Tuesday, December 30, 2008

அதிமுக வேட்பாளருக்கு முழுப்பாதுகாப்பு அளிக்கவேண்டும்: செயலலிதா ( ஏன்னா நீங்கள் எல்லாம் நல்லவர்கள்)

இப்படி ஒரு தலைப்பு இட்டு ஒரு அறிக்கையை செயலலிதா வெளியிட்டு இருக்குகிறார் இன்று. அந்த அறிக்கையிலே அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள், இதை பொறுத்துகொள்ள முடியாத திமுக தேர்தல் பணியில் ஈடு பட்டிருக்கும் அதிமுக மற்றும் தோழமை கட்சிகளின் முன்னணித் தலைவர்களையும் தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு தடியடி, பணம் கொடுப்பது போன்ற தில்லுமுல்லுகளில் இறங்கியுள்ளார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

அய்யோ பாவம் ஒன்றுமே தெரியாதவர்கள் இந்த அதிமுக தலைவர்களும் தொண்டர்களும். எல்லோரும் காந்தியின் வீட்டிற்கு பக்கத்து வீட்டுகாரர்கள். அதிர்ந்து கூட பேச தெரியாதவர்கள் இவர்கள். தவறியும் அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்ககூட தெரியாதவர்கள். அவர்களது ஆட்சியின் போது நடந்த சென்னை மேயர் தேர்தலில் அதிமுக கையை இறுக்கமாக கட்டிக்கொண்டு மட்டும் தான் இருந்தது.

திமுக தொண்டர்களும் கட்சி தலைவர்களும் தங்களது தலையை தாங்களாகவே சென்று நின்று கொண்டு இருந்த அதிமுக கட்சி குண்டர்களின் மீது, இல்லை இல்லை தொண்டர்களின் மீது மோதி குண்டர்களின் கைகளை உடைத்தது மட்டும் இல்லாது. தனது தலையையும் தாங்களே உடைத்துக்கொண்டு பிறகு கட்டு போட்டுக்கொண்டு அழுது கொண்டு நேர்க்காணல் வழங்கினார்கள்.

அப்படி முடிந்த அந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது இந்த குண்டர்களை கொண்டு திமுகவினர் யாரும் எண்ணிக்கையில் நடக்கும் காந்தி கணக்குகளை பார்க்காத வண்ணமாக பார்த்துகொண்டு மட்டுமே நின்றார்கள். அந்த எண்ணிக்கை எல்லாம் தானாகவே அதிமுகவிற்கு மாறினது போலும்.

நீதி, நேர்மை என்றெல்லாம் யார் எல்லாம் பேசி நாம் கேட்க்க வேண்டி இருக்கிறது பாருங்கள். 10 வருடங்களாக ஆட்சியில் உட்க்கார்ந்து கொண்டு ஒரு கீரையை கூட கிள்ளி போடாத செயலலிதா, எல்லோரையும் கசப்பு மருந்து சப்பிடுங்கள், சப்பிடுங்கள் என்று 10 வருடங்களாக கசப்பு மருந்தாகவே காலம் கழித்து இப்போது திருமங்கலம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு டன் கணக்கில் கசப்பு மருந்துகளை வைத்துகொண்டு எப்படியாவது அந்த மக்களுக்கு கொடுத்து விடவேண்டும் என்று துடிக்கும் இந்த செயலலிதா சொல்கிறார் அறிக்கையில் தில்லுமுல்லுகளை பற்றி.

போங்க போங்க அப்படியே கொண்டு வந்த கசப்பு மருந்தை எல்லாம் வீட்டிற்கு 2 டன் என்று கொடுத்துவிட்டு ஊரை பார்த்து போய் நீங்களும் கொஞ்சம் கசப்பு மருந்து சாப்பிடுங்கள். சாப்பிட்டு விட்டு அப்படியே அன்பு, நீதி, நேர்மை, அப்படி என்றால் என்ன என்று பாடம் நடத்துங்கள் வந்து பார்த்து தெரிந்துகொள்கிறோம்.

Sunday, December 28, 2008

மக்களாட்சி தத்துவங்கள் அழிந்துகொண்டு வருகிறதா??????


இன்றைக்கும் பசுமையாக நினைவில் இருக்கிறது அந்த காட்சிகள். நண்பர்களின் பெற்றோர்களை விமானம் கூட்டிச்செல்லும் படிக்கட்டுகளின் வரையில் சென்று வழியனுப்பி வைத்தவைகள். அங்கே அப்போது காவலர்கள் இருந்தது இல்லை, பதிலாக விமான நிறுவன ஊழியர்கள் இருப்பார்கள். என்ன நீங்களும் செல்லவேண்டும் என்று இருக்குமே என்று அவர் பகுடி செய்ய வேதணை சிரிப்போடு வீடு வருவோம்.ஆனால் இன்றைக்கு நடப்பது என்ன, பயண சீட்டு இல்லாமல் விமானதளம் அருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தல் கூட பிடித்து விசாரிக்கும் நிலையில் உலகம் இருக்கிறது. மக்கள் கூடும் பொது இடங்களில் ஓயாமல் ஒலிக்கும் ஓசை இது, சந்தேகிக்கும் படி பொருளோ நபரோ இருந்தால் எங்களுக்கு தகவல் கொடுக்கவும் என்று 2 நிமிடங்களுக்கு ஒரு முறை அனைத்து நாடுகளிலும் சொல்லப்படுவதை தவறாமல் காணமுடிகிறது.யாரோ சிலர் செய்யும் செயல்களுக்கு இப்படி எவ்வளவு மக்கள் அவதியுறுவது. ஒரு 17, 20 மனிதர்கள் விமானதளத்தில் குற்றம் செய்தார்கள் என்றதற்காக எத்தணை கோடி மக்கள் 3 மணி நேரம் 4 மணி நேரம் வரிசையில் நின்று தனது உடமைகளை பரிசோதணைக்குள்ளக்க வேண்டும்.அதிலும் தப்பி தவறி இசுரேலு எதுவும் போய்விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான், அவர்கள் படுத்தும் பாடுக்கு இனி அந்த நாடு பக்கம் தலைவைத்து படுப்பது கூட இல்லை என்று முடிவுகட்டி விடுவீர்கள். அந்த அளவுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அங்கே.மக்களாட்சியில் அனைவருக்கும் சம உரிமை கொடுக்கப்படவேண்டும் என்றதில் ஒருவருகும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே வேளையில் ஒரு சிலர் குற்றம் செய்தார்கள் என்றதற்காக அனைவரையும் குற்றவாளிகள் போல் நடத்துவதையும் ஒருவரும் ஒத்துக்கொள்ள முடியாது.எங்களை ஏன் குற்றவாளிகைகளை போல் நீங்கள் நடத்த வேண்டும். நாட்டில் இருக்கும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு ஒழிக்க எத்தணையோ நிறுவணங்கள் மக்களது வரிப்பணத்தில் இயங்கிக்கொண்டு இருக்கிறது உலகின் அத்தணை நாடுகளிலும்.வெடிகளை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் ஒன்றும் காற்றில் இருந்து பெறப்படுவது இல்லை. அவைகளை கொணர்ந்து கொடுப்பதற்கு என்ற முகவர்களும் மற்றும் நிறுவணங்களும் உண்டு. அவர்களை தணிக்கை செய்தாலே பாதி வேலைகள் முடிந்தார்போல். அது மட்டும் அல்லாது கடத்தலில் வரும் பொருட்களை கண்டு பிடிக்கவேண்டியது கடலோர காவல்படையின் (காவலர்கள், சுங்கதுறை, கப்பற்படை) கடமை. எங்களுக்கு தெரியாமல் என்று எத்தணை நாட்கள் காரணம் சொல்லிக்கொண்டு இருக்க போகிறீர்கள்.தன்னையும் மாய்த்து ஆயிரம் ஆயிரம் உயிர்களையும் பழிவாங்கும் மனிதனின் தனிமனித இலாபம் என்ன என்று உலகுக்கு தெரியாதா. அப்படி கிடைக்கப்பெறும் ஆதாயம் அவர்களுக்கு கிடைக்காமல் செய்ய முடியாதா என்ன ஒரு நாட்டால். அப்படி அந்த பொருள் பேசிய வண்ணம் அவர்களது குடும்பத்திற்கு கிடைக்கவில்லை என்று தெரிந்தால் அடுத்தவன் அதே போல் தன்னை பலியிட்டு குடும்பத்தை காப்பாற்ற நினைப்பானா........இது எல்லாம் அரசாலும் மக்களாட்சியாலும் முடியாத செயல் என்று ஒருவராலும் ஒப்புக்கொள்ள முடியாது.ஒரு குறிப்பிட்ட மதம், இனம், குழு, தீவிரவாதத்திலும், பயங்கரவாதத்திலும் ஈடு படுகிறது என்று சொன்னால். முதலில் அந்த இனத்தையே ஒதுக்கிவைபோம், தணிக்கை செய்யவோம். அந்த இன மத குழிவில் யார் யார் எல்லாம் இப்படி செய்கிறார்கள் என்று தெரியும் வரையில் ஒதுக்கிவைப்போம். அதைவிடுத்து அந்த இன,மத,குழுவையும் நம்மோடு சேர்த்துக்கொள்வோம் என்று சொல்லிக்கொண்டு, சம்பந்தமே இல்லாத மக்களை எல்லாம் குற்றவாளிகள் போல் ஏன் நடத்தவேண்டும்.நல்லபடியாக நடக்கும் வரையில் தான் உரிமைகள் எல்லாம், என்றைக்கு பாதை மாறுகிறதோ அன்றோடு இந்த வாழ்க்கை எல்லாம் இல்லை என்று அந்த இன,மத,குழுவில் உள்ள அனைவருக்கும் புரியும் பொழுது. நாம் சென்று அந்த குற்றவாளிகளை பிடிக்கவேண்டாம் அவர்களே காட்டிக்கொடுப்பர்கள், ஒதுக்கியும் வைப்பார்கள், விரட்டியும் விடுவார்கள்.


மக்களாட்சி தன்னை சீர்தூக்கி பார்க்கும் நிலைக்கு வந்து வெகு நாட்கள் கடந்துவிட்டது. சிந்திப்பர்களா, நமது சட்ட வல்லுனர்களும், அரசியலர்களும். சுதந்திரம் சுதந்திரத்தின் கையையே கட்டிப்போட்டு விடக்கூடாது.

(படம் நன்றி குமுதம் இணையதளம்)

Saturday, December 27, 2008

கலைஞரை பாராட்டிய இந்து மத நாளிதழ்இந்த செய்திக்கு விளக்கம் தேவை இல்லை தான், இருந்தாலும். இந்த செய்திக்கு கலைஞரின் படத்தை பாருங்கள். அகமகிழ்ந்தும் ஆணவமாக இந்த நிகழ்வுக்காக விட்டால் வெடி வெடித்து கொண்டாடினார் என்றும் கூட எழுதுவார்கள் போலும்.


ஒரு பக்கம் கலைஞர் தீவிரவாதிகளிடம் மென்மையாக நடந்துகொள்கிறார், அவர்களுக்கு துணை போகிறார் என்றும் எப்பொழுதும் எழுதி தீர்க்கும் இதழ் தான் இந்த தினமலர். அவர்களது இதழில் இவரை பற்றி ஒரு நல்ல செய்தியா என்று பார்த்தால், படத்தை பார்த்ததுமே அந்த செய்தியின் நோக்கம் தெரிந்துவிட்டது. உள்ளே உள்ள செய்தியை படித்து பாருங்கள் இன்னமும் கேவலமாக இருக்கிறது.
காசு இல்லா ஏழைகள் என்றால் அவர்களை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் போலும். ஏழைகள் அழிந்தால் அவர்களுக்கு குரல் கொடுப்பது கூட குற்றமாக சொல்லும் இவர்களும், பணக்கார கூட்டமும் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஊதும் ஊதலை பாருங்கள். அங்கே இறந்தவர்கள் தாம் மனிதர்களாம், இந்தி மொழி பேசும் மக்கள் பாதிப்பு அடைந்தால் தான் பாதிப்பாம். தமிழ் பேசும் மக்களின் பாதிப்பு பற்றி பேசினால் திராவிடம் பேசிய தலைவரை வைத்தே இல்லை எல்லாம் அறிக்கையும் சட்டமும் கொண்டுவர வைத்து நமக்கு எல்லாம் பூச்சி காட்டுவார்கள் போலும்.

ஏழைகள் என்றால் ஏன் இந்த காழ்ப்பு இவர்களுக்கு, உங்களில் யாருக்காவது தெரியுமா. தெரிந்தால் சொல்லுங்கள்.

Friday, December 26, 2008

அய்யோ பாவம் பாக்கிட்த்தானின் தலைவர்கள் புலம்பலே தாங்கவில்லை இதில் இவர்கள் புலம்பல்.........

இந்த உலகம் எந்த உலகம் பாக்கிட்த்தான் ஐயா, ஒருவேளை உங்களின் கற்பனை உலகமாக இருக்குமோ. அமெரிக்கா, இங்கிலாந்து இன்னமும் இப்படி பல நாடுகள் கண்டித்தும் உங்களது நாளிதழ் இப்படி கேளி சித்திரம் வெளியிட்டால் நீங்கள் எல்லாம் புணிதர்கள் ஆகிவிடுவீர்களோ. ஒரு வேளை சிங்களர்கள் போல் கொல்லமையை கடைப்பிடிக்கும் நாடு போலும் உங்களது நாடு...........

உங்களது தலைவர்கள் புலம்புவதையாவது நிறுத்த சொல்லுங்கள் தாங்க முடியவில்லை. முன்னுக்கு பின் முரணாக எப்படி பேசுவது என்று பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள்...........

Wednesday, December 24, 2008

ஐநா மன்ற அதிகாரிகள் பாக்கிட்தானின் ஒத்துழைப்பை பாராட்டுகிறார்கள் (UN official praises Pakistan’s cooperation)

"WASHINGTON, Dec 23: A senior UN official has said that Pakistan has extended full cooperation in implementing UN sanctions against Jamaatud Dawa and Lashkar-e-Taiba.

Richard Barrett, the Coordinator of Security Council’s Al Qaeda and Taliban Sanctions Monitoring Committee, told CNN-IBN in New York that the United Nations had received “across-the-board” cooperation from all Pakistani civil and military agencies.

The committee is responsible for monitoring sanctions imposed by the Security Council on individuals and organisations declared terrorist.

Mr Barrett said he found “very good atmosphere of cooperation” in all his dealings with officials in Pakistan, “whether it’s the government, elected officials, ministries, the intelligence services or the army”.

He also acknowledged that it’s “very difficult to implement the sanctions completely but the Pakistani government is working to ensure fruitful compliance”.

Mr Barrett is expected to visit Islamabad soon to make an assessment of Pakistan’s actions so far and what more needed to be done.

Mr Barrett had earlier said the Security Council had the power to take action against nations if they were found to be not taking action against individuals and organisations branded as terrorists.

Acting after the United Nations declared the Jamaatud Dawa a terrorist group and a front for Lashkar-e-Taiba Pakistan has sealed all of its offices, arrested scores of activists and put its entire leadership under house arrest."

இப்படி ஒரு பரப்புரையை பாக்கிட்தானின் முன்னனி நாள்ழிதல் வெளியிட்டு இருக்கிறது. இந்த செய்தியில் வரிக்கு வரி ஐ நா பாதுகாப்பு சபை ஒருங்கினைப்பாளர் ரிச்சர்டு பாரட்டு இப்படி சொன்னார் அப்படி சொன்னார் என்று எழுதி இருக்கிறது அந்த இதழ்.

இந்த செய்தியின் நோக்கம் பாக்கிட்த்தானின் சாதாரண மனிதனும், அதாவது அரசியல் அறிவும் உலகறிவும் வேண்டாம் ஆனால் மத அறிவு மட்டும் போதும் என்று நினைக்கும் சாதாரண குடியானவனின் குற்ற உணர்ச்சிகளை உள் நாட்டிலும், மற்றும் பாக்கிட்த்தானின் மேல் மத கருணையோடு பார்க்கும் நடு நிலை நாடுகளுக்கு மறைமுகமாக பாக்கிட்த்தான் சொல்லும் செய்தி இது.

இந்தியாவில் நடந்த தீவிரவாத பயங்கரவாத செயலுக்கு துணை போனோரை கண்டு பிடிக்க நாங்கள் உதவிக்கொண்டு தான் இருக்கிறோம். இருந்தாலும் இந்தியா எந்த வித ஒத்துழைப்பும் இல்லை என்று எங்களை அடிப்பேன் என்று மிரட்டுகிறது என்ற செய்திதான் அது.

இவ்வளவு மிரண்டு போய் இருக்கும் இந்த நாட்டின் பேச்சு என்னவோ "வந்து பார் என்று தொனிக்கிறதே ஏன்". ஆப்பசைத்த குரங்காக இன்னமும் இந்த நாடு படப்போகும் வேதணைகளை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

ஆமாம் ரிச்சர்டு பாரட்டு "பாக்கிட்த்தானில் 65 தீவிரவாத இயக்கங்கள் இருக்கிறதே அவைகள் எல்லாம் எதற்கு என்று கேட்க்க தோன்றவில்லையா உங்களுக்கு". அத்தணை இயக்கங்களுக்கு என்ன தேவை என்று பாக்கிட்த்தானியரை கேளுங்கள் அதற்கு என்ன சொல்கிறார்கள் என்று உலக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்................

ஓநாய் என்ற ஒரு விலங்கு இருக்கிறது, அது இரத்த வாடையை கண்டு விட்டால் அது தனது பிள்ளை என்றும் கூட பார்க்காது கடித்து குதறி தின்று தீர்த்துவிடும். அந்த ஓநாயின் குணத்தில் மனித குலத்தையே அழிக்கும் நோக்கில் கையில் அணுகுண்டுடன் திரியும் இந்த ஓ நாய்க்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் உங்களது நாட்டில் இப்படி சாவுகளை சந்தியுங்கள். பிறகு இந்த மாதிரியான அறிக்கைகளை வெளியிடுங்கள் பார்ப்போம்.

பட்டே அறியும் முட்டாட்கள் என்று எங்களது ஔவை உங்களை போன்றோரை பார்த்துதான் சொன்னார்களோ மூடர்களே. எவ்வளவு பெரிய பதவியில் இருந்துக்கொண்டு என்ன ஒரு பொருப்பில்லா அறிக்கை. உங்களை எல்லாம் அந்த பதவியில் வைத்து இருக்கிறார்களே அந்த ஐநா மன்றத்தை சொல்லனும்.

இப்படி தான் வரிக்கு வரி இந்த ஓநாய் கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கியது அமெரிக்கா, இன்றைக்கு ஒவ்வொரு நாடாக சென்று வேட்டையை நடத்திக்கொண்டு இருக்கிறது. அந்த நாடுகளிடம் எல்லாம் அணுகுண்டுகள் இல்லை. இந்த ஓநாய்யிடம் அது 10,000 கணக்கில் இருக்கிறது. இந்த ஓநாயை ஒன்றும் அறியா அகிம்சாவாதி என்று சொல்லும் உங்களது அறிவை என்ன என்று சொல்வது.

பார்த்தீர்களா, உங்களது சில வரி அறிக்கையை எப்படி பயன்படுத்தி பரப்புரைகளை நிகழ்த்துகிறது என்று.......விழித்துக்கொள்ளும். இன்றைக்கு எங்களு நடப்பது தான் உங்களுக்கு நளைக்கு, இந்த புற்று நோயை இப்போதே கிள்ளி எறிந்து காப்பாற்றவேண்டும் என்றதே இந்தியாவின் நோக்கம். புரிந்தால் சரி............

Tuesday, December 23, 2008

இராச்சீவ் காந்தியும், தமிழக பேராய கட்சியினரும்.


முன்னாள் இந்திய முதன்மை அமைச்சர், நவீன இந்தியாவின் சிற்பி. ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளிலேயே உலககுக்கே ஒரு உதாரணமாக தன்னை காட்டி வளர்ந்து வந்த நாடு. தன்னிறைவு பெற்ற வளர்ச்சி. இளைய சமுதாயம் நாட்டின் முன்னேற்றத்தை மனதில் வைத்து தொழில்களை நாட்டின் பல்வேறு திசைகளில் பெருக்கி தானும் முன்னேறி நாட்டையும் முன்னேற்றிய காலம் இவரது கால இந்தியா.

ஐந்து வயது சிறுமிக்கு இவர் அனுப்பிய பதில் கடிதத்தை பற்றி எங்களது வகுப்புகளில் ஆசிரியர்கள் புகழ்ந்த விதம் இன்னமும் மனதில் பசுமையாகவே இருக்கிறது. வி பி சிங்கும், கலைஞரும் இவரையும் இவரது பஞ்சாயத்து இராசியத்தை பற்றி அடித்த கிண்டல்களும் கேலிகளும் இன்னமும் மனதை விட்டு மறையவே இல்லை.

கிராமத்தில் தான் சந்தித்த உழவனிடம் பச்சை மிளகாய் விலை அதிகமா, சிகப்பு மிளகாய் விலை அதிகா என்று கேட்டு தெரிந்து கொண்டு, பிறகு சிகப்பு மிளகாயே பயிரிட வேண்டியது தானே ஏன் பச்சை மிளகாய் பயிரிடுகிறீர்கள் என்று கேட்டதை அப்பாவி தனமாக பார்த்த உழவனும், அதையே குறும்பாக அதை ரொட்டி இல்லை என்றால் கேக்கு சாப்பிடுங்கள் என்று சொன்ன பிரஞ்சு அரசி சொன்ன வாசகங்களுக்கு ஈடு என்று எழுதிய தினமணியின் தலையங்கமும் இன்னமும் மனதை விட்டு அகலவில்லை.

தனக்கு இருக்கும் தனி பெருன்பான்மையை கொண்டே ஆட்சி அமைக்கும் உரிமை கோரும் வாய்ப்பு இருந்தும், பரவாயில்லை வி பி சிங் ஆட்சி அமைக்கட்டும் என்று இருந்ததுன் இன்னமும் நினைவில் இருக்கிறது.
மேலே சொன்னவைகள் எல்லாம் இராச்சீவை பற்றி தெரிந்த பொதுவான செய்திகளே. அவரது தனிப்பட்ட செய்தியாக தெரிய வந்தது எல்லாம், விமானம் தரையிரங்கும் போது தாறுமாறாக ஆட்டம் கண்டால், விமானி வாங்கிக்கட்டிக்கொள்வது. போப்போர்சு பீரங்கி வாங்கியதில் நடந்த ஊழல் (இது தொல்கி பதிவு பத்திர ஊழலில் நடந்த பணத்தோடு ஒப்பிடும் போது, ஒரு சிறிய தொகை), இன்னமும் சில செயல்கள் தாம் வருமே தவிற சுப்பிரமணி சாமியின் மேல் சுமத்தப்படும் எண்ணிக்கை இல்லா குற்றங்கள் போல் வராது. இது அனைவரும் ஒத்துக்கொள்ள கூடிய ஒரு செய்தி.
இந்த மனிதன் இந்தியாவின் மா மனிதனாகத்தான் உலகம் பார்த்தது, இன்னமும் அப்படி தான் நினைவு கூறுகிறது. அந்த மா மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வந்த நிகழ்வை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடுவதற்கு இல்லை தான்.

சென்னை விமான நிலையத்தில் என்று மாறா அந்த புன்னகையுடன் கொடுத்த நேர்காணலில் இந்த தேர்தலில் வெல்லப்போவது கட்டாயம் நாங்கள் தான், இது யாராலும் மாற்றமுடியாத ஒன்று என்றும். தமிழகத்துக்கு வருவது எப்போதும் தனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு செயல் என்றும் புகழ்ந்து திருபெரும்புதூருக்கு சென்றார்.

அங்கே போகும் போது தேர்தல் செலவுக்கு என்று ஒர் 200 கோடி ரூபாய்க்கள் வரை பணமாக உடன் எடுத்து சென்றார் என்று பரவலாக பேசப்படுகிறது.
பல்லாயிரம் தொண்டர்களுக்கு முன் சில நூறு தமிழக பேராய தலைவர்களுடன் உரையாற்றும் விதமாக அங்கே சென்ற இராச்சீவின் அகோர மறைவு எந்த ஒரு தனி மனிதனாலும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒன்றாத அங்கே நிகழ்ந்தேறியது.

அருகே இருந்த மக்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலரது உடலங்கள் எங்கும் சிதறி போர்த்தாக்குதலுக்கு ஆளான ஒரு பூமியாக கலவரப்பட்டு நின்றது அன்று. இந்தியர்கள் மட்டும் அல்லாது, உலகத்தோர் அனைவரது மனதையும் வாட்டி எடுத்த நிகழ்வு அது.

தனது தாய்யின் படுகொலையின் ஈரம் கூட காயாத நிலையில், அவரை அகோரமாக கொன்ற சீக்கியனின் மா நிலத்தில் இந்திராவின் மறைவை தீபாவளியாக கொண்டாக்கொண்டு இருகிறார்கள் என்ற செய்திகள் எல்லாம் காதில் விழுந்து கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் தேவையை கருதி. நாட்டின் நலனுக்காக அந்த இக்கட்டான கட்டத்தில் கட்சியின் தலைவர் பதவியையும், முதன்மை அமைச்சர் பதவினையும் ஏற்றுக்கொண்டவருக்கு இப்படி ஒரு அகோர முடிவு. அந்த குடும்பத்தின் அடுத்த பலி. இவ்வளவு சின்ன வயதில், தன்னை பற்றியும் தனது நாட்டை பற்றியும் பல கனவுகளை சுமந்து வந்த அந்த மா மனிதன் செயலலிதா கலைஞரை தீபாவளிக்கு மக்கள் என்ன செய்வார்கள் என்று சொன்னதை போல அடையாளம் தெரியாமல் உருகுலைக்கப்பட்டார்.

இந்த மறக்க முடியா மரணம் நிகழ்ந்து நீண்ட நாளுக்கு பிறகும் அவர் ஏன் கொல்லப்பட்டார் என்று இது வரையில் யாருக்கும் தெரியவில்லை. எதற்கு யாரால் கொல்லப்பட்டார்கள் என்றும் யாருக்கும் தெரியவில்லை.
கொலைக்கு துணை புரிந்தார்கள் என்ற சிலரையே நீதி மன்றத்திற்கு முன் நிறுத்தி தண்டனையையும் கொடுத்துள்ளார்கள். ஆனால் உண்மையிலேயே யார் இந்த சதியை தீட்டி செயலாக்கினார்கள் என்று இது வரையில் ஒரு வரும் தெரிவிக்கவே இல்லை.

சில மாதங்களுக்கு முன்னாள் குமுதம் இணையதள இதழ் டேட்டு லைன்க்கு அளித்த காணொலியில் திருச்சி சிவா சொன்ன விபரங்களை பார்க்கும் போது மனது பதறாமல் இல்லை. இராச்சீவ் காந்தியில் கொலை நிகழிருந்த மூன்று இரண்டு நாட்களில் சுப்பிரமணிசாமி தன்னிடம் சொன்ன விபரங்களாக திருச்சி சிவா குறிப்பிடும் "இந்த தேர்தல் நடந்தால் தானே பேராயக்கட்சி வெல்லும்", தொலைபேசியில் இராச்சீவ் காந்தியின் மரணம் நிகழ்ந்த சிலமணி துளிகளில் சிவா தெரிவிக்க சுப்பிரமணி சாமியை தொடர்பு கொள்ளுகையில் என்ன என்று கூட கேட்க்காமல் "அந்த மரணம் நிகழ்ந்தது எனக்கு தெரியும்" என்று சுப்பிரமணி சாமி தெரிவிக்க, காவலர்கள் கூட இன்னமும் உறுதி படுத்தாத ஒரு தகவலை இவருக்கு தெரியும் என்று சொன்னாரே என்று எழுப்பும் கேள்விகளை பார்க்கும் போது..........

இராச்சீவின் தொண்டனாக கூட வேண்டாம் சாதாரண மனிதனின் இதயமே இப்படி துடிக்கும் போது, கட்சியின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எப்படி இருந்திருக்க வேண்டும்.

மரகதம் சந்திரசேகர் என்ற ஒரு பேராய கட்சியின் மூத்த உறுப்பினர். இவர் தான் சுபாவையும், சிவராசனையும் அங்கே அழைத்துவந்தார் என்றது ஊர் அறிந்த இரகசியம். இந்த படு கொலைக்கு பிறது மருத்துவ மனையில் அந்த அம்மையாரின் பணியாளர் பெண் அப்பாவி தனமாக சொன்ன "திருச்சி சிவா வரும் வரையில் நன்றாகத்தான் இருந்தார்கள், அவர்கள் வந்ததும் தான் என்னவோ மூர்ச்சையானதை போல் இருந்தார்கள்" என்ற சொல்தொடர்கள் என்ன சொல்கிறது என்று தேடி கண்டுபிடிக்க தேவை இல்லை.

வாழப்பாடி இராமமூர்த்தி என்ற ஒரு பேராய கட்சியின் மூத்த உறுப்பினர். இவர் இராச்சீவ் தமிழகம் வரும் போதெல்லாம் அவருடனே இருக்ந்த ஒரு நபர். இராச்சீவின் தமிழக பயண படங்களி அவருக்கு அருகாமையில் இவர் இல்லாமல் படங்களையே செய்திதாள்களில் பார்க்கவே முடியாது.
இராச்சீவ் இறந்ததும் அவரது சிதறிய உடலை இவரது மேல் துண்டை கொண்டு தான் மூடினேன் என்று உருக்கமாக் எல்ல நேர்க்காணலிலும் காணொலியிலும் கண்கள் கசிய, வார்த்தை தழுதழுக்க சொல்ல இவர் தவறியதில்லை. சாதாரண பயணத்திலேயே படங்களில் ஒட்டிக்கொண்டாவது வரும் இவர், இந்த திருப்பெரும்புதூர் நிகழ்வில் மட்டும் ஒரு சிறுக்கீறல்கள் கூட இல்லாமல் மேல்துண்டை கொண்டு மூடும் அளவிற்கு பாதுகாப்பாக இருந்தது எப்படி.........பதில் சொல்ல அவர் இல்லை. இந்த கேள்வியை நாம் அவரிடம் நேரிடையாக கேட்க்கவும் முடியாது.........

எத்தணையோ முகம் தெரியாத பொதுமக்களும் காவலர்களும் உயிரிழந்த அந்த படுகொலையிலே எந்த ஒரு பேராயகட்ச்சியின் தலைவர்களும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பது ஆச்சர்யம் தராமல் இல்லை. அதோடு மட்டும் அல்லாது, அது வரையில் மா நில கட்சியின் தலைவராக இல்லாத வாழப்பாடி இராமமூர்த்தி அதற்கு பிறகு கட்சியை தொடங்கியதும் தொடர்ந்து அந்த கட்சியினை நடத்தியதும் எப்படி என்று மக்கள் கேட்க்காமல் இல்லை. மிகவும் ஆடம்பரமாக செய்தியாளர்களது கூட்டங்களை அவரால் எப்படி நடத்தமுடிந்தது என்றும் கூட கேட்க்காமல் இல்லை. அப்படியே தேர்தல் செலவுக்கு என்று இராச்சீவ் கொண்டு வந்த அந்த பண பெட்டிகள் என்ன ஆனது என்றும் கேட்க்காமல் இல்லை.

பிறகு அந்த கொலை வழக்கில் சம்பந்த பட்ட சந்திராசாமியை விசாரிக்க வேண்டும் என்ற தருணத்தில் இருந்து விசாரணையில் தகராறுகள் ஆரம்பித்தது உலகம் அறிந்த உண்மை.

பேராயக்கட்சிக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் என்ன சம்பந்தம். எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத சுசாமி எப்படி 5 ஆண்டு காலம் பெட்ரோலிய துறை அமைச்சகத்தில் இருந்தார், ஆட்சியில் அவ்வளவு முக்கியத்துவம் பெற்றார் என்று மக்கள் கேட்க்காமல் இல்லை.

இவை எல்லா கேள்விகளுக்கும் சிகரம் வைத்தாற்போல் இப்போது இன்று குமுதம் ரிப்போர்டரில் அந்த இரங்க நாதன் நேர்காணல் வழங்கியுள்ளார். அதிலே எனது கட்டுரையில் சொன்ன அனைத்து செய்திகளையும் உறுதி படுத்தியுள்ளார். திருச்சி சிவாவை பற்றிய செய்திகளுக்கு அவரது நேர்காணலை குமுதம் இணைய தளத்தில் பார்க்கவும்.

இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த இராச்சீவ் காந்தியின் கொலைவழக்கில் உண்மையை கண்டு பிடிக்க பேராய கட்சியின் தலைவர்கள் முற்படவில்லை. அதை விடுத்து சீமானை கைத்து செய், பிரபாகரனை கொண்டுவா, தமிழர்களை அழித்து ஒழி என்ற பரப்புரை வேறு.

இன்றைக்கு மார்தட்டும் அணைத்து பேராயகட்சியின் தலைவர்களுக்கும் சவாலாக சொல்கிறேன், அந்த படுகொலை நிகழ்ந்த போது நீங்கள் எல்லாம் எங்கே என்ன செய்துகொண்டு இருந்தீர்கள் என்று சொல்லமுடியுமா நெஞ்சில் உரம் இருந்தால் சொல்லிப்பாருங்கள் உங்களது அழகு உங்களுக்கே தெரியும்.

இவர்களாவது பரவாயில்லை, உலகுக்கே தைரியம் வழங்கும் அந்த தைரிய லெட்சுமி அன்றைக்கு கூட்டதிற்கு வருவதாக இருந்த போதும் அந்த ஊர்ப்பக்கமே தலைவைத்து கூட படுக்கவில்லையே அந்த தைரிய லெட்சுமி ஏன் என்று சொல்வாரா அந்த தைரிய லெட்சுமியாவது............

Friday, December 19, 2008

குமுதம் இணைய இதழின் குறும்பு படம்

தமிழர்களுக்கு ஆதரவா குமுதத்தில் செய்தியா, அதை இவ்வளவு நுண்ணோக்கு ஆராய்ச்சி எல்லாம் செய்து கண்டுபிடிக்கனுமா, பொதுவா வட நாட்டவர்களுக்கும், அவர்களது பழக்க வழக்கங்களுகளை மட்டுமே அச்சிடும் இதழாயிற்றே இது !!!!!!!!!!!!!!!!!

Tuesday, December 16, 2008

மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தின் 2008ன் தீபாவளி விழா

நவம்பர் 16ஆம் நாள் 2008ல் அர்பனாவின் சமுக கூடத்தில் மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தின் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.

குறித்த நேரத்திற்கு தமிழ்த்தாய் வாழ்த்துகளுடன் விழா துவங்க பெற்றது. விழாவின் விருந்தினர்களையும் உறுப்பினர்களையும் தலைவர் திரு.சுப்பு வரவேற்று விழாவினை துவக்கி வைத்தார்.

விழாவின் நாயகி ரோசலின் துவக்க உரையுனுடன் முதல் நிகழ்ச்சியாக சேம்பைன் தமிழ் பள்ளியின் மாணவர்களின் தமிழ் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல், இரண்டு, மூன்று என்று மூன்று குழுவாக வந்து குழுப்பாடல்களை மாணவர்கள் பாடிச்சென்றார்கள்.

நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் தமிழ் பள்ளி தான் இது வரையில் மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வியின் பலனை பெற்றோர்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்தை அங்கே காணமுடிந்தது. என்ன சாதித்தது சேம்பைன் தமிழ் பள்ளி என்று கேட்க நினைக்கும் அனைவரும் பதில் செல்லாமல் செல்லி சென்றது. வாழ்க வளர்க சேம்பைன் தமிழ் பள்ளியும் அதன் சேவையும்.அடுத்தாக நடன மாலையாக ஒரு குழு நடனம். இது சின்னம் சிறு சிறுவர்கள் அதிக நேரம் ஆடமுடியாத குழந்தைகளாக

உள்ளவர்களுக்காக அமைக்கப்பட்ட நிகழ்ச்சி. இதில் நான்கு பாடல்களுக்கு நான்கு குழுக்களாக சிறுவர்கள் கையில் விளக்குடனும், தீபாவளி தீபாவளி என்ற நாட்டிய கலபு நடனமாகவும், பஞ்சாப்பியரின் பாரம்பரிய நடனமாகவும், நகரத்து குரும்பு சிறுமிகளாவும் வந்து நடன விருந்தை கொடுத்தார்கள் மத்திய இல்லினாய் தமிழ்சங்க உறுப்பினர்களின் எதிர்காலங்கள்.இதை தொடர்ந்து நாக்கு முக்கா என்ற பொருள் பொருந்திய தமிழிசை பாடலுக்கு சிறார்களும் சிறுமிகளுமாக ஆடிய நடனம் காற்றிலே பறந்து ஆட்டிய முழுப்பாடல் ஆட்டம் அது. ஆண் பாடும் பாடலையும் பெண் பாடும் பாடலையும் இணைத்து ஆறு நிமிடங்களுக்கு வரும் பாடலாக அமைத்து அந்த பாடலை நடனமாடி காண்பித்தார்கள்.


இரண்டு நடனங்களை பார்த்த மகிழ்ச்சியில் இருந்த எங்களுக்கு அடுத்த விருந்தாக சேம்பைன் தமிழ் பள்ளி மாணவர்களின் தீபாவளி பிறந்த கதையை ஆங்கில நாடகமாக நடித்து காட்டினார்கள். அவர்கள் பேசும் ஆங்கிலமும் இந்திய வரலாறும் என்று மிகவும் வித்தியாசமாக அமைந்தது அந்த நாடகம்.அடுத்தாக மகளீர் மன்றம் வழங்கிய கோலாட்டம் நிகழ்ச்சி. கலைஞன் படத்தில் வரும் தில்லு பரு சானே என்ற பாடலுக்கு அழகாகவும் நளினமாகவும் அருமையானதொரு நடனத்தை வழங்கினார்கள். ஒவ்வொரு முறையும் இப்படி நிகழ்ச்சிகளை கொடுக்கும் போதெல்லாம் இவ்வளவு திறைமைகளை இத்தணை நாள் எங்கே மறைத்து வைத்தீர்கள் என்று கேட்கும் விதமாகவே அமையும். இன்றும் அப்படியே அமைந்தது அந்த நடனம்.சிக்காக்கோ தமிழ்சங்கத்தின் சார்பாக விழாவில் கலந்துகொண்ட திருமதி மீனாசுபி அவர்கள் விழாவில் சிறப்புரையாற்றினார்கள். விழாவையும் மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தையும் வாழ்த்தி பேசினார், பொங்கல் விழாவிற்கு சிக்காகோ தமிழ்சங்கத்திற்கு வரும் படியாக அழைப்பையும் விடுத்தார்கள்.

மத்திய உணவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. புளுமிங்குடன்னின் இந்தியா பவனில் இருந்து தருவிக்கப்பட்ட மத்திய உணவு வழங்கப்பட்டது. உணவு இடைவேளையில் காதுக்கும் உணவாக இசை மாலை தொகுத்து வழங்கப்பட்டது.

உணவு இடைவேளைக்கு பிறகு செல்வி சுபாலட்சுமியின் பரதம் நடைபெற்றது.
இவர் சேம்பைன் அர்பனா பல்கலைகழத்தில் மேற்படிப்பு மாணவர். நடனம் கற்றுக்கொள்ளும் சேம்பைன் தமிழ் பிள்ளைகளுக்கு எப்பவும் ஒரு தூண்டுகோலாக இவரது பரதம் அமைவது உண்டு. இந்த முறையும் அப்படியே அமைந்தது.

அடுத்தாக மேடையேறிய பெப்பரபே குழுவினர்கள் மாரி + மாரி = மும்மாரி என்ற ஒரு வித்தியாசமான நாடகத்தை நடத்தினார்கள். தற்பொழுதை சென்னை நகரின் முக்கிய இடங்களின் பெயரில் அரசர்கள் காலத்து கதையாக அமைந்தது அவர்களது நாடகம். ஒரு வகையில் சொன்னால் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் வகையில் இருந்தாலும், நிறைய வித்தியாசமான திருப்பங்களை கதையில் கொண்டு நடத்தி காட்டினார்கள்.

தொடர்ந்து மேடையேறிய செல்வி லாவண்யாவின் குழுவினர்களின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. முத்தாக மூன்று பாடல்களை பாடி அசத்தினார்கள் அந்த குழுவினர்கள். ஒரு கித்தார், மின்னனு இசை கருவி மட்டுமையுமே வைத்துக்கொண்டு சவாலாக அவர்கள் பாடிக்காட்டியது விழாவில் அனைவரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றது.

இதை தொடர்ந்து பெப்பரபே குழுவினர் பெருங்காயம் என்ற ஒரு நாடகத்தை நடத்தி காட்டினார்கள். இந்த நாடகம் சோ இராமசாம 20 வருடங்களுக்கு முன் சென்னை தொலைக்காட்சிக்காக தயாரித்து வழங்கிய சரசுவதியன் செல்வன் நிகழ்ச்சியின் பாதிப்பாக இருந்தாலும் கோலங்கள், செல்வி, அண்ணாமலை என்று அமெரிக்க தமிழர்களை துன்புருத்தும் தொடர்களை துவைத்து கிழித்து காய போட்டபடி இருந்தது இந்த நாடகம்.


நாடகத்தை தொடர்ந்து பிங்கோ விளையாட்டு நடந்தது. எக்கச்சக்கமான சுற்றுகளுக்கு பிறகு முதல் பரிசு அறிவிக்கப்படது.


பிங்கோ விளையாட்டோடு விழாவை முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்சிகள் யாரும் இனிதே முந்தது. அடுத்தாக வரும் புத்தாண்டில் மீண்டும் சந்திப்போம் என்ற அறிவிப்போடு அனைவரும் விடைபெற்றார்கள். 2008 க்குகான தீபாவளி விழா இனிதாக முடிந்தது.

Monday, December 15, 2008

பாக்கிட்தானில் 65 தீவிரவாத இயக்க அலுவலகங்கள் முடக்கம்- குமுதம் இணையதளம்


இப்படி ஒரு செய்தியை குமுதம் இணையத்தில் 14/12/2008ன் தலைப்பு செய்திகளில் ஒன்றாக வந்துள்ளது. இதே சேதியை தினமணி, தினமலர் மற்றும் இந்திய இதழ்களும் மட்டும் இல்லாது. அமெரிக்க ஊடகங்களின் முக்கிய பங்கு வகிக்கும் சி என் என் நிறுவனமும் இந்த செய்தியையும், இது தொடர்பாக பாக்கிட்த்தானின் அறிவுகெட்ட நேர்காணலையும் உளரல்களையும் வெளியிட்டுள்ளது.

http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/12/14/india.mumbai.suspect/index.html
http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/12/11/pakistan.mumbai.attacks/index.html
http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/12/09/pakistan.mumbai.raids/index.html

இந்த தலைப்பை பார்க்கும் இந்தியாவின் சாதாரண குடிமகனின் மனதில் என்ன தோன்றும். நடந்துவரும் உலக பொருளாதார மந்த நிலைகாரணமாக ஆங்காங்கே அமெரிக்க நிறுவனங்களின் இந்திய கிளைகளை மூடுவதை போல் வந்த ஒரு அறிவிப்பு என்று தான் நினைக்ககூடும்.

இந்தியாவின் சாதாரண குடிமகன் என்ன ஐ நா வின் தலைவர்களும், அதன் உளவு நிறுவனமும் கூட இதையேத்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறது போலும்.

இந்த 65 மனித பிணம்தின்னி நிறுவனங்களிலே ஒரு பிணம்தின்னி நிறுவனத்தின் பெயரை சொல்லி அதைமட்டும் பாக்கிட்த்தானும் மற்ற நாடுகளும் தடை செய்யவேண்டும் என்ற ஒரு வெறும் அறிக்கையை மட்டுமே வெளியிட்டது.

அந்த தடை செய்தி வெளியில் வந்த உடனுக்குடன் அந்த மனித பிணம்தின்னி குழுவின் தலைவன் பாக்கிட்தானின் தொலைக்காட்சிகளுக்கும் இதழ்களுக்கும் நேர்காணலை வழங்குகிறான். எப்படி தெரியுமா, இவர்களது தடையை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. இந்த ஐ நா மன்றம் தடைவிதிப்பதால் நாங்கள் கொன்று குவிக்கும் செயலுக்கு என்ன தடை வந்துவிடப்போகிறது.

அமெரிக்காவிற்கே சென்று கொள்ளையாக மக்களை கொன்று குவித்து, அவர்களிடமே எங்களின் ஏக போக அதிபதியை அனுப்பி இன்னமும் நவீனமான விமானமும் ஆயுதங்களையும் வாங்கிவர வைத்தோம். இந்த துக்கட்டா நாடு என்ன இந்தியா சொல்லுமாம் அதை ஐ ஆ மன்றம் கேட்டு தடைவிதிக்குமா. அந்த தடையுத்தரவை நாங்கள் வேறு காரியத்திற்கு வேண்டுமானால் பயன் படுத்தலாமே தவிற வேறு எதற்கும் அது ஆகாது என்ற ஒரு இறுமாப்பான பதில்.

65 மனித பிணம்தின்னி நிறுவனங்கள் என்று சொல்லும் போது அனைத்து நாடுகளின் மனதிலும் வரும் கேள்வி இதுவாகத்தான் இருக்கமுடியும்.

பாக்கிட்த்தானில் இப்போது எந்த ஒரு சுதந்திர போரோ அல்லது போராட்டமோ இல்லை. அது ஒரு சுதந்திர நாடு, மக்களால் மக்களுக்காக மக்களே ஆளப்படும் ஒரு நாடு.

நிலைமை அப்படி இருக்க இது என்னவோ ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் போல் பல குழுக்களாக இவர்கள் மனித வேட்டையாட பயிற்சி கொள்வதும். பல நாடுகளுக்கு சென்று அப்பாவி மக்களை மட்டுமே கொன்று குவித்து இன்பம் காணும் இந்த குழுக்களின் நோக்கம் என்ன.

எங்கேயோ கொலை நடந்த இடத்தில் கிடந்த தலைமுடியின் பாகத்தையும், அவனது கைரேகையையும் மட்டுமே வைத்து கொலைகாரர்களை கண்டு பிடித்து தூக்கிலிட்டு தண்டிப்பது இந்த மனித சமுதாயம். அந்த மனித சமுதாயத்தில். அடுத்த நாட்டு விவகாரங்களில் தலையிடுவது, முடிதால் பயங்கர சாவுகளை நிகழ்த்தி அந்த நாட்டு மக்களை பாதுகாப்பு இல்லாதது போல் ஒரு தோற்றம் கொண்டு வருவது. அதற்காக எண்ணற்ற நிறுவனங்களை அமைத்து கொழுப்பெடுத்த மனிதர்களின் திமிர்பிடித்த பணத்தை பிச்சையாக வாங்கி இப்படி ஒரு பிழைப்பை அந்த நாடே நடத்துகிறது என்றால் அந்த நாட்டை என்ன என்று சொல்வது.

உலக நாடுகள் இந்த மனித சமுதாய சீரழிவு தொழிற்சாலையாக விளங்கும் பாக்கிட்த்தானை இன்னமும் ஒதுக்கி வைக்காமல் இருப்பது ஏன். என்னை கேட்டால் ஒதுக்கி வைப்பது என்று நின்று விடுவதைவிட. இனிமேல் எந்த ஒரு நாடும் இப்படி ஒரு மனித சமுதாய சீர்ரழிவை கனவில் கூட நினைத்து பார்க்க கூட்டத வகையில் பாக்கிட்த்தானுக்கு ஒரு பாடம் கற்பித்து இருக்க வேண்டாமா..........

அதை விடுத்து ஒரு மனித பிணம்தின்னும் குழுவைமட்டும் ஐ நா மன்றம் தடைவிதிப்பதும் அதை அவர்கள் கேளி போசுவது என்ன வகையான செயல் என்றே புரியவில்லை. இப்படியே போனால், இன்றைக்கு அமெரிக்க அதிபரை செறுப்பால் அடித்ததை போல் அனைத்து உலக தலைவர்களையும் இவர்கள் உலக நாடுகளின் முன் செறுப்பால் அடித்து காட்ட தயங்க மாட்டார்கள்.

இதிலே செறுப்பால் அடிப்பது ஒரு அவமான படுத்தும் செயல் என்று இந்த சி என் என் நிறுவனம் ஆராய்ச்சு நடத்தி இதழ்களில் செய்தி வெளியிடுகிறது.

பாக்கிட்த்தானை உலக அளவில் தடை செய்யவேண்டும். அந்த நாட்டோடு உறவோ தொடர்போ கொள்ளக்கூடாது என்று ஒதுக்கிவைக்க வேண்டும். அந்த நாட்டு மக்களில் ஒருவரை கூட தங்களது தேசத்துக்குள் அனுமதிக்க கூடாது. அப்படி செய்தால் தான் இந்த அறிவு கொட்டமக்கள் அந்த மனித பிணம் தின்னும் மக்களை கொழுப்பெடுத்த மனிதர்களின் திமிர்பிடித்த பணத்தில் வளர்த்து உலகை கொல்ல மாட்டார்கள்.

இந்த செயலுக்கு இந்தியா முன்னோடியாக திகழவேண்டும். பாக்கிட்தான் இனிமேல் சீனாவுடனும் கொரியாவிடமே துடுப்பாடம் ஆடிக்கொள்ளட்டும். இந்திய எல்லைகோடுகளையும் நமது எண்ண கோடுகளையும் மூடி உலகை எச்சரிக்கை செய்வோம்.

Wednesday, December 10, 2008

ஒரு மனநோய்( psycho ) கோமாளி நாட்டின் மனநோய்( psycho ) தளபதியின் கோமாளி தனமான பேச்சு.


இலங்கையை ஆண்டுக்கொண்டு இருக்கும் குடும்பம் இலங்கையின் வம்சாவழியினர் தானே அன்றி அந்த நாட்டில் பிறந்த குடிமக்கள் இல்லை. அவர்கள் அனைவரும் அமெரிக்க குடிமக்கள்.

என்றைக்கு இலங்கையில் காரியம் கையை மீறி செல்கிறதோ அன்றைக்கு அமெரிக்காவிற்கு எங்களை காப்பாத்துங்கோ என்ற உடன் அழைத்துக்கொண்டு போக அமெரிக்க படையே வரும் என்ற தைரியத்தில் இன்னமும் தைரியமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு இருக்கிறது அந்த குடும்பம்.

வேறு ஒரு நாட்டின் குடிமக்கள் இலங்கையில் சென்று ஆட்சி செலுத்தலாம். சட்ட திட்டங்களை வகுக்கலாம், அதிகாரம் செய்யலாம். ஆனால் அங்கேயே ஆண்டு ஆண்டு காலமாக பிறந்து வளர்ந்து வரும் மக்கள் சிங்களம் பேசவில்லை, புத்தணை தொழவில்லை என்ற இரண்டே காரணத்திற்காக மட்டுமே வாழவே தகுதியே இல்லை என்று உரைத்து, ஐநா முதல் ஆப்ரிக்கா அந்த கொடிய காரியங்களை சர்கரையும் நெய்யையும் தடவி விற்று வருகிறது இந்த மனநோயாளி குடும்பம்.

உலகில் எந்த ஒரு நீதி தெரிந்த மனிதனிடமும் சென்று இந்த செயல் சரியா என்றால், எதைகொண்டு அடிப்பார் என்று கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை.

சாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று பாரதிமுதல், சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் இட்டார் பெரியோர், இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி என்று அவ்வையார் முதல் இன்று இருக்கும் அத்தணை புரட்சி கருத்தாளர்களும் சொல்லிவரும் இந்த வேளையில். இப்படி ஒரு பிற்போக்கு தனமான ஒரு இழி கொள்கையை மனநோயாளியை( psycho ) போல் பரப்பி. அந்த மனநோயாளி செயலுக்கு 100 ஆயிரக்கணக்கில் பிணங்களை அடுக்கி அந்த பிணங்களின் இரத்ததை பருகி குளித்து இன்னமும் என்ன என்ன வன்செயல்கள் செய்ய முடியுமோ அத்தணையும் செய்யும் மனநோயாளி( psycho ) பிணம் தின்னும் குடும்பம் இந்த குடும்பம்.

இந்த மன நோயாளி கோமாளி சொல்கிறார், வைகோவும் பழ.நெடுமாறனும் கோமாளிகளாம்.

மக்களாட்சி நாட்டில் அரசியல் செய்யும் வைக்கோவும், முன்னாளில் அரசியலும் இன்னாளில் மக்கள் இயக்கம் நடத்தும் பழ.நெடுமாறனும் கோமாளி என்று சொல்ல என்ன தைரியம் வந்து இருக்கவேண்டும் அந்த மன நோயாளிக்கு ( psycho ).

நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாக பிணங்களின் கணக்குகளை பார்த்து இன்றைக்கு இவ்வளவு தான் நாளிழலுக்கு எல்லாம் சொல்லிவிடு என்றும். அப்படியே கொஞ்சம் ஆபாசமாக எண்ணம் வந்தால் இறந்தவர்களை அம்மணமாக்கி தெருமுனையில் சிறுவர் சிறுமியர்கள் பார்ப்பதற்காக அனுப்பியும் வைக்கும் இந்த மனநோயாளி ( psycho ) சொல்கிறார் கோமாளி தனத்தை பற்றி.

முன்பு ஒரு நாள் அனைதுலக மக்களை கூப்பிட்டு கொண்டு புலிகளின் பகுதிக்கு இராணுவமாக சென்ற இந்த மனநோயளியை( psycho ) நோக்கி பறந்து வந்தது புலி குண்டுகளும் எரிகணைகளும். தரையில் இறங்காமலேயே ஓடி ஒளிந்துகொண்டார் இந்த மனநோயாளி( psycho ).

அன்று முதல் 4 மாத காலத்திற்கு இந்த மனநோயாளி( psycho ) எங்கே இருக்கிறார் என்ற தகவல் அவருக்கே கூட தெரிந்து இருக்குமா என்று கூட தெரியவில்லை. ஏன் அப்படி ஓடி ஒளிந்து கொண்டார் இந்த வீரர்.

நாடே இவரது கட்டுப்பாட்டில் என்றும், நாட்டின் பாதுகாப்பு இவரது கையில் என்று அனைத்துலக நாடுகளுக்கு சொல்லி வந்த இவர் அத்துணை மாதகாலம் தலைமறைவாக இருந்தது ஏன் என்று சொல்வாரா இந்த கோமாளி.

தனக்கே பாதுகாப்பு இல்லை என்று ஓடி ஒளிந்து கொண்ட மனிதனால் எப்படி நாட்டையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். அப்படி சொன்னால் அது கோமாளி தனமான பேச்சாகத்தான் இருக்கும். இந்த கோமாளி சொல்கிறார் வைகோவையும் நெடுமாறனையும் பார்த்து.

ஒரு வேளை பைத்தியம் அடுத்தவர்களை பார்த்து சொல்லுமே, நீ பைத்தியம், உங்க அம்மா பைத்தியம் என்று அடுக்கிக்கொண்டே போகுமே அது போல இருக்குமோ. இருந்தாலும் இருக்கும் யார் கண்டது இந்த பைத்தியங்களை...........

முதலில் பிணங்களை அடுக்கி அவைகளின் மேல் நடத்தும் வாழ்க்கையையும், பிற்போக்கு தனமான எண்ணங்களையும் மனதில் இருந்து கழுவி புதுமனிதனாக மாறு. இல்லை என்றால் பேசாமல் பிணம் தின்னும் வேலையை மட்டும் பார். அதைவிடுத்து மனிதனாக மனிதனால் ஆளப்படும் நாட்டைபார்த்து பொறாமை எல்லாம் கொண்டு இப்படி கோமாளி தனமாக பேசிக்கொண்டு அலையவேண்டாம் மன நோயாளியே( psycho ).

Thursday, December 4, 2008

மும்பை தாக்குதலின் அரசியல் நோக்கம் என்னவாக இருக்கும்.....

தாக்குதலின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று ஆராய்வதற்கு முன் இரண்டு நிகழ்வுகளை இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒன்று சமீபத்தில் நிலவருகில் செலுத்திய விண்கலம், இரண்டாவது கடல் கொள்ளையர்களை தாக்கியழித்தது.

முதலாவது நிகழ்வு நாட்டின் அறிவியல் வளர்ச்சியை உலகுக்கு உணர்த்திய ஒன்று. இன்னமும் கிரயோ வடிவமைப்பை முழுமை பெறாத நிலையில் கையில் இருக்கும் வெணையை வைத்தே சமாளி என்று சொல்லி செயல்பட்டவிதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தாமல் இல்லை. இது இரு உலக இந்திய சாதணையே......

இரண்டாவது என்ன தான் அடுத நாடு இந்தியாவை தீண்டினாலும் அவர்கள் எதுவும் செய்யவோ செயல்படவோ மாட்டார்கள். உலகில் இரண்டாம் பெரிய இராணுவம் இருந்தும் என்ன அது தூங்கும் இராணுவம் என்று பகுடி பேசும் உலகுக்கு நடுவில் சென்று கொள்ளையர்களை தாக்கு அழித்து வந்த படை நடைவடிக்கை உலகுக்கு சொல்வது என்ன.

மேற்கு புற கடலில் நமது ஆதிக்கத்தை அது காட்டுகிறது. இராணுவ நடவடிக்கைகளில் நமது நாடு மிகவும் அனுபவம் படைத்த படையது. நான்கு முறை நேரடி களம் கண்ட படைகள் நமது படை. அந்த அனுபவத்தின் தொடராக, பல பன்னாட்டு கப்பல்களை கடத்தி வைத்துக்கொண்டு பணம் பறிக்கும் கொள்ளையர்களை தாக்கி அழித்தது உலகில் மேற்கு கடலில் நாம் கொண்டுள்ள கடலாதிக்கத்தை காட்டுகிறது.

இந்த இரண்டும் யாருடைய கண்ணில் மிகவும் உருத்தலாக இருந்திருக்க வேண்டும், பாக்கிட்த்தானை விட்டுத்தள்ளுங்கள் அவர்கள் பேட்டை கொள்ளையர்களுக்கு சமம், தெரு நாய்க்கு என்றும் கூட சொல்லலாம். ஒரு எலும்பு துண்டை எடுத்து வீசினால் காலை நாவால் நக்கும் நாய்க்கு சமமான செயல்புரியும் நாடு அது. இந்த கேவல பிழைப்பு பிழைத்து மதத்தை காப்பதை விட வேறு ஒரு தொழில் கூட செய்து பிழைத்தால் மனிதன் என்ற ஒரு தகுதியாவது இருந்திருக்கும்.

வேறு யாருக்கு எல்லாம் இது உருத்தலாக இருந்து இருக்கும். சீனாவிற்கு என்று சொல்லலாம், நாம் விண்கலம் செலுத்துவோம் என்றதும் உடனே ஒரு மனிதனை விண்வெளி பாதைக்கு அனுப்பி சிகப்பு கொடியை அவசர அவசரமாக காட்டிய முனைப்பிலேயே அவர்கள் நம்மீது இந்த செயலில் எவ்வளவு காழ்ப்பில் உள்ளார்கள் என்று தெரியும்.

என்ன தான் படைபலம் என்று அவர்கள் வாய்கிழிய கத்தினாலும் அறிவியல் முன்னேற்றத்தில் நமது நாட்டுக்கு அருகில் கூட அவர்கள் கிடையாது. இரசியாவின் துணையுடன் கொண்ட சொற்ப முன்னேற்றங்களாக கொண்டு அவர்கள் போட்ட ஆட்டத்துக்கு எல்லாம் இந்த சந்திர விண்கலம் வயிற்றில் புளியை கரைத்துதான் இருக்கும்.

இவர்களை விட பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் தள்ளாடிகொண்டு நிற்கும் அமெரிக்காவை வெறுப்படைய வைத்திருக்கும் இந்த இரண்டு செயல்களும். அமெரிக்க டாலர் வீழ்ந்ததும் இந்தியா விழுந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு தோற்று போனாலும். மத்திய கிழக்கு பகுதியில் தனது படைகளை நிலை நிறுத்தியுள்ள நிலையில். இந்தியா இப்படி ஒரு படை நடவடிக்கையை மேற்கொண்டு பெயரை தட்டிக்கொண்டு செல்வது கட்டாயம் அவர்களுக்கு பிடிக்காது தான். அதுவும் அவர்களது மொழியில் நாம் எல்லாம் மூன்றாம் தர நாடு ஆயிற்றே.......

ஆக இந்த தாக்குதலில் யாருக்கு அதிக இலாபம் என்று பார்த்தால் சீனாவிற்கும் அமெரிக்காவுக்கும் தான். பாக்கிட்தானுக்கு இல்லை.

யார் பொருட் செலவில் இந்த தாக்குதல் நடந்து இருக்கும் என்றால், அமெரிக்க உளவு நிறுவனத்தை சொல்லலாம். அவர்களது கணிப்பு இப்படி இருக்கும், இந்த தாக்குதலின் அடிப்படையில் பாக்கிட்தானும் இந்தியாவும் மோதும். அந்த மோதலின் விளைவால் இரண்டு நாடுகளும் அழியும். இனிமேல் அங்கே இருக்கும் ஒரே எதிரி சீனா மட்டும் தான். அவர்களுக்கும் ஒரு மூன்று ஆண்டுகள் ஒரு நெருக்கடியை கொடுத்தால் சரியாக போகிறது என்று கருதி இருக்கலாம்.

அல்லது சீனாவோ, இப்போது ஒரு போர் மூள வைத்துவிட்டால். முடிவில் இரண்டு நாடுகளும் அணு ஆயுத போராக மாற்ற வைத்துவிடலாம். பிறகு, இந்தியாவின் பெரும் பகுதியும், பாக்கிட்தானிம் முழு பகுதியும் அழியும். இன்னமும் ஒரு 500 ஆண்டுகளுக்கு தனக்கு அருகில் யாரும் எதிரி இல்லை என்றும் திட்டம் தீட்டி இருக்கலாம்.

அல்லது இவ்வளவு ஏழ்மைகளையும் தனது கந்த துணிக்குள் மறைத்துக்கொண்டு நாடு மேற்கு உலக நாடுகளின் அறிவுத்தேவைகளை பூர்த்தி செய்து அதிக பணம் செய்கிறார்களே. நாமோ ஒருக்கும் அனைத்து மக்களையும் வயது வரம்பு இல்லாமல் வேலை வாங்கினாலும் இவர்கள் வாங்கு பொருட்களின் அளவே வருகிறதே என்ற வயிற்றெரிச்சல்.

அமெரிக்கர்களுக்கும் மேற்குலக மக்களுக்கும் இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றால். உடனே வேலைகளில் உள்ள அனைத்து மேற்குலக மக்கள் எல்லாம் ஊரை காலி செய்து சொந்த ஊருக்கு திரும்பி போனகையுடன். அங்கே எல்லாம் சென்று இனிமேல் வேலை எல்லாம் பார்க்க முடியாது என்று சொல்லவைத்தல். அதன் மூலம் தற்பொழுது இருந்து வரும் பணி பரவலாக்கம் இந்தியாவில் இருந்து ஓழித்தல் இவர்களது நோக்கம்.

ஒபாமாவானாலும் சரி, புசு ஆனாலும் சரி, கான்டலிசா ஆனாலும் சரி நீங்கள் போருக்கு போனால் நாங்கள் ஆதரவளிப்போம் என்று மூச்சுக்கு முன்ணூரு தடவை சொல்வதை பார்த்தால். இவர்கள் சண்டைக்கு போகமாட்டார்கள் போல, அட அடிடா அவனை என்று கூட்டத்தில் இருந்து தள்ளுவதை போல இருக்கிறது இவர்களது செயல்.

இதில் எது உண்மை என்று அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தெரியவரும்.

முதலில் தனக்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றது பாக்கிட்த்தானம். பிறகு அவர்களிடத்து உள்ள அத்தணை இரணுவத்தையும் எல்லையில் கொண்டு வந்து நிறுத்திக்கொண்டு. போருக்கு நாங்கள் தயார் என்று சொல்கிறது. நீங்கள் தான் சம்பந்த படவே இல்லையே பிறகு எதற்கு நடுங்குகிறீர்கள்.

அப்படியே உங்களை நாங்கள் அடிக்க வேண்டும் என்றால், இனிமேல் ஆப்கானித்தானில் இருங்கும் அமெரிக்க படையை கொண்டு தான் அடிப்போம். அடித்துவிட்டு அடிக்காதிங்கோ அமெரிக்க அண்ணா அடிக்காதிங்கே என்று பதிவு முதல், நாழிதள் வரை எழுதி தீர்ப்போம். நீங்களும் திருடனுக்கு தேள் கொட்டியது போல் மனதுக்குள் அழுவீர்கள்.........

ஆப்பசைத்த குரங்காக நீங்கள் படப்போகும் பாட்டை நாங்கள் பார்த்து நகைக்கும் நாட்கள் தூரத்தில் இல்லை கோமாளிகளே.......

ஆதாரம் வேண்டுமாம் ஆதாரம், பெரியண்ணன் அடிப்பான் அவன் கிட்ட கேளு கொடுப்பான் கிலோ கணக்கிலும் மீட்டர்கணக்கிலும்............

அமெரிக்காகிட்ட சொல்லுங்க நாங்க அணுவல்லரசு, யாரையும் தாக்கியழிக்கும் திறன் எங்களுக்கு இருக்கு. எங்கள் மீது கைவைத்தல் நடப்பது வேறு என்று அங்கே சொல்லுங்கள் எங்களிடம் இல்லை. நாங்கள் இனி உங்களை ஒன்றும் செய்வது இல்லை, வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று கடைசியாக செய்யலாம். மாட்டினானே உங்கள் நாட்டின் மடையன் அவனை உலக தொலைகாட்சியின் முன் நிறுத்தி பாக்கிட்தான் அமெரிக்க மக்களாக பார்த்து பார்த்து கொல்ல சொன்னது என்று சொல்ல வைக்கலாம். அதை அமெரிக்க அலை வரிசைகள் மூன்று நாட்களுக்கு ஒளிபரப்பும். பிறகு இருக்கிறது கச்சேரி உங்களுக்கு. ஆதாரம் வேண்டுமாம் ஆதாரம்..........