Friday, December 27, 2013

என்றென்றும் புன்னகை - அகமதும் சாக்கி அண்ணனும் நண்பர்கள் போலும்

தமிழில் லவ்லி என்று ஒரு படம் ஒன்று உண்டு, அந்த படத்தை பார்க்கும் போது அடுத்த என்ன என்ன நடக்க போகிறது என்று வசனத்துடன் ஊகிக்க கூடிய அளவிற்கு ஒரு படம். அந்த அளவிற்கு இந்த வருடத்தில் நம்மை ஏமாற்றிய படம் இந்த என்றென்றும் புன்னகை.

காட்சிக்கு காட்சி வசனத்திற்கு வசனம் சம்பந்தம் இல்லாமல் இருப்பது நன்றாகவே தெரிகின்றது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் வெளி நாட்டு பயணம் முடித்து திரிசாவை யார் என்று கேட்டதற்கு தெரியாது என்று சொல்லும் காட்சிகள் தொடர்பே இல்லாமல் மாறி மாறி நம்மை இம்சைபடுத்துவதை பார்க்க முடியும்.

திரிசாவை பொருத்த அளவில் அவருக்கு மன்மத அம்பு உட்பட சமீபத்திய படங்கள் சரியாகவே அமையவில்லை. விண்ணை தாண்டி வருவாயாவில் பார்த்த திரிசாவை மீண்டும் பார்பதற்கு இல்லாமல் போவது வருத்தமே.

சீவாவுக்கு நீதானே என் பொன்வசந்தம் பாகம் இரண்டு போல் இருக்கிறது. எதற்கு தான் அப்படி செய்கிறார் படத்தில் என்று அவரும் அவரது இயக்குனரும் சொன்னால் தான் உண்டு.

சில படங்களை பார்க்கும் போது தான் ஒரு படத்திற்கு இயக்குனர் எவ்வளவு அவசியம் ஆகிறார் என்று தெரியும், அது இந்த படத்திற்கு சால பொருந்தும்.

சாக்கி அண்ணாவை ஒரு பொது விமர்சகர் என்று தான் இதுவரை நினைத்து இருந்தேன் ஆனால் அவர் இப்படி பாராபட்சமாக எழுதுவார் என்று நினைக்க இல்லை. உங்கள் விமர்சனம் நேர் எதிராக அமைந்துள்ளது......................

இனியாவது நல்ல படங்களை திரிசா தேர்ந்து எடுத்து நடிப்பார் என்று நம்புவோமாக........

பாடல்கள் எல்லாம் ஏதோ பாடல் வருகிறது என்று தெரிகின்றது ஆனால் என்ன பாட்டு என்று கேட்டால் ஏதோ பாட்டு என்று தான் சொல்லும் அளவிற்கு இருக்கிறது அந்த சூன் போனால் சூலை காற்றே பாடலை தவிர என்ன ஆச்சு ஆரிசு செயராச்சுக்கு, நல்லா தானே மெட்டு போட்டுகிட்டு இருந்தார்.............

Tuesday, December 3, 2013

குச்சராத்து அரசு மத கலவரத்தில் எப்படி மக்கள் கொல்லப்பட்டாகள் -- The Purge படத்தில் கட்டியுள்ளார்கள்

The Purge ஆங்கிலப்படம், வெறும் திரைப்படம் தான். ஆனால் அதில் காண்பிக்கப்படும் நிகழ்வுகள் கற்பனையாக இருந்தாலும் குச்சராத்து கலவரத்தை கண்முன்னால் கொண்டுவந்து காட்டுகிறது.

ஒரு வேளை மோடியோ அல்லது இன்ன வேறு இனவெறுப்பாளார்களோ இந்தியாவை ஆளும் வாய்புகிடைத்தால் இந்த படத்தில் காட்டுவது போல் வருடம் ஒரு முறை அல்ல வாரம் ஒரு முறை வாய்ப்பு என்றும் சொன்னால் கூட ஆச்சரியபட ஒன்றும் இருக்காது.

படம் துவங்கும் போது மாலை பொழுதில் அவரவர் வேட்டைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு இருப்பதை காட்டுகிறார்கள்.

படம் துவங்கும் போது மாலை பொழுதில் அவரவர் வேட்டைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு இருப்பதை காட்டுகிறார்கள். கதா நாயகனின் வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் கனிவாகவும் இனிமையுமாக பேசும் காட்சிகளை காட்டுகிறார்கள்.

மாலை 7 மணி ஆனதும் அறிவிப்பு வருகிறது, இன்னும் 12 மணி நேரத்திற்கு யாரும் யாரையும் தாக்கலாம் கொல்லலாம் என்ன வேண்டுமனாலும் செய்யலாம், காலை 7 மணி வரை யாரையும் கண்டு கொள்ள மாட்டோம் என்று அறிவிக்கிறார்கள்.

குச்சராத்தில் இப்படி தான் அன்றைக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பார்கள் போலும், இன்னமும் 3 நாளைக்கு யாரையும் எதுவும் கேட்கமாட்டோம் என்ன வேண்டும் என்றாலும் செய்துகொள்ளுங்கள் என்று.

இவர்களது வீட்டை இவர்கள் பூட்டுகிறார்கள், அப்போது அவர்களின் மகன் சிறுவயதுகாரன் கேட்கிறான் ஏன் இப்படி அடித்து கொல்கிறார்கள் எனக்கு புரியவில்லை என்று கேட்க. அப்பாவோ இப்படி வருடம் ஒரு முறை தங்களது கோபத்தை தணித்துக்கொள்வதனால் அமெரிக்க மிகவும் செழிப்பாகவும் அமைதியாகவும் மாற்றம் கண்டுள்ளது என்று சொல்வது செயற்கை தனமாக இருந்தாலும் குச்சராத்தை மோடி அந்த கலவரத்திற்கு பிறகு இப்படி தான் சொல்லிகொண்டு வருவது நினைவில் வருவதை தவிர்க முடியவில்லை.

மாலை வேளையில் கதவடைக்கும் வேளையில் மகளின் காதலன் வெளியில் செல்வது போல் பாவனை காட்டிவிட்டு திரும்பவும் வீட்டுக்குள் வந்து இருப்பதை பார்த்து பதரும் மகளிடம் காதலன் சும்மா உன் அப்பாவிடம் பேசதான் வந்தேன் என்று புன்னகை தழும்ப சொல்லிவிட்டு கையில் துப்பாக்கியுடன் துவங்கும் கொலைகள் படம் முடியும் வரை விளையாட்டு போல் காட்டுகிறார்கள். மகளின் வயதுக்கு மிகவும் மூத்தவனாக அவன் தெரிகின்றான் என்று மறுத்த தந்தைக்கு மரணம் தான் பரிசு என்று சாதாரணமாக அந்த பையன் முடிவு செய்ய அந்த நாள் அவனுக்கு தேவை இருப்பதாக படத்தில் காட்டுவது பரிதாபத்திற்குள்ளதாக காட்டப்படுகிறது.

கதவுகளை மூடி விடியும் வரை அவரவர் வேலைகளை பார்கலாம் என்று சொல்லிவிட்டு நிம்மதியாக உடற்பயிற்சிக்கு செல்லும் குடும்பதலைவி வெளிக்கதவை பையன் திரந்துவிடும் போது அலரிக்கொண்டு வருகிறார்.

ஒரு கருப்பர், அவரை அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்ல ஒரு கூட்டம் திட்டமிட்டு தேட அடைக்கலம் கேட்டு தெருவில் அழுதுக்கொண்டு இங்கும் அங்கும் அலைகிறார். குச்சராத்தில் ஒரு இந்து வீட்டில் அடைக்கலமாக ஒளிந்து கொண்டவர்களை போல்.

இரக்க குணம் கொண்ட அந்த பையன் அந்த மனிதனை வீட்டிற்குள் விட்டு அவனுக்காக உருவாக்கிய மறைவிடத்தில் தங்க வைகிறான்.

சிறிது இடைவெளிக்கு பிறகு அவனை துரத்தி வந்த கும்பல் இவர்களது வீட்டை அடைந்து அவர்களுக்கு ஒரு செய்தியை வெளியிடுகிறார்கள் அக்கம் பக்கம் விசாரித்து தான் உங்கள் வீட்டு கதவை தட்டுகிறோம் அந்த கருப்பனை எங்களிடம் கொடுத்துவிடுங்கள் உங்களை விட்டு விடுகிறோம், இன்னமும் இது சம்பந்தமாக வரும் வசனங்கள் மிக கொடூரம், வெளியிட விரும்பாமல் விட்டு விடுகிறேன்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து குடும்ப தலைவன் அந்த மனிதன் வீட்டில் எங்கே ஒளிந்துகொண்டு இருக்கிறார் என்று தேடி பிடித்து அவனை வெளியே தள்ள அவனை தயார்படுத்தும் முயற்சியின் முடிவில் தலைவனின் செயல் கண்டு மனைவி அவனை வெறுக்கிறாள். எப்படு இருந்த மனிதன் இப்படி விலங்காக மாற்றம் கொண்டுவிட்டன் என்று. அந்த நொடியில் அந்த இடத்தை விட்டு செல்கிறான் தலைவன்.

அந்த சமயம் வெளியில் உள்ள மனித விலங்குகள் கதவுகளை உடைத்துவிட்டு கைகளில் என்ன என்ன கொலை ஆயுதங்கள் உள்ளனவோ அவைகளை விளையாட்டாக விளையாடுவது போல் இரசித்து கொல்லும் கொலைகள் அருவருப்பாக உள்ளது.

கொஞ்ச நேரத்தில் அண்டை வீட்டார்கள் துப்பாக்கி சகிதமாக இவர்கள் வீட்டை தாக்கும் மனிதர்களை கொன்று குவித்து இவர்களை காப்பாற்ற வருகிறார்கள். வெளி மனிதர்கள் எல்லாம் இறந்த பிறகு சொல்லும் அந்த அண்டை வீட்டார் கூட்டம் இவர்களை நாங்கள் தான் அடித்து கொல்ல வேண்டும் அது எப்படி நீங்கள் கொல்ல நாங்கள் அனுமதிப்பது என்று.......

அந்த சமயத்தில் கிடைத்த ஆயுதங்களை கொண்டு குடும்ப தலைவியும், அந்த கருபினத்தவரும் சேர்ந்து கொலை கூட்டத்தை காவலில் வைக்கிறார்கள். குடும்ப தலைவி சொல்வாள் இனி விடியும் வரை வேற எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்று. அந்த தருணங்களில் நிகழும் வசனங்கள் மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் எழுதப்பட்டிருக்கும்.

குச்சராத்தில் கொலைக்கு ஆளான ஒவ்வொரு மனிதருக்கும் கட்டாயம் இப்படி ஒரு கொடும்பாவம் நிகழ்த்தப்பட்டிருக்கும் என்றதில் சந்தேகம் இல்லை. அதுவும் பேட்டிகளில் அந்த குச்சராத்து கொலைகாரர்கள் எப்படி எல்லாம் இரசித்து இரசித்து கொலை செய்தோம் என்று சொல்லி சிரித்தது நினைவில் வந்து போனது அந்த காட்சிகளை தொடர்ந்து.....................

மோடி கூட்டத்தை கொண்டு வந்து ஆட்சியில் உட்கார வைத்தான் இது தான் நடக்கும் என்றதில் சந்தேகமே இல்லை. இவைகளை எனிய வார்த்தைகளில் அழககாக மறைத்து பாலாறும் தேனாறும் பாயுது என்று சொல்வார்கள் இந்த படத்தில் சொல்வது போல்.........................................