Monday, August 7, 2017

சீன பொருட்கள் இருக்கட்டும் நமக்கு வடக்கத்திய பொருட்கள் தேவை தானா - தேசதுரோகிகள்

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைக்க சீனா முயல்வதாகவும், அதை சமன் செய்யும் விதமாக சீனாவின் தயாரிப்புகளை வாங்குவதை எல்லோரும் தவிர்க்க வேண்டும் அப்படி செய்யாதவர்கள் எல்லாம் தேச துரோகிகள் என்றும் சங்கிகள் பரப்புரை செய்வதை பார்க்கின்றோன்.

சங்கிகளின் வாதத்தின் படி பார்த்தால் நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் அண்டை நாட்டின் தயாரிப்புகளை தவிர்ப்பதால் அவர்களின் அரசியல் சதியில் இருந்து தாய் நாட்டை காக்க வேண்டிய கடமை நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது.

இப்படி செய்வதனால் சீனா தனது வர்த்தகம் பாத்திப்பில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியாவின் பொருளாதாரார சீர் குலைவுகள் ஏற்படாத வண்ணன் இணக்கமாக நடந்துகொள்ளும் என்றும் நமக்கு பாடம் எடுத்து சொல்லிக்கொடுக்கிறார்கள்.

சரி தானே என்று தோன்றுமே, அதானே என்று சபாசு போட்டு சப்பைக்கட்டுகள் அதிகமாகவும் வரும்.

இந்த கூற்றுபடி பார்த்தால் இன்றைய தமிழக நிலைக்கு வடக்கத்திய அரசியல்வாதிகளும் அவர்களை கைப்பாவையாக அரசு நடத்த அனுப்பிய வடக்கத்திய பணக்காரர்களும் தான் காரணம்.

இந்த கூற்றை நிறூபிக்கும் விதமாக எச்சி ராசா பாசக மேடையில் இன்று முழங்கியும் இருக்கிறார்.

ஆகவே இன்று முதல் வடக்கத்திய பொருட்களை தமிழர்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும். அரிசி பருப்பை கூட வடமாநிலத்தவர்கள் விற்கும் பொட்டளப்பைகளில் தான் வாங்க வேண்டுமா என்ன.

பெட்ரோல் முதல் அரிசி பருப்பு வரை தமிழகத்து தொழில் முனைவோரை தான் ஊக்குவிக்க வேண்டும். இன்றைக்கு துணிமணிகள் முதல் செல்பேசி சேவை முதல் வடக்கதியர்கள் விற்கிறார்கள். ஏன் தமிழர்களுக்க்கு அந்த சேவைகள் எல்லாம் வழங்கும் தொழில் நுட்பமும் வசதியும் இல்லையா.

தமிழகத்தில் ஐபியல் அணியை விலைக்கு வாங்கி நடத்தமுடியுது செல்பேசி சேவை நிறுவனம் தொடங்கமுடியாதா.

பணம் இல்லை என்று சொல்ல வேண்டாம் மனம் இல்லை என்று சொல்லவும். பணமும் செல்வமும் இல்லாமல் தான் நாம் இலட்சகணக்கில் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு அன்றாடம் தினக்கூலி 700 ரூபாய்க்கு வேலை கொடுக்கின்றோமா.

வட மாநிலங்களுக்கு ஆபத்து என்றால் சீன எல்லையை விட்டுக்கொடுக்க இந்திய அரசு தயாராக இருக்கின்றது. தமிழக பாசகவிற்கு தலைவராக வடக்கதியர் வடக்கதிய உடையில் வந்து வட மாநில மொழியில் தான் பேசுவார்.

இந்த வடக்கதியர்களால் தான் தமிழகம் நிவகிக்கபட வேண்டுமா ஏன் தமிழகத்தில் ஒருவருமா இல்லை.

மூச்சுக்கு 300 தடவை ஊழல் என்று சொல்லும் பாசகவின் அமித்து சாவின் சொத்துக்கள் 3 ஆண்டுகளிம் 300% உயர்ந்ததின் அடிப்படை என்ன என்று விளக்க தயாராக இல்லை. அது மட்டும் இல்லாது இது வரை மோடி வெளி நாடுகளுக்கு சென்று இந்தியாவிற்காக கொண்டு வந்தது என்ன எவ்வளவு என்ற தகவலையும் தெரிவிக்க மறுகின்றது.

வடக்கில் இருக்கும் மக்கள் தமிழகத்தின் மாடுகள் என்ன செய்ய வேண்டும் கூடாது என்று தீர்மானிக்கிறார்கள். தமிழர்கள் என்ன கொண்டாட வேண்டும் என்ன உடுத்த வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். அதைவிட கேவலம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.

இன்று முதன் வடக்கதிய பொருட்களையும் சேவைகளையும் தவிர்ப்போம். தமிழக பொருட்களை வாங்கி தமிழர்களை ஊக்கப்படுத்துவோம். அப்போது தான் தமிழர்களின் நிலை முன்னேறும். இதை செய்யவோ பரப்பவோ மறுப்பவர்கள் மாநில துரோகிளாவார்கள்.

0 comments: