Tuesday, March 31, 2009

அருந்ததீ -திரைவிமர்சனம்-ஆங்கிலப்படத்தின் கம்பனாக்கமா

முதல் காட்சி மெக்சிகோவில் ஒரு புதைபொருள் ஆய்வாளர்கள் நடத்தும் ஆய்வில் ஒரு கையடக்க கத்தி கிடைக்கிறது. அந்த கத்தி தீய சக்திகளின் மொத்த உருவம், அந்த கத்தியை கொண்டு சாத்தான் உலகை அதன் கைகுள் கொண்டு வரும் என்று கதையின் பின்னொலியுல் சொல்கிறார்கள்.

அடுத்ததாக பேயை ஓட்டும் காட்சியை காட்டுகிறார்கள். ஒரு ஏழை பெண் ஒருத்திக்குள் தங்கி அவளை ஆட்டுவிக்கும் ஆவியை கதையின் நாயகன் ஒரு கண்ணடியில் பிடித்து அதை அப்படியே 3வது மாடியில் இருந்து விட்டெறிவான். கண்ணாடி உடைவதில் அந்த ஆவியும் அழியும்.

அதற்குள் அந்த கத்தியை கொண்டு வந்தவன் இலாசு ஏஞ்சலசின் நகருக்கே வந்து சேர்வான். அங்கே வந்ததும் அந்த கத்தி தனது ஆட்சியை நிலைகொள்ளும் விதமாக முதலில் ஒரு பலி கொடுக்க எண்ணம் கொள்ளும். அப்படி கொடுக்கும் பலி கடவுளை அவமதிப்புள்ளாக்கும் பலியாக இருக்க எண்ணி ஒரு கிருத்துவ தேவாலயகன்னியை தற்கொலை செய்துகொள்ள செய்யும் அந்த சாத்தான்.

பிறகு இறந்த அந்த கன்னிகையின் இரட்டை சகோதரியின் மற்ற ஒருவரான மத்திய புலனாய்வாளர்(FBI agent), இவளது தற்கொலை மரணம் குறித்து நம்ப மறுத்து துப்பு துலக்கும் வேலையில், அந்த பேயோட்டுபவனின் அறிமுகம் கிடைகிறது.

நாயகிக்கோ ஆவி, பேய், சொர்கம், நரகம் இவைகளில் எல்லம் நம்பிக்கையே இல்லாமல் இருக்கையில். அந்த பேயோட்டுபவன் நரகத்தின் அறிமுகத்தை அவளுக்கு காட்ட, அவளும் தன்னை விட்டு பிரிந்த இரட்டையரின் மரணத்திற்கு பிந்திய நிகழ்வுகள் என்ன என்று அறிய அவனின் உதவியை நாடுகிறாள். அவனும் அவள் சொர்கம் சென்றாளா இல்லை நரகத்திற்கு சென்றாளா என்று நரக வாசல் வரை சென்று பார்த்துவந்து அவள் நரகத்திற்கு தான் செல்கிறாள் என்று ஆதாரத்துடன் சொல்ல.

அதே நேரத்தில் நாயகியையும் அள்ளிக்கொண்டு செல்கிறது சாத்தான், நாயகியை காப்பாற்ற எண்ணும் நாயகனை இறை தேவதையே சாத்தானிடம் காட்டிக்கொடுப்பதும். சாத்தானின் அந்த கத்தியை வைத்து நாயகயின் உடலில் குடியேறி உருவம் பெற்ற அந்த சாத்தானை உலகில் வெளி கொண்டு வரும் அந்த தருணத்தை தடுக்க நினைக்கும் நாயகனை நரகத்திற்கு அனுப்ப நினைத்து அவனை கொல்ல. அவனது ஆத்துமாவை கொண்டு செல்ல எமனே வருகிறார்.

அதே வேளையில் இந்த பேயோட்டியின் நல்ல வேலைக்கு பலனாக என்ன வேண்டும் என்ற வரதிற்கு நரகத்தை நோக்கி செல்லும் அந்த இரட்டையரின் சகோதரி சொர்கம் செல்லவேண்டும், அதற்கு பதில் என்னை நரகத்திற்கு எடுத்து செல்லவும் என்று கோரிக்கை வைக்க சரி என்று வழங்க கதை திரும்ப, நாயகி நாயகன் உலகம் என்று கதையின் அத்தனையும் காப்பாற்றபடுகிறது படத்தின் முடிவில்.

இந்த கதையை அப்படியே ஒரு இந்திய திரைபட சாடியில் போட்டு குலுக்கி எடுங்கள், அந்த இந்திய வாசனைகளுடன், இந்திய சுவையுடன் அப்படியே அருந்ததீ வரும்.

ஆங்கிலத்தில் இரட்டையர் சகோதரிகள், இரேச்சல் தான் படத்தின் நாயகி, மயக்கி மயக்கி பேசும் அவரது அழகு.

அருந்ததீயில் இருவர்கள் ஒருவர் முன் பிறவி, பின்னொருவர் மற்றும் ஒரு பிறவி. இரேச்சலின் கண்களை போன்றே இவரின் அனேககாட்சிகளில் கண்களை கொண்டு காட்சிகளை அமைத்து இருக்கிறார் கோடி.

அங்கே நாயகனின் அறிமுகத்தில் ஒரு ஏழை பெண்ணின் பேயோட்டம் , இங்கேயும் ஒரு ஏழையின் பேயோட்டம்.

இரட்டையரில் ஒருவர் தன்னை தானே மாய்த்துகொள்வார் ஆங்கிலத்தில், இங்கே சாத்தானை அழிக்க தன்னையே பலிகொடுக்கிறார் நாயகி.

ஆங்கிலத்தில் நரகத்தை காட்டுகிறார்கள், இங்கே பாழடைந்த கந்தர்வ கோட்டையை அதற்கு பதில் காட்டுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சாத்தானை அழிக்கும் செயலில் நாயகனின் பங்கு தான் பெரும் பங்கு, தவிர அந்த கத்தியை கொண்டு தான் சாத்தான் தனது பிறப்பை நிகழ்த்த நினைகிறது.

இங்கே அதே பேயோட்டும் நாயகன் தான் கடைசியில் கத்தியை கொண்டு வந்து கதையை முடிக்கிறார்.

சும்மா சொல்லக்கூடாது, அருந்ததீயின் நாயகியின் தேர்வும் காட்சிகளும் அருமை அழகாக அசத்தி இருக்கிறார் கோடி.

என்ன, பொதுவாக பெண்களை அவ்வளவு எளிதில் வெற்றிகொள்ள முடியாது என்றாலும், அவளது பலவீனங்களை கொண்டு அவளை மிரட்டி மிரட்டியே காரியங்களை சாத்தித்துகொள்ளும் இயல்பை பேய்கள் முதல் கைகொள்ளுவதாக காட்டுவது தான் சகிக்கவில்லை.

உயிருடன் இருக்கும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களால் எல்லாம் அந்த ஆவியின் அட்டகாசங்களை அடக்கமுடியவில்லை. வெறும் உயிர் மட்டுமாக இருக்கும் அந்த தீயவன் மட்டும் எல்லாம் வல்லவனாக, வண்டியை தூக்கி எறிவதில் இருந்து எல்லாம் வல்லவனாக காட்டுவது அறிவுக்கு புறம்பானவையாக உங்களே தெரியவில்லையா கோடி

படத்தின் பின்னனியில் பெரும்பாலும் அந்த தீயனின் பெருமூச்சு தான் பின்னனி. வேறு எதுவும் அவர்களுக்கு தோன்றாமல் போனது ஏமாற்றமே.

அம்மன் என்ற அருமையான படத்தினை கொடுத்த தெலுங்கு உலகம் இப்படி ஒரு அட்டை பிரதி படம் கொடுத்து இருப்பது பெருத்த ஏமாற்றமே. மேலே சொன்ன ஆங்கில படம் கான்சடைன் படம். ஆங்கிலத்தில் படம் பார்த்தவர்கள் எனது விமர்சனத்தை விமர்சிக்கவும்.

பாசாக சொல்லிக்கொள்வது போல் அதனால் இலங்கை பிரச்சனைக்கு தீர்க்க முடியுமா

ஈழ பிரச்சனையை தமிழக கட்சிகள் எல்லாம் தயங்கி நிற்கும் போது திடீர் என்று யாவரும் எதிர்பார்க்காத விதமாக பாசாகவின் மூத்தவர் அத்துவாணி குமரியில் வைத்து இப்படி ஒரு அறிவிப்பினை வீசி விட்டு சென்றார்.

அன்றைக்கு வரை ஈழம் என்றால் போராளிகளாகவும், போர் என்றால் மக்கள் மடிவது இயல்பு என்று திமிர் உரையை மட்டுமே கொண்டு இருந்து வந்த அதிமுக அன்றைக்கு முதல் தனது தோலில் இருக்கும் துண்டின் நிறத்தை மாற்றி, ஈழத்தவர்களுக்கு சம உரிமை வேண்டும் என்றும் சொன்னதோடு நில்லாது. பிரியாணி உண்ணும் விரத்தத்தை மறுபடியும் ஒரு முறை நிகழ்த்தி காட்டி, அனேக ஈழவர்களது மன உளச்சளை சம்பாதித்து கொண்டது.

பாசாகவால் சொல்லப்படுவது போல் ஈழத்திற்கு ஒரு தீர்வை பாசாகவால் பெற்று தர இயலுமா என்று பார்ப்போம்.

ஈழத்து போராட்டம் நாட்டில் சம உரிமை இல்லை என்றது தவிர வேறு ஒன்றுமே இல்லை என்றது ஈழத்து போராட்டம் பற்றி அதிகம் தெரியாதவருக்கு கூட நன்றாக தெரியும்.

சம உரிமை இல்லை என்று சொன்ன பிறகு, உரிமை இல்லாதோர் இனிமேல் ஏன் என்று நாடுகடத்தலில் ஈடுபட்டது சிங்களம். அப்படி நாடு கடத்த முடியாதவர்களை சித்திரவதைக்குட்படுத்த துவங்கியது.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்தது போல் கொஞ்சம் கொஞ்சமாக மனித உணர்வுகளை இழந்து வந்த சிங்களம் கடைசியில் இப்பொழுது பாதுகாப்பு வளையம் என்ற ஒரு கண்ணியை அமைத்து அதிலே கதியற்ற மக்களை கொண்டு வந்து அணு அணுவாக சித்திரவதை செய்து மகிழ்ச்சி கொள்கிறது அந்த கொடூர சிங்களம்.

இந்த நிலையில் தவிக்கும் ஈழத்தவர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று துடிக்கும் தமிழக மக்களை தன் பக்கம் இழுக்க நினைத்த பாசாக அதன் மூத்த தலைவரை விட்டு எங்களுக்கு வாக்களியுங்கள் தமிழர்களது துன்பங்களை நீக்கி தருகிறோம் என்று அழகாக சொன்னதோடு மட்டும் நில்லாத இது எங்களால் மட்டுமே முடியும் என்று சொன்னார்கள் பாருங்கள் அத்துவாணி.

அடேங்கப்பா என்ன ஒரு கரிசனம் ஈழத்தவர்கள் மீது மட்டும் இல்லை, இந்த மொத்த தமிழ் சமுதாயத்தின் மீது என்று தான் முதலில் மக்களின் மனதில் தோன்றி இருக்கும்.

அது மட்டும் இல்லாது, ஈழத்தை காப்பதற்காக பாசாகவை தேர்ந்தெடுப்பது ஒன்றும் தவறு இல்லை என்ற வகையில் பதிவுகளும் நீண்டு கொண்டே சென்றதையும் பார்க்க நேர்ந்தது

சரி பேராய கட்சியை தூக்கி எறிவது தவிர வேறு வழி இல்லை என்றாகிவிட்டது. இனி மேல் நம்மை விட்டால் வேறு வழி தமிழர்களுக்கு இல்லை என்று ஆகிவிட்டது . ஆகவே இப்படி சொல்லி வைத்தால் நிறைய வாக்குகள் குவிக்கலாம் என்ற எண்ணத்தில் பாசாக அப்படி ஒரு தீர்மானத்திற்கு வந்து தான் இதை சொல்லி இருக்க வேண்டும் போலும்.

சரி பாசாக தான் கதி என்று நாமும் வாக்குகளை அளித்து ஆட்சி கட்டிலில் ஏற்றி விட்டால் என்ன நடக்கும். சென்ற 6 வருடங்களில் எப்படி வாய் மூடி மௌனியாக இருந்ததோ அதை தானே தொடரும். அதை விடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முற்படுமா என்ன?????????

எப்படி அப்படி உறுதியாக சொல்கிறேன் என்று கேளுங்கள்.......

சிங்களத்திற்கும் பாசாகவிற்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கள் பார்க்கலாம். சிங்களத்திற்கு ஒரே இனம் தான் இலங்கையில் இருக்க வேண்டும். பாசாகவிற்கும் ஒரே ஒரு இனம் தான் இந்தியாவில் இருக்க வேண்டும் அது இந்துஇத்தானம் என்று ஆக்கவேண்டும் என்றதே கனவு.

சிங்களம் தடையாக இருக்கும் தமிழர்களை பெண்கள், குழந்தைகள், ஏன் கருவென்றும் பாராமல் அழித்துக்கொண்டு இருக்கிறது.

பாசாகவோ, அதே போல் வேற்று இன மக்களை அதே போல் பெண்கள், குழந்தைகள், கரு என்றும் பாராமல் ரொட்டி சுடும் அடுக்களைகளில் இட்டு ரொட்டி சுடுவதை போல் சுட்டதோடு மட்டும் நில்லாது. இப்படி எல்லம் செய்கிறீர்களே என்றால், சுட்டால் என்ன என்று உலகத்தின் முன் தொலைகாட்சியில் காணிலியை கொடுக்கிறார்கள்.

இப்படி பாசிச சிங்களத்திற்கு அணு அளவும் வித்தியாசம் இல்லா பாசாக சொல்கிறது, ஈழத்தவர்களின் சம உரிமைக்காக போராடுவோம் என்று. எப்படி சொந்த மண்ணின் மைந்தர்களுக்கு சம உரிமை இல்லை என்று சொல்லும் இந்த கட்சி அடுத்த நாட்டில் வாழும் மக்களுக்கு சம உரிமை பெற்று தருவோம் என்று.

இது எப்படி தெரியுமா இருக்கிறது, ஆடு நனையுதேன்னு ஓணாய் ஒன்று உட்கார்ந்து அழுததாம் அது போல இருக்கிறது அத்துவாணியின் பேச்சு. போங்கயா, போய் வேற வேலை ஏதும் இருந்தால் பாருங்கள். போய் தேர், வில், அம்பு, அனுமார் என்று வேறு ஏதாவது கதை இருந்தால் எடுத்து வாருங்கள் ஐயா. அதை விடுத்து இப்படி விகடம் எல்லாம் செய்யாதீங்க, அப்புறம் நாங்க எல்லாம் அழுதுடுவோம், ஆமாம்..........

Monday, March 30, 2009

அடுத்தவரால் மட்டுமே எப்பொழுதும் ஆட்சிக்கு வரும் அதிமுக

தலைப்பை பார்த்ததுமே அதிமுக வியாபாரிகளுக்கு பொங்கிக்கொண்டு தான் வரும். இருந்தாலும் கொள்கையோ அல்லது வேறு எந்த அடிப்படை காரணங்களுக்காகவும் இவர்கள் அந்த கட்சியை சார்ந்து இல்லாததால் இந்த அதிமுக வியாபாரிகள் இந்த மாதிரியான பதிவுகளுக்கோ அல்லது விமர்சனங்களுக்கோ பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்வது இல்லை.

இந்த முறை வாய்ப்புகிடைத்தால் என்ன என்னவற்றை எல்லாம் சுருட்டலாம், அதற்கு தடையாக இருப்பவர்களை எல்லாம் எப்படி எப்படி எல்லாம் கொல்லலாம் என்ற சிந்தையை தவிர அவர்களிடம் வேறு என்ன இருந்துவிட போகிறது.

அதிமுக கட்சியின் தலைவி என்று அறிவித்துக்கொள்ளும் செயலலிதா இந்த தேர்தலை வைத்து தனக்கு எப்படி எல்லாம் விளம்பரம் தேடலாம் என்று இப்போதும் கணக்கு போட்டுக்கொண்டு இருப்பார். அவரது கட்சியின் வியாபார கூட்டமோ என்ன என்ன வீர வசனங்களை எழுதி கொடுத்தால் அவருக்கு பிடிக்கும் என்று கவிஞர்களையும், வசனகர்த்தாக்களையும் தேடி பிடித்து அலைந்து கொண்டிருப்பர்கள்.

இந்த முறை உலகை ஆள தகுதியுள்ள ஒரே ஒருவர் செயலலிதா தான், பொருளாதார சரிவின் மூழ்கியிள்ள உலகை நல்ல நிலைக்கு கொண்டு வர செயலலிதா ஒருவரால் தான் முடியும் என்று, அதிமுக வியாபாரக்கூடம் பரணி பாடினால் ஆச்சரியபடுவதற்கு இல்லை தான்.

எந்த நம்பிக்கையில் அதிமுக இந்த தேர்தலை எதிர்கொள்கிறது என்று பார்ப்போம். சட்டமன்ற தேர்தலில் தோற்று போய் அழுவினியாட்டம் அழுவினியாட்டம் என்று சிறுபிள்ளை தனமாக அழுது தீர்த்து காணாமல் போனவர்கள் இந்த கட்சியினர். அதிலும் அந்த தேர்தலில் திமுகவை திட்டியதை விட விசயகாந்தை தான் அதிகம் திட்டி தீத்தது இந்த கட்சி. காரணம் விசயகாந்தால் தான் தனது வெற்றி வாய்ப்பு எட்டிப்போனது என்ற எண்ணம் அந்த அதிமுக கட்சியினருக்கு.

உண்மையில் அதிமுகவின் நிலை என்ன என்று பார்ப்போம்.

செயலலிதாவின் தலைமைக்கு அதிமுக வந்ததில் இருந்து அந்த கட்சியின் கொள்கைகள் குப்பையில் கொட்டப்பட்டது. அதற்கு முன் அப்படி என்ன கொள்கை இருந்தது என்று நீங்கள் கேட்ப்பது காதில் விழாமல் இல்லை. அதற்கு முன்னால் குறைந்தபட்சம், அந்த கட்சியின் தொண்டர்கள் பிழைக்க என்று ஒரு வழி இருந்தது. அதற்காகவே அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களை வகுத்து கொடுத்து இருந்தார்கள். கட்சியின் சொத்தாக சுமைதூக்குந்து எண்ணிக்கை இல்லாமல் இயங்கி. இயகத்தையும் தொண்டர்களையும் ஒரு பிணைக்குள் வைத்திருந்தது.

அதற்கு பின்னால் நடந்ததை தான் நாடே அறியுமே, தலைமை எனக்கு தான் என்ற பாடலில் துவங்கிய துவக்கம். விளம்பரங்கள் உட்பட எல்லாமே எனக்குத்தான் என்று இன்றைக்கு நிற்பதை பார்கின்றோம்.

எந்த ஒரு தேர்தலுக்கும் எந்த ஒரு உழைப்பையும் செய்யாமல் எதிரி கட்சி பலவீன பட்டு நீற்கும் போது வேறு வழியே இல்லாமல் ஆட்சிக்கு வரும் இவர்கள் அடிக்கும் தம்பட்டம் இருகிறதே அடேங்கப்பா கேளுங்க கேளுங்க கேட்டுக்கொண்டே இருங்கள் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது.

செயலலிதாவின் முதல் ஆட்சி இராசிவ்காந்தியின் படு கொலையால் எழுந்த அனுதாப அலையால் வந்த ஆட்சி.

அடுத்த முறை வந்த ஆட்சி, திமுக என்ன தான் நன்மைகள் செய்தாலும், ஊழல் அற்ற ஆட்சியாக திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் அடிமட்ட தொண்டன் முதல் அமைச்சருக்கு கீழ் உள்ளவர்கள் வரை கொள்ளை அடிக்கமுடியாமல் போனதால். திமுக கண்ட நல்லாட்சியின் மகிமை அவர்களை ஆட்சியில் இருந்து விரட்டியது.

தற்பொழுது ஈழ பிரச்சனையில் தலையிடாமல் மட்டுமில்லாது, ஈழதிற்கு எதிராக நடந்து கொள்வதால் திமுக தனது நிலையை இழக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் அதிமுக எதிராள் பலம் இழக்கும் போதெல்லாம் சுமையை தாங்கும் வெறும் சுமை தாங்கி கல்லாக மட்டுமே இருந்து வந்திருக்கிறது செயலலிதாவின் தலைமையை கொண்ட பிறகு.

இதிலே வேடிக்கை என்ன என்றால், இந்த சுமை தாங்கி கல் கட்சியை என்னமோ மக்கள் பேரியக்கம் என்றும். அதன் தலைமை என்னவோ அரிசுடாடிலும், பிளாட்டோவும் இணைந்து நடத்தும் ஒரு பெரிய தத்துவ இயக்கம் என்றும் அந்த கட்சியின் வியாபாரிகள் சொல்ல முற்படுவது உண்டு. எப்போது தான் திருந்துவார்களோ.........

இந்திலே செயலலிதாவின் பொம்மலாட்ட வித்தகர்கள் இந்த முறை செயலலிதாவை இந்தியாவின் தலைமை அமைச்சராக அமர செய்வோம் என்று சொல்லி, மூன்றாவது அணி, நான்காவது அணி என்று சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்.

அதிலும் குறிப்பாக மத்திய ஆட்சியை கவிழ்தே தீர்வது என்று ஆட்டம் ஆடிய பொதுவுடமை கட்சியினர், திமுக விடம் பட்ட காயத்திற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த அதிமுகவிற்கு குடைபிடிக்க சென்றுள்ளனர்.

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்ற வழக்கிற்கு மாற்று வழக்காக திகழும் இராமதாசு பேச்சு தேர்தல் வந்த போச்சு என்று சொல்லும் அளவிற்கு பெயர்கொண்டவர் இரமதாசு. இந்த முறையும் தனது பச்சோந்தி தணமை அழகாக காட்டியுள்ளார்.

வைகோ இவரை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை, இவரது பேச்சு இவரது செய்கைகளுக்கு ஒத்து போகும் வரையில் இவரை ஒரு கொள்கை பிடிப்பாளாராக தமிழகம் கண்டது. ஆனால் என்றைக்கு உளவு துறையின் இரகசிய அறிக்கைகளை காட்டி அதிமுக இவரை மிரட்டி அவர்கள் பக்கம் இழுத்ததோ அன்றையில் இருந்து, இவரும் பொம்மலாட்ட வித்தகரின் இழுப்புக்கு எல்லாம் இவர் வளைந்து நெளிந்து அபினயம் பிடிப்பதை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

இயக்குனர் சீமான் அவர்களின் பேச்சுக்கு இருக்கும் மதிப்பில் 100 ஒரு பங்கு கூட இவரது பேச்சுக்கு இல்லை என்றது தான் இவரது நிலை இப்பொழுது. பாவம் மனிதர், அப்படி என்ன தான் உளவு துறையின் அறிக்கை இவரை பற்றி சொல்லி இருக்கும். அனேகமாக பயங்கரமாக இருக்கும் என்று நம்புவோமாக.......

இந்த முறையும் அடுத்தவரின் குதிரையில் ஏறி பயணம் செல்ல அதிமுக தயாராக நிற்கிறது. அவர்களுக்கு ஏற்றார்போல், திமுகவும் அதீதித பலவீனப்பட்டு போய் நிற்கிறது. அந்த சுமைக்கல்லில் வெறுமனே உக்கார்ந்து பொழுதை கழிக்கும் வேலை இல்லா வெட்டிபயல்களது கைக்கு தமிழகமும் இந்திய அரசியலும் சிக்க போகிறதே என்ன செய்வோம்.................................இனி 6 ஆண்டு காலம் நமக்கு நரகம் தான்.....................அனுபவிப்போம் வேறு என்ன செய்துவிடமுடியும் சாமானியர்களால்.

Friday, March 27, 2009

கடவுள் இருப்பது உண்மையா மதவாதிகளே பதில் சொல்லுங்கள்.

கடவுளை மனிதனுக்கு காட்டும் மதங்கள் சொல்வது இரண்டே செய்திகள் தான்.

1) கடவுள் உன்னை காப்பாற்றுவார்

2) கடவுள் கெட்டவர்களை தண்டிப்பார் அதனால் நீ நல்லவனாக இரு என்று

இந்த குழந்தைகளை ஏன் கடவுள் காக்கவில்லை
இந்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்


இதயமே இல்லாத இந்த கொலைகாரர்கள் எல்லாம் நன்றாகவே இருக்கிறார்களே.


பதில் சொல்லுங்கள் மதவாதிகளே, அனைவரையும் தான் கேட்கிறேன். யார் யாரே ஆடும் அதிகார வெறிக்கு ஒன்றும் அறியா இந்த பிஞ்சுகளை எரிக்க இந்த மனிதர்களுக்கு எப்படி தான் மனம் வந்ததோ. அவர்களுக்கு எல்லாம் பிள்ளைகள் இல்லையோ அல்லது இதயமே இல்லையோ என்னவோ..............

Saturday, March 21, 2009

இந்து மதமும் கடவுள் நம்பிக்கையும் இந்தியர்களுக்கு கற்றுக்கொடுத்தது இது தான் -- நன்றி தினமலர்

பாலா நான் கடவுளில் வெளுத்து வாங்கியதையும், பணக்கார சேரி நாய் உலகம் முழுவதும் நமது மானத்தை வாங்கியதை எவ்வளவு பெருமையாக தினமலர் அறிவித்துள்ளது பாருங்கள். இந்த நாளிதழ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இந்து மதம், இந்து மதம் என்று புலம்புவது இந்த இழி பண்பாட்டை காப்பாற்ற தானோ. திருந்துங்கோப்பா திருந்துங்கோ, எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்களே நல்லவர்களா, கொஞ்சமேனும் திருந்துங்கோ. இன்றைக்கு வருணுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார்கள், நாளைக்கு உங்களுக்கும் இதே கதிதான் எச்சரிக்கையாக இருக்கவும் அந்த நல்லவர்களிடம்.

Wednesday, March 18, 2009

இந்திய அரசியலில் தமிழகம் கொடுக்கப்போகும் மாற்றம் எப்படி இருக்கும்

தனது சொந்தங்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வருவதை கண்டித்து அவர்களை காப்பாற்றுங்கள் என்று தமிழக மக்கள் பரிவோடு தமிழக அரசையும் இந்திய அரசையும் கேட்ட பொழுது. இரண்டு அரசும் கனிவோடு காப்பாற்றுவோம் என்று உதட்டு சிரிப்புடன் சொல்லிவிட்டு, பின்னாளில் அனைவரும் கொல்லப்பட்ட சேதிக்காக காத்துகிடந்ததை நாம் பார்த்தோம்.

ஈழத்தில் நடப்பதோ சுதந்திர போராட்டம். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் இந்தியாவுக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத சப்பான் நாடு சந்திரபோசுக்கு விமான படையில் பயிற்சியும் அளித்து, தாக்குதல் நடத்த படையையும் கொடுத்து உதவியது அந்த காலத்தில்.

அதை போல் இல்லை என்றாலும் தங்களாலும் தங்களது சொந்தகளாலும் வளர்த்து எடுக்கப்பட்ட போராட்ட இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம்.

தங்களது சொந்த முயற்சியில் வளர்த்து எடுத்த இயக்கம் தனது இக்கட்டான நிலையில், தனது தாயகத்து மக்களை மட்டுமாவது காப்பாற்றுங்கள் என்று தூதுவிட்டும். பாரா முகமாக மட்டும் இல்லாமல், சீரரை தானும் சேர்ந்து கத்தியால் குத்தியதை பார்த்த நொடியில் நீயுமா புரூட்டசு என்று அந்த துரோகத்தை தாங்காமல் பிரிந்த அந்த சீசரின் நிலைக்கு அல்லவா இந்த இரண்டு அரசுகளும் நடந்துகொண்டு வருகிறது.

தமிழகத்து மக்களின் மனதில் இருக்கும் ஒரே கேள்வி இது தான். இன்றைக்கு வெளி நாட்டில் இருக்கும் நமது சொந்தங்களை கைவிட்டது தமிழக அரசும் இந்திய அரசும். இதை முன்னுதாரனமாக கொண்டு அடுத்த மாநிலத்தில் இருக்கும் நமது சொந்தங்களை அடுத்த கட்டமாக பலியிடும். பிறகு சொந்த மண்ணிலே கூட தடி எடுத்தவன் தண்டல்காரன் என்று கொல்ல வரும் போதும் இந்த அரசுகள் இப்படி தானே வேடிக்கை பார்க்கும்.????????? என்ற கேள்வி தான் இப்போது அனைவரது மனதிலும் இருக்கு.

அடுத்தவனை காப்பாற்று என்று சொல்லப்போய் இப்போது தனக்கே பதுகாப்பு இல்லை என்ற நிலையில் தான் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று இந்தியாவும் தமிழகமும் முடிவு செய்துள்ளது அறிவித்தும் வருகிறது.

நாட்டுபற்று அடுத்த நாட்டின் ஆட்சியில் தலையீடு இப்படி எத்தணை பசப்பு வார்த்தைகளை சொன்னாலும். திரைக்கு மறைவில் அந்த அப்பாவி மக்களை கொன்று குவிக்க இன்னமும் இரகம் இரகமாக ஆயுதங்களையும், அவர்களது மறைவிடங்களை செயர்கைகோள் படமும் உளவு விமான படங்களும் கொடுத்து. அப்படியும் அந்த மறமண்டைகளுக்கு செயலாற்ற தெரியவில்லை என்றது, இந்திய தேசிய படையின் கட்டளை அதிகாரிகளை கொண்டே இந்தியர்களின் சொந்தங்களை கொன்று குவிக்கும் இந்த இந்திய அரசை என்ன என்று சொல்வது.

ஒரு 300 பயணிகளை விமானத்தில் கடத்திவைத்துக்கொண்டு 250 கோடி பணமும் தீவிரவாதிகளையும் கேட்ட அமைப்புக்கு அயலுறவு அமைச்சர் தனி விமானத்தி சென்று கேட்டப்படி பணமும் கைதிகளைம் கொடுத்து மீட்டு வரவில்லை. அவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை அதனால் தானோ.

காசுமீரத்தின் மனிதர் மைய அரசிலே அங்கம் வகித்த முக்தி முகமதின் மகளை தீவிரவாதிகள் கடத்திக்கொண்டு போனபோது அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுத்த மீட்டு வரவில்லை.

நமக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் இருந்த வங்காளிகளை காப்பாற்ற படை எடுத்து அந்த நாட்டை பாக்கிட்த்தானத்திடம் இருந்து விடுதலை பெற்றுக்கொடுக்கவில்லை.

இன்னமும் எந்தணையோ செய்கைகளில் தமிழார்கள் அல்லாத மற்ற மாநிலத்து மக்களை மட்டும் இந்தியர்களாகவும் மனிதர்களாவும் இந்தியா நினைப்பது ஏன்.

தமிழகத்தில் ஒரு பொது முன்னேற்ற வேலை நடந்தால் அதை உத்திரபிரதேச மக்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கும் தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம். ஆனால் நீதிமன்றங்கள் அந்த உத்திரபிரதேச மக்கள் சொல்வதைகான் எடுத்துக்கொள்கிறது. தமிழகத்தையோ அல்லது அந்த மாநில மக்களையோ கணக்கில் கொள்ளவில்லை.

இந்தியாவின் உதவியை நாடிய பக்கத்து தேசம் காசுமீரம், அப்படி எங்களை காப்பாற்றுங்கள் என்று கேட்ட ஒரே காரணத்திர்க்காக எதிர்களிடம் இருந்து அந்த மக்களை மீட்டு சுந்தந்திரமாக வாழவைத்து ஐ நாவையும் இன்னமும் என்ன என்ன பணக்கார நாடுகள் எல்லாம் இருக்கிறதோ அத்தணை நாடுகளையும் கூட்டி வந்து அங்கே மக்களாட்சி வளர்ந்து மரமாகி இருப்பதை படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று இந்தியா சொல்லவில்லை.

நல்லவேளை காசுமீரத்து மக்கள் வடக்கில் இருந்தார்கள் அதனால் காப்பாற்ற பட்டார்கள். இதுவே தமிழகத்தை சார்ந்த ஒரு பகுதியாக இருந்தால் அவ்வளவு தான். அதுவும் மேல் தோல் கொஞ்சம் கருப்பாகவும். செல்வம் இல்லாமல் அன்றாடம் காட்சிகளாக இருந்து இருந்தால். அதுவும் தமிழ் போசும் ஒரு அண்டை நாடாக இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும். வேறு என்ன ஈழத்தில் என்ன நடக்கின்றதோ அதே தான் நடந்து கொண்டு இருக்கும்.

இப்படி தமிழர்களையும் நமது மாநிலத்தையும் புழுதிக்காற்றைவிட கேவலமாக நடத்தும் இந்திய அரசியல் அமைப்பின் பால் இன்னமும் நமக்கு நம்பிக்கை இருக்கிறதா என்ன.

தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்களும் தங்களது விருபங்களை தெரிவித்த பிறகும் அதில் எல்லாம் எங்களுக்கு அக்கறை இல்லை. எங்களுக்கு என்ன மனதில் தோன்றுகிறதோ அதை தான் செய்வோம் என்று நடந்து காட்டும் அரசியல் வாதிகளையும் இந்திய மற்றும் தமிழக அரசுகளை எப்படி தண்டிப்பது???????

நம்மால் என்ன முடியும், நாம் என்ன சொன்னாலும் அவன் செய்வது தான் செய்வான் என்று இருந்துவிடுவோமா.

அல்லது அவர்களுக்கு தக்கபதிலடி கொடுப்பதா என்று நாம் சிந்தித்து பார்க்கும் வேளை இது.

நேற்று என்னடா என்று கேட்டவர்கள் நாளை ஐயா என்று கையேந்தி வரும் நாள் வருகிறது. அந்த கூத்தில், நான் தான் தமிழர்களின் தலைவன், நான் தான் தமிழர்களின் தாய், நான் தான் இந்தியாவின் தாய் என்று பசு தோல் போர்திய ஓணாய்கள் வரும். வார்த்தைகளில் தேனும் சர்க்கரையும் தடவி இனிக்க இனிக்க சிரிக்க சிரிக்க பேசும்.

இப்போது பதவியில் இருப்பவர்கள் நாடாளு மன்ற தேர்தலில் மத்தியிலும் மா நிலத்திலும் ஒரே கட்சி இருந்தால் தான் நம்மால் அதிக பலன்களை அடையமுடியும் என்று சொன்னது தனது கட்சியை சொன்னார்கள் என்று இன்று தெளிவாக தெரிந்துவிட்டது.

வேலூர் சிறையில் கொலைகைதிகளை இரகசியமாக சந்தித்து ஈழத்துமக்களை அழிக்க திட்டம் தீட்டிவிட்டு அப்பாவியாக அல்லவா நாடகம் ஆடினார் மைய ஆட்சியின் தலைவி. அன்றைக்கு தூக்கு வேண்டாம் என்று சொன்னதற்கு கைமாறாக அவர்கள் தமிழர்களை காட்டிக்கொடுத்தார்கள் போலும் அந்த கையால் ஆகா கைதிகள்.

இந்த இருவரையுமாவது நம்பலாம், ஏன் என்றால் இவர்கள் எப்போது துரோகம் மட்டுமே செய்வார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரியும்.

இவர்களை விட மிகவும் கீழ்த்தரமான ஒருவர் இருக்கிறார் இங்கே. அவர் நேற்றைக்கு வரையில் ஈழத்தில் செத்துமடியும் சிசுவை பார்த்து சொன்னார், போராட்டகளத்தில் ஏது ஒப்பாரி என்று. அதுவும், ஈழத்து மக்களில் தமிழர்கள் என்று ஒருவரும் இல்லை. அந்த சிசுக்கள் உட்பட எல்லோரும் சீருடை அணியாத போராளிகள் என்றும் அதனால் அவர்கள் இறப்பதில் ஒன்றும் பாவமோ பரிதாபமோ இல்லை என்று ஆங்கிலத்திலும் தத்துபித்து தமிழிலும் சொல்லி வந்தார்கள்.

இந்த கீழ்த்தரமான் செயல்களை பார்த்துகொண்டு இருந்த இந்தியாவின் பாசிச கட்சி தனது ஓணாய் முகத்தை தமிழகத்திலே அவிழ்த்துவிட்டது. எப்படி தெரியுமா தங்களால் தான் இந்த சோகத்திற்கு முடிவு கட்டமுடியும் என்று.

இந்த பாசிச கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களில் எல்லாம் இன சுத்திகரிப்பை மெல்ல மெல்ல சிறுபான்மையினர் மேல் ஆரம்பித்து நடத்திவரும் இந்த கட்சி சொல்கிறது அங்கே பாசிசம் நடக்கிறது அதை எங்களால் தான் தடுக்க முடியும். எங்களை மைய ஆட்சியில் அமர்த்துங்கள் என்று எந்த வெட்க்கமும் இல்லாமல் வந்து கேட்கிறது.

மைய ஆட்சியில் இருக்கும் அரசுக்கும் மா நில ஆட்சியில் இருக்கும் ஆட்சிக்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளார்கள் என்று தெரிந்து கொண்ட இந்த பாசிச ஓணாய் கட்சி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள திட்டம் தீட்டி முகத்திலே சாதுவின் வேடம் தரித்து வந்து நாடகம் நடித்துகாட்டியதை பார்த்த இந்த அம்மையாருக்கு ஒரே கோபம்.

தனக்கு நடிக்கவே தெரியவில்லை என்றாலும் இன்றைக்கும் எல்லோராலும் அன்பாக முன்னாள் நடிகை என்று சொன்னால் வெட்க்கப்பட்டு கொள்ளும் அவர், தன்முன்னே இன்னொருவர் அதுவும் பாசிச ஓணாய் அழகாய் நடிப்பதை பார்த்த அவரால் பொருத்துகொள்ள முடியாமல். ஒரு நல்ல நாள் பார்த்து, ஈழத்தவர்களுக்கு சம உரிமை கொடுக்கவேண்டும் என்று சொல்கிறார்.

இந்தியாவில் சம உரிமை இல்லாமல் இருக்கும் நிலையில் பாசிச கட்சி ஆட்சி புரியும் மா நிலத்தில் கொத்து கொத்தாக மக்கள், சிசு என்றும் பாராமல் கொல்லப்பட்ட போது. கொன்று குவித்தது தான் சரி என்று சொன்ன இவர். திடீர் என்று அடுத்தவன் ஓட்டி வந்த குதிரையி ஏறி பயணிக்கலானார்.

உடனே ஒரு கூட்டம் ஆகா என்ன அருமை, தமிழகத்தை காக்க வந்த வீராங்கனையே, வருடம் முழுவதும் ஓவெடுக்கும் ஓய்வு தெய்வமே என்று பட்டி தொட்டி எல்லாம் தட்டி கட்டி அலட்டிக்கொள்கிறார்கள் அந்த கட்சியினரும். இன்னும் சிலரும்.

ஆக மொத்தத்தில் தமிழர்களின் உணர்வுகளில் இவர்களுக்கு எந்தவிதமான அக்கரையும் இல்லை அதை இப்படி எத்தனை விதத்தில் தான் இவர்கள் நிரூபித்து காண்பித்தாலும் மீண்டும் தேர்தல் ஓட்டு என்று வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

என்ன செய்யலாம்..............

இரண்டு காரியங்கள் நம்மால் முடியும். ஒன்று இந்த அரசியல் சாக்கடையில் ஊரிய ஊழல் பெருச்சாளிகளுக்கு வாக்கே அளிக்காமல் இருந்து விடலாம். இது மிகவும் ஒரு பாதகமான எதிவினையை தோற்றுவிக்கும். காரணம் மக்கள் இப்படி செய்வார்கள் என்று தெரிந்தால் ஆயிரக்கணக்கில் கள்ள ஓட்டுக்களை கொண்டு அவர்களாகவே ஓட்டுப்போட்டுக் கொண்டு வென்று விடுவார்கள்.

இரண்டாவதாக, அனைத்து நாடாளு மன்ற தொகுதியிலும் பொதுமக்கள் யாராவது நிற்கவைத்து அவர்களை எல்லா தொகுதியிலும் வெற்றிபெற செய்து. நாட்டின் தலைமை அமைச்சர் தேர்வு நடக்கும் போது ஒட்டு மொத்தமாக அனைவரும் 40 தொகுதிகளிலும் தனக்கு இந்த நாடாளு மன்ற உறுப்பினர் பதவிவை விட்டு ஈழப்பிரச்சனையின் காரணமாக விலகுகிறேன் என்று விலகினால் அனைத்து கட்சிகளுக்கும் சவுக்கடி கொடுத்தது போல் அமையும். இந்த ஒரு முறை அல்ல ஈழத்து பிரச்சணை தீரும் வரையிலும் நாடாளுமன்ற தேர்தல் ஆனாலும் சரி சட்டமன்ற தேர்தல் ஆனாலும் சரி இப்படி தேர்தலை அரசே வேண்டாம் என்று நிறுத்தும் வரையில் செய்ய வேண்டும்.

பிறகு பார்ப்போம் இந்திய அரசு என்ன பாடு படுகிறது என்று............செய்வோமா நண்பர்களே வாருங்கள் இந்திய அரசியல் சூழலில் ஒரு சூராவளியை உருவாக்குவோம்.

Wednesday, March 4, 2009

கோழைதனமான செயல்: சொல்கிறார் இராசபட்ச

நல்லெண்ண தூதர்களாக சென்ற இலங்கை வீரர்கள் மீதான இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வருத்ததிற்குரியது என்று அறிவித்துள்ளார்.

எப்படி பாதுகாப்பு வளையம் என்று அனைதுலக மக்களை நம்பவைத்து, அப்பாவி மக்களையும் நம்பவைத்து. அங்கே வந்த நல்லெண்ண மக்களை எப்படி கோழைத்தனமாக கொன்றாரோ அதே போல் இந்த முயற்சி நடந்து இருக்கிறது என்று திருடன் அகப்பட்டதாக நினைத்து உளரிவிட்டார் போலும். நமக்கு மட்டுமே தெரிந்த அந்த நம்பவைத்து கழுத்தறுக்கும் தந்திரம் பாக்கிட்த்தானமும் கற்றுக்கொண்டது என்றா ஆத்திரத்தில் கூறி இருப்பார் போலும்.

தங்கள் வீட்டு பிள்ளைகளும் மக்களும் மட்டும் நித்தமும் மகிழ்ந்து வாழ்க்கையில் அவர்களுக்கு தகுதியே இல்லாத வாழ்க்கை எல்லாம் வாழ்ந்து பார்க்கவேண்டும். அதற்கு உழைக்கும் பாட்டாளிகள் நாடோடிகளாக ஆக்கப்படவேண்டும். இப்படி பாட்டாளியின் உழைப்பை திருடி திண்று வாழ்வதற்கு பதில் வேறு ஒரு வாழ்க்கை வாழலாம். அது கின்ஞித்தேனும் கௌரவமாக இருந்திருக்கும்.

ஏன் உங்களின் வீரர்களை பாதுகாப்புகளை எல்லாம் களைந்துவிட்டு அந்த தாக்குதல் நடத்தியவர்களிடம் சென்று சமாதானம் பேச சொல்லவேண்டியது தானே, ஏன் உடனே தனி விமானத்தில் அழைத்துவந்தீர்கள். அறிவுறையும் மற்றவைகளும் மற்றவர்களுத்தான் போலும் இவருகு இல்லை போல்.

இந்த நிலையில் நீங்களும் உங்களது உறவினர்களும் உள்ளாகும் நாள் தூரத்தில் இல்லை. அந்த நாட்க்களில் எப்படி தைரியமாக எந்த ஒரு பாதுகாப்பும் ஆயுதமும் இல்லாமல் சென்று சமாதானம் பேசுகிறீர்கள் என்று பார்க்கின்றோம்.

நீ எல்லாம் ஒரு மனிதனா இராசபட்ச...............................

விடுதலை புலிகளும் அதன் தலைவரும் நம்பிக்கைக்கு உகந்தவர்களா??

திருடனுக்கு தேள் கொட்டியதை போல் இலங்கை விழி எல்லாம் வெளியில் தள்ளி, வையை இருக்கையால் அழுத்தி அழுகையை அடக்கி மனதுக்குள் அழுது நிற்கின்றது.

இலங்கையின் துடுப்பாட்ட விளையாட்டு குழுவின் மீது நடந்த கொலை வெறித்தாக்குதல், இலங்கை மக்களின் மனதில் அச்சத்தை கொடுத்து இருக்கும். இனி என்ன எல்லாம் நடக்குமோ என்று ஆழ்ந்த கவலையில் இருப்பார்கள்.

தாக்குதல் நடந்த சில மணி துளிக்களுக்கு எல்லாம் தனி விமானத்தில் வீரார்களை நாட்டுக்கு கொண்டுவந்து விடவேண்டும் என்று முடிவு தெரிவித்ததில் இருந்து இலங்கை எவ்வளவு பயந்து போய் இருக்கிறது என்று தெரிகின்றது.

திருடனுக்கு திருடன் துணை என்றது போல், பயங்கரவாதமே நாட்டின் முதலான தொழில் என்று இருக்கும் பாக்கிட்த்தானம். 50 ஆண்டு காலமாக தங்களது சோம்பேறி தனமான வாழ்க்கைக்கு அடுத்தவனின் வாழ்வை சுரண்டி தான் வாழ்வேண், அதற்காக எத்தணை கொலைகள் வேண்டுமானாலும் செய்வோம் என்று சாதி வெறி பிடித்து அலையும் அல்லகை இலங்கையும் நண்பர்களாம்.

இரண்டு அரசுக்குமே பொதுவாக இருக்கும் ஒற்றுமை, அரச அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவெறியை நாட்டில் தூவி அது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் குளிர்காய்வது. இந்த இழி நிலையை உலக நாடுகளுக்கு தங்களது பார்வை பொருட்களாக ஆக்கி பணக்கார நாடுகளிடம் பிச்சை எடுப்பதும் இவர்களது பொதுவான செயல்கள்.

அப்படி கிடைக்கும் பிச்சையில் அரச மனிதர்கள் சொகுசான வாழ்க்கையை மேற்கொள்வதும், சாமானியர்கள் வாழாவே சவதும் கூட இரண்டு நாடுகளுக்கும் பொருந்தும்.

இந்த இரண்டு திருட்டு பிச்சைகார நாடுகளும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியது. அது பாக்கிட்த்தானத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க வருமானத்தை பெற்றுக்கொள்ள என்ன எல்லாம் செய்யலாம் என்று கணக்கு போட்டு வைத்ததில் துடுப்பாடம் கடந்த வருடங்களில் சரியான அதள பாதாளத்தில் விழிந்துள்ளது.

உலககிண்ண போட்டியின் முடிவில் பயிற்சியாளர் கொல்லப்படதை இந்த திருட்டு நாடு மூடிமறைக்கவே படாத பாடாக பட்டது. அந்த நிகழ்வு முதல் கடைசியாக நடந்த பெனசீர் படுகொலை வரை பாக்கிட்த்தானத்தில் திருட்டுக்கூட்டம் கட்டுக்குள் நாடு சென்று விட்டது என்று தெளிவாக தெரிந்ததே.

அதுவும் அமெரிக்க ஆட்சி அதிகாரம் மாறியதில் பெருளாதார உதவிகள் இனிமேல் இல்லை என்று அமெரிக்க அரசு வெளிப்படையாகவே சொல்லியும் வந்துள்ள நிலையில். அந்த இழி நிலைக்கு இந்தியாவின் அயலுறவு துறையின் முயற்சி எடுத்தது தான் என்று அறிந்த பாக்கிட்த்தானம். தனது திருட்டு கூட்டத்தை விட்டு மும்பையில் தாக்குதல்களை தொடுத்தது.

அந்த சீண்டலின் பெயரால் இந்தியா படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அப்படி வரும்கால் ஒரு பெரிய போரை துவக்கி அதிலே நீண்ட காலம் குளிர்காயலாம் என்று பகல்கனவு கண்டது. அந்த செயலில் காயமுற்ற இந்தியாவோ, பாக்கிட்த்தானத்தின் வயிற்றில் அடிக்கும் விதமாக பொருளாதாரத்தில் அடிவிழும் விதமாக துடுப்பாடம் உங்களோடி இனி இல்லை என்று சொன்னதோடு மட்டும் இல்லாது. உங்களது நாட்டில் நாங்கள் வந்தால் பாதுகாப்பு இருக்காது என்றும் அழுத்தம் திருத்தமாக சொன்னது.

முடிவு பாக்கிட்த்தானத்தில் சென்று விளையாட அனைத்து நாடுகளும் மறுக்க துவங்கியது. அந்த நிலையில் தான் இந்தியாவில் நடக்கும் துடுப்பாட்ட போட்டிகள் நடக்கும் இடங்களில் தாக்குதல் நடக்கும் என்று பின் இலேடனை கொண்டு அறிவிக்க செய்து பார்த்தது.இந்தியாவிலும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது என்ற செய்தியை பரப்பி மீதம் இருக்கும் போட்டிகளை இடை நிறுத்தி வெற்றிகாண நினைத்த அந்த திருட்டு கூட்டத்திற்கு தமிழ் தக்க பதிலடி கொடுத்தது.

தமிழகத்தில் இந்தி மட்டுமே பேசும் கூட்டம் வந்தாலும் சரி, அலைந்தாலும் சரி அகப்படுவது மிகவும் சாதாரணம். ஆகையால் தமிழகத்திற்கு மீதம் இருந்த போட்டிகளை மாற்றி போட்டிகளை செவ்வனே நடத்தி பாக்கிட்த்தானத்தின் முகத்தில் கரியை பூசி சிரித்தது இந்தியா.

இந்த இழி நிலையில் இருந்த பாக்கிட்த்தானம், எப்படியாவது ஒரு போட்டியை நடத்தி உலக நாடுகளை அழைத்து ஒரு போட்டி நடத்தி மறுபடியும் சூதாட்டங்களை நடத்தி பணம் செய்யவேண்டும் என்ற கனவில். இலங்கையை தான் போடும் பிச்சை ஆயுதங்களுக்கு கைமாறாக உங்களது அணியை அனுப்பி விளையாட சொல்லவும் என்று மிரட்டியது.

தனக்கு கிடைக்கும் பிச்சை நின்றுவிடுமே என்று நினைத்த இலங்கையோ தனது வீரர்களை அனுப்பு போட்டியும் நடந்துகொண்டு இருக்க. இன்று 03/03/2009 திடீர் என்று ஒரு எரிகணை தாக்குதலை வீரர்கள் மீது நடத்தி தனது கொலைவெறிக்கு தீனி போட்டுக்கொண்டது பாக்கிட்த்தானம்.

இந்த தாக்குதலில் பாக்கிட்த்தானத்திற்கு சம்பந்தம் இல்லை, வெளி நாட்டவர்கள் தான் செய்தார்கள் என்று பாக்கிட்த்தானம் சொல்லும். அதோடு நிற்காமல் நாங்களும் பயங்கரவாதத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்ட நாடுதான் என்று அமெரிக்க தொலைக்காட்சிகளில் பாக்கிட்த்தானத்தின் அயலுறவு அமைச்சர் அறிக்கைவிடுவார்.

இந்த திருடர்கள் இப்படி தான் காலம் காலமாக செய்துவருகிறார்கள் சரி. ஆனால் அந்த திருடர்களுடன் கூட்டு திருடில் சேர்ந்து இருக்கும் இந்த இலங்கை திருட்டு கூட்டம் என்ன செய்ய போகிறது.

சமாதானதிற்கான போர் என்று பாக்கிட்தானத்தின் மீது படையை எடுக்குமா. அல்லது தங்களது வீரர்களே ஒரு ஆளை தயார் செய்த்து இப்படி செய்துகொண்டார்கள் என்று சொல்லப்போகின்றது. அல்லது நாங்கள் எல்லாம் அல்லக்கைகள் எங்களுக்கு அந்த மானம் வெட்க்கம் எல்லாம் இல்லை. அதனால் பிச்சைக்காக நாங்கள் எதை பேசவேமாட்டோம் என்று அமைதியாக இருக்கப்போகின்றதா என்று பார்ப்போம்.

இறுதியாக, போர் நடக்கும் இலங்கைக்கு இந்திய வீரர்கள் வந்தார்களே என்று இலங்கை மார்தட்ட வேண்டாம். இந்தியாவுக்கு உங்களின் மேல் உள்ள நம்பிக்கையில் அங்கு வரவில்லை. அவர்களுக்கு உங்களின் மேல் உள்ள நம்பிக்கையை விட புலித்தலைவர் திரு பிரபாகரன் அவர்கள் மீது உள்ள நம்பிக்கையினால்.

நாய்விற்ற காசு குறைக்காது தான், ஆனால் தன்வினை தன்னை சுடும். இது தமிழ் உலக்குக்கு சொன்ன மொழி. இன்னமும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அய்யோ பாவம் அந்த விளையாட்டு வீரர்கள். இந்த திருட்டு பிச்சைகார கூட்டத்தின் தேனொழுகும் பேச்சை கேட்டு உயிரை கொடுக்க நினைத்தார்களே பாவம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Tuesday, March 3, 2009

இந்தியாவின் மணிமகுடத்தில் இன்னும் ஒரு மணியை பதித்த இரகுமான் - வாழ்த்துக்கள்.


ஆச்சுகர்(Oscar) விருது, திரைத்துறையின் கனவு அது. இந்திய திரைதுறையில் இந்தியர்கள் அதிம சாத்திக்காத விடயம் இது. இந்திய திரைதுறையில் இந்தியர்கள் அதிம் சாத்திக்காத விடயம் இது. யாரேனும் ஒருவர் பெறுவாரா என்று இந்தியவே தவம் இருந்த காலம் போய், வாய்புகள் கொடுங்கள் சாதித்துகாட்டுவோம் என்று உலகுக்கு அறிவித்த மனிதன் இவர்.

தனது முதல் படத்திலேயே நாடளவில் சாதித்துகாட்டிய இவர், தனது அனைத்துலக அளவில் கிடைத்த முதல் வாய்ப்பினையும் அழகாக சாதித்து காண்பித்துள்ளார் இவர்.


ஒன்று அல்ல இரண்டு விருதுகளை அள்ளிவந்து இந்திய அன்னையின் மணிமகுடத்தில் பதித்து அழகு பார்த்து நிற்கிறார் இந்த இசைப்புயல்.

விருது வழங்கும் விழாவின் துவக்கத்தில் காட்டும் சிவப்பு கம்பள வரவேற்பில் இரகுமானை காணவில்லை. மற்றவர்கள் அனைவரையும் காணும் போது இவரை மட்டும் காணோமே ஏன் என்று மனதுக்குள் தோன்றாமல் இல்லை.

இருந்தாலும் இவருக்கு விருது கட்டாயம் கிடக்கும் என்று அனைவரும் நம்பத்தான் செய்தோம். இருந்தாலும் அந்த அறிவிப்பு வரும் வரையில், தொலைகாட்சியையும் கூடவே இணையத்தையும் ஆராய்ந்த வண்ணமாகத்தான் அன்று பொழுதுகழிந்தது. அனேகமாக அனைவரும் இப்படி தான் இருந்து இருப்பார்கள்.


இந்த படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருந்த சமயம் படம் எப்படி தான் வந்து இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் நோக்கில் படம் பார்க்க சென்றோம். படத்தில் மிகப்பெரிய ஏமாற்றம்.காரணம் இந்தியர்களான நம் அனைவருக்கும் தெரிந்த கதைகளம் அது. ஏழ்மையும் வருமையும் மாறி மாறி இந்தியர்களை கொன்று கொண்டு இருக்கும் ஒரு கதையமைப்பு அது.


இந்த கதை அமைப்பில் படங்களை எடுத்தால், வங்காள நாயகன் சத்ய சித்துரே அவர்களது படங்களில் இருந்து கருத்தம்மா படம் வரையில்லும். இந்த தலைமுறையின் படமான காதல் கொண்டேன் படம் வரையில் பார்த்த ஒரு கதையமைப்பு தான்.

இந்த செய்திகளை இப்படி அனைத்துலக பார்வையாளர்களுக்கு காட்சியாக்கிவிட்டார்களே என்ற கோபமும் முதலில் இருந்தது.

கோபத்துக்கு காரணம், படத்தின் இலக்கணம் கதையின் களத்தை முதலில் பார்வையாளர்களது மனதில் பதியவைத்து பிறகு கதையை நகர்த்த வேண்டும். அந்த இலக்கணத்தின் படி கதையின் துவக்கத்தில் களத்து காட்சிகளை காட்டுகிறேன் என்று காட்டும் காட்சிகளின் கொடூரங்கள் பார்ப்பவர்களை கட்டாயம் முகம் சுளிக்கவைக்கின்றது.


இது படம் பார்த்த அனேகர்களின் கருத்துமாகும், நண்பர்கள் அனைவரையும் விசாரித்ததில் பொதுவாகவும் இயல்பாகவும் வந்த ஒரு செய்தி அது.

படத்தின் துவக்கத்தின் முதல் காட்சியில் அந்த சிறுவன் பந்தை பிடிக்க முற்படும் வேளையில் எதிர்பாராத விதமாக அன்னேரன் ஒரு விமானம் அவனை கடக்கும் ஓசையில் பந்தை பிடிக்காமல் விடுவான். அந்த இடத்தில் தொடங்கும் இந்த இசையின் ஆதிக்கம். அனேகமாக படம் துவங்கி ஒரு 10 வினாடிகள் இருக்கும் அப்போது.


பின்னர் காட்சிக்கு காட்சி பின்னனி பின்னல்கள் பின்னுவதில் நாம் கதையோடு கரைந்து போவோம், அந்த அளவிற்கு இருக்கும் இசை.

இந்த பின்னனி இசை வருவதே பிறகு கதையில் மாயாவின் பாடல்கள் வரும் போது தான் பின்னனி இசை படத்தில் வருகிறது என்ற ஒரு தோற்றமே நமக்கு தெரியும். அந்த அளவிற்கு இயல்பான ஒரு இசையை இரகுமான் வெகு இயல்பாக சேர்த்து இருப்பார்.


இப்படியே காட்சிக்கு காட்சி திரைக்கதையும் சரி, மற்ற தொழில் நுட்பங்களும் சரி பார்வையாளர்களை முற்று முதலாக ஆக்ரமித்து இருக்கும் வேளையில். வளர்ந்த அந்த கதா பாத்திரங்களை நமக்கு காட்டுவார்கள் படத்தில்.
அதுவும் நாயகயின் தேர்வு அந்த படத்தில் அருமை, வருமையில் தோன்றி பிறகு வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கும் பாத்திரமாக காட்டும் அந்த பெண்ணின் உருவமும். அந்த உருவத்தை தொடர்வண்டி நிலையத்தின் பாலத்தின் மேல் இருந்து காட்டும் காட்சியும் அதன் பின்னனியும் சரி. அவள் வந்ததும் கதையில் இறுக்கம் பற்றிக்கொள்வதும் சரி. எந்த ஒரு காட்சியிலும் சரி தொழி நுட்ப்பம் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு பார்வையாளர்களை மிரட்டியது என்றால். அது மிகையாகாது.


இதிலே நடக்கும் நிகழ்வுகளில் நாயகன் தப்பிப்பானா, நாயகிக்கு என்ன ஆனது என்று பார்வையாளர்களை விளிப்பிக்கே கொண்டு வந்ததின் உச்சத்தில் நிறுந்தி இருப்பார் இயக்குனர் அந்த படத்தில்.

அந்த இறுதிகாட்சியில் கடைசி கேள்வியை கேட்டதும் நாயகன் ஒரு புன்னகிப்பான். அந்த புன்னகை ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்தி ஏற்படுத்தும்.


படத்தில் ஓட்டத்தின் மற்ற விடயங்களை இங்கே தவிற்பது மதி என்று நிறுத்திவைக்கிறேன்.

படம் துவக்கத்தில் இருந்து நமக்கு தெரியாமல் நம்மை ஆட்கொண்டவர்கள் நால்வர்.1) திரைக்கதை
2) ஒளிப்பதிவு
3) இயக்கம்
4) இசைபடம் துவங்கிய கொஞ்ச நேரத்திற்கெல்லாம். பார்வையாளர்கள் இருக்கையிலேயே கட்டி போட்டதை போல் பார்த்துகொண்டு இருப்பதை உணர முடிந்தது. என்ன ஒரு வசீகரம் இந்த 4 துறைகளிலும்.

கடைசிகாட்சியில் அந்த நாயகனின் முத்தம் பெற்றவுடம் காட்சிகள் ஒரே ஒருமுறை பின்னோக்கு செல்லும். அதன் பிறகு படம் முடியும். அந்த தழும்பில் துவங்கிய காட்சி, தழும்பில்லா அந்த நிலைக்கு ஒரு முறை பயனித்து திரும்பும். என்ன ஒரு பின்னனி இசை காட்சிக்கோர்வைகள். சில வினாடிகள் தான். அந்த கதாப்பாத்திரம் அடைந்த நிம்மதி படம் பார்த்தவர்கள் அனைவரது மனதிலும். அந்த அழகு கண்கள் கொள்ளும் அமைதியை காட்டுவார்கள் படத்தின் இறுதியில்.


இந்த காட்சிகள் வரையில் பார்த்தது, பார்த்து பார்த்து பழகிய ஏழ்மை என்றாலும். அந்த கதாபாத்திரங்கள் மேல் நம்மையும் அறியாமல் ஒரு கருணை மனதில் தோன்றாமல் இல்லை. கதை தான் என்றாலும் படத்தில் வரும் காட்சிகளின் கொடூரங்கள் மனதை விட்டு அகல. சில நாட்க்கள் பிடித்தது தான்.


படம் முடிந்ததும் எழுந்து செல்லாம் என்று எழுந்தால், எங்களை தவிர பிறகு ஒருவரும் எழவில்லை. பிறகு தான் சொன்னார்கள். படத்தில் இப்போது வரும் பாடல் தான் இரகுமானின் ஆச்சுகருக்கான பாடல் என்று. கடைசி வரையில் இருந்து பார்த்துவிட்டுத்தான் வந்தோம்.


படம் முடிந்தவுடன், விருது கிடைக்குமா கிடைக்காதா என்ற விவாதம் எங்களுக்குள் எழ. பின்னனி இசைக்கும், திரைகதைக்கும், ஒளிப்பதிவுக்கும், இயக்கத்துக்கும் கிடைக்கலாம் என்று எனது கருத்துகளை சொன்னேன்.


மேலும் மாயாவின் பாடல்களுக்கு கிடைக்கலாம் என்ற ஒரு வாதம் வேறு. காரணம், அவரது இசை தொகுப்பில் இந்த மூன்றாம் உலகின் மக்களாட்ச்சியின் இலட்சணத்தை அருமையாக ஏற்கனவே படமாக்கி இருந்த அமைப்பு. மேலும், அவரது இசையின் முறை. அது தமிழிசையை இரேப்பாடலோடு இணைத்து வழங்கும் அவரது தனி தண்மையும் காரணமாக இருக்கலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு.
அனால் முடிவுகள் அந்த முடிசூடா மன்னன் இரகுமானுக்கு இரண்டு விருதுகளை அறிவித்தது. ஒன்றன் பின் ஒன்றாக. அந்த மேடையில் விருதை அவர் வந்து பெற்றுக்கொண்ட விதம். அதை தொடர்ந்து அவரது ஏற்புரை என்று அந்த விருதுகளையுன் விஞ்சி நின்றார் அந்த அற்புத மனிதன் இரகுமான் அந்த மேடையில்.


முகத்தில் என்ன ஒரு தெளிவு வார்த்தைகளில் தெரிந்த அந்த பரவசம் அவரது செய்கைகளில் தெரியவில்லை. அப்படி ஒரு நம்பிக்கை அவரது மனதில். ஆழ்ந்த அந்த நிலையில் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற தமிழில் வாசகங்கள்.


அவர் பெற்றவிருதில் பெற்ற மகிழ்சியை எல்லாம் விஞ்சி நின்றது அவரது செய்கைகள் அன்று.


எவ்வளவு பெரிய சாதணையை நிகழ்த்தி ஒன்றும் அறியா சிறுவனைப்போல் அதை இரசித்து நின்றகாட்சிகள் அவரது தன்னம்பிக்கையை மட்டுமே காட்டி நின்றது அன்று.


இதில் விருது வாங்கிய கையோடு சென்னைக்கு திருப்பியாச்சு. பாராட்டு பெற்ற குழந்தை உடனே தனது பெற்றோறை தேடித்து அடைக்கலம் தேடுமே அதைபோல சென்னையை தேடி பறந்தோடி வந்தார் அந்த மனிதன். வாழ்த்துகள் இரகுமான், இன்னமும் இது போல் பல சாதணைகளை நிகழ்த்தி இளை சமுதாத்திற்கு முன்னோடியாக திகழ எங்களது வாழ்த்துகள்.

வெறும் ஆச்சுகர் நாயகன் என்று உங்களை வாழ்த்தினால் அது உங்களது மனிதத்தண்மையை குறைத்து மதிப்பிட்டதாக ஆகும். ஆகவே உங்களின் சாதணையை இந்தியாவின் சாதணையாகவே கொள்வோம் நாம். ஏழ்மை, வருமை, வாய்பில்லை இது அது என்று எத்தணையோ காரணங்களை மனம் போன போக்கில் சொல்லி அலையும் இளைய சமுதாயத்திற்கு ஒரு நல்ல சவுக்கடியை கொடுத்துள்ளீர்கள் உங்களது சாதணையால் நன்றி.


உங்களது வெற்றி இந்தியாவில் என்ன என்ன மாற்றங்களை கொண்டு வரப்போகிறது தெரியுமா. தகவல் தொழில் நுட்ப்பத்தில் மட்டும் உலகலாவிய அறிமுகம் கொண்ட இந்தியா, வரும் காலங்களில் கலைத்துறையிலும் நிறுவனங்களை கவரும்.


அந்த முன்னேற்றத்தின் வளர்ச்சி, படபிடிப்பில் ஒளிவிளக்காளன்(light boy) என்று சொல்வார்களே அந்த மனிதர் வரையில் இந்த கலைத்துறையினர் மாதாந்திர சம்பளத்துடன் ஒரு கௌரவமான வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒரு எதிர்காலத்தின் துவக்கத்தை கொடுத்துள்ளீர்கள்.


இந்திய கலைத்துறை முற்றிலும் ஒரு மாறுபட்ட பரிணாமத்தை நோக்கி செல்ல இருக்கிறது இந்த வெற்றியின்பால். வாழ்த்துக்கள்.


எங்களுக்கு எல்லாம் ஒரு ஆசை இரகுமான், நீங்கள் எங்களின் சொத்து. தமிகழத்துக்கு என்று ஒரு இசை உண்டு தமிழிசை. அதை உலகம் அறிய செய்ய வேண்டும். அது உங்களால் மட்டுமே இப்போதைக்கு முடியும். உலக அரங்கில் தமிழிசையை மலர செய்யுங்கள், அனைத்து தமிழர்களின் சார்பாக கேட்ப்பதாக எடுத்துக்கொள்ளவும். மேலும் நிறைய தமிழ்ப்படங்களுக்கும் இசை அமையுங்கள் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.