Saturday, February 2, 2013

பேசாத வார்த்தைகளின் மதிப்பு -- இளையராசா

பொதுவாக சொல்லிவிடும் சொல்லுக்கும் தெரிவித்துவிடும் முடிவிற்கும் இருக்கின்ற கனத்தை விட சொல்லாத வார்த்தைகளுக்கும் அறியப்படாத முடிவுகளுக்கும் ஆகும்.

காதலில் துவங்கி வெறுப்பு வரை அனைத்து உணர்ச்சிகளுக்கும் இப்படியாகத்தான் இருக்க முடியும்.

என்னன்னு சொல்லி தொலைங்களேன் என்று அனேகரின் அன்றாட உரையாடலில் ஒரு முறையாவது ஒலிப்பது உண்டு. இல்லை என்று மறுக்க முடியாது.

குழந்தையின் முகத்தை போல அந்த வார்த்தைகள் கேட்பவர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பது தான் அதற்கு காரணம்.

சோகமாக நாம் குழந்தையை பார்த்தால் அது அழுதேவிடும், அதுவே சிரித்தால் நமது மகிழ்ச்சியை 100 மடங்கு அதிகமாகி கொடுக்கும் குழந்தையின் பதில் சிரிப்பு.

அதை போல சொல்லாத சொல் கேட்பவரின் எண்ணத்தை பிரதிபலிக்கும். கிட்டத்தட்ட இந்தியர்களை என்ன வேணுமா வேண்டாமா என்று கேட்டால் உண்டு இல்லை என்று இல்லாமல் எல்லா பக்கமும் தலையசைப்பதை பார்த்து இருப்போம். அது உனக்கு ஆமாம் தான் பதிலாக வேண்டும் என்றால் ஆமாம்மாக இருக்கட்டும். இல்லை என்று வேண்டும் என்று நினைத்தால் இல்லை என்று எடுத்துக்கொள் என்று சொல்லாமல் சொல்லும் அந்த உடல் மொழியை போல.

கோபம் வந்தால் வார்த்தைகளை கொட்டாமல் இருக்க எத்தனை பேருக்கு தெரிகிறது. அள்ளி கொட்டிவிடுகிறார்கள். பிறகு கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாமல் திணருகிறார்கள்.

வலிக்கும் வார்த்தைகள் வலிக்கும் காயத்தைவிட மிகவும் கொடியது. வள்ளுவன் அனுபவித்து சொன்ன வார்த்தைகள் தீயினால் சுட்டப் புண் உள்ளாரும் ஆராதே நாவினால் சுட்ட வடு.

அடுத்தவரின் செய்கையின் மேல் நமக்கு இருக்கும் உரிமைகள் நம்மீது அடுத்தவர்கொள்ள எத்தனை மக்கள் சம்மதிக்கிறார்கள்.

நிதானம் இல்லா வார்த்தைகளும் செயல்களும் கொடுக்கும் பலன்கள் நிரந்தரமாக நாம் இழக்கும் நிம்மதிதான்.

செய்கையில் பெரியோர் வார்த்தைகளை கொட்டுவது இல்லை அவரை விட பெரியோர் அப்படி கொட்டப்படும் வார்த்தைகளுக்கு மதிப்புகொடுத்து பதிலுக்கு பதில் பேசாமல் இருப்பது.

இளையராச அந்த பெரியோருக்கு பெரியோர் இரகம் எவ்வளவு காயப்பட்டு இருந்தால் அந்த உள்ளம் இவ்வளவு அமைதிக்காக்கும். அவரின் வருத்தம் அவர் மட்டுமே அறிந்த இரகசியம்.

எல்லாம் முடிந்த பிறகு வைரமுத்து பேசும் இவ்வளவு வார்த்தைகளுக்கும் இராசாவால் என்ன சொல்லிவிட முடியும். என்ன மிகுந்து போனால் வைரமுத்துவின் வார்த்தைகளை விட வலிமையான வார்த்தைகளை தேடிப்பிடித்து பேசலாம். அப்படி பேசிவிட்டால் மட்டும் காயப்பட்ட மனது ஆரிவிடுமா இல்லை மாற்றாக இப்படி பேசுகிறோமே என்று மீண்டும் வருந்தாதா...

இப்படி பல பரிமாணங்களில் அந்த பேசாத வார்த்தைகள் பயணிப்பதை நம்மால் சாதாரணமாக காணமுடியும்.

அந்த பேசாத வார்த்தைகள், பேசாத வார்த்தைகளாகவே இருந்துவிட்டு போகட்டும். தப்பியும் பேசிவிடாதீர்கள் இளையராசா.......