்ச நாளில் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்னது போல் எல்லாம் ஒன்றும் இல்லை என்று வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது.

முதல் பார்வையில் தந்தி தொகாவின் ரங்கராசு பாண்டே அசிக்கப்பட்டதாகத்தான் பட்டது, பிறகு தான் தோன்றியது ப சித்தம்பரத்திடம் எந்தவிதமான விவாதத்திலும் பாசக ஈடுபடாமல் தவிர்ப்பது இந்த பாண்டே போல் தானும் மக்கள் முன் அவமானப்பட்டுவிடுவோம் என்று பயந்து ஒதுங்கியுள்ளது என்று.

Wednesday, November 8, 2017

நவ 8 - பாசக - மக்களை ஏமாற்றி ஏய்த்து பிடுங்கி வாரா கடனாக கொடுத்த அசுர சாதனை நாள்

பொருளாதாரத்தை உயர்த்துகின்றேன் கருப்பு பணத்தை பிடிக்கின்றேன் என்று ஏக வசனங்கள் பேசி 50 நாளில் ஒரு அற்புதம் நிகழ போகின்றது என்று மோடி வித்தைகாரன் சொல்வதை போல் சொல்லி இன்றோடு 1 ஆண்டு ஆகுகின்றது.

இது வரையில் கருப்பு பணம் பிடிப்படவில்லை

ஆனால் ஞாயமாக சம்பாதித்த பழைய பண தாட்கள் இன்னமும் மீதம் மக்களிடம் இருக்கின்றது

1.6 முதல் 1.7 இலட்சம் கோடி சட்டவிரோதமாக நடைபெற்றதை கண்டுபிடித்துவிட்டார்களாம்

29,213 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்

56 இலட்சம் தனி நபர்கள் வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்களாம்

2.97 இலட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடித்து அவைகளை களைத்து இருக்கிறார்களாம்

இவைகள் எல்லாம் நிதி அமைச்சர் அருண் செட்லி திருவாய் மலர்ந்திருக்கும் செய்திகள்

மேலே சொன்ன புள்ளிவிபரங்கள் எதிலாவது ஏழை எளிய மக்கள் வருவார்களா, இல்லை அவர்கள் தெருவில் மணிகணக்கில் கால்கடுக்க நின்றதனால் மேற் சொன்ன புள்ளிவிபரங்கள் வந்தனவா

மேலே சொன்ன நடவடிக்கைகளை நிர்வாகமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து இருக்க முடியும். அதை செய்வதை விட்டு விட்டு பொதுமக்களை இன்னலுக்கும் பயத்திற்கும் ஆளாக்கிய பாசகவை மக்கள் மற்றக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.

மாணவர்கள் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு இந்தியில் பதில் சொல்லும் திமிர் எல்லாம் தமிழகத்தில் வந்து உடைந்து நைந்து போன தமிழ் வார்த்தைகளை பேசுவது போல் தான் இனி பாசகவின் நிலை இருக்கும்.

எவ்வளவு கூவினாலும் ஏமாற மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை, பொது மக்கள் இனி பெருமதிப்பு தாட்களை பயன்படுத்த போவதும் இல்லை சேமிக்க போவதும் இல்லை. மௌன சாட்சிகளாக இருக்கும் அந்த கோபக்கூட்டம் வரும் தேர்தலை நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறது. அன்றைக்கு தெரியும் உங்களின் இந்த கூவலுக்கான விடை அது வரை கூவுங்கள் கூவுங்கள் கூவிக்கொண்டே இருங்கள்......